



Kacou 124 (Kc.124) : காக்குவ் பிலிப்பு, யூதர்களின் தீர்க்கதரிசி
(செப்டம்பர் 28, 2014 அன்று, ஐவரி கோஸ்ட் - அபிட்ஜானின் பிராந்தியம் சிக்கென்சியில் பிரசங்கித்தது)
1 மனித இனத்தால் மறக்கமுடியாது என்பதற்கு சர்வ வல்லமையுள்ள தேவன் ஒரு பெரிய அடையாளத்தைக் கொடுத்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு, செப்டம்பர் 12, 2014 அன்று, T.B.ஜோசுவாவின் சபை கட்டிடம் அவரது விசுவாசிகள் மீது இடிந்து விழுந்தது. காயமடைந்தவர்களைக் கணக்கில் கொள்ளாமல் கிட்டத்தட்ட 120 பேர் இறந்தனர். அவ்வாறே கர்த்தராகிய இயேசுவின் காலத்தில் சீலோவாம் கோபுரம் அந்த தேவபக்தியுள்ள யூதர்கள் மீது விழுந்தது போலவே.
2 மேலும் 2002 முதல், இந்த சாத்தானிய T.B.ஜோசுவா ஒரு பிசாசு என்று நான் எத்தனை முறை குறிப்பிடதவறவில்லை என்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள்? 120 பேர் இறந்தனர்! அவனுடைய ஊழியத்தின் போது, அவன் எத்தனை பேரை மரித்தோரிலிருந்து எழுப்பினான்? அந்த ஜனங்கள் அனைவரும் நரகத்திற்குச் செல்வது உண்மை. ஆனால் கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரான்ஹாமிஸ்டுகளாகிய நீங்கள் அனைவரும்தான், அந்த ஜனங்களின் இரத்தத்திற்கு பொறுப்பு. இயேசு கிறிஸ்துவின் பெயரால் இத்தனை வருட சாத்தானிய செயல்களுக்கான சம்பளம் அது.
3 T. B. ஜோசுவா யார்? தேவ ஊழியர்கள் என்று நீங்கள் அழைக்கும் அந்த குறிசொல்பவர்கள், மாயவித்தைக்காரர்கள் மற்றும் வசனங்களை ஓதுபவர்கள் யார்? அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் வாசலில் உள்ள பிச்சைக்காரர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் பிலாத்து மற்றும் ஏரோதின் ஆவிக்குரிய ஆலோசகர்களாக இருந்தார்களா? என் வார்த்தையை கேளாமலிருங்கள், ஆனால் ஒரு நாள், நீங்கள் தேவனுக்கு முன்பாக பதிலளிப்பீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்]
4 ஏப்ரல் 24, 1993 அன்று எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தேவனுடைய வார்த்தையை உங்களுக்கு அறிவித்தேன். மேலும் நான் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறேன். ஆம், நான் யாருக்கும் எதிராக இருந்ததில்லை. நீதிபதி அவர் கண்டிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரானவர் அல்ல. ஏப்ரல் 24, 1993 ன் பணிநியமனத்தின்படி செயல்படுகிறேன். எப்போதும் சமரசம் செய்து கொள்ளாமல் தரிசனத்தைக் கடைப்பிடித்ததால் உங்களை எதிர்த்து தனித்து நின்று வெற்றி பெற்றேன்.
5 உலகம் இதுவரை பெற்றிராத மோசமான பிசாசுகள் நீங்கள். இனி லெனின் இல்லை. பெனிட்டோ முசோலினி இல்லை, ஹிம்லர் இல்லை. அடால்ஃப் ஹிட்லரும் ஜோசப் ஸ்டாலினும் இல்லை, ஆனால் அவர்களைப் போன்ற கடவுளின் மோசமான எதிரிகள் இயேசு கிறிஸ்துவின் பெயரால் பூமியில் தங்கள் கரங்களில் வேதாகமத்துடன் உள்ளனர்.
6 இனி கம்யூனிசம் இல்லை. பாசிசம், நாசிசம் மற்றும் கெஸ்டபோ இல்லை, ஆனால் உங்கள் சபைகளோ மோசமாக உள்ளன, மேலும் உலகம் அதை போற்றுகிறது. கடவுளே, T.B. ஜோசுவாவின் சபை இடிந்து விழுந்த போது அங்கு உயிர் பிழைத்தவர்கள் ஏன் இருந்தனர்? ஆதியாகமம் 6:12 இன் படி பூமியில் இரட்சிப்பின் எல்லா வழியையும் கெடுத்துவிட்ட சபைகளின் பாதிரியார்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் மீது அவர்களின் கட்டிடங்கள் ஞாயிற்றுக்கிழமை காலைகளில் ஏன் இடிந்து விழுவதில்லை? அவர்களின் பெரிய கூட்டங்களுக்கு அவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளும் விமானங்களும் ஏன் அவர்களுடன் விபத்துக்குள்ளாவதில்லை? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
7 உண்மையான கிறிஸ்தவம் அழிக்கப்பட்டு, அதன் அடித்தளமானது ரோமாபுரியின் போப்பாகிய அதன் மஹோமதுவுடன் மற்றொரு கிறிஸ்தவம் எழுந்தது, சாலமோன் கோயில் இடத்தில் அல்-அக்ஸா மசூதி போல் உண்மையான இடத்தில் ஒரு பொய்யான கிறிஸ்தவம். இது ஒரு தவறான கிறிஸ்தவம். மேலும் அவர்கள் தீமையை கடைபிடிக்கிறார்கள் மற்றும் பொல்லாங்கான கலாச்சாரத்தை கொண்டுள்ளனர்.
8 அவர்கள் கூட்டங்களுக்கு என்னை ஏன் அழைப்பதில்லை? கத்தோலிக்க ஆயர் பேரவைகளில் கத்தோலிக்கர்கள் மட்டுமே உள்ளனர். சுவிசேஷ பிரச்சாரகூட்டங்களில் சுவிசேஷகர்கள் மட்டுமே உள்ளனர். பிரான்ஹாமிஸ்ட் கன்வென்ஷகளில் பிரான்ஹாமிஸ்டுகள் மட்டுமே உள்ளனர். அவர்கள் என்னையும் ஏன் அழைக்கவில்லை?
9 கிறிஸ்தவ வரலாற்றில் முதல் பெரிய கூட்டம் 325 இல் நைசியா கவுன்சில் ஆகும். அந்தச் சபையில், எல்லாவித மனப்போக்குகளும் கொண்ட தேவ மனிதர்கள் இருந்தனர். நிகோமீடியாவின் யூசிபியஸ் இருந்தார், ஆரியஸ் இருந்தார். ஜான் கிறிசோஸ்டம், அலெக்ஸாண்டிரியாவின் அதானசியஸ்... கான்ஸ்டான்டிநோபிள், ஜெருசலேம், அந்தியோக்கியா, ரோம் மற்றும் பலவற்றிலிருந்து சிலர் இருந்தனர்.
10 சிசேரியாவின் யூசிபியஸ், கான்ஸ்டான்டினோப்பிளின் அலெக்சாண்டர், ஜெருசலேமின் மக்காரியஸ் போன்ற பெரிய பிரசங்கிகள் இருந்தனர். முந்நூறுக்கும் மேற்பட்ட பலவிதமான கோட்பாடுகளைக் கொண்ட மனிதர்கள் இருந்தனர். வாரக்கணக்கில், ஒவ்வொருவரும் சத்தியம் என்று நம்பியதை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தினர்.
11 இறுதியில், கடவுளிடமிருந்து வருகின்ற சத்தியமே வெற்றி பெற்றது. நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்] நைசியா கவுன்சிலுக்கு முன்பு, திரளான கோட்பாடுகள் இருந்தன, ஆனால் கவுன்சிலுக்குப் பிறகு, பலர் மனந்திரும்பினர். கவுன்சிலுக்கு முன்பு, நூற்றுக்கும் மேற்பட்ட சுவிசேஷங்கள் இருந்தன, ஆனால் கவுன்சிலுக்குப் பிறகு, நம்மிடம் உள்ள நான்கு மட்டுமே எஞ்சியிருந்தன.
12 உங்களிடம் ஒரே தேவனும் ஒரே பரிசுத்த ஆவியும் இருந்தால், உங்களால் சத்தியங்கள் என்று அழைக்கப்படுவதை நீங்கள் ஏன் ஒப்பிட்டுப் பார்க்ககூடாது? அதே இயேசு கிறிஸ்துவையும் அதே பைபிளையும் நாங்களும் ஒப்புக்கொண்டால், உங்கள் மாநாடுகளுக்கு அழைக்கப்படும் முதல் நபராக நான் ஏன் இருக்கவில்லை?
13 நல்லது, இப்போது கவனியுங்கள்: 1993 இன் தரிசனத்தைப் பற்றிய புதிய வாசிப்பு என்னிடம் உள்ளது. பவுலைப் போலவே, தேசங்களுக்கும் யூதர்களுக்கும் உரையாற்றக்கூடிய தீர்க்கதரிசன ஊழியத்தைப் பெற்றேன் என்பதை நான் புரிந்துகொண்டேன். பவுல் யூதர்களிடமிருந்து தேசங்களிடம் செல்கிறார் என்பதை தவிர நான் தேசங்களிடமிருந்து யூதர்களிடம் செல்கிறேன்.
14 பவுல் தொடங்கி நான் வரைக்கும், கிழக்கிலிருந்து மேற்கு வரை ஐரோப்பா வழியாக சூரியனின் பயணப்பாதைக்கு ஏற்ப, பராக்கிராமசாலிகளான தீர்க்கதரிசிகள் தேவனின் சார்பாகப் பேசினர், ஆனால் நேரம் இன்னும் வராததால் அவர்களில் யாரும் இஸ்ரேலுடன் பேசவில்லை. ஆனால் இப்போது, ஏசாயா மற்றும் எசேக்கியேலைப் போல, தனது தேசத்தை விட்டு வெளியேறாமல், ஒரு தீர்க்கதரிசி இஸ்ரேல் உட்பட மற்ற தேசங்களுடன் பேசுகிறார், ஏனெனில் இந்த காக்குவ் பிலிப்பு யூதர்களின் தீர்க்கதரிசியாகவும் இருக்கிறார். அவர் தான், எசேக்கியேல் 10 இன் ஐந்தாவது கேருப், அவர் தேசங்களின் சுத்திகரிப்புக்காக எரிகின்ற நெருப்புத்தணலை கொண்டிருந்தார் மற்றும் காக்குவ் 36 இன் படி கிழக்கு நோக்கிப் பார்த்தார்.
15 ஒரு நாள், உலகப் பொருளாதாரம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மேலும் வெளிப்படுத்துதல் 8:2 முதல் 3 வரை, ஏழு சபை காலங்களின் ஏழு தேவதூதர்களுக்குப் பிறகு, தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக பொன் தூபகலசத்தை வைத்திருக்கும் அதே தேவதூதன் வருகிறார். மேலும் அவரது குரல் முத்திரைகள் திறக்கப்பட்ட போதிருந்த ஒரு தேவதூதனுடைய குரல் அல்ல, ஆனால் ஏப்ரல் 24, 1993 இன் தரிசனத்தின்படி ஆட்டுக்குட்டியானவருடைய குரல். இந்த ஊழியமானது பெரியது. [ஆசிரியர் குறிப்பு: சபையார், "ஆமென்!" என்கிறார்கள்].
16 இப்போது, பொன் தூபகலசம் எங்கே? தானியேல் 12:10-ன் கிருபாசனம் எங்கே? மற்றும் பரிசுத்தவான்கள் இன்று எங்கே? மத்தேயு 27:51 முதல் இனி பிரகாரத்திற்கும் பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையே திரைச்சீலை இல்லை, மேலும் உலகமானது, எபிரேயர் 9:2 இன் படி குத்துவிளக்கு எனப்படும் ஏழு சபை காலங்களுக்கும் ஞானஸ்நானம் தேவையாயிராமல் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடிந்தது, ஆனால் ஆதாம் முதற்கொண்டு உயிருள்ள மற்றும் நித்திரையாயிருக்கும் பரிசுத்தவான்கள் அனைவரும் காத்திருக்கும் சுத்திகரிப்பானது மத்தேயு 27:51 இன் கிழிக்கப்பட முடியாத இரண்டாந்திரைக்குப் பின்னால் உள்ளது. ஆம், இரண்டாம் திரையானது இருக்கிறது, அந்த இரண்டாவது திரைக்குப் பின்னால் தான் எபிரேயர் 9:3 முதல் 5 வரையிலான பொன் தூபகலசம், கிருபாசனம் மற்றும் ஒருபோதும் அழியாத மன்னா ஆகியவை உள்ளன. [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்” என்கிறார்கள்!]
17 ஐரோப்பாவிலிருந்து, மார்ட்டின் லூதர், ஜான் கால்வின், உல்ரிச் ஸ்விங்லி, ஜான் நாக்ஸ் மற்றும் ஜான் வெஸ்லி ஆகியோர் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா காரணமாக இஸ்ரேலுக்கு வெளிச்சப்பந்தந்தை கொடுக்க முடியவில்லை. வில்லியம் பிரான்ஹாம் எண்ணங்கொண்டிருந்த போதிலும் அவரால் இஸ்ரேலுக்கு வெளிச்சப்பந்தந்தை கொடுக்க முடியவில்லை, ஏனெனில் ஆப்பிரிக்காவானது இஸ்ரேலுடனான சந்திப்பையும்கூட பெற்றாக வேண்டும்.
18 யூதர்களின் கடவுளான அதோனாய் தேசங்களின் கடவுளாகவும் இருக்க முடியுமென்றால், சில யூதர்கள் தேசங்களுக்கு தீர்க்கதரிசிகளாகவும், தேசங்களுடைய ஒரு மனிதன் யூதர்களின் தீர்க்கதரிசியாகவும் ஏன் இருக்க முடியாது? அந்த யூதர்கள் என்னை விசுவாசிக்கும் அளவுக்கு போதுமான தாழ்மையுடன் இல்லை, ஆனாலும் அதுதான் முற்றிலுமான உண்மை. இன்னும் நேரம் வராததால் அவர்கள் என்னை நிராகரிக்கலாம். ஆனாலும் அதுவே சரியான உண்மை.
19 இப்போது ஏப்ரல் 24, 1993 தரிசனத்தின் அந்த இரண்டு புறாக்கள் எங்கிருந்து வந்தன, அவை எங்கு செல்கின்றன? இன்று நான் சொல்லக்கூடியதை, சில யூதர்கள் ஒரு நாள் அவர்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்வார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
20 ஆனால் அதற்கு முன், முதல்முறையாக தேசங்களுக்கான ஒரு தீர்க்கதரிசி, அவன்தானே யூதர்களின் கடவுளான, அதோனாய் என்ற பெயரால் இஸ்ரேலுக்கு உரையாற்றுகிறான். ஒரு யூதனால்தான் கிறிஸ்தவத்தின் வெளிச்சப்பந்தமானது புறஜாதிதேசங்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் ஒரு நாள், இந்த வெளிச்சப்பந்தத்தை இஸ்ரேலுக்குத் திரும்பக் கொடுப்பவன் புறஜாதி தேசங்களின் ஒரு மனிதன்.
21 மேலும் மோசேயின் காலத்திலிருந்து இன்றுவரை, இரண்டு வகையான தீர்க்கதரிசிகளைப் பார்க்கிறோம். ஒருபுறம், மோசே மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை போல இஸ்ரவேலருக்கு மட்டுமே அவர்களுடைய செய்திகளை கொண்டு பேசியவர்கள், மறுபுறம், ஏசாயா, எரேமியா மற்றும் தானியேல் போல இஸ்ரேல் மற்றும் தேசங்களுக்கு அவர்களுடைய செய்திகளை கொண்டு பேசியவர்கள்.
22 அதற்கு ஒரு தெய்வீக சட்டம் உள்ளது: 400 ஆண்டுகளுக்கு முன்பு பார்வோனின் வீட்டில் யோசேப்பு விட்டுச் சென்ற வெளிச்சப்பந்தத்தை எடுத்து வருவதற்காக மோசே சென்றான். யோசேப்பைப் போலவே பார்வோனின் வீட்டில் தன்னை ஒரு யூத குழந்தையாக மோசே கண்டுகொள்ளும்படியான ஒரு சூழ்நிலையை கடவுள் உருவாக்கினார். இது ஒரு தெய்வீக வெளிப்பாடு.
23 தெய்வீக கட்டளையை மதிக்க மோசே பார்வோனின் வீட்டில் ஒரு எகிப்திய குடிமகனாக இருக்க வேண்டும். ஒரு யூதன் மூலமாகத்தான் சுவிசேஷம் தேசங்களுக்கு வர வேண்டியிருந்தது. இஸ்ரவேலில் கூட, அவர்கள் அனைவரும் ஆபிரகாமின் பிள்ளைகள் என்பது உண்மைதான், ஆனால் நீங்கள் ஆசாரியத்துவத்தில் பங்கு பெற லேவி கோத்திரத்தில் பிறந்திருக்க வேண்டும். மேலும் இது இஸ்லாத்திற்கு பொருந்தாது. இஸ்லாம் யூத மதத்திலிருந்து வந்தது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், இன்னும் வடிவத்தில், அது சரியாக இருப்பதற்கு மஹோமத் முற்றிலும் யூதனாக இருக்க வேண்டும். எனவே, இஸ்லாம் யூத மதத்திலிருந்து வந்தது அல்ல, ஆனால் அது யூத மதத்தின் நகல். இஸ்லாம் யூத மதத்தின் போலியானது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
24 இப்போது இந்த தரிசனத்தைப் பற்றிப் பேசுகையில், ஏப்ரல் 24, 1993 இல் நான் கேட்ட அந்த அறியப்படாத மொழி யூதர்களுக்குப் பேசப்பட்டது என்பதை நான் உறுதியாக உணர்கிறேன். எனவே காக்குவ் பிலிப்பு யூதர்களின் தீர்க்கதரிசி ஆவார், ஏனெனில் இன்று, தேவன் யூதர்களை பூமியின் எந்த தேசமாகவும் பார்க்கிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
25 ஒரு நாள், யூதர்களின் கடவுளான அதோனாய், யூதர்கள் மீது விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றுவார், மேலும் கிறிஸ்தவர்களின் தேவன் இயேசு கிறிஸ்துவை, அவர்கள் சிலுவையில் அறைந்ததை அங்கீகரித்து ஒப்புக்கொள்வார்கள். அதேசமயம் அவர்களில் உள்ள பிசாசின் புத்திரர்கள் யூத மதத்திற்கு அதிக பக்தியுள்ளவர்களாக இருப்பார்கள்
26 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்தத்தில் கர்ப்பம் தரிக்கப்பட்டு, மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார். வேறு எந்த மேசியா வரவேண்டும், எதற்காக வரவேண்டும்? மற்றும் மிட்ஸ்வா (mitzvot) என்பது மத நகைச்சுவையின் தீவிரத்தன்மை.
27 ஏப்ரல் 24, 1993 அன்று, தூதனும் ஆட்டுக்குட்டியுமானவரும் வந்திறங்கினர், தூதனிடம் ஒரு பட்டயம் இருந்தது. ஆட்டுக்குட்டி பலியின் அடையாளமாகும். மேலும் இந்த பலியானது ஏற்கனவே 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, இது யூதர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய பலி. 2000 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலில் பேசி உலகை வலம் வந்து இப்போது ஆப்பிரிக்காவில் இருந்து உங்களிடம் பேசுவது யூதர்களின் கடவுளான அதோனாயின் குரல். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
28 இந்த குரல் இஸ்ரேலில் மீண்டும் பேசும் மற்றும் யூத மதத்தில் பக்தி இல்லாத அனேக எளிய ஜனங்கள் நம்புவார்கள். ஆனால் பொல்லாங்கானவர்கள், யூத மதத்தில் தேவபக்தியுடையவர்கள், புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு மோசமாக நடந்து கொள்வார்கள்.
29 இஸ்ரேலில் நீங்கள் பார்க்கும் யூத மதம் சாத்தானின் மதம் மேலும் தால்முத் மற்றும் மிஷ்னா ஆகியவை சாத்தானின் சுவிசேஷமாகும். அவை சாத்தானின் புத்தகங்கள். யூத மதத்தில் நீங்கள் காணும் அந்த பக்தியுள்ள யூதர்கள் ஆஷ்விட்ஸ் முகாம், நாஜியின் அழிப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம்களைக் கடந்து இருக்கக்கூடாது.
30 ஹசிடிம், மிட்நாக்டிம் மற்றும் யூத மதத்தில் உள்ள பக்தியுள்ள யூதர்கள் அனைவரும் 1941 இல் ஆஷ்விட்ஸ் மற்றும் வார்சாவின் நச்சுவாயு பரவிய அறைகள் மற்றும் வாகனங்களை கடந்து போயிருக்கக்கூடாது. நாஜியின் சுடுகாடுகளில் இருக்க வேண்டியவர்கள் அவர்கள்தான். இன்று இஸ்ரேலில் நீங்கள் காண்கின்ற அனைத்து யூத ரபீகளும், 1945 இல் அவர்களைக் காப்பாற்றிய அமெரிக்கர்கள், சோவியத்துகள் மற்றும் நேச நாடுகளின் தவறாகும். அவர்கள் பிசாசின் புத்திரர்கள்.
31 இதனால்தான் இஸ்ரேல் மசாடாவைப் போலவும், சுற்றியுள்ள நாடுகள் அதன் முற்றுகையின் கோட்டைகளைப் போலவும் இருக்கும் நாள் வருகிறது. வரவிருக்கும் நியாயத்தீர்ப்பின் நாளானது இஸ்ரவேலின் மீது வந்திறங்கும். ஆம், இஸ்ரேல் காசா போலவும், காசா சிங்கக்குட்டி போலவும் படுத்துக் கிடக்கும். யூதர்கள் பாலஸ்தீனியர்களைப் போலவும், அரேபியர்கள் இஸ்ரேலைப் போலவும் இருப்பார்கள். மேலும் யூதரின் குடியிருப்பு எலிகளின் இருப்பிடம் போலவும், நாஜிகள் துளையிடுவது போல எலிகளின் குழிகளில் யூதரின் பாதுகாப்பும் இருக்கும். நீண்ட காலம் வெளியே தரித்திருக்க முடியாத, வேறொரு வாழ்க்கை முறை இருக்கும். இரவுகள் நீண்டதாக இருக்கும், தூக்கம் கலைக்கப்படும்; ஒரு முடிவில்லா பயம். இஸ்ரேலிய இராணுவம் அவமானப்படுத்தப்படும். இஸ்ரேல் அவமானப்படுத்தப்படும். யூதர்கள் கண்ணீருடன் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் திரும்புவார்கள்.
32 அக்காலத்திலே இஸ்ரவேலே, உன்னை நியாயந்தீர்க்கிற தேவன் உன் சிறகுகளை முறித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் உன்மேல் பாய்ந்துவிழ செய்து உன்னைத் தோற்கடிப்பார். நீங்கள் அமைதியைத் தேடுவீர்கள் மேலும் உள்ளேயும் வெளியேயும் நீங்கள் யுத்தத்தை கொண்டிருப்பீர்கள். வெளிப்பாட்டைக் கொண்ட யூதர், யூதமார்க்கத்தாருக்கு எதிராக எழும்புவர். யூதர்களின் தேவனாகிய அதோனாயின் நிமித்தம் தேவனுடைய பிள்ளைகள் பிசாசின் பிள்ளைகளுக்கு விரோதமாக எழும்புவார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
33 ஆம், யெகோவாவின் சேனைகள் ஆயத்தமாக உள்ளன. சிரியா, ஈராக், ஈரான், ஜோர்டான், சவூதி அரேபியா, லெபனான் மற்றும் எகிப்து ஆகியவை உங்கள் நியாயத்தீர்ப்புக்கு தயாராக உள்ளன, ஆனால் தேசங்களுடைய இரட்சிப்பின் காரணமாக தேவன் பொறுமையாக இருக்கிறார். ஆனால் உங்கள் எதிரிகள் உங்களை மென்மேலும் அச்சுறுத்தத் தொடங்கும் போது, அது தேசங்களின் காலம் முடிந்துவிட்டது என்பதற்கான அடையாளமாக இருக்கும்.
34 ஓ இஸ்ரவேலே! இன்று, உனக்கு எந்த பயமும் இல்லை, நீ என்னை அசட்டை பண்ணுகிறாய், ஏனெனில் உலகையே சீர்குலைக்கும் அமெரிக்கா உன் காதலன். ஓ இஸ்ரவேலே, எனக்குச் சொல்லு, பெரிய வலுசர்ப்பமான அமெரிக்கா, எப்படி உனது பாதுகாவலானது? ரோமானிய கடவுள்களுக்கு நீ பலிசெலுத்தாமல், ரோமில் உள்ள போப்பின் மோதிரத்தை முத்தமிடாமல், ஏரோதும், பொந்தியு பிலாத்தும் எப்படி உன்னுடைய பாதுகாவலர்களாக ஆனார்கள்?
35 ஓ இஸ்ரவேலே! நீங்கள் தேசங்களின் அஞ்ஞானக் கொள்கையை தழுவிக்கொண்டீர்கள். கடவுள் உங்களை உங்கள் நிலங்களிலிருந்து வெளியேற்ற மாட்டார், நீங்கள் நாடுகடத்தப்பட மாட்டீர்கள், ஆனால் நீங்கள் பெலனற்றவர்களாக இருப்பீர்கள், உங்கள் அழுகை உங்கள் தேசத்தில் கேட்கப்படும், உங்கள் பெருமை, உங்கள் விபச்சாரம் மற்றும் உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் உங்களுடைய குமாரர்களின் இரத்தம் திரளாக சிந்தப்படும். இன்று அரேபியர்கள் காசாவுக்காக வாதாடுவதைப் போல தேசங்கள் உங்கள் வழக்கை வாதாடும்.
36 ஒரு பறக்கும் பொருள் தங்கக் கலசத்தை (golden cupola) தாக்கும் வரை நான் கடவுளின் தரிசனங்களைப் பார்த்தேன், அது இனி இல்லாமல் போனது, மேலும் உலகம் முழுவதும் பயங்கரமாக இருந்தது. அதன் இடத்தில் ஒரு ஆலயம் எழும்பியது. நான் சொன்னேன், இந்த ஆலயம் செபார்டியர்களுக்கு சொந்தமானதா, அஷ்கெனாசியர்களுக்கு சொந்தமானதா அல்லது கிறிஸ்தவ சுற்றுலா பயணிகளுக்கு சொந்தமானதா? மேசியா வரும்போது, அவர் எந்தப் போக்கைச் சேர்ந்தவராக இருப்பார்? இன்னும், அனைத்து யூதர்களாலும் அவரை ஏற்றுக்கொள்ளும் ஒரே வழி, அவர் ரோமின் போப்பாக வருவதுதான்.
37 பூமிக்கு ஐயோ, சாத்தான் பெரிய அற்புதங்களைச் செய்வான். சாத்தானுடன், இஸ்ரேல் அதன் பழைய யூத நடைமுறைகளால் தேசங்களை வஞ்சிக்கும், ஏனென்றால் தேசங்களுக்கு சத்தியத்தின் அன்பு இல்லை. சிவப்பு நிற பசுக்கள் இஸ்ரேலில் பிறக்கும். மேலும் பல தோற்றங்களும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களும் இஸ்ரேலில் காணப்படும். மேலும் சில யூதர்கள் இஸ்ரேலை மீண்டும் தீட்டுப்படுத்துவார்கள், மேலும் ரபீக்களின் சாத்தானிய பலிகளின் தூபமும் புகையும் வானத்தை நோக்கிச் செல்லும், அந்த பலிகள் மற்றும் தொழுகை காரணமாக கடவுள் மீண்டும் இஸ்ரேலை அடிப்பார்.
38 மிகப்பெரிய முகமூடி பந்து மற்றும் எப்போதும் மிகப்பெரிய களியாட்டமான இஸ்ரேலுக்காக அந்த விஷயங்கள் பூமிக்கு வந்து கடந்து போகும். மேலும் உலகம் முழுவதும் அதன் மீது அபிமானம் உள்ளது. பரிசுத்தவான்கள் போல் வேஷம் மாறிய அஞ்ஞானிகள். நீங்கள் பார்க்கிறீர்களா? பௌத்தர்களாக இருக்கக்கூடிய அஞ்ஞானிகள் ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து பரிசுத்தவான்களின் முகமூடியுடன் வந்துள்ளனர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
39 2000 வருடங்களாக எருசலேம் இல்லை, பொன் குத்துவிளக்கு இல்லை, பொன் பலிபீடம் இல்லை, சாலமோன் ஆலயம் இல்லை, ஊரிம் தும்மிம் மற்றும் ஆரோனின் மார்ப்பதக்கம் இல்லை உடன்படிக்கை பெட்டி இல்லை… ஆம், 2000 ஆண்டுகளாக இஸ்ரேலும் யூத மதமும் இல்லை.
40 ஆட்டுத் தொழுவத்தில் பன்றிகளைப் போல கூடிச்சேரும் யூதர்களிடம் நான் பேசுகிறேன். இஸ்ரவேல் ஆட்டுக்குட்டிகளுக்குப் பதிலாக பன்றிகளைப் பெறும் ஒரு பரந்த ஆட்டுத்தொழுவம்; ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து வந்த பன்றிகள் ஆட்டுக்குட்டிகளைப் போல கம்பளியிழை வளர்க்க வேண்டி சர்க்கஸ் போல கட்டப்பட்ட ஆட்டுத் தொழுவம். அவர்கள் உண்மையில் யூதர்களா? ஹிட்லரும் ஷோவாவும் இருந்தாலும், அதே ஓய்வுநாள், அதே யூதமார்க்கம் மற்றும் அதே பழைய தோராவை கையில் வைத்துக்கொண்டு, அவர்கள் தலையை முன்னும் பின்னுமாக ஆட்டிக்கொள்கிற அதே தீமை ஏன் இன்னும் இருக்கிறது?
41 ஆம், யூத மதம் ஒரு களியாட்டம் மற்றும் ஒரு முகமூடி பந்து. இது ஒரு பெரிய நகைச்சுவை காட்சி… சுத்தமான ஐரோப்பியர்கள் இஸ்ரேலில் ரபீக்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
42 இஸ்ரேலில் நீங்கள் பார்க்கும் ரபீக்களை விட தூரின் நகர உடற்போர்வை மற்றும் அனைத்து கத்தோலிக்க நினைவுச்சின்னங்களும் மிகவும் புனிதமானவை. இது நகைச்சுவை மற்றும் இந்த நகைச்சுவை நடிகர்கள் கிறிஸ்தவ மதத்தில் உள்ளதைப் போலவே பலரும் உள்ளனர்.
43 கனவு காணாதீர்கள். இஸ்ரேலில் நீங்கள் பார்க்கும் அந்த யூதர்கள் நீங்கள் பார்க்கும் கத்தோலிக்கர்களைப் போலவே அஞ்ஞானிகள். நீங்கள் பார்க்கும் புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரான்ஹாமிஸ்டுகளைப் போலவே அவர்களும் அஞ்ஞானிகள். நீங்கள் பார்க்கும் அந்த யூதர்களுக்கு ஒவ்வொரு தெரு முனையிலும் ஜெப ஆலயங்கள் உள்ளன, நீங்கள் பார்க்கும் சபைகள் மற்றும் மேலும் பலவற்றை போலவே ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்ட ஜெப ஆலயங்களாக உள்ளன.
44 2000 ஆண்டுகளுக்கு முன்பு, யூதர்களின் வெவ்வேறு நம்பிக்கைகள் இருந்தபோதிலும் அனைத்து யூதர்களுக்கும் சாலமோன் ஆலயம் இருந்தது. அவர்கள் கத்தோலிக்க, பிரான்ஹாமிசம் மற்றும் உங்களைச் சுற்றி இன்று நீங்கள் பார்க்கும் அனைத்து அஞ்ஞானிகளைப் போல இருக்கிறார்கள். இந்த அஞ்ஞானத்தில்தான் அவர்கள் கர்த்தராகிய இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்.
45 எகிப்தில் பல்வேறு கடவுள்களுக்கு பலவித கோயில்கள் இருந்தன. தாராளவாத யூத மார்க்கம் மற்றும் முற்போக்கான யூத மார்க்கத்தில் இருந்து உருவான சீர்திருத்த யூத மார்க்கம் உள்ளது. ஓரினச்சேர்க்கை மற்றும் லெஸ்பியன் ரபீக்களின் நியமனத்தை அங்கீகரிக்கும் நவீன பழமைவாத யூத மார்க்கம் உள்ளது. தோராவை மட்டும் பயன்படுத்துபவர்களும் உண்டு; தோரா, மிஷ்னா மற்றும் தால்முத் ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் உள்ளனர், மேலும் மிஷ்னா மற்றும் தால்முத்-ஐ மட்டுமே பயன்படுத்துவதும் மற்றும் தங்கள் ஆலயங்களுக்குள் நுழைவதற்கு முன்னர் முஸ்லீம்களைப் போல தங்கள் காலணிகளை கழற்றிவிடும் காரைட்டுகள் போலவும் வேறு சிலர் உள்ளனர்.
46 அனைத்து வண்ணங்கள், வகைகள் மற்றும் சுவைகள் உள்ளன. அவர்கள் அனைவரும் மேசியாவுக்காக காத்திருக்கிறார்கள். மேசியா அவர்கள் மத்தியில் இருந்து வருவார் என்று அஷ்கெனாசிகள் உறுதியாக நம்புகிறார்கள். மேசியா அவர்கள் மத்தியில் இருந்து வருவார் என்று செபார்டிகள் உறுதியாக நம்புகிறார்கள். மித்ராஷிம் அவர்கள் மத்தியில் இருந்து மேசியா வருவார் என்று உறுதியாக நம்புகிறார்கள். மேசியா அவர்கள் மத்தியில் இருந்து வருவார் என்று ஃபலாஷா உறுதியாக நம்புகிறார்கள். அவர்கள் புனித இடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் மீது சண்டையிடுகிறார்கள்.
47 சமீபத்தில், அவர்கள் ஒரு ஜெப ஆலயத்தில் கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கருதப்படும் சிலுவையின் மீது சண்டையிட்டனர். சுத்தமான அஞ்ஞானிகள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
48 இஸ்ரேல் இன்று எகிப்தாகவும் சாலமோன் ஆலயம் அல்-அக்ஸா மசூதியுமாக உள்ளது. மேலும் ஜெருசலேம் இஸ்லாத்தின் மூன்றாவது புனித இடமா? இஸ்ரவேலரே, உங்களுக்கு மிகவும் பிடித்தது எது இஸ்லாத்தின் மூன்றாவது புனித இடமா? உங்கள் மனைவி உங்கள் எதிரியின் மூன்றாவது மனைவியா?
49 உங்கள் தாயும் அதோனாயின் விதவையுமான கதீஜா, ஆயிஷா மற்றும் மதீனாவுக்குப் பிறகு, உலகம் முழுவதற்கும் உங்கள் எதிரியின் மூன்றாவது மனைவியாக ஏன் ஆனார்? இது தெய்வீக தீர்ப்பாக இல்லையென்றால், உங்கள் மனைவியான ஜெருசலேம், ஆயிஷா மற்றும் மதீனாவுக்குப் பிறகு உங்கள் எதிரியின் மூன்றாவது மனைவியாக உலகம் முழுவதற்கும் ஏன் இருக்க வேண்டும்? இஸ்ரவேலரே, இது உங்களுக்கே புரியாத பழமொழி. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
50 அது உன்னுடைய பெருமை, உன் விபச்சாரம், மற்றும் உன் இருதயக்கடினத்திற்கான சம்பளம் ஆகும். அதையும் மீறி, நீங்கள் இன்னும் வரவிருக்கும் மேசியாவைப் பற்றி பேசுகிறீர்களா? உங்கள் தீர்க்கதரிசியான என்னில் அவருடைய குரலை உங்களால் அடையாளம் காணமுடியவில்லை என்றால் நீங்கள் அவரை எப்படி அடையாளம் கண்டு கொள்வீர்கள்? [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. ரோமின் போப்பாக மேசியா உங்களிடம் வருவாரா? இல்லை! ஒரு நாள், மேசியா வருவார், ஆனால் முதலில் உங்கள் மீது நியாயத்தீர்ப்பு வர வேண்டும்.
51 இஸ்ரவேலே, இன்று நீ உன் காதலர்களோடு, பூமியின் தேசங்களோடு, ராஜஸ்திரீயாக அமர்ந்திருக்கிறாய். ஆனால் ஒரு நாள், ஒரு தகவல் மனுக்குலத்தை உலுக்கும். திடீரென்று, ஒரு சிதைவானது ஆலயத்தின் முழு மலையையும் அசைக்கும், அல்-அக்ஸா மசூதியின் நித்திய தங்கக் கலசம் மறைந்துவிடும். அது இடிபாடுகளாக மட்டுமே இருக்கும், உலகம் முழுவதும் பயங்கரம் உண்டாகும்.
52 அல்-அக்ஸா மசூதி என்றென்றைக்கும் மறைந்துவிடும். மேலும் தேசங்களில் பதிலடி மிகப் பெரியதாக இருக்கும், என் பேச்சைக் கேட்காத யூதர்கள் அமைதியாக இஸ்ரேலுக்குத் திரும்புவார்கள், ஷோவாவுக்குப் பிறகு நடந்ததைப் போல கண்ணீருடன் இஸ்ரேலுக்குத் திரும்புவார்கள். முழு உலகமும் இடறலடையும், இருப்பினும், யூத கழுதைகளையும் ஆடுகளையும் வீட்டிற்குத் திரும்பக் கொண்டுவர கடவுள் கண்டுபிடித்த வழிமுறை இதுதான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
53 அதற்குப் பிறகு சாலமோன் ஆலயம் எழும்பும். தேவன் தாம் நேசித்த தாவீதினிமித்தம் அதைச் செய்வார். தேவன் அதை செய்தாலும், இன்னுமாக தாவீதின் தேவன் அங்கு ஆராதிக்கப்படமாட்டார். ஆலயத்தில் ரோமின் போப் மற்றும் ஜனாதிபதிகள் மேசியாவைப் போல ஏற்றுக்கொள்ளப்படும் அளவுக்கு யூதர்கள் தங்கள் அக்கிரமங்களை நிலைநிறுத்துவார்கள்.
54 அதற்குப் பிறகு, உண்மையான இஸ்ரவேலின் காலம் எனக்கு பின்னர் வரும். அக்காலத்தில், நீங்கள் முற்றுகையிடப்படும் வேளையில், நான் இஸ்ரேலுக்குச் செல்வேன், என் இரட்சகரின் தேசத்தை நான் அங்கீகரிப்பேன், யூதனை அவன் தேசத்தில் அடையாளம் காண்பேன். ஆம், இன்று, உங்களுக்கு பயம் இல்லை ஆனால் ஒரு நாள், பயம் உங்களுக்குள் குடிகொள்ளும், என் வார்த்தை உங்களுக்கு புரியும், நீங்கள் என் குரலை அடையாளம் காண்பீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
55 தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களை நினைவுகூர்ந்து இஸ்ரவேலுக்கு வருவார். 70-ல் அழிக்கப்பட்ட யெகோவாவின் ஆலயம் மீண்டும் கட்டப்படும். யெகோவாவின் ஊழியர்களான ஆபிரகாம் மற்றும் தாவீதின் காரணமாக யெகோவாவின் ஆலயம் மீண்டும் கட்டப்பட்டு, அதன் மகிமையும் மகத்துவமும் பூமியின் எல்லைகளை எட்டும். ஆனால் அது ஒரு மனிதப் பெருமையாக மட்டுமே இருக்கும். ஷெக்கினாவின் மேகமோ மகிமையோ இருக்காது, ஆனால் அதன் நினைவகம் கண்ணீரை பெரிதும் ஏற்படுத்தும்.
56 இந்த ஆலயத்தை, யூதர்கள் எகிப்தின் தெய்வங்களின் பலிபீடம் போல அசுத்தமான இடமாக உருவாக்குவார்கள். உலகிலேயே மத விபச்சாரத்தின் மிகப்பெரிய உயரிய ஸ்தலமாக இது இருக்கும். இரவு விடுதி போல தூய்மையற்ற இடமாக இருக்கும். இஸ்ரேலுக்கு யூதர்கள் திரும்புவது அசுத்தமான ஒரு ஆலயத்தின் ஆன்மீக புனரமைப்புக்காக இருக்கும்.
57 இந்த ஆலயத்தின் புனரமைப்பு இஸ்ரேல் தேசத்தில் யூதர்களின் மறுசீரமைப்பின் கடைசி அங்கமாகவும் இருக்கும். இவைகள் பூமியில் சம்பவிக்கும், ஏனென்றால், நான் உங்கள் தீர்க்கதரிசியான காக்குவ் பிலிப்பு, ஏப்ரல் 24, 1993 இல் எனக்குக் கொடுக்கப்பட்ட தெய்வீக தரிசனத்தின் படி, யூதர்களின் தேவனும் ஆமென் என்பவருமான அதோனாய் என்ற நாமத்தில் இவைகள் அனைத்தையும் அறிவித்தேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
58 இப்போது, இந்த மலையின் மேலிருந்து, மக்ரேபின் பின்னால் நின்று கொண்டிருக்கும் சமாரியாவைப் போல வாக்களிக்கப்பட்ட தேசத்தையும், இரட்சிப்பையும் நான் கண்டேன். எனது நாளை அங்கீகரித்த உங்களைப் பொறுத்தவரை, உங்கள் சந்திப்பின் நாளை அங்கீகரித்ததற்காக என்றென்றைக்கும் மகிழ்ச்சியாக இருங்கள். நான் உங்களுக்கும், மனுக்குலத்திற்கும், என்றும் அழியாத ஒரு சுதந்தரமுமானதை அளித்துள்ளேன். கடவுளே, இதுவே முடிவாக இருந்தால், ஜனங்கள் நிறைந்த பெரிய அரங்கத்தின் தரிசனம் என்னவாயிருக்கும்?
59 இப்போது, சர்வவல்லமையுள்ள கடவுள் முழு மனித இனத்திற்கும் உரையாற்றும் இந்த உவமையைக் கேளுங்கள்: மிக நீண்ட காலத்திற்கு முன்பு, பரலோகத்தின் கடவுள் ஒரு தீர்க்கதரிசியை எழுப்பினார். இந்த தீர்க்கதரிசி மிகவும் பெரியவராகவும், மிகவும் வயதானவராகவும் இருந்தார், மேலும் மனிதர்களுக்குள் வாசம்பண்ணாத பரிசுத்த தேவர்களுடைய ஆவி அவருக்குள் இருந்தது. பூர்வ காலங்களிலிருந்து, இந்த தீர்க்கதரிசி ஆப்பிரிக்காவின் தந்தை! இரவும் பகலும் அவரால் பார்க்க முடிந்தது. காலங்களையும் சூழ்நிலைகளையும் படிக்கக்கூடியவர்கள் அவருக்கு மதிப்பளித்தார்கள்.
60 பூர்வகால தீர்க்கதரிசி தான் பரதேசியாய் சஞ்சரித்த காலம் முழுவதும் அவர் செய்ய வேண்டிய எல்லாவற்றிலும் தனது பணியை அடைந்ததற்காக மகிழ்ச்சியடைந்தார், மேலும் அவரது செயல்களும் அவரது வார்த்தைகளும் அவருடைய ஜனங்களின் புத்திரர்களும் அவரது இருதயத்தை மகிழ்வித்தனர். அவர் ஓய்வெடுக்கச் செல்லும் போது, சர்வவல்லமையுள்ள கடவுளின் மகிமையைப் பிரதிபலிக்கும் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் வந்து அவரை ஒரு முறை சுற்றின. அதன் பிறகு, அவர் இல்லை. தூரத்திலிருந்து ஒரு வெளிச்சத்தை இரவிலும் பார்க்கமுடிவதை போல, தொலைதூரமாக இருந்த போதிலும் ஆப்பிரிக்கக் காட்டில் இருந்தும் அவரது விளக்கை காணமுடிந்தது. ஒரு மரத்தைப் போல, அது கடைசியாக தரையில் இருந்து வளர்ந்து, அதன் காலத்தின் அனைத்து மரங்களையும் விட உயரமாக இருந்தது. அதன் பழங்களும் தழைகளும் மனிதர்களுக்கும், வயல் விலங்குகளுக்கும், வானத்துப் பறவைகளுக்கும் மிகவும் நல்லது.
61 அதன் மரம் மிகவும் நன்றாக இருந்ததால் எருசலேமில் உள்ள யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கு, பெரிய விறகுவெட்டி அதை வெட்டினான். கீழே விழுந்தபோதிலும், அதன் கிளைகள் அதன் காலத்து மரங்களை விட உயரத்தில் இருந்தன. மேலும் புரிந்து கொள்ளக்கூடியவன் புரிந்து கொள்ளட்டும்!