



Kacou 109 (Kc.109) : ஒருவருடைய மணிவேளையின் சோதனையை மறுப்பது
(ஜூலை 08, 2012 ஞாயிற்றுக்கிழமை அன்று அட்ஜமே, ஆபிட்ஜான் - ஐவரி கோஸ்டில் பிரசிங்கிக்கப்பட்டது)
1 நல்லது, இங்கே எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளன. முதல் கேள்வி... சகோதரர் பிலிப்பு, கடந்தகாலத்திலிருந்து தீர்க்கதரிசிகள் யூதர்களாக இருந்தார்கள், உங்களைப் போன்ற ஆப்பிரிக்கர் ஒரு தீர்க்கதரிசிஆனது எப்படி? இந்த பொருளின் மேல் எனது பதில் இதோ: அனைத்து தீர்க்கதரிசிகளும் எபிரேயர்களாகஇருந்தார்கள் எனெனில், முதலில், இயேசு கிறிஸ்து இஸ்ரவேல் வீட்டாரின் காணாமல் போன ஆடுகளுக்குஅனுப்பப்பட வேண்டும், அதனால்தான் தேவன் யூதர்களுடன் மட்டுமே இடைப்பட்டார், இரண்டாவதாக, அவருடையமுதல் வருகை யூதர்களுக்காக, அது அவ்வாறு இருந்தது, அவருடைய சீஷர்களும் அப்போஸ்தலர்களும் யூதர்களாகஇருந்தார்கள்; ஆனால் இரண்டாவது வருகையானது பூமியிலுள்ள எல்லா தேசங்களுக்காக இருக்கிறது. அதனால்தான் பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் செய்தியாளர்களை எழுப்புகிறார்.
2 ஐரோப்பியர்களுக்கு கூறும்படியாக அவர் மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லி மற்றும் உல்ரிச் ஸ்விங்லி ஆகியோரைஅனுப்பியிருந்தார். அமெரிக்கர்களுக்கு அதை கூறும் படியாக வில்லியம் பிரான்ஹாமை அனுப்பினார் அவர்இப்போது ஆப்பிரிக்கர்களுக்கு கூறும்படியாக தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை அனுப்பியுள்ளார். [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்]. மேலும் ஆப்பிரிக்கா இப்படி இவ்வளவு நிலையாக ஒரு போதும் இருந்ததில்லைமற்றும் நடுராத்திரி சத்தமானது அங்கோலாவில் நம்முடைய சகோதரர் ஹ்யூகோ ஸே மூலம் ஒலிக்கிறது.
3 நல்லது, யாரோ ஒருவர் எனக்கு எழுதி, "நீர் ஒரு பெரிய தீர்க்கதரிசியா அல்லது எபேசியர் 4:11 ஊழியங்களில் ஒருதீர்க்கதரிசியா? மேலும் அவர், “நீர் எபேசிய தீர்க்கதரிசி என்று சொன்னால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால்நீர் மோசே, ஏசாயா, எரேமியா போன்ற பெரிய தீர்க்கதரிசி என்று சொன்னால்... பிறகு நீர் ஒரு கள்ள தீர்க்கதரிசி!” என்றார். நீங்கள் பார்கிறீர்களா? நான் அவருக்கு பதிலளித்தேன்: நான் கூறுகிற வார்த்தைகளைக் கேள்! அவைஎபேசிய-தீர்க்கதரிசியினுடையதை போன்று இருந்தது என்றால் நான் ஒரு எபேசியன் ஆனால் அவை மோசே, ஏசாயாஅல்லது எரேமியா போன்ற பெரிய தீர்க்கதரிசிகளின் வார்த்தையை போன்று இருந்தால் பின்னர் நான் மோசே, ஏசாயா அல்லது எரேமியா போன்ற ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன்.
4 நான் பிரசங்கம் செய்ய ஆரம்பித்த போது, பிறகு அபோபோவில் உள்ள பிரான்ஹாமிஸ்ட் பாஸ்டர் இம்மானுவேல்சகோதரர் கிறிஸ்டோபரிடம், "அவர் மோசே, ஏசாயா, எரேமியா போன்ற ஒரு பெரிய தீர்க்கதரிசி என்று சொன்னால்... பிறகு நான் அவருடன் உடன்படவில்லை, ஆனால் அவர் ஒரு எபேசிய தீர்க்கதரிசி என்று சொன்னால், அவர் இங்குவந்து பிரசங்கம் செய்யும்படி அவரை அழைப்போம்..." என்றார்.
5 இப்போது நான் இன்னொரு கேள்விக்கு வருகிறேன்: சகோதரர் பிலிப்பு, வில்லியம் பிரான்ஹாமை போன்று நாம்விக் அணியலாமா? என்னிடம் இந்த கேள்வியை பத்து முறைக்கு மேல் கேட்கப்பட்டிருக்கிறது. முதலில், விக் மற்றும்ஜவுரி முடிகள், அது உண்மையில் உங்களுக்கு அவசியமாக இருந்தால் அவற்றை அணியலாம் மற்றும் வில்லியம்பிரான்ஹாம் விக் அணிந்திருந்ததால் நான் அதை சொல்கிறேன். ஆனால் வில்லியம் பிரான்ஹாம் விக் அணிந்தேன்என்று உங்களுக்கு சொல்ல வில்லை என்றால், நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். உங்கள் போதகரின்சம்மதத்துடன் அல்லது உடல்நலப் பிரச்சினைக்காக அது தேவை என்றால் இது அவ்வாறு இருக்க வேண்டும் என்றுநான் கேட்டுக்கொள்கிறேன். அது உங்களுக்கு தலைமுடியாக மட்டுமே சேவை செய்யும், அதனால் அது வெவ்வேறுநிறத்தில் இருக்க முடியாது அல்லது உங்கள் தோள்களுக்கு கீழே விழவோ அல்லது பின்னப்பட்டிருக்கவோ முடியாது.
6 அதேபோல், நீங்கள் அணியக்கூடாத இரண்டாம் கைப்பொருளைப் பற்றி நான் பேசும்போது, ஏற்கனவே அணிந்தஆடைகளை நான் அர்த்தப்படுத்துகிறேன். அந்த இரண்டாம் கைப்பொருள் ஆடைகளில், ஏற்கனவே அணிந்தஉடைகள் மறுவிற்பனை செய்யப்படுகின்றன, அவையே நீங்கள் அணிய கூடாத ஆடைகள். எனவே, இரண்டாம்கைப்பொருள் விற்பனையில் ஒரு போதும் அணியாத ஆடைகளை நான் அர்த்தப்படுத்தவில்லை. நான் மீண்டும்விளக்கத்தை எடுத்துக்கொள்கிறேன்: அந்த இரண்டாம் கைப்பொருள் ஆடைகளில் ஒரு போதும் அணியாதஆடைகளும் பொருட்களும் அடங்கும், ஒருவேளை விற்க முடியாத பொருட்கள் அல்லது தொடரின் கடைசியாகஇருக்கலாம். நீங்கள் அவற்றை அணியலாம், அவைகளைப் பற்றி அல்ல நான் பேசுவது.
7 நான் மீண்டும் இன்னொரு கேள்விக்கு வருகிறேன், சகோதரர் பிலிப்பு, என் பெற்றோர்கள் தங்கள் சபைக்குஅவர்களைப் பின்பற்றும் படியாக என்னைக் கட்டாயப்படுத்துகிறார்கள். இங்கே பதில் உள்ளது: நீங்கள் அங்குசெல்லக்கூடாது, ஆனால் அவர்கள் உங்களைக் கட்டாயப்படுத்தினால், செய்தியின் ஆவியுடன் செல்லுங்கள். உதாரணமாக, ஜெபிக்க வேண்டிய நேரம் வரும்போது, உங்களுடைய சத்தத்தை உயர்த்தி, "ஓ கர்த்தராகியஇயேசுவே, காக்குவ் பிலிப்பின் தேவனே, நான் இங்கே முன்பு வந்தபோது, நான் இந்த சபையின் மக்களைப் போலதெய்வீகமற்ற வாழ்க்கையை வாழ்ந்தேன், நான் இதையும் அதையும் செய்வேன் ஆனால் இப்போது நான் இனி ஒருபோதும் அதை செய்வதில்லை ஏனெனில் நீர் உம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை அனுப்பினீர்... ஓஇயேசு கிறிஸ்துவே, மாதவிடாய் காலத்தில் உள்ள பெண் ஆண்களுக்கு முன்பாக பிரசங்க மேடையில் நின்றுபிரசங்கம் செய்யலாம் என்று இருக்கிற இந்த பழைய சபைக்கு நான் வர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்" நீங்கள் பார்க்கிறீர்களா?
8 அனைவருக்கும் பிரசங்கியுங்கள் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மற்றும் யாராவது உங்கள் பேச்சைக் கேட்டுஅதைப் பற்றி பேசினால், அயலானுடைய ஜெபத்தை கேட்ப்பது இயல்பானதா என்று அவரிடம் கேளுங்கள். [ஆசிரியர்குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
9 இனி முதற்கொண்டு, வேதாகமம் வெறுமனே வரலாறு மற்றும் ஆராய்ச்சியின் ஆவணம் என்பதை தேவனுடையபிள்ளைகள் அறிவார்கள். அது கடந்த தலைமுறையின் இரட்சிப்பிற்க்காக தேவன் இஸ்ரவேலருக்கு அனுப்பியஇராஜாக்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் சரித்திர புத்தகங்களை சேகரித்தலாகும். வேதாகமம் ஒரு நினைவுச்சின்னம்மற்றும் தேவன் கடந்த காலத்தில் செய்தவற்றின் சாட்சியாகும். இது ஒரு அருங்காட்சியகம் மற்றும் இரட்சிப்பு அதில்இருப்பதாக எங்கும் கூறப்படவில்லை.
10 மாறாக, யோவான் 5:39 இல், இயேசு உங்கள் பிதாக்களான பரிசேயர்களிடம், தன்னுடைய காலத்துபைத்தியக்காரர்களிடம் "நீங்கள் வேதவாக்கியங்களை ஆராய்கிறீர்கள், அவற்றில் உங்களுக்கு நித்திய ஜீவன்இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்..." என்று கூறினார். வேதாகமம் ஒரு வரலாற்று புத்தகம் மற்றும் ஒரு வரலாற்றுபுத்தகத்தை தேடும் ஒருவன், அதில் நித்திய ஜீவனைக் கண்டடையலாம் என்று நம்புகிறான், குப்பையினுடாக தேடும்பைத்தியக்காரனிடமிருந்து இது நான் கற்றுக்கொண்ட ஒரு பாடம். [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
11 வேதாகமம் என்ற வார்த்தைக்கு நூலகம் என்று பொருள். இது "வரலாற்று பதிவேடுகள்" போன்றபெண்பால்-பன்மையின் வார்த்தை. வேதாகமத்தின் அறுபத்தாறு புத்தகங்கள் காப்பகங்களாக இருக்கிறது; அவையூத மற்றும் கிறிஸ்தவ நாகரிகத்தின் அறுபத்தாறு ஆவணங்கள் கொண்ட அருங்காட்சியம்! நீங்கள் பார்க்கிறீர்களா? வேதாகமம் அதன் தீர்க்கதரிசன பக்கத்திற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். உதாரணத்திற்கு மத்தேயு 25:6 ல், கறுப்பு ஆப்பிரிக்காவின் மத்தியில், அங்கே ஒரு சத்தம் இருப்பதாக என்று கூறும்!
12 இன்று, மத்தேயு 3:3, மாற்கு 1:3… இல் கூறியபடி ஏசாயா 40:3-ல் சத்தமிடுகிற சத்தம் யோவான் ஸ்நானகன்என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் நான் மத்தேயு 25:6 இன் நிறைவேற்றம் என்பதை நீங்கள்ஏற்றுக்கொள்ளவில்லை, ஏனென்றால் மரம் உங்களுடைய தோட்டத்தால் வளரவில்லை அதினாலா? மரம் ஐவரிகோஸ்ட்டில் வளர்ந்தது, ஆனால் அதன் கிளைகள் மற்றும் வேர்கள் பூமியின் அனைத்து தேசங்களிலும்இருக்கின்றன. நீங்கள் என்னை நிராகரிக்கிறீர்கள், இருப்பினும் நான் அதுவாகவே இருக்கிறேன்! [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
13 இப்போது பரலோகராஜ்யத்தின் இந்த உவமையைக் கேளுங்கள். ஒரு வயதான விறகுவெட்டு தொழிலாளிக்குஒரே ஒரு மகன் இருந்தான் அவன் பள்ளியில் நன்றாக பயின்றான்; மேலும் ஒரு விறகுவெட்டியாக தன்னுடைய கடினஉழைப்பிற்கு முன்பாக அவை தந்தைக்கு ஆறுதல் அளித்து பலப்படுத்தியது. ஒரு நாள் காலையில், பள்ளி இயக்குனர்வந்து மாணவர்களிடம்: "அன்புள்ள மாணவர்களே, பள்ளி தேர்வுகள் விரைவில் வரவுள்ளன, உங்களால் "வரலாற்றுபதிவேடுகள்" இல்லாமல் தேர்ச்சியடைய முடியும். ஆனால், வரலாற்று பதிவேடுகள் மூலம் உங்களுக்கு ஒரு காரியம்என்னவென்ற யோசனை இருக்கும் என்று நாங்கள் கணக்கிட்டுள்ளோம். உங்களுக்கு முன்பிருந்த தலைமுறைகள்கொண்டிருந்த பரீட்சைகளின் ஒரு யோசனை உங்களுக்கு இருக்கும் பிறகு தேர்வின் போது இன்னும் அதிகமானபுத்திசாலிதனத்தை கொண்டிருப்பீர்கள்." என்றார்.
14 பிறகு இயக்குனர் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு மாணவர்களிடம், "இந்தப் புத்தகத்தில் வருடாந்திரதேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளின் வரலாறுகள் உள்ளன. இது அநேக புத்தகங்களின் சேகரிப்பாகஇருக்கிறது. மேலும் ஒவ்வொரு புத்தகமும் ஒரு துல்லியமான வருடத்தின் பரிட்சைகளையும் அதன் திருத்தத்தையும்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, அத்தியாயம் 10 இல், 1975 இன் பரீட்சைகள் மற்றும் அதன் திருத்தங்களைகொண்டுள்ளது. 1975 ஆம் ஆண்டின் பரீட்சைகள் 1976 ஆம் ஆண்டின் பரீட்சைகளிலிருந்து வேறுபட்டது மற்றும்1976 ஆம் ஆண்டின் பரீட்சைகள் 1977 ஆம் ஆண்டின் பரீட்ச்சைகளிலிருந்து வேறுபட்டது..."
15 இயக்குனரின் விளக்கங்களுக்குப் பிறகு, மரம் வெட்டுபவருடைய மகனுக்கும் மற்ற மாணவர்களுக்கும் வரலாற்றுபதிவேடுகள் கொடுக்கப்பட்டது. ஆனால் தேர்வு நாளில் விறகுவெட்டியின் மகன் தேர்வெழுத மறுத்துவிட்டான் அவன்இவ்விதமாக " "இந்தப் புத்தகத்தில் உள்ள பரீட்சைகள் உண்மையானதாக இருந்து எங்களுடைய மூத்தவர்களைத்தேர்வில் தேர்ச்சி பெற அனுமதிக்கும் போது, நான் அவற்றிற்கு சரியாக பதில் கொடுக்கும் போது நான் ஏன்நேரடியாக டிப்ளமோ பட்டத்தை பெற முடியாது?" என்று கேட்டான். மேலும் எல்லாவித விளக்கத்தை கொடுத்தும்விறகு வெட்டியின் மகனை மகனுக்கு புரிதலை கொடுக்க முடியவில்லை அவனை ஒரு மனநல மருத்துவரிடம்அழைத்துச் செல்லும்படி அவனது தந்தையிடம் கூறப்பட்டது. கேட்ப்பதற்கு காதுள்ளவன், கேட்க்கக்கடவன்!