தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு அவர்கள் டிசம்பர் 18, 2022 அன்று வழங்கிய வெளிப்பாடு
1 நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, டிசம்பர் 18, 2022 அன்று கடவுளின் சார்பாக எனது தலைமுறையின் பரிசுத்தவான்களுக்கு எனது பணியின் தற்போதைய நிலை மீது வழங்கிய வெளிப்பாடு.
2 நாம் டிசம்பரில் இருக்கிறோம். கோவில் வியாபாரிகளுக்கு இது வியாபார பருவம். சாத்தானின் அந்த பேராயர்களும் தீர்க்கதரிசிகளும் தங்கள் பல்பொருள் அங்காடிகள், அறுவடைத் திருவிழாக்கள் மற்றும் முழு இரவு ஜெபத்தில் மீண்டும் இப்படியாக கூச்சலிடுவார்கள்: "வாருங்கள், உங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்! உங்கள் நட்சத்திரம் பிரகாசிக்க வேண்டும்! வாருங்கள், உங்கள் திருமணத்தைப் பெறுங்கள், உங்கள் விசா, ... 1000 டாலர்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே, வாருங்கள்! காசாளரிடம் செல்லுங்கள்! 10 டாலர் வைத்திருப்பவர்களே நீங்களும் வாருங்கள்! சில்லரை நாணயங்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே, நீங்களும் கூட இங்கே வாருங்கள்! இங்கே எல்லாவிதமான விலைகளிலும் உள்ளன! இங்கே 100 டாலர்கள், 2 டாலர்கள், 1 டாலர் ஆசீர்வாதங்கள் உள்ளன. காசாளரிடம் செல்லுங்கள் ".
3 கடந்த காலத்தில், நீங்கள் அந்த அருவருப்பான காரியங்களில் இருந்தீர்கள், அதை நீங்கள் அறியவில்லை. உங்களை விடுவிக்கும்படிக்கு அதை சண்டையிட நடுராத்திரி சத்தம் வந்தது. மத்தேயு 21-ல் ஆண்டவர் இயேசு சாட்டையால் அடித்து, ஆலயத்தை விட்டு வெளியேற்றிய வியாபாரிகள் இன்று அதே காட்சிகளை மீண்டும் உருவாக்குவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் அதை ஒப்புக்கொண்டு அவர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள்.
4 நல்லது, அக்டோபர் 2022-ல் காக்குவ்153 உடன், நாம் லவோதிக்கேயா சபைக்காலத்தைப் பற்றி மீண்டும் தெளிவு பெற்றோம், மேலும் லவோதிக்கேயா சபைக் காலத்தின் முதல் தீர்க்கதரிசி செய்தியாளர் வில்லியம் சீமோர் என்பதை அறிந்தோம். வில்லியம் பிரான்ஹாமின் சொந்த வார்த்தைகளால் பல சகோதர சகோதரிகளுக்கு இது ஒரு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வெளிப்பாட்டைத் தவிர, பல சகோதரர்கள் பின்னர் எனக்கு வில்லியம் பிரான்ஹாமிடமிருந்து வேறு மேற்கோள்களை அனுப்பினார்கள்.
5 "தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்ளுகிறார்" என்ற பிரசங்கத்தில் வில்லியம் பிரான்ஹாம் இவ்வாறு கூறுகிறார், "லூத்தரன்களே உங்களுக்கு என்ன ஆனது? பல ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் வெளிச்ச பந்தத்தை பிடித்தீர்கள், உங்களுக்கு என்ன ஆனது? தேவன் உங்கள் கையிலிருந்து வெளிச்ச பந்தத்தை எடுத்தார். அது உண்மைதான். மெத்தடிஸ்டுகளே உங்களுக்கு என்ன ஆனது? ஜான் வெஸ்லியின் காலத்தில் வெளிச்ச பந்தத்தை உங்களுடைய கைகளில் பிடித்திருந்தீர்கள். ஆனால் ஜான் வெஸ்லி போன பிறகு தேவன் வெளிச்ச பந்தத்தை உங்கள் கைகளில் இருந்து எடுத்துவிட்டார். நல்லது, கீழே சிறிய ஒற்றைக் கண்ணுடைய நீக்ரோ மனிதர் கலிபோர்னியாவில், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றார், மேலும் தேவன் பெந்தகோஸ்துவின் கைகளில் வெளிச்ச பந்தத்தை மாட்டி வைத்தார்."
6 ஏப்ரல் 22, 1962 அன்று ஜெபர்சன்வில்லில் பிரசங்கிக்கப்பட்ட "மணவாட்டி மரம் திரும்ப அளிக்கப்படுதல் " என்ற பிரசங்கத்தில் வில்லியம் பிரான்ஹாம் கூறுகிறார்: "நான்கு மரண செய்தியாளர்கள் அதைக் கொன்றனர்; பிறகு நான்கு ஜீவ செய்தியாளர்கள் அதை திரும்ப அளிப்பார்கள். முதலில் என்ன? மார்ட்டின் லூதருடன் நீதிமானாக்கப்படுதல். இரண்டாவது என்ன? ஜான் வெஸ்லியுடன் -- பரிசுத்தமாக்கப்படுதல், மூன்றாவது என்ன ? பெந்தகோஸ்தேயுடன் வரங்களை திரும்ப அளித்தல், பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், நான்காவதாக என்ன? வார்த்தை, அங்கு நான்கு பிரதான தீர்க்கதரிசிகள் இருந்தனர். நான்கு பெரிய தீர்க்கதரிசிகள் இருந்தார்கள், அவர்களில் ஒருவர், மார்ட்டின் லூதர், அதனோடு வெஸ்லி வந்தார், வலிமையானவர்: பரிசுத்தமாக்குதல், வெஸ்லிக்குப் பிறகு, அவரை விட வலிமையான பெந்தகோஸ்தே, மற்றொரு பெரிய தீர்க்கதரிசியில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், பார்த்தீர்களா? ஆனால் கடைசி நாட்களில் மல்கியா 4-ல், எலியா வார்த்தையாக வர வேண்டும்.
7 இங்கு வெளிப்பாடு முன்னேறுகிறதாக இருக்கிறது என்பதை வில்லியம் பிரான்ஹாம் தெளிவாகக் காட்டுகிறார். மேலும், வார்த்தையைத் திரிக்கும் பொல்லாத பிரான்ஹாமிஸ்டுகளே, பெந்தெகொஸ்தே நாளின் மற்றொரு பெரிய ஒற்றைக் கண்ணுடைய கருப்புத் தீர்க்கதரிசியை நீங்கள் பரிசுத்த ஆவியானவர் என்று சொல்ல முடியாது. பரிசுத்த ஆவியானவர் கருப்பு அல்லது ஒற்றைக் கண்ணுடையவர் அல்ல. நட்சத்திரங்களிலும் அவற்றின் விண்மீன்களிலும் மற்றும் தானியேல் தீர்க்கதரிசியின் தரிசனங்களிலும் கூட வில்லியம் சீமோர் மற்றும் பெந்தேகோஸ்தே ஊழியத்தை என்னால் காட்ட முடியும்.
8 வில்லியம் சீமோர் தான் வெள்ளாடு, ஒரு நீக்ரோ. அவர் காமின் மகன். செம்மறி ஆட்டுக்குட்டிகள் மற்றும் ஆட்டுக்கடாக்களைப் போலல்லாமல், வெள்ளாடுகள் பெரும்பாலும் கருப்பு நிறத்தில் இருக்கும். மேலும் பெந்தேகோஸ்தே மற்றும் சுவிசேஷ இயக்கங்கள் வெள்ளாட்டின் சந்ததி. முதலாவதாக, ஆட்டுக்கடா என்பது பலி ஆட்டுக்குட்டியின் பரிணாமம். மேலும் வெள்ளாடும் இஸ்ரவேலில் பாவநிவிர்த்தி பலியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். லேவியராகமம் 16ல், இஸ்ரவேலின் பாவங்களைத் தானே சுமந்துகொண்டு வனாந்தரத்தின் துன்பத்தில் இறக்கச் செல்லும் போக்காடாகிய வெள்ளாடு உங்களுக்குத் தெரியுமா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய அசாசல் வெள்ளாடுக்கடா (போக்காடு).
9 மேலும் அடிமை வியாபாரத்தில், யூதர்கள் ஆண்டவர் இயேசுவை ஒப்படைப்பது போல, நம்முடைய ஆப்பிரிக்க பிதாக்கள் தங்கள் அப்பாவி கறுப்பின சகோதரர்களை, அவர்களில் குன்டா கிண்டேவை, லேவியராகமம் 16-ன் படி அசாசல் வெள்ளாடுபோன்ற அடிமைத்தனத்தில் ஒப்படைத்தனர். சமுத்திரத்தில் மிதக்கும் அடிமைக் கப்பல்கள் இந்த நீக்ரோக்களுடன் தாங்கள் எங்கு செல்கிறார்கள் என்று தெரியாமல், தான் எங்கே போகிறேன் என்று தெரியாமல் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த அசாசல் வெள்ளாடு வகை. தற்போதைய அனைத்து சுவிசேஷ மற்றும் பெந்தேகோஸ்தே இயக்கங்களையும் தொடங்கியவர் அவர்களின் மகன் வில்லியம் சீமோர். பின்னர், கள்ள பெந்தகோஸ்தேவாதமும் அமெரிக்காவிலிருந்து எழும்பி உலகை கைப்பற்றும் படியாக சென்றது. இந்த கள்ள பெந்தகோஸ்தேவாதம் தான் தானியேல் 8-ன் வெள்ளாடு, இது மேற்கில் இருந்து எழும்பி உலகை கைப்பற்றும் படியாக சென்றது.
10 எனவே 1933-க்கு முன், பெந்தகோஸ்தேயர்களிடம் தான் இரட்சிப்பு இருந்தது. அதனால்தான் வில்லியம் பிரான்ஹாம் பெந்தகோஸ்தேயர்களிடம் சென்றபோது, அங்கே தூதனைக் கண்டதாகக் கூறினார். வில்லியம் பிரான்ஹாம் பெந்தகோஸ்து கூட்டத்தாருடன் அந்நிய பாஷைகளில் பேசினார். எனவே, வில்லியம் சீமோருடன் இருந்த தூதன் தான், சாயங்கால வேளையில் வில்லியம் பிரான்ஹாமுடன் வேறொரு பரிமாணத்தில் இருந்த அதே தூதன், மேலும் அதே தூதன் தான் இங்கு இன்னொரு பரிமாணத்தில் நடுராத்திரியில் காக்குவ் பிலிப்புடன் இருக்கிறார்.
11 உபவாச நாட்களைப் பொறுத்தவரை, உபவாசிக்க விரும்பும் வயதானவர்கள் தங்கள் உபவாச நாட்களுக்கு இடையில் இடைவெளிகளை வைப்பது நல்லது. காக்குவ் 153-க்குப் பிறகு, ஒரு சகோதரி என்னிடம் கூறினாள், "சகோதரர் பிலிப்பு, நான் ஒருபோதும் உபவாசம் இருந்ததில்லை, ஆனால் புதிய வகை உபவாசம் மூலம், நானும் உபவாசிக்க முடிகிறது." மேலும் பிரேசிலைச் சேர்ந்த பிரசங்கி லூசிவன் கேடெட் எனக்கு எழுதினார்: "சகோதரர் பிலிப்பு, இந்த வகையான புதிய உபவாசத்தால், நீங்கள் யோசுவாவைப் போல சூரியனை நிறுத்தியதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். சூரியன் மாலை 6 மணி முதல் பின்னோக்கிச் சென்று மதியம் வரை வந்தது" என்றார். பரிசுத்தவான்களின் இரட்சிப்புக்காக அனைத்தும் பங்களிக்கிறது.
12 மேலும், எனது செய்தி 2006-ல் முடிவடையும் என்றும் தேவன் எனது செய்தியை எடுத்து பூமி முழுவதும் அனுப்புவார் என்றும் கூறியிருந்தேன். இது நிறைவேறி எனது நோக்கத்தை அடைந்து விட்டேன். யோவான் ஸ்நானகனின் ஊழியத்தின் நோக்கம், உலகத்தின் பாவத்தைப் போக்கும் தேவனின் ஆட்டுக்குட்டியைக் கழுவி வழங்குவதாகும். கர்த்தராகிய இயேசுவின் ஞானஸ்நானத்தில் யோவான் ஸ்நானகன் அந்த நோக்கத்தை நிறைவேற்றினார்.
13 வில்லியம் சீமோரின் ஊழியத்தின் நோக்கம் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் மற்றும் மல்கியா 4-ன் படி அப்போஸ்தல விசுவாசத்திற்குத் திரும்புவது. மேலும் அவர் 1906-ல் இந்த நோக்கத்தை அடைந்தார். வில்லியம் பிரான்ஹாமின் ஊழியத்தின் நோக்கம் வெளிப்படுத்துதலின் ஏழு முத்திரைகளைத் திறப்பதாகும். அவர் 1963-ல் இந்த நோக்கத்தை அடைந்தார்.
14 எனது செய்தி இரண்டு கட்டங்கள் அல்லது பரிமாணங்களைக் கொண்டிருந்தது. தேசங்கள் மீதான நியாயத்தீர்ப்பு மற்றும் வாழ்க்கை மாற்றத்திற்கான வெளிப்படையான பாவ அறிக்கையை அடித்தளமாக கொண்டுள்ளது. நடுராத்திரி சத்தம் ஆராதனையின் மிக முக்கியமான பகுதி வெளிப்படையான பாவ அறிக்கை ஆகும். வெளிப்படையான பாவ அறிக்கை நமது சுவிசேஷங்களுக்கு அடிப்படையாக இருந்தால், நாம் அதிக எண்ணிக்கையில் இருக்க மாட்டோம், ஆனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பதிவிடப்படும் காக்குவ் 17:37-ன் இந்த வழக்குகளை நாம் கேட்க மாட்டோம்.
15 சபைகளை மாற்றுவதற்காக நாம் செய்திக்கு வருவதைப் பற்றிய விஷயம் அல்ல, மாறாக நம்முடைய ஜீவியங்கள் மாற வேண்டும். மற்றும் வெளிப்படையான பாவ அறிக்கையை அடிப்படையாக கொண்டு, வரவிருக்கும் எழுப்புதல்கள் நீண்டதாக இருக்கும்.
16 நம்முடைய எதிரிகள் கூட வெளிப்படையான பாவ அறிக்கையைப் பிரசங்கிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் அவ்வாறு செய்தால், அமைதியாக இருங்கள். சாத்தானால் தேவனுக்கு மகிமை சேர்க்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, “இந்த 21-ம் நூற்றாண்டில் தேவன் நமக்கு இப்படிப்பட்ட ஒரு கோட்பாட்டைக் கொண்டுவந்தது தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு மூலமாகத் தான்” என்று ஒரு கருத்துத்திருடன் சொல்வான் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
17 மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் எனக்குப் போதிக்கிறார்கள். மேலும் அவர்கள் இதை கேட்பதை நிறுத்த மாட்டார்கள்: "நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதைச் சொன்னவர் காக்குவ் பிலிப்பு . உங்கள் கையிலிருந்து ரொட்டியைப் பறிக்கும் நாய், உங்கள் விரல்களைப் பிடுங்கவில்லை என்றால் அதை அடிக்காதீர்கள். அது தனக்கும் அதன் நாய்க்குட்டிகளுக்கும் தேவைப்படுகிறது. மேலும் அது நாய் என்பதால் தான் அப்படி நடந்து கொண்டது.
18 நல்லது , எனது ஊழியத்தின் முதல் பரிமாணம் நியாயத்தீர்ப்பை திட்டவட்டமாக அறிவிப்பதில் இருந்தது. மேலும் காக்குவ் 1 மற்றும் காக்குவ் 2-ல், நான் ஏற்கனவே நியாயத்தீர்ப்பை அறிவித்திருந்தேன். அதுவே என் பிரசங்கங்களிலிருந்தும் என் சீடர்களின் பிரசங்கங்களிலிருந்தும் கூட நினைவுக்கு வந்தது. நீங்கள் சொல்வதைக் கேட்பவர்களிடம், நீங்கள் இப்படி கூறுங்கள். "இந்தச் செய்தியை இன்னும் ஏற்றுக்கொள்ளாத நீங்கள், நான் சொல்வதைக் கேட்ட பிறகு, இந்தச் செய்தி உண்மை என்றும், நம் காலத்தில் தேவனின் ஒரே உண்மையான தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு மட்டுமே என்றும் நீங்கள் நம்பினால், கையை உயர்த்தி,... வந்து முழங்கால் படியிடுங்கள், உங்களுடைய அர்ப்பணிப்புக்காக நான் ஜெபம் செய்கிறேன்".
19 என்னுடைய ஊழியத்தின் இரண்டாவது பரிமாணம் வாழ்க்கையின் மாற்றத்தை உள்ளடக்கியது. இதுவே எனது பிரசங்கங்களிலிருந்தும், நமது சபைகளின் முழுப் பிரசங்கங்களிலிருந்தும் இப்போது நமது சுவிசேஷப் பிரசங்கங்களிலிருந்தும் நினைவுகூறப்படுகிறது. காக்குவ் 17-ல், வாழ்க்கையின் மாற்றத்திற்கான அடித்தளத்தை நான் அமைத்தேன்.
20 ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், காக்குவ் 17:37-ஐக் கேட்கிறோம். இவை அனைத்தும் 2006-க்கு முன்பு நடந்தன. வில்லியம் பிரான்ஹாம் இறந்த 40-வது ஆண்டான 2005 முதல், தேவன் லோகோட்ஜ்ரோவிலிருந்து எனது செய்தியை அனுப்பினார். 2010 முதல், பூமியின் எல்லா இடங்களிலிருந்தும் ஆண்கள் தங்கள் ஞானஸ்நானம் மற்றும் பிரதிஷ்டை பெற வந்தனர்.
21 இந்த இரண்டாம் கட்டத்தில், பாலியல் ஆவி, சுயஇன்பம், இரவு அசுத்தப்படுதல் மற்றும் அனைத்து வகையான பிசாசுகளால் துன்புறுத்தப்பட்ட அனைவருக்கும், ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்தத்திற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், நீங்கள் சொல்கிறீர்கள்: "சகோதர சகோதரிகளே, நான் சொல்வதைக் கேட்ட பிறகு, பரிசுத்தமாக்கப்படுவதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும் இன்னும் ஆவிகளுடன் பிரச்சினைகள் உள்ள அனைவரையும், குறிப்பாக காக்குவ் 17:37-ல் குறிப்பிடப்பட்டுள்ள உங்களிடம், உங்கள் கைகளை உயர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்,... நீங்கள் இங்கே வந்து முழங்கால் படியிடுங்கள், உங்கள் விடுதலைக்காக நான் ஜெபம் செய்வேன்." மேலும், நீங்கள் வழிநடத்தப்பட்ட விதமாக அனைவருக்கும் உள்ள அசுத்த ஆவி அல்லது நோய்களால் உண்டான பிரச்சனைகளுக்கு ஜெபம் செய்யுங்கள்.
22 தன் பாவங்களை மறைக்காத, அசுத்தமான படங்கள் மற்றும் வீடியோக்களில் இருந்து தன்னைப் பிரித்து, சுயஇன்பம் மற்றும் பிற பிசாசுகளுடன் இன்னும் போராடும் ஒருவருக்குத் தேவைப்படுவது அறிவுரையோ அல்லது அவனுடைய வாழ்க்கையைத் தேடச் சொல்லுவதோ அல்ல, மாறாக ஜெபமே.
23 இதன் விளைவாக, பிரசங்கியின் வரம் மற்றும் வழிகாட்டுதலின்படி, அவர் பியானோ இசைக்கலைஞர்களுடன் வாசிப்பார், மேலும் தியானத்தில் அவருடன் சேர்ந்து சபையார் ஜெபம் செய்வார்கள் அல்லது பாடுவார்கள். அவர் சகோதரர்களுக்காக ஒன்றாக அல்லது ஒருவரின் பின் ஒருவராக வரிசையில் அவருக்கு வழிநடத்தப்பட்டபடி ஜெபிப்பார். ஒவ்வொரு ஜெப ஆராதனையிலும் நீங்கள் பிரசங்க பீடத்திற்கு வர வேண்டியதில்லை. நீங்கள் உங்களுடைய இருக்கையில் அமர்ந்து இருந்து குணமாகலாம் அல்லது விடுவிக்கப்படலாம். போதிய சாட்சியங்களைக் கொண்ட பிரசங்கிகளே மற்ற சபைகளில் இதுபோன்ற ஆராதனைக்கு அழைக்கப்படுவார்கள்.
24 ஒரு கிறிஸ்தவன் பரிசுத்தமாக இருக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவன் தன் மனைவி கர்ப்பம் தரிக்காத நாளில் அவளுடன் நெருங்க மாதவிலக்குக் கணக்கீடுகளைச் செய்யும் ஒரு அஞ்ஞானி அல்ல. உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் இறக்கும் நிலையில் உள்ள ஒருவரிடம் நான் பேசும்போது, அந்த நபர், "சகோதரர் பிலிப்பு, நான் உங்களிடம் பேசும்போது, நான் குணமடைந்து வருவதாக உணர்கிறேன்" என்று அந்த நபர் கூறியது எனக்கு அவை பல முறை நடந்தது. அஞ்ஞான பிரசங்கிகள், செக்ஸ் பொம்மைகளின் உரிமையாளர்களுக்கு தேவன் இந்த கிருபையை வழங்குவதில்லை.
25 உங்கள் மனைவிக்கு மாதவிடாய் நின்றதும், நீங்களும் இறுதி மாதவிடாய் அடைந்துவிட்டீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உபரி மற்றும் மற்ற அனைத்தும், வெளிப்படையான பாவ அறிக்கைக்கு வரவில்லை என்றாலும், இவை கர்ப்பப்பை புற்றுநோய் அல்லது புரோஸ்டேட் மற்றும் பிற தீவிர நோய்களின் புற்றுநோய்களை நீங்களே அழைக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த நோய்களின் வலிகள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த அனைத்து பாலியல் இன்பங்களையும் விட அதிகமாக இருக்கும். நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிற உங்களுடைய தீர்க்கதரிசி. மோசே இஸ்ரவேலுக்குக் கொடுத்தது போல, இந்த வார்த்தைகள் தேசங்களுக்குக் தேவன் கொடுத்த கட்டளைகளாக இருக்கின்றது.
26 மாதவிடாய் கணக்கீடுகளைப் பற்றி பேசுகையில், பாலியல் பொம்மைகளும் அவற்றின் உரிமையாளர்களும் நரகத்திற்குச் செல்வார்கள் என்று தேவனுடைய தூதர் என்னிடம் கூறியது உங்களுக்கு நினைவிருக்கும். அதைச் செய்யும் ஒரு கிறிஸ்தவப் பெண், கருத்தடைகளில் இருக்கும் அஞ்ஞானப் பெண்களைப் போல ஒரு பாலியல் பொம்மை. தேவனுக்கு முன்பாக, கருத்தடை அல்லது கருத்தடை நடைமுறைகளைச் செய்யும் ஒரு பெண் ஒரு பாலியல் பொம்மை மற்றும் அவளுடைய கணவன் ஒரு பாலியல் பொம்மையின் உரிமையாளர்.
27 மேலும், சகோதரி ரோசின் பற்றி நான் பேசும்போது, தவறிழைக்காதீர்கள். ஒரு தீர்க்கதரிசியின் ஊழியத்தில் மிகப் பெரிய பெண் அவருடைய மனைவியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. வில்லியம் சீமோரின் காலத்தில், அது சகோதரி லூசி ஃபாரோ, அவருடைய மனைவி ஜென்னி மூர் அல்ல.
28 வில்லியம் பிரான்ஹாமின் ஊழியத்தில் மிகப் பெரிய பெண் அவரது மனைவி மேடா அல்லது சகோதரி ஹாட்டி ரைட் அல்ல, ஆனால் அன்னா ஷ்ரேடர் என்று அழைக்கப்படும் ஒரு சகோதரி. அவள் ஒரு பெண்தீர்க்கதரிசி மற்றும் அவள் தான் வில்லியம் பிரான்ஹாமின் மரணத்தை அறிவித்தவள் மற்றும் அவர் ஏன் இறக்கப் போகிறார் என்பதையும் அறிவித்தவள். ஓஹையோ நதியில் வில்லியம் பிரான்ஹாமிடம் தேவதூதன் சொன்னதை, தீர்க்கதரிசனத்தின் மூலம் வார்த்தைக்கு வார்த்தை திரும்பச் சொன்னவள் அவள் தான். தீர்க்கதரிசனங்களுக்குப் பிறகு, அன்னா ஷ்ரேடர் வில்லியம் பிரான்ஹாம் போன்று அனைத்து வலிமையையும் இழக்க நேரிடும்.
29 தேவனின் தீர்க்கதரிசி இரண்டு முக்கிய காரணங்களுக்காக முதுமைக்கு முன்பே இறந்துவிடுகிறார்: ஒன்று அவர் தனது பணியின் வரிசையிலிருந்து விலகுவது அல்லது அவர் தனது பணியை முடித்துவிட்டார் மற்றும் தேவன் அவருக்கு வழங்கிய திறன்கள் இனி சபையை முன்னோக்கி நகர்த்த அனுமதிக்காது, மேலும் அவர் அடுத்த தீர்க்கதரிசியை தொந்தரவு செய்யலாம். ஆனால் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், அவர் இரட்சிக்கப்படுகிறார். அவர் தனது எல்லையை அடைந்து அமைதியாக இருந்தால், தேவதூதன் அவரை விட்டு வெளியேறுகிறார், ஆனால் அவர் உயிருடன் இருப்பார். யோவான் ஸ்நானகன் அமைதியாக இருக்கும் வரை, எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் கர்த்தராகிய இயேசு உண்மையிலேயே கிறிஸ்துதானா என்று அவர் கேட்கத் தொடங்கி, சந்தேகத்தை உருவாக்கினபோது , அவருடைய தலை வெட்டப்பட்டது.
30 மேலும் இதைப் பற்றி, ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் பட்டப்பகலில் கண்களைத் திறந்து தரிசனத்தை பார்க்காத ஒருவராக இருக்க முடியாது என்று நான் கூறியிருந்தேன், ஆனால் இதை என்னிடம் சொன்னது தேவதூதன் அல்ல என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். எனக்குப் பின் வரும் தீர்க்கதரிசிக்கு நான் எந்த வகையிலும் தடையாக இருக்க நான் விரும்பவில்லை.
31 நல்லது. ஜெபத்திற்காக பிரசங்க பீடத்திற்கு வருவதற்கு முன், நீங்கள் முதலில் உங்கள் பலிபீடத்தை சரிச்செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, உங்கள் தொலைபேசி அல்லது கணினி எப்போதும் தூய்மையற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்க வழிவகுத்து, அதனால் நீங்கள் சுயஇன்பத்தில் ஈடுபட்டால், நீங்கள் அதை விட்டு வெளியேறுவதை யாரும் தடுக்கவில்லை. உங்கள் கையோ அல்லது உங்கள் தொலைபேசியோ உங்களுக்கு கண்ணியாக இருந்தால், அதைத் துண்டித்து எறிந்து விடுங்கள் என்று கர்த்தராகிய இயேசு கூறினார்.
32 ஆனால் நீங்கள் இந்த செய்தியை பாத்திரராய் பின்பற்றினால், சாத்தான் உங்களை விட்டு விலகி இருப்பான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு வெளியே சென்றால், நீங்கள் புதரின் இருளில் காணாமல் போன சிங்கக் குட்டியைப் போல இருக்கிறீர்கள், சாத்தான் அஞ்ஞானிகளுக்கு செய்யும் அனைத்தையும் உங்களுக்குச் செய்வான். நமக்கு ஏற்படும் எந்த ஒரு துரதிர்ஷ்டமோ அல்லது மகிழ்ச்சியோ, அதற்குப் பின்னால் இருப்பது பாவம் அல்லது ஆசீர்வாதம் தான். தேவனிடத்தில் தற்செயலான நிகழ்வு என்பது இருப்பதில்லை. உதாரணமாக, உங்கள் மனைவி ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் போது, நீங்கள் இன்னும் அவளுடன் சயனித்தால், அவளது கர்ப்பத்தில் உள்ள குழந்தை தனது நிலையை மாற்றி, அறுவை சிகிச்சை (caesarean section) மூலம் பிறக்கலாம்.
33 இந்தச் செய்தி நீங்கள் மற்ற இடங்களில் பார்ப்பதிலிருந்து வேறுபட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒரு பாஸ்டர் அல்லது அப்போஸ்தலரின் நல்ல அல்லது கெட்ட நடத்தையை ஒரு சகோதரரால் கூரையின் மேலிருந்து பிரசங்கிக்க முடியும். நான் பாவங்களை அறிக்கையிடுவது பற்றியோ அல்லது தனது விடுதலையை தேடும் ஒரு ஏழை பாவியின் பலவீனத்தை பற்றியோ பேசவில்லை. நாம் அஞ்ஞானிகளிடமிருந்து வேறுபட்டவர்கள். உதாரணமாக, ஒரு அஞ்ஞானி உங்களுக்கு விரோதமாக கொண்டிருக்கிற காரியத்தை சொல்ல ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பான், அனால் அதே நேரத்தில் ஒரு கிறிஸ்தவன் தனது தேவனை ஆராதிப்பதற்கு முன் உங்களுடன் பேசுவார். மேலும் நான் ஒரு அஞ்ஞானி என்று சாத்தானோ அல்லது என் எதிரியோ என்னிடம் சொல்ல தேவையில்லை.
34 நாம் செய்தியின் வரிசை மற்றும் வரம்பிற்குள் தரித்திருப்போம் மற்றும் உலகெங்கிலும் உள்ள சபைகளின் அடிச்சுவடுகளோடு நடப்போம். நம்முடைய சபையில் நாம் என்ன செய்கிறோமோ அவைதான் உலகெங்கிலும் உள்ள அனைத்து சபைகளிலும் செய்யப்படுகிறது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு பாஸ்டரோ அல்லது ஒரு கூட்ட மக்களோ தங்களுடைய தீர்மானத்தை நம் மீது திணிக்கக்கூடாது.
35 ஒரு சபை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மற்றொரு சபையின் பாஸ்டர் அல்லது பிரசங்கியை அதன் குழுவில் சேர்க்க முடிவு செய்யலாம். அவர்களால் நீண்ட காலம் அங்கு இருக்க முடியாது. மேலும் அவர்களின் சில செயல்கள் கூட விபச்சார செயல்களாக கனவுகள் அல்லது தரிசனங்களில் காணப்படலாம்.
36 பாலியல் பாவம் அல்லது பிற பாவம் தொடர்பான தனது தண்டனையின் நேரத்தை முடித்த ஒரு சகோதரர், அந்த பெண்ணுடன் வந்து ஜெபத்தை பெறுவதற்க்காக காத்திருக்கும்போது, அன்றைய தலைவர் அவரை அனுமதித்தால் அறிக்கைகளில் தலையிடலாம்.
37 நல்லது, ஒரு நாடு மற்றொரு நாட்டிலிருந்து ஒரு தலைவரை இணையவழி ஆராதனைக்கு அழைக்க முடியாது. ஒரு நாடு அல்லது சபையின் ஆராதனை நாட்களையும் நேரத்தையும் தேர்ந்தெடுப்பது அல்லது மாற்றுவது அந்த நாடு அல்லது சபையை சார்ந்தது. மேலும் ஒரு பாடல் தலைவர் அவருடைய வழிநடத்துதலின் படி பாடல்களின் எண்ணிக்கையை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ செய்யலாம்.
38 தேவன் துதிக்கப்படுவதை தடுக்க நாம் யார்? சாந்தமும் தாழ்மையும் மரியாதையும் நம்மில் குடியிருக்கட்டும். உங்களிடம் ஆதாரம் உள்ள ஒரு விஷயத்திற்கு கூட, "சகோதரரே, நான் சொல்ல வரும் விஷய்த்திற்காக என்னை மன்னித்துவிடுங்கள், அனால் விஷயம் அப்படி இருக்காதா?" என்றவாறு கூறுங்கள். ஒரு சட்டவாதி அல்லது பிரச்சனை கர்த்தா என்று ஒருபோதும் அறியப்படாதீர்கள்.
39 மேலும், தங்கள் நிச்சயதார்த்தம் அல்லது திருமணத்தை யார் ஆசீர்வதிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது ஒரு தம்பதியை சார்ந்தது. மேலும் பிரசங்கபீடம் வரை செல்லும் எந்தவொரு பிரசங்கிக்கும் நிச்சயதார்த்தங்கள் அல்லது திருமணங்களை ஆசீர்வதிக்க உரிமை உண்டு. ஒரு பிரசங்கி, உத்தமமாய் அறிக்கையிட்டு, ஜெபத்தை பெற்றிருந்தால், அதற்கு பிறகு அவர் செய்த செயல்கள் செல்லுபடியாகும் என்று கருதப்படும், பின்னர், அவர் பெற்ற ஜெபம் ரத்து செய்யப்பட்டாலும் கூட அவை செல்லுபடியாகும்.
40 மேலும், தேவனின் மழை நீதிமான்கள் மீதும் அநியாயக்காரர்கள் மீதும் விழுகிறது. எனவே, பரிசுத்த ஆவியின் வரத்தை வெளிப்படுத்தியவரின் வாழ்க்கையை நீங்கள் தேட முடியாது. மேலும், யாராவது அந்திய பாஷைகளில் பாடுவது அல்லது ஜெபம் செய்வது சாத்தியமாகும். அவர் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் ஏற்கனவே பாடிக்கொண்டிருந்தால் அல்லது ஜெபம் செய்து கொண்டிருந்தால் நீங்கள் நிறுத்தக்கூடாது.
41 ஒவ்வொரு ஜீவ சிருஷ்டிகளின் ஆவியும் அதினுடைய சக்கரங்களில் இருந்ததாக எசேக்கியேல் தீர்க்கதரிசி கூறுகிறார். ஜீவ சிருஷ்டி தீர்க்கதரிசியாகும் மற்றும் அவரது நான்கு சக்கரங்கள் அவரைச் சுற்றி வரும் நான்கு ஊழியங்களாகும். எசேக்கியேல் 1:21-ன் ஜீவராசிகள் சென்றபோது சக்கரங்களும் சென்றன என்று கூறுகிறது; ஜீவராசிகள் நின்றபோது சக்கரங்களும் நின்றன; ஜீவராசிகள் பூமியிலிருந்து உயர்த்தப்பட்ட போது, சக்கரங்களும் அவற்றுடன் உயர்த்தப்பட்டன, ஏனென்றால் ஒவ்வொரு ஜீவராசியின் ஆவியும் அதன் சக்கரங்களில் இருந்தது. ஒரு உண்மையான ஆசாரியன் தனக்கு முன்னால் தீர்க்கதரிசி இருந்திருந்தால் அவன் எப்படிச் செய்திருப்பானோ அப்படியே செயல்படுகிறான். ஆரோன் அப்படிச் செய்திருந்தால், அவன் ஒரு பொன் கன்றுக்குட்டியை உருவாக்கியிருக்க மாட்டான்.
42 நீங்கள் இந்த செய்தியில் இருந்துக் கொண்டு ஒரு ஆசாரியனின் சீஷராகவும் இருக்க முடியும். ஒரு ஆசாரியனால் கொண்டு வரப்பட்ட ஒரு கோட்பாடு அந்த ஆசாரியனின் இறையியல் ஆகும், ஏனெனில் அது அவரது புத்திசாலித்தனத்தின் மூலம் பெறப்பட்டது. ஆனால் ஒரு தீர்க்கதரிசியால் கொண்டுவரப்பட்ட ஒரு கோட்பாடு இந்த தீர்க்கதரிசியின்படி இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு அல்லது நற்செய்தியாகும், ஏனெனில் அது தேவனிடமிருந்து வெளிப்பாட்டின் மூலம் அவருக்கு வருகிறது. ஒரு தீர்க்கதரிசி இறையியலைக் கொண்டிருப்பதில்லை.
43 மேலும் வரையறையின்படி, தீர்க்கதரிசியின் சீஷராக இருப்பது என்பது, இந்த உயிர் வாழும் தீர்க்கதரிசி கூறும் அனைத்தையும் நீங்கள் விவாதம் செய்யாமல் அல்லது எதையும் சரிபார்க்காமல் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதாகும். மேலும் ஒரு பாஸ்டர், அப்போஸ்தலர் அல்லது பிறரின் சீஷர் என்பது, எந்த விவாதமும் செய்யாமல் அல்லது எதையும் சரிபார்க்காமல் ஏற்றுக்கொள்வது அல்லது பின்பற்றுவதாகும். நீங்கள் தீர்க்கதரிசிக்கு அதையே செய்தாலும் அவை அப்படி தான். மேலும் ஒரு ஆசாரியனின் சீஷன் ஒரு அஞ்ஞானி.
44 மேலும், ஒரு ஆசாரியன் என்பவன் தன்னையே தேவனுக்கு பலியாகக் கொடுத்தவன். எனவே அவன் தனது வாழ்க்கைமுறையில் அஞ்ஞானிகளுடன் போட்டியிட முடியாது. ஆசாரியன் மற்றும் அவரது வீட்டின் வாழ்க்கை முறை அவரது சபை உறுப்பினர்களின் வாழ்க்கை முறையை விட மிஞ்சினதாக இருக்கக்கூடாது. சகோதரர்களின் தசமபாகங்கள் மற்றும் காணிக்கைகள், அவை என் மனைவி மற்றும் குழந்தைகள் விசேஷமாக இருப்பதற்காக அல்ல.
45 நல்லது. பாலியல் தீண்டல் என்பது திருமணத்திற்கு அப்பாற்பட்ட கை விரல்கள் மற்றும் பாலுருப்போடு உள்ள தொடர்பாகும். திருமணத்திற்குப் புறம்பான எந்தவொரு பாலுருப்புடனான தொடர்பை போலவே இதுவும் ஒரு பாலியல் பாவமாகும். மேலும் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ திருமணமானவரோடு வாழ்ந்தால் அது விபச்சாரமாகும். ஆனால் செய்திக்கு வரும் எந்தப் பெண்ணும் தன் கன்னித்தன்மையின் உதிரத்தைப் பார்க்காமல் அப்படியே இருந்தால் அவள் கன்னிப் பெண்ணாகக் கருதப்படுகிறாள்.
46 குடும்ப தகராறுகளில், உங்கள் தந்தையோடு கூட இருந்த ஒரு பெண்ணுக்கு எதிராக நீங்கள் ஒருபோதும் நிற்காதிருப்பீர்களாக, ஏனென்றால் அவளுடைய சாபம் உங்கள் தாயின் சாபத்திற்கு சமம். மேலும் காக்குவ் 146:107-ன் தொடர்பாக, நீங்கள் ஏமாற்றிய உங்களுடைய வாழ்க்கைத் துணையை அணுக முடியாத நிலையில், ஞானஸ்நானம் பெற்ற பிறகு மன்னிப்பிற்காக அவளிடம் கேட்க வேண்டும் என்ற உறுதியுடன் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் நீங்கள் சபையில் எந்தவித பொறுப்பையும் கொண்டிருக்கலாம். மேலும் சபையின் காணிக்கை பெட்டியானது பாஸ்டருக்கு செலுத்த அதாவது தேவனின் பணியுடன் தொடர்பில்லாத ஒரு கடனை செலுத்த பயன்படுத்த முடியாது.
47 மேலும் ஒரு பிரசங்கி, அவருடைய அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், காக்குவ் 17:37-ன் பாவத்தில் குற்றவாளியாக இருக்கும்போது, நீங்கள் அவரிடம் சொல்லுங்கள்: "சகோதரனே, நீங்கள் செய்த இத்தகைய செயல் நாட்டின் குழுவில் அறிக்கை செய்ய வேண்டிய பாவமாக இருக்கிறது." அவர் உங்கள் அப்போஸ்தலர், உங்கள் போதகர் அல்லது அவர் உங்களைப் போன்ற ஒரு ஒரு அப்போஸ்தலர் அல்லது போதகர் என்ற சாக்குப்போக்கின் கீழ் நீங்கள் அவரை தனிப்பட்ட முறையில் அழைக்கக்கூடாது. அவரை நாட்டின் குழுவிற்கு அழைத்துச் செல்வது உங்களுடைய கடமையாகும்.
48 அந்தச் சாபம் உங்கள் மீதும் உங்கள் வீட்டின் மீதும் வராதபடி, அவ்வாறு செய்வது தேவனுக்கு முன்பாக நீங்கள் செய்ய வேண்டிய கடமையாகும். மேலும் கண்டனம் சரியல்ல என்றால், நீங்கள் அறிக்கை செய்து ஜெபிக்கப்படுவீர்கள், ஏனெனில் அது பிழையால் ஏற்படும் பாவம். நீங்கள் ஒரு பிரசங்கியாக இருக்கும்போது, நீங்கள் ஒரு சபை உறுப்பினரை எப்படி அவர் மீது சத்தத்தை உயர்த்தி நடத்துகிறீர்கள், எனவே பிழையில் இருக்கும் எந்த ஒரு ஆசாரியரையும் அவரது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் நடத்த வேண்டும்.
49 நல்லது. இப்போது நான் கனவுகளின் அம்சத்தைப் பற்றி பேசி முடிக்கப் போகிறேன். பிசாசு கனவுகளையும் தரிசனங்களையும் தருகிறது என்று நான் அறிவேன். ஆனால் செய்தியில் இருந்து நன்றாக ஜீவித்து, உங்கள் கனவுகளின் அனைத்தையும் எளிதில் பிசாசுக்கு சுமத்தாதீர்கள். உங்களுக்கு ஒரு கனவு அல்லது தரிசனம் இருக்கும்போது, அதை நீங்களே புரிந்து கொள்ளும்படி ஆராயுங்கள்.
50 பல சகோதர சகோதரிகள் தங்கள் கனவுகள் மற்றும் தரிசனங்களை துல்லியமாக வியாக்கியானம் செய்ய துவங்கியிருக்கிறார்கள். எனவே, அனைவராலும் இதைச் செய்ய முடியும். ஒரு சபையின் தீர்க்கதரிசனம் போல் இல்லாமல், ஒரு கனவு முற்றிலும் தனிப்பட்ட வெளிப்பாடு. நான் உங்களுக்காக அவற்றை வியாக்கியானம் செய்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் உங்கள் கனவுகளை நீங்களே வியாக்கியானம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
51 ஒரு தீர்க்கதரிசி கனவுகளையும் தரிசனங்களையும் வியாக்கியானம் செய்யும் சிறப்புத் திறனுடன் பிறக்கவில்லை. அவர் படிப்படியாக இந்த திறனைப் பெறுகிறார் வெளிநாட்டு மொழியைக் கற்றுக்கொள்வதைப் போல. மேலும் தேவன் உங்களுடைய புரிந்து கொள்ளும் திறனுக்கு அப்பாற்பட்ட கனவுகள் அல்லது தரிசனங்களை கொடுக்கமாட்டார். இது நடந்தால், ஜெபித்து தானியேலைப் போல நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று தேவனிடம் கூறுங்கள். அவர் உங்களை விடுவிக்க வருவார்.
52 தானியேல் 8-ல், தரிசனங்களைப் பற்றிய புரிதல் கொண்ட பெரிய தீர்க்கதரிசி தானியேல் தரிசனத்தைப் புரிந்துகொள்ளவில்லை. தேவன் தானியேல் 8:16-ல் கூறினார்: "காபிரியேலே, அவருக்கு தரிசனத்தை விளங்க செய்". உங்களுடன் பேசும் நான், ஒரு நாள் அரட்டையைப் பற்றி, தேவதூதன் என்னிடம் "இந்தப் பள்ளித் தேர்வில்தான் பலர் அவர்களுடைய பள்ளித்தேர்வில் தோல்வியடைகிறார்கள்" என்று கூறினார். அந்த துல்லியமான தருணத்தில் தான் நான் நமது கனவுகளிலும் தரிசனங்களிலும் நாம் காணும் பள்ளித் தேர்வுகள் பரிசுத்தத்திற்கான தேடலில் நமது சோதனைகள் என்பதை புரிந்துகொண்டன்.
53 எனவே, உதாரணமாக, பண ஆசையிலிருந்து விடுபடுவதற்கான வைராக்கியம் பள்ளியின் கணிதத் தேர்வுக்கு ஒத்திருக்கிது. பொய்யிலிருந்து விடுபடுவதற்கான வைராக்கியம் பள்ளியின் அறிவியல் தேர்வுக்கு ஒத்திருக்கிறது. அகந்தையைப் போக்க வேண்டும் என்ற வைராக்கியம் உயிரியல் பள்ளித் தேர்வு. பாலியல் பாவங்கள், அரட்டை மற்றும் பாசாங்குத்தனம் ஆகியவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்ற வைராக்கியம் நம் கனவுகளில் உள்ள பள்ளி தேர்வுகள். சுவிசேஷத்தில் வைராக்கியம் பள்ளி தேர்வுக்கு ஒத்திருக்கிறது.
54 எனவே, ஒவ்வொரு சபையும் ஒரு தேர்வு மையமாகும். மேலும் ஒவ்வொரு வெளிப்படையான பாவ அறிக்கைகளும் ஒரு தேர்வில் தோல்வியடைந்தவர்கள் எழுந்து நிற்கும் முடிவுகளின் அறிவிப்பு, காக்குவ் 17:37-ன் படி அவர்களின் பட்டியல் பின்தொடரப்பட்டு. இது நடுவர் மன்றத்தின் ஆலோசனைக்குப்பிறகுப் பிறகு நாட்டின் குழுவில் வைக்கப்பட்டிருக்கும். ஒரு தீர்க்கதரிசியின் செய்தி அவரது காலத்தில் கடவுளின் சொர்க்கத்தில் நுழைவதற்கு முந்தைய பள்ளி வகுப்பாகும். இந்த வைராக்கியம் அல்லது முயற்சி நம் கனவுகளில் காலணிகளால் குறிக்கப்படுகிறது. ஒரு கனவில் நீங்கள் நிர்வாணமாக இருக்கும்போது அல்லது நீங்கள் காலணிகள் இல்லாமல் இருக்கும்போது, கனவின் மீதமுள்ள காரணத்தை தீர்மானிக்கிறது.
55 மேலும், தேவனிடமிருந்து வரும் கனவுக்கும் சாத்தானிடம் இருந்து வரும் கனவுக்கும் குறியீடுகளில் எந்த வித்தியாசமும் இல்லை ஏனெனில் அவை சாத்தானால் பயன்படுத்தப்படும் அதே தேவனின் அடையாளங்கள். இது வெவ்வேறு மதங்களின் கைகளில் இருக்கும் ஒரே வேதாகமத்தைப் போன்றது. இது ஒரே நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன்களைப் போன்றதாக இருந்தாலும் வெவ்வேறு நாகரிகங்கள் மற்றும் விளக்கங்களைக் கொண்டுள்ளது.
56 உதாரணமாக, ஒரு சிறிய ஓடை அல்லது ஒரு நதி வார்த்தையின் நீர் என்பதை நீங்கள் அறிவீர்கள், அதேசமயம் ஒரு ஆழமான நீர் பாவத்தின் உலகம். ஒரு குழாயிலோ அல்லது நீரோடையிலிருந்து வெளிவரும் தண்ணீர் என்பது உங்களுடன் பேசும் ஒருவரின் வார்த்தை, ஒருவேளை அரட்டையில் கூட இருக்கலாம். எப்படியிருந்தாலும், தண்ணீர் சுத்தமானது என்றால் அது சத்தியம் அல்லது அது அழுக்கு என்றால் அது பொய். தவறான வெளிப்பாடு சர்பத்தினால் உருவப்படுத்துகிறது.. நீங்கள் ஒரு சகோதரியாக இருந்தால், நீங்கள் ஒரு சபையின் வகையாக இருக்கலாம்.
57 உதாரணமாக, கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் வழிபாட்டுத் தலங்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். வெளிப்படையான பாவ அறிக்கை மூலமாக நமக்குள் இருக்கும் அசுத்தமானவைகளிலிருந்து விட்டொழிய வார்த்தையின் தண்ணீரால் நம்மைக் கழுவ நாம் அங்கே செல்கிறோம். மேலும் மலம் மற்றும் சிறுநீர் ஆகியவை அவற்றின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப பாவங்கள். எனவே ஒரு அழுக்கு கழிப்பறை என்பது பாவத்தில் அமர்ந்திருக்கும் ஒரு சபை.
58 உங்கள் தந்தையும் உங்கள் தாயும் குறிப்பாக உங்கள் பாஸ்டராக இருக்கிறார்கள் மற்றும் நீங்கள் கலந்துகொள்ளும் சபை அல்லது கூடுகையின் ஆவியாகும். ஒரு பாலம் என்பது உங்கள் சபை அல்லது சமூகத்தின் அடித்தளம் அல்லது குறிப்பாக நீங்கள் செவிக் கொடுக்கும் மதத் தலைவராகும். ஒவ்வொரு மத மனிதனும் தேவனை நோக்கி மனிதர்களின் நடையில் ஒரு பாலம். மேலும் ஒரு பாதையில் பல பாலங்கள் இருக்கலாம் மற்றும் குளவிகள் கொண்ட பாலத்தின் கீழ் கூட செல்ல முடியும். எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. உங்கள் வெவ்வேறு பிரசிங்கிகளும் ஒவ்வொருவரும் ஒரு பாலம். மற்றும் போப் உச்ச போப்பாண்டவர், அதாவது கத்தோலிக்க பாலங்களின் தலைவர்.
59 நீங்கள் அவசரப்பட வேண்டும் என்று தாமதம் சொல்கிறது. ஆனால் தொலைந்து போவது என்பது தேவனின் சித்தத்திற்கு வெளியே இருந்து அதை அறியாமல் இருப்பதாகும். வேறொரு துணையுடன் திருமணம் செய்துகொள்வது உங்கள் சொந்த மனைவியின் ஆவிக்குறிய நிலையை பிரதிபலிக்கும். இது உங்கள் பாஸ்டரின் இடத்தில் இருக்கும் ஒரு அஞ்ஞானியைப் போன்றது. நீங்கள் பெறும் பணம் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பொறுப்பாக இருக்கலாம். உங்கள் காலில் வளர்ந்த புல் போன்ற தாவரங்கள் உங்கள் ஒரு பகுதியாக மாறிய பாவமாகும், இது புற்றுநோய் போன்ற கடுமையான நோயால் உங்களின் மரணத்திற்கு வழிவகுக்கும். ஒருவருக்கு கடன் கொடுப்பது அல்லது பணம் கொடுப்பது என்பது செய்தியில் ஒரு பொறுப்பாக இருக்கலாம்.
60 முன்னாள் வசிப்பிடங்கள் அல்லது முந்தைய சபைகள் என்பது, செய்தியில் இருக்கும் போது, நீங்கள் இன்னும் உங்கள் அஞ்ஞான நிலையில் அல்லது உங்கள் முன்னாள் சபை அல்லது மதத்தின் ஆவிக்குரிய நிலையில் இருக்கிறீர்கள் அல்லது அது உங்கள் சபையின் ஆவிக்குரிய நிலையை குறிக்கிறது. உங்கள் கனவில் உள்ள இருள் என்பது நீங்கள் ஜீவிக்கிற ஆவிக்குரிய நிலையை குறிக்கிறது. ஆனால் பொதுவாக, இருள் என்பது முதலில் ஆசாரியத்துவத்தின் வளிமண்டலத்தைக் குறிக்கிறது அதே வேளையில் வெளிச்சம் தீர்க்கதரிசியின் செய்தியாகும். மேலும் போப் இருளின் இளவரசன்.
61 உங்கள் கனவில் உள்ள ஒரு போலீஸ்காரர், ஒன்று ஒரு தேவதூதனாகவோ அல்லது ஒரு சகோதரனாகவோ ஒரு பிரச்சனையைத் தீர்க்க அனுப்பப்படுகிறார், அதே சமயம் மிருகம் அல்லது கொள்ளைக்காரன் தேவனின் சித்தத்திற்கு புறம்பாக செயல்படுபவர். இந்த மிருகம் அல்லது கொள்ளைக்காரன் தேவனின் சித்தத்திற்கு புறம்பாக செயல்படும் எந்த ஒரு பாஸ்டராகவோ, அப்போஸ்தலனாகவோ அல்லது சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ இருக்கலாம்.
62 ஒரு சகோதரி ஒரு கனவில் தன்னை நிர்வாணமாகப் பார்க்க முடியும், அது தன்னைப் பற்றியது அல்லது அவளது சபையின் நிலையைப் பற்றியதாகும். ஒரு பேருந்து அல்லது பிற போக்குவரத்து வழி உங்கள் சபைகளாகும். அஞ்ஞானிகள் உட்பட பயணிகள் அனைவரும், அவர்களின் ஆவிக்குரிய நிலைக்கு ஏற்ப சகோதரர்கள் மற்றும் சகோதரிகள். மேலும் ஒரு சகோதரி ஒட்டுனராக இருப்பது, செய்தியிலிருந்து துண்டிக்கப்பட்டு தனியாக நடக்கும் ஒரு சபை.
63 லேவியராகமம் 15ன் படி, இரவு தீட்டுப்படுதல் என்பது மாதவிடாய் போன்ற ஒரு தூய்மையற்றது. மேலும் ஒரு இரவு தீட்டுக்கான காரணம் எப்போதும் இந்த அசுத்தத்திற்கு முந்தைய கனவில் காணப்படுகிறது. பாலுறவுடன் தொடர்பில்லாத அரட்டை போன்ற பாவம் உங்களை இரவு அசுத்தத்திற்கு இட்டுச் செல்லும். ஒரு மாம்ச சிந்தையுள்ள பாஸ்டர் அல்லது பிரசிங்கியால் கூட உங்களுக்கு இரவு அசுத்தங்களை கொடுக்க முடியும். ஒரு சகோதரனின் மோசமான நடத்தையை நீங்கள் பார்த்தும், நீங்கள் எதுவும் பேசாமல் இருந்தால் கூட, அது உங்களுக்கு இரவு அசுத்தங்களைத் தரும்.
64 ஆனால் நான் சொல்லும் இந்த எல்லா வியாக்கியானங்களும் கனவைப் பொறுத்தது. உதாரணமாக, நீங்கள் ஒரு அஞ்ஞானி அல்லது ஒரு சகோதரர் அல்லது ஒரு கொள்ளைக்காரரிடம் பணம் பெறலாம் அல்லது கொடுக்கலாம். பணம் ஒரு பொறுப்பு மற்றும் பொறுப்பை பெறுகிற ஒரு தகுதியற்ற சகோதரன் ஒரு கொள்ளைக்காரன்.
65 மேலும், ஒரு தொலைபேசி தேவனுடனான உங்கள் தொடர்பைக் குறிக்கும். நீங்கள் இருட்டில் இருக்கலாம், ஆனால் உங்கள் தொலைபேசியின் டார்ச் ஆன் செய்யப்பட்டது, அவை உங்கள் தொலைபேசியில் இருக்கும் தீர்க்கதரிசியின் பிரசங்கங்கள், ஆனால் இருள் உங்கள் ஆசாரியத்துவத்தின் கிரகணமாக இருக்கலாம், அதாவது செய்தியின் ஆவியில் இல்லாத உங்கள் போதகரின் பிரசங்கம் என்று சொல்லலாம்.
66 டார்ச் ஆன் செய்யப்பட்ட போன் என்பது பத்து கன்னிகையின் விளக்குகளின் வகையாகும். அதனால்தான், தேவனின் இந்த ஒளியால் உங்களில் யாரும் இழக்கப்பட மாட்டீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பத்து கன்னிகளின் விளக்கானது உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளனின் வார்த்தையாகும்.
67 எனவே செய்தியில் இருப்பதால், உங்கள் சபையின் சகோதரர்களும் தலைவர்களும் தீர்க்கதரிசி செய்தியாளனின் மரணத்திற்கு முன் உங்களை கிரகணத்தில் மூழ்கடிக்க முடியும். அவர்களின் பிரசங்கங்களும் செயல்களும் செய்தியை சட்டப்பூர்வமாக்குவதன் மூலமோ அல்லது அதை மென்மையாக்குவதன் மூலமோ, இங்கே செய்தியின் ஆவியாக இருக்கும் எண்ணெயை அதை மறைந்து விட செய்யும். சூரியன் தீர்க்கதரிசி மற்றும் சந்திரன் ஆசாரியத்துவம் அல்லது சபை.
68 இரண்டு வகையான கிரகணங்கள் உள்ளன. சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம். சூரிய கிரகணம் பகலில், சூரியனின் முழு முன்னிலையில் ஏற்படுகிறது. அந்த வேளையில் தான் ஆசாரியத்துவமாக இருக்கும் சந்திரன், பூமியில் உள்ள தேவனின் புத்திரர்கள் சூரியனின் ஒளியைப் பெறுவதைத் தடுக்கிறது.
69 மேலும் தீர்க்கதரிசி இல்லாத நேரத்தில் சந்திரகிரகணம் இரவில் நிகழ்கிறது, அந்த வேளையில் தான் மக்களில் உள்ள பிசாசின் புத்திரர்கள் சந்திரனைத் தடுக்கும்போது, அதாவது ஆசாரியத்துவத்தில் உள்ள தேவனின் புத்திரர்களை பூமியை ஒளிரவிடாமல் தடுக்கிறார்கள். சந்திரன் ஒளியை உற்பத்தி செய்வதில்லை, அது சூரியனின் ஒளியை பிரதிபலிக்கிறது. முழு படைப்பும் அதன் நிகழ்வுகளும் தேவனின் வார்த்தையே.
70 நல்லது, சில காலமாகவே, சாத்தானின் ஆட்கள் பிரச்சனையை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, காக்குவ் 51:40-ன் குற்றவாளியாக இருக்கும் ஒரு சகோதரி ஒரு தனிப்பட்ட பாடலைக் கொடுக்க முடியுமா என்று சாத்தான் கேட்கிறான், அதே நேரத்தில் செய்தி அவளை அவ்வாறு செய்வதைத் தடுக்கவில்லை. மேலும் வேதாகமம் கூட சொல்கிறது: சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவைத் துதிக்கட்டும்.
71 ஒரு சகோதரர் கூறும்போது: இந்தத் தலைவரோ அல்லது பிரசங்கியோ வேறொரு சபைக்குச் செல்லக்கூடாது, ஏனென்றால் அவர் பயணப் பிரசங்கி அல்ல, அவர் ஒரு பிரச்சனையாளர். நாட்டில் வேறொரு சபைக்கு அவரால் செல்ல முடியாவிட்டால், நாட்டின் குழுவில் அவரது செல்லுபடியாக்கம் என்ன? மேலும் அநேக வேலையில், பிரச்சனை கர்த்தா வெளிப்படையான பாவ அறிக்கை செய்வதில்லை.
72 இது போன்ற கேள்விகள்: "சகோதரர் பிலிப்பு, இது ஒரு தெரு வார்த்தையா? எந்த வருடத்தில் எல்லா மொழிகளின் தெரு வார்த்தைகளையும் பட்டியலிட்டு நான் முடிப்பேன்? தெரு வார்த்தையைப் பயன்படுத்துபவன் அதை தன் இருதயத்தில் உணர்வான். மேலும் கல்வியறிவு இல்லாதவரின் தெரு வார்த்தை கட்டாயமாக பல்கலைக்கழகப் பேராசிரியரின் தெரு வார்த்தையாக இருக்குமா? சிலர் வார்த்தைகள் மற்றும் முகபாவனைகளுடன் விளையாடுகிறார்கள். அவர்களில் பலர் எல்லா நாடுகளிலும் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்.
73 இந்த 20 வருடங்களில் நான் சொன்னதுதான், நமது காலத்தின் இரட்சிப்புக்காகக் தேவன் கொடுக்க விரும்பியது. எஸ்தரைப் போலவே அதைக் கடைப்பிடியுங்கள். இதுவே நம் தலைமுறைக்கு இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு. பாபிலோனிய மற்றும் மேதிய-பாரசீக பெண்களைப் போலல்லாமல், யேகாய் கொடுத்ததை மட்டுமே எஸ்தர் எடுத்துக் கொண்டாள் என்று எழுதப்பட்டுள்ளது.
74 இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். இது மிகவும் முக்கியம். காக்குவ் 154-ன் படி, ஒரு சபையில் அதிருப்தி அடையும் சில மக்கள் தங்கள் சொந்த சபையை உருவாக்க சமாதானமாக வெளியேறலாம். இது நடுராத்திரியில் கன்னிகைகளின் இரண்டு குழுக்களைப் பற்றி பேசும் மத்தேயு 25-க்கு ஏற்ப உள்ளது. அனைத்தும் சமதானமாகவும் மற்றும் அமைதியாகவும் நடந்தால், அவர்கள் வெவ்வேறு இணைய குழுக்களில் இருப்பார்கள். தேவன் ஏற்கனவே நீங்கள் பிரிந்ததாக பார்க்கிறார்.
75 காக்குவ் 152-ல் பரலோகத்தை நோக்கிய நடைபயணத்தின் தரிசனத்தில், கன்னிகைகளின் இரு குழுக்களும் ஒன்றாக இல்லை. மேலும் நடக்கும் எல்லாவற்றிலும் நான் தலையிடக் கூடாது, ஏனென்றால் இவை ஒவ்வொரு குழுவிலும் இரண்டு கன்னிகைகள் மற்றும் பல கன்னிகைகள் இருக்கக்கூடாது என்று நான் தேவனுக்கு எதிராகப் போராடுவது போல் இருக்கிறது. 24 ஏப்ரல் 1993-ன் தூதனுக்கு நான் உங்களைப் பரிந்துரைத்துள்ளேன். மேலும் ஒவ்வொருவரும் தனது சகோதரர்களைத் தொந்தரவு செய்யாமல் முன்னேற வேண்டும்.
76 பிரிவில் மட்டுமே, இடையூறு செய்த குற்றவாளி, நாட்டின் குழுக்களில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். பத்துக் கன்னிகைகள் ஒற்றுமையாக நடந்ததாக எழுதப்பட்டுள்ளது. எனவே, தொந்தரவு செய்பவர் சர்பத்தின் வித்து. நான் கூறும் யாவும் வெளிப்பாட்டின் தற்போதைய நிலை. மேலும் அனைத்தும் 24 ஏப்ரல் 1993-ன் தேவதூதனின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் உள்ளது. மேலும் நான் இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் போன்று ஆசாரியத்துவத்திலிருந்தும் மற்றும் மக்களிடமிருந்தும் விலகி அமைதியாக நிற்க வேண்டும்.
77 மந்தைக்கு இடையூறு விளைவிப்பதற்காக குறிசொல்லும் பிசாசுகள் கனவுகளையும் வெளிப்பாடுகளையும் ஆராதனையின் நடுவில் கூட அனுப்பும் என்று எனக்குத் தெரியும், ஆனால் இந்தச் செய்தியில் எந்த அவதூறு ஏற்பட்டாலும் நான் பயப்படுவதில்லை, ஏனென்றால் 24 ஏப்ரல் 1993-ன் தூதன் ஒவ்வொருவருக்கும் அவரவர் கிரியைகளின்படி வழங்குவார்.
78 மேலும், வெளிப்பாட்டின் மூலம், பிரசங்கத்தில் ஏறப்போகும் ஒருவரை, ஒரு பிசாசு அவரைத் தூண்டிவிட்டு அவரை பிரசங்கப் பீடத்திலிருந்து கீழே இறங்கச் சொல்வான் என்று பரிசுத்த ஆவியானவரால் எச்சரிக்கப்படலாம். மேலும் அவை நடந்தால், அது பிசாசு என்று சொல்லி மேலும் ஆராதனையை தொடர்வார்.
79 மேலும், பிரசங்க பீடத்தில் இருக்கும் ஒரு சகோதரர், அவர் செய்த பாவத்தை பற்றி தெரிவிக்க அவர் பிரசங்க பீடத்தில் இருக்கும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை, அதனால் அவர் பிரசங்க பீடத்திலிருந்து கீழே வரலாம். கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பிரசங்க பீடத்தில் உள்ள ஒரு சகோதரர் சபையின் நிலையைக் கேட்பார், அவர் பெரும்பான்மையின்படி செய்வார். மேலும், பிரசங்க பீடத்தில் இருக்கும் போது செய்த தவறின் தீவிரத்தை பொறுத்து ஒரு சகோதரர் பிரசங்க பீடத்தில் இருந்து இறங்குகிறார், வெறுமனே மன்னிப்பு மட்டும் தேவைப்படுகிற தவறுக்காக அவர் இறங்க வேண்டியதில்லை.
80 புத்தியில்லாத கன்னிகைகளும் கலப்பினக் கூட்டமும் எப்பொழுதும் தீர்க்கதரிசிகள் மற்றும் குறிசொல்லும் சொல்லும் பெண் தீர்க்கதரிசிகளால் மக்களைத் தொந்தரவு செய்வார்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட எவரும் இழக்கப்பட மாட்டார்கள் என்பதால் அமைதியாகவும் சாந்தமாகவும தரித்திருங்கள். மேலும் 2007-ல், சகோதரர் ப்ரெகோ டேரியஸிடம், நான் அவருக்கு முன் இறந்துவிட்டால், அவர் இனி ஒரு போதும் பிரசங்கிக்கவோ அல்லது தலையிடவோ கூடாது, அதனால் அவர் இரட்சிக்கப்படுவார் என்று கூறினேன்.
81 பிரசங்கத்தைப் பற்றி, சில சமயங்களில் உங்கள் சபையின் விருப்பப்படி தீர்க்கதரிசியின் பிரசங்கத்தை நீங்கள் ஒலிநாடாவில் கேட்கலாம்.
82 மேலும், நீங்கள் ஒரு வெளிப்பாட்டைக் கொடுத்த போது, அவை தீர்க்கதரிசனமாகவோ அல்லது தரிசனமாகவோ அல்லது வேறு ஏதாவதாக இக்கலாம், அது பெறப்பட்டாலும் அல்லது நிராகரிக்கப்பட்டாலும், நீங்கள் சொல்வதற்கு என்று எதுவுமில்லை. உங்கள் பணி நிறைவேறியது.
83 ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதில், நீங்கள் கேட்பதைக் கருத்தில் கொண்டு உங்கள் சொந்த புரிதலைக் காட்டிலும் ஒரு வெளிப்பாட்டைக் கொண்டு தவறாகப் புரிந்துகொள்வது நல்லது. மேலும் ஒவ்வொருவரின் இரகசிய வாழ்க்கையையும் நோக்கத்தையும் அறிந்த தேவன், உங்களுக்கு ஒரு வெளிப்பாட்டைக் கொடுக்க முடியும். மேலும் வெளிப்பாட்டில் உங்களை அடிப்படையாக கொண்டு நீங்கள் அனைவரின் வார்த்தைகளையும் வைத்து தீர்ப்பை வழங்குவீர்கள். வெளிப்பாட்டை உங்களுடன் மட்டுமே வைத்துக் கொள்ளவீர்களாக. அதேபோல், ஒரு சபையை பிரிப்பது அல்லது பிளவுபடுத்தும் போது, நீங்கள் முடிவெடுப்பதற்கு முன் நீங்கள் தேவனுக்காக காத்திருக்க வேண்டும்.
84 இனி முதற்கொண்டு, ஒவ்வொரு நாடும் அதன் தசமபாகங்களின் தசமபாகம், முதற்கனிகள் மற்றும் பல்வேறு காணிக்கைகளை நிர்வகிக்கவும் மற்ற எல்லா காரியதரிசிகளையும் மேற்பார்வையிடவும் 2 முதல் 3 பொதுப் பொறுப்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.
85 பணம் தொடர்பான வேறு எதையும் முதலில் அவர்களால் அங்கீகரிக்க வேண்டும். தசமபாகங்களின் தசமபாகங்களைத் தவிர, அதன் பிழைப்புக்காக போராடும் ஒரு சிறிய சபையிலிருந்து நீங்கள் எதையும் கோரக்கூடாது. மேலும் ஒரு காரியதரிசி, செய்திக்காகப் தொலைதூரத்தில் போராடுகிற, தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏழை சகோதரர்களைப் புறக்கணிப்பவராக இருக்கக்கூடாது.
86 தேவனின் பணிக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு துணிவுமிக்க சகோதரனை அதைரியப்படுத்த சோதிக்க வேண்டாம். ஆனால் அவர் தேவனுடைய வேலையைக் கைவிடாதபடிக்கு, உங்களுடையதை அவரோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
87 மேலும், தேவனிடமிருந்து அப்பத்தைப் பெற்ற ஒரு பாஸ்டர் இந்த அப்பத்தை எப்பொழுதும் ஏழை பாஸ்டரோடு அல்லது தொலைதூரத்தில் இருக்கும் பிரசங்கியுடன் அல்லது வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் இருக்கும் ஒருவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் எக்காரணத்திலும், துன்பப்படுபவர் இறுதிவரை உறுதியாக நிற்கட்டும், ஏனென்றால் அவருடைய வெகுமதி பரலோகத்தில் உள்ளது.
88 கொலம்பியாவில் அடிக்கடி காணப்படுவது போல் தனது தலையீடுகளால் பிரச்சனையை உருவாக்கி, ஆதரவாளர்களையும் கூட்டாளிகளையும் உருவாக்குவதில் விடாமுயற்சியுடன் இருக்கும் ஒரு சகோதரருக்கு பொறுப்பை வழங்காதீர்கள். பெரும்பாலும், பிரச்சனைகளைத் தவிர்க்க, ஒரு புத்திக்கூர்மையுடையவன் ஒப்புக்கொள்ளாமல் அமைதியாக இருக்க முடியும். ஒரு சகோதரருக்கு பதவி கொடுப்பதற்கு சாந்தம்தான் முதல் அடிப்படையாக இருக்க வேண்டும்.
89 பதவி நீக்கம் செய்யப்பட்ட அனைவரும், முன்னாள் அப்போஸ்தலர்கள் உட்பட, நீங்கள் அவர்களை திறமையானவர்களாகவும் நம்பகமானவர்களாகவும் காண்டால் மீண்டும் அலுவலகங்களுக்கு முன்மொழியப்படலாம். ஆனால் பாலியல் தொடர்பான பாவ வழக்குகள் உள்ள ஒருவருக்கு, நீங்கள் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
90 இப்போது, செய்தியில் தசமபாகம் செலுத்துவதில் பிரச்சனையில் இருந்த ஒரு சகோதரர், அதை மூன்று முறை திரும்பத் திரும்பச் செய்யவில்லை என்றால், அவருக்கு பணம் மற்றும் கடன் பிரச்சனை இல்லை என்றால், அவர் பாஸ்டராக முடியும். பணத்தோடு பிரச்சனை உள்ள எவரும் பாஸ்டராகவோ அல்லது காரியதரிசியாகவோ இருக்கக்கூடாது.
91 என்னைப் பொறுத்தவரை, தேவனின் வேலை மரணம் வரை உள்ளது. எனவே, ஒரு சகோதரர் தேவனுக்குப் பயந்து, நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால், எதையும் மறைக்காமல், மனத்தாழ்மையுடன் பாவ அறிக்கை செய்கிறார் என்றால், அவர் தனது நிலையிலேயே இருப்பார். தவறுகள் மற்றும் பலவீனங்கள் இருந்தபோதிலும் அவர் இறக்கும் வரை அவரது இடத்தில் இருப்பார். பிரான்ஹாம் கூடாரம் சகோதரர் காலின்ஸுக்கு செய்ததை நீங்கள் ஒரு போதகரிடம் செய்யக்கூடாது. நீங்கள் அதைச் செய்தால், அவர் சகோதரர் காலின்ஸைப் போல் சென்று அவருடைய சபையை நிறுவலாம்.
92 பரிசுத்த ஆவியின் உதவியோடு நீங்கள் ஒவ்வொரு முடிவையும் எடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, செப்டம்பர் 2022-ல், உகாண்டாவில் உள்ள லுங்குலு பிரதேசத்தில் சண்டே என்ற பெயருடைய ஒரு பாஸ்டர், விநியோகிக்கப்பட்ட தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பின் சிறு புத்தகங்களைப் பறித்தார். சேகரிக்கப்பட்ட சிறு புத்தகங்களைச் சுற்றி அவரது சபை உறுப்பினர்களை ஒன்றுச்சேர்த்து, அவர்கள் காக்குவ் பிலிப்பின் ஆவிக்கு எதிராக ஜெபம் செய்தனர். மேலும் பாஸ்டர் சண்டேவிற்க்கு பைத்தியம் பிடித்தது.
93 அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள அவர்கள் எனக்கு எழுதினர், ஏனென்றால், பைத்தியக்காரத்தனம் காரணமாக, பாஸ்டர் சன்டே ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்க முடியவில்லை , அல்லது அரானா பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக அவர் அவர்களைப் பின்தொடர்ந்து நடக்கவும் முடியவில்லை, மொசாம்பிக்கில் நடந்த வழக்கைப் போலவே, காக்குவ் 151: 21-ஐ நிறைவேற்றுவதற்காக இப்படி நடந்தது. அந்த விஷயத்தில், அவர்கள் பாஸ்டர் சண்டேவை ஸ்ட்ரெச்சரில் கட்ட வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். நான் கொடுத்த இந்த பதில், தேவன் உங்களுடன் இருப்பதால் நீங்கள் அதைக் கொடுக்க முடியும்.
94 20 ஆண்டுகளாக நான் உங்களை வழிநடத்தி வருகிறேன். நாம் உலகில் 1000 க்கும் மேற்பட்ட சபைகளில் இருக்கிறோம். ஐவரி கோஸ்டில் நடந்த நற்செய்தியின் ஊழியர்களின் வருடாந்திர கூட்டத்திற்காக, 17 டிசம்பர் 2022 அன்று கடாட்ஜியில் நான் பெற்ற அனைத்து அந்தஸ்துகளிலும் 300 க்கும் மேற்பட்ட பிரசங்கிகள் இருந்தனர். ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு சபையும், ஒவ்வொரு நாடும் பொறுப்பேற்று அவர்கள் வழிநடத்தும் படி செய்ய வேண்டிய கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். நான் எல்லாவற்றையும் வழிநடத்த முயற்சிக்க விரும்பினாலும், என்னால் முடியாது. மேலும் நான் அப்படி செய்தால் நான் மரிக்கும்போது, நான் பயப்படுவது நடக்கும்.
95 இந்த 20 ஆண்டுகால ஊழியத்தில் தேவன் என்னை நிறைவேற்ற அனுமதித்த அனைத்திற்கும் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை, காக்குவ் 154 என்பது ஆமென் மற்றும் 2014-ல் காக்குவ் 124 போலவே ஒரு காலகட்டத்தின் முடிவு ஆகும்.
96 மேலும், இந்த 20 வருடங்களில் எனக்கு ஊழியம் செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களில், சகோதரர்கள் கோஸ்ஸி யெலூ, பெட்ரோ அலிக்ஸோ, யானிக் அக்கா, டேனியல் நோகலேஸ், டியூடமர் கோஸ்டா, பாஸ்கல் விச்சி, அமன் மார்ட்டின், ஜோஸ் ஹெர்னாண்டஸ், சிஹ்லே என்கபிண்டே, மார்செல் ரேஸ், எலிஃபாஸ் நுண்டு, கிரேபின் கம்பாலே, ஜோயல் கஷாலா, அகோபே பெஞ்சமின், பிளான்சார்ட் மொசிலி, ரீகன் நசாம்பு மற்றும் பலர்.
97 நான், தேவனின் கிருபையால் என்னால் முடிந்தவரை, நான் செய்ய வேண்டியதைச் செய்தேன். இப்போது, நீங்கள் என்னிடமிருந்து பெற்ற செய்தியின்படி உங்களுக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ, அதைச் செய்யுங்கள். மேலும் செய்தியைப் பெற்ற ஒரு நாடு அதன் ஞானஸ்நானத்திற்காக மற்றொரு நாட்டைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
98 கழுகாக மாறிய கழுகுகுஞ்சு கூட்டை விட்டு தன் சொந்த சிறகுகளை கொண்டு பறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பெரிய கழுகுடன் இருக்கும் தேவன் தாமே உன்னோடு இருக்கும் அதே தேவன். நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும், பெரிய கழுகு உங்கள் கண்களுக்கு முன்பாக ஏற்கனவே செய்து விட்டது. மேலும், பூமிக்கு மேலே உயரத்திற்குச் செல்வதற்கான அனைத்துத் திறன்களும் உங்களுக்குள் உள்ளன. என்னைப் பொறுத்தவரை, பெரிய அரங்கத்தின் தரிசனத்திற்காக காத்திருக்க நான் திரும்ப மலைக்குச் செல்கிறேன்.
99 மேலும் நீங்கள், வெளிப்படுத்தல் 12:14-ன் இந்த சூடான பாலைவனத்தில், இந்த காற்று மற்றும் எரியும் மணல் புயல்களுடன், இந்த வெறுமையான மற்றும் அறியப்படாத உலகில், நீங்கள் செல்வீர்கள், ஆனால் உங்கள் பரிசுத்தம் மற்றும் தேவன் மீதான உங்கள் தேவ பயத்தின் காரணமாக, நீங்கள் இழக்கப்பட மாட்டீர்கள். உங்களை பெற்ற உன் தீர்க்கதரிசியாகிய நான், தேவனுக்கு உன்னை அர்ப்பணித்திருந்தேன், தேவனிடம் உன்னை நம்பி ஒப்படைக்கிறேன். ஆமென்.