



Kacou 15 (Kc.15) : தேவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்
(2003 ஜூன் 1 ஞாயிறு காலை லோக்காட்ஜ்ரோ, ஆபிட்ஜான்-ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 ... நம்முடைய காலத்திற்கு வாக்களிக்கப்பட்ட மறுக்கமுடியாத சத்தியத்தை நாம் கண்டறியும்போது, தேவனுடைய பிள்ளை ஒருவன், அவன் பணக்காரனோ அல்லது ஏழையோ, அல்லது துரத்திலோ அல்லது பக்கத்திலோ இருக்கக்கூடிய எவ்விடத்திற்கும் இந்த சத்தியத்தை கொண்டுசெல்வதை தவிற, நமக்கு மீதமாக இருப்பது தான் என்ன? நீதியின் தேவன் அவர்களுடைய இரத்தத்தை குறித்து நம்மிடம் கேட்காமல், நம்மை பரதீஸுக்குள் பிரவேசிக்க அனுமதிக்க மாட்டார். மனிதர்களின் சட்டம் கூறுகிறபடி மனிதர் புனிதமானவர்கள் என்றால், ஆத்துமா அதைவிட மிகவும் புனிதமானதாக இருக்கிறது. ஒரு பெரிய கடமை நம்மேல் சுமத்தப்பட்டிருக்கிறது. மத்தேயு 28:19-ன் கட்டளை துண்டு பிரசுரங்களுக்கோ அல்லது புத்தகங்களுக்கோ அல்ல, ஆனால் சில ஜனங்களுக்கு, நமக்கு கொடுக்கப்பட்டது. ஒரு புத்தகம் ஒரு கேள்விக்கு பதிலளிக்க முடியாது! உங்களால் காணமுடிகிறதா?
2 மனித இனம் அழிவுக்கு நேராகப் போகிறதை தேவன் பார்த்தபொழுது, அவர் தம்முடை தெய்வீக மாட்சிமையையும் எல்லா மகிமையும் விட்டுவிட்டு நமக்காக தம்மையே தியாக பலியாக்கினார், ஆதலால் அவரைப்போல் நாமும் நித்திய ஜீவனை உடையவர்களாக முடியும். தேவன் மனிதனுக்கு கொடுத்த மகத்தான ஒன்று, அது அவருடைய சொந்த ஜீவன் தான். ஆயினும், அவர் கிழே இரங்கி வராமல், தேவதூதர்கள் நடுவில் இருந்துகொண்டிருந்தாலும், அவர் எப்பொழுதும் தேவனாகவே இருப்பார் ஆனால் நாமும்கூட நித்திய ஜீவனை பெறும்பொருட்டு அவர் அவ்விதம் செய்தார். பார்த்திர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறது].
3 ஆயினும், மனுஷன் எதை மகிமையானது என்று அழைக்கிறானோ, அதுவே தேவனின் சேவைக்கு தன்னை ஒப்புக்கொடுக்க அவனை தடை செய்கிறதா? எனக்கு தெரியாது! மத்தேயு 4:8 முதல் 9 ல், சாத்தான் அனைத்தையும் இயேசுவுக்கு கொடுப்பதாக கூறினான், ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார்! அதனால்தான் நாம் அரசியலில் தலையிடுவதில்லை [...]
4 ஒரு மனிதன் தேவனுக்கு ஊழியம் செய்கிறான் என உரிமை கோறும்போது, அவன் என்ன சொல்கிறான் அல்லது அவன் என்ன செய்கிறான் என்பதை சரியாக அறிந்துகொள்ள முற்படுவதற்கு முன்பாக, அவனுடைய அழைப்பின் (call) நம்பகதன்மை, அவனுடைய பணிநியமனம் (commission) மற்றும் அவனுக்கு கட்டளையிடப்பட்ட வேலை ஆகியவைகளை அறிந்துக்கொள்ள முயற்சியுங்கள். தேவன் ஒருவனை பூமியில் அனுப்பாதிருக்கும் போது, அந்த மனிதனுடைய பிரயாசங்களையும் நல்லகாரியங்களையும் கூட தேவன் அங்கிகரிப்பதில்லை. உண்மையை பிரசங்கித்தல் என்பது ஒரு காரியமல்ல, ஏனென்றால் பிசாசும் வார்த்தையை அறிந்து இருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறது].
5 ஒரு இராஜாவுக்கு பதிலாக ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலை வழிநடத்தவேண்டும் என்பதுதான் தேவனுடைய பரிபூரணமான சித்தமாக இருந்தது. ஆனால் இஸ்ரவேலர் ஒரு இராஜா வேண்டும் என கோரிக்கை விடுத்தனர், 1 சாமுவேல் 8:4 முதல் 7. ஒரு இராஜா மூலமல்ல ஆனால் ஒரு தீர்க்கதரிசி மூலம் தேவன் பேசினார். சாமுவேல் மரிக்கும் முன்னர், அவனுடைய ஸ்தானத்தில் ஒரு தீர்க்கதரிசியை அபிஷேகம் பண்ண வேண்டிருந்தது. மேலும் ஒரு தீர்க்கதரிசி மூலம் இராஜா வருவதென்பது தேவனுடைய பரிபூரணமான சித்தம் இல்லை; அந்தவிதமாக இருப்பதற்கு இது மனிதர்கள் தேர்ந்தெடுக்கிற ஒரு தலைவன் போன்றதான ஓன்று அல்ல. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறது].
6 2 இராஜாக்கள் 22:11 முதல் 14 ல், யோசியா இராஜா தேவனுடைய வார்த்தையை பற்றி விசாரிக்கும்படியாக தீர்க்கதரிசியிடத்தில் ஆசாரியனாகிய இலக்கியா மற்றும் சம்பிரதியாகிய அகிக்காமையும் அனுப்பினான். 2 நாளாகமம் 20:20 ல், இராஜா யோசபாத்: “உங்கள் தேவனாகிய யேகோவாவை நம்புங்கள், அப்பொழுது நிலை நிறுத்தப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசியை நம்புங்கள், அப்பொழுது சித்தி பெறுவீர்கள்.” என்று இஸ்ரவேலரிடம் சொல்லுகிறான்.
7 தேவைப்பட்டால் தனது தாயகத்திற்காக ஓர் நாள் மரிப்பதற்கும் அழைக்கப்பட்ட ஒரு போர்வீரனை போன்றவன் தான், ஒரு கிறிஸ்துவன். தாக்குதலுக்கான அழைப்பு ஒலிக்கிற நாளில், பூமியிலுள்ள எல்லாம் அர்த்தமற்றதாகிவிடுகிறது, அவனுடைய பணம் அல்லது வீடு மட்டுமல்ல ஆனால் அவனுக்கிருக்கிற மிகவும் விலையுயர்ந்ததான, அவனுடைய உயிரும் ஆபத்துக்குள்ளாகிறது. அதனால் தான் சேனாதிபதி அழைக்கும் போது நீங்கள் தயாராக இருக்கவேண்டும். அது ஒரு மாதத்திற்குள்ளாக அல்லது ஒரு வருடத்திற்குள்ளாக அல்ல ஆனால் இன்றைக்கே. வேதாகமமும் தரிசனமும் அதை உறுதிப்படுத்துகிறது, அதனால்தான் 1993 ன் தரிசனத்தில், நீங்கள் ஆட்டுக்குட்டியை காண்கிறீர்கள், அது பலிக்கான அடையாளமாக இருக்கிது.
8 அப்போஸ்தலர் 16:6 முதல் 10 க்கு ஏற்ப, உழியக்களத்தில் இந்த எழுப்புதலை பரிசுத்த ஆவியானவர் ஒருங்கிணைப்பார். எல்லாம் தேவனுடைய பரிபூரண சித்தத்தின் திட்டத்திற்குள் வரவேண்டும், அது அப்படி அல்லவென்றால் அது பாவமாக இருக்கிறது மேலும் அவர் என்னை அழைத்திருந்தால் உலகின் அஸ்திவாரத்திற்கு முன்பாக என்னை அறிந்திருப்பார் என்றும் என் திறமைகளை அவர் அறிந்திருந்தார் என்றும் நான் எண்ணுகிறேன். அவர் ராஜ்யத்தின் திறவுகோல்களை பேதுருவிடம் கொடுத்தபொழுது, பேதுரு யார் என்பதை அவர் அறிந்திருந்தார்! பூமியின் கடையாந்தரங்களை இந்த செய்தி எவ்வாறு எட்டும், என்பதை அவர் அறிந்திருக்கிறார்; அவர்கள் தான் இந்த யோசுவா மற்றும் காலேபின் விசுவாசம் உள்ளவர்கள், அவர்கள் உள்ளே வருவார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறது].
9 ஒரு நல்ல பாப்டிஸ்டாக ஆக்குவதற்கல்லவென்றால் ஒரு பாப்டிஸ்டு போதகரின் புத்தகம் எதற்காக என்னிடம் கொண்டு வரப்படவேண்டும்? வேதம் வாசிப்பதை போப் இன்னோசன்ட் -III (Pope Innocent III) மூலம் தடைசெய்தபோது, சாத்தான் எந்த குறிக்கோளை எட்ட விரும்பினான்? ஜனங்கள் அவனது விருப்பத்துக்குள்ளாக இருக்கும் பொருட்டு, அதே குறிக்கோளை இன்று வேறொரு வழியில் எட்டியிருக்கிறான். வேதாகமத்தை அவர்களது கரங்களில் விடுகிறதினால், அவன் அவர்களுக்கு எண்ணிறந்த விளக்கங்களை கொடுத்தான், ஒரு பாப்டிஸ்ட் வழி, ஒரு பெந்தேகோஸ்தே வழி, ஒரு யெகோவா சாட்சி, அட்வென்டிஸ்ட், நசரேய, அனாபாப்டிஸ்ட் வழி, ... சரியாகவும் முழுமையாகவும் அதே நோக்கத்தை அடைந்தான்.
10 கிறிஸ்தவம் என்றால் என்னவென்று அறியும்பொருட்டு, தேவனுடைய பிள்ளை ஒருவன் இரட்சிப்பைபற்றியும் நித்திய ஜீவனைபற்றியும், சம்பந்தபட்ட சிறிய காரியங்களையும் கூட தேடுவான். எலி வீட்டில் வளர்க்கப்ப்படுகிற ஒன்றல்ல, அது போல பிசாசின் மகன் ஒருவன் சத்தியத்துடன் தொடர்பு கொண்டிருந்தாலும், அவன் என்னவோ அதுவாகத்தான் இருப்பான். தேவனுடைய பிள்ளை ஒருவன் ஒரு தவறானதுடன் தொடர்பில் இருந்தாலும், அவனுடைய மனக்கண் பிரகாசிப்பிக்கபடும்வரை அவனோடுதானே கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பான்! ஆமென்! நீங்கள் காண்கிறீர்களா? ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறது].
11 1540 க்கும் 1770 க்கும் இடையில் ஒன்பது மில்லியன் (90 லட்சம்) கிறிஸ்தவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர், உயிருடன் புதைக்கப்பட்டனர், சிரச்சேதம் செய்யப்பட்டனர்; அஞ்ஞான ரோமாபுரியினால் அல்ல, ஆனால் ரோமன் கத்தோலிக்க சபையால். ஏன்? ... 1415 ல், பராகுவே பல்கலைக்கழகத்தின் முகவரான ஜான் ஹஸ், உயிருடன் கம்பத்தில் கட்டி எரிக்கப்பட்டார். ஏன்?... 1384 ல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான, ஜான் விக்லிப், உயிருடன் கம்பத்தில் கட்டி எரிக்கப்பட்டார். ஏன்? ... ரோமன் கத்தோலிக்க சபை 1229 ல் ஏற்ப்படுத்தின விசாரணை மன்றம் ஆல்பிஜெனியர்களை முற்றிலும் அழித்துவிட்டது. ஏன்?...
12 ஆகஸ்ட் 1572 ல், ஒரே இரவில் 70,000 கிறிஸ்தவர்கள் பாரிசிலும், மாகாணங்களிலும் படுகொலை செய்யப்பட்டனர். ஏன்? ... ஏனென்றால் நீங்கள் இன்று சபைகள் என்று அழைப்பவைகளை இந்த அனைவரும் எதிர்த்தனர்! [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்!" என்கின்றனர்]. அவர்கள் உங்கள் கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்ட் தலைவர்களின் முன்னோர்களை எதிர்த்தனர்.
13 பாவத்திலும் குற்றத்திலும் மூழ்கிக்கிடக்கிற இந்த பயங்கரமானவர்கள், விழுந்துபோன தூதர்கள், அழிவு எவர்களுக்கெதிராக நிறுத்தாமல் சத்தமிடுகிறதோ அவர்கள், அந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்ட் தலைவர்கள் உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பாக ஆட்டுக்குட்டியானவருடைய புஸ்தகத்தில் பெயர் எழுதியிராதவர்கள் யாவரையும் மோசம்போக்கினார்கள். யோவான் 6:28 முதல் 29 ன் படி, அவர் அனுப்பின அந்த ஒருவனை அடையாளம் கண்டுகொள்வதும், அவனுக்கு செவிகொடுப்பதுமே, தேவனுக்கு ஏற்ற கிரியை, என்பதை அறியாதவர்கள் தான் அவர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையினர் "ஆமென்!" என்கின்றனர்].
14 ஜனங்கள் அங்கே பாப்டிஸ்ட், அசம்பிளி ஆப் காட், பெந்தெகோஸ்தே சபை, இன்னும் மற்றவைகளுக்கு சென்று அங்கு செயல்படுகிற ஆவியை பரிசுத்த ஆவி என்கின்றனர். அது தேவ தூஷணமாக இருக்கிறது! காயீன், ஜோயல் ஆஸ்டீன், டி.டி.ஜாக்ஸ், டௌக் பச்லர், பில்லி கிரகாம், இடிர் மாசிடோ, வால்டிமிரோ சந்தியாகு, சிலாஸ் மலாபியா, பவுலா வைட் மற்றும் ஜாய்சி மேயர் மற்றும் கிறிஸ் ஒயாக்கிலோம், இவர்கள் மேல் கிரியை செய்யும் அந்த ஆவியை பரிசுத்த ஆவி என்று உரிமை கோருவீர்களேயாகில்; ஆப்பிரிக்க மந்திரவாதியின் மேல் செயல்படும் ஆவியைபற்றி என்ன?
15 டேவிட் ஒளவொர், இம்மானுவேல் மாகான்டிவா, உபர்ட் ஏஞ்சல், டி.பி. ஜோசுவா, டேவிட் ஒயேடிபோ, ஆல்பர்டோ மொட்டெசி, கிலவுதியோ ப்ரெய்டுசன், டான்டே கிபெல், இவர்கள் மேல் கிரியை செய்யும் ஆவியை பரிசுத்த ஆவி என உரிமை கோருவீர்களேயாகில்; மாயமந்திர முறைமைகளில், ரோஸிகுரூஸியனிஸத்தில், ப்ரீமேசனரிடத்தில் மற்றும் பிறவற்றில் செயல்படுகிற ஆவியைப் பற்றி என்ன?
16 டாமி ஆஸ்பான், மோரிஸ் செருல்லோ, பென்னி ஹின், மானாசே ஜோர்டன், ஜெஸ்சி ஜாக்ஸன், ஜான் ஹாகி, பாட் ராபட்சன், யோவாக்கிம் கான்க்ளேவ்ஸ், டொனால்டு பர்ணல், அலெஜான்ட்ரோ புல்லோன், குயிலெர்மொ மால்டொனால்டோ இவர்கள் மேல் கிரியை செய்யும் ஆவியை பரிசுத்த ஆவி என உரிமை கோருவீர்களேயாகில்; அங்கே இந்துக்களை உலுக்கும் ஆவி பற்றி என்ன?
17 மனந்திரும்புவதற்கு பிறவாதவர்களுடன் சேர்ந்து தேவனுடைய பிள்ளைகள் தூங்கி விழுவதை நான் விரும்பவில்லை. 1922ன் ஒரு பழைய சபையாம், நாற்சதுர சபை, அது ஒரு குறிப்பிட்டவிதத்தில் ஞானஸ்நானமளிக்கிறது மேலும் வேறொரு சபை ஒன்று வேறுவிதத்தில் ஞானஸ்நானமளிக்கிறது; அவையிரண்டும் ஒரு சபை ஒன்றியத்துக்குள் இருப்பதை நீங்கள் காணும்போது, தேவனுடைய பிள்ளை ஒருவன் அங்கு சென்று செய்வதற்கு என்ன இருக்கிறது?
18 திருச்சபையானது, யோவான் ஸ்நானகன் மற்றும் அப்போஸ்தலர்களுடன் தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்; சரித்திரத்தினூடாக அவளது வளர்சியில், இன்று நீங்கள் “சபை” என்று அழைப்பவைகளுடன் பொதுவானது ஒன்றும் அவளுக்கு இருக்கவில்லை. இந்த தலையில் ஒரு பாப்டிஸ்ட் சரீரம் ஒட்டிக்கொண்டு தேவனுடைய பிள்ளை ஒருவனை அதனோடு சேர்த்து வஞ்சிக்க மிக எளிதில் கூடும். அவளுடையது அல்லாத ஒரு உடலின் மேல் ஒரு பெண்ணின் தலையை ஒட்டி இது உனது தாயார் என்று சொல்லி ஒரு குழந்தையை நீங்கள் இணங்கச் செய்ய முடியாது. பெயர், உயரம், நிறம், வயது மற்றும் எல்லாவற்றையும் அவன் பரிசோதிப்பான். அதைத்தான் தேவனின் பிள்ளைகள் எப்போதும் செய்வார்கள். ஆயிரக்கணக்கான சபைகள் ஆனால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களை வஞ்சிக்க முடியாது என்று வேதாகமம் கூறுகிறது! ஆமென்!
19 இந்த காரியங்களுக்காகத் தான் தேவன் நம்மை உழிய களத்துக்குள் அழைக்கிறார். எதற்க்காக? வஞ்சிப்பை தடுக்கவும் பிசாசையும் அவனது தந்திரங்களையும் திரைநீக்கி காண்பிக்கவுமே. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது]. ஒவ்வொரு கிறஸ்துவ ஆணுக்கும் பெண்ணுக்குமான தேவனுடைய உச்சகட்ட, உன்னத அழைப்பு ஒலிக்கிறது. நீங்கள் அப்போஸ்தலர்களை பிதாக்களாக கொண்டிருந்தால், அவர்களது அடிச்சுவடை பின்பற்றுகிறோம் என உரிமைகோருகிறவர்களாகில், அப்படியானால் உங்கள் இருதயத்தில் மறுபடியும் ஒலிக்கிற அழைப்பாக இதை பெற்றுக்கொள்ளுங்கள், அது எவ்வளவு கடினமானதாக இருப்பினும் ஒரு பொருட்டல்ல. நாம் பணக்காரர்களாக இருந்தால், அது இந்த வார்த்தையின் முன்னேற்றத்திற்காகவே.
20 இனிமேலும் நான்கு சுவர்களுக்குள் நாம் தரித்திருப்பதற்காக அல்ல, ஆனால் உழியக்களத்தில் இருக்கவே தேவன் அழைக்கிறார். பட்டணத்தில் இருந்து பட்டணத்திற்கும் கிராமத்தில் இருந்து கிராமத்திற்கும், நாட்டுப்புரத்தில் இருந்து நாட்டுப்புரத்திற்கு சத்தியமானது போக வேண்டிய நேரம் இதுவே! நம்முடைய காலத்திற்குரிய இராஜ்ஜியத்தின் சுவிசேஷம் வியாதியஸ்தருக்கும் ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் முடவர்களுக்கும் பூமியின் குடிகள் அனைவருக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும். உங்களுக்கிருக்கிற வலிமை, செல்வம் மற்றும் திறமைகளுடன் வார்த்தையின் முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டும். எந்த கணக்கீடும் செய்ய வேண்டாம். எலியாவின் தேவன் நம்முடைய பிதாக்களான அப்போஸ்தலர்களையும் சீஷர்களையும் வழிநடத்தினார், அவர்தாமே உங்களையும் வழிநடத்துவார். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது ].
21 1415 ல், ஒரு பல்கலைக்கழகத்தின் முகவரான ஜான் ஹஸ், பதவியை இராஜினாமா செய்து, ஒரு சிறிய பிரசங்கியின் சீஷனாக மாறினார், அவருடைய கட்டுரைகளை இவர் பெற்றிருந்தார். அதன்பிறகு அந்த உபதேசத்தினால் கருவுற்ற அவர், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று, மதபேதம் என்று ஜனங்கள் அழைக்கிறவைகளும், உண்மையில் எவரும் அதனுடன் முரண்பட முடியாத சத்தியமாக இருந்ததையும் உயிருடன் எரிக்கப்படுகிறவரையில் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்.
22 அப்போஸ்தலர்கள் முதல் ஜான் வெஸ்லி வரை, எந்த தேவமனிதனும் அவனுடைய ஊழியத்தை நான்கு சுவர்களுக்குள்ளாக மட்டுப்படுத்தினதை நான் கண்டதில்லை. "எல்லாயிடத்திற்கும் போங்கள்" அது கத்தோலிக்கம், முஸ்லிம், சுவிசேஷக சபைகள், ஆன்மீகவாதிகள் சார்ந்ததான எதுவாக இருப்பினும் பிரசங்கியுங்கள்! நீங்கள் எவருடனும் அனுமதி கேட்கவேண்டிதில்லை. 1900-ம் ஆண்டுகளாக எல்லா உன்னதமான பரசங்கிகளுடன் இருந்ததும் இதே காரியம் தான். பார்கிறீர்களா?
23 ஜனங்கள் கிறிஸ்தவர்களாக இல்லாதபோதிலும் தங்களை கிறிஸ்தவர்களாக எண்ணுகின்றனர். எசேக்கியேல் 33:1 முதல் 9 ன் படி நாம் அதை கண்டனம் செய்து, நியாயந்தீர்த்தல் என அவர்கள் அதை அழைத்தாலும், அவர்களுக்கு அதை கூறுகிறோம். அவர்களுடைய பதில் செய்கைக்கு நாம் பொறுப்பாளிகளல்ல. அவன் ஆபேலை கொலை செய்யவான் என்பதை அறிந்துகொண்டுதான் தேவன் காயீனை எச்சரித்தார். பழைய ஏற்பாட்டில், தீர்க்கதரிசிளுடைய இரத்தத்தை கிரயமாக செலுத்தி, அவர்களைக்கொண்டு தேவன் அதை செய்தார். திருச்சபையில், அதை அவர் ஒரு தூதன் முலமாகவோ அல்லது தாமாகவோ செய்வதில்லை ஆனால் கிறிஸ்தவர்களான நம்மைக் கொண்டு செய்கிறார். முதலில், நம்முடைய பிதாக்களான அப்போஸ்தலர்கள் மற்றும் சீஷர்கள் மூலமாகவும் இப்போது நம் மூலமாகவும். அதைத்தான் தேவன் எப்போதும் செய்திருக்கிறார். இது ஒரு புதிய காரியமல்ல.
24 மேலும், ஆவிக்குரியவைகளுக்கு மேலாக மாம்சத்துக்குரியவைகளை முன்வைக்கவேண்டாம் என்று நான் உங்களை கெஞ்சுகிறது அதனால் தான். பூமியில் என்னவாக ஆகவேண்டும் என்பதின் பேரில் பிசாசின் பிள்ளைகள் கவனம் வைக்கின்றனர், அவர்களது பிணமும் கூட அதைப்பற்றித் தான் கவலைக் கொள்கிறதாக இருக்கிறது. அவர்களைப் பார்த்து நீங்களும் அவ்வாறு செய்யவேண்டாம். பரலோகம் செல்வதற்காக, நீங்கள் ஓரு நாயைப்போல நடத்தப்பட்டாலும்கூட, பின்வாங்கிப் போய்விடவேண்டாம்.
25 நீங்கள் பரலோகம் செல்ல மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாலும் ஏப்ரல் 24, 1993 ல் என்னிடம் பேசினது சர்வவல்ல தேவன் என அடையாளம் கண்டுகொண்டிருந்தாலும், இந்த அழைப்பை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சொந்த அழைப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது]. தேவன் தம்மைதாமே நமக்கு கொடுத்தார் மேலும் நியாயமான காரணத்திற்காகத் தான் நமது வாழ்க்கையையும் அவர் கேட்கிறார். பூமிக்கு மரிப்போம் பரலோகத்திற்காக பிழைப்போம்! தேவன் நமக்கு கொடுத்ததை அவருக்கு கொடுப்போம், இது அதிகபடியான தியாகம் என கருதவேண்டாம்!
26 நீங்கள் காண்கிறீர்களா? நான் அதை கூற தவறுவது இல்லை, இவ்விதமான ஒரு புதிய செய்தியில், ஒரு சபை, குறிப்பாக ஒரு நகரத்தில், ஒரு மனமாற்றமும் இல்லாமல் மூன்று மாதங்களை கழிக்க முடியாது. மற்றும் சபை முன்னேறிச்செல்லவில்லை என்று சொன்னால், குற்றம் சாட்டப்படும் நபர் அதன் தலைவர்தான். இவை தொடர்ந்தால், , அவன் தாழ்மையுடன், கீழே உட்கார்ந்து கொள்ள அவன்தானே சம்மதித்தாக வேண்டும். பிற்பாடு நான் இந்த காரியத்திற்கு மீண்டும் வருவேன்.
27 ஆனால், என் சீடர்களாகிய உங்களைப் பொறுத்தவரை, தாலந்து பற்றின உவமையை நினைவு கூருங்கள் மேலும் கனிகொடாத அத்திமரம் போலிருக்கவேண்டாம். சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இருவரும், சமாரிய ஸ்திரியை போல, உங்களைச் சுற்றியுள்ள எல்லோரும் இந்தச் செய்தியைக் கேட்கும்படி செய்யுங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்று கூறுகிறது].
28 அதனோடுகூட, பொருள் அல்லது செல்வம் உடைய அனைவரும் இந்த அர்த்தத்தில் செயல்பட வேண்டும், எஸ்றா 1:5 முதுல் 6 ன் படி, தேவனின் ஊழியத்தில் தங்களுடைய உடைமைகளை ஈடுபடுத்தவேண்டும்.
29 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, கூட்டம் முடிந்தது. உங்கள் வீட்டில், எனக்காக வேண்டுதல் செய்ய மறக்க வேண்டாம். சரீரத்தில் பிரிக்கப்பட்டு தூரமாக இருந்தாலும், மீண்டும் சந்திக்கும் வரை இந்த ஒரே ஆவியிலே தேவன் நம்மை காப்பாராக. ஆமென்!