1 தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான், இந்த ஏப்ரல் 17, 2022 அன்று கடவுளின் சார்பாக, ஏப்ரல் 24, 1993 அன்று எனது ஜனங்கள், பூமியின் புறஜாதி தேசங்கள் மற்றும் மதங்கள் மீது தூதன் செய்த கிரியைகள் பற்றிய எச்சரிக்கைகள் மற்றும் கட்டளைகளாக நான் உரையாற்றிய இறை வார்த்தைகள்.
2 முதலாவதாக, மீண்டுமாக சில காரியங்களை நான் விளக்க விரும்புகிறேன். ஒரு சபை ஒரு தவறான போதகத்தை பின்பற்றி இருக்கும்போது, அதன் உறுப்பினர்கள் அனைவரும் குற்றவாளிகளாகின்றனர், ஏனென்றால் அவை எங்கே எழுதப்பட்டுள்ளது என்று அவர்கள் பிரசங்கியாரிடம் கேட்டிருக்க வேண்டும். காக்குவ் 146:74-இன் படி பன்னிரெண்டு மாதங்கள் ஆராதனைக்கு வராமல் இருப்பது என்பது வயதானவர்களுக்கு அல்லது சில சரீர நலன் சார்ந்த வழக்குகளுக்கு பொருந்தாது. மேலும் ஒரு சகோதரனானவன் ஒரு சகோதரியுடன், அவர்களுடைய உறவினர்களாகவோ அல்லது வாழ்க்கைத் துணைவியாகவோ இருந்தால், இருவரும் ஒரே தட்டில் சாப்பிடலாம்.
3 மேலும், 25-க்கும் மேற்பட்ட சபைகளைக் கொண்ட நாடுகளில், நாட்டின் குழுவில் உள்ள ஒரு பாவ அறிக்கைக்கு , பாவ அறிக்கையின் தலைவர்கள் மற்றும் பிரசங்கிகள் மட்டுமே தலையிடுவார்கள் என்று தலைவர் முடிவு செய்யலாம்.
4 மேலும், ஒரு அப்போஸ்தலரின் அனுமதியுடன்தான் நாட்டின் குழுவில் வெளிப்படையான பாவ அறிக்கையை அறிக்கை செய்ய முடியும். பாவ அறக்கையின் தலைவர் தனது நாட்டின் குழுவில் பாவ அறிக்கையை முடிவுக்கு கொண்டு வரலாம், எப்போதும் ஒரு அப்போஸ்தலன் அவருடைய முடிவை ரத்து செய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஒரு தலைவரின் முடிவை ரத்து செய்வதற்கு பதிலாக, சபையிலும் கூட, ஒரு அப்போஸ்தலர் உறுதிப்படுத்தும் போது, அந்த அப்போஸ்தலனின் முடிவை, மற்றொரு அப்போஸ்தலனாலும் கூட விவாதிக்க முடியாது.
5 நான் உங்களுக்குச் சொன்ன அனைத்தும் நம் காலத்திற்கான தேவனுடைய வெளிப்பாட்டின் அடிப்படையில் உள்ளன. நான் என் சொந்த வார்த்தைகளை கொடுக்கமாட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் மேலும் தேவனுடைய தூதன் வந்து அவற்றை உறுதிப்படுத்துவார், ஒரு மனிதனாக என் வார்த்தைகளை எதிர்ப்பவரை மரணத்தால் தாக்குவார். மேலும் செய்திக்குத் திரும்பி, தன் துன்மார்க்க ஜீவியத்தை தொடருபவர் வெளியே துரத்தப்பட வேண்டும் என்று நான் எளிமையாக கூறினால், அது வேதாகமத்தின் வசனத்தைப் போலவே தேவனுடைய வார்த்தையாகும்.
6 நான் ஒரு தரிசனத்தில் இராணுவச் சீருடையில் நின்று கொண்டு தேவனின் ஆலயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் அவரை பக்கமாக இருந்து பார்த்தேன். அவர் : "இந்த இடத்திற்குத் திரும்பக் கொண்டுவரப்பட்ட மற்றும் தங்கள் துன்மார்க்க ஜீவியத்தை தொடருகிற அனைவரும் என்றென்றுமாக வெளியேற்றப்பட வேண்டும்" என்று கூறினார். அவர் அதை எழுதினார். அதற்கு நான், "இவ்வாறான நிலையில், அவர்கள் வெளியேற்றப்பட்டபோது அல்லது செய்தியை விட்டு சென்ற பின் அவர்களை மீண்டும் கொண்டு வர வேண்டியது அவசியமா?" என்று கேட்டேன், மேலும் அவர் என்னைப் பார்க்காமல், "ஆம்!" என்றார் மேலும் அந்த தரிசனம் மறைந்தது. இந்த தூதன் தனிச்சிறப்பாக இருந்தார். அவர் உயரமாக இருந்தார் மற்றும் அவருடைய தோல் நிறமானது மேற்கு ஆப்பிரிக்காவின் ஃபுலானியின் தோல் போல பழுப்பு நிறத்தில் இருந்தது.
7 புர்கினாவின் சகோதரி ஒரு கனவைப் பற்றி என்னிடம் கூறினார். அந்த கனவின் வியாக்கியானம் எனக்கு வந்த அதே நாளிலே, அதைப் புரிந்துகொள்வதற்காக நான் அவளிடம் கனவைப் பற்றிய விவரங்களைக் கேட்க விரும்பினேன். அவளுடைய கனவின் ஒவ்வொரு அடையாளத்திற்கும் எனக்கு விளக்கம் இருந்தது. மேலும் எசேக்கியேல் தீர்க்கதரிசியின் தரிசனம் எனக்கு கிடைத்தது. முடவர்கள், தொழுநோயாளிகள், புற்று நோயாளிகள் மற்றும் அனைத்து வகையான நோய்வாய்ப்பட்டவர்களும் ஒரு கல்லறையில் கூடியிருந்தனர், அழிந்து போயிருந்த பிரேதக்குழிகள் முன்நிலைக்கு திரும்பியது. அவர்கள் அனைவரும் பைத்தியக்காரர்கள் போல் பேசிக்கொண்டு, தங்களுடைய மரித்த தீர்க்கதரிசிகளை ஆராதிக்க செல்ல முற்பட்டனர். ஒரு கருணை உணர்வு என் மீது வந்தது, நான் அவர்களை என் முற்றத்தில் அனுமதித்தேன். நான் அவர்களுக்குத் தங்களைக் கழுவிக் கொள்வதற்குத் தண்ணீர் கொடுத்தேன்.
8 சிலர் அவர்களுடைய தண்ணீரை தரையிலே ஊற்றி கொள்ளைக்காரர்களாக, 20 வயதுக்குட்பட்ட மிகவும் கவர்ச்சிகரமான இளம் பெண்களாகவும், ஆனால் நிர்வாணமாகவும் ஆனார்கள், அவர்களின் மார்பகங்களையும் பிறப்புறுப்புகளையும் மூட சரீரம் தெரியக்கூடிய ஒரு வகை கருப்பு வலை மட்டுமே இருந்தது. மேலும் நான் அவர்களை பின்னால் இருந்து பார்க்க முடிந்தது. அவர்கள் இருளில் மூழ்கிக் கொண்டிருந்த நேரத்தில் மற்ற பெண்கள் தங்களை கழுவி சுத்தப்படுத்தி, நீலம் மற்றும் வெள்ளை ஆடைகளை அணிந்து ஏழு வயது சிறுமிகளாக மாறினார்கள்.
9 மேலும் நான் தரிசனத்தில் ஒரு பாத்திரத்தை கண்டேன் அது எனக்கு கொடுக்கப்பட்ட புத்தியுள்ள கன்னிகைகளின் பாத்திரமாக இருந்தது. மேலும் அந்த பாத்திரத்தில் சிறுமிகளின் காணிக்கை இருந்தது. அது பால் ஆக இருந்தது. பாலுக்கு மேலே கைகளால் எழுதப்பட்டிருந்த ஐந்து வரிகளையுடைய நீலநிற வார்த்தைகள் இருந்தது. வார்த்தைகள் வித்தியாசமாகவும் வரிகள் வெவ்வேறு நீளத்திலும் இருந்தன. மேலும் ஐந்து வரிகள் ஒவ்வொன்றும் ஒரு பாடலின் தலைப்பாக இருந்தது. மேலும் நீலம் மற்றும் வெள்ளை நிற ஆடைகள் அணிந்த சிறுமிகளுக்கு மட்டுமே இந்த ஐந்து பாடல்களும் அவற்றை யார் பாட முடியும் என்பதையும் அறிவார்கள். மேலும் அதில் எழுதப்பட்டவையானது நீலநிற பாலாடையாக பாலின் மேல் இருந்தது மற்றும் நான் பாத்திரத்தை சாய்த்த போது பாலில் கரைந்து போனது. மேலும் தரிசனமானது மறைந்தது.
10 இதற்குப் பிறகு நான் ஒரு மலையின் மீது என்னைப் பார்த்தேன். எனக்கு முன்னால் ஒரு கரும்பு இருந்தது. மலையின் அடிவாரத்திலும், மலையைச் சுற்றிலும், குதிரைகளின் மேல் ஏறிச் செல்லும் துவாரெக்ஸ் போன்ற அடிமை வியாபாரிகள் இருந்ததால், மலைக்கு யாரும் வர முடியாமல் இருந்தது. நான் மலையில் சில மோசமான உடை அணிந்த கறுப்புப் பெண்களைப் பார்த்தேன்.
11 மேலும் முதல் பாத்திரத்திற்க்கு இணையான மற்றொரு பாத்திரம் என்னிடம் கொடுக்கப்பட்டது. அதில் சுத்தமான தெள்ளத் தெளிவான தேன் இருந்தது. நான் தேனை சுவைத்தேன், அது எண்ணெய் போன்ற சுவையுடையதாக இருந்தது. மேலும் அவை இனிப்பாகவும் கசப்பாகவும் இல்லை என்பதால் அதை விழுங்க முடியாமல் நான் துப்பினேன், மற்றவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த மோசமான உடை அணிந்த கன்னிப் பெண்ணிடம் கேட்டேன்: உன் பெயர் என்ன? அவள் சொன்னாள்: மலிதா. மேலும் தரிசனமானது மறைந்தது.
12 அடிமையான வியாபாரிகள் பூமியில் உள்ள மதத் தலைவர்களாக உள்ளனர். மேலும் நான் பார்த்த கரும்பு வேறொரு தரிசனத்தில் பார்த்தது போல் இருந்தது. நான் அதைத் தேடினேன் மற்றும் அதை ஒரு பிரெஞ்சு இணையதளத்தில் கண்டுபிடித்தேன். நான் அதை பிரான்சில் இருந்து பெற்றேன் ஆனால் அதில் "Deutsche Wertarbeit" (ஜெர்மானிய வேலைப்பாடு) என பொறிக்கப்பட்டிருந்தது. நான் அதை அகற்ற முயற்சித்தேன் ஆனால் என்னால் முடியவில்லை. ஒரு அறிவுறுத்தலுக்குப் பிறகு நான் அதை தனியே சேமித்து வைத்தேன். தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்துவது கடினம், ஆனால் அது எப்போதும் மிக மகத்தான விஷயமாக உள்ளது.
13 பரலோகராஜ்யமானது ஒரு மனிதனுடன் பரலோகத்திற்கு நடப்பது போல் உள்ளது. அந்த நபருக்கு வெகு தொலைவில் வெண்மையான உடை அணிந்த ஒரு குழுவும் அவருக்குப் பின்னால் மற்றொரு ஒழுங்கினமான குழுவும் இருந்தன. மேலும் அவர்கள் அனைவரும் இரண்டு பள்ளங்கள் கொண்ட பாலம் போன்ற பாதையில் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். மற்றும் முன் குழுவின் தலையில் ஒரு கூட்டம் பரலோகத்தின் வாசலுக்கு முன்பாக இருந்தது. மேலும் பின்னால் இருந்த குழுவிலிருந்து ஒருவர் பள்ளத்தில் குதித்து அதைக் கடக்க மற்றொரு நபர் அந்த நபரைக் ஒரு கதவை போல் கடந்து முன்னால் உள்ள குழுவுடன் சேர்ந்தார். தரிசனத்தில் இருந்தவன் நான்தான் என்று தோன்றியது. மேலும் பள்ளத்தை முதலில் கடந்தவர் ஒரு போதகரின் மனைவி எங்கள் அருமை சகோதரி பிரிஜிட் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
14 தேவதூதன் தம்முடைய ஜனங்களின் நடுவில் இருப்பது, அது மகிழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருக்க வேண்டும். தூதன் யாராவது ஒருவரை தாக்கினால், "இது இப்படி இருக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தால், இந்த செய்தியை நான் ஒருபோதும் விசுவாசித்து இருக்க மாட்டேன்" என்று உங்கள் இதயத்தில் ஒருபோதும் சொல்லாதீர்கள். பாவங்களை மறைத்துக்கொண்டு நம்மிடையே தொடர் குற்றங்கள் செய்பவர்கள் இருக்கும்போது நீதியுள்ள கடவுள் நம் எதிரிகளை தாக்க முடியாது. மேலும் ஒரு நாள், மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களால், அஞ்ஞான போலீஸ்காரர்கள் வந்து இங்கு கேள்வி கேட்பார்கள்.
15 தூதன் நம்மை பாதுகாக்க வந்தார். ஆட்டுக்குட்டி நமக்கு செய்தியாளனாக இருக்கிறார், அதே சமயம் அஞ்ஞானிகளின் செய்தியாளனாக தேவதூதன் இருக்கிறார். தூதனைத்தவிர இந்த செவிட்டு அஞ்ஞானிகளிடம் வேறு யாரால் பேச முடியும்? தூதன் இல்லாமல் இந்த செய்தி ஒன்றுமில்லை. கோவில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் சமாதனாமாக இருக்கும் அந்த மதத் தலைவர்களிடம் தூதன் இல்லையென்றால் யார் பேச முடியும்?
16 பூமியில், தங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசி மூலம் ஆட்டுக்குட்டிக்கு செவிக் கொடுக்கிறவர்கள் இருக்கிறார்கள், அதே வேளையில் அஞ்ஞானிகளும், தொடர் குற்றம் புரிபவர்களும், மதவாதிகளும் இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் தூதன் செய்தியாளனாக இருக்கிறார். மேலும், 20 ஆண்டுகளாக, ஆட்டுக்குட்டியின் சத்தத்தினால் தேசங்களை விழிக்கச் செய்யமுடியவில்லை என்றால், தூதனின் சத்தத்தால் உடனடியாக அதைச் செய்ய முடியும். ஆட்டுக்குட்டியின் சத்தமாக இருந்ததால் 20 ஆண்டுகளாக பூமியானது என்னுடைய ஊழியத்தை புறக்கணித்தது. ஆனால் இப்போது அது தூதனின் சத்தமாக இருக்கிறது.
17 இனி என்ன நடக்கும்? ஜனங்கள் ஒரு வீட்டில், ஒரு கோவிலில், ஒரு சபையில், ஒரு மசூதியில், ஒரு வாகனத்தில், பணியிடத்தில் அல்லது பிற இடங்களில் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவையும் அவருடைய செய்திக்கு விரோதமாகவும் பேசுவார்கள். மேலும் ஏப்ரல் 24, 1993-இன் தூதன் அவர்களை அடிப்பார். சிலர் ஊமையாகி, மயக்கமடைந்து இறந்து விடுவார்கள். மற்றவர்கள் பைத்தியக்காரத்தனம், குருட்டுத்தன்மை, வலிப்பு, பக்கவாதம் மற்றும் மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத பல்வேறு நோய்களால் தாக்கப்படுவார்கள். புறஜாதி தேசங்களுக்குத் தேவையான அற்புதங்கள் எல்லாம் எகிப்தியர்களுக்கு மோசே கொடுத்த அதே அற்புதங்கள் தான்.
18 மேலும், செய்தியை எதிர்த்துப் போராடிய பிறகு, ஏப்ரல் 24, 1993 அன்று யாரேனும் தூதனால் தாக்கப்பட்டால், தீர்வு மருத்துவமனை அல்ல, ஆனால் அவர் தனது நகரத்தின் அனைத்து தெருக்களுக்கும் கொண்டு செல்லப்படவேண்டும், ஒரு கார் அல்லது சக்கர நாற்காலி அல்லது முடமான நபர்களுக்குகான ஒரு கருவியில் கொண்டு செல்லக் கூடாது, ஆனால் நடக்க வைத்து அல்லது ஒரு படுக்கையில் அல்லது சக்கர வண்டியிலோ அல்லது இரு சக்கர ரிக்சா போன்ற சாமான்களை எடுத்துச் செல்லும் வண்டியிலோ கொண்டு சென்று: "இன்று பூமியில் இருக்கும் கடவுளின் ஒரே உண்மையான தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு என்றும் அவருடைய கடவுளே ஒரே உண்மையான கடவுள் என்றும் நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். காக்குவ் பிலிப்புவை விசுவாசிக்காத எவரும் நரகத்திற்குச் செல்வார்கள். அவருக்கு எதிராக யார் பேசினாலும் அல்லது செயல்பட்டாலும், கடவுள் அவர்களை அடிப்பார், நான் அவருக்கு எதிராகப் பேசினேன் இப்போது நான் தாக்கப்பட்டதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று உரக்க சத்தமிடுவார்.
19 அவரைக் கடிந்துகொள்ளாமல் அவனுக்குச் செவிக் கொடுத்த அனைவரும் அவருடன் வந்து அவருக்கு உதவ வேண்டும். எத்தனை நாட்கள் அவர் காக்குவ் பிலிப்புவிற்கு எதிராகப் பேசினார்களோ, அவ்வளவு நாட்கள் அவர் தனது நகரத்தின் தெருக்களில் காக்குவ் பிலிப்புவை பற்றி பிரசங்கிப்பார். அவன் ஊமையாகவோ அல்லது பைத்தியமாகிவிட்டாலோ, பேச முடியாதவனாகிவிட்டாலோ, யாரோ ஒருவர் அவருக்குப் பக்கத்தில் நின்று அவருக்காக பேசுவார். ஏப்ரல் 24, 1993 இன் தூதனால் தாக்கப்பட்ட எவருக்கும் இதுதான் கட்டளை மற்றும் சட்டமாக உள்ளது.
20 நீங்கள் : "மோசே அல்லது எலியாவின் காலம் அது நியாயப்பிரமாணத்திற்கு கீழ் இருந்தது ஆனால் நாம் இப்பொழுது கிருபையின் கீழ் இருக்கிறோம்" என்கிறீர்கள். இல்லை ஐயா! கிருபையின் கீழ் இருப்பவர்கள் உங்களுடைய கோவில்கள், சபைகள் மற்றும் மசூதிகளில் இருப்பவர்களான பணத்தினுடைய சீஷர்கள் அல்ல, ஆனால் அவர்கள் ஆட்டுக்குட்டியைப் பின்பற்றுபவர்கள் மற்றும் ஆட்டுக்குட்டியின் கட்டளையின்படி வெளிப்படையான பாவ அறிக்கையை பின்பற்றுபவர்கள். இருபது ஆண்டுகளாக நீங்கள் காக்குவ் பிலிப்பு ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்பதை நிருபிக்க அடையாளங்களைக் கேட்டு கொண்டுள்ளீர்கள்; இதைத்தான் கடவுள் உங்களுக்கு கொடுக்க வேண்டும்.
21 நான் உங்களுக்கு அக்னி ஸ்தம்பத்தின் ஒரு படத்தைக் கொடுத்தால் நீங்கள் விசுவாசிக்க மாட்டீர்கள். ஆனால் அங்கே, தூதன் உங்களை உங்களுடைய வீடுகளில், கோவில்களில், தேவாலயங்களில், மசூதிகளில் மற்றும் கூட்டங்களில் கண்டுபிடிப்பார். மேலும், தாக்கப்படுவோம் என்ற பயத்தினால் காக்குவ் பிலிப்பைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க விரும்பினால், கூட்டத்தின் நடுவில் "நான் காக்குவ் பிலிப்பின் தேவன்" என்று கேட்கும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்குத் தெரிந்த ஒருவர் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பிற்கு எதிராகப் பேசும்போது தூதன் அவரைத் தாக்கியதைக் குறித்து கேள்விப்பட்டால் நீங்கள் அமைதியாக இருப்பீர்களா?
22 அப்போஸ்தலர்களின் காலத்தில் துன்புறுத்தல் எப்படி வந்தது? அவர்களுக்கு அரசின் அங்கீகாரம் இல்லாத காரணத்திலா? இல்லை! தூதன் சபையில் தனது ஸ்தானத்தை எடுத்துக்கொண்டு, அனனியா சப்பீராள் மற்றும் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் கடவுளின் எதிரிகளைக் தாக்கியதினால் மட்டுமே துன்புறுத்தல் நடை பெறும். இதுதான் துன்புறுத்தலுக்கும் எலியாவின் எடுத்துக்கொள்ளப்படுதலுக்கும் (rapture) வழிவகுத்தது. இதுவே வெளிப்படுத்துதல் 11-இல் எலியா மற்றும் மோசேயின் உபத்திரவத்தையும் எடுத்துக்கொள்ளப்படுதலுக்கும் (rapture) வழிவகுக்கும்.
23 ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாள், தூதன் ஏற்கனவே பேழைக்குள் இருந்தார். வெள்ளத்திற்கு முன் நோவா மனிதர்கள் மற்றும் விலங்குகளின் சடலங்களை வெளியே கொண்டு வந்தார். இங்கே, தேசங்களின் எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு (rapture) முன், தூதன் சபையில் இருப்பார், மேலும் அநேகர் மரித்துப்போவார்கள். மேலும் விருத்தசேதனம் செய்யப்படாத ஒரு அஞ்ஞானியும்கூட சபைக்குள் நுழைய முடியாது.
24 தேசங்கள் கண்டிராத மிகப் பெரிய காரியம் ஒன்று நிகழப்போகிறது. சிருஷ்டிப்பும் கூட அதன் விடுதலைக்காக காத்திருக்கிறது என்று ரோமர் 8-இல் வேதாகமம் கூறியது. நான் அதை நிறைவேற்றா விட்டால், மற்றொரு தீர்க்கதரிசி அதை நிறைவேற்றுவார். தேவன் மோசேயின் மூலம் எகிப்தியர்களுக்குக் காட்டியதை, தீர்க்கதரிசிகள் மூலம் கடவுள் இஸ்ரவேலுக்குக் காட்டியதை, தேவன் இங்கே தேசங்களுக்கு மத்தியில் காட்டப் போகிறார். மேலும் நான் பார்த்த தூதனின் பட்டயம் சிறியதாகவும், இரு புறமும் கருக்குள்ளதாகவும் இருந்ததால், எனவே அவை பலியிடுவதற்க்கான பட்டயமாக இருக்க முடியாது. இது உலகளாவிய போர் வாள், எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தக்கூடியது.
25 "ஓ, என் பெற்றோருக்குச் செய்தியைச் சொல்ல நான் பயப்படுகிறேன், தூதன் அவர்களைக் கொன்றுவிடுவான்" என்று நீங்கள் கூறுகிறீர்கள். தூதன் அஞ்ஞானிகளையும் தாக்குவதால் அப்படி நினைக்க வேண்டாம். எல்லா இடங்களிலும், செய்தியைப் பிரசங்கிப்பதற்கு முன், நீங்கள் எதிரிகளை எச்சரிக்க வேண்டும். உங்களைப் பேசவிடாமல் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை, மேலும் நீங்கள் மிரட்டலுக்கு முன்பாக அமைதியாக இருக்கக் கூடாது.
26 நீங்கள் பிரசங்கிக்கும்போது, மக்கள் உங்களை எதிர்க்கும்போது. அமைதியாகச் சொல்லுங்கள், "வேதாகமத்தில் உள்ள மோசே, எலியா மற்றும் எலிசாவை உங்களுக்குத் தெரியுமா?" காக்குவ் பிலிப்புவை அந்திக்கிறிஸ்து என்றும் கள்ளத் தீர்க்கதரிசி என்றும் நீங்கள் கூறும்போது, அவருடைய தேவன் ஒரு சாத்தான் என்று அர்த்தமா? எனவே நீங்கள் ஏப்ரல் 24, 1993-இன் தேவ தூதனுக்கு சவால் விடுகிறீர்களா? நான் பேசும்போது பைத்தியக்காரத்தனம், குருட்டுத்தன்மை அல்லது பக்கவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கு யார் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் தொடரலாம்!". அவர்கள் உங்களைத் தடுக்கும் வரையோ அல்லது அனைத்தும் அமைதியடையும் வரை சந்தேகப்படாமல் அப்படியே பேசுங்கள், மீதமுள்ளதை தேவனுடைய கரங்களில் விட்டுவிடுங்கள்.
27 அது தெருவில் இருந்தால், அவர் ஒரு போலீஸ்காரராக இருந்தாலும், அவரிடம், "நான் தேவனுடைய பூமியில் மேல் பிரசங்கிக்கிறேன்" யாரோ ஒருவருடைய அனுமதியை பெற நான் வாடகை அறையில் இல்லை என்று சொல்லுங்கள். லூக்கா 3:14-ல், யோவான் ஸ்நானகன் பிரசங்கிப்பதைத் தடுக்க காவலர்கள் வரவில்லை. நீங்கள் என்னைத் தடுத்தால், ஏப்ரல் 24, 1993-இன் தூதன் உங்கள் செயலுக்கு நீங்கள் செலுத்தும் படியாக செய்வார். ஆகான் போன்ற தொடர் குற்றவாளிகளின் நிமித்தம் தான் ஒரு போலீஸ்காரர் நமது சுவிசேஷித்தின் சமான்களை பறிக்க முடியும், மேலும் தேவனும் எதுவும் சொல்லாமல் இருப்பார். தேவனே எங்களுக்கு உதவும்.
28 நீங்கள் செய்தியைப் பற்றி பேசும் வேளையில், யாராவது உங்களை எல்லா வகையிலும் தடுத்தால், அவரைப் போலவே பலர் நடந்துகொண்டதாகவும், ஏப்ரல் 24, 1993-இன் தூதனால் தாக்கப்பட்டார்கள் என்றும் அமைதியாகச் சொல்லுங்கள். சிலர் பைத்தியமாகினார்கள், குருடர்களானார்கள், இன்னும் சிலர் மரித்தும் போனார்கள். யாராவது அவமானப்படுத்தினாலும், தேவதுஷனம் செய்தாலும் ஒரு முஸ்லிமைப் போல் சாபம் அல்லது பழிவாங்கும் மனப்பான்மையில் அல்லாமல் அன்பின் ஆவியோடு அமைதியாகச் சொல்லுங்கள். அவரை சோதிக்க வேண்டாம்! அவர் தாக்கப்படும்படியாக நீங்கள் அவரை சோதித்தால், தூதன் உங்களைத் தான் தாக்குவார். உங்கள் பெற்றோருக்கு கடவுள் செய்ய விரும்பாததை நீங்கள் யாருக்கும் அதை விரும்பாதீர்கள்.
29 யாராவது ஒருவர் உங்களுக்கு முன்னால் தீர்க்கதரிசியை அவமதித்தால், கடவுள் அவரைத் தாக்க வேண்டும் என்று உங்கள் இதயத்தில் ஒருபோதும் விரும்பக்கூடாது. அவர் மீது இரக்கம் கொண்டு அவரிடத்தில் அன்புடன் பேசுங்கள். நீங்களும் அவரைப் போல் அஞ்ஞானியாக இருந்த காலம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு பிசாசாக இல்லாவிட்டால் ஒருவருக்கு மரணத்தையோ அல்லது தீமையையோ விரும்ப முடியாது. உங்களுடைய எதிரி இங்கே உங்களுடன் இந்தச் செய்தியில் அமர்ந்து பாலியல் பாவங்களைச் செய்து அவற்றை மறைப்பவன். அதனால்தான் எந்தவொரு பாலியல் பாவத்திற்கும் மதுவிற்கும் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். மேலும் மறைக்கப்பட்ட பாலியல் பாவத்திற்கு, அது அவசியம் ஏழு மாதங்கள் வெளியில் இருக்க வேண்டும் அல்லது செய்தியிலிருந்து என்றென்றுமாய் வெளியேற்றப்பட்ட வேண்டும். காக்குவ் 146 முதல், ஏழு மாதங்களுக்கு வெளியே இரண்டாவது தண்டனையைப் பெறுபவர் இனி ஒரு போதும் செய்திக்கு திரும்பக்கூடாது.
30 ஏப்ரல் 24, 1993 அன்று தூதன் இறங்கியிருந்தால், அது நம்மைக் பாதுகாப்பதற்காகத்தான், நம்மைக் கொல்வதற்காக அல்ல. நாம் அவருடைய பிரசன்னத்தால் மகிழ்வோம். தேவதூதனின் சத்தம் நம் எதிரிகளுக்கானது, யாராவது ஒருவர் தூதனின் சத்தத்திற்கு செவிக் கொடுக்க விரும்பினால், அவர் வெளியில் தூதனுக்காக காத்திருக்க வேண்டும். யூதர்களைப் போல நாம் தூதனுக்கு பயப்படக்கூடாது.
31 யோசுவா 5-ல், தூதன் இஸ்ரவேலின் முகாமுக்குத் திரும்புவதைப் பற்றி யூதர்களிடம் யோசுவா சொன்னபோது, அங்கே பாழாக்குவது இருந்தது, பலர் பயந்தார்கள். அவர்கள், "இந்த தூதன் நம் எதிரிகளைக் கொன்றுவிடுவார் மற்றும் நம்மையும் கொன்றுவிடுவார் என்றனர். மேலும் இந்த தூதன் நம்மைக் கொல்லத் தொடங்கும் போது, அவனைத் தடுக்க மோசே இங்கே இல்லை, நாம் எப்படிச் செய்யப் போகிறோம்?யோசுவா, நீர் எரியும் முற்செட்டியில் கண்ட தூதன் இவர் தான் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? என்றனர்.
32 யூதர்கள் ஏற்கனவே ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்க விரும்பும் அனைவரின் மரணத்தையும் கற்பனை செய்து கொண்டிருந்தனர். அந்த தேவபக்தியற்ற யூதர்கள் இப்படியாக: "ஆனால், இந்த தூதன், கோவில்களிலும், சபைகளிலும், மசூதிகளிலும் சாத்தானை வணங்கும் ஜனங்களை விட்டுவிட்டு, குறைந்தபட்சம் ஆட்டுக்குட்டியின் செய்தியை ஏற்றுக்கொண்ட எங்களைக் கொல்ல ஏன் வருகிறார்?" என்று முணுமுணுத்தார்கள். மோசேயின் நாட்களில், பூமி திறக்கப்பட்டு, இவ்வாறு பேசிய ஆயிரக்கணக்கானோர் உயிருடன் புதைக்கப்பட்டனர் என்று வேதாகமம் கூறுகிறது. மேலும் கலவரமடைந்து ஓடிப்போனவர்களை, தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து இறங்கி, 250 ஆசாரியர்களுடன் அவர்களை எரித்தது.
33 அப்பொழுது யோசுவா எழுந்து இஸ்ரவேலர்கள் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலர்களே, நீங்கள் எல்லாரும் பலத்தோடிருந்து உங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலர்களாகிய நாம் உயிருள்ள தீர்க்கதரிசி மற்றும் நம் நடுவில் தூதனோடு இருக்கிறோம். நாம் நடக்கையில், தூதன் இஸ்ரவேலின் பாளயத்திற்குள்ளே இருப்பதைக் காண்பீர்கள். இது பூமியின் அனைத்து காவல்துறை மற்றும் நீதிமன்றங்களை விட மகிமை வாய்ந்தது, அதோனாய் பூமியின் அனைத்து சபைகளையும் மதங்களையும் அவற்றின் தலைவர்களையும் நம் கைகளில் விடுவிப்பார், மேலும் நாம் தான் உண்மையான கடவுளுடைய மக்கள் என்பதையும் மேலும் அதோனாய் மட்டுமே உண்மையான கடவுள் என்பதையும் முழு புமியும் காணும். அதோனாய் நம்மிடம் கேட்பதெல்லாம் பரிசுத்தம் மட்டும் தான்." என்றான்.
34 மேலும் யோசுவா இஸ்ரவேலுக்கு ஆட்டுக்குட்டியின் கட்டளைகளை நினைவுபடுத்தினான்: "உன் கணவனோ அல்லது உன் மனைவியோ அல்லாத ஒருவருடன் நீ ஒருபோதும் உடலுறவு கொள்ளாக்கூடாது; உன் மனைவியின் மார்பகத்திலும் பிறப்புறுப்புகளிலும் உன் வாயை ஒருபோதும் வைக்ககூடாது. ஒரு மனிதன் ஒரு நாயைப் போல் பின்புறத்திலிருந்து மனைவியை அணுகக்கூடாது. மேலும் திருமணமான பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட வழக்கு இருந்தால், ஒரு சாட்சியுடன் நீ சென்று அவளது கணவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், ஒரு பெண்ணின் நிர்வாணத்தை படம் அல்லது வீடியோ ஒரு போதும் எடுக்க கூடாது. உங்களுடைய தொலைபேசி, கணினி அல்லது தொலைக்காட்சியில் பாலியல் புகைப்படம் அல்லது வீடியோவை பதிவிறக்கம் செய்யவோ அல்லது பார்க்கவோ கூடாது."
35 மேலும், காக்குவ் பிலிப்புவாகிய என்னை விசுவாசித்த நீங்கள், பூமியில் பரிசுத்தமாக ஜீவிக்க கற்றுக்கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் ஒரு நாள் தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாக ஜீவிப்பீர்கள். என்னுடைய ஊழியமே மோசேயின் ஊழியத்தின் ஆவிக்குரிய அம்சமாகும். காக்குவ் பிலிப்புவின் செய்தி கடினமானது என்று நீங்கள் நினைத்தால், இதன் அர்த்தம் என்னவென்று சொல்லுங்கள்: எகிப்திலிருந்து மக்களை அழைத்துச் சென்று 40 ஆண்டுகளாக சினாய் பாலைவனத்தில் வைத்து. பகலில் எங்கும் வெறுமை, அவர்கள் தலைக்கு மேல் சுட்டெரிக்கும் வெயில், காலுக்குக் கீழே எரிகிற மணல். பறவைகளோ விலங்குகளோ கரைவதில்லை, அது வெறுமையாயிருந்தது. மேலும் இரவினில், அது உறைபனி மற்றும் மரண அமைதி இருந்தது.
36 இந்தப் பாலைவனத்தில் அந்த மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்களா? அவர்கள் மோசமான உடை அணிந்த ஒரு அஞ்ஞான பெண்ணின் மீது இச்சைக்கொண்டதாக அல்லது இணையத்தில் அல்லது கேனால் ஆரிசானில் (Canal Horizon) அசுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்ததாக அவர்கள் அறிக்கையிடுவார்களா? இப்போது மோசேயின் இடத்தில் காக்குவ் பிலிப்புவையும், சினாய் பாலைவனத்தின் இடத்தில் வெளிப்படுத்துதல் 12:14-ன் பாலைவனத்தையும் பின்னர், மோசேயின் நியாயப்பிரமாணத்தின் ஸ்தானத்தில் காக்குவ் பிலிப்பின் செய்தியை வையுங்கள். இறுதியாக, தூதனும் ஆட்டுக்குட்டியும் மற்றும் வெளிப்படையான பாவ அறிக்கையை எரியும் முட்செடியின் தூதன் மற்றும் மோசேயின் பலிகளின் இடத்தில் வையுங்கள் யாவும் பரிபூரணமாக இருக்கிறது.
37 எகிப்தில் துன்பப்படும் யூதர்கள் தேவனிடம் கூக்குரலிட்டனர், தேவன் அவர்களை இரட்சிக்க மோசே என்ற இரட்சகரை அனுப்பினார். ஆனால் அது கொள்ளிவாய்ச் சர்ப்பங்கள் மற்றும் கானானியர்களிடையே பூமிக்குரிய இரட்சிப்பாக இருந்தது. ஆனால் யூதர்களின் மகத்தான இரட்சகராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வந்தபோது, அவர் முடிவில்லாத நித்திய விடுதலையுடன் வந்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாசரேத், எருசலேம் மற்றும் இஸ்ரேல் முழுவதிலும் தார் சாலைகள், மின்சாரம் மற்றும் வேலைவாய்புகளால் அபிவிருத்தி செய்யவில்லை. அவர் அரேபியர்களையும் ரோமானியர்களையும் துரத்தவில்லை.
38 மேலும் தேவன் எகிப்திலிருந்து கறுப்பின ஆபிரிக்கர்களை மீட்டு, அவர்களுக்கு பூமியில் வளமான நிலத்தையும் சிறந்த தட்பவெப்பத்தையும் கொடுத்தபோது, துன்பம் இன்னுமாக அங்கே இருந்தது. அரபு மற்றும் ஐரோப்பிய அடிமைக் கப்பல்களில் இருந்து மத்தியதரைக் கடலில் இறக்கும் கறுப்பின குடியேற்றவாசிகள் வரை இந்த ஆப்பிரிக்கர்களின் கூக்குரல்களுக்கு, தேவன் அவர்களுக்கு ஏசாயா 19:19 முதல் 20 வரையுள்ள வாக்குதத்தத்தின் படி முடிவே இல்லாத நித்திய விடுதலைக்கான இரட்சகரான காக்குவ் பிலிப்புவை அனுப்பினார்.
39 பூமியின் அனைத்து ஜனங்களே, ஏப்ரல் 24, 1993 அன்று, ஒரு தீர்க்கதரிசியாக, தூதன் பரலோகத்திலிருந்து இறங்கி, தண்ணீர்களின் மீது நிற்பதை நான் கண்டேன். அவர் கையில் உருவிய பட்டயத்தோடு, தேசங்களைத் தாக்குவதற்கு தயாராக இருந்தார். மேலும் ஆட்டுக்குட்டியானவர் தூதன் நம்மைக் கொல்லாதபடிக்கு நமக்காக தேவதூதனிடம் மன்றாடினார். மேலும் ஆட்டுக்குட்டியானது என்னிடம் காக்குவ் 1 முதல் காக்குவ் 146 வரை நமக்காக கொடுத்தது ஆகையால் விசுவாசிக்கிற எவரும் அழிந்து போக மாட்டார்கள், ஆனால் நீங்கள் எனக்கு செவிக் கொடுக்க மறுத்துவிட்டீர்கள்.
40 மேலும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் பூமியில் இன்னுமாக, பூமியைத் தீட்டுப்படுத்திக் கொண்டிருகிறீர்கள், இந்த தூதன் ஏப்ரல் 24, 1993-இல் மகிழ்ச்சியற்றவராகவும் கோபமாகவும் மீண்டும் தோன்றினார். ஏப்ரல் 24, 1993 அன்று, நாம் அனைவரும் மரிப்பதற்கு தகுதியாக இருந்தோம், ஆனால் ஆட்டுக்குட்டியானவர் நமக்காக மன்றாடினார். ஏப்ரல் 24, 1993 அன்று, ஆட்டுக்குட்டியானவர் பூமியில் செய்யப்படும் எல்லா பாவங்களினிமித்தமும் வேதனையுடன் பேசினார், அவர் பேசும்போது ஆட்டுக்குட்டியானவர் வலியால் துடித்தார். ஆட்டுக்குட்டியின் நிமித்தம், பட்டயத்தை ஏந்திய தூதன் நம்மைக் கொல்லவில்லை. மேலும் நடுராத்திரி சத்தத்தின் செய்தியுடன் 20 ஆண்டுகள் கிருபை நமக்கு வழங்கப்பட்டது.
41 வெறுமனே ஒரு நாள் பிரசங்கத்தில் நினிவே மனந்திரும்பியது. ஆனால் நமக்கு, 20 வருட பிரசங்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தூதன் மீண்டும் தோன்றி, புத்தர் மற்றும் கிருஷ்ணரின் பெயரில் சாத்தானை அழைப்பதையும் உங்கள் அதே கோவில்களிலும், உங்கள் தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் பெயரில் சாத்தானை அழைப்பதையும், உங்கள் மசூதிகளில் அல்லாஹ்வின் பெயரில் சாத்தானை நீங்கள் அழைப்பதை கண்டார். எல்லா மதங்களிலும் உள்ள உங்கள் மதத் தலைவர்கள் அனைவரும் பணத்தின் சீடர்கள் மற்றும் தேவனுடைய எதிரிகள் என்று 20 ஆண்டுகளாக நான் உங்களிடம் கூறி வருகிறேன், நீங்கள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கவில்லை.
42 மேலும் என் ஊழியம் இருந்த போதிலும், நீங்கள் இன்னும் மோசமாகி, என்னை அந்திக்கிறிஸ்து என்றும் கள்ளத் தீர்க்கதரிசி என்றும் சொல்லி, என்னை சிறையில் அடைத்தீர்கள். நீங்கள் இன்னும் இஸ்லாம், கிறிஸ்தவம், யூத மதம், இந்து மதம், புத்த மதம், சமண மதம், கன்பூசியனிசம், தாவோயிசம், ஷின்டோயிசம், பஹாய் மதம் மற்றும் சீக்கிய மதத்தின் உறுப்பினர்களாக இருக்கிறீர்கள். இந்த தூதன் இப்போது என்ன செய்ய வேண்டும்?
43 ஏப்ரல் 24, 1993-இன் தூதன் முழு பிரபஞ்சத்தையும் நிரப்புகிறார், எனவே அவர் பூமி முழுவதையும் ஆளுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? பூமியின் பெரும் சக்திகளை உலுக்கி, கப்பர்நகூமை கடலுக்கு அடியில் அனுப்பியவர் அவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்தான், சர்வவல்லமையுள்ள கடவுள், ஏப்ரல் 24, 1993-இல் என்னை அனுப்பினார். மேலும் இந்த தூதன் பூமி முழுவதையும் அசைக்க முடியும், நீங்கள் பழுத்த பழங்களைப் போல விழுவீர்கள், உங்கள் செல்வத்தால் உங்களை இரட்சிக்க முடியாது.
44 பூமியில் நீங்கள் பார்க்கும் சபைகள் மற்றும் மதங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவற்றின் தலைவர்கள் அனைவரும் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதை முழு பூமியும் அறியட்டும். தீர்க்கதரிசிகள் எப்போதும் பூமியின் மேல் கடவுளின் இராஜ்ஜியம் மற்றும் தேவபயத்தை திரும்ப அளிக்கிறார்கள் அதே வேளையில் சபைகள் மற்றும் மதங்கள் பூமியில் இருந்து இந்த பயத்தை அகற்றுகிறது.
45 ஒவ்வொரு அஞ்ஞானிக்கும் தேவ பயம் இருக்கும், ஆனால் அவர் ஒரு சபை அல்லது மதத்திற்குச் செல்லும்போது, அந்த பயம் அவரை விட்டு நீங்குகிறது. பூமியிலுள்ள அனைத்து சபைகளுக்கும் மதங்களுக்கும் சாத்தான் இந்த பணியை தான் கொடுத்திருக்கிறான்.
46 நீங்கள் பார்க்கின்ற இந்த சபைகள் மற்றும் மதங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தலைவர்கள், அவர்கள் தங்கள் கோவில்கள், சபைகள் மற்றும் மசூதிகளில் வணங்குவது சாத்தான் என்பதை முழு உலகமும் அறியட்டும். மேலும் இரட்சிப்பு அவர்களின் அக்கரையாக இருந்ததில்லை.
47 கேமரூனில் உள்ள சுவிசேஷ சபையில் பாரிஷ் ஆலோசகராக இருந்தபோது, அவருடைய இரட்சிப்பைப் பற்றி பல கேள்விகள் அவரிடம் இருந்ததாக ஒரு சகோதரர் என்னிடம் கூறினார். அவர் நரகத்திற்குச் செல்ல பயந்தார். மேலும் அவர் ஒரு சொப்பனத்தை கொண்டிருந்தார் அதிலே யாரோ ஒருவர் அறியாத மொழியில் வேதவசனங்கள் அடங்கிய ஒரு வெள்ளை வேதாகமத்தைக் கொடுத்து, "இந்தப் புத்தகத்தின் மூலம் உனக்கு இரட்சிப்பு கிடைக்கும்" என்று கூறினார். அவர் கண் விழித்தார்.
48 எனவே அவர் கேமரூனின் அனைத்து புத்தகக் கடைகளிலும் இந்த வெள்ளை வேதாகமத்தை தேடினார், ஆனால் அவரால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எல்லோரிடமும் கேட்டார், ஆனால் இந்த வேதாகமத்தை பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஒரு நாள், ஒரு சுவிசேஷ போதகர், அவரிடத்தில் தனது கனவை சொல்லியதற்கு இப்படியாக சொன்னார், "இந்த வெள்ளை வேதாகமம் நீங்கள் பெற போகும் ஒரு விசித்திர கோட்பாடாக இருக்க வேண்டும். ஆனால் அதுவரை எங்கள் சபைக்கு வாருங்கள்" என்றார். பின்னர், சகோதரர் காக்குவ் பிலிப்புவின் செய்தியைக் கண்டபோது, செய்தியானது அறியாத மொழியில் உள்ள வெள்ளை வேதாகமம் என்பதை அவர் அறிந்தார். அவர் விசுவாசித்தார் மற்றும் தான் தேடிக் கொண்டிருந்த இரட்சிப்பின் நிச்சயத்திற்காக சந்தோஷமடைந்தார்.
49 நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த சுவிசேஷ பாஸ்டர் சகோதரனின் சொப்பனத்தை நன்கு புரிந்துகொண்டார், ஆனால் இரட்சிப்பு அவருடைய அக்கரையாக இருந்திருந்தால், அவர் இந்த சகோதரரிடம் இப்படியாக சொல்லியிருப்பார்: "இந்த வினோதமான போதகத்த நீங்கள் கண்டுபிடிக்கும்போது, அதைப் பற்றி எனக்குத் தெரிவிக்க நீங்கள் வருவீர்கள் என்று என்னிடம் சத்தியம் செய்யுங்கள்". ஆனால் அவர் அதற்கு பதிலாக, "எங்கள் சபைக்கு வாருங்கள்" என்று கூறினார், ஏனென்றால் இரட்சிப்பில் அவருக்கு அக்கரையில்லை
50 ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 26, 2021 அன்று, ஜாம்பியாவில் உள்ள செரென்ஜேவில், நடுத்தெருவில், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவுக்கு எதிராக அவதூறுகள் மற்றும் தூஷணங்களை பேசிய பிரான்ஹாமிஸ்ட் போதகரின் மனைவி மிகவும் கொடுரமான முறையில் கீழே விழுந்தாள். சில உதவியுடன் சுயநினைவு திரும்பிய அவள், "காக்குவ் பிலிப்புவை ஒரு பிசாசு என்று சொல்ல விரும்பினேன், பிறகு நான் விழுந்தேன்" என்றாள். ஆனால் அது அப்படி இருந்தபோதிலும், அவள் இன்னுமாக ஒரு பிரான்ஹாமிஸ்ட்டாக இருக்கிறாள், மேலும் காக்குவ் பிலிப்புவின் பெயர் உச்சரிக்கப்படும் எந்த இடத்தையும் தவிர்க்கிறாள்.
51 நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் தங்கள் தேவாலயங்களிலும் மதங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இரட்சிப்பின் மீது ஒரு போதும் அக்கரை இருந்ததில்லை , ஆனால் பணமும் அவர்களுடைய சபைகளின் நலனும் மட்டுமே அக்கரையாக இருந்தது. விரைவில் கடவுள் அவர்களின் வழிபாட்டுத் ஸ்தலத்தில் காக்குவ் பிலிப்பின் பெயரைக் கேட்கச் செய்வார். நான் அதை தீர்க்கதரிசனம் உரைத்தேன் அது நடக்கும். நீங்கள் பார்க்கும் இந்த சபைகள், மதங்கள் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் அனைவரும் பூமியில் விருத்தசேதனம் செய்யப்படாத அஞ்ஞானிகள் மற்றும் இரட்சிப்பு அவர்களின் அக்கரையாக ஒரு போதும் இருந்ததில்லை.
52 ஒரு அரசியல்வாதி, ஒரு முஸ்லீம், ஒரு இந்து ஒரு கத்தோலிக்கன், ஒரு புராட்டஸ்டன்ட், ஒரு சுவிசேஷகன் அல்லது ஒரு பிரான்ஹாமிஸ்ட் என்பவன் விருத்தசேதனம் செய்யப்படாத அஞ்ஞானியாக இருக்கிறான். மேலும் இந்த விருத்தசேதனம் செய்யப்படாத அஞ்ஞானிகள் நம்முடன் கவலையில்லாமல் சண்டையிடுகின்றனர், அது ஏனெனில், நம் மத்தியில் உள்ள தொடர் குற்றவாளிகளின் கலப்பின கூட்டம் மற்றும் ஆட்டுக்குட்டியின் பரிமாணமாக இருக்கிறது. ஆனால் காக்குவ் 146 முதல், அது இப்போது தூதனின் பரிமாணமாக உள்ளது. 2002-இல் இருந்து காக்குவ் 146 வரை நாம் காணும் மரித்தவர்களின் வழக்குகள் அப்படி இருந்ததில்லை.
53 ஒரு முறை கன்றுக்குட்டியின் பரிமாணம் இருந்தது, பிரதான ஆசாரியனாகிய மெல்கிசேதேக்கைப் போல் தூதன் ஆட்டுக்குட்டியின் கொம்பை பிடித்திருந்ததைக் கண்டேன் மற்றும் அவனுடைய வலது கையில் உள்ள பட்டயம் உருவப்பட்டதை போல அவன் ஆட்டுக்குட்டியைக் பலியிட இருப்பதை போன்று இருந்தது. நான் ஆச்சரியப்பட்டேன்: ஆட்டுக்குட்டியானது 2000 ஆண்டுகளுக்கு முன்பு கல்வாரி மரத்தில் பலியாக கொடுக்கப்பட்டது, ஏன் தூதன் இன்னும் ஒரு பட்டயத்துடன் அதை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். அதை பலிக்கொடுக்கப் போவதை போல் இருக்கிறார்?
54 இப்போது, தூதன் அங்கே யெகோவாவின் படைத் தலைவனாகவும் ஆட்டுக்குட்டி மற்றும் வார்த்தையின் பாதுகாவலனாகவும் நின்றுகொண்டிருப்பதைக் காண்கிறேன். . மேலும் தேவதூதனின் பட்டயம் இருபுறமும் கருக்குள்ளதாக இருக்கிறது. எனவே அது பலியின் பட்டயமாக இருக்க முடியாது. மேலும் காக்குவ் 146 முதல், ஆட்டுக்குட்டியின் சத்தத்தை கேட்ட அனைவரும் ஆட்டுக்குட்டிக்குள் தண்ணீர்களின் மேல் நின்றுக்கொண்டிருக்கிறார்கள், மற்றும் ஆட்டுக்குட்டியின் வார்த்தை அவர்களுக்குள் இருப்பதின் காரணத்தினால் தூதன் அவர்களுடைய பாதுகாவலனாக இருக்கிறார்.
55 மேலும் தண்ணீருக்கு மேலே உள்ள தூதன் மற்றும் ஆட்டுக்குட்டியின் நிலைப்பாட்டின் படி ஆட்டுக்குட்டியின் மீது யாரோ ஒருவர் கல்லை எறிந்தால், அந்த கல் தேவதூதனின் திசையில் செல்லும்.மேலும் ஒரு கல், இரண்டு கல், மூன்று கற்கள், மேலும் ஒரு நாள் ஒரு கல் தேவதூதனை சென்றடையும். தூதன் பாவங்களை மன்னிப்பதில்லை, ஆட்டுக்குட்டி மட்டுமே பாவங்களை மன்னிக்கிறதாக இருக்கிறது.
56 ஆனால் அஞ்ஞானிகளுக்கு முன்பாக, நீதியுள்ள தேவன், எப்போதும் நியாயத்தீர்ப்புகளையும், தண்டனைகளையும் அவருடைய சொந்த வீட்டில் இருந்து தொடங்குகிறார். காங்கோ-கின்ஷாசாவில் உள்ள பாபோங் சபையில், போதகர் மைக்கேல் உமுல்யா கிளர்ச்சியாளராக இருந்தார். பின்னர் செப்டம்பர் 2021-இல், அவர் தனது சபையான பாபோங் சபையை விட்டு உறுப்பினர்களுடன் வெளியேறி மற்றொரு சபையைத் திறந்தார்.
57 மேலும் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 6, 2022 அன்று, ஆராதனைக்குப் பிறகு, பாஸ்டர் பிரீ மற்றும் இரண்டு மூப்பர்கள் அவரை அழைத்து வர முயற்சி செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் பத்து நிமிடம் ஆணவத்துடன் பேசி இருந்தார், பபோங் சபையை சாத்தானிய சபை என்று அழைத்தார். அவர் பூரண ஆரோக்கியத்துடன் இருந்தார்.
58 ஆனால் பாஸ்டர் பியரீயும் மூப்பர்களும் வெளியேறிய பிறகு சில நிமிடங்கள் கழித்து, உமுலியாவின் மகன் ஃபோன் செய்து அவர்களை அவசரமாக திரும்பி வரவேண்டும். ஏன் என்றால் அவரது தந்தை உமுல்யா கண்கள் திறந்த நிலையில் உடல்கள் இறுகி கீழேவிழுந்து அமைதியாகி விட்டார் என்றார், போதகரும் அவரது மூப்பர்களும் திரும்பி வர மறுத்துவிட்டனர். அவருடைய குடும்பம் நமக்கு எதிராக எழும்பியது.
59 மேலும் மருத்துவர்களின் அனைத்து முயற்சிகள் இருந்த போதிலும், மார்ச் 8, 2022 செவ்வாய் அன்று மூன்றாவது நாள் உணர்விழந்த முழு மயக்க நிலை (Coma) நிலைக்கு சென்றார், மைக்கேல் உமுல்யாவின் உடல் குளிர்ந்து சுவாசம் நின்றது. சுயநினைவு திரும்ப பெறவோ அல்லது பேசவோ முடியாமல் மனிதர்களின் நிலத்தை விட்டுச் மைக்கேல் உமுல்யா சென்றார். அவரது குடும்பத்தினர் இறுதியாக அமைதியடைந்து நம்மை இறுதிச் சடங்கிற்கு அழைத்தனர் ஆனால் நாம் செல்லவில்லை.
60 இங்கே அபிட்ஜானில், சகோதரர் ஏனோக், கௌமாசி சபையில் சுவிசேஷப் பிரச்சாரத்திற்க்குப் பொறுப்பானவர். அவர் தனது வீட்டிற்கு அழைத்து வந்த ஒரு அஞ்ஞானப் பெண்ணுடன் பாலியல் பாவம் செய்தார். தூதன் தன்னை தாக்கிவிடுவார் என்ற பயத்தில் ஆராதனைக்கு வருவதை நிறுத்திவிட்டார். ஆனால் அவர் தாக்கப்பட்டு தனது பாஸ்டரை அழைத்தார். ஆனால் அவரது உடல்நிலை மிக விரைவாக மோசமடைந்ததால் அவரால் வெளிப்படையான பாவ அறிக்கைக்கு வரமுடியவில்லை. சுவிசேஷக சபையினரின் ஜெபத்தைப் பெற்ற பிறகு அவர் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்து பைத்திக்கார நிலைக்கு சென்றார்.
61 மேலும் மார்ச் 15 அன்று, அவர் தனது பாஸ்டரிடம் ஒரு சக்தி அவருடைய ஆடைகளை களைந்து மருத்துவமனையை சுற்றி ஓட வைக்க தன்னை இழுப்பதாக கூறினார். மார்ச் 17, 2022 அன்று, பெற்றோர்கள் அவரை சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்றபோது அவர் பேசவே இல்லை. மார்ச் 28, 2022 அன்று, நாங்கள் அவருடைய குடும்பத்தை அடைய முடிந்தபோது, சகோதரர் ஏனோக் ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டிருந்தார்.
62 நீங்கள் கத்தோலிக்க புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரான்ஹாமிஸ்ட் தலைவர்கள் மூலம் சாத்தானின் உதவியை நாடுவது தான் மிகவும் கடுமையான தவறு. அங்கோலாவின் மலஞ்சே சபையின் சகோதரி ரீட்டாவுக்கு வயிற்று வலி இருந்தது. அவளுடைய பெற்றோரின் சூழ்ச்சியின் கீழ், அவள் ஒரு சுவிசேஷகனை அவளுக்காக ஜெபிக்க அனுமதித்தாள், அப்போதிலிருந்து தொடங்கிய பைத்தியக்காரதனம் இப்போது வரை இருக்கிறது. மரணதருவாயின் போது கூட, ஒருபோதும் அந்த சபைகளின் உறுப்பினர் உங்களுக்காக ஜெபிக்க அனுமதிக்காதீர்கள்.
63 மேலும், சகோதரி அமோயின் ஏஞ்சலி ஆராதனைக்கு வருவதை நிறுத்திவிட்டாள். சகோதரர் ஜாடி ராபர்ட்டின் வழக்கோடு அவரது போதகரிடமிருந்து அறிவுரைகள் இருந்தபோதிலும், அவள் கால்சட்டை அணிந்து அவள் தலையில் ஜவுரி முடியை அணிந்திருந்தாள் அவள் பாஸ்டரிடம், "என்ன இது கடினமான செய்தி? அதை நன்றாக பின்பற்றும்படியான நேரம் இன்னும் வரவில்லை, என்னை வலுக்கட்டாயப்படுத்த வேண்டாம்!” என்றாள் அவள் உடனடியாக பைத்தியக்காரத்தனத்தின் ஆரம்ப அறிகுறிகளால் தாக்கப்பட்டாள். மேலும் அவள் அதிக அதிகமாக பேசிக்கொண்டிருந்தாள். மருந்துகள் எந்த பலனையும் ஏற்படுத்தவில்லை.
64 மேலும் வெளிப்படையான பாவ அறிக்கைக்கு வருவதற்குப் பதிலாக, சுவிசேஷ பாஸ்டர்கள் அவளுக்காக ஜெபிப்பதையே அவள் விரும்பினாள். அவர்களுடைய ஜெபத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, அவள் எழுந்து காட்டுக்குள் ஓடினாள். அவளது பெற்றோர் அவளை காட்டிற்குள் கண்டுபிடித்த போது அவர்கள் அவளைக் கட்டி, ஒரு பெண் தீர்க்கதரிசியின் ஜெப முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே, சகோதரி ஏஞ்சல் உணவு இல்லாமல், தண்ணீர் இல்லாமல் ஒரு மரத்தில் சங்கிலியால் கட்டப்பட்டாள். அவள் மீது பலத்த மழை பெய்தது. அவள் அங்கேயே மரத்தில் கட்டப்பட்டு மரித்துபோனாள், மார்ச் 7, 2022 திங்கட்கிழமை சங்கிலியில் 4 நாள் இருந்தாள் .
65 மேலும் பல சகோதர சகோதரிகள் தங்கள் பெற்றோருக்குச் செய்தியைப் பிரசங்கிக்க பயந்தனர் ஏப்ரல் 24, 1993-இன் தேவதூதனால் அவர்களது பெற்றோர் தாக்கப்படுவார்கள் என்று பயப்படுகிறார்கள்.
66 தூதன் அஞ்ஞானிகளையும் தாக்குகிறார் என்று அறிந்து கொள்ளுங்கள். மேலும் உங்களுடைய பெற்றோரும் இரட்சிக்கப்படும்படியாக நீங்கள் உங்கள் பெற்றோருக்குச் செய்தியை அறிவிக்கவில்லை என்றால், ஒரு நாள், உங்கள் பெற்றோர் உங்களை, சுவிசேஷ பேய்கள் மற்றும் பிறவற்றின் மூலமாக நோய்வாய்பட்ட நிலையில் உங்களை நரகத்திற்க்கு அனுப்புவார்கள். இங்கே சொல்ல முடியாத பல கடினமான விஷயங்கள் உள்ளன. நான் யாரையும் பயமுறுத்த விரும்பவில்லை, ஆனால் நாம் ஆட்டுக்குட்டியின் கட்டத்தை கடந்து தேவதூதனின் கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்து விழிப்புடன் இருக்குமாறு கெஞ்சுகிறேன்.
67 தேவதூதனின் கிரியைகள் நம்மிடையே மட்டுமல்ல, நம் எதிரிகள் மற்றும் பகைவர்கள் மத்தியிலும் உள்ளன. கோமா (Goma), காங்கோ-கின்ஷாசாவில், சாமுவேல் பாக்கா, ஒரு சகோதரியின் கணவர் தூதனின் கிரியைகளைப் பற்றி அவருடைய மனைவி அவரிடம் கூறிய போதும், அவர் செய்திக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்தார் மற்றும் அன்றைய தினம் அவர் புத்தகங்களை கிழித்து அவருடைய மனைவி கொண்டு வந்திருந்த தீர்க்கதரிசியின் படத்தை எரித்தார். வீட்டில், அவர் தூதனால் தாக்கப்பட்டார். மேலும் அவர் கால்கள் வீங்கியிருப்பதைப் பார்த்தார். அவருக்கு தீயினால் எரிக்கப்பட்டதைப் போன்ற கொப்பளங்கள் இருந்தது, அவரால் நடக்க முடியாமல் இருந்தது. மருத்துவர்களால் எதையும் செய்ய முடியவில்லை என்று அறிந்த பிறகு அவர் ஞானஸ்நானத்தை கேட்டார். மேலும் அவரை தூக்கி ஞானஸ்நானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். மிக நீண்ட வேதனைக்குப் பிறகு, அவர் மார்ச் 18, 2022 அன்று ஞானஸ்நானம் பெற்று பத்தாவது நாளில் மரித்தார்.
68 நான் கிருபையால் இரட்சிக்கப்ட்ட ஒரு ஏழை பாவி மட்டுமே, என்னை அவமதிப்பதோ என் படத்தை எரிப்பதோ ஒன்றுமில்லை. ஆனால் உங்கள் செயல்களும் வார்த்தைகளும் கற்களும் ஏப்ரல் 24 1993-இன் தூதனை எப்போது தொடும் என்று உங்களுக்குத் தெரியாது, ஒரு தரிசனத்தில் என்னால் மலை ஏற முடியவில்லை, மலையின் மேலே இருந்து நான் ஒரு மனித வடிவில் உள்ள மேகம் என்னுள் நடந்து வந்தது, மலையின் உச்சியை நோக்கி என்னை நகர்த்துகிறது. அது மனித உடலின் எக்ஸ்ரேயில் எலும்பின் தோற்றம் போல இருந்தது. என்னில் இந்த மேகமானது, அவர் தான் மத்தேயு 25:6 இன் செய்தியாளன்.
69 ஆப்பிரிக்காவில், ஐரோப்பாவில், அமெரிக்கா மற்றும் ஆசியா வரை எல்லா இடங்களிலும், தூதனின் கிரியைகள் உள்ளன. இந்தியாவில் சகோதரர் எட்வர்ட் ஜான்சனின் மரணம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? உமுல்யாவைப் போல தூதனால் தாக்கப்பட்டு பிப்ரவரி 10, 2022 அன்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், மற்றும் அவர் பிப்ரவரி 11 அன்று மரித்தார். மேலும் அவரது மனைவி தனது கணவரைக் கொன்றதாக நம்மை குற்றம் சாட்டினாள், இருப்பினும் அவள் நமக்கு எதிரான கிளர்ச்சியில் அவருக்கு ஆதரவளித்தாள், பிப்ரவரி 10-க்கு முந்தைய நாள் கூட, அவர் ஒரு சொப்பனத்தில் எச்சரிக்கப்பட்டார்.
70 மேலும் ஒரு சகோதரர் தனது பெற்றோருக்கு இச்செய்தியை குறித்து சாட்சிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரது சகோதரரின் மனைவி அவரை நிந்தனை தூஷனங்கள் செய்து தடுத்தாள். சகோதரன் அவளிடம், "மேடம், நீங்கள் சொல்வதையெல்லாம் நிறுத்துங்கள். இந்நாட்களில், உங்களைப் போல செயல்படும் பலரும் ஏப்ரல் 24, 1993-இன் தூதனால் தாக்கப்படுகிறார்கள். செய்தியில் உள்ள நாங்களும் கூட, நாங்கள் எங்களுடைய பாவங்களை மறைத்தால், நாங்களும் கூட தூதனால் தாக்கப்படுகிறோம்" என்றார். ஆனால் அவள் தொடர்ந்து கொண்டே இருந்தாள், உடனடியாக அவள் பைத்தியக்காரத்தனத்தால் தாக்கப்பட்டாள். மேலும் அவளுடைய பாதங்கள் வீங்க ஆரம்பித்தன. மருத்துவமனை அவளிடத்தில் எந்த சுகவீனத்தையும் காணதபோது, அந்தப் பெண் நோயிலிருந்து மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் சகோதரனிடம் கேட்டனர். சகோதரன் தனது பாஸ்டரிடம் கேட்டார், அந்த பெண் ஒருவேளை மரித்துப் போனால் இவ்விஷயமானது காவல்துறைக்கு எடுத்துச் செல்லப்படும் என்று பயந்து அந்த செயலானது தூதனுடையது அல்ல என்று மறுக்குமாறு பாஸ்டர் கூறினார். மேலும் அந்த பெண் கடந்த மார்ச் 27-ம் தேதி பெரும் வேதனையில் உயிரிழந்தார்.
71 மேலும் பல சமயங்களில், அந்த நபர் எந்த நோயால் பாதிக்கப்படுகிறார் என்பதை மருத்துவத்தால் காணமுடிவதில்லை. மேலும் கானாவில், தூதனால் தாக்கப்பட்ட பெண்மணியினிமித்தம் காக்குவ் பிலிப்புவில் நம்பிக்கை கொண்ட அப்பெண்ணின் மகன் காரணமாக அவளது வாயில் தூஷனங்களும் நிந்தனைகளும் இன்னுமாக இருந்தன. அதனால் மேலும் முடங்கிப்போயும், பேச முடியாமலும் போனாள். பின்னர் அவள் மரிப்பதற்கு முன் ஆழ்ந்த கோமா நிலைக்கும் சென்றாள்.
72 அஞ்ஞானிகளே, மதங்களின் தலைவர்களே, நீங்கள் என்னை அந்திகிறிஸ்து என்று அழைக்கும் போது, ஏப்ரல் 24, 1993-ன் தூதனைத்தான் நீங்கள் சாத்தான் என்று அழைக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? உங்கள் கோவில்களிலும், சபைகளிலும், மசூதிகளிலும் உள்ள உங்கள் மதத் தலைவர்கள் குலுனாக்கள், குற்றவாளிகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத சட்ட விரோதிகள் என்று நான் கூறும்போது, ஏப்ரல் 24, 1993 அன்று கடவுளிடமிருந்து நேரடியாகக் பெற்றுக் கொண்ட கட்டளையின் அடிப்படையில் நான் அதைச் சொல்கிறேன். ஆனால் நீங்கள், காக்குவ் பிலிப்புவை ஒரு அந்திகிறிஸ்து அல்லது ஒரு பிசாசு என்று சொல்ல கடவுளிடமிருந்து உங்களுக்கு என்ன ஆணை உள்ளது?
73 தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு மற்றும் அவருடைய செய்திக்கு எதிராக பேச ஒருவருக்கும் உரிமை இல்லை. கடந்த காலத்தில் நீங்கள் அவரை எதிர்த்துப் பேசியிருந்தாலும், காக்குவ் 146 வரைக்கும் அப்படி செய்திருந்தாலும், இனிமேல் ஒரு போதும் அப்படி செய்யாதீர்கள்! காக்குவ் 146 ஆனது சிவப்பு கோடாகவும் மற்றும் ஆட்டுக்குட்டியினுடைய பரிமானத்தின் முடிவாகவும் இருக்கிறது. "சிறைக்கைதியாகிய நான், காக்குவ் பிலிப்பு " என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது ஆட்டுக்குட்டியின் காலமாக இருந்தது. ஆனால் காக்குவ் 147-இல் இருந்து, அது: "என் தூதன் உங்களுக்கு முன் செல்கிறார்" என்பதாக இருக்கிறது.
74 இப்போது தூதனின் காலமாக இருக்கிறது. உங்களை தான், விருத்தசேதனம் செய்யப்படாத அஞ்ஞானிகளே, நீங்கள் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பிற்கு செவிகொடுக்கவும் அவரை விசுவாசிக்கவும் விரும்பவில்லை என்றால், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பிற்கு எதிராக யாராவது பேசினால், அமைதியாக இருந்து விடுங்கள் மற்றும் அவனுடைய இடத்திலிருந்து விலகிடுங்கள்! இதுவே நான் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளையாகும்! உங்களுக்கு முன்பாக யாராவது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவை எதிர்த்துப் பேசும்போது, அது கோவிலாக, சபையாக, மசூதியாக அல்லது வேறு எந்த இடமாக இருந்தாலும், அந்நபர் உங்களுடைய எதிரி, அவனைத் தடுக்க முடியாவிட்டால் எழுந்து அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்.
75 இனி முதற்கொண்டு, அநேக மதத் தலைவர்கள் அவர்களது பிரசங்க பீடத்தில், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பிற்கு எதிராகப் பேசும்போது கீழே விழுவார்கள், பலர் இறந்துவிடுவார்கள் என்று நான் தீர்க்கதரிசனம் கூறுகிறேன். இந்த வழக்கில், அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இடத்தில் தங்களிடம் பேச வரும்படியாக காக்குவ் பிலிப்பின் சீஷரை அழைத்து அவர்களுக்காக ஜெபம் செய்வார்கள் மற்றும் சாபம் அவர்களை விட்டு விலகும்.
76 மேலும் ஒரு மதத் தலைவர் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புக்கு எதிராகப் பேசும் போது பிரசங்க மேடையில் சரிந்து விழுந்தும் அவர் மரிக்கவில்லை என்றால், அவருக்கான தீர்வு மருத்துவமனை அல்ல, ஆனால் காக்குவ் 151: 18-ல் உள்ளது. அவருடைய முழு சமூதாயமும் அவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் ஏற்றிக்கொண்டு, அவருடைய நகரத்தின் எல்லா தெருக்களிலும் அவருடன் ஊர்வலம் சென்று: "இன்று பூமியில் இருக்கும் கடவுளின் ஒரேயொரு உண்மையான தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு என்றும் அவருடைய கடவுள் மட்டுமே உண்மையான கடவுள் என்றும் நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம். அவரை விசுவாசிக்காத எவரும் நரகத்திற்குச் செல்வர். மேலும் அவருக்கு எதிராக யார் பேசினாலும், செயல்பட்டாலும், எங்கள் தலைவர் அவருக்கு எதிராகப் பேசியதால் கடவுள் அவரை அடித்ததைப் போலவே, அவருக்கு எதிராக பேசக்கூடியவரையும் இதே ஸ்ட்ரெச்சரில் நீங்கள் பார்க்கும் படி கடவுள் அவரை அடிப்பார்" என்றும் சத்தமிட வேண்டும்.
77 தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பிற்கு எதிராக அவர் எத்தனை நாட்கள் பேசினாரோ, அவ்வளவு நாட்கள் அவரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்படும்போதே சாபமானது அவரது சமூக உறுப்பினர்களை விட்டுச்செல்லும். மேலும் கடவுள் அவரது செயல்களுக்கு ஏற்ப அவரது விதியை, வாழ்வை அல்லது மரணத்தை தீர்மானிப்பார்.
78 அனைத்து சபைகள் மதங்கள் மற்றும் பூமியின் அனைத்து குடிமக்கள் மீதும் அதிகாரமும் இராஜ்யமும் கொண்ட கடவுளே தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பின் கடவுள். ஏப்ரல் 24, 1993-இன் தூதனால் தாக்கப்பட்ட எவருக்கும் இவைகளே கட்டளைகள் மற்றும் நியமனம் ஆகும். ஆனால் நீங்கள் இதைச் செய்யாவிட்டால், சாபமானது உங்கள் மீதும் உங்கள் வீட்டின் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் உங்கள் பயிர்கள் மற்றும் உங்கள் வியாபாரங்கள் மீதும் தங்கியிருக்கும். தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு மற்றும் அவரது செய்திக்கு எதிராக யாராவது உங்களுக்கு முன் பேசினால், நீங்கள் அந்நபரைக் கண்டிக்க வேண்டும் அல்லது அந்நபரின் சாபத்தை நீங்களும் பங்கிட்டுக் கொள்ளாதவாறு அவரது இடத்திலிருந்து வெளியேற வேண்டும்.
79 எகிப்தில் தொடங்கி மேசியா வரைக்கும், தீர்க்கதரிசிகளை அனுப்பி இஸ்ரவேலை நியாயம்தீர்த்து தாக்கினார் . ஆனால் அவர் இஸ்ரவேலின் கடவுள் மட்டுமல்ல, முழு பிரபஞ்சத்திற்கும் ஒரே கடவுள் என்பதை அவர் பூமியின் தேசங்களுக்குக் காண்பிக்கும் நேரம் இப்போது வந்துவிட்டது. நம் நாடுகளின் நீதிமன்றங்களில், நமக்குத் தெரியாத மனிதர்களின் சட்டத்தால் நாம் தீர்மானிக்கப்படுகிறோம். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக, கூடுமான அனைத்து வழிகளிலும், கடவுள் தனது தற்போதைய கட்டளைகளை எனது செய்தியின் மூலம் முழு மனுக்குலத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
80 இஸ்ரவேலில் ஆயிரக்கணக்கான தீர்க்கதரிசிகள், தாங்கள் யெகோவாவின் பெயரில் ஊழியம் செய்வதாக நம்பி கொண்டிருந்தவர்கள் கொல்லப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர். அதே கடவுள் கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரான்ஹாமிஸ்ட் தலைவர்களை சாத்தானை வணங்கவும் பூமியை என்றென்றும் வஞ்சிக்கும்ம்படியும் ஏன் அனுமதிக்க வேண்டும்? இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம், இந்துமதம், புத்தம், சமணம், கன்பூசியனிசம், தாவோயிசம், ஷின்டோயிசம், பஹாய் மற்றும் சீக்கியம் ஆகிய மதங்களின் தலைவர்களை கடவுள் ஏன் எப்போதும் அச்சமின்றி செயல்பட அனுமதிக்கிறார்?
81 தீர்க்கதரிசிகள் மற்றும் பரிசுத்தவான்களை எதிர்த்ததற்காக லட்சக் கணக்கான யூதர்கள் நோய்களாலும் சாபங்களாலும் தாக்கப்பட்டனர் மற்றும் லட்சக் கணக்கான யூதர்கள் கொடூரமாக இறந்தனர். என்னையும் எனது செய்தியையும் எதிர்க்கும் அவர்களின் சந்ததியினரை பூமியின் தேசங்களுக்கிடையில் அதே கடவுள் எப்படி நிம்மதியாக வாழ அனுமதிப்பார்?
82 பூமியின் தேசங்களின் இரட்சிப்புக்காகவும் எச்சரிக்கைக்காகவும் சொல்ல வேண்டிய அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன். ஒன்று நீங்கள் அதை நித்திய ஜீவனுக்காக ஏற்றுக்கொள்கிறீர்கள் அல்லது உங்கள் மரணத்திற்குப் பிறகு அதை நரகத்திற்காக நிராகரிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் என்னுடன் சண்டையிட முடிவு செய்தால் அல்லது எனது செய்தியின் வழியில் தடையாக இருந்தால், பூமியில் உங்கள் ஜீவியக் காலம் சுருக்கபடும் அல்லது துன்பத்திற்கேதுவுள்ளவையாக குறைக்கப்படும். ஏற்கனவே பல பைத்தியக்காரர்கள் மற்றும் குருடர்கள் மற்றும் முடமானவர்கள் மற்றும் மரித்தவர்கள் உள்ளனர், இது ஆரம்பம் மட்டுமே.
83 தீர்க்கதரிசி எலிசாவை கேலி செய்ததற்காக பத்திற்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் கரடிகளால் கிழிக்கப்படும் போது, நான் பிரசங்கித்த கடவுளின் செய்தியைப் படிக்கவோ கேட்கவோ மறுத்து, எனக்கு எதிராகப் பேசும் பழைய துன்மார்க்கராகிய உங்களுக்கு என்னவாகும்? நீங்கள் எப்பொழுதும் அச்சமோ கவலையோ இல்லாமல் அதைச் செய்துள்ளீர்கள். ஆனால், இனிமேல் இது ஒரு புதிய நேரம். காக்குவ் 146 என்பது சிவப்புக் கோடு ஆகும், அங்கு ஏப்ரல் 24, 1993-இன் தூதன் தனது கையால் உருவப்பட்ட பட்டயத்துடன் தன்னை திரை நீக்கி காண்பிக்கிறார். மேலும் எனது ஊழியத்தின் போது ஆயிரக்கணக்கான துன்மார்கர்கள் விழுந்து போகக்கூடும்.
84 காக்குவ் பிலிப்புவாகிய என்னை குறித்து நீங்கள் பயமில்லாமல், அவமானப்படுத்தவும் மற்றும் தூஷித்து பேசும்படி, உங்களுக்கு இந்த மோசமான அறிவுரையை வழங்கியது யார்? ஒரு ஆப்பிரிக்க பாரம்பரிய பூசாரி மாந்திரீக பொருட்களை கட்டிக்கொண்டும், கழுத்தில் மனித மண்டை ஓடுகளுடன் எனது இடத்தில் நின்று கொண்டிருந்தால், நீங்கள் அவனை கண்டு பயப்பட மாட்டீர்களா? ஆனால் மோசேயைப் போன்றே கடவுளிடம் இருந்து வந்த தீர்க்கதரிசியான காக்குவ் பிலிப்பிடம் மட்டும் ஏன் உங்களால் ஒன்றையும் புரிந்து கொள்ளமுடியவில்லை? கடவுளை விட உங்களுக்கு சாத்தானுக்காக அதிக பயம் உள்ளதா ?
85 மேலும் உகாண்டாவில், ஒரு பெண் 2018 முதல் செய்திக்கு எதிராக போராடி வருகிறாள். அவள் அக்கம்பக்கத்தினர், விருந்தினர்கள் மற்றும் தனக்குத் தெரியாத வழிப்போக்கர்களிடமும் செய்தி மற்றும் தீர்க்கதரிசியை குறித்து தவறாக சித்தரித்து கொண்டிருந்தாள். மேலும் காக்குவ் 147 வெளியிடப்பட்டபோது, ஒரு சகோதரரான அவரது கணவர், அவள் தாக்கப்படக்கூடாது என்று எச்சரித்தார். ஆனாலும் அவள் தொடர்ந்து அதையே செய்தாள், அவள் உடனடியாக குருட்டுத்தன்மை மற்றும் மருத்துவம் அறியாத ஒரு வகையான தொழுநோய் போன்ற இன்னும் சில வியாதிகளால் பாதிக்கப்பட்டாள்.
86 உடல் முழுவதும் அவளது தோல் அனைத்தும் உணர்ச்சியில்லாமல் போனது, பொதுவாக மயக்க மருந்தை செலுத்தியது போல புண்கள் இருந்தது. மேலும் மருத்துவமனையின் அனைத்துப் பரிசோதனைகளிலும் அவள் நலமாக இருப்பதாகத் தெரிய வந்ததையடுத்து, தன்னைச் சுற்றிலுமிருந்தவர்களுக்கும், தன் பெற்றோரிடமும் கூட செய்தியை விளக்கி சொன்னாள், தன் சகோதரியுடன் சபைக்கு வரத் தொடங்கினாள். ஆனால் சபையாருக்கு அவள் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில் அவள் பாசாங்கு செய்வதாக அவர்கள் கண்டனர். அவள் சொன்னாள், "ஓ, இந்த செய்தி தான் முழுமையான சத்தியம்! காக்குவ் பிலிப்பு மட்டுமே உண்மையான தீர்க்கதரிசி! நன்றி ஆண்டவரே! நான் முழுமையாக நம்புகிறேன்! ஞானஸ்நானம் உட்பட அனைத்திற்கும் நான் தயாராக இருக்கிறேன்"என்றாள். ஆனால் சகோதரர்கள் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. சில நாட்கள் கழித்து, அவள் சபைக்கு வருவதை நிறுத்திவிட்டாள். அவள் குணமாகவில்லை, ஆனால் அவள் மரிக்கவுமில்லை. குறைந்தபட்சம் இவள் ஒருவள் மரிக்கவில்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.
87 இருபது ஆண்டுகளாக, நான் முழு உலகிற்குமாக பேசினேன், பலர் என்னில் விசுவாசம் கொள்கிறார்கள், ஆனால் மதங்கள் மற்றும் அஞ்ஞானிகளுக்கு நான் ஒரு பைத்தியக்காரனாகவும், குரைக்கின்ற நாயாகவும் இருக்கின்றேன். இப்போது நாம் இந்த ஊழியத்தின் முடிவில் இருக்கிறோம். நான் ஒரு தரிசனத்தையும், ஒரு செய்தியையும் கற்பனையாக புனையப்பட்ட ஒரு பொய்யனாக இருந்தேனா? கண்டுபிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. விசுவாசித்தவர்கள் தாக்கப்டும் வேளையில், இந்த செய்தியை நிராகரித்தவர்கள் தங்கள் தீய வாழ்வில் நிம்மதியாக இருப்பார்களா? கண்டுபிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது ஒரு தீர்க்கமான நேரம். இப்போது என்னை அனுப்பியவரின் நேரம் இது. மேலும் உணர்ந்து கொள்ளக்கூடியவன் எவனோ அவன் உணர்ந்து கொள்ளட்டும்.