(2003 ஏப்ரல் 20 ஞாயிறு காலை லோகாட்ஜரோ, ஆபிட்ஜான் - ஐவரி காஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1முதலாவதாக, தானியேல் புத்தகத்தில் உள்ள ஒரு கேள்விக்கு நான் பதில் அளிக்க விரும்புகிறேன்... தானியேல் 2 ஆம் அதிகாரத்தில் உள்ள பசும்பொன்னாலான தலையும் தானியேல் 7 ஆம் அதிகாரத்தில் உள்ள சிங்கமும் கிமு 606 முதல் 538 வரை உலகத்தின் மேல் ஆதிக்கம் செலுத்தின பாபிலோன் சாம்ராஜ்யமாக இருக்கிறது. கிமு 1600 முதல் 1200 வரை எகிப்தும் உலக வல்லரசாக இருந்தது என்பதையும் நினைவு கூறுகிறேன். நல்லது. தானியேல் 2 ஆம் அதிகாரத்தில் உள்ள வெள்ளியினால் ஆன மார்பும் புயமும், தானியேல் 7 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கரடியும் மேதிய-பெர்சிய சாம்ராஜ்யத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. வெண்கலத்தினாலான வயிரும் தொடையும், அந்த சிறுத்தையும் உலக கிரேக்க சாம்ராஜ்யமாக இருக்கிறது. மேற்கு ரோமாபுரியான, வாட்டிகன் தான் இரும்பாக இருக்கிறது, மேலும் களிமண்ணாக இருப்பது கிழக்கு ரோமாபுரி, அதுதான் 1054 ஆம் வருடம் ரோமாபுரியிலிருந்து பிரிந்து வந்த வைதீக சபை.வெளிப்படுத்தல் 11 ஆம் அதிகாரம் 7 ஆம் வசனத்தில் நாம் ரோமாபுரியை காண்கிறோம். மேலும்அவளைநாம் தானியேல் 7 ஆம் அதிகாரத்தில் உள்ள நான்காவது மிருகமாகவும் காண முடிகிறது, மேலும் வெளிப்படுத்தல் 13:2ன் மற்ற எல்லா மிருகங்களின் அச்சடையாளமும், அதற்குள், இருப்பதை நாம் காண்கிறோம்.
2நாம் இப்பொழுது தானியேல் 9:23 முதல் 27 வரையிலான வசனங்களுக்கு வருவோம். அது இஸ்ரவேல் தேசத்தோடு தேவன் செய்து கொண்ட உடன்படிக்கையும், சமாதானத்தின் எழுபது வாரங்களும் பற்றிய காரியமாக இருக்கிறது; அது புறஜாதிகளோடு அல்ல ஆனால் இஸ்ரவேலுடன். நெகேமியா 2 ஆம் அதிகாரம் வசனம் 25 ல், அது கிமு.455 ஆம் வருஷத்தில் துவங்கி கர்த்தராகிய இயேசுவின் ஞானஸ்நானம் மட்டுமாக, "ஏழு வாரங்களும் அறுபத்தி இரண்டு வாரங்களுமாம்"; சில வேதாகம பதிப்புகள் கூறுவதுபோல அது "அறுபத்தி இரண்டு வாரங்களுக்குள் இருக்கும் ஏழு வாரங்கள்" அல்ல. ஆனால் "ஏழு வாரங்களும் அறுபத்தி இரண்டு வாரங்களுமாம்". அது 69 வாரங்களை தருகிறது, அது 483 ஆண்டுகளாக இருக்கிறது, மேலும் அதில் ஒரு தீர்க்கதரிசன வாரம் மீதமாகிறது, அதை ஏழு ஆண்டுகள் என அழைக்கலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் தமது ஊழியத்தை அந்த ஒரு வாரத்தின் பாதிவரையில் செய்து முடித்தார், அதை மூன்றரை வருடம் என கூறலாம், மேலும் அந்த வாரத்தின் மத்தியில் இஸ்ரவேலுக்காக பலி செலுத்துதல் நிறுத்தப்படுகிறது. தேவனால் புறஜாதிகளிடமாக திரும்பவும் முடிகிறது. ஆனபடியால் இஸ்ரவேலுக்காக அதில் பாதி வாரம் மட்டுமே மீதமிருக்கிறது, அதில் அவர்கள் மோசே மற்றும் எலியாவினூடாக மேசியாவை மறுபடியும் பெற்றுக்கொள்வார்கள்.
3கர்த்தராகிய இயேசுவின் ஊழியத்திற்கு பின்பு, இராயனுடைய ஜனம், அதாவது ரோமாபுரி எருசலேமை முற்றுகையிட்டு அழித்துப்போட்டது. பிறகு ரோமாபுரி திரளான கூட்டத்தாரோடு, அதாவது புறஜாதிளோடு கத்தோலிக்க சபையின் மூலமாக, சபைக்காலத்தின் ஒரு வாரமளவும் உடன்படிக்கை செய்துக்கொண்டது.இந்த ஏழு சபைக் காலத்திலே தேவன் புறஜாதிகளையெல்லாம் சந்தித்து, பிறகு இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களை சந்திக்க வேண்டும். அவர் பெத்சாயிதாவிலே அப்பங்களை பெருகப் பண்ணினதை கவனிப்பீர்களானால், அங்கே அவர்கள் மீதமானவற்றை பணிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். மறுபடியுமாக இரண்டாம் முறை அப்பத்தை பெருகச் செய்தபோது ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர். இவைகள் வரபோகிற காரியங்களை எதிர்ப்பார்க்கிற தீர்க்கதரிசன நடபடிகளாக இருக்கிறது. அந்த பன்னிரண்டு கூடைகள் இஸ்ரவேலின் பண்ணிரண்டு கோத்திரங்களும், அந்த ஏழு கூடைகள் புறஜாதிகளுடைய திருச்சபையின் ஏழு காலங்களுமாக உள்ளன. ஆனால் இரட்சிப்பைப் பொறுத்தவரை, தேவன் எல்லா நேரங்களிலும் தலைமுறையால் கையாளப்பட்டிருக்கிறார், காலத்தின் அடிப்படையில் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4மிக நன்று. இப்பொழுது நாம் நம்முடைய பொருளுக்கு செல்லலாம். பரிசுத்த ஆவி என்பது தேவனே. ஆகையால் அவர் வார்த்தையின் மீதேயல்லாமல் வேறு எதன்மேலும் வரமாட்டார்.தவறான உபதேசங்களைக் கொண்டிருக்கும் ஒருவன் மேல் உண்மையான பரிசுத்த ஆவியானவர் வரமாட்டார். வேதத்தின் பிரகாரமாக பார்ப்போமானால் பரிசுத்த ஆவியானவர் வார்த்தையை முந்திச் செல்ல மாட்டார்.இதுவே கொர்னேலியுவுடனான காரியமாக இருந்தது.
5ஒவ்வொரு ஆவியும் ஈர்க்கப் படுவதற்கான ஒரு அடிப்படையை கொண்டிருக்கும். இயேசு வார்த்தையாக இருந்தார், ஆனபடியினால் பரிசுத்த ஆவியானது அவர் மேல் வந்து தங்கியாக வேண்டும். அது எப்பொழுதும் வார்த்தையானது தீர்க்கதரிசியினிடத்திற்கு மட்டுமே வருவதை போன்ற ஒன்றாக உள்ளது. இயேசு தாமே வார்த்தையாக இருந்தார், அவர் தீர்க்கதரிசியான யோவானிடத்திற்கு வந்தார். ஆவியின் குறியிலக்கு அது வார்த்தையாக மட்டுமே இருக்கிறது.
6ஒரு மாயமந்திரப் புத்தகத்தை நீங்கள் பெற்ற மாத்திரத்திலேயே நீங்கள் ஒரு பிசாசை பெற்றுக் கொள்கிறீர்கள். மரித்தவர்கள் உங்களோடு தொடர்ப்பில் இருக்கிறார்கள் என எப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களோ அப்பொழுது நீங்கள் மரித்தோரின் ஆவிகளோடு தொடர்புகொள்கிற கொள்கைக்குரிய சில பிசாசுகளை கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு தவறான நம்பிக்கைக்கு பின்பாகவும், ஒவ்வொரு தவறான உபதேசங்களுக்கு பின்பாகவும் ஒரு பிசாசு இருக்கிறது. ஆகவே ஜாதகத்தை பார்ப்பது விபசாரத்திற்கு இணையான துன்மார்க்க காரியமாக இருக்கிறது. ஒரு மாந்திரீக புத்தகத்தையோ அல்லது ஒரு சுவிசேஷக புத்தகத்தையோ வைத்திருப்பவன் விக்கிரகாராதனைக்கு உரிய பொருள்களை வைத்திருக்கும் ஒருவனைப்போல இருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
7கர்த்தரிடத்திற்கு வருவதற்கு முன்பு, சில ஜனங்கள் இயற்கைக்கு மேம்பட்டவைகளையும் இந்த உலகத்திற்குரிய ஆஸ்திகளையும் நாடின வேளையில், விக்கிரகாராதனைக்குரிய பிசாசுகள், மாயமந்திர ஒழுங்குகள், இஸ்டோரிஸம், எண் கணிதம், ஜோதிடம், போன்றவற்றோடு கூட்டு வைத்துக் கொண்டு தங்களை நிலைப்படுத்திக் கொண்டார்கள். நாம் கர்த்தரிடத்தில் வரும் பொழுது எவ்விதமான நடக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்? அந்த வகையான புத்தகங்களை பிறருக்கு கொடுக்க வேண்டுமா அல்லது வீசி ஏறிய வேண்டுமா? அப்போஸ்தலர்-19:19: "மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்." என வேதாகமம் கூறுகிறது. ஏன்? இவ்விதமான புத்தகங்களையும் பொருட்களையும் நீங்கள் வைத்துக் கொண்டு தேவனிடத்தில் அவருடைய ஆவியை தாரும் என்று கேட்க்க முடியாது! நீங்கள் ஒரு சுவிசேஷக புத்தகத்தையோ அல்லதுசில சுவிசேஷக ஒலிநாடாக்களையோ வைத்துக் கொண்டு, தேவனிடத்தில் பரிசுத்த ஆவியை தாரும் என கேட்க முடியாது. ஒரு கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக சபையினுடைய அல்லது பிரன்ஹாமிஸ்டுகளுடைய வேதசாஸ்திரத்தில் விசுவாசம் வைத்துக்கொண்டு உங்களால் தேவனிடத்தில் பரிசுத்த ஆவியை தரவேண்டும் என கேட்க முடியாது.
8நீங்கள் பார்க்கின்ற ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் பிசாசுகள் இருக்கின்றது, அதினிமித்தம் உறுதியான நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும். ஒரு பொருள் தவறு என்று தெரிந்த பிறகும் அதை மற்றவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. உங்களுக்கு நன்மையாக இல்லாத ஒன்றை, உங்களுடைய நண்பன் விரும்பினாலும் ஏன் அதை கொடுக்க வேண்டும்? இதற்கு பின்பாக பொல்லாத ஆவிகள் இருப்பதை அறிந்தநீங்கள் ஒரு போதும் அவ்விதமான ஒலிநாடாக்களையோ, புத்தகங்களையோ அல்லது மற்ற சுவிசேஷக ஆவணங்களையோ அவர்களுக்கு கொடுக்கக் கூடாது. உலகத்திலோ அல்லது சபைகளிலோ உள்ள இந்த மனிதர்களுக்குப் பின்பும், ஒலி நாடாக்கள் மற்றும் புத்தகங்கள் பின்பும் சில அபிஷேகங்கள் இருக்கின்றன.
9இன்று, நடுராத்திரி சத்தம் பூமியின் மேல் ஒலிக்கின்ற வேளையிலே, நீங்கள் ஒரு லுயிஸ் செகண்டு, தாம்ப்சன், ஸ்கோஃபீல்டு வேதாகமங்களையும் மற்றவைகளையும் வைத்துக் கொண்டு பரிசுத்த ஆவியையும் கொண்டிருக்க முடியாது. ஒரு காலம் வரை, அவைகளை வைத்திருந்தது தவறு இல்லை; ஆனால் தீர்க்கதரிசனத்தின் ஆவியானது இப்பொழுது நீங்கள் அதை வைத்துக்கொள்வதை தடைசெய்கிறது. அவைகளை பிசாசின் குமாரர்களுக்கென்று விட்டு விடுங்கள். நீங்கள் அவைகளை வைத்துக் கொண்டு ஒரு போதும் பரிசுத்த ஆவியை கொண்டிருக்க முடியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் அதை உங்களுக்கு கூறுகிறேன். எல்லா காரியங்களும் இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களினால் ஆளுகை செய்யப்படுகிறது. ஆகையால் அப்பேற்பட்ட காரியங்களில் இருந்து உங்களை விலக்கி கொள்ள வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்.]
10இப்பொழுது கவனியுங்கள், சாத்தானானவன் நற்காரியங்களயைும் செய்து சத்தியத்தையும் கூட கூறுவான், அதினால் தான் ஜனங்கள் அவனை நாடி ஓடுகிறார்கள். ஆனால் நமக்கோ அவைகள் எல்லாம் பொய்களாயிருக்கிறது. சாத்தான் ஒரு மாயவித்தைகாரனை அல்லது ஒரு குறிசொல்லுகிறவனை கிறிஸ்துவத்திற்குள் கொண்டுவரவும், அனுபவங்களை சொல்லவைக்கவும், அத்தோடு சாத்தானின் தந்திரங்கள் என அழைக்கப்படுகிறவைகளை விவரிக்கச் செய்யவும் முடியும். இப்படிப்பட்ட காரியங்களின்பெரில் நான் உங்களை எச்சரிக்கிறேன். இந்த காரியங்களின் தொடர்பாக சில சகோதரர்கள் என்னிடத்தில் ரிக் ஜாய்னரால் எழுத்தப்பட்ட “கடைசி யுத்தம்” என்ற புத்தகம் மற்றும் ஜான் ஸ்க்வாபின் சில பிரசுரங்களை கொடுத்தார்கள். அவ்விதமான அநேக புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள், ஒலிநாடாக்கள் அனைத்தும் அப்போஸ்தலர் 19:19-ன் படியாக அக்கினிக்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது. அவைகளில் சில டியோன் ராபர்ட், ஜான் பாப்டிஸ்டு நீல்பென், டாமி ஆஸ்பான், ரெபெக்கா ப்ரௌன், யோங்கி சோ, பென்னி ஹின்,... ஆகியோரின் புத்தகங்களாம்; நான் வெளியரங்கமாக அவை எல்லாவற்றையும் சுட்டெரித்தேன். ஆமென்!
11இந்த விதமான காரியங்களினால் தான் தேவன் தமமுடைய ஆவியை கொடுக்காமால் இருக்கிறார். ஏனெனில் ஜனங்கள் எது சரி ஏது தவறு என்ற பகுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள். இவ்வகையான எல்லா காரியங்களிலிருந்தும் தேவனுடைய வார்த்தையானது ஒரு முறையான வேறுபிரித்தலை கட்டளையிடுகிறது. ஜான் ஸ்க்வாப் எழுதின புத்தகத்தை வாசித்துக் கொண்டு உன்னால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை கேட்க முடியாது. நம்முடைய பழைய துருத்திகளை வெறுமையாக்குவதே நமக்கு தேவையாக இருக்கிறது. மத்தேயு 9:17 "புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதும் இல்லை;" என்று கூறுகிறது. அப்படிபட்ட காரியமானது தவறாக இருக்கிறது என்று நான் கூறும் பொழுது, "அவைகளுக்குள்ளே நல்ல காரியங்களும் உண்டு" என்று சொல்ல வேண்டாம். அவைகளை நீங்கள் காண்கையில் பொற்தகட்டால் மூடப்பட்ட சொரூபங்களாக காணவேண்டும். ஆமென்!
12இப்பொழுது கவனியுங்கள், ஒரு நபர் பிசாசினால் பீடிக்கப்பட்டிருக்கும் பொழுது, அந்த ஆவிதான் அவனுடைய செய்கைகளை கட்டுப்படுத்துகிறது. நற்காரியங்களைபும் அதுவே கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, இயேசு கிறிஸ்துவின் பெயரால் தான் ஞாணஸ்தானம் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறதான ஒரு புத்தகத்தை ஓர் நாளில் ஒரு கத்தோலிக்க பாதிரி எழுதுகிறான் என்றால், அது சாத்தானின் தந்திரம் என்றுநாம் அறிந்துகொள்ளவேண்டும். ஓர் நாளில் சுவிசேஷக சபையினர் அருமையான துதிபாடல்களைகொண்ட ஒலிநாடாக்களை தயாரிக்கையில், அதை குறித்து நாம் அக்கறையற்றவர்களாயிருப்போம். குறிசொல்லுகிற ஆவியின் அதே அபிஷேகம் தான் இதை தயாரிக்க அவனை ஊக்குவித்தது. அந்த ஒலிநாடாக்கள் எல்விஸ் பிரஸ்லி, பாப் மார்லி, மற்றும் மடோனாவினுடைய ஒலிநாடாக்களை போன்றே பயங்கரமானது.
13இந்த காரியங்களை குறித்த ஞானமானது நமக்கு அவசியமானதாயிருக்கிறது. நான் கர்த்தருடைய நாமத்திலே உரைக்கிறேன், இது போன்ற காரியங்களில் எதையும் தொடவேண்டாம்! உங்களுக்கு ஒரு தொந்தரவாகவும், இடறலடைவதற்கு ஒரு காரணமாகவும் நான் இல்லாமலிருந்தால் நீங்கள் சந்தோஷமாயிருப்பீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்.]
14இயேசு கூறின எல்லாவற்றையும் சரியாக புரிந்துகொண்டதினால் அப்போஸ்தலர்கள் அவரை பின்பற்றவில்லை என அறிந்து கொள்ளுங்கள். இயேசு: "என் இரத்தத்தை குடித்து என் மாம்சத்தை புசிக்காதவன் எனக்கு பாத்திரனல்ல" என்றார். அப்போஸ்தலர்களுக்கு அதற்கான அர்த்தம் தெறியாதிருந்தும் அவரை பின்பற்றினார்கள், ஏனெனில் இயேசு யார் என்பதின் வெளிப்பாட்டை அவர்கள் கொண்டிருந்தார்கள். அவர்களது நேரத்தின் தீர்க்கதரிசி செய்தியாளனுடன் நேருக்குநேராக வருகையில் ஒரு தலைமுறையிலிருக்கும் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அதைத்தான் செய்வார்கள். ஏப்ரல் 24, 1993 அன்று என்னிடம் பேசி, என்னை அனுப்பினது சர்வல்லமையுள்ள தேவன் என்று நீங்கள் விசுவாசித்தால், எளிமையாக அதை விசுவாசியுங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்.]
15ஆனால் இந்த காரியங்களையெல்லாம் குறித்து என்ன? சாத்தானின் முழு அமைப்பிலிருந்தும் ஒரு தனிச் சிறப்புமிக்க வேறுபிரித்தலாக இது இருக்கிறது. வெளி 12:14: “சர்பத்தின் முகத்திற்கு துரமாக..” என்கிறது. அந்த புத்தகமோ அல்லது அந்த ஒலிநாடாக்களோ எவ்வளவு நன்றாக இருந்தாலும் ஒரு பொருட்டல்ல அவைகளுக்கு விலகி இருங்கள். நீங்கள் அவைகளில் ஏதேனும் கொண்டிருப்பீர்களானால், அதை விட்டு வெளியே வாருங்கள். அந்த புத்தகங்களை வாசிப்பதற்கு நீங்கள் கடமைப்பட்டவர்களாய் இருக்கிறீர்களா? கிறிஸ்தவ வானொலி நிலைய நிகழ்ச்சிகளை அல்லது அந்த ஒலிநாடாக்களை கேட்பதற்கு நீங்கள் கடமைப்பட்டவர்களா? ஏன்? வஞ்சிக்கப்படாமால் இருங்கள், ஏனெனில் அந்த காரியங்களுக்கு உங்களை வழி நடத்துவது ஒரு நல்ல ஆவியல்ல! இன்னுமாகஒரு சுவிசேஷக புத்தகத்திலோ, சுவிசேஷக வானொலியிலோ, அல்லது தொலைக்காட்சியிலோ உங்களால் நல்ல காரியங்களை பார்க்க முடிகிறது என்றால், உங்களுடைய நேரத்தின் தீர்க்கதரிசன வெளிப்பாட்டை நீங்கள் இன்னுமாகபுரிந்துக் கொள்ளாமல் இருக்கிறீர்கள.
16உங்களிடத்தில் யாரோ ஒருவர்: "வந்து பார், மந்திரவாதி ஒருவர் குறைந்தது சத்தியத்தையாவது பேசுகிறார்" என்று அழைத்தால், நீ அவனுடன் செல்வாயா? நீ அங்கே போகாதபோது, பிறகு நீ ஏன் ஒரு கத்தோலிக்க, புரோட்டஸ்டண்டு, சுவிசேஷக சபை அல்லது பிரன்ஹாமிஸ்டு ஆராதனைகளுக்கு செல்ல வேண்டும்? ஒரு வேளை யாரோ ஒருவர் இந்த பூமியிலே ஜெயத்தை பெருவதற்கு ஜாதகத்தில் சில வித்தைகளை உனக்கு கற்றுக் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வாயா? பிறகு ஏன் விடுதலைக்கான சுவிசேஷக புத்தகங்கள் மற்றும் மற்ற காரியங்களை நீ படிக்க வேண்டும்? உதாரணத்திற்கு,ஒரு கத்தோலிக்க பாதிரியோ அல்லது ஒரு சுவிசேஷக சபையின் தீர்க்கதரிசியோ விடுதலைக்கென்று ஒரு புத்தகத்தை எழுதுவானாகில் நீயும் அதை பகுத்தரியாமல் படித்திருப்பாயானால், நீ எந்த வார்த்தையின் ஜீவனை கொண்டிருப்பாய் மேலும் எந்த தேவன் அற்புதத்தினாலும் அதிசயத்தினாலும் அதை நிரூபணப்படுத்துவார்? கத்தோலிக்க, புரோட்டஸ்டண்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு தலைவர்களும் அவர்களுடைய புத்தகங்களும், அவர்களுடைய பிரசங்கங்களும் மற்றும் அவர்கள் உருவாக்குகின்ற அனைத்தும் சாத்தானின் கருவிகளாயிருக்கின்றது என்பதை நீங்கள் அறியவேண்டியவர்களாக இருக்கிறீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
17அவர்கள் துவங்கினபோது, அது தேவனால் உண்டானதாக இருந்தது என்று சொல்லாதீர்கள். இல்லை சகோதரனே! இந்த வகையான சபைகளாயினும், தேவனுடைய மனிதன் என்று சொல்லிக் கொள்கிறவர்களாயினும் அவைகள் எல்லாம் நேற்றும் இன்றும் என்றும் சாத்தானாகவே இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்]. ஒரு ஆரஞ்சு மரத்தையோ, ஒரு மான்டரின் மரத்மோ, ஒரு திரட்சை செடியோ, அல்லது ஒரு எலுமிச்சை மரமோ வளருவதை கவனியுங்கள். அது ஆதியிலே என்னவாக இருந்ததோ அதுவே முடிவிலும் பிரத்தியட்சமாகிறது. ஆகவே தான் மத்13:24 முதல் 30 ல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர்அவைகளை அந்த நேரமட்டும் விட்டுவிடும்படி கூறினார்…
18காலங்களின் முடிவில் அவை அக்கினியில் சுட்டெரிப்பதற்கான கட்டுகளாக கட்டப்பட்டு இருக்கும்: பாப்டிஸ்டு கட்டு, அசெம்பளிஸ் ஆப் காட் கட்டு, நாற்சதுர சபை கட்டு, அவர்கள் எல்லோரும் ஒரே போதனையை பின்பற்றவில்லை ஆனால் சபைகளின் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்பை சார்ந்தவர்கள். அது ஒரு தொழுவத்திலே உள்ள வெள்ளாடுகளும் குட்டிகளும், பன்றிகள், நாய்கள், மாடுகள், காட்டுப்பன்றிகள் போன்றவை.காளைகள் ஒரு குறிப்பிட்ட விதானத்தில் கதறும், இன்னோரு பக்கத்தில் பன்றிகள் உறுமும், பாப்டிஸ்டு இந்த விதத்தில் கத்துவார்கள், மெத்தடிஸ்டு இன்னோரு விதத்தில் கத்துவார்கள், மேலும் குட்டிகள் இன்னோரு பக்கம் கத்திக் கொண்டிருக்கும். அந்த சபைகளில் தரித்திருக்க நீ ஒரு சாத்தானின் பிள்ளையாக இருக்க வேண்டும்!
19அவர்கள் எவ்வளவு உத்தமமாயிருந்தாலும், அவர்கள் எல்லோரும் நரகத்திற்குச் செல்வார்கள், நான் அதை உங்களுக்குச் சொன்னேன். நான் தேவனுக்கு முன்பாக உங்களுடைய இரத்தத்திற்கு உண்மையாக இருக்கிறேன்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்]. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் அவர்களுடைய பெயர் எழுதப்பட்டிருக்கவில்லை என வெளிப்படுத்துதல் 13:8 ல் வேதாகமம் கூருகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
20வெளிப்படுத்துதல் 6 ஆம் அதிகாரத்தை, முத்திரைகளை நினைவுகூறுங்கள், அந்தி கிறிஸ்து வெளியே வந்த பொழுது, ஒருவர் அதைக் குறித்து சிந்தித்து பார்த்தால் அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று எண்ணியிருந்திருப்பார்கள். ஆனால் பின்பு அவன் குதிரைகளை மாற்றின பொழுது நாம் அதை சாத்தான் என காண முடிகிறது. அவைகள் எல்லாம் வென்மை நிறம், வஞ்சித்தலாக இருக்கிறது. இவைகளே பின்பு என்னவென்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகையால் துவக்கத்தில் அது தேவனாக இருந்தது என்று கூற வேண்டாம்.
21அந்த சபைகளில் உள்ள அங்கத்தினர்களை குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இந்த சபைகள் எல்லாம் கதரேனருடைய கல்லரைகளாக இருக்கிறது மேலும் அவர்கள் எல்லோரும் கல்லரைகளில் இருந்து பழகிப்போன பயத்தியக்காரர்களாக இருக்கிறார்கள். ஏப்ரல் 24, 1993 க்கு பிறகு இந்த உலகத்தின் மீது எனக்கு ஒரு பொருப்பு இருக்கிறது. ஆகையால் ஒரு பாமர விவசாயி தான் விலகியோடுகிற சிற்றோடைகளின் அதே பிசாசை வழிபட ஒரு கத்தோலிக்க, புரோட்டஸ்டண்டு, சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு சபைக்கு போவதை நான் தடுக்கிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
22வெளிப்படுத்துதல்-17:8 ல் வேதாகமம் “சாத்தானின் பிள்ளைகள் ஆச்சரியப்படுவார்கள்...” என்று கூறுகிறது. ஆனால் நம்மை பொறுத்தவரையில், அவர்கள் பாதாளத்திற்கு போகிறார்கள் என்பதை நாம் அறிவோம். கத்தோலிக்கர்களையும், அஞ்ஞானிகளையும் குற்றப்படுத்த அவர்களின் சபை உறுப்பினர்களுடன் சேர்ந்துகொள்ளவேண்டாம், ஏனெனில் நாமும் அவர்களும் ஒன்றல்ல. அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பிசாசுகளை துரத்தினாலும், பாஷைகளில் பேசினாலும்,... உங்களுக்கு சில சொப்பனங்களை விவரித்து கூறினாலும் அதை குறித்து எதையும் அவர்களிடம் சொல்ல வேண்டாம். தேவன் அவர்களிடத்தில் பேசினாரென்றால், அது கொர்னேலியுவின் நேரத்தில் செய்தது போல, பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோலை உடைய நபரிடத்துக்கு வழியை காண்பிப்பதற்காகவே. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்]. மேலும் ஒரு சொப்பனத்தை விவரிப்பதற்கு, முதலாவது பேசின அந்த ஆவியை பகுத்தறிய வேண்டியது அவசியமாயிருக்கிறது. பிறகு அதற்கான வியாக்கியானத்தை தேவனிடத்திலிருந்தே பெற வேண்டியதாயிருக்கிறது.
23நாம் ஜனங்களை பிரசங்கபீடத்தில் ஏற்றி சொப்பனங்களை சொல்ல அனுமதிக்க முடியாது. பொதுவான பக்தி விருத்திக்கென்று தேவன் 9 வரங்களை கொடுத்திருக்கிறார். தேவன் திருச்சபைக்கு எதை கூற விரும்புகிறாரோ, அதை அவர் நேரடியாக பேசுவார். சபைக்கென்று ஒரு சொப்பனத்தை வைத்திருப்பாரானால், அதை அவர் கவனித்துக் கொள்வார். நீங்கள் ஒரு சொப்பனத்தையோ அல்லது ஒரு தரிசனத்தையோ கொண்டிருந்து, அது முக்கியமானதாக நீங்கள் கருதினால், அதை ஒரு மேய்ப்பனிடமோ அல்லது ஒரு அப்போஸ்தலனிடமோ சொல்லுங்கள், தேவையாக இருந்தால் அவர் தீர்க்கதரிசியிடம் கூறுவார்.
241994 ல், அந்த வருடத்தின் முடிவிலே, நான் ஒரு சொப்பனத்தை கொண்டிருந்தேன். ஒரு வாரம் சென்ற பின் "எழுப்புதல் கூட்டம்" என்ற ஒரு விஷேசித்த கூட்டம் ஒன்றில், நுற்றுக்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில், ஆவியானவர் உதவி மேய்ப்பன் மேல் இறங்கி என்னிடத்திற்கு வழி நடத்தி, அவர் என்னிடம் வந்து "கர்த்தர் உரைக்கிறதாவது" நான் உன்னிடம் என்ன கூறினேனோ, அதை எழும்பி நின்று இப்பொழுது கூறு என்றார். மேலும் ஆவியானவர் என் மீது இறங்கி வந்து என்னுடைய வாயில் வார்த்தையை வைத்தபொழுது, நான் எதை கண்டேனோ அதை கூறினேன். பிறகு 2004 ல், இந்த உதவி போதகர் நடுராத்திரி சத்ததை விசுவாசித்தார். நான் அவருக்கு மறு-ஞானஸ்நானம் கொடுத்தேன். அவர் தானே 1993 ல் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தவர்.
25இரண்டு முப்பர்கள் சபையை முற்றுகையிடுவதை கண்டேன், அவள் ஒரு மிகவும் அழகான வாலிபமான பெண்ணை போன்று, ஆனால் விபசாரியாக இருந்தாள். முப்பர்கள் அவளுடைய கழுத்தை நெரித்தார்கள். மேலும் அனேக இடங்களிலிருந்து பூருஷர்கள் வந்து அந்த வாலிபமான பெண்னை விடுவிக்கமுயற்சிப்பதை நான் வெளிப்பாட்டில் அறிந்தேன். ஆனால் அவர்களால் கூடாமற்போயிற்று ஏனெனில் அந்த இரண்டு முப்பர்களும் இரும்பினாலானவர்களாக இருந்தார்கள். காலப்போக்கில், சில வருடங்களுக்கு பிற்பாடு, தொழிற்ச்சாலைகளைஅரசு தனியார்மயமாக்கினதை அடுத்து முப்பர்களில் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் பணி நீக்கம் செய்யப்பட்டபின், அவர் மற்றொரு முப்பரோடு சபையை பிரிக்கும் படி எழும்பினார். ஐவரிகாஸ்டிலிருந்து முப்பர்களின் சங்கம் சமரசம் செய்ய வந்தார்கள், ஆனால் அது கூடாமற்ப்போனது. என்னுடைய வார்த்தையின் படியே எல்லா காரியமும் நடந்தது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
26இப்பொழுது முடிப்பதற்காக, நடுராத்திரி சத்தமானது இப்பொழுது எந்த ஸ்தானத்தில் உள்ளது என அறிந்து கொள்ளுங்கள். சாயங்கால செய்தி சபைகளில் ஏதாவது பரிசுத்த ஆவியை பெற்றிருப்பதாக கூறினால், அது ஒரு பொய்! ஒரு வேளை அவர்கள் முன்னமே அதை பெற்றுவிட்டதாக அவர்கள் கூறினாலும், அது ஒரு பொய்! அப்படியல்லவென்றால் அவர்கள் நடுராத்திரி சத்தத்தை ஏற்றுக் கொண்டு இருந்திருப்பார்கள். அது பிரன்ஹாம் கூடாரமோ அல்லது க்ரிபெல்டாக இருந்தாலும், அவர்கள் பெற்றது ஒரு குறிசொல்லும் ஆவிதான், அங்கு வெளிப்படப்போகிற அனைத்து காரியங்களும் வரங்களும் ஒரு பொருட்டல்ல, அது குறிசொல்லும் ஆவியே தான். கர்த்தர் இயேசுவின் நாமத்தில் நான் அதை கூறுகிறேன். அவர்கள்ஏப்ரல் 24, 1993 ன் தரிசனத்தின் கலப்பின விபசாரியாக உள்ளனர். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
27இந்த பிரசங்கத்திற்குப் பிறகு, நீங்கள் ஒவ்வொருவரும் தனிபட்ட விதத்தில் கூட பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை, பயிற்சிக்கத்தக்க சூழலில் இருக்க முடியும். அவர் இந்த மணி வேளையின் வார்த்தையின் ஆவியாக இருக்கிறார். மேலும் இது 1 கொரிந்தியர் 12 ஆம் அதிகாரத்தில் உள்ள எல்லா ஆவிக்குரிய வரங்களின் பிரத்தியட்சமாகுதலும் இதனோடேகூட இருக்கிறது. எல்லா காரியமும் ஒழுங்கில் இருக்கிறது, வார்த்தை அதன் பிறகு ஆவி! இது இந்த வழியாக யுதர்களுக்கு வந்தது, பின்பு சமாரியர்களுக்கு மேலும் இப்பொழுது ஜாதிகளுக்கு. நாம் ஏற்கனவே ஆவியை பெற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம் மேலும் நான் சொன்ன விதமாக, யேகோவாவின்தூதன், ஏப்ரல் 24, 1993 ன் தூதன் மறுபடியுமாக தம்மை வெளிப்படுத்துவார். உங்களுடைய கண்கள் அவரை காணும்! நான் அதை முன்னுறைக்கிறேன். ஒரு வார்த்தையையும் சந்தேகிக்க வேண்டாம் மேலும் சத்தியத்தை அறிந்த பிறகு வெளியிலிருந்து வேறு எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். அது உங்களுடைய கன்னித் தன்மையை பறித்து விடும்.
28உங்களுடைய மணி வேளையின் செய்தியை விசுவாசிக்கும் பொழுது, நீங்கள் எதையும் உணராமலிருந்தாலும்கூட, மீட்பின் நாளுக்கென்று பரிசுத்த ஆவியினால் நீங்கள் முத்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், மரிக்கும் வரை உங்களுடைய மணி வேளைக்குரிய செய்தியின்படி கிறிஸ்துவிற்குள்ளாக உங்களுடைய ஸ்தானத்தை காத்துக்கொள்ள வேண்டியது மட்டுமே. தீர்க்கதரிசியின் வாயிலிருந்து புறப்பட்டு வரும் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் வீசுவாசிக்க வேண்டும். ஏனெனில் தீர்க்கதரிசி தேவனுடைய வாயாக இருக்கிறான்.[ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
29பரலோகத்திலே, சிருஷிடிப்பின் பொழுது, "தேவன் நம்முடைய சாயலில் தூதனை சிருஷிட்டிபோமாக" என கூறினார் என நான் சொன்னால், அது அங்கே எழுதப்படா விட்டாலும், அதை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும், வெறுமனே விசுவாசிக்க வேண்டும். அறிவின்மேல் ஆழ்ந்த வேட்கைகொள்ளுதலில் இருக்கும் ஆபத்தைக்குறித்து நான் உங்களை எச்சரிப்பதை நிறுத்தமாட்டேன். ஜனங்களுக்கு அதிகமான அறிவைக் கொண்டு வருவது இந்த செய்தியின் நோக்கமல்ல ஆனால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்காகவே இச்செய்தி கொடுக்கப்பட்டது. அதை ஒரு போதும் மறந்து போக வேண்டாம்! உங்களுடை இருதயம் ஒரு போதும் ஒரு மரித்த, சடங்காச்சாரமான, ஆவிக்குரியவரங்கள் இல்லாத சபையை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவேண்டாம்.
30ஆனால் இந்த காரியங்களெல்லாம் என்ன? சகோதரரே, உயிரோடு இருந்து பரிபூரணத்தை அடைவதற்காக அநேக காரியங்கள் நம்மேல் சுமத்தப்படுகிறது! கிறிஸ்துவுக்குள்ளாக மரித்தவர்கள், பவுல் முதற்கொண்டு எடுத்துக் கொள்ளப்படுதலில் போகிற நம்மட்டுமாக எல்லோரும் ஒரே ஆவிக்குரிய பரிமாணத்தில் இருக்கின்றோம். நான் உங்களை தொடவேண்டாம் என்று கூறின அந்த சுவிசேஷக புத்தகங்கள் மற்றும் ஒலிநாடாக்களுக்கு அவர்களும் தூரமாயிருக்கவில்லையா? இந்த குறிசொல்லும் சபைகளுக்கு அவர்கள் தூரமாயிருக்கவில்லையா? ஆனபடியால் தான்இந்த இடத்தை, இந்த வனாந்திரத்தை, தேவன் திட்டம்பண்ணினார், மேலும் வெளிப்படுத்துதல் 12:14 ன் படி “சர்ப்பத்தின் முகத்திற்கு விலகி தூரமாக...” மத்தேயு 25:6 ன் இந்த செய்தியானது எல்லாவற்றிலிருந்தும் நம்மை வெட்டிவிடும். உங்களால் காணமுடிகிறதா? கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எப்படியாக உலகத்திலிருந்து வெட்டப்பட்டு இருக்கிறார்களோ, அதே விதமாக உயிரோடு இருக்கிற நாமும் இந்த உலகத்திலிருந்து ஒரு விசேஷித்த விதமாக வெட்டப்பட வேண்டும். ஆமென்!
31ஊழியத்திற்கு முன்பாக மோசே வனாந்திரத்திற்குள்ளாக சென்றான், யோவான் ஸ்நானகன் ஊழியத்திற்கு முன்பாக வனாந்திரத்திற்கு சென்றான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமும் சென்றார். இந்த வனாந்திரமானது சுத்தீகரிப்பின் ஒரு தவிர்க்க முடியாத ஒரு படி. இரண்டாவதாக வந்த தரிசனத்தை ஞாபகப்படுத்திப் பாருங்கள்: பாலைவனத்திலே மோசேயேடு இருந்ததை போல, பரலோகத்திலிருந்து மேகங்கள் மீது வந்த ஆவிக்குரிய மன்னாவை பெரும்படியாக நான் பாலைவனத்திற்குள்ளாக கொண்டு செல்லப்பட்டேன். அது நீங்களும் நானும் தான், நீங்கள் என்னோடு கூட இருந்தீர்கள். அல்லேலுயா! நாம் இப்பொழுது கடந்துபோய்க் கொண்டு இருப்பவைகளை வானமும் பூமியும் நிராகரிக்க முடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
32பத்து கன்னிகைகளின் உவமையானது இயேசுவின் ஊழியத்தின் முடிவாகவும் மத்தேயு 24 ஆம் அதிகாரத்தின் தீர்க்கதரிசனங்களின் உச்சகட்டமாகவும் இருக்கிறதை கவனியுங்கள். இவைகள் எல்லாம் எருசலேமிற்கு வெளியே ஒலிவ மலையிலே நடைபெருகின்றது. மேலும் அது சபைக் காலங்களின் முடிவில், இந்த நூற்றாண்டின் எல்லா மத அமைப்புகளுக்கு வெளியே, இன்றைக்கு நிறைவேறுகிறது. உங்களால் காணமுடிகிறதா? பலிபீடமானது திரும்ப அளிக்கப்பட்டிருக்கிறது. பாவம் எது என்பதை நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள் மேலும் நீங்கள் உத்தமமாக இருப்பீர்களேயாகில், உங்கள் மேல் இறங்கி வருகிற ஆவியை தடுக்கக்கூடிய எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
33இப்பொழுது இங்கே ஒரு கேள்வியானது வைக்கப்பட்டிருக்கிறது; அதை நான் வாசிக்கப் போகிறேன்: "சகோதரர் பிலிப்பு, நாம் இரட்சிப்பை இழக்க முடியுமா?" நல்லது. இரட்சிப்பு என்பது நித்திய ஜீவன். மேலும் ஒரே வடிவத்திலுள்ள நித்தியஜீவன் மட்டுமே உள்ளது, அதுதேவன் தாமே, அதை பரிசுத்த ஆவி என்று சொல்லலாம். இப்பொழுது, உங்கள் மேல் இருப்பது உன்மையான பரிசுத்த ஆவிதான் என எடுத்துக்கொண்டாலும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை உங்களுடைய ஆவியில் மட்டுமே பெற்று இருப்பீர்களானால் நிச்சயமாகவே நீங்கள் நரகத்திற்கு செல்வீர்கள். பாருங்கள்?
34ஆவியானது வரும் பொழுது சிலர் அதை ஆத்துமாவின் மட்டத்தில் பெருகின்றனர், அங்கே அவர்கள் மீட்பின் நாளுக்கென்று முத்தரிக்கப்படுகிறார்கள்; ஆனால் மற்றவர்கள் அதை சவுல், பிலேயாம் இன்னும் அது போன்றவர்களை போல தங்களது ஆவியின் மட்டத்தில் மாத்திரம் பெற்றுக் கொள்கிறார்கள். அதை பாருங்கள்? மழையானது புல்லின் மேலும் களைகள் மேலும் விழுகிறது என்று வேதாகமம் கூறுகிறது. இருப்பினும், களைகளின் மேல் விழுகிற உண்மையான பரிசுத்த ஆவியானது அதை இரட்சிப்பது இல்லை. நீங்கள் காண்கிறீர்களா? அது அவர்களுடைய ஆவியின் மட்டத்திலே இருக்கிறது! ஆனால் தேவனுடைய பிள்ளைகள் ஆவியை ஆத்துமாவின் மட்டத்திலே பெற்றுக் கொள்கிறார்கள் ஏனெனில் அவர்கள் விசுவாசத்தினால் தங்களது இருதயத்தில் வெளிப்பாட்டைப் பெற்று இருக்கிறார்கள்! அவர்கள் தங்களுடைய இருதயத்திலே வார்த்தையை பெற்று இருக்கிறார்கள்!
35இன்று இந்த ஊழியத்திலே, புத்தியுள்ள கன்னிகைகள், புத்தியில்லாத கன்னிகைகள், மற்றும் கலப்பின ஜனக்கூட்டத்தை நாம் கொண்டிருக்கிறோம். புத்தியுள்ள கன்னிகைகள் தேவபயத்தினால் செயல்படுவார்கள், தேவனுக்காக செயல்படுவார்கள். அதேநேரத்தில் புத்தியில்லாத கன்னிகைகளும் கலப்பினக்கூட்டத்தாரான பிசாசின் குமாரர்களும் வெளிப்படையான பாவ அறிக்கை பற்றிய பயத்திநிமித்தம் செயல்படுவார்கள். அவர்கள் நன்றாக செயல்படுவார்கள், தேவன் கேட்கிறார் என்பதற்காக அல்ல ஆனால் வெளிப்படையான பாவ அறிக்கையை தவிர்ப்பதற்காகவும், அல்லது தீர்க்கதரிசி இதை பற்றி தெரிந்து கொள்வாரோ அல்லது சகோதரில் யாராவது வெளியில் சொல்லி விடுவார்களோ என்னும் பயத்தினால் செயல்படுவார்கள். ஆனால் நம்மத்தியில் உள்ள உண்மையான தேவகுமாரர்கள் அவ்விதமாக நடந்து கொள்வதில்லை. இரட்சிப்பும், மீதமுள்ள அனைத்தும், அது இன்று நிகழ்கிறதாகஇருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
36தீர்க்கதரிசன வெளிப்பாடானது விசுவாசத்தினால் நேரடியாக இருதயத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால் புத்திக் கூர்மையினால் உன்னுடைய ஆவியிலே நீ அதை பெற்றுக்கொள்வாயானால், நீ ஆவியை பெற்றுக்கொள்வாய், ஆனால் ஆவி அது உன்னுடைய ஆவியின் மட்டத்திலேயே இருக்கும்... நீ வெறுமனே ஒரு அபிஷேகத்தைபெற்றுக் கொள்வாய், அது உனது நித்திய இரட்சிப்பிற்கான உத்தரவாதத்தை கொடுக்காது.
37இப்பொழுது, யாரோ ஒருவர் உங்களிடத்தில் வந்து, "நாம் கிரியைகளினால் அல்ல ஆனால் கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம், ஆனபடியால் நாம் குடிக்கலாம், பூகைபிடிக்கலாம், பெண்கள் பின்னே சுற்றி திரிந்தாலும் பரலோகத்திற்கு செல்லலாம்” என்று சொல்வானாகில், அவனிடமிருந்து விலகியிருங்கள். அத்தகைய அறிக்கையை ஒரு சகோதரன் தொடர்ந்து செய்வானாகில், உங்கள் மத்தியிலிருந்து அவனை துரத்திவிடுங்கள்! நான் நன்றாக ஜீவிக்கின்றேன் ஏனெனில் தேவன் பரிசுத்தத்தில் வாசம் பண்ணுகிறார், ஏனெனில் தேவன் என்னை இரட்சித்தார் மேலும் நான் தேவனுடைய பிள்ளையாயிருக்கின்றேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
38இப்பொழுது நாம் ஜெபிக்கலாம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, உண்மையும் சத்தியமுமானவரே, நடுராத்திரியின் சத்தமே, இன்று எங்களுடைய ஜெபமானது: கர்த்தராகிய இயேசுவே வாரும்! ஆம், ஆண்டவராகிய இயேசுவே வாரும்! ஆமென்! ஜெபம் செய்வோமாக.