



Kacou 136 (Kc.136) : இஸ்லாம் மற்றும் யூத மதம் பற்றிய தேவனின் வார்த்தைகள்
ஜூன் 16, 2019 அன்று தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு உறையாற்றிய தேவனின் வார்த்தைகள்
1 நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, ஜூன் 16, 2019 ஞாயிற்றுக்கிழமை காலை என் வீட்டிலிருந்து இஸ்லாம் மற்றும் யூத மதத்திற்கு நான் உரையாற்றிய தேவனின் வார்த்தைகள்.
2 அன்று காலை, நான் தனியாக இருந்தேன், எனது கடந்தகால வாழ்க்கையையும், 1993-ல் தேவதூதர்கள் என்னிடம் எப்படி வந்தார்கள் என்பதையும் தியானித்துக் கொண்டிருந்தேன். நான் சக்கர வண்டியைத் தள்ளிக்கொண்டிருந்தேன், சாப்பிட ஏதாவது ஒன்றைப் பெறுவதற்காக கட்டுமான தளங்களில் சிமெண்ட் பரிமாறிக் கொண்டிருந்தேன்.
3 எங்கள் குடும்ப வீட்டில் ஒரே ஒரு ராந்தல் விளக்கு மட்டுமே இருந்தது, எங்களுக்கு எண்ணெய் இல்லாதபோது, என் அம்மா ஒரு துணியால் ஒரு வர்த்தி நெய்து பாமாயிலை ஒரு குவளைக்குள் நனைத்து அதை ஏற்றி வைப்பார், அது எங்களுக்கு ஒரு விளக்காக சேவை செய்தது. எங்கள் வீட்டிற்கு ஒரு கதவு இல்லை, இரவில், விலங்குகள் மற்றும் பாம்புகள் வீட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காக குந்து மனை வைக்கப்பட்டன.
4 நான் பிறந்து முற்றிலுமாக ஏழ்மையில் வளர்ந்தேன், இப்போது என் கடவுள் மீதான என் வைராக்கியமானது அனைவருக்கும் எதிராக எனக்கு பயிற்சி அளித்து என்னை தனிமையில் விட்டுவிட்டது. இனிமேல், நான் எனது கிராமத்தின் சுற்றளவில் வாழ வேண்டும். பொதுக்கூட்டத்திற்கு போக எனக்கு உரிமை இல்லை. நான் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கடவுளைப் பற்றி பேச எனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
5 என்னை வெறுப்பவர்கள் என்னை அவமதிக்கும் போது, நான் இடைநீக்கம் செய்யப்பட்ட கைதி என்பதால் நான் ஒன்றும் சொல்லவில்லை, எனவே எனக்கு குடியுரிமை உரிமைகள் இல்லை, ஒருவருடன் பிரச்சினை செய்ய எனக்கு உரிமை இல்லை. ஒரு முன்னெச்சரிக்கையாக, நான் எல்லோரிடமிருந்தும் விலகி இருக்கிறேன். என் உலகம் இல்லாத இந்த உலகில் இந்த பூமியின் மேல் எவ்வளவு காலம் நான் மீதம் வைத்திருக்கின்றேன்? எனக்குத் தெரியாது.
6 மெக்கா மற்றும் எருசலேமையும், ஒரு தரிசனத்தில் நான் ஆவியில் கண்ட போது இன்னுமாக நான் தியானித்து கொண்டிருக்கின்றேன். ஏன் இந்த தரிசனம்? என்று நான் கேட்டேன். "இஸ்லாம் மற்றும் யூத மதத்திற்கு எதிராக சத்தமிடு" என்ற ஒரு ஏவுதல் என்னிடம் வந்து இப்படி கூறினது! அதற்கு நான்: என் ஆண்டவரே, நான் ஒரு கழுகு, ஆனால் நான் ஒரு கூண்டில் இருக்கிறேன். நான் எருசலேமை குறித்து நினைத்துக் கொண்டிருந்தேன், அது தீர்க்கதரிசிகளின் பள்ளத்தாக்கு. எருசலேம்: அது இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூத மதத்தின் நகரம். நான் சோகமாக இருந்தேன், நான் என் பேனாவை எடுத்துக்கொண்டேன், யாரோ ஒருவர் என் மூலம் சிந்தித்து பேசுவது போல் எழுத ஆரம்பித்தேன்.
7 இஸ்ரவேலே, நான் உன்னைப் பார்க்கும்போது, எனக்குள்ளாக உத்வேகம் நிரம்பி வழிகிறது. ஆனால் என் வார்த்தையை நீ ஏன் புரிந்து கொள்வதில்லை? ஒ இஸ்ரவேலே, நீ ஏற்கனவே கடவுளை அறிந்திருந்தால், ஓரினச்சேர்க்கையாளர்களின் அணிவகுப்புகளையும், கிறிஸ்தவர்களின் யாத்திரைகளையும் உன் நிலத்தில் ஏன் விட்டுவிடுகிறாய்? நானே உன்னுடைய உதவி, நான் உன்னிடம் சத்தமிடுகிறேன் ஆனால் என் சத்தத்தைக் கேட்க உனக்கு செவி இல்லை.
8 அக்கினி ஸ்தம்பத்தை மோசே ஒரே ஒருவன் மாத்திரம் கண்டதைப் போல, நான் ஒரே ஒருவன் மட்டுமே நட்சத்திரத்தைப் பார்க்கிறேன், ஆனால் நீ என்னைப் பின்பற்றாவிட்டால் நீ வழியை எப்படி அறிவாய்? நான் ஒருவன் மாத்திரமே பாலைவனத்தில் வழியை அறிந்தவன், ஆனால் நீ என்னை நிராகரித்தாய். நானே உன்னுடைய நட்சத்திரம், என் பாதபடிகளின் தடயங்கள் உன்னுடைய வழி, ஆனால் என்னைப் பார்க்க உனக்கு கண்கள் இல்லை.
9 உலக ஆதிக்கம் அமெரிக்காவை விட்டு கிழக்கே செல்லும் என்று நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்.அமெரிக்காவுடனான உன்னுடைய வேசித்தனத்தின் நாற்றம் பரலோகத்தை அடைந்தது, தேவன் உன்னை தண்டிப்பார், உன்னுடைய காதலனை அவனுடைய முழு பலத்தையும் கொள்ளையடிப்பார். தேவன் உன்னுடைய காதலனின் ஆதிக்கத்தை பறித்துவிட்டு அதை வேறொரு தேசத்திற்குக் கொடுக்கும்போது நீ என்ன செய்வாய்? நீ சீனாவுடன் வேசித்தனம் செய்யப் போகிறாயா? அரபு நாடுகளுடன் சென்று உன்னை வேசி தனத்தில் ஈடுபடுத்தி கொள்வாயா?
10 வேசியான இஸ்ரவேலே, நான் உனக்கு சொல்கிறேன், நீ உன்னுடைய ஆடையை உயர்த்தி அரேபியர்களுக்கு முன்னால் செல்லும் நாள் வரும், ஆனால் அரேபியர்கள் தங்களை உன்னுடன் வேசித்தனம் செய்ய விரும்ப மாட்டார்கள். அரபு தேசம் உன்னுடைய ஒப்பனையை நீக்கி, தலையை மொட்டையடித்து உன்னை கழுவி, உன்னுடைய காதலர்களின் தீட்டுக்களில் இருந்து தூய்மைப்படுத்தும். அரபு உன்னை அலங்கரித்து உன்னை காலனித்துவமாக்கி ஒழுக்கத்தை கற்பிக்கும். எவ்விதமாக இத்தாலிய மாஃபியா வாத்திக்கானின் தூபத்தின் நாற்றத்தின் விளைவோ அவ்விதமாக ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உன்னுடைய வேசித்தனத்தின் நாற்றத்தின் விளைவு.
11 தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான், ஓரின சேர்க்கையாளர்களின் கொடியோடு தாவீதின் நட்சத்திரத்தை உனக்கு கொடியாக நான் தருகிறேன், மேலும் தன்னுடைய வாலையே சாப்பிடும் பாம்பை உனக்கு சின்னத்திற்காக தருகிறேன். உன்னுடன் அமெரிக்காவை பெரிய சாத்தானைக் கொண்டிருக்கிறாய் ஆனால் காசா எப்போதும் உங்களுக்கு எதிராக கட்டுப்படுத்தப்பட்ட நித்தியத்தின் வில்லாக இருக்கும். உன்னுடைய வேசிதனத்தின் கொழுத்த பசுக்களை சாப்பிடு, ஆனால் பாலஸ்தீனியர்கள் மற்றும் ஹெஸ்பொல்லா இறைவனின் ஊழியர்களாக இருப்பதால் உன்னுடைய எடையை இழப்பாய்.
12 கோலன் உயரங்கள் வைத்து இஸ்ரேலின் இறையாண்மையை அமெரிக்கா அங்கீகரித்தது, அணு ஆயுதங்கள், பொருளாதார, இராணுவ மற்றும் இராஜதந்திர உதவிகள் மற்றும் மென்மை மற்றும் இஸ்ரவேலுடன் இதுபோன்ற ஒப்பந்தங்களில் அமெரிக்கா கையெழுத்திட்டது. இவைகளெல்லாம் வேசிதனத்தின் பரிசுகள்.
13 எருசலேம் இஸ்ரவேலின் தலைநகரம் என்று அமெரிக்கா டிசம்பர் 06, 2017 அன்று அறிவிக்கிறது, அமெரிக்கா தனது தூதரகத்தை டெல் அவிவிலிருந்து எருசலேமுக்கு மே 14, 2018 அன்று மாற்றியது, இவைகளெல்லாம் வேசிதனத்தின் பரிசுகள். அதற்கு ஈடாக, உன்னுடைய காதலன் உன்னை மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஒரு நாடாக, ஓரினச்சேர்க்கையாளர்களின் அணிவகுப்புகள் மற்றும் கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், எவாஞ்சலிக்கல் மற்றும் பிரன்ஹாமிஸ்ட் தலைவர்கள் செல்லும் உயர்ந்த இடமாக மாற்றியுள்ளான்.
14 ஒ இஸ்ரவேலே, புலம்பலின் சுவரானது கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஒரு தீர்க்கதரிசி அல்லது மத்தியஸ்தர் அல்ல. புலம்பலின் சுவர் மற்றும் மெக்காவில் உள்ள காபா ஆகியவை சாத்தானிய சிலைகள். கடவுள் ஒரு சுவர் அல்லது பாறை மூலம் பேசுவதில்லை, ஆனால் தீர்க்கதரிசிகள் மூலம் பேசுகிறார். ஒரு முறையாவது புலம்பல் சுவரில் நம்பிக்கை வைக்கும்படி தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலிடம் கேட்டார்களா? உங்களுடன் பேசும் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான், ஒவ்வொரு முறையும் நான் ஒரு சுவருக்கு எதிராக சிறுநீர் கழிக்கும் போதெல்லாம், இந்த சுவர் எருசலேமில் இருக்கும் புலம்பல்களின் சுவர் என்று நான் கற்பனை செய்கிறேன்.
15 உங்கள் தோராவை மறுபடியும் வாசியுங்கள், மேலும் நீங்கள் ஒருபோதும் ஒரு தீர்க்கதரிசியை அடையாளம் காணும் திறனைக் கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள், மேலும் 2000 ஆண்டுகளை தேசங்களிடையே கழித்த பின்னர் நீங்கள் ஒரு தீர்க்கதரிசியை அடையாளங் கண்டுகொள்வீர்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். நான் உன்னுடைய அடிமை, நீ என்னுடைய எஜமான் ஆனால் நீ செவிடாகவும் குருடாகவும் இருக்கிறாய்.நான் உன்னுடைய கண்களாகவும், வாயாகவும் இருக்கும் படியாகவும், உன்னுடைய கோலை பிடித்து உன் படிகளை வழிநடத்த அனுப்பப்பட்டேன்.
16 ஒ இஸ்ரவேலே, ஒரு பயணத்தில் கணவன் தன் மனைவிக்கு வார்த்தைகளை அனுப்புவதை போல, இதோ, அதோனாய் உங்களுக்கு வார்த்தைகளை அனுப்புகிறார், ஆனால் ஒரு வேசி தன் கணவரின் குரலை அறியமாட்டாள். ஆப்பிரிக்கா, மாக்ரெப், லெபனான் ஆகிய நாடுகளிலிருந்து நீ வார்த்தைகளைப் பெறுவாய், ஆனால் நீ உன்னுடைய காதலர்களிடம் இப்படியாக: "இவை என் கணவரின் வார்த்தைகள் அல்ல என்று சொல்வாய்."
17 ஓ இஸ்ரவேலே, இவ்வளவு ஒழுக்கக்கேடு கொண்ட ஒரு ராணியை நான் பார்த்ததில்லை. நீ மீண்டுமாக உன்னுடைய நிலத்தை விட்டு வெளியேருவாய் மற்றும் ஜெர்மானியர்கள் உன்னிடம் இவ்விதமாக கூறுவார்கள்: "படுகொலை செய்யப்பட்ட தேசத்தில் நீ மீண்டுமாக இங்கு என்ன பார்க்க வருகிறாய்? நீ வெட்கப்பட்டு போவாய். ஒ இஸ்ரவேலே, மீன்கள் தண்ணீரில் வாழ்கின்றன, பறவைகள் காற்றில் வாழ்கின்றன, ஆடுகள் பூமியில் வாழ்கின்றன, ஆனால் உன்னுடைய வாசஸ்தலம் உனக்கு தெரியாது.
18 அமெரிக்கா தனது எஜமானி இஸ்ரேலின் பயனற்ற தேவைகளுக்காக கடனில் சிக்கியுள்ளது. இஸ்ரவேல் வேசித்தன பணத்தை தங்கும் விடுதிகளில் மீண்டும் முதலீடு செய்து வருகிறது, இன்னும் அமெரிக்காவிடம் அதைக் கொடுக்காமலும் நியாயப்படுத்தாமலும் கேட்கிறது. அதற்கு ஈடாக, ஜெருசலேமில் தேவாலயங்களும் ஓரினச்சேர்க்கையாளர்களும் அணிவகுத்துச் சென்றனர். ஒரு வேசி தனது காதலர்களின் பைகளில் தேடுவதைப் போல் இஸ்ரவேல் அமெரிக்காவின் ரகசிய குறிப்பேடுகளைத் தேடுகிறது.
19 ஒ இஸ்ரவேலே, நீ எவ்வளவு மோசமானவள். திபெத் அல்லது காஷ்மீரில் உள்ளவர்கள் போன்றவர்கள் கஷ்டப்படுகையில், யாரும் அவர்களைப் பார்ப்பதில்லை, ஆனால் நீ வேதாகமத்தின் நிலம் என்பதால் நீ நேசிக்கப்படுகிறாய். இஸ்ரவேலே, நீ தேசங்கள் மத்தியில் ஒன்றுமில்லை. உன்னிடம் தங்கம் இல்லை, வைரமும் இல்லை, எண்ணெயும் இல்லை, ஆனால் யெகோவாவின் காரணமாகவே உலகம் முழுவதும் உன்னை நேசிக்கிறது, அதற்கு பதிலாக நீ மதிப்புமிக்க காதலர்களைக் கொண்டிருப்பதற்கு வேதாகமம் உனக்கு கொடுத்த இழிநிலையைப் பயன்படுத்தினாய்.
20 உன்னுடைய நிலத்தில் பாலஸ்தீனிய குண்டுகள் வெடிக்கும் ஒவ்வொன்றும் அது தேவனுடைய சத்தமாக உன்னிடத்தில் , “இஸ்ரவேலே, மனந்திரும்பு"! என்கின்றது. ஆனால் நீ மனந்திரும்ப மறுக்கிறாய். நீ ஒருவேலை நூறு பாலஸ்தீனியர்களைக் கொள்ளலாம். அதோனாய் உனக்கு எதிராக பத்தாயிரம் பாலஸ்தீனியர்களின் இதயங்களை எழும்பும்படியாக பலப்படுத்துவார்.
21 ஒ இஸ்ரவேலே, ஓரினச்சேர்க்கையாளர்கள் மெக்காவில் அணிவகுக்கவில்லை, ஆனால் எருசலேமில் ஏன் ?மோசேயும் இஸ்ரவேலும் எகிப்திலிருந்து வெளியே வரும்போது அதை நம்ப மாட்டார்கள். ஆபிரகாமும் இஸ்ரவேல் ராஜாக்களும் அதை நம்ப மாட்டார்கள். 2000 ஆண்டுகளாக தேவன் உங்கள் நிலத்தை பறிக்காமல் இருந்திருந்தால், நீங்கள் ஹாலிவுட்டை விட மோசமாக இருந்திருப்பீர்கள், வத்திக்கான் நகரமானது எருசலேமில் இருந்திருக்கும்.
22 ஐரோப்பியர்களும் மற்றும் அமெரிக்கர்களாகிய நீங்கள் இஸ்ரவேலில் கூடி யூதர்களாக நடித்துக்கொண்டிருக்கிறீர்களா? நியாயாதிபதிகள் 6-ல் அரேபியர்களை எதிர்கொண் போது, உண்மையான இஸ்ரவேல் என்ன செய்தது? அவர்கள் அமெரிக்காவிடம் ஆயுதங்களைக் கேட்டார்களா?
23 நியாயாதிபதிகள் 6: 6 முதல் 8 வரை என்ன சொல்கிறது: "இப்படியாக மீதியானியர்களாலே இஸ்ரவேலர்கள் மிகவும் பெலவீனப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள். இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினாலே கர்த்தரை நோக்கி முறையிட்டபோது, கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார்; "நீயும் அதே இஸ்ரவேலா? யூதர்கள் தீர்க்கதரிசிகளைக் கொல்வது உண்மைதான், ஆனால் அவர்களைக் கொல்வதற்கு முன்பு அவர்கள் தீர்க்கதரிசிகளுக்கு செவி கொடுக்கிறார்கள். நீங்களோ, நீங்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்களாக இருக்கிறீர்கள்.
24 மேலும் இஸ்லாம் மதம், இந்து மதம், புத்த மதம், கிறிஸ்துவ மதம் அல்லது யூத மதத்தின் உறுப்பினர்களே, நான் பெந்தேகோஸ்தே அல்லது எகிப்தின் மந்திரவாதி அல்ல, ஆனால் ஒரு தீர்க்கதரிசி. நான் அற்புதங்களைச் செய்கிறேன், ஆனால் நான் ஒரு தீர்க்கதரிசி, ஆகவே நான் உங்களிடம் வார்த்தையுடன் வருகிறேன். ஆதியிலே வார்த்தை இருந்தது. சாத்தானின் சந்ததி ஐரோப்பாவிலிருந்து உலகின் மூலைகளுக்குச் சென்றபோது, ஆப்பிரிக்க மாந்திரீக பொருட்களுக்கு மாற்றாக சிலுவைகள் மற்றும் சிலைகளுடன் இருந்தது, ஆனால் நான் தேவனுடைய வார்த்தைகளுடன் உங்களிடம் வருகிறேன்.
25 ஏப்ரல் 24, 1993 அன்று, நான் ஒரு அஞ்ஞானியாக இருந்தேன், வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவர் என்னை ஒரு தரிசனத்துக்குள்ளாக கொண்டு சென்றார் இதோ, இருள் பூமியின் முழு மேற்பரப்பையும் மூடியது மற்றும் வானத்தில் ஒரு நட்சத்திரம் தோன்றியது. மேலும் அந்த நட்சத்திரம் இறங்கும்போது, பூமியெங்கும் ஒளி பிரகாசித்தது ஏனெனில் அந்த நட்சத்திரத்தின் ஒளியால் பூமியின் மீதெங்கும் வெளிச்சமிருந்தது. மேலும் அந்த நட்சத்திரமானது ஒரு தூதன் மற்றும் ஆட்டுக்குட்டி என்று நான் கண்டேன், மற்றும் அவற்றின் பிரகாசம் பூமியியை பிரகாசித்தது. ஆட்டுக்குட்டி என்னிடம் பேசியது, இந்த வார்த்தை பூமியை ஒளிரச் செய்வதற்காக அவருடைய வார்த்தை எனக்குள் ஒரு பொருளை போன்று வந்தது. நான் இந்த ஒளியின் உறை, முக்காடு மற்றும் வாய். இன்று, இந்த ஒளியின் வெடிப்புகள் வானத்திலிருந்து இறங்கும்போது செய்ததைப் போலவே பூமியின் எல்லா தேசங்களையும் அடைந்துள்ளன.
26 மேலும் 2002 முதல், என்னில் இருந்து இந்த வார்த்தை பேசுகிறது. இந்த ஒளி வானத்திலிருந்து இறங்கி என்னில் வசிப்பது மனிதகுலத்தின் இரட்சிப்புக்காக பூமியை ஒளிரூட்டுகிறது. ஆதாம் முதற்கெகாண்டு தீர்க்கதரிசிகள் மூலம் பேசிய அந்த ஒளி தான் எனக்குள் இருந்து அதே குரலால் பேசுகிறது. மேலும் ரபீக்களே, சாதுக்களே, பாஸ்டர்களே, இமாம்களே, நீங்கள் ஒளியின் புத்திரர்களாக இருந்தால், பூமி அனைத்தையும் என்னிடம் வழிநடத்துவீர்கள். சரீரத்தை மாற்றும் அதே உயிருள்ள கடவுள் தான். ஒரு தொலைபேசி வேலை செய்வதை நிறுத்தும்போது, தேவன் சிப்பை எடுத்து ஒரு புதிய தொலைபேசியில் வைப்பார், இப்போது அது ஒரு ஆப்பிரிக்க தொலைபேசி ஆனால் அது அதே எண் மற்றும் அதே குரல் மற்றும் அதே கடவுள்.
27 நான் ஒரு கிறிஸ்தவ தீர்க்கதரிசி அல்ல, நான் ஒருபோதும் ஒரு கிறிஸ்தவ தீர்க்கதரிசியாக இருந்ததில்லை. ஒருபோதும் இல்லை. இந்த தோல் நிறமும் பிறப்பால் ஆப்பிரிக்க உச்சரிப்பும் இருப்பதைப் போல பிறப்பால் ஒரு கிறிஸ்தவர் உச்சரிப்பு மட்டுமே உள்ளது. நான் எல்லா தேசங்களுக்கும், இனங்களுக்கும், பூமியின் மொழிகளுக்குமான தீர்க்கதரிசி. யுத உச்சரிப்புகளைத் தவிர்க்க, யோவான் ஸ்நானகனும் பவுலும் எபிரேய தீர்க்கதரிசிகளும் பாலைவனத்திற்கு கடந்துவிட்டார்கள். அதனால்தான் நான் ஒரு இஸ்லாமிய சுற்றுப்புறத்தில் இஸ்லாமிய குடும்பத்துடன் வாழ்ந்தேன். நான் கிறிஸ்தவர்களைப் போலவே இஸ்லாமியர்களையும் நேசித்தேன்.
28 நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு முஸ்லீம் மனிதர் என் தந்தையைப் போல இருந்தார். அவர் தனது இடத்தில் என்னை வரவேற்றபோது அவர் ஏற்கனவே பார்வையற்றவராக இருந்தார், என் குரலின் மூலமே அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார். நான் அவர்களுடைய மொழியைப் பேசினேன், ஏனென்றால் என்னைக் கவனித்துக்கொண்ட அவருடைய மனைவிகளில் ஒருவர் பிரெஞ்சு மொழியை பேசவில்லை. ஆனால் நான் ஒரு கிறிஸ்தவனோ அல்லது இஸ்லாமியனோ அல்ல, என் படிகளை வழிநடத்துவது வேதாகமமோ அல்லது குரானோ அல்ல. என்னை விசுவாசித்தவர்கள் கிறிஸ்தவர்களாக மாறாமல், தங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை விசுவாசித்தார்கள். ஒரு புத்தகமோ அல்லது சடலமோ ஒரு தீர்க்கதரிசியாக அல்லது ஜீவனுள்ள மனுஷனுக்கு வழிகாட்டியாக இருக்க முடியாது.
29 தோரா உங்களை ஒரு பக்தியுள்ள யூதராக்கலாம். வேதாகமம் உங்களை ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவராக்கலாம். குர்ரான் உங்களை ஒரு பக்தியுள்ள முஸ்லிமாக்கலாம். பகவத் கீதை உங்களை ஒரு பக்தியுள்ள இந்துவாக்கலாம், ஆனால் இரட்சிக்கப்படுவதற்கு, ஜீவனுள்ள தேவன் உங்கள் காலத்தில் அனுப்புகிற தீர்க்கதரிசியை விசுவாசிப்பதற்கு நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள், நானே அந்த தீர்க்கதரிசி, நான் உங்களுடன் பேசுகிறேன்.
30 நியாயத்தீர்ப்பில், நோவா தோன்றும்போது, அங்கே அவனை அடையாளம் கண்டுகொள்கிறவர்களும், எவர்களுடன் அவன் வாழ்ந்தானோ அவர்களுடைய தீர்க்கதரிசியாக அவன் இருந்தபடியால் அவர்களும் அங்கே இருப்பார்கள். ஆனால் நீங்கள் மஹொமெதை அடையாளம் கண்டுகொள்வீர்களா? மோசே தோன்றும்போது, அங்கே அவனை அடையாளம் கண்டுகொள்கிறவர்களும், எவர்களுடன் அவன் வாழ்ந்தானோ அவர்களுடைய தீர்க்கதரிசியாக அவன் இருந்தபடியால் அவர்களும் அங்கே இருப்பார்கள். மேலும் நான் தோன்றும்போது, உங்களுக்கு தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாகவும் உங்களுடன் வாழ்ந்தவராகவும் நான் இருக்கிறபடியால், நீங்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வீர்கள். ஆனால் நீங்கள் மஹொமெதை அடையாளம் கண்டுகொள்வீர்களா?
31 கடந்த காலத்தில் மோசேயின் உயரம், குரல், தோற்றம் ஆகியவற்றை அறிந்தவர்கள் இருந்ததைப் போலவே இன்று, என் உயரம், என் தோற்றம், என் குரல் உங்களுக்குத் தெரியும்; முஹம்மதுவின் உயரம், தோற்றம், குரல், ஆகியவற்றை அறிந்தவர்கள் அவருடன் வாழ்ந்தவர்கள். ஆனால் கடவுள் உங்களுக்கு அனுப்பிய தீர்க்கதரிசியான என்னை நீங்கள் நிராகரித்தீர்கள். மேலும் பூமியில் நான் உங்களை குற்றவாளிகளாக தீர்த்ததைப்போலவே, தேவனுக்கு முன்பாகவும் அவருடைய பரிசுத்த தேவதூதர்களுக்கும் முன்பாகவும், நீங்கள் இன்ன தீர்க்கதரிசிகளை சேர்ந்தவர்களென்று நீங்கள் கூறுகிற தீர்க்கதரிசிகளுக்கு முன்பாகவும் நான் உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பேன். உங்கள் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் ஜெப ஆலயங்கள் சாத்தானிய விடுதிகளாக மட்டுமே உள்ளன.
32 கிறிஸ்தவமானது இருளின் இராஜ்ஜியமாக இருக்கின்றது. அவை எல்லா மதங்களையும் விட மோசமானது. மதங்கள் மிகவும் பேய்த்தனமானது ஆகவே யோவான் ஸ்நானகன் ஆசாரியனான சகரியா வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. மதங்கள் அவனுக்குக் கற்பித்த அனைத்தையும் மறக்க பவுல் அரேபியாவின் பாலைவனத்தில் சென்று பதினான்கு ஆண்டுகள் கழிக்க வேண்டியிருந்தது. இன்று நீங்கள் என்னை நிராகரித்தால், அது மதங்களால் தான்.
33 பூமியில் தேவனுடைய எதிரிகளாக மதங்களும் அவற்றின் தலைவர்களும் இருக்கின்றார்கள். இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூத மதம் ஆகியவை சாத்தானியத்தின் முழுமையாக இருக்கினறது. இவை சாத்தானின் மூன்று பண்புகளாகும். யூத மதம் உங்களுக்கு மேலே இருக்கும் பிதாவாகிய சாத்தான். இஸ்லாம் மதம் உங்கள் மத்தியில் உள்ள சாத்தான், கிறிஸ்தவ மதம் என்பது சாத்தான் உங்களுக்குள் இருந்து அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்கிறதாக இருக்கிறது.
34 தரிசனத்திற்குப் பிறகு நான் கிறிஸ்தவர்களிடம் சென்றேன், அது ஒரு பாவம். சாத்தான்தான் என்னை கிறிஸ்தவத்தை நோக்கித் தள்ளினான். ஆயினும்கூட, தேவாலயங்களில் வேதாகம வசனங்களைப் படிக்கும்போது, நான் எழுந்து நிற்கவில்லை, இன்று போலவே நான் வேதாகமத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்கும் போது யாரும் எழுந்து நிற்க வேண்டிய வேண்டியதில்லை. கிறிஸ்தவ தலைவர்கள் பிசாசுகளாக இருக்கிறார்கள்.
35 ஒரு தரிசனத்தில், ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள், சுவிசேஷகர்கள் மற்றும் பூமியின் பாஸ்டர்களைக் கண்டேன். அவர்களின் சரீரம் மனிதர்களின் உடல்கள் ஆனால் அவற்றின் தலைகள் வெவ்வேறு விலங்குகளின் தலைகளாக இருந்தன. அவர்கள் ஒரு ஊர்வலம் சென்றார்கள் மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் இரு கைகளிலும் தங்களுக்கு முன்பாக உயர்த்தியபடி ஒரு பெரிய சிலுவையை வைத்திருந்தார்கள், அவர்கள் கத்தோலிக்க வழிபாட்டு முறைகளைப் போலவே அதனுடன் நகர்ந்தார்கள், பலிபீடத்திலிருந்து தூபத்தின் புகை உயர்ந்தது. அவர்கள் மெதுவாக நகர்ந்தனர் மற்றும் அவர்களின் தலைகள் வெவ்வேறு விலங்கின் தலைகளாக இருந்தது.அவர்களுக்கு முன்னால் இவ்விதமாக : "இயேசு கிறிஸ்துவே கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறார்" என்று எழுதப்பட்டிருந்தது.
36 அதன்பிறகு எனக்கு ஒரு மிக மோசமான சொப்பனம் இருந்தது: நான் கண்களை உயர்த்தினேன், இதோ, வானத்திலே கிழக்கு நோக்கி ஒரு பெரிய போப் இருந்தான். அவர் வைத்திருந்த ஒரு சிலுவையில் என்னை அடிக்க விரும்பினார்கள், நான் விழித்தேன். அவர்கள் அனைவரும் பிசாசுகள். ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிஷேசக அல்லது பிரன்ஹாமிஸ்ட், சில உணவுக்காக ஜெபிக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபித்தாலும் நான் அதை சாப்பிடுவதில்லை.
37 யூதனாக, முஸ்லீமாக, இந்துவாக அல்லது கிறிஸ்தவனாக இருப்பது ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதைப் போன்றது, மேலும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் ஜெப ஆலயங்களில் அவர்கள் கூடிவருவது கடவுளுக்கு முன்பாக ஓரின சேர்க்கையாளர்களின் அணிவகுப்பு போன்றதாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களால் கொல்லப்படும்போது, அது அரசியல் அல்லது இனக் கொலைகள் போன்றது, அவர்கள் ஒரு மதத்திற்காக இறந்ததால் அவர்களுக்கு பரலோகம் செல்ல அவரகளுக்கு உரிமை கொடுக்கவில்லை. அவர்களின் புனித புத்தகத்தின் வியாக்கியானத்தில், அவர்கள் அனைவரும் பொய்யர்கள். நீங்கள் ஒரு தீர்க்கதரிசியாகவோ அல்லது அங்கு எழுதப்பட்ட உண்மைகளுக்கு சாட்சியாகவோ இல்லாதபோது, வேதாகமத்திலோ அல்லது குரானிலோ எழுதப்பட்டதை எவ்வாறு பாதுகாக்க அல்லது வியாக்கியானிக்க முடியும் ?
38 உங்களுடன் பேசுகிற நான், என்னுடைய பிறப்பின் வேலையில் தேவதூதர்கள் பாடியதாகக் கூறப்படுகிறது.இன்னும் உயிருடன் இருக்கும் சாட்சிகள் மின்னல்கள் மற்றும் தீப்பொறிகள் மற்றும் மெழுகுவர்த்தி போன்ற வெளிச்சத்தை கண்டனர், மேலும் அவர்கள் மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் வானத்தில் மெல்லிசைகளைக் கேட்க முடிந்தது, மக்கள் எல்லா திசைகளிலும் ஓடினார்கள், சிலர் தரையில் விழுந்து அதை தொடர்ந்து பின்வரும் நாட்களில் ஆராதித்தார்கள், மக்கள் தங்களுடன் விக்கிரகங்களுடன் வந்து அதை எரித்து மதம் மாறினார்கள். ஒரு செய்தித்தாள் அதைப் பற்றிப் பேசியது, அதை என்னால் பாதுகாக்க முடியாது ஏனெனில் நான் ஒரு குழந்தையாக இருந்தேன் மேலும் அருங்காட்சியகங்களில் இருக்க வேண்டிய பழைய புத்தகங்களான வேதாகமத்தையும் மற்றும் குரானையும், பழைய புத்தகங்களையும் எவ்வாறு பாதுகாப்பேன்?
39 ஆனால் 1993-ஆம் ஆண்டில், நான் பாலைவனத்தில் நின்றேன், பல தேவதூதர்கள் தோன்றி வெண்மையான மேகங்களை உருவாக்கினார்கள், மேகங்களில் மேலே பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்தது: " வாழ்கையின் மாற்றத்தையும் நியாயத் தீர்ப்பையும் திட்டமாக அறிவி". நீங்கள் என்னை நிராகரிக்கலாம், ஆனால் கடைசி நியாயத்தீர்ப்பில் நான் உங்களுக்கு நீதிபதியாக இருப்பேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். என் வாழ்நாள் முழுவதும், நான் உலகத்திலிருந்து விலகி ஜீவித்தேன். நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் எப்போதும் என்னிடம் இவ்விதமாக சொன்ன ஒரு உள்ளான சத்தத்தின் கைதியாக இருந்தேன்: "நீ இதைச் செய்தால், நியாயத்தீர்ப்பில் அவர்கள் இதைச் சொல்வார்கள். நியாயத்தீர்ப்பில் அவர்கள் இதைச் சொல்லாதபடி இதைச் செய் ".
40 இஸ்லாம், இந்து மதம், புத்தமதம், கிறித்துவ மதம் மற்றும் யூத மதத்தின் உறுப்பினர்களே, நீங்கள் தீர்க்கதரிசிகளின் புத்திர்களாக இருந்தால், நீங்கள் என்னை எதிர்த்துப் போராட மாட்டீர்கள், ஆனால் 2 இராஜாக்கள் 9-ன் புத்திரர்களைப் போல நீங்கள் என்னிடம் வருவீர்கள். தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசா விற்கு முன்னே சென்று அவனை பணிந்துகொண்டார்கள். ஆனால் நீங்கள் நரகத்திற்கு தீர்மானிக்கப்பட்ட பெருமையுள்ள ஜனங்கள்.
41 ரபீக்களே, இமாம்களே, பாஸ்டர்களே மற்றும் தீர்க்கதரிசிகளே, நீங்கள் ஒருபோதும் கடவுளின் தரிசனத்தைக் கண்டதில்லை, மேலும் நான் பேசும்போது, நீங்களும் பேசுகிறீர்கள், இருப்பினும், ஒரு நாள் நீங்கள் என் முன் நியாயத்தீர்ப்பில் தோன்றுவீர்கள். காட்டில் உள்ள விலங்குகளைப் போல, நீங்கள் எழுந்து, "நான் ஒரு இமாம், நான் ஒரு பாஸ்டர், நான் ஒரு அப்போஸ்தலன், நான் ஒரு ரபீ, ..." என்று கூறுவீர்கள். சரி, ஆனால் கடவுள் உங்களை எந்த தீர்க்கதரிசி மூலம் நிறுவினார்? உங்களுடைய நாடுகளில், எவனாவது ஒருவன் எழுந்து நின்று தன்னை ஒரு மந்திரியாக நிறுவிக் கொண்டால், ஜனாதிபதி ஒப்புக்கொள்வாரா?
42 இன்றைக்கு உயிரோடிருக்கிறவர்களே, எந்த இடத்தில், எந்த ஆண்டில் மோசே, புத்தன், கிருஷ்ணன், இயேசு மற்றும் மஹொமெத் ஆகியோர் உங்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தார்கள்? உங்களிடம் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளதா? நீங்கள் யூதர்களாக, முஸ்லீம்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருப்பதினால் அவர்கள் உங்களுடைய தீர்க்கதரிசிகளா? நான் தோராவை வாசித்து ஓய்வுநாளை ஆசரித்து, ஜெபங்களையும், சுத்தீகரிப்புகளையும் கடைபிடித்தால், இந்த 2019-ஆம் ஆண்டில் மோசே எனது தீர்க்கதரிசி ஆவாரா?
43 தளபதி டி கோல் அவர்களின் பழைய சொற்பொழிவுகளை பிரான்ஸ் நாடு தொலைகாட்சியில் மறுஒளிபரப்பு செய்யத்துவங்கினமாத்திரத்தில் அவர் ஜனாதிபதியாகிவிடுவாரா? நீங்கள் வேதாகமத்தை அல்லது குர்ஆனை அல்லது வேதங்களை அல்லது பகவத் கீதையை வாசித்தபோதிலும், நீங்கள் மிகுதியாக ஜெபித்தபோதிலும், நீங்கள் மிகுதியாக உபவாசித்தபோதிலும், உங்கள் சொப்பனங்களில் நீங்கள் துரத்தப்படாமலிருக்கிறீர்களா? உங்கள் சொப்பனங்களில் நீங்கள் சாப்பிடாமலிருக்கிறீர்களா, உங்கள் தூக்கத்தில் உங்களை சாத்தான் அசையவிடாதபடிக்கு செய்கிறதில்லையா? உங்கள் சொப்பனங்களில் நீங்கள் பாலியல் செயல்களில் ஈடுபடாமலிருக்கிறீர்களா? இவற்றுடன் நீங்கள் எந்த பரதீஸுக்குச் செல்லப்போகிறீர்கள்?
44 மதங்களைப் பின்பற்றுங்கள், ஆனால் இந்த தலைமுறையில் உங்களிடையே உள்ள தேவனுடைய எல்லா பிள்ளைகளும் நித்திய ஜீவனுக்காக என்னிடம் வருவார்கள். ஏப்ரல் 24, 1993-ன் தரிசனத்தில், பூமியின் அனைத்து நாடுகளிலிருந்தும், இனங்களிலிருந்தும், மதங்களிலிருந்தும் ஒரு கூட்டம் என்னிடம் வருவதைக் கண்டேன், அவர்கள், “நாங்கள் தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் பார்க்கவில்லை. செம்மறியாட்டுக்குட்டி மொழிந்த வார்த்தைகளை நாங்கள் கேட்கவில்லை, ஆனால் அவை யாவற்றையும் முழுமையாக விசுவாசிக்கிறோம் என்றார்கள் ". இந்த வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறின. பரலோகத்திற்கென்று நிர்ணயிக்கப்பட்டவர்கள் மற்றும் தரிசனத்தின் கூட்டத்தில் இருந்தவர்கள் என்னிடம் வருகிறார்கள்.
45 எல்லா தேசங்களிலிருந்தும் புருஷர்களும் ஸ்திரீகளும், பாஷைக்காரர்களும் மதங்கள் மற்றும் இனங்களில் இருந்து விசுவாசிக்கிறார்கள். ஜூன் மாதத்தில், போட்ஸ்வானா, நிகரகுவா மற்றும் கோஸ்டாரிகாவைச் சேர்ந்த முதல் விசுவாசிகள் ஞானஸ்நானம் பெற்றனர், சாம்பியா மற்றும் பொலிவியாவைச் சேர்ந்த பல விசுவாசிகள் ஞானஸ்நானம் பெற அப்போஸ்தலர்களை அனுப்பும்படி என்னிடம் கேட்டார்கள். நியாத்தீர்ப்பில் நான் ஒவ்வொரு தேசத்தின் பரிசுத்தவான்களுடன் முன்னே வருவேன் மேலும் நீங்கள் எந்த தீர்க்கதரிசியின் குழுவில் இருப்பீர்கள்?
46 நீங்கள் இஸ்லாம், இந்து மதம், புத்தமதம், கிறித்துவ மதம் அல்லது யூத மதத்தில் உறுப்பினராக இருந்தாலும், உங்களுடன் பேசுகிற காக்குவ் பிலிப்புவாகிய நான், உங்களைப் போன்ற ஒரு மனிதன் என்பதை நான் அறிவேன், ஆனால் நான் இந்த தலைமுறையில் கடவுளின் தெரிந்துக்கொள்ளபட்டவர்களை முத்தரிக்க பரலோகத்திலிருந்து வந்த தூதன். நான் யார் என்பதைப் புரிந்துகொள்ள வேதாகமத்தில் உள்ள சீமோன் பேதுரு போன்று உங்கள் கண்களைத் திறக்கும்படி ஒவ்வொரு நாளும் நான் கடவுளிடம் கெஞ்சுகிறேன்.
47 சீமோன் பேதுரு தனது எஜமானராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி, "நீர் எங்கள் ரபி, நீர் கிறிஸ்து, ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்" என்றான். மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவனை நோக்கி: நீ பேதுருவாக இருக்கிறாய், இந்த வெளிப்பாட்டின் பாறையின் மேல் நான் என்னுடைய சபையை கட்டுவேன்". பேதுருவின் இந்த அறிக்கையானது பாறையாக இருந்தது மற்றும் இது கர்த்தராகிய இயேசுவின் காலத்தில் நடந்த அனைத்து வெளிப்பாடுகளின் பாறையின் உயர்ந்த உச்சியாக இருந்தது.
48 1545-ஆம் ஆண்டில் பாறை மற்றும் வெளிப்பாட்டின் உயர்ந்த உச்சமானது இவ்வாறு "நீர் மார்ட்டின் லூதர், நீரே கிறிஸ்து, ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்" என்று சொல்ல முடிந்தது. 1906-ஆம் ஆண்டில் வெளிப்பாட்டின் பாறையானது இவ்வாறு "நீர் வில்லியம் சீமோர், நீரே கிறிஸ்து, ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்" என்று சொல்ல முடிந்தது. 1933 மற்றும் 1965-க்கு இடையில் வெளிப்பாட்டின் பாறை இவ்வாறு சொல்ல முடிந்தது: "நீர் வில்லியம் பிரன்ஹாம், நீரே கிறிஸ்து, ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்" என்று சொல்ல முடிந்தது. ஏப்ரல் 24, 1993 முதல் வெளிப்பாட்டின் பாறையானது, "நீர் காக்குவ் பிலிப்பு, நீரே கிறிஸ்து, ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்" என்று சொல்ல முடிந்தது. உங்களுடைய வாழ்நாளில் கடவுளை ஒரு மனிதனுக்குள் அடையாளம் கண்டு கொள்வது என்பது நித்திய ஜீவனுக்கான பாறை மற்றும் விசுவாசத்தின் உயர்ந்த உச்சமாக இருக்கிறது.
49 நோவாவின் காலத்தில், வெளிப்பாட்டின் பாறை நோவாவிடம் இவ்வாறு சொல்ல முடிந்தது: "நோவாவே, நீர் தான் ஜீவனுள்ள தேவனுடைய ஒரே குமாரனான கிறிஸ்து". ஒரு தலைமுறையில் வெளிப்பாட்டின் பாறையானது ,உங்களுடைய காலத்திலுள்ள உயிருள்ள தீர்க்கதரிசியை அவர் தான் கிறிஸ்து, உங்களுடைய காலத்தில் ஜீவனுள்ள தேவனுடைய ஒரே குமாரன் என்று சொல்ல முடியும். ஆதாமிலிருந்து உலகத்தின் இறுதி வரை, பூமியின் மீது வந்த அனைத்து தீர்க்கதரிசிகளும் கிறிஸ்துக்களாக இருக்கிறார்கள், மனித உருவில் இருக்கும் தேவர்கள். இதனால்தான் அவர்களின் வார்த்தைகள் தேவனுடைய வார்த்தையாக இருக்கின்றது.
50 மேலும் இந்தியா, இந்தோனேசியா, ஈரான், பாக்கிஸ்தான், எகிப்து மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலும், அல்-கொய்தா, போகோ ஹராமுக்கு எதிராகவும், இனி தீர்க்கதரிசிகள் இருக்கக்கூடாது என்று கூறும் பூமியின் முஸ்லிம்களே. ஒரு தீர்க்கதரிசியை அனுப்ப நீங்கள் அல்லாஹ்விடம் அழ வேண்டாமா? உங்கள் இஸ்லாமிய நாடுகளில் சிறிதளவு பிரச்சினை இருக்கும்போது, குர்-ஆனைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக ஜனாதிபதியிடம் ஏன் முறையிடுகிறீர்கள்? இஸ்லாத்தின் பெயரில் ஒரு சலாபிஸ்ட் அல்லது ஜிஹாதி தனது சகோதரருக்கு எதிராக ஆயுதங்களை எடுக்கும்போது, அல்லாஹ் அதை ஒப்புக்கொள்கிறானா? ஒரு ஷியா முஸ்லீம் அல்லாஹ்வின் பெயரால் ஒரு சுன்னி முஸ்லீமைக் கொல்லும்போது, அல்லாஹ் ஒப்புக்கொள்கிறானா?
51 குர்ரானின் பெயரில் ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லீமை தலைகீழாக மாற்றும்போது, அல்லாஹ்வின் சார்பாக இனி ஒருபோதும் ஒரு தீர்க்கதரிசி வரக்கூடாதா? இதில் அல்லாஹ் மகிழ்ச்சியடைகிறானா? உங்கள் ஜனாதிபதிகள், ராஜாக்கள், இமாம்கள், ரபீக்கள் மற்றும் பாஸ்டர்கள் மரிக்கும் போது, நீங்கள் அவர்களை மாற்றுவீர்கள், ஆனால் உயிருடன் இருக்கும் கடவுள் தனது இறந்த தீர்க்கதரிசிகளுக்கு பதிலாக ரசுலை ஏன் அனுப்பக்கூடாது? கடவுளோ முஹம்மதுவோ இனி ஒரு போதும் தீர்க்கதரிசி இருக்க மாட்டார்கள் என்று கூறவில்லை. நீங்களே அவர்கள் அவ்விதமாக கூறும்படி செய்தீர்கள்.
52 உங்களுடைய கிரியைகள் சாத்தானியமானவை, அதனால்தான் உங்களுக்கு இனி ஒருபோதும் ஒரு தீர்க்கதரிசி தேவையில்லை. விலங்குகளின் நிலையில் பின்னால் இருந்து பெண்களுடன் நீங்கள் சேர்கிறீர்கள். உங்கள் மதங்கள் அழுகியவை, ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் ஊழல் மனிதர்கள் நிறைந்தவை, பாவத்தின் துர்நாற்றம் வீசுகின்றன. உங்கள் கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் தூய்மையற்ற வீடியோக்கள் மற்றும் பாலினத்தின் படங்கள் நிறைந்தவை, அதனால்தான் நீங்கள் ஒரு தீர்க்கதரிசியை விரும்பவில்லை. என்னை நிராகரியுங்கள், ஆனால் நீங்கள் அனைவரும் நரகத்தில் எரிக்கப்படுவீர்கள். உண்மையில், நீங்கள் கடவுளுக்காக அல்ல, ஆனால் உங்களுடைய மத நலன்களுக்காகவும், விருப்பங்களுக்காவும் என்னுடன் போராடுகிறீர்கள் , நீங்கள் அனைவரும் உங்கள் பாஸ்டர்கள், சாதுக்கள், இமாம்கள், ரபீக்கள் மற்றும் உங்கள் ஆதரவாளர்களுடன் நரகத்திற்குச் செல்வீர்கள். ஆனால் உங்களிடையே உள்ள தேவனுடைய பிள்ளைகள் தங்களுடைய காரண காரியங்களை கைவிட்டு நித்திய ஜீவனுக்காக என்னிடம் வருவார்கள்.
53 ஒ தேவனே, ஆதாம் முதல், நீர் தீர்க்கதரிசிகளை எழுப்பினீர், உலகம் இன்னும் முடிவடையவில்லை, ஆனால் நீர் இனி தீர்க்கதரிசிகளை அனுப்ப மாட்டீர்கள் என்று எங்கிருந்து வருகிறது? எலியா இறக்கவில்லை, ஆனால் நீங்கள் எலிசாவை எலியாவுக்குப் பிறகு எழுப்பினீர். மோசேயின் கல்லறையை நாங்கள் பார்க்கவில்லை, ஆனால் மோசேக்கு பின் யோசுவாவை எழுப்பினீர். ஆனால் உலகமானது தொடரும் போது நீர் இனி ஒரு தீர்க்கதரிசியை அனுப்ப மாட்டீர் என்று எங்கிருந்து வருகிறது? ஒரு தீர்க்கதரிசியை அங்கீகரிக்கும் திறனை நீங்கள் அவர்களுக்கு வழங்காவிட்டால், தேசங்கள் யெகோவாவை அறிந்து கொள்வார்கள் என்று ஏன் சொன்னீர்?
54 பூமியின் குடிகளே, நீங்கள் என்னை நிராகரிப்பதினால், "ஒரு தீர்க்கதரிசியானவன் மரிப்பதில்லை, தீர்க்கதரிசிகள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள்" என்று உங்களை கேலி செய்யும் முட்டாள்தனமான வார்த்தைகளை நீங்கள் சொல்கிறீர்கள் .ஒ, உண்மையாகவா?! ஆகவே, எல்லா தீர்க்கதரிசிகளும் உயிருடன் இருக்கிறார்களா , அவர்களில், நீங்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்குக் கீழ்ப்படியவும் மற்ற அனைவருக்கும் கீழ்ப்படியாமலும் இருக்கத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா? எனவே, மோசே உயிருடன் இருக்கிறார், கிறிஸ்தவர்கள் அவருடைய ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க மறுக்கிறார்களா? எனவே, நாசரேத்தின் இயேசு இஸ்ரேலில் உயிருடன் இருக்கிறார், பாலஸ்தீனிய முஸ்லிம்கள் அவரை காயப்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை வீசுகிறார்கள்?.
55 நீங்கள் நரகத்திற்குச் செல்ல மதங்கள் மற்றும் புனித நூல்களின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள், ஆனால் நான் தேவனுடைய பிள்ளைகளுடன் முன்னேறுகிறேன். 200-இல், ஒரு இமாம் என்னைப் பார்க்க வந்தான். நான் பார்த்த ஒரே நேரம் அது தான். அவர் ஒரு கனவில் ஒரு பெரிய தீர்க்கதரிசியைக் கண்டதாக கோரினார், அந்த தீர்க்கதரிசி ஃபிடிலா என்று அழைக்கப்பட்டார், அந்த தீர்க்கதரிசி திரும்பியபோது, அது நான்தான்.
56 இந்த இமாம் தனது ஜெபமாலை மற்றும் ஒரு பக்தியுள்ள இமாமின் தோற்றத்துடன் வெள்ளை நிற உடையணிந்த என்னைப் பார்க்க வந்தார். ஆனால் அவர் என்னைப் பின்தொடர்வதற்கு முன்பு, நான் ஒரு முஸ்லிமாக மாற வேண்டும் என்று அவர் விரும்பினார். ஓ உண்மையாகவா! தொழுநோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு முன்பு ஒரு மருத்துவர் குஷ்டரோகியாக மாற வேண்டுமா? கடவுள் ஒரு தீர்க்கதரிசியை பூமிக்கு அனுப்பும்போது, பௌத்தர்கள் அவரை நம்புவதற்கு முன்பு இந்த தீர்க்கதரிசி பௌத்தனாக மாற வேண்டுமா? கிறிஸ்தவர்கள் அவரைப் பின்பற்றுவதற்கு முன்பு இந்த தீர்க்கதரிசி ஒரு கிறிஸ்தவனாக மாற வேண்டுமா? இந்துக்கள் அவரைப் பின்தொடர்வதற்கு முன்பு இந்த தீர்க்கதரிசி இந்து ஆக வேண்டுமா?
57 இந்த தீர்க்கதரிசி செய்யும் அனைத்தும் தோரா, வேதாகமம், குர்ரான், பகவத் கீதை மற்றும் பூமியின் மதங்களின் அனைத்து புனித நூல்களுக்கும் ஏற்ப இருக்க வேண்டுமா? இந்த தீர்க்கதரிசி கடவுளின் சார்பாக நின்று கடவுளின் பிள்ளைகளின் இரட்சிப்புக்காக பூமியின் அனைத்து அமைப்புகளையும் கண்டிக்கக் கூடாதா? உங்கள் மதங்கள் கடவுளுடைய வார்த்தையை விட உயர்ந்தவையா? இஸ்லாமியர்களே, ஆகவே சொர்க்கத்தில் மெக்காவின் தோற்றம் இல்லை என்றால் நீங்கள் அங்கு செல்ல மாட்டீர்களா? ஆக ஒரு தீர்க்கதரிசியின் வார்த்தைகள் தோரா, வேதாகமம், குர்ரான் மற்றும் வேதத்துடன் ஒத்துப்போக வேண்டும், இல்லையெனில் அவன் ஒரு தவறான தீர்க்கதரிசியா?
58 நீங்கள் பிசாசுகளாக இருக்கிறீர்கள், நீங்கள் அனைவரும் உங்கள் மதங்களுடனும் உங்கள் புனித புத்தகங்களுடனும் நரகத்திற்குச் செல்வீர்கள். ஏப்ரல் 24, 1993 அன்று ஒரு தேவதுதன் அனுப்பிய தெய்வீக ஆணைப்படி நான் பேசுகிறேன். என்னை நிராகரித்து பக்தியுள்ளவர்களாக இருங்கள், முழுவதும் அன்பினாலும் சமாதானத்துடன் இருங்கள், தரித்திரருக்கு உதவுங்கள் ஆனால் அதனோடு கூட நீங்கள் எல்லோரும் நரகத்திற்கு செல்வீர்கள் ஆனால் உங்களிடையே நித்திய ஜீவனுக்காக விதிக்கப்பட்டவர்கள் என்னிடம் வருவார்கள்.
59 2017-ஆம் ஆண்டில், அல்ஜீரியாவில் உள்ள டிஸி ஓசூவைச் சேர்ந்த ஒரு சலாபிஸ்ட் ஒருவர் எனக்கு எழுதினார்: "நீங்கள் மரிக்க விரும்பவில்லை என்றால், இஸ்லாத்திற்கு மாறவும்" என்றான். ஆனால் அவனைப் போன்ற அல்ஜீரிய அரபியான டூஃபிக் 2011 முதல் எனது அயராத சீடனாக இருந்து வருகிறார். ஈரான் எனக்கு எதிராக என் பற்களைக் கவ்விக் கொண்டிருக்கிறது, ஆனால் ஃபர்ஷித் ஒரு ஈரானியன் என்னுடைய சீடன் .
60 இமாம்கள், உலேமாக்கள், ஷேக்கர்கள், அயதுல்லாக்கள் என்னை வெறுக்கிறார்கள், ஆனால் இமாம் முகமது சனா எனது சீடனாகுவதற்கு உங்களுடைய பிரார்த்தனைகளை மசூதியில் வழி நடத்துவதை நிறுத்திவிட்டார். அமடூ வூரி மற்றும் பல பக்தியுள்ள முஸ்லிம்கள் என் சீடர்களாக மாறிவிட்டனர். அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்காக இஸ்லாத்தை விட்டுவிடவில்லை, ஆனால் அவர்கள் என்னில், அவர்களுடைய காலத்தில் உயிர் வாழும் தீர்க்கதரிசியினிடத்தில் விசுவாசம் கொண்டார்கள், அவர்களுக்கு முன்பாக இருந்ததை போல தலைமுறை தலைமுறையாக, தேவனுடைய பிள்ளைகள் தங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை நித்திய ஜீவனுக்காக விசுவாசித்தனர் . அவர்களுக்கு தங்களுடைய அலுவல்கள் இருந்தபோதிலும் நான் சொல்வதைக் கேட்க நேரம் எடுத்துக்கொண்டார்கள், ஏனெனில் அது இரட்சிப்புக்குரிய கேள்வியாக இருக்கின்றது. ஒரு நாள் அவர்கள் இறந்துவிடுவார்கள், அவர்கள் கடவுளுக்கு முன்பாக நியாயத்தீர்ப்புக்குச் செல்வார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்.
61 இந்த அல்ஜீரிய சலாபிஸ்ட் : "என் தீர்க்கதரிசி முஹம்மது, அது நீங்கள் அல்ல!"என்றான். நான் அவனிடம்: சரி, ஆனால் சிகரெட் உங்களை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை முஹம்மது உங்களுக்கு வெளிப்படுத்தவில்லை என்றேன். நீங்கள் லிபியாவில் விற்ற கறுப்பின முஸ்லிம்கள் உங்களிடத்தில் பாயும் இஸ்மாவேலின் அதே இரத்தத்தை தான் அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை முஹம்மது உங்களுக்கு வெளிப்படுத்தவில்லை. நீங்கள் என்னை நிராகரித்ததால், செனகல், நைஜீரியா, சூடான் மற்றும் கருப்பு ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆகார் ஒரு எகிப்திய ஸ்திரீ இஸ்மவேலை பெற்றெடுத்தார், இஸ்மவேல் எகிப்தில் தங்கி ஒரு எகிப்திய பெண்ணை மணந்தார்.
62 எகிப்தில் இஸ்மவேலின் சந்ததி இருந்தது, இந்த சந்ததியின் ஒரு பகுதி அரேபியாவில் பரவியது, அரேபியாவில் அந்த சந்ததியில் இருந்து மஹோமேட் வெளியே வந்தான். இவ்வாறு எகிப்தில் இஸ்மவேலின் சந்ததியினர் கறுப்பின இனத்தின் ஒரு பகுதியாக மாறியது, இஸ்மவேலர்கள் அல்லது கருப்பு அரேபியர்கள். இஸ்லாம் ஆப்பிரிக்காவில் இங்கே அவர்களை அடைந்தது. தேவன் இஸ்மவேலை குறித்து அவன் ஒரு காட்டு கழுதையாக இருப்பான் என்றார், ஏனெனில் அவன் தீர்க்கதரிசிகளின் பள்ளத்தாக்கிலிருந்து வெகு தொலைவில் வாழ்வான். மேலும் தனது காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை நிராகரிக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு காட்டு கழுதை.
63 அனைத்து பூமியின் குடிகளே, சர்வவல்லமையுள்ள கடவுளின் பெயரால், உங்கள் தலையை உயர்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன். இரட்சிப்பைப் பொறுத்தவரை, நீதியுள்ள கடவுள் ஒரு ஜனத்திற்கு மேலாக இன்னொருவருக்கு பாராபட்சம் கொண்டிருக்கவில்லை. தேவன் அரேபியனை விட யூதனுக்கோ அல்லது ஹிந்துவை விட கிறிஸ்தவனுக்கோ பாரபட்சம் பார்ப்பதில்லை. அரேபியர்களே உங்களுடைய பிறந்த குடும்பத்தின் மதம் இந்து மதமாக இருந்திருக்கலாம். கிறிஸ்தவகளே, உங்கள் பிறந்த குடும்பத்தின் மதம் இஸ்லாமாக இருந்திருக்கலாம். நீங்கள் இந்துக்களே, உங்கள் பிறந்த குடும்பத்தின் மதம் கிறிஸ்தவ மதமாக இருந்திருக்கலாம்.
64 மோசே, இயேசு, முகமது, கிருஷ்ணா, அல்லது புத்தர் கடவுளின் தூதரோ இல்லையோ; தோரா, வேதாகமம், குர்ஆன், வேதம் ஆகியவை பரலோகத்திலிருந்து வந்த ஒரு புத்தகமோ இல்லையோ, இன்று உயிருடன் இருக்கும் உங்களுக்கு இது முக்கியமல்ல. உங்கள் இரட்சிப்புக்கான கடவுளின் விருப்பம் உங்கள் குடும்பத்தினர் அல்லது எல்லோரும் உங்களைச் சுற்றி என்ன செய்கிறார்கள் என்பதல்ல, ஆனால் உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசி உங்களுக்கு என்ன சொல்கிறார் என்பது தான்.
65 நீங்கள் தனியாகப் பிறந்திருக்கிறீர்கள், ஒரு நாள் நீங்கள் தனியாக இறந்துவிடுவீர்கள் என்பதையும், கடவுளுக்கு முன்பாக நீங்களும் நியாயத்தீர்ப்புக்குச் செல்வீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். உங்களுடைய தந்தையோ, இமாமோ, உங்களுக்காக யாரும் பதில் அளிக்க மாட்டார்கள். ஆனால் நீதியுள்ள கடவுள் பரலோகத்திற்கான வழியைக் காண்பிக்க உங்களுடைய வாழ்நாளில் ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவார், உங்களுக்கு முன்பும், உங்களுக்கு முன்பாக தலைமுறைகளுக்கு பரலோகத்திற்கான வழியைக் காட்ட அவர் தீர்க்கதரிசிகளை அனுப்பினார்.
66 1993-ஆம் ஆண்டில், கடவுளின் பரதீசும் அவருடைய தீர்க்கதரிசிகளும் ஒரு வெள்ளை மேகத்தால் மூடப்பட்டிருப்பதைக் கண்டேன், ஆனால் மதங்கள் மற்றும் புனித நூல்களின் பரதீசுகளில் எங்கும் இல்லை. இரட்சிப்பை ஒருபோதும் விவாதங்கள் அல்லது கலந்துரையாடல்கள் மூலமாகவோ அல்லது பெற்றோரின் பழைய மதத்தின் பழக்கவழக்கத்தினாலோ பெற முடியாது, ஆனால் இரட்சிப்பு என்பது உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை அங்கீகரிப்பதாகும், இந்த தீர்க்கதரிசி தான் நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார். உங்களைப் போன்றவர்கள் தங்கள் காலத்தில் தீர்க்கதரிசிகளைப் பெற்றார்கள், உங்களுக்கு முன்பாக இருந்த ஜனங்கள் அவர்களுடைய காலத்தின் தீர்க்கதரிசிகளை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டார்கள்.
67 என்னைக் குறித்து படித்த பிறகு அல்லது கேட்ட பிறகு, உங்களுக்கு முன்னால் இரண்டு தேர்வுகள் உள்ளன: ஒன்று நீங்கள் இஸ்லாம், இந்து மதம், புத்த மதம், கிறிஸ்தவம் அல்லது யூத மதம் ஆகியவற்றில் இறந்து நீங்கள் நரகத்திற்குச் செல்லலாம் அல்லது நீங்கள் உங்களுடைய காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை பின்பற்றி பரலோகத்திற்கு செல்லலாம் மேலும் உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் நானே அந்த தீர்க்கதரிசி.