(ஞாயிற்றுக்கிழமை காலை, மே18,2014 அன்று சிகென்சி, அபிட்ஜான் - ஐவரி கோஸ்ட் பகுதியில் பிரசங்கிக்கப்பட்டது )
1சகோதரர்களே, எனக்கு ஒன்று தெரியும்: ஆரம்பத்தில், பவுல், ஒரு யூதர், தேசங்களுக்கு வெளிச்சப்பந்ததைக் கொடுத்தார், ஏனெனில் அது அவ்வாறு இருக்க வேண்டும். இறுதியில், இரண்டு ஒலிவ மரங்களுக்கு வெளிச்சப்பந்ததைக் கொடுக்க கூடியவர் அது தேசங்களின் தீர்க்கதரிசி ஆவார். வில்லியம் பிரான்ஹாம் அதற்காக இஸ்ரவேலுக்குச் சென்று கொண்டிருந்தார், அவர் எகிப்துக்கு வந்தபோது, கடவுள் அவரிடம், "நிறுத்து! அங்கு போகாதே!”என்றார்.
2உங்களிடம் பேசும் எனக்கு, அது எப்படி நடக்கும் என்று தெரியாது , ஆனால் ஏப்ரல் 24, 1993 அன்று கண்ட தரிசனத்தில், இரண்டு ஒலிவ மரங்களாகிய இரண்டு புறாக்கள் அங்கே இருந்தன, வில்லியம் பிரான்ஹாம் நம்பியது போல், தேசங்களின் தீர்க்கதரிசி ஒருபோதும் யூதர்களுக்குப் பிரசங்கிக்கப் போகமாட்டார், ஆனால் எலியா மற்றும் மோசேயின் ஆவிதான் தேசங்களின் தீர்க்கதரிசியிடமிருந்து வெளிச்சப்பந்ததைத் தேட வருவார் என்பதைக் காட்டுகிறது. ஆமாம், நீங்கள் வில்லியம் பிரான்ஹாமை நம்பினால், என்னையும் நம்புவீர்கள். [குறிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள்].
3நீங்கள் எங்கிருந்தாலும், அங்கேயும் காக்குவ் பிலிப்பு தான் தீர்க்கதரிசி என்பதை அறிந்து, நன்றாக ஜீவியுங்கள் . உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் அறுவடையில் திருடர்கள் மட்டுமே. ஆகவே நன்றாக ஜீவியுங்கள் ! கடைசி வரை தரிசனத்தை வைத்திருங்கள்! பசி, வலி, நோய் அல்லது மரணம் எதுவாக இருந்தாலும், தரிசனத்தை இறுதிவரை வைத்திருங்கள். நான் உங்களை நேசிப்பது போல நீங்கள் கடவுளையும், செய்தியையும் , தீர்க்கதரிசி செய்தியாளரையும் நேசியுங்கள்.
4உங்களைத் தவிர எனக்கு வேறு நண்பர்கள் கிடையாது , நீங்களும் அதை அறிவீர்கள், கடவுளைத் தவிர வேறு யாராலும் என்னை மாற்ற முடியாது, ஏனென்றால் அதுதான் என் குணம். எனக்கு நகைச்சுவைகள் ஒருபோதும் பிடிக்காது. நான் என் கணினியில் அசுத்தமான அல்லது வேடிக்கையான எதையும் பதிவிறக்கம் செய்ததில்லை. எனக்கு அவைகள் பிடிக்காது , நான் ஒரு தீர்க்கதரிசி என்பதால் அவற்றிலிருந்து விலகி இருக்கிறேன். [குறிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள்.].
51993 முதல் இன்று வரை, டாமி ஆஸ்போர்ன், ரெய்ன்ஹார்ட் போன்கே, ஜெஸ்ஸி ஜாக்சன், பென்னி ஹின், யோங்கி சோ, எவால்ட் ஃபிராங்க், அலெக்சிஸ் பாரிலியர் மற்றும் பூமியின் அனைத்து பெரிய ரேவரென்டுகளும் ஐவரி கோஸ்டுக்கு இங்கு வந்துள்ளனர். நான் அவர்களோடு ஒருபோதும் என்னைத் தீட்டுப்படுத்தியதில்லை, என் கண்கள் அவர்களைக் கண்டதும் இல்லை!
6ஐவரி கோஸ்ட்டில் ஐந்து ஜனாதிபதிகள் இருந்துள்ளனர். என் கண்கள் ஒரே ஒருவனை மட்டுமே பார்த்திருக்கின்றன, அது எனக்கு பதினொரு வயதாக இருந்தபோது ஹூஃபவுட் போய்க்னி. நான் ஒரு ஜனாதிபதியின் இல்லத்திற்கு ஒருபோதும் சென்றதில்லை, மேலும் அவருக்கு இரட்சிப்பை அறிவிப்பதைத் தவிர வேறு ஒருபோதும் நான் அங்கு செல்ல மாட்டேன். என் நாட்டின் சுதந்திர தினத்திற்காக, நான் பேரணிகளில் ஒருபோதும் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும், அந்த அரசியல் தலைவர் என்னை இரண்டு முறை தொலைபேசியில் அழைத்தார், நான் அங்கு செல்லவில்லை, ஒருபோதும் அங்கு செல்ல மாட்டேன். நான் ஒரு தீர்க்கதரிசி என்பதால் எனக்கு அவர்கள் மத்தியில் இடமில்லை. [ குறிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள்].
7நல்லது! அடுத்த குறிப்பு திருமணங்களின் ஆசீர்வாதத்திற்கானது. இது ஞானஸ்நானத்தைப் போன்றது. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, சகோதரனும் சகோதரியும் ஒருவரையொருவர் அறிந்திருந்தால், வரதட்சணைக்குப் பிறகு எந்த ஆசீர்வாதமும் இருக்காது, ஆனால் அவர்கள் கணவன் மனைவி தான். ஆனால் சகோதரர் சகோதரியை அணுகவில்லை என்றால், அவர்கள் வந்து முதல் நீண்ட இருக்கையில் உட்காருவார்கள். போதகர் சுமார் பதினைந்து நிமிடங்கள் புத்திசொல்லி, மூன்று முறை சகோதரரிடமும், பின்னர் சகோதரியிடமும் கேள்வி கேட்பார், அவர்கள் இருவரும் "ஆம்!" என்று பதிலளித்தால். ", அவர்கள் பிரசங்க மேடைக்கு முன்பாக முழங்கால் படியிடுவார்கள், அமர்ந்திருக்கும் சபையினர் அவர்களின் ஐக்கியத்திற்காக ஜெபிப்பார்கள், பின்னர் போதகர் முன்னோக்கி வந்து, தனது வலது கையை சகோதரரின் தோளில் வைத்து, தனது இடது கையை சகோதரியின் தோளில் வைத்து, அவர்களுக்காக ஜெபிப்பார்.
8மனப்பாடமாக ஒப்பிப்பதற்கு என்று எந்த சிறப்பு விதிமுறைகளும் கிடையாது . ஆனால் இது போன்ற ஒரு எளிமையான ஜெபம் : "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, உம்மிடமிருந்து நான் பெற்ற கிருபையால், இந்த ஐக்கியம் பரலோகத்தில் இருப்பது போல பூமியிலும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்... இந்த ஐக்கியம் அவர்களின் வீட்டிற்கும், நமக்கும், அவர்களின் பெற்றோருக்கும் ஒரு ஆசீர்வாதமாக இருக்கட்டும்... ஆமென்! ". அடுத்த ஞாயிற்றுக்கிழமை, சபை அவர்களுக்கு பரிசுகள், சமையலறை பாத்திரங்கள் மற்றும் அனைத்து வகையான பரிசுகளையும் பொருளாகவும் பணமாகவும் கொண்டு வருவார்கள் .
9ஒரு சகோதரனின் இறுதிச் சடங்குகளுக்காக, அவனது பெற்றோர் உங்களை அழைத்து, நினைவுகூரும் நேரத்தில் உங்களுக்கு நேரம் கொடுத்தால், ஞானத்தைக் காட்டுங்கள். இந்தப் பிரசங்கம் சுமார் முப்பது நிமிடங்கள் நீடிக்கும், தலைப்பு: "இந்த சகோதரர் விசுவாசித்தது என்ன… !".
10மேலும் பிரசங்கம் முழுவதும் இது இருக்கும்: " இந்த சகோதரர் அதை விசுவாசித்தார்...", புரிந்துகொள்ளக்கூடியவர்களுக்கு விளக்கங்களுடன் கூறுங்கள் . மேலும் மறுநாள் கல்லறையில், அவருக்கு முன் இருந்த பரிசுத்தவான்களைப் போலவே, அவரது காலத்தின் உயிர் வாழும் தீர்க்கதரிசி மூலம் அவரது சாட்சியத்திற்காகவும், அவரது இரட்சிப்பின் நம்பிக்கைக்காகவும் சுமார் பதினைந்து நிமிடங்கள் எடுத்துச் சொல்லுங்கள்.[குறிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள்.].
11நல்லது! இன்று காலை நான் "பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரை எதிர் கொண்ட இஸ்ரவேல்" என்ற தலைப்பில் பேச விரும்புகிறேன். கர்த்தருக்கு முன்பாக நடந்த பெரியவர்கள், சிறியவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள் என பல ராஜாக்களான தாவீது ராஜா, சாலமோன் ராஜா, ஆகாப் ராஜா, உசியா ராஜா ஆகியோர்களைப் பற்றி வேதாகமம் பேசுகிறது.
12மேலும் அப்படிப்பட்ட நல்ல ராஜாக்களில் ஒருவர் என் கவனத்தை ஈர்த்தார், அந்த நல்ல ராஜா நேபுகாத்நேச்சார், அவர் யூதரல்லாத ஒரு ராஜா. நேபுகாத்நேச்சார் புதிய எகிப்தான கடவுள்களின் நகரமான பாபிலோனின் ராஜாவாக இருந்தார். பாபிலோன் சோதோமும் எகிப்தும் இணைந்தது, ஆனால் அதன் நடுவிலிருந்து ஒரு ராஜா வந்தான், அவனுடைய நினைவு ஒருபோதும் மறக்கப்படாது, அவன் நேபுகாத்நேச்சார்.
13வேதாகமத்தில் உள்ள அனைத்து ராஜாக்களிலும், தாவீது, சாலமன் மற்றும் யோசியாவுக்குப் பிறகு, நேபுகாத்நேச்சார் ராஜாதான் என் கவனத்தை மிகவும் ஈர்த்தவர், குறிப்பாக அவர் யூதர் அல்ல என்பதால். இஸ்ரவேலுக்கு வெளியே, பூமி அறிந்த மிகப் பெரிய தலைவர் ஆபிரகாம் லிங்கனோ அல்லது நெல்சன் மண்டேலாவோ அல்லது ஒரு போப்போ அல்ல, மாறாக தேசங்களுக்கு இடையே ஒரு மன்னர், தனது நாட்டில் வேலையின்மை விகிதத்தைக் குறைக்கக் வேண்டும் என்பதில் அக்கறை காட்டாத ஒரு தலைவர். அந்த ஆட்சியாளர் பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சார். நேபுகாத்நேச்சார் ஒரு கிறிஸ்தவர் அல்ல. ஆனால் இன்றைய நமது கிறிஸ்தவ மன்னர்கள் மற்றும் ஜனாதிபதிகளை விட அவருக்கு அதிகம் தெரியும்.
14ராஜாவாக நேபுகாத்நேச்சாரின் முதல் கவலை பாபிலோனின் பொருளாதார வளர்ச்சி அல்ல. அவரது முதல் கவலை சுவிஸ் வங்கிகளில் உள்ள கணக்குகள் அல்ல. அது பாபிலோனின் செல்வத்தை எவ்வாறு அதிகரிப்பது, நினைவுச்சின்னங்களைக் கட்டுவது அல்லது ஒரு பெரிய ராஜாவாக இருப்பது அல்ல.
15ஆனால் இந்த ஆப்பிரிக்க, அரபு, ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் ஆசிய மன்னர்கள் மற்றும் ஜனாதிபதிகளைப் பாருங்கள். இந்த ஜனாதிபதிகள், அவர்களின் குமாரர்கள் மற்றும் அமைச்சர்களைப் பாருங்கள், அது செல்வத்தைத் தவிர வேறில்லை, அதைத் தவிர வேறில்லை! ஆனால் நேபுகாத்நேச்சார் கவலைப்பட்டது என்னவென்றால், இந்த தீர்க்கதரிசியும் அந்த தீர்க்கதரிசியும் வெவ்வேறு சபைகள், வெவ்வேறு கோட்பாடுகளைக் கொண்டிருப்பதையும், ஒரே கடவுளின் பெயரில் ஒரே ஒன்றியத்தில் அல்லது சபைகளின் கூட்டமைப்பில் ஒன்றுபடுவதையும் அவர் கண்டார்.
16நேபுகாத்நேச்சாரும் பாபிலோனின் பிரபுக்களும் தங்கள் கூட்டங்களுக்கு மானியம் வழங்குவதையோ அல்லது நிதியுதவி செய்வதையோ தவிர்த்துக் கொண்டனர். லூத்தரன்கள் மற்றும் மெதடிஸ்ட்கள் இருவரும் ஒரே கடவுளை வணங்குவதாகக் கூறும்போது, மெதடிஸ்ட் ஒருவரால் எப்படி லூத்தரனிடமிருந்து கர்த்தருடைய இராப்போஜனத்தைப் பெற முடியவில்லை என்பதை நேபுகாத்நேச்சார் புரிந்து கொள்ளவில்லை. ஒரு பெந்தேகோஸ்தே போதகர், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டதாகக் கூறி, ஒரே கடவுளை வணங்கும்போது, அசெம்பிளிஸ் ஆஃப் காட்-ல் ஒரு போதகராக எப்படி இருக்க முடியாது என்பதை நேபுகாத்நேச்சார் புரிந்து கொள்ளவில்லை.
17ஒவ்வொரு சபைக்கும் அதன் சொந்த இறையியல் நிறுவனம் மற்றும் அதன் போதகர் பள்ளி இருப்பதை நேபுகாத்நேச்சார் கண்டார், ஆனாலும் அவர்கள் ஒரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உரிமை கொண்டாடினர், ஒருவருக்கொருவர் தழுவி, அவருடைய மேஜையில் சாப்பிட்டு ஒன்றாக ஐக்கியப்பட்டனர் அதே நேரத்தில் அவர்கள் வெவ்வேறு சபைகளின் உறுப்பினர்களாக, வெவ்வேறு இனங்களின் பறவைகளாக இருந்து கொள்கிறார்கள். நேபுகாத்நேச்சாரால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இன்று, இது நமது ஆப்பிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் ஆசியத் தலைவர்களைப் பாதிக்கவில்லை, ஏனெனில் அவர்கள் தேர்தலில் வாக்குகளில் மட்டுமே ஆர்வமாக உள்ளனர்.
18நேபுகாத்நேச்சார் அளித்த இரவு உணவுகளில், வெவ்வேறு சபைகளைச் சேர்ந்த பாதிரியார்கள், போதகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் ஒரே கடவுளின் பெயரில் ஒரே மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தனர், அவர்களின் இந்த நடத்தை அவரை மிகவும் தொந்தரவு செய்தது.
19நேபுகாத்நேச்சார் தன் மக்களின் பேச்சைக் கேட்டான், இயேசு கிறிஸ்துவின் பெயரால் தீர்க்கதரிசிகளின் கைகளால் செய்யப்பட்ட பெரிய அற்புதங்களைப் பற்றிச் சொல்லப்பட்டான், அதனால் பலர், “யெகோவா இப்போது தனது பெயரை மகிமைப்படுத்த பாபிலோனைத் தேர்ந்தெடுத்துள்ளார்!” என்று சொன்னார்கள். பாபிலோன் என்பது கடவுளின் புதிய தாயகம் அல்லது பாபிலோன் என்பது இஸ்ரேலுக்குப் பிறகு கடவுளின் இரண்டாவது தாயகம் ஆகியது ." [Kc.45v32] [kc.53v6-7] [kc.57v11] [kc.59v47] [kc.108v26]
20ஆனால் நேபுகாத்நேச்சார் அரசியல்வாதியாகவும், பேச்சாளராகவும், முரண்பாடாகவும் இருக்கும் ஒரு கடவுளை விரும்பவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா ? நாம் கொஞ்சம் கொஞ்சமாக அங்கு சென்று கொண்டிருக்கிறோம். அவர்களுடைய பேச்சு எல்லாம் அற்புதங்கள், அற்புதங்கள், அற்புதங்கள் என்று நேபுகாத்நேச்சார் கண்டான்... ஆனால் நேபுகாத்நேச்சார் பிச்சைக்காரர்களையும் வஞ்சகர்களையும் மட்டுமே பார்த்தான்.
21இன்றும் அது அப்படியே இருக்கிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, நீங்கள் காணும் மந்திரம் மற்றும் குறிசொல்லல்களுக்கு சபைகளில் இடமில்லை, ஆனால் அமெரிக்காவில் உள்ள அசுசா தெருவில்தான் பாபிலோனின் மந்திரவாதிகள் மற்றும் குறிசொல்பவர்கள் தீர்க்கதரிசி என்ற பட்டத்தைப் பெற நரகத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன. நீங்கள் பார்க்கிறீர்களா ? [குறிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள். ].
22மோசேயும் அற்புதங்களைச் செய்தார், ஆனால் மோசேயை ஒரு தீர்க்கதரிசியாக மாற்றுவது எது? அது அற்புதங்களா அல்லது அவர் மூலமாகக் கடவுளின் வார்த்தையா? ஏசாயாவும் எரேமியாவும் அற்புதங்களால் தீர்க்கதரிசிகளா அல்லது வார்த்தையால் தீர்க்கதரிசிகளா? அதுதான் பாபிலோனில் நடந்து கொண்டிருந்தது.
23மேலும் மக்கள் மயக்கப்பட்டு, இங்கும் அங்கும் இழுத்துச் செல்லப்பட்டனர், இந்த அல்லது அந்த கடவுளின் தீர்க்கதரிசி அல்லது பாதிரியாரின் பிரச்சாரங்கள் அல்லது மாநாடுகளில் கலந்து கொண்ட அதே மக்கள், வேறு கடவுளைக் கொண்ட அத்தகைய மற்றொரு பாதிரியாரின் சுவிசேஷ பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். ஜீயஸின் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அதே எகிப்தியர்கள் ஐசிஸ் தெய்வத்தின் அல்லது அத்தகைய கடவுளின் இந்த அல்லது அந்த பாதிரியாரின் குணப்படுத்தும் பிரச்சாரத்திற்குச் செல்வார்கள் என்பதை நெபுகாத்நேசர் நினைவில் கொண்டான் .
24மேலும், நேபுகாத்நேச்சார் பாபிலோனின் ராஜாவாக ஆவதற்கு முன்பே, தினமும் அந்தக் காரியங்களைப் பற்றித் தியானித்துக் கொண்டிருந்தான் . அவன் ராஜாவானபோது, தானியேல் 1 ஆம் அதிகாரத்தின்படி, சத்தியத்தைத் தேடி சில யூதர்களை வரவழைத்தான். பின்னர் நேபுகாத்நேச்சாரின் எண்ணங்கள் கடவுளிடம் சென்றன, கடவுள் அவனுக்கு பொற்ச் சிலையைப் பற்றிய கனவைக் கொடுத்தார்.
25அவன் அந்தக் கனவைக் கண்டபோது, அந்தக் கனவைத் தனக்கு விளக்கிக் கூற ஞானிகளையும், குறிசொல்லுகிறவர்களையும், ஜோதிடர்களையும், மந்திரவாதிகளையும் கூடிவரச் செய்தான்; அவர்கள் அவனை நோக்கி: ராஜாவே, அந்தக் கனவை எங்களுக்குச் சொல்லும், அதின் அர்த்தத்தை உமக்குச் சொல்லுவோம் என்றார்கள். அதற்கு நேபுகாத்நேச்சார்: கனவையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவிக்காவிட்டால், நீங்கள் கொல்லப்படுவீர்கள்; கனவை எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது அதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்க உம்மால் முடியும் என்று நான் அறிவேன் என்றான். ஆமென்!
26இன்றைய நமது ராஜாக்களுக்கும் ஜனாதிபதிகளுக்கும் கடவுள் இந்தக் கனவைக் கொடுக்க முடியாது; அவர் அதைச் செய்திருந்தால், அவர்களால் நேபுகாத்நேச்சார் செய்தது போல் செயல்பட முடியாது. இன்றைய நமது ஜனாதிபதிகளும் அமைச்சர்களும் பிசாசுடன் கருத்து வேறுபாடு கொள்ள விரும்பவில்லை . அவர்கள் தங்கள் காலத்தின் உயிர் வாழும் தீர்க்கதரிசியுடன் இருப்பதை விட பிசாசுடன் நரகத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள், ஆனால் கடவுள் அவர்களை தகுதியானவர்களாகக் காணவில்லை, நேபுகாத்நேச்சாரின் காலத்திலும் இஸ்ரேலிய தலைவர்கள் தகுதியற்றவர்களாக இருந்தனர்.
27பூமியின் அமைச்சர்களே, ஜனாதிபதிகளே, நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும், பூமியில் உங்களிடம் எவ்வளவு இருந்தாலும், ஒரு நாள் நீங்கள் இறந்துவிடுவீர்கள். கடவுளின் பங்கைத் தேர்ந்தெடுங்கள், உங்கள் காலத்தின் உயிர் வாழும் தீர்க்கதரிசியின் பங்கைத் தேர்ந்தெடுங்கள், அனைவருடனும் உடன்படாதீர்கள், இதனால் ஒரு நாள் நீங்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியும். [ குறிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள். ].
28நேபுகாத்நேச்சார் பாபிலோனின் மந்திரவாதிகளைத் தேடிக் கொன்று கொண்டிருந்தபோது, இஸ்ரவேல் மக்கள் அதே மந்திரத்தில் மூழ்கிக்கொண்டிருந்தார்கள். அதனால், நேபுகாத்நேச்சாரிடமிருந்து தப்பித்த குறிசொல்லுபவர்களும், ஜோசியம் சொல்பவர்களும், மந்திரவாதிகளும் கூட ஓடிப்போய் இஸ்ரவேலுக்குச் சென்று, அங்கு அவர்கள் வலிமையான தீர்க்கதரிசிகளானார்கள்.
29இஸ்ரவேலை நியாயந்தீர்க்கும் நேரம் வந்தபோது, யூதர்கள் ஏற்கனவே வெகு தொலைவில் இருந்ததால், அவர்கள் தங்கள் நடுவில் இருக்கும் தீர்வாகிய எரேமியாவைப் பார்க்க முடியவில்லை! ஒரு தேசத்தின் மீது கடவுள் நியாயத்தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, அந்த தேசத்தை எச்சரிக்கும் ஒரு குரல் எப்போதும் அங்கே எங்காவது இருக்கும். [குறிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள்.].
30இப்போது சகோதரர்களே, தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரவிருந்தபோது இஸ்ரவேலில் என்ன நடந்து கொண்டிருந்தது? நல்லது ! யூதர்கள் சிதேக்கியாவை தாவீது என்றும் நேபுகாத்நேச்சாரை கோலியாத் என்றும் பெயரிட்டு அழைத்தனர். மேலும் நேபுகாத்நேச்சாரும் பாபிலோன் படையும் நெருங்கியபோது, இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் எரிகோவுக்கு முன்பாக யோசுவாவின் நாட்களில் நடந்தது போல, உரத்த எக்காள சத்தங்களுடன் உடன்படிக்கைப் பெட்டியை வெளியே கொண்டு வந்தார்கள். மேலும் சிதேக்கியா தாவீதைப் போல தன் முழு பலத்தோடும் துள்ளிக் குதித்து நடனமாடினான்!
31அங்கே அந்நியபாஷைகளில் பேசுவதும், தீர்க்கதரிசனமும், வெற்றியின் அடையாளங்களும் இருந்தன, ஆனால் கடவுள் இஸ்ரவேலை நேபுகாத்நேச்சாரின் கையில் ஒப்புக்கொடுத்தார். சிதேக்கியாவும் அவன் குமாரரும் யூதாவின் பிரபுக்களும் எல்லாப் போர்வீரர்களும் எரிகோவின் சமவெளிகளுக்கு ஓடிப்போனார்கள்; ஆனால் அவர்கள் பிடிக்கப்பட்டு, வெண்கல விலங்குகளால் கட்டப்பட்டு, நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகவும், சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேலருக்கு முன்பாகவும் தீர்க்கதரிசிகளுடனும் ஆசாரியர்களுடனும் நியாயந்தீர்க்கப்படுவதற்காக ஆமாத் தேசத்திலுள்ள ரிப்லாவுக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.
32நல்லது! இப்போது அதன் பிறகு என்ன நடந்தது? நேபுகாத்நேச்சார் முதலில் பிரதான ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள், சுவிசேஷகர்கள், போதகர்கள், வேதபாரகர்கள் மற்றும் கர்த்தருடைய ஆலயத்தின் வாசற்படியைக் காக்கிறவர்கள் அனைவரையும் அழைத்து வந்தான்.
33அவர்கள் அனைவரும் கடவுளின் வல்லமை மிக்க மனிதர்கள். பிறவியிலேயே பார்வையற்றவர்கள் அவர்களுடைய ஊழியத்தின் கீழ் பார்வை பெற்றிருந்தனர். பிறவியிலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய ஊழியத்தின் கீழ் நடந்திருந்தார்கள். கடவுள் அவர்களிடமிருந்து எதையும் மறைக்கவில்லை: அவர்களால் உங்கள் பெயர், உங்கள் தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணைச் சொல்ல முடியும்... அவர்களிடமிருந்து எந்த ரகசியமும் மறைக்கப்படவில்லை, அவர்களின் கைகளில் இருந்த அற்புதங்களுக்கு எல்லையே இல்லை.
34ஆனால் இவை அனைத்தும் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரை திசைதிருப்ப முடியவில்லை. இந்த அற்புதங்கள் அனைத்தையும் பாபிலோனின் குறிசொல்லுபவர்கள், மந்திரவாதிகள், ஜோசியம் சொல்லுபவர்கள் மற்றும் மந்திரவாதிகள் பிசாசுகளால் செய்தார்கள், அவர்கள் இவற்றை விட பெரிய அற்புதங்களைச் செய்தார்கள். அவர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்களாகவும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட கடவுளின் ஊழியர்களாகவும் இருந்தனர், நேபுகாத்நேச்சார் அதை அறிந்திருந்தான், எனவே அவர்களுக்குப் அவன் பயப்படவில்லை. [குறிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள் .].
35சில ஆசாரியர்கள் மற்ற ஆசாரியர்களைப் பிரதிஷ்டை செய்திருந்தார்கள்... நேபுகாத்நேச்சார் அவர்களிடம் எல்லாவற்றையும் பற்றியும், மோசே சொன்னதை விளக்க ஆசாரியர்கள் மற்றும் ரபீக்களின் புத்தகங்களின் தொகுப்பான அவர்களின் பிரபலமான டால்முட் பற்றியும் கேள்விகள் கேட்டான் .
36முகமது சொன்னதை அறிக்கையிட்டு விளக்கம் கொடுப்பதற்காக இஸ்லாம் ஹதீஸ்களின் உருவகமானது தான் டால்முட் . சாத்தானின் கூற்றுப்படி, டால்முட் யூதர்களுக்கான நற்செய்தியாகும். [ குறிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள் ].
37ஓர் ஆசாரியனுக்கு ஒரு புத்தகத்தை எழுதும் உரிமையை கடவுள் ஒருபோதும் வழங்கவில்லை, மேலும் ஆசாரியத்துவம் என்பது புதிய உடன்படிக்கையின் கீழ் எபேசியர் 4 இன் ஊழியங்களின் உருவமாகும், ஒரு சபை பாஸ்டர் ,போதகர், தீர்க்கதரிசி, சுவிசேஷகர் மற்றும் அல்லது அப்போஸ்தலன் அதை சொல்வதற்கு நான் காக்குவ்.53 மற்றும் காக்குவ்.57 இல் விளக்கியது போல் ஒரு புத்தகத்தை எழுத முடியாது . [பதிப்பு: சபையார், “ஆமென்!” என்று கூறுகிறார்கள்].
39நேபுகாத்நேச்சார் மீண்டும், "நான் யூதன் அல்ல, ஆனால் உங்கள் கடவுள் ஒரு ஆசாரியனுக்கு வேறொரு ஆசாரியனை அபிஷேகம் செய்யும் உரிமையைக் கொடுக்கிறாரா ? எனக்குச் சொல்லுங்கள் என்றான் . உதாரணமாக, பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு மற்ற அப்போஸ்தலர்களை அபிஷேகம் செய்தார்களா, அதனால் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களின் எண்ணிக்கை 12 ஐத் தாண்டியதா"? அங்கே மீண்டும், அவர்கள் வார்த்தைகளற்றவர்கள் ஆனார்கள் , நேபுகாத்நேச்சார் தண்டனையை அறிவித்தான் , பரிசுத்த தேவதூதர்கள் பரலோகத்தில் மகிழ்ச்சியுடன், "ஓசன்னா! ஓசன்னா! பூமியின் வஞ்சகர்கள் மீது அவருடைய நியாயத்தீர்ப்பு வரும் நேரம் வந்துவிட்டது" என்று கூறினர். [குறிப்பு: சபையார், "ஆமென்!" என்று கூறுகிறார்கள் ].
40மேலும் ஒரு நாள், கடவுளின் நியாயத்தீர்ப்பின் சிம்மாசனத்திற்கு முன்பு அது அப்படியே இருக்கும். கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ, பிரான்ஹாமிஸ்ட் தலைவர்களின் வாய்கள் என்றென்றும் மூடப்படும். அது அப்படித்தான் இருக்கும் , அப்படி இல்லையெனில் ஏப்ரல் 24, 1993 அன்று கடவுள் என்னிடம் பேசவில்லை என்று ஆகிவிடும் . [பதிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள்].
41நேபுகாத்நேச்சார் அவர்களிடம் கேள்விகள் கேட்டான், ஆனால் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. நேபுகாத்நேச்சார் அவர்களிடம் கேள்விகள் கேட்டான், அவர்களால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. மேலும் அவர்கள் ஆமாத் பள்ளத்தாக்கிலுள்ள ரிப்லாவில் ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் கொன்றதாக வேதாகமம் கூறுகிறது. எரேமியாவைத் தவிர மீதமுள்ளவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
42தீர்க்கதரிசி செய்தியாளராக இல்லாத ஒருவர் எப்படி எழுந்து நிற்க முடியும்? அவர் தனது காலத்தின் உயிர் வாழும் தீர்க்கதரிசி செய்தியாளரின் எதிரொலி அல்ல, மற்றும் அவர் ஒரு சபையை நிறுவி அல்லது ஒரு சபையை வழிநடத்துகிறார். கடவுள் சபைகள் மூலமாகப் பேசுவதில்லை, மாறாக ஓர் உயிர் வாழும் தீர்க்கதரிசி செய்தியாளர் மூலமாகப் பேசுகிறார். இதனால்தான் வேதாகமம் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களின் புத்தகமாக உள்ளது. [பதிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள். ].
43இது ஒரு நித்திய சத்தியம், பூமியிலும் பரலோகத்திலும் நீங்கள் இதை ஒருபோதும் மறுக்க முடியாது. உங்கள் காலத்தின் உயிர் வாழும் தீர்க்கதரிசியால் ஞானஸ்நானம் பெற்று பிரதிஷ்டைப்படுத்தப் படாவிட்டால் நீங்கள் கடவுளுக்கு சேவை செய்ய முடியாது.
44இப்போது பாபிலோனின் படைத் தலைவன் எரேமியாவை நோக்கி, “இதோ, இன்று உன் கைகளில் உள்ள சங்கிலிகளிலிருந்து உன்னை விடுவிப்பேன். என்னோடு பாபிலோனுக்கு வருவது உனக்கு நலமாகத் தோன்றினால் வா, நான் உன்னைப் பார்ப்பேன்; ஆனால் என்னுடன் பாபிலோனுக்கு வருவது உமக்குத் தவறாகத் தோன்றினால், வர வேண்டாம்” என்றான். எரேமியா 40:4.
45யூதர்கள் நிராகரித்த தீர்க்கதரிசி எரேமியாவைத் தன் பக்கம் சேர்க்க வேண்டும் என்று அஞ்ஞான அரசனான நேபுகாத்நேச்சார் விரும்பியதால், சேனாதிபதி நேபுகாத்நேச்சாரின் கட்டளைப்படி செயல்பட்டுக் கொண்டிருந்தான். அது இன்றும் அதேதான்.
46கடவுள் ஒரு உண்மையான தீர்க்கதரிசியை பூமிக்கு அனுப்பும் வரை, சபைகளும் தேசங்களும் அந்த தீர்க்கதரிசியை நிராகரிப்பார்கள். உலகத் தோற்ற முதல் தீர்க்கதரிசிகளின் எல்லா சாபங்களும் இரத்தமும் அவர்கள் மீதும் வரும்படி அவர்கள் அந்த தீர்க்கதரிசியைத் துன்புறுத்துவார்கள். [பதிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள் ]. மேலும் எரேமியா பதிலளிக்கவில்லை என்றும், பாபிலோனின் போர்வீரன் எரேமியாவுக்கு உணவுப் பொருட்களையும் பரிசுகளையும் கொடுத்ததாகவும், எரேமியா பெத்தேலுக்கு அருகிலுள்ள மிஸ்பாவுக்குத் திரும்பினார் என்றும், அங்கிருந்து எகிப்தில் உள்ள தாபன்ஹீஸுக்குத் தனது சீடரான நேரியாவின் மகன் பாரூக்குடன் சென்றதாகவும் வேதாகமம் கூறுகிறது. நீங்கள் பார்க்கிறீர்களா ?
47எரேமியா பாபிலோனுக்குச் செல்ல விருப்பமாக இருந்தார், ஏனென்றால் அவர் ஒரு இளவரசனைப் போல வரவேற்கப்படுவார், எல்லா மரியாதைகளையும் பெறுவார், சமாதானமாக இருப்பார் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் எரேமியா ஏன் பாபிலோனுக்குப் போக மறுத்தார்? கடவுளின் நகரமான புனித எருசலேமின் மீது அவருக்குள்ள அன்பின் காரணமாகவா? இல்லை ஐயா! ஆனால் எரேமியா ஏன் பாபிலோனுக்குப் போக விரும்பவில்லை? ஆனால் அது ஏன்? உனக்கு அது தெரியாது.
48ஆனால் தானியேல் தீர்க்கதரிசியின் ஊழியத்தினிமித்தம் அது நடந்தது என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஏனென்றால் பூமியில் ஒரே நேரத்தில் இரண்டு முதல் தர தீர்க்கதரிசிகள் இருப்பது ஒழுங்கு அல்ல. [பதிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள்]. எரேமியாவும் தானியேலும் வெவ்வேறு காலங்களில் பூமியில் இரண்டு தீர்க்கதரிசிகளைப் போல இருந்தனர், எனவே தானியேலின் ஊழியத்தின் காரணமாக எரேமியா பாபிலோனுக்குச் செல்ல முடியவில்லை. ஆமென்!
49மேலும் ரிப்லாவில், தீர்க்கதரிசிகளுக்கு முன்பாக, சிதேக்கியாவின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது; அவர்கள் அவன் கண்களுக்கு முன்பாக அவன் மகன்களைக் கொன்றார்கள், யூதாவின் எல்லாப் பிரபுக்களையும் அவன் கண்களுக்கு முன்பாகக் கொன்றார்கள். இதுவே பூமியில் அவன் பார்த்த கடைசி விஷயம், அதன் பிறகு அவன் கண்கள் பிடுங்கப்பட்டு, ரிப்லாவில் வெண்கலச் சங்கிலிகளால் கட்டப்பட்டு, மெசொப்பொத்தேமியாவின் எல்லையில் உள்ள அந்நிய தேசமான பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டான்.
50ஆனாலும் அவர் ஒரு யூதராக இருந்தார், மேலும் இன்றைய ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் அனைத்து ராஜாக்கள் மற்றும் ஜனாதிபதிகளை விட அவர் அதிக ஆவிக்குறியவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் எரேமியாவைத் தவிர இஸ்ரவேலின் அனைத்து தீர்க்கதரிசிகளும் அவருடைய மேஜையில் சாப்பிட்டார்கள். இவ்வாறாக தனது ஆட்சிக் காலத்தில் கடவுளுக்கு ஒரு மரியாதைக்குரிய இடத்தைக் கொடுப்பதாக அவர் நினைத்தார்.
51மேலும் பாபிலோனியர்கள் சிதேக்கியாவின் வீட்டையும், பிரபுக்களின் வீடுகளையும் நெருப்பால் எரித்து, எருசலேமின் சுவர்களை இடித்துத் தள்ளினர் என்று வேதாகமம் கூறுகிறது. அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் விலைமதிப்பற்ற பொருட்களையெல்லாம் பாபிலோனுக்குக் கொண்டு சென்றார்கள். எருசலேமிலிருந்து நியாயத்தீர்ப்பின் புகை எழுந்தது. நீங்கள் பார்க்கிறீர்களா ?
52ஓ இஸ்ரவேலே, நீ தேவனுடைய மகத்தான பெண் சிங்கம். நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவைப் பரிசுத்தமாகச் சேவித்தால், பூமியிலுள்ள தேசங்களை உங்களுக்குச் சேவை செய்வதற்காகவே கடவுள் படைத்தார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் பயத்துடனும் பரிசுத்தத்துடனும் அவரைச் சேவிக்க மறுத்தால், கடவுள் உங்கள் நியாயத்தீர்ப்புக்காக பூமியின் தேசங்களைப் படைத்தார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். [பதிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள் ].
53ஓ ஆப்பிரிக்காவே , நீ பிறப்பதற்கு முன்பே, கடவுள் உன்னைச் சிறியவனாக்கி, உன்னை தேசங்களின் அடிமைத்தனத்திற்கு விதித்தார், ஏனென்றால் நீ இன்று மனிதகுலத்திற்கு மாயக் கலையைக் கற்பிப்பாய் என்பதற்காக.
54கடவுளே, நான் ஏன் கிறிஸ் ஓயாக்கிலோம், டேவிட் ஓவூர், இம்மானுவேல் மகண்டிவா, உபெர்ட் ஏஞ்சல், டி. பி. ஜோசுவா, டேவிட் ஓயெடெபோ மற்றும் இந்த ஆப்பிரிக்க தீர்க்கதரிசிகள் அனைவரையும் போல ஆப்பிரிக்கனாக இருக்கிறேன்? கடவுளே, என் கண்கள் ஏன் டி.டி. ஜேக்ஸ், மனாசே ஜோர்டான், ஜெஸ்ஸி ஜாக்சன், கில்லர்மோ மால்டொனாடோ, டான்டே கெபல், கிளாடியோ ஃப்ரீட்ஸன் மற்றும் பூமியின் இந்த தீர்க்கதரிசிகள் அனைவரையும் ஏன் பார்க்கின்றன?
55கடவுளே, என் கண்கள் டக் பாட்செலர், பில்லி கிரஹாம், எடிர் மாசிடோ, வால்டெமிரோ சாண்டியாகோ, சிலாஸ் மலஃபையா, பவுலா வைட், ஜாய்ஸ் மேயர் மற்றும் ஆல்பர்டோ மோட்டேசி ஆகியோரை ஏன் பார்க்கின்றன? கடவுளே, யோவேல் 2:28 மற்றும் 1 கொரிந்தியர் 2:4-5 இன் கீழ் வரும் இந்த குறி சொல்பவர்கள் மற்றும் மந்திரவாதிகளான பென்னி ஹின், ஜான் ஹேகி, பாட் ராபர்ட்சன், ஜோவாகிம் கோன்சால்வ்ஸ், டொனால்ட் பார்னெல் மற்றும் அலெஜான்ட்ரோ புல்லன் ஆகியோரை என் கண்கள் ஏன் பார்க்கின்றன? [பதிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள் ].
56உலகம் முழுவதும் இஸ்லாமும் மாயக் கட்டளைகளும் இருப்பது உண்மைதான், ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவைத் தங்கள் நடைமுறைகளில் கொண்டு வருவதில்லை, மேலும் அவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லவில்லை. டாமி ஆஸ்போர்னின் பிரச்சாரத்திலும், பென்னி ஹின்னின் பிரச்சாரத்திலும் அதே கிறிஸ்தவர்கள் இருக்க முடியும் என்பதை நேபுகாத்நேச்சார் கண்டார், அதே கோட்பாடுகள் இல்லாவிட்டாலும், நாளை இந்த அல்லது அந்த தீர்க்கதரிசியின் பிரச்சாரத்திலும் அதே கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். இப்போது, ஒரு நாய் கூட அதன் எஜமானரை அடையாளம் கண்டுகொள்கிறது. நீங்கள் பார்க்கிறீர்களா ? அவர்கள் கிறிஸ்தவர்கள், அதே நேரத்தில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் ஆவர். இது பாபிலோனின் ஸ்திரத்தன்மையைத் தொந்தரவு செய்யவில்லை, ஆனால் நேபுகாத்நேச்சார் இன்னும் புரிந்துகொள்ள விரும்பினார்.
57இப்போது, பூமியின் ராஜாக்களே, ஜனாதிபதிகளே, பிரபுக்களே, நீங்கள் அதைச் செய்கிறீர்களா? ஆப்பிரிக்க, அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய ராஜாக்களே, ஜனாதிபதிகளே, ஒரு நாள், எல்லா காலங்களிலும் இறந்தவர்களும் உயிருள்ளவர்களும் கடவுளுக்கு முன்பாக நியாயத்தீர்ப்பில் நிற்பார்கள், நேபுகாத்நேச்சார் நின்று உங்களைக் கண்டனம் செய்வார் என்பதை நீங்கள் அறிவீர்கள். [பதிப்பு: சபையார் , “ஆமென்!” என்று கூறுகிறார்கள்].
58அதை மறந்துவிடாதீர்கள்! இன்று, 21 ஆம் நூற்றாண்டில், பாபிலோனின் குறிசொல்பவர்களும், மாயவித்தைக்காரர்களும், மந்திரவாதிகளும் கடவுளின் மனிதர்களாக மாறிவிட்டனர், பாபிலோனின் மந்திரக் கலைகள் கடவுளின் பரிசுகளாக மாறிவிட்டன! நீங்கள் அதற்கு மானியம் வழங்கி நிதியுதவி செய்கிறீர்கள்!
59நீங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, எந்த வகையிலோ அதை ஆதரித்த எல்லா நேரங்களுக்கும் ஒரு நாள் நீங்கள் பதில் சொல்வீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? இஸ்ரவேல் சோதோம் என்றும் எகிப்து என்றும் அழைக்கப்படும் என்று எழுதப்பட்டுள்ளது; ஒருபுறம், ஓரினச்சேர்க்கை மற்றும் மாம்சத்தின் அனைத்து பாவங்களுக்கும் சோதோம் என்றும், மறுபுறம், அதன் எண்ணற்ற தெய்வங்கள் மற்றும் சபைகளுக்கு எகிப்து என்றும் அழைக்கப்படும். ஆனால் பூமி முழுவதும் இப்போது சோதோம் மற்றும் எகிப்து என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.[குறிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள்].
60மேலும் ஜனாதிபதிகளே, அமைச்சர்களே, பூமியின் பிரபுக்களே, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இரண்டு நிலைகள் மட்டுமே உள்ளன: கடவுளுடன் நேபுகாத்நேச்சாரின் நிலை, அல்லது சபைகள் மற்றும் அவர்களின் பொய்யான தீர்க்கதரிசிகளுடன் சிதேக்கியாவின் நிலை!
61ராஜாக்களே, ஜனாதிபதிகளே, உங்கள் அரசாங்கங்களே! பூமியின் பிரபுக்களே, பூமி இப்படித்தான் இருக்கும் என்று கடவுள் அறிவார், ஆனால் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு, உங்களைப் போன்ற ஒரு ராஜா அதை வென்றார், அவர் ஒரு யூதர் அல்ல. மேலும் நீங்களும் அவ்வாறே செய்யக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்! இல்லையெனில், நியாயத்தீர்ப்பில், இந்த ராஜா எழுந்து உங்களைக் கண்டனம் செய்வார்.
62அமெரிக்கர்களே, நேபுகாத்நேச்சாரை அமெரிக்காவின் பொறுப்பில் அமர்த்துங்கள், செப்டம்பர் 11, 2001 அன்று அவரது அறிக்கை இப்படி இருக்கும்: “அன்புள்ள சக அமெரிக்கர்களே, அமெரிக்காவைத் தாக்கியது கடவுள்தான். பின்லேடனை விட பெரிய எதிரிகள் நமக்கு இருக்கிறார்கள், அந்த எதிரிகள் டாமி ஆஸ்போர்ன், ஜோயல் ஓஸ்டீன், டி.டி. ஜேக்ஸ், மோரிஸ் செருல்லோ, டக் பாட்செலர், பில்லி கிரஹாம் மற்றும் நமது கடவுளின் மனிதர்கள். [பதிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள்].
63தேசங்களின் ராஜாவில் ஒரு நன்மை இருக்க முடியும் என்பதை நேபுகாத்நேச்சார் பூமி முழுவதற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் கற்பித்தார். எபிரேயர்களின் தேவனாகிய யெகோவா இந்த ஜாதிகளின் ராஜாவை: “நேபுகாத்நேச்சார், என் ஊழியக்காரன் ! " என்று அழைத்தார் . நீங்கள் பார்க்கிறீர்களா ?
64பூமியின் முகத்தில் எங்காவது நீங்கள் ஒரு ராஜாவாகவோ அல்லது ஒரு ஜனாதிபதியாகவோ இருக்கலாம், மேலும் அவருடைய திட்டத்தின்படியும் அவருடைய சித்தத்தின்படியும் தேவனுடைய உண்மையான ஊழியராக இருக்கலாம்! ஆனால் உங்களுக்கு ஆர்வமுள்ளவை, உங்கள் நேரத்தை முழுவதுமாக ஆக்கிரமிக்கும் அனைத்தும் பயனற்றவை, அவை கடந்து போய் மறக்கப்படும்!
65மேலும் இன்று நீங்கள் காணும் சபைகள் எகிப்தின் கடவுள்களின் பலிபீடங்கள் என்பதையும், ரிம்மோன், பூட்டோ, ஜீயஸ், ஐசிஸ், ஒசைரிஸ், தாகோன், அமுன்-ரே மற்றும் பிற தெய்வங்கள் அனைத்தும் இன்று இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகின்றன என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதில் கவனம் செலுத்தவில்லை. மேலும் கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிஷேசக மற்றும் பிரான்ஹாமிஸ்ட் சபைகள் எகிப்தின் கடவுள்களின் பலிபீடங்கள் ஆகும் .
66பூமியின் ஜனாதிபதிகளும் ராஜாக்களும் நீங்கள்; அமைச்சர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே, மேயர்களே..., நீங்கள் பிச்சை எடுக்கும் மந்திரவாதிகளை, வேதாகம வசனங்களை மனப்பாடமாக ஒப்பிப்பவர்களை வளர்க்கிறீர்கள். அவர்கள் உங்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள், நீங்கள் எதுவும் சொல்லவில்லை, ஏனென்றால் அது உங்கள் ஆட்சியைத் தொந்தரவு செய்யாது? நியாயத்தீர்ப்பில் நீங்கள் அதற்குப் பதிலளிப்பீர்கள்! நேபுகாத்நேச்சார் அதைச் செய்யவில்லை. [பதிப்பு: சபையார் “ஆமென்!” என்று கூறுகிறார்கள் ].
67அந்த ஆசாரியர்கள், போதகர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளுக்கு, நேபுகாத்நேச்சார் மானியம் வழங்கவில்லை. மேலும் பில்லி கிரஹாம் ஜார்ஜ் புஷ், ஒபாமா மற்றும் பல அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இருந்தது போல் நேபுகாத்நேச்சருக்கு ஆவிக்குரிய ஆலோசகராக இருக்க முடியாது.
68இஸ்ரவேலின் ராஜாவாகிய சிதேக்கியா ஏற்றுக்கொண்டு, நிதியுதவி செய்ததை, தேசங்களின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் ஏற்றுக்கொள்ளவில்லை. நேபுகாத்நேச்சார் பாபிலோனை மந்திரவாதிகள், குறிசொல்பவர்கள், வசனங்களை ஒப்பிப்பவர்கள், அபிஷேகம் செய்யப்பட்ட தீர்க்கதரிசிகள், பென்னி ஹின், பில்லி கிரஹாம், மனாசே ஜோர்டான் மற்றும் டக் பாட்செலர் போன்ற அற்புத வேலையாட்கள் ஆகியோரிடமிருந்து சுத்திகரித்தான் . ஆனால் அமெரிக்க ஜனாதிபதிகளே, நீங்கள் அதைச் செய்தீர்களா? மேலும் ஐரோப்பிய, ஆப்பிரிக்க மற்றும் ஆசிய ஜனாதிபதிகளே, நீங்கள் அதைச் செய்தீர்களா? ஆலய விற்பனையாளர்கள் சிதேக்கியாவுடன் செய்தது போல் உங்கள் மேஜையில் சாப்பிடுவதில்லையா? கடவுளுக்கு முன்பாக நியாயத்தீர்ப்பில் நீங்கள் அதற்குப் பதில் சொல்வீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
69பூமியின் தலைவர்களே, பிரபுக்களே, நீங்கள் எங்கிருந்தாலும், இது உங்களுக்குச் சொல்லப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! மேலும் கடவுளுக்கு முன்பாக நியாயத்தீர்ப்பில் நீங்கள் அதற்குப் பதிலளிப்பீர்கள்! மேலும் இவைகளைக் கேட்ட பின்பும் , நீங்கள் அந்த மந்திரவாதிகளுடன் ஒரே மேஜையில் உட்காரப் போகிறீர்கள் என்றால், கடவுளுக்கு முன்பாக நியாயத்தீர்ப்பில் அதற்குப் பதிலளிப்பீர்கள். புரிந்துகொள்ளக்கூடியவர், அவர் புரிந்துகொள்ளட்டும்!