Kacou 131 (Kc.131) : வெளிப்படுத்துதல் 16:13 -ன் மூன்று சாத்தானிய மதங்கள்
அகில உலகின் மதசார்பான சகல ஜனங்களுக்கும் 2018, ஜூலை 8 அன்று தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு எழுதின கடிதம்
1நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, நான் ஜூன் 7, 2018 அன்று என்னுடையவர்களுடன் அமர்ந்திருந்தேன். மேலும் பகல் 12 மணி 24 -வது நிமிடத்தின்போது, வெளிப்படுத்துதல் 16:13 பற்றிய வெளிப்பாடு சர்வவல்லமையுள்ள கடவுளிடமிருந்து மீண்டும் என்னிடம் வந்தது, அவரே தாமாக இருப்பவரும், சிருஷ்டிக்கப்படாதவரும், தம்முடைய சித்தத்தின்படி தாம் விரும்புவதைச் செய்கிறவருமாக இருக்கிறார். தாம் விரும்புவோரை உயர்த்துகிறவரும், தாழ்த்துகிறவரும் அவரே. அந்த ஜூன் 7 முதல், ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு, பாங்கு (muezzin) கூப்பிடும் நேரத்தில், நான் எழுந்தேன், அந்த வெளிப்பாடு முடியும் வரை நான் எந்த நேரத்தில் தூங்கினேன் என்பது ஒரு பொருட்டல்ல.
2வெளிப்படுத்துதல் 16:13, "வலுசர்ப்பத்தின் வாயிலிருந்து தவளைகளைப் போன்ற, மூன்று அசுத்த ஆவிகள், புறப்பட்டுவரக் கண்டேன்." என்று கூறுகிறது. வெளிப்படுத்துதல் 16:13 -ல் உள்ள இந்த மூன்று தவளை ஆவிகள் யார்? பூமியில் சுற்றித்திரிகிற இந்த மூன்று பேய்கள் யார்? வெளிப்படுத்துதல் 17 -க்கு செய்யப்பட்டுள்ளதுபோல், அது ரோமன் கத்தோலிக்க சபையாகும், இந்த மூன்று பேய்களின் உண்மையான அடையாளத்தை எந்த மனிதனும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
3ஆகவே, தவளைகளாக உள்ள இந்த சாத்தானிய திரித்துவம் தான் இஸ்லாம் மதம், கிறிஸ்தவ மதம், யூத மதம் என ஏப்ரல் 24, 1993 -ன் தேவதூதனால் எனக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவை பூமியை ஜெயிக்க புறப்பட்டதான வலுசர்ப்பங்களின், கள்ளத் தீர்க்கதரிசிகளின் ஆவிகளாக இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துதல் 16:13 கூறுகிறது.
4இந்து மதமும் புத்த மதமும், பூமியின் சகல மதங்களும் கூட பிசாசினுடையதுதான், ஆனால் இஸ்லாம் மதம், கிறிஸ்தவ மதம், யூத மதம் ஆகியவை வெளிப்படுத்துதல் 16:13 -ன் தவளைகளின் மூன்று ஆவிகளாக இருக்கின்றன. இம்மூன்று மதங்களும் தங்களை ஆபிரகாமினுடையவை என உரிமைகோருகின்றன. இம்மூன்று மதங்களும் மோசேயை விசுவாசிக்கின்றன. இம்மூன்று மதங்களும் உயிர்வாழும் தீர்க்கதரிசிகளில் விசுவாசம் கொள்கிறதில்லை ஆனால் அவை ஒவ்வொன்றும் அது அறிந்திராத ஒரு தீர்க்கதரிசியினுடையது என உரிமைகோருகின்றன. அவை ஒவ்வொன்றும் அதனுடைய சொந்த பரிசுத்த (holy) புத்தகத்தைக் கொண்டுள்ளன. மேலும் அந்த மூன்றுக்கும் உயிர்வாழும் தீர்க்கதரிசி தேவையில்லை ஆனாலும் அவை இன்னமும் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கிறவரான மேசியாவுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. அவை வெளிப்படுத்துதல் 16:13 -ல் உள்ள மூன்று தவளைகளின் ஆவிகளாக இருக்கின்றன.
5தவளைகளின் கண்கள் அவைகளின் தலைகள் மேல் உள்ளன. அவர்கள் பிறப்பதற்கு முன்பு கடவுள் கடந்த காலத்தில் என்ன செய்தார் என்பதையும், அவர்கள் இறந்த பிறகு, வருங்காலத்தில் கடவுள் என்ன செய்வார் என்பதையும் அவர்களால் பார்க்க முடியும், ஆனால் இரட்சிப்புக்காக கடவுள் இன்று என்ன செய்கிறார் என்பதை அவர்களால் பார்க்க முடியாது. அதுதான் இஸ்லாம் மதம், யூத மதம், கிறிஸ்தவ மதம் பேயாக உள்ளது.
6தவளையின் சத்தம்: "குரோய், குரோய், குரோய் ..." என்று, மிகச்சரியாக காகத்தின் கரைதல் போலவே இருக்கும். [ஆசிரியர் குறிப்பு: பிரெஞ்சு மொழியில் நம்புங்கள், நம்புங்கள், நம்புங்கள் என்று சொல்வதற்கு "குரோய், குரோய், குரோய்" என்று உச்சரிப்பார்கள்]. இது உங்கள் பெற்றோரின் மதம், நீங்கள் நம்ப வேண்டும், நம்ப வேண்டும், நம்ப வேண்டும், அவ்வளவுதான்! அவர்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள் என்றால், நீங்களும் நரகத்திற்குச் செல்லவேண்டும். தவளைகள் நடப்பதில்லை, ஆனால் மரித்த தீர்க்கதரிசியிடமிருந்து மரித்த தீர்க்கதரிசியினிடத்திற்கு குதிக்கின்றன. ஒரு நாள், நான் இறந்தவுடன், அவர்கள் இங்கே குதித்து இறங்குவார்கள்.
7கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏழு பொன் விளக்குகளுக்கு நடுவே நடக்கிறார், ஆனால் தவளைகள் கல்லறையிலிருந்து கல்லறைக்குத் தாவுகின்றன. மோசேயின் கல்லறையிலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கல்லறைக்கு. மார்ட்டின் லூதரின் கல்லறையிலிருந்து ஜான் வெஸ்லியின் கல்லறைக்கு. ஜான் வெஸ்லியின் கல்லறையிலிருந்து வில்லியம் பிரன்ஹாமின் கல்லறைக்கு. ஒரு நாள், நான் இறந்த பிறகு, அவர்கள் என் கல்லறைக்கு வருவார்கள்.
8நான், உங்களுடன் பேசும் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, நான் பிறந்தேன், நான் பூமியில் வாழ்ந்தேன், ஒரு நாள் நான் பூமியை விட்டுப்போவேன். ஆனால் பூமியில் நான் புரிந்துகொள்ளாத இரண்டு காரியங்கள் உள்ளன. முதலாவதாக, ஓரினச்சேர்க்கை, ஒரு மனிதன் ஒரு மனிதனை திருமணம் செய்கிறான், பின்னர், இரட்சிப்புக்காக, மனிதர்கள் உயிர்வாழும் தீர்க்கதரிசிக்கு பதிலாக பாஸ்டர்கள், இமாம்கள் மற்றும் ரபீக்களால் வழிநடத்தப்படுகிறார்கள்.
9எந்த மதமும் இன்னொன்றை விட கடவுளுக்கு நெருக்கமானதாக இல்லை. உயிர்வாழும் தீர்க்கதரிசி தான் இரட்சிப்பின் வழி. உயிர்வாழும் தீர்க்கதரிசி இல்லாமல் ஒரு மனிதன் எப்படி கடவுளுடைய சித்தத்தில் இருக்கமுடியும்? ஏப்ரல் 24, 1993 அன்று கடவுள்: "உன்னை விசுவாசிக்கிறவன் ஞானஸ்நான தண்ணீர்களுக்கு வருவான். அது மீன்களிருக்கும் இயற்கை நீராக இருக்கவேண்டும். நீ அவனை கிழக்கு நோக்கித் திருப்பி, அவனுக்கு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் மீட்டளிப்புக்காக ஞானஸ்நானம் கொடுப்பாய். இது உனது காலத்திற்கான ஞானஸ்நானமாக இருக்கும். மேலும், மாதவிடாயிலிருக்கிற ஒரு ஸ்திரீயை நீ ஞானஸ்நானம் பண்ணுவிக்கலாகாது.” என்று என்னிடம் கூறினார். மேலும் யூதர்களே, கிறிஸ்தவர்களே, முஸ்லிம்களே, பௌத்தர்களே, இந்துக்களே 1993, ஏப்ரல் 24 முதற்கொண்டு, உங்களுடைய ஞானஸ்நானங்களில் நீங்களும் அவ்வாறே செய்துள்ளீர்களா?
10மேலும் கறுப்பு ஆபிரிக்கர்களே, பூமியில் மூன்று குழுக்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ளுங்கள்: யூதர்கள், சமாரியர்கள் மற்றும் புறஜாதிகள். யூத மதம் யூதர்களின் மதம், இஸ்லாம் மதம் அரபியர்களின் மதம் மற்றும் கிறிஸ்தவம் என்பது புறஜாதிகளின் மதம். கருப்பு ஆபிரிக்காவில் இஸ்லாம் மதமோ, யூத மதமோ இல்லை.
11லிபியாவில் குடியேறியவர்களான முஸ்லீம்களை விற்ற அரபியர்களே சிறந்த முஸ்லிம்கள். மேலும் மெக்காவுக்கான உங்கள் புனிதயாத்திரைகள் காபா மீது செலுத்தப்பட்ட பன்றி பலிகளாக உள்ளன. நம்மை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் ஆப்பிரிக்காவுக்கு வருகிறார்கள். ஆனால் யூதர்கள் நம்மை யூத மதத்திற்கு மாற்றவும் அல்லது அரபியர்கள் நம்மை இஸ்லாம் மதத்திற்கு மாற்றவும் ஆப்பிரிக்காவுக்கு வருவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இஸ்லாம் மதத்தில் உள்ள கறுப்பின ஆபிரிக்கர்கள் அனைவருமே, அது பார்வைக்கு வெள்ளையர்களைப் போலிருப்பதற்காக கறுப்பர்கள் தங்கள் தோலை வெண்மையாக்குவது போன்றதுதான்.
12மேலும் நீங்கள் என்னை நோக்கி, “எங்களை இரட்சிக்க விரும்பும் அதேநேரத்தில் எங்களுடன் ஏன் இப்படி பேசுகிறீர்?” என்று கூறுகிறீர்கள். உங்களை அழிவுக்கு இட்டுச்செல்வது எனது பேச்சு அல்ல ஆனால் அது நீங்கள் இருக்கிற இஸ்லாம் மதம், இந்து மதம், புத்த மதம், கிறிஸ்தவ மதம் மற்றும் யூத மதம் தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ஏப்ரல் 24, 1993 -ன் தரிசனத்தில், இரட்சிக்கப்பட்டவர்களின் கூட்டம் என்னிடம் வருவதைக் கண்டேன். நான் என்ன செய்தாலும், என்ன நடந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்னிடம் வருவார்கள், ஆனால் யூதர்களே, கிறிஸ்தவர்களே, முஸ்லிம்களே, நீங்கள் தீமையின் அவதாரம், நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள் அதனால்தான் நீங்கள் இரட்சிப்படையும் பொருட்டு உங்களால் என்னை விசுவாசிக்க முடிகிறதில்லை.
13என்னைக் காக்க கடவுளின் கரம் எப்போதும் என்னுடன் இருக்கிறது என்பதை நான் அறிவேன், தேவ சித்தத்தை நான் நிறைவேற்றுவேன். சிறையில், கடவுள் என் உயிரைக் காப்பாற்றினார். 2016 -ல் ஒரு இரவு எனது சிறை அறையில், நான் ஒரு தடுமாற்றத்துடன் எழுந்தேன், எனக்கு முன்னால், இருட்டில் ஒரு மனிதன் இருந்தான், அவன் தனது மனைவியைக் கொன்றதற்காக ஐந்து வருடங்களுக்கும் மேலாக விசாரணையின்றிச் சிறையில் வைக்கப்பட்டிருந்தான், அவளை அவன் பிறகு துண்டுகளாக வெட்டி, தனது குளிர்சாதன பெட்டியில் வைத்தான். அவன் பயமடைந்து, அவன் மீண்டும் தூங்கச்சென்றான்.
14என்னைக் காக்க கடவுளின் கரம் என்னுடன் இருக்கிறது, இந்த கிருபை இஸ்ரேலில் சிறையில் உள்ள யிஷாய் ஷ்லிசெலுடன் இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். 1993, ஏப்ரல் 24 அன்று என்னை அனுப்பியவரான கடவுளின் விருப்பத்தை நான் நிறைவேற்றுவேன், 1993 -ன் இந்த தரிசனத்தில் நான் கண்டது போல் எனது காலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் என்னிடம் வருவார்கள். கடவுள் தம் பிள்ளைகளை ஒன்று சேர்ப்பது பூமியில் உயிர்வாழும் ஒரு தீர்க்கதரிசிக்குச் சுற்றிலுமாகத்தான்.
15முஹம்மது , மோசே, நாசரேத்தூர் இயேசு ஆகியோர் உங்களுக்கு தீர்க்கதரிசிகளல்ல, அவர்கள் பூமியில் இல்லவுமில்லை, அதேநேரத்தில் நீங்கள் அவர்களுடையவர்கள் என்று உரிமைகோருகிறீர்கள். 1865 -ல் இறந்த ஆபிரகாம் லிங்கன் இன்று அமெரிக்கர்களின் ஜனாதிபதியாக எப்படி இருக்கமுடியும்? ஒரு சடலம் உயிருள்ளவர்களுக்கு தீர்க்கதரிசியாக இருக்கமுடியுமா? இந்த விடுகதை தான் என்ன?
16இயேசு கிறிஸ்து அல்லது முஹம்மது உங்கள் தீர்க்கதரிசி என்று நீங்கள் கூறும்போது, அச்செயலானது, உங்கள் ஜனாதிபதிகளானவர்கள், தங்களுடைய ஜனங்களின் வாக்குகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கையில், தங்களை ஏற்படுத்தினது கடவுள் என்று கூறுவதைப் போலவே, அது மொழியின் துஷ்பிரயோகமாக உள்ளது. இறந்த மனிதன் எப்படி உயிருள்ளவர்களுக்கு தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? மேலும் ஒரு தீர்க்கதரிசி தான்தான் கடைசி தீர்க்கதரிசி என்று எப்படிச் சொல்லமுடியும்?
17எனக்குப் பிறகு இனி தீர்க்கதரிசிகள் இருக்கமாட்டார்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னால், நான் இறக்கும் நாளில் உலகம் முடிவுக்குவரும் என்பதே அதன் பொருள். ஆனால் உலகம் தொடர்ந்தும் இருந்தால், நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி அல்லது நீங்கள் என்னை தவறாகப் புரிந்துகொண்டீர்கள் என்பதுதான் அதன் அர்த்தம். டொனால்ட் டிரம்ப் தான்தான் அமெரிக்காவின் கடைசி ஜனாதிபதி என்று கூறினாற்போன்றது தான் அது.
18கடைசி தீர்க்கதரிசி என்ற கருத்து மூளை வளர்சி குன்றிய நிலையாகும். ஒரு புனித புத்தகம் மூலம் அல்லது இறந்த தீர்க்கதரிசி மூலம் இரட்சிப்பு என்பது மூளை வளர்சி குன்றிய நிலையாகும். ஆனால், நீங்கள் ஒரு தேவகுமாரனாக இருந்தால், ஒரு மதத்திலிருந்து உங்களை வெளியேறச் செய்வது எதுவென்பது ஒரு பொருட்டல்ல, நீங்கள் ஒருபோதும் மற்றவைகளை விடச் சிறந்ததாக இருக்கும் வேறொரு மதத்தையோ அல்லது ஒரு புனித புத்தகத்தையோ தேடமாட்டீர்கள், ஆனால் உங்களது காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியை நீங்கள் தேடுவீர்கள், நீங்கள் இரட்சிக்கப்பட என்ன செய்யவேண்டும் என்று அவன் உங்களுக்குச் சொல்லுவான்.
19உயிர்வாழும் தீர்க்கதரிசிக்கு வெளியே, தேவனுடைய வார்த்தையே இல்லை. உங்கள் கோயில்களில், தேவாலையங்களில், மசூதிகளில் மற்றும் ஜெப ஆலையங்களில் நீங்கள் உட்கொள்ளும் புனித புத்தகங்களின் விளக்கங்களனைத்தும் மரபணுமாற்றம் செய்ப்பட்ட உணவாக உள்ளன, பன்றிகளுக்கான உணவாக உள்ளன.
20உங்கள் காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசி மூலம் கடவுளை தேடாவிட்டால், மதங்களை அல்லது புனித நூல்களை மாற்றுவது பயனற்றது, ஏனென்றால் சகல மதங்களும், அந்த புனித புத்தகங்களில் உள்ள விசுவாசமும், ஒரே நரகத்திற்கே வழிநடத்துகின்றன. "நான் வைதீக யூத மதத்தில் இருந்தேன், ஆனால் இப்போது நான் மசோர்டி யூத மதத்தில் அல்லது மறுசீரமைக்கப்பட்ட யூத மதத்தில் இருக்கிறேன்" என்றோ அல்லது "நான் ஒரு சுன்னி முஸ்லிமாக இருந்தேன், ஆனால் இப்போது நான் ஒரு ஷியா அல்லது சலாஃபிஸ்ட்" என்றோ சொல்ல வேண்டாம்.
21ஒருவன் உபவாசத்தாலோ, பிரதிஷ்டை செய்யப்படுவதாலோ அல்லது சில சூஃபித்துவத்தின் மூலமாகவோ ஒருபோதும் கடவுளிடம் நெருங்கிவர முடியாது, ஆனால் ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசி மூலமாகத்தான் முடியும். கடவுள் ஒரு பக்தியான மதத்திலோ அல்லது புனித நூலிலோ இல்லை ஆனால் அவருடைய தீர்க்கதரிசிகள் பூமியில் உயிருடன் இருக்கும்போது, அந்த தீர்க்கதரிசிகளுடன் இருக்கிறார் என்பதை நீங்கள் இறக்கும் வரை மறந்துவிடாதீர்கள்.
22எந்த ஒரு தீர்க்கதரிசியும் ஒரு மதத்தை ஒருபோதும் நிறுவியதில்லை. கடவுள் ஒரு மதத்தில் இல்லை மேலும் இஸ்லாம் மதத்தின், யூத மதத்தின் அல்லது கிறிஸ்தவ மதத்தின் ஒரு பக்தியுள்ள உறுப்பினன், தனது காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியை விசுவாசிக்காமல் சொர்க்கத்திற்குச் செல்லமுடியும் என்று நான் நம்பவில்லை. மேலும் தேவகுமாரன் ஒருவன் ஒரு மதத்தில் மரிக்கமாட்டான். அந்த மதங்கள் அனைத்திலும் நீங்கள் எடுக்கிற முயற்சிகளை கடவுள் அங்கீகரிப்பதில்லை. மேலும் நீங்கள் நல்லவராகவும் நேர்மையானவராகவும் ஒரு செம்மையான இருதயத்தோடு இருந்தால், உங்களது காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியை விசுவாசிக்காமல் ஒரு மதத்தில் மரிக்க கடவுள் உங்களை அனுமதிக்கமாட்டார்.
23மேலும் யூதர்களே, அரபியர்களே, நீங்கள் ஆபிரகாமின் குமாரர், ஆனால் ஒரு தீர்க்கதரிசியின் குமாரன் ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசியின்றி வாழ்வதெப்படி? உங்களுடன் பேசும் நான், உங்களுடைய அடிமையாக இருக்கிறபோதிலும், நீங்கள் எனக்கு போதிக்க வேண்டியதைத்தான், நான் உங்களுக்கு கற்பிக்கிறேன். ஒரு தீர்க்கதரிசி இல்லாமல் ஒருவர் எவ்வாறு வாழமுடியும்?
24என் கிராமத்தின் துன்மார்க்கர் கடவுளை நம்புவதில்லை, ஆனால் அவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது, அவர்கள் ஒரு ஞானதிருஷ்டிக்காரனிடம் கலந்தாலோசிக்க முற்படுகிறார்கள். மேலும் நீங்களோவெனில், இரட்சிப்பு போன்ற ஒரு உன்னத காரியத்திற்காக, உங்களைப் போன்று குருடர்களாக இருக்கும் சில ரபீக்கள், இமாம்கள் மற்றும் பாஸ்டர்களை நீங்கள் பின்பற்றுவது எப்படி, அதனுடன் உங்கள் இதயங்கள் சமாதானமாக இருக்கவும் செய்கின்றனவே? மரணத்திற்குப் பிறகு, நீங்களே உங்களை மீட்டுக்கொள்ள மீண்டும் பூமியில் வரலாம் என்பது போல நீங்கள் பயமின்றிச் செயல்படுகிறீர்கள்.
25முஸ்லிம்களே, நீங்கள் கடவுளில் நம்பிக்கை கொண்டிருந்தால், முஹம்மது இறந்தபோது, “கடவுளே, முஹம்மது போன்ற ஒரு தீர்க்கதரிசியை எங்களுக்கு அனுப்பும்” என்று நீங்கள் சொல்லியிருப்பீர்கள். மேலும், உங்களை வழிநடத்த உங்களைப் போன்ற மனிதர்களை போதகர்கள், இமாம்கள் மற்றும் ரபீக்கள் என உங்களுக்கு மேலாக ஏற்படுத்தியிருக்கமாட்டீர்கள்.
26ஒரு இமாமுக்கு கடவுளைத் தெரியுமா? ஒரு பாஸ்டர் கடவுளை அறிவானா? ஒரு ரபிக்கு கடவுளைத் தெரியுமா? ஒரு செம்மறி ஆடால் மந்தையை வழிநடத்த முடியுமா? முஸ்லிம்களே, ஆதாம், ஆபிரகாம், யாக்கோபு, சாலமொன் ஆகியோர் மோசேயைப் போன்ற தீர்க்கதரிசிகள் என்பது உங்களுக்கெப்படித் தெரியும், அது கிறிஸ்தவர்களுக்குத் தெரியாத காரியமாயிற்றே? ஆயினும் நான் உங்கள் ரசூலாக இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் அறிந்திராதவனான ஒரு மரித்த தீர்க்கதரிசியால் பயன் என்ன?
27யூதர்களே, முஸ்லிம்களே, கிறிஸ்தவர்களே, நீங்கள் என்னை எந்த அடிப்படையில் நிராகரிக்கவும், என்னை வெறுக்கவும் செய்கிறீர்கள்? உங்களுக்குத் தெரியாத ஒரு இறந்த முஹம்மதை நீங்கள் தேர்வுசெய்கிறீர்கள் மேலும் நான், இன்று கடவுள் உங்களுக்கு அனுப்பிய ரசூல், என்னை நீங்கள் நிராகரிக்கிறீர்கள்? 632 -ல் மரித்த முஹம்மது எந்த ஆண்டில் உங்கள் தீர்க்கதரிசியாக இருந்தார்?
28நீங்கள் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியை பின்பற்றியிருந்தால், ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைகளின் தேதிகள் மற்றும் ஈத்-உல்-பித்தருக்குப் பிறகு சந்திரனின் தோற்றம் குறித்து வாதிட்டிருப்பீர்களா? இந்த குழப்பத்தில்தான் நீங்கள் மனிதகுலத்தை வழிநடத்த விரும்புகிறீர்களா?
29மனிதகுலம் கடவுளின் தீர்க்கதரிசிகள் மூலம் கடவுளைப் பின்பற்றியிருந்தால், பல மதங்கள் இருக்குமா, ஒவ்வொரு மதத்திற்கும் அதன் புனித நூலும் அதன் சொந்த நடைமுறைகளும் இருக்குமா? அது ஒரு குழப்பமாக இருக்கிறதென்றும் அதன் பின்னால் இருப்பது பிசாசுதான் என்றும் உங்களுக்குத் தெரியாதா? பூமியை கடவுளிடம் வழிநடத்திச் செல்வதற்கான வழி ஒன்று தான், அந்த வழிதான் உயிர்வாழும் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுகிறது. இனி தீர்க்கதரிசிகள் இருக்கமாட்டார்கள் என்று பிரசங்கிப்பது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும்.
30நீங்கள் பைபிளிலோ, தோராவிலோ அல்லது குரானிலோ பார்க்கும்போது, அது வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார்க்கும் ஒரு மனிதனைப் போன்றதாக இருக்கிறது. இந்த நட்சத்திரங்களுக்குப் பின்னால், கடவுள் வெளிப்படுத்தினாலொழிய ஒருவனாலும் அறியமுடியாத ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்களும் மர்மங்களும் உள்ளன. இப்போது கடவுள் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி மூலமாக மட்டுமே பேசுகிறார், இந்த தீர்க்கதரிசி கூறுவதெதுவோ, அதைத்தான் அவன் ஏற்படுத்திய ஆசாரியர்கள், பாஸ்டர்கள் மற்றும் ரபீக்கள் எடுத்து முழு பூமிக்கும் பிரசங்கிக்கவேண்டும். ஆனால் கடவுளுக்குக் கீழ்ப்படியாதபடிக்கு, நீங்கள் மதத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். மேலும் மதமும் புனித புத்தகங்களும் நரகத்திற்குப் போவதற்கான வழிகளாக இருக்கிறவேளையில் உயிர்வாழும் தீர்க்கதரிசி இன்னமும் பரதீஸுக்குப் போவதற்கான வழியாக இருக்கிறான்.
31கிறிஸ்தவம் என்பது பரிசுத்த வேதாகமம் என்று அழைக்கப்படும் ஒரு பழைய புத்தகத்தின் மூலம் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கப்படுதலாக இருக்கிறது, இஸ்லாம் என்பது புனித குரான் என்ற பழைய புத்தகத்தின் மூலம் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கப்படுதலாக இருக்கிறது, யூத மதம் தோரா என்ற பழைய புத்தகத்தின் மூலம் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கப்படுதலாக இருக்கிறது. ஆனால் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுதல் என்பது உங்கள் காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசி மூலம் அவர் கொடுத்த அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதாக இருக்கிறது.
32மேலும் உங்கள் கனிகளைப் பாருங்கள்! கிறிஸ்தவம் ஆயிரக்கணக்கான கிளைகளை கொண்டுள்ளது, யூத மதத்திற்கு ஆயிரக்கணக்கான கிளைகள் உள்ளன, இஸ்லாம் மத்திற்கு ஆயிரக்கணக்கான கிளைகள் உள்ளன. உங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நீங்கள் தேவாலயங்கள், சபைகள், மசூதிகள் மற்றும் ஜெப ஆலயங்களில் சண்டையிடுகிறீர்கள், ஆயினும் உங்கள் மூவருக்கும் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி தேவையில்லை, அதன் விருப்பத்தைக் கூட நீங்கள் உணருகிறதில்லை. நான் ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக இருப்பதற்காக நான் மரிக்கும் வரை நீங்கள் காத்திருக்கிறீர்கள். அதனுடன் நீங்கள் எந்த சொர்க்கத்திற்குச் செல்வீர்கள்?
33தீர்க்கதரிசி மோசேக்குப் பிறகு, மோசேயின் புத்திரர்கள் தீர்க்கதரிசி யோசுவாவின் முன்வந்து பணிந்தனர். தீர்க்கதரிசி எலியாவுக்குப் பிறகு, எலியாவின் புத்திரர்கள் தீர்க்கதரிசி எலிசாவுக்கு முன்வந்து பணிந்தனர். கடவுளின் தீர்க்கதரிசியாகிய ஆபிரகாமின் குமாரனான இஸ்மவேலின் சந்ததியினரான அரபியர்களே, உங்களை வழிநடத்த உங்கள் மீது இமாம்களை ஏன் ஏற்படுத்துகிறீர்கள்?
34ஒரு இமாமுக்கு சொர்க்கத்திற்கான வழி தெரியுமா? கடவுள் சில இமாம்களுடன் பேசுகிறாரா? முஹம்மது ஒரு இமாமா? ஏன் பூமியின் காரியங்களுக்கு நீங்கள் புத்திசாலிகளாக இருக்கிறீர்கள், ஆனால் இரட்சிப்பு சம்மந்தப்பட்டதில் நீங்கள் மிருகங்களைப்போல செயல்படுகிறீர்கள்? சகலமும் பரிணாமம் அடைகிறபோது, உங்களுடன் தொடர்பேதும் இல்லாதவைகளான தோரா, பைபிள் மற்றும் குரான் எனப்படும் பழைய வரலாற்று புத்தகங்களிலேயே இன்னமும் உங்கள் இரட்சிப்பானது இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு, இணையம் மற்றும் கணினி குற்றத்தின் (cybercrime) சகாப்தத்தில், ஒரு வங்கியின் பாதுகாப்பானது 1950 -ல் இருந்ததைப் போலவே அதன் கவசக் கதவுகளிலா இன்னும் தங்கியிருக்கிறது?
35உயிர்வாழும் தீர்க்கதரிசியின்றி உங்களால் நடக்க முடியுமென்றால், உங்கள் பாஸ்டர்கள், ரபீக்கள் மற்றும் இமாம்கள் மரித்தவுடன் உடனடியாக அவர்களை ஏன் மாற்றுகிறீர்கள்? பாஸ்டருக்கும் தீர்க்கதரிசிக்கும் இடையில், எது மிக முக்கியமானது, உடனடியாக யார் மாற்றப்பட வேண்டும்? கடவுள் ரபீக்களையும், பாஸ்டர்களையும், இமாம்களையும் பூமியில் அனுப்புகிறாரா? மோசே, இயேசு மற்றும் முஹம்மது ஆகியோர் இமாம்களா அல்லது ரபீக்களா? ஒரு ஜனாதிபதியையும் அவருடைய அமைச்சர்களையும் போன்று, ஒரு தீர்க்கதரிசி தான், அவனது ஆசாரியர்களையும் ரபீக்களையும் இமாம்களையும் ஏற்படுத்த வேண்டியவனான இருக்கிறான்.
36குடியரசின் தலைவர் இறக்கும் போது, நாட்டை வழிநடத்த நீங்கள் சில அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை, இதை நீங்கள் நன்கு அறிவீர்கள், ஆனால் கடவுள் உங்களை வழிநடத்தக்கூடாது என்பதற்காகவும், உங்களுடன் பேச கடவுள் ஒரு அடிமையைத் தேர்ந்தெடுப்பார் என்ற பயத்தினாலும், உங்கள் விருப்பப்படி, பாஸ்டர்கள், இமாம்கள் மற்றும் ரபீக்களை உங்களுக்காக தேர்ந்தெடுக்கிறீர்கள். மேலும் கடவுள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமோ? அதனுடன் எந்த சொர்க்கத்திற்குச் செல்வீர்கள்? இந்த விஷயத்தில், நீங்கள் ஏன் தீர்க்கதரிசிகளைத் தேர்ந்தெடுப்பதில்லை? பாஸ்டர்கள், ரபீக்கள் மற்றும் இமாம்களுக்குப் பதிலாக, மோசே, இயேசு, முஹம்மது போன்ற தீர்க்கதரிசிகளை நீங்கள் ஏன் தேர்ந்தெடுக்கக்கூடாது?
37மேலும் நீங்கள் வெளிச்சத்தில் இருந்தால், 1993 ஏப்ரல் 24 -ல் முழு பூமியும் ஏன் இருளில் மூழ்கியது, வெளிப்படுத்துதல் 18:1 -ல் உள்ளதைப் போல தேவதூதனின் மகிமை தான் அதை ஒளிறச்செய்தது? நீங்கள் பிசாசின் புத்திரர் அல்லவென்றால், நீங்கள் ஏன் ஒன்றாக ஜெபிக்கிறீர்கள், ஒன்றாக புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறீர்கள், போப்பாண்டவர் உங்கள் மசூதிகளுக்குச் செல்கின்றான்?
38கடவுளின் தூதர்களும் சாத்தானின் தூதர்களும் ஒன்றாக குடும்பப் புகைப்படங்களை எடுக்கமுடியுமா? பிசாசின் புத்திரர்கள்! தீர்க்கதரிசிகளுக்கு பதிலாக மதங்களையும் புனித நூல்களையும் ஏன் மாற்றிக்கொள்கிறீர்கள்? மோசே மற்றும் இயேசு கிறிஸ்து மற்றும் முஹம்மது ஆகியவை மதங்களின் பெயர்களா அல்லது தீர்க்கதரிசிகளின் பெயர்களா? முஹம்மது என்பது ஒரு மதத்தின் பெயரல்ல, ஆனால் ஒரு தீர்க்கதரிசியின் பெயர் என்றால், நீங்கள் ஏன் உயிருள்ள தீர்க்கதரிசியை விட ஒரு மதத்தை விரும்புகிறீர்கள்? நீங்கள் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசியின் புத்திர்களாக இருந்தால், உங்களது சபையை, மசூதியை அல்லது ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறுகிறீர்கள் என்றால், அது ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியை தேடுவதற்காகத்தான் இருக்கவேண்டும் ஏனெனில் ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறது.
39உங்கள் கூற்றுப்படி, தேவனுடைய ஆழத்தை நாம் அறிந்திருப்பது ஒரு மதத்தினாலோ அல்லது புனித நூலினாலோ தானே? இரட்சிப்பு என்பது ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியா, ஒரு மதமா அல்லது புனித நூலா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவருடைய காலத்தில் இரட்சிப்பும் உலகின் ஒளியுமாய் இருக்கவில்லையா? இரட்சிப்பு அசக்கேயுவின் வீட்டிற்குள் பிரவேசித்ததாக அவர் அவனிடம் சொன்னபோது, அவர் ஒரு புனித புத்தகத்தைப் பற்றியா பேசிக்கொண்டிருந்தார்?
40மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு, அப்போஸ்தலர் 13:47 -ன் படி, பூமியின் கடையாந்திரம் வரை, உலகின் ஒளியும் இரட்சிப்புமாக பவுலை ஸ்தாபித்ததாக தேவன் கூறினார், இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? நீங்கள் என்னை கள்ளத் தீர்க்கதரிசி என்று சொல்கிறீர்கள். ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று நீங்கள் அறியும்படிக்கு, நீங்கள் அறிந்திருக்கிற தீர்க்கதரிசி யார்? ஒரு புத்தகத்தில் 1850 -ம் ஆண்டின் நூறு டாலர் கட்டணச் சீட்டின் (bill) பழைய படத்தை பார்த்திருப்பதால் என் கிராமத்தில் உள்ள விவசாயி தற்போதைய நூறு டாலர் கட்டணச் சீட்டின் போலியை அறிந்துகொள்ளமுடியுமா?
41என்னை ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று அழையுங்கள், அங்கு இறுதி நியாயத்தீர்ப்பு ஒன்று இல்லாவிட்டால் நீங்கள் சரியாக இருப்பீர்கள். இஸ்லாமியம், கிறிஸ்தவம் மற்றும் யூதம் ஆகியவை தலையில்லாத உடல்கள். அவை திகில் கனவுகள் தான். அவைகள் தேவனுக்கு முன்பாக பேய் திரைப்படங்களாக (zombie movies) உள்ளன. யாராவது ஒருவன் இஸ்லாம் மதம், இந்து மதம், புத்த மதம், கிறிஸ்தவ மதம் அல்லது யூத மதம் அங்கத்தினனாக இருந்தால், அவனுடைய பரிசுத்தமும் அவனது நற்செயல்களும் அன்னை தெரேசாவின் நற்செயல்களைப் போலவே தேவனுக்கு முன்பாக அருவருப்பானவை தான்.
42இரட்சிப்பு என்பது நித்தியம் மேலும் தேவனிடம் சென்று தன்னைக்குறித்தே கணக்கொப்புவிக்க வேண்டியவனாக இருக்கிற ஒரு ரபி, ஒரு பாஸ்டர் அல்லது ஒரு இமாமின் கரங்களில் தேவனின் பிள்ளை ஒருவன் தனது இரட்சிப்பை வைக்கமாட்டன் ஆனால் பூமியில் தேவனின் வாயாக இருக்கிற தனது காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியின் கரங்களில் வைப்பான். நீங்கள் யூதர்களாக, கிறிஸ்தவர்களாக அல்லது முஸ்லிம்களாக இருக்கிறீர்கள் என்றால், உங்களை பூமியில் வழிநடத்தும் ரபீக்கள், பாஸ்டர்கள் மற்றும் இமாம்கள் அனைவரும் தன்னார்வத் தொண்டர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள், அவர்களை ஏற்படுத்தியது ஒரு தீர்க்கதரிசி அல்ல. அவர்கள் துன்மார்க்கர்களும் நயவஞ்சகர்களும் பிசாசின் புத்திரருமாக இருக்கிறார்கள், அதனால்தான் அவர்கள் என்ன செய்கிறார்களோ அதைத் தொடந்தும் செய்ய போதுமான துணிவுகொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பொய்யர்கள். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் ஜெப ஆலயங்களில் அவர்கள் தங்களது மனக் கற்பனைகளைப் பிரசங்கிக்கிறார்கள், ஆனால் நான், காக்குவ் பிலிப்பு, ஏப்ரல் 24, 1993 -ன் தரிசனத்தின் தைரியத்தில் நான் உங்களுடன் பேசுகிறேன் மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும், தன் மதத்தைப் பொருட்படுத்தாமல் “ஆமென்” என்று கூறி, அதனிடம் வருவார்கள்.
43ஏப்ரல் 24, 1993 அன்று நான் ஒரு தேவதூதன் மூலமாக கடவுளிடமிருந்து நேரடியாக ஒரு அழைப்பும் பணி நியமனமும் பெற்றேன். இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை நான் அனுபவித்திருக்கிறேன், ஒரு மனிதன் இதை எனக்கு முன் அனுபவித்திருக்கிறானா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பட்டப்பகலில், நான் நியாயத்தீர்ப்பின் தூதனைப்போல இருந்தேன், அதாவது ஒரு கானல் நீர் போன்ற ஒளிரும் வெள்ளை மேகமாக இருந்தேன். ஒரு உடல் இல்லாமல் நான் ஆகாயத்தில் சென்றேன், பார்த்தேன், கேட்டேன். நான் மெய்மறந்த நிலையில் இருந்திருக்கிறேன், நான் உட்கார்ந்திருக்கும்போதே ஒரு தரிசனத்தில் செயல்பட்டிருக்கிறேன். ஆனால் கடவுளின் உண்மையான தீர்க்கதரிசி வேறு எங்காவது இல்லையா என்பதை நான் எப்போதும் அறிய முற்பட்டேன். ஆயினும், பவுலைப் போலவே, திருச்சபையின் வரலாற்றை டேனியல் ரூப்ஸ் மற்றும் பல வரலாற்றாசிரியர்களின் படியாக நான் படித்தேன், யூத மதத்தின் வரலாறான வேதாகமத்தையும் கூட நான் படித்தேன். எனக்கு முன் வந்த தீர்க்கதரிசிகளான என் பிதாக்களின் விசுவாசத்திற்கு இணங்க என் செய்தி இருப்பதைக் கண்டேன்.
441993 -ல், நான் என் வேதாகமத்தை வாங்கி அதைப் படிக்கத் தொடங்கியபோது, மோசே, ஏசாயா, எரேமியா, ... ஆகியோரைப் பார்க்கையில் நான் முதலில் புரிந்துகொண்ட காரியம், இரட்சிப்பு ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசி மூலமாக என்பதுதான். செப்டம்பரில், நான் வில்லியம் பிரன்ஹாமை கண்டுபிடித்தேன், ஆனால், எதிர்பாராதவிதமாக, அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். 1997 மே 27 அன்று, நான் என் வேதாகமத்தின் நடுவில், "தேவனே, அழிவின் வழியில் என் இதயம் எனக்கு மறுவுறுதியளிக்குமெனில், என்மேல் இறக்கம்வைத்து என்னை திருப்பியருளும். நான் நரகத்திற்குச் செல்ல விரும்பவில்லை." என்று எழுதினேன்.
451993 ஏப்ரல் 24 -ன் மகத்தான தரிசனம் இருந்தபோதிலும், இவ்வாறான ஆட்கள் எங்காவது எதையாவது செய்து கொண்டிருக்கிறார்களா என்பதை அறிய முற்பட்டேன், அதை செய்யும்படி என் விசுவாசிகளுக்கும் நான் அறிவுறுத்தியுள்ளேன். கடவுளுக்கு முன்பாக, ஒரு முக்கியமான மார்க்க சம்பந்தமான மனிதனைப் பற்றி நான் ஒரு போதும் கேள்விப்பட்டதுமில்லை, அதை வெறுத்ததுமில்லை. கடவுளின் வழி என்பது ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியின் வழி மட்டுமே. மேலும் நரகத்திற்கான வழியோவெனில் மதங்கள், புனித நூல்கள், தூண்கள் மற்றும் சடங்குகளின் வழியாக இருக்கிறது. தேவனுடைய குமாரனொருவன் ஒரு மதத் தலைவனாக இருக்கும் போது, அவன் எப்போதும் தன் ஜனத்தை விசுவாசத்தில் தேவனுடைய தீர்க்கதரிசிகளிடம் வழி நடத்துவான்.
46முந்தைய வரலாற்றிலும் இடைக்காலங்களிலும் தேவன் என்ன செய்துள்ளார் என்பதைச் சொல்வதற்கு வருவதிலா இரட்சிப்பு அடங்கியிருக்கிறது? ஐரேனியஸின் குருவான பாலிகார்புடன் அவருக்கிருந்த அனுபவங்களைப் பற்றி அவர் சொன்னதினாலா ஐரேனியஸ் தேவனின் செய்தியாளனாக இருந்தார்? ஏப்ரல் 25, 167-ம் ஆண்டன்று, அந்த மகத்தான தீர்க்கதரிசி பாலிகார்புக்கு மேலாக கழுமர நெருப்புக்கு எந்த அதிகாரமும் இருக்கவில்லை.
47அவருடைய ஒரு புறம் ஊடுருவ குத்தப்பட்டு, வெளியே வந்த இரத்தமானது கழுமரத்தின் அக்கினியை அனைத்துப்போட்டது, அவர் மரித்தபோது, அவர் மறுபடியும் உயிரோடு எழுந்து வராதபடிக்கு அவருடைய உடல் சுட்டெரிக்கப்பட்டு, அவருடைய சாம்பல் தூற்றப்பட்டது. இந்த காரியங்களைச் சொல்லும்படிக்கா பூமியில் 170 நாடுகளுக்கு பயணம் செய்ய தேவன் ஒரு எவால்ட் ஃப்ராங்கை அனுப்புவார், அது உங்களை தூங்க வைக்கவில்லையா? விக்லிஃபின் பெரும் அற்புதங்களைத் தெரிவிப்பதற்காகவா மார்ட்டின் லூதர் இருந்தார்?
48மேலும் விக்லிஃபிற்குப் பிறகு, அவரது ஸ்தானத்தில் தேவன் ஒரு மகத்தான தீர்க்கதரிசியை எழுப்பினார்: ஜான் ஹஸ். எவால்ட் ஃப்ராங்க் உங்களை தூங்கவைக்கிறதுபோல, விக்லிஃப் உடன் அவருக்கிருந்த அனுபவங்களை விவரித்ததற்காக ஜான் ஹஸ் உயிரோடு எரிக்கப்பட்டார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த எவால்ட் ஃபிராங்கும் பிரன்ஹாமிஸ்டு பாஸ்டர்களும் உங்களை தூங்கு, தூங்கு, தூங்கு என்று 50 -க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தூங்கவைத்தது எப்படி மேலும் நீங்கள் ஏவரும் விழித்து ஏழுந்திருக்கவில்லையே?
49எவால்ட் ஃபிராங்கும் பிரன்ஹாமிஸ்டு பாஸ்டர்களும் சபையின் தூக்க மாத்திரைகளாக இருக்கிறார்கள் மேலும் சபையை உறக்கத்திலிருந்து எழுப்ப நடுராத்திரியில் ஒரு சத்தம் இருந்தாகவேண்டும். ஆனால் அவர்கள் நிலைநிற்பதற்கென, தனக்குப் பிறகான தொடர்சியைப் பற்றி வில்லியம் பிரன்ஹாம் பேசுகிற அனைத்து பிரசங்கங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
50மோசேக்குப் பிறகு, இருந்த யோசுவா ஒரு அக்கினி ஸ்தம்பமா அல்லது அவன் ஒரு மனிதனா? இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரமும் தங்கள் வழியில் தங்கள் அக்கினி ஸ்தம்பத்துடன், மோசேயின் சுருள்களைப் பாராயணம் செய்துகொண்டே போனார்களா? காரியம் அப்படியிருந்ததென்றால், இஸ்ரேலின் ஒரு கோத்திரம் யோர்தானுக்கு வந்திருக்காதா? மற்றொரு கோத்திரம் லெபனானுக்கும் மற்றொரு கோத்திரம் ஈராக்குக்கும் வந்திருக்காதா? கானானுக்குப் போவதற்காக, யோர்தானின் நீரைப் பிரிக்க யோசுவா மோசேயின் கோலை ஆகாயத்தில் உயர்த்தினானா?
51ஓ ஏவாளே, இஸ்லாம் மதம், இந்து மதம், புத்த மதம், கிறிஸ்தவ மதம், யூத மதம் ஆகியவை இருக்கும்பொருட்டு, காயினை உலகத்திற்கு கொண்டுவந்ததினால் நீ பூமிக்கு இவ்வளவு பெரிய தீங்கை ஏன் செய்தாய்? ஓ ஏவாளே, தேவன் மனிதர்களை பூமிக்கு கொண்டுவந்தார், ஆனால் நீ மனிதர்களுக்கு மத்தியில் மிருகங்களைக் கொண்டுவந்தாய், அதனால் பணமும் மதமும் புனித புத்தகங்களும் உயிர்வாழும் தீர்க்கதரிசிகளுக்கு பதிலாக வைக்கப்படுகின்றன.
52ஒரு தீர்க்கதரிசிக்கு பிறகு வருவது ஒரு தீர்க்கதரிசிதான் மேலும் ஓசியா 12:14, “ஒரு தீர்க்கதரிசியால் யேகோவா இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார், ஒரு தீர்க்கதரிசியால் அவன் பாதுகாக்கப்பட்டான்.” என்று கூறுகிறது. மேலும் திருச்சபையின் வரலாற்றில் கூட, பாலிகார்ப் தீர்க்கதரிசி 167 -ம் ஆண்டில் கொல்லப்பட்டதற்குப் பிறகு, திருச்சபையானது மற்றொரு தீர்க்கதரிசியை கொண்டிருந்தது. மேலும் வரலாறனைத்திலும் ஒரு இடத்திலும் பழைய நினைவுகளை சொல்லிக்கொண்டிருந்த
53பாலிகார்பின் சில சீஷர்கள் பற்றி எந்த குறிப்புமில்லை. மேலும் யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இன்று செய்வது போல் யாரும் வந்து மரித்த பாலிகார்பை நம்பும்படி கேட்கமுடியாது. இயேசு கடவுளா இல்லையா, மோசே ஒரு உண்மைத் தீர்க்கதரிசியா அல்லது கள்ளத் தீர்க்கதரிசியா, முஹம்மது ஒரு உண்மைத் தீர்க்கதரிசியா அல்லது கள்ளத் தீர்க்கதரிசியா, இது முக்கியமானதல்ல, இது எனக்கு தொடர்புடையது அல்ல. அவர்கள் நிறைவேற்றின அனைத்தும் அவர்களின் காலத்துக்கானவை. மோசே யூத மதத்தைக் ஸ்தாபிக்கவில்லை, இயேசு கிறிஸ்து கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபிக்கவில்லை, முஹம்மது இஸ்லாம் மதத்தை ஸ்தாபிக்கவில்லை.
54யூதர்களே, கிறிஸ்தவர்களே, முஸ்லிம்களே, கலகக்காரி மேடாவின் புத்திரரான பிரன்ஹாமிஸ்டுகளே, உங்களிடையே தீர்க்கதரிசி என்பதன் கருத்தை அறிந்திருப்பவர்கள் யார்? மேலும் தீர்க்கதரிசி என்பதன் கருத்தை நீங்கள் எந்த தீர்க்கதரிசியினால் பெற்றீர்கள்? ஒரு புத்தகத்தின் மூலமாகவோ அல்லது சிற்றேடு மூலமாகவோ கடவுளை ஒருவர் அறியமுடியுமென்றால் யூதர்கள், தங்களது கரங்களில் சுருள்களை வைத்துக்கொண்டு, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தது ஏன்?
55ஒருவர் ஒரு புத்தகத்தின் மூலம் கடவுளை அறியமுடியுமென்றால், உங்களுடன் பேசுகிற நான் காக்குவ் பிலிப்பு, நானொரு கள்ளத் தீர்க்கதரிசி என்று ஏன் சொல்கிறீர்கள்? பிரன்ஹாமிஸ்டுகளே, தீர்க்கதரிசி என்பதன் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்திருந்தால், எகிப்தின் ஆசாரியர்களுடனும், பாகாலின் தீர்க்கதரிசிகளுடனும் ஐக்கியம் கொண்ட இந்த வில்லியம் பிரன்ஹாம் ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று நீங்கள் கூற மாட்டீர்கள். எகிப்தில் தகப்பன் ஆபிரகாமாக அவர் இருந்ததுதான் அது என நான் உங்களுக்குச் சொல்வேன். ஆனால் நீங்கள் தேவனை நிராகரித்திருக்கிறபடியினால், அக்கினி ஸ்தம்பங்களையும் சில அழைப்புகளையும் பணி நியமனங்களையும் கொண்டுள்ள ஆசாரியர்களான எபேசியர் 4 -ன் சிலரை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு மிகவும் தாழ்ந்திருக்கிறீர்கள். அவ்விதமாக, மோசேயைத் தவிர அல்லது மோசேக்குப் பிறகு, சில ஆசாரியர்களுக்கும் சில அழைப்புகளும் பணி நியமனங்களும் அக்கினி ஸ்தம்பங்களும் இருந்தனவா?
56மேலும் முஸ்லிம்களே, நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள், ஆனாலும் நான் உங்கள் ரசூல், எனது செய்தி ஏற்கனவே ஈரானுக்குள் ஊடுருவியுள்ளது. நானே பரலோகத்திலிருந்து வந்த வார்த்தை. நானே வழியும், சத்தியமும் ஜீவனும். என்மூலமாயல்லாமல் எவரும் இரட்சிப்படைய முடியாது. நான் யூதர்களின் ரபியும் முஸ்லிம்களின் ரசூலுமாக இருக்கிறேன்.
57நான் கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள் மற்றும் இந்துக்களின் தீர்க்கதரிசியாக இருக்கிறேன். நீங்கள் என்னை நம்புவதற்கு கடமைப்பட்டவர்களல்ல, ஆனால் நான் உங்கள் தீர்க்கதரிசி என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன், என்மூலமாயல்லாமல் நீங்கள் இரட்சிப்படைய முடியாது. நான் சொல்லுகிற அனைத்தையும், அவர்களுக்குச் சொல்வதற்கான விசேஷித்த அதிகாரத்தை 1993 -ல் தேவனவரிடமிருந்து நான் பெற்றேன்.
58நான் வனாந்தரத்தில் நின்று கொண்டிருந்தபோது, நியாயத்தீர்ப்பைப் பிரசங்கிப்பதற்கான உத்தரவு கடவுளின் பரிசுத்த தேவதூதர்களான மேகங்களால் கொண்டுவரப்பட்டது. நான் உண்மையைச் சொல்லுகிறேன். நான் முன்செல்லும்போது, பூமியின் பெரும் விருட்சங்கள் அவற்றின் பசுமையான கிளைகள் தரையைத்தொடும் வரை வளைந்தன. இந்த செய்தி உலகம் முழுவதும் செல்லும் என்றும் பூமியின் அனைத்து இனத்திலிருந்தும் மனிதர்கள் இரட்சிப்படைவதற்காக விசுவாசிப்பார்கள் என்றும் என்னிடம் கூறப்பட்டது.
59ஒரு நாள், நான் கடவுளின் சிங்காசனத்திற்கு முன்பாக வரும்போது, அங்கே எனது கூட்டத்தாரில்: கோயில்கள், சபைகள், மசூதிகள் மற்றும் ஜெப ஆலயங்கள் ஆகியவைகளால் தங்களைத் தீட்டுப்படுத்தாத வெள்ளையர்களும் கறுப்பர்களும், அரபியர்களும் யூதர்களும், பூமியின் சகல ஜாதிகளிலிருந்துமுள்ள மனிதர்களும் இருப்பார்கள். அவர்கள் பூமியில் சிதறிக்கிடக்கிறார்கள், ஆனால் தீர்க்கதரிசிகளின் சத்தத்தை, அவர்கள் என்னில் கேட்டு, அடையாளங் கண்டுகொண்டு, அவர்கள் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்து வருவார்கள். அவர்கள் இஸ்லாம் மதம், இந்து மதம், புத்த மதம், கிறிஸ்தவ மதம், யூத மதம் மற்றும் பூமியின் அனைத்து மதங்களிலிருந்தும் வருவார்கள்.
60மேலும், நீங்கள் தேவனுடைய குமாரனாக இருந்தால், இரட்சிப்பு ஒரு மதத்தில் இல்லை என்பதையும், இரட்சிப்பு தந்தையிடமிருந்து மகனுக்கு பரவுவதில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். ஒரு மதத்தின் விரிவாக்கமானது ஒருபோதும் பூமியில் உங்களுடைய போராட்டமாக இருக்காது. இஸ்ரேலுக்கு அல்லது மெக்காவுக்கு புனித யாத்திரை செல்லுதல் அல்லது ஜிஹாத் ஒருபோதும் பூமியில் உங்களுடைய போராட்டமாக இருக்காது.
61இஸ்ரேல் தலைநகர மோதல்களும், எருசலேமில் மூன்றாம் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்புதலும் பூமியில் ஒருபோதும் உங்களுடைய போராட்டமாக இருக்காது. புனித நூலும் மூன்றாம் தேவாலையமும் இணைந்ததைக் காட்டிலும் பெரியது இங்கே இருக்கிறது. மேலும் உங்களுடைய போராட்டமானது உங்களுடைய மரணத்திற்குப் பிறகு கடவுளோடிருப்பதற்காக இருக்கவேண்டும். நோவாவுக்குப் பிறகு, தேவன் மோசேயை அனுப்பினார் என்றால், மோசேக்குப் பிறகு, இயேசு கிறிஸ்துவை அனுப்ப தேவனுக்கு உரிமை உண்டென்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
62இயேசு கிறிஸ்துவுக்கு பிறகு தேவன் முஹம்மதை அனுப்பினர் என்று நீங்கள் விசுவாசித்தால், முஹம்மதுக்குப் பிறகு, தமது விருப்பத்தின்படி மற்ற தீர்க்கதரிசிகளை அனுப்ப கடவுளுக்கு உரிமை உண்டென்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் உங்கள் தெய்வத்தை ஒரு கிறிஸ்தவ மதத்திலோ, இஸ்லாம் மதத்திலோ, புத்த மதத்திலோ, இந்து மதத்திலோ, யூத மதத்திலோ பூட்டிவைக்கவும், அதற்கு இன்னதைச் செய்ய எந்த உரிமையும் இல்லை என்று அதனிடம் சொல்லவும் உங்களாலாகும் என்றால், பிறகு அந்த தெய்வம் சாத்தானாக இருக்கிறது.
63இன்னுமாக, நீங்கள் தேவனுடைய புத்திரர்கள் என்று விசுவாசத்தால், பிறகு மதம் என்பது தந்தையிடமிருந்து மகனுக்கு தரப்படக்கூடிய ஒரு சுதந்திர வீதம் அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் பிறக்கும்போது, நீங்கள் நிலத்திலுள்ள ஒரு விதையாக இருக்கிறீர்கள், உங்களுடைய குடும்பம் அல்லது பிறப்பின் மதமானது விதையின் மேலுள்ள கனமான மண்ணாக அமைகிறது. அவைகள்தான் சோதனைகள். நீங்கள் பூமிக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படிக்கு, உங்களை விதைத்த கடவுளின் ஒளியைக் காண நீங்கள் போராடி, நிலத்திலிருந்து வெளியே வரவேண்டும். யூதர்களே, கிறிஸ்தவர்களே, இஸ்லாமியர்களே, பௌத்தர்களே, இந்துக்களே, மதத்திலிருந்து வெளியேறுங்கள்! சகல விதைகளும் நிலத்தில் போடப்படவேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அது ஒரு தெய்வீக சட்டம் ஆனால் நீங்கள் நிலத்தில் மடியக்கூடாது.
64ஓ தேவனே, சிருஷ்டிப்பு முதற்கொண்டு, நீர் பூமியில் கோடாகோடி மனிதர்களைக் கொண்டுவந்திருக்கிறீர், இப்போது இது என்னுடைய முறையாக இருக்கிறது, என்னுடைய மரணத்திற்குப் பிறகு, நான் மீண்டுமாக பூமியில் ஒரு போதும் பிறக்கமாட்டேன். மறுபிறவி என்று ஒன்று இல்லை. இதனால்தான் எனக்கு முன் வந்த தீர்க்கதரிசிகளை போலவே, தீர்க்கதரிசன வெளிப்பாட்டின் அடிப்படையில் வார்த்தையின் குறுகிய பாதையை நான் விரும்பித் தேர்ந்துகொண்டேன். நான் ஊழியம் செய்கிறேனென்றால், நான் பூமியை நியாயந்தீர்க்கிறேன் என்றால், அது 1993 ஏப்ரல் 24 அன்று ஆட்டுக்குட்டியானவர் என்னிடம் கூறியதெதுவோ அதினால் தான், மேலும் இதனைக் கொண்டுதான் நான் உம் முன் நியாயத்தீர்ப்பில் வருவேன்.
65மேலும் நான், அதிக கல்வி இல்லாமல், உம்முடைய சார்பாக நான் பேசினேன், 1993 -ல் நீர் எனக்கு அதை வெளிப்படுத்தியபடியே ஜனக்கூட்டம் வந்தது. மேலும் இந்த கூட்டத்தில், நீர் வெளிப்படுத்தினபடியே வெள்ளையர்கள், கறுப்பர்கள் மற்றும் பூமியின் சகல இனத்து மனிதர்களும் இருக்கிறார்கள். இப்போது, நான் அரபியர்களையும் இஸ்லாமியர்களையும் கூட பார்க்கிறேன். என்னுடைய செய்தி அவர்களுக்கு உரியதல்ல என்று நான் எப்போதும் நினைத்தேன், ஆனால் இப்போது தேவதூதன் வைத்திருந்த பட்டயத்தின் அம்சத்தையும், ஆட்டுக்குட்டியானவர் செய்த சைகைகளையும் புரிந்துகொள்கிறேன். ஏப்ரல் 24, 1993 -ன் தரிசனத்தின் கூட்டத்தில் யூதர்கள், அரபியர்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், இந்துக்கள் எல்லாம் இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது.
66ஒ தேவனே, இஸ்ரேல், இந்தியா, எகிப்து, ஈரான், ஈராக், யோர்தான், சவுதி அரேபியா, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானுக்காக நான் ஜெபம் செய்கிறேன். ஒ தேவனே, போப், இமாம்கள், ரபீக்கள் மற்றும் பாஸ்டர்களுக்காக நான் ஜெபம் செய்கிறேன். ஒ தேவனே, போப் பிரான்சிஸ்-I, யூசெப் அல்-கராதாவி, அஹ்மத் அல்-தயேப், தலாய் லாமா மற்றும் இஸ்லாம் மதத்தின், இந்து மதத்தின், பௌத்த மதத்தின், கிறிஸ்தவ மதத்தின், யூத மதத்தின் அனைத்து பிரமுகர்களின் கண்களையும் திறந்தருளும்.
67காக்குவ் பிலிப்புவாகிய என்னை, அவர்கள் நிராகரித்துவிட்டு மதங்களையும் பழமையான புனித புத்தகங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்கள் என்னைப் பார்த்து அவமதிப்புடனும் ஆணவத்துடனும் பேசுகிறார்கள், ஆனால் அவர்கள் மீது இரக்கம் காட்டும்படி கெஞ்சுகிறேன். ஒ தேவனே, நீர் உம்முடைய ஊழியக்காரனான ஆபிரகாமை நேசித்தீர், இப்போது ஆபிரகாமின் சட்ட-ஏற்ப்புக்குரிய மகன் இஸ்மவேலை நினைவுகூர்ந்து, இன்றைக்கு அவனுடைய சந்ததிக்கு அவனுடைய ரசூலை அடையாளம் கண்டுகொள்ள கிருபை அருளுவீராக.