(புதன்கிழமை செப்டம்பர் 05, 2012 அன்று அபிட்ஜான் - ஐவரி கோஸ்ட் அருகிலுள்ள சிகென்சியில் பிரசங்கம் செய்யப்பட்டது)
1சரி, நான் இன்று காலை கத்தோலிக்க சபை என்ன என்பதைப் பற்றி பேசப் போகிறேன், மேலும் நடுராத்திரி சத்தம் என்பது பிசாசு அழித்த மூல வித்தை மீட்டெடுப்பதாகும் என்பதை நீங்கள் காண்பீர்கள். முதலாவதாக, தலைமுறை தலைமுறையாக, ஆதாமிலிருந்து, இறையாண்மையுள்ள போப்பாண்டவராக இருந்தவர், அதாவது பாலமாக, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மத்தியஸ்தராக இருப்பவர், உயிர் வாழும் தீர்க்கதரிசி செய்தியாளன் என்பது நமக்குத் தெரியும். நோவா முதற்கொண்டு ஒவ்வொரு தீர்க்கதரிசி செய்தியாளனும் அவரவருடைய காலத்தில் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தராக இருந்தனர்.
2முதல் நூற்றாண்டுகளிலிருந்தே, பூமியின் மேல் இரண்டு சத்தியங்கள் அல்லது இரண்டு சபைகள் இருக்க முடியாது என்று கத்தோலிக்க திருச்சபை அறிந்திருந்தது. கத்தோலிக்க திருச்சபை சொல்வதைக் கேளுங்கள், "இரட்சிக்கப்படுவதற்கு, எல்லா மனிதர்களும் உண்மையான திருச்சபையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்அது தான் ரோமன் கத்தோலிக்க திருச்சபை" மேலும் இந்த அறிக்கை இன்றும் ரோமன் கத்தோலிக்க சபையின் முதல் கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகளில் தோன்றுகிறது.
3கத்தோலிக்க திருச்சபை வேதாகமத்தில் இல்லாத புதிய வெளிப்பாடுகளை உருவாக்கியுள்ளது: நினைவுச்சின்னங்கள் மற்றும் தேவதூதர்களின் வழிபாடு, உறுதிப்பூசுதல் என்னும் சடங்குகள், பிராயச்சித்தம் மற்றும் பிறவற்றின் சடங்குகள், வெளிப்படையான பாவ அறிக்கையை செவி வழி பாவ அறிக்கையாக மாற்றுதல், பாவ மன்னிப்பு பெறுபவரின் விருப்பத்திற்கிணங்க தண்டனையில் சலுகை காட்டுதல், போன்ற பல கோட்பாடுகளைக் கொண்டுள்ளன மற்றும் வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையின் அதே மதிப்புடையதாக அந்த கோட்பாடுகளை கொண்டுள்ளது. ஆரம்பத்தில், ரோமன் கத்தோலிக்க சபையானது வேதாகமம் என்று அழைக்கப்படும் ஒரு புத்தகத்தினுள் கடவுளை அடைத்துப் போட மறுத்தது. அந்த காரியத்தை இன்று புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரான்ஹாமிஸ்ட் சபைகள் அறியாமல் இருக்கின்றன.
4கத்தோலிக்க சபையானது நல்ல ஆவியும் சரியான பார்வையும் கொண்டிருந்தது. யூதர்களின் தேவன் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி மூலம் பேசுகிறார் என்பதை அவள் அறிந்திருந்தாள், மேலும் அவள் யாவற்றையும் அமைத்திருந்தாள், ரோமாபுரி போப்பாண்டவர் என்ற நபரில் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியையும் கூட அவள் அமைத்தாள். ஒரே ஒரு விஷயம் மட்டுமே எஞ்சியிருந்தது: அந்த போப்பிடம் தேவன் பேச வேண்டிய காரியம்! இருப்பினும், தேவன் ஒரு தீர்க்கதரிசியிடம் மட்டுமே பேசுகிறார், ஒரு போப்பிடம் அல்ல, ஏனெனில் போப் என்பவர் ஒரு பிரதான ஆசாரியர் மற்றும் தேவன் பிரதான ஆசாரியர்களிடம் பேசுவதில்லை.
5அப்போஸ்தலர்கள், சபை தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள் மற்றும் போதகர்களிடம் தேவன் பேசுவதில்லை. தேவன் பாஸ்டர்களிடம் பேசுவதில்லை, ஆனால் ஒரு அழைப்பு மற்றும் பணி ஆணையைக் கொண்ட ஒரு தீர்க்கதரிசி மூலம் தேவன் பேசுகிறார். ஆனால் ஒரு தலைமுறையில் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனுக்கு மட்டுமே தனது வார்த்தையை வெளிப்படுத்துகிறார் [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. மேலும் கத்தோலிக்கர்கள் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனை உருவாக்க முயன்றனர் ஆனால் அது பலனளிக்கவில்லை. வெளிப்படுத்துதல் 16:13-ல் கள்ள தீர்க்கதரிசி என்று அழைக்கப்படும் ஒரு தீர்க்கதரிசியின் உருவத்தை அவர்கள் வைத்தார்கள். ஆரோனின் பொற்க் கன்றுக்குட்டியைப் போன்ற அனைத்து மனித மகத்துவமும் கொண்ட மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசி.
6ஏன்? ஏனெனில் கத்தோலிக்கர்கள் வேதாகமம் ஒரு சரித்திரம் என்பதை அறிந்திருந்தார்கள், மறைக்கல்வியின் (Catechism) போது சிறு பிள்ளைகள் கற்பிக்கப்பட்டார்கள். அவை அனைத்தும் இன்று கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரான்ஹமிஸ்ட் தேவாலயங்கள் மற்றும் இஸ்லாம் மற்றும் யூத மதங்களில் கற்பிக்கப்படுகிறது. வேதாகமம் இப்போது இஸ்ரவேலின் வரலாறு மற்றும் புவியியல் என்று கத்தோலிக்கர்கள் அறிந்திருந்தனர். அது அதன் காலத்தில் இரட்சித்தது, ஆனால் இன்று அதினால் இனி ஒரு போதும் இரட்சிக்க முடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
7ஒரு நாள், ஒரு பெண் எனக்கு எழுதினார், "தீர்க்கதரிசி காக்குவ், பரிசுத்த வேதாகமம் அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னதுதான் உங்களுடன் என்னை அதிர்ச்சியடைய செய்கிறது!" நான் அவர்களிடத்தில் சொன்னேன், "அன்புள்ள மேடம், சினாட்டிகஸ் பழங்கால வேத நூல்களின் கையெழுத்துச் சுவடி (Sinaïticus Codex) மற்றும் அலெக்ஸாண்ட்ரினஸ் பழங்கால வேத நூல்களின் கையெழுத்துச் சுவடி (Alexandrinus Codex) வேதாகமத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளும் டார்பி உட்பட, தொடரும் இரண்டு கையெழுத்து சுவடிகளும் லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளன: லண்டனின் பிரிட்டிஷ் அருங்காட்சியகம். தேவன் அவற்றை அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார் ஏனெனில் அவைகளின் நேரம் ஏற்கனவே கடந்துவிட்டது. பொதுவாக, அவைகள் அங்கேயே இருந்திருக்க வேண்டும், நீங்கள் வேதாகமத்தின் மேல் உங்கள் அடிப்படை நம்பிக்கையை வைத்து ஒருபோதும் இரட்சிப்படைய முடியாது." அவள், "ஓ தீர்க்கதரிசியே, இதைக் கேட்க என் இதயத்தில் இரத்தம் கசிகிறது" என்றாள். நான் அவளிடம் சொன்னேன், "இருப்பினும் அதுதான், வேதாகமத்தின் அசலானது அருங்காட்சியகத்தில் உள்ளது. உங்கள் பாஸ்டர் தான் உங்களுக்கு சத்தியத்தை சொல்லவில்லை ஏனெனில் அவர் தாமே இருளில் இருக்கிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா?
8“பேதுருவே, இந்தப் பாறையின் மீது நான் என் தேவாலயத்தைக் கட்டுவேன்" என்று இயேசு சொன்னபோது, அவர் தீர்க்கதரிசன வெளிப்பாடுகளைப் பற்றி பேசுகிறார் என்பதை கத்தோலிக்கர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அதுதான் சரியான உண்மை! அந்த முதல் கத்தோலிக்கர்கள் விஷயத்தை அறிந்தனர், அதனால் தான் அவர்கள் புதிய வெளிப்பாடுகளை உருவாக்கத் தொடங்கினர், நித்தியஜீவனை பெறுவதற்கு ஒருவன் அதில் விசுவாசம் கொள்ள வேண்டும். அவர்கள் அந்த புதிய வெளிப்பாடுகளை "கோட்பாடுகள் அல்லது நம்பிக்கைகள்" என அழைத்தனர் மேலும் அந்த கோட்பாடுகள் வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையின் அதே மதிப்பைக் கொண்டிருந்தன, மேலும் அது இப்படியாக அறிவிக்கப்பட்டது: "ஒரு கோட்பாட்டை மறுப்பது என்பது கிறிஸ்துவையே மறுப்பது போன்றது"..
9தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் மற்றும் இஸ்ரவேலின் நாளாகமம் புத்தகங்கள் வேதாகமம் என்ற ஒரே ஒரு புத்தகத்தில் சேகரிக்கப்பட்டதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே கத்தோலிக்க மதம் பிறந்தது. அந்த சமயத்தில், கத்தோலிக்கர்கள் கிறிஸ்தவத்தின் உண்மையான அஸ்திவாரங்களை அறிந்தனர், மேலும் அவர்கள் அந்த அஸ்திவாரங்களின் மேல் கட்ட முயன்றனர்.
10ஆரம்பத்தில், கத்தோலிக்கர்கள் இயேசுவை உருவகப்படுத்துவதை கூட நம்பவில்லை. முதல் கத்தோலிக்கர்கள் 692 ஆம் ஆண்டு கான்ஸ்டான்டினோபிள் கவுன்சில் வரை இயேசுவின் உருவத்தை தடை செய்தனர். இயேசுவை தரிசனத்தில் பார்த்ததாகக் கூறும் ஒருவருடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். நான் அவரிடம் சொன்னேன்: "ஆனால் நீங்கள் பார்த்தவர் இயேசு என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?" மேலும் அவர், "ஏற்கனவே இயேசுவின் சில புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன்" என்றார். யெகோவாவின் சாட்சிகளும் சபைகளும் பூமிக்கு செய்த எல்லா தீமைகளையும் நீங்கள் பார்க்கிறீர்களா?
11நீங்கள் பார்க்கிறீர்களா? கிறிஸ்தவம் ஒரு தொடர்ச்சி மற்றும் ஜீவன் என்பதை ரோம் பேரரசர்கள் அறிந்திருந்தனர். கத்தோலிக்க மதம் உண்மையான திருச்சபையை அழித்துவிட்டது மற்றும் முழு பூமியின் மேல் தன்னைத் திணித்தது. மேலும் கிறிஸ்தவத்தை நிலைநிறுத்த, அவர் கிறிஸ்தவத்தின் ஒவ்வொரு குணாதிசயத்தையும் புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார், மேலும் முழு உலகமும் முதலில் எதிர்பார்த்தது ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனை தான். யூத மதமாக இருந்தாலும் கிறித்தவமாக இருந்தாலும், அது ஒரு பொருளும் அதன் நிழலும் போல ஒரே அடித்தளமாக இருந்தது. ஒரே ஒரு அடித்தளம், அது அவருடைய தீர்க்கதரிசிகள் மூலமான தேவனுக்குள் விசுவாசம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
12கத்தோலிக்க சபை ஏற்கனவே பூமியின் குடிகள் மீது ஆன்மீக மற்றும் தற்காலிக ராஜபதவியைக் கொண்டிருந்த ரோம் பேரரசன் என்ற நபருக்குள் தீர்க்கதரிசியின் பிம்பத்தைக் கொடுத்தது. எனவே, கத்தோலிக்க சபை ஒரு தவறிழைக்காத தீர்க்கதரிசியுடன் தொடங்கியது. கத்தோலிக்கர்கள் தங்கள் கோட்பாடுகளை தீர்க்கதரிசன வெளிப்பாடுகளின் தரத்திற்கு உயர்த்தினர். நீங்கள் பார்க்கிறீர்களா? உண்மையான திருச்சபையின் தலைவர் ஒரு தவறிழைக்காத தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும் என்று கத்தோலிக்கர்கள் அறிந்திருந்தனர். மேலும் அவர்கள் ரோமின் போப்பிற்கு தவறிழைக்காத தன்மையைக் கொடுத்தனர். ஆனாலும், அது, புராட்டஸ்டன்ட்டுகளுக்கும், சுவிசேஷகர்களுக்கும், பிரான்ஹாமிஸ்டுகளுக்கும் தெரியாது, அறியவும் மாட்டார்கள். அடிப்படையில், அனைத்து கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரான்ஹாமிஸ்ட் சபைகளும் பிசாசிடமிருந்து வந்தவை என்பதை நாம் அறிவோம், ஆனால் ஆரம்பத்தில் கத்தோலிக்க சபை சத்தியத்திற்கு நெருக்கமாக இருந்தது. ஒரு புராட்டஸ்டன்ட் சபையினன், சுவிசேஷக சபையினன் அல்லது பிரான்ஹாமிஸ்ட்டை விட கத்தோலிக்கர்கள் சத்தியத்திற்கு நெருக்கமானவர்கள்..
13மேலும் போப் வெளிப்படுத்திய வார்த்தைகள் வேதாகமத்தின் வார்த்தைகளுக்கு இணையான மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக, போப் பிழையாத்தன்மை முத்திரையைப் பெற்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, சாதாரண மனிதர்களைப் போல் போப் தவறுகளைச் செய்ய முடியும் என்பதை அனைவரும் உணர்ந்தனர். எனவே, அவர் அவ்விதமான நபர் இல்லை என்றாலும் பிழையானது அவருக்கு விதிவிலக்காக வழங்கப்பட வேண்டும் என்று ஒரு ஆலோசனை சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது. "இயேசு கிறிஸ்து பேதுருவுக்கும் அவருடைய வாரிசுகளான போப்புக்களுக்கும் பிழையாத்தன்மை சிறப்புரிமையை வழங்கினார்" என்று கோட்பாடு கூறுகிறது.
14மேலும் கத்தோலிக்க சபை பிழையின்மை தன்மையையும், புனித தீர்க்கதரிசிகளுக்கு இருந்த அனைத்து அதிகாரங்களையும் ரோம் போப்பிற்கு வழங்கியது. மேலும் ஒரு கத்தோலிக்கக் கோட்பாடு இப்படியாக கூறுகிறது, "ஒரு கோட்பாட்டை மறுப்பது என்பது கிறிஸ்துவையே மறுப்பது போன்றது". நீங்கள் பார்க்கிறீர்களா? அவை அனைத்தும் அதன் வடிவத்தில் சரியானவை! உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளரின் வார்த்தையை நிராகரிப்பது இயேசு கிறிஸ்துவையே நிராகரிப்பதாகும்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
15உயிர்வாழும் தீர்க்கதரிசியால் வழிநடத்தப்பட்ட உண்மையான திருச்சபையைத் தவிர, பரலோக ராஜ்யத்தைப் பற்றி பேசும் ஒரே சபை மற்றும் பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்கள் இன்னும் பூமியில் இருப்பதைப் பற்றி பேசும் ஒரே சபை ரோமன் கத்தோலிக்க சபை மட்டுமே. வத்திக்கானில் உள்ள அனைத்து பேதுருவின் சிலைகளும் சில சாவிகளை வைத்திருப்பதைக் காட்டுகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து போதுருவுக்குக் கொடுத்த அதே சாவியின் ஒரு கொத்தை ரோமின் போப்புகளின் கையில் வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஏனென்றால் பரலோகராஜ்யத்தின் திறவுகோல்கள் பூமியில் ஒரு மனிதனுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த சபை அறிந்திருக்கிறது. நீங்கள் பார்க்கிறீர்களா?
16கத்தோலிக்க சபையின் தொடக்கத்தின் ஒவ்வொரு நம்பிக்கையிலும் கவனம் செலுத்துங்கள் அது உண்மையான காரியத்தை முயற்சித்ததை நீங்கள் காண்பீர்கள்! இன்று, பிரான்ஹாமிஸ்டுகள் உட்பட, அனைத்து சபைகளிலும், கத்தோலிக்க சபை சத்தியத்தின் அடித்தளங்களுக்கு மிக நெருக்கமானது. இறையாண்மையில், இந்த தீர்க்கதரிசி செய்தியாளரை கத்தோலிக்க சபையிலிருந்து தேவன் எழுப்ப முடியும் என்பதை அவர்கள் வெறுமனே ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை..
17ஞாயிற்றுக்கிழமை காலைகளில், கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரான்ஹாமிஸ்டுகளே, உங்களை தான் நீங்கள் கடவுளுடைய வார்த்தையல்லாததைக் கேட்பதில் உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்கள், அதுவே உங்களை கடவுளிடமிருந்து விலக்குகிறது. யூத பாதிரியார்களும் ரபீக்களும் ஜெப ஆலயங்களில் பொய்களைப் பிரசங்கிப்பதில் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். அவர்கள் சொன்னார்கள், "நீங்கள் பார்க்கும் ரோமானிய வீரர்களை நீங்கள் இனி பார்க்க மாட்டீர்கள். மோசே பார்வோனின் வீரர்களுக்கு காட்டியதை, மேசியா ரோமானிய வீரர்களுக்கு காட்டுவதை ஒப்பிட முடியாது...". "மெசியா இதைச் செய்வார், மேசியா அதைச் செய்வார்" என்று அவர்கள் கூறினர், யூதர்கள் அவர்கள் தீர்க்கதரிசி செய்தியாளர்கள் அல்ல என்று நம்பினர்.
18யூதர்களின் பிசாசு அவர்களின் சொந்த ரபீக்கள் தான். அவர்கள் யூதர்களை சத்தியத்திலிருந்து வெகுதூரம் அழைத்துச் சென்றார்கள், அதனால்தான் யூதர்கள் மேசியாவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைத்தான் பிசாசு எப்போதும் தலைமுறை தலைமுறையாக செய்து வந்திருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
19கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட்டு, சுவிசேஷக மற்றும் பிரான்ஹாமிஸ்ட் சபைகளின் பிசாசு அவர்களுடைய ஆசாரியர்கள், பாஸ்டர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் தான். அவர்கள் நடுராத்திரி சத்தத்தைப் புறக்கணிக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் நான் இருக்கிறேன் என்று அவர்களுக்குத் தெரியும், நான் அவர்களுடைய காலணிகளில் உள்ள மண் துகள்கள் . நீங்கள் பார்க்கிறீர்களா? கத்தோலிக்கர்கள் புனித வேதாகமம் என்ற புத்தகத்தினுள் கடவுளைப் அடைத்துப் போட மறுத்துவிட்டனர், அவர்கள் புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷ சபைகள் மற்றும் பிரான்ஹாமிஸ்டுகளுடன் ஒப்பிடும்போது தீர்க்கதரிசி செய்தியாளனை பற்றிய ஒரு பெரிய கருத்தை கொண்டிருந்தனர். மேலும், "வில்லியம் பிரான்ஹாம் தான் கடைசி தீர்க்கதரிசி" என்கிறார்கள்! அதே வேளையில் அவருடைய பிரசங்கம்: தெய்வீக குணப்படுத்துதலில், 233 பத்தியில் வில்லியம் பிரன்ஹாம் கூறுகிறார்: "... நான் இன்னொரு தலைமுறையில் நிற்க மாட்டேன். அவர்களை நியாயந்தீர்க்க என்னிடம் எதுவும் இருக்காது. நான் அவர்களுடன் நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டியதில்லை. ஆனால், நான் வாழ்ந்த ஆண்களோடும் பெண்களோடும் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்வேன், அதுவே உயிர்த்தெழுதலில் கணக்கிடப்படும், என்னுடைய நாட்கள் முடிந்து, என்னால் முடிந்ததைச் செய்தபின், நான் தேவனுடைய ஊழியனானால், நான் இல்லாத அந்நாளில் தேவன் அவனை, வேறொரு மனிதனாக எழுப்புவார்." இவ்வாறு வில்லியம் பிரான்ஹாம் பேசினார். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்" என்கிறார்கள்].
20ஒரு உண்மையான தீர்க்கதரிசி தனக்குப் பிறகு இனி ஒரு தீர்க்கதரிசி வரமாட்டார் என்று சொல்ல முடியாது. ஒருபோதும் முடியாது! அது சாத்தியப்படாது. தேவன் இறையாண்மையுள்ளவர், அவர் பூமியில் எத்தனை தீர்க்கதரிசிகளை அனுப்புவார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். எந்த ஒரு தீர்க்கதரிசியும் அவர் தான் கடைசி தீர்க்கதரிசி என்று கூறினால், அவர் ஒரு கள்ள தீர்க்கதரிசி என்று சொல்ல இதுவே போதுமானது. மேலும் இது முழுமையான சத்தியம்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
21முடிப்பதற்கு, ஆகஸ்ட் 7 முதல், என் அம்மா கடந்து விட்டார். முதலாவதாக, 1993 இல், வேலையுடன் ஒப்பிடும்போது, கடவுளுடைய வார்த்தைக்காக நான் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தேன் என்ற உண்மையை அவள் எதிர்த்தாள், குறிப்பாக வேதாகமத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் என் மாமா ஒரு போலீஸ் அதிகாரியின் பணியை நான் மறுத்தபோது. பின்னர், 2002 முதல், நான் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தபோது, அது பரவுவதைப் பார்த்து, அவள் அமைதியாக இருந்தாள்.
22மேலும் தன் வாழ்நாளின் முடிவில், அவள் மேரியின் சிலைகள் மற்றும் ஜெபமாலைகள் மற்றும் சிலுவைகள் மற்றும் பிற சிலைகளை எடுத்து, அவற்றை குப்பைத் தொட்டியில் வீசச் சென்றாள். நான் அதையெல்லாம் பார்த்தேன், ஆனால் அது என்னை திசைதிருப்ப முடியாது என்றும் அது அவளுக்கும் அவள் இதயத்தைப் பார்க்கும் கடவுளுக்கும் இடையில் இருப்பதாகவும் அவளிடம் சொன்னேன். அவள் இறக்கும் வரை அவள் மீண்டும் கத்தோலிக்க சபைக்குச் செல்லவில்லை அல்லது கத்தோலிக்கப் பாதிரியாருடன் தொடர்பு கொள்ளவில்லை. அவள் என்னுடைய கூட்டத்தில் இருக்கிறாளா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் தேவன் அறிவார்.