



Kacou 147 (Kc.147) : என் தூதன் உனக்கு முன்பாக செல்வான் என் நாமம் அவனில் உள்ளது
ஜூலை 8, 2021 அன்று தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு உரைத்த வார்த்தைகள்
1 தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான், ஜூலை 8, 2021 அன்று ஐவரி கோஸ்ட் மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் நம்முடைய தலைமுறையில் கடவுளின் அன்பைக் கொண்டிருக்கும் அனைவருக்கும் உரையாற்றிய வார்த்தைகள்.
2 இன்று 2021 ஜூலை 8-ம் நாள். ஏப்ரல் 24, 2021 அன்று, கோவிட்-19 இருந்தபோதிலும், மெக்ஸிகோ மற்றும் பொலிவியாவைச் சேர்ந்த மிஷனரிகளான சீசர் எஸ்பார்சா, ஜான் டுரான் மற்றும் வில்பிரடோ ஹெர்னான் ஆகியோர் என்னைப் பார்க்க இங்கு வந்திருந்தனர். ஏப்ரல் 24, 1993-ன் தூதன் மற்றும் ஆட்டுக்குட்டியானவரிடம் பெற்றுக் கொண்ட கட்டளையின்படி நான் அவர்களைப் பிரதிஷ்டை செய்தேன், அவர்கள் சமாதானமாகத் திரும்பிச் சென்றனர்.
3 நல்லது, இந்த செய்தியில், இந்த ஆண்டு 2021-இல் காக்குவ் 146-க்குப் பிறகு, பல்வேறு நாடுகளில் நடக்கத் தொடங்கிய ஒரு வகையான ஆவிக்குரிய பிரத்தியட்சத்தை பற்றி இப்போது நான் பேசப்போகிறேன். ஆகவே நீங்கள் எச்சரிக்கப்படுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கும் இது செய்யப்படுகிறது. அவற்றில் ஒன்று மே 2, 2021 அன்று அபிட்ஜானில் தொடங்குகிறது.
4 அன்று, வெளிப்படையான பாவ அறிக்கையின்போது, லைபீரியாவைச் சேர்ந்த சகோதரர் மேடிசன் கூப்பரின் அறிக்கையானது தெளிவற்றதாக இருந்தது. பாவ அறிக்கை தலைவர் அவரிடம், விபச்சாரம் செய்யவில்லையா என்று கேட்டார். சகோதரன் கூப்பர் "இல்லை" என்று சொல்லி முடிப்பதற்குள் பலவந்தமாக சரிந்தபடி சுயநினைவை இழந்து அந்த அறையினுள் கீழே விழுந்தார். ஆனாலும், ஏழு பெண்களுடன் சேர்ந்து கொண்டு அவருடைய மனைவியை அவர் ஏமாற்றி வந்துள்ளார். என்ன நடந்தது என்பதை அப்போஸ்தலன் யானிக் மிகவும் ஆச்சரியத்துடன் என்னிடம் விளக்கினார். அவர் கூறினார், "தீர்க்கதரிசியே, என் வாழ்நாளில் இப்படி நடந்தது போல இதுவரை நான் ஒருபோதும் பார்த்ததில்லை, அவர் மரித்தவனைப்போல விழுந்தார், நாங்கள் அனைவரும் மிகவும் பயந்து போயிருந்தோம்."
5 மற்றொரு பிரத்தியட்சமானது புர்கினா பாசோவில் நடந்தது. இது ஐவரி கோஸ்ட்டுக்கு வெளியே உள்ளது. எடுத்துக்கொள்ளப்படுதல் வரை சபையானது உலகளாவியது, சபைக்கான கடவுளின் ஒவ்வொரு செயலும் எப்போதும் உலகளாவியதாக இருக்கும். இறந்தவர்கள் மற்றும் உயிருடன் இருப்பவர்கள், வெள்ளையர்கள் மற்றும் கறுப்பர்கள், ஆப்பிரிக்கர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் ஆசியர்கள், நாம் அனைவரும் ஒரே நேரத்தில் முழுமையை அடைவோம்.
6 மேலும் புர்கினா பாசோவின் பிரசங்கியான பாக்தெங்கா என்னிடம், “தீர்க்கதரிசியானவரே, பாவ அறிக்கை பகுதி, ஜெப பகுதி மற்றும் பாடல் ஆராதனை பகுதி யாவும் நன்றாக நடந்தன. எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருந்தது, ஆனால் பிரசங்கம் செய்யும் படி பிரசங்க மேடைக்கு சென்ற மாத்திரத்தில் எல்லாவற்றையும் நான் மறந்துவிட்டேன், பலவீனமாக உணர்ந்தேன். என் நாக்கு என் வாயில் கனத்தது, என்னால் பேச முடியவில்லை. நான் பிரசங்க பீடத்திலிருந்து அவசரமாக இறங்கி வந்தேன்." என்று சொன்னார். அன்று முதல், இந்த பிரசங்கியார் பிரசங்பீடத்திற்கு செல்ல பயப்படுகிறார்.
7 ஞாயிற்றுக்கிழமை மே 30, 2021 அன்று ஐவரி கோஸ்டில் உள்ள டிவோவின் சபையில் மற்றுமொரு பிரத்தியட்சமானது நிகழ்ந்தது. நான் சிறைக்குச் செல்வதற்கு முன்னர், மார்ச் 30, 2016-ல் அது நான் சென்றிருந்த சபையாகும் . மே 30, 2021 அன்று, டிவோவின் போதகர் அபிட்ஜானில் உள்ள அவரது சபையால் கலகக்காரராக கருதப்படும் ஒரு சகோதரரின் நிச்சயதார்த்தத்தை ஆசீர்வதிக்க வேண்டியிருந்தது.
8 டிவோவின் போதகர் யாரிடமும், மூப்பர்களுக்கோ, அவரது சபையினருக்கோ, அவரது மனைவிக்குக் கூட தெரிவிக்கவில்லை. இன்னும், அனைவரையும் கொண்ட ஒரு சபையில் முதலாவதாக மூப்பர்களின் ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும், பின்னர் சபையின் சம்மதத்தையும் பெற வேண்டும்.
9 டிவோவின் போதகரான சகோதரர் மாவ் ஜூல்ஸ் ஒரு சுவிசேஷ போதகராக இருந்தவர். அவர் 2008 முதல் நடுராத்திரி சத்தத்தை நம்பினார், மற்றும் 2019-இல், அவரது சிறந்த மிஷனரி பணியின் காரணமாக, நான் அவரை ஒரு பிராந்தியத்தின் போதகர்களின் மேற்பார்வையாளராகவும் நிறுவினேன்.
10 மே 30, 2021 அன்று, இந்த தைரியமிக்க போதகர், அன்றைய பிரசங்கத்தை கொடுக்கும்படி பிரசங்க பீடத்தில் இருந்தார். இப்போது அவர் நிச்சயதார்த்தத்தை ஆசீர்வதிக்கப் போனபோது, திடீரென்று, தனது சொந்த குரலை அவரால் கேட்க முடியவில்லை, மேலும் 'நான் பேசுவதை சபையார் கேட்க முடிகிறதா' என்று கேட்டார். பின்னும் அவரால் தொடர்ந்து பேச முடியாமல் போனது, மேலும் பலவீனமடைந்தார், ஒரு டீக்கன் அவரிடம் 'இப்படி நிறுத்துவது புத்திசாலித்தனமாக இருக்காதா' என்று கேட்க வந்தார், ஆனால் போதகர் நிறுத்தவில்லை.
11 பின்னர் அவர் மேலும் பெலனிழந்து பேச முடியாமல் போனார். பின்னர் நிச்சயதார்த்த பெண், ஒரு இளம் சகோதரியான அவள், தேவனுடைய ஆவியால் பீடிக்கப்பட்டு, மேடைக்குச் சென்று, பிரசங்கபீடத்தைத் திசை திருப்பி, போதகர் மீது கைகளை வைத்து, அவரது தலைக்கு மேல் பிரார்த்தனை செய்தார்.
12 இளம் சகோதரியான அவள் தன் கைகளை அவர் தலையில் மீது வைத்து பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தாள். பிறகு தன் இருக்கைக்குத் திரும்பிய அவள் சபையினரிடம் சொன்னாள்: "அவரைப் பார்த்தீர்களா?... அவருடைய நேரம் இன்னும் வரவில்லை." அந்த பெண் இருக்கையில் அமர்ந்து கொண்டே அந்த போதகரைப் பற்றி தீர்க்கதரிசனத்தை பேச தொடர்ந்தாள். அவள் : "நீங்கள் அவரை இங்கே பார்த்தீர்கள். அவர் என் குமாரன், ... நான் ஒருவர் மட்டுமே இருக்கிறேன், ஒரே ஒருவர் மாத்திரமே, எனக்கு ஒரேயொரு உண்மையான தீர்க்கதரிசி மட்டுமே உண்டு. காக்குவ் பிலிப்பு என்கிற இந்த மனிதனில் நான் இருக்கிறேன்." என்று சொல்லி முடித்தாள். சபை அமைதலானது, பயம் அவர்களை ஆட்கொண்டிருந்தது.
13 ஆனால் இது இருந்தபோதிலும், வெளிப்பாட்டிற்குப் பிறகு, அந்த போதகர் பிரசங்க பீடத்தை திரும்பவும் அணுகி, சபையில் ஒரு சகோதரர் அவரைத் தடுக்கவில்லை என்றாலும், ஆசீர்வதிக்க விரும்பினார். ஆனால் பாஸ்ட்ர தம்பதியினருக்காக ஜெபிக்க ஆரம்பித்தால் என்ன நடந்திருக்கும்? கவனமாக இருங்கள். ஏப்ரல் 24, 1993-இல் இறங்கியவரும், இன்னும் பரலோகத்திற்கு ஏறிப்போகதவருமான தூதன் இங்கிருக்கிறார்.
14 அது தீர்க்கதரிசனங்களாக இருந்தாலும் சரி, அந்நிய பாஷையில் பேசினாலும் சரி, ... இந்த நடுராத்திரி செய்தியில் உள்ள அனைத்து ஆவிக்குரிய வெளிப்படுதல்களும் நாடுகளை பொருட்படுத்தாத தவறிழைக்காத தன்மையாகவும், துல்லியமானதாகவும் மற்றும் விரைவானவையுமாகும். அவை பிரான்ஹாமிஸ்ட் மற்றும் சுவிசேஷக ஒழிஸ்கீனங்கள் அல்ல, இதன் போது மக்கள் பேசாமல் கத்துகிறார்கள், அவர்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் நகர்த்தவும் மற்றும் டீக்கன்கள் எல்லா திசைகளிலும் ஓடுகிறார்கள்.
15 இப்போது, டிவோவில் நடந்த பிரத்தியட்சத்தை கருத்தில் கொள்வோம். வார்த்தைகள் சரியானவைதான். நீங்கள் பிரத்தியட்சத்தை விசித்திரமாகக் கண்டால், ஒரே ஆவியானவர் ஆனால் வெவ்வேறு வெளிப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்.
16 நான் பாஸ்டரிடம் பேசியபோது, அந்த இளம் சகோதரி தன் மீது கைவைத்து தலைக்கு மேல் பிரார்த்தனை செய்தது அவருக்குத் தெரியவில்லை, வீடியோவைப் பார்க்கும் வரை அவர் அதை உறுதியாக மறுத்தார். மேலும் அந்த வீடியோவை அவர் பார்த்ததும் அவரால் அதை ஏற்க முடியாமல் தன்னை பெலப்படுத்த சில மாத்திரைகளை எடுத்துக்கொண்டார்.
17 நான் அந்தச் சகோதரியிடம் பேசியபோது, அவள் பிரசங்க பீடத்திற்கு வந்ததும், போதகரைத் தொட்டதும் அல்லது தீர்க்கதரிசனம் சொன்னாள் என்பதும் அவளும் அறியவில்லை. பிரசங்க பீடத்தில் போதகரின் மீது கைவைத்து தலைக்கு மேல் பிரார்த்தனை செய்துவிட்டு, எல்லாவற்றையும் முடித்துவிட்டு போதகரை விட்டு சென்றதும் அவளுக்குத் தெரியவில்லை.
18 ஓ, கடவுளுக்கு எதிராகச் செல்வது எவ்வளவு பயங்கரமானது. ஒரு இளம் சகோதரி எப்படி மேடைக்கு சென்று, பிரசங்க பீடத்தைத் திருப்பி, பிரசங்க பீடத்திலுள்ள போதகர் மீது கை வைக்க முடியும்? படம் 2 மற்றும் படம் 3 ஆகியவற்றில், சகோதரி தனது இரண்டு கைகளில் வலிமைமிக்க போதகரின் தலையைப் பிடித்துக் கொண்டு அவரது தலைக்கு மேல் ஜெபம் செய்வதைப் பாருங்கள். தேவனுக்கு முன்பாக, மனிதன் ஒன்றுமில்லை. படம் 4-ஐப் பாருங்கள், மயக்கமடைந்து விட்ட அந்த வல்லமை மிக்க போதகரிடம் சகோதரி கத்துகிறார். போதகரை விழுந்து விடாதபடி பிடித்து வைத்திருப்பது ஒரு டீக்கன். மற்றொரு டீக்கன் சகோதரியைத் தடுக்க விரும்பினார், ஆனால் ஒரு சக்தியானது அவரது கையைத் தள்ளிவிட்டது.
19 பிரத்தியட்ச்சத்திற்கு பிறகு, புகைப்படம் 5-இல், போதகர் டீக்கன்களிடம் என்ன நடக்கிறது என்றும் மைக்ரோஃபோன் எங்கே என்று கேட்கிறார். மனித பரிமாணத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பயங்கரமான காட்சி அது. மேலும் அந்த வீடியோவை பார்த்த சகோதரியும் அதிர்ச்சியடைந்து மன்னிப்பு கேட்கிறார்.
20 அதேபோல், தனக்கென வரும்போது, சகோதரர் மேடிசன் கூப்பர் அவர் லைபீரியாவில் இருப்பதாக நினைத்தார். அது தேவ தூதரின் பிரசன்னம். இதற்குள் தான் இப்போது நாம் பிரவேசிக்கின்றோம். மேலும் அந்த வீடியோவை பார்த்த பலர் என்னிடம், அந்த வீடியோவை சகோதர சகோதரிகள் பார்த்தால், அது அவர்களை பயமுறுத்தலாம் மற்றும் பாவத்தில் வாழும் சிலர் இனி ஆராதனைக்கு வர மாட்டார்கள் என்றனர்.
21 பிரசங்க பீடத்தில் உள்ள ஒரு பிரசங்கிக்கு தேவனுடைய அனைத்து அதிகாரமும் உள்ளது என்பதையும், எந்த ஒரு பொல்லாத ஆவியும் அவர் மீது கை வைக்க முடியாது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். போதகர், சகோதரியிடம்: "சாத்தானே, இந்த சகோதரியை விட்டு போய்விடும் படி இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்" என்று ஒருமுறை கூறலாம். அந்த சகோதரியும் ஒரே மாத்திரத்திலே விடுவிக்கப்படலாம். ஆனால் இங்கு போதகர் சுயநினைவின்றி பெலன் இழந்து காணப்பட்டார். சகோதரி தன் மீது கைகளைவைத்து, தலைக்கு மேல் ஜெபம் செய்தது அவருக்குத் தெரியாது. அதனால் தான் பிரசங்க பீடத்தை சரிசெய்து விட்டு மீண்டும் தொடர்ந்தார். அங்கே நடந்த யாவையும் அந்த காணொலியை கண்டு தான் தெரிந்துக் கொண்டார்.
22 எச்சரிக்கையாக இருங்கள். வெளிப்படையான பாவ அறிக்கையின் போது, ஒரு சகோதரர், சகோதரி அல்லது தலைவர் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்பார்கள், அந்த முக்கியமான தருணத்தில், ஏப்ரல் 24, 1993-இன் தூதன் தான் உங்களிடம் கேட்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாது.
23 தீர்க்கதரிசியிடமோ அல்லது சீஷனிடமோ ஆணவத்துடனும் இகழ்ச்சியுடனும் பேசுவீர்கள், இந்த நேரத்தில், ஏப்ரல் 24, 1993-இன் தூதனுடன் தான் நீங்கள் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. தேவன் இஸ்ரவேலரிடம்: "இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்பாக அனுப்புகிறேன், ... அவருக்கு முன்பாக கவனமாக இருங்கள், ஏனென்றால் என் நாமம் அவரில் உள்ளது" என்று கூறினார். இந்த தூதன் இஸ்ரவேலின் பாளயத்தை நியாயந்தீர்த்து, மோசேக்கும் இஸ்ரவேலுக்கும் எதிராக வந்த எந்த தேசத்துக்கும் எதிராகப் போரிட்டான்.
24 நாம் காண்பது சபையை ஒரு புதிய பரிமாணத்தில் வைக்கக்கூடிய பரிசுத்த ஆவியின் ஒரு பெரிய செயலுக்கான அடையாளமாக இருக்கிறது, இது பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளின் அதே தேவன் தான் தேவனாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.
25 நாம் கிருபையின் கீழ் இருக்கிறோம், ஆனால் அப்போஸ்தலர் 5-இல், தேவ தூதன் அனனியாவையும் சப்பீராவையும் எப்படி அடித்தார் மற்றும் அப்போஸ்தலர் 12-இல், கூட்டத்தினருக்கு முன்பாக, தேவ தூதன் ஏரோது ராஜாவைத் அடித்தது மற்றும் ஏரோது ராஜா உடனடியாக இறந்து போனதையும் நினைவில் கொள்ளுங்கள். நாம் இப்படிப்பட்ட காலகட்டத்தின் வாசலில் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. கடந்த காலத்தில் இஸ்ரவேலில் மோசே, எலியா மற்றும் தீர்க்கதரிசிகளுடன் தேவன் தம்முடைய இராஜ்யத்தை எப்படி அமைத்தாரோ அதை பூமியில் நிறுவும் நேரம் இதுவாக இருக்கலாம்.
26 நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, 2002 முதல், நான் நியாயத்தீர்ப்பையும் மனமாற்றத்தையும் குறித்து அறிவித்து வருகிறேன், ஆனால் தண்டனைகளை நிறைவேற்றுவது என்பது ஏப்ரல் 24, 1993-ன் தூதனுக்கு சொந்தமானது. இந்த தண்டனைகளும் அவற்றின் நிறைவேறுதலும் இதில் விசுவாசம் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, இந்த செய்திக்கு எதிராக நிற்கும் எவருக்கும் பொருந்தும்.
27 குறிசொல்லும் பிசாசுகள் தங்களை நம்புகிறவர்களுக்கு எதிராக அவர்களின் சபைகளில் அவர்களை கீழே விழவைப்பதற்கு அனைத்துவிதமான வல்லமையும் கொண்டுள்ளன. ஆனால் மெய்யான பரிசுத்த ஆவியானவர் பூமியெங்கும் சர்வ வல்லமையுள்ளவர். மேலும் காக்குவ் பிலிப்புவின் தேவன் பிரபஞ்சத்தின் எஜமானர் மற்றும் சர்வவல்லமையுள்ள தேவன் நித்தியத்திலிருந்து நித்தியமானவர் என்பதை அவரை விசுவாசியாதவர்களும் அறிந்திருக்க வேண்டும். அவனுடைய சபையில் மட்டுமே வல்லமை கொண்டிருக்கிற ஒரு பரிசுத்த ஆவி என்பது ஒரு பிசாசாகும்.
28 மதம் பற்றிய விவாதம் அல்லது அதன் மோதல் என்பது இரண்டு தெய்வங்களுக்கு இடையேயான மோதலாகும். மேலும் வித்தியாசத்தை ஏற்படுத்த இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியம் இருக்க வேண்டிய நேரம் வரும். இயற்கைக்கு அப்பாற்பட்டது இல்லை என்றால் அது வெறும் கருத்து விவாதமாக இருந்தால், அது சாத்தானின் இரண்டு முகவர்களுக்கு இடையேயான காட்சியாகவே இருக்கும்.
29 தன்னைப் பின்பற்றுகிறவர்களைத் தன் சபையில் கீழே விழச் செய்கின்ற வல்லமை நிறைந்த ஒரு தீர்க்கதரிசி, தன்னை அழிக்க முயலும் எதிரிக்கு எதிராகச் சக்தியற்றவனாக இருக்க முடியாது. ஒரு உலக சாம்பியனின் பலம் அவரது சொந்த ஆதரவாளர்களிடமோ அல்லது அவரது நாட்டு மக்களிடமோ அல்ல. மேலும் வரலாற்றிலோ அல்லது புனித நூலிலோ சர்வ வல்லமை படைத்த தேவன், மரித்துப்போகவில்லை என்றால் அவர் இன்னும் சர்வ வல்லமை படைத்தவராகவே இருக்க முடியும்.
30 ஒரு சுவிசேஷக அல்லது பிரான்ஹாமிஸ்டுகளின் பரிசுத்த ஆவியானது அந்த போதகரின் செயலைக் கண்டித்திருக்க மாட்டாது என்பதைக் கவனியுங்கள். ஆனால் எப்பொழுதும் ஏழை சபையின் உறுப்பினருக்குத்தான் தீர்க்கதரிசனங்களும், பிரசங்கங்களும் இயக்கப்படுகின்றன. ஆனால் உண்மையான திருச்சபையில், பரிசுத்த ஆவியானவர் இருபுறமும் முனைகளை கொண்டிருக்கிறார். அவர் போதகர் மற்றும் சபை உறுப்பினர் இருவரையும் வெட்டுகிறார். இஸ்ரவேலின் பாளயத்தையும், புறஜாதிகளின் தேசங்களின் பாளயத்தையும் வெட்டுகிறார். இந்த தேவன் தான் என்னை பணியமர்த்தி ஏப்ரல் 24, 1993 அன்று அனுப்பினார்.
31 அது ஜீயஸ், பாகால், தாகோன், பாகால்-செபூப் அல்லது அத்ரமெலேக் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு கடவுளும், அந்த கடவுளை வணங்கும் தேசத்திலோ அல்லது மதத்திலோ எல்லா சக்தியும் கொண்டது. ஆனால் 1993-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி எனக்கு தோன்றிய சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் இந்து மற்றும் புத்த கோயில்களின் கடவுள்களை ஆளுகை செய்யும் எல்லாவற்றுக்கும் மேலான தேவன் ஆவார், அவர் அதை எல்லா வகையிலும் நிரூபிப்பார்.
32 இப்போது, ஆராதனையின் போது, பிரசங்க பீடத்தில் இருக்கும் ஒரு சகோதரர் தாக்கப்பட்டால், டீக்கன்கள் அவரை வெளியே கொண்டு சென்று அவரை கவனித்து கொள்வார்கள் மற்றும் ஆராதனையை நிறுத்துவதா அல்லது ஆராதனையை தொடர வேண்டுமா என்று சபையானது முடிவு செய்யும். மேலும் நீங்கள் டிவோவின் வீடியோவைப் பார்த்துவிட்டு, "ஒ, அது பயங்கரமானது, சபையில் நான் எந்தப் பொறுப்பையும் கொண்டிருக்க விரும்பவில்லை" என்று சொல்லக்கூடாது. நீங்கள் தேவனுடைய பிரசன்னத்திற்கு பயப்படலாம், ஆனால் உங்கள் காலத்தின் சத்தியத்தை நீங்கள் ஒருபோதும் கைவிடக்கூடாது.
33 தங்கள் நிலத்தை விற்று, விற்றதில் ஒரு பகுதியை மட்டும் கொண்டுவந்த அனனியாவும் சப்பீராவும் தூதனால் தாக்கப்பட்டு இறந்துபோனார்கள், அதே வேளையில் தெய்வபக்தியற்றவர்களும் கோவில் வியாபாரிகளும் தங்கள் ஜெப ஆலயங்களிலும், சபைகளிலும், கோவில்களிலும், மசூதிகளிலும், மதங்களிலும் சமாதானமாக இருந்தார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் தங்களின் மணிவேளைக்குரிய சத்தியத்தை அவர்கள் கைவிடவில்லை. அனனியாவும் சப்பீராவும் தங்கள் பரிசேயர், எசேனியர்கள், ஏரோதியன்கள், செலோத்தியர், அஷ்கெனாசி அல்லது செபார்டிக் கோவிலில் தங்கியிருந்தால் அந்த வழியில் இறந்திருக்க மாட்டார்கள்.
34 மேலும் ஆவிக்குரிய பிரத்தியட்சமானது நடந்து கொண்டிருக்கும் போது, என்ன நடக்கிறது என்று பார்ப்பது பாவம் அல்ல. ஆனால் தலை குனிந்து உங்களைப் பார்ப்பதே சரியான நடத்தை. டீக்கன் அதைச் சொல்லும் வரை காத்திருக்க வேண்டாம். தேவன் வந்திருக்கும் போது, அது ஜெபிக்க வேண்டிய நேரம். ஆவிக்குரிய பிரத்தியட்சங்கள் நடக்கத் தொடங்கும் போது, நீங்களும் ஜெபிக்க துவங்கி இப்படியாக, "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, இவைகள் உங்கள் சபையில் நடக்கும் என்று நீர் வாக்குதத்தம் அளித்தீர்கள். நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். ஆனால் இது எங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கட்டும்." என்று சொல்லவும். வேண்டும்.
35 இப்போது ஒரு தீர்க்கதரிசனம் கொடுக்கப்படும் போது, சபை அதை ஆராய்ந்து முடிவெடுக்கும். இது ஒரு சாத்தானின் வேலை என்று சபையினர் உணர்ந்தால் மற்றும் தீர்க்கதரிசனம் சொன்னவர் விரக்தியடைந்தால், அதுதான் உண்மையில் ஒரு சாத்தானின் வேலை என்பதற்கான அறிகுறியாகும். தேவனிடத்திலிருந்து வந்த ஒரு வரம் அல்லது வெளிப்பாட்டை ஒரு மனிதனால் எதிர்த்து போரிட முடியாது.
36 தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான், என்னுடைய எல்லாவற்றிக்கும். 2002 முதல் நான் பிரசங்கிக்கிறேன் அல்லது வெளிப்பாடுகளை கொடுக்கிறேன், யாராவது என்னுடன் விவாதம் செய்ய விரும்பினால் அல்லது என்னைப் பொய்யான தீர்க்கதரிசி என்று அழைத்தால், அதற்கு எதிராக போராடுவது எனக்கு சொந்தமான காரியம் அல்ல, ஆனால் அது ஏப்ரல் 24, 1993-ன் தூதனுக்குரிய காரியமாகும்.
37 ஒரு ஆவிக்குரிய பிரத்தியட்சம் இருக்கும் போது: அது ஒரு தரிசனமாக இருந்தாலும் சரி, தீர்க்கதரிசனமாக இருந்தாலும் சரி, அந்நிய பாஷைகளில் பேசுவதாயினும், அல்லது வேறு எதுவாக இருந்தாலும் , அமைதியாக இருங்கள். டீக்கன்களைத் தவிர, யாரும் அமைதிப்படுத்தவோ அல்லது ஆவிக்குரிய வெளிப்பாட்டைத் தடுக்கவோ கூடாது. தேவைப்பட்டால், ஒரு டீக்கன் அவருக்கு உதவும் படி ஒரு சகோதரரிடம் கேட்கலாம். ஆவிக்குரிய பிரத்தியட்ச்சங்களின் களம் மிகவும் கவனமாக கையாளக்கூடியது.
38 ஒரு பிரத்தியட்சத்தற்கு பிறகு, எந்த ஆவி தன்னை பிரத்தியட்சப்படுத்தியது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் கருத்துக்களை நீங்களே வைத்துக்கொண்டு அதை அப்போஸ்தலர்களுக்கு அனுப்புங்கள். காக்குவ் 146-க்குப் பிறகு, தேவன் தம்முடைய சபையில் தன்னை நிலைநிறுத்தி, தேவபக்தியற்ற போதகர்களுக்கும் மற்றும் சீஷர்களுக்கும் நியாயத்தீர்ப்பு செய்யும்படி வந்த நேரமாக இது இருக்கலாம்.
39 2021 மே மாதத்திலிருந்து நாம் காணத் தொடங்கியிருக்கும் அடையாளங்கள் நம்மை கவலையடையச் செய்கின்றன. ஒரு நாள், நம்மில் ஒருவர் கீழே விழுந்து மரித்துப் போவதை நான் விரும்பவில்லை; ஆனால் ஒரு சீஷனோ, போதகரோ அல்லது சபை உறுப்பினரோ பிரசங்க பீடத்திலோ அல்லது சபையிலோ சரிந்து விழக்கூடிய காரியம் நடந்தால் காரணம் எதுவாக இருந்தாலும், நீங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்ளுங்கள். மீதமுள்ளவை அவருக்கும் கடவுளுக்கும் இடையிலானது.
40 ஒரு போதகருக்கு, ஒரு துறவிக்கு அல்லது இமாம்க்கு அல்ல, ஆனால் தீர்க்கதரிசியான மனுஷகுமாரனுக்கே பூமியில் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உள்ளது என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் நான் மத்தேயு 25:6-ன் ஊழியம் புறஜாதி தேசங்களின் காலகட்டத்தின் யோம் கிப்பூரின் நாள் என்பதை நான் காக்குவ் 146-இல் உங்களுக்கு விளக்கினேன். இது பாவநிவர்த்தி, சுத்திகரிப்பு, பரிகாரம் மற்றும் தேவனுடன் ஒப்புரவாகுதலின் நாள்.
41 முதலாவது, ரோஷ் ஹஷனாவின் நாள், இது நியாயத்தீர்ப்பின் நாள், பின்னர் மனந்திரும்புதலுக்கான பத்து நாட்கள், மற்றும் ஜீவிய மாற்றம் மற்றும் இறுதியாக யோம் கிப்பூரின் நாள், பெரும் பாவமன்னிப்பு மற்றும் பாவ நிவர்த்திக்கான நாள். இஸ்ரவேலின் பிரதான ஆசாரியன் கடவுளைச் சந்திப்பதற்காக உடன்படிக்கைப் பேழை அமைந்துள்ள பரிசுத்த ஸ்தலத்திற்குள் ஒருநாளில் பிரவேசிப்பான். இஸ்ரவேலின் பிரதான ஆசாரியன் தன் காலில் ஒரு நீண்ட கயிறு கட்டியிருப்பான். அவன் உயிருடன் வெளியே வரவில்லை என்றால், கயிற்றை இழுத்து அவனது உடலை வெளியே கொண்டு வருவார்கள்.
42 இப்போது கர்த்தருடைய வீட்டில் தொடங்கக்கூடிய பயங்கரமான நியாயத்தீர்ப்பின் நேரமாக இது இருக்கலாம். ஜனங்கள் கீழே விழுந்து மீண்டும் எழுந்து கால்களால் நிற்க முடியாத நேரம் இது. மாய்மாலத்தனத்தின் ஆவியுடனோ அல்லது மறைக்கப்பட்ட பாவத்துடனோ ஆராதனையில் கலந்து கொள்வது அல்லது பிரசங்க பீடத்திற்குச் செல்வது என்பது ஏப்ரல் 24, 1993-ன் தூதனுக்கு விடக்கூடிய ஒரு சவாலாகும்.
43 ஒரு பாவத்துடன் பிரசங்க பீடத்திற்குச் செல்வது அல்லது தவறான உபதேசத்தை பிரசங்கிக்க நீங்கள் பிரசங்க பீடத்தில் இருந்தால், அது ஏப்ரல் 24, 1993-இன் தூதனுக்கான ஒரு சவாலாகும். தூதனுக்கு சவால் விட வேண்டாம். பிலேயாம் தீர்க்கதரிசி எண்ணாகமம் 22-இல் தூதனுக்கு சவால் விடுத்தார். மேலும் எண்ணாகமம் 31-ல் பிலேயாம் தீர்க்கதரிசி அதன் காரணமாகவே கொல்லப்பட்டார். இந்த தூதனே பவுலுடன் நடந்து கொண்டிருந்தார், அவருடைய சீஷர்களில் பலர் நோய்வாய்ப்பட்டனர், பலர் மரித்துப்போயினர் என்றும் பவுல் கூறினார். அது என்ன? "என் தூதன் உனக்கு முன்பாக செல்வார், என் நாமம் அவரில் உள்ளது." என்பதாகும்.
44 மேலும் வெளிப்படையான பாவ அறிக்கையைக் கொண்டு, புறஜாதி தேசங்களின் சபையானது ஆவியின் வரங்கள் இப்படியாக "உங்கள் பாவங்களை மறைத்து வைக்காதீர்கள்! அவற்றை அறிக்கையிடுங்கள்! உங்களை பரிசுத்தமாக்கி கொள்ளுங்கள்!" என்று கூறும் நிலையை கடந்துவிட்டது, இல்லை, பரிசுத்த ஆவியானவர் இந்த நிலையை கடந்துவிட்டார். இது அற்புதங்கள் மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழச்செய்யும் காரியத்தை விட மேலானது.
45 வில்லியம் பிரான்ஹாம் தனது ஊழியத்தில் பெரும் அற்புதங்களைக் கண்டதாகக் கூறினார், ஆனால் அவர், சபையில் காண விரும்பிய மிக பெரிய காரியம் அது தேவனுடைய பிரசன்னம். கண்டிக்கப்படுவோமோ அல்லது தாக்கப்படுவோமோ என்ற அளவிற்கு பயத்தில் ஒரு பாவி அருகில் வர பயப்படுவார் என்பதே காரியமாக இருக்கிறது.
46 யாரேனும் பாவ அறிக்கை செய்யாமல் சபையில் அமர்ந்திருந்தால், அது ஏப்ரல் 24, 1993 இன் தூதனுக்கு சவால் விடுவதாகும் என்ற நிலையில் சபையானது உள்ளது. பாவ அறிக்கை செய்ய வேண்டியவர் பிரசங்க பீடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படாத கட்டத்தில் சபையானது உள்ளது. அவர் அவ்வாறு செய்தால், ஏப்ரல் 24, 1993-இன் தூதனுக்கு அந்நபர் சவால் விடுகிறவராகிறார்.
47 மேலும் செய்திக்கு எதிராக, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவுக்கு எதிராக அல்லது செய்தியின் காரணமாக உங்களுக்கு எதிராக பேசுகின்ற, அவமதிக்கின்ற அல்லது அவதூறு செய்கின்ற, எந்தவொரு நபரும் ஏப்ரல் 24, 1993-இன் தூதனுக்கு சவால் விடுகிறார். இந்த சவாலுக்கு பதிலளிக்க தூதனானவர் அவரது இடத்தையும், வழியையும், நேரத்தையும் தேர்ந்தெடுப்பார்.
48 மேலும், சகோதரர் மேடிசன் கூப்பரைப் போன்று ஒரு சகோதரனுக்கு அல்லது சகோதரிக்கு இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், அவர் சபையை விட்டு வெளியேற வேண்டும், ஆராதனையானது தொடர்ந்து நடைபெறும். அவர் பிரசங்கியாக இருந்தாலும், அவர் வெளியேற வேண்டும், அடுத்த ஆராதனையில் அவரை சபையானது கேட்க வேண்டும். மேலும் தனக்கு பாவ அறிக்கை செய்வதற்கு எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, தொடர்ந்து ஊழியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், அவருடைய மனைவி தன் கணவர் அந்த பொறுப்புக்கு தகுதியானவர் என்று சபைக்கு முன்பாக மீண்டும் சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால், பயத்தின் காரணமாக, உங்கள் சபையில் பொறுப்புகளை ஏற்க மறுக்கக் கூடாது.
49 உங்களால் செய்ய முடிந்தும் செய்தியில், நீங்கள் பொறுப்பை ஏற்க மறுப்பது என்பது பாவம். அப்போஸ்தலர் பி டிஜோ என்னிடம் சொன்னதால் இதைச் சொல்கிறேன், டிவோவை சார்ந்த சகோதரர்கள் தங்கள் துணிச்சலான போதகருக்கு என்ன நடந்தது என்பதைப் பார்த்தபோது, அவர்கள் அனைவரும் பயந்தனர், அவர்களில் பலர் சபையில் தங்கள் பொறுப்புகளை விட்டுவிட விரும்பினர், மற்றவர்கள் தங்கள் பாவங்களை ஆழமாக அறிக்கையிட செய்தனர்.
50 பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு, நியாயத்தீர்ப்பின் தூதனானவர் நம்மிடமிருந்து மூன்று மீட்டர் தொலைவில் இருந்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர் நம்மிடமிருந்து இரண்டு மீட்டர் தொலைவில் இருந்தார். இப்போது அவர் நம்மிடமிருந்து ஒரு மீட்டருக்கும் குறைவான தொலைவில், நம்மிடையேயும் நம்மிலும் கூட தன்னை நிலைநிறுத்த ஆயத்தமாக இருக்கிறார். பாசாங்குத்தனம் செய்பவர்களும் வர வேண்டியிருந்ததாலேயே பாளயமானது முதலாவது சுத்திகரிக்கப்படுகிறது.
51 இந்த மணி நேரத்திற்கு முன்னர், பல திறமையற்ற கருத்து திருட்டுகள் வந்தன, அவை அனைத்தும் தோல்வியடைந்தன. ஆனால் கோதுமையை களைகளிலிருந்து பிரித்தெடுக்கும் பொருட்டு இப்போது தேவன் இன்னுமாக தந்திரமான கருத்து திருடர்களையும் மற்றும் பாவனை செய்பவர்களையும் நமக்கு எதிராக வர அனுமதித்துள்ளதால் தேவன் மரித்துப் போகும்படி பிசாசின் புத்திரர்களை இங்கே ஆராதனை நடுவில் தாக்க மாட்டார்.
52 கானானுக்கு முன்னதாகவே, கோராகும் தாத்தானும் அபிராமும் மரித்துவிட்டனர். மேல்வீட்டு அறையில் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பாக யூதாஸ் ஏற்கனவே மரித்துப் போயிருந்தான். இங்கே நடந்து கொண்டிருப்பதும் அதே காரியம்தான்.
53 மேலும் நம்முடைய மணிவேளையில் தேவன் பிரேசிலில் இருந்து 64 வயதான டோனின்ஹோ ரிசேன்ட் (Toninho Rezende) என்ற மனிதனை எழும்ப செய்தார், அவர் காக்குவ் 104: 28 முதல் 29 வரையுள்ள குடிகார தீர்க்கதரிசி என்றும் காக்குவ் 137: 24-ன் படி லத்தீன் அமெரிக்காவிற்கு தீர்க்கதரிசி வரவேண்டியிருக்கும் என்றும் கூறுகிறார். அவர் தன்னை காலேப் என்றும் என்னை யோசுவா என்றும் கருதுகிறார். அவர் என்னை "என் தலைவரே" என்று அழைக்கிறார்.
54 கானானை நோக்கிய இஸ்ரவேலின் யாத்திரையில், பிலேயாம் மோசேக்கும் இஸ்ரவேலுக்கும் எதிராக இருக்கவில்லை. பிலேயாம் ஜெபூசியர்கள், ஆப்பிரிக்கர்கள், ஏவியர்கள் மற்றும் கிர்காசியர்களின் தீர்க்கதரிசிகளைப் போல மோசேயையும் இஸ்ரவேலையும் அவமதிக்கவோ சபிக்கவோ இல்லை. ஆனால் இஸ்ரவேலின் மிக கடுமையான எதிரியாக பிலேயாம் இருந்தான்.
55 டோனின்ஹோவின் உபதேச கோட்பாடுகளின்படி, புகைபிடித்தல், மது அருந்துதல், பெண் போதகர்கள் மற்றும் இங்கு கண்டனம் செய்யப்பட்ட அனைத்து வகையான பாவங்களும் அனுமதிக்கப்படுகின்றன. வெளிப்படையான பாவ அறிக்கைக்கு எதிரிகளான, நடுராத்திரி சத்தத்தின் 57 விசுவாசிகளை அவர் வஞ்சித்தார். அதாவது, 24 பிரேசிலியர்கள், 21 மொசாம்பிக்கள், 8 ஜிம்பாப்வேயர்கள், இரண்டு தென்னாப்பிரிக்கர்கள், ஒரு காங்கோனியன் மற்றும் ஒரு மலாவியன்.
56 தேவன் உங்களை இங்கிருந்து வெளியேற்றாதபடிக்கு நேர்மையாக இருங்கள். கிறிஸ்துவ, இஸ்லாமிய, இந்துமத மற்றும் பௌத்த மதத் தலைவர்கள் அனைவரும் பன்றி வளர்ப்பவர்களாக இருக்கிறார்கள். மேலும் செய்தியை விட்டுவிட்டு பன்றி வளர்ப்பவர்களிடம் செல்பவர்கள், தேவபக்தியற்றவர்களும், நயவஞ்சகர்களும், பொல்லாதவர்களும், வெளிப்படையான பாவ அறிக்கைக்கு எதிரிகளும் ஆவர், அவர்கள் மனந்திருந்தினாலும் மீண்டும் இங்கு வர உரிமை இல்லை.
57 எனது செய்தியைத் திருடுபவர்கள் அதிக எண்ணிக்கையில் எழும்பினர். ஒருவர் எழும்பி மறைந்து போகிறார். மற்றொருவர் எழும்பி மறைந்து போகிறார். அவர்களில் ஒருவரிடம் நான் சொன்னேன்: நீங்கள் ஒரு பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உருவாக்க விரும்பினால், அது ஏற்கனவே இருப்பதாக கணினியானது உங்களுக்குச் சொன்னால், அதை விட்டுவிடவும். "மூல பாவம் ஒரு பாலியல் செயல்" என்று நீங்கள் கூறும்போது, பரலோகத்தில் உள்ள அமைப்பு, இந்த வெளிப்பாடானது 1933 முதல் உள்ளது என்று கூறுகிறது.
58 "வேதாகமம் ஒரு வரலாற்றுப் புத்தகம்" அல்லது "வேதாகமம் இரட்சிக்காது" என்று நீங்கள் கூறும்போது, பரலோக அமைப்பு உங்களுக்குச் சொல்கிறது: இந்த வெளிப்பாடு 2002 முதல் இருக்கின்றது. "நான் மத்தேயு 25:6-இன் தீர்க்கதரிசி" என்று நீங்கள் கூறும்போது, பரலோக அமைப்பு உங்களுக்குச் சொல்கிறது: இந்த வெளிப்பாடு 2002 முதல் உள்ளது. "வெளிப்படையான பாவ அறிக்கை சபைக்கு மீண்டும் வர வேண்டும்" என்று நீங்கள் கூறும்போது, பரலோக அமைப்பு உங்களுக்கு சொல்கிறது: இந்த வெளிப்பாடு 2002 முதல் உள்ளது.
59 "கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களும் பிசாசு" என்று நீங்கள் கூறும்போது, பரலோக அமைப்பு உங்களுக்கு சொல்கிறது: இந்த வெளிப்பாடு 2002 முதல் உள்ளது.
60 மேலும் "ஆதாமுக்கு தொப்புள் இல்லை" அல்லது "ஆதாமும் ஏவாளும் கருப்பாக இருந்தார்கள்" போன்ற வெளிப்பாடுகளை சாத்தான் உங்களுக்கு வழங்கும்போது, நீங்கள் உங்கள் விருப்பத்தை எடுக்க வேண்டும்.
61 ஆனால், என்னில் விசுவாசம் கொண்ட நீங்கள் அனைவரும், பரலோகத்திற்குச் செல்லும் இடுக்கமான வழியான இந்தச் செய்தியை ஒருபோதும் கைவிட்டுவிடாதீர்கள். போலித்தனத்தையும் மற்றும் வஞ்சனையாளர்களின் விசாலமான மற்றும் அமைதியான வழிகளையும் மற்றும் கருத்து திருடர்களையும் மற்றும் பாவனையாளர்களையும் தெரிந்து கொள்ளாதீர்கள்.
62 டான்டே ஜிபேல், குளிர்மோ மல்டோனடோ, கரோல் என்ரிக் லூனா, மரியா லூய்ஸா, எஸ்டீவம் ஹெர்னான்டஸ், ரொமில்டோ ரிபியோரோ சோர்ஸ், ஷிலாஸ் மலாபியாயா, வால்டீமரோ சாண்டிகோ மற்றும் எடிர் மெக்டோ ஆகியோரின் சபைகளை விட்டு வெளியேறவும். அவை அனைத்தும் நரகத்திற்கான சாத்தானின் பாதைகள். அவர்கள் இலட்சக்கணக்கான மக்களைக் குணப்படுத்தி விடுவித்திருக்கிறார்கள். இது உண்மை. ஆனால் அவர்கள் அனைவரும் மத்தேயு 7:21-இன் படி சாத்தானின் ஊழியக்காரர்கள் மற்றும் அவர்கள் உங்களை நரகத்திற்கு வழிநடத்தி செல்கிறார்கள்.
63 இந்தச் செய்தியில் இருக்கும் போது நீங்கள் பிசாசின் புத்திரர் போல் உணர்ந்தாலும், தொடர்ந்து நடந்து செல்லுங்கள். ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட ஐந்து பேர்களில், நான்கு பேர் ஞானஸ்நானம் மூலம் விடுவிக்கப்பட்டிருக்கலாம், ஒருவர் விடுவிக்கப்படமால் இருக்கலாம், ஆனால் விடுவிக்கப்பட்டவர்களோ அல்லது விடுவிக்கப்படாதவர்களோ பிசாசின் புத்திரர் என்று எதுவும் கூறவில்லை. நால்வரும் விடுவிக்கப்படாவிட்டால், அவர்கள் ஞானஸ்நானம் பெற்ற பிறகு ஒருவர் பின் ஒருவராக இழந்து போக நேரிடும். ஞானஸ்நானத்திற்குப் பிறகு அனைவரும் விடுதலை பெற்றிருந்தால், போதகரும் மற்றும் வெளிப்படையான பாவ அறிக்கையும் இருக்காது. உங்கள் காலத்தின் உயிர் வாழும் தீர்க்கதரிசியை நீங்கள் விசுவாசித்ததால், நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்கள்.
64 இரட்சிப்பு என்பது மிகவும் எளிமையானதாகும். பூமியில் ஊழிய பணிக்கு முன்பாக, ஒவ்வொரு தீர்க்கதரிசியும் தனது தலைமுறையின் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடன் தேவனுடைய சமூகத்தில் இருக்கிறார். பூமியில் ஊழியமானது தொடங்குவதற்கு முன்பாகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் பிறக்கத் தொடங்குகிறார்கள். தீர்க்கதரிசியும் பிறக்கிறார். மேலும் பூமியெங்கும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை சிதறடித்து மறைந்து போகப்பண்ண தேவன் சாத்தானை அனுமதிக்கிறார்.
65 சாத்தான் அவர்களை வெவ்வேறு கண்டங்களில், வெவ்வேறு தேசங்களில், வெவ்வேறு குடும்பங்களில், வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு இனங்களில், வெவ்வேறு அரசியல் அமைப்புகள் மற்றும் கட்சிகள், சமூக வர்க்கங்களில் மறைத்து வைக்கிறான். இனவெறி, நிறவெறி, அரசியல் ஆட்சிமுறைகள், வாழ்க்கையின் கஷ்டங்கள் மற்றும் குறிப்பாக சாதி அமைப்புகள், பிரிவுகள் மற்றும் மதங்கள் மூலம் அணுகுவதற்கான கடினமான சூழ்நிலைகளை சாத்தான் நிறுவுகிறான்.
66 மேலும் தீர்க்கதரிசியை குறித்து, தேவன் சாத்தானிடம், "அவனை இக்கட்டான நிலையில் வைக்க நான் உன்னை அனுமதிக்கிறேன் ஆனால் அவன் ஜீவனை மட்டும் தொடாதே" என்று கூறுகிறார். மேலும் தீர்க்கதரிசி ஒரு துயரமான குடும்பத்தில் பிறந்திருக்கும் போது மற்றும் சாத்தான் அவரை ஊழியத்திற்கு தேவையான திறன்களைக் கொண்டிருப்பதைத் தடுக்கிறான்.
67 மேலும் அடையாளமானது கொடுக்கப்பட்டவுடன், தீர்க்கதரிசி தான் மரிப்பதற்கு முன் பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரையும் கூட்டி சேர்க்க வேண்டும். பின்னர் அவர் மரித்து கடவுளிடம் செல்லும் போது, "தேவனே, நீர் என்னிடம் கொடுத்த அனைவரையும் நான் கூட்டிச்சேர்த்தேன், அவர்களில் யாரும் இழந்து போகவில்லை" என்று கூறுவார். ஆனால் உண்மையில், தீர்க்கதரிசியை மறைத்துக்கொண்டு ஊழியத்தை நிறைவேற்றி முடித்தது தேவனுடைய தூதனாகும்.
68 தேவன் இஸ்ரவேலை நோக்கி: இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்பாக அனுப்புகிறேன், ... அவர் சமூகத்தில் எச்சரிக்கையாக இருங்கள், அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுங்கள்; அவரை கோபப்படுத்தாதீர்கள்; அவர் உங்கள் துரோகங்களை பொறுத்துகொள்வதில்லை, ஏனெனில் என் நாமம் அவருக்குள் இருக்கிறது" என்றார். இந்த தூதன் தான் மோசேக்கு முன்பாக சென்றவர், இந்த தூதன் தான் இந்த பணியை நிறைவேற்ற ஏப்ரல் 24, 1993 முதல் எனக்கு முன்பாக நடக்கிறார் .
69 மொராக்கோவில், ஒரு பெண் தன் காரில் அமர்ந்து கொண்டிருந்த சமயம், வானம் திறக்கப்பட்டது, அவள் மோசேயையும் தீர்க்கதரிசிகளையும் பார்த்தாள். வானத்தில் தேவமனிதர்கள் மேகங்களுக்குள்ளாக நடந்து கொண்டிருப்பதை அவள் கண்டாள். அவர்களுக்குள்ளாக ஒரு கறுப்பின மனிதனைக் கண்டாள், தரிசனமானது பின்னர் மறைந்தது. நடுராத்திரி சத்தத்தை அவள் கண்டுகொண்ட நாளில், இந்த தரிசனத்தின் காரணமாக அவள் விசுவாசித்தாள். அது என்ன? ஏப்ரல் 24, 1993-இன் தூதன் தான் ஊழியக்களத்தில் எனக்கு முன்பாக சென்று கொண்டிருக்கிறார்.
70 பிஜியில் இருந்து சகோதரர் கிதியோன் எனக்கு கடிதம் எழுதி, "2014-இல் ஒரு தரிசனத்தை நான் கொண்டிருந்தேன். நான் சூரியன் அஸ்தமத்தை கண்டேன், பிறகு அது இரவு ஆனது, பின்னர் வானத்திலிருந்து அக்கினி இரதங்களும் குதிரைகளும் இறங்கி வந்து, என்னை அழைத்துக் கொண்டு என்னுடன் பரலோகத்திற்கு ஏறி சென்றன. அன்றைய நாள் முதல் நான் வில்லியம் பிரான்ஹாமின் காலம் கடந்துவிட்டது என்பதை புரிந்துகொண்டேன். 2014-ஆம் ஆண்டு அந்த நாள் முதல் நான் மீண்டும் சபைக்கு ஒரு போதும் செல்லவில்லை. வீட்டிலேயே ஜெபம் செய்து உபவாசம் இருந்தேன். 2021-இல், அந்த தரிசனமானது நிறைவேறியது, நான் நடுராத்திரி சத்தத்தை கண்டுபிடித்தேன், நான் விசுவாசித்தேன்." என்று அதில் கூறினார். அது என்ன? ஏப்ரல் 24, 1993-இன் தூதன் தான் ஊழியப்பணியில் எனக்கு முன்பாக சென்று கொண்டிருக்கிறார்.
71 பிஜியில் உள்ள விசுவாசிகள் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும்படி கேட்கிறார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது. நான், "அந்த கோடாக்(Kodak) மற்றும் ஃபிஜி(Fiji) அடையாளங்கள் இன்னும் காணப்படுகின்றனவா?" என்று கேட்டேன். மேலும் என்னிடம், "இல்லை தீர்க்கதரிசி, அவர்கள் புகைப்படக்காரர்களாக இல்லை" என்று எனக்கு சொல்லப்பட்டது. பிஜி தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் 300 தீவுகளைக் கொண்ட ஒரு நாடாகும். இவை உலகின் கடையாந்திரத்தில் உள்ள பகுதிகள்." இப்படி ஒரு நாடு இருக்கிறதா என்று நான் அறிந்திராத தொலைதூர நிலத்திலிருந்து ஜனங்கள் எப்படி விசுவாசிக்கிறார்கள்? அது என்ன? இது தான் ஏப்ரல் 24, 1993-இன் தூதன் எனக்கு முன்பாக ஊழியக்களத்தில் சென்று கொண்டிருப்பது.
72 மேலும் செய்தியானது பிஜி மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதி தீவுகள் மற்றும் உலகின் தொலைதூர நிலங்களை அடைந்திருக்கும் இந்நேரத்தில், பாளயமானது கண்டிப்பாக சுத்திகரிக்கப்பட வேண்டும். பாவங்களை மறைத்து வைப்பதையோ அல்லது செய்தியை விட்டு வெளியேறுவதையோ ஒருபோதும் தேர்வு செய்யாதீர்கள்.
73 தண்டனைகளைப் பொருட்படுத்தாமல், பூமியில் உங்கள் வாழ்க்கையின் இறுதி வரை தேவனுடைய பிரசன்னத்தோடு முகாமிலேயே தரித்திருங்கள். காக்குவ் 146-இன் கட்டளையின்படி நன்றாக ஜீவியுங்கள். ஏப்ரல் 24, 2021 முதல் இனி எப்போதும், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான் யாரிடமும் காணிக்கைகள் அல்லது தசமபாகத்தின் தசமபாகத்தையும் பெற விரும்பவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களது தசமபாகங்களும் காணிக்கைகளும், செய்திக்காக தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கிற உங்களுடைய சபைகளுக்கானது.
74 மேலும் காக்குவ் 146 வரை, இந்தத் தலைமுறைக்கு எது பாவம் எது பாவம் அல்ல என்பதை வரையறுத்துள்ளேன். மேலும் நிர்ணயித்த எல்லைக்கோட்டளவில் செயல்படுவது என்பது பாவம் அல்ல, எனவே அவை அறிக்கைக்கு வராது. ஆனால் அப்படி செய்யாமல் இருப்பது நல்லது என்று கூறினேன். உங்கள் மனைவியின் வாயோடு வாய் வைத்தல் மற்றும் தொலைக்காட்சி போன்றவை எல்லைக் கோட்டில் உள்ளன.
75 நீங்கள் வாயோடு வாய் வைப்பதன் மூலம் எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் அல்லது பிற நோய்களை கொடுக்க முடியும் அல்லது பெற முடியும், குறிப்பாக நீங்கள் அப்பொழுது தான் பல் துலக்கியிருந்தால். தொலைக்காட்சியைப் பொறுத்தவரை, செய்தியினுடைய நேர்காணல்கள், விவாதங்கள் மற்றும் பிற வீடியோக்களை பார்ப்பதற்காக உங்கள் வீட்டிற்காகவும் மற்றும் விருந்தினர்களுக்காகவும் நீங்கள் அதை கொண்டிருக்கலாம்.
76 என் அப்போஸ்தலர்களே, போதகர்களே, பிரசங்கிமார்களே, நீங்கள் என்னைப் பின்பற்றுபவர்களாக இருங்கள். கட்டுமான தளத்தில் தொழிலாளியாக இருந்தவன் நான், நான் யார்? மேலும் என்னிடம் வரும் அறிவற்றவனை நான் எப்படி ஏற்றுக்கொள்கிறேனோ, அவ்வாறே தேவன் என்னை ஏற்றுக்கொள்வார் என்பதை நான் அறிவேன். எனவே, அப்போஸ்தலன், போதகர் அல்லது பிரசங்கியாரும் தன்னிடம் வரும் முட்டாளை எப்படி ஏற்றுக்கொள்கிறார்களோ, எப்படி அவனுக்கு செவி கொடுக்கிறார்களோ, எப்படி அவனை நடத்துகிறார்களோ, அப்படித்தான் தேவன் அவர்களையும் நடத்துவார். மேலும் நான் உங்களுக்கு எழுதும் போது, மறுநாள் நீங்கள் எனக்கு பதில் அளித்தாலும், நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை.
77 ஞானஸ்நானத்தின் போது பாவ அறிக்கையை பகிரங்கமாக வெளிப்படுத்துகிற போதகர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஞானஸ்நானத்தின் போதோ அல்லது வெளிப்படையான பாவ அறிக்கையின் போதோ ஒருவர் அறிக்கையிட்டதை, எந்தவொரு சூழ்நிலையிலும் அல்லது ஒரு பிரச்சினையை தீர்க்கும் போதோ அவருடைய பாவ அறிக்கையை பற்றி நீங்கள் பேசக்கூடாது. ஆனால் உங்களில் பாவ அறிக்கை செய்த ஒருவரிடம், ஆராதனைக்குப் பிறகு, சில சகோதரர்கள் அவருடன் பேசலாம் மற்றும் அவருக்கு உதவலாம், ஏனெனில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, வேறொரு சகோதரரும் இதற்கு முன்பு சந்தித்திருந்தார்.
78 செய்தியில் இன்னும் ஏழு மாதங்கள் நிறைவடையாத அல்லது திருமணக் குழுவில் பெயர் இல்லாத சகோதரி ஒருவருடன் திருமணப் பேச்சுக்களில் ஒரு சகோதரர் ஈடுபட்டது அம்பலப்படுத்தப்பட்டால், அவர் ஒரு வேட்டையாடும் விலங்கு என்பதை அறிந்து கொள்ளுங்கள், அவர் மந்தையிலிருந்து அகற்றப்பட வேண்டும். குறைந்தது ஏழு மாதங்கள் சபைக்கு வெளியே இருக்கும்படி அவருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
79 செய்தியைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு எதிராக அவமானங்கள் இருந்தாலும், தீர்க்கதரிசி அல்லது செய்திக்கு எதிராக இருந்தாலும்கூட, அவமானங்களுக்கு ஒருபோதும் அவமரியாதையாக பதிலளிக்க வேண்டாம். ஒரு சகோதரன் அல்லது சகோதரியோ அஞ்ஞானிகளிடம் உடன்பட்டிராத ஒரு காரியத்தில், சகோதரன் அறிக்கைக்கு வந்தால், அந்த விஷயத்தில் அவர் தவறு செய்திருந்தால், அவர் அஞ்ஞானிகளிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும். யாரோ ஒருவர் செய்தியை ஏற்றுக்கொண்ட போதோ மற்றும் அழைப்பிற்கு பதிலளிக்கும் போதோ, பிரசங்கியார் அவர் மீது கைகளை வைத்து ஜெபம் செய்யக்கூடாது.
80 இன்னுமாக காக்குவ் 146-இன் பொருளின்படி, ஒரு போதகர் சில சகோதரர்கள் சம்பந்தப்பட்ட ஒரு குத்தகை, விற்பனை அல்லது வேறு எந்த வியாபாரத்திலும் சாட்சியாக தலையிடலாம். ஆனால் இந்த வியாபாரத்தினிமித்தமாக அவர் பணம் பெற்றால் அவருடைய போதகர் பதவியானது பறிக்கப்பட வேண்டும்.
81 கருப்பையக சாதனம் அல்லது கருத்தடை கருவியை உடலில் பொருத்தியிருக்கும் ஒரு பெண் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளலாம் பின்னர் அதை அகற்றலாம், ஏனென்றால் கடவுளின் குடும்பக் கட்டுப்பாடானது மாதவிடாய் மறுசுழற்சியின் போது விலக்கு அளிக்கிறது.
82 ஒரு சகோதரர் மனைவியுடன் செய்திக்கு வந்திருந்து, இருவரும் பிரிந்து தனித்தனியாக ஞானஸ்நானம் பெற்றால், அவர் ஒரு நல்ல சகோதரராக, அவர் தன்னைத் தூய்மையாகக் காத்துக்கொண்டு, செய்திக்கு சாட்சியாக இருப்பாரானால், ஏழு மாதங்கள் ஆகியிருக்கும் பட்சத்தில், அவரால் தனது மனைவிக்கான பரிசத்தை சமாளிக்க முடியாவிட்டால், சபையானது அவருக்கு அவரது மனைவிக்கான பரிசத்தில் உதவும். ஒரு சகோதரன் அல்லது சகோதரியின் துன்பங்களில் இரக்கமில்லாமலும், உணர்வில்லாமலும் இருக்கும் ஒரு சகோதரன் ஒரு சபையின் போதகராக இருக்கக்கூடாது.
83 சில விசுவாசிகள் தங்கள் சபைகூடிவருதலை விட்டு விடுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் கேட்கும் பிரசங்கம் மிகவும் பலவீனமாக இருப்பதால், அது நடுராத்திரி சத்தம் அல்ல என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு போதகர் அல்லது ஒரு பிரசங்கியார் பலவீனமான பிரசங்கத்தை வழங்கும்போது, தீர்வானது சபையை விட்டு விடுவது அல்ல, ஆனால் வரங்கள் உள்ள மற்றும் அதைச் சரியாகச் செய்யக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிப்பதாகும்.
84 ஒரு பிரசங்கத்தில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், அதை உங்கள் நாட்டின் குழுவிற்கும் புகாரளிப்பது உங்கள் உரிமையாகும், இதனால் ஒரு தீர்வு காண முடியும். ஒவ்வொரு சகோதர சகோதரிக்கும் அவரவர் சபைகளில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்வது உரிமையாகும். மேலும் போதகர் அல்லது அப்போஸ்தலரின் வக்கீல்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
85 இப்போது, நீங்கள் மீண்டும் மீண்டும் அதே கனவைக் கொண்டிருப்பதும், அதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதும், அந்தக் கனவு நீண்டு கொண்டே செல்வதும் நிகழலாம். நீங்கள் புரிந்துக்கொள்ள முடியாத மொழியில் ஏதோவொன்றை உங்களுக்குச் சொல்லும்படி தேவன் அதை உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்கிறார். இந்த விஷயத்தில், கடவுளின் மொழியை அறிந்து கொள்ளக்கூடியவரை நீங்கள் அவசியம் தேட வேண்டும், அதாவது, ஒரு தீர்க்கதரிசிதான் அதன் பொருளை உங்களுக்காக வியாக்கியானிக்கக்கூடியவர்.
86 நட்சத்திரங்களின் விண்மீன் திரள்களில், கருந்துளைகள் ஆகியவை கருந்துளைகளின் வகையை சார்ந்திருக்கிற மதங்களையும், சர்வதேச கூட்டமைப்புகளையும் மற்றும் அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பது எனக்கு வெளிப்படுத்தப்பட்டது. லட்சக் கணக்கான கருந்துளைகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெண்துளைகள் இருக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் இதுவரை அது கண்டுபிடிக்கப்படவில்லை. வெண்துளைகள் தோன்றி மறையும் போதுதான் கருந்துளைகளாக மாறுகின்றன என்பது வானியலாளர்களுக்குத் தெரியாது.
87 மனிதகுலம் அறிந்து கொண்ட முதல் கருந்துளை அன்னப்பறவை (Swan) விண்மீன் தொகுப்பில் உள்ள கருந்துளை ஆகும். இப்போது அன்னப்பறவையானது இந்து மதத்தை சுமந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்து மதமானது உலகின் முதல் மதமாக கருதப்படுகிறது. மேலும் ஒவ்வொரு கருந்துளையின் நுழைவாயிலிலும் ஒரு பிரகாசிக்கின்ற, ஒளி வட்டம் உள்ளது. மேலும் பிரகாசிக்கின்ற ஒளிவட்டமானது ஒரு தெய்வீகமாகும். ஆனால் அது இருள் மற்றும் நரகத்திற்கான நுழைவாயில். மேலும் ஒரு கருந்துளையானது அதன் அருகில் வரும் எந்த நட்சத்திரத்தையும் அல்லது பொருளையும் விழுங்கி அழிக்கிறது.
88 மத தலைவர்களின் வீடியோக்களை நீங்கள் இன்னுமாக இணையத்தில் பார்த்துக் கொண்டிருந்தால் உங்களால் மத புத்தகங்களை எரிக்கவும், தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் மசூதிகளை விட்டு வெளியேறவும் முடியாது. குறிசொல்லும் ஆவிகளை தவிர வேறு எதையும் கொண்டு வராத அக்காரியங்களிலிருந்து உங்களைப் வேறுபிரித்துக் கொள்ள வேண்டும். ஒருவர் கடவுளிடமிருந்து வந்த தீர்க்கதரிசி செய்தியாளனாக இல்லாமலும், கடவுளிடமிருந்து ஒரு அழைப்பு, ஒரு ஆணை மற்றும் ஒரு உண்மையான செய்தியை கொண்டிராத, அந்நபர் உங்களுக்கு என்ன சொன்னாலும், அதை குப்பைத் தொட்டியில் எறியுங்கள், நீங்கள் செய்வதற்க்கென்று ஒன்றும் இல்லாவிட்டாலும் அவருடைய வீடியோக்களை இனி பார்க்காதீர்கள்.
89 மேலும், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான், ஒரு மதத் தலைவரின் வீடியோவை பார்த்திருந்த அந்த இரவின் கனவில், கொள்ளைக்காரர்களின் தொகுதியின் இருளுக்குள் நான் தொலைந்த அதே வேளையில், மதவாதிகள் அதே வீடியோக்களைப் பார்த்து களிகூர்ந்து கொண்டிருந்தனர், ஏனெனில் அவர்கள் இருளின் புத்திரர்களாக இருக்கின்றனர். இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம், இந்து மதம், புத்தம், ஜைனம், கன்பூசியனிசம், தாவோயிசம், ஷின்டோயிசம் அல்லது சீக்கியம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள் கடவுளைப் பற்றிப் பேசும்போது, அவர்களை சுற்றிலும் பெரும் காரிருள் படர்ந்திருக்கிறது.
90 ஏப்ரல் 24, 1993-இன் அழைப்பு மற்றும் பணி நியமனத்தின் வெளிப்படுத்தல் மூலம் நான் உங்களிடம் பேசுகிறேன். கடவுளின் காரியங்களில், ஒன்று நீங்கள் உங்கள் காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியைப் பின்பற்றுங்கள் அல்லது நீங்கள் வீட்டிலேயே இருந்து விடுங்கள். நான் சொல்வதைக் கேட்ட பிறகு, இனி ஆலயத்துக்கோ, கோவிலுக்கோ, மசூதிக்கோ போகவேண்டாம். உங்களுக்கான பரலோகத்தின் வழியை நீங்களே அடைத்துப் போடாதீர்கள்.