Kacou 152 (Kc.152) : எவால்ட் ஃபிராங்கிற்கு காக்குவ் பிலிப்புவின் கடைசி வார்த்தைகள்
1 நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, இந்த ஜூலை 17, 2022 அன்று கடவுளின் சார்பாக எவால்ட் ஃபிராங்க் மற்றும் உலகம் முழுவதும் உள்ள வில்லியம் பிரான்ஹாமின் செய்தியின் விசுவாசிகள் அனைவருக்கும் உரையாற்றினேன்.
2 தேவனுடைய கிருபையால், நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். என் வாழ்நாள் முழுவதிலும் நான் ஒரு நரம்பு ஊசியை (IV) எடுத்ததில்லை மற்றும் நான் ஒரு மருத்துவமனை படுக்கையில் படுத்ததில்லை. பரிசுத்தமே எனது இரகசியம். 2002-ல் நான் எனது ஊழியத்தை ஆரம்பித்தபோது, என்னுடைய 1.78 மீட்டர் உயரத்திற்கு நான் 64 கிலோ எடை இருந்தேன். ஆனால் இப்போது உபவாசம் இல்லாமல் 60 முதல் 62 கிலோ வரையிலான எடையுடன் இருக்கிறேன். தோல்வியுற்றவர்களைத் தவிர 2002-ல் எனக்குத் தெரிந்த அனைத்து பாஸ்டர்களும் எடையைக் கூட்டியுள்ளனர்.
3 நல்லது, ஜூலை 8, 2022 அன்று கடாட்ஜியில், மொசாம்பிக்கிலிருந்து பெட்ரோ அலிக்சோ, பிரேசிலில் இருந்து டுயாடமர் கோஸ்டா மற்றும் பிரான்சிலிருந்து பாஸ்கல் விச்சி அப்போஸ்தலர்களை பிரதிஷ்டை செய்தேன். இது டோகோவைச் சேர்ந்த வீரமிக்க அப்போஸ்தலரான கோசி யெலூ முன்னிலையில் நடந்தது. அங்கோலாவிலிருந்து அனிசெட்டோ மானுவல் மற்றும் மெக்சிகோவிலிருந்து லூயிஸ் கரோனாடோ போன்ற புதிய அப்போஸ்தலர்களையும் நான் நிறுவியுள்ளேன். ஏப்ரல் 14, 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று, அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள டுசானில் உள்ள பேரி கிரீன் கூடாரத்திற்கு அப்போஸ்தலன் சீசர் எஸ்பார்சாவை அழைத்துச் சென்றவர் இந்த லூயிஸ் கொரோனாடோ.
4 மேலும் இந்த கடைசி ஆண்டுகளில், அப்போஸ்தலன் பிளான்சார்ட் மொசிலி அவர்கள் அமெரிக்காவின் மாநிலங்களான கென்டக்கி, கலிபோர்னியா, லூசியானா, மாசசூசெட்ஸ், இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிசௌரி, மேரிலாந்து, நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மற்றும் பல இடங்களில் துண்டு பிரசுரங்களின் பல சூட்கேஸ்களை விநியோகித்துள்ளார்.
5 பாஸ்டனில், 73 வயதான வெள்ளையர் ஒருவர் அவரை தன்னுடைய இடத்தில் வரவேற்று, தானும் தன்னுடைய மனைவியும் ஞானஸ்நானம் பெற விரும்புவதாக அவரிடம் கூறினார். இதோ, கேப் வெர்டேவில் இருந்து எனக்கு எழுதியவர் இவருடைய மகள் தான். ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் அவருக்குச் செய்தியை ரகசியமாகப் பிரசங்கித்து, அச்சிடப்பட்ட செய்தியை முழுவதுமாக அவருக்குக் கொடுத்தார். ஒரு கத்தோலிக்க பாதிரியினால் அதைச் செய்ய முடியும் என்று நான் வியப்படைந்தேன்.
6 செய்தியில், நாம் அனைவரும் சீடர்கள் ஆனால் சிலர் தங்கள் தனிப்பட்ட வேலையில் மும்முரமாக இருக்கலாம், மேலும் அவர்கள் தான் செய்தியின் நிதித் தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். செய்தியும் அதன் விரிவாக்கமும் ஒரு போதகரின் முக்கிய வேலையாகவோ அல்லது அக்கறையாகவோ இல்லாதபோது, அவர் ஒரு லேவியரைப் போல தனது தனிப்பட்ட தேவைகளுக்காக தசமபாகங்களையும் காணிக்கைகளையும் பயன்படுத்தக்கூடாது. அப்படி அவர் செய்தால் அது தடைசெய்யப்பட்ட செயலாகும், மேலும் அவர் தன் தலை மீதும், தன்னுைடய வீட்டார் மீதும் சாபத்தை அழைக்கிறார்.
7 மேலும், பிரசங்க பீடத்தில் உள்ள ஒரு பிரசங்கிக்கு பாவங்களையும் மக்களையும் பெயரிட்டு தனது பிரசங்கத்தின் இறுதி வரை செல்ல முழு அதிகாரம் உள்ளது. மேலும் அவருடைய பிரசங்கத்தில் மகிழ்ச்சியடையாதவர், நாட்டின் குழுவில் தான் சென்று புகார் செய்ய வேண்டும். மேலும், ஒரு போதகர் தனது மொழிபெயர்ப்பாளரை நோக்கி கத்தக்கூடாது.
8 கனவில் தன் தந்தை அல்லது தாயை அல்லது உறவினரைப் பேய் வடிவில் பார்க்கும் ஒருவர், அவரைக் கொல்ல விரும்புவதாக ஒரு போதும் குற்றஞ்சாட்டக்கூடாது, ஏனென்றால் அது எப்போதும் கிட்டத்தட்ட அவருடைய மதச் சமூகத்தின் உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் இருக்கிறது. ஒரு கனவு என்பது கடவுளிடமிருந்து உங்களுக்கான ஒரு செய்தி, அதைப் புரிந்துகொள்ள நீங்கள் அதன் மேல் தியானிக்க வேண்டும். உதாரணமாக: சிறுநீர் கழிக்க அல்லது மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் என்பது நீங்கள் பாவத்தின் பாதையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் ஒரு கனவில் நிர்வாணமாக இருந்தால், நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு மாறாக செயல்படுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் காலணிகள் இல்லாமல் இருந்தால், பிறகு உங்களுக்கு வைராக்கியம் இல்லை. காலணிகள் என்பது கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துவதில் உள்ள வைராக்கியமாகும்
9 மேலும் ஒரு சமூகத்தில் அன்பின்மை மற்றும் ஒழுங்கின்மை என்பது அதன் தலைவரின் திறமையின்மையின் விளைவு ஆகும். மேலும் ஒருவர் மக்களை வழிநடத்தும் குணங்கள் அல்லது திறன்கள் கொண்டிராத போது, அவர் தன்னை ஒரு சர்வாதிகாரியாக மாற்றிக்கொண்டு சீடர்களுடன் தன்னைச் சூழ்ந்து கொள்கிறார். நீங்கள் அவரிடம் பொதுவெளியில் உண்மையைச் சொன்னால், அவருடைய சீடர்கள் தனிப்பட்ட முறையில் உங்களைத் தாக்குவார்கள்.
10 நல்லது, செய்தி வேக வேகமாக முன்னேறுகிறது. மொசாம்பிக் பிப்ரவரி 2021-ல் 52 சபைகளில் இருந்து ஜூன் 2022-ல் 70 சபைகளாக சென்றுள்ளது. அநேக சபைகள் செய்தியில் இணைகின்றன. மேலும் செய்தியானது சுவிசேஷ களத்தில் எழும்ப தொடங்கியுள்ளது, ஜோசுவே முகாங்கு, மற்றும் மெதுஷெலா மற்றும் பலர் போன்ற பல சிறுவர் பிரசங்கிகள் உள்ளனர். உலகம் முழுவதும் அவர்களால் நிரப்பப்பட வேண்டும் என்பதே எனது ஜெபம்.
11 மேலும், மொழிபெயர்ப்பு நன்றாக முன்னேறி வருகிறது. 2021-ல், நடுராத்திரிசத்தம் 44 மொழிகளில் மட்டுமே இருந்தது. அது ஒன்றுமே இல்லை. மேலும் மொழிபெயர்ப்பு விசுவாசிகளால் செய்யப்படுகிறது. பூமியின் அனைத்து மொழிகளிலும் தன்னுடைய செய்தியை மொழிபெயர்ப்பது ஒரு தீர்க்கதரிசியின் மரணத்திற்கு முன் அவர் தேர்ச்சி பெற வேண்டிய சோதனைகளில் ஒன்று.
12 ஒரு உபதேசம் என்பது ஒரு தீர்க்கதரிசி மூலம் தேவனால் நிறுவப்பட்ட நிரந்தர சட்டம். ஒரு தவறான உபதேசம் என்பது ஒரு தீர்க்கதரிசியிடமிருந்து வராத நிரந்தர சட்டம். மேலும் சட்டவாதம் என்பது செய்தியை எழுத்து சார்பாக பயன்படுத்துவது மற்றும் செய்தியின் ஆவிக்கு எதிராக இல்லாவிட்டாலும் எழுதப்படாத அனைத்தையும் நிராகரிப்பதாகும். மேலும் சட்டவாதம் பிசாசினுடையது.. உதாரணமாக, ஒரு போதகர், "இன்று காலை ஆராதனைக்காக, டீக்கன்களால் சிறப்பாகப் பின்தொடர்வதற்காக நாம் குழந்தைகளை ஒன்றாக கூட்டிச் சேர்ப்போம்" என்று சொன்னால். இதை சபை நல்லதாகக் கண்டால் இது சரியானது. இதுவே செய்தியின் ஆவி. ஆனால், "இனி முதற்க்கொண்டு, டீக்கன்களால் சிறப்பாகப் பின்தொடர்வதற்காக நாம் குழந்தைகளை ஒன்றாகச் கூட்டிச் சேர்ப்போம்" என்று அவர் சொன்னால், அது சரியல்ல, ஏனென்றால் அவர் ஒரு தீர்க்கதரிசியாக இல்லையென்றால் எவரும் ஒரு உபதேசத்தை நிறுவ முடியாது. செய்தியில் எல்லா இடங்களிலும் செய்யப்படும் அனைத்திலும் நீங்கள் வேகம் காக்க வேண்டும்.
13 மதத் தலைவர்கள் என்னை வெறுக்கிறார்கள், ஆனால் நான் தேவனுடைய சித்தத்தை செய்வேன். நான் கடவுளில் நம்பிக்கை கொள்ளவில்லை, நான் ஒரு வீடு கட்டும் இடத்தில் சக்கர வண்டியைத் தள்ளினேன், ஏப்ரல் 24, 1993 அன்று ஒரு தேவதூதன் எனக்குத் தோன்றி என்னிடம், "என்னைப் பின்பற்றி வா! சர்வவல்லமையுள்ள தேவன் தம்முடைய சித்தத்தைச் செய்ய உன்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்!" என்றார். "கடவுள் என்னிடம் என்ன செய்யச் சொல்வார் என்று முட்டாள் போல் காத்திருக்காவிட்டால் நான் என்ன செய்வேன்?
14 பூமியிலுள்ள மதத் தலைவர்களே, நீங்கள் அனைவரும் உங்கள் கண்களைத் திறந்தவன்னமாக ஒருபோதும் ஒரு தரிசனத்தை பார்த்ததில்லை. நீங்கள் அனைவரும் குருடர்களும் பணத்தின் சீஷர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய சித்தத்தில் நடக்கிறீர்கள் மற்றும் என்னையும் உங்களை போல செய்ய விரும்புகிறீர்கள் ஆகையால் உங்களைப் போலவே கடவுள் என்னையும் நிராகரிப்பார். இந்த தவறை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். நான் எப்போதும் கனவுகள் மற்றும் தரிசனங்களின்படியே நடப்பேன், நான் தேவனுடைய சித்தத்தை செய்வேன். ஆண்டவராகிய இயேசு, எஜமானர் தாமே "பிதா முதலில் செய்வதைக் கண்டால் ஒழிய நான் எதையும் செய்வதில்லை" என்றார்.
15 இனிமேல் பணத்தைப் பெற வேண்டாம் என்று தேவதூதன் எனக்குக் கட்டளையிட்டபோது, நான் கீழ்ப்படிந்தேன். மேலும் பணம் என்று இருக்கும் எல்லாமே எனக்கு தடை செய்யப்பட்ட விஷயமாகிவிட்டது. எனது செய்தியில் எவ்வளவு தசமபாகங்கள் மற்றும் காணிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன, மேலும் அவைகளை பாஸ்டர்கள் மற்றும் அப்போஸ்தலர்களால் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது? நான் அறிய முற்படவில்லை.
16 ஒரு தீர்க்கதரிசியானவன் தான் தவறு செய்யக்கூடிய ஒரு மனிதன் என்பதை அறிந்திருக்க வேண்டும், எனவே பேசுவதற்கு தனது கற்பனையை சார்ந்து இருக்க கூடாது. வில்லியம் பிரன்ஹாம் ஏதேனில் நடந்த சர்ப்பத்தை பற்றிப் பேசும்போது, அதன் வடிவம், அதன் அளவு மற்றும் எவ்வளவு முடிகளை கொண்டிருந்தது என்று அவர் விவரிக்கும் போது, அது அவருடைய கற்பனையா? ஆபேல் தன் மந்தையின் முதற்பேறான வயது முதிர்ந்த ஆண் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைக் கடவுளுக்குக் காணிக்கையாக எரித்தபோது அது அவனுடைய கற்பனையா?
17 ஏப்ரல் 24, 1993-ன் தேவதூதன் மூலமாக தான் கருத்தடை சாத்தானியமானது என்பதை நான் அறிந்துகொண்டேன். உடல்நலக் காரணங்களுக்காக, மருத்துவ டாக்டராக இருக்கும் எனது நண்பர் ஜீன் ரெனே மற்றும் சகோதரர் ரோலண்ட் மெலேட்ஜே ஆகியோரை என் மனைவிக்கு கருத்தடையைப் பரிந்துரைக்க தொடர்புக் கொண்டேன். எனக்கு ஒரு வெளிப்பாடு இருந்தது மற்றும் நான் சகோதரர் ரோலண்டை அவரது செவிலியர் உடையில் பார்த்தேன், ஆனால் அவர் டயர்களை ஊதிபெரிதாக்கும் ஒரு மனிதராக இருந்தார். மேலும் அவர் மிகவும் ஒல்லியான சீனப் பெண்ணுக்கு காற்றை செலுத்தவிருந்தார். தேவதூதன் என்னிடம் சொன்னார், "செக்ஸ் பொம்மைகளும் அவற்றின் உரிமையாளர்களும் சொர்க்கத்திற்குச் செல்ல மாட்டார்கள்!" மற்றும் தரிசனம் என்னை விட்டு சென்றது.
18 செக்ஸ் பொம்மைகள் என்பது மனிதர்களைப் போன்ற ரோபோக்கள். இந்த பொம்மைகள் மனிதர்களைப் போல பேசுகின்றன மற்றும் செயல்படுகின்றன. மேலும் இந்த பொம்மைகளுடன் தான் சீனர்கள் குழந்தை பெறுவதை தவிர்க்க உடலுறவு கொள்கின்றனர். இந்த விதத்தில், நான் சிந்திக்க வேண்டுமா? மற்றும் என்ன சொல்ல? அதனால்தான், எவால்ட் ஃபிராங்கைப் பற்றி நான் இன்று பேசப்போகும் ஒவ்வொரு கருத்தும் தரிசனங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
19 மேலும் ஒரு பிரான்ஹாமிஸ்ட் என்னை 1993 முதல் அறிந்திருந்தால், காக்குவ் பிலிப்புவுடன், அது கனவுகள் மற்றும் தரிசனங்கள் என்று அவர் உங்களுக்குச் கூறுவார். ஆனால் எனது கனவுகளும் தரிசனங்களும் ஒருபோதும் தோல்வியடையவில்லை என்றும் அவர் உங்களுக்குச் சொல்வார். ஒரு ஆராதனையின் நடுவில், எந்த அடையாளமும் இல்லாமல், இரண்டு டீக்கன்களும் ஒன்றிணைந்து சபையை பிரிக்கப் போகிறார்கள் என்பதை நான் உண்மையில் அறிவித்தேன் என்பது அவர்களுக்குத் தெரியும். மேலும் அவர்களை சமரசம் செய்ய மக்கள் வெகுதொலைவில் இருந்து வருவார்கள் ஆனால் அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள். அங்கு நிலவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்தால் யாரும் என்னை நம்பவில்லை. மேலும், மூத்த டீக்கன் சொசைட்டி டெஸ் டிரான்ஸ்போர்ட்ஸ் டி'அபிட்ஜானில் பணிபுரிந்ததால் அதைச் செய்ய முடியவில்லை. அவரது நேரம் அவரை ஒரு போதகராக இருக்க அனுமதிக்காது. [ஆசிரியர் குறிப்பு: சொசைட்டி டெஸ் டிரான்ஸ்போர்ட்ஸ் டி'அபிட்ஜான் என்பது அபிட்ஜானின் போக்குவரத்து நிறுவனம்"]
20 மேலும் அவர்கள் சபையை பிரிக்கும் முயற்சியில் தூரத்தில் இருந்து வருபவர்கள் என்று பாஸ்டர் டேவிட் கூறினார். பின்னர், மூத்த டீக்கன் போக்குவரத்து நிறுவனத்தில் தனது வேலையை இழந்தார். மேலும் இரண்டாவது டீக்கனின் உதவியுடன், அவர் சபையை பிரித்து பாஸ்டரானார். ஐவரி கோஸ்ட்டின் பிரான்ஹாமிஸ்டுகளின் பொது ஆலோசனைக் குழுவான CACI, இந்த பிரிவைத் தடுக்க முயன்றது, ஆனால் அவர்கள் வெற்றிபெறவில்லை. மேலும் சபை பிளவுபட்டது. பாஸ்டர் டேவிட் சபையின் ஒரு பகுதியுடன் சென்றார்.
21 ஒருமுறை கூட தோல்வியடையாத பல தரிசனங்களை நான் கொண்டிருக்கிறேன். தரிசனங்களின் அடிப்படையில், ஆப்பிரிக்கர்களின் கருப்பு தோலின் தோற்றத்தை நான் வெளிப்படுத்தினேன். சோதோம் மற்றும் கொமோராவின் அழிவுக்கு முன் என்ன நடந்தது என்பதை நான் கண்டேன். யூதாஸ் காரியோத் எப்படி தாண் கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கிறான் என்பதை தேவதூதன் எனக்கு வெளிப்படுத்தியபோது, நான் இணையத்தில் தேடினேன், எல்லா இடங்களிலும் யூதாஸ் காரியோத் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்று கூறியது. அந்த விதத்தில், நான் சிந்திக்க வேண்டுமா? மற்றும் என்ன சொல்ல வேண்டும்?
22 வேதாகமத்தின் அடிப்படையில் நீங்கள் தூய்மையான மற்றும் நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்து இரட்சிக்கப்பட முடியாது என்று விசுவாசிக்கிற ஒரு மனிதன் நான். இஸ்லாம், இந்து மதம், புத்த மதம், சமண மதம், ஷின்டோயிசம், சீக்கிய மதம், கன்பூசியனிசம், தொள மதம் மற்றும் பஹாய் மதத்தை விட கிறிஸ்தவம் சிறந்தது அல்ல, ஏனென்றால் அவை அனைத்தும் ஒரே சாத்தானுக்கு சேவை செய்கின்றன. ஒரு தரிசனத்தின் மூலம் நான் தேவனிடம் வந்தேன், தரிசனங்களின் மூலம் நான் தேவனுடைய சித்தத்தைச் செய்வேன். நான் படித்த புனித நூல்கள் எனப்படும் எல்லாவற்றிலும் நான் இதைப் பார்த்திருக்கிறேன்.
23 தரிசனங்களைப் பற்றி பேசுகையில், நான் காக்குவ் 151-இல் தெரிவித்த தரிசனம் திருச்சபைக்கு ஒரு முக்கியமான தரிசனமாகும். அந்த அத்தியாயத்தில் உள்ள பாலும் தேனும், பாலும் தேனும் பாயும் நிலமான கானானுக்கு இஸ்ரவேல் அணிவகுப்பின் இரண்டு கூறுகளாகும். மேலும் என்னுடைய நாளில், கர்த்தராகிய இயேசுவின் காலத்தின் உள்ள பரிசேயர், யூதமத துறவிகள், யூதமார்கத்தமைந்த கிரேக்கர்கள் மற்றும் சதுசேயர் ஜெப ஆலயங்களான பழைய கல்லறைகள் அழிக்கப்பட்டன. அந்த கல்லறைகள் இப்போது கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷ மற்றும் பிரான்ஹாமிஸ்ட் சபைகளாக இருக்கிறது.
24 பரலோகத்திற்குச் செல்லும் இந்த தரிசனத்தில், நான் பார்த்தபோது, இதோ, எனக்கு முன்னால், என் வழியில், ஒரு வெட்டவெளியில், வெள்ளை அங்கி அணிந்த மக்கள், பரலோகங்களின் வாசல் வரை சென்ற பாதையில் வரிசையாக நடந்து செல்வதைக் கண்டேன். மேலும் திரளான ஜனங்கள் பரலோகங்களின் வாயிலுக்கு முன்பாக நின்றார்கள். மேலும் பரலோகங்களின் வாயில் ஒரு வெள்ளை மேகத்தால் சூழப்பட்டிருந்தது. அவர்கள் இடதுபுறமோ வலதுபுறமோ அல்லது பின்பக்கமோ பார்க்காமல் அமைதியாக இருந்தார்கள். மேலும் அவர்களின் பாதை பள்ளங்களால் சூழப்படவில்லை. மேலும் என் சத்தம் அவர்களை சென்றடைய முடியவில்லை. நான் ஒரு கதவு போல இருந்தேன், சில சமயங்களில் பின்னால் இருந்து ஒரு நபர் வந்து என்னுடாக கடந்து செல்வார், அவருடைய ஆடை வெள்ளை அங்கியாக மாறியது, அவர் உடனடியாக வெட்டவெளிக்குள் சென்று முன் குழுவில் சேர்ந்துகொள்வார்.
25 பின்னர், எனக்குப் பின் வெகு துரத்தில், மற்றொரு ஒழுங்கீனமான குழு இருந்தது. மேலும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு உடைகளை அணிந்துகொண்டு சத்தம் போட்டுக்கொண்டும், சலசலத்துக் கொண்டும் இருந்தனர். மேலும் அவர்கள் பள்ளத்தின் குறுக்கே செல்லுமாறு என்னைத் தொல்லைப்படுத்தினர், ஏனென்றால் அவர்களுக்குப் பின்னால் இருந்து நான் இருக்கும் இடம் வரை, அந்த பாதையானது ஒடும் தண்ணீரினால் தோண்டப்பட்ட இரண்டு பள்ளங்களால் எல்லையாக இருந்து. வரிசையில் தரித்திருக்க அவர்களுக்கு உதவ சாத்தியமில்லாததை போல் இருந்தது. மேலும் அவர்கள் நிமித்தம், நான் முன் குழுவில் சென்று சேரவில்லை.
26 ஒரு போதகரின் மனைவியான ஒருவர் பள்ளத்தைக் கடக்க குதித்ததைக் கண்டேன். பள்ளத்தின் பின்னால், ஒருபுறத்தில், கதவுகளைத் திறந்த நிலையில் தொடர் பாவம் செய்பவர்களும், மறுபுறம், உலகின் பிற பகுதியினர் ஒரு பெரிய சிறைச்சாலையில் இருந்தனர், அதன் கதவு திடமான இரும்புக் கதவு. அவர்கள் வெளியே வருவதற்காக நான் சிறையின் இரும்புக் கதவைத் திறந்தேன், ஆனால் அவர்கள் வெளியே வரவில்லை, ஏனென்றால் அவர்கள் பைத்தியக்காரர்கள் போல இருந்தனர். அவர்கள் அனைவரும் பணம் மற்றும் பண மந்திரத்தின் மொழியை பேசினார்கள்
27 இந்தத் தரிசனம் உறுதியானதும் உண்மையுமானது. பரலோகத்திற்கான நடைப்பயணத்தில், புத்தியில்லாத கன்னிகளுக்கு வெள்ளை ஆடைகள் இல்லை. வெள்ளை அங்கி அணிந்த பத்து கன்னிகைகள் ஒன்றாக நடப்பது போன்று நாம் எல்லா இடங்களிலும் பார்க்கும் படங்கள் மற்றும் வீடியோக்கள் சாத்தானின் பொய்கள். மேலும் ஒரு தீர்க்கதரிசி பூமியை விட்டு கடக்கும் போது, பரலோகத்தின் கதவு மூடப்படும், ஏனென்றால் அவரே பரலோகத்தின் கதவு.
28 அவர்கள் தீர்க்கதரிசினுடாக கடந்து செல்லும்போது, புத்தியுல்ல கன்னிகைகள் கலியாண வஸ்திரத்தையும் தீர்க்கதரிசியில் இருக்கிற அவருடைய ஆவியையும் பெற்றார்கள். மேலும் தீர்க்கதரிசி மரிக்கும் போது, தீர்க்கதரிசி அவர்களுடன் சேருவார். தீர்க்கதரிசியினுடாக கடந்து சென்ற அனைவரும் அவருடைய கூட்டத்தில் இரட்சிக்கப்படுகிறார்கள், மேலும் அந்த தீர்க்கதரிசியின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட சீர்குலைவில் கூட இனி இரட்சிப்பை இழக்க முடியாது. அவர்கள் எடுத்துக்கொள்ளப்படுதல் மற்றும் நித்தியத்தின் பரிமாணத்தில் உள்ளனர்.
29 தீர்க்கதரிசி பூமியில் உயிரோடிருக்கும்போது அந்தத் தீர்க்கதரிசியினுடாக கடந்துபோகாத அனைவரும் இந்தத் தீர்க்கதரிசியுடன் முதல் உயிர்த்தெழுதலில் இருக்கமாட்டார்கள். மேலும் தீர்க்கதரிசியின் மரணத்திற்குப் பிறகு வரப்போகும் சீர்கேடுகளுக்குக் காரணகர்த்தாவாகவோ அல்லது பாத்திரமாகவோ இருந்தால் அவர்கள் புத்தியில்லாத கன்னிகள் என்ற நிலையையும் விட்டுவிட்டு நரகத்திற்குச் செல்வார்கள்.
30 முன்னால் இருந்த குழு மிகவும் அமைதியாக இருந்தது, அது பூமியில் மகிழ்ச்சியாக இல்லாத மக்களால் ஆனது என்று எனக்குத் தோன்றியது. மற்றும் அவர்களின் தோற்றம் கிட்டத்தட்ட பரிதாபமாக இருந்தது. அவர்கள் அனைவரும் வெள்ளை ஆடை அணிந்திருந்தனர், எனக்குப் பின்னால் இருந்த குழுவில் சிலர் முஸ்லீம்களாகவும், மற்றவர்கள் வெவ்வேறு விதமாகவும் அணிந்திருந்தனர்.
31 குதித்த பெண் ஒரு போதகரின் மனைவியாக இருக்கலாம், ஆனால் குறிப்பாக ஒரு சபையாக உள்ளது. எனவே, ஒரு போதகர் அல்லது ஒரு அப்போஸ்தலன் பிசாசின் பிள்ளையாக, பணத்தின் சீடனாக இருக்கலாம். மேலும் ஒரு போதகரின் மனைவி அஞ்ஞானியாக இருக்கலாம். மேலும் ஒரு சபை செய்தியின் ஆவியில் இல்லை என்றால், தேவன் உங்களை அங்கே இருக்க அனுமதிக்கிறார் ஆனால் வேரு ஒரு ஆவியுடன் இருப்பீர்கள், ஆனால் எங்கு செல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால். செய்தியின் எல்லைக்குள் ஒரு போதகர் அல்லது தலைவரை மதிக்கவும் ஆனால் அவரை ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
32 பல பிரான்ஹாமிஸ்ட் சபைகளின் கூட்டங்களுக்குச் செல்வதை எனது பிரான்ஹாமிஸ்ட் போதகர் தடை செய்தார். அவர் உட்பட முழு சபையும் செல்லவில்லை, ஆனால் நான் சென்றேன். அவருடைய சபையில் இருந்து கொண்டு, எங்களுக்கு ஆராதனை இல்லாதபோது வேறு பிரான்ஹாமிஸ்ட் சபைகளின் ஆராதனைக்கும் அடிக்கடி சென்றேன். எல்லாருடனும் எனக்கு சகோதர ஐக்கியம் இருந்தது. நவம்பர் 1993 முதல் எனது ஊழியத்தின் தொடக்கத்திற்காக மார்ச் 2002-ல் நான் அவர்களை விட்டு வெளியேறும் வரை, அவர் தனது சபையில் மிகச்சிறிய பதவியை கூட வகிக்க என்னை அனுமதிக்கவில்லை. சாத்தானின் பாஸ்டருடைய தயவைப் பெற, ஒருவர் அவரை ஒரு தீர்க்கதரிசியாகப் பார்க்க வேண்டும் மற்றும் அவரது சீஷராக அவரைப் பின்பற்ற வேண்டும்.
33 என் வாழ்நாள் முழுவதிலும், நான் ஒருபோதும் பாசாங்குத்தனத்தோடும் செல்வாக்கோடும் செயல்பட்டதில்லை. மாய்மாலம் என்பது பிசாசின் புத்திரர்களின் வேலை. பிசாசின் புத்திரனின் ஆத்துமா என்னிடம் இல்லை. நாம் மாய்மாலத்தின் காலத்தில் இருக்கிறோம், பரிசுத்த ஆவியானவர் ஒரு மாய்மாலக்காரனின் ஆத்துமாவில் வசிக்க முடியாது, ஏனென்றால் பாஸ்டர் அல்லது அப்படிப்பட்டவர்கள் செய்வது சரியல்ல என்று பரிசுத்த ஆவி அவரிடம் கூறும்போது அவர் அமைதியாக இருப்பார். ஒரு பிசாசின் புத்திரன் தன்னுடைய ஆத்துமாவில் மாய்மாலத்தை கொண்டிருப்பான் மற்றும் மாய்மாலம் நரகத்திற்கு வழிநடத்துகிறது.
34 ஒவ்வொரு பாவத்திற்கும் பூமியின் மீது செலுத்தப்படுகிறது. உங்கள் வாழ்நாளில் நீங்கள் செய்த ஒவ்வொரு பாவத்திற்கும் நீங்கள் செலுத்தத் தொடங்குவீர்கள். நான் பல நோய்களையும் துன்பங்களையும் சந்தித்திருக்கிறேன், அவற்றின் தோற்றம் எப்போதும் அந்த நபர் அல்லது அவரின் மனைவி அல்லது அவர்களின் பெற்றோரின் பாவமாக இருக்கும். உங்களுக்கு தீராத நோய் அல்லது துன்பம் ஏற்பட்டால், நீங்கள் புண்படுத்திய அனைவரிடமும், நீங்கள் விபச்சாரம் செய்த அனைத்து பெண்களின் கணவர்களிடமும் மன்னிப்பு கேட்பதன் மூலம் தொடங்குங்கள். 2002-ஆம் ஆண்டு முதல், லூக்கா 17:30-ன் படி, நான் பொதுவான பாவ அறிக்கையை மீண்டும் நிறுவியுள்ளேன், இது தான் ஒவ்வொரு மனிதனின் பாவங்களின் பரிகாரத்திற்காக நம் காலத்தில் தேவன் வழங்கிய வழி.
35 இன்று மனிதகுலத்தின் இரட்சிப்பிற்க்கான ஒரே வழி எனது செய்தி. ஒவ்வொரு மதத் தலைவரும் எனது செய்தியை எதிரொலிக்க வேண்டும், ஆனால் அவர்கள் மரித்த தீர்க்கதரிசிகளைப் பின்பற்ற விரும்புகிறார்கள், ஆகையால் அவர்கள் எதற்கும் கவலைப்படாமல் அந்த மரித்த தீர்க்கதரிசியின் செய்தியை விருப்பத்திற்க்கேற்றார்போல் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். மேலும் அவர்களுடைய செய்தியிலிருந்து ஆயிரம் கிளைகள் தோன்ற வேண்டும் என்றால், அவர்கள் கவலைப்படுவதில்லை. அந்த மதத் தலைவர்கள் தங்கள் மதங்களின் புனித புத்தகங்களை கொண்டு என்ன செய்கிறார்களோ அதைத்தான் பிரான்ஹாமிஸ்டுகள் வில்லியம் பிரான்ஹாமின் செய்தியுடன் தங்கள் மனசாட்சியைத் தொந்தரவு செய்யாமல் செய்கிறார்கள்.
36 அவர்கள் என்னை நிராகரித்து, தேவனுக்கு ஊழியம் செய்வதாக உரிமை கோருகின்றனர். ஒரு ஆசாரியன் ஒரு மனிதனை தேவனிடம் வழிநடத்த முடியுமா? அது எந்த வேதாகமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? 300 ஆண்டுகளில், நீங்கள் பூமியில் இருந்ததை மனிதகுலம் அறியாது. உங்கள் நினைவுடன் நீங்கள் அனைவரும் மறைந்து விடுவீர்கள். மேலும் என்னுடைய செய்தியின் மூலமாக மனிதகுலம் அதை அறியும். உதாரணமாக, காங்கோ-பிராசாவில்லியில் உள்ள ஓஸ்ஸோவில், தேவ வார்த்தையின் நிமித்தமாக, தாமஸ் போயூ என்ற சாத்தானின் போதகர் மற்றும் அவரது பிரான்ஹாமிஸ்ட் தேவாலயமான லோகோஸ் டேபர்னாக்கிள், அப்போஸ்தலன் ஸ்டீபன் பாம்பி உட்பட என்னுடைய சீஷர்கள் பலரைச் சிறையில் தள்ளினார்கள் என்பதை மனிதகுலம் அறியும்.
37 வில்லியம் பிரன்ஹாம் ஒருபோதும் காவல்துறையை அழைத்ததில்லை, ஆனால் அவரது செய்தியில் உள்ள போதகர்கள் தங்கள் கோவிலுக்கு அருகில் யாராவது பிரசங்கிக்கும்போது காவல்துறையை அழைக்கிறார்கள். இன்னுமாக, ஒரு சபையின் முன் பிரசங்கம் செய்வது என்பது ஒரு கிறிஸ்தவக் கோட்பாடு. திருச்சபையின் வரலாற்றில், கிறிஸ்தவர்கள் எப்போதும் சபைகளுக்கு முன்னால் பிரசங்கித்துள்ளனர், மேலும் ஒரு கத்தோலிக்க சபையின் வாசலில் தான் லூதர் தனது 95 ஆய்வறிக்கைகளை வைத்தார். மேலும் ஒரு நாள் ஜான் வெஸ்லியின் சீஷர் ஒரு லூத்தரன் சபையின் முன் பிரசங்கம் செய்தால், லூத்தரன்கள் எப்படி காவல்துறையை அழைக்க முடியும்? உலகில் எதோ ஒன்றிற்காக யாரையாவது சிறையில் அடைத்துவிட்டு, சுத்த மனசாட்சியோடு தேவனை ஆராதிக்க நான் போவதில்லை. ஒரு தேவனுடைய குமாரன் இந்த திறனை கொண்டிருப்பதில்லை.
38 மேலும் ஒரு பிரான்ஹாமிஸ்ட் போதகரின் அனைத்து பரிசுத்தமும்: "20 வருட திருமண வாழ்க்கை, 20 வருட விசுவாசம்". இன்னுமாக அவர்கள் அனைவரும் பன்றி வளர்ப்பவர்களாகவும் அவர்களின் சபைகள் பாவங்களின் பன்றி குட்டிகளாக இருக்கிறது. ஒருவனுடைய மனைவிக்கு உண்மையாக இருக்க, குடிகாரர்களும், சிகரெட் பிடிப்பவர்களும் உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? உங்கள் லூயிஸ் செகோண்ட், கிங் ஜேம்ஸ் மற்றும் ஸ்கோஃபீல்ட் வேதாகமங்கள் மற்றும் மற்றவைகளை பற்றி என்ன? கால்பந்து மற்றும் நீங்கள் பார்க்கும் திரைப்படங்கள் பற்றி என்ன? உங்கள் தூக்கத்தில் நீங்கள் அமுக்கப்படுவது மற்றும் பாலியல் கனவுகள் மற்றும் நீங்கள் கொண்டிருக்கும் பிற விஷயங்கள் பற்றி என்ன?
39 மனைவிக்கு உண்மையாக இருப்பது, அதுவே உங்கள் பரிசுத்தம் என்றால், ரோம போப்பிற்கு தீர்க்கதரிசியான மோசே என்ன பரிசுத்தத்தை கற்பிப்பார்? கான்வென்ட் மற்றும் மடங்களில் இருக்கும் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளுக்கு உங்கள் பெண்கள் என்ன பரிசுத்தத்தை கற்பிப்பார்கள்? நீங்கள் வெளிப்படையான பாவ அறிக்கையை நிராகரித்து, "நீதிமொழிகள் 28:13-ன்று தன் பாவங்களை மறைப்பவன் வாழ்வடைய மாட்டான் ஆனால் அவற்றை அறிக்கையிட்டு விட்டுவிடுகிறவன் இரக்கம் பெறுவான்" என்று கூறும்போது, அது வெளிப்படையான பாவ அறிக்கையாக இல்லாவிட்டால் இது எப்படி சாத்தியமாகும்?
40 தம்பதிகளின் மத்தியில் இன்று தேவன் கேட்கும் பரிசுத்தம் என்னவென்றால், கர்ப்ப காலத்தில் அல்லது மாதவிடாய் நின்ற பிறகு, உடலுறவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று பிரசங்கிக்க வேண்டும். மாறாக, உங்கள் சொந்த மனைவியை அணுகாமல் நீங்கள் எவ்வளவு காலம் சென்றீர்கள் என்று பிரசங்க மேடையில் இருந்து அறிவிக்கவும்.
41 லத்தீன் அமெரிக்காவில், சேவியர் பெரெஸ் என்ற மனிதனும் மற்றும் அவரது மனைவி லூபிடாவும் முழு மனதுடன் தேவனைத் தேடினார்கள். மரித்த மோசேயால் பரிசேயர்களைக் இரட்சிக்க முடியவில்லை என்றால், மரித்த தீர்க்கதரிசியால் இன்று யாரையும் இரட்சிக்க முடியாது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். எனது செய்தியைக் கண்டதும், நான் ஒரு கருப்பு ஆப்பிரிக்கன் என்றாலும் அவர்கள் என்னை விசுவாசித்தார்கள். அவர்களின் பரிசுத்தத்திற்க்காக, அவர்கள் ஞானஸ்நானம் பெற்ற பிறகு உடலுறவைத் தவிர்க்க முடிவு செய்தனர். இப்போது அவர்கள் ஞானஸ்நானம் பெற்று ஒரு வருடம் மற்றும் மூன்று மாதங்கள் ஆகியும் அவர்கள் ஒருவரையொருவர் அறியவில்லை.
42 நல்லது. பிரான்ஸிலிருந்து கைத்தடியை பெற்றபோது, “உங்கள் மக்களின் தலைவன் சாகும்வரை இதைத் அலமாரியில்” என்று ஒரு நீல நிற அட்டையை ஒரு தூதன் என்னிடம் கொடுப்பதை நான் ஒரு தரிசனத்தில் பார்த்தேன். இந்த கைத்தடி ஹேசல் மரத்தில் செய்யப்பட்டது. ஐவரி கோஸ்ட்டின் ஹேசல் மரம் மிகவும் கடினமான மரம் மற்றும் அதன் கொட்டைகளை மனிதனுடைய பற்களால் உடைக்க இயலாது.
43 அதற்குப் பிறகு, ஜூன் 5, 2022 அன்று காலை, எனது முதல் பயணமாக காங்கோ-கின்ஷாசாவுக்குச் செல்வதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோது, எனக்கு இன்னொரு தரிசனம் கிடைத்தது. ஒரு தூதன் என் வலதுபுறத்தில் மேகக்கூட்டத்தில் தோன்றி, "நீ தென்னாப்பிரிக்காவுக்குப் போவாய்" என்று கூறினார். நான் அவரைப் பார்ப்பதற்குள் உடனடியாக மறைந்துவிட்டார். அப்போஸ்தலரான அமன் மார்ட்டின் இந்த தரிசனத்தில் இப்படியாக கூறினார், "ஆ, ஆமான் இறந்துவிட்டார்!" தரிசனம் மறைந்தது.
44 மேலும் இது போன்ற பல வெளிப்பாடுகள் மூலம், வில்லியம் பிரன்ஹாம் சந்ததியினரின் தலைவர் எவால்ட் ஃபிராங்க் என்பதை நான் புரிந்துகொண்டேன். இன்று, வில்லியம் பிரான்ஹாமின் சந்ததியினர் இஸ்ரவேலைப் போலவும், எவால்ட் ஃபிராங்க் அதன் ராஜாவாகவும் உள்ளார். மேலும் மத்தேயு 25:-6ன் படி நான் இந்த மக்களுக்கு தீர்க்கதரிசியாக அனுப்பப்பட்டேன். வில்லியம் பிரான்ஹாமின் இந்த மக்களுடன் நான் 1993-இல் இருந்து 2002 வரை இருந்தேன். மேலும் இந்த தரிசனங்கள் நான் எவால்ட் ஃபிராங்கைப் பார்க்கும் விதத்தை மாற்றிவிட்டன. எனது கடைசி மகனுக்கு காக்குவ் ஃபிராங்க் எவால்ட் என்ற பெயரைக் கொடுத்தேன்.
45 1993-ன் தரிசனங்களுக்குப் பிறகு, நான் ஞானஸ்நானம் பெறாமல் பல சுவிசேஷ சபைகளுக்குச் சென்றேன். மேலும் நான் அவற்றில் ஒன்றில் கூட மூன்று மாதங்களுக்கு மேல் செலவிடவில்லை. ஆனால் நவம்பர் 1993-இல் வில்லியம் பிரான்ஹாமின் செய்தியை நான் கண்டதிலிருந்து, 2002-இல் எனது ஊழியத்தின் ஆரம்பம் வரை நான் அங்கேயே இருந்தேன். மேலும் இன்று வரை எனது ஊழியம் முழுவதும், எனது சொந்த செய்தியுடன் எனது சொந்த தரிசனத்தைப் பின்பற்றும் போதும் மோசேக்குப் பிறகு யோசுவாவைப் போல வில்லியம் பிரான்ஹாமின் செய்திக்கு உண்மையாக இருந்தேன்.
46 யோசுவாவைப் போல, வில்லியம் பிரன்ஹாம் பிரசங்கித்த எல்லாவற்றிலிருந்தும் நான் இடதுபுறமோ வலதுபுறமோ திரும்பவில்லை. வில்லியம் பிரான்ஹாமின் அஸ்திவாரத்தின் மீது தான் நான் கட்டியுள்ளேன். மத்தேயு 24:27-ன் மற்ற பாதியான மாற்கு 13:35-ன் படி, வில்லியம் பிரன்ஹாம் இன்று பூமியில் ஒரு ஆப்பிரிக்க சரீரத்தில் இருந்திருந்தால் நான் பிரசங்கிக்கும் அனைத்தும் தான் அவர் பிரசங்கித்திருப்பார்
47 இப்படியிருக்க, வில்லியம் பிரான்ஹாமின் ஜனம் 1993 முதல் 2002 மட்டும் எனது ஊழியத்தின் ஆரம்பம் வரை எனது ஜனமாக இருந்தனர், ஏனென்றால் தீர்க்கதரிசிகளின் வெளிச்சப்பந்தம் அங்கே இருந்தது. யோசேப்பு அங்கே விட்டுச் சென்ற தீர்க்கதரிசிகளின் வெளிச்சப்பந்தத்தை எடுக்க மோசே பார்வோனின் வீட்டில் இருந்தான். கர்த்தராகிய இயேசுவும் கூட மோசே மற்றும் தீர்க்கதரிசிகளின் வெளிச்சப்பந்தத்தின் காரணமாக யூதர்களுடன் தங்கள் கோவில்களிலும் சாத்தானின் ஜெப ஆலயங்களிலும் தேவனை ஆராதித்தார், அதனால்தான் யூதர்கள் தங்கள் பிரசங்க பீடங்களை அவரிடம் விட்டுவிட்டார்கள். ஒவ்வொரு உண்மையான தீர்க்கதரிசியும் எப்போதும் அதைச் செய்திருக்கிறார்கள்.
48 லூக்கா 4:16-இல் “இயேசு தம் வழக்கப்படி ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குள் பிரவேசித்தார்.” என கூறுகிறது. மேலும் இப்போது அவர் வெளிச்சப்பந்தத்தை கொண்டிருந்த போது, அவர் இனி ஒரு போதும் அங்கே செல்லவில்லை, அவருடைய மொழியானது: "பரிசேயர்களே, சதுசேயர்களே, விரியன் பாம்புக் குட்டிகளே!" வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே! ", என்றிருந்தது.
49 தமஸ்குவுக்கு செல்லும் வழியிலான தரிசனத்திற்குப் பிறகு, பவுல் முதலில் சென்று அப்போஸ்தலர்களிடம் கர்த்தராகிய இயேசுவானவர் விட்டுச்சென்ற வெளிச்சப்பந்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவன் அதை எடுத்துக்கொண்டதும், பேதுருவையும் அப்போஸ்தலர்களையும் கடிந்துகொள்ள ஆரம்பித்தான். இது ஒரு தெய்வீக சட்டம். எனக்கு பிறகு எனது செய்திக்கு வராமல் மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மீட்டளிப்பின் ஞானஸ்நானம் பெறாமல், ஒரு தீர்க்கதரிசி என்பவன் எழமுடியாது.
50 ஒரு மனிதன் ஒன்றுமில்லாமல் வந்தாலும் அல்லது தந்தை இல்லாமல் பிறந்தாலும்,அவன் எப்போதும் ஒரு ஜனக்கூட்டம் மற்றும் பழங்குடியினருடன் அடையாளம் காணப்படுகிறான். மேலும் இது சரீர மற்றும் ஆவிக்குரிய இரண்டுக்கும் இருக்கிறது. முறையாக பிறந்த ஒரு மகனுக்கு உறவினர் உண்டு. மேலும் ஒரு தீர்க்கதரிசியின் முழு வாழ்க்கையும் கடவுளின் வார்த்தையாக இருக்கிறது.
51 கடவுள் தம்முடைய தீர்க்கதரிசிகளை பூமியிலிருந்து நீக்குகிறார், ஆனால் வெளிச்சப்பந்தத்தையோ, இராஜ்யத்தின் திறவுகோல்களையோ அல்லது தீர்க்கதரிசியின் மீது இருந்த ஆவியையோ ஒருபோதும் நீக்குவதில்லை. மேலும் மற்றொரு தீர்க்கதரிசிக்காக காத்திருக்கும் போது, கடவுள் இராஜ்யத்தின் திறவுகோலை மரித்த தீர்க்கதரிசியின் சீடரான மத்தேயு 24:45-ன் ஒருவரிடம் விட்டுவிடுகிறார். மேலும் ஒரு நாள் என் செய்தியிலிருந்து ஒரு தீர்க்கதரிசி அல்லது யாராவது ஒருவர் இங்கு வந்து, ஞானஸ்நானம் பெற்று நான் இங்கே விட்டுச் சென்ற வெளிச்சப்ந்தத்துடன் வெளியே வருவார். ஒரு கருத்து திருடன் அதைச் செய்வதில்லை.
52 மேலும் அவரது செய்தியை விநியோகிப்பதற்காக ஒருவரின் கைகளில் கொடுப்பது என்பது அதுவே வெளிச்சப்பந்தம் மற்றும் நம்பிக்கையின் உச்சம். அது அவருடைய மகன் ஜோசப்பிற்கு கொடுத்த வேதாகமத்திற்கு அப்பாற்பட்டது.
53 வெளிச்சப்பந்தம் அல்லது இராஜ்ஜியத்தின் திறவுகோல்கள் எப்பொழுதும் பூமியில் முந்தைய தீர்க்கதரிசியுடன் இருந்த ஒரு மனிதனின் கையில் இருந்தது. வில்லியம் பிரன்ஹாம் "ஆவிக்குள் நுழைதல்" என்ற துண்டுப் பிரசுரத்தில், குறிப்பு 12: “கடவுள் ஒரு மனிதனுடன் கிரியை செய்யும் போது, மற்றொருவர் காத்திருப்பில் கொண்டிருக்கிறார். மேலும் கடவுள் தம் மனிதனை பூமியிலிருந்து எடுக்கிறார், ஆனால் அவரது ஆவியை ஒருபோதும் எடுப்பதில்லை. அவர் தனது ஆவியை அவன் மீது வைக்கும்படியாக அவர் எப்போதும் பூமியில் மற்றொருவரைக் கொண்டிருந்தார், ."
54 பவுல் வருவதற்கு முன்பாக இயேசுவிடம் பேதுரு என்னவாக இருந்தாரோ அவ்விதமாக நான் வருவதற்கு முன்பு, எவால்ட் ஃபிராங்க் வில்லியம் பிரன்ஹாமுக்காக இருந்தார்; எப்படி ஜான் கால்வின் வருவதற்கு முன்பு லூதருக்கு மெலக்த்தான் என்னவாக இருந்தாரோ. ஆனால் அது பேதுருவையோ அல்லது மெலத்தானையோ ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனாக மாற்றவில்லை. மேலும் அதுதான் எவால்ட் ஃபிராங்கினுடைய தவறாக இருந்தது.
55 2002 முதல், வில்லியம் பிரன்ஹாமின் இந்த மக்களைப் பற்றியும் அதைச் சுற்றியுள்ள நாடுகளைப் பற்றியும் நான் தீர்க்கதரிசனம் சொல்லி வருகிறேன். எவால்ட் ஃபிராங்க் நல்லவராக இருந்தாலும் சரி கெட்டவராக இருந்தாலும் சரி, இன்று ஆவிக்குரிய இஸ்ரவேலின் ராஜாவாக இருக்கிறார். மேலும் கிறிஸ்துவின் மணவாட்டி நடுராத்திரி சத்தத்துக்கு முன் பிரகாசிக்கபபட்டிருந்தால், அது வில்லியம் பிரன்ஹாமின் செய்தியால் தான், எவால்ட் ஃபிராங்கிற்கு நன்றி. எவால்ட் ஃபிராங்காக இல்லாவிட்டால், வில்லியம் பிரன்ஹாமின் செய்தியை பூமி அறிந்திருக்காது.
56 வில்லியம் பிரன்ஹாம் மரித்தவுடன், எவால்ட் ஃபிராங்க் வில்லியம் பிரன்ஹாமின் துண்டுப் பிரசுரங்களை மொழிபெயர்த்து உலகம் முழுவதும் அனுப்பவும் பயணம் செய்யவும் தொடங்கினார். அப்போதுதான், உலகம் முழுவதும் விசுவாசிக்கிறவர்களை கண்டு, பில்லி பால் மற்றும் ஜோசப் பிரன்ஹாம் ஆகியோரும் 1980களில் தங்கள் தந்தை வில்லியம் பிரன்ஹாமின் துண்டுப் பிரசுரங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர்.
57 எனவே எனது ஊழியத்திற்கு முன்பே, கடவுளைத் தேடிய அனைவரும் ஏற்கனவே தங்கள் கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை விட்டு வெளியேறி, வில்லியம் பிரன்ஹாமின் செய்தியில் கூடி, எவால்ட் ஃபிராங்கிற்கு நன்றி செலுத்தினர். எவால்ட் ஃபிராங்கிற்கு எதிராகப் பேசும் வில்லியம் பிரன்ஹாமின் செய்தியை விசுவாசிக்கிற எந்தவொரு விசுவாசியும் ஒரு கலகக்கார மற்றும் நன்றியற்ற வளர்ப்பு மகனாக இருக்கிறான். குடிகாரனாக மாறிய ஒரு தந்தை கூட தனது அடையாளத்தையும், கண்ணியத்தையும், ஒரு தந்தை என்ற மரியாதையையும் காத்துக் கொள்கிறான்
58 நான் எவால்ட் ஃபிராங்கைக் கண்டனம் செய்திருந்தால், அது அவருடைய கோட்பாடுகள் மற்றும் வில்லியம் பிரன்ஹாமின் துண்டுப்பிரசுரங்களுக்குப் பதிலாக அவர் விநியோகித்த அவரது சொந்த துண்டுப்பிரசுரங்கள் மற்றும் சுற்றறிக்கை கடிதங்கள் ஆகியவற்றின் காரணமாக ஒரு தீர்க்கதரிசியாக இருந்தது. எவால்ட் ஃபிராங்க் மத்தேயு 24:45-ன் உண்மையுள்ள ஊழியனை நிறைவேற்றினார். பின்னர் அவர் மத்தேயு 24:48-ன் உண்மையற்ற ஊழியனைனையும் நிறைவேற்றினார். உண்மையுள்ள ஊழியக்காரனின் ஊழியம் துரோகமாக மாறியது தான் நடுராத்திர சத்தத்துக்கு முந்திய ஊழியம்.
59 வில்லியம் பிரன்ஹாமின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த அதே உண்மையுள்ள ஊழியக்காரரான எவால்ட் ஃபிராங்க் தான் மத்தேயு 24:48 இன் உண்மையற்ற அடிமையாக மாறினார், அவர் தனது சொந்த துண்டுப்பிரசுரங்களையும் சுற்றறிக்கைக் கடிதங்களையும் விநியோகித்தார்.
60 எவால்ட் ஃபிராங்க் வில்லியம் பிரன்ஹாமின் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் பணியை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. ஒரு பிரதானி அல்லது ஒரு அடிமையைப் போல, அவன் தனது எஜமான் சொன்னதை மட்டும் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது.
61 எஸ்தரின் புத்தகம் புறஜாதி தேசங்களின் மணவாட்டியின் வெளிப்பாடாக இருக்கிறது. பூமியில் உள்ள ஏழு பிதானிகளுக்கு பரலோகத்தில் ஏழு தூதர்கள் இருக்கிறார்கள், பிறகு ஹெகாய், பூமியில் எட்டாவது பிரதானியாக நடுராத்திரி சத்தத்துடன் வருகிறான், இது மெமுகானின் கட்டளை, அதே ஏழாவது பரலோக தூதனாவான்.
62 ஒரு விதவையைப் போன்ற பழைய பிரன்ஹாமிஸ்டு ராணியான வஸ்தி, அகாஸ்வேரு மன்னனின் மிகப் பெரிய வேலைக்காரனான ஹாமானான எவால்ட் ஃபிராங்குடன் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தாள். எனது ஊழியத்தின் தொடக்கத்திலிருந்தே, எவால்ட் ஃபிராங்க் யார் என்பதையும் அவருடைய துண்டுப்பிரசுரங்கள் மற்றும் சுற்றறிக்கை கடிதங்கள் மூலம் இஸ்ரவேலுக்கு அவர் செய்யப்போகும் அனைத்து தீங்குகளையும் நான் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தேன்.
63 அன்புள்ள எவால்ட் ஃபிராங்க், ஏப்ரல் 24, 1993-ன் தரிசனம் இருந்தபோதிலும், நித்தியத்திற்கான தேடலுக்காக நான் என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன், மேலும் இரட்சிப்பு என்பது ஒரு மனிதனுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஒரு தேவதூதனின் மூலம் கடவுள் செயல்படுவது என்பதை நான் புரிந்துகொண்டேன். மேலும் அந்த மனிதன் மரிக்கும் போது, கடவுள் இன்னொரு மனிதனை எடுத்துக்கொள்கிறார். உலகத்தின் முடிவு வரை அது ஒரு போதும் நிற்காது. வேதாகமத்திற்க்கு மக்களை வழிநடத்துவதற்குப் பதிலாக நீங்கள் கற்பிக்க வேண்டியது இதுதான். ஒவ்வொரு மதமும் அதைத்தான் போதிக்கிறது.
64 தனது ஆயிரமாவது மறுபிறவியில், அர்ஜுனன் உயிருள்ள கிருஷ்ணனை விட பகவத் கீதையை ஒருபோதும் விரும்ப மாட்டான். மேலும் ஷரிபுத்ரா உச்ச ததாகதாவான பகவத்தை விட தாமரை சூத்திரத்தை ஒருபோதும் விரும்ப மாட்டார். எல்லா மதங்களிலும், இறுதி நிர்வாணத்தை அடைய, உயிர் வாழும் தீர்க்கதரிசிகளின் பாதை மட்டுமே மனித இருப்புக்கான ஒரே தர்மமாகும். உங்களைப் போன்ற பொல்லாத வழிகாட்டிகள் மூலமாக தான் மனிதர்கள் அதிலிருந்து விலகுகிறார்கள்.
65 மேலும் உங்களின் ஏப்ரல் 2019 சுற்றறிக்கையில், "சகோதரர் பிரன்ஹாம், 'சாயங்கால நேரத்தில் வெளிச்சம் இருக்கும்' என்று சொன்னார்!, என்று கூறியுள்ளீர்கள்! இது நிறைவேறிவிட்டது. ஆனால் இப்போது நாம் நடுராத்திரியில் இருக்கிறோம். சகோதரர் பிரன்ஹாம் தனது பணி ஆணையை நிறைவேற்றினார்; நானும் எனது பணி ஆணையை நிறைவேற்றுகிறேன்”. இந்த கருத்திற்கு சாத்தான் உங்களிலிருந்து சிறப்பானதை பெறுவதற்கு நீங்கள் எவ்வாறு அனுமதிக்க முடியும்? அதை கர்த்தராகிய இயேசுவைப் பற்றி சீமோன் பேதுரு சொல்ல முடியுமா?
66 இப்போது, வில்லியம் பிரன்ஹாமின் பிரசங்கங்களுக்குப் பதிலாக, 1980-களில் இருந்து எவால்ட் ஃபிராங்கின் பழைய பிரசங்கங்கள் இணையத்திலும் கிரெஃபெல்டிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பப்படுகின்றன. பவுல் தீமோத்தேயுவிடம் வார்த்தையைப் பிரசங்கிக்கச் சொன்னார். ஆனால் பவுலின் மரணத்திற்குப் பிறகு பவுலின் நிருபங்களுக்குப் பதிலாக தீமோத்தேயுவின் சுற்றறிக்கை கடிதங்கள் இடம் பெருமா? பவுல் தீமோத்தேயுவிடம் வார்த்தையைப் பிரசங்கிக்கச் சொன்னபோது, பவுல் செய்தது போல் கொரிந்து, ரோமர் மற்றும் எபேசு ஆகிய இடங்களுக்கு சுற்றறிக்கை கடிதங்களை அனுப்புமாறு தீமோத்தேயுவுக்கு பவுல் கூறினார் என்று அர்த்தமா?
67 அன்புள்ள எவால்ட் ஃபிராங்க், நீங்கள் என் தந்தை, நான் உங்களிடம் அந்த மரியாதையுடன் தான் பேசுகிறேன். இந்த கடைசிக் காலத்தில் கிறிஸ்துவின் மணவாட்டிக்கு நீங்கள் நிறைய நன்மை செய்தீர்கள், ஆனால் அதன் பிறகு மணவாட்டிக்கு நீங்கள் அதிக தீங்கும் செய்துவிட்டீர்கள், மற்றும் உங்கள் மரணத்திற்கு முன் நீங்கள் மனந்திரும்பவில்லை என்றால், உசியா ராஜாவின் தொழுநோயுடன் கடவுளின் முன் தோன்றுவீர்கள்.
68 அன்புள்ள தந்தை எவால்ட் ஃபிராங்க், நீங்கள் பூமிக்கு நன்மை செய்த ஒரு வீரமான மனிதராக இருந்திருக்கிறீர்கள். உங்களைப் போன்ற ஒரு உலகப் பணியின் கனத்தை நான் அறிவேன், ஆனால் உங்களைச் சுற்றியுள்ள பொல்லாத பாஸ்டர்களும் பிரசங்கிகளும் 2 நாளாகமம் 26-ல் 80 இஸ்ரவேலின் ஆசாரியர்கள் உசியா ராஜாவுக்கு செய்தது போல் உங்களுக்கு உதவுவதற்குப் பதிலாக உங்களைப் போற்றுவதில் நேரத்தைச் செலவிட்டனர். அவர்களின் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தேவலாயங்களின் அளவு பற்றி மட்டுமே மகத்துவம் கொண்டிருக்கும் பாஸ்டர்கள். விரைவில் ஜெபர்சன்வில்லில் உள்ள பிரான்ஹாம் கூடாரம் உங்கள் கண்களுக்கு முன்பாக காக்குவ் 39: 20-ன் படி பிரான்ஹாம் தேவலாயமாக மாறும்.
69 உங்களுடைய நண்பர் அலெக்சிஸ் பாரிலியர் உங்கள் கவனத்தை ஈர்த்து, "... நீங்கள் மேடையில் இருந்து இறங்கி வணங்க தொடங்கி, பிரசங்கிகளின் கையைத் தொடும் வேளையில், நான் தொலைக்காட்சியில் போப் செய்ததை கண்டேன், அவை என் கண்களுக்குக் கீழே இருந்தது. அவர் தனது கார்டினல்கள் மற்றும் பிஷப்புகளுக்கு நடுவில் இறங்கியபோது, அவர்கள் அவரைச் சுற்றி திரண்டனர்..." இந்த முறையீட்டிற்கு நீங்கள் ஏன் செவிடாராக இருந்தீர்கள். உங்களுடைய கவனத்தை தேவன் எப்படி, யார் மூலம் ஈர்க்க வேண்டும்? நீங்களும் உங்கள் பாஸ்டர்-சீஷர்களும் நீங்கள் கேட்க விரும்பும் விஷயங்களை உங்களிடம் கூறுபவர்களுக்கு ஏன் எப்போதும் செவிசாய்க்க விரும்புகிறீர்கள்?
70 அன்புள்ள எவால்ட் ஃபிராங்க், தாண்கோத்திரத்திலிருந்து வந்தவர் யூதாஸ் இஸ்காரியோத். யூதாஸ் இஸ்காரியோத் தனது எஜமானரான இயேசுவைக் காட்டிக் கொடுத்தார், ஆனால் யூதாஸ் இஸ்காரியோத் மிகவும் வருந்தினார், அவர் சென்று தூக்கில் தொங்கிக் கொண்டார். யூதாஸ் இஸ்காரியோத்தில் உள்ள தாண்கோத்திரம் மீண்டும் மாற்றப்பட்டது மற்றும் அவனுடைய பெயர் மீண்டும் அழிக்கப்பட்டது. நீங்கள், நீங்கள் திருச்சபையை தவறாக நடத்தி, தூங்க வைக்க வேண்டும் ஆக நடுராத்திரி சத்தமான ஒலிக்கும், ஆனால் நாஷியின் இரத்தம் உங்கள் மீதும் விழுமா என்று வில்லியம் பிரான்ஹாமிடம் கேட்டதற்கு நீங்கள் ஒருபோதும் வருத்தப்படவில்லை. வில்லியம் பிரான்ஹாமிடம் இருந்து என்ன பதிலை எதிர்பார்த்தீர்கள்?
71 உங்களுடன் பேசுகிற நான், அமெரிக்காவில் கறுப்பின அமெரிக்கர்களைப் பார்க்கும்போது, யோசேப்பின் தந்தை யாக்கோபு மற்றும் அவர்களது சகோதரர்களைப் போல நான் சோகத்தாலும் குற்ற உணர்ச்சியாலும் வாடுகிறேன். அதைத் தவிர, நாங்கள் அவர்களை விற்றபோது, அவர்கள் எகிப்தியர்களைப் போல போகி-வூகி மற்றும் துதி பிரேக் நடனக் கலைஞர்களாக இருக்கக் கூடாது. பிறகு தேவன் அவர்களை யோசேப்பு போல எகிப்தின் மேல் எழுப்பியிருப்பார்.
72 இன்று, ஆப்பிரிக்கா துயரத்தில் உள்ளது. கடவுள் ஆப்பிரிக்காவை அதன் முழங்காலில் கொண்டு வந்தார். அந்த கறுப்பின அமெரிக்கர்க மூதாதையர்களின் அடிமைக் கப்பல்களில் மரிந்த மத்தியதரைக் கடல் இந்த அதே மத்தியதரைக் கடலில் உள்ளது, இந்த தீமையின் காரணமாக நாம் புலம்பெயருகிற கப்பல்களில் மரிக்கிறோம்.
73 நீங்களும் குற்றவாளியாக இருக்காமல் இருக்கவும், நாஷி இரத்தம் உங்கள் கைகளில் இல்லாமல் இருக்க சாத்தியமா? ஜெர்மனியில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில், நீங்கள் ஏற்கனவே பிறந்துவிட்டீர்கள், எனவே யூதர்களை உங்கள் வீடுகளில் மறைத்து வைத்திருந்ததால் நாஷிக்கள் உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் செய்த தீமையைப் பற்றி பேச வேண்டும்.
74 ஷோவாவை பற்றி நாஷின் பங்கேற்பாளர்களின் மீது மட்டுமே குற்றம் சாட்ட வேண்டும், அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் மீது அல்ல என்றால் மத்தேயு 27:25-ன் படி 2000 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரவேலில் ஆண்டவர் இயேசுவை அவர்களின் கொள்ளு தாத்தாக்கள் கொன்றபோது ஜெர்மனியில் அந்த யூதர்கள் பிறக்கவில்லை?
75 இன அழிப்பில் மரித்த யூதர்களின் குற்றத்தை நீங்கள் எவ்வாறு விளக்குகிறீர்கள்? மேலும் நீங்கள் நிரபராதி என்றால், மாலை நேரத்தில் வில்லியம் பிரன்ஹாம் கொண்டு வந்த ஒளியை உங்கள் மூலம் மறைப்பதற்கு நீதியுள்ள கடவுள் சாத்தானை ஏன் அனுமதித்தார்?
76 அடிமை வர்த்தகத்தின் போது, அவர்கள் அங்கே இல்லாத போது அவர்களின் பெற்றோர்கள் ஐரோப்பியர்களுக்கு அடிமைகளை விற்றபோது மத்தியதரைக் கடலில் ஆயிரக்கணக்கான கறுப்பின ஆப்பிரிக்கர்கள் மரித்ததை நீங்கள் எப்படி விளக்குகிறீர்கள்? என் பெற்றோர் யூதர்களை துன்புறுத்தி, ஐசிஸ், ஒசைரிஸ் மற்றும் அமுன்-ராவை வணங்கி, யூதர்களின் கடவுளான அதோனாயை மீறிய போது நான் எகிப்தில் இல்லை, ஏன் என்னுடைய தோல் கருப்பாக இருக்கிறது. நான் பிறக்கவில்லை, ஆனால் நான் அவர்களின் அறையில் இருந்தேன், எனவே நான் குற்றவாளி
77 லேவி தன் பெரிய தாத்தா ஆபிரகாமின் அரையில் மெல்கிசேதேக்கிற்கு தசமபாகம் கொடுத்திருந்தால், எகிப்தில் சாத்தானின் வழிபாடுகளுக்கும் அடிமை வியாபாரத்தின் போது அடிமைகளை விற்றதற்கும் நான் குற்றவாளி. மேலும் நான் கேட்க வேண்டியது பூமியின் குடிகள் அனைவரின் மன்னிப்பையும் கடவுளின் கருணையையும் தான். அன்புள்ள தந்தை எவால்ட் ஃபிராங்க், ஏதேன் முதல் ஏவாளின் பாவத்தால் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு பெண் கூட வேதனையுடன் பிள்ளையை பெற்று எடுக்கிறாள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
78 அன்புள்ள எவால்ட் ஃபிராங்க், யூதாஸ் இஸ்காரியோத் தாண் கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பதும், கர்த்தராகிய இயேசுவை வழங்க வேண்டியவர் தாண் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு குமாரனாக இருக்க வேண்டியது அவசியம் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? மத்தேயு 25:6-ன் படி நடுராத்திரி சத்தம் ஒலிக்கும்படி, இருளைக் கொண்டு வந்து, சபையை, அதாவது ஆவிக்குரிய இஸ்ரவேலை தூங்க வைக்க வேண்டிய அவசியம் நாஜி ஜெர்மனியின் குமாரனுக்கு அவசியம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களைப் போற்றும் போதகர்கள் அனைவரும் நடுராத்திரி சத்தம் ஒலிக்க பத்து கன்னிகைகளை துஷ்பிரயோகம் செய்து தூங்க வைக்க உங்கள் நாஜி கெஸ்டபோவின் தலைவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடவுளும் உங்களிடம் பேசுவதால், இது உங்களுக்குத் தெரியும் என்று நான் நம்புகிறேன்.
79 அன்புள்ள எவால்ட் ஃபிராங்க், இஸ்ரவேல் எப்போதுமே தீர்க்கதரிசிகளை நிராகரித்தது, இப்போது இஸ்ரவேல், அது புறஜாதி தேசமாக உள்ளது. இந்த நேரத்தில் நீங்களும் ஒரு தீர்க்கதரிசியை நிராகரிக்கிறீர்கள் அல்லவா எனவே நீங்கள் கேட்க விரும்பும் காரியங்களை உங்களிடம் கூறுபவர்களுக்கு மட்டும் செவிக் கொடுக்க முடியும்?
80 என்னைக் கவனிக்க பெரிய கூட்டங்களையும் வெளிப்படையான காட்சிகளையும் ஒரு வேளை நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம், ஆனால் ஒரு கூடாரத்தின் கீழ் ஒரு சிறிய ஊழியத்தில் அது ஒரு சிறிய சத்தமாக இருக்கும் என்று தேவதூதன் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். இது எளிமையில் தேவனாக இருக்கும், அதை நீங்கள் பார்ப்பதற்கு கீழே நோக்க வேண்டும். ஒரு கூடாரத்திற்குள் நுழைய, நீங்கள் கீழே குனிந்து செல்ல வேண்டும்.
81 அன்புள்ள எவால்ட் ஃபிராங்க், நீங்கள் ஒரு தீர்க்கதரிசி அல்ல, ஆனால் எல்லா கேள்விகளுக்கும் உங்களிடம் பதில் கிடைத்துள்ளது மற்றும் முழு வெளிப்படுத்தல் புத்தகத்தையும் நீங்கள் உண்மையில் விளக்கியுள்ளீர்கள். 50 ஆண்டுகளுக்கும் மேலான ஊழியத்தில், "நீங்கள் என்னிடம் கேட்கும் இந்த கேள்விக்கு, ஒரு தீர்க்கதரிசி மட்டுமே பதிலளிக்க முடியும்." என்று ஒரு முறை கூட நீங்கள் சொல்லவில்லை: உங்கள் செய்தி இவ்வாறு இருந்திருக்க வேண்டும்: "அன்புள்ள சகோத சகோதரிகளே, அப்போஸ்தலன் பேதுருவைப் போல, நான் ஒரு பயனற்ற வேலைக்காரன் மட்டுமே, பவுலைப் போன்ற மற்றொரு தீர்க்கதரிசி வரும் வரை வீட்டைக் காக்கும் பொறுப்பை எஜமானர் ஒப்படைத்துள்ளார், பின்னர் நான் அவருக்கு வழியை ஆயத்தம் செய்வேன்."
82 நீங்கள் அதைச் செய்தால், பியாரி கிரீன், அலெக்சிஸ் பாரிலியர், ஜோசப் கோல்மன், பிரேசிலைச் சேர்ந்த ஜோவாகிம் கோன்சால்வ்ஸ் மற்றும் வில்லியம் பிரான்ஹாமின் செய்தியில் உள்ள அனைத்து போதகர்களும் ஒரு செய்தி இல்லாமல் தீர்க்கதரிசிகளைப் போல நடந்து கொள்ள மாட்டார்கள். மேலும் இப்போது, உங்களால், பில்லி பால் கெர்ஷோம் மற்றும் ஜோசப் எலியேசர் பிரன்ஹாம், மோசேயின் இரண்டு மகன்களும், கோராவின் மகன்களின் உதவியுடன், இஸ்ரவேலைத் தொந்தரவு செய்ய தங்கள் ஒலிநாடா ஊழியத்தை உருவாக்கியுள்ளனர்.
83 அன்புள்ள எவால்ட் ஃபிராங்க், ஆசாரியத்துவத்தின் தொடக்கமும் தந்தையுமான ஆரோன், இஸ்ரவேலை ஒரு பொற்க் கன்றுக்குட்டி வழிபாட்டிற்கு வழிநடத்தினார் என்றால், நீங்கள் யார்? அன்புள்ள எவால்ட் ஃபிராங்க், ஒரு தீர்க்கதரிசியின் மரணத்திற்குப் பிறகு, ஒரு ஆசாரியன் தேவனின் பிள்ளைகளை தேவனின் சித்தத்திற்க்கு வழிநடத்தி செல்வது சாத்தியமா?
84 எனது ஊழியத்தைப் பற்றி எனக்குக் கூறப்பட்ட பல கனவுகளிலும் தரிசனங்களிலும், மக்கள் தங்கள் கனவின் முடிவில் தீர்க்கதரிசி மறைந்துவிடுவதாக என்று என்னிடம் கூறுகிறார்கள். தீர்க்கதரிசி யாரிடம் மக்களை விட்டுச் செல்கிறாரோ அவர் மக்களை வேறு பாதையில் அழைத்துச் செல்கிறார். இது ஒரு தெய்வீக சட்டம்.
85 ஆசாரியத்துவம் எப்போதும் தேவனின் பிள்ளைகளை மீண்டும் இருளுக்குள் அழைத்துச் செல்கிறது. மேலும் அடுத்த தீர்க்கதரிசியின் செய்தி எப்போதும் நடுராத்திரி சத்தமாக வரும். ஜூனியர் ஜாக்சனின் தரிசனத்தின்படி, சபினோ கேன்யனின் அறியாத மொழியான வெள்ளைக் கல்லின் வியாகனத்திற்காக அங்கேயே இருக்காமல், ஒவ்வொரு பிரசங்கியும் அவரவர் வழியில் சென்றார்கள் என்பது என்னை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஏப்ரல் 24, 1993 அன்று நான் பெற்ற அறியாத மொழி, எனது செய்தி தான் அதன் வியாக்கியானம்.
86 அப்போஸ்தலன் பேதுரு, ராஜ்யத்தின் திறவுகோல்கள் இருந்தபோதிலும், "இயேசு தம் பணியை நிறைவேற்றினார், நானும் என் பணியை நிறைவேற்றுகிறேன்" என்று ஒருபோதும் கூறவில்லை. மேலும், "தீர்க்கதரிசியை விசுவாசிக்க வேண்டாம், ஆனால் வேதாகமத்தில் நீங்கள் காணும் தேவனை விசுவாசியுங்கள், வில்லியம் பிரன்ஹாம் உங்களையும் என்னையும் போலவே பிறந்தார். வேதாகமத்தில் கவனம் செலுத்துங்கள்!" என்று கூறுகிற அளவிற்கு சென்றீர்கள்.
87 வில்லியம் பிரான்ஹாமின் விசுவாசிகளை தீர்க்கதரிசன விசுவாசத்திற்க்கு அல்ல, ஆனால் வேதாகமத்தின் அடிப்படையிலான சுவிசேஷ விசுவாசத்திற்க்கு திரும்பக் கொண்டுவருவதே உங்கள் இறுதிப் போராக இருந்தது. 2 நாளாகமம் 26-ல் உசியா ராஜாவுடன் ஆசாரியர்கள் செய்தது போல், உங்களை நேசிப்பதாகக் கூறுபவர்கள் யாரும் உங்களுக்கு உதவ முயற்சிக்கவில்லை.
88 இன்று உங்களால் தான் தீர்க்கதரிசியை சார்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பிரான்ஹாமிஸ்டுகள் கேலிக்கூத்தாக மாறிவிட்டனர். மேலும் ஒரு நிகழ்வு நடக்கும் இடத்தில், "தீர்க்கதரிசிகளின் தேவனே, இந்த நிகழ்வுகளின் அர்த்தம் என்ன?" என்று அவர்கள் ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். ஜனவரி 2021-ல், அவர்கள் அனைவரும், "ஓ, கமலா ஹாரிஸ் தான் சகோதரர் பிரான்ஹாமின் தரிசனத்தின் நிறைவேற்றம்" என்று கூச்சலிட்டனர். மேலும் 2022-ல், அவர்கள் அனைவரும், "ஓ, ரஷ்யா சகோதரர் பிரான்ஹாமின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறது!" என்று கூச்சலிட்டனர். கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் கூட இல்லாத வெட்கக்கேடான ஒரு பைத்தியக்காரத்தனம்.
89 அவர்கள் செய்யும் இந்த பொய்யான அறிக்கைகளுக்காக, மன்னிப்பு கேட்க அவர்கள் ஒருபோதும் தங்கள் சபைகளுக்கோ அல்லது இணையத்திற்கோ செல்ல மாட்டார்கள். அவர்களுக்கு தேவ பயம் இல்லை. அதற்கெல்லாம், எவால்ட் ஃபிராங்க் ஆகிய நீங்கள்தான் பொறுப்பு.
90 இன்று அனைத்து பிரான்ஹாமிஸ்ட் போதகர்களுக்கும் அழைப்புகள் மற்றும் பணிநியமனங்கள் மற்றும் அக்னி ஸ்தம்பங்கள் இருக்குமென்றால், அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. மோசே துவங்கி, வேதாகமம் முழுவதும், உங்களைப் போன்ற அழைப்பும் பணிநியமனம் கொண்ட ஒரு ஆசாரியனை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? ஆரோன், பேதுரு மற்றும் திமோத்தேயு சொல்லும் அந்த அனுபவங்களை உங்களுடைய ஒன்றும் அறியாத சபை உறுப்பினர்களுக்கு முன் நீங்கள் சொல்ல முடியுமா?
91 பஞ்சத்தின் காலத்தை நீங்கள் நித்தியமாக ஆக்கினீர்கள். பஞ்சம் எப்படி நித்தியமாக இருக்கும்? அரை நூற்றாண்டுக்கு முன்பே இருந்த அதே பழைய ஆகாரத்தை விநியோகிக்க எஜமானர் உங்கள் இடத்தில் வேறொரு நபரை நிறுவாமல் நீங்கள் பூமியை விட்டு வெளியேறுவீர்களா? சபையை குழப்பத்தில் விட்டு வெளியேறுவீர்களா?
92 அன்புள்ள எவால்ட் ஃபிராங்க், வில்லியம் பிரன்ஹாம் என்ற மனிதனால், தேவன் சாயங்கால வெளிச்சத்தை பூமிக்குக் கொண்டு வந்தபோது, எந்த மனிதனால் அந்தச் செய்தியில் சாத்தான், வில்லியம் பிரான்ஹாமின் வெளிசத்தின் மீது இருளை மீண்டும் கொண்டுவந்தான், அது நீங்களாக இல்லையென்றால் சபையை தூங்க செய்தவன் யார்? எப்படி வெளிச்சம் கற்பனை இல்லையோ அது போல, இருளும் கற்பனையல்ல. அவை இரண்டும் செய்திகள். ஜான் கால்வின் வருவதற்கு முன்பு லூத்தரின் கூட்டத்துடன் மெலான்ச்தான் என்ன செய்தாரோ அதை தான் வில்லியம் பிரான்ஹாமின் செய்தியில் நீங்கள் மீண்டும் உருவாக்கியுள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
93 அன்புள்ள எவால்ட் ஃபிராங்க், வில்லியம் பிரான்ஹாமின் செய்தியில், அது நீங்களாக இல்லையென்றால் மற்றொரு செய்தியைக் கொண்டு வந்தவர் யார்? சாயங்கால வெளிச்சம் ஒரு செய்தி. நடுராத்திரி சத்தம் ஒரு செய்தி. ஆனால் யாருடைய செய்தி சாயங்கால வெளிச்சத்திற்கும் நடுராத்திரி சத்தத்திற்க்கும் இடையே இருளை ஏற்படுத்தியது?
94 வில்லியம் பிரான்ஹாமின் செய்தி சாயங்கால நேரத்தில் பூமிக்கு வெளிச்சத்தை கொண்டுவந்ததது என்றால், வில்லியம் பிரான்ஹாமின் செய்திக்கு இருளைக் கொண்டுவந்தது எது? உங்களுடைய சிறு புத்தகங்கள் மற்றும் சுற்றறிக்கை கடிதங்களாக இல்லாவிட்டால் என்ன என்ற கேள்வியையாவது குறைந்தபட்சம் உங்களை நீங்களே கேட்டுக்கொள்கிறீர்களா?
95 அன்புள்ள எவால்ட் ஃபிராங்க், இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களை மன்றாடுகிறேன், நீங்கள் இன்று என்னை எதிர்த்தால், நீங்கள் எதிர்ப்பது ஓஹியோ நதியின் தேவதூதன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்தக் கேள்வியின் காரணமாக நீங்களும் உங்களைப் பின்தொடர்பவர்கள் அனைவரும் கடைசித் நியாயத்தீர்ப்பின்போது என் முன் முழங்காலில் இருப்பீர்கள்.
96 அன்புள்ள எவால்ட் ஃபிராங்க், உங்களுக்கு உதவ, கிரகணம் எப்பொழுது நிகழும் என்றால் சந்திரன், அதாவது சுற்றும் நட்சத்திரம், சுற்றறிக்கை கடிதம், சூரியனின் இடத்தைப் பிடித்து பூமியை ஒளிரச் செய்ய விரும்பும்போது தான். ஏப்ரல் 24, 1993 அன்று, தேவதூதன், இவர் ஓஹியோ நதியின் அதே தேவதூதன், கிரகணம் மறைந்திருந்தது, மேலும் கிரகணத்தின் பின்னால் இருந்துதான் தேவதூதன் ஒரு புதிய வெளிச்சத்திற்க்காக மீண்டும் பூமியில் ஆட்டுக்குட்டியுடன் வெளியே இறங்கி வந்தார் அது பூமியை மீண்டும் ஒளிரச் செய்தது.
97 ஏப்ரல் 24, 1993-ல் ஏற்பட்ட கிரகணம் வில்லியம் பிரான்ஹாமின் செய்தியில் இருளைக் கொண்டுவந்த உங்கள் சுற்றறிக்கை கடிதத்தை தவிர வேறில்லை. ஏப்ரல் 24, 1993 அன்று எனக்குக் கிடைத்த அழைப்பு மற்றும் பணி நியமனத்தின் வல்லமையினால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை நான் சொல்கிறேன்.
98 அன்புள்ள ஏவால்ட் ஃபிராங்க், நீங்கள் சாயங்கால வெளிச்சத்தின் மீது இருளைக் கொண்டு வருவீர்கள் என்று தேவன் அறிந்திருந்தார், மேலும் நடுராத்திரி சத்தத்தின் நோக்கம் உங்கள் இருளைத் தாக்கும் என்றும் மேலும் சுவிசேஷகர்கள் மற்றும் இஸ்லாமியர்களுடன் சண்டையிடாமல் இருக்க வேண்டும் என்பதே, அவர்கள் எற்கனவே வில்லியம் பிரான்ஹாம் சாயங்கால வெளிசத்தை கொண்டு வந்தபோது பூமியில் இருந்தனர்.
99 அன்புள்ள தந்தை எவால்ட் ஃபிராங்க், இப்போது உங்களிடம் பேசுவது ஓஹியோ நதியின் தேவதூதன் என்பதால் என் வார்த்தைகள் உங்களை எரிச்சலடையச் செய்ய வேண்டாம்! தேவன் என் மூலம் உங்களிடம் பேச முடியாது என்று நீங்கள் நினைத்தால், தேவனை நோக்கி நடக்கையில், மூடன் ஞானத்தை கற்பிக்க முடியும் என்பதையும், ஒரு கழுதை தேவனின் தீர்க்கதரிசிக்கு வெளிப்பாடுகளை வழங்க முடியும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
100 ஒரு வேளை கடவுள் உங்களிடம், "எவால்ட் ஃபிராங்க், என் ஊழியக்காரனே, அவர்கள் உனக்கு செவிசாய்க்கும் காலம் வரும்..." என்று சொன்னால், நீங்கள் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் என்று அர்த்தமா? இதன் வியாக்கியானத்தை எந்த தீர்க்கதரிசி மூலம் நீங்கள் அறிந்துக் கொண்டீர்கள் மற்றும் ஜெர்மன் கழுகு, ஆங்கிலக் குதிரைவீரன், கூட்டு அறுவடை செய்பவன் மற்றும் டிசம்பர் 31, 1965 இன் வாள் ஆகியவற்றின் வியாக்கியானத்தை எப்படி அறிந்தீர்கள்.
101 அன்புள்ள எவால்ட் ஃபிராங்க், அப்போஸ்தலர் 13-ல்: "என்னையும் பர்னபாஸையும் சவுலையும் பிரித்துவிடுங்கள்", இவை பர்னபாஸ் பவுலைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் என்று அர்த்தமா? அவரது வெளிப்பாடுகளை அனைவரும் அழைப்பு மற்றும் பணிநியமனமாக எடுத்துக் கொள்ள முடியுமா? நீங்கள் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனாக இல்லாத நிலையில், மனிதகுலத்தின் இரட்சிப்பை உள்ளடக்கிய இத்தகைய பெரிய வெளிப்பாடுகளை நீங்களே ஏன் வியாக்கியானம் செய்கிறீர்கள்?
102 தேவன் உங்களுக்குக் கொடுக்கும் வெளிப்பாடுகளின் வியாக்கியானத்திற்காக , "எலியாவின் தேவன் எங்கே?" என்று எலிசாவைப் போல நீங்கள் ஏன் சத்தமிடவில்லை. தேவன் தனது தீர்க்கதரிசிகளிடம் அடையாளங்களிள் மூலம் பேசுகிறார். ஒரு தீர்க்கதரிசி அந்த அடையாளங்களுக்கு தவறான வியாக்கியானத்தை கொடுக்க அவசர பட முடியும். ஜூன் 1933-ல் வில்லியம் பிரன்ஹாம் கொண்டிருந்த ஏழு தரிசனங்கள் பற்றி உங்களுக்குத் தெரியும், அதில் 1977-க்கு முன்பு ஒரு பெண் அமெரிக்காவை ஆட்சி செய்வாள் என்பது உள்பட இருந்தது. மேலும், 1977-ல் மனிதகுலத்தின் நாட்காட்டி நிறுத்தப்பட்டது. மேலும் வில்லியம் பிரான்ஹாமின் விளக்கம் என்னவென்று உங்களுக்குத் தெரியும். அந்த 1977 உலகத்தின் முடிவைக் குறிக்கும் மற்றும் ஆயிர வருட அரசாட்சிக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
103 ஆகஸ்ட் 6, 1961 அன்று பிரசங்கித்த அவரது பிரசங்கம்: "தானியேலின் எழுபது வாரங்கள்" போன்ற பல சந்தர்ப்பங்களில், வில்லியம் பிரன்ஹாம் இந்த ஏழு தரிசனங்களும் 1933 மற்றும் 1977-க்கு இடையில் நிறைவேறும் என்று கூறினார். ஆனால் அவருடைய புரிந்து கொள்ளுதலின்படி காரியங்கள் நடக்கவில்லை. மேலும் நமது எதிரிகள் அதைக் கொண்டு என்ன செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எவால்ட் ஃபிராங்க், தீர்க்கதரிசி செய்தியாளன் அல்லாத உங்களைப் பற்றி என்ன? ஏசாயா 44:26-ல் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை உறுதிப்படுத்துகிறார், ஆனால் ஒரு தீர்க்கதரிசி தேவனின் தரிசனத்திற்கு கொடுக்கும் தவறான வியாக்கியானங்களை தேவன் உறுதிப்படுத்தவில்லை என்று கூறுகிறது.
104 மேலும் ஒரு தீர்க்கதரிசி தனது வாழ்வின் ஒரு கட்டத்தில் சரிவை சந்திக்க நேரிடும், மேலும் அவர் தன்னை புதுப்பித்துக் கொள்ள கழுகு போன்று மலைகளின் உயரத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். இதனால்தான், யோவான் ஸ்நானகன் கர்த்தராகிய இயேசுவை அறிவித்த பிறகு, அவர் அதை மறுக்க விரும்பினார் மற்றும் இந்த பகுதியை தனது செய்தியிலிருந்து விலக்க விரும்பினார். இயேசு உண்மையில் கிறிஸ்துதானா என்று கேட்க அவர் தனது சீடர்களை அனுப்பினார்.
105 லூதர் இரட்டை முன்குறித்தலை பிரசங்கித்த பிறகு, அவர் இரட்டை முன்குறித்தலை மறுத்து, இரட்சிப்பிற்காக முன்குறிக்கப்பட்ட அனைத்து மனிதகுலம் என்று அறிவித்தார். ஆனால் லூதருக்குப் பிறகு, ஜான் கால்வின் இரட்டை முன்குறித்தல் செய்தியுடன் வந்தார்.
106 நம்முடைய காலத்தில், ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 24, 1963 அன்று, ஏழாவது முத்திரையைப் பற்றிய பிரசங்கத்தின் போது, வில்லியம் பிரன்ஹாம் கூடாரத்தின் கீழ் ஒரு ஊழியத்திற்காக மற்றொரு தீர்க்கதரிசி வரவிருப்பதையும், அறியாத மொழி மற்றும் அக்கினி ஸ்தம்பம் அவருக்கு மேலே மற்றொரு தீர்க்கதரிசியிடம் பேசுவதை தெளிவாக அறிவித்தார். ஆனால் வில்லியம் பிரன்ஹாம், அக்கினி ஸ்தம்பம் அவரை விட்டுவிட்டு, தனக்கு மேலே உள்ள மற்றொரு தீர்க்கதரிசியிடம் பேசுவதைக் கண்டு, அவர் கலக்கமடைந்தார் மற்றும் அதே நாளில் தனது சொந்த வெளிப்பாடுகளை மறுத்தார்.
107 மேலும் வில்லியம் பிரன்ஹாம் தனது ஏழாவது முத்திரை பற்றிய பிரசங்கத்தின் இந்த பகுதியை வெளியிடக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். அடுத்த நாள், திங்கட்கிழமை, அவர் அலுவலகத்தில், வில்லியம் பிரன்ஹாம் இந்த பகுதியை மாற்றுவதற்காக மற்றொரு 20 நிமிட ஆடியோவைப் பதிவு செய்தார். அவருடைய மரணத்திற்குப் பிறகு, கூடாரத்தின் கீழ் ஊழியம் மற்றும் அறியாத மொழி மற்றும் அவருக்கு மேலே உள்ள மற்றொரு நபருடன் பேசும் ஒளி ஆகியவற்றை உள்ளடக்கிய ஏழாவது முத்திரையின் முழு அசல் வெளியிடப்பட்டது.
108 ஒரு தீர்க்கதரிசி என்பது ஒரு கடவுள் தனது மனிதப் பக்கத்திலிருந்து துன்பப்பட்டு பின்னர் எந்த ஒரு மனிதனைப் போல மரித்துவிடுகிறார். தீர்க்கதரிசி என்பவர் அவர் தேவனிடமிருந்து ஒரு விசேஷித்த கிருபையால் மட்டுமே பயனடைந்த ஒரு மனிதர். இவை யாவும், என்னை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும், ஏனென்றால், நீங்கள் பெற்ற எல்லா வெளிப்பாடுகளையும் பார்க்கும் போது, நீங்கள் வில்லியம் பிரான்ஹாமின் மந்தையின் மீது ஒரு பெரிய எபேசிய தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும், ஆனால் தவறான பாதையை எடுத்துக் கொண்டதால், உங்களுடைய போதக ஊழியம் அதாவது ஒரு மனிதனின் முகம் உங்கள் தீர்க்கதரிசியின் ஊழியத்தை எடுத்துக் கொண்டது.
109 தீர்க்கதரிசனத்தின் இந்த யுகத்தில், வில்லியம் பிரன்ஹாம் தனது வெளிச்சப்பந்தத்தை மனிதனின் முகமாக இருக்கும் ஒரு போதகரிடம் விட்டுவிட முடியாது, ஆனால் கழுகு முகமாக இருக்கும் தீர்க்கதரிசியிடம் தான் கொடுக்க முடியும் அதனால்தான், "என் மகன் ஜோசப் என் வேதாகமத்தை எடுத்துக்கொள்வான், அவன் ஒரு தீர்க்கதரிசி" என்று கூறினார். நான் உங்களுக்கு கற்பனைகளை சொல்லவில்லை.
110 ஒரு தீர்க்கதரிசியாக வில்லியம் பிரன்ஹாம் உங்களிடம் மந்தையை ஒப்படைத்திருந்தார், அதை நான் உறுதிப்படுத்துகிறேன், ஏனென்றால் பேதுருவைப் போல மந்தையை மேய்க்கக்கூடிய அளவிற்க்கு ஆகாரத்தை கொண்டு உள்ளவர் மட்டுமே போஷிக்க முடியும். ஆனால் நீங்கள் விரைவில் தீர்க்கதரிசியிலிருந்து ஆசிரியராக மாறிவிட்டீர்கள், உங்கள் கடைசி வெளிப்பாடுகள் முதல் வெளிப்பாடுகளுடன் பொருந்தாததால் உங்கள் இருதயத்தில் இதை நீங்கள் அறிவீர்கள்.
111 எவால்ட் ஃபிராங்க், என் தந்தையே, தேவன் மற்றும் அவருடைய தீர்க்கதரிசி வில்லியம் பிரன்ஹாம் ஆகியோரின் கட்டளையின்படி நீங்கள் எனக்கு என்னச் செய்ய வேண்டுமே அதை செய்தீர்கள். 1994 முதல் மற்றும் பல ஆண்டுகளாக, நான் பணம் எதுவும் செலுத்தாமல் உங்களிடமிருந்து சிறு புத்தகங்களைப் பெற்றேன். நானும், ஒரு தீர்க்கதரிசி சொல்ல வேண்டிய அனைத்தையும், நான் தேவனிடமிருந்து பெற்ற தரிசனங்களின்படி உண்மையாகச் சொன்னேன். நான் சொன்ன எல்லாவற்றிலிருந்தும், உங்களை இழக்கக்கூடியதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
112 இயேசு பேதுருவிடம் மட்டும் "அப்பாலே போ, சாத்தானே!" என்று மட்டும் சொல்லவில்லை மேலும் ஒரு தீர்க்கதரிசியாக, நான் தேவனிடமிருந்து பெறுவதை நான் சொல்ல வேண்டும், மக்கள் கேட்க விரும்புவதை அல்ல. மேலும் நான் உங்களிடம் சொன்னதை எல்லாம் நான் கர்வத்தால் சொல்லவில்லை, இல்லையெனில் என்னை மன்னியுங்கள். கர்வம் ஒரு தீர்க்கதரிசியின் கலாச்சாரத்தின் ஒரு பகுதி அல்ல.
113 எவால்ட் ஃபிராங்க், என் தந்தையே, நான் தரிசனங்களை முன்வைத்தால், அவற்றை யார் வியாக்கியானம் செய்வார்கள்? ஆனால் தேவன் எனக்குக் கொடுத்த திறமையின்படி, இந்தத் தரிசனங்களின்படி உம்மிடம் பேசினேன். உம்மை மனம் எற்க்கும்படி செய்வது என் நோக்கமல்ல. நான் சொல்வதற்க் கென்று! தேவன் ஒருவரே மனம் எற்க்க வைக்க வல்லவர். என் பங்கிற்கு, ஓஹியோ நதியின் தூதனான ஏப்ரல் 24, 1993-ன் தூதனிடமிருந்து நான் பெற்ற அனைத்தையும் உங்களிடம் கூறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் பூமியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு நான் உம்மை நேசித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தந்தை எவால்ட் ஃபிராங்க் அவர்களே, பூமிக்காகவும் எனக்காகவும் நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி.