நவம்பர் 14, 2010 ஞாயிற்றுக்கிழமை காலை ஐவரி கோஸ்டில் அட்ஜமே, அபிட்ஜானில் பிரசங்கிக்கப்பட்டது
1 நல்லது! காங்கோவில் யாவும் மிக நன்றாக நடக்கிறது, அப்போஸ்தலர் கிறிஸ்பின் அநேக ஆத்துமாக்களுக்கு அங்கே ஞானஸ்நானம் கொடுக்கிறார்: விசுவாசிகள், பாஸ்டர்கள் மற்றும் முதியவர்கள்! கடைசி தகவலாக மூன்று சபைகள் மட்டுமே ஞானஸ்நானம் செய்ய மீதமாக இருக்கின்றன என்று நான் கேள்விப்பட்டேன்.! மற்றும் அவர் என்னிடம் "சகோதரர் பிலிப்பு, நான் நான்கு சந்தர்ப்பங்களில் மிகவும் பயந்திருக்கிறேன், நான் தவறுதலாக:" இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்க்கு பதிலாக " நான் உன்னை "பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியினால்" ஞானஸ்நானம் செய்கிறேன் என்று கூறினேன். மற்றும் அதை நான் ஒவ்வொரு முறையும் திரும்பப் பெற்றுக் கொண்டேன் என்றார். கர்த்தருடைய கிருபை என்றென்றைக்கும் அவரோடு இருப்பதாக.
2 இப்பொழுது ஒரு சபை செய்தியை பெறும்போது, அது ஒவ்வொருவருக்கும் வெளிப்படையான பாவ அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆனால் அந்த சபை ஞானஸ்நானம் பெறும்பொழுது, ஞானஸ்நானம் பெறாதவர்கள் அவர்கள் ஞானஸ்நானம் பெறும்வரை இனி ஒரு போதும் பாவத்தை அறிக்கை செய்வதோ அல்லது மற்றவர்களின் அறிக்கையை குறித்து எதுவும் சொல்ல முடியாது.
3 நிர்வாணத்தை கையாளும் மருத்துவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் வரை அவர்கள் பாவம் செய்ய மாட்டார்கள். இது பள்ளியிலோ அல்லது வேலையிலோ இருக்கும் நம்முடைய சகோதரிகளைப் போன்றது, அவர்கள் ஒரு பெண்ணுக்குப் பொருந்தாத ஆடைகளை அணிந்துகொள்கிறார்கள், ஆனால் அது வெறுமனே பணிக்காக மட்டுமே. பணிக்குப் பிறகு, அவர்கள் தங்களை தங்கள் கிறிஸ்தவ ஸ்தானத்தில் பொருத்துகிறார்கள்.
4 நல்லது. பாஸ்டர்கள் பெறும் தசமபாகங்கள் மற்றும் காணிக்கைகளை பொறுத்தவரை, ஒரு பாஸ்டர் எப்போதாவது ஒரு சூழ்நிலையை பொறுத்து ஒரு அவிசுவாசியிடம் தனது உணவை அல்லது பணத்தை கொடுக்கிறார், ஏனெனில் தேவனின் மழை முட்கள் மற்றும் களைகளின் மீதும் விழுகிறது என்று செய்தி கூறுகிறது. நீங்கள் எகிப்தில் தங்கியிருந்தீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
5 நல்லது! இன்று காலையில், நான் இந்த பொருளை பற்றி பேச விரும்புகிறேன்: "கிறிஸ்துவ அஞ்ஞான மார்க்கம்" ஏனெனில் அங்கே ஒரு கிறிஸ்தவ அஞ்ஞான மார்க்கம் உள்ளது மற்றும் அது ஒரு மறைமுகமான அஞ்ஞான மார்கம்! ஆனால் அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், உங்கள் தலைமுறையில் உயிருள்ள தீர்க்கதரிசியிடம் ஒளிந்து கொண்டிருக்கும் வரை அது ஒரு பிரச்சினையே அல்ல...
6 கிறிஸ்தவன் மற்றும் கிறிஸ்தவம் என்பதுபோல முதலாவதாக அஞ்ஞானி என்ற சொல் அஞ்ஞான மார்க்கத்தில் இருந்து வந்தது. அஞ்ஞானி என்பவன் அஞ்ஞான மார்க்கத்தை பின்பற்றுபவன். ஆகவே இது கடவுளை விசுவாசிக்காத ஒருவனோ அல்லது மசூதி அல்லது சபைக்கு செல்லாதவனோ அல்ல ஆனால் அவர் அஞ்ஞான மார்க்கத்தை பின்பற்றுபவர். ஒரு அஞ்ஞானியை ஒரு நாத்திகனுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். நீங்கள் பார்க்கிறீர்களா? அஞ்ஞான மார்க்கம் என்பது பல்வேறு ஆவிகளின் கலப்பினம்! ஒரு தலைமுறையில் மூன்று குழுக்கள் உள்ளன: நாத்திகர்கள், அஞ்ஞானிகள் மற்றும் உண்மையான கடவுளை ஆராதிப்பவர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
7 எங்கே பிசாசுக்கு ஆராதனை இருக்கிறதோ, அங்கே அஞ்ஞான மார்கம் இருக்கிறது. நிம்ரோதுடன் பாபிலோனிய அஸ்திபாரத்தில் இருந்து அஞ்ஞான மார்க்கமானது உண்மையில் துவங்கியது. அது மேலும் எகிப்தின் வழியாக பூமியின் மேல் ஒவ்வொரு தலைமுறையையும் விஜயம் செய்தது, உண்மையான தேவனின் ஆராதனையோடு அருகருகே தன்னுடைய வழியை ஏற்படுத்திக் கொண்டது திஸ்பியனாகிய எலியாவிற்கு முன்பாக பாகாலின் தீர்க்கதரிசிகள் தங்களைக் குறித்து அங்கே கீழே வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, எபிரெயருடைய தேவனுடைய நாமத்தினாலே அஞ்ஞான மதத்தின் முதல் வடிவமாக அது இருந்தது. நீங்கள் பார்க்கிறீர்களா?
8 அஞ்ஞான மதத்தில் இரண்டு வடிவங்கள் உள்ளன, பழைய உடன்படிக்கையின் கீழ் ஒரு வடிவம், யூத மதத்துடன் பழைய ஏற்பாட்டில் மற்றும் கிறிஸ்தவத்துடன் புதிய ஏற்பாட்டில் இரண்டாவது வடிவம். ஆனால் இந்த காலையில், நான் இன்னொரு வடிவமான அஞ்ஞான மதத்தை காண்பிக்க போகிறேன், மூன்றாவதாக, இதுவரை எப்போதும் இருந்திராத அளவுக்கு மிகவும் அது மறைமுகமாக உள்ளது அதனால் தான் இதை நமக்கு வெளிப்படுத்த தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்ப வேண்டியதாக இருக்கிறது.
9 அஞ்ஞான மதத்தின் முதல் வடிவம் எகிப்தியர்கள் மற்றும் ரோமாபுரியர்களுடையது. ஒரே தேசத்திலோ அல்லது கோத்திரத்திலோ, வெவ்வேறு தெய்வங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு, ஜனங்கள் ஒருவருக்கொருவர் சுயாதீனமாக அவைகளை ஆராதிக்கிறார்கள்.. நீங்கள் பார்க்கிறீர்களா?
10 யாத்திராகமம் புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அங்கே எகிப்தியர்கள் பல தெய்வங்களை ஆராதிப்பதை நீங்கள் காண்பீர்கள், அது என்ன ? அதுதான் அஞ்ஞான மார்க்கம்: பாதுகாப்பு தெய்வமான ஹெப்பி, ஒசிரிஸ் தெய்வம், சபீக் தெய்வம், அற்புதங்களின் தெய்வமான தோத். புட்டோ தெய்வமும் அங்கே இருந்தது, ஹோருஸ் தெய்வம், ஹாதர் தெய்வம், தெய்வீக சுகமளிக்கும் தெய்வமான ஆமாண்-ரீ தெய்வம் மற்றும் இன்னும் அநேகம் ... நீங்கள் பார்க்கிறீர்களா? இது அஞ்ஞான மார்க்கத்தின் முதல் வடிவத்தில் இருந்தது மற்றும் இந்த தெய்வங்கள் நெர்கல், ஆத்ராமெலேக், நிப்ஹாக், தர்தாக் மற்றும் சுக்கோத்-பினோத் தெய்வங்களிடம் இருந்து வேறுபட்டவை அல்ல.
11 பிற்பாடு, யூதமார்க்கத்தில், அங்கே அதே தெய்வங்கள் தான் பரிசேயர், சதுசேயர், ஏரோதியர்கள், யூத மதத் துறவிகள், யூத மதவெறியர்கள் என்று அழைக்கப்பட்ட பலிபீடங்களை உண்டாக்கியது ... மேலும் இன்று அந்த அதே தெய்வங்கள் தான் பரிசுத்த ஆவிகளின் வடிவத்தில் தங்களை இஸ்லாம், யூத மதம், கத்தோலிக்க, புரட்டஸ்டன்ட், சுவிசேஷக சபை மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபை என்னும் பெயரில் நிலைநிறுத்திக் கொண்டது! ஒரே ஒரு மற்றும் மேலான கடவுளின் உருவத்தை வேதாகமத்தின் அடிப்படையில் கொடுக்க முயற்சிக்கிறது, இது அஞ்ஞான மார்க்கத்தின் இரண்டாவது வடிவம்.
12 மேலும் மூன்றாவது இடத்தில், அது இன்னும் கிறிஸ்தவத்தின் கேள்வியாக உள்ளது! பிரன்ஹாமிஸ்டுகள் பாடல் குழுக்களில் தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டு பாடுவதை நீங்கள் பார்க்கும் பொழுது, அது அஞ்ஞான மார்க்கமாக இருக்கிறது. வெஸ்லியின் காலத்தை பாருங்கள், இன்று உங்களிடம் இருக்கும் யாவையும் பாருங்கள் " விசுவாசத்தின் இறக்கைகளின் மேல்" என்ற பாடல் புத்தகத்தை போன்று கிறிஸ்தவ வரலாற்றில் இருக்கிறது. இது மிக முக்கியமான பாடல் புத்தகம் மற்றும் மற்றவைகள்; இவை அனைத்தும் ஜான் வெஸ்லி காலத்திலிருந்து வருகின்றன.
13 இதே விதமாகத்தான் தேவன் யூதர்களுக்கு சில தீர்க்கதரிசிகளை அனுப்பினார், ஆகவே தேவன் சிலரை தேசங்களுக்கும் அனுப்பினார். சங்கீதத்தில் தாவீதை ஏவிய அதே ஆவிதான் சார்லஸ் வெஸ்லியையும் ஏவியது. இன்று, இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, வேதாகம தீர்க்கதரிசனங்கள் அவைகளை காண்பிக்காத போது அதை பிரதிபலிக்க முயற்சி செய்வது அதுதான் அஞ்ஞான மார்க்கம். நீங்கள் பார்க்கிறீர்களா?
14 தேவ தூதர்கள் ,பிரதான தூதர்கள், சேராபீன்கள் மற்றும் கேருபீன்களும் கூட ஒரே மாதிரியான பணிகளை செய்வதில்லை. தூதர்களின் வகுப்புகளிலும் கூட, எடுத்துக்காட்டுக்கு, ஒரு பிரதான தூதனின் பணியானது மற்ற தூதனில் இருந்து வேறுபடுகிறது. சேருபீன்களின் பணியானது ஒருவரிலிருந்து மற்றவருக்கு வேறுபட்டதாக இருக்கிறது. சேராபீன்களின் பணியானது ஒரு சேராபீனிலிருந்து மற்ற சேராபீனுக்கு வேறுபட்டதாக இருக்கிறது.
15 உதாரணமாக, பிரதான தூதன் காபிரியேல் ஒரு தகவல் ஊழியத்தை கொண்டிருக்கிறார், அவர் தேவனுடைய அரசாங்கத்தில் வெளியுறவு மந்திரி போன்றவர், அதே நேரத்தில் பிரதான தூதன் மிகாவேல் பாதுகாப்பு அமைச்சராக இருக்கிறார், ஒரு பாடற் குழுவிடம் ஒன்று சேர முடியாது ஏனெனில் தேவனுக்குள் அஞ்ஞான மார்க்கம் இல்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
16 இப்போது, வில்லியம் பிரன்ஹாமின் "வெளிப்படுத்துதல் அதிகாரம் 1" என்ற புத்தகத்திலிருந்து நான் வாசிக்கப் போவதைப் பின் தொடருங்கள்: "ஒரு பெண் கூட்டத்தில் எழுந்து நின்றாள், ஒரு பாப்டிஸ்ட் பெண், அவள் என்ன செய்ய கூடும் என்று தெரியாமல் அங்கே வந்து, அவள் நின்று கொண்டிருந்தாள் கூட்டத்தின் நடுவே, பரிசுத்த ஆவியானவர் அவள் மீது விழுந்தார், அவள் அந்நியபாஷைகளுடன் பேசத் தொடங்கினாள்… பின்னர், அவள் எதையும் சொல்வதற்கு முன்பு, பரிசுத்த ஆவியானவர் வியாக்கியானத்தைக் கொடுத்து, “கர்த்தர் உரைக்கிறதாவது: மூன்று மாதங்களுக்குள் இந்த கூடாரத்தில் அங்கே மோசே, எலியா மற்றும் கிறிஸ்துவின் ஆவி ஊழியம் செய்யும்." என்றாள். அங்கே அது சரியாக நடந்தது." ஆமென்! இதை நினைவில் கொள்ளுங்கள்: மோசே, எலியா மற்றும் கிறிஸ்துவின் ஆவி இந்த கூடாரத்தில் ஊழியம் செய்யும்! ஆமென்! இது சரியான சத்தியம் மேலும் யாவும் வேதத்தோடும் இருக்க வேண்டும் என்கிறவர்களுக்காக, இதை நீங்கள் எவ்வாறு விளக்கப் போகிறீர்கள்? நீங்கள் பார்க்கிறீர்களா?
17 உதாரணத்திற்கு, வேதாகமம் நான்கு ஜீவன்களை பற்றி பேசுகிறது, ஆனால் அது பரிசுத்த ஆவியின் நான்கு பரிமாணங்களை குறித்த கேள்வியாக உள்ளது. சிங்கத்தின் சாயலில் ஊழியம் செய்த ஜீவனின் ஒரு காலம் இருந்தது, பிறகு கன்றுக்குட்டியின் சாயலில் ஊழியம் செய்து அறநூற்று எண்பது லட்சம் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்ட ஒரு காலம் இருந்தது, பிறகு மார்ட்டின் லூதருடன் ஒரு மனிதனின் முகத்தைக் கொண்ட ஜீவனின் காலம் இருந்தது. இப்போது இந்த ஜீவன் கழுகின் முகத்தைக் கொண்டுள்ளது. நீங்கள் பார்க்கிறீர்களா? அனைவரும் தங்கள் பரிமாணத்திற்கு ஏற்ப ஊழியம் செய்கிறார்கள். இன்று ஒரு கிறிஸ்தவன் மது அருந்த முடியுமா என்று உங்களிடம் கேட்கப்பட்டால், இன்று ஊழியம் செய்யும் ஆவியின் பரிமாணத்திற்கு ஏற்ப நீங்கள் பதிலளிக்க வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
18 நோவாவிற்க்கு முன்பு ஏனோக்கு திராட்சரசம் அருந்தக் கூடாது, ஏனெனில் ஏனோக்கு எலியாவின் ஆவியாக இருந்தான் மற்றும் ஏனோக்கு எலியாவைப் போல் எடுத்துக் கொள்ளப்பட்டான். திஸ்பியனான எலியா பூமிக்கு வந்தபோது, அவனால் திராட்சரசம் அருந்த முடியவில்லை மற்றும் யோவான்ஸ்நானகன் பூமிக்கு வந்தபோது, அவனால் திராட்சரசம் அருந்த முடியவில்லை.
19 அவன் பிறப்பதற்கு முன்பே, தன் தாயிடம், "மது பானங்களை அருந்த கூடாது" என்று சொல்லப்பட்டது. நீங்கள் பார்க்கிறீர்களா? ஏனோக்கு திராட்சரசம் அருந்தவில்லை ஆனால், நோவா அருந்தினான். இருவருக்குமே ஒரே பரிசுத்த ஆவி இருந்தது, ஆனால் ஏன் அப்படி? ஏனெனில் ஏனோக்கு மீதும் நோவா மீதும் இருந்த பரிசுத்த ஆவி வெவ்வேறு பரிமாணங்களில் இருந்தது. நீங்கள் அதை அறியாதிருந்தால், நீங்கள் நேராக கிறிஸ்துவ அஞ்ஞான மார்கத்திற்க்கு செல்லுவீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
20 யோவான் ஸ்நானகனால் திராட்சை இரசத்தை அருந்த முடியாது அதேசமயம் இயேசு கிறிஸ்துவும் மற்றும் அவருடைய அப்போஸ்தலர்களும் திராட்சரசம் அருந்த முடிந்தது, அதே வேளையில் இருவரும் மெய்யான பரிசுத்த ஆவியை கொண்டிருந்தனர். ஆனால் அது ஏன் அப்படி? ஏனெனில் யோவான்ஸ்நானகன் மற்றும் அவனுடைய சீஷர்கள் மேல் இருந்த பரிசுத்த ஆவியும், மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலர்கள் மேல் இருந்த பரிசுத்த ஆவியும் வெவ்வேறு பரிமாணங்களில் இருந்தது.[ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
21 எனவே உங்களிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்படும்போது, நீங்கள் பழைய அல்லது புதிய ஏற்பாட்டில் தேட தொடங்கும்போது, தேவனுடைய பார்வையில் நீங்கள் ஒரு அஞ்ஞானியக இருக்கிறீர்கள். நீங்கள் கிறித்தவ அஞ்ஞான மார்க்கத்தில் உள்ளீர்கள். உங்கள் தலைமுறையில் உள்ள பரிசுத்த ஆவியின் பரிமாணத்தின் படியாக உங்களுடைய பதில் இருக்க வேண்டும்.
22 மார்ட்டின் லூதரின் காலத்தில், ஞானஸ்நானமானது பிதா குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் தெளிப்பில் இருக்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியின் பரிமாணம் சொன்னது. ஆனால் நீங்கள் விடைக்காக வேதாகமத்தில் தேடத் துவங்கினால், நீங்கள் குப்பை தொட்டியில் தேடுகிற முட்டாள் போல் இருக்கிறீர்கள். உங்களுடைய காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியுடன் மட்டுமே விடை உள்ளது. அவர் மீது தான் உங்களுடைய காலத்திற்கான பரிசுத்த ஆவியின் பரிமாணம் ஊழியம் செய்கின்றது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. இன்ன ஒரு தீர்க்கதரிசி இந்த விதத்தில் ஊழியம் செய்கிறார்! மற்றொரு தீர்க்கதரிசி வேறு வழியில் ஊழியம் செய்கிறார்!
23 தீர்க்கதரிசிகள் ஒருபோதும் ஒரே விதத்தில் பிரசங்கம் செய்வதில்லை, ஒரே காரியத்தை போதித்தது இல்லை, ஒவ்வொருவரும் அவருக்கு மேலிருந்த பரிசுத்த ஆவியின் பரிமாணத்திற்கு ஏற்ப கற்பித்தார்கள், பிரசங்கித்தார்கள். தேசங்களின் சபை காலங்களினூடாக இந்த நான்கு பரிமாணங்களையும் பாருங்கள். ஒரு சமயம் கிறிஸ்தவம் சிங்கமாக வெளியே வந்தவுடன், கிறிஸ்தவர்கள் சிங்கத்தை போல் இருந்தார்கள், தேசங்களை மாற்றுவதற்கு சூடாக இருந்தார்கள். பிறகு கிறிஸ்தவர்கள் கன்றுக்குட்டிகளை போல் இருந்த ஒரு காலம் வந்தது, அவர்களில் கோடிக்கணக்கான மக்கள் பின்வாங்காமல் மரிக்க முடிந்தது. கத்தோலிக்க சபை அறநூற்று எண்பது லட்சம் கிறிஸ்தவர்களை கொன்றது. ஒரு புத்தகம் தேவனுடைய பிள்ளைகளை ஒரு போதும் வழிநடத்தியது இல்லை. ஆனால், தேவனுடைய பிள்ளைகள் தங்கள் காலத்தின் பரிசுத்த ஆவியின் பரிமாணத்தின்படி செயல்பட்டார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
24 நீங்கள் மோசேயினுடைய ஊழியத்தை எடுத்துக்கொண்டாலும், அங்கே ஒரு குறிப்பிட்ட வரிசை உள்ளது; எகிப்திலிருந்து வெளியே புறப்பட்டு வந்த போது சிங்கம், பிறகு பல முணுமுணுப்புகளுடன் மனித முகத்துடன் உள்ள ஜீவன், பலிகளில் வெவ்வேறு பரிந்துரைகளை கொண்ட லேவியராகமம் அது தான் கன்றுக்குட்டி மற்றும் இறுதியாக உபாகமம் இது வார்த்தையின் பரிமாணம்! தேவன் குறிப்பிட்ட பரிமாணங்களின் படியாக செயல்படுகிறார். வெளிப்படுத்தல் 22:6, அவர் தீர்க்கதரிசிகளின் ஆவிகளின் தேவன் என்று கூறுகிறது. அதாவது இன்ன ஒரு தீர்க்கதரிசி கொண்டுள்ள தேவனுடைய ஆவியானது மற்றொறு தீர்க்கதரிசியோடு வேறுபட்டிருக்கும். நீங்கள் பார்க்கிறீர்களா? பரிசுத்த ஆவி என்ன கூறுகிறது? மூன்று மாதங்களுக்குள் மோசே, எலியா, கிறிஸ்துவின் ஆவி இந்த கூடாரத்தில் ஊழியம் செய்யும். ஆமென்! அது "அவர்கள் செய்வார்கள்..." என்று சொல்லப்படவில்லை ஆனால் அவர் ஊழியம் செய்வார்" அதே சமயம் இது மூன்று ஆவிகளை குறித்து கேள்வியாக உள்ளது. அது என்ன? அதே பரிசுத்த ஆவியின் மூன்று பரிமாணங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
25 எசேக்கியேல் 1-ஆம் அதிகாரத்தில் , உண்மையில் இது நான்கு ஜீவன்களை குறித்த கேள்வி அல்ல ஆனால் நான்கு பரிமாணங்களை கொண்ட அதே ஜீவனின் கேள்வியாக உள்ளது! ஜீவன்களில் ஒன்றுக்கு ஒத்ததாக இந்த ஜீவன் இருக்கிறது என்று எசேக்கியல் கூறவில்லை ஆனால் அவன் கூறுகிறதாவது, "இது நான் கேபார் நதியண்டையிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த ஜீவன் தானே..." எசேக்கியேல் 10:20.
26 மேலும் அது கிறித்தவ அஞ்ஞான மார்க்கம் என்ற பெயரில் தான் நீங்கள் வேதாகமத்தை ஒரே ஒரு பரிசுத்த புத்தகமாக பார்க்க முடியும்! ஆனால், தெரிந்துகொள்ளபட்டவர்களுக்கு இவை வெவ்வேறு பரிசுத்த புத்தகங்களாக உள்ளன. எரேமியாவின் புத்தகம் வேறு புத்தகம். ஏசாயாவின் புத்தகம் வேறு புத்தகம். ஆமோஸின் புத்தகம் வேறு புத்தகம்.
27 மேலும் ஞானஸ்நானம், தசமபாகம், மற்றவைகள் போன்ற முதல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தைப் பொறுத்தவரை, உங்கள் தலைமுறையில் உயிருள்ள தீர்க்கதரிசி என்ற ஸ்தானத்தை விட்டு விட்டு நீங்கள் வேதாகமம் முழுவதும் ஒரு தீர்க்கதரிசியிடமிருந்து இன்னொருவருக்கு உலா வந்தால், அது தேவனுக்கு முன் அஞ்ஞான மார்கமாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
28 இன்று, பிரன்ஹாமிஸ்டுகள் கூட அத்தகைய நபருடன் அத்தகைய காலகட்டத்தில் நடந்த இந்த அல்லது அந்த எழுப்புதலை கேட்கிறார்கள்! அவர்கள் ஒரு எஸ்தர் உபவாசம், யோசபாத் உபவாசம் அல்லது அவர்கள் வேதாகமத்தில் பார்த்ததைக் கேட்கிறார்கள், அதன்பிறகு, பரிசுத்த ஆவியின் இந்த அல்லது அந்த பரிமாணத்தை அல்லது , ஒரு குறிப்பிட்ட நபர் வேதாகமத்தில் செய்த அந்த அதிசயத்தை கேட்பார்கள். அவையாவும் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரைக்கும் அஞ்ஞான மார்க்கமாக இருக்கிறது. தேவனுக்கு முன்பாக, அவர்கள் அஞ்ஞானிகள்!
29 ஒசியா 12:13 தவிற கிறித்துவம் எங்கும் இல்லை. ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி மட்டுமே இரட்சிப்பிற்கு வழிநடத்தி செல்ல முடியும்! நீங்கள் பார்க்கிறீர்களா?
30 சாயங்கால வேளையின் செய்தியாளர் பெயர் வில்லியம் மரியன் பிரன்ஹாம் என்று அழைக்கப்படுகிறார், அவருடைய மூன்று பெயர்களில் எதுவும் வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அவர் மாற்றவோ அல்லது வேறு பெயரை எடுத்துக் கொள்ளவோ முயற்சிக்கவில்லை, அதேசமயம் பிரன்ஹாமிஸ்டுகள் இது மட்டுமாக இப்போது புதிய பெயர்களுடன் இருப்பதை நீங்கள் காணலாம்! அங்கே முகமதுவை உலுக்கிய அதே பிசாசு தான் இப்போது கச்சிதமாக சுவிசேஷகர்களை சந்திக்கின்றது. ஒரு நாளிலே, அவர்கள் அனைவரும் ஒரே இருக்கையில் உட்கார்ந்து கொள்வார்கள்! இது தான் அஞ்ஞான மார்கம்! நாம் சாயங்கால செய்தியை அடிப்படையாக மட்டுமே கொண்டுள்ளோம், ஆனால் நாம் நடுராத்திரியில் இருக்கிறோம்! நமக்கு சாயங்கால செய்தி வெறுமனே ஒரு அஸ்திபாரமாகும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
31 ஆகஸ்ட் 15, 1965 அன்று வில்லியம் பிரன்ஹாம் "நீங்கள் அறியவில்லையா?" பத்தி. 94-இல் கூறியது. "“நான் வெறுமனே கட்டுகிறேன். ஏதோ ஒன்று சம்பவிக்க போவதை நீங்கள் பார்க்க போகிறீர்கள், அந்த மணி வேளையானது இப்பொழுது சமீபத்தில் இருக்கிறது. இந்த பின்னணி யாவும் ஒரு குறுகிய, விரைவான செய்திக்கு ஒரு அடித்தளத்தை அமைத்து வருகிறது, அது முழு தேசத்தையும் உலுக்கும்." இன்று இந்த தீர்க்கதரிசனம் உங்களுக்கு முன்பாக நிறைவேறிற்று. ஒரு குறுகிய செய்தி பூமியை உலுக்குகிறது, பூமியின் அனைத்து இனங்களையும், மொழிகளையும் சந்திக்கிறது, மேலும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் களி கூர்ந்து இந்த செய்தியில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள், ஏனெனில் அது உலகத்தின் அஸ்திவாரத்துக்கு முன்பு பரலோகத்திலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. கேட்கிறதற்கு காதுள்ளவன் எவனோ அவன் கேட்கக்கடவன்.