



Kacou 10 (Kc.10) : பிசாசின்புத்திரர்வெளிப்படுதல்
(2003 பிப்ரவரி 23 ஞாயிறு காலை லோக்காட்ஜ்ரோ, ஆபிட்ஜான்-ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 ஆபிட்ஜானின் புகழ்பெற்ற மதக் கட்டிடமான பரிசுத்த பவுல் பேராலயத்தின் திட்ட வரைபடத்தை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அது சாத்தானால் விரிக்கப்பட்ட ஒரு மீன்பிடி வலையாகும். இந்த செய்திக்கு புறம்பாக இருக்கிற அனைத்து கிறிஸ்தவ கட்டிடங்களின் சொரூபமாக இது இருக்கிறது. அவர்கள் சாத்தானின் வலைகள். தேவனிடமிருந்து வந்த ஒரு தீர்க்கதரிசன செய்தியைத் தவிர, அவைகள் சாத்தானின் வலைகளாக இருக்கின்றன.
2 கடந்த பத்து ஆண்டுகளாக, டாமி ஆஸ்பான், பென்னி ஹின், மோரிஸ் செருல்லோ, ரியின்ஹார்டு பொங்கெ, சபைத் தீர்க்கதரிசிகள் மற்றும் சபைத் தலைவர்களின் தலைமையிலான அபிஷேகங்களின் மாபெரும் அசைவுகளை, நாம் ஒவ்வொரு தேசத்திலும் காண்கிறோம், அதைப் பற்றித் தான் நான் இந்த நாட்களில் பேசப் போகிறேன். அவர்கள் மரணத்தினால் பூமியை மூழ்கடித்துள்ளனர், ஆனால் இந்தச் செய்தியோ அவர்களுடைய கெட்ட ஆளுகைக்கு இறுதிச்சடங்கின் சாவுமணி போல எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
3 மனித வடிவில் விழுந்து கிடக்கும் டாமி ஆஸ்பான் என்று பெயரிடப்பட்ட ஒரு பிசாசு அங்கே நின்று கொண்டிருந்தால், அவனிடம் நான் சத்தமாக! மத்தேயு 24:24, 2 தெசலோனிக்கேயர் 2:9 முதல் 12 மற்றும் வெளிப்படுத்துதல் 16:13 முதல் 14 ஆகிய வசனங்களில் வேதாகமம் அவர்களைப் பற்றித் தான் பேசுகிறது என்பேன். இந்த மாயவித்தைக்காரர்கள் வல்லமை மிக்க வரங்களான தீர்க்கதரிசனம், பகுத்தறிதல் மற்றும் அந்நியபாஷை பேசுதலால் ஆதரிக்கப்படுகின்றனர் ... அவர்கள் ஏற்கனவே வஞ்சகத்தின் முத்திரையான, மிருகத்தின் முத்திரையைப் பெற்றுள்ளனர். பொல்லாத ஆவி அவர்களை அனுமதித்தால் மட்டுமே அவர்களால் பார்க்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியும்; இதுவே அஞ்ஞான மற்றும் மதசார்பான உலகின் இன்றைய நிலை.
4 அந்திய பாஷைகளை பேசுகின்ற, சரியான தீர்க்கதரிசனங்களை உரைக்கின்ற, அற்புதங்களைச் செய்கின்ற, தகுதியற்ற ஜனங்களை பரிசுத்த இராப்போஜனத்தில் பங்கெடுக்க விடாமல் தடுக்கின்ற இந்த பரிசுத்த ஆவி (holy spirit) எப்படி பிசாசுகளாக இருக்க முடியும் என்று ஜனங்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. பாப்டிஸ்டுகள், தேவர்களின் கூட்டுச்சபையினர்கள், பெந்தெகொஸ்தேயினர்களால் ... அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
5 போப்பு தவறிழைக்கலாம் என்பதை கத்தோலிக்கர்களால் ஒப்புக்கொள்ள முடியாது; ஒவ்வொரு சபையிலும் அதன் தலைவர்களுடன் இருப்பதும் இதேதான். ஏன்? பிசாசு ஏற்கனவே அவர்களை ஜெயங்கொண்டிருக்கிறான். அவர்கள் ஏற்கனவே குருட்டுத்தனத்தின் முத்திரையைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தரித்திரராக, குருடராக, பரிதாபத்திற்குரியவர்களாக மற்றும் நிர்வாணிகளாக இருப்பதாக வேதாகமம் கூறுகிறது, அவர்களோ ஐசுவரியவான்களென்றும் எங்களுக்கு எதுவும் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். அப்படி அவர்களை சிந்திக்க வைப்பது பிசாசுதான்.
6 பிசாசு அவர்களிடம்: "சபை இரட்சிப்பதில்லை! நீங்கள் இயேசுவில் விசுவாசம் கொண்டவர்களாய், உங்களை நீங்களே பரிசுத்தமாக்கினால், அது தான் முக்கியமான காரியம்!" என்று கூறுகிறான். இப்பேர்ப்பட்ட ஒரு வார்த்தை யாருடைய வாயிலிருந்து புறப்படுகிறதோ அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. பிசாசு அவர்களிடம்: "நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அல்லது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றாலும், அது ஒரே காரியம் தான்" என்று சொல்கிறான், அப்படியானால் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; இப்பேர்ப்பட்ட வார்த்தை யாருடைய வாயிலிருந்து புறப்படுகிறதோ அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கிறான்! ....
7 பிசாசு அவர்களிடம்: "அங்கே பெண்களுக்கான கால்சட்டை மாதிரிகள் இருக்கின்றன," என்று சொல்கிறான், அப்படியானால் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; சாத்தானின் இந்த கண்டுபிடிப்புகளை மனிதன்கூட அணிய முடியாது. பிசாசு அவர்களிடம்: "வில்லியம் பிரன்ஹாம் சபைகளில் கிரியை செய்கிற ஆவி பரிசுத்த ஆவி!" என்று சொல்கிறான், அப்படியானால் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். பிசாசு அவர்களிடம், "ஆப்பிரிக்கன் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க முடியாது, ஏனென்றால் அவர் காமின் சந்ததியார்!" என்று சொல்கிறான், அப்படியானால் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
8 2 நாளாகமம் 35-ல், யூதாவின் ஒரு தீர்க்கதரிசியாகவும் ராஜாவாகவும் இருந்த யோசியா ராஜா, பார்வோனை அதாவது ஒரு ஆபிரிக்கனை சந்தித்தான். அந்நாட்களில் தேவன் புறஜாதிகளிடம் பேசுவது கூட கிடையாது, பார்வோன் அவனை நோக்கி, "நீ வழிபடுகிற தேவன் என்னோடு பேசினார் ஆகையால் எனக்கு வழி விடு!..." என்றான். ஆனால் தேவன் ஒரு கருப்பு மனிதனிடமும் பேசுவார் என்பதை இந்த நல்ல ராஜாவால் ஒப்புக் கொள்ள முடியவில்லை, ஆகையால் அவன் அங்கு மரித்தான். நீங்கள் பார்க்கிறீர்களா? தனது சொந்த வழியில் தேவனுடைய வார்த்தையை புரிந்துகொள்ளவோ அல்லது வியாக்கியானிக்கவோ முயலுகிற எவனும் சபிக்கப்பட்டவன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
9 நீங்கள்: "உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நிகழ்ந்தாயிற்று!" என்று சொல்கிறீர்கள், நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்! "நாம் இரட்சிப்பை இழந்து போக மாட்டோம் என்பதால் நான் பாவம் செய்யலாம், இவை பூமியில் எனக்கு கிடைக்காத வெகுமதிகள் ஆனாலும் நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன்!" என்கிறாய், இப்படிப்பட்ட வார்த்தை எந்த மனிதனுடைய வாயிலிருந்து புறப்படுகிறதோ அவன் சபிக்கப்படக் கடவன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. பரலோகத்தில் உங்களுக்கு கிடைக்கப் போவதுபோல, பூலோகத்தில் உங்களுக்கான பலன்கள் கிடைக்கப்படுவதில்லை என்று சொல்லி உங்களுக்கு தசமபாகம், ஒரு காணிக்கை அல்லது ஒரு அன்பளிப்பு கொடுக்கிறவன் என்றென்றைக்கும் சபிக்கப்பட்டிருப்பானாக. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
10 நீங்கள்: "நான் ஒரு பாப்டிஸ்ட்" என்று சொல்கிறீர்கள், நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்! நீங்கள்: "நான் அசெம்பிளி ஆஃப் காட் சபையைச் சேர்ந்தவன்" என்று சொல்கிறீர்கள், நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்! நீங்கள், "நான் ஒரு கத்தோலிக்கன்", என்று சொல்கிறீர்கள், நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்! உங்களால் காணமுடிகிறதா? நீங்கள்: "தேவன் ஸ்தோத்தரிக்கப்படுவாராக, நான் ஒரு வேதசாஸ்திர பயிற்சி பெற்றிருக்கிறேன்..." என்கிறீர்கள், அப்படியானால் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்!
11 எல்லாவித பொல்லாத ஆவிகளிடமிருந்தும் தாங்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் விடுதலை சான்றிதழ்களுடன் இங்கே சில சகோதரர்கள் இந்த செய்திக்கு வந்தனர், நாங்கள் அவைகள் எல்லாவற்றையும் அவர்களுடைய ஜெப விண்ணப்ப அட்டைகளுடன் சேர்த்து எரித்தோம்... ஜனங்கள் இயேசுவின் பெயரில் சாத்தானை சேவித்துக் கொண்டும் ஆராதித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
12 நல்லது! இந்தவிதமாக ஜனங்கள்: "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, இந்த கூட்டத்தை அல்லது இந்த உணவை ஆசீர்வதியும்... இயேசுவின் நாமத்தில், ஆமென்!" என ஜெபம் செய்வதை நான் காண்கிறேன். இது ஒரு திரித்துவ மற்றும் பேய்த்தன ஜெபமாக இருக்கிறது. இயேசு சர்வவல்லமையுள்ள தேவன் என்றால், அப்பொழுது அவர்கள் இயேசுவின் நாமத்தில் யாரிடம் ஜெபம் செய்கிறார்கள்?... நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த முடிவு காலத்தில், வெளிப்படுத்தின விசேஷம் 12:14 ன்படி தேவன் தாமே தன்னை பெருங்கழுகாகவும், அவரது பிள்ளைகள் தீர்க்கதரிசன வார்த்தையை சுற்றிலும் கூடிச்சேருகின்ற சிறிய கழுகுகளாகவும் காண்பிக்கிறார். அதே நேரத்தில், பிசாசானது அவ்வசனத்தில் தன்னை சர்ப்பமாக வெளிப்படுத்துகிறது, குறிசொல்லும் ஆவி, மற்றும் சபைகள் அதனால் நிரம்பியுள்ளன. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
13 மேலும் இன்றைக்கு, மத்தேயு 25:6 இன் பிரசங்கத்தை நிராகரிப்பவர்கள் குறி சொல்லும் ஆவியை மட்டுமே பரிசுத்த ஆவியென பெற முடியும். நம்முடனே கூட்டிச்சேர்க்காதவன் சிதறடிக்கிறான். தங்கள் காலத்தின் சத்தியத்தை நிராகரித்திருக்கும், இந்த உலகம் முழுவதிலுமுள்ள திரளான தீர்க்கதரிசிகள், யாருக்காக வேலை செய்கிறார்கள்?
14 சத்தியத்தின் பேரிலுள்ள அன்பு இல்லாதவர்கள் இவ்விதமான காரியங்களை விசுவாசிப்பதற்கேதுவாகவும், அதினாலே அவர்கள் ஆக்கினை அடையவும் தேவன் தாமே சில அற்புதங்களையும், அதிசயங்களையும் அவர்களுக்குள் அனுப்புவார் என்று 2 தெசலோனிக்கேயர் 2:9 முதல் 12 மற்றும் மத்தேயு 24:24 லும் வேதாகமம் ஏற்கனவே அதை நமக்குக் கூறியிருக்கிறது. வெளிப்படுத்துதல் 16:13 முதல் 14 ல் அவர்களை நாம் மறுபடியும் காணலாம். நீங்கள் பார்க்கிறீர்களா? இது கடந்த பத்து ஆண்டுகளில் அதன் உச்சத்தை எட்டியுள்ளது. நடுராத்திரி சத்தத்திற்கு வெளியேயுள்ள அனைத்து மனமாற்றங்களும் வரக்கூடிய உபத்திரவத்திற்கான சாத்தானின் ஆட்சேர்ப்பாக இருக்கிறது. ஆனால் டிசம்பர் 18, 2005 பூமியதிர்ச்சியைப் போல, யாராலும் தடுத்து நிறுத்து முடியாமல், நடுராத்திரி சத்தமானது பூமியின் ஒவ்வொரு பட்டணத்தையும் எட்டுவதை நீங்கள் காண்பீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
15 மேலும் வெளிப்படுத்துதல் 16:13 முதல் 14 ல் நாம் இந்த தவளைகளை காணலாம்: அவைகள் புராட்டஸ்டன்டு, சுவிஷேசக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளாகும். அங்கே குறிப்பிடப்பட்ட ராஜாக்கள் என்பது எழுத்துப்பிரகாரமான அர்த்தத்தில் ராஜாக்கள் அல்ல என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்... நல்லது. மீன்கள் ஆழமான, தெளிவான, சுத்தமான ஓடக் கூடிய தண்ணீரில் இருக்கின்ற அதேநேரத்தில் தவளைகள் சகதியில், செந்நிறமான, தேங்கிய மற்றும் துர்நாற்றம் வீசுகிற தண்ணீர்களில் இருக்கின்றன. ஏனென்றால் சத்தியத்தின் பேரில் அவர்கள் அன்பு கொண்டிராத காரணத்தினால், அத்தகைய இடங்களில் இருக்க தேவன் அவர்களை விட்டு விடுகிறார். நீங்கள் காண்கிறீர்களா? தேவன் அன்பானவர்தான் ஆனால் அவர் நியாயத்தீர்ப்பின் தேவனாகவும் இருக்கிறார். அவர் நரகத்தை சிருஷ்டித்தது அவருடைய மிகப்பெரிய நற்குணத்தில்தான்.
16 பிசாசின் புத்திரரே உங்களைத் தான், சபைகளைப் பின்பற்றுங்கள்! கள்ளத் தீர்க்கதரிசிகளை பின்பற்றுங்கள்! உங்கள் சபைகளில் களிகூருங்கள், உங்கள் இருதயங்களின் விருப்பத்திற்கேற்ப நடங்கள்! நீங்கள் மீண்டும் சிலுவையில் அறைந்திருக்கிற இயேசு கிறிஸ்துவை நான் உங்களுக்கு முன்வைத்தேன்.
17 ஆனால், சத்தியத்தை நேசித்து இங்கு இருக்கிற, நீங்கள் ஞானமுள்ளவர்களாக இருங்கள்! இந்த புத்தகங்கள், பிரசுரங்கள் அல்லது ஆய்வு கட்டுரைகள் எதையும் வாசிக்க வேண்டாம், அவைகள் உங்கள் வீடுகளில் கூட காணப்பட கூடாது! ஈவால்டு பிராங்க் எழுதியவைகளும் கூட வேண்டாம். நடுராத்திரி செய்தியுடனும் வேதாகமத்துடனும் மாத்திரம் ஒட்டிக்கொண்டிருங்கள். நான் தேவனுடைய மனுஷன் என்று நீங்கள் விசுவாசித்தால், இதை ஒரு கட்டளையாக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே கெடுத்துக்கொள்ள வேண்டாம்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்! " என்கின்றனர்].
18 வெளிப்படுத்துதல் 14:4 முதல் 5-ஐ நினைவில் வையுங்கள். இந்த வழியில் தான் கிறிஸ்துவின் மணவாட்டி தோன்ற வேண்டும். நான் உங்களுக்குச் சொல்லுகிற எல்லாவற்றையும் கட்டளையாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஏவாளை போல சர்ப்பத்துடன் விளையாட முயற்சிக்க வேண்டாம். அவனது முகத்திற்கு விலகி இருங்கள். அவர்களுக்குண்டான எதையும் எடுக்காதீர்கள் ஏனெனில் நாம் கறை திரையற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த பிரசங்கங்களை மறுபடியும் கேளுங்கள் அல்லது மறுபடியும் வாசியுங்கள். அவைகள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
19 அவர்களுடைய புளித்தமாவை விட்டு விலகியிருக்கும்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லியிருந்தார். மத்தேயு 16: 5 முதல் 12: அவர்களின் புத்தகங்கள், ஆராதனை ஒலிநாடாக்கள், அவர்களின் பிரசங்கங்கள் இவை அனைத்தும் இன்று பரிசேயர் மற்றும் சதுசேயர்களின் புளித்த மாவாக இருக்கின்றன... நீங்கள் பார்க்கிறீர்களா? முன்பு, "நான் ஒரு கிறிஸ்தவன்" என்று சொல்வது சமுதாயத்தில் மானக்கேடாக இருந்தது, நீங்கள் அப்படி சொன்னபோது நீங்கள் வரவேற்கப்படவில்லை. ஆனால் அது இப்போது மாறானதாக, "அஞ்ஞானி" என்ற வார்த்தையானது ஒரு அவமானம் போல் இருக்கிறது. ஆனால் இன்னும் உண்மையில் அவர்கள் கிறிஸ்தவர்களோ அல்லது அவைகள் தேவனுடைய சபைகளோ அல்ல, ஒரு முனையிலிருந்து மறு முனை வரை அது பிசாசாக இருக்கிறது மேலும் அவர்கள் செய்யும் அனைத்தும், அது பிசாசின் கிரியையாயிருக்கிறது [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
20 இது சபைகளில் பள்ளிகளில், மருத்துவமனைகளில், ஹோட்டல்களில் மற்றும் பிற இடங்களில் விநியோகிக்கப்படுகின்ற இந்த கிதியோன் புதிய ஏற்பாடுகளைப் போன்றதாகும். தேவனுடைய வார்த்தையை வாசிப்பதை தடைசெய்த பிசாசினால் இன்று எல்லா இடங்களிலும் அதன் விநியோகத்தை எவ்வாறு அனுமதிக்க முடிகிறது? இந்த கிதியோன் தேவனின் வார்த்தை அல்ல! இந்த லூயிஸ் செகண்டு, தாம்சன், ஸ்கோஃபீல்டு, ஜேம்ஸ் மன்னன் வேதாகமங்கள் மேலும் மற்றவைகள் தேவனின் வார்த்தையல்லாதது போன்றுதான் அதுவும்! வஞ்சிக்கப்படாதிருங்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
21 மேலும் அவர்களுடைய வஞ்சிப்பின் இன்னொரு அடையாளம், அது அவர்களின் அபிஷேகங்கள் தான். காக்கு செவிரின் சவப்பெட்டியை ஒரு குறிப்பிட்ட நேரம் தொடக்கூட முடியாத அளவுக்கு அபிஷேகம் மிகவும் வலுவாக இருந்தது. அபிஷேகத்தின் காரணமாக அவர்களுடைய சிலரது கார்களுக்குள் உங்களால் நுழைய முடியாது. ஒரு தீர்க்கதரிசி ஒரு கழிப்பறைக்குச் சென்று திரும்பினபோதும், அபிஷேகம் அங்கு இருந்தது என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா?
22 ஆனால் அவர்கள் ஊழியம் செய்வதாக உரிமை கோருகின்றவற்றில் ஒன்றான, இயேசுவினிடத்தில் அது என்னவாக இருந்தது என்பது பற்றி நாம் கவனிக்கலாம். லூக்கா 8:43 முதல் 45 வரை நாம் வாசிப்போம்: "பன்னிரண்டு வருஷம் உதிர போக்குடைய ஒரு ஸ்திரீ ... பின்னால் இருந்து வந்து அவள் அவருடைய வஸ்திரத்தின் ஒரத்தை தொட்டாள்; உடனடியாக அவளது உதிரப் போக்கு நின்றுபோனது. அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். அவர்கள் எல்லாரும் மறுத்தபொழுது, பேதுருவும் அவரோடிருந்தவர்களும்: "ஆண்டவரே, ஜனங்களின் கூட்டம் உம்மை நெருக்கி தள்ளுகிறதே ஆனால் நீரோ என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீர்" என்றனர். நீங்கள் பார்க்கிறீர்களா? அந்த ஸ்திரியோ அல்லது சீஷர்களோ அல்லது இயேசுவை எப்பக்கத்திலும் நெருக்கி தள்ளுகிற அந்த கூட்டத்தில் எந்த ஒருவரோ கீழே விழவில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அபிஷேகம் மக்களை கீழே விழச் செய்யவில்லை. இந்த பகுதியிலோ அல்லது வேதாகமத்தில் வேறு எந்த பகுதியிலோ எங்கும் அப்படி இல்லை. பின் ஏன் சிலர் விழுகிறார்கள்? நீங்கள் இன்று பார்க்கும் இந்த செய்கையின் அடிப்படை அது பிசாசுதான், அது உடனடியாகவோ அல்லது சற்று பின்னரோ கடந்துபோகும்.
23 நீங்கள், "சகோதரன் பிலிப்பு, சிலரிடம் அது, தேவனுடைய ஆவியாக இருக்கிறது!" என்கிறீர்கள். என்னுடைய சகோதரர்களே! அப்படி இல்லையென்று நான் சொல்கிறேன், இது ஒரு முனையிலிருந்து மறு முனை வரைக்கும் பிசாசு தான். இது தீர்க்கதரிசியின் வார்த்தையாகும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. இந்த செய்திக்குப் புறம்பாக, எப்பொழுதாவது ஜனங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்து பேசுவார்களாயின், அதை பிசாசுகளின் ஞானஸ்நானம் என்று புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பார்க்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தன்னில்தாமே, பாவமில்லாதவராக பரிசுத்த தேவனாக இருந்தபோதிலும்…. ஜனங்கள் அவரை தொட்டபின்பும் கீழே விழாமலிருந்தார்கள். ஆனால் பாவத்திலும் பாவிகளாலும் கர்ப்பம் தரிக்கப்பட்ட நீங்கள், உங்களை தொடாமலேயே சில கூட்டத்தினர் சரிந்து விழுகிறார்களே? உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளவும்! மனந்திரும்புங்கள்! நரகத்திற்கு போவதை காட்டிலும் மனிதருக்கு முன்பாக அவமானமடைவதை தெரிந்துகொள்ளுங்கள், ஏனெனில் நான் ஒரு தீர்க்கதரிசி என்றால், அப்படிச் செய்தவர்கள் அல்லது அதை பின்பற்றுபவர்கள் அல்லது அதை தாங்குகிறவர்கள், தங்களது சொந்த ஆக்கினைத்தீர்ப்பில் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை அறிவிக்கிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
24 மேலும் சுவிசேஷக சபைகளில் உள்ள பங்களிப்புகளையும் மோசடிகளையும் சென்று சரிபார்த்தால் இந்த சபைகள், தங்களது தாயான கத்தோலிக்க சபையின் பாவமன்னிப்பு சலுகைகளை காட்டிலும் மிகவும் மோசமானவைகளை செய்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். பாஸ்டர் அல்லது தீர்க்கதரிசி ஒரு சுவிசேஷ வியாபாரியாகவும் மேலும் பாவியோவெனில் ஒரு வாடிக்கையாளனாகவும் மாறிவிட்டனர். அதனால்தான் இன்று காலை நான் உங்களிடம் பேசுவதை போல அவர்களால் அவர்களிடம் பேச முடிவதில்லை. அவர்கள் அனைவரின் பிரசங்கமும் "செழிப்பு, செழிப்பு, செழிப்பு" என்றிருக்கிறது.
25 கம்பளங்கள், இசைக்குழு மற்றும் அனைத்து இதமான காரியங்களையும் பாவி பார்க்கும் போது, அவனுடைய பாவ நிலையை மறந்துவிடுகிறான்... மேலும், அவர்கள் காக்குவ் பிலிப்பு தான் அந்த வஞ்சகன் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒரு இளம்பெண்ணின் முன்னால் நின்றுகொண்டு, அவளுடைய அனைத்து தீயவைகளையும் சொல்லி அழைப்பிப்பது, எந்த வஞ்சகன்? அதை நீங்களே நிதானித்துக் கொள்ளுங்கள்!
26 மேலும் இந்த தீர்க்கதரிசிகள்: "நாங்கள் அதிக விலையுள்ள இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளோம்!" என்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட வாடகை இடம் உங்களுக்கு அவசியமானதா? பூமியிலிருந்தபோது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்ன இப்படியா செய்தார்?... நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த பாஸ்டர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் இவ்வாறு செய்யாவிட்டாலும், அவர்கள் அப்பொழுதும் பிசாசின் அவதாரமாகவே இருப்பர். ஏனெனில் தேவன் ஒரு சபையில் இல்லை, ஆனால் அந்த தலைமுறைக்கு அவர் அனுப்பின தீர்க்கதரிசியுடன் இருக்கிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்! " என்கின்றனர்].
27 தந்திக்கு பின்னர் தொலைபேசி, பின்னர் இப்போதுள்ள கைப்பேசி மற்றும் இணையத்தை போலவே, ஒரு காலத்தில் மார்டீன் லூதர் என அழைக்கப்பட்ட ஒரு மனிதனுடனே சத்தியம் இருந்தது, பின்னர் அது ஜான் வெஸ்லியின் காலத்தில் இருந்தது, பின்னர் அது வில்லியம் சீமோரிடத்தில், பின்னர் அது வில்லியம் பிரன்ஹாமுடன் இருந்தது. அது என்ன? வெளிப்பாடு முன்னோக்கிச் செல்வதாக இருக்கிறது. இடம் பெயர்வதற்கு முதலில் குதிரைகள், பின்னர் கார்கள், பின்னர் விமானங்கள் மற்றும் இப்போது விண்வெளிக்கு ராக்கெட்டுகள்.
28 இராணுவத்தில், முதலில் அம்புகள் பின்னர் துப்பாக்கிகள், பின்னர் குண்டுகள் மேலும் இப்போது அணு மற்றும் நுண்ணுயிர் ஆயுதங்கள். இது நான்கு சுவிசேஷங்கள் மற்றும் வெளிப்படுத்துதல் 4:7 உடன் பரிபூரண வரிசையில் உள்ளது. நாம் கடைசி கட்டத்தில் இருக்கும்போது, அங்கே சிலர் இன்னுமாக கேடயங்களோடும், மற்றவர்கள் அம்புகளோடும் இருக்கிறார்கள். விசுவாசம் விருத்தியடைகிறது என்றாலும், இதை தெளிவாகக் காட்ட நான் "ஒட்டு முறைமையை" (grafting system) வரைந்தேன்.
29 யூதா கோத்திரத்தின் சிங்கம், வார்த்தையானது, பவுலுடன் புறப்பட்டுச் சென்ற ஒரு காலம் இருந்தது, பின்னர் பலியின் பொருளான கன்று புறப்பட்டுச் சென்றபோது, மில்லியன் கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர், பின்பு மார்டின் லூதருடன் மனித முகம்கொண்ட ஜீவன் புறப்பட்டு சென்றது, அது சீர்திருத்தத்தின் காலமாக இருந்தது. சாயங்கால நேரம் முதல், கழுகுகள் தவறான உபதேசங்களுக்கும் வஞ்சக ஆவிகளுக்கும் மேலாக எழும்புகிறது, இனி மாம்சத்துக்குரிய பரிசுத்தம் மட்டும் போதாது. காலங்களினூடக பிசாசினால் வடிவமைக்கப்பட்ட எல்லா தந்திரங்களையும், தேவனுடைய பிள்ளைகள் தீர்க்கதரிசன வெளிப்பாட்டினால் தோற்கடித்தார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கின்றனர்].
30 ஏற்கனவே 1817 ல், ஜெனீவாவின் போதகர்கள் நிறுவனம் இயேசுவின் தெய்வீகத்தன்மை, மூல பாவம், கிருபை மற்றும் முன்குறித்தல் பற்றி பிரசங்கம் செய்வதைத் தடுத்தது. அவர்கள் அனைவரும் ஜெபம் செய்து முரணான வெளிப்பாடுகளை பெற்றிருந்தார்கள், அது தேவன் என்று நீங்கள் கூறுவீர்களா? தேவனின் பிள்ளை ஒருவன் இந்த ஜெனீவாவின் போதகர்கள் நிறுவனத்தில் ஒரு உறுப்பினனாக இனி இருக்க முடியாது ... நீங்கள் பார்க்கிறீர்களா? இதுதான் இன்று நீங்கள் பார்க்கும் பெரிய சமரசங்களின் ஆரம்பம்.
31 ஜூலை 8, 2002 திங்கள் அன்று நான் பிரசங்கிக்க ஆரம்பித்தேன். பேருந்து நிலையங்களிலும், வளாகங்களிலும் பிரசங்கித்தேன் ... அந்த நேரத்தில், ஜனங்கள் "கொடிய கசப்பான பிரசங்கம்! கொடிய கசப்பான பிரசங்கம்!" என்று சத்தமிட்டனர். அவர்களை குணமாக்குவதற்கு பரலோகத்தில் இருந்து வந்த மருந்து தான் இந்த செய்தி ஆனால் அவர்கள் அதை நிராகரித்தனர். இரட்சிப்படைய நாடுவதற்குப் பதிலாக அவர்கள் என்னிடம் சண்டையிடவும் அல்லது என்னை கெடுக்கவுமே விரும்பினர். ஒரு பெரிய பணக்கார பெண்மணி நிதி ரீதியாக எனக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்தாள். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆயினும் ஏழைகள் எனக்கு கொடுக்கும் கொஞ்சத்தை உயர்வாக கணப்படுத்த ஐசுவரியத்தை விட தரித்திரத்தையே விரும்புகிறேன், எனது விசுவாசிகள் யாவரும் ஐசுவரியவான்களாகவும், நானோவெனில் ஏழையாகவுமே இருக்கட்டும்!
32 நல்லது! நாம் ஆரம்ப கருத்துக்கே திரும்புவோம், வஞ்சகமானது சபைகளில் நிறைந்திருக்கிறது, அது பிசாசின் புத்திரர் வெளிப்படுதலேயன்றி வேறொன்றுமல்ல ... அதேநேரத்தில் விடுதலை என்று அவர்கள் எல்லோரும் பேசுகிறவைகள் அது சில விதிகளை கைக்கொள்வது பற்றி மட்டுமே. முதலாவதாக, ஒருவன் அதிகாரமுள்ளவனாக இருக்கவேண்டும் மேலும் அந்த அதிகாரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். அது ஒரு போலீஸ்காரர் அவரது போலீஸ் சீருடையில் இருப்பது போன்றது. ஆனால் இது மட்டும் போதாது, ஏனெனில் அதற்கு நியமிக்கப்பட்டதை காண்பிக்கக் கூடிய தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு ஆணை அவருக்கு இருக்க வேண்டும். ஒருவர் போலீஸ்காரர் என்பதால் அவர் ஒரு வாகனத்திற்கு விசில் அடிக்கவோ அல்லது எவரையாவது ஒருவரை கைது செய்யவோ முடியும் என்பதல்ல அது. ஆனால் இது தேவனுடைய அதிகாரத்திற்கு சாயலாயிருக்கிறது.
33 மேலும் இன்னுமாக பிசாசினுடைய அதிகாரத்தின் உருவசாயலானது, அது கொள்ளைக்காரனுடையதாக இருக்கிறது. நாம் இந்த சபைகளில் காண்கிறதைப் போலவே, அவன், நிறுவப்பட்ட விதிகளுக்கு எதிராக, சீருடை இல்லாமல் வெளிப்புற பலத்தினால் கிரியை செய்கிறான்; அவனை துரத்துவதற்கான அதிகாரமோ, கட்டளையோ அவர்கள் பெற்றிருக்கவில்லை என்பதை சாத்தான் அறிவான்.
34 ஒரு போலீஸ்காரன் உத்தரவு ஆணையுடன் சீருடையில் இருந்தால், அவன் தனது கரத்தை வெறுமெனே உயர்த்துவதன் மூலம் அதிகாரப்பூர்வ மோட்டார்வாகன அணிவகுப்பைக்கூட நிறுத்தமுடியும். நீங்கள் பார்க்கிறீர்களா? சபைகளில் ஜனங்கள் விடுதலை என அழைப்பது சாத்தானின் நகைச்சுவைகளேயன்றி வேறொன்றுமல்ல. சில விடுவித்தல்களில், ஜனங்கள் பிசாசை வாய் வழியாக, பிறப்புறுப்புக்கள் வழியாக, காதுகள் வழியாக மற்றும் மூக்குதுவாரங்கள் வழியாக வெளியேறும்படி கேட்டுக்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்.... மேலும் ஆவியானது ஆட்கொண்டவர்களை தகுந்த சைகைகளை செய்யவைக்கிறது. இவ்விதமாக செயல்படும் ஒரு மனிதன் விக்கிரக பூசாரிகளைப் போன்று பிசாசுகளுடன் ஒத்துழைப்பவனாக இருக்கிறான். அவர்கள் வஞ்சகர்கள், கடவுளின் ஆவி மூலம் அவர்கள் அதை செய்வதில்லை. பிசாசுகளின் பெயர் பட்டியல்கள் சிலவற்றை நான் பார்த்தேன், ஜனங்களும் அதை நம்பி பின்பற்றுகின்றனர்.
35 எடுத்துக்கொள்ளப்படுதலின் நாளிலே, அங்கே போக்குவரத்து விளக்குகள் அருகில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் என்றும், விமான ஓட்டிகள் எடுத்துக்கொள்ளப் படுவதால் விமானங்கள் விபத்துக்குள்ளாகும் என்றும், வானொலிகள் காணாமல் போனவர்களைப் பற்றி அறிவிக்கும் என்றும் சொல்கிறதான பிசாசுகளின் போதனைகளை நான் கண்டிருக்கிறேன், ஆயினும் இவை யாவும் தவறானதாக இருக்கையில், எவ்வாறு ஜனங்கள் அதை நம்புகிறார்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் உலகமும் சபைகளும் அதை அறிவதில்லை என்று நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
36 அந்த எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழ்ந்தது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். உபத்திரவத்தின் மத்தியில், ஒரு கிறிஸ்தவன் எப்படி வேலையில் இருக்கமுடியும், அதிலும் ஒரு விமானத்தின் கட்டளைகளுக்குள்ளாக இருக்க முடியுமா? நான் இந்த பொய்களைக் கேட்கும் போது மிகவும் நெகிழ்ந்து (very moved) போகிறேன். ஜான் ஷ்க்வாபை உதாரணமாக்கி, பூமியை வஞ்சிக்கிற, அத்தகைய காரியங்களைச் செய்பவர்களை தேவன் கடுமையாக தண்டிப்பார். மனிதகுலமானது முழு குருட்டுத்தன்மையில் உள்ளது.
37 தாங்கள் பேசுவது இன்னதென்று அறிந்திருக்கிறவர்களோடு நாம் இருக்கிறோம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்று கூறுகின்றனர்]. நீங்கள் பார்க்கிறீர்களா? யோவான் 4:22-ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து: "நீங்கள் அறியாததைக் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்;" என்று கூறினார். நாம் தேவனுடைய ஆலோசனையில் பிரவேசிக்கிறவர்கள். என்னால் புரிந்துகொள்ள முடியாததை காண்பதற்காக, மோசேயைப் போலவே, தேவன் என்னை ஏதேன் தோட்டத்துக்கு கொண்டு செல்லும் அந்நாளில், ஒரு பெரிய வேதசாஸ்திரி அதற்கு மாறாக நிரூபித்தால், நான் தடுமாற்றம் அடையவேண்டியதில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா?
38 1 இராஜாக்கள் 22:19 முதல் 24 ல், தீர்க்கதரிசி மிகாயா கூறினான்: "யேகோவா தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம், அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன். அப்பொழுது யேகோவா: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனை மயக்கி இழுக்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள். அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, யேகோவாவுக்கு முன்பாக நின்று: நான் அவனை மயக்கி இழுப்பேன் என்றது. எதினால் என்று யேகோவா அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனை மயக்கி இழுத்து, அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார். ஆதலால், இதோ, யேகோவா பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார்... என்றான். அப்பொழுது கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டேவந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, யேகோவாவின் ஆவி எந்தவழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்". நீங்கள் பார்க்கிறீர்களா? உத்தமமான ஜனங்கள் மீது வஞ்சக ஆவியை தேவனால் அனுப்ப முடியும் என்பதை அறிந்துகொள்ள ஜனங்கள் வேதாகமத்தை வாசிப்பதில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா?
39 ஒரு கத்தோலிக்கனின் உத்தமம் ஒரு பொருட்டே அல்ல, மிகப்பெரிய பாவம், அது அவன் ஒரு கத்தோலிக்கனாக இருக்கிறான் என்பது தான். ஒரு புராட்டஸ்டன்ட்காரன் சுவிசேஷக சபையினன், மறை பரப்புப்பணி அல்லது ஊழியத்தின் உறுப்பினன் அல்லது பிரன்ஹாமிஸ்டின் உத்தமம் ஒரு பொருட்டே அல்ல, அவனது மிகப்பெரிய பாவம், அது அவன் அந்த சபைகளின் ஒரு உறுப்பினனாக இருக்கிறான் என்பதே. இந்த பத்தியை நன்றாக வாசித்துப் பாருங்கள், அவர்கள் பாகாலின் தீர்க்கதரிசிகள் அல்ல, ஆனால் அவர்கள் யெகோவாவின் தீர்க்கதரிசிகள் என்பதை நீங்கள் காண்பீர்கள். அவர்கள் நானூறு யூத தீர்க்கதரிசிகளாய் இருந்து, ஏவுதலின் கீழ் உத்தமமாக அவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்தனர், ஆனால் அந்த நாளில் ஒரு பொல்லாத ஆவி அவர்களை ஏவினது என்றும் அவர்களும் தங்களுக்குள்ளே அதை அறிந்திருக்கவில்லை என்றும் வேதாகமம் கூறுகிறது. ஆனால் நடந்ததை எல்லாம், தேவன் தீர்க்கதரிசி மிகாயாவுக்கு வெளிப்படுத்தினார். தேவன் எப்போதும் பூமியில் ஒரு வாயை உடையவராக இருக்கிறார். நீங்கள் பார்க்கிறீர்களா? தாம் விரும்புகிறவனுக்கு அதை வெளிப்படுத்த தேவன் சுயாதீனமுள்ளவராக இருக்கிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
40 கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய ஆபத்துக்களில் ஒன்று, அது கிறிஸ்தவ புத்தகக்கடைகள் என அழைக்கப்படுகிறவைகளில் உள்ள புத்தகங்களும் பிரசுரங்களுமாக உள்ளன, அவை இப்போது இணையத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது, அங்கே அழைப்புகளையோ பணிநியமனங்களையோ அல்லது வாழ்கைகளையோ பற்றி நாம் எதுவும் அறியாதிருக்கிற ஜனங்கள், நான் அறிந்திராத சில பரிசுத்த ஆவிகளால் உயிரூட்டப்பட்டு, உண்மைகளை பகிரங்கப்படுத்தக்கூடும். தொலைக்காட்சி மோசமானதாக இருந்தால், இணையம் பத்து மடங்கு மோசமாக இருப்பதை அறிந்துகொள்ளுங்கள்! ...
41 மாயமந்திர முறைமைகளை போலவே, ஒவ்வொரு சுவிசேஷக புத்தகமும் ஒரு பட்டத்திற்கு ஒத்திருக்கிறது மேலும் அந்த பட்டங்கள் அதிகாரங்களாக, பிசாசுகளாக இருக்கின்றன. யாராவது ஜோயல் ஆஸ்டின், டாமி ஆஸ்பான், மோரிஸ் செருல்லோ, பென்னி ஹின், ரெபேக்கா பிரவுன், ரெய்ன்ஹார்டு பொங்கெ மற்றும் யோங்கி சோ போன்று ஒரு புத்தகத்தை எழுதும்போது, அவன் சொல்வது முழுவதும் உண்மையாக இருக்கலாம் ஆனால் அதற்கு பின்னால் இருப்பது ஒரு பிசாசாக உள்ளது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
42 அந்த சர்ப்பம், அவர்களின் தகப்பன் ஏவாளிடம் அவர்கள் பழத்தை சாப்பிட்டால் அவர்களின் கண்கள் திறக்கப்படும் என்றும் அவர்கள் தேவர்களைப் போல நன்மை தீமை அறிவார்கள் என்றும் சொன்னபோது, அது உண்மையாக இருந்தது, ஆனால் அந்த உண்மைக்கு பின்னாக மரணமும் மனிதயினத்தின் வீழ்ச்சியும் தான் இருந்தது. நீங்கள் ஒரு கத்தோலிக்க, புரோட்டஸ்டென்ட், சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு சபைக்கு போகும் போது, ஒரு சுவிசேஷக புத்தகம் வாசிக்கும்போது, நீங்கள் விரும்பும் அனைத்தையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம், ஆனால் அதற்குப் பின்னால், அது மரணமாக இருக்கிறது. நான் கண்டனம் செய்யும் அனைத்து காரியங்களுக்கும், விலகி இருங்கள். அதற்கு காரணம் தேடவேண்டாம்! கர்த்தர் உரைக்கிறதாவது, இந்த சபைகளை விட்டு விலகி இருங்கள், நீங்கள் அங்கே இருந்தால், இனிமேலும் அங்கே போகவேண்டாம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
43 உபாகமம் 13:1 என்ன கூறுகிறது? யாராவது உங்களுக்கு உண்மையை பிரசங்கித்து, அற்புதங்களைச் செய்து, உண்மையாய் தீர்க்கதரிசனம் சொல்லி, உங்களிடம்: "கத்தோலிக்க சபைக்கு செல்லலாம்” மெத்தடிஸ்ட் சபைக்கு செல்லலாம்! நாம் பாப்டிஸ்ட் சபைக்கு, பெந்தேகோஸ்தே சபைக்கு, நாற்சதுரசபைக்கு, அசெம்பிளி ஆஃப் காட் சபைக்கு, பிரன்ஹாமிஸ்டு சபைக்கு செல்லலாம் என்று சொன்னால்... போகாதீர்கள்! உங்களுடைய தேவன் உங்களை பரீட்சிக்கிறார்" நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. மத்தேயு 24:24 மற்றும் 2 தெசலோனிக்கேயர் 2:9 முதல் 12க்கு வெளியே அவர்கள் செய்துகொண்டிருப்பவைகளை, அவர்கள் செய்வார்கள் என்று வேதாகமம் கூறவில்லை? நீங்கள் பார்க்கிறீர்களா?
44 தேவனிடமிருந்து ஒரு தீர்க்கதரிசன செய்தியை ஒருவன் கொண்டிராவிட்டால், தேவன் அவனுக்கு சில அற்புதங்களையும் சில அடையாளங்களையும் எப்படிக் கொடுக்க முடியும்? எதை உறுதிப்படுத்த? வெளிப்படுத்துதல் 16:13 முதல் 14 ன் படி, அவர்கள் செய்துகொண்டிருப்பவைகளை அவர்கள் செய்வார்கள் என்று வேதாகமம் கூறுகிறது மேலும் பிசாசின் புத்திரர், ஆதியாகமம் 4:17 முதல் 23 ன் படி, பூமியை கெடுக்கவும், இன்னும் அதிகமான ஆத்துமாக்களை நரகத்துக்கு அனுப்பவும் தங்கள் உடமைகளை, அவர்கள் ஊழியங்களில் ஈடுபடுத்துவார்கள்.
45 ஐவரி காஸ்டில், சாயங்கால செய்தி, முதன்முதலாக, கட்டாட்ஜிக்கு, சுமார் 1970, 1972 ஆம் ஆண்டுகளில் வந்தது, ஆனால் முப்பது வயது வரை, நான் ஒரு சிற்றேட்டை பார்த்ததில்லை அல்லது அங்கே வில்லியம் பிரான்ஹாம் என்ற பெயரைக் கேட்டதில்லை. ஆபிட்ஜானில் இருக்கும் போது, அவர்கள் பெரிய மற்றும் ஆடம்பரமான ஆலயங்களை கட்டினார்கள், அவர்கள் தங்களுக்குள்ளே சில மெர்சிடிஸ் கார்களை மற்றும் சில வசதியான வீடுகளை வழங்கி கொள்கிறார்கள். அவர்கள் நன்கொடைகளை கொடுக்கும் போது, அது கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதற்கல்ல, ஆனால் மாநாடுகளை ஏற்பாடு செய்து பெருமை காண்பிக்கும் நோக்கிலும், அந்தப் ஸ்தாபனங்களிலிருந்து தப்பினவர்களைப் மாந்திரிகத்தினால் பிடிக்கவுமே! ஓ! இரக்கம்!
46 உலகம் முழுவதும் சுவிசேஷகர்களை அனுப்புவதற்குப் பதிலாக அவர்கள் ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் சாயங்கால செய்தியை வைத்துள்ளனர். நீங்கள் பார்க்கிறீர்களா? தேவனால் அதை ஏற்றுக்கொள்ள முடிந்தால், தாவீது தேவனுடைய பெட்டியை ஒரு புதிய வண்டியில் வைத்தபோது அவர் அவனை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை ஒரு புதிய வண்டியில் ஒருபோதும் கொண்டு செல்லப்படவில்லை மேலும் இணையதளத்தால் ஒருபோதும் கொண்டுபோகப்படாது. இணையதளம், அது நல்லது, ஆனால் அது சுவிசேஷகர்களுக்கு முழுமையான மாற்றாக இருக்கும் போது, அது ஆபத்தானது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
47 நான் சென்றிருந்த பிரன்ஹாமிஸ்டு சபையில், மிக அழகான தங்க பிரசங்க பீடம் இருந்தது, ஆனால் அதை அவர்கள் மாற்றினார்கள். ஒரு மில்லியன் மதிப்புள்ள பிரசங்க பீடம் ஒன்றை வழங்குவதற்கு சபை உறுப்பினன் ஒருவன் முன் வந்தான். இருப்பினும், இதெல்லாம் தேவனுக்கு முன்பாக பைத்தியமாக இருக்கிறது. மேலும் பரிசுத்த இராப்போஜனத்திற்காக, ஒரு பெண்மணி ஒரு கோப்பையில் ஒரு லட்சம் மதிப்புள்ள பிரெஞ்சு நாணயங்களை (பிராங்குகள்-francs) வழங்குவதற்காக எழுந்து நின்றாள், அது ஒரு ஐவரி காஸ்ட் அரசாங்க ஊழியரின் குறைந்தபட்ச சம்பளமான SMIG-ஐ விட, மூன்று மடங்கு அதிகம். நீங்கள் பார்க்கிறீர்களா? அப்படியானால் அப்போஸ்தலர்கள் மரக் கோப்பைகளில் அருந்திய போதான இரட்சிப்புக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதனால்தான் பிரன்ஹாமிஸம் கிறிஸ்தவ விசுவாச துரோகத்தின் புதிய கூடு என்று நான் உங்களுக்குச் சொன்னேன். ஒரு முனை முதற்கொண்டு மறு முனை வரை, அவர்கள் அனைவரும் விசுவாச துரோக போதகர்களாக இருக்கின்றனர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
48 இப்பொழுது தேவன் நமக்கு வேதாகமத்தைப் பற்றிய வெளிப்பாட்டைக் கொடுத்தபோது, பிசாசின் பிள்ளைகள்: "நாம் இணையத்திற்கு சென்று வரலாற்றைப் பற்றியும் வேதாகமத்தின் பதிப்புகள் பற்றியும் ஆராய்ந்து பார்ப்போம். நாம் இந்த காக்குவ் பிலிப்புவுடன் முரண்படுவோம்." என்றனர். ஆனால் இணையத்தில் அவர்கள் எதை கண்டுபிடித்தாலும், அது என்னை திசைதிருப்ப முடியாது, அவையெல்லாம் ஒரு மனிதன் உண்மை என அவன் எண்ணுகிறவைகளை எடுத்துக் காண்பித்தவை மட்டுமே.
49 தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி எதுவாக இருந்தாலும், நமது முற்றிலுமானது ஒருபோதும் இணையமாக இருக்கப்போவதில்லை, ஆனால் ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளன் மூலம் எப்போதும் தேவனாக இருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
50 1 சாமுவேல் 28 ல் சவுல் செய்த பாவத்தை போன்றது அவர்களுடைய பாவம், சவுல் தேவனால் புறக்கணிக்கப்பட்டிருந்த போது, தீர்க்கதரிசிகள் மூலமாகவோ அல்லது ஊரிம் தும்மீம் மூலமாகவோ அல்லது சொப்பனங்களினாலோ தரிசனங்களினாலோ தேவன் அவனுக்கு பதிலளிக்காத போது, தேவனுடைய வார்த்தையின் ஆலோசனையை அறியும்படிக்கு, அனைத்துவகை ஆவிகளையும் எழும்பி வரவழைக்கும் சூனியக்காரியிடம் போனான். ... அவர்கள் பிசாசின் புத்திரர், அவர்களை தனியே விட்டுவிடுங்கள்! 1 சாமுவேல் 28 இல் உள்ளதைப் போல அனைத்துவகை ஆவிகளையும் எழும்பி வரவழைப்பதுதான் இணையம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. அவர்களனைவரும் மரித்தோரின் ஆவிகளுடன் (spiritualists) தொடர்புகொள்கிறவர்கள்.
51 நல்லது. ஆதியாகமம் 4:17 முதல் 24-ஐ இப்போது நாம் பார்ப்போம், நாம் அதை வாசிக்கலாம்: வசனம் 17: ... காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள். அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரிட்டு அழைத்தான். 18 வது வசனம்... ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.
52 19 வது வசனம்... லாமேக்கு இரண்டுபேரை மனைவிகளை எடுத்துக் கொண்டான்: ஒருத்திக்கு ஆதாள் என்று பேர்; மற்றொருத்திக்கு சில்லாள் என்று பேர். ஆதியாகமம் 4:20 ... ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான். 21 வது வசனம்... அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.
53 22 வது வசனம் ... சில்லாள், அவளும் கூட தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள். 23 வது வசனம்... லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவிகொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்; 24 வது வசனம்...காயீனுக்காக ஏழுபழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான்.
54 நல்லது. வசனம் 17 இல், புகழ்பெற்ற மனிதர்களின் தகப்பனையும், தலைவர்கள், மேயர்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் சொத்து மேலாளர்கள், அடுக்கு மாடி கட்டுவோர், இன்னும் அதுபோன்ற பலரின் தகப்பனையும் நாம் கொண்டிருக்கிறோம். வசனம் 19 ல், பலதார மணம்புரிவோர், விபசாரக்காரர்கள், காதலர்கள், ஹோட்டல்கள் மற்றும் திரைப்படங்களின் ஊக்குவிப்பாளர்கள்,.... இன்னும் மற்றவர்களின் தகப்பன். 20 ஆம் வசனத்தில், (கால்நடை) வளர்ப்பவர்களின் தகப்பனையும் நாம் கொண்டிருக்கிறோம்... 21 ஆம் வசனத்தில், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், இசை குழுக்கள், இசையமைப்பாளர்கள், ஏனையோரின் தகப்பனையும் நாம் கொண்டிருக்கிறோம். வசனம் 22 ல், கண்டுபிடிப்பாளர்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்களின் இயக்குனர்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிகர்கள், இன்னும் பிறவற்றின் தகப்பனையும் கொண்டிருக்கிறோம். நீங்கள் பார்க்கிறீர்களா ?
55 அவர்கள் நகரங்களையும் கிராமங்களையும் மின்சாரமயமாக்க தொடங்கிய போது, வெளிப்படையாக அது ஒரு நல்ல காரியம். ஆனால் தொலைக்காட்சி, மதுக்கூடங்கள்(bars), பொதுவிடுதிகள்(pubs) மற்றும் இரவு விடுதிகள் அதனோடு கூட வந்தபோது பாவமானது ஏழத்தனையாக பெருகியது. நீங்கள் பார்க்கிறீர்களா? ...
56 இப்போது வசனம் 22 ல், பூமியில் பிரசித்தி பெற்ற முதல் பெண்ணான, பெண்-விடுதலைக்கு தாயுமான, யேசபேலின் ஒரு கொள்ளு-பாட்டியான, நாமாளை பார்க்கிறோம். அதனால் தான், காயீனின் ஒரு மகள், பெண்-குடும்பத்தலைவி முறையை (matriarchal regime) பரப்பினாள், மேலும் அச்செயல் அவள் ஒரு பெண்ணாக இருந்தபோதிலும், அது அவளை தன் தகப்பனின் சுதந்திரத்தில் பங்கடையச் செய்தது. அவளது பிள்ளைகள் கூட அவளது தகப்பனான லாமேக்கிடம் சுதந்தரவீதம் பெற்றனர். நீங்கள் பார்க்கிறீர்களா? மாதந்தோறும் மாதவிடாயின் போது சபைகளை வழிநடத்தும் பெண்களுக்கு அவள் தாயானவள். அவர்கள் யேசபேலின் கொள்ளு-பேத்திகள், காயீனின் சந்ததியினர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
57 இந்த பெண்-குடும்பத்தலைவர் ஆட்சிமுறையானது பாவத்திற்கான அதிகமான பங்களிப்பாக இருக்கிறது, ஏனெனில் இந்த பெண்கள், தங்கள் பெற்றோரின் ஆஸ்திகளை பார்க்கும் போது, திருமணம் செய்வதைப் பற்றிக்கூட கவலைகொள்ளாமல், ஆணவம் பிடித்தவர்களாக, கீழ்படியாமையுள்ள பெண்களாக, பெண்-விடுதலைக்காக ஆயத்தமானவர்களாக இருக்கின்றனர். நாமாளுக்கு தன் தகப்பனான லாமேக்கின் சபையில் பிரசங்கிப்பதற்கு உரிமை இருந்தது. மேலும் இன்று, நடுராத்திரி சத்தம் இருக்கின்ற போதிலும், சிலர் லாமேக்கின் சபைகளில் தொடர்ந்து பாடவும் பிரசங்கிக்கவும் செய்கின்றனர்...
58 23மற்றும்24 வசனங்களில் இருப்பது, வேதசாஸ்திரிகள், வேதாகம பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள், சபைகளுடைய தலைவர்களின் மற்றும் தேவனுடைய வார்த்தையை வியாக்கியானிக்கும் அனைவருக்கும் தகப்பனாக உள்ளது. தேவனைப்போல் சிருஷ்டிப்பதில் அவர்கள் தோல்வி கண்டபோது, தீர்க்கதரிசிகளாகக்கூட அவர்கள் இராதபோதிலும், தேவனுக்கு சமமானவர்கள் எனச் சொல்வதற்காக, அவர்கள் அவரது வார்த்தையை வியாக்கியானிக்கின்றனர். ஒரு நல்ல வேத சாஸ்திரி ஒரு தெய்வத்தின் வாயாக இருக்கிறான். நீங்கள் பார்க்கிறீர்களா? உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டிராத, பூமியின் குடிகளை வஞ்சிக்கும் படி சபைகள் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் வசம், சிறியவனும் பெரியவனும், தேசங்களும் ஜாதிகளும், மீதமுள்ள அனைவரும் அவர்களுக்கு மானியங்களை வழங்கி, அவர்கள் கோடிக்கணக்கில் பணம், விமானங்கள், அறக்கட்டளைகளையும் வைக்கின்றனர்..
59 ஆனால், தேவன் தமது பிள்ளைகளை இந்த நிலைக்கு உயர்த்துகையில், தமது பணியை தாங்குவதற்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தேவனுடைய சொத்துக்களுக்கு நிர்வாகிகளாகவே அவர்கள் தங்களைக் காண்பார்கள். ஒரு விக்கிரக பூசாரி சில மரித்தோரை எழுப்பியிருந்தாலும் கூட, தேவனுடைய குமாரன் ஒருவன் ஒருபோதும் தன் உடமைகளை அந்த விக்கிரக பூசாரிக்கு செலவிடமாட்டான். தேவனுடைய குமாரன் ஒருவன் தனது உடமைகளை ஒருபோதும் ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைக்கு செலவிடமாட்டான். ஆனால் பிசாசின் புத்திரர் அப்படிச் செய்வார்கள். பிசாசின் பிள்ளைகள் உயிர்வாழும் தீர்க்கதரிசியை விசுவாசிக்க மாட்டார்கள், மேலும் இந்த தீர்க்கதரிசி தங்களுடைய வீட்டில் இருந்தாலும்கூட, அவர்கள் இந்த தீர்க்கதரிசியில் விசுவாசம் வைக்கக்கூடாதபடிக்கு இவையெல்லாம் நடந்தேறுகிறது.
60 நான் எங்கு பிறந்து நான் எங்கு வளர்ந்தேனோ, அங்குள்ள என் சொந்த சகோதரர்களையும், எனது கிராமத்திலுள்ள அனைவரையும் போன்றுதான் இது உள்ளது. அவர்கள் என்னை நம்பவில்லை, பாவத்தினிமித்தம் அல்ல, ஆனால் நாங்கள் ஒரே தாயால் பாலூட்டப்பட்டு இருப்பதாலும் நாங்கள் ஒன்றாக வேட்டையாடவோ அல்லது மீன்பிடிக்கவோ சென்றதாலும்தான் ... ஆனால் தூரத்திலிருந்து ஒரு ஓநாய் வரும், அவர்கள் அவனை நம்புவார்கள். அவர்களோடு வளர்ந்ததும், மீன்பிடித்ததும் அல்லது வேட்டையாடினதும் தான் என் பாவம். வஞ்சிக்கிறவர்கள் வருகிறார்கள் அவர்கள் அவர்களை நம்புகிறார்கள். சில போலியான செய்திகளுடன் கள்ள தீர்க்கதரிசிகள் வருகிறார்கள், அவர்கள் அவர்களை நம்புகிறார்கள்.
61 ஒரு கிறிஸ்தவன் அரசியலில் ஈடுபடலாம், மதுபானம் அருந்தலாம், புகைபிடிக்கலாம், ஓரினச்சேர்க்கையாளனாக இருக்கலாம், பல பெண்களை திருமணம் செய்யலாம் என்று பிசாசின் புத்திரர்களின் இனம் இன்று பிரசங்கிப்பதை நாம் பார்க்கிறோம்; ஒரு கிறிஸ்தவன் கடற்கரைக்குப் போகலாம், கால்பந்து விளையாடலாம் தொலைக்காட்சியில் கால்பந்தாட்டம் பார்க்கலாம் என்று பிரசங்கிப்பதை, நீங்கள் பார்க்கிறீர்களா? அப்படிப்பட்ட ஜனங்கள் யாவரும் சபிக்கப்பட்டவர்கள். கிறிஸ்தவர்கள் சகோதரிகளுக்கு முன்பாக அரைக்கால்சட்டையில் இருப்பதும், சகோதரர்களுக்கு முன்பாக நீச்சல் உடையில் சகோதரிகள் இருப்பதும். அது சபையில் சாத்தான் இருப்பதாகும்! பவுலைப் போல, நான் சத்தமிடுகிறேன்: இப்படிப்பட்டவைகளை பிரசங்கிப்பவர்கள் சபிக்கப்படக்கடவர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
62 கிறிஸ்துவிடம் நீங்கள் வரும்போது உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று மனைவிகள் கூட இருந்தாலும் நீங்கள் அவர்களை மனைவிகளாக கொண்டிருக்கலாம், மற்றும் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்னதாக அவர்களுக்கு பரிசளிக்கலாம் ஆனால் ஏற்கனவே நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பதால், நீங்கள் இரண்டு மனைவிகளை கொண்டிருக்க முடியாது. மேலும் இரண்டு மனைவிகளை கொண்டிருந்து பாஸ்டராக இருக்க முடியாது.
63 இப்பொழுது, நீங்கள் திரைப்படங்களையும் கால்பந்து போட்டிகளையும் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருக்கையில், தொலைக்காட்சியை விட்டு தூரமாக தேவன் செய்கிறவைகளை உங்களால் எப்படி புரிந்துகொள்ள முடியும்? நீங்கள் பார்க்கிறீர்களா? கால்பந்தாட்டத்தை பொருத்தவரை, ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு எதிராக விளையாடும் போது, அவர்கள் இந்த நாட்டிலுள்ள சபைகளின் இயேசு கிறிஸ்துவோடு, மற்ற நாட்டிலுள்ள சபைகளின் இயேசு கிறிஸ்துவை எதிர்கொள்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. இது பிசாசுகளின் மோதல் ஆகும். மேலும் அவர்களுடைய பரிசுத்த ஆவிகள் (holy spirits) அவர்களுக்கு வெற்றியின் வெளிப்பாட்டை கொடுக்கின்றன. இந்த சந்தர்ப்பத்திற்காக, சபைகளின் பிசாசுகள், அஞ்ஞானிகளின் பிசாசுகள், மற்றும் முஸ்லீம்களின் பிசாசுகள் ஒரே யுத்தத்தில் உடன்படுகின்றன. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. ஒரு கிறிஸ்தவனுக்கு அங்கே செய்வதற்கென்று எதுவும் இல்லை, அவர்களை விட்டு விலகி இருங்கள்! ... நீங்கள் பார்க்கிறீர்களா?
64 கால்பந்து போட்டிகளைக் காணும் போது, தங்கள் தொலைக்காட்சி பெட்டிக்கு முன் ஆர்ப்பரிக்கிற சில பிரன்ஹாமிஸ்டு போதகர்களைக் கூட நான் பார்த்திருக்கிறேன், அத்தகைய மனிதர்கள் வார்த்தையை விவாதிக்க என்னிடம் வர முடியுமா? இல்லை, நான் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். மிகவும் வஞ்சிக்கப்பட்டு ஆத்துமாக்களை தவறாக வழிநடத்துகின்ற அத்தகைய மனிதர்கள் அங்கே உள்ளனர், ஒரு ஆபாசமான விபச்சாரி அவர்களை விட ஆயிரம் மடங்கு கிருபை உள்ளவளாக இருக்கிறாள். நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் பூமியில் சிரமமின்றி உள்ளனர் ஆனால் நரகத்திற்கு அவர்கள் மேல் உரிமை உண்டு, மேலும் அவர்களை உரிமை கோருவதை அது நிறுத்தாது. நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு போதகன் அல்லது பிரசங்கி: "சகோதரரே, நான் செய்தியை நம்புகிறேன், இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?" என்று சொல்வதற்கு வரவில்லை என்றால், அவனைப் பற்றி தொல்லைக்குள்ளாக வேண்டாம். யூதர்களின் தலைவரான பெரிய நிக்கொதேமும் கூட விளக்கங்களுக்காக இயேசுவிடம் வரவில்லையா?
65 அத்தகைய மனிதர்கள் செய்திக்கு முரண்பாடான கேள்விகளை என்னிடம் கேட்டால், நான் கொடுக்கிற பதில்கள் அவர்களை ஒருபோதும் நம்பமுடியாதவாறு செய்யும். நேற்றைய தினம் ஒருவன், ஆரம்பத்திலிருந்த வார்த்தைகளுடன் ஒப்பிடும்போது அங்கே புத்தகத்தில் சேர்த்தல்கள் இருப்பதாகவும் அது சரியானதல்ல என்றும் எனது கவனத்திக்கு கொண்டுவந்தான். நீங்கள் பார்க்கிறீர்களா? எரேமியா 36:32-ஐ நான் அவனுக்கு கொடுத்திருக்கலாம், ஆனால் அவன் சொல்வது சரியானதுதான் என்று நான் அவனை நம்பும்படிச் செய்தேன்.
66 நல்லது ... வேதாகமத்தின் படி, தேவனுடைய பிள்ளைகள் முழுமையாக இழந்து போய்விடுகையில் தேவன் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுகிறார், மேலும் இந்த தீர்க்கதரிசி சத்தியத்தை மீட்டெடுக்கவும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை திரும்பவும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரவும் வருகிறான். எனவே தான் தேவதூதனும் ஆட்டுக்குட்டியும் இறங்கி வருவதற்கு முன்னர் ஒரு கிரகணம் ஏற்பட்டது. மேலும் அதற்கு முன்னமே, சில வேதாகம தீர்க்கதரிசனங்கள், அத்தகைய ஒரு நேரத்தில், அத்தகைய ஒரு இடத்தில், தேவன் அத்தகைய ஒரு காரியத்தை செய்வார் என்று அதை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தது.
67 இன்று தேவன் ஒரு மனிதனை எழும்பச் செய்கிறார் என்றால், அவன் தனது காலத்தின் அனைத்து வியாதிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். சாயங்கால நேரத்தில் அது புற்றுநோயாக இருந்தது, நடுராத்திரியில் அது எய்ட்ஸாக இருக்கிறது. நடுராத்திரி சத்தத்தின் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவராக இல்லையென்றால், மேலும் நான் மத்தேயு 25:6 இல்லையென்றால், என்னால் எய்ட்ஸ் வியாதியை குணப்படுத்த முடியாமல் போகட்டும். வரக்கூடியவைகளோடு ஒப்பிடுகையில் நாம் பார்த்துக்கொண்டு இருப்பவைகள் ஒன்றுமில்லை! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, ஏப்ரல் 24, 1993 ன் தூதனானவர் அதைச் செய்வார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
68 தேவனுடைய சமூகத்திலிருந்து விரட்டப்பட்ட பிரன்ஹாமிஸ்டு இஸ்மவேலர்களுக்கு தேவன் பெரும் பொருட்செல்வத்தை கொடுப்பாராக, மேலும் நமக்கோ, மரித்தவர்களை மீண்டும் உயிரோடெழுப்பவும், குருடர் பார்வை அடையவும், செவிடர் கேட்கவும் ... வல்லமையை அவர் தருவாராக. ஏனெனில் தேவன் அவரது வார்த்தையை கண்டிப்பாக உறுதிப்படுத்துவார், நாம் இப்போது அதை நோக்கித் தான் நகருகிறோம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
69 இந்த செய்தியை விசுவாசித்தும் அவனுடைய ஆவிக்குரிய, சரீரப்பிரகாரமான மற்றும் சமூக வாழ்வில் எந்த ஒரு தாக்கமுமின்றி இருக்க ஒருவனாலும் முடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. எல்லாமே நீங்கள் அதை எப்படி எடுக்கிறீர்கள் என்பதை பொறுத்தது! எந்த தர்க்கமும் இன்றி, வார்த்தைக்கு வார்த்தை அதை விசுவாசியுங்கள், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கவில்லை என்றால், என்னிடம் கூறும்படிக்கு நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். தேவன் எப்போதும் வார்த்தையை உறுதிப்படுத்துவாராக என்பதே என் ஜெபம், மேலும் அவர் அதை செய்வார். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கின்றனர்].
70 அந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளின் உயர் தலைவர்கள் தாங்கள் தவறான பாதையில் இருப்பதை அறிந்துள்ளனர் என்பதை பல மாத ஊழியத்திற்கு பிறகு நான் முழுமையாக நம்புகிறேன், ஆனால் அவர்களாகவே வந்து கண்டுபிடித்த அமைப்பு முறைமைகளை அவர்கள் எப்படி மாற்றுவார்கள்? அவர்கள் அப்படி அதை செய்தால், பாஸ்டர்கள் பதவியை அவர்கள் இழந்துவிடுவார்கள், பின்னர் எப்படி தங்களது குடும்பத்தை கவனிக்க முடியும், வீட்டு வசதிக்கு எப்படி பணத்தை செலுத்த முடியும்?
71 அவர்கள் மாய்மாலக்காரர்கள். அந்தப்படியே அவர்கள் சிந்திக்கவும் செயல்படவும் செய்கின்றனர். அதனால் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, "சதுசேயர்களையும் பரிசேயர்களையும் மாய்மாலக்காரர்கள்" என அழைப்பதை நிறுத்தவேயில்லை. உண்மைக்கு வேறொரு சாயலை விசுவாசிகளிடம் கொடுக்க தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கின்றனர்! நீங்கள் பார்க்கிறீர்களா ?
72 பிசாசின் குமாரன் ஒருவன் இறையியலால் நிரப்பப்பட்டு, உங்களிடம் வந்து: "இந்த காக்குவ் பிலிப்பு ஒரு வஞ்சகன், ஒவ்வொருவரையும் அவனண்டைக்கு நடத்த விரும்புகிறான், ஆயினும் தேவன் நம்மிடம் கேட்பது என்னவென்றால், இயேசு என்ன சொன்னார் என்பதைக் கவனிக்கவேண்டும் என்பதே; எந்த இடத்திலிருந்தும், எந்த ஜெப ஆலயத்திலிருந்தும், நீங்கள் மெத்தோடிஸ்டாக, பாப்டிஸ்டாக, தேவர்கள் கூட்டுச் சபையினனாக, ஏழாம் நாள் ஆசரிப்பாளனாக அல்லது மற்ற எதுவாக இருந்தாலும், நீங்கள் செய்யவேண்டியது அதுதான். உபதேசங்களில் வேற்றுமைகள் ஒன்றுமலல! அது கருப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை இனங்களைப் போன்றதாகும். பரலோகத்திலும், நாம் அதே இனமாகவே இருப்போம்! வெவ்வேறு பூக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட, தேவனின் தோட்டம் தான் நாம்! அல்லேலூயா ..." என்று கூறுகிறான். நீங்கள் பார்க்கிறீர்களா? அவன் அதை கூறுகையில், ஏவாளைப் போன்று நீங்கள் அங்கு உட்கார்ந்து அதை கேட்டுக் கொண்டிருந்தால், அது உங்கள் பிரச்சினை.
73 ஆனால் இன்று காலை, அந்த நாளை போலவே நான் உங்கள் எதிரியாக இருந்தாலும் கூட, ஒரு திறந்தவெளி பிரசங்கத்தின் போது, முடிந்தால் என்னை கொலை செய்வதற்கு, அந்த மனிதன் விரும்பினான், ஜனங்கள் அவனை தடுத்தனர் ஆனாலும் அவன் அதை செய்யவில்லை. அவன்: "காயீனுடைய பாவத்தை ஏற்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்" என்றான். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் அதையும் மீறி, எனக்கு வழங்கப்பட்ட கிருபையின் வல்லமையின் கீழாக, நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது, அத்தகையவர்களின் கைகளிலிருந்து நீங்கள் எவ்வளவு அற்புதங்களை பெற்றிருந்தாலும் ஒரு பொருட்டல்ல, இனிமேல் உங்கள் மீது அவர்கள் கரங்களை வைக்க அனுமதிக்கவேண்டாம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. மேலும் ஆபிரிக்கர்களே உங்களைத்தான், பாரம்பரிய விக்கிரக பூசாரிகளால் பல நன்மைகளை பெற்றுவிட்டு, இன்றைக்கு அவர்களைப் பயன்படுத்துவது பிசாசு தான் என்று நீங்கள் சொல்கிறீர்கள், அப்படியிருக்க நான் சொல்லுகிறது இன்னதென்று நீங்கள் அறியாதிருக்கிறது எப்படி?
74 பூமியில் ஒரே ஒரு திருச்சபை தான் உள்ளது, அதில் ஒருவர் பிரவேசிப்பது வார்த்தையால் மட்டுமே. தேவன் ஒரு மனிதனை ஊழியக்காரராக அனுப்பும்போது, அவர் வார்த்தையோடு, அவரது காலத்தின் நற்செய்தியோடு வருவார். அவர் ஒரு சபையை ஒருபோதும் ஸ்தாபிக்கமாட்டார் ஆனால் வார்த்தையைக் கொண்டு வருவார், ஏனெனில் ஆதியிலே, இருந்தது திருச்சபை அல்ல ஆனால் வார்த்தை; மேலும் வார்த்தையின் வல்லமையினாலேயே அந்த திருச்சபையானது உருவாக்கப்பட்டது. இந்த நற்செய்தியை சுற்றி ஜனங்கள் ஒன்றுகூடுகின்றனர், இதுதான் திருச்சபை என்று அழைக்கப்படுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
75 தேவன் தம்முடைய வித்தை நமக்குள் எழுப்பி, அவருடைய வார்த்தைக்கான தாகத்தை நம் இருதயங்களில் வைப்பாராக! நம்முடைய பழைய தோல்துருத்தியை தேவன் வெறுமையாக்கி பரிசுத்த ஆவியை நமக்கு தருவாராக. தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு தம்மை வெளிப்படுத்தி, பூமியின் நான்கு காற்றுகளிலிருந்தும் தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரையும், பூர்வகால முதற்கொண்டு வாக்களிக்கப்பட்ட இந்த நற்செய்தியை சுற்றிலும் ஒன்றுசேர்ப்பாராக மேலும் அது இப்பொழுது நமக்கு முன் இந்த செய்தியினூடாக திரைநீக்கப்படுகிறது. கனமும், ஞானமும், ஸ்தோத்திரமும், துதியும், அதைச் செய்ய வல்லமையும் பெலனும் அவர் ஒருவருக்கே உரியது! ஆமென்!
76 இப்போது, பரலோகத்தின் தேவன் மனுக்குலத்திற்கு சொல்லும் உவமையை கேளுங்கள்: ஒரு கொள்ளைக்காரன் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கையில் கையும் களவுமாக பிடிபட்டிருந்தான். அவன் மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் அவனை போலீசாரிடம் கொண்டுசென்று, "இந்த மனிதன் கள்ள நோட்டு அச்சடிக்கையில் நாங்கள் இவனை பிடித்தோம், அதனுடைய ஒரு பிரதி இதோ..." என்றனர்.
77 போலீஸ் அதிகாரி அந்த பணத்தாளை வாங்கி, அதை கூர்ந்து ஆராய்ந்துவிட்டு: "மதிப்புக்குரிய மனிதர்களே, இந்த பணத்தாள் ஒரு உண்மையான பணத்தாள்!" என்றார். குற்றஞ்சாட்டினவர்கள் விடாப்பிடியாக: "ஆனால் அதிகாரியானவரே, இந்த பணத்தாளை அச்சடித்தவன் இவன் தான்" என்று வற்புறுத்தினர். போலீஸ்காரன் கொள்ளைக்காரனிடமாக திரும்பி: "ஐயா, இந்த பணத்தாளை அச்சடித்தவன் நீர் தானா!" என்றான். கொள்ளைக்காரன் பிரதியுத்தரமாக: "ஆம்!" என்றான்.
78 போலீஸ்காரர் தொடர்ந்து: "அவன் அதை ஒப்புக்கொண்டபோதிலும், நாம் அவனை ஆக்கினைக்குள்ளாக்க முடியாது, ஏனென்றால் இந்த பணத்தாள் ஒரு உண்மையான பணத்தாளாக இருக்கிறது!" என்றார். கொள்ளைக்காரன் விடுதலை செய்யப்பட்டான். நீங்கள் பார்க்கிறீர்களா? மனிதர்களுக்கு முன் நீங்கள் செய்வது, சரியானதாக, தர்க்கரீதியாக, பரிபூரணமானதாக இருக்கிறது, ஆனால் ஓர் நாளில் உங்களை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கக்கூடிய ஒருவர் அங்கே இருக்கிறார்... கேட்கிறதற்கு காதுகள் உள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்! [ஆசிரியர் குறிப்பு: ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசுகிறார்].