(2002 டிசம்பர் 1, ஞாயிறு காலை, லோக்காட்ஜ்ரோ, ஆபிட்ஜான்-ஐவரிகோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1இயேசு கிறிஸ்துவின் அடிமையான, நான், காக்குவ் பிலிப்பு, உங்களை ஞானத்தினிடம் அழைத்துக் கொண்டிருக்கிறதை, நான் நிறுத்தப்போவது இல்லை. இஸ்ரவேலர் தீர்க்கதரிசிகளுக்கு எதிராகவும், ரோமாபுரி பரிசுத்தவான்களுக்கு எதிராகவும் செய்த அதே பாவங்களை நீங்களும் செய்யாதீர்கள். என்னை சபிக்கையிலும், ஒரு பிசாசு என்றும் அந்திகிறிஸ்து என்றும் மேலும் எனது பிரசங்கத்தை கொடிய கசப்பான பிரசங்கம் என்று அழைக்கயிலும்... நீங்கள் தேவனுக்கே அதை செய்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
2நானொரு அஞ்ஞானியாக (pagan) இருந்தேன், ஏப்ரல் 24,1993-அன்று ஒரு தரிசனத்தின் மூலம் நான் பணிநியமனம் பெற்றேன், மறு நாள் நான் என் குடும்பத்துடன் அமர்ந்திருந்த வேளையில், முழுவதும் பாலைவனமான ஒரு தேசத்திற்கு தரிசனத்தில் கொண்டு செல்லப்பட்டேன் மேலும் நியாயத்தீர்ப்பை பிரசங்கம் பண்ணும்படிக்கு பொருப்பையும் பெற்றுக்கொண்டேன். நான் முதன்முறையாக சபைக்குச் சென்றது இந்த இரண்டு தரிசனங்களுக்கு பிற்பாடுதான். குறைந்தபட்சம், உங்கள் வேதாகமத்தை எடுத்துக்கொண்டு, நான் என்ன போதிக்கிறேனோ அதனுடன் முரண்பட உங்களால் முடியாதென்றால், அப்பொழுது அமைதியாக இருங்கள்! நீங்களே உங்கள் மேல் சாபங்களை சுமத்திக்கொள்ளக் கூடாது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
3நான் ஒருபோதும் ஒரு குருமார்கள் பள்ளியிலோ, ஏதாவதொரு வேதாகம பயிற்சியிலோ இருந்தது கிடையாது. உங்கள் புத்தக நிலையங்களிலுள்ள கிறிஸ்தவ புத்தகங்களென்று அழைக்கப்படுகிறவைகளை நான் படிப்பது கிடையாது, ஏனென்றால் என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார். தேவன் இராஜாதிபத்தியமுள்ளவராக இருக்கிறார். தாம் விரும்புகிறவனை அவரால் பயன்படுத்த முடியும், நீங்கள் தேவனுடைய பிள்ளையாக இருந்தால், இதை அடையாளம் கண்டுகொள்ள நீங்கள் கடமைப்பட்டவர்களாக இருக்கிறீர்கள். சபையின் துவக்கத்தில், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு இருந்த அப்போஸ்தலர்களையும் சீஷர்களையும் விட்டுவிட்டு, அவர் போய், முழு பூமியிடமும் பேசுவதற்காக கிறிஸ்தவர்களை துன்புறுத்துகிற ஒருவனான தர்சு பட்டணத்தானான சவுலை தேர்ந்தெடுத்தார்.
4மேலும் ஏப்ரல் 24, 1993-அன்று, இந்த அதே தேவன் ஒரு அஞ்ஞானியாக இருந்த என்னை மனிதயினத்தின் இரட்சிப்புக்காக தேர்ந்தெடுத்தார். நீங்கள் தேவனுடைய பிள்ளை என்றால், "தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்யும்." என்றல்லாமல் நீங்கள் எதை சொல்வீர்கள்.
5ஒரு மிருகக்காட்சி சாலை கூட ஒரு நாட்டிற்கு பாவம். ஒரு பூங்கா, சரி! ஆனால் ஒரு மிருகக்காட்சி சாலை ஒரு பாவமாமாக உள்ளது. ஒரு கழுகோ அல்லது ஒரு சிங்கமோ கூண்டில் இருந்தால், அது பாவமாகும்! யாராவது ஒருவர் குரங்கு ஒன்றை வீட்டில் சங்கிலியால் கட்டிவைத்திருப்பதும் அதே காரியமாகத்தான் இருக்கிறது. இது கர்த்தர் உரைக்கிறதாவது: இந்த மிருகஜீவன்களை சுதந்திரமாக விட்டுவிடுங்கள் இல்லையெனில் அது உங்களுக்கு சாபமாக இருக்கிறது.
6மேலும் நாம் காட்டுமிருகங்களைப் பார்க்கிறோம். கொடூரமான மிருகங்கள், முற்காலத்தின் இராட்சதர்களான அவைகள் தங்கள் மேல்கை தசைகளில் (biceps) தேள்களுடனும், பல்லிகளுடனும் மற்றும் பாம்புகளுடனும் நகரங்களை ஆக்கிரமிக்கின்றனர். துளையிடப்பட்ட காதுகளுடனும், கேடான சிகை அலங்காரங்களுடனும் புது மொழிகளுடனும் மனிதர் உள்ளனர், அவர்கள் அனைவரும் பாவத்தின் கனிகள் தான். ஆகையால் அவர்கள் சில உணவகங்களிலும், சந்தைகளிலும், அலுவலகங்களிலும், கார்களிலும், பாழடைந்த வீடுகளிலும், இன்னும் அது போன்றவைகளிலும் இருந்து கர்ப்பந்தரிக்கப்பட்டவர்களும், விபச்சாரம் மாற்றும் வேசித்தனத்தின் கனிகளுமாக உள்ளனர்.
7பரிசம் (dowry) கொடுப்பதற்கு முன் சில பாலியல் உறவுகளை வைத்துக்கொள்வது, அது ஒருவன் தனக்குத்தானே எதிராகவும், அவனது தேசத்திற்கு எதிராகவும், தேவனுக்கு எதிராகவும் புறப்படுவதாக உள்ளது. இவையால் பூமி நிறைந்திருக்கிறது. பல்கலைக்கழக வளாகங்கள் பெரிய அளவில் விபச்சார மையங்களாக இருக்கின்றன.
8பிசாசு பூமியை அவனது ஏதேனாகவும், பெண்ணை அவனது விளம்பரப் பொருளாகவும் உருவாக்கியுள்ளான். பிசாசு அழகுக்கு வேறு இலக்கணங்களை மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறான். ஆயினும் வேதாகமத்தின்படி, அழகின் அடையாளமாக முகம் உள்ளது. ஆதியாகமம் 24:16-ல் ரெபேக்காவின் காரியத்தில், ஆதியாகமம் 12:11-ல் ஆபிரகாமின் மனைவி சாராளின் காரியத்தில், ஆதியாகமம் 29:17-ல் ராகேலின் காரியத்தில், 1 சாமுவேல் 25:3-ல் அபிகாயிலின் காரியத்தில், 2 சாமுவேல் 14:27-ல் தாமாரின் காரியத்தில்... நாம் அதை காண்கிறோம்.
9ஆனால் பிசாசு மற்ற இலக்கணங்களை கண்டுபிடித்திருக்கிறான்: பிட்டம், பின்னர் தொப்புள், பின்னர் உடல்வாகு, பின்னர் முக ஒப்பனை, இன்னும் பல. முக ஒப்பனைகள் தேவனுடைய தெய்வீக பரிபூரணத்திற்கு ஒரு சவாலாக உள்ளது: "தேவன் காரியங்களை இத்தகைய வழியில் தான் செய்ய வேண்டும்" என்று சொல்வதற்கான ஒரு வழி அது. யேசபேலின் முடிவே உங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. உங்கள் கொள்ளு-பாட்டி யேசபேலை நாய்கள் தின்னுவதற்கு ஒரு தெய்வீக கரம் பற்றிப் பிடித்தது. மேலும் அந்த யேசபேலுடன் சம்பவித்தது என்ன? அவளுடைய ஒப்பனைகள் மற்றும் நகப்பூச்சுக்கள் காரணமாக, மண்டை ஓடு, பாதம் மற்றும் உள்ளங்கைகளை நாய்கள் தொடவில்லை. எனக்கு மிகவும் பிரியமான சகோதரிகளே, தேவன் உங்களைப் படைத்தவிதமாகவே அவர் உங்களை பார்க்க விரும்புகிறார். அவ்விதமாகவே இருங்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
10உங்களைத்தான், சபைகளின் சம்மேளனங்களே; உங்களைத்தான், ஆட்டுத்தோல் போர்த்தின மந்திரவாதிகளின் சகோதரத்துவங்களே, இயேசு கிறிஸ்து உங்களைத் தோற்கடித்தார்! நீங்கள் தேவனுடைய மேஜையிலும், ராயனுடைய மேஜையிலும் சாப்பிட விரும்புகிறீர்களா? பட்டயம் உங்களை பட்டப் பகலில் துரத்தும், நரகம் உங்களை ஏற்றுக்கொள்ளும். நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள், நான் இறந்துவிட்டால், தேவன் மற்றோரு காக்குவ் பிலிப்புவை அனுப்புவார்.
11இஸ்ரவேல் ஏசாயாவை துண்டு துண்டாக வெட்டியது ஆனால் எரேமியா என்னும் நபரில் இன்னொரு ஏசாயா வந்தான். நான் இறந்துவிட்டால், உங்கள் மகிழ்ச்சி அடங்குவதற்குள் பூமியிலுள்ள அவரது பிள்ளைகளினிமித்தம் தேவன் மற்றொரு தீர்க்கதரிசியை அனுப்புவார். பூமியின் எதிரி, அது நீங்களே! ஏனெனில் நீங்கள் நிதிப் பேரரசுகளை உருவாக்க முயல்கிறீர்கள், அதனால் தானே நீங்கள் பாவத்திற்கு தடவிக் கொடுக்கிறீர்கள்? தேவன் உங்களை அழித்துவிடுவார் என்பதையும் நரகம் உங்களைப் ஏற்றுக்கொள்ளும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! ... உங்களைத்தான், களிமண் பாதங்கள் உள்ள கோலியாத்தே, இந்த செய்தி உங்களைத் தாக்கும். இது முதற்கொண்டு உங்களுக்கு வேதனைகள் ஆரம்பம்!
12உங்களைத்தான்! மாயவித்தைக்காரரே! கொழுத்து புஷ்டியான ஓநாய்களே! பழக்குவிக்கப்பட்ட பாம்புகளே! சாத்தானின் குடியிருப்புகளே, இரட்சிப்பை தேடின அப்பாவி ஜனங்களின் இரத்தத்தை குடித்துவிட்டு, நீங்கள் இன்னும் எவ்வளவு காலம் பூமியில் வாழ்வீர்கள்? நரகமும், அக்கினிக்கடலும், மரித்தவர்களுடைய வாசஸ்தலமும், எப்பொழுதும் உங்களுக்கு விரோதமாகக்: "ஆக்கினை! ஆக்கினை! ஆக்கினை!" என்று அயராமல் கூக்குரலிடுகிறது. ஏன்? ஏனென்றால் நீங்கள் நரகத்தை சுதேசமாகக் கொண்டிருக்கிறீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
13நீங்கள் அரசியலில் தலையிட்டுக் கொண்டு: "நாங்கள் அரசியலில் ஈடுபடுகிறதில்லை!" என்கிறீர்கள். அது, "நான் பன்றி இறைச்சி சாப்பிடமாட்டேன் ஆனால் பன்றிக் குழம்பு குடிப்பேன்" என்று யாரோ ஒருவன் சொல்வதைப் போல் இருக்கிறது.
14ஒவ்வொரு மனிதனும் ஒரு கிரீடத்துடனும், இந்த கிரீடத்தின் மேல், அவனது வாழ்கையில் எதில் வெற்றி சிறந்தான் என்பதும் பொரிக்கப்பட்டு இறக்கிறான்.
15நீங்கள் விதவையையும், அநாதையையும் துன்பப்படுத்தினீர்கள், நீங்கள் அந்நியரை உபத்திரவப்படுத்தினீர்கள், இப்போது நீங்கள் தேவனுடைய தீர்க்கதரிசியையும் துன்புறுத்துகிறீர்கள்? அதே நேரத்தில் நீங்கள் நம்பிக்கையின் (hope) தேசமாகவும், விருந்தோம்பலின் நாடாகவும், உண்மையான சகோதரத்துவத்தின் வீடாகவும் இருக்கிறீர்களா? தேவன் அன்பாக இருக்கிறார் ஆனால் அவர் நீதி மற்றும் நியாயதீர்ப்பின் தேவனாகவும் கூட இருக்கிறார். மரம் எப்பக்கம் சாய்கிறதோ அப்பக்கமே கிடக்கும்!