1 நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, இந்த கடிதத்தை எனது வீட்டிலிருந்து செப்டம்பர் 29, 2019 ஞாயிற்றுக்கிழமை காலை பாஸ்டர் டேவிட் ஓவாசா மற்றும் வில்லியம் பிரன்ஹாமின் செய்தியில், அவர்களுடைய நம்பிக்கையை வைத்துள்ள அனைவருக்கும் உரையாற்றினேன்.
2 வில்லியம் பிரன்ஹாம் மணவாட்டியை தத்தெடுக்க வந்தார், நான் மத்தேயு 25: 6-ன் படி அவளை மணவாளனிடம் சுட்டிக்காட்ட வந்தேன். பிரன்ஹாமிஸ்டுகளாகிய உங்களிடத்தில் தான் நடுராத்திரி சத்தமானது வந்தது, ஆனால் நீங்கள் கூடாரங்கள் என்று அழைக்கும் தேவாலயங்களை கட்டுவதில் பரப்பரப்பாக இருக்கிறீர்கள்.
3 ஏழாவது முத்திரை, Ref.299-ல், வில்லியம் பிரன்ஹாம் கூடார ஊழியத்தின் வேளையின் போது உங்களுடைய தேவாலயங்களை தரிசனத்தில் கண்டார். இப்போது நீங்கள் நடுராத்திரி சத்தத்தை பற்றி பேச வந்திருக்கின்றீர்கள். உங்கள் அழைப்பு மற்றும் பணி நியமனம் மற்றும் செய்திகளுக்காக நான் காத்திருக்கிறேன், ஆனால் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளரிடமிருந்து வராத எந்தவொரு வெளிப்பாடும் சரியானதாக இருந்தாலும் அது ஒரு சாத்தானிய வெளிப்பாடு என்பதை நான் அறிவேன்.
4 நீங்கள் வெறுமனே பாவனை செய்கிறவர்கள். இது உண்மையில் நடுராத்திரி என்று நீங்கள் நினைத்தால், என்னுடைய பேச்சைக் கேட்க என்னை ஏன் நீங்கள் அழைக்கக்கூடாது? நீங்கள் ஏன் என்னை அணுகவில்லை? நான் செய்யும் எல்லாவற்றையும் நீங்கள் பாவனை செய்கிறீர்கள், நான் பிரசங்கிக்கும் செய்தியை நீங்கள் திருடுகிறீர்கள், ஆனால், தவறிழைக்காத தன்மையும் நீங்கள் பாவனை செய்ய முடியுமா?
5 நான் எழுதும் இந்த கடிதம், நான் அதை முடித்தபிறகு , அதை இரகசியமாக மொழிபெயர்த்து வெளியிடுவேன், இங்கே அப்போஸ்தலன் மார்ட்டின் வாசிக்கும் அதே வேளையில் பிரான்சில் இருக்கும் கத்தோலிக்கர் அல்லது கென்யாவில் இருக்கும் ஒரு அஞ்ஞானி அதைப் படிப்பான். என்னைப் போலவே, யாரோ ஒருவர் கண்ட கனவை அவரிடம் விவரங்களுடன் நீங்கள் எப்போதாவது சொல்லியிருக்கிறீர்களா? மேலும், உலகம் அறிந்திராத ஒன்று என்று நீங்கள் என்ன பிரசங்கிப்பீர்கள்?
6 2002 முதல், ஐநூறுக்கும் மேற்பட்ட முறை நான் முடிவுகளை எதிர்கொண்டேன், நான் ஒரு முறை கூட தோல்வியடையவில்லை. எடுத்துக்காட்டாக, பெல்ஜியத்தைச் சேர்ந்த சகோதரி மிரெய்ல்லி எனக்கு இதை எழுதினார்: "ஒரு புதிய நிறுவனம் என்னை சிறந்த ஊதியம் மற்றும் போதுமான நேரத்துடன் வேலைக்கு அமர்த்த விரும்புகிறது". நான் ஜெபித்து, "சகோதரி, நீங்கள் இருக்கும் நிறுவனத்தில் இருங்கள்" என்று சொன்னேன், அவள் எனக்குக் கீழ்ப்படிந்தாள். பின்னர், புதிய நிறுவனம் மூடப்பட்டது. நீங்கள் அதை பாவனை செய்ய முடியாது.
7 ஒரு கழுகு, அது பூமிக்கு மேலே வானத்தில் மிக உயரமாக பறக்கும் திறன் உடையது. ஒரு தீர்க்கதரிசி, அவன் தரிசனங்களை பரந்த பகலில் திறந்த கண்களுடன் காணும் திறன் உடையவன். காரியங்கள் நிறைவேற்றுவதற்கு முன்பே அறிவிக்கும் திறன் உடைவன்.
8 ஒரு தீர்க்கதரிசி என்பவன் தவறிழைக்காத தன்மையின் முத்திரை. ஏமாற்றுதல் அல்லது கருத்து திருடுதல் என்பது ஒரு கோழி அல்லது கிளியானது கழுகு இறகுகளை வைத்து கழுகை அவமதிப்பது போன்றது. 1993-ன் மூன்றாம் தரிசனத்தில் இளங்கலை தேர்வு அறையில், என் அருகில் ஏமாற்றுக்காரர்கள் அமர்ந்து இருந்தனர்.
9 எனக்கு முன், அனைத்து பிரன்ஹாமிஸ்டுகளும் மத்தேயு 25: 6 வெறுமனே ஒரு உவமை என்று சொன்னீர்கள். 2004-ஆம் ஆண்டில், எவால்ட் ஃபிராங்க் தனது சுற்றறிக்கை எண் : 55-இல் இவ்வாறு கூறினார்: "அன்பான சகோதர சகோதரிகளே, சாயங்கால வேலையில், தேவன் நமக்கு சாயங்கால வெளிச்சத்தின் வரத்தை தந்தார். இப்போது நடுராத்திரியை நோக்கி நகர்கிறோம்." பிறகு 2005-ஆம் ஆண்டின் சுற்றிக்கை எண் 57 என்ற தனது சுற்றிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்: "சாயங்கால வேலை நமக்கு பின்னால் இருக்கிறது; நடுராத்திரி வேலை இப்பொழுது இங்கே இருக்கிறது. ஒவ்வொரு சுற்றிக்கை கடிதமும் நடுராத்திரி சத்தமாக கருதப்பட வேண்டும்".
10 அலெக்ஸிஸ் பரொலியிர் எவால்ட் பிராங்கிற்க்கு ஒரு கடிதம் எழுதி இவ்வாறு கூறினார். நடுராத்திரி சத்தமானது தேவனுடைய பல ஊழியர்களால் உண்டானது. அவரது மரணத்திற்கு முன், அலெக்சிஸ் பாரிலியர் எவால்ட் ஃபிராங்கிற்கு இதை எழுதினார்: "சகோதரர் பிரன்ஹாமின் செய்தி நம்மை தூங்கவிடாமல் தடுக்கவில்லை என்றால், வெளிப்படையாக அது நம்மை நடுராத்திரியில் விழிக்கப்பண்ண முடியாது".
11 நடுராத்திரி சத்தத்திற்க்கு உங்களை அழைத்துக்கொள்வதின் மூலம், நீங்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறீர்கள். நடுராத்திரி சத்தம் என்பது வில்லியம் பிரன்ஹாமின் செய்தி என்று நம்பும் முதல் குழு. நடுராத்திரி சத்தமானது ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனால் செய்யப்படும் ஆனால் அது காக்குவ் பிலிப்பு அல்ல என்று நம்பும் இரண்டாவது குழு.
12 இறுதியாக, மூன்றாவது குழு அவர்களுடைய தலையில் அவர்கள் மிகவும் சமநிலையில் இல்லை, அது லூயிஸ் செகாண்ட் வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டது, அது இவ்விதமாக கூறுகின்றது : "அவர்கள் சத்தமிட்டனர்..." மேலும் இராத்திரியிலுள்ள திரளான நட்த்திரங்களை போல காலமானது வரும் போது வெவ்வேறு தேசங்களிலிருந்து வரும் அநேக பிரன்ஹாமிஸ்டு பாஸ்டர்கள் தீர்க்கதரிசி செய்தியாளர்களாக மாறுவார்கள். மேலும் நடுராத்திரி சத்தத்தின் செய்தியானது ஆமோஸ் 3:7-ன் பிரகாரமாக அவர்களிடத்தில் வரும் மற்றும் அவர்கள் அதை வெளிப்படுத்துவார்கள், அதேவேளையில் சாயங்கால வேலை முதற்கொண்டு வில்லியம் பிரன்ஹாமின் செய்தியோடு அவர்கள் உறங்கிவிட்டார்கள்.
13 யோவான் ஸ்நானகன் ஒரு மனிதனைப் பார்த்து, "இதோ, உலகத்தின் பாவத்தை நீக்கும் தேவனுடைய ஆட்டுக்குட்டி" என்று சத்தமிட்டான். நானும், ஏப்ரல் 24, 1993 அன்று ஒரு மனிதனைப் பார்த்து, "இதோ மணவாளன், அவரைச் சந்திக்க புறப்பட்டு செல்லுங்கள்" என்று சத்தமிட்டேன். ஆனால் நீங்கள் யாரை, எப்போதுப் பார்த்தீர்கள், ? படைப்பிலும், மதங்களிலும், புனித நூல்களிலும், தியானங்களிலும் கடவுளின் இருப்பை நீங்கள் தேடுகிறீர்கள், ஆனால் ஏப்ரல் 24, 1993 அன்று நான் அவரைக் கண்டேன், அவர் என்னிடம் பேசினார், என்னை மனிதகுலத்திற்கு அனுப்பினார் நான் மத்தேயு 25: 6-ஐ நிறைவேற்றினேன்.
14 ஏப்ரல் 24, 1993-இன் தரிசனத்தில், தேவதூதனையும் ஆட்டுக்குட்டியையும் என் கண்களால் கண்டேன், மத்தேயு 25: 6-ன் படி, "இதோ மணவாளன், அவரைச் சந்திக்க புறப்பட்டு போங்கள்" என்று சத்தமிட்டேன். பூமியின் அனைத்து பாஷைகளிலிருந்தும் மதங்களிலிருந்தும் இனங்களிலிருந்தும் ஜனக்கூட்டத்தினர் வந்தனர். ஆனால் எப்போது, எதை நீங்கள் பார்த்தீர்கள் அல்லது கேட்டீர்கள்? மனிதகுலத்திற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?
15 நான் 2002-இல் நடுராத்திரி சத்தத்தை பற்றி பேசும்போது, நீங்கள் இடிமுழக்கங்கள், ஜெபர்சன்வில்லி மற்றும் கிரெஃபெல்டின் போக்குகள், பிரன்ஹாம் தேவனா, ஐந்து வகை ஊழியங்கள் மற்றும் பிற கோட்பாடுகளின் பேரில் விவாதம் செய்துக்கொண்டிருந்தீர்கள். மேலும் நடுராத்திரி சத்தத்தை பற்றி ஒருவரும் பேசவில்லை. இன்று, பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் நடுராத்திரி சத்தத்தை பற்றி பேசுகிறீர்கள் என்று சொல்கிறீர்களா? எனவே உங்களுடைய ஆதாரங்களை இணையதளத்தில் வைக்கவும்!
16 என் முன்னாள் பாஸ்டரான டேவிடும் கூட 1998-இல் நடுராத்திரி சட்டத்தைப் பற்றி பேசினேன் என்று கூறுகிறார். அன்புள்ள பாஸ்டர் டேவிட், நான் உங்களுடன் ஒன்பது ஆண்டுகள் கழித்தேன், நீங்கள் நடுராத்திரி சத்தத்தின் தீர்க்கதரிசி என்று எனக்குத் தெரியவில்லை. "நடுராத்திரி சத்தம்" என்ற வார்த்தையை நீங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை அல்லது மத்தேயு 25: 6-ஐப் படிக்கவில்லை, ஆனால் எப்போதும் ரோமர் 8-ஐப் படித்தீர்கள் "சிருஷ்டியானது தேவனுடைய குமாரர்களின் வெளிப்படுதலுக்காக காத்திருக்கிறது." ரோமர் 8 ஆனது மத்தேயு 25: 6 அல்ல.
17 அன்புள்ள பாஸ்டர் டேவிட், நீங்கள் நடுராத்திரி சத்தத்துடன் தலையிடுவதற்கு முன்பு, நீங்கள் அரசியலைப் பற்றியும், ஒரு குறிப்பிட்ட அரசியல் வேட்பாளருக்கு வாக்களிக்க உங்களைப் பின்பற்றுபவர்களை அநேக முறை அழைத்தீர்களே அதற்காக மனந்திரும்பினீர்களா? நீங்கள் எங்களை அரசியலுக்காக உபவாசம் இருக்க செய்தீர்கள். 1993-ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஹொபூவிட் பொயிங்கினி இறந்ததாக அறிவித்த அந்தநாளில் கத்தோலிக்கர்களோடு சேர்ந்து நாங்கள் உபவாசத்தின் மத்தியில் இருந்தோம். ஆனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாற்கு 8: 15-ல் ஏரோதின் புளிப்பிள்ளாத அப்பத்தை பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார். அதாவது அரசியல் என்று சொல்ல வேண்டும். ஒவ்வொரு பூசையிலும், இதுவரை, நீங்கள் பிரசங்கிக்கும்போது, எல்லோரும் உங்களுடைய தேவாலயத்தில் தூங்குகிறார்கள்.
18 என்னுடைய கிராமத்தில் வசிப்பவர்களைப் போல எந்த காரணமும் இல்லாமல் நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள். உங்களில் சிலர் உங்கள் மனைவி உட்பட என்னுடன் கையை குலுக்க மறுத்துவிட்டீர்கள். 2002-ஆம் ஆண்டில், நான் உங்களை பார்க்க விரும்பியபோது, என்னை உங்களுடைய வீட்டில் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக சகோதரி இட்டாவின் இடத்தில் நீங்கள் என்னைப் சந்தித்தீர்கள், நாம் நன்றாகப் தான் பேசினோம், ஆனால் நான் கிளம்பிய பிறகு, நான் எந்த நாற்காலியில் அமர்ந்தேனோ அதிலே பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் உங்களை பார்த்து பயந்தேன், நான் விலகி இருந்தேன்.
19 பிறகு 2004-ஆம் ஆண்டில், நீங்கள் பாஸ்டர் அடனுடன் உபவாசம் இருந்து, விழிப்பு கூட்டம் வைத்து ஜெபித்தீர்கள் என்றும், யாராவது என்னைக் கொன்றால், தேவன் அந்த நபரை ஆசீர்வதிப்பார் என்றும் நீங்கள் பிரசங்கித்தீர்கள் என்பதையும் அறிந்தேன். நான் பயந்தேன், ஏனென்றால், உங்கள் சொந்த விசுவாசிகளின் இரத்தத்தை சிந்துமாறு பிரசங்கபீடத்தில் இருந்து அச்சுறுத்தும் பாஸ்டர் டேவிட், காக்குவ் பிலிப்பாகிய என்னை விட்டுவைக்க மாட்டீர்கள்.
20 ஆயினும், 2002-ல், நான் உங்களை தனியாகவும் நிம்மதியாகவும் விட்டுவிட்டேன். நான் உங்களுடன் இருந்தபோது, பழைய சிமியோனிடம், எல்லா கிறிஸ்தவர்களும் என்னைப் போல இருந்தால், எடுத்துக் கொள்ளப்படுதல் எப்பொழுதோ நடந்திருக்கும் என்று சொன்னீர்கள். இன்று நான் ஏன் சாத்தானாக மாறினேன்? நான் உங்களை விட்டு விலகியதினாலா? நான் உங்களை நேசிப்பதைப் போல என்னை நேசிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுடைய விசுவாசிகள் உங்களை விட்டு நடுராத்திரி சத்தத்திற்கு வரும்போது, அது உங்களை கோபத்தினாலும் வெறுப்பினாலும் நிரப்பாமல் இருப்பதாக. ராய் டேவிஸ் இவ்விதமாக பிரன்ஹாமிடம் நடந்துகொள்ளவில்லை.
21 உங்களுடைய காரியத்தில் யோவான் ஸ்நானகன் யோவான் 3: 26 முதல் 27 வரையில் இவ்விதமாக கூறினார்: "ஒரு மனிதனுக்கு பரலோகத்திலிருந்து அவனுக்குக் கொடுக்கப்படாவிட்டால் அவனால் ஒன்றும் பெற்றுக்கொள்ள முடியாது" நான் உங்களுடைய சபை அங்கத்தினராக இருந்தேன், ஆனால் இப்போது நான் முழு பூமிக்கும் தீர்க்கதரிசியாக இருக்கின்றேன், அதனோடு கூட உங்களால் நிற்க முடியவில்லை. சாத்தான் உங்களுக்கு கொடுக்க விரும்பும் தாவீதுக்கு எதிராக சவுலின் மோசமான பாத்திரத்தை மறுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
22 உங்களுடைய சபை விசுவாசிகள் உங்களை விட்டு வெளியேறி என்னிடத்தில் நடுராத்திரி சத்தத்திற்கு வரும்பொழுது, எந்தக் காரணமும் இல்லாமல் நீங்கள் என் மீது வைத்திருக்கும் வெறுப்பை என்னிடம் தெரிவிக்கிறார்கள், ஆனால் நான் உங்களுடைய எல்லாவற்றையும் மன்னிக்கிறேன். நான் உங்களை மதிக்கிறேன் என்பதையும் உங்களுக்கும் உங்களுடைய மனைவிக்கும் எதிராக உங்களுடைய தனியுரிமை பற்றி நான் ஒருபோதும் பேசமாட்டேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
23 "காக்குவ் பிலிப்புவை என்னுடன் ஒப்பிட முடியுமா? என்று பிரசங்கம் செய்கிறீர்கள். என்னையும் அவரையும் வைக்கவும்! என்னுடைய காரையும் அவருடைய காரையும் பாருங்கள்! என்னுடைய சபை அங்கத்தினர்களையும் அவருடைய சபை அங்கத்தினர்களையும் பாருங்கள்! ..." இல்லை நான் ஒரு போதும் உங்களுடன் ஒப்பிட்டு பார்த்ததில்லை.
24 2016-ஆம் ஆண்டில், தேவாலயங்கள் என்னை சிறையில் தள்ளியபோது, பிரன்ஹாமிஸ்ட் பாஸ்டர் பெட்டிட்-டோயிட்-ரூஜினின் மனைவி எனக்கு சிறையில் சாப்பிட உணவு கொண்டு வந்தாள், மேலும் நான் சாப்பிடும்போது, நான் சோகமாக இருந்தேன், ஏனெனில் அது உங்கள் ஒருவரிடத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். நான் உங்களை நேசிக்கின்றேன்.
25 1993-ஆம் ஆண்டில், இரு டீக்கன்களும் சபையை பிரிக்கப் போகிறார்கள் என்று நான் தீர்க்கதரிசனம் கூறியபோது, யார் அதை நம்பினார்கள்? இதை தீர்ப்பதற்க்காக பாஸ்டர்கள் வந்து எவ்வாறு முயற்சிப்பார்கள் என்றும் வெற்றியின்றி முடியும் என்ற விவரங்களை கூட நான் கொடுத்திருந்தேன். சபையை பிளவுபடுத்த முயற்சிப்பவர்கள் வேறு சிலர் என்று என்னிடம் சொல்ல உங்களுடைய அலுவலகத்தில் என்னை அழைத்தீர்கள்.
26 ஆனால் பின்னர், இரண்டு டீக்கன்களில் ஒருவர் தனது வேலையிலிருந்து வெளியேறி, பின்னர் சபையை பிரிக்கும் வரை கிளர்ச்சி செய்யத் தொடங்கினார், பாஸ்டர்கள் தூரத்திலிருந்து வந்து நல்லிணக்கத்தை முயற்சித்து வெற்றி இல்லாமல் போனார்கள். டிசம்பர் 31, 1994-இன் விழிப்பு கூட்டத்தின் முடிவில், எனது மகத்தான வெளிப்பாடுகளின் காரணமாக, தேவன் உங்களுடைய சபையை எடுத்துக் கொள்ளப்படுதல் மட்டும் வழி நடத்தும்படியாக நீங்கள் ஒரு சிறப்பு ஜெபத்தைக் கேட்டீர்கள், நான் அதைச் செய்தேன். நீங்களே உங்களுக்கு டேவிட் என்ற பெயரைக் வைத்துக் கொண்டீர்கள், நீங்கள் பாடல் தலைவர்களையும், பாடகர்களையும் நிறுவினீர்கள், ஆனால் சாமுவேல் எங்கே? நாதான்வேல் எங்கே?
27 என்மீது கோபப்பட வேண்டாம். உங்களை போலவே உங்களுடைய அதே ஆவியில் நான் ஒருபோதும் இருந்ததில்லை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்; அதனால்தான், 1993 முதல் 2002 வரை, இந்த ஒன்பது ஆண்டுகளில், தரிசனங்கள், தீர்க்கதரிசனங்கள், அந்நிய பாஷைகள் பேசுவதற்கான வரங்களைப் பெற்ற அனைவருக்கும் தலைவர் என்ற பதவியைத் தவிர வேறு எந்த பதவியும் எனக்கு இருந்ததில்லை ... உங்களைப் பின்தொடர்வதற்கு முன் இருந்த மற்றொரு பிரிவு.
28 நீங்கள் அனைவருக்கும் லூயிஸ் செகாண்ட் வேதாகமங்களை கொண்டிருந்தீர்கள். என்னிடம் டார்பி இருந்தது. நீங்கள் அனைவரும் இஸ்லாத்தைப் போலவே உங்கள் பெயர்களையும் மாற்றிவிட்டீர்கள், ஆனால் என் தந்தை எனக்குக் கொடுத்த பிலிப்பு என்ற பெயரை தான் வைத்திருக்கிறேன், அவர் இறக்கும் வரை அவர் அந்த பெயரை வைத்து தான் என்னை அழைத்தார்.
29 உங்கள் கேள்விகளை சில தாள்களில் பகிர்ந்தபோது, எனது தாளில் நான் என்ன பதில்களை வைப்பேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். உதாரணமாக: "கேள்வி 4: நீங்கள் எத்தனை முறை வேதாகமத்தை வாசித்தீர்கள்? என்னுடைய பதில் 4: நான் ஒவ்வொரு நாளும் என்னுடைய வேதாகமத்தை வாசிக்கின்றேன்".
30 உங்களின் எல்லா போதனைகளும்: "இயேசு ஞானஸ்நானத்தில் மட்டுமே தேவனாக ஆனார், ... நாம் கெளுத்தி மீன்களை சாப்பிடக்கூடாது, ...", நான் அதை ஒன்றையும் மதிக்கவில்லை. அது கிளர்ச்சி அல்ல. இல்லை. நான் இவ்விதமாக நடந்து கொண்டேன், ஏனென்றால் நான் உங்களை சந்திப்பதற்கு முன்பு, என் ஜீவியத்தில் ஏற்கனவே 24 ஏப்ரல் 1993 இருந்தது, நான் வெறுமனே என் நேரத்திற்காக காத்திருந்தேன்.
31 நேர்மையாக, தேவனுக்கு முன்பாக, ஒரு நாள் நான் தீர்க்கதரிசியின் ஊழியத்தை கொண்டிருப்பேன் என்று உங்களுக்குத் தெரியாதா? நான் என் தாடியை வளர விடும்போது நீங்கள் என்னிடம் நேரம் வந்துவிட்டதா என்று கேட்ட பொழுது நீங்கள் எதை அர்த்தம் கொண்டீர்கள் ? நான் உங்களுக்கு எதிராக ஒருபோதும் பேசியதில்லை மற்றும் தேவன் என்னுடைய சாட்சியாக இருக்கின்றார். 2 நாளாகமம் 26-ல் உசியா ராஜாவை எதிர்த்த ஆசாரியர்கள் அவருடைய எதிரிகள் அல்ல.
32 நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று உங்களிடத்தில் சொல்ல பயப்படுபவர்களே உங்களுடைய எதிரிகள். ஏவால்ட் ஃபிராங்க் ஐவரி கோஸ்ட்டுக்கு வரும்போது, நீங்கள் அவருடன் இருக்கிறீர்கள், அது மோசமானது என்று ஒருவரும் சொல்லவில்லை. பிரன்ஹாமிஸ்டுகள் கூடும் போது, அவர்களின் போக்குகள் எதுவாக இருந்தாலும், நீங்கள் அவர்கள் மத்தியில் இருக்கிறீர்கள், அது மோசமானது என்று ஒருவரும் உங்களுக்குச் சொல்லவில்லை.
33 சுவிசேஷ பாஸ்டர்கள் அரசியல் அதிகாரிகளின் அழைப்பின் பேரில் செல்லும்போது, நீங்கள் அவர்களுக்கு மத்தியில் இருக்கிறீர்கள், அது மோசமானது என்று ஒருவரும் உங்களுக்குச் சொல்லவில்லை. நீங்கள் சுவிசேஷ விருந்துகளுக்கு நிதியுதவி செய்கிறீர்கள், உங்கள் சபையில் புனித திருவிருந்தை எடுக்க அவர்களை அனுமதிக்கிறீர்கள், அது மோசமானது என்று ஒருவரும் உங்களுக்குச் சொல்லவில்லை.
34 மேலும் அஜிட்டோவின் காஸ்ஸி மற்றும் சுவிசேஷ பாஸ்டர்கள் கூடும் போது, நீங்கள் அவர்கள் மத்தியில் இருக்கிறீர்கள், அது மோசமானது என்று ஒருவரும் உங்களுக்குச் சொல்லவில்லை. இது சரியானதல்ல, மேலும் நான் ஒருவன் மாத்திரமே உங்களுக்கு சத்தியத்தை சொல்ல முடியும் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் ஏனெனில் நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அன்பான பாஸ்டரே, தாழ்மையுடன் இருங்கள். பாஸ்டர் ஒரு தீர்க்கதரிசி-செய்தியாளன் அல்ல, ஆனால் ஒரு ஆசாரியன். மேலும் ஒரு ஆசாரியன் தவறிழைக்காதவர் அல்ல.
35 1994-ஆம் ஆண்டில் நீங்கள் 1997-ஆம் ஆண்டிற்கான எடுத்துக் கொள்ளப்படுதலை கணக்கீடுகளுடன் அறிவித்தபோது, எடுத்துக் கொள்ளப்படுதல் நடைபெறவில்லை, உங்களைச் சுற்றியுள்ளவர்களில் யார் நீங்கள் வெளிப்படையாக பாவ அறிக்கை செய்ய வேண்டும் என்று சொன்னார்? ஒருவரும் இல்லை! நீங்கள் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு வழி விலகி செல்வீர்கள் ஆனால் அவர்கள் உங்களை தடுக்க பயப்படுகிறார்கள் அதேவேளையில் இது இரட்சிப்பைக் குறித்த கேள்வியாக இருக்கின்றது. நீங்கள் தவறாக போகும்பொழுது உங்களுடைய கவனத்தை ஈர்க்காமல் இருந்தால், நீங்கள் நிறுவியுள்ள ஜனங்களின் பயன் தான் என்ன?
36 2002-ஆம் ஆண்டில், நான் நடுராத்திரி சத்தத்தை பற்றி பேசியபோது, மத்தேயு 25: 6 வெறுமனே ஒரு உவமை என்று நீங்கள் என்னை நகைத்தீர்கள். ஒரு பாஸ்டர் மத்தேயு 25: 6 அல்லது ஓசியா 12:13-ஐப் பற்றி படித்ததாக அல்லது பேசியதாக நான் கேள்விப்பட்டதில்லை.
37 பின்னர், நடுராத்திரி சத்தத்தை பற்றி யாராவது பேசியிருக்கிறார்களா என்று இணையத்தில் பார்க்க சகோதரர்கள் அகோப் மற்றும் அபு ஆகியோருடன் சென்றேன். நாங்கள் மூன்று பேரும் இரண்டு பதில்களை கண்டோம். முதல் பதில், எலன் வைட் என்ற பெண்மணி அதைக் குறிப்பிட்டுள்ளார், இரண்டாவது பதிலானது பாரிஸில் நள்ளிரவில் ஒரு ஹோட்டலில் உதவிக்காக ஒரு அழைப்பு இருந்தது. "நடுராத்திரி சத்தம்" என்ற தலைப்பின் பெயருக்காக எல்லோரும் என்னை கேலி செய்து கொண்டிருந்தார்கள்.
38 இன்று, உங்களுடைய கண்கள் திறக்கப்பட்டு எனக்கு நன்றி செலுத்துகின்றன, மேலும் ஒரு வேதசாஸ்த்திர வல்லுனரின் படைப்பான லூயிஸ் செகாண்ட் வேதாகமத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு "அவர்கள் சத்தமிட்டனர்" என்று சொல்கிறீர்கள். அதே வேளையில் வில்லியம் பிரன்ஹாம் டார்பி வேதாகமத்தை நேசித்தார், பயன்படுத்தினார்.
39 பவுல் முதல் வில்லியம் பிரன்ஹாம் வரை திருச்சபை எண்ணற்ற முறை தூங்கியது. சத்தமிடுவத்தற்காக ஐரினேயஸ், மார்ட்டின், கொலம்பன், விக்லிஃப், ஜான் ஹஸ், லூதர், கால்வின் மற்றும் வெஸ்லி போன்ற தீர்க்கதரிசிகள் அவரவர் காலத்தில் தேவன் சத்தம்மிடுவதற்கான அனுப்பவில்லையா? மோசேயிலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரை, இஸ்ரவேலை எழுப்பவும் சத்தமிடவும் தேவன் ஏசாயா, எரேமியா, தானியேல் போன்ற தீர்க்கதரிசிகளை அனுப்ப வில்லையா?
40 தேவன் ஒரு முறையாவது சில ஆசாரியர்கள் மூலம் இஸ்ரவேலை எழுப்பிய இடத்தை எனக்குக் காட்டுங்கள். வேதாகமத்தை பின்பற்றுவதாகக் கூறுகிறவர்களே, ஒரு கூட்ட ஆசாரியர்கள் மூலம் தேவன் வேதாகமத்தின் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றிய ஒரே ஒரு இடத்தை மட்டும் எனக்குக் காட்டுங்கள்.
41 நான் ஜேம்ஸ் மன்னன், ஆஸ்டெர்வால்ட், க்ராம்பன், கொழும்பு, ரீனா-வலேரா, டேவிட் மார்ட்டின், ஆலிவேட்டன், சௌராகி பதிப்புகளை எடுத்துக்கொண்டேன் ... வேதாகமத்தின் அனைத்து பதிப்புகளும் ஒரே ஒரு சத்தத்தை மட்டுமே குறிப்பிடுகின்றன. 1874-இல் ஜெனீவாவின் வேத வல்லுநர்கள் கூட்டத்தின் கோரிக்கையினால் 1910-இன் லூயிஸ் செகண்ட் பதிப்பை தவிற.
42 நீங்கள் பிசாசின் புத்திரனாக இல்லையென்றால் இறையியலை எவ்வாறு கண்டித்து மேலும் லூயிஸ் செகாண்ட் வேதாகமத்தை பயன்படுத்த முடியும்? கத்தோலிக்கர்களின் தாம்ப் (TOB) வேதாகமம் கூட, "நடுராத்திரியில், ஒரு சத்தம் உண்டானது: இதோ மணவாளன்! அவரைச் சந்திக்க வெளியே வாருங்கள்" என்று கூறுகிறது. ஆனால் சமீபத்தில், லூயிஸ் செகாண்ட் பதிப்பு 2007-இல் திருத்தப்பட்டது, மேலும் : "ஒரு சத்தம்" என்று அவர்கள் திருத்தினார்கள் ஏனெனில் அசல் கிரேக்கம் "ஒரு சத்தம்" என்று கூறுகிறது. நீங்கள் தேவனுடைய புத்திரர்களாக இருந்தால், "அவர்கள் சத்தமிட்டனர் ..." என்று ஆதரித்தற்காக வெளிப்படையாக மனந்திரும்ப வேண்டும்.
43 ஆனால் இது இருந்தபோதிலும், நீங்கள் : "இரவில், ஒரு நட்சத்திரம் இல்லை, ஆனால் பல நட்சத்திரங்கள் உள்ளன". என்று சொல்கிறீர்கள். சரி, ஆனால் நட்சத்திரங்களுக்கிடையில், வடக்கு நட்சத்திரம் என்று அழைக்கப்படும் ஒரு நட்சத்திரம் உள்ளது அது உங்களுக்கு தெரியுமா, அதைச் சுற்றி மற்ற அனைத்து நட்சத்திரங்களும் அவற்றின் விண்மீன்களும் விதிவிலக்கு இல்லாமல் சுழல்கின்றன.
44 சாயங்கால வேளைக்குப் பிறகு, மத்தேயு 24:27-இன் மின்னல் தான் இரவில் வடக்கு நட்சத்திரமாக மாறியது என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று காலை, எங்கும் இல்லாத விஷயங்களை நான் கூறுவேன், நீங்கள் மீண்டும் வந்து 1998-இல் அவற்றை வெளிப்படுத்தினீர்கள் என்று கூறுவீர்கள் ஏமாற்றுக்காரர்கள் அவற்றை நகலெடுப்பார்கள்.
45 பூமி சுழலும் போது, அனைத்து நட்சத்திரங்களும் அவற்றின் விண்மீன்களும் வடக்கு நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன, இது போலரிஸ் அல்லது ஆல்பா உர்சே மினோரிஸ் நட்சத்திரம். போலரிஸ் நட்சத்திரத்தை சுற்றி வராத எந்த நட்சத்திரமும் சாத்தானின் நட்சத்திரம்.
46 நீங்கள் வடக்கு நட்சத்திரத்தை சுற்றி வர மறுக்கும்போது, நீங்கள் ஒரு அலைந்து திரிந்த நட்சத்திரமாக, விண்வெளியில் ஆபத்து ஆகிவிடுகிறீர்கள். பூமி சுழலும் போது, வெளிப்படுத்துதல் 4-ன் இருபத்து நான்கு மூப்பர்களும் சிம்மாசனத்தைச் சுற்றி வருகிறார்கள், வெளிப்படுத்துதல் 7-ன் நான்கு ஜீவன்களும் சிம்மாசனத்தைச் சுற்றி வருகின்றன.
47 ஏப்ரல் 24, 1993 அன்று, பூமி முழுவதும் அந்தகாரமாக இருந்தது, ஒரு ஒளி போன்ற ஒரு பெரிய நட்சத்திரம் வானத்தில் தெரிந்தது. அது என்னது? மைல்கல், வழிகாட்டி, வடக்கு நட்சத்திரம். அது கீழே வந்தபோது, அது தேவதூதன் மற்றும் ஆட்டுக்குட்டியாக இருந்தது. ஆயினும், வானத்தில், அது ஒரே ஒரு நட்சத்திரம் மட்டுமே இருந்தது.
48 சில தொலைநோக்கியை எடுத்து வடக்கு நட்சத்திரத்தைப் பாருங்கள், அது நட்சத்திரங்களின் விண்மீன் என்பதை நீங்கள் காண்பீர்கள். மத்தேயு 25: 6-ன் சத்தத்தை நிறைவேற்றுவதற்காக தேவன் கருப்பு ஆப்பிரிக்காவுக்கு ஒரு அடையாளத்தை அனுப்பிக் கொண்டிருந்தார்.
49 24 மணிநேர மண்டலங்கள் அமெரிக்காவில் -12 இல் தொடங்கி ரஷ்யாவின் ஓரங்களில் +12 இல் முடிவடையும்; அமெரிக்காவிலிருந்து வரும்பொழுது, ஐவரி கோஸ்ட், கானா மற்றும் டோகோ ஆகியவை நேர மண்டல 0-இல் உள்ளன.
50 இந்த நேர மண்டலம் 0-இல் தான் மார்ச் 29, 2006 கிரகணம் கடந்தது. ஒருமுறை, 14 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், தேவனின் கடிகாரத்தின் மூன்று கைகள் ஒரு கையாக மாறி, வானத்தை ஒன்றாகச் சுட்டிக்காட்டின, மாற்கு 13:35-ன் படி மதியம். அது ஐரோப்பாவில் இருந்தது.
51 ஒரு நாள், அமெரிக்காவிற்குப் பிறகு, மீண்டும், மூன்று கைகள் ஒரு விண்மீன் தொகுப்பை உருவாக்க வேண்டும், மூன்று கைகள் வானத்தை நோக்கிச் செல்லும், மாற்கு 13:35-ன் படி நடுராத்திரி இருக்கும். இவ்வாறு, நண்பகலில் ஒரு வெள்ளை தீர்க்கதரிசி ஐரோப்பாவில் தோன்ற வேண்டும், இப்போது நடுராத்திரியில் ஒரு கருப்பு தீர்க்கதரிசி ஆப்பிரிக்காவில் தோன்ற வேண்டும்.
52 அறிகுறிகளில் ஒன்று என்னவெனில்: ஜலப்பிரளயத்திற்கு பிறகு மனிதகுலத்தின் மிக மகத்தான தீர்க்கதரிசி மோசே வந்தபோது, மனிதகுலத்தின் தோற்றத்தை வெளிப்படுத்தினார். கறுப்பின இனத்தின் முதல் மகத்தான தீர்க்கதரிசி செய்தியாளன் வந்தபோது, கருப்பினத்தின் தோற்றத்தை வெளிப்படுத்துவது அவருடைய பணியில் இருந்தது.
53 லூயிஸ் செகாண்ட் வேதாகமத்தை எடுத்து, "அவர்கள் சத்தமிட்டனர் ..." என்று சொல்கிறீர்கள், ஏனெனில் இரவில் அங்கு பல நட்சத்திரங்கள் இருக்கின்றன. பல நட்சத்திரங்கள் உள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அந்த எல்லா நட்சத்திரங்களுக்கிடையில், வடக்கு நட்சத்திரம் உள்ளது, இது போலரிஸ். பிரகாசமான நட்சத்திரங்கள் உள்ளன, ஆனால் ஒன்றே ஒன்று மட்டுமே வடக்கு நட்சத்திரம்.
54 உலகத்தின் அஸ்திவாரத்திலிருந்து, வடக்கு நட்சத்திரம் எப்போதுமே அதன் காலத்தில் ஒன்றாகும். இது கடல்களிலும் பாலைவனங்களிலும் நம்பிய அனைவருக்கும் வழிகாட்டியது, மேலும் இது உலகத்தின் இறுதி வரை மனிதகுலத்திற்கு வழிகாட்டும்.
55 கர்த்தராகிய இயேசுவை பிரகாசமான காலை நட்சத்திரம் என்றும் சாத்தானை பிரகாசமான இரவு நட்சத்திரம் அல்லது சிரியஸ் அல்லது இருளின் இளவரசன் என்றும் அழைக்கிறார்கள். ஜிம் ஜோன்ஸ் அல்லது சூரிய கோவிலின் வரிசை உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள அனைத்து தற்கொலைகளும் : சிரியஸ் நட்சத்திரத்திற்கு பிரயாணம் அல்லது பயணம் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் இறந்தவர்கள் சிரியஸிடம் வரும்போது, சிரியஸ் அவர்களிடம், "நானே மேரி ... நானே சிரியஸ், நான் போலரிஸைச் சுற்றி வருகிறேன். என்னை விட்டு விலகு!".
56 வடக்கு நட்சத்திரம் இரவின் பிரகாசமான நட்சத்திரம் அல்ல, அது சிரியஸ் நட்சத்திரம், ஆனால் கோலத்தின் மிக உயர்ந்த நட்சத்திரமானது போலரிஸ் நட்சத்திரம். போலரிஸ் நட்சத்திரம் பிரகாசத்தில் 48-வது இடத்தில் உள்ளது, ஆனால் அது வழிகாட்டியாகும். இது மாலுமிகள் மற்றும் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியுள்ளது. ஜீவிக்கும் மற்றும் சுவாசிக்கும் இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தின் மூலம் மன்னர்களுக்கும், போர் மனிதர்களுக்கும், நாகரிகங்களுக்கும் இது வழிகாட்டியுள்ளது.
57 வடக்கு நட்சத்திரமானது கடலின் நட்சத்திரம் என்றும் அழைக்கப்படும், நித்தியத்திலிருந்து நித்தியம் வரை இருக்கின்றது, தீர்க்கதரிசிகள் எப்போதும் இருந்ததை போல மனிதகுலத்தின் திசைகாட்டியாக இருக்கின்றது. உலகின் எல்லா இடங்களிலிருந்தும் காணப்படும் ஒரே நட்சத்திரம் இது தான்.
58 இது ஒரு இனத்தின், ஒரு கண்டத்தின் அல்லது ஒரு மதத்தின் நட்சத்திரம் அல்ல, ஆனால் முழு உலகத்தின் நட்சத்திரம். அதன் காலத்தில், வடக்கு நட்சத்திரம் நமது பிரபஞ்சத்தின் மாறாத காந்த மையமாகும். வடக்கு நட்சத்திரத்தில் ஆறு கிளைகள் உள்ளன, தீர்க்கதரிசி செய்தியாளர் தேவனுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உள்ள சமநிலை போல இது வானத்திற்கும் பூமிக்கும் இடையில் சமநிலையின் அடையாளமாக இருக்கிறது.
59 தீர்க்கதரிசி செய்தியாளரை போல வடக்கு நட்சத்திரம் அதன் காலத்தில் ஒன்றாகும். அந்த ஒன்றை சுற்றியே நமது பிரபஞ்சத்தில் உள்ள கோடன கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் சுழல்கின்றன.
60 இப்போது, ஒரு இரகசியம் என்னவென்றால், ஒரு நட்சத்திரமானது உலகின் அஸ்திவாரத்திலிருந்து எப்போதும் வடக்கு நட்சத்திரமாக இருந்ததில்லை. வான விண்மீன்களைப் பாருங்கள், வானத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் ஈர்க்கும் வானத்தின் மையமாக வடக்கு நட்சத்திரம் உள்ளது. இதை உங்கள் தொலைபேசியுடன் எங்கிருந்தும் சரிபார்க்கலாம். நீங்கள் பார்க்கும் இந்த வடக்கு நட்சத்திரம், ஒரு காலம் வரும் அப்போது அதே இடத்தில் மற்றொரு நட்சத்திரம் அதன் இடத்தில் வடக்கு நட்சத்திரமாக இருக்கும். நட்சத்திரங்கள் பிறக்கின்றன, ஒவ்வொன்றும் அதன் நேரத்தில் செயல்பட்டு ஆண்களைப் போல இறக்கின்றன.
61 தற்போதைய வடக்கு நட்சத்திரமானது போலரிஸ் நட்சத்திரமாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் மூன்று நட்சத்திரங்களின் விண்மீன் போன்று இது மூன்று நட்சத்திரங்களின் விண்மீன் . துபன் என்று அழைக்கப்படும் ஒரு நட்சத்திரம் ஒரு காலத்தில் வடக்கு நட்சத்திரமாக இருந்தது, வானத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் அதைச் சுற்றி வந்தன.
62 இன்று அது போலரிஸ் நட்சத்திரம் மற்றும் போலாரிஸ் நட்சத்திரத்திற்குப் பிறகு, வேகா என்ற மற்றொரு நட்சத்திரம் அதன் இடத்தில் வடக்கு நட்சத்திரமாக இருக்கும், பின்னர் அதைச் சுற்றியே வானத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் சுழலும். அந்த நேரத்தில், பூமியின் பூகோளம் கூட வேகாவை நோக்கி சாய்ந்துவிடும். வேகாவுக்குப் பிறகு, மற்றொரு நட்சத்திரம் வடக்கு நட்சத்திரமாக இருக்கும். மற்றும் துபன் மற்றும் போலரிஸ் மற்றும் வேகா ஆகியவை வெவ்வேறு வண்ணங்களில் உள்ளன. அது தேவனுடைய வார்த்தை.
63 ஒரே நேரத்தில் ஒரே ஒரு வடக்கு நட்சத்திரம் மட்டுமே உள்ளது, இந்த வடக்கு நட்சத்திரம் வில்லியம் பிரன்ஹாமாக இருந்த ஒரு காலம் இருந்தது, இன்று இந்த வடக்கு நட்சத்திரம் காக்குவ் பிலிப்பு மற்றும் எனக்குப் பிறகு மற்றொரு நட்சத்திரம் என்னுடைய இடத்தில் தீர்க்கதரிசி செய்தியாளராக இருப்பார்.
64 இன்று, என் காலத்தில், அது இன்னும் தூபன் தான் கடைசி வடக்கு நட்சத்திரம் என்று நீங்கள் சொன்னால், பிறகு நீங்கள் ஒரு சாத்தானின் நட்சத்திரம். "என்னால் ஒரு மனிதனைப் பின்தொடரவோ அல்லது என்னைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரவோ முடியாது" என்று நீங்கள் சொன்னால், நீங்கள் சாத்தானின் நட்சத்திரம். ஒரு நட்சத்திரம் இறக்கும் போது நான் அதை காக்குவ் 128: 34 முதல் 36 வரையில் பிரசங்கித்ததை போன்று அது பெரிதாக வளர்ந்து பின்னர் சிதைவிலிருந்து சிதைவடைகிறது என்று அறிவியல் கூறுகிறது.
65 பூமியின் சாய்வில், துபன் நட்சத்திரம் வடக்கு நட்சத்திரமாக மாறியபோது, அதைச் சுற்றி வர மறுத்த அனைத்து நட்சத்திரங்களும் இறந்தன. மோசேயின் காலத்தில், கோரா மற்றும் தாத்தன் மற்றும் "அவர்கள் சத்தமிட்டனர்..." என்ற எல்லோரும் மோசேயைச் சுற்றி வர மறுத்தவர்கள், அவர்கள் மத்தியில் இருந்த வடக்கு நட்சத்திரம் விழுங்கப்பட்டது.
66 இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு 350-ஆம் ஆண்டில், போலரிஸ் வடக்கு நட்சத்திரமாக மாறியபோது, அதைச் சுற்றி வர மறுத்த அனைத்து நட்சத்திரங்களும் மரிக்க தொடங்கின. அதன்பிறகு, வேகா வடக்கு நட்சத்திரமாக இருக்கும்போது, காக்குவ் பிலிப்பு தான் கடைசி வடக்கு நட்சத்திரம் என்று சொல்லும் அனைத்து நட்சத்திரங்களும் இறந்துவிடும்.
67 நட்சத்திரங்கள் ஆண்களைப் போல ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன. நட்சத்திரங்கள் ஆண்களைப் போல இடம்பெயர்ந்துள்ளன. பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒரு நட்சத்திரத்தின் அடையாளத்தின் கீழ் இருக்கிறான். பெண்களின் மடியிலிருந்து ஆண்கள் பிறப்பது போலவே நெபுலாவின் மடியிலிருந்து நட்சத்திரங்களும் பிறக்கின்றன.
68 பல நெபுலாக்கள் உள்ளன. என் குழந்தை பருவத்திலிருந்தே என் தந்தை மூலம் எனக்குத் தெரிந்த ஓரியன் நெபுலா உள்ளது. ஹெலிக்ஸ் நெபுலா உள்ளது. வாள் நெபுலா உள்ளது. நண்டு நெபுலா உள்ளது. பாம்பு நெபுலா உள்ளது. சுடர் நெபுலா உள்ளது. தேவதூத நெபுலா உள்ளது. கரினா நெபுலா உள்ளது.
69 படைப்பின் மூன்று தூண்களுடன் கழுகு நெபுலா உள்ளது. வடக்கு நட்சத்திரம் தீர்க்கதரிசிகளின் நட்சத்திரம். மேலும் வடக்கு நட்சத்திரங்கள் கழுகு நெபுலாவிலிருந்து பிறக்கின்றன.
70 தேவன் தாமே ஒவ்வொரு நெபுலாவையும், ஒவ்வொரு நட்சத்திரத்தையும், ஒவ்வொரு விண்மீனையும் அதன் இடத்தில் வைத்தார் , அதனால்தான் பூமியின் மேல் 12 அப்போஸ்தலர்கள், 24 மூப்பர்கள் சிம்மாசனத்தைச் சுற்றி இருந்தனர், மேலும் போலாரிஸுடன் நமது விண்மீன் மண்டலத்தில் 48 முக்கிய நட்சத்திரங்கள் உள்ளன.
71 நட்சத்திரங்களும் அவற்றின் விண்மீன்களும் தேவனுடைய சொந்தக் கைகளால் எழுதப்பட்ட வார்த்தையாகும். வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் நெபுலாக்கள் பூமியில் ஜாஸ்பர், சர்டோயின், கிரிஸோலைட், மரகதம் மற்றும் சபையர் போன்ற வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டுள்ளன. நட்சத்திரங்கள் மற்றும் அவற்றின் விண்மீன்களில் போதனைகள், பழமொழிகள், உவமைகள், இரகசியங்கள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் கொண்டுள்ளன.
72 அங்கே மற்ற விண்மீன் திரள்களும் அவற்றின் கிரகங்களும் செயற்கைக்கோள்களும் நெபுலாவும் நட்சத்திரங்களும் விண்மீன்களும் நிகழ்வுகளும் நாம் காணாதவை, நாம் காணாத தேவதூதர்களின் உலகம் இருப்பதைப் போல.
73 நாம் காணாத செராஃபிம் உலகம் இருக்கிறது. நாம் காணாத கேருப்களின் உலகம் இருக்கிறது. நாம் காணாத தேவதூதர்களின் உலகம் இருக்கிறது. நாம் காணாத பிற உலகங்களும் உள்ளன. ஆனால் மனித உலகத்தைப் பொறுத்தவரை, நட்சத்திரங்களும் விண்மீன்களும் நமக்கு மேலேயும் நம்மைச் சுற்றிலும் ஒரே ஒரு வடக்கு நட்சத்திரம் மட்டுமே உள்ளன, அவை கர்த்தராகிய இயேசு, அவற்றின் தீர்க்கதரிசி செய்தியாளர் எப்போதும் பூமியில் தலைமுறை தலைமுறையாக பிரதிநிதியாக இருந்து வருகிறார்.
74 ஒவ்வொரு கண்டத்துக்கும் அல்லது நாட்டிற்கும் அதன் சொந்த வடக்கு நட்சத்திரம் இல்லை. ஒவ்வொரு மதத்திற்கும் அவர்களுடைய புனித புத்தகத்தைப் போல அதன் சொந்த வடக்கு நட்சத்திரத்தை கொண்டிருக்கவில்லை. எனவே, அரேபியர்களையும் மற்றும் ஆப்பிரிக்கர்களையும் கண்டிக்கும் நட்சத்திரங்களும் அவற்றின் விண்மீன்களும் சீனர்களையும், அமெரிக்கர்களையும் மற்றும் பூமியின் அனைத்து மக்களையும் கண்டிக்கும் அதே நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன்கள் தான்.
75 ஆனால் இப்போது, நாயின் நட்சத்திரங்கள், நண்டு மற்றும் பாம்பு நெபுலா எங்கே? வெளிப்படுத்துதல் 7: 4-ல், ஆதியாகமம் 49: 17-ன் படி சர்ப்பமாக சின்னம் கொண்டிருக்கும் எபிராயீம் மற்றும் தாணின் கோத்திரங்கள் எங்கே? தங்கள் காலத்தின் வடக்கு நட்சத்திரத்தை சுற்றி வர மறுத்தவர்கள் மற்றும் வடக்கு நட்சத்திரங்களாக இருக்க விரும்பியவர்கள் அனைவரும் எங்கே?
76 இஸ்லாம், கிறிஸ்தவம், புத்த மதம், இந்து மதம், யூத மதம் மற்றும் நாத்திகர்களின் விண்மீன்கள் எங்கே? பதில் வெளிப்படுத்துதல் 12: 3 முதல் 4 வரையில் காணப்படுகிறது: அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது. அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று" அமென்.
77 வடக்கு நட்சத்திரத்தை சுற்றி வராத அனைத்து நட்சத்திரங்களும் பூமியில் வீசப்பட்டன. ஒரு நட்சத்திரம் வடக்கு நட்சத்திரத்தைச் சுற்றவில்லை என்றால், அதன் இடம் இனி பரலோகத்தில் இல்லை. அனைத்து நட்சத்திரங்களும் தேவனுக்குரியவை, ஒரு நட்சத்திரம் விழுந்தவுடன், அது ஜீவப்புத்தகத்திலிருந்து அழிக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரின் பெயர்.
78 நாம் ஒவ்வொருவரும் ஒரு நட்சத்திரத்தின் கீழ் இருக்கிறோம், நீங்கள் உங்களுடைய தீர்க்கதரிசி செய்தியாளரை பின்பற்றி வர மறுத்தால், அதாவது உங்கள் நட்சத்திரம் நண்டு அல்லது பாம்பு நெபுலாவிலிருந்து வருகிறது, அதன் இடம் இனி ஒருபோதும் பரலோகத்தில் இல்லை. இஸ்லாம், கிறித்துவம், புத்த மதம், இந்து மதம் மற்றும் யூத மதம் ஆகிய நட்சத்திரங்கள் நண்டு அல்லது பாம்பு நெபுலாவிலிருந்து வந்தவை, அவை இனி பரலோகத்தில் இல்லை.
79 ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் தான் வடக்கு நட்சத்திரத்தின் பிரதிநிதியாக இருக்கின்றான். ஆனால் பூமியில் போப் பிரதிநிதியாக இருக்கும் வடக்கு நட்சத்திரத்தை எனக்குக் காட்டுங்கள். இமாம்களும் அயதுல்லாக்களும் பூமியில் பிரதிநிதிகளாக இருக்கும் நட்சத்திரத்தை எனக்குக் காட்டுங்கள்.
80 ரபீக்கள் பூமியில் பிரதிநிதிகளாக இருக்கும் அந்த நட்சத்திரத்தை எனக்குக் காட்டுங்கள். போலரிஸைச் சுற்றாத நட்சத்திரங்களின் விண்மீன் இருப்பதை எனக்குக் காட்டுங்கள். அர்மகெதோன் போருக்கு பிறகு நீங்கள் சுற்றும் மற்ற அனைத்து நட்சத்திரங்களும் பூமியில் வீசப்பட்டுள்ளன. பரலோகத்தில் அயதொல்லாவை இஸ்லாமிற்காக சுற்றி வருகின்ற ஒரு நட்சத்திரங்களின் விண்மீன் இருக்கவில்லை.
81 பரலோகத்தில் போப் அல்லது சபை தலைவரை சுற்றுகின்ற நட்சத்திரங்களின் விண்மீன் இல்லை. உங்களுடைய இமாம்கள், அயதுல்லாக்கள், பாப்பரசர்கள், பாஸ்டர்கள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், புத்தர்கள், சாதுக்கள், ரபீக்கள் அர்மகெதோன் போரின்போது வானத்திலிருந்து எறியப்பட்ட பிரகாசமான நட்சத்திரங்கள்.
82 நீங்கள் ஒரு அப்போஸ்தலன், சுவிசேஷகன், சபை தீர்க்கதரிசி அல்லது பாஸ்டர் ஆகியோரைச் சுற்றி வருபவர்களே, நீங்கள் பரலோகத்தின் கண்டனத்தின் கீழ் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள், ஏனென்றால் வடக்கு நட்சத்திரமானது ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளன் மட்டுமே. ஒரு போப் அல்லது ஒரு ரபீ, ஒரு புத்தனை அல்லது ஒரு இமாம் ஆகியோரைச் சுற்றுகிற நீங்கள், நீங்கள் பரலோகத்தின் கண்டனத்தின் கீழ் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள், ஏனென்றால் வடக்கு நட்சத்திரமானது ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளன் மட்டுமே. புனித புத்தகங்களைச் சுற்றியுள்ள நீங்கள், நீங்கள் பரலோகத்தின் கண்டனத்தின் கீழ் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள், ஏனென்றால் இன்று வடக்கு நட்சத்திரமானது உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளரான காக்குவ் பிலிப்பு ஆவார்.
83 புனித புத்தகங்கள் பதிப்புகள் மற்றும் திருத்தங்கள் கொண்டிருக்கும். மதங்களுக்கு கிளைகள் இருக்கும், ஆனால் வானமும் தேவனுடைய சொந்தக் கரங்களால் எழுதப்பட்ட நட்சத்திரங்களும் அவற்றின் விண்மீன்களும் ஒருபோதும் திருத்தப்படவில்லை. இது எல்லா மனுக்குலத்திற்கு தேவனுடைய குறிப்பு புத்தகம்.
84 ஞானிகளை போலவே, அதைப் படிப்பவர்கள் அனைவரும் புத்தகத்தின் மனிதர்கள், அவர்கள் உயர்ந்தவர்கள், அவர்கள் தீர்க்கதரிசிகளின் பரிமாணத்தில் இருக்கிறார்கள். நட்சத்திரங்களுக்கும் அவற்றின் விண்மீன்களுக்கும் ஒவ்வொரு படைப்புக்கும் மேலாக ஒரு நித்திய மற்றும் மறுக்க முடியாத உண்மை இருக்கின்றது.
85 ஒரு தீர்க்கதரிசியானவன் அவன் தான் கடைசி தீர்க்கதரிசி என்று ஒருபோதும் சொல்லமாட்டான் ஏனெனில் உலகமானது அவனுடைய மரணத்தின் நாளின்போது நின்று விடாது. நீங்கள் பாம்பு அல்லது நண்டு நெபுலாவிலிருந்து வந்ததால் இதை ஏற்க மறுக்கிறீர்கள்.
86 பரலோகத்தில், ஒரு கன்றின் கை, இறக்கைகள் மற்றும் கால்களால் சிம்மாசனத்தைச் சுற்றி வரும் நான்கு ஜீவன்கள் தீர்க்கதரிசி செய்தியாளனை சுற்றி வரும் நான்கு ஊழியங்கள். மேலும் பூமியில், நான்கு ஊழியங்கள் தீர்க்கதரிசி செய்தியாளனை சுற்றி வருகின்றன.
87 வானத்தில் இருக்கும்போது, அனைத்து விண்மீன் திரள்களும் விண்மீன்களும் வடக்கு நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன; பூமியின் மேல் , ராஜாக்களும் மக்களும் ஆசாரியர்களும் தீர்க்கதரிசி செய்தியாளனை சுற்றி வருகிறார்கள்.
88 நமக்கு மேலே உள்ள வானத்தில், தேவன் படைத்த அனைத்தும் சந்திரன் உட்பட வடக்கு நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றது, பூமியில், தேவனிடமிருந்து வந்த அல்லது தேவனால் நிறுவப்பட்ட அனைத்தும் தீர்க்கதரிசி செய்தியாளனை சுற்றி வருகின்றன.
89 எசேக்கியேல் தீர்க்கதரிசி கேபார் நதிக்கு அருகில் இதைக் கண்டான், இது வடக்கிலிருந்து ஒரு சுழல் இயக்கத்தில் வந்த ஒளிரும் பித்தளை போன்ற நெருப்புச் சுழற்சியின் வடிவத்தில் இருந்தது. காக்குவ்.137-இல் நான் காட்டியபடி அது தேவனுடைய ஆவியானவர்.
90 வானத்தில், நட்சத்திரங்களும், வடக்கு நட்சத்திரத்தை சுற்றி வராத அனைத்தும் வானத்திலிருந்து வெளியேற்றப்பட்டன. பூமியில், கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், சுவிசேஷகர்கள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் வட நட்சத்திரத்தை சுற்றி வருவதில்லை, ஏனெனில் அவர்கள் இறந்துவிட்டார்கள். இஸ்லாம், கிறித்துவம், புத்த மதம், இந்து மதம் மற்றும் யூத மதம் ஆகியவை வடக்கு நட்சத்திரத்தை சுற்றி வருவதில்லை ஏனெனில் அவைகள் மரித்துவிட்டது.
91 நேற்று, அவர்களின் மூதாதையர்களான யூதர்கள், எகிப்தியர்கள், அரேபியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் வடக்கு நட்சத்திரமான துபனைச் சுற்றி வரவில்லை, இன்று அவர்கள் என்னைச் சுற்றி வரவில்லை, நாளை அவர்களின் சந்ததியினர் வடக்கு நட்சத்திர வேகாவைச் சுற்றி வரமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் சாத்தானின் நட்சத்திரங்கள் .
92 எகிப்திய, ஆஸ்டெக், இன்கா மற்றும் மாயா மதங்கள் மற்றும் நாகரிகங்களைப் போலவே, பூமியிலும் வடக்கு நட்சத்திரத்தை சுற்றி வராத அனைத்தும் மறைந்துவிடும். வடக்கு நட்சத்திரத்தை சுற்றி ஈர்ப்பு இல்லாத எந்த தேசமும் அமெரிக்காவைப் போல சரிந்து விடும்.
93 நேபுகாத்நேச்சார் உட்பட தேவன் பூமியில் அனுப்பிய அனைத்து நல்ல ராஜாக்களும் தங்கள் காலத்தின் வடக்கு நட்சத்திரத்தை இனங்கண்டு கொண்டனர். ஆனால் ஆகாப் போன்ற மோசமான ராஜாக்கள் தங்கள் காலத்தின் வடக்கு நட்சத்திரத்தை அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை. "அவர்கள் சத்தமிட்டனர் ..." என்பதில் பார்வோன் விசுவாசித்தான். "அவர்கள் சத்தமிட்டனர் ..." என்பதில் கோராவும் தாத்தானும் விசுவாசம் வைத்தனர். ஆகாபும் யேசபேலும் பாகாலின் தீர்க்கதரிசிகளும் "அவர்கள் சத்தமிட்டனர்..." என்பதில் விசுவாசம் வைத்தனர், அவர்களிடம் இன்றுள்ள பாஸ்டர்கள் மற்றும் தலைவர்கள் போன்று லூயிஸ் செகாண்ட் வேதாகமங்கள் இருந்தன. ஆனால் இன்று தாவீது ராஜா என்னைப் போன்று நட்சத்திரங்களை நேசித்தான், அவன் ஒரு வடக்கு நட்சத்திரத்தை விசுவாசித்து அதை தனது அடையாளமாக மாற்றினான். தாவீதின் நட்சத்திரம்.
94 நீங்கள் உங்களிடம் மதங்கள், புனித புத்தகங்கள் மற்றும் கோட்பாடுகளை கொண்டிருக்கிறீர்கள், அது உங்களைத் தொந்தரவு செய்யவில்லை, ஆனால் உங்களுடைய கண்களை உயர்த்துங்கள், ஆசியாவிற்கான நட்சத்திரங்களின் விண்மீன், ஐரோப்பாவிற்கு இன்னொன்று, அமெரிக்காவிற்கு இன்னொன்று, ஆப்பிரிக்காவிற்கு இன்னொன்று இருக்கின்றதா? கறுப்பர்களுக்கு நட்சத்திரங்களின் விண்மீனும், வெள்ளையர்களுக்கு நட்சத்திரங்களின் மற்றொரு விண்மீனும் என்று இருக்கின்றதா? புத்த மதத்தத்திற்கு என்று நட்சத்திரங்களின் விண்மீன், இன்னொன்று இந்து மதத்திற்கும், யூத மதத்திற்கு இன்னொன்றும் அதன் தலைவரையோ அல்லது அதன் புனித புத்தகத்தையோ சுற்றிக் கொண்டிருக்கிறதா?
95 பூமியின் சபைகள் அல்லது மதங்கள் தேவனுடைய நட்சத்திரங்களின் விண்மீன்களாக இருந்தால், அவை அனைத்தும் அவற்றின் காலத்தின் ஒரே வடக்கு நட்சத்திரத்தை சுற்றி வரும். மேலும் வடக்கு நட்சத்திரம் ஒரு புனித புத்தகம் அல்ல, ஆனால் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளர்.
96 மேலும் எந்த புனித புத்தகமும் வடக்கு நட்சத்திரத்தைச் சுற்றிவராமல் அல்லது வடக்கு நட்சத்திரத்தைச் சுற்றி வரச் சொல்லவில்லை என்றால், அது ஒரு சாத்தானிய புத்தகம், அது எரிக்கப்பட வேண்டும். அங்கே பல புனித புத்தகங்கள் உள்ளன. அங்கே தோரா, வேதாகமம், குர்ஆன், வேதம், பகவத்-கீதை உள்ளது, ஆனால் ஒரு புனித புத்தகமோ அல்லது ஒரு மதத்தின் கோட்பாடுகளோ தேவனுடைய சொந்த கைகளால் எழுதப்பட்ட நட்சத்திரங்களின் விண்மீன்களுடன் ஒத்துப்போகவில்லை என்றால், வடக்கு நட்சத்திரத்தை சுற்றி வரும்படியாக கூறி, இன்று அதை நிராகரிக்கவும். இரவில் நீங்கள் வானத்தில் காணும் அனைத்தும், அவை தேவனுடைய கைகளிலிருந்து வந்த மாறாத வேதங்கள், ஒருபோதும் திருத்தப்படாத வசனங்கள்.
97 துபன் நட்சத்திரம் தான் கடைசி வடக்கு நட்சத்திரம் என்று உங்களுக்குச் சொல்லும் எந்த மதமும் அல்லது புனித புத்தகமும் ஒரு சாத்தானிய மதம் அல்லது புத்தகம். சார்லஸ் ரஸ்ஸல், ஜோசப் ஸ்மித், மஹோமெட், பிரன்ஹாம் அல்லது நாசரேத்தின் இயேசு தான் கடைசி வடக்கு நட்சத்திரம் என்று சொல்லும் எந்த மதமும் அல்லது கோட்பாடும் அல்லது புனித புத்தகமும் சாத்தானியமானது.
98 மேலும், முஸ்லீம்களே, நீங்கள், "மஹோமெட் தான் கடைசி வடக்கு நட்சத்திரம்" என்று கூறும்போது, உங்கள் மசூதிக்கு மேலே உள்ள சந்திரனும் நட்சத்திரமும் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று கூறுகின்றன. தொழுகைச் செய்ய மெக்காவை நோக்கி திரும்பும் நீங்கள் அல்லது காபாவைச் சுற்றி வர மெக்காவுக்குச் செல்பவர்கள், உங்கள் மசூதிக்கு மேலே உள்ள சந்திரனும் மற்றும் நட்சத்திரமும் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று கூறுகின்றது.
99 உங்களுடைய நபி மாஹொமட் பூமியில் இருந்திருந்தால், உங்களுடைய வடக்கு நட்சத்திரம் மெக்காவாக இருக்குமா, அல்லது காபாவாக இருக்குமா அல்லது மாஹொமத்தாக இருக்குமா ? அல்லாஹ் குர்ஆனை தீர்க்கதரிசி மஹொமத் மூலமாக அல்லது காபா மூலமாக வெளிப்படுத்தினானா? வடக்கு நட்சத்திரம் எப்போதாவது ஒரு கல்லாக இருந்ததுண்டா?
100 மேலும் பிரன்ஹாமிஸ்ட்களே, "வில்லியம் பிரன்ஹாம் தான் கடைசி வடக்கு நட்சத்திரம்" என்று நீங்கள் கூறும்போது, வானமும் உங்கள் தலைக்கு மேலே உள்ள நட்சத்திரங்களும் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று கூறுகின்றன. மோர்மன் அல்லது யெகோவாவின் சாட்சிகளே, நீங்கள் "ஜோசப் ஸ்மித் அல்லது சார்லஸ் ரஸ்ஸல் தான் கடைசி தீர்க்கதரிசி" என்று நீங்கள் கூறும்போது, வானமும் உங்கள் தலைக்கு மேலே உள்ள நட்சத்திரங்களும் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று கூறுகின்றன.
101 கிறிஸ்தவர்களே, நீங்கள் "நாசரேத்தின் இயேசு தான் கடைசி வடக்கு நட்சத்திரம்" என்று நீங்கள் கூறும்போது, வானமும் உங்கள் தலைக்கு மேலே உள்ள நட்சத்திரங்களும் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று கூறுகின்றன. "பரிசுத்த ஆவியானவர் அல்லது அக்கினி ஸ்தம்பம் தான் எங்கள் வடக்கு நட்சத்திரம்" என்று நீங்கள் கூறும்போது, வானமும் உங்கள் தலைக்கு மேலே உள்ள நட்சத்திரங்களும் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று கூறுகின்றன.
102 வடக்கு நட்சத்திரம் ஒரு ஆவி அல்ல, உங்களைப் போன்ற ஒரு நட்சத்திரம். "எங்கள் நாட்டில், வடக்கு நட்சத்திரங்களும் உள்ளன" என்று நீங்கள் கூறும்போது, வானமும் உங்கள் தலைக்கு மேலே உள்ள நட்சத்திரங்களும் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று கூறுகின்றன.
103 வேறொரு வடக்கு நட்சத்திரம் இருக்குமானால், அது காக்குவ் பிலிப்புவாகிய எனக்கு அருகில் இருக்கும், வெளிப்படுத்துதல் 11-ல் எலியா மோசேக்கு அருகில் இருந்ததைப் போல, நாங்கள் ஒரு விண்மீனை உருவாக்கி, ஒரு நட்சத்திரத்தைப் போன்ற ஒரே ஒரு ஒளியை மட்டுமே தருவோம்.
104 ஒரு நட்சத்திரம் என்னைச் சுற்றாமல் அதைச் சுற்ற முடியாது. மேலும் வானமும் பூமியும் குழப்பத்தில் இருக்காது. "இன்று பூமியில் உள்ள ஒரே உண்மையான தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு தான் என்று ஏன் கூறுகிறார்?" என்று நீங்கள் சொல்லும்போது, உங்களுக்கான பதில் உங்கள் தலைக்கு மேலே உள்ள நட்சத்திரங்களில் உள்ளது. ஒரே ஒரு வடக்கு நட்சத்திரம் உள்ளது.
105 மேலும் நீங்கள், நான் சொல்வதைக் கேட்டபின், பூமியில் உங்கள் குறிக்கோளானது ஒரு நாள் தேவனோடு இருக்க வேண்டும் என்றால், உங்கள் மரணத்திற்குப் பிறகு, நீங்கள் ஒருபோதும் மற்றொரு நட்சத்திரத்தைச் சுற்றி அல்லது மெக்காவை நோக்கி திரும்ப மாட்டீர்கள், ஏனென்றால், ஏப்ரல் 24, 1993 அன்று கடவுளிடமிருந்து நான் பெற்ற கட்டளைக்கு ஏற்ப உங்களிடம் பேசினேன்.
106 மேலும் என்னை விசுவாசித்த நீங்கள் அனைவரும், நான் பூமியை விட்டு கடந்துபோகும்போது, வெளிப்படையான பாவ அறிக்கை எப்போதும் உங்களுடைய ஆராதனையின் தொடக்கமாக இருக்கும். நான் பூமியை விட்டு கடந்துபோகும்போது, பூமியின் அனைத்து சபைகளைப் போல நீங்கள் ஒருபோதும் காகிதங்களை உருவாக்க மாட்டீர்கள். நீங்கள் ஒருபோதும் லூயிஸ் செகாண்ட் வேதாகமத்தை அல்லது ஒரு இறையியல் தயாரிப்பைப் பயன்படுத்த மாட்டீர்கள்.
107 நான் பூமியை விட்டு வெளியேறும்போது, ஒருபோதும் பிரன்ஹாமிஸ்டுகளைப் போல தேவாலயங்களை கட்ட வேண்டாம், ஏனென்றால், ஒரு அரசாங்கம் உங்களை அங்கே பிரார்த்தனை செய்ய அனுமதித்தால், மற்றொரு அரசாங்கம் வந்து உங்களைத் துன்புறுத்தி மூடிவிடும்.
108 நான் பூமியை விட்டு வெளியேறும்போது, திருச்சபையை அரசாங்கத்திற்கு அல்லது தேவனுக்கு அல்லது சீசருக்கு கீழ்படிந்து இருக்க வேண்டுமா என்பதை பற்றின விவாதங்களில் நேரத்தை அல்லது நாட்டு யதார்த்தத்தின் வாதங்களை முன்வைக்க மாட்டீர்கள். நீங்கள் பின்பற்றப்போகும் தீர்க்கதரிசி என்னைப் போலவே தவறிழைக்காத தன்மையின் முத்திரையைப் கொண்டிருப்பார்.
109 நான் பூமியை விட்டு வெளியேறும்போது, ஒரு புத்தகம் அல்லது மரித்த தீர்க்கதரிசியின் சடலம் அல்லது ஒரு பாஸ்டர் ஒருபோதும் உங்களின் வடக்கு நட்சத்திரமாக மாறாது, எனக்கு பின்னால் வரும் வடக்கு நட்சத்திரத்தைத் தேடுவதில் நீங்கள் ஒருபோதும் சோர்வடைய மாட்டீர்கள், இதனால் நீங்கள் மைல்கல் இல்லாமல் கடலிலோ அல்லது பாலைவனத்திலோ உங்கள் வாழ்க்கையின் அனைத்து நாட்களிலும் நடக்க மாட்டீர்கள்.