



Kacou 13 (Kc.13) : இஸ்லாமின்பேரிலானபிரசங்கம்
(2003 பிப்ரவரி 9 ஞாயிற்றுக்கிழமை லோக்காட்ஜ்ரோ, ஆபிட்ஜான்-ஐவரிகாஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 மாற்கு 13:35 ல் தேவன் நியமித்திருக்கிற பிரகாரம் அதற்குரிய சத்தியத்தின் பங்கை இஸ்லாமும் பெற்றுக்கொள்ளும்.
2 நான் நான்கு வருடங்கள் ஒரு முஸ்லீம் குடும்பத்தின் பாதுகாப்பில் இருந்தேன். அவர்கள் என்னை மிக நன்றாக நடத்தினார்கள் அவர்களுக்கு திருப்பிச்செலுத்த நான் கடன்பட்டவனாக இருக்கிறேன். அந்த நான்கு வருட பராமரிப்புக்காக, என் பெற்றோரிடமிருந்து ஒரு பைசா கூட பெற்றுக்கொள்ள அவர்கள் ஒருபோதும் விரும்பவில்லை...
3 உங்களையும் என்னையும் போன்று அவர்களும் அவ்வளவாக தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள், ஆனால் தேவன் அவர்களை ஒரு காலத்திற்கு இஸ்லாமின் சங்கிலிகளால் ஒருபுறமாக கட்டிவைத்து விட்டார். ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் யூதர்களுக்கு நேராக இருந்த அதே மனப்பான்மை தான் முஸ்லீம்களுக்கும் அரேபியர்களுக்கும் நேராக இன்று உலகத்தின் மனப்பான்மையாக உள்ளது. அவர்களை தேவன்: "என் ஜனம்..." என அழைக்கும் நாள் வருகிறது. நான் அந்த மார்க்கத்திற்கு எதிராக இருக்கிறேன், ஆனால் அந்த ஜனத்திற்கு எதிராக அல்ல. நீங்கள் காண்கிறீர்களா? இடதுகையும் வலதுகையும் போன்று இஸ்லாம் கத்தோலிக்கத்தின் பரிபூரண சொரூபமாக உள்ளது.
4 நல்லது, எனினும், நியமிக்கப்பட்டிருக்கிற காலம் வரைக்கும் ஒரு ஜனத்தை சிறைபடுத்திவைத்து, பின்பு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதன் சொந்த குமாரர்களுக்குமுன் மண்டியிடப் போகிறதான, இந்த இரத்த வெறிகொண்ட மற்றும் விக்கிரகாராதனை மார்க்கமான, இஸ்லாம் பற்றினதான, ஒரு உருவகத்தை அளிக்க, நான் விரும்புகிறேன். ஒரு ரசூலாக இருக்கிற நான், 1993 ஏப்ரல் 24ம் தேதியன்று, நான் பெற்றுக்கொண்ட ஊழியத்தின் வல்லமையினால், நான் அதை கூறுகிறேன். [ஆசிரியர் குறிப்பு: “ரசூல்” என்றால் “இறைதூதர்” அல்லது “தீர்க்கதரிசி செய்தியாளன்” என்று பொருள்]. தீர்க்கதரிசியின் வார்த்தை. இஸ்லாமின் மீது தேவனின் நியாயத்தீர்ப்பு வேளையானது வருகிறது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
5 இஸ்லாம் தோன்றும் முன்னர், அரபியர்கள், வழிபாட்டிற்கு அனேக தெய்வங்களை பயன்படுத்தி வந்தனர், அவைகளுக்குள் அல்லா, அதாவது சந்திரனை அதனுடைய அடையாளமாகக் கொண்ட வானராக்கினியும், அல்-ஓசா எனப்பட்ட விடியற்கால நட்சத்திரமும் அடங்கும். நீங்கள் இஸ்லாமிலுள்ள சந்திரன் மற்றும் நட்சத்திரத்தின் சின்னங்களை எளிதாக புரிந்து கொள்ளலாம். மேலும் இந்த அதேபிரகாரமாகவே, ரோமாபுரியானது அஞ்ஞான மற்றும் ரோம தெய்வங்களையும் விழாக்களையும் கிறிஸ்துவத்தினுடையதாக்கிற்று, அதே வழியில் அரபிதேசத்தின் அஞ்ஞான தெய்வங்களும் திருவிழாக்களும் இஸ்லாமியமாக்கப்பட்டது.
6 பேசுவதற்கு முன் முஸ்லீம்கள் உச்சரிக்கிற அந்த புனித வார்த்தைகள் (sacred) அது அரபு மந்திரவாதிகளான காஹின்களின் (Kahins) பழக்கவழக்கங்களாக இருந்தது. மஹொமெத் (Mahomet) அதற்கு அப்பால் செல்லவில்லை. இஸ்லாம் என்பது, ஏற்கெனவே இருந்துகொண்டிருக்கிற விசுவாசத்தின் காரியங்களை அடிப்படையாகக் கொண்டு, முழுவதும் மனிதனால் உருவாக்கப்பட்ட, கட்டமைப்பின் பாகமாகும். இந்த தெய்வங்கள், வானத்தில் நட்சத்திரங்களாகவும் பூமியில் மெக்காவிலே உள்ள காபாவில் (Ka'ba) சேகரிக்கப்பட்ட கற்களாகவும் பிரதிநிதித்துவம் கொள்கிறதாம்.
7 எப்பொழுதுமே, இஸ்லாம் தோன்றும் முன்பும் கூட, ஒவ்வொரு வருடமும், அங்கு ஹஜ் (Hajj) என்னும் ஒரு பெரிய நிகழ்வு இருந்தது; இந்த நிகழ்வின் போது எல்லா இடங்களிலிருந்தும் வந்த யாத்ரீகர்கள் வட்டமாக ஏழு தடவை இந்த கற்களை சுற்றவேண்டியிருந்தது, அது அராஃபா மலைக்கு அவர்களை வழிநடத்தியது, அது துருக்கியில் உள்ள அரராத் மலையிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. மூவாயிரம் மனுஷரைக்கொண்ட இராணுவத்தின் ஆதரவுடன், அந்த மஹோமெத், 622 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மெக்காவிற்குள் நுழைந்து, காபாவின் சிலைகளை தூக்கி எரிந்துவிட்டு, ஒன்றை மட்டும் விட்டுவிட்டான், அது ஆபிரகாம், இஸ்மவேல் மற்றும் ஆகாரின் இருப்பிடம் என்று கருதப்படுகிறது.
8 மஹோமெத், அவன்தானே 571 ஆம் ஆண்டுவாக்கில் பிறந்தான். அவன் பிறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அவனது தந்தையாக கருதப்படுகிற அப்துல்லா மரித்துப்போனான். அவனது தாயான ஆமினா அவனை பிடுயின்ஸ் (Bedouins) என்ற ஒரு பழங்குடியினரிடம் விட்டிருந்தாள், அவள் மரித்தபின்பு அவன் திரும்ப கொண்டுவரப்பட்டான். அவனது தகப்பன்வழி தாத்தாவால் அவன் திரும்ப கொண்டுவரப்பட்டான், அவர் இவனது எட்டாவது வயதில் காலமானார். அதனால் இவனது மாமாவான அபு தாலிப் அவனை வளர்த்தான். தனது வளர்ப்பு சகோதரனுடன் இவன் ஒரு மேய்பனானான்.
9 மெக்காவின் வடக்கே, அவன் மோசே மற்றும் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டான். ஆனால் மோசேயின் ஐந்து புத்தகங்களான தோராவை பெற்றுக்கொள்ள அவனால் முடியவில்லை. ஆனால் பிறகு, செல்வம் பெருத்த, ஒரு யூத விதவையான, கதீஜா (Khadija), அவளுடைய வியாபார ஒட்டகபயணக்குழுவை (caravan) நடத்தினான், அவள் பிறகு அவனுக்கு மனைவியாகி, மோசேயின் புஸ்தகங்களை அவனுக்குக் கொடுத்தாள். அந்த திருமணத்தை கதீஜாவின் பெற்றோர் எதிர்த்தனர், ஆனாலும் அது நடந்தது. அவனுக்கு 24 வயதும் அவளுக்கு 40 வயதும் இருந்தது.
10 கதீஜாவின் மரணத்திற்குப் பிறகு, மஹொமெத் சட்டபூர்வமாக ஒன்பது மனைவிகளையும், பத்துக்கும் மேற்பட்ட வைப்பாட்டிகளையும் (concubines) எடுத்துக் கொண்டதில், அதிகமாக நேசித்தது ஆயிஷாவை தான்; முதலாவது காலிஃபும், மஹோமெதின் மரணத்திற்கு பிறகு முதல் பிரதிகுருவும் ஆகவேண்டியவனான அவனது நண்பனான அபூ பக்கரின் மகள் தான் அவள், ஆயிஷாவை தனது மணவாட்டியாக அவன் எடுத்துக் கொள்ளுகையில், அவளுக்கு ஆறு வயதும், அவளை மணம் முடிக்கையில் அவளுக்கு ஒன்பது வயதுமாக இருந்தது. காரியம் இப்படியிருக்க, ஒன்பது வயதுள்ளவளாக இருக்கையில் ஆயிஷாவை மஹொமெத் மணம் முடித்தான். மேலும் அவள் பதினெட்டு வயதாக இருக்கையில் அந்த மஹொமெத் வியாதிப்பட்டு, ஆயிஷாவின் கரங்களில் தானே மரித்தான். எனினும், அவனை ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாக ஆக்குவது அவனது தனிப்பட்ட வாழ்க்கையின் அந்த காரியங்கள் அல்ல என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
11 ஆனால் மஹொமெத் எவ்வாறு தனது ஊழியத்தை ஆரம்பித்தான்? 612 ம் ஆண்டு வாக்கில், தியானம் பண்ண ஒதுங்கின அவன் ஹிரா மலையின் ஒரு குகையில் உறங்குகையில், அவனுக்கு ஒரு சொப்பனம் உண்டாயிற்று. அதில் தூதன் ஜிப்ரில் (Jibril) வந்து அவனிடம் ஒரு சுருளை வாசிக்கும்படி கேட்டான், அந்த தூதன் வேதாகமத்தின் பிரதான தூதனாகிய காபிரியேல் அல்ல. மஹொமெத் அவனைப் பார்த்து: "எனக்கு வாசிக்கத் தெரியாது!" என்றான். ஆனால் மஹொமெத் எழும்பினபோது, ஒரு புத்தகம் தனது இருதயத்தில் இறங்கிய உணர்வை பெற்றிருந்தான்; அதுதான் மீலாது நபியின் (Mawlid) விழாவுக்கு பின் இருப்பது அதுதான். அவர்கள் போதிக்கிறபடி குர்-ஆன் அப்படியே வானத்திலிருந்து வந்தது அல்ல, ஆனால் அது மஹொமெதின் இருதயத்திற்குள் வந்திறங்கியதாக இருக்கிறது. மேலும் அன்றைய தினம், அவன் குகையிலிருந்து வெளியே வந்தபோது, அடிவானத்தை நிரப்பிக்கொண்டு, "அல்லாவின் தூதுவனே, வாழ்த்துக்கள்!" என அவனை வாழ்த்துகிற, அந்த பெரிய தூதனை கண்டான்.
12 காரியம் இப்படியிருக்க, அவனது பிறப்பின் போது, அவன் தகப்பனற்றவனாக இருந்ததுபோலவே, அவனது முதற் பெயர் "மா-ஹொமெத்" (Ma-Homet) என்று இருந்தது, அதை "அங்கீகரிக்கப்படாதது" அல்லது "முறைகேடாகப்பிறந்தது" என்று சொல்லலாம். அவன் ஒரு தீர்க்கதரிசியான பின்பு, அவனது பெயர் முஹமது (Mohammed) என மாற்றப்பட்டது, அதை “கடவுளால் ஆசீர்வதக்கப்பட்டது" என்று சொல்லலாம். ஆனால் துவக்கத்தில், அது "மா-ஹொமெத்" அதாவது "அங்கீகரிக்கப்படாதது" என்பதுதான். அரபியில் "மா" மறுப்பை வெளிப்படுத்துகிறது. நீங்கள் காண்கிறீர்களா? கிறிஸ்த்துவத்தில் சவுலும் பவுலும், இஸ்லாமியத்தில் மஹொமெதும் முஹமதும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
13 ஈசாக்குக்கும் இஸ்மவேலுக்கும்; யூதர்களுக்கும் அரபியர்களுக்கும் இடையே போர் துவங்குவதற்கு முன்னர் பரலோகத்தில் அது ஆரம்பித்ததாக இருக்கிறது. ஈசாக்குக்கு யூதமார்க்கம் இருந்ததால் இஸ்மவேலும் தனது சொந்த மார்க்கத்தை உடையவனாக இருக்க விரும்பினான். அந்நேரத்தில், தேவனுக்காக, யூதமார்க்கத்திலிருந்து ஒரு மார்க்கத்தை வெளிக் கொண்டுவர ஈசாக்கின் வம்சவழியில், இயேசுகிறிஸ்து, தகப்பனின்றி பிறந்தார், ஆனபடியால், பிசாசுக்காக, யூதமார்க்கத்திலிருந்து ஒரு மார்க்கத்தை வெளிக் கொண்டுவர, ஓர் நாளில், இஸ்மவேலின் வம்சவழியில், ஒருவன் தகப்பனின்றி பிறக்கவேண்டியது தவிற்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால் ஒன்று ஒரு கன்னிகைக்கு பிறந்தது அதேநேரத்தில் மற்றது பாலியல் பாவத்தில் இருந்து பாலியலால் ஆளுகை செய்யப்படுகின்ற ஒன்றாக பிறந்தது. அறியாத தகப்பனுக்கு பிறந்தவனும், பாலியல் பாவங்களால் அவதியுற்றவனுமான மஹொமெதிடமிருந்து அத்தகைய பாவங்களை குறைக்கத்தான், உண்மையில், இஸ்லாமிலே பெண்களுக்கு முகத்திரை திணிக்கப்பட்டது.
14 மேலும் இப்படியாக, இந்நாள் வரைக்கும், ஒரு மனிதனுடைய பாலுணர்ச்சியின் பலவீனத்திற்கு பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக ஆனார்கள். அது ஒரு குற்றமாகும், மேலும் உங்களைத்தான், இஸ்லாமிய பெண்களே, சர்வவல்ல தேவனுடைய நாமத்தினால் நான் உங்களிடத்தில் கெஞ்சிக் கேட்டுக்கொள்வதாவது, பிசாசினுடைய அவதாரமாக நீங்கள் உங்களை கருதவில்லையென்றால், இந்த நுகத்தை நிராகரித்துவிட்டு சுதந்திரமாக இருங்கள்!
15 உலகத்தின் சிருஷ்டிப்பிற்கு பல ஆயிர வருடங்களுக்கு பிறகு முகத்திரை அணிய அவசியமான ஒரு பிசாசாக பெண் ஏன் மாற வேண்டும்? இஸ்லாம் மார்க்கத்திற்கு முன்னமே பெண் இருக்கிறாள் மேலும் அவளை சிருஷ்டித்த தேவன் ஒரு போதும் அவளுடைய முகத்தில் ஒரு திரையை போடவில்லை. தன்னுடைய முகத்தை மூடிமறைத்துக் கொண்டிருக்கவேண்டிய பிசாசின் அவதாரமல்ல நீங்கள் என்பதைக்குறித்து நிச்சயமுள்ளவர்களாக நீங்கள் இருப்பீர்களேயாகில், அந்த நுகத்தை புறக்கணித்துவிட்டு சுதந்திரமாக இருங்கள், ஏனெனில் தேவனுக்குமுன்பாக, நீங்கள் நீர்வாணமாக இருக்கிறீர்கள். [ஆசிரியர்குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
16 அவனுடைய வாழ்கையில், வேதனைகள் மற்றும் மெய்மறந்த நிலைகளினூடாக, அவன் தீர்க்கதரிசனங்களை போன்றவைகளை பெறவும் பேசவும் செய்கிறான், அந்த வார்த்தைகளை முதலில் இருதையத்தில் கற்று பின்பு செம்மறி ஆட்டுத் தோள் எலும்பின் மேலும் செம்மறி ஆட்டு தோல்களிலும், பாப்பிரஸ் இலைகளிலும் எழுதப்பட்டது. அந்த ஏவுதல்களில் ஒருபகுதி குர்-ஆன் ல் இடம்பெறவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும் ஆனால் அதேவேளையில் அவைகள் மஹொமெதின் நேரடியான ஏவுதலாக இருந்தவைதான்.
17 மேலும் நாம் இன்று கொண்டிருக்கும் குர்-ஆன் க்கு வருவோமானால், அது முதலாம் காலிப் உத்மனால் (Caliph Uthman) சையிது பின் தாபித் (Zayd bin Thabit) என்பவரின் எழுத்துக்களிலிருந்து, ஒரு குழுவை வைத்து மறு ஆய்வு செய்து ஒரு பொது ஏற்புடைய பதிப்பாக (The Vulgate) நிறுவப்பட்டதாக உள்ளது. மேலும் காலிப் உத்மனுக்கு முன்னும் பின்னும் இந்த குழு வரைக்கும் சையிது பின் தாபித்தின் மூலம், இந்த எழுத்துக்கள் மிக அதிகப்படியான அளவில் திருத்தி அமைக்கப்பட்டவேளையில், மஹொமெதுவுக்கு நேரடியாக கிடைத்த மர்மமான வசனங்கள் எல்லாம் நீக்கப்பட்டது.
18 இந்த உலகம் நவீன பெந்தேகொஸ்தேயினரின் செய்கைகளை கொண்ட (charismatic) ஒரு இஸ்லாம் மார்கத்துடன் முடிவுக்குவரும் என நான் முன்னுரைக்கிறேன். இக்காரியம் வருகிறதான ஒரு நாளில் அல்லது இன்னொரு நாளில் பூமியில் சம்பவிக்கும்... [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
19 உண்மையாகவே, இந்த ஆவியை மஹொமெத் மீண்டும் மீண்டுமாக சந்தேகித்தான் ஆனால் கதீஜா (Khadija), அவனை ஊக்குவித்தாள். அவள் அவன் மீது அதிகமாக ஆதிக்கம் செலுத்தினாள். இல்லையெனில் அவன் வெளியரங்கமாக மனந்திரும்பியிருப்பான்! குர்-ஆன் இவை அனைத்தையும் நீக்கி விட்டது, அதன் பிறகு எண்ணற்ற திருத்தங்களுக்கும் உள்ளானது. ஒரு குழுவின் வேலைக்கு உட்பட்ட அனைத்து காரியமும் பேய்தனமானதாக இருக்கிறது. குர்-ஆன் ஐ போன்று, நாம் கத்தோலிக்கருடைய டோப் (Tob) வேதாகமத்தையும் புராடஸ்டாண்டு மற்றும் சுவிசேஷக சபையினருடைய அஸ்டர்வால்டு, ஜேம்ஸ் மன்னன், மார்டின், லூயிஸ் செகண்டு... வேதாகமங்களையும் கொண்டிருக்கின்றோம்.
20 மஹொமெத் தோடர்சியாக சிலநெருக்கடிகளை கொண்டிருந்தான், அது அவனை நினைவிழக்கச் செய்யும் மேலும் அவன்தானே அது பைத்தியகாரத்தனம் என்று நம்பினான். எல்லா வரலாற்றாசிரியர்களும் அதை குறிப்பிடுகிறார்கள். 622 ம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதியிலே மஹொமெத் மதீனாவிற்கு ஓடிப்போய், தன்னை இராஜாதிபத்திய பிரதிகுருவாக நிறுவிக்கொண்டான். மேலும் அரசியல், இராணுவம், பொருளாதாரம் மற்றும் மார்க்கரீதியான ஜீவியம் இவைகளை ஒன்றினைத்து ஒரு கடவுளாட்சிமுறை சமுதாயத்தை நிறுவினான், அதையே இஸ்லாம் இன்றுவரை இஸ்லாம் கொண்டுள்ளது.
21 இஸ்லாமிற்கு முன்னர், யூதர்கள் ஏற்கனவே யாத்ரிப்பிலே (Yathrib) குடியேறி இருந்தார்கள், காய்பார் (Khaibar) மற்றும் மெக்காவின் வடக்கிலே உள்ள எல்லா பாலைவனச் சோலைகளிலும் இருந்தனர்; ஆகவே யூதர்களையும் கொண்டிருக்க வேண்டும் என்ற வாஞ்சையில் மஹொமெத் இஸ்லாமியர்களை தொழுகையின் பொழுது எருசலேமிற்க்கு நேராக திரும்பும்படியாக கேட்டுக்கொண்டான். யூதர்கள் மகத்தான மன்னிப்பிற்கென்று கொண்டிருக்கும் உபவாசத்தை போன்றே கிப்பூர் உபவாசத்தை கடைப்பிடிக்கும்படிக்கும் கேட்டுக் கொண்டான்.
22 மஹொமெத் பற்றி பேசுகையில், இவனை சில யூதர்கள் கிறிஸ்து வாக்குதத்தம் பண்ணின தேற்றரவாளன் என்று நினைத்தனர். எனவே யூதர்கள் இவனை அழைத்து, இவனை விசாரித்தனர் அப்பொழுது இவன் ஒரு வஞ்சகன் என கண்டறிந்தனர். மஹொமெத், தான் தோல்வியுற்றதை கண்டபொழுது, அவன் ஆயுதங்களை ஏந்தி யூதர்களை படுகொலை செய்து மேலும் இனிமுதற்கொண்டு இஸ்லாமியர்கள் தொழுகையின் போது மெக்காவின் பக்கம் திரும்பவேண்டும் என்று சொன்னான். மேலும் கிப்பூர் உபவாசத்தை ரமலான் என்று மாற்றினான். மேலும் மோசேயோடும் இயேசுவோடும் வேதாகமத்தோடும் முரண்பட துவங்கினான். யாத்ரிப் என்ற பெயரை மதீனா என்றும், குறைச்சின் பெயரை மெக்கா என்றும் மாற்றினான்.
23 மஹொமெத் எந்த இடத்திலும் பரிசுத்தத்தை நாடினதாக எங்கும் கூறப்படவில்லை, அது இல்லாததினால் தான், அவனை பின்பற்றுகிறவர்களும் கொடூரமான, மிருகத்தனமான, இரத்த வெறிகொண்டவர்களாக இருக்கிறார்கள். பாலியல் உறவே, மஹொமெதின் மிக பெரிய பலகினம். வேசித்தனம் மற்றும் விபச்சாரம் அவனுடைய மரணம் வரைக்கும் ஒட்டிகொண்டு இருந்தது. பெண்கள் மிக அழகாக இருக்கிற இன்றைய நாட்களில் என்ன நடக்கும்? அவன் இரண்டாவதாக திருமணம் செய்த பொழுது நிலைக்க முடியவில்லை மேலும் மூன்றாவதை எடுத்தான், அவனால் நிலவரப்பட முடியவில்லை மேலும் அவன் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது... பிறகு அவன் வியாதிப்பட்டு மரிக்கும் மட்டுமாக மனைவிகள் மற்றும் வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டு இருந்தான்.
24 இப்பொழுது இந்த இஸ்லாமியர்களை கண்காணித்து பாருங்கள், தினமும் ஐந்து முறை ஜெபித்தாலும், மசுதிக்கு வெளியிலேயே ஒருவனை பிடித்து ஒரு மிருகத்தை போன்று கொன்று போடுவார்கள். ஆனால் அவர்கள் பூமியை ஜெயங்கொள்ளத் துவங்கினபோது கிறிஸ்தவர்களை தாக்குவதற்கு பயந்தார்கள், யூதர்களை காட்டிலும் தங்களுடைய சத்தியத்தில் மிக நேராகவும் விட்டுக் கொடுக்காதவர்களாகவும் இருந்தார்கள்.
25 ஆயுதங்களினிமித்தம் பூமியின் ஒருபாகம் ஒரு காலம்வரை இந்த மார்க்கத்துக்கு கீழ்பட்டிருக்கிறது. மேலும் வெள்ளிக்கிழமையை பரிசுத்த நாளாக தேர்ந்தெடுத்ததின் அர்த்தம் என்னவென்று நாம் அறிந்திருக்கின்றோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெள்ளிக்கிழமையிலே சிறைப்பிடிக்கப்பட்டார், அவருடைய நேரம் முழுவதையும் சிறையில் செலவழித்து மேலும் அதே வெள்ளிக்கிழமையில் சிலுவையில் அறையப்பட்டார். எல்லா விக்கிரக பூசாரிகளும், எல்லா மாயமந்திர முறைமைகளும் வெள்ளிக்கிழமையையே தங்களுடைய விருப்பமான நாளாக கொண்டிருப்பார்கள். பிசாசின் எண்ணாக "13” இருப்பது போன்று, வெள்ளிக்கிழமை பிசாசின் நாளாக இருக்கின்றது. சாத்தான் வெளிபடுத்தின சுவிஷேசம் 13 ம் அதிகரத்தில் தோன்றுகிறான், மேலும் நானும் காக்குவ் 13 ம் அதிகாரத்தில் சாத்தானை திரைநீக்கி காண்பிக்கிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
26 நல்லது. சில இஸ்லாமியர்கள் வேதாகமத்தில் உள்ள தூய்மையற்ற காரியங்களை குறித்து பேசுகிறார்கள். ஆயினும் இன்னுமாக குர்-ஆன் அவைகளை திரளாகக் கொண்டிருக்கிறது, சுரத் அல் குய்யாமாவில்: “சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளி” போன்ற இன்னும் மோசமானவைகள் உண்டு. துல்லியமாக குர்-ஆன், சுரத் 75:37 ல். ஒரு பரிசுத்த புத்தகத்திற்கு அது தகுதியற்றது. அரபியர்களுக்கு தேவன் இஸ்லாம் மார்கத்தை கொடுக்காமல் இருந்தால், எப்பொழுதோ மனிதகுலம் அரபியர்களால் அழிக்கப்பட்டு இருந்திருக்கும். உங்களால் காணமுடிகிறதா? இந்த காட்டு மிருகங்களை அடக்குவதற்காக தேவனே இதை செய்தார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
27 அன்பினால் தான் நான் இந்த எல்லா காரியங்களையும் கூறினேன், ஓர் நாளிலே தேவன் சந்திக்கபோகிற ஜனமாக இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் நான் அவர்களை குறித்து அதிகமாக பேசவில்லை. கம்யூனிசமும் பெர்லின் சுவர்களும் இடிந்து விழுந்ததை போன்று ஓர் நாளிலே இஸ்லாமினுடைய சுவர்கள் விழும். அந்த மணிவேளை வரும்பொழுது இஸ்லாமின் குமாரன் ஒருவன் இந்த செய்தியின் அடிப்படையில் எழும்பி அவனுடைய தலைமுறைக்கு என்னை போன்றே வெளிச்சப் பந்தமேந்தியாக (torchbearer) இருப்பான். மேலும் அவன் முழு உலகிற்கும் கிறிஸ்தவர்களுடைய தேவனின்பேரில் பிரசங்கிப்பான். அவன் முஸ்லீம்களையும் கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பான்.
28 அவ்வேளையிலே, விசுவாசிக்கிறவர்கள், தங்களுடைய ஜெபமாலைகள், ஹாதித்ஸ் (hadiths) மற்றும் குர்-ஆன்களை சுட்டெரிப்பார்கள். மேலும் திருச்சபைக்கு எதிரான பெரிதும் கடைசியுமான உபவத்திரமானது வரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, கிறிஸ்தவம் ஊடுருவி, பெர்லின் சுவர் போன்று இஸ்லாமை உடைத்துபோடும். அந்த வேளையிலே தானே உண்மையான உபவத்திரமானது துவங்கும் மேலும் அது அந்தப்படியே ஆகும். அதன் நிமித்தமாகவும் அந்த மணி வேளைக்காகவுமே தேவன் "புனித குர்-ஆன்" என்று அழைக்கப்படுகிற புத்தகத்திற்கு இவ்வளவு புகழை கொடுத்து அதை விட்டு வைத்தார்.
29 ஒரு நேரமானது வரும் அப்பொழுது வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் தேவனை சுதந்திரமாக தொழுது கொள்வார்கள். தன்னுடைய தேவனை குறித்து சுதந்திரமாக பேச முடியும் மேலும் எந்த சட்டமும் எந்த மதமும் அதை தடுத்து நிறுத்த முடியாது. ஆகவே தேவன் அதை செய்வார், ஒரு நாளிலே, இணையம் முலமாகவோ அல்லது மற்றவைகள் மூலமாகவோ, தடைகளும், இஸ்லாமினுடைய சுவர்களும் ஊடுருவ படும், அதனுடைய கனிகள் தெருக்களிலே காணப்படும். மேலும் தேவனுடைய வார்த்தையும் விடுதலையும் வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள அரபியர்களை அவர்களுடைய உள் அறையிலும் சந்திக்கும்.
30 இணையம் இன்று தேவன் மனிதர்களுக்குக் கொடுத்த மிகப் பெரிய தகவல்தொடர்பு வழியாகும். அதினால் எல்லா மனித மற்றும் மத சம்பந்தமான தடைகளையும் ஊடுருவிச் செல்ல இயலும். எப்படி என்று எனக்கு தெரியாது ஆனால் ஒரு நாளிலே கிறிஸ்தவர்களின் தேவன் வடக்கு ஆப்ரிக்காவை மறுபடியும் சந்திப்பார் மேலும் ஆதி கிறிஸ்தவர்கள் எப்படியாக விளையாட்டு அரங்குகளில் கூட்டங்களை நடத்தினார்களோ அதுபோன்று மகத்தான சுவிசேஷ கூட்டங்கள் நடைபெரும். இது புமியிலே ஓர் நாளில் நிகழும். ஏனெனில் நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, நான் அதை அறிவித்து இருக்கிறேன்.
31 [பகுதி 2, ஜூன் 16, 2019 அன்று பிரசங்கிக்கப்பட்டது] மேலும் இஸ்லாம் மதம், இந்து மதம், புத்த மதம், கிறிஸ்துவ மதம் அல்லது யூத மதத்தின் உறுப்பினர்களே, நான் பெந்தேகோஸ்தே அல்லது எகிப்தின் மந்திரவாதி அல்ல, ஆனால் ஒரு தீர்க்கதரிசி. நான் அற்புதங்களைச் செய்கிறேன், ஆனால் நான் ஒரு தீர்க்கதரிசி, ஆகவே நான் உங்களிடம் வார்த்தையுடன் வருகிறேன். ஆதியிலே வார்த்தை இருந்தது. சாத்தானின் சந்ததி ஐரோப்பாவிலிருந்து உலகின் மூலைகளுக்குச் சென்றபோது, ஆப்பிரிக்க மாந்திரீக பொருட்களுக்கு மாற்றாக சிலுவைகள் மற்றும் சிலைகளுடன் இருந்தது, ஆனால் நான் தேவனுடைய பிரசங்கங்களுடன் வார்த்தைகளுடன் உங்களிடம் வருகிறேன்.
32 ஏப்ரல் 24, 1993 அன்று, நான் ஒரு அஞ்ஞானியாக இருந்தேன், வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவர் என்னை ஒரு தரிசனத்துக்குள்ளாக கொண்டு சென்றார் இதோ, இருள் பூமியின் முழு மேற்பரப்பையும் மூடியது மற்றும் வானத்தில் ஒரு நட்சத்திரம் தோன்றியது. மேலும் அந்த நட்சத்திரம் இறங்கும்போது, பூமியெங்கும் ஒளி பிரகாசித்தது ஏனெனில் அந்த நட்சத்திரத்தின் ஒளியால் பூமி மீது எங்கும் வெளிச்சமிருந்தது. மேலும் அந்த நட்சத்திரமானது ஒரு தூதன் மற்றும் ஆட்டுக்குட்டி என்று நான் கண்டேன், மற்றும் அவற்றின் பிரகாசம் பூமியியை பிரகாசித்தது. ஆட்டுக்குட்டி என்னிடம் பேசியது, இந்த வார்த்தை பூமியை ஒளிரச் செய்வதற்காக அவருடைய வார்த்தை எனக்குள் ஒரு பொருளை போன்று வந்தது. நான் இந்த ஒளியின் உறை, முக்காடு மற்றும் வாய். இன்று, இந்த ஒளியின் வெடிப்புகள் வானத்திலிருந்து இறங்கும்போது செய்ததைப் போலவே பூமியின் எல்லா தேசங்களையும் அடைந்துள்ளன.
33 மேலும் 2002 முதல், என்னில் இருந்து இந்த வார்த்தை பேசுகிறது. இந்த ஒளி வானத்திலிருந்து இறங்கி என்னில் வசிப்பது மனிதகுலத்தின் இரட்சிப்புக்காக பூமியை ஒளிரூட்டுகிறது. ஆதாம் முதற்கெகாண்டு தீர்க்கதரிசிகள் மூலம் பேசிய அந்த ஒளி தான் எனக்குள் இருந்து அதே குரலால் பேசுகிறது. மேலும் ரபீக்களே, போதகர்களே, இமாம்களே, நீங்கள் ஒளியின் புத்திரர்களாக இருந்தால், பூமி அனைத்தையும் என்னிடம் வழிநடத்துவீர்கள். சரீரத்தை மாற்றும் அதே உயிருள்ள கடவுள் தான். ஒரு தொலைபேசி வேலை செய்வதை நிறுத்தும்போது, தேவன் சிப்பை எடுத்து ஒரு புதிய தொலைபேசியில் வைப்பார், இப்போது அது ஒரு ஆப்பிரிக்க தொலைபேசி ஆனால் அது அதே எண் மற்றும் அதே குரல் மற்றும் அதே கடவுள். .
34 நான் ஒரு கிறிஸ்தவ தீர்க்கதரிசி அல்ல, நான் ஒருபோதும் ஒரு கிறிஸ்தவ தீர்க்கதரிசியாக இருந்ததில்லை. ஒருபோதும் இல்லை. இந்த தோல் நிறமும் பிறப்பால் ஆப்பிரிக்க உச்சரிப்பும் இருப்பதைப் போல பிறப்பால் ஒரு கிறிஸ்தவர் உச்சரிப்பு மட்டுமே உள்ளது. நான் எல்லா தேசங்களுக்கும், இனங்களுக்கும், பூமியின் மொழிகளுக்குமான தீர்க்கதரிசி. யுத உச்சரிப்புகளைத் தவிர்க்க, யோவான் ஸ்நானகனும் பவுலும் எபிரேய தீர்க்கதரிசிகளும் பாலைவனத்திற்கு கடந்துவிட்டார்கள். அதனால்தான் நான் ஒரு இஸ்லாமிய சுற்றுப்புறத்தில் இஸ்லாமிய குடும்பத்துடன் வாழ்ந்தேன். நான் கிறிஸ்தவர்களைப் போலவே இஸ்லாமியர்களையும் நேசித்தேன்.
35 நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு முஸ்லீம் மனிதர் என் தந்தையைப் போல இருந்தார். அவர் தனது இடத்தில் என்னை வரவேற்றபோது அவர் ஏற்கனவே பார்வையற்றவராக இருந்தார், என் குரலின் மூலமே அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார். நான் அவர்களுடைய மொழியைப் பேசினேன், ஏனென்றால் என்னைக் கவனித்துக்கொண்ட அவருடைய மனைவிகளில் ஒருவர் பிரெஞ்சு மொழியை பேசவில்லை. ஆனால் நான் ஒரு கிறிஸ்தவனோ அல்லது இஸ்லாமியனோஅல்ல, என் படிகளை வழிநடத்துவது வேதாகமமோ அல்லது குரானோ அல்ல. என்னை விசுவாசித்தவர்கள் கிறிஸ்தவர்களாக மாறாமல், தங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை விசுவாசித்தார்கள். ஒரு புத்தகமோ அல்லது சடலமோ ஒரு தீர்க்கதரிசியாக அல்லது ஜீவனுள்ள மனுஷனுக்கு வழிகாட்டியாக இருக்க முடியாது.
36 தோரா உங்களை ஒரு பக்தியுள்ள யூதராக்கலாம். வேதாகமம் உங்களை ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவராக்கலாம். குர்ஆன் உங்களை ஒரு பக்தியுள்ள முஸ்லிமாக்கலாம். பகவத் கீதை உங்களை ஒரு பக்தியுள்ள இந்துவாக்கலாம், ஆனால் இரட்சிக்கப்படுவதற்கு, ஜீவனுள்ள தேவன் உங்கள் காலத்தில் அனுப்புகிற தீர்க்கதரிசியை விசுவாசிப்பதற்கு நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள், நானே அந்த தீர்க்கதரிசி, நான் உங்களுடன் பேசுகிறேன்.
37 நியாயத்தீர்ப்பில், நோவா தோன்றும்போது, அங்கே அவனை அடையாளம் கண்டுகொள்கிறவர்களும், எவர்களுடன் அவன் வாழ்ந்தானோ அவர்களுடைய தீர்க்கதரிசியாக அவன் இருந்தபடியால் அவர்களும் அங்கே இருப்பார்கள். ஆனால் நீங்கள் மஹொமெதை அடையாளம் கண்டுகொள்வீர்களா? மோசே தோன்றும்போது, அங்கே அவனை அடையாளம் கண்டுகொள்கிறவர்களும், எவர்களுடன் அவன் வாழ்ந்தானோ அவர்களுடைய தீர்க்கதரிசியாக அவன் இருந்தபடியால் அவர்களும் அங்கே இருப்பார்கள். மேலும் நான் தோன்றும்போது, உங்களுக்கு தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாகவும் உங்களுடன் வாழ்ந்தவராகவும் நான் இருக்கிறபடியால், நீங்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வீர்கள். ஆனால் நீங்கள் மஹொமெதை அடையாளம் கண்டுகொள்வீர்களா?
38 கடந்த காலத்தில் அவர்களோடு கூட வாழ்ந்த நாட்களில், மோசேயின் உயரம், குரல் மற்றும் வடிவத்தை அறிந்தவர்களும், மறோமத்தின் உயரம், குரல் மற்றும் வடிவத்தை அறிந்தவர்களும் இருந்ததை போல, இன்று, என் உயரம், என் வடிவம், என் குரல் ஆகியவற்றை நீங்கள் அறிவீர்கள், ஆனால் கடவுள் உங்களுக்கு அனுப்பிய தீர்க்கதரிசியான என்னை நீங்கள் நிராகரித்தீர்கள். பூமியில் நான் உங்களைக் கண்டனம் செய்வது போலவே, கடவுளுக்கும் அவருடைய பரிசுத்த தூதர்களுக்கும் முன்பாகவும், நீங்கள் அவர்களை சார்ந்தவர்கள் என்று உரிமை கோறுகிற தீர்க்கதரிசிகளுக்கு முன்பாகவும் உங்களைக் கண்டனம் செய்வேன். உங்கள் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் ஜெப ஆலயங்கள் அவை வெறுமனே சாத்தானின் விடுதிகள்.
39 கிறிஸ்தவமானது இருளின் இராஜ்ஜியமாக இருக்கின்றது. அவை எல்லா மதங்களையும் விட மோசமானது. மதங்கள் மிகவும் பேய்த்தனமானது ஆகவே யோவான் ஸ்நானகன் ஆசாரியனான சகரியா வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. மதங்கள் அவனுக்குக் கற்பித்த அனைத்தையும் மறக்க பவுல் அரேபியாவின் பாலைவனத்தில் சென்று பதினான்கு ஆண்டுகள் கழிக்க வேண்டியிருந்தது. இன்று நீங்கள் என்னை நிராகரித்தால், அது மதங்களால் தான்.
40 பூமியில் தேவனுடைய எதிரிகளாக மதங்களும் அவற்றின் தலைவர்களும் இருக்கின்றார்கள். இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் மற்றும் யூத மதம் ஆகியவை சாத்தானியத்தின் முழுமையாக இருக்கினறது. இவை சாத்தானின் மூன்று பண்புகளாகும். யூத மதம் உங்களுக்கு மேலே இருக்கும் பிதாவாகிய சாத்தான். இஸ்லாம் மதம் உங்கள் மத்தியில் உள்ள சாத்தான், கிறிஸ்தவ மதம் என்பது சாத்தான் உங்களுக்குள் இருந்து அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்கிறதாக இருக்கிறது.
41 தரிசனத்திற்குப் பிறகு நான் கிறிஸ்தவர்களிடம் சென்றேன், அது ஒரு பாவம். சாத்தான்தான் என்னை கிறிஸ்தவத்தை நோக்கித் தள்ளினான். ஆயினும்கூட, தேவாலயங்களில் வேதாகம வசனங்களைப் படிக்கும்போது, நான் எழுந்து நிற்கவில்லை, இன்றும் போலவே வேதாகமத்திலிருந்து ஒரு பகுதியைப் வாசிக்கும் போது யாரும் எழுந்து நிற்க வேண்டிய வேண்டியதில்லை. கிறிஸ்தவ தலைவர்கள் பேய்களாக இருக்கிறார்கள்.
42 ஒரு தரிசனத்தில், ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள், சுவிசேஷகர்கள் மற்றும் பூமியின் போதகர்களைக் கண்டேன். அவர்களின் சரீரம் மனிதர்களின் உடல்கள் ஆனால் அவற்றின் தலைகள் வெவ்வேறு விலங்குகளின் தலைகளாக இருந்தன. அவர்கள் ஒரு ஊர்வலம் சென்றார்கள் மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் இரு கைகளிலும் தங்களுக்கு முன்பாக உயர்த்தியபடி ஒரு பெரிய சிலுவையை வைத்திருந்தார்கள், அவர்கள் கத்தோலிக்க வழிபாட்டு முறைகளைப் போலவே அதனுடன் நகர்ந்தார்கள், பலிபீடத்திலிருந்து தூபத்தின் புகை உயர்ந்தது. அவர்கள் மெதுவாக நகர்ந்தனர் மற்றும் அவர்களின் தலைகள் வெவ்வேறு விலங்கின் தலைகளாக இருந்தது. அவர்களுக்கு முன்னால் இவ்விதமாக : "இயேசு கிறிஸ்துவே கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறார்" என்று எழுதப்பட்டிருந்தது.
43 அதன்பிறகு எனக்கு ஒரு மிக மோசமான சொப்பனம் இருந்தது: நான் கண்களை உயர்த்தினேன், இதோ, வானத்திலே கிழக்கு நோக்கி ஒரு பெரிய போப் இருந்தான். அவர் வைத்திருந்த ஒரு சிலுவையில் என்னை அடிக்க விரும்பினார்கள், நான் விழித்தேன். அவர்கள் அனைவரும் பிசாசுகள். ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிஷேசக அல்லது பிரன்ஹாமிஸ்ட், சில உணவுக்காக ஜெபிக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபித்தாலும் நான் அதை சாப்பிடுவதில்லை. .
44 யூதனாக, முஸ்லீமாக, இந்துவாக அல்லது கிறிஸ்தவனாக இருப்பது ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதைப் போன்றது, மேலும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் ஜெப ஆலயங்களில் அவர்கள் கூடிவருவது கடவுளுக்கு முன்பாக ஓரின சேர்க்கையாளர்களின் அணிவகுப்பு போன்றதாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களால் கொல்லப்படும்போது, அது அரசியல் அல்லது இனக் கொலைகள் போன்றது, அவர்கள் ஒரு மதத்திற்காக இறந்ததால் அவர்களுக்கு பரலோகம் செல்ல அவரகளுக்கு உரிமை கொடுக்கவில்லை. அவர்களின் புனித புத்தகத்தின் விளக்கத்தில், அவர்கள் அனைவரும் பொய்யர்கள். நீங்கள் ஒரு தீர்க்கதரிசியாகவோ அல்லது அங்கு எழுதப்பட்ட உண்மைகளுக்கு சாட்சியாகவோ இல்லாதபோது, வேதாகமத்திலோ அல்லது குரானிலோ எழுதப்பட்டதை எவ்வாறு பாதுகாக்க அல்லது வியாக்கானிக்க முடியும் ?
45 உங்களுடன் பேசுகிற நான், என்னுடைய பிறப்பின் வேளையில் தேவதூதர்கள் பாடியதாகக் கூறப்படுகிறது. இன்னும் உயிருடன் இருக்கும் சாட்சிகள் மின்னல்கள் மற்றும் தீப்பொறிகள் மற்றும் மெழுகுவர்த்தி போன்ற வெளிச்சத்தை கண்டனர், மேலும் அவர்கள் மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் வானத்தில் மெல்லிசைகளைக் கேட்க முடிந்தது, மக்கள் எல்லா திசைகளிலும் ஓடினார்கள், சிலர் தங்களை தரையில் விழுந்து அதை தொடர்ந்து பின்வரும் நாட்களில் ஆராதித்தார்கள், மக்கள் தங்களுடன் விக்கிரகங்களுடன் வந்து அதை எரித்து மதம் மாறினார்கள். ஒரு செய்தித்தாள் அதைப் பற்றிப் பேசியது, அதை என்னால் பாதுகாக்க முடியாது ஏனெனில் நான் ஒரு குழந்தையாக இருந்தேன் மேலும் அருங்காட்சியகங்களில் இருக்க வேண்டிய பழைய புத்தகங்களான பைபிளையும் குரானையும் பழைய புத்தகங்களையும் எவ்வாறு பாதுகாப்பேன்?
46 ஆனால் 1993 ஆம் ஆண்டில், நான் பாலைவனத்தில் நின்றேன், பல தேவதூதர்கள் தோன்றி வென்மையான மேகங்களை உருவாக்கினார்கள், மேகங்களில் மேலே பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்தது: " வாழ்கையின் மாற்றத்தையும் நியாயத் தீர்ப்பையும் திட்டமாக அறிவி". நீங்கள் என்னை நிராகரிக்கலாம், ஆனால் கடைசி நான் நியாயத்தீர்ப்பில் நான் உங்களுக்கு நீதிபதியாக இருப்பேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். என் வாழ்நாள் முழுவதும், நான் உலகத்திலிருந்து விலகி ஜீவித்தேன். நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் எப்போதும் என்னிடம் இவ்விதமாக சொன்ன ஒரு உள்ளான சத்தத்தின் கைதியாக இருந்தேன்: "நீ இதைச் செய்தால், நியாயத்தீர்ப்பில் அவர்கள் இதைச் சொல்வார்கள். நியாயத்தீர்ப்பில் அவர்கள் இதைச் சொல்லாதபடி இதைச் செய் ".
47 இஸ்லாம், இந்து மதம், புத்தமதம், கிறித்துவமதம் மற்றும் யூத மதத்தின் உறுப்பினர்களே, நீங்கள் தீர்க்கதரிசிகளின் புத்திர்களாக இருந்தால், நீங்கள் என்னை எதிர்த்துப் போராட மாட்டீர்கள், ஆனால் 2 இராஜாக்கள் 9, இன் புத்திரர்களைப் போல நீங்கள் என்னிடம் வருவீர்கள். தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசா விற்கு முன்னே சென்று அவனை பணிந்துகொண்டார்கள். ஆனால் நீங்கள் நரகத்திற்கு தீர்மானிக்கப்பட்ட பெருமையுள்ள ஜனங்கள்.
48 ரபீக்களே, இமாம்களே, போதகர்களே மற்றும் தீர்க்கதரிசிகளே, நீங்கள் ஒருபோதும் கடவுளின் தரிசனத்தைக் கண்டதில்லை, மேலும் நான் பேசும்போது, நீங்களும் பேசுகிறீர்கள், இருப்பினும், ஒரு நாள் நீங்கள் என் முன் நியாயத்தீர்ப்பில் தோன்றுவீர்கள். காட்டில் உள்ள விலங்குகளைப் போல, நீங்கள் எழுந்து, "நான் ஒரு இமாம், நான் ஒரு போதகர், நான் ஒரு அப்போஸ்தலன், நான் ஒரு ரப்பி, ..." என்று கூறுவீர்கள். சரி, ஆனால் கடவுள் உங்களை எந்த தீர்க்கதரிசி மூலம் நிறுவினார்? உங்களுடைய நாடுகளில், எவனாவது ஒருவன் எழுந்து நின்று தன்னை ஒரு மந்திரியாக நிறுவிக் கொண்டால், ஜனாதிபதி ஒப்புக்கொள்வாரா?
49 இன்றைக்கு உயிரோடிருக்கிறவர்களே, எந்த இடத்தில், எந்த ஆண்டில் மோசே, புத்தன், கிருஷ்ணன், இயேசு மற்றும் மஹொமெத் ஆகியோர் உங்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தார்கள்? உங்களிடம் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளதா? நீங்கள் யூதர்களாக, முஸ்லீம்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருப்பதினால் அவர்கள் உங்களுடைய தீர்க்கதரிசிகளா? நான் தோராவை வாசித்து ஓய்வுநாளை ஆசரித்து, ஜெபங்களையும், சுத்தீகரிப்புகளையும் கடைபிடித்தால், இந்த 2019 ஆம் ஆண்டில் மோசே எனது தீர்க்கதரிசி ஆவாரா?
50 தளபதி டி கோல் அவர்களின் பழைய சொற்பொழிவுகளை பிரான்ஸ் நாடு தொலைகாட்சியில் மறுஒளிபரப்பு செய்யத்துவங்கினமாத்திரத்தில் அவர் ஜனாதிபதியாகிவிடுவாரா? நீங்கள் வேதாகமத்தை அல்லது குர்ஆனை அல்லது வேதங்களை அல்லது பகவத் கீதையை வாசித்தபோதிலும், நீங்கள் மிகுதியாக ஜெபித்தபோதிலும், நீங்கள் மிகுதியாக உபவாசித்தபோதிலும், உங்கள் சொப்பனங்களில் நீங்கள் துரத்தப்படாமலிருக்கிறீர்களா? உங்கள் சொப்பனங்களில் நீங்கள் சாப்பிடாமலிருக்கிறீர்களா, உங்கள் தூக்கத்தில் உங்களை சாத்தான் அசையவிடாதபடிக்கு செய்கிறதில்லையா? உங்கள் சொப்பனங்களில் நீங்கள் பாலியல் செயல்களில் ஈடுபடாமலிருக்கிறீர்களா? இவற்றுடன் நீங்கள் எந்த பரதீஸுக்குச் செல்லப்போகிறீர்கள்?
51 மதங்களைப் பின்பற்றுங்கள், ஆனால் இந்த தலைமுறையில் உங்களிடையே உள்ள தேவனுடைய எல்லா பிள்ளைகளும் நித்திய ஜீவனுக்காக என்னிடம் வருவார்கள். ஏப்ரல் 24, 1993 இன் தரிசனத்தில், பூமியின் அனைத்து நாடுகளிலிருந்தும், இனங்களிலிருந்தும், மதங்களிலிருந்தும் ஒரு கூட்டம் என்னிடம் வருவதைக் கண்டேன், அவர்கள், “நாங்கள் தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் பார்க்கவில்லை. செம்மறியாட்டுக்குட்டி மொழிந்த வார்த்தைகளை நாங்கள் கேட்கவில்லை, ஆனால் அவை யாவற்றையும் முழுமையாக விசுவாசிக்கிறோம் என்றார்கள் ". இந்த வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறின. பரலோகத்திற்கென்று நிர்ணயிக்கப்பட்டவர்கள் மற்றும் தரிசனத்தின் கூட்டத்தில் இருந்தவர்கள் என்னிடம் வருகிறார்கள்.
52 எல்லா தேசங்களிலிருந்தும் புருஷர்களும் ஸ்திரீகளும், பாஷைக்காரர்களும் மதங்கள் மற்றும் இனங்களில் இருந்து விசுவாசிக்கிறார்கள். ஜூன் மாதத்தில், போட்ஸ்வானா, நிகரகுவா மற்றும் கோஸ்டாரிகாவைச் சேர்ந்த முதல் விசுவாசிகள் ஞானஸ்நானம் பெற்றனர், சாம்பியா மற்றும் பொலிவியாவைச் சேர்ந்த பல விசுவாசிகள் ஞானஸ்நானம் பெற அப்போஸ்தலர்களை அனுப்பும்படி என்னிடம் கேட்டார்கள். நியாத்தீர்ப்பில் நான் ஒவ்வொரு தேசத்தின் பரிசுத்தவான்களுடன் முன்னே வருவேன் மேலும் நீங்கள் எந்த தீர்க்கதரிசியின் குழுவில் இருப்பீர்கள்?
53 நீங்கள் இஸ்லாம், இந்து மதம், புத்தமதம், கிறித்துவ மதம் அல்லது யூத மதத்தில் உறுப்பினராக இருந்தாலும், உங்களுடன் பேசுகிற காக்குவ் பிலிப்புவாகிய நான், உங்களைப் போன்ற ஒரு மனிதன் என்பதை நான் அறிவேன், ஆனால் நான் இந்த தலைமுறையில் கடவுளின் தெரிந்துக்கொள்ளபட்டவர்களை முத்தரிக்க பரலோகத்திலிருந்து வந்த தூதன். நான் யார் என்பதைப் புரிந்துகொள்ள வேதாகமத்தில் உள்ள சீமோன் பேதுரு போன்று உங்கள் கண்களைத் திறக்கும்படி ஒவ்வொரு நாளும் நான் கடவுளிடம் கெஞ்சுகிறேன்.
54 சீமோன் பேதுரு தனது எஜமானராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி, "நீர் எங்கள் ரபி, நீர் கிறிஸ்து, ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்" என்றான். மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவனை நோக்கி: நீ பேதுருவாக இருக்கிறாய், இந்த வெளிப்பாட்டின் பாறையின் மேல் நான் என்னுடைய சபையை கட்டுவேன்". பேதுருவின் இந்த அறிக்கையானது பாறையாக இருந்தது மற்றும் இது கர்த்தராகிய இயேசுவின் காலத்தில் நடந்த அனைத்து வெளிப்பாடுகளின் பாறையின் உயர்ந்த உச்சியாக இருந்தது. 1415 ஆம் ஆண்டில் வெளிப்பாட்டின் பாறையானது இவ்வாறு "நீர் ஜான் ஹஸ், நம்முடைய காலத்திற்கு, நீரே கிறிஸ்து, ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்". என்று சொல்ல முடிந்தது.
55 1545 ஆம் ஆண்டில் வெளிப்பாட்டின் பாறையானது இவ்வாறு நீர், "மார்ட்டின் லூதர், நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்று சொல்ல முடிந்தது. 1906 ஆம் ஆண்டில் வெளிப்பாட்டின் பாறையானது இவ்வாறு நீர், "வில்லியம் சீமோர், நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்று சொல்ல முடிந்தது. 1933 ஆம் ஆண்டு வெளிப்பாட்டின் பாறை, இவ்வாறு சொல்ல முடிந்தது: "நீர் வில்லியம் பிரன்ஹாம், நீரே கிறிஸ்து, நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து". ஏப்ரல் 24, 1993 முதல் வெளிப்பாட்டின் பாறையானது, "நீர் காக்குவ் பிலிப்பு, நீரே கிறிஸ்து, ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்" என்று சொல்ல முடிந்தது. உங்களுடைய வாழ்நாளில் கடவுளை ஒரு மனிதனுக்குள் அடையாளம் கண்டு கொள்வது என்பது நித்திய ஜீவனுக்கான பாறை மற்றும் விசுவாசத்தின் உயர்ந்த உச்சமாக இருக்கிறது.
56 நோவாவின் காலத்தில், வெளிப்பாட்டின் பாறை நோவாவிடம் இவ்வாறு சொல்ல முடிந்தது: "நோவாவே, நீர் தான் ஜீவனுள்ள தேவனுடைய ஒரே குமாரனான கிறிஸ்து". ஒரு தலைமுறையில் வெளிப்பாட்டின் பாறையானது , உங்களுடைய காலத்திலுள்ள உயிருள்ள தீர்க்கதரிசியை அவர் தான் கிறிஸ்து, உங்களுடைய காலத்தில் ஜீவனுள்ள தேவனுடைய ஒரே குமாரன் என்று சொல்ல முடியும். ஆதாமிலிருந்து உலகத்தின் இறுதி வரை, பூமியின் மீது வந்த அனைத்து தீர்க்கதரிசிகளும் கிறிஸ்துக்களாக இருக்கிறார்கள், மனித உருவில் இருக்கும் தேவர்கள். இதனால்தான் அவர்களின் வார்த்தைகள் தேவனுடைய வார்த்தையாக இருக்கின்றது.
57 மேலும் இந்தியா, இந்தோனேசியா, ஈரான், பாக்கிஸ்தான், எகிப்து மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலும், அல்-கொய்தா, போகோ ஹராமுக்கு எதிராகவும், இனி தீர்க்கதரிசிகள் இருக்கக்கூடாது என்று கூறும் பூமியின் முஸ்லிம்களே. ஒரு தீர்க்கதரிசியை அனுப்ப நீங்கள் அல்லாஹ்விடம் அழ வேண்டாமா? உங்கள் இஸ்லாமிய நாடுகளில் சிறிதளவு பிரச்சினை இருக்கும்போது, குர்-ஆனைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக ஜனாதிபதியிடம் ஏன் முறையிடுகிறீர்கள்? இஸ்லாத்தின் பெயரில் ஒரு சலாபிஸ்ட் அல்லது ஜிஹாதி தனது சகோதரருக்கு எதிராக ஆயுதங்களை எடுக்கும்போது, அல்லாஹ் அதை ஒப்புக்கொள்கிறானா?
58 ஒரு ஷியா முஸ்லீம் அல்லாஹ்வின் பெயரால் ஒரு சுன்னி முஸ்லீமைக் கொல்லும்போது, அல்லாஹ் ஒப்புக்கொள்கிறானா? குர்ஆனின் பெயரில் ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லீமை தலைகீழாக மாற்றும்போது, அல்லாஹ்வின் சார்பாக இனி ஒருபோதும் ஒரு தீர்க்கதரிசி வரக்கூடாதா? இதில் அல்லாஹ் மகிழ்ச்சியடைகிறானா? உங்கள் ஜனாதிபதிகள், ராஜாக்கள், இமாம்கள், ரபீக்கள் மற்றும் போதகர்கள் மரிக்கும் போது, நீங்கள் அவர்களை மாற்றுவீர்கள், ஆனால் உயிருடன் இருக்கும் கடவுள் தனது இறந்த தீர்க்கதரிசிகளுக்கு பதிலாக ரசுலை ஏன் அனுப்பக்கூடாது? கடவுளோ முஹம்மதுவோ இனி ஒரு போதும் தீர்க்கதரிசி இருக்க மாட்டார்கள் என்று கூறவில்லை. நீங்களே அவர்கள் அவ்விதமாக கூறும்படி செய்தீர்கள். .
59 உங்களுடைய கிரியைகள் சாத்தானியமானவை, அதனால்தான் உங்களுக்கு இனி ஒருபோதும் ஒரு தீர்க்கதரிசி தேவையில்லை. விலங்குகளின் நிலையில் பின்னால் இருந்து பெண்களுடன் நீங்கள் சேர்க்கிறீர்கள். உங்கள் மதங்கள் அழுகியவை, ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் ஊழல் நிறைந்த மனிதர்கள் நிறைந்தவை, பாவத்தின் துர்நாற்றம் வீசுகின்றன. உங்கள் கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் தூய்மையற்ற வீடியோக்கள் மற்றும் பாலினத்தின் படங்கள் நிறைந்தவை, அதனால்தான் நீங்கள் ஒரு தீர்க்கதரிசியை விரும்பவில்லை. என்னை நிராகரியுங்கள், ஆனால் நீங்கள் அனைவரும் நரகத்தில் எரிக்கப்படுவீர்கள். உண்மையில், நீங்கள் கடவுளுக்காக அல்ல, ஆனால் உங்களுடைய மத நலன்களுக்காகவும், விருப்பங்களுக்காவும் என்னுடன் போராடுகிறீர்கள் , நீங்கள் அனைவரும் உங்கள் போதகர்கள், சாதுக்கள், இமாம்கள், ரபீக்கள் மற்றும் உங்கள் ஆதரவாளர்களுடன் நரகத்திற்குச் செல்வீர்கள். ஆனால் உங்களிடையே உள்ள தேவனுடைய பிள்ளைகள் தங்களுடைய காரண காரியங்களை கைவிட்டு நித்திய ஜீவனுக்காக என்னிடம் வருவார்கள்.
60 ஒ தேவனே, ஆதாம் முதல், நீர் தீர்க்கதரிசிகளை எழுப்பினீர், உலகம் இன்னும் முடிவடையவில்லை, ஆனால் நீர் இனி தீர்க்கதரிசிகளை அனுப்ப மாட்டீர்கள் என்று எங்கிருந்து வருகிறது? எலியா இறக்கவில்லை, ஆனால் நீங்கள் எலிசாவை எலியாவுக்குப் பிறகு எழுப்பினீர். மோசேயின் கல்லறையை நாங்கள் பார்க்கவில்லை, ஆனால் மோசேக்கு பின் யோசுவாவை எழுப்பினீர். ஆனால் உலகமானது தொடரும் போது நீர் இனி ஒரு தீர்க்கதரிசியை அனுப்ப மாட்டீர் என்று எங்கிருந்து வருகிறது? ஒரு தீர்க்கதரிசியை அங்கீகரிக்கும் திறனை நீங்கள் அவர்களுக்கு வழங்காவிட்டால், தேசங்கள் யெகோவாவை அறிந்து கொள்வார்கள் என்று ஏன் சொன்னீர்?
61 பூமியின் குடிகளே, நீங்கள் என்னை நிராகரிப்பதினால், "ஒரு தீர்க்கதரிசியானவன் மரிப்பதில்லை, தீர்க்கதரிசிகள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள்" என்று உங்களை கேலி செய்யும் முட்டாள்தனமான வார்த்தைகளை நீங்கள் சொல்கிறீர்கள் .ஒ, உண்மையாகவா ?! ஆகவே, எல்லா தீர்க்கதரிசிகளும் உயிருடன் இருக்கிறார்களா , அவர்களில், நீங்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்குக் கீழ்ப்படியவும் மற்ற அனைவருக்கும் கீழ்ப்படியாமலும் இருக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா? எனவே, மோசே உயிருடன் இருக்கிறார், கிறிஸ்தவர்கள் அவருடைய ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க மறுக்கிறார்களா? எனவே, நாசரேத்தின் இயேசு இஸ்ரேலில் உயிருடன் இருக்கிறார், பாலஸ்தீனிய முஸ்லிம்கள் அவரை காயப்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை வீசுகிறார்கள்?.
62 நீங்கள் நரகத்திற்குச் செல்ல மதங்கள் மற்றும் புனித நூல்களின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள், ஆனால் நான் தேவனுடைய பிள்ளைகளுடன் முன்னேறுகிறேன். 2004 இல், ஒரு இமாம் என்னைப் பார்க்க வந்தான். நான் பார்த்த ஒரே நேரம் அது தான். அவர் ஒரு கனவில் ஒரு பெரிய தீர்க்கதரிசியைக் கண்டதாக கோரினார், அந்த தீர்க்கதரிசி ஃபிடிலா என்று அழைக்கப்பட்டார், அந்த தீர்க்கதரிசி திரும்பியபோது, அது நான்தான்.
63 இந்த இமாம் தனது ஜெபமாலை மற்றும் ஒரு பக்தியுள்ள இமாமின் தோற்றத்துடன் வெள்ளை நிற உடையணிந்த என்னைப் பார்க்க வந்தார். ஆனால் அவர் என்னைப் பின்தொடர்வதற்கு முன்பு, நான் ஒரு முஸ்லிமாக மாற வேண்டும் என்று அவர் விரும்பினார். ஓ உண்மையாகவா! தொழுநோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு முன்பு ஒரு மருத்துவர் குஷ்டரோகியாக மாற வேண்டுமா? கடவுள் ஒரு தீர்க்கதரிசியை பூமிக்கு அனுப்பும்போது, பௌத்தர்கள் அவரை நம்புவதற்கு முன்பு இந்த தீர்க்கதரிசி பௌத்தனாக மாற வேண்டுமா? கிறிஸ்தவர்கள் அவரைப் பின்பற்றுவதற்கு முன்பு இந்த தீர்க்கதரிசி ஒரு கிறிஸ்தவனாக மாற வேண்டுமா? இந்துக்கள் அவரைப் பின்தொடர்வதற்கு முன்பு இந்த தீர்க்கதரிசி இந்து ஆக வேண்டுமா?
64 இந்த தீர்க்கதரிசி செய்யும் அனைத்தும் தோரா, வேதாகமம், குரான், பகவத் கீதை மற்றும் பூமியின் மதங்களின் அனைத்து புனித நூல்களுக்கும் ஏற்ப இருக்க வேண்டுமா? இந்த தீர்க்கதரிசி கடவுளின் சார்பாக நின்று கடவுளின் பிள்ளைகளின் இரட்சிப்புக்காக பூமியின் அனைத்து அமைப்புகளையும் கண்டிக்கக் கூடாதா? உங்கள் மதங்கள் கடவுளுடைய வார்த்தையை விட உயர்ந்தவையா? இஸ்லாமியர்களே, ஆகவே சொர்க்கத்தில் மெக்காவின் தோற்றம் இல்லை என்றால் நீங்கள் அங்கு செல்ல மாட்டீர்களா? ஆக ஒரு தீர்க்கதரிசியின் வார்த்தைகள் தோரா, வேதாகமம், குர்ஆன் மற்றும் வேதத்துடன் ஒத்துப்போக வேண்டும், இல்லையெனில் அவன் ஒரு தவறான தீர்க்கதரிசியா?
65 நீங்கள் பிசாசுகளாக இருக்கிறீர்கள், நீங்கள் அனைவரும் உங்கள் மதங்களுடனும் உங்கள் புனித புத்தகங்களுடனும் நரகத்திற்குச் செல்வீர்கள். ஏப்ரல் 24, 1993 அன்று ஒரு தேவதுதன் அனுப்பிய தெய்வீக ஆணைப்படி நான் பேசுகிறேன். என்னை நிராகரித்து பக்தியுள்ளவர்களாக இருங்கள், முழுவதும் அன்பினாலும் சமாதானத்துடன் இருங்கள், தரித்திரருக்கு உதவுங்கள் ஆனால் அதனோடு கூட நீங்கள் எல்லோரும் நரகத்திற்கு செல்வீர்கள் ஆனால் உங்களிடையே நித்திய ஜீவனுக்காக விதிக்கப்பட்டவர்கள் என்னிடம் வருவார்கள்.
66 2017 ஆம் ஆண்டில், அல்ஜீரியாவில் உள்ள டிஸி ஓசூவைச் சேர்ந்த ஒரு சலாபிஸ்ட் ஒருவர் எனக்கு எழுதினார்: "நீங்கள் மரிக்க விரும்பவில்லை என்றால், இஸ்லாத்திற்கு மாறவும்" என்றான். ஆனால் அவனைப் போன்ற அல்ஜீரிய அரபியான டூஃபிக் 2011 முதல் எனது அயராத சீடனாக இருந்து வருகிறார். ஈரான் எனக்கு எதிராக என் பற்களைக் கவ்விக் கொண்டிருக்கிறது, ஆனால் ஃபர்ஷித் ஒரு ஈரானியன் என்னுடைய சீடன் .
67 இமாம்கள், உலேமாக்கள், ஷேக்கர்கள், அயதுல்லாக்கள் என்னை வெறுக்கிறார்கள், ஆனால் இமாம் முகமது சனா எனது சீடனாகுவதற்கு உங்களுடைய பிரார்த்தனைகளை மசூதியில் வழி நடத்துவதை நிறுத்திவிட்டார். அமடூ வூரி மற்றும் பல பக்தியுள்ள முஸ்லிம்கள் என் சீடர்களாக மாறிவிட்டனர். அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்காக இஸ்லாத்தை விட்டுவிடவில்லை, ஆனால் அவர்கள் எண்ணில், அவர்களுடைய காலத்தில் உயிர் வாழும் தீர்க்கதரிசியினிடத்தில் விசுவாசம் கொண்டார்கள், அவர்களுக்கு முன்பாக இருந்ததை போல தலைமுறை தலைமுறையாக, தேவனுடைய பிள்ளைகள் தங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை நித்திய ஜீவனுக்காக விசுவாசித்தனர் . அவர்களுக்கு தங்களுடைய அலுவல்கள் இருந்தபோதிலும் நான் சொல்வதைக் கேட்க நேரம் எடுத்துக்கொண்டார்கள், ஏனெனில் அது இரட்சிப்புக்குரிய கேள்வியாக இருக்கின்றது. ஒரு நாள் அவர்கள் இறந்துவிடுவார்கள், அவர்கள் கடவுளுக்கு முன்பாக நியாயத்தீர்ப்புக்குச் செல்வார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்.
68 இந்த அல்ஜீரிய சலாபிஸ்ட் : "என் தீர்க்கதரிசி முஹம்மது, அது நீங்கள் அல்ல!"என்றான். நான் அவனிடம்: சரி, ஆனால் சிகரெட் உங்களை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை முஹம்மது உங்களுக்கு வெளிப்படுத்தவில்லை என்றேன். நீங்கள் லிபியாவில் விற்ற கறுப்பின முஸ்லிம்கள் உங்களிடத்தில் பாயும் இஸ்மாவேலின் அதே இரத்தத்தை தான் அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை முஹம்மது உங்களுக்கு வெளிப்படுத்தவில்லை. நீங்கள் என்னை நிராகரித்ததால், செனகல், நைஜீரியா, சூடான் மற்றும் கருப்பு ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆகார் ஒரு எகிப்திய ஸ்திரீ இஸ்மவேலை பெற்றெடுத்தார், இஸ்மவேல் எகிப்தில் தங்கி ஒரு எகிப்திய பெண்ணை மணந்தார்.
69 எகிப்தில் இஸ்மவேலின் சந்ததி இருந்தது, இந்த சந்ததியின் ஒரு பகுதி அரேபியாவில் பரவியது, அரேபியாவில் அந்த சந்ததியில் இருந்து மஹோமேட் வெளியே வந்தான். இவ்வாறு எகிப்தில் இஸ்மவேலின் சந்ததியினர் கறுப்பின இனத்தின் ஒரு பகுதியாக மாறியது, இஸ்மவேலர்கள் அல்லது கருப்பு அரேபியர்கள். இஸ்லாம் ஆப்பிரிக்காவில் இங்கே அவர்களை அடைந்தது. தேவன் இஸ்மவேலை குறித்து அவன் ஒரு காட்டு கழுதையாக இருப்பான் என்றார், ஏனெனில் அவன் தீர்க்கதரிசிகளின் பள்ளத்தாக்கிலிருந்து வெகு தொலைவில் வாழ்வான். மேலும் தனது காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை நிராகரிக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு காட்டு கழுதை.
70 அனைத்து பூமியின் குடிகளே, சர்வவல்லமையுள்ள கடவுளின் பெயரால், உங்கள் தலையை உயர்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன். இரட்சிப்பைப் பொறுத்தவரை, நீதியுள்ள கடவுள் ஒரு ஜனத்திற்கு மேலாக இன்னொருவருக்கு பாராபட்சம் கொண்டிருக்கவில்லை. தேவன் அரேபியனை விட யூதனுக்கோ அல்லது ஹிந்து வழிவிட கிறிஸ்தவனுக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை. அரேபியர்களே உங்களுடைய பிறந்த குடும்பத்தின் மதம் இந்து மதமாக இருந்திருக்கலாம். கிறிஸ்தவகளே, உங்கள் பிறந்த குடும்பத்தின் மதம் இஸ்லாமாக இருந்திருக்கலாம். நீங்கள் இந்துக்களே, உங்கள் பிறந்த குடும்பத்தின் மதம் கிறிஸ்தவ மதமாக இருந்திருக்கலாம்.
71 மோசே, இயேசு, முகமது, கிருஷ்ணா, அல்லது புத்தர் கடவுளின் தூதரோ இல்லையோ; தோரா, பைபிள், குர்ஆன், வேதம் ஆகியவை பரலோகத்திலிருந்து வந்த ஒரு புத்தகமோ இல்லையோ, இன்று உயிருடன் இருக்கும் உங்களுக்கு இது முக்கியமல்ல. உங்கள் இரட்சிப்புக்கான கடவுளின் விருப்பம் உங்கள் குடும்பத்தினர் அல்லது எல்லோரும் உங்களைச் சுற்றி என்ன செய்கிறார்கள் என்பதல்ல, ஆனால் உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசி உங்களுக்குச் சொல்கிறார் என்பது தான்.
72 நீங்கள் தனியாகப் பிறந்திருக்கிறீர்கள், ஒரு நாள் நீங்கள் தனியாக இறந்துவிடுவீர்கள் என்பதையும், கடவுளுக்கு முன்பாக நீங்களும் தீர்ப்புக்குச் செல்வீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். உங்களுடைய தந்தையோ, இமாமோ, உங்களுக்காக யாரும் பதில் அளிக்க மாட்டார்கள். ஆனால் நீதியுள்ள கடவுள் பரலோகத்திற்கான வழியைக் காண்பிக்க உங்களுடைய வாழ்நாளில் ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவார், உங்களுக்கு முன்பும், உங்களுக்கு முன்பாக தலைமுறைகளுக்கு பரலோகத்திற்கான வழியைக் காட்ட அவர் தீர்க்கதரிசிகளை அனுப்பினார்.
73 1993 ஆம் ஆண்டில், கடவுளின் பரதீசும் அவருடைய தீர்க்கதரிசிகளும் ஒரு வெள்ளை மேகத்தால் மூடப்பட்டிருப்பதைக் கண்டேன், ஆனால் மதங்கள் மற்றும் புனித நூல்களின் பரதீசுகளில் எங்கும் இல்லை. இரட்சிப்பை ஒருபோதும் விவாதங்கள் அல்லது கலந்துரையாடல்கள் மூலமாகவோ அல்லது பெற்றோரின் பழைய மதத்தின் பழக்கவழக்கத்தினாலோ பெற முடியாது, ஆனால் இரட்சிப்பு என்பது உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை அங்கீகரிப்பதாகும், இந்த தீர்க்கதரிசி தான் நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார். உங்களைப் போன்றவர்கள் தங்கள் காலத்தில் தீர்க்கதரிசிகளைப் பெற்றார்கள், உங்களுக்கு முன்பாக இருந்த ஜனங்கள் அவர்களுடைய காலத்தின் தீர்க்கதரிசிகளை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டார்கள்.
74 என்னைப் குறித்து படித்த பிறகு அல்லது கேட்ட பிறகு, உங்களுக்கு முன்னால் இரண்டு தேர்வுகள் உள்ளன: ஒன்று நீங்கள் இஸ்லாம், இந்து மதம், புத்த மதம், கிறிஸ்தவம் அல்லது யூத மதம் ஆகியவற்றில் இறந்து நீங்கள் நரகத்திற்குச் செல்லலாம் அல்லது நீங்கள் உங்களுடைய காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை பின்பற்றி பரலோகத்திற்கு செல்லலாம் மேலும் உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் நானே அந்த தீர்க்கதரிசி.