(ஞாயிற்றுக்கிழமை காலை செப்டம்பர் 5, 2010 அட்ஜாமே, ஆபிட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
12002 ஆம் ஆண்டிலிருந்து இது நூறாவது பிரசங்கம் இது தேவனுக்கு மகிமை செலுத்துவதற்க்கும், இந்தச் செய்திக்கென்று தங்களிடம் இருந்த சிறந்ததை கொண்டுவந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதற்க்கும் ஒரு தருணமாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
2ஆனால் நம்முடைய மிகப் பெரிய சந்தோஷம் என்னவெனில் உலகத்தின் அஸ்திபாரத்துக்குமுன்னே நாம் அவரோடு கூட நாம் இந்த ஜீவனைக் கொண்டிருக்கிறபடியால், தேவன் ஏற்கனவேநம்மை மரணத்திலிருந்தும் ஜீவனைக் கடக்க செய்தார் என்பது தான். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
3இந்த கடந்த மாதங்களில், பல நாடுகளில் இருந்து நல்ல ஜீவியத்தை கொண்ட தாழ்மையான மக்கள் என்னிடம் வருவதைக் கண்டேன்! தேவன் தாமே இதற்கு பின்பு இல்லை என்றால் அத்தகைய நல்ல மனிதர்கள் என்னைப் போன்ற ஒரு ஏழை மனிதனை நோக்கி ஞானஸ்நானம் பெறவும், பிரதிஷ்டைசெய்யப்படவும் அனுமதிப்பாரா?
4நல்லது! எனக்கு இங்கே ஒரு கேள்வி மற்றும் பல குறிப்புகள் உள்ளன… கேள்வி ஒரு சகோதரர் அல்லது சகோதரி வாக்களிக்க முடியுமா என்பதை அறிந்து கொள்வதை பற்றி! அதற்கான பதில், ஆம்! ஏனென்றால், நீங்கள் அதைச் செய்யாவிட்டால், நீங்கள் விரும்பாததை கொண்டு நீங்கள் திணிக்கப்படுவீர்கள், மேலும் அதை ஏற்க நீங்கள் கடமைப்படுவீர்கள்! வாக்களியுங்கள், ஆனால் ஒருபோதும் அரசியல் விவாதத்தில் ஈடுபடவோ அல்லது ஆரம்பிக்கவோ வேண்டாம்.
5முதல் குறிப்பு, உங்கள் மனைவி ஒரு குழந்தையை இந்த உலகத்திற்குள் கொண்டுவரும் போது, அந்த குழந்தை தனது ஜீவியத்தால் தகுதியற்ற ஒரு உறவினரின் பெயரைத் கொண்டிருப்பதற்கு நீங்கள் கடமைப்படவில்லை..
6இரண்டாவது குறிப்பு, போதகர்களாகவும் பிரசங்கிகளாகவும் இருக்கிற நீங்கள், உங்களுடைய நேரத்தில் 90 % தேவனுக்கு கொடுங்கள் ஆகையால் நீங்கள் பிரசங்கம் செய்யும் பொழுது நாம் அதை காணலாம். அதேபோல், பணிபுரிகிற நீங்கள், உங்கள் நேரத்தை 10 சதவிகிதம் தேவனுக்காக அர்ப்பணிக்க வேண்டும், குறிப்பாக சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில், ஒரு சகோதரர் அல்லது சகோதரியை வாழ்த்த சிறிது நேரத்தைக் எடுத்துக்கொள்ளுங்கள். அனைவருக்கும் நீங்கள் இதை செய்ய வேண்டும். அங்கே நீங்கள் செய்கிறவர்களுக்கு என்றும் செய்யாதவர்களுக்கு என்றும் எதுவும் இல்லை.
7மேலும், ஒரு விசுவாசி தசமபாகம் செலுத்தும் பொழுது அவருடைய பாஸ்டர் தசமபாகத்தின் தசமபாகத்தை செலுத்தாத போது அவருடைய தலைவிதியை பற்றி என்னவென்று யாரோ ஒருவர் என்னிடம் கேட்டார், இந்த விசுவாசி தேவனுக்கு முன் குற்றமற்றவரா? நான் இல்லை என்றேன்! அவர் தசமபாகம் செலுத்தாதவனின் சாபத்தின் கீழ் இருக்கிறார். அதாவது, உடன் ஊழியர்கள் தசமபாகத்தின் தசமபாகம் ஒதுக்கி வைக்க வேண்டும் நான் தேவையில் இருக்கும் பொழுதோ அல்லது அதைக்கொண்டு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லுவேன்… [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
8காபோனின் சகோதரர்களை அடுத்து இந்த அனைத்து ஞானஸ்நானங்களிலும் நான் மகிழ்ச்சியடைந்தேன்! ஐரோப்பாவின் சகோதர சகோதரிகளின் ஞானஸ்நானம் கடந்த அக்டோபர் 9 சனிக்கிழமையன்று நடந்த அதே நேரத்தில் இங்கு ஐவரி கோஸ்டில் இருக்கும் நம்முடைய சகோதரர்கள், ஃபேபியன் மெடோ மற்றும் கேமரூனின் டாக்னிலீ ஜீன் பேட்ரிஸ் ஆகியோருக்கும் நடந்தது! கேமரூனைச் சேர்ந்த சகோதரர்களுக்குப் பிறகு, காங்கோ-கின்ஷாசாவின் சகோதரர் கம்பலே சிவன்ஸைர் கிரெபின் இங்கு வந்தார்.
9அவர்கள் என்னிடம், “அன்புள்ள தீர்க்கதரிசியே, உங்கள் நாட்டிலிருந்து வெளியேற உங்களுக்கு உரிமை இல்லை… விசாவைப் பெற உங்களால் இயலாது என நீங்கள் புகாரளிக்கப்பட்டிருக்கிறீர்கள்… நீங்கள் பொது ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் ஒப்பந்தப் பகுதிகளின் சர்வதேச உறவுகளுக்கு நீங்கள் ஒரு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறீர்கள். ", இது வேதவசனங்களை நிறைவேற்றுவதற்காக இவைகள் இருக்கின்றன! இது இவ்விதமாக "அன்புள்ள எலிசா, உலகின் எல்லா தேசங்களிலும் யோர்தான் இல்லை! இங்கேயே இருங்கள், அவர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலிருந்து, உங்களை நோக்கி வருவார்கள்! உங்களை அனுப்பிய சர்வவல்லமையுள்ள தேவன் அவர்கள் உங்களை நோக்கி இறங்கச் செய்வார் "!
10நீர் ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கும்போது, யாவும், பிசாசும் அவருடைய பிள்ளைகளும் கூட உங்களுடைய ஊழியத்தின் நிறைவேற்றத்தில் பங்கேற்க வேண்டும் [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
11நல்லது, நான் லூக்கா 16: 20 முதல் 22-ஐ வாசிக்கப் போகிறேன்: "லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. பின்பு அந்த தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்." திஸ்பியனாகிய எலியாவைப் போல லாசருவை தேவதூதர்கள் சுமந்தார்கள் என்று நாம் பார்க்க கூடாது ஆனால் அவன் அடக்கம் செய்யப்பட்டான். ஆனால் அவனுடைய ஆத்துமாவே தேவதூதர்களால் ஆபிரகாமின் மடிக்கு கொண்டு செல்லப்பட்டது!.
12நல்லது… அந்த நாளை என்னால் பார்க்க முடிந்தது…! லாசரு இறந்தபோது, எல்லோரும் அதைக் கேள்வி பட்டார்கள், ஆனால் யாரும் அழவில்லை! துர்நாற்றத்தின் காரணமாக அந்த சடலத்தை எவ்வாறு அகற்றுவது என்பது அவர்களின் கவலையாக இருந்தது! நகரத்தில் வழக்கம் போல் வாழ்க்கை சென்றது, எல்லோரும் தங்களுடைய காரியங்களைப் கவனித்துக் கொண்டார்கள்! அவர்களை சர்ப்பங்கள் என்றும் அவர்களின் சபைகளை சாத்தானின் ஜெப ஆலயங்கள் என்று அழைத்தவனின் உடலைத் தொட யாரும் விரும்பவில்லை. ஆனால் இறுதியாக, செத்துப்போன நாயை ஒருவன் விடுப்பது போன்று அவர்கள் அந்த சடலத்தை விட்டு வெளியேறினார்கள்…
13பின்னர், ஐசுவரியவானின் மரணம் பற்றிய செய்தி எல்லா இடங்களிலும் பரவியது! அவனுடைய சடலம் நிபுணர்களால் சிகிச்சையளிக்கப்பட்டு மேலும் சவக்கிடங்கில் பாதுகாக்கப்பட்டது. செய்தித்தாள்கள், வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகள் சோகமான செய்திகளை இடைவிடாமல் ஒளிபரப்பியது. கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் ஒரு நிமிடம் மௌனம் கடைபிடிக்கப்பட்டது, அவர்கள் ஒருவருக்கொருவர் இரங்கல் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். செய்திகள் இருந்தன: இன்ன இன்ன அதிகாரிகள், இன்ன இன்ன குடும்பத்தினர் இங்கேயும் அங்கேயும், சிலர் இங்கே சிலர் அங்கே என அவருடைய மரணத்தை உங்களுக்கு அறிவிப்பதில் மிகவும் வருந்துகிறோம் என்று இருந்தது. நீங்கள் பார்க்கிறீர்களா? மேலும் ஏற்பாட்டுக் குழு பல்வேறு விஷயங்களில் பல முறை ஆலோசிக்க வேண்டியிருந்தது, சீருடையில் அரைதுணிக்கான தேர்வு, வரவேற்கும் ஊழியர்கள் மற்றும் முதல் இறுதி சடங்கின் கண் விழிப்பு கூட்டத்தின் தேதி, இரண்டாவது சடங்கின் கண் விழிப்பு கூட்டம் மற்றும் அனேக காரியங்கள் செய்ய வேண்டியிருந்தது! இதற்கிடையில் அவரது ஆன்மா நரகத்தில் கிடந்தது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
14இப்போது அந்த ஐசுவரியவான் யார்? நீங்கள் : "ஓ சகோதரன் பிலிப்பு, நிச்சயமாக, இந்த ஐசுவரியவான் நல்ல மனிதன் அல்ல! அவன் ஒரு நேர்மையற்ற செல்வத்தை கொண்டிருந்தவன், அவன் மக்களை காயப்படுத்தினான் " என்று சொல்கிறீர்கள் இல்லை ஐயா, இந்த ஐசுவரியவான் ஒரு நல்ல மனிதன்! நியாயப்பிரமாணத்தை பின்பற்றியவன், மேலும் சிறந்த ரபிகளுடன் நல்ல உறவுகளைக் கொண்ட ஒரு யூதன், அநேகமாய், அப்போஸ்தலர் 10-ல் உள்ள கொர்நேலியுவை விட சிறந்தவன்!
15ஒரு நல்ல பிரன்காமிஸ்ட்டைப் போலவே, அவர் வேதத்தை தன்னுடைய முற்றிலுமானதாக கொண்டிருந்தார், மேலும் அவர் "பூமியில் என் முக்கியத்துவம் எதுவாக இருந்தாலும், இயேசு இல்லாமல் எல்லாமே வீண்" என்று அநேக முறை மகிழ்ச்சியுடன் பாடினார். அதாவது சொல்ல வேண்டுமென்றால் அவர் ஏற்கனவே நாசரேத்தின் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார், மேலும் இயேசுவின் இரத்தத்தின் மூலம் இரட்சிப்பு தேவைப்படுகிற எந்த தீர்க்கதரிசியும் அவருக்கு தேவையில்லை என்றும் கூறினார். அவருடைய வாழ்க்கையைப் பற்றி வேதாகமம் அவரை நிந்திக்கவில்லை! ஆம் சகோதரரே, அதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்!
16இப்போது நான் அப்போஸ்தலர் 10 ஐ வாசிக்கப் போகிறேன்… மிக கவனமாய் பின்பற்றுங்கள்: “இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான். அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்... ". அவையாவையும் கொர்நேலியு செய்தான்! ஆனால் அவனுடைய தலைமுறையில் இராஜ்யத்தின் திறவுகோலை வைத்திருந்தவர் இல்லாமல், அவன் நேராக நரகத்திற்குச் சென்று கொண்டிருந்தான், அந்த ஐஸ்வரியவானுக்கும் அதுவே இருந்தது. அதற்கு மேலே, அந்த ஐஸ்வரிய யூதன் தனது நுழைவாயிலில் தேவனுடைய ஒரு பிள்ளையை கொண்டிருந்தான்: லாசரு, ஒரு தரித்திரன், அவனுடைய பருக்கள் விரும்பத்தகாத துர்நாற்றத்தை தந்து, நாய்கள், ஈக்கள் மற்றும் மற்றவைகளை ஈர்த்தது!
17இன்று, எந்த ஐசுவரியவான், லாசருவை தனது நுழைவாயிலுக்கு முன் ஏற்றுக்கொள்வான்? ஆனால் அங்குள்ள ஐசுவரியவான் லாசருவை ஏற்றுக்கொண்டதாகவும், லாசரு அங்கேயே நின்று, அவருடைய மேசையிலிருந்து விழுந்ததை சாப்பிட்டதாகவும் வேதாகமம் கூறுகிறது. இன்று, லாசரு போன்ற ஒரு மனிதனை தனது நுழைவாயிலிலிருந்து விரட்டும்படி எந்த ஐசுவரியவான் தனது பாதுகாவலருக்கு உத்தரவிட மாட்டான்? நீங்கள் பார்க்கிறீர்களா? முழு நகரத்திலும், அந்த ஐசுவரியவானிடம் தான் தனக்கு உணவளிக்கக் கூடும் என்பதை லாசரு கண்டுபிடித்தான்! உங்களுக்குத் தெரிந்த அனைவரின் மொத்த அளவை விட அந்த பணக்காரர் சிறந்தவர்! அவர் சமுதாயத்திற்கு பயனுள்ளவராக இருந்தார்! அந்த ஐசுவரியவான் ஒரு நல்ல மனிதன்! அவர் அடக்கம் செய்யப்பட்ட நாளில், பல்வேறு உரைகள் அவருடைய எளிய மற்றும் பக்தியுள்ள வாழ்க்கையை பாராட்டினார்கள்!
18நீங்கள் என்னிடம், "ஆனால் சகோதரர் பிலிப்பு, தேவன் அவரை இரட்சித்து இருக்க முடியும் என்று சொல்வீர்கள், இயேசு மத்தேயு 25-ல் , தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்" என்று சொன்னார்... தன் மகன் லாசருவின் உபகாரியை தேவன் எப்படி நரகத்திற்கு செல்ல அனுமதிக்க முடியும்?" அதற்கான பதில் 29 வது வசனத்தில் ஆபிரகாமின் வார்த்தைகளில் உள்ளது! அந்த ஐசுவரியவான் தாமே தகப்பனாகிய "ஆபிரகாமே என்றான்..." அதற்கு ஆபிரகாம் அவனை நோக்கி : அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா! அவர் இங்கே ஒரு உயிர் வாழும் தீர்க்கதரிசியை விசுவாசிக்க வேண்டியிருந்தது. தேவன் அவருக்கு வாய்ப்பளித்திருந்தார்; அவர் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியின் சத்தத்தை கேட்டிருக்கிறான், ஆனால் அவர் அந்த தீர்க்கதரிசியை விசுவாசிக்கவில்லை! அந்த ஐசுவரியவானுக்கு தீர்க்கதரிசி என்ற கருத்தைக் கொண்டிருக்கவில்லை. பூமியில் செல்ல வேண்டிய ஒருவரை அவரே குறிப்பிடும்போது, அவர் ஒரு தீர்க்கதரிசியை அர்த்தம் கொள்கின்றார்! "மத்தேயு 25 இதைச் சொல்கிறது, வேதாகமம் இவ்வாறு கூறுகிறது ..." என்று சொல்லாதீர்கள், ஆனால் அது ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியை குறித்த கேள்வியாக இருக்கிறது, அது ஒரு புத்தக சுருளோ அல்லது ஏற்கனவே மரித்த தீர்க்கதரிசியை குறித்து அல்ல. [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
19சமீபத்தில் நான் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன், நான் அவரிடம் என்ன சொல்கிறேன் என்பதற்க்கு ஏற்ப, நான் வேதாகமத்தை பற்றி என்ன நினைக்கிறேன் என்று அவர் என்னிடம் கேட்டார், மேலும் அவர், ஆம், அது தொடர்பாக உங்கள் நிலைப்பாட்டை நான் விரும்புகிறேன் என்றார்! நான் அவரிடம், முதலில் நாம் மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி, வில்லியம் பிரன்ஹாம், நிசேயா ஆலோசனை சங்கம் பற்றி பேசும் போது… அது பழைய வரலாறு; இது திருச்சபையின் வரலாறு. அவ்வாறே வேதாகமம் திருச்சபையின் வரலாற்றுக்கு முந்தையது, இது மிகவும் பழைய வரலாறு. எவ்வாறு கற்காலம் மற்றும் குரோ-மேக்னோன் மனிதர்கள் மற்றும் பல மனிதகுலத்திற்கானவையோ, அவ்வாறு நான் தான் வேதாகமம் திருச்சபைக்கு. வேதத்தைக் கொண்டு மட்டுமே சத்தியம் செய்கிறவர்கள் மத்தேயு 16:8 ன் படியாக ஆமென் என்று சொல்ல வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
20நான் அவரிடம், ஐயா, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் வேதாகமத்தை எடுத்துச் செல்வது மோசமானதல்ல, ஆனால் அது ஒரு கிறிஸ்தவ மத ஒழுங்கு. வேதாகமம் முதல் வில்லியம் பிரன்ஹாமின் செய்தி வரை, அனைத்தும் அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டியதாகும்! அவை திருச்சபையின் காப்பகங்கள்! உங்களுக்கு புரியவில்லை என்றால், 4 ஆம் நூற்றாண்டில் "செயிண்ட் கேத்தரின்" என்று அழைக்கப்படும் கத்தோலிக்க மடாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சினாய்டிகஸ் (Sinaiticus) என்ற கையெழுத்துப் பிரதியை நினைவில் கொள்ளுங்கள்; இந்த கையெழுத்துப் பிரதிக்காக நன்றி, இன்று நாம் முழுமையான பழைய மற்றும் புதிய ஏற்பாட்டை லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் மிகப் பழமையான தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் பாதுகாக்கப்படுகிறது.
21ஒரு விஷயத்தின் காலம் கடந்து பின், அந்த விஷயம் முக்கியமானது அல்லது மதிப்புமிக்கதாக இருக்கும்போது, அது ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது! தேவனுடைய வார்த்தையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மனிதகுலத்தை குருடர்களாக மாற்றுவதற்கும் வேதாகமம் தீர்க்கதரிசிகளின் இடத்தை எடுத்துக் கொள்ளாவிட்டால், ஒரு கத்தோலிக்க மடாலயம் அதை அவ்வளவு கவனமாக பாதுகாக்கப் போவதில்லை! கேட்டின் பொருளாக மாறுவதற்கு வேதாகமம் உயிருள்ள தீர்க்கதரிசிகளின் ஸ்தானத்தை எடுத்துக்கொண்டது. இன்று, வேதாகமம் ஒரு பொற் கன்றுக்குட்டி. [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்]. அந்த மனிதன், "என்னால் அதைக் கேட்க முடியாது" என்று கூறினார்! ஒரு நாய் போல காதுகளை அசைத்து, அவர் வெளியேறினார்!
22இப்போது, நாம் லூக்கா 16 க்கு திரும்ப வருவோம், அங்கே இரகசியமாக தோன்றுகிற ஒரு காரியம் இருக்கிறது, மேலும் இன்று காலை அதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்! மரணத்திற்குப் பின் வாழ்வின் இரகசியம். நாம் மரிக்கும் போது என்ன நடக்கும்? உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பு நாம் ஆவிகளாக இருந்தோம் என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். உலகத்திற்கு அஸ்திவாரம் இடுவதற்கு முன்பிலிருந்து இன்று வரை, எல்லா தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள், ஒவ்வொருவரும் அவருடைய கூட்டத்தினரோடு இருந்தார்கள். தீர்க்கதரிசி ஆவியில் வெளிப்பட்ட போது, அவனுடையவர்களும் ஆவியில் வெளிப்படுகிறார்கள், அவர் மாம்சத்தில் இருக்கும்போது, அவருடைய கூட்டத்தினரும் மாம்சத்தில் வெளிப்பட்டார்கள்! மாம்ச ரீதியாக மோசே செங்கடலைக் கடந்தபோது, ஒவ்வொரு தீர்க்கதரிசியும் அவருடையவர்களுடன் சென்றார்! …
23நல்லது, இப்போது ஒரு மனிதன் மரித்த நொடியில் என்ன நடக்கிறது? அதைத்தான் இன்று காலையில் நான் பேச விரும்புகிறேன்! ஆனால் அதற்கு முன்னர், நான் இதைச் சொல்லப் போகிறேன்: 2002 ஆம் ஆண்டில், சபைகளின் தேசிய ஆலோசனை சங்கம் என்னை தங்கள் அமைப்பில் சேர வற்புறுத்தியபோது, அவர்கள் என்னிடம், "நீங்கள் எங்கள் அமைப்பில் சேர்ந்தால், நீங்கள் வெளிநாடு செல்லும் நாளிலே, நாங்கள் அதை உங்களுக்கு எளிதாக்குவோம், நீங்கள் மற்ற நாட்டின் விமான நிலையத்திற்கு வந்தவுடன், உங்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் விசா கிடைக்கும், சபைகளின் தேசிய ஆலோசனை சங்கத்தின் தொகுப்பாளர் தேசம் விமான நிலையத்திற்கு தூதர்களை அனுப்பி பார்த்துக்கொள்ளும் மேலும் ஒரு அதிகாரத்தில் உள்ள வரை போல பாதுகாப்போடு வீட்டிற்க்கு அழைத்துச்செல்லும்… அவ்வளவுதான்!
24ஒரு மனிதன் மரிக்கும் தருணத்தில், அவர் தனது உடலை நிரந்தரமாக விட்டுவிடுகிறார் அதினால் அது அங்கே மருத்துவர்கள் அல்லது அவரது உறவினர்களின் நடுவில் கிடப்பதைக் காண முடியும் மேலும் அவர் மற்றொரு பரிமாணத்தில் ஒரு கனவில் இருப்பதைப்போல் தோன்றுகிறார், அவரது உடலையும் மனிதர்களையும் பார்க்க முடிகிறது, ஆனால் அவர் தாமே மனிதர்களின் கண்ணுக்கு தெரியாதவராக இருக்கிறார்! தன்னுடைய புலன்கள் அனைத்தையும் அவர் கொண்டிருக்கிறார்: தொடுதல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல், சரீரத்திற்கு இருக்கடிய அனைத்து புலன் தன்மைகளும் இருக்கும். அவர் மரித்துவிட்டார் என்று அவர் அறிவார்! மேலும் இந்த நேரத்தில், அங்கே மக்கள் இருக்கிறார்கள், அதாவது தேவதூதர்கள், அவர்களே அவரை அவருடைய இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள்! பத்து ஆண்டுகளில் ஒரு போக்குவரத்து விபத்தினாலும் அவர் இறக்க நேரிட்டால், அவர் பத்து ஆண்டுகளில் இறந்துவிடுவார் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர் சரியாக எந்த நிமிடத்தில் எந்த இடத்தில் மரிக்க போகிறாரோ தேவதூதர்கள் அங்கே அவருக்காக காத்திருப்பார்கள். அந்த காணக்கூடாத உலகில் அவர் தோன்றும்போது, அவருடைய கேள்வி, "ஆனால் என்ன நடக்கிறது, நான் எங்கே இருக்கிறேன் ?" என்பதாக இருக்கும்.
25மேலும், அவர் அதே நினைவுகளை கொண்ட அதே நபர் என்பதை மனதில் கொள்ளுங்கள். தனக்கு இத்தனை சகோதர சகோதரிகள் இருந்ததையும், அவர் தனது வாழ்நாளில் பூமியில் இதுபோன்ற விதத்தில் நடந்து கொண்டதையும் அவர் ஞாபகம் வைத்திருக்கிறார்.. ஒன்று தேவனுடைய தூதர்கள் அவரை சுமப்பார்கள் அல்லது சாத்தானுடைய தூதர்கள் அவரை சுமப்பார்கள். யாவும் அவர் பூமியில் எடுத்த பாதையைப் பொறுத்தது! நீங்கள் பார்க்கிறீர்களா? இது இரகசியமான காரியம் ஏதும் இல்லை, நீங்கள் மனிதனுடைய கண்ணுக்குத் தெரியாத ஒரு சரீரத்தில் நீங்கள் அங்கு தோன்றுவீர்கள், நீங்கள் அறியாத நபர்கள் உங்களை ஒரே நேரத்தில் உங்களுடைய வான இடத்தை நோக்கி அழைத்துச் செல்வார்கள்! அங்கு சென்றதும், அங்குள்ளவர்களை நீங்கள் அடையாளம் காண்பீர்கள்! அவர்கள் பூமியில் உங்கள் சபையை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்! மரித்த இன்ன இன்ன சகோதரர்களை நீங்கள் அங்கே காண முடியும்! நீங்கள் ஒரு அரசியல்வாதியாக இருந்திருந்தால், நீங்கள் அரசியல்வாதிகளின் கூட்டத்தை காண்பீர்கள்! நீங்கள் ஒரு கால்பந்து விளையாட்டு வீரராக இருந்திருந்தால் அல்லது நீங்கள் அவ்வாறே செயல்பட்டிருந்தால், நீங்கள் பரத்தில் உங்களுடைய கூட்டத்தை காண்பீர்கள்!
26நீங்கள் மரிக்கும் போது, நீங்கள் எல்லாவற்றையும் அறிந்த ஒரு கடவுளாகவோ அல்லது மேம்பட்ட மனிதனாகவோ (Super Man) மாற மாட்டீர்கள். வில்லியம் பிரன்ஹாம், எதிர்பார்க்கப்பட்ட தரிசனத்தில், அந்த ஆயிரக்கணக்கான மக்களைப் பார்த்தபோது, அவர் அவர்களை பூமியில் அறியாததால் அவர்களை அறிந்திருக்கவில்லை, ஆனால் அவர் தனது மனைவி ஹோப்பைப் பார்த்தபோது, அவர் அவளை அடையாளம் கண்டுகொண்டார். ஆனால் அந்த இடத்தில் இருந்த அவருடைய கூட்டத்தினர் அனைவரும் அவரை அடையாளம் கண்டுகொண்டனர். ஒரு நாள் நான் அப்பக்கத்தில் இருக்கும்போது, அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ, அல்லது ஆபிரிக்காவிலோ என்னை பூமியின் மேல் விசுவாசித்த யாரோ ஒருவர், நான் அறியாதவர், என்னை அடையாளம் கண்டு கொள்வார். இது ஒரு இரகசியம் அல்ல. அது தான் கச்சிதமாக அங்கே நடக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
27ஏழு முத்திரைகளின் வெளிப்பாடு ஒரு இரகசியம். நான் மீண்டுமாக சொல்கிறேன், சர்பத்தின் வித்து ஒரு இரகசியம்! அறியாத மொழியின் வெளிப்பாடு ஒரு இரகசியம் ஆனால் இந்த உலகத்திலிருந்து மற்ற உலகத்திற்கு கடந்து போவது ஒரு இரகசியம் அல்ல! நீங்கள் சரியாக அதே நபராக இருப்பீர்கள், ஆனால் சரீரம் இல்லாமல் இருப்பீர்கள்! நீங்கள் சரீரத்தில் இருப்பது போல் எல்லாவற்றையும் நினைவில் கொள்வீர்கள்!
28வேதமே சத்தியம்! அன்றியும், ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்று அது கூறுகிறது! அதனோடு தரித்திருங்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? அங்கு மறுபிறவி இல்லை! நாம் மீண்டும் பிறக்க வேண்டுமானால், எஜமானர்கள் தங்கள் பிள்ளைகளிடமோ அல்லது அடிமைகளிடமோ மீண்டும் பிறப்பார்கள் ’அவர்கள் மோசமாக நடந்துகொள்வார்கள், மேலும் அதற்கு தேவன் பொறுப்பேற்க வேண்டும்! மறுபிறவி என்பது இருந்தது இல்லை! யோவான் ஸ்நானகன் திஸ்பியனான எலியாவின் மறுபிறவி அல்ல, ஆனால் அவன் திஸ்பியனான எலியாவின் மீது இருந்த தேவனுடைய ஆவியினால் ஊழியம் செய்தான்! ஆகவே, மறுரூப மலையில் மோசேயுடன் இருந்தவர் யோவான் ஸ்நானகன் அல்ல, ஆனால் அது எலியா!
20பரிசுத்த ஆவியின் அதே பரிமாணமானது தேவன் விரும்புகிற அத்தனை முறை திரும்பி வரலாம்! வெளிப்படுத்துதல் 11-ல் வருவது மோசேயாகிய ஒரு மனிதர் அல்ல! ஆனால் அது மோசேயின் ஆவி! இதனால், பூமியில் அவருடைய பெயர் மோசேவாக இருக்காது! அவருடைய உயரம், குரல், சரீரம் மற்றும் தோற்றம் மோசேவாக இருக்காது! உங்களையும் என்னையும் போன்ற மனிதனாக, யூதர்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்த மோசே அல்ல! ஆனால் அவர் மீது கிரியை செய்யும் பரிசுத்தாவியின் பரிமாணமானது மோசேயினுடையதாக இருக்கும் அது எலியாவுக்கும் பொருந்தும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
31நாம் வஞ்சிப்பின் காலத்தில் வாழ்ந்து வருகிறோம், மேலும் ஒருபோதும் இவ்வளவு பெரிய வஞ்சிப்பு இருந்ததில்லை, கேமரூனின் சகோதரர் ஜீன் பேட்ரிஸ் என்னிடம், "சகோதரர் பிலிப்பு, நான் சென்றிருந்த சபையில், யோவான் ஸ்நானகன் மீண்டுமாக மாம்சத்தில் இருப்பதாக ஒருவர் தன்னை அதுபோன்று பாவித்துக் கொண்டார் என்று சொன்னார். ஒரு நாள், அவர் தன்னுடைய அவிசுவாச தன்மையை தேவன் மன்னிக்கும்படி அவருக்காக ஜெபிக்கும்படி சபையை கேட்டுக்கொண்டார், லூக்கா 7: 19-ல், அவர் தான் உண்மையிலேயே மேசியாவா என்று அவரிடம் கேட்கும்படி, அவர் தம்முடைய சீஷர்களில் இருவரை இயேசுவை நோக்கி அனுப்பினான்”.
31இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டீர்களா? … அது தான் ஐந்தாவது பரிமாணம்! அனைத்து கிறிஸ்தவ மதங்களும் ஐந்தாவது பரிமாணத்தில் உள்ளன. நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் பிறப்பால், ஐந்தாவது பரிமாணத்தின் மதம் ஐந்து முனைகளை கொண்ட நட்சத்திரத்துடன் அடையாளமாக இஸ்லாம் மதம், ஆறாவது பரிமாணத்தின் மதம் ஆறு முனைகளை கொண்ட நட்சத்திரத்துடன் கிறிஸ்தவம், இது சாலமோனின் முத்திரையும் இஸ்ரவேல் கொடியின் மேல் உள்ள தாவீதின் நட்சத்திரமும் ஆகும் ! [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
32ஐந்தாவது பரிமாணம் கொடுங் கனவுகளின் தேசம், கேட்டின் இராஜ்ஜியம். ஆறாவது பரிமாணத்தின் கீழ் உள்ள தேசம் அது இஸ்ரவேல். ஐந்து கிளைகள் அல்லது முனைகளை கொண்ட நட்சத்திரம் அறிவின் சின்னமாகவும், ஐந்தாவது பரிமாணமாகவும், நியூயார்க்கில் உள்ள ஃப்ரீமேசனரியின் பெரிய விடுதியின் வாயிலிலும் ஐந்து முனைகள் மற்றும் எகிப்திய பழங்காலத்தின் இரண்டு சிஹின்களுடன் (Sphinxex) ஒரு பெரிய நட்சத்திரம் உள்ளது. ஏழு சபை காலங்களும் கூட இப்போது ஐந்தாவது பரிமாணத்தில் உள்ளன! முழு கிறிஸ்தவமும் ஐந்தாவது பரிமாணத்தில் உள்ளது!
33சுவிட்சர்லாந்து அல்லது ஜெபர்சன்வில்லில், "வில்லியம் பிரன்ஹாமின் ஏழு சபை காலங்கள்" என்ற புத்தகத்தில் ஒவ்வொரு சபை காலத்திற்கு மேலே ஐந்து முனைகளை கொண்ட நட்சத்திரத்தை நீங்கள் பார்க்கும்போது, இவை சுயமாகத் தோன்றும் அறிகுறிகள்! மத அறிவு நிச்சயமாக அதிகரிக்கும் என்று தானியேல் 12 கூறுகிறது. உண்மையில் அதன் அர்த்தம்: "நாம் இப்போது ஐந்தாவது பரிமாணத்தில் இருக்கிறோம், நீங்கள் இரட்சிப்பை விரும்பினால், இனி இங்கு வர வேண்டாம்!" இது தேவனின் தவறிழைக்காத தன்மையின் வெளிப்பாடு. அவர்கள் அதை அறியாமல் சொல்கிறார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
34நான் குழந்தையாக இருந்தபோது, ஒரு நாள், நான் என் உறவினருடன் (cousin) ஒளிந்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்தேன். அவள் என்னிடமிருந்து இரண்டு மீட்டர் தொலைவில் மறைந்து கொண்டாள். நான் அவளிடம், "ஆனால் நான் உன்னைப் பார்க்க முடியும், நீ ஒளிந்து கொள்ளவில்லை!" என்றேன். அவள் மிகவும் கடினமாக கண்களை மூடிக்கொண்டு என்னிடம், "நீ பொய் சொல்கிறாய்! உன்னால் என்னை பார்க்க முடியாது !!" என்றாள். நான், "நான் உன்னைப் பார்க்க முடியும், நான் உன்னுடன் பேசுகிறேன்!" என்றேன். அவள், "உன்னால் பார்க்க முடியாது!" என்றாள். அது என்னைத் தாக்கியது மற்றும் என் வாழ்நாள் முழுவதும் என்னை ஆச்சரியப்படுத்தியது.
35நான் பிரன்ஹாமிஸ்டுகளைப் பார்க்கும்போது, அந்த உறவினரின் நடத்தை எனக்குப் புரிந்தது. நீங்கள் பார்க்கிறீர்களா? எந்த ஒரு சுவிசேஷ சபை போலவே அவர்கள் ஒரு அமைப்பாக (organised) இருக்கிறார்கள். மேலும் அவர்கள் நாங்கள் அமைப்பாக இல்லை என்று கூறுகிறார்கள். அவர்கள் பிரிந்திருக்கிறார்கள் ஆனால் நாங்கள் பிரிந்திருக்கவில்லை என்கிறார்கள்! பரிதபிக்கப்பட்டவர்களும், தரித்திரர்களும், குருடர்களும், நிர்வாணியுமாய் இருக்கிறார்கள் மேலும் அவர்கள் எனக்கு ஒன்றும் தேவையில்லை என்று சொல்கிறார்கள்.
36அவர்கள் வெவ்வேறு கோட்பாடுகளை விசுவாசிக்கையில், அவர்கள் இப்போது சுவிசேஷ சபை போன்ற அனேக மத நிறுவனங்களை கொண்டுள்ளனர்: CIEL, வார்த்தையின் சபைகளின் சர்வதேச ஆணையம், அதன் தலைவராக காபோனின் பிரன்ஹாமிஸ்ட் பாஸ்டர் பியர்ரோட் கோமட் இருக்கிறார், ஆனால் அவர்கள், "இல்லை, நாங்கள் அமைப்பாக இருக்கவில்லை என்பார்கள்! நாங்கள் ஒருபோதும் ஒரு அமைப்பாக இருக்க மாட்டோம் என்று சகோதரர் பிரன்ஹாம் கூறுகிறார்! சகோதரர் பிரன்ஹாம் நாங்கள் ஒருபோதும் ஒரு ஸ்தாபனமாக இருக்க மாட்டோம் என்று கூறுகிறார்! ". அவர்கள் இந்த வார்த்தையை தந்திரமாக பயன்படுத்துகிறார்கள்: "இடை-பிரிவு"! "தர்ஷீசின் படகில்" நான் பிரசங்கித்த பாபிலோனின் ஆவி அது ! நீங்கள் பார்க்கிறீர்களா?
37அதுவே கச்சிதமாக நினிவேயின் ஆவி! நினிவேயின் ஆவி பாபிலோனின் ஆவி மற்றும் ஆதியாகமம் 10: 9 கூறுகிறது, நிம்ரோத் தான் பாபிலோனின் நிறுவனர், அவன் நினிவேவை கண்டுபிடித்தான்! நினிவே மற்றும் பாபிலோன், அவை இரண்டு இரட்டை நகரங்கள்! இது ஒரு மத சாம்ராஜ்ஜியம்! ஏப்ரல் 24, 1993 இன் தரிசனத்தின் இராணுவ டிரக் தர்ஷீசின் படகைத் தவிர வேறெதுவும், மேலும் நாசரேத் ஊரின் இயேசு தான் அதன் தளபதி. [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்]. அவர்கள் அங்கு உலக தாளங்களுக்கு கூட நடனமாட முடியும், மேலும் அவர்கள் அந்த பரிசுத்த ராக் (Rock), பரிசுத்த பாப் (PoP), பரிசுத்த ஜாஸ் (Jazz) … மற்றும் அதுபோன்று அழைத்துக் கொள்கிறார்கள்!
38ஆனால் அது தவிர, பூமியில் எங்கோ ஒரு இடத்தில், கச்சிதமாக அங்கே சபினோ கனியன் மீது வில்லியம் மரியன் பிரன்ஹாம் நின்ற இடத்தில், ஆப்பிரிக்க குதிரை வீரரும் அங்கே நின்றான், அதே நெபோ மலையில் இறங்கினார். பூமியின் பெரிய மரங்கள் அவற்றின் இலைகள் தரையைத் தொடும் வரை அவனுக்கு முன்பாக குனிந்தன. அங்கிருந்துதான் மோசே கானானை ஜாதிகளின் தெய்வங்களுடன் தொலைவில் இருந்து பார்த்தான்; அங்கே இருந்து தான் இந்த 20 ஆம் நூற்றாண்டின் சுவிசேஷக இயக்கங்களை எலியா கண்டான். அங்கே இருந்து தான் கடைசி காலங்களில் பூமியின் மீது வரப்போகின்ற வஞ்சனைகளையும் பவுல் கண்டான்.
39பவுல் அழுது, பவுல் : "நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும் என்று எனக்குத் தெரியும்" என்றான். மேலும் இன்று அந்த தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலை அந்த சுவிசேஷக தலைவர்கள், சுவிசேஷக தீர்க்கதரிசிகள், பாஸ்டர்கள், ஆயர்கள் மற்றும் பேராயர்கள் இடத்தில் நாம் பார்க்கின்றோம். தேவன் தம் ஜனங்களை பாதுகாப்பாராக! ஏப்ரல் 24, 1993 அன்று என்னை அனுப்பிய சர்வவல்லமையுள்ள தேவன் உங்களை என்றென்றும் பாதுகாப்பார், அவர் ஏற்கனவே அதைச் செய்திருக்கிறார் என்பதை நான் அறிவேன்! [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
40ஒரு நாள் யாரோ ஒருவர் என்னிடம், "தீர்க்கதரிசியே, ஒருநாள் நீங்கள் விட்டுச் செல்லும் போது, அதே வேளையில் உங்களுடைய சந்ததியினர் எப்படி கெட்டுப்போகாமல் இருப்பார்கள்?" என்று கேட்டார். நான் சொன்னேன்: இல்லை ஐயா, அது கெட்டுப்போக முடியாது, ஏனென்றால் தீர்க்கதரிசிகளின் ஆவிகளின் தேவன் நள்ளிரவில் வரைந்த வழியை அது எப்போதும் பின்பற்றும்!
41இந்த சந்ததியினர் ஒருபோதும் ஒரு போதகரின் ஆட்சியில் அமைக்கப்பட மாட்டார்கள்! ஏனெனில் 2 நாளாகமம் 20:20 மற்றும் ஓசியா 12:13 ஆகியவை அதற்கு முன்னால் எப்போதும் இருப்பதால், பிரன்ஹாமிஸ்டுகள் அறிந்த அழிவை அது ஒரு போதும் அறியாது. தேவன் ஒரு தீர்க்கதரிசி மூலமாக சந்தித்தாலும், அவர்களுடையதல்லாத இன்னொரு மக்களைப் பார்க்கும் போது, அந்த தீர்க்கதரிசியை இரவில் இருந்து பகலை வேறுபடுத்துவது போல் இது வேறுபடுத்தும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
42அது கடந்து செல்லாத ஒரு இராஜ்ஜியம் என்று வேதாகமம் தானியேல் 2:44 ல் கூறுகிறது! இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்காமிஸ்டு இராஜ்ஜியங்கள் பூமியில் நிறுவப்படும் நாட்களில், தானியேல் கண்ட நான்கு மிருகங்கள் பூமியில் நிறுவப்படும், பரலோகத்தின் தேவன் மற்றொரு இராஜ்ஜியத்தை அமைப்பார், அது ஒருபோதும் அழிக்கப்படாது; இந்த இராஜ்ஜியம் வேறொரு மக்களுக்கு விடப்படாது; அது துண்டு துண்டாக உடைந்து அந்த இராஜ்ஜியங்கள் அனைத்தையும் அழிக்கும், ஆனால் அது என்றென்றும் நிற்கும். ஏனென்றால் இன்று மனிதகுலத்திற்கு ஒரு இரகசியம் மறைக்கப்பட்டுள்ளது: தேவன் தம் தீர்க்கதரிசிகளால் மட்டுமே பேசுகிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்]. இது பிரன்ஹாமிஸ்டுகள் உட்பட அனைத்தையும் துண்டுகளாக உடைக்கும்!
43சொல்லுங்கள் ஐயா, பிரன்ஹாமிஸ்டுகள் உட்பட அனைத்தையும் துண்டு துண்டாக உடைக்கும் இந்த இராஜ்ஜியம் என்ன? பிரன்ஹாமிஸ்டுகள் மத்தியில் காங்கோவில் அவசர ஊழியக்காரர்கள் கூட்டங்களைத் தூண்டும் இந்த இராஜ்ஜியம் என்ன? உலகில் எல்லா இடங்களிலும் பிரன்ஹாமிஸ்ட் மரபுகளை பயமுறுத்தும் இந்த இராஜ்ஜியம் என்ன? இந்த இராஜ்ஜியம் உண்மையில் மத்தேயு 25: 6! [ஆசிரியர் குறிப்பு: சபையார், “ஆமென்!” என்கிறார்கள்].
44சாமுவேலின் காலத்தில் இஸ்ரவேல் இந்த கிருபையை மறுத்துவிட்டது! இந்த கிருபையானது தேவன் தாமே ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி மூலமாக வழிநடத்தப்படுவது! மேலும் காலங்களின் முடிவில், பிரன்ஹாமிஸ்டுகள் இதே கிருபையை நிராகரித்திருக்கிறார்கள், சுற்றியுள்ள தேசங்களை போலவும், தங்களை அதன் மேல் போதகர்களாக நிறுவிக் கொண்டார்கள்.
45ஆனால் இங்கே ஒரு மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் ஒரு அப்போஸ்தலன், சபை தீர்க்கதரிசி, ஒரு சுவிசேஷகர் அல்லது ஒரு போதகரால் வழிநடத்தப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஏனெனில் அவர் மீட்டளிப்பின் தேவன். சாமுவேலைப் போல உயிருள்ள தீர்க்கதரிசி மூலமாக இன்னும் வழிநடத்தப்படும் ஒரு மக்களை அவர் எழுப்புகிறார்! தேவன் ஒரு தீர்க்கதரிசியால் மட்டுமே பேசுகிறார் என்பதை அறிந்த மக்கள். ஆமோஸ் 3:7, ஓசியா 12:13 மற்றும் 2 நாளாகமம் 20:20 ஆகியவற்றின் வெளிப்பாட்டைக் கொண்ட மக்கள். உணர்ந்து கொள்ளக் கூடியவன் எவனோ அவன் உணர்ந்து கொள்ளட்டும்!