1 நவம்பர் 7, 2021 அன்று நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு,நம் தலைமுறையில் கடவுளின் அன்பை கொண்டிருக்கிற அனைவருக்கும் கடவுளின் சார்பாக உரையாற்றினேன்.
2 முதலில், என்னில் விசுவாசம் கொண்டவர்களிடமும், சொர்க்கத்தில் என்னுடன் பங்கு பெறுபவர்களிடமும் நான் "சகோதரர் பிலிப்பு" என்று என்னை அழைக்கும்படியாக கேட்க விரும்புகிறேன். மேலும் பிரசங்க பீடத்தில், சகோதர சகோதரிகளிடம் உரையாற்றுகையில், நீங்கள் இனி: "தீர்க்கதரிசி கூறுகிறார்" என்று சொல்லக்கூடாது, ஆனால் "சகோதரர் பிலிப்பு கூறுகிறார்" என்று சொல்ல வேண்டும். இது இப்போது ஒரு கோட்பாடாக உள்ளது, ஆனால் பிரசங்கத்தில் கோர்வையில் "தீர்க்கதரிசி கூறுகிறார்" என்று ஒருவேளை சொல்லி இருந்தால் அதற்கு பாவ அறிக்கை இல்லை. "சகோதரர் பிலிப்பு கூறுகிறார்" என்றும் நீங்கள் கூறியுள்ளீர்கள்.
3 மேலும் இப்போது நான் கனவுகளைப் பற்றி பேச விரும்புகிறேன். இது சபைகள் மற்றும் மதங்களில் பேசப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். ஒரு மதத் தலைவர் கனவுகளை வியாக்கியானிக்கவில்லை என்றால், அவர் ஒரு ஞானமும் விவேகமும் உள்ள மனிதர். இருப்பினும், எந்த ஒரு நேர்மையான மதத் தலைவரும் தனது சபை உறுப்பினர்களுக்கு கனவுகள் மற்றும் தரிசனங்களின் முக்கியத்துவத்தை காண்பிக்க வேண்டும்.
4 ஆப்பிரிக்காவில் காணும் கனவுகள் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவில் காணும் அதே கனவுகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பிராமணர்களும் அரேபியர்களும் தங்கள் கனவில் துரத்தப்படுகிறார்கள், கனவில் உடலுறவு கொள்கிறார்கள், தலித்துகள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் கறுப்பின ஆப்பிரிக்கர்கள் போன்று அவர்களுடைய உறக்கத்தின் போது தீட்டுப்படுத்தப்படுகிறார்கள் அல்லது அமுக்கப்படுகிறார்கள். மேலும் கனவுகளின் மொழி உலகளாவியது. கடவுள் நம்முடைய இனவாதம் மற்றும் இகழ்ச்சியில் இல்லை. கிறிஸ்தவர்களைக் கொல்லும் நோய்கள் இஸ்லாமியர்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் கன்பூசிய மதத்தினரையும் கொல்லும். மேலும் ஒருவரைக் குணப்படுத்தும் அதே வைத்தியம் மற்றொருவரைக் குணப்படுத்தும் அதே மருந்தாகும். ஒரே கடவுள் மட்டுமே உண்டு மேலும் கடவுளின் சொர்க்கத்திற்கு ஒரே வழி தான் உண்டு.
5 கறுப்பின ஆப்பிரிக்கனின் கறுப்புத் தோலைப் போன்ற எந்தச் சாபமும் சொர்க்கத்தில் நுழையாது. சொர்க்கத்தில் நோய்கள் இல்லை, வெறுப்பு இல்லை, குற்றங்கள் இல்லை, லிங்காலா மொழி மற்றும் நாம் இங்கு பேசும் மொழிகள் இல்லை. இனி எந்த பலவீனமும் இருக்காது, மேலும் இனி திணறல் மற்றும் கருப்பு தோல் இருக்காது. இனம், நாடு அல்லது கண்டம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நமக்கு மேலே அதே சூரியன், அதே சந்திரன் மற்றும் அதே நட்சத்திரங்கள் அனைத்தும் உள்ளன. நட்சத்திரங்கள், நெபுலாக்கள் மற்றும் அவற்றின் விண்மீன்கள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான அர்த்தங்களை கொண்டு இருக்கிறது. ஏழு சபை காலங்கள் கார்த்திகை விண்மீனின் (Constellation Pleiades) ஏழு சகோதரி நட்சத்திரங்கள் என்று நான் விளக்கினேன்.
6 கார்த்திகை விண்மீன் குழு புனித சபையின் ஒரு வகையாகும். இது வெறும் கண்ணுக்குத் தெரியும் சிறந்த நட்சத்திரக் கூட்டமாகும். மற்றும் பழங்காலத்தில் இருந்து, கார்த்திகை விண்மீன் குழுவின் தோற்றம் அறுவடை மற்றும் மீன்பிடித்தலின் தொடக்கத்தைக் குறித்தது. கார்த்திகை விண்மீன் குழு ஏழு சகோதரிகளாகும். மேலும் இந்த ஏழு நட்சத்திரங்கள் ஒவ்வொன்றையும் சுற்றி ஒரு கொத்து அல்லது நட்சத்திரங்களின் நெபுலா உள்ளது. மேலும் ஒவ்வொரு நெபுலாவும் மற்றவை விட வேறுபட்டது.
7 மேலும் விண்மீன் குழுவின் ஏழு சகோதரி நட்சத்திரங்களில், முதலில் மெரோப் என்ற நட்சத்திரமான எபேசு உள்ளது. இது ஒரு நீல-வெள்ளை நட்சத்திரம். பின்னர் ரோமானிய துன்புறுத்தலின் காரணமாக இரத்த சிவப்பாக இருக்கும் சிமிர்னா என்ற நட்சத்திரம் எலக்ட்ரா. இது டையோகிளிஷியனின் (Diocletian) காலம் மற்றும் வெளிப்படுத்துதல் 6 இன் சிவப்பு குதிரையின் ஆரம்பம். பிறகு செலினா என்ற நட்சத்திரம் வருகிறது அது தான் பெர்கமு, ஒரு நீல வெள்ளை நட்சத்திரம். பின்னர் டைகெட்டா, இது தியாத்தீரா, ஒரு நீல-வெள்ளை நட்சத்திரம். பின்னர் ஸ்டெரோப் இது சர்தை, நீல-வெள்ளை நிறம், இது வடக்கில், ஐரோப்பாவில் ஜான் விக்ளிஃப்பின் காலம். ஜான் ஹஸ், மார்ட்டின் லூதர் மற்றும் ஜான் கால்வின் ஆகியோரின் தந்தை ஜான் விக்லிஃப் ஆவார். ஜான் விக்லிஃப் புராட்டஸ்டன்டிசத்தின் பிரகாசமான நட்சத்திரம். ஸ்டெரோப்பிற்குப் பிறகு மையா வருகிறது அது தான் பிலதெல்பியா, நீலம்-வெள்ளை நிறம். இறுதியாக அல்சியோன், இது லாவோதிக்கேயா, ஒரு நீல-வெள்ளை நட்சத்திரம். இந்த காரியங்கள் வேரு எங்கும் எழுதப்படவில்லை.
8 இப்போது, அதிக கனவுகளைப் பார்ப்பது என்பது கடவுள் உங்களை படைத்ததற்கு ஏற்ப உங்கள் சுய நினைவு மனதுக்கும் உங்கள் ஆழ் மனதுக்கும் இடையே உள்ள தூரத்தைப் பொறுத்ததாகும். உங்கள் சுய நினைவு மனம் உங்கள் ஆழ் மனதிற்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமான கனவுகள் மற்றும் தரிசனங்களை நீங்கள் காண்பீர்கள். மேலும் தீர்க்கதரிசிகள் அவர்களின் ஆழ்மனதை அவர்களின் சுய நினைவு மனதிற்கு மிக அருகில் வைத்திருக்கிறார்கள், அதனால்தான் அவர்கள் தூங்காமல் தரிசனங்களைப் பார்க்க முடியும். கடவுள் தாமே அவ்விதமாக அவர்களைப் படைத்தார். மேலும் நிறைவேறுகிற முன்னறிவிப்பு கனவுகள் வருகிறது அவை, எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்த கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறது அவைகளிலும் கூட சில கனவுகள் பிசாசிடம் இருந்து வருகிறது.
9 பிறகு, அதிக கனவுகளைப் பார்ப்பது என்பது பூமியில் உள்ள உங்கள் செயல்கள், வார்த்தைகள், தொழில்கள் மற்றும் கவலைகளைப் பொறுத்தது. இது உங்களுக்கு நெருக்கமாக இருக்கும் மக்களுடைய ஆவிக்குரிய செல்வாக்கு நிமித்தமாகவும் வரலாம். அஞ்ஞான திரைப்படங்களைப் பார்ப்பது அல்லது அஞ்ஞான விழாக்களில் பங்கேற்பது, நிகழ்ச்சிகள் அல்லது பேச்சுக்கள், சாத்தான் உங்களுக்கு பேய் கனவுகளை கொடுக்க அனுமதிப்பதாகும்.
10 மேலும் செயல்கள், வார்த்தைகள் மற்றும் நாம் பார்க்கும் அனைத்தும் மற்றும் பார்த்ததை தியானிக்கவும் இதன் விளைவாக வரும் கனவுகளின் எண்ணிக்கையைத் தவிர்ப்பதற்க்காக தீர்க்கதரிசிகள் தனியாக வெளியேறி வனப்பகுதி அல்லது மலைகள் மீது சென்றனர். மேலும், ஒரு தீர்க்கதரிசியாக, அநேக மற்றும் தேவையற்ற கனவுகளை தவிர்க்க நான் எந்த உரையாடல்களிலிருந்தும், தேவையற்ற பேச்சுக்களிலிருந்தும் என்னைக் காத்துக் கொள்ள வேண்டும். தூதர்கள் அரட்டை அடிப்பதில்லை.
11 தூக்கத்தில் நாம் காணும் அனைத்தும் கனவுகள். மேலும் ஒரு சொப்பனம் என்பது ஒரு முன்னறிவிப்பு மற்றும் தீர்க்கதரிசன கனவாகும். கனவு மற்றும் சொப்பனம் என்ற இரண்டு வார்த்தைகள்: "கணவன்" மற்றும் "மணவாளன்" என்பதை போன்றது. ஏதேனில் வீழ்ச்சிக்கு பிறகு மனிதன் சொப்பனத்தில் இருந்து கனவுகளுக்கு சென்றான். ஏவாள் சர்பத்துடன் செய்த பாவத்தின் விளைவு தான் ஏராளமான கனவுகள்.
12 அனைத்து படைப்புகளிலும், அதிகம் கனவு காணும் உயிரினம் சர்ப்பமாகும். மேலும் ஒவ்வொரு அசுத்தமான படம், வீடியோ, மற்றும் ஒவ்வொரு மத புத்தகம் மற்றும் காணொளி ஆகியவற்றிலிருந்து அநேகமான கனவுகள் வருகிறது. மத புத்தகங்கள் மற்றும் காணொளிகள் உங்கள் கண்களுக்கு சாத்தானின் கலிக்கமாக இருக்கிறது. மேலும் வில்லியம் பிரான்ஹாமின் கலிக்கம் பூமியிலிருந்து அகற்றப்பட்டு, ஜூலை 8, 2002 முதல் மாற்றப்பட்டது.
13 முதலில், ஒவ்வொரு கனவும் நுண்ணறிவின் மூலத்திலிருந்து வருகிறது என்பதை நினைவில் வையுங்கள். ஒவ்வொரு கனவுக்குப் பின்னாலும் ஒரு நுண்ணறிவு இருக்கிறது, படைப்பின் ஒவ்வொரு தனிமத்திற்கு பின்னால், ஒரு நுண்ணறிவு உள்ளது. எனவே அனைத்து கனவுகளும் ஒன்று கடவுள் அல்லது பிசாசின் மூலம் ஏவப்படுகிறது. சில நோய்களால், மருந்துகளால், அல்லது பகல் வேளையின் தொழிலின் போது ஏற்பட்டதாக நீங்கள் நினைத்தாலும் கூட, அதன் பின்னால் ஒரு நுண்ணறிவு உள்ளது.
14 ஒவ்வொரு கனவுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. மேலும் கனவுகளை மறப்பது என்பது நமது ஆவிக்குரிய நலக்குறைவினால் வருகிறது. மேலும் புரியாத எந்த மொழியும் பூமியில் இல்லை என்பது போல புரியாத கனவு இல்லை. மேலும் கனவுகள் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களின் அடையாளங்கள் போன்ற ஒரு மொழி. விண்மீன்கள், நெபுலாக்கள் மற்றும் நட்சத்திரங்களைப் போல கனவுகள் ஒரு மொழி.
15 கனவு என்பது ஒரு வாக்கியம். மேலும் கனவு தோன்றுகிற படியே, அந்த கனவின் தனிமத்தின் பொருளை நீங்கள் அறிவீர்கள். இது ஆவிக்குரிய உலகத்திற்கும் மனிதர்கள், பறவைகள், மீன்கள் மற்றும் விலங்குகளின் சரீர உலகத்திற்கும் இடையிலான மொழி. கனவுகள் மற்றும் தரிசனங்களின் விளக்க அகராதியை உருவாக்க முடியாது. மேலும் கடவுள் நமக்குக் கொடுக்கும் கனவுகள் நம்முடைய புரிந்து கொள்ளும் திறனுக்கு அப்பாற்பட்டவை அல்ல.
16 இப்போது பிசாசு தான் குற்றம் சாட்டுகிறவன், அவன் உங்களைச் சோதிக்கவோ, ஏமாற்றவோ அல்லது குற்றம் சாட்டவோ கனவுகளைக் காட்ட முடியும். ஆனால் உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியில் நீங்கள் விசுவாசம் கொண்டு, தற்போதைய கடவுளின் சித்தத்தின்படி நடப்பதினால், கலங்க வேண்டாம். அடுத்து கடவுளிடமிருந்து வரும் கனவுகள் பற்றி நான் பேசுவேன்.
17 மேலும் உங்களுடைய செயல்கள் தவறாக இருந்து நீங்கள் தேவனிடத்திலிருந்து ஒரு வெளிப்பாட்டை கேட்டால் 1 இராஜாக்கள் 22ல் இருப்பது போல் சாத்தான் உங்களுக்கு பதில் சொல்ல தேவனால் அனுமதிக்க முடியும். ஆனால் நான் உங்கள் கனவுகளை கேட்டபோது, கிட்டத்தட்ட அவை அனைத்தும் உங்களை விடுவிப்பதற்காகவும் சுத்திகரிப்பதற்காகவும் கடவுளிடமிருந்து வந்தவையாகும், நீங்கள் கொடும் கனவுகள் என்று நினைத்தவைகள் கூட அதற்காகத்தான். எந்த சூனியத்தையும் குறிச்சொல்லுதலையும் நான் பார்க்கவில்லை. மீண்டும் மீண்டும் வரும் கனவு பெரும்பாலும் கடவுளிடமிருந்து வரும் செய்தியாகும்.
18 தானியேல் 12:10 பூமியின் துன்மார்க்கன் என்று கூறுகிறது, அதாவது இஸ்லாம் மதம், கிறிஸ்தவ மதம், யூத மதம், இந்து மதம், பௌத்தம், சமனம், கன்பூசிய மதம், தெள மதம், ஷின்டோ மதம், பஹாய் மதம் மற்றும் சீக்கிய மதத்தின் உறுப்பினர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள், ஆனால் தங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியைப் பின்பற்றும் ஞானவான்கள் புரிந்துகொள்வார்கள் மற்றும் அவர்கள் சுத்திகரிக்கப்பட்டு வெண்மையாக்கப்பட்டு புடமிடப்பட்டவார்கள்.
19 கடவுள் ஒவ்வொருவரிடமும் அவர்களுக்கு புரியும்படியாக பரிச்சயமான சின்னங்கள், கதாபாத்திரங்கள், இடங்கள் மற்றும் செயல்களின்படி பேசுகிறார். ஒரு விலங்கு அல்லது ஒரு மனிதன் கனவில் உங்களைத் தாக்கினால், அது ஒரு சூனியம் என்று நினைப்பதை நிறுத்துங்கள். ஆனால் அவர் யார், அவரால் ஏன் உங்களைத் தாக்க முடிந்தது என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
20 நீங்கள் பாவம் செய்த ஒருவர் உங்களிடம் திரும்பி வந்தால், உங்களுடைய கனவில் நாயையோ அல்லது ஒரு பாம்பையோ காண்பீர்கள். மேலும் அந்த நபரை நீங்கள் தள்ளிவிட்டால், நீங்கள் அந்த நாயையோ அல்லது அந்த பாம்பையோ கொன்றுவிட்டதாக அல்லது காயப்படுத்திவிட்டதாக உங்கள் கனவில் காண்பீர்கள். கனவில் நிறைய சாப்பிடுவது நீங்கள் மாம்ச குணமுள்ளவர் என்பதை வெளிப்படுத்துகிறது, ஆனால் போதுமான அளவு சாப்பிடுவது பாவத்தின் பண்பை வெளிப்படுத்துகிறது அல்லது பாவத்துடன் தொடர்பில்லாத வேறு எதையாவதை குறிக்கிறது. சிறிய நீர் கடவுளின் அல்லது பிசாசின் வார்த்தையைக் குறிக்கிறது. அவை சுத்தமாக அல்லது அழுக்காக இருப்பதை பொருத்து, அதே சமயம் பெரிய தண்ணீர்கள் உலகத்தன்மை அல்லது இந்த உலகத்தின் கவலைகளாகும்.
21 மர்மமான கனவை நீங்கள் காணும்போது, அதன் வியாக்கியானத்திற்காக ஜெபியுங்கள். ஒரு சகோதரர் என்னிடம் ஒரு கனவை கூறினார். அவர் ஒரு பயணத்தில் இருந்தார் அவர் வழியில் கட்டப்பட்ட ஒரு வீட்டிற்கு வந்தார், வீட்டில் தளபாடங்கள் இல்லாமல் இருந்தது, அவரால் வழி கண்டுபிடிக்க முடியவில்லை அவர் செல்ல வேண்டிய இடம் வீட்டிற்குப் பின்னால் இருந்தது. நான் ஜெபித்தபோது, அதே கனவைக் கண்டேன். நான் தளபாடங்கள் இல்லாமல் இருந்த வீட்டிற்குள் நுழைந்தேன், பல அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்தன, அடுக்குமாடிகளின் சுவர்கள் பல வண்ண வலைப்பக்கங்களால் மூடப்பட்டிருப்பதைக் கண்டேன். நான் இந்த குடியிருப்பில் இருந்து வெளியே வந்து அந்த பிளாட்டுக்குள் செல்வேன் ஆனால் என்னால் கட்டிடத்தை விட்டு வெளியே வர முடியவில்லை பிறகு நான் எழுந்தேன்.
22 நான் அவரிடம் சொன்னேன்: சகோதரரே, உங்கள் வழியில் கட்டப்பட்ட வீடு உங்கள் வாழ்க்கையில் இணையத்தின் தாக்கம் ஆகும் மற்றும் நீங்கள் உள்ளேயும் வெளியேயும் சென்ற இந்த குடியிருப்புகள் இணையதளங்கள் மற்றும் வலைப்பக்கங்கள். ஆனால் இந்த சகோதரர் ஜெபிக்க, அவர் புரிந்து கொள்ள எளிதான மற்றொரு கனவை கடவுள் காட்டுவார்.
23 ஆனால் கடவுள் அவர்களுக்கு சின்னங்கள் இல்லாமல் நேரடியாக பேசுவதற்கு தீர்க்கதரிசிகளுக்கு காரியங்களை எளிதாக்குகிறார். கடவுள் சொன்னார், "நான் மோசேயுடன் முகமுகமாய் பேசுகிறேன்" . மேலும் நீங்கள் ஒரு துன்மார்கமான நபராக இருந்தால், எல்லாம் உங்களுக்கு கடினமாகவும் தலைகீழாகவும் இருக்கும் அதாவது ஒரு ஈமச்சடங்காக இருக்கும் வேளையிலே ஒரு விருந்தை காண்பீர்கள்.
24 ஆனால் ஒரு கனவில் ஒரு வீட்டில் தொலைந்து போவது என்பது அவசியம் இணையமாக பொருட்படும் என்று நான் கூறவில்லை. உதாரணமாக, ஏனெனில் காக்குவ் 142 இல், ஒரு சுரங்கப்பாதையின் ஒவ்வொரு கனவும் பிசாசு என்று நீங்கள் கூற முடியாது. காபோனைச் சேர்ந்த ஒரு சகோதரர் அவருடைய அப்போஸ்தலரிடத்தில் விளக்கியிருந்தார் "2002 இல் நான் கண்ட கனவில், வெள்ளை உடை அணிந்த ஒரு மனிதனை நான் வலது புறமோ, இடது புறமோ அல்லது பின்னோக்கி பார்க்காமல் பின்தொடர வேண்டியிருந்தது. அந்த கனவில், நான் ஒரு கருப்பு சுரங்கப்பாதை வழியாக அந்த மனிதனோடு சென்று கொண்டிருந்தேன் மற்றும் அந்த மனிதனின் ஆடையின் வெணமை எனக்கு வெளிச்சமாக இருந்தது.
25 நான் இடது அல்லது வலது பக்கம் பார்த்தபோது, எல்லா வகையான ஆப்பிள்களையும் பழுத்த பழங்களையும் பார்த்தேன், பின்னர் எனக்கும் மனிதனுக்கும் இடையில் இடைவெளி விரிவடைந்தது. பின்னர் நான் ஆப்பிள்களைப் பார்த்தேன், அவை அழகான இளம் பெண்களாக மாறின, அவர்களில் ஒருவர் புன்னகையுடன் என்னிடம், 'உனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்று கூறினாள். நான் நிறுத்தியபோது, வெள்ளை நிற உடையணிந்த அந்த மனிதனை என்னால் பார்க்க முடியவில்லை." ஏதேனில் உள்ளதைப் போலவே, இந்த பழங்கள் அல்லது ஆப்பிள்கள் பாலுறவைக் குறிக்கின்றன, ஆனால் அவை மதத் தலைவர்கள் மற்றும் அவர்களின் பிரசங்கத்தை குறிக்கலாம்.
26 கனவுகளில் உள்ள சின்னங்கள் தவிர, செயல்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக: வெற்றிடத்தில் விழுவது என்பது ஆவிக்குரிய அளவில் ஒரு படி விழுவதாகும். பள்ளியில், உங்கள் குடும்ப முற்றத்தில் அல்லது உங்கள் குழந்தைப் பருவத்தில் உங்களைப் பார்ப்பது, இவை ஆவிக்குரிய நிலைகள், நீங்கள் காரியங்களை பார்த்து திருத்த வேண்டியவை. ஆனால் அது இரட்சிப்பின் வரிசையில் உள்ளது. மேலும் இந்த விஷயங்களுக்கு பின்னால் அழிவு மற்றும் நரகம் உள்ளது.
27 ஆனால் உறக்கத்தில் அசையாமல் அல்லது முடங்கிப் போவது, துரத்தப்படுவது, கனவில் பறப்பது, கனவில் உடலுறவு கொள்வது, இருட்டில், புதரில் அல்லது தெரியாத இடத்தில் தொலைந்து போவது, பாம்புகள், நாய்கள் மற்றும் விலங்குகள் உங்களைத் தாக்குவதைக் பார்ப்பது, ஒரு துளைக்குள் விழுவது, இவை நீங்கள் நரகத்திற்கான பாதையில் இருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள். இருட்டில் இருப்பது பாவத்தில் இருப்பதாகும். இவை அனைத்தும் பாவத்திற்கு முன் ஆதாம் மற்றும் ஏவாளுக்கு நடக்கவில்லை. மேலும் உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்காக இவற்றை நீங்கள் பார்க்கும்படியாக கடவுள் அனுமதிக்கிறார்.
28 தன்னுடைய காலத்தில் உயிர் வாழும் தீர்க்கதரிசியின் செய்தியின்படி நடக்கிறவனை எதுவும் துரத்த முடியாது. தேவனுடைய தூதர்கள் அவனைச் சுற்றி முகாமிட்டுள்ளார். உங்கள் தூக்கத்தில் நீங்கள் துரத்தப்படும்போது அல்லது அமுக்கப்படும்போது அல்லது உங்கள் கனவில் உடலுறவு கொள்ளும்போது, அது சாத்தானுக்கு உங்கள் மீது அதிகாரம் உள்ளது என்றும் நீங்கள் இந்த நிலையில் மரித்தால் நீங்கள் நரகத்திற்கு செல்வீர்கள் என்று அர்த்தம். மேலும் விடுதலை என்பது உங்கள் காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியின் செய்தியில் மட்டுமே உள்ளது.
29 அநேகர் தாங்கள் தேர்வு வகுப்பில் இருப்பதாகவும், தங்கள் பேனா அல்லது தேர்வுத் தாளைத் தேடுவதாக கனவு கண்டனர் அல்லது அவர்களுடைய பேனா எழுதவில்லை அல்லது மற்றவர்கள் எழுதும் போது ஒரு காற்று அவர்களின் காகிதத்தை வீசி தள்ளியதாகவும். மற்றவர்களுக்கு மங்கலான பார்வை இருந்தது அல்லது படிக்காமல் இருந்தார்கள் அல்லது மறந்துவிட்டார்கள் அல்லது எழுத தெரியவில்லை அல்லது எழுதுவதற்கு போதுமான நேரம் இல்லை. மற்றவர்கள் மீண்டும் அதே தேர்வை எழுதினர். மற்றவர்கள் வீட்டில் இருந்தார்கள் அல்லது தாமதமானார்கள் அல்லது மற்றவர்கள் எழுதும் போது தங்கள் தேர்வு அறை அல்லது மேஜையை தேடினார்கள்.
30 இவை அனைத்தும் இரட்சிப்பின் பாதையில் உங்கள் அளவுகோல் அல்லது ஆவிக்குறிய அளவைக் குறிக்கின்றன, மேலும் நன்றாக செய்யத் தக்கதான திறன் உங்கள் கைகளில் உள்ளது என்பதையும் கூறுகின்றன. நான் பல்கலைக்கழகத்திற்குச் சென்றதில்லை என்றாலும் நான் எப்போதும் பல்கலைக்கழகத்தில் என்னை கனவுகளில் பார்த்திருக்கிறேன். கனவுகளில், நீங்கள் உங்கள் குழந்தைப் பருவத்திலோ அல்லது உங்கள் பள்ளி மட்டத்தை விட தாழ்ந்த பள்ளியிலோ இருக்கக்கூடாது. நாம் மரிக்கும் வரை முழுமையான பரிபூரணத்தை அடைய மாட்டோம் என்பது உண்மைதான், ஆனால் பரிபூரணத்திற்கான அக்கறையுடன் மரிக்கும் வரை ஒவ்வொரு நாளும் நாம் பரிபூரணத்தை தொடர வேண்டும்.
31 எனவே, இந்தச் செய்தியை விசுவாசித்ததினால், நீங்கள் இனியும் தொல்லைப்படுத்தபடுவதில்லை, ஏனெனில் அணிவகுப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஒரே இரவில் ஒரு மட்டத்திலிருந்து மற்றொரு நிலைக்கு உங்களால் நகர முடியும். ஏப்ரல் 24, 1993 க்கு முன்பு, நான் மதுபானம் அருந்தவில்லை, புகைபிடிக்கவில்லை அல்லது ஒரு பெண்னை அறிந்திருக்கவில்லை, நான் ஒரு அஞ்ஞானியாக இருந்தேன், உங்கள் கனவில் நீங்கள் அனுபவிக்கும் இந்த எல்லா விஷயங்களையும் நான் அனுபவித்தேன் நான் நரகத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். ஆனால் என்னை இரட்சித்த அதே கிருபை உங்களை இரட்சிக்கும் ஏனெனில் 24 ஏப்ரல் 1993 இன் கூட்டத்தினர், அது நீங்கள் தான்.
32 சுவிசேஷகர்களின் வழக்கமான குறிச்சொல்லுதலின் கனவுகள் இங்கே இந்த செய்தியில் இருப்பதில்லை. மேலும் இந்த செய்தியை விசுவாசிப்பதினால், கனவுகள் இருப்பது மோசமானதல்ல, மேலும் நீங்கள் முக்கியமானதாகக் கருதும் கனவை நீங்கள் எழுதி வைக்கலாம். ஒவ்வொரு மனிதனும் கனவு காணும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறான். உங்கள் கனவுகளை புரிந்து கொள்வதற்கான புத்திசாலித்தனத்தை கொடுக்க கடவுளிடம் கேளுங்கள். கனவுகள் உங்களை சோதிக்கலாம், உங்களை எச்சரிக்கலாம் அல்லது நீங்கள் புறக்கணிக்கும் பாவத்திற்கு உங்கள் கவனத்தை ஈர்க்க அழைக்கலாம். கனவுகள் கடவுளிடத்திற்கு வழிநடத்த நமக்குக் கொடுத்த வரங்களின் ஒரு பகுதியாகும். உதாரணமாக, ஒருவர் , "இந்த சபையில் அல்லது மதத்தில் இருந்ததிலிருந்து, நான் பல கனவுகளைக் கண்டிருக்கிறேன். நான் இங்கு சார்ந்தவன் அல்ல." என்று சொல்லலாம்.
33 ஒரு கனவில் நீங்கள் அழுக்கு குளியலோ அல்லது அழுக்குத் தண்ணீரிலோ நீராடுகிறீர்கள் என்றால், உங்களுடைய ஆராதனையின் இடம் நல்லதல்ல அல்லது உங்களுடைய சபையில் அல்லது உங்கள் மதத்தில் கடவுளின் வார்த்தை என்று நீங்கள் அழைப்பது கடவுளின் வார்த்தை அல்ல என்பதை அறியுங்கள். உங்களுக்கு பற்கள் இல்லை அல்லது பற்கள் உதிர்வதை போன்று கனவு கண்டால், நீங்கள் கேட்கும் பிரசங்கம் குழந்தையின் ஆகாரம் என்று அர்த்தமாகும்.
34 மேலும் பவுலின் நிருபங்கள் திருச்சபைக்கு அவளது குழந்தை நிலையில் உணவளித்த பால்புட்டில்களாகும். 2000 ஆண்டுகளுக்குப் பிறகு, சபை பவுலின் குழந்தை பாட்டில்களை கொண்டு உண்ண முடியாது. இங்கே இந்த செய்தியில், உங்கள் சபையில், நீங்கள் மிகவும் பலவீனமாக பிரசங்கிக்கப்பட்டிருந்தால், உங்கள் கனவில் பற்களை இழக்க நேரிடும். உங்கள் சபையின் அளவைப் பொறுத்து, ஒரு சுவிசேஷ சபையின் தோற்றத்தை அது எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாகனம் அல்லது கூட்டம் என்பது உங்கள் சபையை குறிக்கும்.
35 நாம் அனைவரும் செய்தியை விசுவாசிக்கிறோம், ஆனால் ஒவ்வொரு சபையும் அதன் சொந்த ஆவிக்குரிய நிலையை கொண்டுள்ளது. நீங்கள் கனவு காணலாம் மேலும் கனவின் படி நீங்கள் பார்க்கும் உங்கள் தந்தை உண்மையில் உங்கள் போதகராவார். உங்கள் குடும்ப முற்றத்தில் நீங்கள் பார்க்கும் பெற்றோர்கள் உங்கள் சபை உறுப்பினர்கள். மரித்த உறவினர்களாக இருப்பவர்கள் உங்கள் சபையில் பாவம் செய்தவர்கள் மற்றும் கலப்பின மக்கள்.
36 கனவின் வியாக்கியானம் ஒரு களத்தின்படி உள்ளது. ஒரு தண்டனை சகோதரர் என்னிடம் கூறினார்: "சகோதரர் பிலிப்பு, தயவுசெய்து, எனக்கு விடுதலை வேண்டும். என் கனவில், நான் மரித்துவிட்டேன், நான் புதைக்கப்பட்டேன், செங்கற்கள், சிமென்ட் மற்றும் ஓடுகள் போடப்பட்டிருப்பதை நான் எப்போதும் காண்கிறேன். கல்லறையில் இருப்பதால், நான் எழுந்து, கல்லறையைத் திறந்து வெளியே வருகிறேன். இந்த கனவு மீண்டும் மீண்டும் வருகிறது". நான் அவரை நோக்கி: சகோதரரே, உங்கள் கனவில் உள்ள மரணம் வெளிப்படையான பாவ அறிக்கையின் போது தண்டனையின் நிமித்தம் வெளியே இருப்பதாகும். கல்லறையிலிருந்து வெளியேறுவது சபைக்கு நீங்கள் திரும்புவதாகும். இந்த விளக்கம் அறிவியல் இசை, ஜோதிடம், நிதி அல்லது பிற களத்தின்படி வித்தியாசமாக இருக்கும்.
37 நாம் அனுபவிக்கும் அனைத்தும், தேவனுடைய சிந்தையில் உலகத்திற்கு அஸ்திபாரம் இடுவதற்கு முன்பே வரையப்பட்டவற்றின் நிலைப்பாடாகும். 2000 ஆம் ஆண்டில், நான் சிப்போராவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, அவளும் நானும் தண்ணீரில் மிதக்கும் படகில் திருமணம் செய்ய போவதாக ஒரு கனவு கண்டேன். நான் படகில் ஏறியபோது, அவள் ஏற்கனவே மோதிரத்தை எடுத்துச் சென்று விட்டாள் என்று கூறப்பட்டது. என்னுடைய மோதிரம் என்னிடம் கொடுக்கப்பட்டது, நான் விழித்தேன்.
38 அடுத்த நாள், சகோதரி ரோசின் தன்னுடைய வளர்ப்பு பெற்றோருடன் தங்கியிருந்த இடத்தில் சுமார் ஐந்து வயது சிறுமியாக ஒருத்தியைக் தரிசனத்தில் கண்டேன். அது காக்குவ் 111:11 இன் தரிசனம் என்று எனக்கு அப்போது புரியவில்லை. மற்றும் அன்று திருமணம் சிப்போராவுடன் படகில் தலைகீழாக மாறும் வரை மட்டுமே அசைந்தது. பின்னர், அக்டோபர் 2016 இல், சகோதரி ரோசின் நம்முடைய காலத்தின் மணவாட்டியாக வந்தாள், கிறிஸ்துவின் துன்பத்திற்குப் பிறகு வருகிறாள்.
39 அக்டோபர் 28, 2021 அன்று, நான் முதல்முறையாகப் பார்க்கும் அவளுடைய உண்மையான தந்தையிடம் சகோதரி ரோசினை வழிநடத்திச் சென்றேன். அவரை பார்த்ததும் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. மேலும் அவர் என்னை ஒரு தீர்க்கதரிசியாக வரவேற்றார். 2018 ஆம் ஆண்டில், வளர்ப்பு பெற்றோர்கள், பிரான்ஹாமிஸ்டுகளாக இருந்த போதும் என்னை நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரை வற்புறுத்தினாலும், அவர் அவர்களுக்கு இப்படியாக பதிலளித்தார்: "இல்லை! அவர் கடவுளுடைய தீர்க்கதரிசி என்று சொல்வதினால், எல்லாவற்றையும் நாம் கடவுளின் கைகளில் விட்டுவிடுவோம்". மேலும் அவர் இந்த நிலையில் உறுதியாக இருந்தார். அதற்க்காக கடவுள் அவருக்கு வெகுமதியை அளிப்பாராக.
40 அக்டோபர் 28, 2021 அன்று அவர்: "பரிசத்தை பொறுத்தவரை, நான் மதவாதி அல்ல, ஆனால் தீர்க்கதரிசியின் பரிசத்தை அமைக்க முடியாது. அவர் எனக்கு பரிசமாக எதைக் கொடுக்க விரும்புகிறாரோ, அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்." என்றார். திட்டமிடாமல் இருந்தபோதிலும், பரிசம் கொடுக்கப்பட்டது. அந்த இடத்திலேயே, அடையாளமாக, எந்த பாரம்பரியம் அல்லது வழக்கமும் இல்லாமல், இசை இல்லாமல்.
41 நான் அதை பார்த்ததில்லை மற்றும் இப்படி ஒரு வார்த்தை சொல்லி தன் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்கும் ஆடவர் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை அல்லது கூறப்படவில்லை. நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தோம். நிறைய உணவு இருந்தது. மேலும் கிராமத்தின் முதல்வர் இருந்த போதிலும் விழா முழுவதும் மது இல்லை.
42 எனவே கடவுள் எனக்கு 2000 ஆம் ஆண்டு முதல் காக்குவ் 111:11 ஐக் காட்டினார். எனவே நம் கனவுகள் அனைத்தையும் நாம் பிசாசை காரணம் காட்டக்கூடாது. டோனின்ஹோவுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே சகோதரர் ஆக்டேவியஸ் ஒரு கனவு கண்டார். அவர் கூறினார், "நாங்கள் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை சுற்றிலும் கூடி இருந்ததாக நான் கனவு கண்டேன் மற்றும் ஒரு குடிகாரன் உள்ளே அலைந்து திரிந்தான். அவன் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புபைப் போல பேசினான். பின்னர் அவன் என் காதுகளிலும் எங்களில் சிலரின் தலைகளிலும் சிறுநீர் கழித்தான். நாங்கள் அவனைப் பின்தொடர்ந்தோம். அவன் எங்களை ஒரு படிக்கட்டு கொண்ட வீட்டிற்கு அழைத்துச் சென்றான். மற்றும் எங்களுக்கு கதவு மூடப்பட்டது. இதோ, குடிகாரன் ஒரு சோம்பியாகிவிட்டான் (zombie), அவனைச் சுற்றியிருந்த அனைவரையும் பார்த்தேன் அவர்கள் மனிதர்களாக இருக்கவில்லை. மேலும் நான் நரகத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் எழுந்தேன்." இந்த கனவின் காரணமாக, சகோதரர் ஆக்டேவியஸ் டோனின்ஹோவைப் பின்தொடரவில்லை.
43 மேலும் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த சகோதரர் பொன்மாஷி என்னிடம் கூறினார், "தீர்க்கதரிசி, 1996 இல், நான் என் தாத்தாவுடன் சிறு குழந்தையாக இருந்தேன். ஒரு மனிதன் தலைகீழாகச் சென்று சொர்க்கத்தின் பிளாஸ்டரில் நடப்பதைக் கண்டேன். , 'அங்கே தானியேல் இருக்கிறார்! அங்கே தானியேல் இருக்கிறார்! என்று நான் கத்தினேன்' ஆனால் என் பெற்றோர் பார்க்கவில்லை." இந்த தரிசனத்தின் காரணமாக அவர் செய்தியை விசுவாசித்தார். ஒரு நாள் தீர்க்கதரிசி தானியேல் பூமியில் நடப்பார் என்பதை அவர் அறிந்திருந்தார். கடவுளை நோக்கி நாம் நடக்கையில் கனவுகள் சாலை அடையாளங்களாக இருக்கின்றன.
44 "எனக்கு விடுதலை வேண்டும் என்று நினைக்கிறேன், என் கனவில் ஒரு நாயைக் கண்டேன்" என்று நீங்கள் சொல்கிறீர்கள் . இல்லை, கனவு உங்களை வெறுமனே எச்சரித்தது. கனவு ஒரு பாவத்தை குறித்து நினைவூட்டலாம் அல்லது எச்சரிக்கலாம், அதனால் நீங்கள் அதை செய்யாமல் தவிர்க்கலாம் அல்லது அறிக்கை செய்யலாம். ஏதேனில் உள்ளதை போலவே, இது பாலுறவு, சபைகள் மற்றும் மதங்களுடன் சர்ப்பம் கனவுகளில் தோன்றுகிறது. மேலும் பாலுறவின் பாவத்திற்கு முன்போ அல்லது பின்போ நீங்கள் ஒரு பாம்பு அல்லது நாயைப் பார்ப்பீர்கள். மற்றும் நாய் தான் வாந்தி எடுத்த பாவத்திற்கு திரும்புகிற ஒன்றாக இருக்கிறது.
45 பாலியல் தூண்டுதல்கள் மற்றும் பாலுறவு பற்றிய படங்கள் மற்றும் வீடியோக்களில் இருந்து ஒரு கன்னிப் பெண் தன்னைக் காத்துக் கொண்டால் அவள் தனது கனவுகளில் ஒருபோதும் பாலுறவு கொண்டிருக்க முடியாது. ஒருபோதும் முடியாது. ஆனால் அவள் அதைச் செய்தால், அவள் தனது கனவில் உடலுறவு கொள்ளக்கூடும். மேலும் நீங்கள் பார்க்கின்ற ஹாலிவுட் மற்றும் திரைப்பட ஸ்டுடியோக்கள் பேய்களின் சாக்கடைகளாக உள்ளது.
46 முழு பரிபூரணத்திற்காக நாம் ஏங்குகிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள், ஆனால் கடவுள் நம்முடைய காலத்திற்காக நிர்ணயித்த பரிபூரண வரம்பை மட்டுமே நாம் அடைவோம். ஒவ்வொரு பள்ளி தரத்திற்கும் அதன் வரம்புகள் உள்ளன மற்றும் ஒவ்வொரு சபை காலமும் அதன் பரிபூரண வரம்மை கொண்டுள்ளது. லவோதேக்கியாவின் பரிபூரணத்தை பெருக்கமு அடையமுடியாது. மேலும் சேவல் கூவும் வேலையின் பரிபூரணத்தை நாம் அடைய மாட்டோம். எனவே, நீங்கள் செய்தியின் படி நடந்தால், நீங்கள் காணும் கனவுகளால் கலங்க வேண்டாம்.
47 நியாயத்தீர்ப்பில், கனவில் செய்த ஒரு பாவத்திற்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்கள், ஆனால் கடவுள் உங்களிடம் : "ஒரு கனவில் இன்ன இன்ன பாவங்களை குறித்து நான் உன்னை எச்சரித்தேன், நீ ஏன் நான் சொல்வதைக் கேட்கவில்லை?" என்பார். அதற்கு நீங்கள் "நான் கனவுகளைக் கண்டேன், ஆனால் நான் அவற்றைப் புரிந்து கொள்ளவில்லை.." என்பீர்கள். ஆனால் இந்த கனவுகளைப் புரிந்துகொள்வது என்பது நீங்கள் பள்ளியில் படித்த அனைத்தையும் விட அல்லது பூமியில் நீங்கள் அலுவலாக இருந்த எல்லாவற்றையும் விட கடினமான ஒன்று இல்லை.
48 உங்கள் தாய் மொழி அல்லாத ஒரு முழு மொழியையும் நீங்கள் பேசக்கூடும் போது, பின்னர், நீங்கள் விரும்பினால், உங்கள் கனவுகளை நீங்கள் புரிந்து கொள்ளலாம். உங்களால் புரிந்துக்கொள்ள முடியாத கனவுகளை கடவுள் தரமாட்டார். யோபு 33 கூறுகிறது, மனிதர்கள் உறங்கும் போது, கனவிலோ அல்லது இரவின் தரிசனத்திலோ கடவுள் அவர்களிடம் பல முறை பேசுகிறார் என்று கூறுகிறது மற்றும் அவர்கள் அதை உணரவில்லை.
49 "ஓ தீர்க்கதரிசியே, எனது தொலைபேசி தொலைந்து போனதாக நான் கனவு கண்டேன் அல்லது என் அறையிலோ என் பையிலோ பாம்பு இருந்ததாகக் கனவு கண்டேன் என்று நீங்கள் கூறும்போது," உங்கள் அறையில் இருக்கும் பாம்பு உங்கள் மனைவியா அல்லது உங்கள் தொலைக்காட்சி பெட்டியா என்பதை அறிய உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசி தேவையில்லை.
50 சரி, இப்போது நான் உபவாசத்தைப் பற்றி பேசுகிறேன். உபவாசம் என்பது வெளிப்படையான பாவ அறிக்கை போன்ற பரிசுத்தப்படுத்துதலின் ஒரு பண்பு. அதனால்தான் ஒவ்வொரு கிறிஸ்தவனும் உபவாசம் இருக்க வேண்டும். மேலும் உபவாசத்திற்கு நீங்கள் பயப்பட வேண்டாம். என்னை விசுவாசித்த பிறகு நீங்கள் மது, புகைத்தல் மற்றும் சுயஇன்பத்தில் இருந்து விடுபட்டாலும், உங்கள் தூக்கத்தில் பிசாசு உங்களை அமுக்காமல் இருந்தாலும் கூட, உபவாசமும் உங்களைப் பற்றியது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், அதனால் தான் நீங்கள் ஏப்ரல் 24, 1993 இன் கூட்டத்தில் இருக்கிறீர்கள், ஆனால் நம்முடைய இலக்கு புத்தியுள்ள கன்னிகைகளுடன் முதலாவது உயிர்த்தெழுதலில் இருக்க வேண்டும்.
51 சிலுவையில் கர்த்தராகிய இயேசுவின் இரத்தமே மனிதகுலத்தின் பாவங்களைத் துடைக்கிறது. ஆனால் ஒருவன் சிலுவைக்கு எப்படி செல்வது? ஒருவன் எப்படி இரட்சிப்பைப் பெறுவது? உங்கள் காலத்தில், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல கடவுள் ஒரு தீர்க்கதரிசியை தூதராக அனுப்புவார். நீங்கள் உபவாசம் இருக்க வேண்டும் என்று இந்த தூதர் சொல்லும் நேரம் வந்துவிட்டது.
52 நீங்கள் கைதிகளாக இருந்தால், உங்கள் விடுதலைக்கான ஆணையில் ராஜா கையெழுத்திடலாம். ஆனால் சிறைக் காவலர்களிடம்: "எனது சிறை அறையைத் திற, நான் விடுவிக்கப்பட்டேன் என்று ராஜா கூறுகிறார்." என்று நீங்கள் சொல்லக் கூடாது. இல்லை. ஆனால் ராஜாவின் தூதுவர் முதலில் வந்து ஆவணங்களில் உங்களிடத்தில் கையெழுத்திட வேண்டும். நீங்கள் சிறையிலிருந்து வெளியே வருவதற்கு பல நாட்கள் ஆகக்கூடிய பல நடைமுறைகள் இருக்கும்.
53 இந்த தூதுவர் தான் உங்களுடைய காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசி. மற்றும் ஆவணம் அவருடைய செய்தியாகும். தூதுவர் உங்களிடம், "ஞானஸ்நானம் எடுங்கள்" என்று சொல்வார். பிறகு அவர் உங்களிடம், "வெளிப்படையாக பாவ அறிக்கை செய்யுங்கள்" என்று கூறுவார். இப்போது அவர் உங்களிடம் "உபவாசம் இருங்கள்" என்று கூறுகிறார் . நீங்கள் மறுத்தால், அரசரின் ஆணையை மீறி நீங்கள் சிறையில் அழிந்து போவீர்கள்.
54 பாவம் நம் வீட்டு வாசலில் இருக்கிறது என்பதையும், நம்மைத் தூய்மையாக வைத்திருக்கும்படி கடவுளிடம் கேட்க வேண்டும் என்பதையும் கனவுகள் நமக்கு நினைவூட்டுகின்றன. நீங்கள் ஒரு பாவம் செய்திருந்தால், 1 இராஜாக்கள் 21ல் ஆகாப் உபவாசம் இருந்ததால் கடவுள் அவருக்கு செவிசாய்த்தார் என்றால், கடவுள் உங்களுக்கும் செவிசாய்க்க முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆனால் உபவாசம் பாவத்தை அழிக்க முடியாது. தேவன் எலியாவிடம், "அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லாப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார்." பாவ மன்னிப்பு வெளிப்படையான பாவ அறிக்கையில் காணப்படுகிறது, ஆனால் உபவாசத்தில் இல்லை. உபவாசத்தின் காரணமாக, கடவுள் தண்டனையை நிறுத்திவிட்டார், ஆனால் ஒரு நாள் தண்டனை இறுதியாக ஆகாபின் மகனாகிய அகசியா மேல் வந்தது.
55 உபவாசம் இருக்கும் போது, உங்கள் சுவாசம் சரியில்லாமல் இருந்தால், உங்கள் வாயை தண்ணீர் அல்லது வேறு ஏதாவது கொண்டு கழுவலாம். மேலும் இது உபவாசத்தை நிறுத்துவதில்லை. மேலும், உபவாசத்தின் போது குளிக்காமல் இருப்பது நல்லது என்று நினைத்தேன், ஆனால் அப்படி இருக்க வேண்டியதில்லை. நீங்கள் குளிக்கலாம்.
56 சரி, உன்னத உபவாசம் பெரும்பாலும் அதிகபட்சமாக இரவு 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் இரவு 6 முதல் 9 மணிக்குள் முடிவடைகிறது. அநேக நாட்கள் நீடிக்கும் உபவாசத்திற்கு, ஒவ்வொரு இரவு நேரத்திலும், நீங்கள் தண்ணீர் அல்லது பழச்சாறு குடிக்கலாம், சில பழங்களை சாப்பிடலாம் அல்லது முழு உணவை சாப்பிடலாம், அல்லது உலர் உபவாசம் இருக்கலாம், அதாவது முழு உபவாச காலத்திலும் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல் இருப்பது. பசியின் மீதான வெற்றி என்பது ஜெபத்தில் உள்ளது. நான் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன், "கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!" என்ற பாடலின் சத்தத்தில், ஒரு தூதன் ஒரு பெரிய பல்லியைப் பிடித்து அரிவாளால் கொன்றான், பல்லியால் அவனை எதிர்க்க முடியவில்லை. மேலும் வான பல்லியின் உடல் பூமியில் விழுந்தது.
57 நீங்கள் உபவாசம் இருக்கிறீர்கள் என்று அனைவருக்கும் தெரிவிக்கக்கூடாது. உபவாசம் கடவுளுக்கும் உங்களுக்கும் இடையே விவேகமானதாக இருக்க வேண்டும். உபவாசம் தனிப்பட்டதாகவோ அல்லது கூட்டாகவோ இருக்கலாம் ஆனால் ஒருபோதும் கட்டாயமில்லை. மேலும் ஒன்றாக கூடி உபவாசம் இருக்க ஒரு சபை முடிவு செய்யலாம். எக்காரணம் கொண்டும் எந்த சகோதர சகோதரிகளையும் உபவாசம் இருக்கும் படியாக வைக்கக் கூடாது. மற்றும் பாலியல் உறவிற்கு பிறகு அடுத்த நாள் உபவாசம் இருக்க முடியாது அல்லது உபவாசத்தின் போது உடலுறவு கொள்ள முடியாது. நீங்கள் எப்படி வழிநடத்தப்படுகிறீர்கள் என்பதைப் பொறுத்து, நீங்கள் ஒரு குறுகிய உபவாசத்தை செய்யலாம்: ஒன்று அல்லது மூன்று நாட்கள். நீங்கள் ஒரு நீண்ட உபவாசத்தை செய்யலாம்: 7, 21, 28 அல்லது 40 நாட்கள்.
58 உபவாசத்தின் போது, நீங்கள் தவறுதலாக சாப்பிட்டுவிட்டு, பிறகு உபவாசத்தை நினைவுகூர்ந்து, உடனே உண்பதை நிறுத்தினால், நீங்கள் சிலவற்றை விழுங்கினாலும் உபவாசம் தொடரும். உபவாச காலத்தில் ஏற்படும் மாதவிடாய் உபவாசத்தை நிறுத்துவதில்லை. நீங்கள் எவ்வாறு வழிநடத்தப்படுகிறீர்கள் என்பதைப் பொறுத்து, உபவாசத்தின் போது அல்லது உபவாசத்தை முடித்த பிறகு ஒருவர் ஜெபம் செய்யலாம் , ஆனால் உங்கள் ஜெபத்திற்கு பதில் கிடைத்துவிட்டது அல்லது அரை நாள் உபவாசம் இருக்கிறேன் என்ற சாக்குப்போக்கில் உபவாசத்தை திடீரென நிறுத்த முடியாது. உடல்நலக் காரணங்களைத் தவிர, ஒருவன் ஆரம்பித்துவிட்ட அல்லது நிறைவு பெறாமல் முடிவு செய்த உபவாசம் அறிக்கையிட வேண்டிய பாவம் ஆகும்.
59 இப்பொழுது, உங்களின் உபவாசத்திற்கு எந்த நாளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? உபவாசமானது துக்கம் மற்றும் சஞ்சலத்தின் நாள் என்பதால், வெள்ளிக்கிழமை அதற்கான ஏற்ற நாளாகும் அல்லது மற்றொரு நாள், ஆனால் அது 1 நாளுக்கு மேல் நீண்ட உபவாசமாக இல்லாதபட்சத்தில், கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த நாளான ஞாயிற்றுக்கிழமையாக இருக்கக்கூடாது.
60 பழங்காலத்திலிருந்தே அனைத்து சாத்தானிய நடைமுறைகளின் புனித நாள் வெள்ளிக்கிழமையாகும். ஆண்டவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டது வெள்ளிக்கிழமை 13ஆம் நாள். நான் வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டேன். இது மந்திரவாதிகள், ஷாமன்கள், நங்காக்கள், சங்கோமாக்கள் மற்றும் மாயவித்தைக்காரர்கள் மற்றும் சாத்தானிய மதங்கள் மற்றும் வழிபாடுகளின் புனித நாள்.
61 மேலும் உபவாசத்தின் போது, நீங்கள் கடவுளின் பரிசுத்த ஆவியின் நிலமாகவோ அல்லது பேய்களின் நிலமாகவோ ஆகலாம். அதினால் தான், கடந்த காலத்தில் நீங்கள் ஒரு சுவிசேஷ சபையில் பரிசுத்த ஆவியால் பயன்படுத்தப்பட்டபோது, அங்குதான் உங்கள் ஜெபங்கள் தொடங்க வேண்டும், ஆக கடவுள் உங்களை அதிலிருந்து விடுவிப்பார்.
62 ஒரு சுவிசேஷ பரிசுத்த ஆவிக்கு அது இந்த இடத்தை சேர்ந்தது இல்லை என்று தெரியும் ஆனால் உங்களை அவமானப்படுத்தவும், செய்திக்கு சந்தேகம் மற்றும் அவப்பெயரை ஏற்படுத்தவும் உங்களைப் பிடிக்க முயற்சிக்கும். ஆனால் உண்மையான பரிசுத்த ஆவியும் உங்கள் மீது வந்து, உங்களை விடுவித்து, உங்களைக் குணப்படுத்தி, கடவுளின் பிள்ளைகளுக்கு உங்களை ஆசீர்வாதமாக கொடுக்க முடியும்.
63 உபவாசம் உங்கள் மீது கடவுளின் இரக்கம், கிருபை மற்றும் கருணையை ஈர்க்கிறது. இது தியானம் மற்றும் அர்ப்பணிப்புக்கான நேரம். இது பெரும் துக்கத்தின் அடையாளம். இது ஒரு பாவி கடவுளை நோக்கி இப்படி கூறுகிற தருணம், " ஒ தேவனே, தூதனும் ஆட்டுக்குட்டியானவரே, என் நிலையைப் பாரும். எனக்கு நன்மை வேண்டும் ஆனால் தீமை என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரக்கமும் கருணையும் கொண்ட தேவனே, உம்மைத் தவிர வேறு யார் என்னை விடுவிப்பார்?" மேலும் உபவாசத்தின் போது அல்லது அதற்குப் பிறகு கைகளை வைக்காமல் சுகம், விடுதலை அல்லது ஆசீர்வாத்தை ஒருவர் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் நாய்கள் மற்றும் பாம்புகளின் கனவுகள் அவன் வாழ்க்கையிலிருந்து மறைந்துவிடும்.
64 கடந்த மாதம் ஒருவர் பைத்தியக்காரத்தனத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்காக பிரார்த்தனை செய்யும்படி என்னிடம் கேட்டார். அவருடைய மகன் வன்முறையில் ஈடுபட்டு தொட்டிகளிலிருந்து சாப்பிட்டான். நான் ஜெபம் செய்த அடுத்த நாள், பைத்தியம் பிடித்தவன் ஆறு பகல் மற்றும் ஆறு இரவுகள் சாப்பிடாமலும் குடிக்காமலும் கிடந்தான்.
65 ஏழாம் நாள் காலையில் எழுந்து அவனுடைய அப்பாவிடம் அன்றைய தேதியைக் கேட்கச் சென்றான். அவரது தந்தை "அக்டோபர் 22, 2021." என்று கூறினார். தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு எனக்குக் கொடுத்த உபவாசத்தின் முடிவு இதுதானா என்று கேட்டார். அவரது தந்தை"இல்லை, யாரும் உனக்கு உபவாசம் கொடுக்கவில்லை" என்று பதிலளித்தார் . மேலும் அவர் சாப்பிட்டுவிட்டு எளிமையாக பேசினார். அவரது மகன் பைத்தியக்காரத்தனத்திலிருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டான் என்று அவனுடைய அப்பாவும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
66 பரிசுத்தத்தின் நிமித்தமாக தான் இஸ்ரவேலரிடம் கடவுளின் வல்லமை இருந்தது, ஆனால் கானானியர்களிடம் இல்லை. அது தான் இன்று பூமியில் நீங்கள் பார்க்கும் சபைகள் மற்றும் மதங்கள். இந்த சபைகளும் மதங்களும் பன்றிகளாக இருக்கின்றன. ஆபாச படங்கள், காட்சிகள் மற்றும் நிர்வாண வீடியோ அழைப்புகள், அது அவர்களின் சுபாவமாக இருக்கிறது. ஆனால் பரிசுத்தம் எப்போதும் இஸ்ரவேலிடம் இருந்து வருகிறது. அதனால்தான் முடி திருத்துபவர்களாக இருக்கும் நம் சகோதரிகள் கூட போலி முடியை விற்கவோ, பின்னல் செய்யவோ கூடாது என்று முடிவு செய்துள்ளேன். சிகரெட் மற்றும் மதுபானங்கள் விற்பனைக்கும் இது இதே விதமாக உள்ளது.
67 சகோதரர்கள் மத்தியில் கூட நீங்கள் சீட்டு ஆட்டம், லுடோ, செக்கர்போர்டு விளையாட முடியாது. இவை பலவீனம் மற்றும் பாவத்திற்கான கதவுகளாகும். மேலும், இந்த வெளிப்பாடு முன்னேறுகிறதாக இருக்கிறது. மேலும் காக்குவ் 149 இன் இந்த அத்தியாயம் தன்னை நிச்சயம் செய்யாத ஒருவருடன் பாலியல் தொடர்பில் உள்ள பெண்ணுக்கு ஞானஸ்நானம் தடை விதிக்கப்படும் ஆனையாக வருகிறது. பரிசம் இல்லாமல் ஏற்கனவே ஞானஸ்நானம் பெற்ற சகோதரிகள் இனி அறிக்கை செய்யக்கூடாது.
68 ஒரு சகோதரன் அல்லது ஊழியக்காரர் ஒரு சகோதரியிடம் தனது துணிகளைத் துவைக்கவோ, தனது வீட்டில் உணவு சமைக்கவோ அல்லது அவரது அறையை கவனித்துக்கொள்ளவோ கேட்க்கும் போது, அது பாலியல் பாவத்திற்கான முயற்சி. அவர் அதை அறிக்கையிட வேண்டும். ஆனால் உங்கள் அனுமதியுடன், உங்கள் மனைவி அல்லது வேலைக்காரர் இவற்றைச் செய்யலாம், ஒரு சகோதரனுக்காக அல்லது உங்களுக்காக அவற்றைச் செய்யும்படி உங்கள் கூரையின் கீழ் வசிக்கும் ஒரு சகோதரியிடம் உங்கள் மனைவி கேட்கலாம்.
69 இனி முதற்கொண்டு, நிர்வாணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சார்ந்து இருக்கும் அனைத்து இணைய தளங்கள், உலாவிகள் மற்றும் இயங்குதளங்களைப் பயன்படுத்துவதை நான் செய்தியில் தடை செய்கிறேன். Instagram, Snapchat, Likee மற்றும் Tik Tok மற்றும் அது போன்ற தூய்மையற்ற சமூக வலைதளங்களுக்கு இது பொருந்தும். உங்கள் தொலைபேசிகளில் அவற்றை வைத்திருப்பதைத் தவிர்க்கவும். மற்றும் வெளிப்படையான பாவ அறிக்கை நேரத்தில் தூய்மையற்ற படங்கள் மற்றும் வீடியோக்கள் பற்றி பேசும் போது, நீங்கள் சில தெளிவுபடுத்தல்களை கொண்டு வர வேண்டும். அவை தனிமைப்படுத்தப்பட்ட தூய்மையற்ற படங்களா அல்லது அவை ஆபாசப் படங்களா அல்லது வீடியோக்களா அல்லதுஒரு படத்தில் உள்ள காட்சிகளா என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்.
70 ஒருவரிடம் செய்த தவறுக்கு வெறுமனே மன்னிப்பு கேட்பது வெளிப்படையான பாவ அறிக்கையை ரத்து செய்வதில்லை அது போல் உபவாசம் வெளிப்படையான பாவ அறிக்கைக்கு ஒருபோதும் மாற்றாக இருக்க முடியாது.
71 ஒரு பாவத்தை அறிக்கை செய்த பின்போ அல்லது அதற்கு முன்போ நீங்கள் உபவாசம் இருந்து கடவுளிடம் வேண்டுதல் செய்யலாம். நீங்கள் உபவாசம் இருந்து பாவம், ஆவி, நோய் அல்லது சாபத்திலிருந்து உங்களை விடுவிக்குமாறு கடவுளிடம் மன்றாடலாம், கடவுள் அதை உடனே செய்வார் அல்லது அவருடைய காலத்தில் செய்வார். நல்ல மனசாட்சியுடன் பாவம் செய்துவிட்டு போய் உபவாசம் இருக்காதீர்கள். நியாயப்பிரமானத்தின் கீழ், ஒரு நபர் ஒரு பாவம் செய்த போது அவர் கல்லெறியப்பட்டார். ஆனால் இங்கே கிருபையின் கீழ், அவருக்கு வெளியே தண்டனை கொடுக்கப்படுகிறது.
72 உபவாசத்தின் போது, பகலிலோ அல்லது இரவிலோ நீங்கள் வழிநடத்தப்பட்டபடி ஜெபிக்கலாம். ஜெபிக்காத சீஷனாக இருக்காதே. மேலும் நீங்கள் உபவாசம் மற்றும் ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்யலாம். மேலும் கொலோசெயர் 4 உபவாசம் மற்றும் ஜெபம் மூலம் எப்பாப்பிரா கிறிஸ்துவுக்காக போராடுகிறதை பற்றி பேசுகிறது. ஜெபம் மற்றும் உபவாசத்துடன் அன்னாள் இரவும் பகலும் தேவாலயத்தில் கடவுளை சேவித்துக் கொண்டிருந்தாள் என்று லூக்கா 2:36 கூறுகிறது.
73 மேலும், நாம் ஆவிக்குரிய வரங்களை விசுவாசிக்கிறோம். ஜெபத்தின் போது ஒரு வரம் கிரியை செய்து கொண்டு இருந்தால், வரம் செயல்படும் வரை காத்திருங்கள். தேவனுடைய வரம் தெளிவாகவும் விரைவாகவும் செயல்படுகிறது. ஒரு பிரத்தியட்சம் நீண்ட நேரம் எடுத்து சோர்வாக்கினால், அந்த நபரை அமைதிப்படுத்த டீக்கன்கள் தலையிட வேண்டும். மேலும் ஒரு பிரத்தியட்சத்தின் போது, யாரோ ஒருவர் கட்டுபாட்டை இழந்து விடாமல் இருக்க, எந்தவொரு நபரும் ஒரு டீக்கனைப் போல தலையிடலாம். எந்தவொரு போதகரும் தன்னை வெளிப்படுத்தும் ஒரு தீய ஆவியை விரட்ட முடியும், ஆனால் இது மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
74 எபேசியர் 4 இன் ஊழியன் ஒருவன் ஒரு பொறுப்பிற்காக கைகளை வைக்கவோ அல்லது எபேசியர் 4 இன் மற்றொரு ஊழியரைப் பிரதிஷ்டை செய்யவோ முடியாது. கைகளை வைப்பது தண்ணீர் ஞானஸ்நானத்திற்கான அதே மதிப்பு உள்ளது. இது பரிசுத்த ஆவியின் விடுதலை மற்றும் ஞானஸ்நானம் மற்றும் அசுத்த ஆவிகளின் பரிமாற்றத்தின் நேரம். ஒரு தேவபக்தியற்ற நபர் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து உங்களைத் தீட்டுப்படுத்தி, உங்கள் வாழ்க்கையில் பேய்களையும் கொடுங்கனவுகளையும் அனுப்பலாம். அதனால்தான் உங்களுக்கு ஆவிக்குரிய பிரச்சனை இருப்பதாக உணர்ந்தால், யாருக்கும் ஞானஸ்நானம் கொடுக்காதீர்கள், காரணமின்றி யார் மீதும் கைகளை வைக்காதீர்கள்.
75 ஞானஸ்நானத்தின் போது, சில பிரசங்கிகள் அப்பாவி ஆத்மாக்களுக்கு பிசாசுகளை இடமாற்றினர் அதன் நிமித்தம் முடிவாக அவர்கள் செய்தியை விட்டு வெளியேறினர். மேலும் எவனொருவன் தனது ஞானஸ்நானத்தின் மூலம் பேய்களை கொண்டு வருகிறானோ அவன் தனது பிரசங்கங்கள் மூலமாகவும் பிசாசுகளை வரவழைக்க முடியும். இந்த உபவாச நேரமானது தவறான ஞானஸ்நானத்தினால் அவதிப்படும் ஒவ்வொரு ஆத்துமாவிற்கு விடுதலையையும் பரிசுத்த ஆவியையும் கொண்டு நான் வர ஜெபிக்க்கிறேன். பரிசுத்த ஆவியானவர் தாமே நமக்குள் வந்து நமக்காக போராடுவாராக. நீங்கள் ஞானஸ்நானம் கொடுத்து ஜனங்கள் விடுதலை அடையாமல் இருந்தால், நீங்கள் உடனடியாக ஞானஸ்நானம் கொடுப்பதை நிறுத்த வேண்டும், தேவன் உங்களுக்கு கிருபை அளிப்பார்.
76 கர்த்தராகிய இயேசு இஸ்ரவேலில் இருக்கும் வேளையில், ஆவிக்குரிய சூழ்நிலையின் காரணமாக, வாழ்க்கையின் கவலைகளுக்காக நீங்கள் இஸ்ரவேலை விட்டு எகிப்துக்குப் போகக்கூடாது. தேவன் உங்களை எச்சரிக்க ஒரு கனவை அனுப்பலாம்.
77 மேலும் எல்லா இடங்களிலிருந்தும் சாட்சிகள் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் பலவீனமானவர்கள், ஆனால் இந்த தலைமுறையில் பூமியில் நாம் தேவனுடைய பிரியமான ஜனங்கள். மத்தேயு 25:6-ன் இந்தச் செய்தியில் நீங்கள் இங்கே பார்ப்பது பூமியின் மேல் உள்ள பரிசுத்தத்தின் உச்சமாகும். இது தான் பூமியின் மேல் உள்ள பரிசுத்தம். பிஸ்காவின் உச்சியிலிருந்தும் பேயோரின் உச்சியிலிருந்தும் பிலேயாம் இஸ்ரவேலைப் பார்த்து ஒரு பரிசுத்த ஜனத்தைக் கண்டான். அக்டோபர் 2021 ஆம் மாதத்தில் உங்களிடமிருந்து நான் பெற்ற ஆயிரக்கணக்கான கனவுகள் மற்றும் தரிசனங்கள் மூலம் நான் இதை கண்டேன்.
78 மேலும் இந்தக் கனவுகள் மற்றும் தரிசனங்களில் அநேகம், 1993 அல்லது 2002க்கு முன்போ அல்லது காக்குவ் பிலிப்பு என்ற பெயரை கேள்விப்படாத அஞ்ஞான மக்களிடமிருந்து வந்தவை, அவை வேதாகமத்தில் யோசேப்பு மற்றும் நேபுகாத்நேச்சார் போன்ற தீர்க்கதரிசனம் மற்றும் முன்னறிவிப்பு கனவுகளாகும். கடவுளிடமிருந்து வந்த இந்த சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் எனது தீர்க்கதரிசன பணி மற்றும் எனக்கு பிறகு எதிர்காலத்தில் என்ன வரப்போகிறது என்பதின் விவரங்களை காட்டியது. சொர்க்கத்தை நோக்கிய நமது முழு நடையையும் கடவுள் காட்டியுள்ளார். மேலும் இது வெளிப்படுத்துதல் புத்தகத்தை விட ஒரு தெளிவான மற்றும் துல்லியமான வழியில் உள்ளது.
79 இந்த சொப்பனங்கள் மற்றும் தரிசனங்களில் மிக முக்கியமானவை உண்மையான ஆவிக்குரியப் பொக்கிஷத்தை அமைக்கின்றது, நான் அவைகளை ஒரு தனிப்பட்ட பதிவேட்டில் சேகரித்தேன். இது மீண்டும் நமது மீட்பின் ஒரு சான்றாகும். இது ஒரு மதத் தலைவர் தனது சபை உறுப்பினர்களிடம்: "நாம் அவருடைய சித்தத்தில் இருக்கிறோமா என்பதை தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தம் படியாக ஜெபியுங்கள்" என்று கேட்பதைக் காட்டிலும் வேறுபட்டது.
80 அந்தக் கனவுகள் கடந்த கால மற்றும் நிகழ்கால மற்றும் எதிர்கால விஷயங்களை, நாம் இறந்த பிறகு என்ன நடக்கும் என்பதை கூட விவரமாகக் காட்டின. சகோதரி ளொரி எட்சியாங் என்னிடம், "சகோதரர் பிலிப்பு, எனக்கு கடவுளைப் பற்றி ஒன்றும் தெரியாது, நான் ஒருபோதும் ஒரு சபையில் இருந்ததில்லை. நான் கனவு கண்டேன், இதோ, நாம் பூமிக்கு மேலே கூடியிருந்தோம். மேலும் அங்கே 'வெள்ளையர்கள், கலப்பு இன மக்கள், கறுப்பின மக்கள், உயரமானவர்கள், குட்டையானவர்கள், பெரிய மனிதர்கள் மற்றும் அது போன்ற பலர் இருந்தனர். மேலும், 'எங்களை இங்கு அழைத்து வந்தவர் எங்கே?' என்று நான் கேட்டேன். அவர் மற்றவர்களைக் இரட்சிக்க பூமிக்குத் திரும்பினார் என்று என்னிடம் கூறப்பட்டது. அந்த மனிதன் ஒரு விசித்திரமான ஆடையை அணிந்திருந்தான், அதில் அவன் நன்றாக இருப்பதாக உணர்ந்தான்."
81 மேலும் சகோதரி, தூரத்தில் இருந்து பார்த்தபோது, குழுக்கள் போல் தோன்றிய மற்ற குழுக்களைக் கண்டதாகக் கூறினாள் அவை மற்ற தீர்க்கதரிசிகளுக்கு சொந்தமானது போன்று தோன்றியது. ஒவ்வொரு குழுவிலும் உள்ளவர்கள் வெள்ளை நிற உடையணிந்து வெண்மையாக இருந்தனர். இந்த மக்கள் தேவதைகளின் சில காலனிகளைப் போல ஒரே மாதிரியான அளவு, வடிவம் மற்றும் முகத்தை கொண்டிருந்தனர். ஆனால் குழுக்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருந்து.
82 நாம் மரித்த பிறகு அங்கே கூட்டிச் சேர்க்கப்படும்போது, முதலில் நாம் இப்போது இங்கே இருப்பது போல் இருப்போம். பின்னர் நாம் அனைவரும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொள்ளும் போது மாற்றப்படுவோம். 1993 இல் எங்கள் குடும்ப முற்றத்திற்கு அருகிலுள்ள கல்லறையில் நான் பார்த்த இரண்டு தூதர்கள் பரலோகத்திற்கு ஏறியதன் இரகசியம் இதுதான் மற்றும் அவர்கள் உயிர்த்தெழுப்பப்பட்ட மக்களைப் போன்று இருக்கிறார்கள் என்று சொன்னேன். அவர்கள் மிகவும் வெள்ளை நிறத்தில் உடையணிந்து வெண்மையாக இருந்தனர்.
83 சகோதரி நமக்கு அடுத்ததாக இருந்த குழுவை கவனித்து வருவதாக கூறினார். அவர்கள் அனைவரும் மிக வெள்ளை தோலை கொண்டிருந்தனர் மற்றும் அவர்களின் முகங்கள், உயரங்கள், வெள்ளை ஆடைகள் மற்றும் அனைத்து அம்சங்களும் ஒரே மாதிரியாக இருந்தன. அது வில்லியம் பிரான்ஹாமின் குழு. இருப்பினும் பூமியில் வில்லியம் பிரான்ஹாமின் குழுவில், கறுப்பின மக்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக மாறினர். இருப்பினும், பெரிகிரீன் (Pearry Green) போஸ்வொர்த்தை அடையாளம் கண்டு கொள்கின்றார்.
84 இதற்கிடையில், பூமியில் உள்ள பிரான்ஹாமிஸ்டுகள் மற்றும் சுவிசேஷகர்கள், அவர்கள் இறந்த பிறகு, அவர்கள் வில்லியம் பிரான்ஹாமின் குழுவில் அல்லது நாசரேத்தின் இயேசுவின் குழுவில் கூட இணைவார்கள் என்று நினைக்கிறார்கள். அது வருத்தமாக இருக்கிறது.
85 மேலும் முடிப்பதற்கு, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரி லிலியானா ஹெரேடியாவின் கனவை நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அவள் சொன்னாள்: "என் தீர்க்கதரிசியே, நான் என்னுடைய கரங்களில் என் மகனுடன் பாலைவனத்தில் இருப்பதாக கனவு கண்டேன். இந்த பாலைவனத்தின் மணல் வெண்மையாக இருந்தது. மற்றும் நாய்கள் என் மீது அவிழ்த்து விடப்பட்டு இருந்தன. மேலும் பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் என்னிடம், 'பயப்படாதே' என்று கூறியது . அதன் பிறகு நான் வேறொரு இடத்தில் இருந்தேன் மற்றும் இருட்டிலே கூண்டில் உள்ள ஒரு கருப்பு காளை, என்னை அழிக்க என் மீது தன்னைத் தூக்கி எறிய விரும்பியது. அதன் கண்கள் நெருப்புச் சுடர் போல இருந்தன. மற்றும் நான்அதனிடம், 'நீ யாரென்று எனக்குத் தெரியும் என்பதால், நீ எனக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது!' என்றேன்.
86 நான் வேறொரு மலைப்பாங்கான இடத்திற்குச் சென்றேன், நான் மேலே பார்த்தபோது, ஒரு மலையின் உச்சியில் ஒரு தூதனைக் கண்டேன். மேலும் இந்த தூதன் தன் தலையில் வட்டமான தட்டை தொப்பி போன்று ஒரு சிவப்பு தொப்பி இருந்தது. அவனுடைய கால்கள் மலையைத் தொடவில்லை. தூதனிடமிருந்து ஒரு சத்தம் என்னிடம் வந்து, 'இந்த தூதன் மூன்று நாட்களுக்கு உங்களிடம் அனுப்பப்படுவார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படுவார். அவர் போன பிறகு, அவர் உங்களுக்குக் கற்பித்த அனைத்தையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்க வேண்டும், ஆகையால் நீ பார்த்த கருப்பு காளை உன்னை அழிக்காமல் இருக்கும்.
87 இதற்குப் பிறகு நான் ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்பாக நின்றேன். துண்டுப் பிரசுரங்கள் அல்லது சிறு புத்தகங்களை அவர்களிடம் கொடுத்து, 'நீ கடவுளை விசுவாசிக்கிறாயா?' என்று கேட்டேன். யாரும் துண்டுப்பிரசுரங்களை எடுத்துக்கொள்ளவில்லை, அவர்களில் யாரும் கடவுளை நம்பாததால் நான் அழுதேன். அதன் பிறகு நான் ஒரு கதவுக்கு முன்னால் இருந்தேன், அப்போது சொர்க்கத்திலிருந்து சத்தம் என்னிடம், 'உன் செருப்புகளை அணிந்துகொள், அதனால் நீ ஆடை அணிய வேண்டும். ஏனென்றால், உனக்கு செருப்பு இல்லாமல், நீங்கள் கடவுளுக்கு முன்பாக நிர்வாணமாக இருப்பது போல் இருக்கிறது. பிறகு கனவு என்னை விட்டுச் சென்றது.'
88 அவள் பார்த்த நாய்கள் அவள் கலந்துகொள்ளப் போகும் சுவிசேஷ சபைகள். மற்றும் நீண்ட காலம் கழித்து, கனவுக்குப் பிறகு, அவள் பிரான்ஹாமிசம் என்ற கருப்பு காளையுடன் சேர்ந்தாள். பின்னர் 2017 இல், அவர் ஏப்ரல் 24, 1993 இல் இந்த தூதனை சந்தித்தாள். எனவே, வெளிப்படுத்துதல் 12ல் உள்ள வலுசர்ப்பத்திற்கு சிங்கம், தவளை, பாம்பு, செம்மறியாடு மற்றும் வெள்ளாடு ஆகியவற்றின் தலைகளைத் தவிர நாய் மற்றும் காளையின் தலைகளும் உள்ளன.
89 சிவப்பு தட்டை தொப்பி தேசங்களின் நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனைக்கானது. யோசுவா 6 மற்றும் ஏப்ரல் 24, 1993 தரிசனத்தில் பட்டயத்தை பிடித்திருந்த அதே தூதன் மிகாவேல் தான் பரலோகத்தில் இருந்து இறங்கி வருகிறார். மேலும் செருப்புகள் வைராக்கியம் மற்றும் கிரியைகளாகும், இது திருமண ஆடையை உருவாக்குகிறது.
90 லூதரின் ஆட்டுக்குட்டி ஆட்டுக்கடாவாக மாறியது. வில்லியம் பிரான்ஹாமின் ஆட்டுக்குட்டி ஒரு கருப்பு காளையாக மாறியது. மேலும் கவனியுங்கள் ஏப்ரல் 24, 1993 இன் தூதன் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றின்படியும் நடக்கவும், அதனால் காக்குவ் பிலிப்புவின் ஆட்டுக்குட்டியும் மற்றொரு விலங்கு ஆக முடியாது. புரிந்துகொள்வதற்கு காது உள்ளவன் புரிந்து கொள்ளட்டும்.