ஏப்ரல் 7, 2019 அன்று கடாட்ஜியில் உள்ள தனது வீட்டிலிருந்து தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு தேவனிடம் உரையாற்றிய ஜெபம்
1தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான், இன்று ஏப்ரல் 7, 2019 ஞாயிறு காலை எனது வீட்டிலிருந்து, 1993 ஏப்ரல் 24 அன்று எனக்கு தோன்றின சர்வ வல்லமையுள்ள தேவனிடம் செய்த ஜெபம்.
2ஓ, என் முன்னோடிகளான தீர்க்கதரிசிகளின் யெகோவா தேவனே, பரலோகங்களில் உள்ள ஒரே தேவன் நீரே, பூமியிலுள்ள அனைத்து கடவுள்களையும் தேசங்களையும் ஆளுகிற ஒரே தேவன் நீரே. உமது கரத்தில் பலமும் வல்லமையும் உள்ளன. நீர் பரிசுத்தத்திலும் பரிசுத்தர். நீர் ஒருவர் மாத்திரமானவர், நீரே சர்வ வல்லமையுள்ளவர். உமது வார்த்தையினால் எல்லாவற்றையும் உண்டாக்கினீர்.
3மனுக்குலத்தின் மீட்பிற்காக, சர்வவல்லமையுள்ள தேவனான நீர் ஒரு மனித சரீரத்தின் வழியாக இஸ்ரவேலுக்கு வந்தீர், எங்களுடைய பாவங்களுக்காக எங்களது இடத்தில் மரித்து, எங்களை மீட்டுக்கொண்டீர். மனிதர்களுக்குள், நீர் ஒருவரே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு ஏறிச்சென்றீர். இப்போது, தலைமுறை தலைமுறையாக, உமக்குள்ளான நித்திய ஜீவனுக்குள் எங்கள் ஆத்துமாக்களை உரிமையாக்குவதற்கு, தீர்க்கதரிசிகள் எனப்படும் மனிதர்கள் மூலம் நீர் உம்மை காண்பிக்கிறீர். லவோதிக்கியாவின் இந்த காலத்தில் நான் உமது செய்தியாளனாக இருக்கும்படி நீர் என்னில் உம்மை வெளிப்படுத்துகிறீர்.
4நீர் என்னை முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் யூதர்களிடம் அனுப்பியுள்ளீர். பூமியின் அனைத்து இனங்கள், அனைத்து மதங்கள் மற்றும் அனைத்து மொழிகளிலிருந்தும் மனிதர்கள் என்னிடம் வருவார்கள் என்று நீர் எனக்கு காண்பித்தவாறே, இதோ, எல்லா இடங்களிலிருந்தும் மனிதர்கள் என்னிடம் வந்தார்கள். இந்தியர்கள், முஸ்லீம்கள், பௌத்தர்கள் மற்றும் கடவுளை நம்பாத ஜனங்கள் கூட என்னை நம்புகிறார்கள். மரித்த ஒருவனின் உயிர்த்தெழுதலைக் காட்டிலும், முழு சபைகளும் ஒரே நாளில் என்னை நம்புவதையும், நீர் எனக்கு வெளிப்படுத்திய மீட்டளிப்பின் ஞானஸ்நானத்தைப் பெறுவதையும் நான் பார்த்திருக்கிறேன். நான் அவர்களுக்கு: உலகமெங்கும் சென்று, மத்தேயு 25:6-ன் இந்த நற்செய்தியை எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கித்து, சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் என்று சொன்னேன்.
5ஓ தேவனே, நான் உமது அடிமை. நீர் என்னை வல்லமையுடன் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக நான் ஒருபோதும் உபவாசம் இருக்கவில்லை, என்னைப் படைத்தவர் நீர்தான், நான் எதற்காக விதிக்கப்பட்டேன் என்பதை அறிந்தவர். உம்முடைய விருப்பம் மட்டுமே செய்யப்பட வேண்டும், என்னுடைய விருப்பம் அல்ல. என் குறிக்கோளானது நீர் பூமியில் என் பெயரை மகத்துவமாக்குவதோ அல்லது முழு உலகமும் என்னிடம் வருவதோ அல்லது அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்யும் படி நீர் எனக்குக் கொடுப்பதையோ அல்ல, ஆனால் என்னைப் பின்தொடர்பவர்களுடன் நானும் இரட்சிக்கப்பட விரும்புகிறேன். என் எஜமானனும், என் தேவனுமான, உம்மை தரையில் விழுந்து தலைவணங்கி, என் தொப்பியை உமது காலடியில் வீசுகிறேன். குருடனாயிருந்த பர்த்திமேயுஸான எனது கண்களை 1993, ஏப்ரல் 24 ல் நீர் திறந்தீர். நான் ரிகேடிபாவிலிருந்து வருகிறேன். நான் உமது அடிமை, அதனால்தான் எனக்கு முன்பாக தரையில் விரிக்கப்பட்ட போர்வைகளில் நான் நடந்ததில்லை, ஏனென்றால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காக நான் படிக்கல்லாகத்தான் இருக்க வேண்டும்.
6சிவப்பு கம்பளத்தில் நடந்து செல்வதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை, அதை நான் விரும்புவதுமில்லை. எனக்கு முன்பாக பணிந்தவர்களை நான் தூக்கி நிறுத்தினேன், ஒரு ராஜாவைப் போல கொண்டுபோகப்படுவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை, ஏனெனில் நான் ஒரு அடிமை. எனக்காகவோ, என் மனைவிக்காகவோ அல்லது என் குழந்தைகளுக்காகவோ எந்த பணத்தையும் வங்கியில் கொண்டிருக்க மாட்டேன், எனது கார் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இந்த பழைய காராகவே இருக்கும், எனது பிறந்தநாள் ஒரு நிகழ்வாக இருக்காது ஏனெனில் நான் ஒரு அடிமை. காவல்துறையானது என்னை ஒருபோதும் பாதுகாக்கவில்லை, ஏனெனில் ரோமப் போர்ச்சேவகர்கள் என் எஜமானன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பாதுகாத்ததில்லை.
71993 லிருந்து, உம்முடைய தரிசனத்தால், என்னுடைய கண்கள் திறக்கப்பட்டன, பூமியில் ஜீவிப்பதற்கான நோக்கமானது, அது பரதீசு என்பதை நான் அறிந்து கொண்டேன். உம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றியவர்களில் ஒருவரைக்கூட நான் பின்பற்றி செயல்பட்டதில்லை. எனக்கு ஒரு அலுவலகம் இருந்ததில்லை, நான் ஒருபோதும் அதை கொண்டிருக்கவும் மாட்டேன். எனது ஊழியமானது குழந்தைகளுக்கு பெயர் வைப்பது அல்ல, குழந்தைக்கு பெயர் வைப்பது அவர்களின் பெற்றோருக்குரியது. என் மரணம் வரை, நான் கிறிஸ்துவின் உண்மையான அடிமையாக இருக்க விரும்புகிறேன். எல்லா நேரங்களிலும் நான் உம்மிடம் என் குரலை உயர்த்தி, அதிகாரத்துடனும், பைபிளில் உள்ள உமது வாக்குறுதிகளை மேற்கோள் காட்டியும் ஜெபித்ததற்காக, என்னை மன்னியுங்கள். உம்முடைய ஏவுதலும் பிரசன்னமும் என்னை விட்டு வெளியேறும்போது, ஒரு முட்டாளாக, ஒரு உபயோகமற்ற மனிதனாக, நான் அமைதியாக இருக்க வேண்டும். தேவனே, நித்திய ஜீவனின் இந்த மகத்தான கிருபைக்கு ஈடாக, உம்முடைய இருதயத்திற்கு ஏற்றபடியான நல்ல வாழ்வை எனக்குத் தாரும்.
8ஏப்ரல் 24, 1993 அன்று என் சொந்த கண்கள் உம்மை கண்டன, எனக்கு பணிநியமனம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் எனக்குப் பின் வரக்கூடிய தீர்க்கதரிசி ஏற்கனவே பூமியில் இருந்தால், அவர் உயர்வுபடவும் நான் குறைவுபடவும் செய்வீராக. முடிந்தால், நான் இறப்பதற்கு முன் அவரை எனக்குத் தெரியப்படுத்துவீராக. தாவீதைப் போல உமது சித்தத்தைச் செய்தவனாகவும், பணிநியமனத்தின் வரிசைப்படி: 'நியாயத்தீர்ப்பு மற்றும் ஜீவிய மாற்றத்தை அறிவி', என்று கூறினதை பிரசங்கித்தவனாகவும் நான் உமக்கு முன்பாக வர விரும்புகிறேன்.
9எனவே, நான் வேதாகமத்தை அறிவூட்டுவதற்கோ அல்லது ஜனங்ளை மீண்டும் வேதாகமத்திடம் கொண்டு செல்லவோ வரவில்லை. ஆனால் நீர் எனக்காக கொடுத்த நியமிக்கப்பட்ட என் காலத்திற்குரிய வேதாகம நிறைவேற்றுதலை கொண்டு வந்தேன், உம்முடைய பிள்ளைகள் அதைப் பெற்றுக்கொண்டனர். மேலும் ஜீவியமானது மாற்றம் பெறுவதையும் நான் கண்டேன். பெண்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அனைத்து பாலியல் பாவங்களையும், சில சமயங்களில் தங்கள் கணவர்களின் உண்மையான குழந்தை அல்லாத ஒரு குழந்தைக்காக கணவரிடம் அறிக்கை செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன்; இந்த சோதனையை எதிர்கொள்ளும் மற்ற பெண்களோ தங்கள் முந்தைய கோயில்கள், ஆலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு திரும்ப விரும்பினர்.
10ஆனால் உம்மில் விசுவாசம் கொண்ட எல்லாரையும் நீர் விடுவித்து குணமாக்கினீர். அவர்கள் கனவுகளில் துரத்தப்படுவதில்லை; அவர்கள் இனி தங்கள் கனவில் சாப்பிடுவதில்லை; அவர்கள் இனி தங்கள் கனவில் பறக்க மாட்டார்கள். அவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து மதம், பௌத்தம் மற்றும் யூத மதங்களில் இருந்தபோது செய்தது போல் சாத்தான் இனி அவர்களை தூக்கத்தில் அசையமுடியாதவாறு செய்வதில்லை. மேலும் இந்தச் செய்தியின் கீழ் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் எவரும் அதே கிருபையைப் பெற்றுக்கொள்ளட்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.
11ஓ தேவனே, வில்லியம் பிரான்ஹாமின் சந்ததியினரையும் சேர்த்து, சில முஸ்லிம்கள், பௌத்தர்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் என்னிடம் வந்துள்ளனர். மேலும் அத்தியாயத்திற்கு அத்தியாயம், வசனத்திற்கு வசனம், அவர்களுக்காக நீர் என்னிடம் கொடுத்த செய்தியை நான் அவர்களுக்குக் கொடுத்தேன், அவர்கள் எனக்கு செவிகொடுத்தார்கள். எனது முன்னோடிகளான தீர்க்கதரிசிகளுடைய காலத்தைப் போலவே நானும் என் தலைமுறையினருக்கான செய்தியைக் கொண்டு வந்தேன், அவர்கள் எனக்குச் செவிசாய்த்தனர்.
12யாரும் தனது துணையின் பிறப்புறுப்புகளில் தனது வாயை வைக்க கூடாது என்றும், ஒரு மனிதன் ஒருபோதும் தன் மனைவியை ஒரு மிருகத்தைப் போல் பின்னாலிருந்து அணுகக்கூடாது என்றும், உமது பெயரால் அவர்களிடம் சொன்னேன். அவர்கள்: ஆமென் என்று கூறினார்கள்.
13உமது பெயரால், நான் அவர்களிடம், மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் கடற்கரை அல்லது நீச்சல் குளத்தில் தன்னைத் தானே மூழ்கும் படி இறங்கினால், மறுநாள் வரை நாற்பது மீட்டர் சுற்றளவில் தண்ணீரானது அசுத்தமாயிருக்கும், அதில் தன்னை மூழ்கும் படி இறங்குகிறவன் சபிக்கப்பட்டவனாக அதிலிருந்து வெளிவருகிறான் என்றேன். அவர்கள்: ஆமென் என்றனர். நான் அவர்களிடம் சொன்ன அனைத்தையும், இரட்சிப்பின் காரணமாக அவர்கள் அதற்குக் செவி கொடுத்தனர்.
14இஸ்ரவேலின் தேவனே, நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில், மோசே என்னும் சரீரத்தில் இஸ்ரவேலின் நடுவே சஞ்சரித்தீர். இஸ்ரவேலை அவளது தாய்நாட்டில் நிலைநிறுத்தினீர், தேசங்களுக்கிடையில் உமது நடையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறீர், எனக்குப் பின்னர், மோசேயைப் போன்ற தீர்க்கதரிசிகளுடனும் உமது நடையைத் தொடர்வீர். மோசே எகிப்தில் இருந்தபோது, ஏசாயா 19 மற்றும் வேதாகமத்தின் பல பகுதிகளிலும், இன்று கறுப்பின ஜனமாக மாறியுள்ள பண்டைய எகிப்து உங்களுடைய ஜனங்களாக இருக்கக்கூடிய ஒரு காலம் வரும் என்று நீர் சொன்னீர். இவ்வாறு, அடிமைத்தனத்திற்கு விதிக்கப்பட்ட இந்த கறுப்பினத்திலிருந்து, நீர் ஒரு மோசேயை எழுப்பினீர், இதனால் பூமி முழுவதும் பிரகாசிக்கப்பட்டு, இரட்சிக்கப்படுவது போலவே, ஒரு நாள் இஸ்மவேலின் சந்ததியினர் உலகிற்கு ஒளியாக இருந்து தேசங்களுக்கு இரட்சிப்பை போதிப்பார்கள்.
15ஓ தேவனே, புறஜாதி தேசங்களின் காலம் அரேபிய நாடுகளுடன் முடிவடையும் வரை என்னைப் போன்ற உண்மையான தீர்க்கதரிசிகளுடன் விழித்து கொள்ளுதல்கள் இருக்கும் என்பதை நான் அறிவேன். வேதத்தில் உள்ளதைப் போன்ற தீர்க்கதரிசிகள் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, காங்கோ, கென்யா மற்றும் அங்கோலா மற்றும் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியா ஆகிய நாடுகளில் மீண்டும் நடப்பார்கள் என்பதை நான் அறிவேன். இஸ்ரவேல் சந்திக்கப்படுவதற்கு முன், நீர் இந்தியா மற்றும் ஆசியாவின் நிலங்களில் நடந்து செல்வீர், இமயமலையின் உச்சியில் தியானித்து, இந்தியாவில் எகிப்திய கடவுள்களை அவைகளை பின்வாங்கச் செய்து நியாயந்தீர்ப்பீர் என்பதையும் நான் அறிவேன்.
16ஓ தேவனே, நான் பூமியில் யாருடன் வாழ்ந்திருக்கிறேனோ அவர்களுக்கு நான் பெரிய நியாயாதிபதியாக இருப்பேன் என்பதையும், ஒரு நாள் என் அப்போஸ்தலர்களும் சீஷர்களும் அந்தந்த தேசங்களை நான் பிரசங்கித்த செய்தியைக் கொண்டு நியாயந்தீர்ப்பார்கள் என்பதையும் நான் அறிவேன். எனக்கு ஏன் யாருடனும், என் சொந்த பெற்றோருடனும் கூட எந்த தொடர்பும் இல்லை? ஏனென்றால் எல்லா மனுக்குலமும் எனது அதிகார வரம்பிற்கு உட்பட்டது. 1993 இன் இரண்டாவது தரிசனத்தில், என்னிடம் கூறப்பட்டது: "நியாயத்தீர்ப்பை அறிவி!". அதனால்தான், கடைசித் நியாயத்தீர்ப்பில் உமக்கு முன்பாக நான் அவர்களுக்கு நியாயாதிபதியாக இருப்பது போல் பூமியிலும் நான் நியாயாதிபதியாக இருக்கிறேன்.
17நான் பிரசங்கித்தவை அனைத்தும் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, கறுப்பின இனத்தின் தோற்றம் பற்றி பேசுகையில், ஒவ்வொரு கறுப்பின ஆபிரிக்கனின் இரத்தத்திலும் வெள்ளை மனிதர்களின் செல்கள் இருப்பதை நான் வெளிப்படுத்தினேன், அதனால்தான் நைஜீரியாவின் ஒரு கறுப்பின ஜோடி, 2010 ல் ஒரு வெள்ளை குழந்தையைப் பெற்றெடுத்தது. 1994 ஆம் ஆண்டில், கருப்பு இனத்தின் தோற்றம் குறித்த இந்த வெளிப்பாட்டை உறுதிப்படுத்தும் ஒரு நிகழ்வு எனது கிராமத்தில் நடந்தது. உண்மையில், எனது கிராமத்தைத் தாக்கிய பல துரதிர்ஷ்டங்களைத் தொடர்ந்து, அகாட்ஜே மொய்ஸ் என்பவர் கிராமம் மற்றும் ஆலயங்களுடன் ஒரு மிகப் பெரிய விழாவை ஏற்பாடு செய்தார்.
18அந்த விழாவின் நாளன்று, அகாட்ஜே மொய்ஸ் அங்கியின் பின்புறத்தில் எபிரெய வேதவாக்கியங்களுடன்கூடிய நீண்ட வெள்ளை அங்கியை அணிந்திருந்தார். அவர் யூத மதத்தின் மற்ற அடையாளங்களையும் கொண்டிருந்தார். லேவியராகமம் 14-ன்படி இரண்டு வெள்ளைப் புறாக்களைக் கொண்டு சில பானபலிகளையும், பலிகளையும் செலுத்தி, ஏழுமுறை தெளித்து, லேவியராகமம் 14ன்படி பரிகாரம் செய்தார். ஆனால் விழா முடிந்ததும், கிராமம் முழுவதும் சின்னம்மை நோய் தாக்கியது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சின்னம்மை பரவியிருந்தது, மற்றும் உடலில் பூசப்பட்ட வெண்ணிற களிமண்ணால்(white kaolin) மட்டுமே அரிப்பு நீங்கியது. மேலும் கிராமம் முழுவதும் வெள்ளை மனிதர்களாக காணப்பட்டனர். கருப்பு இனத்தின் சாபத்தை நான் மீண்டும் புரிந்து கொள்ள இது நடந்தது. எனவே இது மகத்தான வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளது.
19உதாரணமாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை வில்லியம் பிரான்ஹாமுக்கு வெளிப்படுத்த, இது வேதத்தில் உள்ள வசனங்களின் சில ஒப்பீடுகளின் மூலம் அல்ல, ஆனால் சில வானவில்கள் தோன்றி ஒரே ஒரு வானவில்லாக உருப்பெற்று ஒரு குரல் ஒலித்து மேலும்: "பழைய ஏற்பாட்டின் யேகோவாதான் புதிய ஏற்பாட்டின் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து" என்று சொன்னது. நீர் உமது தீர்க்கதரிசிகளுடனும் இப்படித்தான் நடந்து கொள்கிறீர்.
20ஓ கடவுளே, நமக்கு நன்மை செய்த அனைவரையும் நினைவுகூருவீராக. அபிட்ஜானில் ஒரு திறந்தவெளி பிரசங்கத்தின் போது, கோபமடைந்த மதவாதிகள் சகோதரர்களை அப்பால் துரத்தியபோது, சில கொள்ளைக்காரர்கள் வந்து மதவாதிகளை எதிர்த்து நின்று சகோதரர்களிடம்: "பிரசங்கம் செய்யுங்கள்! எங்கள் முன்பாக உங்களை யாரும் தொட மாட்டார்கள். காக்குவ் பிலிப்பு சிறையில் இருந்த போது எங்கள் நண்பராவார்" என்று சொன்னார்கள். மேலும் சகோதரர்கள் பிரசங்கித்தார்கள். கொல்கொதாவின் சிலுவையில் இருந்த கள்வனைப் போல அவர்களையும் நினைவில் வைப்பீராக.
21ஓ தேவனே, என் வார்த்தைக்கு செவிடாயிருந்த பூமியின் மேன்மையான மனிதர்களை நினைவில் வையும். நான் ஆப்பிரிக்க பிரபுக்கள் மற்றும் நாட்டுத் தலைவர்களிடம் பேசினேன், ஆனால் அவர்கள் யாரும் என் பேச்சைக் கேட்கவில்லை. ஆரோக்கியமும் பூமியின் பெருமைகளும் ஐசுவரியங்களும் அவர்களுக்கு பரலோகத்தின் கதவை அடைக்கின்றன.
22ஆகஸ்ட் 1744 இல், பிரான்சின் மன்னர் லூயிஸ் XV அவர்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டார். ஆகஸ்ட் 16 அன்று, வேதனையில் இருந்த அவர் சுயநினைவை இழந்தார். அவருக்கு சுயநினைவு திரும்பியதும், அவர் சொய்சன்ஸ் நகர பிஷப்பை ஆணையிட்டு வரவழைத்து அவரை நோக்கி: "என் தந்தையே! என் தந்தையே! இரக்கம் காட்டுங்கள், நான் நரகத்திற்குச் செல்ல விரும்பவில்லை" என்று கத்தினார். பிஷப் அவனுடைய வைப்பாட்டியை விலக்கி வைக்கவும் அவரது பாவங்களை வெளிப்படையாக பாவ அறிக்கை செய்யும்படியும் கூறினார். அவர் உடனே விரைவாக தனது வைப்பாட்டியை விலக்கி வைத்து வெளிப்படையான பாவ அறிக்கையும் செய்தார் அதன் பின்னர் கோமா நிலைக்கு சென்றார், ஆனால் அடுத்த நாள், ஆகஸ்ட் 17, அவர் கோமாவில் இருந்து குணமாகி வெளியே வந்தார். அவர் குணமடைந்த அற்புதத்தை பிரான்ஸ் முழுவதும் கொண்டாடியது. ஆனால் அவர் குணமடைந்தபோது, மன்னரின் நற்பெயருக்கு ஒருவர் மதிப்பளித்து அவரை கண்ணியத்துடன் இறக்க அனுமதிக்க வேண்டும் என்பதற்காக பிஷப் தன்னை அவமானப்படுத்தியதாக அவர் கண்டார். அவர் வைப்பாட்டியை மீண்டும் கொண்டு வந்தார். சோய்சன்ஸ் நகர பிஷப் பயந்து ஓடிப்போய் இருபது வருட நாடுகடத்தலுக்குப் பிறகு 1764 இல் பரிதாபமாக இறந்தார்.
23வெளிப்படையான பாவ அறிக்கையை மீறி யாராவது பரலோகத்திற்குச் சென்றால் நான் ஒரு பொய்யான தீர்க்கதரிசி என்று அர்த்தம் என்று பூமியின் குடிகளிடம் நான் சொன்னேன். பாவம் நேரிட்டால் யூதர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மோசே சொன்னபோது, மோசேயின் வார்த்தையின்படி ஜெபம் செய்யப்பட்டால் தவிர, தேவன் பரலோகத்தில் ஒரு ஜெபத்தைக் கேட்க மாட்டார்.
24கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் பலியான பிறகு, மத்தேயு 23:34 முதல் 35-ன் படி அவர் வாக்குத்தத்தம் பண்ணின தீர்க்கதரிசிகளை தவிர்த்து விட்டு இயேசுவை நம்புவதன் மூலம் யாரும் இரட்சிப்பைப் பெற்று கொள்ள முடியாது என்று நான் அவர்களிடம் சொன்னேன். மத்தேயு 16ல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர் யார் என்ற வெளிப்பாட்டின் மீதே சபை கட்டப்படும் என்று கூறினார். அதாவது, உங்கள் காலத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு தீர்க்கதரிசி மூலம் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்துவார், மேலும் இந்த தீர்க்கதரிசி ஜீவனுள்ள கடவுளின் குமாரனாகிய கிறிஸ்து என்பதை நீங்கள் பேதுருவைப் போல கண்டுகொள்ள வேண்டும்.
25இன்று, உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக, நான் நிறுவிய வெளிப்படையான பாவ அறிக்கையின் மூலமாக தவிர, கொல்கொதாவின் கிறிஸ்துவின் இரத்தத்தை நீங்கள் அடைய முடியாது. காக்குவ் பிலிப்புவாகிய, என்னைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டதும், அவர்கள் விசுவாசித்து, மீட்டளிப்பின் ஞானஸ்நானத்திற்குச் செல்ல வேண்டும், அது முதல், முழு சபைக்கு முன்பாகவும் எதிர்காலத்தில் தங்கள் பாவங்களை அறிக்கையிட வேண்டும் என்றும் நான் அவர்களிடம் சொன்னேன்.
26பூமியில் உள்ள அனைத்து வழிபாடுகளும் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை பிசாசு என்று நான் அவர்களிடம் சொன்னேன். யூத மதம் என்பது யூத பழக்கவழக்கங்கள் மற்றும் மதங்களின் தொகுப்பாகும். இஸ்லாம் என்பது அரேபிய பழக்கவழக்கங்கள் மற்றும் மதங்களின் தொகுப்பாகும். கிறிஸ்தவம் என்பது ஐரோப்பாவின் பழக்கவழக்கங்கள் மற்றும் மதங்களின் தொகுப்பாகும். அவைகள் அஞ்ஞான வழிபாடுகள்.
27யூதர்கள், அரேபியர்கள், ஆப்பிரிக்கர்கள், இந்துக்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொரு மக்களும் தங்கள் பழக்கவழக்கங்களையும் பாரம்பரியங்களையும் கொண்டிருந்தனர் ஆனால் இப்போது வரை, நான் பிரசங்கித்த அனைத்தையும் மீறி, இஸ்லாமும் கிறிஸ்தவமும் பில்லி சூனியத்தை விட சிறந்தவை அல்ல என்று ஆப்பிரிக்கர்களுக்குத் தெரியாது. மேலும், இப்போது வரை, ஆப்பிரிக்கர்கள் கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரான்ஹாமிஸ்ட் சபைகளின் இயேசு கிறிஸ்து, சைமன் கிம்பாங்கு (Simon Kimbangu) மற்றும் ஓசோபாவை(Oschoffa) விட பெரியவர் என்று நினைக்கிறார்கள்.
28கடவுளே, நீர் இறையாண்மை உடையவர். நீர் விரும்புகிறவனை உயர்த்துவதும் தாழ்த்துவதும் நீரே. எகிப்தை நிறுவிய கறுப்பின ஆப்பிரிக்கர்கள்தான் எகிப்தில் இருந்த வெள்ளையர்கள் என்பதை நீர் எனக்கு வெளிப்படுத்தினீர். அவர்கள் கொடூரமானவர்கள் மற்றும் பிரமிடுகளின் கட்டுமானத்தில் பூமியின் குடிகளை சித்திரவதை செய்தனர். அடிமைகள் அவர்கள் கைகளில் விலங்குகளைப் போல துன்புறுத்தப்பட்டு இறந்தனர்.
29ஓ தேவனே, நாங்கள் எகிப்தில் வெள்ளையர்களாக இருந்தபோது கறுப்பின ஆபிரிக்கர்களான எங்களை நீர் நேசித்தீர், மேலும், ஆதியாகமம் 43:32 இன் படி யூதருடன் சாப்பிடுவது எங்களுக்கு அருவருப்பாயிருக்கும் அளவுக்கு எங்கள் இருதயம் மிகவும் மேட்டிமையாயிருந்தது, ஆனால் இன்று அரேபியர்கள் மற்றும் மக்ரேபியர்களுக்கு கூட ஒரு கருப்பு ஆப்பிரிக்கனுடன் சாப்பிடுவது அல்லது திருமணம் செய்வது அருவருப்பானதாயிருக்கிறது. நாங்கள் எகிப்தில் வெள்ளையராக இருந்த போது பூமியின் பிற இனத்தவர்களுக்கு செய்த இகழ்ச்சியும், தீங்கும்தான் இன்று மற்றவர்கள் எங்களுக்கு செய்து வருகிறார்கள். பூமியின் மற்ற இனங்களை விட நாங்கள் தாழ்ந்தவர்களாகிவிட்டோம்.
30ஓ தேவனே, பாபிலோனின் சிங்காசனத்திலிருந்து, நேபுகாத்நேச்சாரின் பெருமையின் காரணமாக பாபிலோனின் மிகச் சிறியவனாக ஆக்கினீர். பூமியின் மிக உயர்ந்த பிரபுக்களில் இருந்து, யோபுவைச் சோதிப்பதற்காக அவனை பூமியில் மிகச் சிறியவனாக ஆக்கினீர். பூமியின் உயர்ந்த இனத்திலிருந்து, நீர் எங்களைத் தாழ்த்தியுள்ளீர். யோபு மற்றும் நேபுகாத்நேச்சரைப் போலவே, கருப்பு ஆப்பிரிக்காவின் உமது பிள்ளைகளாகிய எங்களுக்கு இதை செய்ததற்காக உமக்கு மகிமையை செலுத்துகிறோம்.
31ஓ தேவனே, ஐரோப்பாவானது ஆப்பிரிக்காவையும் அமெரிக்காவையும் ஆசியாவையும் கிறிஸ்தவமயமாக்கியுள்ளது என்பது, ஒருவர் வேறொருவரின் நாட்டின் எல்லை அல்லது கால்நடைகளைக் அரேபியர்களுக்கு எதிராக குறியீடு செய்வதாகும். அரேபியர்களும் இஸ்லாம் எனப்படும் தங்கள் பாரம்பரியங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் மூலம் அதையே செய்தனர். அரேபியர்களும் ஐரோப்பியர்களும் ஆப்பிரிக்கா, ஆசியா அல்லது அமெரிக்காவை இஸ்லாமியமயமாக்கியபோது அல்லது கிறிஸ்தவமயமாக்கியபோது, அது நித்திய வாழ்வைக் கொடுப்பதற்காக அல்ல, ஆனால் காலனித்துவ நோக்கத்திற்காக. இந்தியா நம்மைக் காலனித்துவப்படுத்தினால், ஆப்பிரிக்கா இந்துமதமாகவோ அல்லது பௌத்தமாகவோ இருந்திருக்கும், இந்து மதம் அல்லது பௌத்தத்தின் மூலம் தான் நமக்கு நித்திய வாழ்வு கிடைத்தது என்றும் நம்பியிருக்கும், மேல் சட்டைகளுடன் இருக்கும் நீங்கள் காண்கின்ற இந்த தற்போதைய ஆப்பிரிக்க தீர்க்கதரிசிகளோ, சில சாதுக்களைப் போல அல்லது புத்தமதத்தின் மறுபிறவிகளாக இருந்து கொண்டு மேலும் அதே அற்புதங்களையும் நிகழ்த்துவார்கள். ஏப்ரல் 24, 1993 அன்று நீர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கினேன், அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் அவர்கள் அதை விரும்பாததற்கு காரணம் அது அவர்கள் உம்மை விரும்பாததுதான்.
32அவர்களின் கோயில்கள், சபைகள், மசூதிகள் மற்றும் யூத வழிபாட்டு தலங்களில் அவர்கள் செய்யும் அனைத்திற்கும், படைத்தவரான கடவுளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நான் அவர்களிடம் கூறியுள்ளேன். உயிருள்ள தீர்க்கதரிசியால் அது கடவுளின் சொந்தக் கைகளால் செய்யப்படாத வரை, அவர் அதை வாந்தி பண்ணுவார். கடவுளுக்கு முன்பாக, ஒரு ஆசாரியன், பாஸ்டர், இமாம் அல்லது ரபீயின் சிறந்த பிரசங்கம், சாத்தானின் கழிவுநீர் தொட்டியிலிருந்து வரும் தண்ணீரை போல கேட்பவர்கள் மீது பீச்சியடிக்கிறது. அவர்களின் கோயில்கள், ஆலயங்கள் மற்றும் மசூதிகளில் அவர்கள் செய்யும் அனைத்தையும், யூதர்கள் மோசேக்குப் பிறகு சிறந்தவற்றையாக உருவாக்கினர், ஆனால் கடவுள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நான் அவர்களுக்கு விளக்கினேன். நான் அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கினேன், அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் அவர்கள் அதை விரும்பவில்லை என்பது அது உம்மை விரும்புவதில்லை என்பதுதான்.
33பூமியின் குடிகளுக்கு நான் எல்லாவற்றையும் விளக்கினேன், அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் அவர்கள் விரும்பாதது உம்மைத்தான். அவர்கள் என்னை நிராகரித்து, "மஹோமத் மற்றும் பிரான்ஹாம் இறந்துவிட்டனர், ஆனால் அவர்களின் செய்திகள் உயிருடன் உள்ளன" என்று கூறுகிறார்கள். காக்குவ் பிலிப்புவாகிய நான் 1972 இல் பிறந்தது முதல் ஹூப்ஹூட் பாய்க்னி 1993 இல் அவர் இறக்கும் வரை, எனது ஜனாதிபதியாக இருந்தார். ஆனால் எனக்கு சொல்லுங்கள், 1994 இல் பிறந்த ஒரு நபர் ஹூப்ஹூட்டின் பேச்சுகளை கேட்கும் போது அவர் இந்நபருக்கு ஜனாதிபதியாக இருக்க முடியுமா?
34632 இல் இறந்த மஹோமத் எந்த ஆண்டில் இன்று உயிருடன் இருக்கும் முஸ்லிம்களின் தீர்க்கதரிசி ஆனார்? அவர்கள் பதிலளிப்பதில்லை, ஆனால் அவர்கள் இன்னும் முஸ்லீம்களாகவே உள்ளனர். நான் கேட்டேன், 33ஆம் ஆண்டு பூமியை விட்டுப் போன கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று உயிருடன் இருக்கும் கிறிஸ்தவர்களின் தீர்க்கதரிசியாக எந்த ஆண்டில் இருந்தார்? அவர்கள் பதிலளிப்பதில்லை, ஆனாலும் அவர்கள் மனந்திரும்புவதில்லை. நான் கேட்டேன், சார்லஸ் ரஸ்ஸல், ஜோசப் ஸ்மித் அல்லது வில்லியம் பிரான்ஹாம் ஆகியோரை உரிமை கோருபவர்களுக்கு எந்த ஆண்டு அவர்கள் தீர்க்கதரிசியாக இருந்தார்கள்?
35மரித்த தீர்க்கதரிசியின் செய்தியைப் பின்பற்றி ஒருவன் இரட்சிக்கப்படுவது எப்படி? அது எப்படி சாத்தியமாகும்? மேலும் பிரிவினைகளோடு இருப்பதுதான் மரித்த தீர்க்கதரிசியை பின்பற்ற முடியாது என்பதற்கு ஆதாரம் அல்லவா? மேலும் பல வழக்குகளில், அவர்கள் தங்கள் பிரிவினையை தீர்க்க காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் முறையிட்டனர். தீர்க்கதரிசி உயிருடன் இருந்தால் இது சாத்தியமாகுமா? அவர்கள் பதிலளிப்பதில்லை, ஆனால் அவர்கள் மனந்திரும்புவதுமில்லை, இது அவர்களுக்கு எதுவும் சொல்வதில்லை, ஏனெனில் இரட்சிப்பானது பூமியில் அவர்கள் வாழ்க்கையின் முன்னுரிமையாக இல்லை.
36ஓ தேவனே, சர்ப்பத்துடன் ஏவாள் செய்த பாலியல் பாவத்தின் மூலம் மனித சரீரத்தை எடுத்துக் கொண்ட மிருகங்கள் பூமியில் எங்களிடையே உள்ளன. கறுப்பினத்தவருக்கு ஒரு கறுப்பு தீர்க்கதரிசி இருக்கும் அளவிற்கு நீர் கிருபையை வழங்கியிருந்தால், அரேபியர்கள் மற்றும் இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து மதம், பௌத்தம் மற்றும் யூத மதத்தின் உறுப்பினர்களுக்கு இரட்சிப்பைக் காண அவர்களின் மனதைத் திறப்பதன் மூலம் உம்மால் கிருபை அளிக்க முடியும்.
37ஜீவ விருட்சத்திற்குப் போகும் வழியை அங்குமிங்கும் சுழன்று கொண்டிருக்கும் பட்டயத்துடன் கடவுளின் கேருபீன்கள் காத்துக் கொண்டு இருப்பதையும், மேலும் பூமியில் பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோலைக் கொண்டிருப்பவரைக் கடந்து செல்லாமல், கிறிஸ்துவின் இரத்தத்தை யாரும் அடைய முடியாது என்றும் நான் அறிவித்தேன். திறவுகோலை வைத்திருந்த பேதுருவைக் கடந்து செல்லாமல் கொர்னேலியுவால் கிறிஸ்துவின் இரத்தத்தை அடைய முடியவில்லை, இன்று, காக்குவ் பிலிப்புவாகிய என்னைக் கடந்து செல்லாமல் யாராலும் கிறிஸ்துவின் இரத்தத்தை அடைய முடியாது. எந்த தூதனும், எந்த அபிஷேகமும் என்னைக் கடந்து செல்லாமல் அவர்களை கொல்கொதாவுக்கு அழைத்துச் செல்ல முடியாது. ஒரு நாள் அவர்கள் என்னை அறிந்துகொள்வார்களா என்றும் மற்றும் நான் அவர்களின் இரட்சிப்புக்காக வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் வார்த்தை என்பதையும் அறிந்துகொள்வார்களா என்றும் எனக்கு தெரியாது.
38ஓ கடவுளே, நாங்கள் இங்கே நரகத்தில் இருக்கிறோம். இங்கே ஜீவியம் என்பது பள்ளி, பிறகு வேலை, பிறகு திருமணம், பிறகு மரணம் வரை செல்வமாக இருக்கிறது. இரட்சிப்பு யாருடைய முன்னுரிமையாகவும் இல்லை. நான் உம்மை உலகுக்கு வெளிப்படுத்தினேன், ஆனால் அவர்கள் உம்மைப் பற்றி கேட்பதற்கு விரும்பவில்லை. நான், அவர்களுடைய தீர்க்கதரிசி, நான் பேசும்போது, அவர்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து நியாயந்தீர்க்கிறார்கள், என் வார்த்தைகளில் கூட பிழைகளைக் காண்கிறார்கள். அவர்கள் இறந்த தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைப் படித்து, அவற்றில் இரட்சிப்பைக் காணலாம் என்று நம்புகிறார்கள்.
39அவர்கள் என்னிடம், "உங்களுடன் நாங்கள் விவாதம் செய்ய விரும்புகிறோம்" என்றார்கள். சரி, ஆனால் உங்கள் நாட்டில், கசாப்பு கடைக்காரர்களுடன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் விவாதம் நடத்துகிறார்களா? நீங்களும் தீர்க்கதரிசி செய்தியாளர்களா? நான் தீர்க்கதரிசிக்குரிய எனது அழைப்பையும் பணிநியமணத்தையும் கொடுக்கும்போது, நீங்கள் உங்களுடையதையும் கொடுப்பீர்களா? நான் எனது செய்தியையும் உலகில் அதன் முன்னேற்றத்தையும் காட்டும்போது, உங்களுடையதையும் காட்டூவீர்களா?
40நான் கடவுளை முகமுகமாய் பார்த்தேன், கர்த்தருடைய தூதனை பார்த்தேன், 1993ல் என் காதுகளால் கடவுளின் குரலைக் கேட்டேன். நீங்களும் அவரைப் பார்த்தீர்களா, அவர் குரலை கேட்டீர்களா? ஏப்ரல் 1993 இல் ஒரு தரிசனத்தில் பூமியின் குடிகள் மீதான நியாயத்தீர்ப்பை அறிவிக்கும்படி கடவுள் என்னிடம் கூறினார். உங்களைத்தான், கடவுள் உங்களிடம் செய்யும்படி என்ன பணி கொடுத்தார், எப்போது கொடுத்தார்? ஒரு நாய் உண்மையில் கடவுளின் தூதனை நோக்கி குரைக்க முடியும் என்பதை அவர்கள் என்னிடம் நடந்து கொள்ளும் விதத்தில் நான் புரிந்துகொள்கிறேன்.
41மேலும் நான், ஒரு தீர்க்கதரிசி, அவர்கள் என்னிடம், "ஏன் நீங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் ஆலயத்தில் இருப்பதில்லை?" என்கிறார்கள். இருப்பினும், ஒரு தீர்க்கதரிசி கடவுளுடைய ஜனங்களுக்கு ஒரு இறைவார்த்தை கொண்டிருக்கும் போது ஜனங்களிடம் செல்கிறார். வேதத்தில், தீர்க்கதரிசிகள் பாதிரியார்களுடன் யூத ஜெப ஆலயங்களில் ஆராதனைகளில் கலந்து கொண்டார்களா? அப்போஸ்தலர்கள் திருச்சபையின் தலைவர்களாக இருக்கவில்லையா? அவர்கள் என்னிடம், "இந்தியாவில் உள்ள கறுப்பர்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?". அனைத்து மொழிகளும் இனக்குழுக்களும் பாபேல் கோபுரத்திலிருந்து வந்தவை அல்ல, ஆனால் அவை ஒரே சாபத்தின் விளைவாகும். மேலும் இந்தியாவின் கறுப்பர்கள் என்பது எகிப்திய கடவுள்களை வழிபட்டதன் கனியாகும். அவர்களிடம் கேள்விகள் உள்ளன, கேள்விகள் மற்றும் கேள்விகளே உள்ளன.
42மேலும் சிலர், தங்கள் இரட்சிப்புக்காக என்னை நம்புவதற்குப் பதிலாக, அவர்கள் என் வார்த்தைகளை எடுத்துக்கொண்டு தீர்க்கதரிசி செய்தியாளர்கள் போல் பாவனை செய்கிறார்கள். மேலும், அவர்களை உம்மிடம் திரும்பக் கொண்டுவரும் முயற்சியின் போது, அவர்கள் எங்களில் பலரை அடித்து, காயப்படுத்தி, சிறையில் அடைத்தனர். அவர்கள் எங்களில் பலரை கத்தியால் குத்தினார்கள். உமது ஊழியக்காரன் எம்பாலோ அதன் காரணமாக இறந்துவிட்டார், குத்தப்பட்ட ஒரு போதகர் மறுநாள் கோமாவிலிருந்து வெளியே வந்தார். உமது வார்த்தையினிமித்தம் நாங்கள் குத்தப்படுகிறோம், கொல்லப்படுகிறோம், சிறையில் அடைக்கப்படுகிறோம். அவர்கள் அனைவரும் எனக்கு எதிராக ஒருமனதாக இருக்கிறார்கள் மற்றும் என்னை இகழ்ச்சியுடன் பார்க்கிறார்கள். எனக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளுக்கு எதிராகத் தங்கள் பிதாக்கள் செய்ததைப் போல அவர்கள் நடந்துகொள்கிறார்கள், ஆனால் நாங்கள் இறுதிவரை உறுதியாக இருப்போம்.
43ஓ கடவுளே, இங்கே பூமியில், இது சாத்தானின் பரதீசு ஆகும். எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள், என் மரணம் அவர்களுக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை நான் அறிவேன். அவர்கள் அனைவரும் உமக்கு எதிரானவர்கள். அவர்கள் முஸ்லிம்கள், ரோசிக்ரூசியன்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் யூதர்கள் மட்டுமாக உள்ளனர்.
44அவர்களை உம்மிடம் திரும்பக் கொண்டுவர நான் எல்லாவற்றையும் செய்தேன், ஆனால் யாரும் உம்மை விரும்பவில்லை. பணமே அவர்களின் கடவுள். அவர்கள் மனித உடலைக் கொண்ட பேய்கள், அவர்களில் யாரும் உம்மை விரும்பவில்லை! அவர்கள் பைபிளைப் படிக்காதது போல் இருக்கிறது. அவர்கள் மதங்கள், மற்றும் புனித புத்தகங்கள் மற்றும் மரித்த தீர்க்கதரிசிகள் மற்றும் பேய்களை நம்புகிறார்கள் மற்றும் விரும்புகிறார்கள். இரட்சிப்புக்காக, அவர்களிடம் பேசக்கூடிய உம்மை தெரிந்து கொள்வதற்கு பதிலாக அவர்கள் ஏற்கனவே இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து மதம், பௌத்தம் மற்றும் யூத மதங்களைத் தெரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே தங்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து விட்டு அவர்கள்: "கடவுளே, நான் உம்மிடம் என்னையே ஒப்படைக்கிறேன்! என்னை வழிநடத்து!" என்று கூறுகிறார்கள். அவர்கள் அனைவரும் நயவஞ்சகர்கள்.
45அவர்கள் என்னை நிராகரிக்கிறார்கள், மேலும் வெள்ளிக்கிழமைகளில், ஓய்வுநாட்களில் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அவர்கள் தங்கள் கோயில்கள், சபைகள், மசூதிகள் மற்றும் ஜெப ஆலயங்களில் யாரிடம் ஜெபிக்கிறார்கள் மற்றும் யாரை ஆராதிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு செய்தியைக் கொண்டு வந்திருப்பதை அவர்கள் காண்கிறார்கள் ஆனால் அவர்கள்: "இனி தீர்க்கதரிசிகளும் செய்திகளும் இருக்கக்கூடாது" என்று கூறுகிறார்கள். ஆனால் வானத்தில் இருந்து மீன்கள் விழுந்தால் அவைகள் மீன்களாக இருக்க கூடாதா? பாலைவனத்தில் பனி இருந்தால் என்ன செய்வது? அது பனியாக இருக்கக்கூடாதா? கடவுளே, மனிதகுலத்தை உம்மிடம் வழிநடத்த நான் எல்லாவற்றையும் செய்தேன், ஆனால், எரேமியா 44:15 முதல் 16 இல் உள்ள யூதர்களைப் போலவே, அவர்கள் அனைவரும் தானாக முன்வந்து மறுத்துவிட்டு, இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து மதம், பௌத்தம் மற்றும் யூத மதங்களில் சாத்தானுடன் இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் உம்மை விரும்பவில்லை.
46பழைய ஐரோப்பிய பழக்கவழக்கங்களுக்காகவும், நாசரேத்தின் இயேசு கிறிஸ்து என்ற கற்பனையான பிசாசுக்காகவும் உலகைக் கைப்பற்றும் போது கிறிஸ்தவர்கள் மில்லியன் கணக்கான பிசாசுகளாவர். பழைய அரேபிய பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளுக்காகவும், அவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்த மஹோமத்துக்காகவும், அல்லா என்ற பிசாசுக்காகவும் உலகைக் கைப்பற்றும் போது முஸ்லிம்கள் மில்லியன் கணக்கான பிசாசுகள். பௌத்தர்கள் தாங்கள் பிறப்பதற்கு முன்பே மரித்துவிட்ட புத்தருக்காக உலகைக் கைப்பற்றும் போது அவர்கள் லட்சக்கணக்கான பிசாசுகள். இந்து தெய்வங்களுக்காக உலகை கைப்பற்றும் போது இந்துக்கள் மில்லியன் கணக்கான பிசாசுகள். அட்வென்டிஸ்டுகள் அவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்த எலன் வைட்டிற்காக உலகைக் கைப்பற்றியதில் இருபது மில்லியனுக்கும் அதிகமான பிசாசுகள்.
47அவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்த ஜோசப் ஸ்மித் உலகைக் கைப்பற்றும் போது மோர்மான்கள் பதினாறு மில்லியனுக்கும் அதிகமான பிசாசுகள். அவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்த சார்லஸ் ரஸ்ஸலுக்காக உலகைக் கைப்பற்றியபோது யெகோவாவின் சாட்சிகள் இருபது மில்லியனுக்கும் அதிகமான பிசாசுகளாக இருக்கிறார்கள். அவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்த வில்லியம் பிரான்ஹாமுக்காக உலகைக் கைப்பற்றும் போது பிரான்ஹாமிஸ்டுகள் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பிசாசுகளாக உள்ளனர். அவர்களில் யாரும் உம்மை விரும்பவில்லை. அவர்கள் விரும்புவது புனித நூல்கள் மற்றும் மதங்கள். இது மனித உடலில் உள்ள பிசாசுகளாகும்.
48கடவுளே, இரட்சிப்பு ஒரு மர்மமானது. தாமார் மற்றும் ராகாப் கர்த்தராகிய இயேசுவின் கொள்ளுப் பாட்டிகள் என்றால்; நோவா மது அருந்தியது உண்மை என்றால்; மார்ட்டின் லூதர் யூதர்கள் மீதான தனது எதிர்மறையான நிலைப்பாட்டை கொண்டது உண்மையாக இருந்தால்; ஜான் வெஸ்லி பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரில் தெளிப்பு ஞானஸ்நானம் கொடுத்தது உண்மை என்றால்; வில்லியம் பிரான்ஹாம் சுவிசேஷ குருமார்கள் மற்றும் 900 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற சாத்தானிய ஜிம் ஜோன்ஸ் போன்ற போதகர்களுடன் தோழமை கொண்டது உண்மை என்றால், நான் என்ன சொல்ல முடியும்? இரட்சிப்பு ஒரு மர்மம், நீர் மனதை திறக்கவில்லை என்றால் அதை எந்த மனிதனாலும் புரிந்து கொள்ள முடியாது.
49பூமியிலுள்ள போதகர்களும் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் நான் அவர்களைப் பிரதிஷ்டை செய்யாத போதிலும் அவர்கள் கடவுளுக்குச் சேவை செய்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள். அவர்கள் பெரிய அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்கிறார்கள், முழு உலகமும் அவர்களைப் போற்றுகிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களைக் கொண்டுள்ளனர், அவர்கள் சிறந்த ஊக்கமளிக்கும் பிரசங்கங்களைப் போதிக்கிறார்கள், ஆனால் அவை அனைத்தும் கடந்து போகும், காலப்போக்கில் மறந்துவிடும். ஆனால் நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, பதினேழு ஆண்டுகளில், இது 135 வது முறையாக நான் பேசுகிறேன், ஆனால் என் வார்த்தைகள் மற்றும் செயல்கள் பூமியிலும் பரலோகத்திலும் என்றென்றும் நிலைத்திருக்கும். அவர்களின் இரட்சிப்புக்காக நான் பரலோகத்தின் வாசலாக இருக்கும்போது அவர்கள் அனைவரும் என்னை நிராகரிக்கிறார்கள்.
50அவர்கள் கோயில்களிலும், சபைகளிலும், மசூதிகளிலும், ஜெப ஆலயங்களிலும் பிரசங்கித்து கொண்டிருந்தாலும், அவர்கள் என்னை நிராகரிக்கின்றனர். அவர்கள் அனைவரும் என்னை நிராகரிக்கிறார்கள், ஆனால் இன்று கொர்னேலியு உயிருடன் இருந்திருந்தால், அவரை தூதன் என்னிடமாய் வரச் சொல்வார். அவர்கள் தேவதூதர்களைப் போல் பாடுகிறார்கள்; அவர்கள் வெளிப்பாடுகளை கொடுக்கிறார்கள்; அவர்கள் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்கிறார்கள், ஆனாலும் அவர்கள் என்னை நிராகரிக்கிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியானவர் என்று கூறுகிறார்கள், அவர்கள் நித்திய ஜீவன் மற்றும் பரதீஸைப் பற்றி பேசுகிறார்கள், ஆனாலும் அவர்கள் என்னை நிராகரித்துவிட்டனர்.
51அவர்கள் வெளிப்பாட்டிற்கு தலைவணங்குவதில்லை. அவர்கள் உம்மை விரும்பவில்லை. இந்த தீர்க்கதரிசி வானத்திலிருந்து ஒரு தூதனைப் போல இறங்கி வந்தாலும், உமது சார்பாக தீர்க்கதரிசிகள் வருவதை அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் ஏற்கனவே தங்கள் கடவுள்கள், அவர்களின் மதங்கள், கடவுளின் வார்த்தைகள் மற்றும் அவர்களின் இரட்சிப்புக்கான திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களையும் வைத்திருக்கிறார்கள். பூமியில் அவர்களுக்கு உம்முடன் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், பரலோகத்தில் உம்முடன் எப்படித் தொடர்பு கொள்வார்கள்?
52அவர்கள் விலங்குகளைப் போல செயல்படுவதை நான் பார்க்கும்போது, நான் பயத்தால் ஆட்கொள்ளப்படுகிறேன், ஏனென்றால் ஏப்ரல் 24, 1993 இல்லாதிருந்தால் நானும் அவர்களைப் போலவே இருந்திருப்பேன், என் முடிவு நரகமாக இருந்திருக்கும்.
53ஓ தேவனே, ஜலப்பிரளயத்திற்கு முன், நீர் உம்மை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், நோவா அவருடைய காலத்து மதத்தினர்களிடமிருந்து வேறுபட்டிருக்க முடியாது. எரியும் முட்புதரில் நீர் உம்மை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் மோசே அவருடைய காலத்து மதத்தினர்களிடமிருந்து வேறுபட்டிருக்க முடியாது. தமஸ்குவுக்கு செல்லும் வழியில் நீர் உம்மை பவுலுக்கு வெளிப்படுத்தியிருக்காவிட்டால், பவுல் அவருடைய காலத்தின் மதவாதிகளிடமிருந்து வேறுபட்டிருக்க முடியாது. நீர் அவர்களுக்கு உம்மை வெளிப்படுத்தியிருக்கவில்லை என்றால் எந்தத் தீர்க்கதரிசியும் அவர்களுடைய காலத்து மதத்தினவர்களில் இருந்து வேறுபட்டிருக்க மாட்டார்கள்.
54ஓ தேவனே, நீர் இல்லாமல், மனிதன் ஒன்றுமில்லை. நான் உம்முடைய உத்வேகத்தின் கீழ் இருக்கும்போது, உங்கள் முன்னிலையில், நான் ஒரு கடவுளைப் போலவே, பாவம் மற்றும் பலவீனம் இல்லாமல், நான் மனிதகுலத்திற்கும் படைப்புக்கும் மேலாக என்னைப் பார்க்கிறேன், நான் பரதீசைப் பார்க்கிறேன், உமது வார்த்தையை என்னுள் அடக்க முடிவதில்லை. ஆனால் உத்வேகமானது என்னை விட்டு வெளியேறும்போது, நான் மீண்டும் ஒரு சாதாரண மனிதனாக மாறுகிறேன், அதனால் நான் பயத்தில் இருக்கிறேன், எல்லா பலமும் என்னை விட்டு வெளியேறி, நான் பாலூட்டப்படாத குழந்தையைப் போல அமர்ந்திருக்கிறேன்.
55என் பிதாக்களாகிய தீர்க்கதரிசிகளின் தேவனே, இந்த தலைமுறைக்கு நீர் செய்த இந்த பெரிய நன்மைக்காக நன்றி, உமக்கு சித்தமானால், ஆப்பிரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள நிலப்பரப்புகளில் நடமாடுவதற்கு என்னை அனுமதியுங்கள், ஒரு கையில் விக்டோரியா ஏரியையும் மறு கையில் டானா ஏரியையும் பிடித்தபடி இரு கரங்களையும் பரலோகத்திற்கு உயர்த்தி எகிப்தை நோக்கி நடனமாடும் தீர்க்கதரிசன பாதையில் அவர்களின் சகோதரியான நைல் நதியுடன் அவர்களின் தண்ணீர்கள் மற்றும் சிற்றோடைகள் மற்றும் ஆறுகள் சந்தோஷமடையட்டும். அவர்களின் தண்ணீர்கள் இந்த களிகூருதலை எகிப்தின் செங்கடல் வரை இடம் விட்டு இடம் கடத்தட்டும், மேலும் நிலங்களும் மரங்களும் விலங்குகளும் பறவைகளும் ஒன்றாக மகிழ்ச்சியடையட்டும். என் காலத்திலும், பூமி முழுவதிலுமுள்ள மனுஷரின் குமாரரும் குமாரத்திகளும், முதல் முறையாக, பழங்காலத்தை போலவே வேதாகமத்தில் உள்ளதைப் போன்ற ஒரு உண்மையான தீர்க்கதரிசி பூமியில் நடமாடுகிறார் என்பதை தங்கள் கண்களால் பார்ப்பார்களாக. உமது அடிமையான காக்குவ் பிலிப்புவாகிய, நான் உமது பெயரான இயேசு கிறிஸ்துவிடம் கேட்கிறேன். ஆமென்.