Kacou 128 (Kc.128) : சபைகள் மற்றும் மசூதிகளின் கணக்கெடுப்பு
1கிறிஸ்துவின் நற்செய்தியின் காரணமாக மே 20, 2021 வரை கைதியாக இருக்கும் நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, டிசம்பர் 3, 2017 அன்று பூமி முழுவதிலுமுள்ள தெரிந்துக்கொள்ளப்பட்ட அனைவருக்கும் எழுதும் கடிதம். பவுலும் பிரசங்கிப்பதைத் தடைசெய்தபோது, அவர் கடிதங்களையும் நிருபங்களையும் எழுதத் தொடங்கினார்.
22021-வரை தேவனைப் பற்றி பேசக் கூடாது என்று அரசு எனக்கு தடை விதித்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். ஏப்ரல் 24, 1993 அன்று ஒரு தேவதூதன் மூலம் எனக்கு அழைப்பு மற்றும் பணிநியமனம் இருந்தபோதிலும், 2021-இல் விசாக்கள் பெற்று பயணம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளிலிருந்து பயனடைவதற்காக இந்தத் தடையை நான் மதிக்கிறேன். ஆனால், அனைத்து மதச் சமூகங்களின் கணக்கெடுப்பை எடுக்கவும், அதற்கு உட்படாதவர்களைத் தடைசெய்யும் நோக்கத்தில், அரசு உறுதியான முடிவைக் கொடுத்ததால், சீசருக்கு மெய்திருச்சபை மீதான தனது அதிகார வரம்புகளை பணிவுடன் சொல்ல வேண்டிய கடமையில் நான் இருப்பதைக் கண்டேன்.
3பேரரசுகளில் எப்போதும் இருந்தபடியே சீசர் ஒரு வழிபாட்டு அமைச்சரை நியமிக்க சுதந்திரமாக இருக்கிறார். ஆனால் அவரது வழிபாட்டு மந்திரி முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள், பௌத்தர்கள் மற்றும் பிரான்ஹாமிஸ்டுகளுக்கானது. அது நமக்கானது அல்ல. சீசர் உண்மையான திருச்சபையிலிருந்து விலகி இருக்க வேண்டும். அவருடைய மதம் அரசியல், மேலும் நான் அவர் மதத்தில் இல்லை.
4ஒரு குடிமகனாக, நான் ரோமர் 13:1-ன் படி அரசுக்கு உட்பட்டவன். என்னிடம் அடையாள அட்டை உள்ளது, நான் எனது வரிகளை செலுத்துகிறேன் மற்றும் நான் மாநிலத்தில் இருப்பதால் அனைத்து உத்தியோகபூர்வ கடமைகளையும் மதிக்கிறேன். ஆனால் மெய்திருச்சபை என்பது அரசின் ஒரு நிறுவனம் அல்ல, ஒரு அஞ்ஞான தேசத்தின் சட்டங்கள் ஒருபோதும் தேவனின் சட்டங்களுக்கு மேலாக இருக்க முடியாது.
5ஒரு தீர்க்கதரிசியாக, எனக்கு எதிராக கொலை மிரட்டல்கள் இருந்தபோதிலும், நான் அரசிடம் முறையிடவில்லை, ஏனென்றால் என்னை அனுப்பியது அரசு அல்ல. நான் ஒருபோதும் அரசிடமிருந்து பணமோ அல்லது பரிசோ பெற்றதில்லை மற்றும் நான் அரசிடமிருந்து எதையும் பெற விரும்பவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அரசு பல லட்சக்கணக்கான பணத்தை கொடுக்கும் சபைகளிலிருந்துதான் அரசு ஆவணங்களைக் கேட்க வேண்டும்.
6நாங்கள் ஒன்றுக்கூடுவதை எம்முறையிலேனும் தடைசெய்வதற்காக, அரசாங்கம் சபைகள், மசூதிகள், பாஸ்டர்கள் மற்றும் இமாம்கள் ஆகியோரின் கணக்கெடுப்பை மீண்டும் எடுக்கப் போகிறது என்ற தகவல் எனக்குக் கிடைத்ததும், நான் சொன்னேன், “தேவனே, நாங்கள் இன்னும் எவ்வளவு காலம் பூமியில் வாழவேண்டும்?" “ஒரு நாள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நாங்கள் உம்மோடு இருப்போம்” என்றேன்.
7மேலும் என்னை விசுவாசித்த நீங்கள், உங்கள் அடையாளத்தைக் காத்துக்கொண்டு, இஸ்ரவேலைப் போல் பலமுள்ளவர்களாயிருங்கள். கடந்த 2000-ம் ஆண்டுகளில், நாடுகளுக்கு இடையே நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால் எந்த மக்கள் இன்னும் தங்கள் தாய் மொழியைப் பேசுகிறார்கள்? 200 ஆண்டுகளுக்கு முன்பு, எனது பெற்றோர்கள் கானாவைச் சேர்ந்த அஷாந்திகள், ஆனால் நான் அசாந்தியை பேசுவதில்லை. ஆனால் யூதர்களைப் பாருங்கள்! இந்த அனுபவத்திற்குதான் தேவன் நம்மை அழைக்கிறார் ஏனென்றால் நாம் இஸ்ரவேல் என்பதால், சபைகள் மற்றும் மசூதிகள் நம்மைச் சுற்றியுள்ள அரபு தேசங்கள். அரசாங்கங்கள் வருடக்கணக்கில் நாம் ஒன்றுக்கூடுவதை தடைச்செய்தால் அல்லது நம்மை கலைந்துபோகச் செய்தால், நாம் இஸ்ரேலைப் போல வலிமையாகவும் அதிக எண்ணிக்கையிலும் திரும்பி வர வேண்டும். நம்முடைய அடையாளம், நம்முடைய விசுவாசம், நம்முடைய மொழி மற்றும் தேவன் மீதான நம்முடைய அன்பு ஆகியவை அப்படியே இருக்க வேண்டும்.
8இஸ்ரேலுக்கு எதிராக எத்தனை முறை போரிட்டு சிதறடிக்கப்பட்டதோ, அத்தனை முறையும் இஸ்ரேல் தன் தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். கடைசியாக, 70-ஆம் ஆண்டில் இஸ்ரேல் தனது நிலத்திலிருந்து விரட்டப்பட்டது, ஆனால் 1900 ஆண்டுகளுக்குப் பிறகு, இஸ்ரேலின் கொடி மீண்டும் அதன் நிலத்தில் பறக்கிறது. அவர்கள் உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் எபிரேயுவை தங்கள் மொழியாகக் கொண்டு திரும்பினர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரே மெய்திருச்சபையாக நாம் இருந்தால், நமது வழிபாட்டுத் தலங்கள் மூடப்படலாம், ஆனால் எதுவும் நம்மை மறைந்து போகச்செய்ய முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
9நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, நான் இறக்கும் வரை, ஒருபோதும் பாஸ்டர்கள் மற்றும் இமாம்களுடன் ஒன்றாக எண்ணப்படமாட்டேன். எகிப்தின் கடவுள்களின் ஆசாரியர்களுடன் மோசேயை ஒருவராக எண்ண முடியுமா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவருடைய நாளின் ரபிகளுடன் சேர்த்து எண்ண முடியுமா? ஒருபோதும் இல்லை! ஒருபோதும் இல்லை! ஒருபோதும் இல்லை! மேலும் என் சீஷர்களாகிய நீங்களும் அவ்வாறே செய்யுங்கள், ஏனென்றால் மனிதர்களையும் விலங்குகளையும் ஒன்றாக எண்ண முடியாது.
10ஒரு அஞ்ஞான அரசாங்கத்தின் எந்த அங்கீகார எண்ணையும் நாங்கள் ஒருபோதும் எங்கள் சபைகளின் கதவுகளில் வைக்க மாட்டோம். ஒருபோதும் இல்லை! ஒருபோதும் இல்லை! ஒருபோதும் இல்லை! வானம் பூமிக்கு மேலே உள்ளது. தேவன் சீசருக்கு மேலே இருக்கிறார் மற்றும் தீர்க்கதரிசி செய்தியாளன் பூமியில் தேவனின் பிரதிநிதி. பிசாசும் அவனுடைய சந்ததியும் எப்பொழுதும் தீர்க்கதரிசியையும் தேவனின் மக்களையும் துன்புறுத்த முயன்றிருக்கிறார்கள், ஆனால் இஸ்ரவேலைப் போலவே நாமும் பிசாசையும் அவனது சந்ததியையும் எதிர்க்க வேண்டும். உங்கள் வழிபாட்டுத் தலங்கள் அரசால் மூடப்பட்டிருப்பதைக் கண்டால், கவலைப்பட வேண்டாம். சீசருக்கும், மதுபானம் குடிக்கும் சில அஞ்ஞானிகளுக்கு அடிபணிவதை விட வீட்டிலேயே இருப்பது நல்லது. நாம் ஆராதனைக்கு செல்லாமல் மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் வீட்டிலேயே இருக்க முடியும் என்பதை இனிமேல் அறிந்து கொள்ளுங்கள்.
11நான், காக்குவ் பிலிப்பு, ஏற்கனவே இருக்கும் மற்றும் கள்ள சபையை விட இல்லாத மற்றும் மெய்யான திருச்சபையை விரும்புகிறேன். சீசருக்கு அடிபணிவதை விட குகைகள் மற்றும் நிலத்தடி கல்லறைகளை நான் விரும்புகிறேன். நான் ஒருபோதும் அரசை மீறியதில்லை, நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன். மாறாக சீசர் தான் மெய்த்திருச்சபைக்கு எதிர்த்து நிற்கிறார். உறுதியாக இருங்கள், உங்கள் விசுவாசம் தோல்வியடைய வேண்டாம்!
12வேறொரு நாட்டில், ஒரு பாஸ்டர் என்னிடம் கேட்டார்: “சகோதரர் பிலிப்பு, நாங்கள் பிரான்ஹாமிஸ்ட் சபையாக இருந்தபோது அரசு கொடுத்த ஆவணங்களை சமர்ப்பிக்கலாமா?” நான் சொன்னேன், சகோதரரே, நீங்கள் எதற்காக பயப்படுகிறீர்கள்? சீசருக்குக் கீழ்ப்படிவதற்கு நீங்கள் ஒருபோதும் திருச்சபையை வழிநடத்தக்கூடாது. நீங்கள் ஒருபோதும் தேவனையும் அவருடைய திருச்சபையையும் காட்டிக் கொடுக்கக்கூடாது.
13விசுவாச விஷயங்களில், நம் தேவனுக்கு முன்பாக வணங்குவது சீசருக்கும் அவருடைய ஊழியர்களுக்கும் சொந்தமானது. எனது அடையாள அட்டை, எனது ஓட்டுநர் உரிமம், எனது காரின் ஆவணங்கள் மற்றும் வேறு எதையும், அரசு என்னிடம் கேட்கலாம் ஆனால் திருச்சபையைப் பொறுத்தவரை, அது அவருக்குப் பொருந்தாது. சீசர் என்னிடம் வர வேண்டும் என்றால், அவர் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ளத்தான்.
14அது ஒரு கள்ளத்தனமான நரி என்பதை அறிந்து கொள்ளுங்கள். 3000 ஆண்டுகளுக்கு முன்பு, பார்வோன் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் மரணத்தை கட்டளையிட்டார், ஆனால் அது மோசே என்ற ஒரு மனிதனின் கரணமாக இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு, ஏரோது குழந்தைகளின் மரணத்தை கட்டளையிட்டார், அனாலும் அது நாசரேத்தின் இயேசு என்ற ஒரு மனிதனின் காரணமாக இருந்தது. இந்த பணியை நிறைவேற்ற அதே பிசாசு எப்போதும் பூமியில் உயிருடன் இருக்கும். ஆனால் அவர் எப்போதும் ஒரு மனிதனையும், தன்னை நேரடியாக எதிர்க்கும் ஒரு மக்களையும் கண்டுபிடிப்பார்.
15திருச்சபையை அவருக்குக் கீழ்ப்படுத்துவதைத் தவிர, சீசர் என்னிடம் கேட்கும் எல்லாவற்றுக்கும் நான் கீழ்ப்படிய முடியும். தேவன் சீசருக்கு தற்காலிக வல்லமையைக் கொடுத்தார் மற்றும் சீசர் தான் ஒரு நல்ல ஜனாதிபதி என்றும் அவருக்குப் பொருந்தாதவற்றில் அவர் தலையிடக்கூடாது என்றும் காட்டினார். என் இறந்த உடல் கூட அரசியலை விட்டு வெளியேறி தன்னை மதத்திற்குள் அழைத்துக்கொள்ளும் ஒரு நரிக்கு ஒருபோதும் கீழ்ப்படியாது.
16நாம் ஜீவனுள்ள திருச்சபையாக இருக்கிறோம், அதாவது ஜீவனுள்ள ஒரு தீர்க்கதரிசி மூலம் ஜீவனுள்ள தேவனைக் கொண்டிருக்கிறோம். மற்ற அனைத்து சபைகளும் மத கூட்டுறவு சங்கங்கள். உண்மையான திருச்சபையின் கணக்கெடுப்பை மத கூட்டுறவு நிருவனங்களுடன் ஒன்றுசேர்ந்து ஒருவர் எடுக்க முடியாது. கடந்த காலத்தில், இஸ்ரேலில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, அரேபியர்கள் கணக்கிடப்படவில்லை.
17இந்த தேசங்களும் மற்றும் ஜனாதிபதிகளும் இஸ்ரேலைச் சுற்றி இருக்கும் அரேபியர்கள். மேலும் நமது வழிபாட்டுத் தலங்களின் கதவை அரசு மூடும் காலம் வரப்போகிறது, அப்போது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் மக்கள்தான் நமது வழிபாட்டுத் தலங்களை காவல்துறையிடம் சுட்டிக்காட்டுவார்கள். மேலும் அது மற்றொரு கட்டத்துக்குச் செல்லும், பிறகு மற்றொரு கட்டத்துக்கு, பிறகு மற்றொரு கட்டத்துக்கு அவர்கள் நம்முடைய வீடுகளைக் காவல்துறையிடம் தெரிவிக்கும்வரை, நீங்கள் மரிக்கும்வரை உறுதியாக இருங்கள்.
18நீங்கள் பார்க்கும் போப் மற்றும் அனைத்து ஜனாதிபதிகளும் பிசாசுகள் மற்றும் அவர்களின் மதம் அரசியல். மேலும் அவர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கும் அழுகைச் சுவருக்கும் செல்கிறார்கள். அதனால்தான் அழுகைச் சுவரின் காதுகள் தீட்டுபடுத்தப்படுகின்றன என்று நான் சொன்னேன். இஸ்ரேல் உட்பட பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் மிருகங்கள், அவர்களுடைய அனைத்து செயல்களும், நல்லவைகளும் கூட, பிசாசினால் உண்டானவை.
19ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி பூமியில் இருக்கும்போது வேதாகமத்தின் மீது சத்தியம் செய்யும் அமெரிக்க ஜனாதிபதிகளைப் பாருங்கள். வேதாகமம் முழுவதையும் பாருங்கள், தோராவின் சுருளில் இஸ்ரவேலின் ராஜா எங்கே சத்தியம் செய்தார் என்பதைக் எனக்குக் காட்டுங்கள். ஆனால், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள் மற்றும் சபைகளின் பாஸ்டர்கள் வேதாகமத்தில் நம்பிக்கைவைத்து லேவியராகமம் 8-ஐ சிலுவையில் அறைந்தால், சீசரிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? இஸ்ரவேலின் ராஜாக்கள் கூட தீர்க்கதரிசிகளால் பரிசுத்தப்படுத்தப்பட்டனர், அவருடைய காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசி அவரைப் பரிசுத்தப்படுத்தாத நிலையில், "நான் ஒரு ஆசாரியன், ஒரு பாஸ்டர் அல்லது ஒரு அப்போஸ்தலன்" என்று எப்படிச் சொல்ல முடியும்? இது பரலோகத்தில் சாத்தானின் கலகத்தின் பலன். அதைச் செய்தது ஒரு எதிரி.
20சபைகளும் அவற்றின் தலைவர்களும் மிருகங்களைப் போல செயல்படுகிறார்கள். ஒவ்வொருவரும் மற்ற இடங்களில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் மகிழ்ச்சியுடனும், ஆழ்ந்த உறுதியுடனும் அவரவர் பக்கம் செல்கிறார்கள். அவர்கள் கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரான்ஹாமிஸ்டுகளாக இருக்கும்போது அவர்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். ஒரு சுவிசேஷகர் அல்லது வில்லியம் பிரான்ஹாமின் செய்தியைப் பின்பற்றும் யாரோ ஒருவர் எவ்வாறு தேவனின் முத்திரையான பரிசுத்த ஆவியைப் பெற முடியும்? தேவனின் முத்திரை என்பது உண்மையான பரிசுத்த ஆவியாகும், அதே நேரத்தில் மிருகத்தின் முத்திரை என்பது கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரான்ஹாமிஸ்ட் சபைகளில் கிரியை செய்யும் அபிஷேகம் அல்லது கள்ளப் பரிசுத்த ஆவியாகும்.
21ஏப்ரல் 24, 1993-ன் தரிசனத்தின் காரணமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் இதைச் சொல்கிறேன். மேலும் பத்மூ தீவில், காலங்களின் முடிவில் நோய்கள் மற்றும் வாழ்க்கையின் கஷ்டங்கள் மிருகத்தின் முத்திரையைப் பெறுவதற்காக பூமி முழுவதையும் சபைகளை நோக்கி அழைத்துச் செல்லும் என்று தேவன் யோவானுக்கு வெளிப்படுத்தினார்.
22கர்த்தராகிய இயேசுவின் ஊழியம் முழுவதும், பரிசேயரும் சதுசேய ரபிகளும் அவரிடம் கேள்விகளைக் கேட்பதை நிறுத்தவில்லை, ஏனென்றால் ஒரு உண்மையான தீர்க்கதரிசியை நிராகரிப்பது பிசாசையும் நரகத்தையும் தேர்ந்தெடுப்பதாகும். ஒரு தீர்க்கதரிசி பூமியில் உயிருடன் இருக்கும்போதே அவர் உண்மையான தீர்க்கதரிசியா அல்லது கள்ள தீர்க்கதரிசியா என்பதைத் தேடிப் பார்த்து உறுதி செய்வது உன்னதமான நடத்தையாகும். என்னை விசுவாசித்த நீங்களும் இதுபோலவே செயல்படுங்கள். நான் பூமியில் இருக்கும்போது கூட, நீங்கள் உண்மையை கண்டுபிடிக்க விரும்பும் எவரையும் ஆராய்ந்து பார்க்க உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. அது பாவம் அல்ல.
23ஒரு நாள், நான் என் தலைமுறையினருடன் பூமியை விட்டு வெளியேறுவேன். மேலும் தேவன், அவர் ஜீவனுள்ளவர்களின் தேவன், ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியை அதிக ஒளியுடன் அனுப்புவார். மேலும், நான் சொன்னதற்கு மாறான விஷயங்களை அவர் கூறினால், தாழ்மையாக இருந்து அவருக்கு செவிக்கொடுங்கள். அவரிடம் கேளுங்கள், குறிப்பாக அவரது அழைப்பு மற்றும் பணிநியமனம். இந்த தீர்க்கதரிசி எங்கிருந்தும் எந்த நேரத்திலும் வரலாம். தாழ்மையுடன் இருங்கள் மற்றும் அந்த நாளையும் அதன் செய்தியையும் அடையாளம் கண்டுகொள்ளவும். இந்த தீர்க்கதரிசி பிலேயாம் மற்றும் 1 இராஜாக்கள் 13-ன் பழைய தீர்க்கதரிசியைப் போல மற்றொரு தேவனை நோக்கி உங்களை அழைத்துச் செல்லாத வரை, அவரைப் பின்பற்றுங்கள்.
24தேவன் இஸ்ரவேலின் பெரிய ஜெப ஆலயங்களைக் கண்டார், ஆனால் அவர் பெத்லகேமின் தொழுவங்களை விரும்பினார். அவர் நாசரேத்தின் சிறிய தச்சரை விரும்பினார். நீங்களும் அதையே செய்யுங்கள். இஸ்ரவேலின் ஜெப ஆலயங்களில் தேவனைத் தேடாதீர்கள் ஆனால் பெத்லகேமின் தொழுவங்களில் தேடுங்கள். கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரான்ஹாமிஸ்ட் தேவாலயங்களில் தேவனைத் தேடாதீர்கள், ஆனால் கூடாரங்களில் தேடுங்கள். அரை நூற்றாண்டுக்கு முன்பு, வில்லியம் பிரான்ஹாம் ஏற்கனவே ஒரு பக்கத்தில், பிரன்ஹாமிஸ்ட் பேராலயங்களின்-கூடாரங்கள், மறுபுறம் ஒரு கூடாரத்தையும் பார்த்திருந்தார். நீங்கள் பார்க்கிறீர்களா? ஒருபுறம் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பேராலயங்கள்; மறுபுறம், உயிர் வாழும் தீர்க்கதரிசி வசலாக இருக்கும் ஒரு கூடாரம்.
25உங்களுக்குள் ஒருபோதும் பின்வாங்காதீர்கள். ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி இல்லாமல், அவளுடைய பாஸ்டரைச் சுற்றி ஒன்றுபட்ட பெரிய சபையும், பிரிந்து கொண்டேயிருந்து சண்டையிடும் சிறிய சபையும் ஒரே மாதிரியானவை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியுடன் இருப்பதற்கு முன்பு நீங்கள் ஒருபோதும் தேவனின் சித்தத்தில் இருக்க மாட்டீர்கள். அது காக்குவ் பிலிப்புவின் காலமாக இருக்காது, எனவே, இந்த தீர்க்கதரிசி உங்களுக்குச் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: "காக்குவ் பிலிப்பு அப்படிச் சொல்லியிருந்தார், ஆனால் நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன்". நீங்கள் பார்க்கிறீர்களா ஓசியா 12:14-ஐயும், இன்று நான் உங்களுக்கு கொடுக்கும் இந்தப் பரிந்துரைகள் அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு, மனத்தாழ்மையுடன் இருங்கள்.
26வேதாகமம் என்ற பழைய புத்தகத்திலிருந்து தேவனை வெளியே கொண்டு வாருங்கள். தேவனை வரலாற்றில் இருந்து வெளியே கொண்டு வாருங்கள். நீங்கள் என்னை நேசித்தால், என் மரணத்திற்குப் பிறகு, நான், காக்குவ் பிலிப்பு, நான் அவருடைய தீர்க்கதரிசி என்று யாரும் சொல்லவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு உயிருள்ள நபர் இறந்த தீர்க்கதரிசியின் சீஷராக இருக்க முடியாது.
27நான் காக்குவ் பிலிப்பு, நான் பூமிக்கு வந்தேன், பூமியில் வசிப்பவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பத்து மடங்கு அதிக மாய்மாலக்காரர்களாக இருப்பதை நான் கண்டேன். அவர்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் சுவைக்கேற்ப ஒரு நற்செய்தியை விரும்புகிறார்கள். அனைவரும் ஆழ்ந்த அமைதியுடன் பிசாசைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் பணக்காரர்கள் மற்றும் அவர்கள் தந்தை முதல் மகன் வரை எப்போதும் பணக்காரர்களாக இருப்பார்கள், ஏனெனில் அவர்களின் பேரலாயச்-சபை ஒரு குடும்பச் சொத்தாக இருப்பதால், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மரபுரிமையாக அனுப்புவார்கள். அவர்கள் தசமபாகம் பெறுகிறார்கள், ஆனால் அவர்கள் யாருக்கும் தசமபாகம் செலுத்துவதில்லை. ஆனால், நீ என் மகன் தானியேல், நீ ஒரு பிரசங்கியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை, ஏனென்றால் நீ இரட்சிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது உனக்கும் உன்னுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்குமான என்னுடைய ஜெபம். ஆமென்!
28மேலும் தசமபாகத்தைப் பற்றி பேசுகையில், என் பிள்ளைகளே, எப்போதும் தசமபாகம் செலுத்துங்கள்; மேலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்காக தசமபாகம் செலுத்தக்கூடாது. தசமபாகம் என்பது முதலீடு அல்லது தேவனுக்கான கடன் அல்ல, ஆனால் தசமபாகம் என்பது தேவன் உங்களுக்குக் கொடுத்தவற்றில் தேவனின் பங்காகும். யாரோ ஒருவர் தசமபாகம் செலுத்தவில்லையென்றால், அவர் கிறிஸ்தவராக இல்லாவிட்டாலும், அவர் தன்னை சாபத்தின் கீழாக வைக்கிறார், மேலும் அவருக்கு சபிக்கப்பட்ட அல்லது திருடர்களாக இருக்கும் பிள்ளைகள் கூட இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
29மேலும் இந்த மோசமான நேரம் இருந்தபோதிலும், பூமியில் இனி தீர்க்கதரிசிகள் இருக்க மாட்டார்கள் என்று பிரான்ஹாமிஸ்ட் பாஸ்டர்களும், இமாம்களும் கூறுகிறார்கள். ஆனால், பூமியில் இனி தீர்க்கதரிசிகள் இருக்க மாட்டார்கள் என்று கூறும் இந்த இஸ்லாமிய-பிரான்ஹமிஸ்ட் கோட்பாடு நரகத்தின் பழம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவன் இஸ்ரவேலுக்கு அநேக பெரிய தீர்க்கதரிசிகளையும், தேசங்களுக்கு அநேக பெரிய தீர்க்கதரிசிகளையும் அனுப்பினார் என்பதை அறிந்து கொள்ளுங்கள், மேலும் எடுத்துக்கொள்ளப்படுதல் இன்னும் நடக்காத வரை, தேவன் எப்போதும் தீர்க்கதரிசிகளை பூமிக்கு அனுப்புவார் , எடுத்துக்கொள்ளப்படுதல் நடக்கும் நாளிலும், பூமியில் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் இருப்பான் என்று நான் உங்களுக்குச் சொன்னேன்.
30நான் பூமியெங்கும் செல்லும் போது, உங்களை ஒரு புத்தகத்திற்க்கோ அல்லது கற்பனையான இயேசுவினிடமோ ஒப்படைக்க மாட்டேன். ஆனால் உங்களின் முற்றிலுமானது எப்போதும் ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளனாக இருக்கும். நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு தேவனின் ஊழியக்காரன் வேதாகமத்தை முற்றிலுமானதாக கொண்டிருக்க முடியாது, அவருடைய பிரசங்கம் வேதாகமத்தின் விளக்கங்களாக இருக்க முடியாது. ஒரு மனிதனின் இரட்சிப்பில் வேதாகமம் ஒருபோதும் பங்களிக்கவில்லை. அதனால்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் தீர்க்கதரிசிகளின் சுருள்களைச் சுற்றி நடக்கவில்லை.
31வேதாகமம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், இன்று பல வேதாகமங்கள் இருப்பதால், எந்த வேதாகமங்களை நீங்கள் பயன்படுத்துவீர்கள்? மரபுவழி வைதீக (ஆர்த்தடாக்ஸ்) வேதாகமத்தில் 75 புத்தகங்கள் உள்ளன. எத்தியோப்பியன் வேதாகமத்தில் 81 புத்தகங்கள் உள்ளன. எபிரேய வேதாகமத்தில் தால்முட் உடன் 39 புத்தகங்கள் உள்ளன. கத்தோலிக்க வேதாகமத்தில் 73 புத்தகங்கள் உள்ளன. புராட்டஸ்டன்ட் வேதாகமத்தில் 66 புத்தகங்கள் உள்ளன. சமாரியன் வேதாகமத்தில் 5 புத்தகங்கள் உள்ளன. சிரியாக் வேதாகமத்தில் 61 புத்தகங்கள் உள்ளன. பின்னர், ஒவ்வொரு வேதாகமத்திலும் நூற்றுக்கணக்கான பதிப்புகள் உள்ளன, அவை ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாக இருக்கிறது.
32வேதாகமத்தையோ அல்லது குர்ஆனையோ அல்லது பிரன்ஹாமின் பிரசுரங்களையோ ஆய்வு செய்யும் எவரும் சாத்தானின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். வேதாகமத்தைப் பிரசங்கிப்பவர்கள் அனைவரும் பொய்யர்கள். பவுலின் புத்தகம் பவுலின் ஏற்பாடு. எரேமியாவின் புத்தகம் எரேமியாவின் ஏற்பாடு. பிரான்ஹாமின் பிரசுரங்கள் பிரான்ஹாமின் ஏற்பாடாகும். ஏற்பாட்டை எழுதியவரின் காலம் கடந்துவிட்டபோது, நாம் ஒரு ஏற்பாட்டைப் பற்றி பேசுகிறோம். நீங்கள் ஒருபோதும் ஏற்பாட்டை எழுதியவரின் மனதிற்குள் நுழைய முடியாது. எனவே, ஒரு ஏற்பாட்டை வியாக்கியானிக்க முயற்சிக்கும் வேதபாரகர் அல்லது சான்றுறுதி அலுவலர் ஒரு பொய்யர்.
33உதாரணமாக, யோவான் 13-ல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் மேஜையில் அமர்ந்திருந்தார்கள், லூயிஸ் செகோண்ட் சொல்வது போல் யோவான் ஒருபோதும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது படுக்கவில்லை. ஒரு மொழியிலிருந்து இன்னொறு மொழிக்கு , ஒரு விஷயம் இரண்டு எதிர் அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம். உதாரணமாக, பிரெஞ்சு மொழியில்: "ஜீ வைஸ் ஆ கல்டே" (Je vais au culte) என்றால் நான் ஒரு சபையில் தேவனை வழிபடப் போகிறேன் என்று அர்த்தம். ஆனால் ஆங்கிலத்தில் “நான் ஒரு வழிபாட்டுக்கு செல்கிறேன்" (I go to a cult) என்பது நான் ஒரு பிரிவில் சாத்தானை வழிபடப் போகிறேன் என்று அர்த்தம். நீங்கள் பார்க்கிறீர்களா? அதனால்தான் ஏற்பாட்டை எழுதியவர் மட்டுமே அவருடைய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பாளர். மேலும் எபேசியர் 4-ன் ஊழியங்கள், அவற்றை நிறுவிய தீர்க்கதரிசி செய்தியாளன் பூமியில் இன்னும் உயிருடன் இருக்கும்போது மட்டுமே உண்மையை வைத்திருகின்றது .
34இரட்சிப்பு என்பது ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளன். ஒரு தீர்க்கதரிசி இறந்தால், அவருடைய புத்தகம் அல்லது அவரது செய்தி விவாதங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் பிரிவினைகளை மட்டுமே ஏற்படுத்தும். நீங்கள் பார்க்கிறீர்களா? பூமியில் இனி ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி இல்லாதபோது, சிறிது காலத்திற்குப் பிறகு, அவருடைய சரீரமாகிய அவருடைய திருச்சபை மரித்ததாகக் கருதப்படுகிறது, எனவே, அவருடைய திருச்சபையின் வளர்ச்சி அவருடைய மரித்த சரீரத்தின் அழுகல் காரணமாக வீக்கமடைகிறது. மேலும் அவருடைய எபேசியர் 4-ன் ஊழியங்களின் பிரசங்கம் அவருடைய உடல் சிதைவதைத் தடுக்க ஃபார்மலின் (இறந்தவர்களின் உடலை கெட்டுப்போகாமல் வைத்திருக்கப் பயன்படுகிறது) போன்றது.
35ஒரு பிரான்ஹாமிஸ்ட் சபையைப் பாருங்கள்; அது வீங்கி, வீங்கி, வீங்கி மற்றும் வெடிக்கிறது, மேலும் ஒரு பகுதி தன்னைப் பிரித்துக் கொண்டு ஒரு போக்கை உருவாக்குகிறது. ஏன்? ஏனென்றால் பிரான்ஹாமின் உடலில் இனி உயிர் இல்லை. ஆனால் தீர்க்கதரிசி உயிருடன் இருக்கும் போது அது அப்படி இருக்க முடியாது.
36நீங்கள் உயிருடன் இருக்கும் வரை உங்கள் உடல் சிதைவடைய முடியாது. ஆனால் உங்கள் மரணத்திற்குப் பிறகு, அனைத்து வகையான பூச்சிகளும் உங்கள் உடலைக் கைப்பற்றும். இது ஒரு தெய்வீக சட்டம். உடல் சிதைவடைய வேண்டும். பிரான்ஹாமிஸ்டுகளுக்கு இந்த வெளிப்பாடு இல்லை, ஆனால் நீங்கள் இந்த விஷயங்களை அறிந்திருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.
37ஏப்ரல் 24, 1993 அன்று, தேவதூதனும் ஆட்டுக்குட்டியும் நித்தியத்திலிருந்து என்னை பணிநியமனம் செய்வதற்காக வந்தனர், இந்த தெய்வீக ஆணையின் அடிப்படையில் நான் பேசுகிறேன். ஆனால், மனிதர்கள் ஒருமுறை மட்டுமே இறப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது, அதன் பிறகு நியாயத்தீர்ப்பு வரும் என்று எழுதப்பட்டிருக்கும்போது மனிதகுலம் ஏன் கவலைப்படுவதில்லை?
38நான் கடவுளின் சார்பாக பேசுகிறேன், எல்லோரும் நான் சொல்வதைக் கேட்கிறார்கள், இருப்பினும், கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரான்ஹாமிஸ்டுகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சாத்தானுக்கு தூபமிடச் செல்கிறார்கள். அவர்கள் மனிதர்களைப் பின்தொடர்கிறார்கள், ஆனால் நீங்கள், ஒரு இமாம், ஒரு அப்போஸ்தலன், பாஸ்டர், சுவிசேஷகர், போதகர் அல்லது சபைத் தீர்க்கதரிசி என்ற மனிதனிடம் ஒருபோதும் நம்பிக்கை வைக்காதீர்கள். எரேமியா 17:5 கூறுகிறது, "மனிதனை நம்புகிறவன் சபிக்கப்பட்டவன்." ஆனால் 2 நாளாகமம் 20:20-ன் படி அவருடைய தீர்க்கதரிசி செய்தியாளர்கள் மூலம் தேவனை மட்டுமே நம்புங்கள்.
39எனக்குப் பிறகு, நீங்கள் கோட்பாடு சம்மந்தமான விவாதங்களைப் பார்க்கும்போது, அது ஒரு பிரிவினைக்கு வழிவகுத்தால், இரண்டு குழுக்களும் பொய்யாக இருப்பதை அறிந்து கொள்ளுங்கள். உண்மை, அது ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளன் மூலம் தேவன் மட்டுமே. இது நான் மனிதகுலத்திற்கு விட்டுச் செல்லும் மரபுரிமை, நீங்கள் இறக்கும் வரை, நீங்கள் அதை ஒருபோதும் மறக்க மாட்டீர்கள்.