



Kacou 113 (Kc.113) : எளிமையில் இரட்சிப்பு
(ஜனவரி 27 ஞாயிறு காலை அபிட்ஜான் - ஐவரி கோஸ்ட் பகுதியில் உள்ள சிகென்சியில் பிரசங்கிக்கப்பட்டது)
1 … நான் ஒரு கேள்வியுடன் தொடங்குகிறேன்: சகோதரர் பிலிப்பு, வெளிப்படையான பாவ அறிக்கையின் போது, சகோதரிகள் தலையீடு செய்ய முடியுமா? ஆம், சகோதரர்களே, அவர்கள் தங்கள் தலையீடுகளை எழுதலாம், அதை உதவி போதகர் (Deacon) ஜெபத் தலைவரிடம் கொடுப்பார். மேலும் தேவைப்பட்டால், தலைவர் அவர்களுக்கு இடத்தை கொடுப்பார். ஒரு சகோதரி பியானோ, டம்-டாம் வாசிக்கலாம், தேவைப்பட்டால் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றலாம் என்றும் நான் சொல்ல விரும்புகிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென்!, என்கிறார்கள்].
2 நல்லது. ஒரு தரிசனத்தில், வில்லியம் பிரான்ஹாம் முதலில் ஆசியாவின் முழு கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட் மற்றும் சுவிசேஷ சபைகளையும், பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவையும் பார்த்தார், மேலும் அவர் கூறினார்: "ஓ! என்ன ஒரு சீர்கேடு!" மேலும் அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ராக் அன்' ரோலின் தாளத்திற்கு அதற்கு ஏற்றவாறு சுற்றிக் கொண்டு நடக்கிறது என்று கூறினார் ... மேலும் அவர் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சபை வரும்போது, அவள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வெளியே சென்று கீழே மறைந்து போனாள். பின்னர், அவருடைய குழு, அதாவது அவர் பூமியில் உயிருடன் இருந்தபோது அவருடைய செய்தியை விசுவாசித்தவர்கள் வந்து கொண்டிருந்தது, அவர் கூறினார்: "பின்னர் நான் "கிறிஸ்தவ வீரரே யுத்தம் செய்வோர் வாரும்" என்ற மெல்லிசையைக் கேட்டேன். நான் பார்த்தேன், இதோ அந்த புனிதமான சிறுமிகள் கூட்டம். அவர்கள் எப்படி இருந்தார்களோ, அனைவரும் சரியாக உடையணிந்து, அவர்களின் தலைமுடி பின்னால் தொங்கிக்கொண்டிருக்கிறது. மிருதுவாக, சுத்தமாக, இப்படி அணிவகுத்து, நற்செய்தியிக்கு ஏற்ப அடியெடுத்து வைத்தாள், அவள் வார்த்தையாக இருந்தாள். அவர்கள் ஒவ்வொரு தேசத்திலிருந்தும் ஒருவரைப் போல தோற்றமளித்தனர். நான் அவர்கள் கடந்து செல்லும் போது அதையே பார்த்துக் கொண்டிருந்தேன், அவர்கள் கடந்து செல்வதைக் கண்டேன், கீழே செல்வதற்குப் பதிலாக, அவர்கள் மேலே செல்லத் தொடங்கினர்கள், அவர்களில் ஒருவர் முயற்சிப்பதையும், இரண்டு அல்லது மூன்று பேர் முயற்சிப்பதையும், வரிசைக்கு வெளியே வருவதையும் நான் கவனித்தேன். நான் அவர்களிடம் : "வரிசையில் தரித்திருங்கள். "வரிசையில் தரித்திருங்கள்”….. என்று சத்தமிட்டேன். தரிசனம் என்னை விட்டு விலகியது, நான் அறையில் நின்று, “வரிசையில் தரித்திருங்கள்” என்று கத்திக் கொண்டிருந்தேன். நீங்கள் பார்க்கிறீர்ளா?
3 அலெக்சிஸ் பாரிலியர் உடன் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஏவால்ட் ஃபிராங்குடன் ஜெர்மனியைச் சேர்ந்த சிறுமிகள் இந்த வரிசைக் கோட்டை உடைத்தனர். மூன்றாவது அமெரிக்காவைச் சேர்ந்தது, இது ஜோசப் மற்றும் பில்லி பால் பிரான்ஹாமின் வேலை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென்!, என்கிறார்கள்].
4 சகோதரர்களே, ஒரு தீர்க்கதரிசி இறந்துவிட்டால், மனிதர்களின் கோளாறுகளைப் பார்த்துக் கொண்டு தேவனால் ஒருபோதும் அங்கேயே தரித்திருக்க முடியாது. பூமியில் உயிர் வாழும் தீர்க்கதரிசியின் மூலம் மட்டுமே இரட்சிப்பு. பழைய ஏற்பாட்டின் ஆசாரியத்துவம் அல்லது எபேசியர் 4:11 இன் ஊழியங்கள், தேவன் மீண்டும் மற்றொரு தீர்க்கதரிசி செய்தியாளனை பூமிக்கு அனுப்பும் வரை மக்களின் விசுவாசத்தைப் பேணுவதற்கான பணியைக் கொண்டுள்ளது.
5 தனது காலத்தின் தீர்க்கதரிசி கூறியதை விளக்கவோ, அதில் எதையும் சேர்க்கவோ ஆசாரியனுக்கு உரிமை இல்லை. அவர் சொல்ல வேண்டும்: "தீர்க்கதரிசியானவர் எஜமானரின் மகன், அப்போஸ்தலர்கள், சபை தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர் மற்றும் பாஸ்டர்களாகிய நாம் எஜமானரின் வீட்டின் அடிமைகள், பயனற்ற வேலைக்காரர்கள் மட்டுமே. யோவான் 6:40 ஒருவன் நித்திய ஜீவனைப் பெறுவதற்க்கு குமாரனைக் காண வேண்டும் என்று கூறுகிறது!.. மேலும் குமாரன் என்பவன் ஒரு தலைமுறையில் எவர் மூலமாக தம்முடைய மக்களுக்குத் தன்னை வெளிப்படுத்தும்படி தேவன் விரும்பினாரோ அவரே குமாரன்.
6 ஒவ்வொரு தீர்க்கதரிசி செய்தியாளனும் அவருடைய தலைமுறையின் தேவனுடைய ஒரே பேரான குமாரன். கலாத்தியர் 1:15 முதல் 16-ல், பவுல் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள், பாஸ்டர்கள், ரபீக்கள், வேதபாரகர்கள் மற்றும் தன்னுடைய மணி வேளையின் ஆசாரியர்களிடம் குமாரனைத் தன் மூலமாக வெளிப்படுத்துவது தேவனுக்குப் பிரியமானது என்றும், அவர் ஒருவர் மட்டுமே சத்தியத்தின் காப்பாளர் என்றும் கூறினார். இதை தவிர வேறு ஏதாவது கூற பரலோகத்தில் இருந்து ஒரு தூதனே வந்தாலும், அது எந்த தூதனாக இருந்தாலும், வேறு ஏதாவது கூறுவதற்க்கு பரலோகத்திலிருந்து வந்தாலும், அந்த தூதன் சபிக்கப்பட்டவன். நீங்கள் பார்க்கிறீர்களா? அதுவும், எவால்ட் ஃபிராங்க், ஜோசப் கோல்மன், பில்லி பால் மற்றும் ஜோசப் பிரான்ஹாம் மற்றும் மற்றவர்களும் இதை அறியாமல் இருக்கிறார்கள், அதனால்தான் அவர்கள் மரணத்தை ஒரு பானையில் வைத்தார்கள், மேலும் தீர்க்கதரிசியின் குமாரர்கள் நாற்பது ஆண்டுகளாக அங்கேயே வெறிச்சோடியிருந்தனர். பானையை சுத்தம் செய்வதற்க்கு அது எலிசாவாக, எலியா போன்ற இன்னொரு தீர்க்கதரிசி செய்தியாளனாக இருக்க வேண்டும்.
7 புதிய வெளிப்பாடுகளை உருவாக்க போதகர் தனது எஜமானரை விட அதிக தூரம் செல்லாத ஒரே ஒரு பிரன்காமிஸ்ட் சபை ஒன்றும் இல்லை. ஜூனியர் ஜாக்சனின் தரிசனத்திற்க்கு ஏற்ப ஒவ்வொருவரும் அவரவர் சொந்த வழியைப் பின்பற்றினர். பிரான்ஹாமிஸ்டுகளாகிய நீங்கள், ஒரு போதகர் வில்லியம் பிரான்ஹாமை விட அதிக தூரம் சென்று, வில்லியம் பிரான்ஹாமின் புத்தகங்களில் தெளிவாக எழுதப்படாத ஒரே ஒரு காரியத்தை மட்டும் உங்களிடம் சொன்னால், ஆனால் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனை தவிர, ஒரு மேய்ப்பருக்கோ அல்லது எபேசியர் 4:11 இன் ஊழியங்களில் உள்ள ஒன்றிற்கோ அந்த உரிமை இல்லாததால் அதை எங்கிருந்து எடுத்தார் என்று நீங்கள் அவரிடம் கேட்க வேண்டும். அதைச் செய்யும் ஒரு போதகர் அவர் தாமே தங்கக் கன்றுகளை நிறுவியவர்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென்!, என்கிறார்கள்]
8 “வேதாகமம் கூறுகிறது, வேதாகமம் கூறுகிறது...” என்று அவர் சொல்ல ஆரம்பித்தவுடனே, எல்லா பக்தியுடனும், விளக்கங்களுடனும், அவர் எவ்வளவு நல்லவனாகவும், நேர்மையானவனாகவும் இருந்தாலும், அவர் ஒரு சர்ப்பம்தான். எந்த தெய்வீக ஆணையின் அடிப்படையில் அவர் அவ்வாறு செய்கிறார் என்று நீங்கள் அவரிடம் கேட்க வேண்டும். நீங்கள் அதை அவரிடம் கேட்க வேண்டும், ஏனென்றால் அது இரட்சிப்பைப் பற்றியது! ஆமென்!
9 ராஜா உங்களுக்கு யேகாயின் மூலம் கொடுக்க விரும்புவதைத் தவிர, மற்ற அனைத்தும் யேசபேலின் நகப்பூச்சு மற்றும் உதட்டுச்சாயங்கள். இந்த போதகருக்கு நிறைய யோசனைகள், உத்வேகங்கள் மற்றும் லட்சியங்கள் இருந்தால், அவரை அரசியலுக்கு மாறச் சொல்லுங்கள், ஏனென்றால் அவருடைய வெளிப்பாடுகள் என்கிற காரியங்கள், தேவனுக்கு அவை தேவையில்லை…. [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென்!, என்கிறார்கள்]
10 செய்தியில் எழுதப்படாத விஷயங்களை நீங்கள் மட்டுமே பிரசங்கிக்கும்போது, உங்கள் இலக்கு தான் என்ன? தேசங்களின் கூட்டங்கள் அனைத்தும் தங்கள் கொடிகளுடன் கர்த்தருக்கு முன்பாகச் செல்லும்போது, உங்கள் தேசத்தின் சபை மற்றவைகளை விட ஒரு துளி அதிகமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? சகோதரிகளின் காலணிகள் எவ்வளவு உயரமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் என்னிடம் கேட்டால், நான் உங்களுக்குச் சொல்வேன்: மூன்று, ஐந்து அல்லது பத்து சென்டிமீட்டர்! ஆனால் அதைக் கேட்க உங்களைத் தூண்டும் ஆவி ஒரு பிசாசு. தேவன் உங்களுக்குக் கொடுக்க விரும்பியதை உங்களுக்குக் கொடுப்பது யேகாயினுடையது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென்!, என்கிறார்கள்].
11 சாயங்கால வேளையில், வில்லியம் பிரான்ஹாமின் ஊழியத்தில், ஒரு பெண் அன்னிய பாஷை பேசுவதற்காக எழுந்து நின்றால், வில்லியம் பிரான்ஹாம் கூறினார்: "ஒரு சிறிய பெண் கூட்டத்தில் எழுந்து நின்றாள், ஒரு பாப்டிஸ்ட் பெண்... அவள் அந்நியபாஷையில் பேச ஆரம்பித்தாள் ... பின்னர் அவள் எதையும் சொல்வதற்க்கு முன், பரிசுத்த ஆவியானவர் விளக்கம் அளித்தார், "இவ்வாறு கர்த்தர் உரைக்கிறதாவது, மூன்று மாதங்களுக்குள் மோசே, எலியா மற்றும் கிறிஸ்துவின் ஆவி இங்கு ஊழியம் செய்யும். இந்தக் கூடாரத்தில்.' அங்கே அது சரியாக நடந்தது." வில்லியம் பிரான்ஹாம் அதைப் பற்றிப் பேசினார், இந்த தீர்க்கதரிசனம் உலகம் முழுவதும் அறியப்பட்டது, ஏனென்றால் தேவன் வில்லியம் பிரான்ஹாமை பற்றிப் பேசுவதில் மகிழ்ச்சி அடைந்தார்.
12 ஆனால் அதே பாப்டிஸ்ட் பெண் வேறு பல தீர்க்கதரிசனங்களையும் சொன்னார் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவை முதல் ஒழுங்கின் தீர்க்கதரிசனங்களாகும். ஆனாலும் வில்லியம் பிரான்ஹாம் அவைகளைப் பற்றி பேசாத தருணத்திலிருந்து, அவை எவ்வளவு உண்மையாக தோன்றினாலும், பிரான்ஹாமிஸ்டுகள் அவைகளைப் பற்றி பேசவே கூடாது, பார்த்தீர்களா? இப்படிப்பட்ட நடத்தைகள் அனைத்தும், நமக்கு தேவையில்லை; மற்றும் பார்வோன்கள் மற்றும் பாஸ்டர்கள் மற்றும் அப்போஸ்தலர் தூதர்கள், அவர்களெல்லாம் இங்கு இருப்பதை நாம் விரும்பவில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென்!, என்கிறார்கள்]
13 ஒரு தீர்க்கதரிசி-செய்தியாளன் பேசும்போது, அவரை நியாயந்தீர்க்க யாருக்கும் உரிமை இல்லை. பாப்டிஸ்ட்டுகள் சாத்தானின் விடுதிகள் என்று வில்லியம் பிரன்ஹாம் கூறுகிறார், ஆனால் இந்த பாப்டிஸ்ட் பெண் அங்கே எழுந்து நின்று தீர்க்கதரிசனம் சொல்லும் போது தீர்க்கதரிசி கூறுகிறார், இந்த நேரத்தில், தேவன் தான் அவள் மூலம் பேசினார், தேவன் அதை அங்கீகரிக்கிறார், மேலும் தீர்க்கதரிசியை விசவாசித்த மக்கள் களிகூறுகிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென்!, என்கிறார்கள்.]
14 இப்போது, அந்தப் பெண்ணைப் பொறுத்தவரை, அவளுக்கு சில சக்திவாய்ந்த ஆவிக்குரிய வரங்கள் இருந்தன, ஆனால் 1 கொரிந்தியர் 12 இன் படி சில வரங்கள் மற்றும் தீர்க்கதரிசன வரங்கள், அவற்றில் மூன்று பரிமாணங்களில் உள்ளன: 1 கொரிந்தியர் 12 இன் படி தீர்க்கதரிசன வரம், எபேசியர் 4:11 இன் படி தீர்க்கதரிசன ஊழியம் மற்றும் இறுதியாக தீர்க்கதரிசி-செய்தியாளன் எப்போதும் ஒரே பரிசுத்த ஆவியுடன் தனது மூன்று பரிமாணங்களில் ஊழியம் செய்கிறார்.
15 ஆனால் தீர்க்கதரிசன வரம், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும், பூமியில் ஒரு தீர்க்கதரிசி-செய்தியாளன் வருவதையும், இந்த தீர்க்கதரிசி செய்தியாளன் ஏன் பூமிக்கு வருகிறார் எனபதையும் முன்னறிவிக்க முடியாது. தீர்க்கதரிசனத்தின் வரம் அதைச் செய்ய முடியாது. நீங்கள் பார்க்கிறீர்களா? அது, பிரான்ஹாமிஸ்டுகளுக்குத் தெரியாது. கத்தோலிக்க சபை தான் புராட்டஸ்டன்ட் மற்றும் சுவிசேஷ சபைகள், ஊழிய இயக்கங்கள், ஊழியங்கள், வெளிப்படுத்தப்பட்ட சபை என்று அழைக்கப்படுபவைகளுக்கு தாய் என்று வேதாகமம் கூறுகிறது, ஆனால் கிறிஸ்தவத்தின் தோற்றத்துடன், ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் சொன்னதை வெறுமனே திருப்பவோ அல்லது மாற்றவோ செய்யாமல், அதன் சொந்த இரகசியங்களை உருவாக்கி அவற்றை விளக்குகின்ற புதிய சபைகள் தோன்றுவதை நாம் கண்டோம். அவை பெண் புணர்ச்சியாளரின் சபைகள். பிழையின் வழியில் கூட ஒரு வார்த்தையின் வித்து அதை ஒரு போதும் செய்ய முடியாது.
16 யூத மதத்தைப் பாருங்கள்: பல்லாயிரக்கணக்கான கட்டுக்கதை (அபோக்ரிபல்) புத்தகங்களில் எதுவும் யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஏனென்றால் அவர்கள் தேவனுடைய ஜனங்கள் மற்றும் தேவன் அவர்கள் நடுவில் நடந்தார். மேலும் இஸ்லாம் மதம் ஒரு உறுதியான உதாரணம்.
17 இஸ்லாத்தைப் பாருங்கள், இரண்டு முக்கிய போக்குகள் உள்ளன. ஒருபுறம், குர்ஆனுடன் மட்டுமே தங்கிவிட்டவர்கள், மறுபுறம், குர்ஆனைக் கூடுதலாக, ஹதீஸ்கள் மற்றும் பிற புத்தகங்களை ஏற்றுக்கொள்பவர்கள் நிபந்தனை என்னவெனில் அதில் அல்லாஹ் மற்றும் மஹோமத் என்ற பெயர் உள்ளே இருக்க வேண்டும். உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி: இஸ்லாம் மாஹொமத்திடம் இருந்து ஆரம்பித்ததா அல்லது கலீஃபாக்களிடம் இருந்து ஆரம்பித்ததா? இஸ்லாம் மாஹொமத்துடன் ஆரம்பித்தது என்றால், நீங்கள் ஹதீஸ்களை குப்பைத் தொட்டியில் வீச வேண்டும். ஒவ்வொரு மதமும், ஒவ்வொரு நம்பிக்கையும், அது உண்மையோ பொய்யோ, அந்த இரண்டு விஷயங்களையும் வெளிப்படுத்துகிறது. உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசி மூலம் தேவன் உங்களுக்குக் கொடுக்க விரும்பியவற்றுடன் நீங்கள் தங்கியிருக்க வேண்டும் மற்ற அனைத்தையும் பானையில் உள்ள மரணத்தைப் போல பார்க்க வேண்டும்.
18 இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூத மதம் ஆகியவை பூமியில் சாத்தானின் மூன்று பெரிய வெளிப்பாடுகள். அவைகள் வெளிப்படுத்துதல் 16:13 இல் உள்ள மூன்று தவளைகளின் ஆவி. இந்த மூன்று மதங்களும் தங்களை ஆபிரகாமுடையது என்று உரிமை கோருகிறது. இந்த மூன்று மதங்களும் மோசேயை விசுவாசிக்கின்றன. இந்த மூன்று மதங்களும் உயிர் வாழும் தீர்க்கதரிசிகளை விசுவாசிப்பதில்லை, ஆனால் ஒவ்வொன்றும் தனக்குத் தெரியாத ஒரு தீர்க்கதரிசி உரிமை கோருகிறது. அவை ஒவ்வொன்றுக்கும் அதன் சொந்த புனித புத்தகம் உள்ளது. மேலும் மூவரும் மேசியாவுக்காக காத்திருக்கின்றனர். அவைகள் வெளிப்படுத்துதல் 16:13-ன் தவளையின் மூன்று ஆவிகள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென்!, என கூறுகிறார்கள் ]
19 ஒரு தேவனுடைய உண்மையான குமாரன் பூமியில் ஒரு தீர்க்கதரிசியால் கொண்டுவரப்பட்ட வார்த்தையுடன் தங்கி இருக்கிறான். இந்த தீர்க்கதரிசி பூமியை விட்டு வெளியேறும்போது, சிறிது காலத்திற்குப் பிறகு, தேவனுடைய குமாரர்களுக்கு, பூமியில் பஞ்சமானது இருக்கும், தேவன் மற்றொரு தீர்க்கதரிசி-செய்தியாளனை பூமிக்கு அனுப்ப வேண்டும். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தீர்க்கதரிசிகளை நேசிக்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள ஒர ஆழம் தீர்க்கதரிசிகளை நேசிக்கிறது, அதனால்தான் இந்த ஊழியத்திற்கு முன்பு, வில்லியம் பிரான்ஹாமின் செய்தியை நான் சந்தித்தேன்.
20 ஒரு தேவனின் பிள்ளை ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனைத் தவிர அப்போஸ்தலரையோ, சபை தீர்க்கதரிசியையோ, சுவிசேஷகரையோ, போதகரையோ அல்லது பாஸ்டரையோ பின்பற்ற முடியாது, ஏனென்றால் தேவனுடைய வார்த்தையானது தீர்க்கதரிசியிடம் வருகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென்!, என்கிறார்கள்]
21 காங்கோவைப் பாருங்கள், சுமார் பதினைந்து பிரான்ஹாமிஸ்டுகள் மற்றும் சுவிசேஷ சபைகள் நடுராத்திரி சத்தத்தை விசுவாசித்தனர் அப்போஸ்தலரான கிறிஸ்பின் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார், இது தேவனின் உண்மையான பிள்ளை இருக்கும் ஒவ்வொரு தேசத்திலும் நடக்கும். வேதாகம தீர்க்கதரிசிகளின் புத்தகங்களின் புத்தகம் மற்றும் தேவனின் பிள்ளைகள் பூமியில் இருக்கும் வரை, தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்புவார். பிசாசின் புத்திரர்கள் போதகர்கள், அப்போஸ்தலர்கள், சபை தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள் மற்றும் பாஸ்டர்களை பின்பற்றுவார்கள், ஆனால் தேவனின் பிள்ளைகள் எப்போதும் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளனையே பின்பற்றுவார்கள் அவன் அவர்கள் வார்த்தையைச் சுற்றி கூட்டிச்சேர்ப்பான்.
22 ஏப்ரல் 24, 1993 அன்று தூதனும் ஆட்டுக்குட்டியும் மீண்டும் பரலோகத்திற்குச் செல்வதை நான் பார்க்கவில்லை. அவர்கள் நம்முடன் இருக்கிறார்கள், எனவே அவர்களுடன் பரலோகம் செல்வதை யாரும் தடுக்க மாட்டார்கள். இந்தச் செய்தியை யார் தன் சொந்த நலனுக்காக சண்டையிடுகிறார்களோ , ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் அவருக்கு எதிராகப் சண்டையிட்டு அவரைத் தோற்கடிப்பார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென்! என்கிறார்கள்]
23 ஒருவர் எப்படி ஒரு வார்த்தைக்கு "ஆமென்" என்று சொல்லி அந்த வார்த்தையின் நிறைவேற்றத்தைத் தடுக்கலாம்? அதனால்தான் பிரசங்கத்தின் போது பிரான்ஹாமிஸ்டுகளின் பாணியில் "ஆமென்" என்று கூச்சலிடுவதற்க்காக நேரத்தை செலவிடும் நீங்கள் அதை நிறுத்துங்கள்! ஒரு எபேசியர் 4:11 பிரசங்கிக்கும்போது, அது உண்மையில் அவசியமானால், அவர் பொய்யாக எதுவும் சொல்லாத வரை "ஆமென்" என்று சொல்லுங்கள், ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் பிரசங்கம் செய்யும்போதுதான் பிரசங்கத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தவறிழைக்காத்தன்மை காரணமாக இருப்பதினால் ஒரு தூதன் இறங்கி வந்து தனது வலது கையை பரலோகத்தை நோக்கி உயர்த்தி வைத்திருக்கிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் ஆமென்!, என்கிறார்கள்]
24 தேவன் தம்மை எளிமையில் வெளிப்படுத்துகிறார், மேலும் அவருடைய வார்த்தையை எளிமையில் வெளிப்படுத்துகிறார். தேவனில் உள்ள அனைத்தும் தாழ்மையும் எளிமையுமானவை. பெருமையான அனைத்தையும், அதை நிராகரியுங்கள்! வார்த்தையின் வெளிப்பாடு ஒருபோதும் ஒரு இரகசியமாக இருந்ததில்லை. நாம் ஏழு முத்திரைகளைப் படிக்கும் போது யாவும் இரகசியமாக இருந்தது, ஆனால் முதல் முத்திரை திறக்கப்பட்டபோது, எப்போதும் நம்முடன் இருந்த ரோமன் கத்தோலிக்க சபையைத் தவிர வேறு எதுவும் இல்லை. நீங்கள் பார்க்கிறீர்களா?
25 நீங்கள் ஏழு இடி முழக்கங்களைப் பற்றி கேள்விப்பட்டீர்கள், ஆனால் வெளிப்பாடு வந்தபோது, ஏழு இடிமுழக்கங்கள் ஏழு முத்திரைகளை வெளிப்படுத்தும் தேவனின் சத்தத்தைத் தவிர வேறில்லை. "குமாரனைக் கண்டு, அவரை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் நித்திய ஜீவனைப் பெற வேண்டும்" என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், மேலும் பிரான்ஹாமிஸ்டுகள் உங்களைத் தொந்தரவு செய்தார்கள், ஆனால் வெளிப்பாடு வந்ததும், குமாரன்!, அது பூமியில் உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. பழைய ஏற்பாட்டின் ஆசாரியத்துவம் எபேசியர் 4:11 இன் ஊழியங்கள் என்பதையும் அவர்கள் எஜமானரின் வீட்டில் வேலைக்காரர்கள் என்பதையும் நாம் அறிந்தோம். நான் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கும்போது தான், யோவான் 6:40 கூறுகிறதான குமாரனைப் பற்றிய வெளிப்பாட்டை நான் ஏற்கனவே கொடுத்திருந்ததைக் கண்டேன். அது எந்த ஒரு கொண்டாட்டமும் இல்லாமல் எல்லா எளிமையிலும் வந்தது. இரட்சிப்பின் விஷயத்திலும் அது அதே காரியம் தான்.
26 நீங்கள் எவால்ட் பிராங், பரூட்டி காசோங்கோ, டொனால்ட் பார்னெல், எம்பிரா பர்பெட், ஜோகும் கண்கால்வ்ஸ், ஜோசப் கோல்மேன் மற்றும் பலர் பற்றி பேசுகிறீர்கள்? அவர்களில் பிரான்ஹாமிஸ்டுகளுக்கு மீண்டும் ஞானஸ்நானம் கொடுப்பவர் யார்? எவரும் இல்லை! ஒரு தீர்க்கதரிசி, அது ஒரு கழுகு; அது மற்ற பறவைகளின் கூடுகளில் முட்டையிடும் பறவையல்ல.
27 நேற்று, ஜிம்பாப்வேயின் பிரான்ஹாமிஸ்ட் போதகரின் மின்னஞ்சலை வெளியிட்டேன். அவர் நடுராத்திரி சத்தத்தைப் பற்றி கேட்பதற்கு முன்பு, வில்லியம் பிரான்ஹாம் ஜிம்பாப்வேயில் பிரசங்கம் செய்கிறார் என்று இரண்டு முறை கனவு கண்டார், மேலும் அவர் அருகில் சென்று பார்க்க, அது ஒரு ஆப்பிரிக்கர் என்பதைக் கண்டார். குரல் வில்லியம் பிரான்ஹாமினுடையது, தூரத்திலிருந்து அது வில்லியம் பிரான்ஹாம், ஆனால் அவர் நெருங்கியதும், அது ஒரு ஆப்பிரிக்கர். இது என்ன? கடந்த காலத்தில் பரிசுத்த தீர்க்கதரிசிகளுடன் இருந்த அதே தேவதூதர்கள் மீண்டும் இங்கே, பூமியில், பரிசுத்தவான்களின் கூட்டத்திற்காக இருக்கிறார்கள். நான் பரலோகத்தைப் பார்க்கிறேன். நான் எல்லா பரிசுத்தவான்களையும் பார்க்கிறேன். நன்றி தேவனே! நன்றி தேவனே!