1வேதாகமத்தின் தீர்க்கதரிசிகளைப் போன்று, ஏப்ரல் 1993 ல், ஒருபோதும் ஒரு சபையிலும் இருந்திராத மனிதனான, நான், காக்குவ் பிலிப்பு (Kacou Philippe), ஒரு தரிசனத்திலே, மத்தேயு 25:6 மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் 12:14 ன் ஊழியம் நிறைவேறும்படி முழு பூமிக்காகவும் தீர்மானிக்கப்பட்ட ஒரு செய்திக்காக (Message) என்னை நியமித்த தேவதூதன் ஒருவருடைய சந்திப்பைப் பெற்றேன். இங்கே எனது மனமாற்றத்தின் அறிக்கை, அத்துடன் அழைப்பு (Call) மற்றும் பணிநியமனம் (Commission) என்பவைகளுக்கான மகத்தான மூன்று தரிசனங்கள் நான் அவற்றை பெற்றபடியே உள்ளது:
2தானியேல் 10:4 முதல் 11 வசனங்களின் படியாக, ஒரு தரிசனத்தினால் 1993 ஏப்ரல் 24 ம் தேதி நான் மனமாற்றமடைந்தேன். அந்த தரிசனத்தில், நான் கடற்கரை மணலின் மேலும் பிறகு ஓர் உயரமான கூர்நுணி கோபுரத்தின் மேலும் (Pyramid) பிறகு மறுபடியும் வேறொரு இடத்தில் கடற்கரை மணலின் மேலும் நான் நின்று கொண்டிருக்கிறதாக என்னை நானே பார்த்தேன்; மேலும், பழைய இராணுவ வண்டி சமுத்திரத்தின் ஆழங்களில் இருந்து வெளியே வந்து எனக்குப் பின்னாக செல்லுவதை நான் கண்டேன். நான் திரும்பி பார்த்தேன், உயிரோடிருக்கும் ஜனங்கள் அதில் இருந்தனர். அவர்கள் ஸ்தீரிகளாகவும், அவர்களில் ஒருத்தி கலப்பு இனமாகவும் இருந்தாள்.
3பின்னர், இரண்டு புறாக்கள் என்னை நோக்கி வந்து, மறுபடியும் திரும்பித் தண்ணீர்களுக்கு மேலாக சென்றது. ஒரு கிரகணம் ஏற்பட்டது மேலும் மேக தோற்றமளித்த ஒரு மனிதர், ஒரு பட்டயத்தை பிடித்துக்கொண்டு செம்மறியாட்டுக் குட்டியுடனே வானத்திலிருந்து இறங்கி வந்தார், பூமி மறுபடியும் பிரகாசமாயிற்று. அவர்கள் தண்ணீர்களின் மீது நின்றனர், செம்மறியாட்டுக்குட்டி ஒரு அறியாத மொழியில் (an unknown language) என்னுடன் பேச ஆரம்பித்தது. அவருடைய பேச்சின் சத்தம் எனக்குள்ளாக வந்தது, நான் மரித்தவனாக விழுந்தேன். எனது சரீரம் கடற்கரை மணலின்மேல் கிடக்கும் வேளையிலே தண்ணீர்களுக்கு மேலாக போய் நிற்கும் படியாக என் ஆத்துமா வெளியேறிற்று. அது என்னுடனே பேசி முடித்த பொழுதோ, என் ஆத்துமா எனக்குள் திரும்பி வந்தது நான் மறுபடியும் உயிருள்ளவனானேன் ஆனால் மேற்கொண்டு அவர்களை நான் காணவில்லை.
4பிறகு ஒரு கூட்ட மக்கள் வலது பக்கத்திலிருந்து என்னிடமாக வந்தனர், “தூதனையும் செம்மறியாட்டுக் குட்டியையும் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், "இல்லை" என்றனர். நான், "தூதனையும் செம்மறியாட்டுக் குட்டியையும் அவர்கள் செய்தவைகள் அனைத்தையும் உங்களால் எப்படி பார்க்காமலிருக்க முடிந்தது?" என்று அவர்களை கேட்டேன். அதற்கு அவர்கள், "நாங்கள் தூதனையும் செம்மறியாட்டுக் குட்டியையும் பாரக்கவில்லை, செம்மறியாட்டுக் குட்டி மொழிந்த வார்த்தைகளையும் நாங்கள் கேட்கவில்லை, ஆனால் அவை யாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்; ஏனென்றால் தேவன் தந்தது எதுவோ அதை பிசாசு பறித்துக் கொண்டான், அவை இப்பொழுது உம்மிடத்தில் மீட்டளிக்கப்பட்டுள்ளது “(restituted)” என பதிலளித்தனர். நான் மேல் நோக்கி பார்த்தபோது, தண்ணீர்களுக்கு மேலாக வானத்திற்கும் பூமிக்கும் நடுவே ஒரு ஏணி அமைக்கப்பட்டிருந்ததை கண்டேன்; தூதர்கள் ஏறவும் இறங்கவுமாக இருந்தனர். அந்த தரிசனம் முடிந்தது , நான் அறிந்து கொண்டது பரிசுத்த ஆவியைத்தான் என உணர்ந்தேன், நான் அழுதேன், அந்த இடத்திலேயே நான் தேவனை விசுவாசித்தேன்.
5அடுத்த நாள் பிற்பகல் சுமார் 3 மணியளவில் நான் என் குடும்பத்தாரோடு உட்கார்ந்திருந்த போது, மறுபடியும் தரிசனத்தில் முழுவதும் பாலைவனமான ஒரு தேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். நான் கிழக்கு நோக்கிப் பார்த்தேன், பரலோகத்திலிருந்து வார்த்தைகள் மேகங்கள் மீது சுமந்து வரப்பட்ட வண்ணமாக இறங்கி வந்து கொண்டிருந்தது. நான் மேலே எழுந்து முதன்முதலாக ஒரு சபைக்கு (Church) சென்றது இந்த இரண்டு தரிசனங்களுக்கு பிற்பாடுதான்.
6மூன்றாவது தரிசனத்தில், நாங்கள் ஓர் இளங்கலைப்பட்ட அளவிலான தேர்வு நடக்கும் அறையில் உட்கார்ந்து இருந்தோம், தேர்வு நடத்துபவர் பரீட்சைத் தாள்களை வினியோகம் செய்து கொண்டிருந்தார். நான், "ஆனால் நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன்? நான் ஒரு சிறந்த பள்ளிப் படிப்பைக்கூட உடையவனாக இல்லையே, எதை நான் எழுதப்போகிறேன்?" என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். சற்று பின்னர், என்னிடம், “எவ்விதமாக மரியாள் எந்தவொரு மனிதனையும் அறியாமல் அதிசயமான விதத்தில் கர்ப்பம் தரித்தாளோ, எவ்விதமாக சிருஷ்டிப்பின் போது நிகழ்ந்தவைகளின் விபரங்களை மோசே பெற்றுக் கொண்டானோ, நீயும் நித்திய ஜீவ வார்த்தைகளை இந்த ஏப்ரல் 24, 1993 ல் பெற்றுக் கொண்டாய், இது தேவனால் ஆணையிடப்பட்டதாக இருக்கிறது. குறிக்கப்பட்ட நேரத்தில் நீ புரிந்து கொண்டு, முறைமையின்படி நீ கற்றறியாததை நீ போதிப்பாய், அதை விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு" என்று கூறப்பட்டது.
இப்போது, ஆட்டுக்குட்டியின் இந்த செய்தி என்ன கூறுகிறது?
7நாம் இனிமேலும் சாயங்காலத்தில் அல்ல, ஆனால் இப்பொழுது நடுராத்திரியில் இருக்கிறோம் என்று இந்த செய்தி கூறுகிறது. இருந்த போதிலும், அதே காலமும் அதே எலியாவின் ஆவியுமாக இருக்கிறது, ஆனால் சாயங்கால நேரத்தைக் காட்டிலும் ஓர் உயரிய நோக்கமுள்ள ஒரு 'புதிய' செய்தி. ஆனபடியால் சகரியா 14:7 என்பது மத்தேயு 25:6ல் இருந்து வித்தியாசமானதாக இருக்கிறது.
8உலக சபைகளின் பேரவை, உலக கிறிஸ்தவ சபைகளின் சம்மேளனம், சபைகளின் சங்கங்கள், ஒன்றியங்கள், கூட்டமைப்புகள், நேச கூட்டமைப்புகள்..., கத்தோலிக்க சபைகள், கிழக்கத்திய சபைகள், மெத்தடிஸ்டு சபைகள், எக்காங்கர் (Eckankar), ஹொரஸின் பிரிவினர் (the sect of Horus), லூதரன் சபைகள், ஆங்கலிக்கன் சபைகள், மாஹிகரி (Mahikari), பாப்டிஸ்டு சபைகள், ரோஸிகுரூஸியனிஸம் (Rosicrucianism), நசரேய சபைகள், சயிண்டாலஜி (Scientology), எஸோடெரிஸிஸம் (Esotericism), அனாபாப்டிஸ்டு சபைகள், வூடு (Voodoo), அட்வன்டிஸ்ட் சபைகள், இயேசுவின் கூட்டாளிகள், எம்மாவூர் மறைபரப்பு பணி, உள்ளான வாழ்கையினர் (Inner Life), யேகோவா சாட்சிகள், இயேசுவின் சாட்சிகள், நாற்சதுர சபை.
9ஃப்ரீமேசன்ஸ் (Freemasons), பெந்தேகொஸ்தே சபைகள், இன்கா தெய்வங்களை (Inca gods) வழிபடுதல், புரோட்டஸ்டன்டு சபைகள், கிருஷ்ணன், கிறிஸ்துவின் சபை, ஆழ்ந்த தியானம், கிரெயில் (Grail), ஆவிக்குரியவாதிகள், சுவிசேஷக சபைகள், மார்மோன், குரு மகாராஜா, இஸ்லாம் மற்றும் யூத மதம் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட சபைகள் என அழைக்கப்படுகிறவைகள் அனைத்தும் ... ஜெப முகாம்கள், துறவி மடங்கள், கன்னியாஸ்திரி மடங்கள், மறைபரப்பு பணிகள் மற்றும் ஊழியங்கள் உள்பட பிரன்ஹாமிஸ்டுகள், அதாவது, வில்லியம் பிரன்ஹாமின் செய்தியை அதனுடைய தூய்மையில், இப்போதும் பின்பற்றுபவர்கள், இவைகளெல்லாம் சுத்திகரிக்கும் நிலையங்களும் மனிதயினத்தை நரகத்திற்கு அனுப்புகிற சாத்தானின் வலைகளுமாக இருக்கின்றன என்று இந்த செய்தி கூறுகிறது. மேலும் அந்த சபைகளில் கிரியை செய்து வரும் ஆவிகள் பரிசுத்த ஆவியல்ல, ஆனால் வஞ்சக பிசாசுகள் என்றும். ஆறுகளிலும், சிற்றோடைகளிலும், முகமூடிகளிலும், வூடு மந்திரவாதத்திலும், காடுகள் மற்றும் புனித சோலைகளிலும், பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்களிலும் இருந்து பாரம்பரிய பூசாரிகளை எழும்பப்பண்ணினதும் இந்த அதே பிசாசுகள் தான் என்றும் இந்த செய்தி கூறுகிறது.
10இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூதமார்க்கம் தான் வெளிப்படுத்துதல் 16:13-ல் உள்ள மூன்று தவளை-ஆவிகள் என இந்த செய்தி கூறுகிறது. இம்மூன்று மதங்களும் ஆபிரகாமை உரிமை கோருகின்றன. இம்மூன்று மதங்களும் மோசேயை விசுவாசிக்கின்றன. இம்மூன்று மதங்களும் உயிர்வாழும் தீர்க்கதரிசியில் விசுவாசம் கொள்கிறதில்லை ஆனால் ஒவ்வொன்றும் தான் அறியாத ஒரு தீர்க்கதரிசியை உரிமை கோருகின்றன. அவை ஒவ்வொன்றும் அதனுடைய சொந்த பரிசுத்த புத்தகத்தை கொண்டுள்ளன. மேலும் அந்த மூன்றுமே மேசியாவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. அவை வெளிப்படுத்துதல் 16:13-ல் உள்ள மூன்று தவளை-ஆவிகளாக இருக்கின்றது. அந்த எல்வீஸ் பிரஸ்லி, பாப் மெர்லி, ஜேம்ஸ் ப்ரளன், மடோன, பாப்பா வெம்பா, போன்றோரை எழும்பப்பண்ணின இந்த அதே பிசாசுகள் தான், இன்றைக்கு, தபீத்தா லாம்ரீ, டான் மாயன், எக்சோ எக்லாட்ஸ், யோலான்டா ஆடம்ஸ் மற்றும் செலின் டியோன்... போன்ற கிறிஸ்தவ குழுக்கள் மற்றும் பக்திப்பாடல் பாடுபவர்களை எழும்பப்பண்ணியுள்ளது என்று இந்த செய்தி கூறுகிறது.
11அந்த காயீன், ஜோயல் ஆஸ்டீன், டி.டி.ஜாக்ஸ், டௌக் பச்லர், டேவிட் ஒளவொர், இம்மானுவேல் மாகான்டிவா, உபர்ட் ஏஞ்சல், டி.பி. ஜோசுவா மற்றும் மானாசே ஜோர்டன் ஆகியோர் சாத்தானின் அவதாரம் என இந்த செய்தி கூறுகிறது. அந்த ஜெஸ்சி ஜாக்ஸன், ஜான் ஹாகி, பாட் ராபட்சன், யோவாக்கிம் கான்க்ளேவ்ஸ், டொனால்டு பர்ணல், அலெஜான்ட்ரோ புல்லோன், குயிலெர்மொ மால்டொனால்டோ மற்றும் ஆல்பர்டோ மொட்டெசி ஆகியோர் சாத்தானின் அவதாரம் என இந்த செய்தி கூறுகிறது. அந்த கிலவுதியோ ப்ரெய்டுசன், டான்டே கிபெல், இடிர் மாசிடோ, வால்டிமிரோ சந்தியாகு, சிலாஸ் மலாபியா, பவுலா வைட் மற்றும் ஜாய்சி மேயர் ஆகியோர் சாத்தானின் அவதாரம் என இந்த செய்தி கூறுகிறது. அந்த கிறிஸ் ஒயாக்கிலோம், டேவிட் ஒயேடிபோ, டாமி ஆஸ்பான், கென்னத் ஹாகின், மோரிஸ் செருல்லோ, யோங்கி சோ, வின் வர்லி மற்றும் ரெபேக்கா ப்ரௌன் ஆகியோர் சாத்தானின் அவதாரம் என இந்த செய்தி கூறுகிறது.
12அந்த பில்லி கிரகாம், லூயீஸ் பலாவு, ப்ராங்க் அலக்சான்டர், டி.அவன்ஸ், எஸ்.ஸ்விங்ஃபீல்டு, எல்.அல்லிசன், ப்ராங்க் ஈவால்டு, பருட்டி காசோங்கோ, ஜோசப் கால்மென், பில்லி பால் மற்றும் ஜோசப் ஆகியோர் சாத்தானின் அவதாரம் என இந்த செய்தி கூறுகிறது. அந்த கிறிஸ்டியன் பர்னாடு, ஜிம் லாசிட்டர், டிகே ஆலுகோயா , சகாரியா அடிடோலா மற்றும் சார்லஸ் டலின்கானோ ஆகியோர் சாத்தானின் அவதாரம் என இந்த செய்தி கூறுகிறது. அந்த பென்னி ஹின், ரிச்சார்டு பொங்கெ... காக்கு செவெரின், பாவுஸ்டின் ஷுன்கு, மாமாடொவ் காராம்பிரி, சார்லஸ் நீடிப்ன், மார்டின் முட்டைபிலெ, டெரெக் பிரின்ஸ், அந்திரே லாரூயி, இவான் காஸ்டானாவ் மற்றும் ஷோரா குயிட்டு ஆகியோர் சாத்தானின் அவதாரம் என இந்த செய்தி கூறுகிறது. அந்த கானார்டு ரெய்சர், செத்ரி நயோமி, பவுல் ஆயோக், ஜார்ஜ் ப்ரீமான், சிசில் ரோபெக், தியோடர் ஏஞ்சலோவு, ஹம்ஸா இச்லெர், பெத் பீச், ரிக்கார்டோ டி செக்னி, சாமுவேல்-ரெனெ சிராட், நிகிக்கோ நிவாநோ, ஹென்றி வியாவிட் முராட், ராபின் சினைடர் மற்றும் டேவிட் ராசென் ... ஆகியோர் சாத்தானின் அவதாரம் என இந்த செய்தி கூறுகிறது.
13அவர்களைப் பின்பற்றுகிற அனைவரும் அல்லது அதே போன்ற ஆவியில் கிரியை செய்கிற அனைவரும் மேலும் நாடுகளைச் சுற்றி பயணம் செய்து வரும் தீர்க்கதரிசிகள் அனைவரும் மாயவித்தைக்காரர்கள், குறி சொல்லுகிறவர்கள் மற்றும் விக்கிரக பூசாரிகள், மார்க்கம் தப்பி அலையும் நட்சத்திரங்களாக இருந்து உலகத் தோற்றத்திற்கு முன்னரே செம்மறியாட்டுக்குட்டியின் புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகளை வஞ்சிக்கும் படிக்கு நோவாவின் நாட்களில் இருந்தது போன்று சாத்தானுடைய சேவையில் இருக்கிறார்கள். மேலும் அவர்களது அவ்வூழியம் ஆதியாகமம் 3 மற்றும் மத்தேயு 24:24 பிரகாரம் சர்ப்பத்தினுடையதாகவும் இருக்கிறது. அவர்களது ஊழியம் வெளிப்படுத்தல் 16:13 முதல் 14 ன் படி தவளையினுடையதாகவும் இருக்கிறது. 1 இராஜாக்கள் 22:19 முதல் 23 மற்றும் 2 தெசலோனிக்கேயர் 2:9 முதல் 12 ன் படி தேவனே தமது சத்துருக்களுக்கு விரோதமாக அவர்களை ஒரு சேனையாக எழும்பப்பண்ணினதாக அது உள்ளது. மேலும் அந்த பிரன்ஹாமிஸ்டுகள் உள்பட, அவர்களுடைய சகல அற்புதங்களின் நோக்கமும் வஞ்சிப்பதற்கும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் எகிப்திலிருந்து வெளியேறுவதை தடைசெய்வதற்கும் மேலும் அவர்களது பார்வோன்களுடைய மற்றும் இராஜாக்களுடைய இருதயங்களை கடினப்படுத்துவதற்கும் தான் என்று இந்த செய்தி கூறுகிறது.
14புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக சபைகள், வெளிப்படுத்தப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட சபைகள் என அழைக்கப்படுபவைகள் உள்பட மறைபரப்பு பணிகள் மற்றும் ஊழியங்கள் இவை அனைத்தும் மிருகத்தின் சொரூபமாக இருக்கிறது, அதுதான் கத்தோலிக்கம், மேலும் அதனுடைய அடையாளத்தை அது பெற்றிருக்கிறது, அதனுடைய ஆவியை தான் அவர்கள் "பரிசுத்த ஆவி" என அழைக்கின்றனர். அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசினாலும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானமளித்தாலும், மரித்தோரை உயிரோடு எழுப்பினாலும் மேலும் முழு வேதாகமத்தையும் பிரசங்கித்தாலும், அவர்களை இயக்குகிற "பரிசுத்த ஆவி" என அவர்கள் அழைக்கிற அந்த ஆவிகள், வலுசர்ப்பத்தின் ஆவியும், குறிசொல்லும் ஆவியுமாக இருக்கிறது என இந்த செய்தி கூறுகிறது. மீட்டளிப்புக்கென ஒரு ஞானஸ்நானம் பூமியின் குடிகள் அனைவருக்கும் அவசியம் என இந்த செய்தி கூறுகிறது.
15அந்த லூயீஸ் செகன்டு (Louis Segond), டாம்ப் (Tob), மார்டின் (Martin), க்ராம்பன் (Crampon), தோம்ப்சன் (Thompson), ஸ்கோஃபீல்டு (Scofield), ஆஸ்டர்வால்டு (Ostervald), கொலெம்பி (Colombe), செமெயுர் (Semeur), ஜேம்ஸ் மன்னன் (King James), புதிய உலக மொழிபெயர்ப்பு (NWT) வேதாகமங்கள் (bibles) மேலும் அவைகளோடு இணைக்கப்பட்டுள்ளவைகள் மற்றும் மறுசீராய்வு செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட்ட பதிப்புகள் உள்பட அனைத்தும் மாந்திரீக பானைகளாக உள்ளது என்றும்; மேலும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் என அழைக்கப்டுகிற அவைகள் அனைத்தும் மாந்திரீகம், தந்திர வித்தை, இரகசிய மாய மந்திரம் மற்றும் குறிசொல்லும் விஞ்ஞானங்களுடைய புத்தக நிலையங்களின் சொரூபமாக இருக்கிறது என்றும்; அந்த புரோட்டஸ்டண்டுகள் மற்றும் சுவிசேஷக சபைகளின் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகள் LMTV and BENIE TV [ஆசிரியர் குறிப்பு: ஏஞ்சல் டிவி, ஆசிர்வாதம் டிவி போன்றவை] அனைத்துவிதமான அசுத்தங்களையும் கழிவுகளையும் தேவனுக்கு முன்பாக அடித்துக்கொண்டு வருகிறவைகளாக இருக்கிறது என்றும் இந்த செய்தி கூறுகிறது.
16இந்த செய்தி எவ்விதமான போதகர் பள்ளிகளையும் (pastoral schools) கண்டனம் செய்கிறது. இச்செய்தி இறையியலை (theology) கண்டனம் செய்கிறது. ஆக: "இறை" என்பது தேவன், "இயல்" என்பது கற்றல். ஆனபடியால் இறையியல் ஒரு விஞ்ஞானமாக உள்ளது, அது தனது மூலாதாரங்களை நரகத்திலிருந்து பெறுகிறது. நம்மால் தேவனை கற்றறியவோ அல்லது அவரது வார்த்தையை கற்றறிந்து கொள்ளவோ இயலாது. தாம் விரும்புகிறவனுக்கு தேவன் அவர் தாமே தமது வார்த்தையை வெளிப்படுத்துவதும் அல்லது அவர் தம்மையே வெளிப்படுத்துவதுமாக அது இருக்கிறது. ஒரு பாதிரியிடமோ அல்லது பாஸ்டரிடமோ (Pastor) செவிவழி பாவஅறிக்கை (auricular confession) செய்வதை இச்செய்தி கண்டிக்கிறது, மேலும் ஒவ்வொரு அறிக்கையும் வெளிப்படையானதாக சபையினருக்கு முன்பாக செய்யப்படவேண்டும் என கூறுகிறது.
17திருச்சபையின் (Church) ஒரே மற்றும் தனித்துவமான விதிகளும் விதிமுறைகளும், அது வேதாகமமும் உயிருடன் இருக்கிற தீர்க்கதரிசி கூறுவது என்னவோ அதுவுமாக இருக்கிறது என்று செய்தி கூறுகிறது, மேலும் திருச்சபை (Church) அரசாங்கத்திற்கு அடிபணிந்து இருக்க முடியாது எனவே நம் மீது மத விவகார அமைச்சரின் அதிகாரத்தை நாம் அங்கீகரிக்க முடியாது.
18சபைகளின் தேசிய, சர்வதேச அளவிலான கூட்டு அமைப்புகள், அனைத்து பேரவைகள் மற்றும் சங்கங்கள் எல்லாம் வலுசர்ப்பங்களும், சாத்தானிய கேலிச்சித்திரங்களாக சாத்தானுக்காக உழைப்பவைகளுமாக இருக்கிறது என இச்செய்தி கூறுகிறது.
192003 ஆகஸ்டு 12 செவ்வாய்க்கிழமையன்று, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு என்னும் நான், பெருமளவிலான சுவிசேஷக புத்தகங்கள், ஆய்வு கட்டுரைகள் மற்றும் டோம்ப், லூயீஸ் செகண்டு, மார்டின், ஆஸ்டர்வால்டு, ஜேம்ஸ் மன்னன் வேதாகமங்கள் மற்றும் பேரரசர்களான பில்லி கிரகாம், ஈவால்டு ப்ராங்க், பென்னி ஹின், ரின்கார்டு பொங்கெ, ஃடி.எல்.ஆஸ்பான் இவர்களுடைய புத்தகங்கள், "நாசரேத்தூர் இயேசு" என்னும் திரைப்படத்தின் கேசட்டுகள், ஜெபமாலைகள், இறையியல் சான்றிதழ்கள் மற்றும் வெவ்வேறு வேதாகம பயிற்சிகள், ஞானஸ்நான அட்டைகள், பக்தி மற்றும் அஞ்ஞான பாடகர்களின் கேசட்டுகள்... உள்ளடங்கிய பொருட்களை சுட்டெரித்தேன். அந்த ஆவணங்கள் அனைத்தும் நான் பிரசங்கிக்கும் நடுராத்திரி சத்தத்தை விசுவாசிப்பவர்களால் அப்போஸ்தலர் நடபடிகள் 19:19 ன் படி கொண்டு வரப்பட்டவைகளாகும். அது முதற்கொண்டு, விசுவாசிகள் அவ்விதமாகவே செய்கின்றனர், அவ்வித பொருட்களை சுட்டெரிக்கின்றனர்.
20இந்த செய்தி, அது பூமியின் கடையாந்திரங்கள் வரை செல்லும், மேலும் இந்த செய்தி அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் கூட்டிச்சேர்த்தலையும் உபத்திரவத்தையும் எடுத்துக்கொள்ளப்படுதலையும் கொண்டுவரும்.
21இவைகளுடனேகூட, பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் அடங்கியுள்ள கடைசி இரகசியங்களையும் மற்றும் ஜாதிகளின் திருச்சபைக்கு தேவன் அளித்த கடைசி வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலையும் இந்த செய்தி வெளிப்படுத்துகிறது மேலும் அவைகளின் புரிந்துகொள்ளுதலும் ஏற்றுக்கொள்ளுதலும் தெரிந்துகொள்ளப் பட்டவர்களுக்கு தானியேல் 12:8 முதல் 10 ன் படி கொடுக்கப்பட்டிருக்கிறது: "அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள். துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள். துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்வார்கள்." மேலும், அப்போஸ்தலர் நடபடிகள் 13:48: "... நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்." என்று கூறுகிறது.
22மேலும் தேவனுக்கு மட்டுமேயுள்ள அதிகாரத்தினாலே அல்லாமல், அவனாகவே எழும்பி, டஜன் கணக்கான வேதாகமங்களை சுட்டெரித்து, அந்த எல்லா சபைகளையும், அவர்களுடைய தலைவர்களையும் மற்றும் அவர்களை பின்செல்வோரையும் வலுமையாக கண்டனம் செய்துகொண்டு, நிற்க ஒருவனாலும் முடியாது என்பதை ஒவ்வொரு மனிதனும் புரிந்துகொள்வானாக. இப்படிப்பட்ட காரியத்தில், உங்களை யார் தடுத்து நிறுத்த முடியும், ஒன்றும் பொருட்டல்ல, என்ன நடக்கிறது என்று கண்டிப்பாக அறியவும் நாடவும் வேண்டியவர்களாக உள்ளீர்கள், அதற்காக, நியாயத்தீர்ப்பில், ஒவ்வொருவரும் தங்களுக்காக பதில் கூறவேண்டியவர்களாக உள்ளனர்.
232003 முதல், இந்த அத்தியாயம் நற்செய்தி அறிவிக்கும் வேளையில், ஜாதிகளுடைய மேய்ப்பர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் பெயர்களோடுகூட கையேடாக வினியோகிக்கப்பட்டது. இது செய்தியில் பிரவேசிப்பதற்கான செங்கடலினூடான வழி என்று கருதப்படுகிறது. மோசே மற்றும் யூதர்கள் தவிர வேறொருவரும் தேவனுடைய பலத்த கரத்தினால் கடந்து போனதில்லை. "முதல் பிரசங்கத்தை வேதத்தின் வாக்கியங்களின் அளவில் போட்டு வைப்பாயாக, நீ காணும் பக்கங்களின் எண்ணிக்கை உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட செய்தியின் நீளமும் பக்கங்களின் எண்ணிக்கையையுமாக இருக்கிறது" என ஆவியானவர் (the Spirit) ஆகஸ்டு 2006ல், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவான என்னிடம் கூறினார்.
24மேலும் இந்த செய்தியினிமித்தமாக 2016ல், அனேக மத தலைவர்களுடைய தூண்டுதலினால், இயேசு கிறிஸ்துவின் அடிமையான, நான், காக்குவ் பிலிப்பு, துன்புறுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டேன். ஐவரிகாஸ்ட் பொது தகவல் அலுவலக (the general intelligence) வளாகத்தில் ஓர் நாற்காலியின் மேல் ஐந்து பகல்கள் மற்றும் ஐந்து இரவுகளை கழித்தேன். ஆபிட்ஜான் காவல்துறை தலைமைச் செயலகத்தின் அடித்தளத்தில் இரண்டு பகல்கள் மற்றும் இரண்டு இரவுகளை கழித்தேன் மேலும் ஆபிட்ஜானின் MACA என்னும் மிக பெரிய சிறையில் மூன்று மாதங்கள் இருந்தேன். வேதாகமத்தின் தீர்க்கதரிசிகளும் எனது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் எப்படி நடத்தப்பட்டார்களோ, அப்படியே நான் நடத்தப்பட்டேன். கேட்கிறதற்கு காதுகளை உடையவனெவனோ அவன் கேட்கக்கடவன்.