தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, ஆகஸ்ட் 16, 2016 அன்று உலகெங்கிலும் உள்ள அவரை விசுவாசிக்கும் அனைவருக்கும், அவரது சிறைச்சாலை அறையில் இருந்து எழுதிய கடிதம்
1தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான், ஆகஸ்ட் 16, 2016 அன்று உலகெங்கிலும் உள்ள என்னை விசுவாசிக்கும் அனைவருக்கும், எனது சிறை அறையில் இருந்து எழுதிய கடிதம்.
2என்னுடைய கோப்பு அபிட்ஜானின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ளது. மேலும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முதல் விசாரணை ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற்று ஒத்திவைக்கப்பட்டது. சபைகள் நான் மரித்துவிட வேண்டும் என்று விரும்பின ஆனால் இன்று நான் சுதந்திரமாக இருக்கிறேன். நான் விரைவில் இங்கிருந்து வெளியேறுவேன் ஆனால் நான் அரசுக்கு 700 டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும், மேலும் ஐந்து ஆண்டுகளில், ஒவ்வொரு குடியுரிமையையும் நான் பறிகொடுக்கிறேன். குறிப்பாக, நான் கடவுளைப் பற்றி பேசக்கூடாது, இல்லையெனில் நான் சிறைக்கு திரும்புவேன்.
3கடவுளே, பூமியில் நான் சுதந்திரமாக இருப்பது எப்போது? இனி எப்போது என் மணிக்கட்டில் கைவிலங்குகள் இல்லாமல் இருக்கும்? என்னைச் சுற்றி முள்வேலிகள் இல்லாமல், சிறை அறைகள் இல்லாமல், சைரன்கள் மற்றும் சிறைக் கம்பிகள் இல்லாமல், கிரிமினல் அடித்தளம் இல்லாமல், சிறைச்சாலை அரிசியும், சிறைச்சாலை தட்டுகளும் இல்லாமல் இருப்பது எப்போது?
4என்னைச் சுற்றி ஆயுதம் ஏந்திய சிறைக் காவலர்கள் இல்லாமலிருப்பது எப்போது, மேலும் நான் கைவிலங்குகளுடன் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்படமாலிருப்பது எப்போது? "உன் சிறை அறைக்குள் போ" என்று எப்போது என்னிடம் சொல்லாமல் இருப்பார்கள், ஒரு பெரிய பூட்டுப் போட்டு என்னை ஒரு மிருகத்தைப் போல அவர்கள் இனி அடைத்து வைக்கமாலிருப்பது எப்போது?
5நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தடைசெய்து எனக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. இப்போது நான் சுதந்திரமாக இருக்கிறேன், நான் வெளியே வருவேன் ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு, சிறைக்குத் திரும்பக்கூடிய தண்டனையின் கீழாக கடவுளைப் பற்றி பேச எனக்கு உரிமை இல்லை. கடவுளிடமிருந்து நான் தரிசனத்தை பெற்று கொண்டதால், நான் சிறைக்கு செல்லவேண்டுமா? கடவுள் என்னிடம் பேசினால் நான் சிறைக்கு செல்ல வேண்டுமா? தீர்க்கதரிசிகள் பெரிதும் துன்பப்படுகிறார்கள்!
6நான் சிறையில் இருக்கிறேன், ஆனால் நான் எனக்கு உண்மையாகவே இருக்கிறேன், நான் எப்போதும் அப்படியே இருப்பேன், ஏனென்றால் என் இரத்தம் இவ்வாறு இருக்கிறது, சிறைச்சாலையால் என்னை மாற்ற முடியாது. நான் என்னவாக இருக்கிறேனோ, அதையே பூமியில் நான் மட்டுமே கடவுளின் உண்மையான தீர்க்கதரிசி என்று நான் ஏன் சொல்லக்கூடாது?
7என்னைத் துன்புறுத்திய அனைவருக்கும், இன்னும் என்னைத் துன்புறுத்திக்கொண்டிருப்போர், மீதமுள்ளோர் ஒவ்வொருவருக்கும், என்னை அனுப்பிய சர்வவல்லமையுள்ள கடவுள் அவரவருக்கான கூலியை எவ்வாறு திருப்பி கொடுப்பது என்பதை அறிவார். சாண்ட்ரா பெனியலின் சதித்திட்டத்தில் பங்குபெற்றவர்கள், கொள்ளை காட்சியின் சில சாயலில் நான் வீட்டில் மற்றும் சிறையில் கொல்லப்படவோ அல்லது நாடுகடத்தப்படவோ வேண்டும் என்று விரும்பியவர்கள் மற்றும் ஏனைய ஒவ்வொருவருக்கும் அவரவர் கூலியின்படி திரும்பவும் கொடுப்பார்.
8மே 13, 2016 வெள்ளியன்று நான் கைது செய்யப்பட்டதில் இருந்து கடவுளுடைய வார்த்தையின் காரணமாக நான் துன்பப்படுகிறேன், அதன்படி இவ்வாறு, நீங்கள் வெறுக்கப்படுவீர்கள் நீங்கள் துன்புறுத்தப்படுவீர்கள், அவர்கள் கடவுளுக்கு சேவை செய்வதாக நினைத்து உங்களை நியாயசங்ககளுக்கு முன்பாக இழுத்துச் செல்வார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
9என் வாழ்க்கையில் முதல்முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானேன். 2016, ஜூன் 3, வெள்ளிக்கிழமை அன்று, நான் அபிட்ஜான் உயர்நீதிமன்றத்தில் இருந்தேன். இது முதல் முறை மற்றும் இது எனது சொந்த விசாரணைக்காக இருந்தது. காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, பிரசங்கித்ததின் பேரில் எனது வாக்குமூலங்கள் எனது தண்டனைக்காக நீதிமன்றத்திற்குச் செல்லும் என்பது எனக்குத் தெரியாது. இந்த காரியங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
10உயர்நீதிமன்றத்தில் என் வழக்கு விசாரணை நாளில், நீதிபதி யார், வழக்கறிஞர் யார், எழுத்தர் யார், அரசுதரப்பு வழக்கறிஞர் யார் என்று எனக்குத் தெரியவில்லை... அவர்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. ஆனால் யேசபேலுக்கும், சபைகளுக்கும், அரசுதரப்பு வழக்குரைஞர்களும் அவர்களது வழக்கறிஞர்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் எனக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தனர். நான் என் சரீரத்தில் பலவீனமாக இருந்தேன். நான் இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன், விசாரணையின் நாளன்று காலையிலிருந்து மாலை 3 மணி வரை, நான் ஒரு அறைக்குள்(cell) அடைக்கப்பட்டேன், அங்கு ஆர்வமாயிருந்தவர்கள் வந்து கூண்டில் உள்ள விலங்குகளைப் போல என்னைப் பார்ப்பார்கள்.
11வழக்கு விசாரணையின் போது, கத்தோலிக்க வழக்கறிஞர் யோ ஆபெல் என்னிடம் வேதாகமத்தை குறிப்பிட வேண்டாம், ஏனென்றால் நாம் ஆலயத்தில் இல்லை, நீதிமன்றத்தில் இருக்கிறோம் என்றார். மேலும் இன்னும் நான் தேவனுடைய மனுஷனாகவே இருந்தேன். ஒவ்வொரு முறையும், வழக்குரைஞர் என்னிடம் ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்கச் சொன்னார், ஆனால் அது சாத்தியமில்லை. நான் அரிதாகவே தளத்தை கொண்டிருந்தேன், என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, அவர்கள் என்னை குறுக்கீடு செய்ததால், இரண்டு வாக்கியங்களை உருவாக்குவது எனக்கு கடினமாக இருந்தது.
12என் விசாரணைக்கு முன், அனைத்து செல்பேசிகளையும் அணைத்துவிடுமாறு நீதிமன்ற காவலர்கள் உத்தரவிட்டனர். பத்திரிகையாளர்கள் கூட பதிவு செய்யவோ, படம் எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கப்படவில்லை. இவையெல்லாம் யேசபேலின் தூண்டுதலால்.
13இது ஒரு மத விவகாரம், ஒரு வழக்கறிஞர் முற்றிலுமான மத விஷயத்திற்காக எனக்காக வாதாடுவதை நான் ஏற்கவில்லை. வழக்கு விசாரணை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே சில வழக்கறிஞர்கள் தாமாக முன்வந்தனர். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நமது வழக்கறிஞர் என்று நான் என் சீஷர்களிடம் கூறியிருந்தேன். மேலும் வரலாற்றின் பொருட்டு, ஒரு வழக்கறிஞருக்கு நன்றி செலுத்தி சுதந்திரமாக இருப்பதை விட இருபது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கவே விரும்புகிறேன். ஏனெனில், 1993 முதல் திருச்சபையின் வரலாற்றை எழுதிக்கொண்டிருப்பது கடவுள்தான்.
14விசாரணையின் முடிவில், வழக்கறிஞர் எனக்கு எதிராக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கேட்டார். ஏன்? ஏனென்றால் நான் ஒரு தெய்வீக ஆணையால் பூமியில் கடவுளின் ஒரே உண்மையான தீர்க்கதரிசி என்று சொன்னேன். ஒரு துல்லியமான தேதியில் தெய்வீக ஆணையின் மூலம் பூமியில் நான் மட்டுமே கடவுளின் உண்மையான தீர்க்கதரிசி என்று நீதிமன்றத்தின் முன் அறிவித்தேன் என்பதை நீதிமன்றப் பதிவேட்டில் எழுதுமாறு வழக்கறிஞர் கோரினார். யோவான் 19 வசனம் 19 முதல் 21 வரை நிறைவேறும் வகையில், அது நீதிமன்றப் பதிவேட்டில் எழுத்தாளரால் முழு பார்வையாளர்களுக்கும் முன்பாக எழுதப்பட்டது.
15ஒரு மதச்சார்பற்ற நாடு கடவுளின் தீர்க்கதரிசியை நியாயந்தீர்த்து கண்டனம் செய்கிறது. பூமியில் உள்ள ஒரே உண்மையான கடவுளின் தீர்க்கதரிசி என்று சொல்லக்கூடிய ஒருவருக்கு எப்படி பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முடியும்?
16மேலும் கத்தோலிக்கர்களே, புராட்டஸ்டன்ட்டுகளே, சுவிசேஷகர்களே மற்றும் பிரான்ஹாமிஸ்டுகளே, நீங்கள் உண்மையிலேயே கிறிஸ்தவர்களாக இருந்தால், ஒரு தீர்க்கதரிசி பிரசங்கித்ததன் காரணமாக சிறையில் அடைப்பதற்காக பணத்தை கொண்டு அஞ்ஞான நீதிமன்றத்தில் எப்படி உங்களால் முறையிட முடியும்? அது பைபிளில் எழுதப்பட்டிருக்கிறதா? 1 கொரிந்தியர் 6:1 முதல் 4 அதைச் செய்யும்படி சொல்கிறதா? ஒரு நாள், நீங்கள் கடவுளுக்கு முன்பாக அதற்காக கணக்கு கொடுப்பீர்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை, ஏப்ரல் 24, 1993 அன்று என்னை அனுப்பியவரின் கைகளில் எல்லாவற்றையும் ஒப்படைக்கிறேன். ஏனெனில், ஏப்ரல் 24, 1993 இல்லாதிருந்தால், இந்த விசாரணையானது நடந்திருக்காது. என்னை அனுப்பின தேவனைத்தான் நீங்கள் நியாயந்தீர்த்து, கண்டனம் செய்கிறீர்கள். இந்த விசாரணை ஒரு நாள் முடிவடையும் என்பது அவருக்கு முன்னால் உள்ளது.
17பணம் கொடுத்தவர்கள், பணம் கொடுத்தவர்களை பின்பற்றுபவர்கள், மற்றும் பணத்தை பெற்றவர்கள், அதைப் பற்றி தெரிந்தும் எதுவும் சொல்லாதவர்கள் மற்றும் அப்பாவிகள் அனைவரும், என்னை அனுப்பிய சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு முன்பாக கணக்குக் கொடுப்பார்கள். மேலும் ஒவ்வொருவருக்கான வெகுமதியையும் தகுந்த தண்டனையையும் அவர் கொடுப்பார்.
18கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்திலும் வேதாகமத்தின் தீர்க்கதரிசிகளின் காலத்திலும் நீங்கள் இல்லை ஆனால் ஏப்ரல் 24, 1993 முதல் சர்வவல்லமையுள்ள கடவுள் உங்களுக்காக அனுப்பிய தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் காலத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். வரலாறு தன்னை தானே மீண்டும் நிகழ்த்தி கொள்கிறது. வெவ்வேறு சபைகளுக்குரிய போதகர்களின் தலைமைச்சங்கம்தான் பணத்தை கொண்டு என்னை காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் இழுத்துச் சென்றது. மேலும், யோபோகோனில், ஒரு சுவிசேஷக சபை என்னுடைய சிறைவாசத்திற்குப் பங்களிப்பை வழங்கியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நாளன்று, நான் நியாயந்தீர்க்கப்படுவதற்கு முன்பே, சில சுவிசேஷகத் தலைவர்கள் ஒரு நிருபரிடம் எனக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ஒப்புக்கொண்டனர். ஒரு முஸ்லீம் பெண், ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் யேசபேலை காக்கி உறையில் கொஞ்சம் பணத்துடன் பார்த்ததாக அறிவித்தாள்.
19மே 13, வெள்ளிக்கிழமை முதல், நான் சென்ற இடமெல்லாம், ஏப்ரல் 24, 1993 தரிசனத்தின்படி எனது நிலைப்பாட்டைக் கடைப்பிடித்ததற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஒவ்வொரு அறிக்கையிலும், நான் ஒருவன் மட்டுமே, பூமியில் கடவுளின் ஒரே உண்மையான தீர்க்கதரிசி நான் மட்டுமே என்பதை உறுதிப்படுத்தினேன் மற்றும் இஸ்லாமிய, கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரான்ஹாமிஸ்ட் தலைவர்கள் பிசாசின் அவதாரம்.
20நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன், ஏனென்றால் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்களிடம் பதிவு செய்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். நான் ஐந்து பகல்களையும் ஐந்து இரவுகளையும் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி கழித்தேன் ஆனால் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் தங்கள் விரல் அடையாளங்களை வைக்கும் இடத்தில் எனது விரல் அடையாளத்தை வைக்க நான் மறுத்துவிட்டேன். நான் அதைச் செய்யவில்லை, ஒருபோதும் செய்யவும் மாட்டேன். ஒரு நாள், அப்படிச் செய்யாததற்காக நான் கடவுளுக்கு முன்பாக மகிழ்ச்சியாக இருப்பேன்.
21வெவ்வேறு சபைகளை சேர்ந்த சில போதகர்கள் ஒரு தீர்க்கதரிசியை அவரது செய்தியின் காரணமாக எவ்வாறு காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் இழுத்துச் செல்ல முடியும்? கடவுள் சாத்தானாக மாறிவிட்டாரா, இப்போது காயீனைக் கொல்ல ஒரு அஞ்ஞான வழக்கறிஞரின் உடையில் ஆபேல் இருக்கிறானா? முழு உலகமும் தங்களுக்கு மிகவும் அருகில் உள்ள இரட்சிப்பைக் காண முடியாத அளவுக்கு குருடர்களாக உள்ளனர்.
22சபைகள் நான் தவறானவன் என்றோ அல்லது நான் அவர்களுக்கு தொந்தரவு செய்ததாகவோ நினைத்தாலோ, ஊடகங்களுக்கு முன்பாக ஒரு பெரிய பொது மோதலுக்கு அவர்களை அழைப்பு விடுக்கிறேன். ஒரு அஞ்ஞான நீதிமன்றத்தில் இல்லை, ஏனென்றால் யார் உண்மையான அல்லது பொய்யான தீர்க்கதரிசி என்று சொல்வது ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் விஸ்கி குடிப்பவர்களுக்கும் சார்ந்தது அல்ல.
23மாதவிடாயில் இருக்கும் யேசபேல் என்ற ஸ்திரீயே, உன்னை நீயே தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொள்ளும் நீ, உன் பெயர் இனி ஜேன்னே( Jeanne) அல்ல, யேசபேல். என்னுடைய வார்த்தையல்லாமல் உன் சந்ததிக்கு நீ சாபமாக இருப்பாய். உன் பெயர் யேசபேல் மோன்னி மற்றும் நீ சாபத்தின் மூலஆதாரமாக இருப்பாய்.
24இப்போது யேசபேல் யார், பாகாலின் இந்த ஆசாரியத்துவ ஸ்திரீ யேசபேல் எங்கிருந்து வருகிறாள்? ஒரு அந்நியராவாள். யேசபேல் ஒரு அந்நியநாட்டவள். அவள் வேறொரு நாட்டிலிருந்து வந்தவள்; மருத்துவமனைகளில் நன்கொடைகள் செய்து இஸ்ரேலின் இதயத்தைப் கவர்ந்தாள். அவள் சீதோனியர்களின் ராஜா எத்பாலின் மகள், அவள் எலியாவையும் எல்லா இஸ்ரவேலையும் துன்புறுத்திய ஒரு அந்நியவளாக இருந்தாள், எலியாவை துன்புறுத்துவதற்காக எல்லா ஆசாரியர்களும் அவளுடன் உடன்பட்டனர்.
25இந்த பக்கத்தில் அதே யேசபேல், ஒரு அந்நியநாட்டவள் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை துன்புறுத்துகிறாள் மேலும் முழு ஐவரி கோஸ்ட்டும் அவளுடன் உடன்படுகிறது, ஏனெனில் அது காக்குவ் பிலிப்புவாக இருப்பதால். ஒரு வெளிநாட்டவர் தனது நாடு அல்லாத வேறொரு நாட்டின் பாதிரியார்கள் சார்பாக செயல்படுகிறார். கெட்ட இரத்தத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும். சமோரி டூரின் (Samory Touré) இரத்தமானது அதைச் செய்ய முடியும்.
26இப்போது வேதத்தின் துல்லியமான வகையைப் பாருங்கள், இது தற்செயல் நிகழ்வு அல்ல. இது வேதத்தின் துல்லியமான வகை. ஆமென்! தீரு மற்றும் சீதோன் எகிப்துக்கு அருகில் இஸ்ரேலின் தென்மேற்கில் இருந்தன. சீதோனின் ராஜா எத்பால் இஸ்ரவேலர் மீது பலவந்தமாக பாகாலின் வழிபாட்டைப் பரப்பினான். சாமோரி டூரே இஸ்லாத்தை கொண்டு செய்தது போல.
27அங்கே, வேதாகமத்தில், எத்பாலின் மகள் இஸ்ரவேலில் இருந்த எலியாவைத் துன்புறுத்த வந்தாள், இங்கே ஒரு அந்நியநாட்டவள், சமோரி டூரின் ஒரு வழித்தோன்றலில் திருமணத்தின் மூலம் ஐவரி கோஸ்டுக்கு வந்து, எலியாவை துன்புறுத்துவதற்காக ஒரு தீர்க்கதரினிசியாக, ஒரு ராணியைப் போல தன்னை காட்டிக்கொள்கிறாள். யேசபேல் இஸ்ரேலில் செய்ததை ஒரு யூத இரத்தத்தையுடைய ஒரு பெண்ணால் செய்ய முடியவில்லை. இந்த பக்கத்தில் ஐவரி கோஸ்டில் யேசபேல் செய்ததை ஒரு ஒரு யூத இரத்தத்தையுடைய ஒரு பெண்ணால் செய்ய முடியவில்லை. 1 இராஜாக்கள் 21ன் படி யேசபேல் வழக்கறிஞர்களையும் ஆசாரியர்களையும் கையாளுவதைப் பாருங்கள்.
28ஓ யேசபேலே, உன்னை நீயே தீர்க்கதரிசினி என்று அழைத்துக்கொள்பவளே, காவல் துறை பிரிவுகளிலும் நீதிமன்றங்களிலும் பலம் கொண்டவளே, பணத்தின் பெயரைச் சுமந்துகொண்டு உண்மையைச் சொல்வதாக பைபிளில் சத்தியம் செய்பவளே!! நீதிமன்றங்களுடைய பலமும், பரிசுத்த ஆவியானவளே பாகாலுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக உன்னுடைய வைராக்கியத்தை நான் காண்கிறேன், ஆனால் தீர்க்கதரிசி எலியாவை துன்புறுத்தவும் சிறையில் அடைப்பதற்கும் உன்னால் கொடுக்கப்பட்ட பணத்தைப் பற்றி நீ என்ன சொல்ல போகிறாய்?
29அங்கே மூர்க்க வெறி கொள்ளாத ஒருவர் கூட அறையில் இல்லை. மேலும் ஒரு செய்தித்தாள் எழுதியது: "சில சமயங்களில், நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் கடவுள் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு தன்னுடைய பதில்களில் தொடர்ந்து வேதத்தை குறிப்பிடுவதற்கு அனுமதி தராமல் அவருக்கு எதிராக வழக்கறிஞர் மறுத்து விட்டார்.
30மேலும் நான் ஒரு வழக்கறிஞரை நியமிக்கவில்லை ஏனெனில் நான் ஒரு ஆட்டுக்குட்டி மற்றும் எனது வழியானது அவர்கள் எளிதாக வெட்டுவதற்கு என் தலையை அவர்களிடம் கொடுப்பதாகும். மேலும் அதுதான் செய்யப்பட்டது: எனக்கு எதிராக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை தேவை எனப்பட்டது.
31மேலும் சிறையில், முக்கியமானவர்கள் இருந்த ஒருங்கிணைக்கப்பட்ட கட்டிடத்தில் நான் வைக்கப்படவில்லை; ஆனால் சட்டத்தை மீறியவர்கள், திருடர்கள் மற்றும் குற்றவாளிகளுடன் நான் இருந்தேன். ஒரு நாள் பரலோகத்தில், கடவுளுக்கு முன்பாக மற்றொரு விசாரணை இல்லாமலிருப்பது என்பது சாத்தியமற்றது. யேசபேல் மோன்னி மற்றும் பாகால் தீர்க்கதரிசிகளின் அரசியலும், உறவினர்களும் மற்றும் பணமும் காவல்துறையையும் நீதிமன்றத்தையும் சிதைத்துவிட முடியாத ஒரு பரலோக நீதிமன்றத்தின் ஒரு விசாரணையாகும். மனிதர்களின் சட்டத்திற்கும் இடமில்லாத ஒரு விசாரணை. பூமியில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிபதியாக வரக்கூடிய ஒரு விசாரணை.
32காவல்துறைகளே, மற்றும் நீதிமன்றங்களே, நீங்கள் ஜனாதிபதிகளையும் ராஜாக்களையும் நியாயந்தீர்க்கிறவர்கள் ஆதலால் நீங்கள் பூமியின் தேவர்களாக இருப்பது போலவே, அதே வழியில், தீர்க்கதரிசிகளாகிய நாங்களும் பரலோகத்தில் தேவர்களாக படைப்புகள் அனைத்தையும் மற்றும் உங்களையும் சேர்த்து நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்போம்.
33அரசுதரப்பு வழக்கறிஞர் யோ ஆபெல் என்னிடம் கேட்டார், "உங்கள் கடவுள் பெண் போதகர்களை அனுமதிக்காததால் அவர் ஒரு பெண் விரோதியா? ஆண்கள் மீது இருக்கும் பரிசுத்த ஆவி பெண்களிடம் இருந்து வேறுபட்டதா?” நான் பதிலளித்தேன், "மிஸ்டர் வழக்கறிஞரே, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதங்களுக்கு பெண் இமாம்களோ அல்லது பாதிரியார்களோ இல்லை.” "அப்படியானால் பூமியில் உள்ள ஒரே உண்மையான தீர்க்கதரிசி நீதானா" என்றார் அவர். நான், "ஆம் மிஸ்டர் வழக்கறிஞரே, நான் தான்" என்று பதிலளித்தேன். அவர் மீண்டும், "என்ன ஆதாரம்? உங்களிடம் அதிகாரப்பூர்வ ஆவணம் உள்ளதா?” என்பதற்கு சென்றார். நான், "மிஸ்டர் வழக்கறிஞரே, ஏப்ரல் 24, 1993 அன்று தெய்வீக ஆணைப்படி நான் பெற்ற பணியினை அதிகாரப்பூர்வ ஆவணம் என்று அழைக்கப்படுவதை வெளியிடுவதற்கு யாருக்கு உரிமை உண்டு?” என்று பதிலளித்தேன்.
34அவர் மீண்டும் தொடர்ந்தார், "உன்னைத் தவிர வேறு யாரேனும் கடவுளின் ஊழியர்கள் இருக்கிறார்களா??" நான் பதிலளித்தேன், "இல்லை மிஸ்டர் வழக்கறிஞரே. நான் என்ன சொல்கிறேனோ அதை மட்டுமே அவர்கள் தங்கள் சபைகளில் பிரசங்கிக்க வேண்டும்". மேலும், கூட்டத்தில் இருந்த எனது சீஷர்களை அடையாளம் காணும்படி நீதிமன்றம் என்னிடம் கேட்டுக் கொண்டது, அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் உள்ளது, எனவே அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். நான் கூட்டத்தில் நோக்கினேன், சிலரை பார்த்தேன் ஆனால் யாரையும் வெளிப்படக்கூறவில்லை. என்னால் அதைச் செய்ய முடியவில்லை.
35எனது வேண்டுகோள் இருந்தபோதிலும், வழக்கறிஞர் யோ ஆபெல், "திரு ஜனாதிபதியே, ஒரு துல்லியமான தேதியில் பெற்றுக்கொண்ட தெய்வீக ஆணைப்படி பூமியில் கடவுளின் ஒரே உண்மையான தீர்க்கதரிசி அவன் மட்டுமே என்று கூறுகிறான். அவனுக்கு எதிரான தீர்ப்பின் செயல்பாட்டில் நுழையத் துணிந்த நீதிமன்றத்தின் மீது நரகத்தின் சீற்றங்களையும் அவன் அழைத்தான். எனது முறைப்படி, திரு ஜனாதிபதியே, அவன் சட்டத்தை மிகக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அதனால், மீண்டும் ஒருபோதும் சில தவறான தீர்க்கதரிசிகள் - அல்லது சிறந்தவர்கள், உண்மையான அறிவொளி பெற்றவர்கள் சிலர்- வந்து இந்த ஐவரி கோஸ்ட் நிலத்தின் குடிமகனின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்க மாட்டார்கள்” என்று கூறினார். இது அப்படியே செய்யப்பட்டது. மேலும் நான் சிறையில் அடைக்கப்பட்டேன்.
36சாத்தான் இயேசு கிறிஸ்துவின் பெயரைப் எடுத்துக் கொண்டான், யேசபேலும் பாகாலின் தீர்க்கதரிசிகளும் கடவுளின் ஊழியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், மேலும் காயீன் எனக்கு பத்து வருட சிறை தண்டனை விதிக்க ஆபேல் என்ற பெயரை எடுத்துக் கொண்டான். மேலும் சில விஸ்கி குடிப்பவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் சிகரெட் புகைப்பவர்களும் எனக்கு எதிராக கத்தினார்கள்.
37ஆனால் என்னைப் பொறுத்தவரை, யாராவது கத்தோலிக்கராகவோ, புராட்டஸ்டன்டாகவோ, சுவிசேஷகராகவோ அல்லது பிரான்ஹாமிஸ்டாகவோ இருந்தால், அவர்கள்தான் என்னை சிறைக்கு அனுப்பியது, ஏனென்றால் ஊழல் செய்யப் பயன்படுத்தப்பட்ட பணம் அவர்களின் தசமபாகம் மற்றும் காணிக்கைகளாகும். யேசபேலுடனும் பாகாலின் தீர்க்கதரிசிகளுடனும் ஐக்கியம் கொள்பவர்கள் குற்றவாளிகளாவர். மேலும் கடவுளுக்கு முன்பாக அவர்கள் ஒவ்வொருவரும் கணக்குக் கொடுப்பார்கள். நான் கடவுளின் நீதியை மட்டுமே நம்புகிறேன். மேலும் நான் காத்திருப்பது அதற்காகத்தான் .
38நான் ஒரு கள்ள தீர்க்கதரிசி என்று நீதிமன்றம் அறிவித்தது. சரி. ஆனால் யார் உண்மையான அல்லது பொய்யான தீர்க்கதரிசி என்று சொல்வது சில ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சொந்தமானதா? இஸ்ரேல் கூட ஒரு உண்மையான தீர்க்கதரிசியை அங்கீகரிக்கவில்லை, தன்னை மதசார்பற்ற நாடு என்று அழைத்துக்கொண்டு கடவுளை நிராகரிக்கும் அதுவால் உண்மையான தீர்க்கதரிசியை அங்கீகரிக்க முடியமா? சரி ஆனால் என் மரணம் வரை, ஒரு கள்ள தீர்க்கதரிசியாகவும், அவர்களுக்கு ஒரு நிஜ வஞ்சகனாகவும், அவர்களின் தலைவர்களுக்கு அடுத்ததாக எனது இடம் ஒருபோதும் இருக்காது.
39மேலும் யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தது போலவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் இருந்தது போலவும், நான் இருந்த சிறை அறையில் ஏற்கனவே இரண்டு கைதிகள் இருந்தனர். என்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்ட கத்தோலிக்கனான ஒரு கறுப்பின மனிதன். மற்றொருவன் லெபனானிய முஸ்லீம்.
40சிறைச்சாலையில், சிறை இயக்குனர் என்னை தேவ மனுஷனைப் போல நடத்தினார். ஜூன் 3 அன்று மற்றொரு விசாரணைக்காக நீதிமன்றத்தில் இருந்த ஓபோ என்ற பெண்மணி, என் விசாரணையில் கலந்து கொண்டிருந்தவர், என் மீது கொஞ்சம் இரக்கத்தை உணர்ந்தார், ஜூலை 23 அன்று, எனக்கு ஏழு யூரோ கொடுக்க சிறைக்கு வந்தார்.
41நான் சிறையில் இருந்தபோது, சகோதர சகோதரிகள் ஏழுபேர் காவல்துறை தலைமையகத்தில் சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நாட்களில், அப்போஸ்தலன் மார்ட்டின் அண்டை நாடான கானாவுக்கு நாடுகடத்தப்பட்டார். மேலும் காவல்துறை தலைமையகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சகோதரர்களிடம், காவல்துறை தலைமையகத்தில் நான் அடைக்கப்பட்டிருந்தேன் என்று சொல்லக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
42சகோதரர்கள், "நாங்கள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டோம். ஆனால் நாங்கள் அனைவரும் ஒரே கேள்விகளுக்கு ஆளானோம். மேலும் கேள்விகளில் ஒன்று, "தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு இங்கு வராத நிலையில் இங்குள்ள காவல்துறை தலைமையகத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தும் உண்மையை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்? அது அவதூறு! காவல்துறை தலைமையகத்தை அவமதிக்க நினைக்கிறீர்களா?” அதைக் கேட்டு அவர்கள் அனைவரும் வியப்படைந்ததாக சகோதரர்கள் கூறினார்கள். அதேசமயம், எரேமியாவைப் போல நான் காவல்துறை தலைமையகத்தின் அடித்தளத்தில் இருந்தபோது, அவர்களே என்னைச் சந்திக்க புறப்பட்டார்கள்.
43ஒரு காவல் துறை அதிகாரி அவர்களிடம், "தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை அனுப்பியதற்கான தடயங்கள் எதுவும் காவல்துறை தலைமையகத்தின் பதிவேட்டில் இல்லை, ஆனால் அவர் 2016, மே 18 புதன்கிழமை முதல் மே 20 வெள்ளிக்கிழமை காலை வரை இங்கு இருந்தார். எங்கள் எஜமானர்கள் அனைவரும் அவரைப் பார்த்தார்கள். மே 20 வெள்ளிக்கிழமை, அதிகாலையில், ஆயுதம் ஏந்திய இருவர் வந்து, அவரைக் கைவிலங்கிட்டு, எதுவும் பேசாமல் ஒரு சிறிய காரில் அவருடன் புறப்பட்டு சென்றனர். அந்தக் காட்சியைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன்" நீங்கள் பார்க்கிறீர்களா? இதை கூறியது அதனோடு தொடர்புடைய காவலர் ஒருவர்.
44நான் காவல்துறை தலைமையகத்தில் இருந்தபோது, இரண்டாம் நாள் இரவு அதிகாலை 3 மணியளவில், ஒரு காவலர் என்னை அடித்தளத்திலிருந்து ரகசியமாக வெளியே அழைத்துச் சென்றார், நான் அவருடன் பல நிமிடங்கள் வெளியே இருந்துவிட்டு, நான் மீண்டும் உள்ளே சென்றேன்.
45எல்லா தீர்க்கதரிசிகளின் வழியும் இப்படித்தான் இருக்கிறது. என் எஜமானன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உட்பட, துன்புறுத்தப்படாமல் அல்லது சிறையில் அடைக்கப்படாத ஒரு தீர்க்கதரிசியும் இல்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பரபாஸுடன் அதே சிறையில் இருந்தார்.
46இப்போது பூமியில் வசித்து கொண்டிருக்கும் பூமியின் குடிகளே, இன்றைக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமிக்கு திரும்பி வந்தால், என் மீது சுமத்தப்பட்ட "அரசு அதிகாரத்தை மீறுதல், மத வெறுப்பு மற்றும் மத தீவிரவாதத்தை தூண்டுதல்" என்ற குற்றத்தை தவிர, வேறு எந்த குற்றத்திற்காக அவர் சிலுவையில் அறையப்படுவார்? சபை வரலாற்றில் வேறு எந்த காரணத்திற்காக 68,000,000 கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டனர்?
47மற்ற கேள்வி என்னவென்றால், வேதாகம வெளிச்சத்தில், ஒரு தீர்க்கதரிசியானவர் நிராகரிக்கப்படாமல், வெறுக்கப்படாமல், துன்புறுத்தப்படாமல் தனது ஊழியத்தை இறுதிவரை அமைதியாகச் செய்வது இன்று சாத்தியமாகுமா? வேதாகமத்திற்கு வெளியேயும், கொலம்பன், ஜான் விக்லிஃப், ஜான் ஹஸ், மார்ட்டின் லூதர், ஜான் வெஸ்லியை போல வந்தவர்கள் அனைவரும் தங்கள் செய்தியின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
48இவ்வாறு, நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, எனக்கு நடந்த அனைத்தையும், தலைமுறை தலைமுறையாக, அது ஒருபோதும் அழிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த ஆகஸ்ட் 16, 2016 அன்று எனது சிறை அறையில் இருந்து அவற்றை எழுதினேன்.
49என்ன நடந்தாலும், என் மரணம் வரை, ஏப்ரல் 24, 1993 அன்று எனக்குக் கட்டளையிட்டபடி நான் எப்போதும் உண்மையைச் சொல்வேன், நான் பொய் சொல்ல மாட்டேன். நான் மட்டும்தான். நானே பரலோகத்திற்கான வழி. இன்று பூமியில் கடவுளின் ஒரே உண்மையான தீர்க்கதரிசி நான் மட்டுமே மேலும் இஸ்லாமிய, கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரான்ஹாமிஸ்ட் தலைவர்கள் பிசாசின் அவதாரம்.
50நியாயத்தீர்ப்பின் போது, ஒவ்வொரு தீர்க்கதரிசி செய்தியாளனும் தன் காலத்தின் பூமியின் குடிகளை நியாயந்தீர்ப்பதற்காக நிற்பார்கள். மேலும் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான் ஏப்ரல் 24, 1993 இன் தெய்வீக தரிசனத்தின்படி, நான் பூமியில் இருந்தபோது என்னுடன் பூமியில் வாழ்ந்த அனைவரையும் நியாயந்தீர்க்கிறவனாக நின்றிருப்பேன். மேலும் இது பூமியிலும் பரலோகத்திலும் காலங்கள் மற்றும் யுகங்களுக்கு ஒருபோதும் தோல்வியடையாது. ஆமென்!