(மே 29, 2016 அன்று தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு தனது சிறை அறையில் இருந்து எழுதிய குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டது)
1 தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான், மே 29, 2016 அன்று எனது சிறைச்சாலை அறையில் இருந்து, என்னை நியாயந்தீர்க்கப் போகும் நீதிபதியை நோக்கி எழுதியதுதான் இது.
2 நீதிபதி அவர்களே, பல்வேறு நாடுகளை சேர்ந்த சில ஜனங்கள் என்னை மதப் பிரிவினன், கள்ள தீர்க்கதரிசி, ஆவிக்குரிய தீவிரவாதி போன்ற சில கேலிச்சித்திரங்களை வரைந்தனர், மேலும் இது எனக்கு எதிராக பொதுவானதாக இருந்தது ஆனால் நான் எதுவும் சொல்லவில்லை, அவர்களில் இன்று என்னை உங்கள் கைகளில் ஒப்படைத்தவர்களும் உள்ளனர்.
3 நீதிபதி அவர்களே, எனக்கு எதிரான அவர்களின் தாக்குதல்களை எதிர்கொண்டேன், என்னால் எதுவும் சொல்லமுடியாது, நீதித்துறை அமைச்சர் எனது சீஷராக இருந்தாலும் என்னால் இந்த காரியத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல முடியாது ஏனெனில் இது முற்றிலும் மத விவகாரம். பள்ளியில் தங்கள் வகுப்பு நண்பர்களால் கேலி செய்யப்படுவதைப் பற்றி என் மகள்கள் என்னிடம் கூறியபோது, “அவர்கள் ஜனாதிபதிகள், மன்னர்கள், மஹோமத் மற்றும் போப் போன்ற அனைவரையும் கேலிச்சித்திரம் செய்கிறார்கள். என் பிள்ளைகளே, நீங்கள் அதை மேற்கொள்ள வேண்டும், ஏனென்றால், உங்கள் வாழ்நாள் முழுவதும், இது இப்படித்தான் இருக்கும்” என்றேன். அதற்குப் பதிலடியாகத்தான் என் சீஷர்கள் அந்த மக்களைக் கேலிச்சித்திரம் செய்தார்கள் என்று நினைக்கிறேன்.
4 நான் என் இருதயத்தில் சொன்னேன்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, என் இரட்சகரே, இதோ, நான் இங்கே மரித்து கொண்டிருக்கிறேன். நான் இனி பூமியில் இல்லாமல் போகும்போது, பிசாசின் பிள்ளைகள் என் பெயரை ஒரு தீர்க்கதரிசிக்காகப் பாடுவதற்கு அனுமதிக்க வேண்டாம், அவர் உயிருடன் இருக்கும்போதுதான் ஒருவர் அவரை விசுவாசித்து அவரைப் பின்பற்ற வேண்டும்.
5 மேலும் துன்பத்துடன் நான் பூமியில் வாழ வேண்டிய மீதமுள்ள ஆண்டுகளை நான் மதிப்பிட்டேன், அவற்றை மிக நீண்டதாகக் கண்டேன். நீங்கள் பார்க்கிறீர்களா? சில சமயங்களில் நான் நினைப்பது எப்போதும் நடக்கும் “கடவுளே! நான் பூமியில் இன்னும் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்? பெற்றோர்களிடமிருந்து, கிராமத்திலிருந்து, கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரான்ஹாமிஸ்ட் சபைகளினால் துன்புறுத்தப்பட வேண்டுமா? பூமியிலிருந்து, காவல்துறை, நீதிமன்றங்கள் மற்றும் அனைத்தின் காரணமாகவும் துன்புறுத்தப்பட வேண்டுமா?“
6 ஓ தீர்க்கதரிசிகள் பூமியில் மிகவும் துன்பப்படுகிறார்கள்! "மரணம் எனக்கு ஒரு ஆதாயம்" என்று பவுல் சொல்ல முடியும். நான் பவுலைப் புரிந்து கொள்ள முடிந்தது, எரேமியா, ஏசாயா மற்றும் அனைத்து தீர்க்கதரிசிகளையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு நாளும், உணவு மற்றும் எனக்கு முன்னால் உள்ள அனைத்தும் இருந்தபோதிலும், என் ஆத்துமா வேறொன்றிற்காக ஏங்குகிறது, வேறொரு ஜீவியத்திற்காக, அது பூமியின் ஜீவியம் அல்ல.
7 மே 20 வெள்ளிக்கிழமை, மிக அதிகாலையில், வேறு சில போலீஸ் அதிகாரிகள் என்னை அங்கிருந்து பிரித்து கொண்டு போகும்படி வந்து, கைவிலங்கிட்டு, என்னை வழக்கறிஞரின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினர். நான் வழக்கறிஞர் அலுவலகத்திற்கு வரும்போது, நான் சிறைக்கு அனுப்பப்பட வேண்டுமா அல்லது விடுவிக்கப்பட வேண்டுமா என்பதைப் பார்க்க ஒரு வழக்கறிஞர் என்னைக் கேட்பார் என்று என்னிடம் கூறப்பட்டது. ஆனால் எந்த விசாரணையும் இல்லாமல் நேராக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். படிக்காத ஒரு பேப்பரில் கையெழுத்து மட்டுமே நான் போட வைக்கப்பட்டிருந்தேன். அன்றைய தினம், அப்போஸ்தலர் மார்ட்டின் வந்து, காத்திருப்பு அறையில் என்னைக் கண்டார், என் மணிக்கட்டில் இன்னும் கைவிலங்கு இருந்தது. சகோதரர்களே, அது கடினமாக இருந்தது. ஆனால் ஒரு நாள் வருகிறது, அவை எல்லாவற்றையும் நாம் மறந்துவிடுவோம், நாம் நித்திய மகிழ்ச்சியைப் பெற்றிருப்போம், நான் உங்களோடும் கர்த்தரோடும் இருப்பேன். ஆமென்!
8 சுவிசேஷக சபைகளின் வேண்டுகோளின்படி, அரசு என்னைப் பலியிட வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக அவர்கள் அரசை ஆதரிப்பார்கள் என்றும் அன்றைக்கு ஜனங்கள் சொல்லிக்கொண்டதை கேள்விப்பட்டேன். இது, அவர்களை தொந்தரவு செய்யும் எனது செய்தியின் காரணமாக இருந்தது. முஸ்லிம் அரசாங்கமும் சபைகளும் நல்லிணக்கமாக இருப்பதற்காக, அரசியலில் ஈடுபடாத நான் தான் அதற்கு பலியாக்கப்பட வேண்டுமா?
9 மேலும் எனக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட உள்ளதாகவும், பின்னர் நான் அபிட்ஜானிலிருந்து வெகு தொலைவில் உள்ள சிறைக்கு மாற்றப்படுவேன் என்றும் கேள்விப்பட்டேன். எல்லாம் சரி, ஆனால் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஒருவரை சிறையில் அடைத்துவிட்டு பிறகு எந்த கடவுளிடம் ஜெபிப்பீர்கள்? நீங்கள் பார்க்கிறீர்களா?
10 இணையத்தில் எனக்கு எதிராக அவர்கள் எழுதிய அனைத்தையும் அவர்கள் அழித்துவிட்டிருந்தனர், ஆனால் அது கடைசி நியாயாத்தீர்ப்பு நாள் வரை பரலோகத்தில் உள்ள கடவுளின் சுவரில் பொறிக்கப்பட்டிருக்கும்.
11 அரசியல் காரணங்களுக்காக, என்னை துன்புறுத்துவதன் மூலமும், குற்றவாளிகள் மற்றும் சில கொலைகாரர்கள் மத்தியில் என்னை சிறையில் தள்ளுவதன் மூலமும் அரசாங்கம் அவர்களின் விருப்பத்தை நேரடியாக செயல்படுத்தியது.
12 இது தவறான விசாரணை, ஏனெனில் ஒரு கால்பந்து ஆடுகளத்தில் ஒரு கால்பந்து வீரர் மற்றொரு கால்பந்து வீரரை தாக்கினால், அதை நீதிமன்றத்திற்கு கொண்டு போக முடியுமா? வேறொரு காரணம் மட்டுமே இந்த துன்பத்தையும் என் மீதான இந்த வழக்கையும் நியாயப்படுத்த முடியும். ஆனால் யேசபேலின் பணத்தாலும் பாகாலின் தீர்க்கதரிசிகளாலும் ஒருவரையும் ஊழல் படுத்த முடியாத மற்றொரு நியாயாதிபதி முன்பாக நாம் நிற்கக்கூடிய நாளொன்று வருகிறது.
13 இது தவிர, நான் பிரசங்கித்தவை மற்றும் எனது புத்தகத்தில் உள்ள எல்லாவற்றை குறித்தும், பூமியில் உள்ள அனைத்து மதப் பிரிவுகளும் பிசாசுகள் என்றும் மேலும் ஒரு பெண் ஆண்களுக்கு முன் பிரசங்கம் செய்ய முடியாது என்பது போன்ற உண்மைகளை நான் என் மரணம் வரை ஆதரிப்பேன்.
14 அரசு அதிகாரத்தை மீறி, மத பேதத்தை தூண்டியதாகவும், மதவெறியைத் தூண்டியதாகவும் நான் குற்றம் சாட்டப்பட்டதைக் கண்டபோது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று பூமிக்குத் திரும்பினால், வேறு என்ன குற்றச்சாட்டிற்காக சிலுவையில் அறையப்படுவார் என்று ஆச்சர்யப்படுகிறேன்.
15 சபை வரலாற்றில் வேறு எந்த காரணத்திற்காக 68,000,000 கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டிருப்பார்கள் என்று நான் எனக்குள்ளாக கேட்டுக் கொண்டேன்? மேலும் என்னை நானே கேட்டுக் கொண்டேன், போப்புகளை கேலிச்சித்திரம் செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் நரகத்திற்கு செல்வார்களா? புனித சின்னங்கள் பற்றிய ஆய்வு கட்டுரையால் ஜான் கால்வின் நரகத்திற்குச் செல்வாரா? அவர்கள் நரகத்திற்குச் சென்றால், நாம் நரகத்திற்குச் செல்வோம். ஆனால் அவர்கள் பரதீசுக்கு சென்றால், நானும் என்னுடையவர்களும் பரதீசுக்கு செல்வோம். எங்கள் விசுவாசம் இதன் மீதுதான் இளைப்பாறுகிறது!
16 பிசாசை எந்த வகையில் தாக்கினாலும் அது கடவுளின் விருப்பத்திற்கு எதிராக இருக்க முடியாது. அது கடவுளின் விருப்பத்திற்கு எதிரானதாக ஒருபோதும் இருக்காது. மாதவிடாய் காலத்தில் பிரசங்க மேடையில் நிற்கும் பெண்ணைத் தாக்குவது, மாதவிடாய் காலத்தில் பலிபீடத்தில் நிற்கும் பெண்ணைத் தாக்குவது; அது ஒருபோதும் கடவுளின் விருப்பத்திற்கு எதிராக இருக்க முடியாது, அது ஒருபோதும் இருக்கவே முடியாது.
17 ஜூலை 8, 2002 முதல் நான் பிரசங்கித்தவை மற்றும் எனது புத்தகத்தில் உள்ளவை அனைத்தும், ஏப்ரல் 24, 1993 அன்று நான் பெற்றுக்கொண்ட தெய்வீகப் பணியின் அடிப்படையில் நான் அதைப் பிரசங்கித்தேன். என் மரணம் வரை, இழக்கப்பட்ட சிலர் பைபிளை வியாபாரப் பொருளாகவும், ஏழை ஆத்துமாக்களை வாடிக்கையாளர்களாகவும் மாற்றிப்போடுவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது எனது ஊழியம், அதை ஏற்றுக்கொள்ளும்படி நான் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை.
18 ஒரு கிறிஸ்தவரோ அல்லது முஸ்லிமோ என்னைக் கண்டிக்க முடியாது, ஏனென்றால் இன்று பூமியில் நான் மட்டுமே கடவுளின் உண்மையான ஒரே தீர்க்கதரிசி என்று நான் சொல்கிறேன், ஏனெனில் இதுவே கடவுளின் அனைத்து தீர்க்கதரிசிகளின் வழியும் மொழியுமாக இருக்கிறது.
19 தன்னுடைய தலைமுறையில் தான் மட்டுமே கடவுளின் ஒரே தீர்க்கதரிசி என்று சொல்லாத ஒரு தீர்க்கதரிசியும் இல்லை. மேலும் முஹம்மதுவைப் போலல்லாமல் நான் புனிதப் போரை நடத்தும்படி பட்டயத்தை எடுக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக போராடிய அகமது தீதாத்தை தென்னாப்பிரிக்காவானது சிறையில் அடைத்தது இல்லை.
20 என்னைப் பொறுத்தவரை, நான் கடத்தப்பட்டது, நான் துன்புறுத்தப்பட்டது மற்றும் பொது உளவுத்துறையின் காவல்துறையினரால் நான் காவலில் வைக்கப்பட்டது, நான் ஐந்து பகல் மற்றும் ஐந்து இரவுகள் நாற்காலியில் அமர்ந்திருந்தது, தடயவியல் காவல்துறை பிரிவின் அதிர்வுமுறைக்குள்ளானது, காவல்துறை தலைமையகத்தின் அடித்தளத்தில் இருந்த இரவுகள், வழக்கறிஞர் அலுவலகத்தின் அறைகள் (cells), இப்போது அபிட்ஜானின் மிகப்பெரிய சிறைச்சாலை, இது தீர்க்கதரிசிகளின் வரலாறானது மீண்டும் தன்னை நிகழ்த்தி கொள்கிறது.
21 நான் ஏற்கனவே உங்களை மன்னித்துவிட்டேன். என் சிறை அறையில் எனக்குள்ளாக ஆயிரம் கேள்விகளை கேட்டுக்கொண்டேன். கடவுள் சாத்தானாக மாறிவிட்டாரா, மேலும் இப்போது காயீனைத் துன்புறுத்துவதற்கு ஆபேல் வழக்கறிஞரின் உடையில் இருக்கிறாரா? கர்த்தராகிய இயேசுவின் பரிந்துரைகளுக்கு முரணாக, பரிசேயர்களையும், கள்ளத்தீர்க்கதரிசிகளையும் நீதிமன்றங்களிடமும், ரோம படைவீரர்களிடமும் ஒப்படைப்பது கர்த்தராகிய இயேசுவின் சீஷர்களா? எனக்குப் புரியவில்லை.
22 நான் அனுபவித்த அனைத்தையும், ஏப்ரல் 24, 1993 அன்று என்னை அனுப்பியவருக்கு முன்பாக எடுத்துச் செல்வேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை, நான் யாருக்கும் தீங்கு செய்ய மாட்டேன்.
23 நான் சிறுவனாக மண்ணில் விளையாடிக்கொண்டிருந்த போது, என் பெற்றோரிடம், நான் சாகும் வரை யாருக்கும் தீங்கு செய்ய மாட்டேன், யாருடனும் சண்டையிட மாட்டேன், யாரையும் காவல்துறைக்கு அழைத்துச் செல்ல மாட்டேன் என்று சொன்னேன், நான் கிறிஸ்தவனாக இருப்பதால் அதைச் செய்வேன் என்பதும் இப்போது இல்லை. நான் யாரையும் காயப்படுத்த மாட்டேன்! என்னால் அதுவும் கூட செய்ய முடியாது!