(2003 டிசம்பர் 27, ஞாயிறு காலையிலும் பிறகு 2006 லும், லோக்காட்ஜ்ரோ, ஆபிட்ஜான்-ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1ஏன் தானியேலின் புத்தகம் தரிசனத்திற்கு அடிப்படையாக உள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? தானியேலின் நாட்களில், நேபுகாத்நேச்சார் தன்னுடைய எல்லா குறிசொல்லுகிறவர்களுடைய ஆலோசனையையும் பற்றிக்கொண்டு, உலக சபைகளின் சங்கம் போன்றதொரு உயர்ந்த சிலையை எடுப்பித்தான், 600 க்கும் மேற்பட்ட சபைகள். அது தானியேல் 3-ம் அதிகாரத்தில் உள்ளது. ராஜா நேபுகாத்நேச்சாரிடத்தில் கல்தேயர்: "ராஜாவே, இந்த மனுஷர் உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தெய்வங்களை ஆராதிக்காமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள்." என்றார்கள்...
2இந்த பக்கத்தில், காலங்களின் இந்த முடிவில், கடந்த தசாப்த்தத்திலிருந்து, அனைத்து நாடுகளிலும் சபைகளின் பிரம்மாண்டமான சங்கங்களையும் சம்மேளனங்களையும் நாம் காண்கிறோம். இது மத்தேயு 13:24-30 ன் நிறைவேறுதலாகும். மேலும் இந்த செய்தியோவெனில் தெரிந்துகொள்ளப் பட்டவர்களைக் கூட்டிச்சேர்ப்பதற்காக வருகிறது. அதை புறக்கணித்தல் என்பது, கிருபையைத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக நியாயத்தீர்ப்பில் "நான் குற்றவாளி அல்ல" என்று கெஞ்சுவதை தெரிந்துகொள்வதாக இருக்கிறது.
3இப்போது நான் முக்கியமான ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்த நேரம் வந்துவிட்டது என்றும் இது நடுராத்திரி சத்தத்தின் பணி-இலக்கின் வரிசையில் உள்ளது என்றும் நான் எண்ணுகிறேன். நள்ளிரவு செய்தியானது திருச்சபையை, அவளுடைய உண்மையான துவக்க ஸ்தானத்தில் வைக்கும்.
4ஜூன் 2002-ல், இந்தத் ஊழியத்தைத் துவங்குவதற்கு முன்பு, நான் ஒரு ஆவணகோப்பு (file) உண்டுபண்ணினேன். நான் ஒரு பக்கத்தை சட்டத்திற்காகவும் அடுத்த பக்கத்தை உட்புற ஒழுங்குகளுக்காகவும் உருவாக்கியிருந்தேன், மேலும் நாம் ஒரு புறமத சங்கமோ அல்லது கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு சபையோ அல்லது வெளிப்படுத்தப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட சபைகள்... என அழைக்கப்பட்ட சபைகளோ அல்லது அதுபோன்ற ஒன்றோ அல்ல ஆனால் நாம் கிறிஸ்தவர்கள் என்பதை தெளிவாக விளக்கினேன், ஆனபடியால் வேதாகமமும் உயிர்வாழும் தீர்க்கதரிசி கூறுகிறவைகளுமே நமது சட்டமும் உட்புற ஒழுங்குகளுமாக உள்ளது. ஆனால் அஞ்ஞான அமைப்புகளின் மாதிரியின் படி ஒரு சட்ட மற்றும் உட்புற ஒழுங்குகளை என்னிடம் கேட்பதற்கான துணிச்சல் அவர்களுக்கு இருந்தது... பரிசுத்த காரியங்களுக்கு ஒரு அவமதிப்பாக நான் அதை கண்டேன். அதற்கு நான் மறுத்துவிட்டேன்!
5தேவனின் சார்பாக பேச எனக்கு அரசாங்கம் அல்லது ஒரு பூமிக்குரிய அதிகார அமைப்பு ஒப்புதல் வழங்க வேண்டுமா? இயேசு தம் ஊழியத்தைச் செய்வதற்கு இராயனிடம் எப்படி அனுமதி கேட்கமுடியும்? மேலும் இத்தகைய காரியங்களை என்னிடம் உங்களால் எப்படி கேட்க முடியும், பிறகு மதுபானத்தில் மூழ்கிக் கிடக்கிற ஒரு அஞ்ஞானி, எனது பிரசங்கம் பொதுஅதிகார நிர்வாகங்களின் சுவைப்படி உள்ளதா என்பதை விசாரித்தறிய வருவதா? பிசாசு இந்த உலகத்தின் அதிபதி என்பதை அறியுங்கள், அவனது நிலத்தில் என்னை எவ்வாறு அவனால் அங்கீகரிக்க முடியும்? ஆகாபு மற்றும் யேசபேலின் ஒப்புதலை எலியாவினால் எவ்வாறு கேட்க முடியும்? ஏரோதியாளின் ஒப்புதலை யோவான் ஸ்நானகன் கேட்பது எப்படி? அவ்வாறு செய்வது தேவனை வஞ்சிப்பதும், இரட்சிப்பின் திட்டத்திலிருந்து ஒருவன் தன்னையே வெளியேற்றுவதுமாக அது இருக்கிறது. தேவன் தடுப்பாராக! திருச்சபைக்கு கீழ்படிய வேண்டிய ஒன்று அரசாங்கமாக இருக்கிறது, மற்றபடியல்ல. [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்!" என்கின்றனர்]. பூர்வ காலங்கள் முதற்கொண்டு, இஸ்ரவேல் ஒரு அஞ்ஞானியான இராஜாவுக்கோ அல்லது ஒரு சாம்ராஜ்யத்துக்கோ கீழ்ப்படிய வேண்டுமென தேவன் ஒருபோதும் விரும்பினதில்லை! மேலும் அதை, ஆதி கிறிஸ்தவர்கள் அறிந்திருந்தனர், திருச்சபைக்கு உண்டான முதல் உபத்திரவங்களுக்கு அது அடிப்படையாக இருந்தது.
6இருப்பினும், ஆவணங்களை தயார்செய்து ஒரு சபை, அரசாங்கத்திடம் இருந்து அங்கிகாரம் பெருகையில், அது ஒரு கீழ்ப்படியும் செயல் மட்டுமல்ல ஆனால் ஒரு கூட்டணியாகவும் இருக்கிறது. அது அமெரிக்காவும் இங்கிலாந்தும் போன்றது. இஸ்ரேலிடமிருந்து ஒரு தாக்குதல் உண்டாகும் பட்சத்தில் காப்பாற்றப்படும்படிக்கு ஈராக்குடன் சிரியா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது போன்று அது உள்ளது. உங்களால் காணமுடிகிறதா?
7டிசம்பர் 18, 2005 அன்று, மிகப் பெரிய பிரன்ஹாமிஸ்டு ஆலயத்துக்கு முன்பாக சகோதரர்கள் பிரசங்கிக்கையில், இந்த பிரன்ஹாமிஸ்டுகள் போலீசாரின் உதவியை நாடினர். நீங்கள் காண்கிறீர்களா? பிரன்ஹாம் கூடாரத்திற்கு முன் சில பிரசங்கிகளை அடிப்பதற்கு வில்லியம் பிரன்ஹாம் போலீசாரை வரவழைக்கிறதையோ அல்லது சில கேள்விகளுடன் அவருக்கு தொந்தரவாக வந்த பரிசேயர்களுக்கு எதிராக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ரோம படைவீரர்களை அழைத்தையோ நான் பார்த்ததில்லை. அதற்கு நேர்மாறாக, அது ரோம படைவீரர்கள், ஜனக்கூட்டங்கள், தேவாலய சேனையினர், பரிசேய மற்றும் சதுசேய சேவைகளில் இருந்தவர்கள் தான் கர்த்தர் இயேசு கிறிஸ்துவையும் அப்போஸ்தலர்களையும் உபத்திரவப்படுத்தினர். இன்னும் ஒரு முறைகூட நான் உங்களுக்கு சொல்கிறேன்: ஆலயங்களுக்கு முன் நீங்கள் பிரசங்கிக்க வேண்டியிருந்தால், அது பெரும்பாலும் அந்த பிரன்ஹாமிஸ்டுகளுடைய ஆலயங்களுக்கு முன் இருக்கவே நான் விரும்புகிறேன்! ஓ, சகோதரர்களின் குரலை நிசப்தமாக்க அவர்கள் மிக உரக்க பாடியதை நான் கேள்விப்பட்டேன், பாப் மார்லியின் ஒரு கச்சேரிக்கு ஒதுக்கப்படும் உபகரணங்களுக்கு ஒத்த அந்த பெரும் சத்தத்தை, அற்புதமானவிதத்தில், சகோதரர்களின் குரல்கள், தேவதூதர்களுடையதோடு சேர்ந்து, ஊடுருவிச் சென்றது என நான் கூறுவேன். [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்!" என்கின்றனர்].
8பின்னும், சபையை சினமூட்டுவது எப்போதும் அது அரசாங்கமாக இருக்கிறது. எந்த அதிகாரத்தினால் அவர் பிரசங்கிக்கிறார் என்று ஏரோது இயேசுவை கேட்கிறதுபோல் அது உள்ளது! கடந்த காலத்தில், ரோம தெய்வங்களுக்கு பலியிடுவதாக அது இருந்தது, மேலும் இன்று, இராயனுடைய ஒப்புதலை கேட்பதாக அது உள்ளது, அது அதே பிசாசு தான்.
9ஓர் நாள், பன்னிரண்டு அபோஸ்தலர்களின் பெயர்களைக் கொண்ட பன்னிரண்டு பேருக்கு அடுத்ததாக அவன் கட்டின பதின்மூன்றாவது பிரமாண்டமான சமாதியை ஆசீர்வதிக்கும்படிக்கு கான்ஸ்டன்டைன் பேரரசன் கேட்டான். அந்த சமாதியின் ஆசீர்வாத விழாவின் போது, ஒரு போதகர்: "நாம் பாவிகளாயிருக்கிறோம் ஆனால் இயேசு கிறிஸ்து பாவமில்லாமல் கர்ப்பம் தரிக்கப்பட்டார்! இயேசு கிறிஸ்து பாவம் இல்லாமல் வாழ்ந்தார் ஆனால் அவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார் மேலும் அது அவருடைய சிலுவையின் மீதான மரணத்தினால் நாம் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றதாக அது இருக்கிறது ..." என்று பிரசங்கித்துக்கொண்டிருந்தார். அப்படி அந்த போதகர் பேசிக்கொண்டிருந்த போது, கான்ஸ்டன்டைன் பேரரசன் எழுந்து, அலப்புவதை நிறுத்தி, எளியவிதத்தில் சமாதியை ஆசீர்வதிக்கும்படி பிரசங்கியாருக்கு கட்டளையிட்டான். நீங்கள் காண்கிறீர்களா? திருச்சபைக்கும் மேலானதாக அரசாங்கம் இருக்கிறது என்று தெளிவாக வலியுறுத்த கான்ஸ்டன்டைன் பேரரசன் விரும்பினான். பூமி வானத்திற்கும் மேலானதாகவும், இராயனின் வல்லமை தேவனுடைய ஒன்றுக்கு மேலானதாகவும் இருப்பதாக காண்பிக்க அவன் விரும்பினான். ஆனால் அங்கே, அவன் தவறான இடத்தில் இருந்தான், ஏனென்றால் இராயனுக்கும் மேலாக தேவனின் அதிகாரம் உள்ளது என்பதை ஜாதிகளுக்கு வெளிப்படுத்த தேவனால் அனுப்பப்பட்ட சில தீர்க்கதரிசிகள் அங்கே பூமியில் இருந்தனர்.... [ஆசிரியர் குறிப்பு: சபையினர், "ஆமென்!" என்கின்றனர்]. பின்னர், பிரசங்கியும் கூட கடுமையாக பதிலளித்தார், பேரரசன் மன்னிப்பு கேட்டான்.
10மேலும் 257 ஆம் ஆண்டில், அஞ்ஞான ரோமாபுரி: "நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை விசுவாசியுங்கள் ஆனால் குடிமக்கள் என்னும் முறையில், அதிகாரப்பூர்வ கடமைகளை நிறைவேற்ற வேண்டும் மேலும் அரசாங்கத்துக்குள் ஒரு அரசாங்கத்தை உருவாக்கக் கூடாது" என்னும் இந்த விதிகளைக் கொண்ட ஒரு அரசாணையை பிரகடனப்படுத்தினது. இராயன் எதை அர்த்தங்கொண்டான் என்பதை அவர்கள் அறிந்திருந்தபடியால் அது செவிட்டு காதுகளில் விழுந்தது. அது ரோமர் 13-ஐ உங்களைவிடவும் சிறப்பாக அறிந்திருந்த லட்சக்கணக்கான கிறிஸ்தவர்களை இல்லாமற்பண்ணின துன்புறுத்துதலின் மூலாதார அடிப்படையாக இருந்தது.
11குடிமக்கள் என்னும் முறையில், நாங்கள் எங்கள் அடையாள அட்டைகளை வைத்திருக்கிறோம், நாங்கள் எங்கள் வரிகளை செலுத்துகிறோம், நகரான்மை தலைவர் எங்கள் திருமணங்களை சிறப்பிக்கிறார், அது இராயனுடைய பங்காக இருக்கிறது. உங்களால் காணமுடிகிறதா? ஆனால் நாங்கள் செய்யக்கூடாத ஒரே காரியம் திருச்சபையை அரசுக்கு அடிபணிய வைப்பது அல்லது ஒட்டவைப்பது மட்டுமே. சாத்தானின் சபைகள் அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டவையாக இருக்கிறது, இயேசு கிறிஸ்துவின் சபைகள் வேதாகமத்திற்கும் உயிருள்ள தீர்க்கதரிசி கூறுகிறதற்கும் கட்டுப்பட்டவையாக இருக்கிறது. நீங்கள் எங்களை நேசித்தால், எங்களை தனியாக விட்டுவிடுங்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்!" என்கின்றனர்].
12அனைத்து அதிகாரங்களையும் தேவன் ஏற்படுத்துகிறபடியினால் நாம் கண்டிப்பாக கீழ்படிந்தாக வேண்டுமெனில், பார்வோன் எதிர்த்தபோது மோசேயும் யூதர்களும் எகிப்திலிருந்து வெளியேறியிருக்க முடியாது. தானியேலும் அவன் தோழர்களும் நேபுகாத்நேச்சாரின் பொற்ச்சிலைக்கு முன்பாக பணிந்துகொள்ள வேண்டியிருந்திருக்கும்! உங்களைத்தான், பிசாசின் குமாரரே, நீங்கள் அரசுக்கு முன்பாக தாழ பணிந்துகொள்ளவும், அதன் தலைவர்களிடம் கெஞ்சவும் பழகிவிட்டீர்கள். உங்கள் பில்லிசூனியத்துடன் எங்களோடு தோழமை கொள்ள முயற்சி செய்ய வேண்டாம் என்று நான் உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.
13வேதாகமத்துக்கும் உயிர்வாழும் தீர்க்கதரிசி சொல்வதற்கும் வெளியே, பவுல், பேதுரு, விக்லிஃப், மார்ட்டின் லூதர், ஜான் கால்வின், மற்றும் ஜான் வெஸ்லி ஆகியோரின் திருச்சபைக்கு இன்னொரு அடையாளத்தையோ அல்லது இன்னொரு உருவசாயலையோ என்னால் கொடுக்க முடியாது. திருச்சபையை அரசுக்குள் புகுத்திவைக்க முடியாது, அவள் அடிமைப்படுத்தப்பட முடியாது. திருச்சபைக்கும் அரசுக்கும் இடையே, ஒன்று இன்னொன்றுக்கு கட்டுப்படவேண்டியிருக்குமானால், அது அரசாங்கமாக இருத்தல் வேண்டும். ஆதி கிறிஸ்தவர்கள் அதை நன்கு அறிந்திருந்தனர். கத்தோலிக்கர்கள் கூட அதை நன்கு அறிந்திருக்கிறார்கள், ஏனென்றால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சில போப்புகள் சில இராஜாக்களை அரியணை ஏற்றவோ தள்ளிப்போடவோ செய்தனர். உதாரணமாக, 1301 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், போப் எட்டாவது போனிஃபாஸ், புல் ஆஸ்கல்டா ஃபிலி என்னும் ஒரு அதிகாரப்பூர்வமான கடிதத்தால் பொது மற்றும் தற்காலிக அதிகாரத்தின் மீது ஆன்மீக வல்லமைக்கு அதிகாரம் உள்ளதை உறுதிப்படுத்தினார். கத்தோலிக்கர்கள் தங்களுடைய புதை குழிக்கு திரும்புவதற்கு முன்பு ஆதி கிறிஸ்தவர்களிடமிருந்து இந்த ஸ்தானத்தை மரபுரிமையாக பெற்றிருந்தார்கள். நீங்கள் காண்கிறீர்களா?
14சில அமைச்சர்களும், பாராளுமன்ற உருப்பினர்களும், விபச்சாரத்திலும் மதுபானத்திலும் ஊழல்களிலும் மூழ்கிக்கிடக்கும் சில குருட்டு அஞ்ஞானிகளும் என்னில் செல்வாக்கு செலுத்துவதல்ல அது. அது சாத்தியமல்ல ஏனெனில் நான் தேவனின் தீர்க்கதரிசியாக இருக்கிறேன். உங்கள் கூட்டங்களில் அவர்களுக்கு மரியாதைக்குரிய இடங்களைக் கொடுப்பது உங்களைச் சேர்ந்ததாக இருக்கிறது! ஆனால் நான், எனது கரத்திலிருக்கும் வேதாகமத்தின் மதிப்பை நன்கு அறிவேன், எனவே தான், திருத்தங்களுக்கு ஒருபோதும் முடிவுவராமல் தினந்தோரும் நலிவுருகிற இந்த அரசியல் சாசனங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை.
15மேலும் திருச்சபையின் வரலாற்றில், ஸ்பெயினின் நாட்டைச்சேர்ந்த கார்டோவாவின் ஹொசையஸ் (Hosius of Cordova) எனப்பட்ட ஒரு வயதான பிரசங்கி, ரோம பேரரசனை இவ்வாறு கடிந்துக்கொண்டார்: "மத சம்பந்தமான விஷயங்களில் உம்மை நுழைத்துக்கொள்வதற்கு உமக்கு எந்த உரிமையும் இல்லை, சாம்ராஜ்யத்தின்மீது மட்டுமே தேவன் உமக்கு அதிகாரம் அளித்திருக்கிறார். ஆகையால், விசுவாசத்துடன் சம்பந்தப்பட்டவைகளை, எங்களிடமிருந்து நீர் கற்றுக்கொள்ள வேண்டியதாக அது உள்ளது." என்றார். நீங்கள் காண்கிறீர்களா? வானமும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் நாம் அனைவரும் தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும். நாம் நமது தேசங்களை எவ்விதம் ஆட்சி செய்தோம் என்பதற்கல்ல, ஆனால் எந்தப் பிரகாரமாக நாம் தேவனை சேவித்தோம், பாவத்திற்கு விலகி தேவனுடைய சித்தத்தில் நடந்தோம் என்பதற்காக. பூமியிலே வளர்ச்சி என நாம் அழைப்பதை தேவன் கவனத்தில் கொள்வதில்லை. வானளாவும் கட்டிடங்கள் என நாம் அழைக்கின்ற நமது கட்டிடங்கள், அவற்றை தேவன் கரையான் புற்றுகளாகவே காண்கிறார். தேவனுக்கு முன்பாக அது ஒன்றுமல்ல, பொருட்டாக எண்ணப்படுவது ஆத்துமாவின் இரட்சிப்பு மட்டுமே. ஜனாதிபதியோ அல்லது அரசனோ, நீங்கள் யாராக இருந்தாலும், தேவனுடைய சித்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியவேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்!" என்கின்றனர்].
16சக்திவாய்ந்த போதகர் அம்புரோஸ் பேரரசன் தியோடோசியஸ்ஸிடம்: "சபையில் தான் பேரரசர் இருக்கிறார், அவர் சபைக்கும் மேலானவர் அல்ல. கிறிஸ்துவைப் பயன்படுத்தாமல் அவருக்கு ஊழியம் செய்யுங்கள்!" என்று சொல்லி எல்லோரையும் போல அவனையும் வெளிப்படையான பாவ அறிக்கைசெய்ய வைத்தார். ஆமென்! சக்திவாய்ந்த போதகரான ஜான் கிறிஸ்டோம்: "பூமியைவிட வானம் எவ்வளவு உயர்ந்ததோ அதுபோல பொது அதிகாரத்துக்கு மேலாக திருச்சபையின் அதிகாரம் இருக்கிறது." என்று முழங்கினார். ஒரு ஜனாதிபதி அல்லது ஒரு ராஜா அல்லது ஒரு மேயர் அல்லது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பூமியிலே விசேஷித்தவனாக இருப்பானாகில், அவன் தனது நேரத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியை நோக்கி பார்ப்பான். ஒரு தேசம் தேவனை அறிந்தால், அந்த நாட்டின் செய்திகளிலும் செயல்களிலும் தேவன் முதன்மையானவராக இருப்பார். ஆனால் பூமியின் அனைத்து தேசங்களையும் பாருங்கள், அவர்களின் மதம் அரசியல் என்று அழைக்கப்படுகிறது. மேலும் அரசியலின் தேவனாக சாத்தான் இருக்கிறான். அதைக் கொண்டு, பிசாசின் புத்திரரான ஜனாதிபதிகள் மற்றும் அரசியல் அதிகார நிர்வாகங்கள் தேவன் செய்கிற காரியங்களில் பெரும்பாலும் தலையிடுகிறார்கள். அவர்கள் மதுபானத்தாலும் பாவத்தாலும் நிறைந்திருக்கும்போது, இன்ன இன்ன தேவ மனிதனைப் பற்றி தீர்ப்புச் செய்கிறார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்!" என்கின்றனர்].
17பின்னர், ஒரு நாள், கான்ஸ்டன்டைன் பேரரசன், "நீங்கள் உட்புற அப்போஸ்தலர்கள் ஆனால் நான் கான்ஸ்டன்டைன், நான் ஒரு வெளிப்புற அப்போஸ்தலனாக இருக்கிறேன்" என்று கூறினான். அதை தொடர்ந்து, விரைவில் அதற்குரியபதில் அவன் முன் வந்தது. ஒரு பிரசங்கி எழுந்து நின்று: "இராயனும் கிறிஸ்துவனுமாக இருத்தல் கூடாத காரியம்" என்று அவனிடம் கூறினார். மேலும் நான் காக்குவ் பிலிப்பு, நான் இந்த போதகர்கள் மற்றும் வேதாகமத்தின் தீர்க்கதரிசிகளின் பரம்பரையை சேர்ந்தவனாக இருக்கிறேன். நான் செய்கிறவைகளுடன் ஒரு அரசியல்வாதிக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை மேலும் ஒரு அரசியல்வாதிக்கு ஒப்புவிக்கவேண்டிய கணக்கு எதுவும் எனக்கு இல்லை.ஒரு மதத்துறை அமைச்சர் எனக்கு இல்லை, அது கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளுக்கு உரியதாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்!" என்கின்றனர்.
18நாங்கள் பண்டைய சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறோம், நாங்கள் பண்டைய திருச்சபையாகவும் நாங்கள் தேவனுடைய பூமியிலும் இருக்கிறோம். இந்த பூமி உங்கள் கரங்களில் விடப்படுவதற்கு முன்னர், இது தேவனுடைய பூமியாக இருந்தது. இதை படைத்தவர் தேவன், நான் அவருடைய தீர்க்கதரிசி. நான், காக்குவ் பிலிப்பு, இயேசு கிறிஸ்துவின் அடிமை, எனக்கு இராயனுடன் எந்தப் பங்கும் இல்லை மேலும் நமக்கு இராயனுடன் எந்தப் பங்கும் இல்லை. இஸ்ரவேலைப் போலவே, உண்மையான திருச்சபை எப்பொழுதும் எந்த அஞ்ஞான வல்லமைக்கும் எதிரான ஒரு நிலையை எடுத்துள்ளது. "இராயனுக்கு உரியது இராயனுக்கும் தேவனுக்கு உரியது தேவனுக்கும்". இது ஒரு கட்டளையும் தெய்வீக ஆணையுமாக இருக்கிறது மேலும் ஏப்ரல் 24, 1993 ல் நான் பெற்ற பணியின் தைரியத்தினால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் அதை அறிவிக்கிறேன். அதை மீறுதல் பாவமாக இருக்கிறது.
19மேலும் நான் காக்குவ் பிலிப்பு, சபை வெதுவெதுப்பாக இருக்கிறதை நான் காண்பதனால் அல்லது மற்றவர்களிடத்தில் இல்லாத ஒரு சத்தியத்தை நான் கண்டறிந்துள்னேன் என்பதனால் நான் ஊழியம் செய்கிறதில்லை ஆனால் ஏப்ரல் 24, 1993 ன் அழைப்பு மற்றும் பணிநியமனத்தின்படி நான் இதை செய்கிறேன். நான் கண்டிப்பாக பிரசங்கிக்கவேண்டியதான இந்த செய்தி, வானத்தில் எழுதப்பட்டிருப்பதை, ஒரு தரிசனத்தில் கண்டேன், மேலும் வானமும் பூமியும் இதை பொய்யாக்க முடியாது. நாம் வாழும் இந்த நேரத்தில், ஒரு ஆப்பிரீக்கன் இந்த பணியை நிறைவேற்ற பூமியிலே வேலையில் இருக்கவேண்டும், மத்தேயு 25:6 மற்றும் வெளிப்படுத்துதல் 12:14 அதை கூறுகிறது மேலும் உங்களிடம் பேசுகிற நான், நான் தான் அந்த ஒருவனாக இருக்கிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்!" என்கின்றனர்]. அதனால், மத்தேயு 25:6 ன் அடிப்படையில், நானாக இராத ஒன்றினிடத்திற்கு நான் என்னை கொண்டுசெல்லவில்லை. இதுமுதற்கொண்டு, இந்த நடுராத்திரிச் சத்தம் புறப்பட்டாயிற்று என்று என்னால் சொல்ல முடியும். நீங்கள் தீர்க்கதரிசிகளாக, அப்போஸ்தலர்களாக, மேய்பர்களாக, சுவிசேஷகர்களாக அல்லது போதகர்களாக இருப்பீர்களானால் நீங்கள் தாழ்மையுடன் இதற்கு பின்னாக உங்களை வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடை இலக்கு பரலோகமாக இருக்குமானால், நீங்கள் கண்டிப்பாக செய்யவேண்டியது இதுதான்.
20காலங்களின் முடிவில் நாம் இருப்பதைக் கவனியுங்கள், அங்கே வெளிப்புற அடையாளங்களும் உட்புற அடையாளங்களும் உள்ளன. பூகம்பங்கள், போர்கள், இஸ்ரேல் அவளது சுயதேசத்திற்கு திரும்புதல், ... இவை அனைத்தும் உலகிற்கான வெளிப்புற அடையாளங்களாக இருக்கின்றன ஆனால் எக்காளங்கள், ஏழு நட்சத்திரங்கள், முத்திரைகள் திறக்கப்படுதல், ஏழு இடிகள், நடுராத்திரிச் சத்தம் ... இவை மணவாட்டிக்கு மணவாளனின் இரகசிய அடையாளங்களாக இருக்கிறது. மேலும் உலகம், அதாவது, கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் அனைத்து வெளிப்படுத்தப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட சபைகள் உட்பட பிரன்ஹாமிஸ்டு சபைகளுடன் அது தொடர்புடையதல்ல, அது அதை அறியாது. எடுத்துக்கொள்ளப்படுதலின் வேளையில், தூங்குகிற கன்னிகைகளை எழுப்புவதற்கான ஒரு சத்தம் அங்கு இருக்கும் என்று வேதாகமம் கூறுகிறது மேலும் அது, ஓர் நாளில், திருச்சபையை எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு நடத்தும், அதற்குத்தான் நாம் இப்போது சாட்சியம் வகித்துக்கொண்டு இருக்கிறோம். [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்!" என்கின்றனர்].
21மத்தேயு 25:6 பற்றி ஜனங்கள் பேசுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அது இப்பொழுது சரித்திரமாக இருக்கிறது. இது தற்போதைய சரியான வினைகாலத்தில் (present perfect tense) உள்ளது: நடுராத்திரிச் சத்தம் முழங்கிற்று. நீங்கள் காண்கிறீர்களா? ஒவ்வொரு தேவ பிள்ளையும் தேவன் என்ன செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்கின்றது மேலும் மெய் திருச்சபையானது வேதாகம வாக்குத்தத்தங்கள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் படி நடக்கிறது.
22இன்று, 2003 ஆம் ஆண்டில், ஒரு எழுப்புதல் பிரன்ஹாமிஸ்டு சபை ஒன்றிலிருந்து வெடித்து வெளிவருமானால், அது நல்தாக இருக்கலாம் ஆனால் அது திருச்சபையின் எழுப்புதலாக இருக்க முடியாது, ஏனெனில் ஒரு கன்னிகை விழித்து மற்றவர்களை விழித்தெழும்பச் செய்வாள் என வேதாகமம் சொல்லவில்லை ஆனால் அதைச் செய்யப்போவது ஒரு சத்தமாக இருக்கிறது. மேலும் தீர்க்கதரிசனத்தின் ஆவி கூறுவதும் இதைத்தான். [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்!" என்கின்றனர்].
23இந்த செய்தி ஆங்கில, ஜெர்மன், சுவாஹிலி, ஸ்பானிஷ், போர்த்துகீசியம், சீனம், ஜப்பனீஸ் மற்றும் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதால், தேவன் சிலரை அதற்கு தேவையான யாவற்றுடன் எழுப்ப வேண்டும் என்பதே நமது ஜெபமாக இருக்கிறது. வேதாகமத்தில் நாம் காண்கிற அதேவிதமாக: கொரிந்தியர்களுக்கு எழுதிய கடிதம், ரோமருக்கு, பிலிப்பியருக்கு, தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதம் ... அவை இன்று பூமி முழுவதற்கும் பொருந்துகிறது, அதுபோலவே, நான் இங்கே பிரசங்கித்துக்கொண்டிருக்கிற இந்த செய்தியும் அவ்வண்ணமே இருக்கும். செய்ய வேண்டிய ஒரே காரியம், இது மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டுவதுதான். நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்!" என்கின்றனர்].
24ஆனால் பிரசங்கிப்பதற்காக, பரிசுத்த ஆவியானவர் தாமே ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு அதை ஒழுங்குபடுத்துவார், ஏனெனில் ஜிம்பாப்வேயின் கள்ளத் தீர்க்கதரிசிகள் வேறு அந்த மத்திய ஆபிரிக்க குடியரசுகளுடையது வேறு! போர்ச்சுகல் சபைகளின் கூட்டமைப்பு பிரான்சு சபைகளின் கூட்டமைப்பு அல்ல! பெர்னார்ட் ஆக்ரே என்று பிரான்சின் பேராயர் அழைக்கப்படுவதில்லை. உங்கள் நாட்டின் கள்ளத் தீர்க்கதரிசிகளின் பெயர்களை அதில் சேர்க்காமல் காக்குவ்.1 ஐ உங்களால் விநியோகிக்க முடியாது. இந்த பிரசங்கங்கள் எல்லா இடங்களிலும் விநியோகிக்கப்படும்!
25மேலும், பிற நாடுகளில் தாற்காலிகமாக வசித்துவரும் சில ஜனங்கள், இந்த செய்தியை பறப்புவதற்காக தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புவார்கள் என்று ஆவியின் ஏவுதலால், நான் அதை சொன்னேன். காலத்திற்கும் தகுந்தவேளைக்கும் ஆயத்தமாக்கப்பட்ட சில நட்சத்திரங்கள் உலகெங்கிலும் எழுப்பப்படும். தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் மனசாட்சி விழிப்பூட்டப்படும், திருச்சபையின் தொடக்கத்தில் இருந்ததுபோன்று பூமிக்குரிய ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எதிராக ஒரு தீவிர நிலைப்பாட்டை அவர்கள் எடுப்பர். நாம் ஏற்கனவே அங்கு இருக்கிறோம், பூமியெங்கும் அதை ஒருங்கிணைக்கிறவரான தேவனுடைய ஆவியானவரைச் சார்ந்து இப்போது அனைத்தும் இருக்கிறது.
26மிகவும் கலகத்தனமானவர்களாக கருதப்படுகிற ஒரு "பிரிவினரை" அழிக்கும்படிக்கு, அங்கு மனிதவேட்டையாடல் ஒன்று இருக்கும். இது புறஜாதிகளின் திருச்சபையின் கடைசி தீர்க்கதரிசன நடவடிக்கையாக இது இருக்கும். மேலும் இது எடுத்துக் கொள்ளப்படுதுக்கு வழிவகுக்கும். தேவனுடைய ராஜ்யம் பார்க்கக்கூடிய விதமாக வராது என்று வேதாகமம் சொல்கிறதினால், தேவனுடைய குமாரன் ஒருவனின் மனத்தாழ்மை மற்றும் பகுத்தறிதலினால் மட்டுமே இதுபோன்ற ஒரு ஊழியம் கவன ஈர்ப்பு பெரும்.
27இப்போது முடிப்பதற்காக, நான் இதை கூறவிரும்புகிறேன், ஒவ்வொரு முறையும் தேவன் திருச்சபைக்கு சமாதானத்தை கட்டளையிட்டபோது, அவள் தன்னை மிறுதுவானவளென்று நிரூபித்திருக்கிறாள். திருமணத்தை உதாரணமாக பேசுகிறேன்... எனது வெள்ளை தொப்பியானது தீர்க்கதரிசியின் அதிகாரத்தின் அடையாளமாக இருக்கிறது போல நான்காம் நூற்றாண்டில், ரோமாபுரியும் திருச்சபையும் பரிசம் கொடுப்பதை (Dowry) திருமணத்தின் அடையாளமாக அங்கீகரித்தது. காரியம் இப்படியிருக்க, திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன் மனைவியாக கூடிவாழும் முறையிலிருந்து திருமணமானது பரிசம் கொடுத்தலினால் வேறு பிரிக்கப்பட்டது. அங்கே சமூக அல்லது மத சம்பந்தமான விழா எதுவும் இருக்கவில்லை. பின்னர் ஒரு சமூகவிழா என அழைக்கப்படுவதுடன் அரசாங்கத்தின் கை ஓங்க துவங்கினது, திருமணத்தை இரகசியத்தன்மையிலிருந்து வெளியே கொண்டுவருதல், என்று அது கூறப்பட்டது; ரோம சங்கத்தினால் 721 ல் ஞான தகப்பன்கள், ஞான தாய்கள் மற்றும் சாட்சிகளை கொண்ட ஒரு விழா ஏற்படுத்தப்பட்டது, தொடர்ந்து அஞ்ஞானிகளுக்கு ஒத்தவிதமாக தெருவில் ஒரு ஊர்வலமும் நடத்தது. இவை அனைத்தும் சபையோடு போட்டியிடும் ஆவியின் செயல்தான்.
28மேலும் திருச்சபை, அவளது திருப்பத்தில், ஆசீர்வதிக்கும் சடங்கு என அழைக்கப்பட்ட, இந்த போலிபுகழ்சியை, ஏற்படுத்தும் முன், அதற்கு எதிராக மிகவும் புகழ்பெற்ற பிரசங்கிகள் போராடினர், ஏனெனில், அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறபடி திருமணம் செய்து கொள்ளாதிருக்கிறது சிறந்ததாக இருக்குமானால், ஒவ்வொரு திருமணமும் தேவனின் அனுமதிக்கும் சித்தமாக இருக்கிறது, ஆனபடியால் திருமண விழா திருச்சபைக்குள் கொண்டுவரப்படக்கூடாது, என்று அவர்கள் கூறினர். திரெந்து சங்கத்தின் (the council of Trent) மறுநாள், அத்தகைய வாதங்களில் திருமணத்தின் ஆற்றல் கடந்துபோகிற காரியத்தை கண்ட அரசாங்கங்கள், ஒரு மத சடங்கு என்பதற்கும் மேல் திருமணம் என்பது பொதுவாழ்கைக்குரிய ஒரு ஒப்பந்தமாக இருக்கிறது என்று உரிமைகோரிற்று. ஆகையால், பரிசம் கொடுத்தலுக்குப் பிறகு, அஞ்ஞானிகளுக்கு ஒரு பொது விழா இருந்தது, அதே சமயத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதுவும் இருக்கவில்லை. நீங்கள் காண்கிறீர்களா?
29இஸ்ரவேலும் புறஜாதி தேசங்களும் ஒருபோதும் ஒருமித்துப்போனதில்லை, திருச்சபையும் அரசும் ஒருபோதும் ஒருமித்துப்போனதில்லை. திருமணச் சட்டங்கள், வாழ்கை துணையின் உரிமைகள் அல்லது விவாகரத்துக்கான நிபந்தனைகள் என்பவைகளின் பேரில் திருச்சபையும் அரசாங்கமும் ஒருபோதும் ஒத்துப்போகவில்லை.
30இன்னொரு காரியம்; ஒரு அடிமையானவன் உரிமைகுடிமகளான ஒரு பெண்ணிடம் மணவிருப்பம் தெரிவித்தால், அந்த அடிமை கொல்லப்பட வேண்டும் என்று அடிமைத்தன ஆதரவு அரசாங்கம் கூறினது. அதேநேரத்தில் தன் எஜமானின் மகள் ஏற்றுக்கொள்வாள் என்றால் அந்த அடிமை அவளை மணந்து கொள்ளலாம் என்று திருசபை சொன்னது. நீங்கள் காண்கிறீர்களா?
31மதரீதியான சிறப்பித்தலை தொடர்ந்து நாம் காண்கிற இந்த சமீபத்தைய பொதுசமூக ரீதியிலான சிறப்பித்தல்கள், "18 ஜெர்மினல்" என்னும் சட்டத்தின் மூலம் முன்பு 18 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் துவங்கினது, மேலும் இது சாத்தான், அவனுடைய சமூக வல்லமையும் அவனது சபைகளுமாக உண்மையான திருச்சபைக்கு எதிராக அவனது கண்ணி மட்டுமாக இருந்தது. சரித்திரத்தினூடாக திருச்சபையானது, வேதாகமமும் உயிருள்ள தீர்க்கதரிசி கூறுவது எதுவோ அதையும் தவிர வேறொரு அதிகாரவட்டத்தின் அடிப்படையில், பொதுசமுகத்தின் திருமணத்தை ஒருபோதும் அங்கீகரித்ததில்லை; சட்ட அதிகாரம் அது வேதாகமத்துடன் முரண்படுகிறதும் திருத்தங்களுக்கு முடிவில்லாததுமாக உள்ளது மேலும் அதை திருச்சபையானது எந்த நேரத்திலும் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. நான் சபைகளை பற்றி பேசவில்லை ஆனால் உண்மையான திருச்சபை பற்றியே. அது வித்தியாசமானது! நீங்கள் காண்கிறீர்களா?
32நகர் மண்டபத்திற்குச் செல்லுவதும், பின்பு அங்கிருந்து சபைக்கு வருவதும், அது சாத்தானின் கண்ணியாக இருக்கிறது, முழு பூமியும் அதற்கு முன் பெருமை கொள்கிறது. அது திருச்சபை அரசாங்கத்திற்கு அடிபணிவதாக இருக்கிறது. மேலும் திருமணம், இந்த பிற அதிகார எல்லைக்குள்ளாக கையெழுத்திடுதல், அது ரோம தெய்வங்களுக்கு பலியிடுவதைப் போன்றதும், திருச்சபையை அரசுக்கு கீழாக வைப்பதுமாக இருக்கிறது. உங்களால் காணமுடிகிறதா? அரசாங்கம் திருச்சபைக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை, அதுபோலவே நானும் அரசாங்கத்துக்கும் அதன் அஞ்ஞான திருமணங்களுக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளனிடம் இருந்துதான் திருச்சபையானது செயல்படுகிறது. திருச்சபை, அது என்னிமித்தமே மேலும் அதை அவள் மதிக்கிறாள் என்பதை நான் உறுதிப்படுத்துவேன். [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்" என்கின்றனர்].
33இப்பொழுது, சபையையும் அரசாங்கத்தையும் பற்றி பேசுகையில், 1971 ல் காங்கோ-கின்ஷாசாவில், பேராயர் மாலுலாவும் கத்தோலிக்கச் சபையும், பிற சபைகளும் ஜனபெருக்கத்திற்கு எதிரான ஜனாதிபதி மோபூட்டூவின் மோசமான நடத்தையை விமர்சித்தபோது, விலகி இருக்கும்படிக்கும், அது அவர்களுக்கு சம்பந்தமுள்ள காரியமல்லவென்றும் அவர்களிடம் ஜனாதிபதி மோபூட்டூ கூறினார். மோபூட்டூ: "இல்லை, இது அனுமதிக்க முடியாததும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்! இரண்டு காரியங்களையும் நீங்கள் கலக்க முடியாது. கிறிஸ்துவும் கூட இதைப் பற்றி, தேவனுக்கு உரியதை தேவனுக்கும் இராயனுக்கு உரியதை இராயனுக்கும் என ஆணித்தரமாக குறிப்பிட்டார்." என்றார். கிறிஸ்தவர்கள், குடிமக்களாக இருப்பதால், அவர்களும் அரசின் பாகமாக இருப்பதுபோல, அந்தப்பிரகாரமாகவே அரசும் திருச்சபையின் ஒரு பாகமாக உள்ளது, ஏனென்றால் அதற்கும் இரட்சிப்பு தேவைப்படுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது]. ஜனாதிபதிகள் மற்றும் அரசர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மேயர் மற்றும் பூமியின் அனைத்து பெரிய மனிதர்களுக்கும் இரட்சிப்பு தேவை. இரட்சிக்கப்பட வேண்டிய பாவிகளாகவே நான் எப்போதும் அவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்களின் மனித பெருமை மனிதர்கள் முன்பு மட்டும்தான். ஆனால் நான் எப்பொழுதும் இரட்சிக்கப்பட வேண்டிய பாவிகளாகவே அவர்களைப் பார்ப்பேன்.
34ஐவரி காஸ்டின் அரசியல் சாசனத்தை விரிவுபடுத்திய சமயத்தில், அங்கு இருந்த மதத் தலைவர்கள், கடவுள் என்ற வார்த்தை முன்னுரையில் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர், ஆனால் ஐவரி காஸ்ட் ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற போலிக்காரணத்தினால் அது மறுக்கப்பட்டது. ஐவரி கோஸ்ட் ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தால், அங்கு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அந்த அறையிலிருந்து வெளியேருவதற்குப் பதிலாக, பணத்தின் காரணமாக அந்த போதகர்கள், குருக்கள் மற்றும் இமாம்கள் அந்த அரசியல்வாதிகள் மத்தியில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். ஐவரி காஸ்ட் ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தால், என்ன சபை ஆவணத்தை நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள்? ஆனால் இதை அறிந்துகொள்ளுங்கள்: ஒரு நாள், பூமியிலே தேவனுடைய நியாயத்தீர்ப்பின் நிமித்தம், ஒரு காலம் வரும், அப்போது பிசாசின் சபைகள் தங்களுடைய ஆட்சியையும் அதிகாரத்தையும் அரசுக்கு கொடுக்கும். அப்பொழுது போலீஸ் மற்றும் நீதிமன்றங்களால் அவைகளை பாதுகாக்க அரசுகள் சட்டங்களை இயற்றும். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்!