en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 106 (Kc.106) : இரண்டு கனவுகளின் வியாக்கியானம்
(ஞாயிறு காலை ஜனவரி 1, 2012, அபிட்ஜான் ஐவரி கோஸ்ட் பகுதியில் உள்ள சிகென்சியில் பிரசங்கிக்கப்பட்டது)
1 நான் குறிப்புகளுடன் தொடங்குகிறேன்...  ஒரு போதகர், தான் தவறு என்று ஒப்புக்கொள்வதற்கு முன் காரணம் கூறுவது இரட்சிப்புக்கு ஆபத்தானது. தீர்க்கதரிசன விசுவாசம் 2 நாளாகமம் 26:17 முதல் 18 இன்படி, நீங்கள் உங்கள் போதகரிடம் இவ்வாறு கூறலாம்: "நீங்கள் இப்பொழுதுசொன்னதை தீர்க்கதரிசி எங்கே சொன்னார்?" தன்னுடைய போதகரிடம் சத்தியத்தை சொல்ல முடியாத ஒரு மூப்பர் ஒரு பிசாசு. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
2 மேலும், கடைசி பிரசங்கத்திற்குப் பிறகு, உயர் பதவியில் இருந்த பிரமுகர்களின் ஞானஸ்நானத்தைப் பற்றி பேசுகையில், அவர்கள் மீண்டும் ஞானஸ்நானம் எடுக்கவில்லை. சில பிரான்ஹாமிஸ்டுகள் என்னிடத்தில், "வில்லியம் பிரான்ஹாமுக்கு ஞானஸ்நானம் கொடுத்தது யார்?" என்று கேட்கும் அளவுக்கு தைரியமாக இருந்தனர், அவர்கள் என்னிடம்: வில்லியம் பிரான்ஹாம்எங்கு, எந்த நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றார்?" என்று கேட்டார்கள். அது ஏன்? ஏனெனில் ஜோசப் கோல்மன், எவால்ட் ஃபிராங்க் மற்றும் பிற பிரான்ஹாமிஸ்ட் தலைவர்கள் தங்கள் மெதடிஸ்ட், பாப்டிஸ்ட்டு பெந்தேகோஸ்தே மற்றும் பிற ஞானஸ்நானத்தை மீண்டும் எடுக்காததால் அவர்கள் அதை சாதாரணமாகக் கருதுகிறார்கள்.
3 மேலும் கடைசி பிரசங்கத்தைப் பற்றி அவர்கள் சொன்னார்கள்: "சகோதரன் பிரான்ஹாம்மிருகங்களுக்கு ஆத்துமா இல்லை என்று கூறுகிறார். நீங்கள் அவரை விசுவாசித்தால், "ஆமென்! என்று சொல்லுங்கள்" நான் சொன்னேன், சரி, நான் "ஆமென்!" என்று சொல்கிறேன், ஆனால் ஆதியாகமம் 1:30ஐ எனக்கு விளக்க முடியுமா? அவர்களில் ஒருவர் மீண்டுமாக, "விலங்குகளுக்குஆத்துமா இருந்தால், அவை கனவு காணும் என்று அர்த்தம் தானே" என்று சொன்னார். நான் அவரிடம் சொன்னேன், ஐயா, பிலேயாமின் கழுதை சில தரிசனங்களைக் கண்டது மற்றும் அந்நிய பாஷைகளில் பேசியது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா? நான் அவரிடம் சொன்னேன், ஆறாவது பரிமாணத்தில் பலிபீடத்தின் கீழ் இருந்த ஆத்துமாக்களோடு வில்லியம் பிரான்ஹாமின் நாயும் குதிரையும் கண்டார், இது உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? நீங்கள் பார்க்கிறீர்களா?
4 நான் சொன்னேன், நான் மார்ட்டின் லூதர் மற்றும் ஜான் வெஸ்லியை விசுவாசிக்கிறேன் மற்றும் அவர்கள் போதித்த அனைத்து காரியங்களுக்கும் "ஆமென்!" என்று சொல்லுவேன் மேலும் அவர்களுடைய காலத்தில் நான் இருந்திருந்தால், நான் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் தெளிப்பு ஞானஸ்நானம் பெறுவேன். ஆனால் இன்று ஞானஸ்நானம் என்பது பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் இல்லை. ஏனெனில் வெளிப்பாடு முன்னேறுகிறதாக இருக்கிறது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
5 நான் வில்லியம் பிரான்ஹாமை விசுவாசிக்கிறேன் ஆனால் தேவனுக்கு இருபுறமும் சோதோம் மற்றும் கொமோராவில் வந்த இரண்டு தேவதூதர்கள் பில்லி கிரஹாம் மற்றும் ஒரல் ராபர்ட்ஸ் அல்ல ஆனால் அது எலியா மற்றும் மோசேயாகும். மார்ட்டின் லூதருடன் திருத்துவ ஞானஸ்நானத்தில் இருந்த தேவனும் தேவ தூதர்களும் ஓஹியோ நதியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்த வில்லியம் பிரான்ஹாமுடன் இருந்த தேவனும் தேவ தூதர்களும் ஒன்று தான்.
6 மேலும் இந்தப் பக்கத்தில், வில்லியம் பிரான்ஹாமுடன் இருந்த அதே தேவனும் அதே பரிசுத்த தேவதூதர்களும் இங்கே இருக்கும் அதே தேவனும் அதே தேவதூதர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டால், அவன் என்னை விசுவாசிப்பான். ஒருவன் மார்ட்டின் லூதரை விசுவாசித்தால், அவன் என்னை விசுவாசிப்பான். ஒருவன் வில்லியம் பிரான்ஹாமை யாராவது விசுவாசித்தால், அவன் என்னை விசுவாசிப்பான்.
7 ஆனால் அவர்கள் வில்லியம் பிரான்ஹாமின் உண்மையான குமாரர்கள் அல்ல ஆனால் ஒரு கற்பனை வில்லியம் பிரான்ஹாமின் குமாரர்கள் மற்றும் அவர்களுக்கு எஞ்சியிருப்பது புனித மேடா, புனித ஹோப், புனித சிசிலியாவை பெறுவது மட்டுமே, ஏனெனில் அவர்கள் வலு சர்ப்பமாகிய மிருகத்தின் ஏழாவது தலை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. ஆனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் எப்போதும் தங்கள் காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியைப் பின்பற்றுவார்கள் ஏனெனில் தீர்க்கதரிசி என்பது இயேசு கிறிஸ்து ஒவ்வொரு தலைமுறைக்கும் வார்த்தையை மறுவரையறை செய்வதாகும். கிறிஸ்து தேவனுடைய வெளிப்பாட்டின் இரகசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மற்றும் ஒவ்வொரு தலைமுறையிலும் உயிர் வாழும் தீர்க்கதரிசி தான் கிறிஸ்துவின் வெளிப்பாட்டின் இரகசியம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
8 நல்லது. குழந்தைகளின் பிரதிஷ்டையைப் பொறுத்தவரை, அது கட்டாயம் இல்லை என்றால், அதைச் செய்யத் தகுதியானவர் என்று நினைக்கும் கடவுளுடைய ஊழியர் அதை எல்லா இடங்களிலும் செய்யலாம். அது ஒரு சபையில் இருந்தால் தகப்பனும் தாயும் பிரசங்க பீடத்திற்கு முன் வருவார்கள் மற்றும் குழந்தையின் தாய் பிள்ளையை பாஸ்டரிடத்தில் அல்லது பிரசங்கியிடத்தில் கொடுப்பார்கள், அவர் இப்படியாக ஒரு ஜெபத்தை ஏறெடுப்பார், "கர்த்தராகியஇயேசு கிறிஸ்துவே, சகோதரர் பிரான்ஹாம் மற்றும் சகோதரர் பிலிப்பின் தேவனே, நான் பெற்றஆணை மற்றும் கிருபையின் வல்லமையின் கீழ் மற்றும் இங்கே நிற்கும் இரண்டு பெற்றோரின்உடன்படிக்கையில், இந்த குழந்தை எப்போதும் பாவத்தின் மீது ஜெயங்கொள்ளும் மற்றும் எந்தவகையான தீய செயலும் அல்லது வார்த்தையும் இவன் மீது ஜெயம் கொள்ள முடியாது. இவனைஆசீர்வதிப்பவர் ஆசீர்வதிக்கப்படுவார், மேலும் இவனுக்கு எதிரான எந்த சாபமும் எந்தவிளைவையும் ஏற்படுத்தாது, மேலும் அவன் பூமிக்கும், அவனுடைய பெற்றோருக்கும், நமக்கும்ஆசீர்வாதத்தின் ஒரு குடிமகனாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபம் செய்கிறேன்! ஆமென்!"
9 ஆனால் ஞானஸ்நானம் பெறுவதற்கு, அது 14 வயதிலிருந்து துவங்குகிறது. ஆனால் 12 வது வயதில், பெற்றோரின் சம்மதத்துடன் அது சாத்தியமாகும். ஆனால் பத்து வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தையை நீங்கள் இனி அடிக்க முடியாது. கோபத்தால் அல்லது உங்கள் கோபத்தைத் தணிக்க உங்கள் குழந்தையை ஒருபோதும் அடிக்காதீர்கள். மேலும் நீங்கள் கோபமாக இருந்தால், சாபத்தின் பயத்திற்காக பேச வேண்டாம். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
10 மேலும், திருமணத்தைப் பொறுத்தவரை, ஆசீர்வாதம் அவசியமானது, அது சபைக்கு முன்பாக அல்லது போதகரின் வீட்டில் அல்லது சகோதரர சகோதரியின் இல்லத்தில் செய்யப்படும். ஆனால் அவர்களுக்கு நிச்சயம் ஆனதிலிருந்து சகோதரனும் சகோதரியும் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தால் மட்டுமே அது சபைக்கு முன்பாக நடைப்பெறும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
11 நல்லது, இப்போது பிரசங்கத்திற்கு வருவோம், கவனமாக இருங்கள், ஒரு சகோதரனுக்கு இரண்டு கனவுகள் இருந்தது. முதலாவது நடுராத்திரி சத்தத்திற்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது மற்றும் இரண்டாவது, இரண்டு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. அவர் கூறுகிறார், "முதல் கனவில், நடுவானத்தில் இரண்டு கழுகுகள் சண்டையிடுவதை நான் கண்டேன். அவைகளைபிரிப்பதற்கு வானத்திலிருந்து மூன்றாவது கழுகு கீழே வரும் வரை இரண்டு கழுகுகளும்சண்டையிட்டுக் கொண்டிருந்தன மற்றும் சண்டையிடும் இரண்டில் ஒன்று அடிபணிய மறுத்தது. அடிபணிய மறுத்த கழுகுடன் முன்றாவது கழுகு சண்டையிட்டது, இரண்டு கழுகுகளில் இருந்து ஒருகழுகின் இறகு வானத்திலிருந்து விழுந்தது மற்றும் இறகு விழுந்தபோது, அது இரண்டுபக்கங்களிலும் எழுத்துக்களைக் கொண்ட சில காகிதத் தாள்களாக இருந்தது." இந்த கனவின் அர்த்தம் என்ன ? நல்லது, நாம் அதற்கு வருவோம்!
12 சகோதரர் மீண்டும் கூறுகிறார், "இரண்டாவது கனவில், வானம் மீண்டும் திறக்கப்பட்டது, நான்ஒரு கருப்பு பெண்ணைக் கண்டேன் அவளை பூமியில் அறிந்திருக்கிறேன் ஆனால் நான் அவளைபரத்தில் பார்த்த போது, அவள் கலப்பு இனமாக இருந்தால். நான் அதை என் மொபைலில்படமாக்கிட அமைத்துக் கொண்டிருந்தேன் மேலும் ஒரு சத்தம் என்னிடம் சொன்னது, "நீங்கள்பார்ப்பதை படமாக்காதே, ஏனென்றால் நீ பார்ப்பதை பூமியின் குடிகள் அனைவரும் இதைப்பின்தொடருகிறார்கள்".
13 மேலும் கலப்பு இனப் பெண்ணின் தரிசனம் உருகி, அது மாறியது, அதன் இடத்தில் சிறிய அறைதிறந்ததை என்னால் பார்க்க முடிந்தது மற்றும் நடுராத்திரி சத்தத்தின் பிரசங்கிகளை பார்த்தேன், சிறிய அறை மிகப் பெரிய அறையாக மாறியது மற்றும் பூமியின் அனைத்து இனங்களின்மனிதர்களும், ஜனாதிபதிகள் மற்றும் மன்னர்கள் மற்றும் பூமியின் பெரிய மனிதர்கள் அங்குஇருந்தனர். ஒரு மிக புனிதமான விழாவிற்கு, ஒரு மனிதன் ஒரு பெரிய சிறப்புப் பட்டத்தை பெறத்தயாராகி வருவதைப் போல நான் பார்த்தேன்.
14 மற்றும் அங்கு சகோதரர் பெனி நின்றுக் கொண்டிருந்தார், அந்த நபருக்குப் பின்னால் சகோதரர்ஜாடியும் நின்று கொண்டிருந்ததை நான் பார்த்தேன், பிறகு, அவருக்கு அருகில், நான் பார்த்தேன், இதோ, இடது பக்கத்தில் ஒரு நட்சத்திரமும் வலது பக்கத்தில் மற்றொரு நட்சத்திரமும் இருந்தது. அதைத் தவிர மற்ற நிகழ்வுகளை நான் பார்க்கவில்லை அவர் சிறப்புப் பட்டத்தை பெற்றவர் போல்இருந்தார், அது நடந்தபோது, பரலோகத்திலும் பூமியிலும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது
15 நான் அதை மீண்டும் படமாக்க விரும்பினேன், அதே சத்தம் என்னிடம் சொன்னது, "நீ பார்ப்பதைபடம்பிடிக்க வேண்டாம், பூமியின் குடிகள் அனைவரும் அதைப் பார்க்கிறார்கள்". மேலும்மனிதர்களின் இரட்சிப்பிற்காக தேவன் அதை செய்ததால் பூமியின் மேல் மகிழ்ச்சி இருப்பதை நான்கண்டேன், சிலர் குதித்து, "நாங்கள் இரட்சிக்கப்பட்டோம், நாங்கள் இரட்சிக்கப்பட்டோம்" என்றுமகிழ்ச்சியில் கூச்சலிட்டனர். அதேசமயம் இன்னும் சிலர் சோகமாகவும் கண்ணீருடனும்இருந்தனர்.
16 மேலும் தரிசனத்தின் கீழ் இருந்து சில மென்மையான பனி வெளியேறி பூமியை தெளித்ததுஇனியும் நான் தரிசனம் காணாத வரை பார்த்துக்கொண்டிருந்தேன், நான்போய்க்கொண்டிருந்தேன், இதோ, பலர் பரலோகத்தில் நடந்த நிகழ்வைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்!"
17 சரி, முதல் கனவைப் பார்ப்போம்! கவனியுங்கள் முன்றாவது கழுகு சண்டையிட்டுக் கொண்டிருந்த இந்த இரண்டு கழுகுகளும் பிரிப்பதற்காக இறங்கி வரவில்லை ஆனால் சண்டையை நிறுத்துவதற்காக வந்தது. நீங்கள் பார்க்கிறீர்களா? இப்போது அந்த இரண்டு கழுகுகளும் பரலோகத்தில் எதற்காக சண்டை போடுகின்றன? அவைகள் சண்டையிடும்போது, ஒன்று கடவுளுடையதாகவும், மற்றொன்று பிசாசினுடையதாவும் அல்லது இரண்டும் பிசாசினுடையது என்பதை கவனியுங்கள்! அங்கே இரண்டு சாத்தியங்கள் உள்ளன! இது தேவனின் கழுகு பிசாசின் கழுகுடன் சண்டையிடுகிறதா? அந்த இரண்டு கழுகுகளின் அர்த்தம் என்ன, அவை எங்கிருந்து வருகின்றன? பூமி அவைகளை கடவுளின் கழுகுகளாக பார்க்க முடியும் ஆனால் அவ்விரண்டும் பிசாசுக்குரியது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
18 இரண்டு கழுகுகளும் பிசாசினுடையது. இது பிரன்காமிசம் கத்தோலிக்கத்துடன் அல்லது புராட்டஸ்டன்டிசத்துடன் அல்லது சுவிசேஷ இயக்கங்களுக்கு எதிராகப் போராடுவது அல்ல. ஆனால் அவர் கண்ட இரண்டு கழுகுகள் பூமியின் இரண்டு முக்கிய பிரான்ஹாமிஸ்ட் போக்குகளாகும். ஒருபுறம், ஐரோப்பாவின் போக்குடன் ஜெர்மன் கழுகு மற்றும் மறுபுறம் மேற்கு பிரான்ஹாமிசம் போக்குடன் மேற்கத்திய கழுகு, அதாவது அமெரிக்காவின் ஜோசப் மற்றும் பில்லி பால் பிரான்ஹாம்.
19 பரலோகத்திலிருந்து இறங்கி வருகிற மூன்றாவது கழுகின் தரிசனம் காண்பிக்கிறதாவது, ஜெபர்சன்வில்லின் பெரிய கழுகு இருந்த நாட்களில், அதாவது, வில்லியம் பிரான்ஹாம் பூமியிலிருந்து மறைந்து, அந்த இடத்தில் இரண்டு பொய்யான கழுகுகள் எழும்பி. பரஸ்பரமாக சண்டையிடுகிறது பிறகு பரலோகங்களின் தேவனான, பெரிய கழுகு, பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, அவர்களை சண்டையிட்டு மிகாவேலாக அவர்களை தோற்கடித்து, பூமியில் இறங்கி வந்து வெளிப்படுத்தல் 12ன் படி ஆட்டுக்குட்டியின் மனைவிக்கு அதிகாரத்தையும் வல்லமையும் கொடுப்பார்.
20 மேலும் எலினா சான்செஸ் இந்த அமெரிக்கப் பெண்மணியை பற்றி நான் ஒரு பிரசங்கத்தில் பேசியிருக்கிறேன், ஒரு தரிசனத்தில் என்னைப் பார்திருக்கிறார், அது தூதனாக இருந்தது மற்றும் தூதன் அவளிடம், "தேவனுக்கு முன்பாக நிற்கும் மிகாவேல் நான்…” அதற்கு அவள், “என் ஆத்துமாஎன்னை விட்டு வெளியேறுவது போல் தோன்றியது, நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்”.அவள் சொன்னாள். "அனைவருக்கும் வட அமெரிக்காவில் நிராகரித்தாலும், நான் அதைஒருபோதும் கைவிடமாட்டேன்". அவள் ஒரு பிரன்ஹாமிஸ்டாக இருக்கிறாள், வெளிப்பாட்டிலிருந்து வந்த வல்லமையினால் அவள் அதைச் சொன்னாள்.
21 பிரான்ஹாமிசத்தில், உணர்சிவசப்படுதலில் தான் தேவன் இருக்கிறார். கடவுள் சீனாய் மலையிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்த அவள் யூதர்களைப் போல சொன்னாள்."வடஅமெரிக்காவில் நடுராத்திரி சத்தத்தை அனைவரும் நிராகரித்தாலும், நான் அதை ஒருபோதும்கைவிடமாட்டேன்". [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
22 உண்மையில், முதல் இரண்டு கழுகுகள் கழுகுகளே இல்லை, ஆனால் சர்ப்பங்கள், அவை தோற்கடிப்பட்டதின் புள்ளியாக பூமியின் குடிகளை இனி ஒரு போதும் வஞ்சிக்காதபடிக்கு, அவற்றின் இறகுகள் பறிக்கப்பட்டன ஆகவே அவைகளால் பறக்க முடியாது. அவைகள் எப்போதும் இருந்த விதமாக சர்ப்பமாக ஆனது. நீங்கள் பார்க்கிறீர்களா? இரகசியம் என்னவென்றால், ஒரு காரியம் இரண்டு எதிர் அர்த்தங்களை கொண்டிருக்க முடியும். எனவே, வெள்ளைக் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் ஒரு குதிரை வீரன் என்றால், அது தேவன் என்றோ அல்லது ஒரு இராணுவ டிரக்கில் அமர்ந்திருக்கும் கலப்பு இன பெண் என்றால், அது பிரான்ஹமிசம் தான் என்று சொல்லாதீர்கள். ஆனால் ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளன் தான் அதன் விளக்கத்தைக் காட்ட தகுதியுடையவர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
23 தலைமுறை தலைமுறையாக, அது அதே மத சர்ப்பம்! பழமையான பாம்பு! அவர் ஒருமுறை ஒரு சிங்கத்தின் தோற்றத்தை எடுத்தார் அவன் தோற்கடிக்கப்பட்டான். பின்னர் அவர் ஒரு கன்றின் தோற்றத்தை ஒருமுறை எடுத்தார், அவன் தோற்கடிக்கப்பட்டான், பின்னர் மற்றொரு முறை மார்ட்டின் லூதர் பூமியை விட்டு வெளியேறியபோது அவர் மனிதனின் தோற்றத்தை எடுத்தார் மற்றும் அவன் தோற்கடிக்கப்பட்டான்.
24 இந்த நேரத்தில், இந்த பக்கத்தில், வில்லியம் பிரான்ஹாம் இறந்தபோது, அவர் கழுகின் தோற்றத்தை எடுத்தார், ஏனெனில் நாம் கழுகின் காலத்தில் இருக்கின்றேம், பின்னர் அவன் பூமியின் அரசாட்சிக்காக சண்டையிடும் இரண்டு கழுகுகளாக உருமாறினான். அவைகள் அத்தகைய கண்டத்தை, அத்தகைய தேசத்தை கட்டுப்படுத்தும்படியாக விரும்பியது மற்றும் பெரிய கழுகு கீழே வருவதை அவைகள் கண்டதும், அவைகள் "மகத்தான எஜமானரே, கிழக்கு, வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு ராஜாக்களோடு போரிட நாங்கள் உங்களுடன் இருப்போம்" என்றது. ஆனால் பெரும் கழுகு இடியுடன் கூடிய சத்தத்துடன், "பிரன்காமிஸ்டுகளே, நிறுத்துங்கள், இங்கிருந்து புறப்படுங்கள்!" என்றது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
25 பெருங்கழுகு: "நீ என்னோடு இருந்து, மேலும் நீ இறையியலில் நம்பிக்கை கொள்ளவில்லைஎன்றால், எப்படி சில லூயிஸ் செகோண்ட், ஜேம்ஸ் மன்னன், ஸ்கோஃபீல்ட் வேதாகமங்களைஉன்னுடைய கையில் வைத்திருக்கிறாய் அல்லது லூயிஸ் செகோண்ட், ஸ்கோஃபீல்ட், தாம்சன், ஜேம்ஸ் மன்னன் வேதாகமங்களை தங்களுடைய கையில் கொண்டிருப்போரோடு நீ எப்படிசகோதரத்துவத்தை கொண்டிருக்க முடிகிறது? இங்கிருந்து அகன்று போ!" என்று சொன்னது. அவைகள் பெருங்கழுகை எதிர்த்து சண்டையிட்டது. ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் நிமித்தம் பெரும் கழுகு அவைகளை தோற்கடித்தது! பெருங்கழுகிடமிருந்து புறப்பட்டு வந்த இரகசியம் மற்றும் கண்டனத்தின் வார்த்தைகளால் அவைகள் தங்கள் இறகுகளை இழந்தது.
26 மேலும் பிடுங்க்கப்பட்ட இறகுகளில் மேல் இரகசியங்கள் எழுதப்பட்டிருந்தன. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. கீழே வந்த இறகு பிரசங்கங்களின் இலைகளாக மாறியது. இது பரலோகத்திலிருந்து கீழே விழுந்த 106வது இலையாகும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
27 இப்போது இரண்டாவது கனவைப் பார்ப்போம். முதலில், ஒரு கலப்பினப் பெண்! இதை 1993 இன் தரிசனத்தின் கலப்பின பெண்ணோடு குழப்ப வேண்டாம். நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரே காரியம் தேவனுக்கு முன் இரண்டு வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்க முடியும். இரண்டு தேவதூதர்கள் அங்கே நிற்கலாம், ஒன்று கடவுளுடையதாகவும், மற்றொன்று பிசாசாகவும் இருக்கலாம்.. இரண்டு இரட்டையர்கள், இரண்டு சொட்டு நீர் போன்றது, ஒரே கருவில் இருந்து வெளிவரலாம், ஒன்று தேவனுடையதாவும், மற்றொன்று பிசாசினுடையதாகவும் வரலாம்.
28 வெளிப்படுத்துதல் 19 இல் ஒரு குதிரைவீரன் ஒரு வெள்ளைக் குதிரையின் மீது அமர்ந்திருப்பதைக் காண்கிறோம், மற்றும் வெளிப்படுத்துதல் 6 இல் மற்றொரு குதிரைக்காரன் வெள்ளைக் குதிரையில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம் ஒன்று கடவுளுடையது, மற்றொன்று பிசாசுனுடையது. யாத்திராகமம் 19 இல், முழு சினாய் மலையும் நடுங்கியது, அது தேவனாக இருந்தது, அதேசமயம் 1 இராஜாக்கள் 19 இல், ஹோரேப் மலை நடுங்கியது, அது பிசாசாக இருந்தது.
29 ஆனாலும், கேபார் நதி மற்றும் பத்மு நதிகளின் இரகசியங்களில், இந்த இரகசியம் ஒரு நோக்கத்திற்காகவே அங்கே மறைக்கப்பட்டது. மணவாளனாகிய கிறிஸ்து, பரலோகத்தின் நிறத்தில் வருகிறார், நீலக்கல், வெளிப்படையான அடர் நீலம் நிறத்தில் இருக்கும் அதே வேளையில் மணவாட்டி வண்ணங்களின் கலவையான படிகைப்பச்சை மூலமாக வருகிறாள். மேலும் இதுதான் சரியாக பச்சையும் மஞ்சளும் முதிர்ச்சியடையும் போது உள்ள நிறமாக மாறும். நீங்கள் பார்க்கிறீர்களா?
30 நாம் வர்ணம் பூசுபவர்களின் காலத்தில் இருக்கிறோம் மற்றும் வர்ணம் பசுபவர்களின் காலத்தில் தான் மணவாட்டியின் வர்ணம் வெளிப்படுகிறது. மார்ட்டின் லூதர் மற்றும் ஜான் வெஸ்லி ஆகியோர் அவளை பூமியில் ஒரு வெள்ளை பெண் ஸ்திரியாக அறிந்திருந்தனர். ஆனால் பத்மு தீவில் யோவான் அவளைப் பார்த்தான். அவன் அதை எழுத விரும்பினான் ஆனால் அவனிடம், "யோவானே, இல்லை. நீ அதை எழுதாமல் முத்திரைபோடு, அவளுடைய சரீரத்தின் நிறத்தைச் சொல்லாதே!" என்று சொல்லப்பட்டது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
31 அதை வில்லியம் பிரான்ஹாம் அறியாத மொழியில் கேட்டார்... இயற்க்கை யாவும் அதற்கு சாட்சியளிக்கிறது. பெரும்பாலான பழங்களை கவனித்து பாருங்கள் அதினுடைய முதிர்ச்சியின் நிறம் இப்படி தான் இருக்கும். காட்டிலுள்ள பழங்களை பாருங்கள் இது தான் கச்சிதமாக முதிர்ச்சியின் நிறம் என்பதை நீங்கள் காண்பீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
32 எனவே, ஒரு ஜீவன் இங்கு தோன்றலாம், அது நான்கு ஜீவன்களில் ஒன்றாகும் அதே ஜீவன் அங்கு தோன்றலாம் அங்கே அது தானியேல் 7 இன் நான்கு பேரரசுகளில் ஒன்றாக இருக்கும்! அதே சிங்கம் இங்கே பாபிலோனியனாக பேரரசாக தோன்றலாம் மற்றும் அதே சிங்கம் நான்கு ஜீவன்களில் ஒன்றாக அங்கு தோன்றலாம்.
33 வெளிப்படுத்துதல் புத்தகத்தில் யோவான் பார்க்கும் கிறிஸ்துவின் இந்த மணவாட்டி ஒரு கலப்பினப் பெண்ணாக மட்டுமே இருக்க முடியும். அவள் ஒரு ஆசிய, ஒரு வெள்ளை, ஒரு இந்திய அல்லது ஒரு கருப்பு ஆப்பிரிக்க அல்லது ஒரு மக்ரிபி பெண் அல்ல ஆனால் ஒரு கலப்பின பெண். ஆமென்! இயேசு கிறிஸ்து தேசங்களுக்குத் திரும்பும்போது, அது தனக்கென ஒரு மனவாட்டியை கண்டுபிடிப்பதற்காக தான் ஆனால் இந்த மணவாட்டியின் இனம் என்ன? ஆசியாவிலிருந்து, பவுல் அவளை மஞ்சள் நிற தோலாக பார்த்தான், ஐரோப்பாவிலிருந்து, மார்ட்டின் லூதர், ஜான் கால்வின் மற்றும் ஜான் வெஸ்லி ஆகியோர் அவளை மயக்கும் வெள்ளைப் பெண்ணாக பார்த்தார்கள் .
34 அமெரிக்காவில், வில்லியம் பிரான்ஹாம் நிச்சயமாக அவளை ஒரு இந்தியப் பெண்ணாகவே பார்த்தார். மேலும் இந்தப் பக்கத்தில், ஆப்பிரிக்காவில், அவள் ஒரு ஆப்பிரிக்க பெண்ணாக அல்லாமல் இருக்க முடியாது, மேலும் பூமியில் இருக்கும் அந்த பெண்ணை தனக்கு தெரியும் என்று சகோதரர் கூறுகிறார், அவள் சுத்திகரிக்கப்பட்டு, வென்மையாக்கப்பட்டு, புடமிடப்பட வேண்டிய ஒரு கருப்புப் பெண். கிறிஸ்துவின் மணவாட்டி பரலோகத்தில் தோன்றும்போது, அவள் கலப்பின கன்னிகையாக அல்லாமல் இருக்க மாட்டாள். அவளுடைய இருதயம் எவ்வளவு நேர்மையானதாக இருந்தாலும், அவளுடைய செயல்கள் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் சரி அவள் ஒரு கலப்பின கன்னிகையாக இல்லையெனில், அது தவறாக இருக்கும்! ஆனால் முதலில் வரப்போவது ஒரு கருப்பின கன்னிகை தான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
35 என்ன நடந்தது? நான் அல்ல, ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனக்கென ஒரு மணவாட்டியை தேர்ந்தெடுக்க தேசங்களுக்கு திரும்பும்போது அவரால் ஒரு ஆசிய, ஒரு ஐரோப்பிய, அமெரிக்க அல்லது ஆப்பிரிக்க ஸ்திரியாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியவில்லை, ஆனால் அனைத்து தேசங்களிலிருந்தும் வருகிற ஒரு மணவாட்டியாக இருக்கிறாள். அவள் ஒவ்வொரு தேசங்களிலிருந்தும், ஜாதிகளிலிருந்தும், கோத்திரத்திலிருந்தும், பாஷையிலிருந்தும் வருகிறவள் என்று வேதாகமம் கூறுகிறது. நீங்கள் பார்க்கிறீர்களா? இஸ்ரவேல் என்றால் தேவனுக்கு மணமுடிக்கப்பட்டவள் என்று பொருள் மற்றும் இஸ்ரவேலினுடைய அக்கிரமமான கிரியைகள் பரலோகம் வரை ஏற்றப்பட்டதால், தேவன் அஞ்ஞான ஸ்திரீயிடமிருந்து தனக்கென ஒரு மணவாட்டியை தேர்ந்தெடுக்கும்படியாக தேசங்களுக்கு திரும்பினார்.
36 ஆனால், புத்தியில்லாத ஸ்திரீ ஞானிகளுக்கு ஞானத்தைக் கற்பிப்பதும், விபச்சாரி கன்னிகளுக்கு ஒழுக்கத்தை கற்பிப்பதும் சாத்தியமா? ஆம் சகோதரர்களே, தேவனால் அதைச் செய்ய முடியும். அதனால்தான் தீரும் சீதோனும் இஸ்ரவேலுக்கு நீதியைப் போதிப்பார்கள் மற்றும் நான் உண்மையான தீர்க்கதரிசி என்றால் எருசலேமும் குழப்பமடையும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. இஸ்ரவேல் விபச்சாரத்திற்காக செல்கிறது, மற்றும் தேசங்களுக்குள்ளே, தேவன் தனக்காக ஒரு கன்னிகையை எழுப்புகிறார். ஒரு கன்னிகை இப்படியாக, "ஓ தீர்க்கதரிசிகளின் தேவனே, நான் உம்மைக் காண விரும்புகிறேன்." என்கிறாள். இது பரிசுத்தவான்களின் ஜெபம். மேலும் இந்த பாடல் ஆவியினாலான ஜெபம்.
37 பாவியின் இடத்தில் தேவனுடைய ஆவியனவர் தேவனிடமே பேசுகிறார். நீங்கள் பார்க்கிறீர்களா? இரட்சிக்கப்பட்டவர்கள் இழந்து போனவர்களின் இடத்திலிருந்து தேவனிடம் உரையாடுவது. நாம் நமக்காக மட்டும் பாடுவதில்லை ஆனால் மது, ஊழல், விபச்சாரம் மற்றும் குறிப்பாக கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரான்ஹாமிஸ்ட் அந்தகாரம், ஊழிய இயக்கங்கள் மற்றும் ஊழியங்கள் உள்பட தொலைவில் இருப்பவர்களுக்காகவும் பாடுகிறோம். ஆம் தீர்க்கதரிசிகளின் தேவனே, நாங்கள் இரட்சிக்கப்படுவதற்காக உமது ஜீவனை கொடுத்த உம்மை காண விரும்புகிறோம்.
38 ஆம் தீர்க்கதரிசிகளின் தேவன், பரிசுத்தவான்களின் பரிசுத்தவான், நித்தியக் கன்மலையானவர், மோசேயின் தேவன், யோசுவாவின் தேவன், எலியா, எலிசாவின் தேவன், பிரான்ஹாமின் தேவன், காக்குவ் பிலிப்புவின் தேவன், நீர் உண்மையும் சத்தியமுள்ளவர், தூதனும் ஆட்டுக்குட்டியுமானவர்... நாங்கள் உம்மை பார்க்க விரும்புகிறோம். நீர் ஜான் வெஸ்லியின் தேவன், மார்ட்டின் லூதரின் தேவன், நாங்கள் உம்மை பார்க்க விரும்புகிறோம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
39 இஸ்ரவேலின் இடத்தில் புறஜாதி தேசத்தின் மணவாட்டி, உமது கிருபையே அதை செய்தது! புறஜாதி தேசத்தின் மனிதன் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன், உமது கிருபையே அதைச் செய்தது. உம்முடைய நாமம் சதாக்காலமும் துதிக்கப்படுவதாக. ஆமென்!
--:--
--:--