



Kacou 111 (Kc.111) : : மீட்டளிப்பின் தேவன்
(அக்டோபர் மாதம் 21, 2012 ஞாயிற்றுக்கிழமை அன்று அட்ஜமே, அபிட்ஜானில் பிரசங்கிக்கப்பட்டது)
1 தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் பூமியின் எல்லா மூலைகளிலிருந்தும், தொலைதூர அமெரிக்காவின் குக்கிராமங்களிலிருந்தும் வருகிறார்கள், ஏனெனில் இரட்சிப்பு ஆப்பிரிக்காவில் இருக்கும் படியாக நகர்ந்து விட்டது, யோர்தானுக்கும் அப்படியேத்தான்! இந்த அடையாளத்தையும் இந்த களிகூறுதலையும் நீங்கள் பார்த்து, நடுராத்திரி சத்தத்தை பற்றி புரிந்து கொள்ளாததினால், உங்களை எண்ணி அழுங்கள், அதற்க்கான காரணம் உங்களுக்குப் புரிந்துகொள்ளக்கூடிய புத்திக்கூர்மை இல்லை என்பதல்ல, ஆனால் அது உலகத்திற்க்கு அஸ்திபாரம் இடுவதற்க்கு முன்பே உங்களுக்கு பரத்திலிருந்து கொடுக்கப்படவில்லை என்பதுதான்! [ ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள் ].
2 நீங்கள் வேதாகமத்தை மனப்பாடமாக அறிந்திருக்கலாம், வில்லியம் பிரான்ஹாமின் புத்தகங்களை மனப்பாடமாக அறிந்திருக்கலாம், ஆனால் நீங்கள் யெகோவாவை அறியவில்லை என்று வேதாகமம் கூறுகிறது. அது நியாயாதிபதிகள் புத்தகம் 2 வசனம் 10 இல் எழுதப்பட்டுள்ளது. எழுதப்பட்டுள்ளது. இஸ்ரவேலின் ஒவ்வொரு கிளர்ச்சியிலும், நாடு கடத்தப்பட்ட போதும், மோசே மற்றும் தீர்க்கதரிசிகளின் சுருள்கள் அங்கே இருந்தன! ஒவ்வொரு முறையும் இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளை நிராகரித்த அல்லது கொன்றபோது, மோசே மற்றும் தீர்க்கதரிசிகளின் சுருள்கள் அங்கே இருந்தன!
3 ஒவ்வொரு முறை இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளை நிராகரித்து கொலை செய்யும் போது மோசே மற்றும் தீர்க்கதரிசிகளின் சுருள்கள் அங்கே இருந்தன! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இஸ்ரவேல் நிராகரித்து சிலுவையில் அறைந்தபோது, மோசே மற்றும் தீர்க்கதரிசிகளின் சுருள்கள் அங்கே இருந்தன! ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசி மட்டுமே தேவனை தன் தலைமுறைக்கு தெரியப்படுத்துகிறார். ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி மட்டுமே தேவனுடைய பரிபூரண சித்தத்திற்கு உங்களை வழிநடத்த முடியும். பைபிள் வெறுமனே மனிதர்களை பிரித்தது. நீங்கள் பார்க்கிறீர்களா?
4 தீர்க்கதரிசிகளின் அனைத்து புத்தகங்களையும் ஒரே ஒரு புத்தகத்தில் சேகரிக்க விரும்பிய யூசிபியஸ் உள்நோக்கத்துடன் தீமை செய்ய வேண்டும் என எண்ணவில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அது ஆரோனின் தங்கக் கன்றுக்குட்டியைப் போலவே தவறாக வழிநடத்தும் கருவியாகிவிட்டது. தங்கம் தெய்வீகதன்மையானது, ஆனால் மனித இனத்தின் பலிக்காகவும் பாவநிவாரணத்திற்காகவும் தேவனின் ஆட்டுக்குட்டியாக இருக்க வேண்டியதை ஆரோன் அதை ஒரு தங்கக் கன்றுக்குட்டியில் ஒன்றாகச் சேர்த்தபோது, அது ஒரு தீய காரியமாக மாறியது! ஆரோனின் பொற் கன்றுக்குட்டி தான் இன்று வேதாகமம் வரை உள்ள மரித்த தீர்க்கதரிசிகளின் சுருள்கள்.
5 இரட்சகராகிய மோசே நாற்பது பகலும் நாற்பது இரவுகளும் தேவனின் வலது பக்கத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ஆரோன் ஒரு தீர்க்கதரிசியாக வேதாகமத்தை வெளிப்பாடாக கொண்டிருந்தான். மேலும் இன்று, வேதாகமம் ஆராய்ச்சிகள் மற்றும் ஆவணங்களுக்கான வெறும் வரலாற்று புத்தகமாக இல்லாமல் நித்திய ஜீவனை அளிக்கக்கூடியதாக கருதப்படுகிறது. பிசாசுதான் அதைச் செய்தான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
6 மோசேயின் காலத்தில், பரிசுத்த ஆவி என்பது மோசேயின் மீது இருந்த ஆவியாகும். எலியாவின் காலத்தில், பரிசுத்த ஆவி என்பது எலியா தீர்க்கதரிசியின் மீது இருந்த ஆவியாகும். பிரான்ஹாமின் காலத்தில், பரிசுத்த ஆவி என்பது வில்லியம் பிரான்ஹாம் மீது இருந்த ஆவி தான், வில்லியம் பிரான்ஹாம் தாமே அதை அறியாதிருந்தார். தேவன் மோசேயின் மேல் இருந்த ஆவியை எடுத்து எழுபது மூப்பர்கள் மீது வைத்தார். தேவன் எலியாவின் மீது இருந்த ஆவியை எடுத்து எலிசா மீது வைத்தார். தேவன் இயேசுவின் மேல் இருந்த ஆவியை எடுத்து, மேல் அறையில் இருந்த நூற்றி இருபது பேர் மீது பரப்பினார்.
7 ஒரு பிசாசின் புத்திரன் உங்களிடம்: "ஆனால் இது ஏன் அப்படி..." என்று சொன்னால், அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்! ஒரு தீர்க்கதரிசியிடம் தான் தேவனுடைய வார்த்தை வருகிறது. நோவாவின் காலத்தில், பரிசுத்த ஆவி என்பது நோவாவின் மீது இருந்த ஆவி தான். இன்று, பரிசுத்த ஆவி என்பது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவிற்கு தீர்க்கதரிசியின் மீது இருக்கும் ஆவியாகும். [ ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என கூறுகிறார்கள்].
8 தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு கூறுவதற்கு எதிரொலியாக நீங்கள் இல்லாமல் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது. ஏப்ரல் 24, 1993 அன்று தூதன் மற்றும் ஆட்டுக்குட்டியிடம் இருந்து நான் பெற்ற பரலோக ஆணையின் வல்லமையால் தான் நான் இவற்றைச் சொல்கிறேன். மேலும் வானமும் பூமியும் இதை பொய்யாக்க முடியாது. இந்த நூற்றாண்டிலும் முடியாது அல்லது வரும் நூற்றாண்டிலும் முடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
9 அவர்கள் வெவ்வேறு பரிசுத்த ஆவிகளைக் கொண்டிருக்கிறார்கள், அதனால்தான் அவர்களுடைய செய்பாடுகள் வித்தியாசமாக இருக்கின்றன. தீர்க்கதரிசி சேக்பா பற்றி சமீபத்தில் செய்தித்தாள்கள் என்ன வெளியிட்டதை என்பதை நீங்கள் பார்த்தீர்கள். அவர் இப்போது தனது விசுவாசிகளுடன் சில இராணுவ நடவடிக்கைகளுக்கு கட்டளையிடுகிறார். கானாவின் எல்லையில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், அவருடைய விசுவாசிகள் மீண்டும் கொல்லப்பட்டனர், அவர்களில் அவரது சபை போதகரான ஜாஹா அரிஸ்டைட் கொல்லப்பட்டார்.
10 சகோதர சகோதரிகளே, குடிமக்களாக வாக்களிப்பது மட்டுமே நமக்கு இருக்கும் உரிமை. அதைத் தவிர அரசியலுக்கு நமக்கும் செய்வதற்க்கென்று எதுவுமில்லை. நம்முடைய ஆத்துமாக்களின் இரட்சிப்புதான் நம்முடைய நோக்கம், நீங்கள் என் வார்த்தையைக் கடைப்பிடித்தால், இந்த கனமான உடல் ஒரு நாள் எடுக்கப்பட்ட மண்ணிற்க்கே திரும்பும்போது, நித்திய ஆனந்தத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்! அவருடைய பெயரை ஆசீர்வதித்து, அவரை மகிமை படுத்துங்கள், மகிழ்ச்சியாக இருங்கள், ஏனென்றால் உங்கள் தலைமுறையில் மனிதர்களிடையே பூமியில் மிகவும் மகிமையான நாட்களை நீங்கள் வாழ்ந்தீர்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
11 இப்போது, அதற்காகத்தான் அந்த கருப்பு கன்னிகையை எதிர்பார்க்கிறேன். அவள் எப்போது அல்லது எங்கிருந்து வருவாள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் என்னை அனுப்பிய மீட்டளிப்பின் தேவன் அவளை அனுப்புவார் என்று நான் விசுவாசம் கொண்டிருக்கிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
12 இப்போது, நான் ஒரு கேள்விக்கு பதிலளிக்கப் போகிறேன்: சகோதரர் பிலிப்பு, 1993 இல் இயேசுவின் வருகையானது வேதாகமம் பேசும் இரண்டாவது வருகையா? இல்லை சகோதரரே! முதலாவதாக, முதல் வருகை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அது நேசங்களுக்கும் யூதர்களுக்குமாக இருந்தது. அது மனிதகுலத்தின் மீட்பிற்காக இருந்தது. தேசங்கள் எதிர்பார்க்கும் இரண்டாவது வருகையானது, மீட்கப்பட்ட மணவாட்டியின் எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக இருக்கும். அதற்குப் பிறகுதான், ஆதியாகமம் 45 மற்றும் வெளிப்படுத்துதல் 11:3 முதல் 11 இன்படி யூதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்துகிறார். ஆனால் தேசங்களுக்கான இந்த இரண்டாவது வருகைக்கு முன், திட்டமிடப்படாத இரண்டு இரகசிய வருகைகள் உள்ளன: ஒன்று ஏழு முத்திரைகளை உடைத்து வெளிப்படுத்துவது, மற்றொன்று ஏழாவது முத்திரையில் உள்ள அறியாத மொழியை வெளிப்படுத்துவது. நீங்கள் பார்க்கிறீர்களா?
13 வேதாகமம் கூறும்போது: "ஆட்டுக்குட்டியானவர் முதலாவது முத்திரையைத் திறந்தபோது... ஆட்டுக்குட்டியானவர் இரண்டாவது முத்திரையைத் திறந்தபோது... ஆட்டுக்குட்டியானவர் மூன்றாம் முத்திரையைத் திறந்தபோது...", அது உண்மையில் கர்த்தராகிய இயேசு-கிறிஸ்து தான். அதே ஆட்டுக்குட்டிதான் ஏப்ரல் 24, 1993 அன்று அறியாத மொழியின் வெளிப்பாட்டிற்காக மீண்டும் இறங்கியது. ஆனால் அந்த இரண்டு வருகைகளைப் பற்றி வேதாகமம் பேசவில்லை, ஏனெனில் அவை திட்டமிடப்படவில்லை. "புத்தகத்தைத் திறக்கவும், அதன் முத்திரைகளை உடைக்கவும் யார் தகுதியானவர்?" என்று சத்தம் கூறியபோது, ஒரு தூதனோ அல்லது ஒரு மனிதனோ தகுதியானவராக இருந்திருந்தால், இந்த இரண்டு இரகசிய வருகைகள் இருந்திருக்காது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
14 சரி, இன்று காலை என்னுடைய பொருளுக்கு வருகிறேன். இன்று காலை உங்களுக்கு சில காரியத்தை கூற சொல்ல விரும்புகிறேன். என் வாழ்நாளில், என் சிறுவயது முதல், நான் ஒருபோதும் காவல்துறைக்கோ அல்லது எந்த அதிகார வரம்புக்கோ வரவழைக்கப்பட்டதில்லை, அது தேவனுடைய வார்த்தைக்கு தவிர நான் அதை விரும்பவில்லை.
15 மக்கள் என்னைப் பலமுறை புண்படுத்தினார்கள், ஆனால் நான் யாரையும் புண்படுத்தாமல் இருக்க முயற்சி செய்தேன், யாரோ ஒருவர் என் கால்விரலை மிதித்தபோதும், நான் என் இதயத்தில் சொன்னேன்: தேவனே, பூமியில் நீர் என்னை உயர்த்தும், ஆக இந்த ஆணோ அல்லது பெண்ணோ என் கால் விரலை மிதிக்க அஞ்சுவார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? நீங்கள் என்னைப் பின்பற்ற விரும்பினால் அல்லது என்னைப் பின்பற்றுபவர்களாக இருக்க விரும்பினால், இது தான் ஆரம்பம். சபிக்கவோ அல்லது உங்களை நியாயப்படுத்தவோ வேண்டாம் என்று உங்களை கட்டாயப்படுத்திக் கொள்ளுங்கள்.
16 ஆரம்பம் முதல் தீர்க்கதரிசிகளின் காலம் வரை காவல் துறை இருந்தது இல்லை. நீங்கள் மோசமாக செயல்பட்டபோது, நீங்கள் வெறுமனே சபிக்கப்பட்டீர்கள். இன்றும், என்னைப் போன்ற பலர் சாபத்தை காவல்துறையுடன் ஒப்பிட முடியாது என்று நினைக்கிறார்கள். காவல்துறையை விட சாபம் பெரிது.
17 நான் உங்களை நீதிமன்றத்திற்கோ அல்லது காவல்துறைக்கோ அனுப்பினால், எனக்கு நீதி செய்ய மனிதர்களின் அதிகார வரம்பை நான் தேர்ந்தெடுத்துள்ளேன் என்று அர்த்தம்; ஆனால் மனிதர்களின் அதிகார வரம்பு சீர்கெட்டதாக இருக்கலாம், ஆனால் தெய்வீக அதிகார வரம்பு சீர்கெட்டதாக இருக்க முடியாது, நான் சொல்வது சரி என்று நிரூபிக்கப்பட்டவுடன் அதைச் செயல்படுத்த தேவன் அல்லது பிசாசிடமிருந்து கோடிக் கணக்கான தேவதூதர்கள் தயாராக உள்ளனர். நீங்கள் பார்க்கிறீர்களா? அந்த சாபம் உங்கள் மீதும், உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் குழந்தைகளின் குழந்தைகளின் மீதும் சுமத்தப்படும், ஏனென்றால் உங்களை சபிப்பதன் மூலம், உங்கள் கூரையின் கீழ் இருக்கும் அனைத்து குழந்தைகளையும், உங்களுடைய அறையில் உள்ளவர்களையும் கூட நான் சபிக்கிறேன். மனித அதிகார வரம்பு இல்லாமல், சபிப்பதில் மட்டுமே நாம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், பூமியில் தீய விஷயங்கள் குறைவாக இருக்கும். ஆனால் நான் சொன்னது போல்: யாராவது உங்களுக்குத் தீமை செய்ய முடியும், நீங்கள் வெறுமனே சொல்வீர்கள்: தேவனே, பூமியில் நீர் என்னை உயர்த்தும் ஆக இந்த ஆணோ அல்லது பெண்ணோ என் கால் விரலை மிதிக்க அஞ்சுவார்கள். அப்போது தேவன் அவருடைய தீமையை உங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றுவார்.
18 என் தகப்பனும் என் தாயும் எங்களை ஒருபோதும் சபித்ததில்லை. என் தாய் தன் குழந்தைகளில் ஒருவரையும் ஒருபோதும் சபித்ததில்லை. மேலும் எனது தந்தை தனது மூத்த பிள்ளையை தவிர பிள்ளைகளில் ஒருவரைக் கூட ஒருபோதும் சபித்ததில்லை, அதே மூத்த மகன் தன்னை அவரை அடித்து கழுத்தில் கயிற்றால் மிருகம் போல் நடத்தினான். மேலும் அவன் மீதும் அவன் வீட்டார் மீதும் சுமத்தப்பட்ட சாபம் மிகவும் கனமானது. என் பெற்றோர் இருவரும் நல்ல மனிதர்கள். இப்படிப்பட்ட பெற்றோரைப் பெறுவதற்கு எல்லோருக்கும் கிருபை கிடைத்திருக்காது.
19 பெண்களே, நீங்கள் உங்கள் சொந்தக் குழந்தையை அனுப்பியதற்காகவும், அவர் செல்ல மறுத்ததற்காகவும் உங்கள் சொந்தக் குழந்தையையும் அவன் சந்திதையும் எப்படி சபிப்பீர்கள்? நீங்கள் ஏதாவது செய்யச் சொல்லி, அவர் அதை செய்ய மறுத்ததால், உங்கள் சொந்த குழந்தையை எப்படி சபிக்க முடியும்? நீங்கள் பார்க்கிறீர்களா? இது சூனியமாக இருக்கிறது! மேலும் அவன் குழந்தையாக இருந்தபோது உங்கள் மீது சிறுநீர் மலம் கழித்தற்க்கு அவனை ஏன் கொல்லவில்லை? நீங்கள் சொல்கிறீர்கள்: "நீ எனக்கு என்ன செய்கிறாயோ, உன் குழந்தை அதை உனக்கு செய்யும்!" நீ ஒரு சூனியக்காரி! நீ உன் மகளையும் அவள் சந்ததியையும் சபித்து அழித்து பிறகு அவளுக்கு திருமணம் செய்து கொடுப்பாய்!
20 நீங்கள் உங்கள் சொந்தக் குழந்தைகளை சபித்து, அவர்கள் பள்ளியில் வெற்றிபெற வேண்டும் அல்லது அவர்கள் பூமியில் ஏதாவது ஆகிவிட வேண்டும் என்று காத்திருக்கிறீர்கள். உங்கள் கோபம் எதுவாக இருந்தாலும், உங்கள் குழந்தை மீது சாப வார்த்தைகளை உச்சரிக்க கூடாது. அது தேவன் மீதான பொறுப்பு, உங்களுக்கு அந்த உரிமை இல்லை! அவர் தவறாக செயல்பட்டாலும் உங்களுக்கு அந்த உரிமை இல்லை! நீங்கள் இவ்வாறு நடந்துகொண்டு பூமியை அழிக்க பல குழந்தைகளை உருவாக்குகிறீர்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? உங்கள் பிள்ளையின் மீது உங்கள் வாயிலிருந்து ஒரு போதும் சாபம் வரக்கூடாது. அதை ஒருபோதும் செய்யாதே! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
21 நான் ஆசீர்வதித்து ஆசீர்வதித்துக் கொண்டு மாத்திரமே இருக்கிறேன். நான் ஆசீர்வதித்தேன், ஆசீர்வதிக்கிறேன், தேவன் எனக்குக் கொடுத்தவர்களை நான் எப்போதும் ஆசீர்வதிப்பேன். அவர்கள் பயத்துடன் அவருடைய வார்த்தையைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் சாத்தியமற்றது அவர்களுடைய வாழ்க்கையில் சாத்தியமாகும், அவர்கள் தங்கள் குடும்பத்தில் விதிவிலக்காக இருக்கட்டும். மேலும் அவர்களும் அவர்களது குழந்தைகளும் பூமியில் என்றென்றும் ஜெயம் கொள்ளும்படியாக தேவன் அவர்களுக்கு அருளுவாராக. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
22 இப்போது இதைக் கேளுங்கள், அதைத் தவறவிடாதீர்கள்: கோபத்தால் உந்தப்பட்டு, என் தொலைபேசியை நான் துண்டு துண்டாக உடைக்க முடியும், ஆனால் நான் கோபத்திலிருந்து திரும்பும்போது, அதை என்னால் சரிசெய்ய முடியாது. அதை அழிக்கும் வல்லமை என்னிடம் உள்ளது, ஆனால் அதை மீண்டும் முதல் நிலைக்கு கொண்டு வரவோ, சரி செய்யவோ கூட என்னிடம் வல்லமை இல்லை. கோபத்தால் உந்தப்பட்ட ஒருவன் தன் சக மனிதனைக் கொல்லலாம், ஆனால் அந்த கோபத்திலிருந்து அவன் மீண்டு வரும்போது, அவனுடைய வருத்தத்தில் கூட, அவனால் அந்த சக மனிதனை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது, ஏனென்றால் அவனுக்கு மரித்தவர்களை எழுப்பும் சக்தி இல்லை.
23 கோபத்தால் உந்தப்பட்ட ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தங்கள் மகனையோ அல்லது மகளையோ சபிக்க முடியும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆனால் அந்த சாபத்தை நீக்கும் சக்தி அவருக்கு இல்லை! நீங்கள் சொல்கிறீர்கள்: "ஓ தீர்க்கதரிசியே, நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன், நான் முழங்காலில் விழுந்தேன், அவர் கொஞ்சம் தண்ணீர் ஊற்றினார்..."!
24 இல்லை ஐயா, அது வெறுமனே உங்கள் மனசாட்சியை விடுவித்தது, ஆனால் சாபத்தை நீக்கவில்லை. நான் தேவனுடைய தீர்க்கதரிசி, நான் உங்களுக்கு சரியான சத்தியத்தை கூறுகிறேன்! அது சாத்தியம் என்று நானும் நினைத்தேன், ஆனால் உங்கள் காலத்தின் தீர்க்கதரிசன செய்தியில் நீங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழ் இல்லாமல் அது சாத்தியமில்லை, ஏனென்றால் தேவனுக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது, மேலும் உயிர்வாழும் தீர்க்கதரிசி பூமியில் அவருடைய வாயாக இருக்கிறார்! இது தேவனுடைய பிழையின்மையின் வெளிப்பாடு! கேட்கிறதற்க்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்!