1 இயேசு கிறிஸ்துவின் அடிமையான நான் தீர்க்கதரிசிகாக்குவ் பிலிப்பு, இந்த ஜூலை 8, 2023 அன்று,தேவதூதனின் வருகையின் முப்பதாவது ஆண்டின்நினைவாக பரிசுத்தவான்களுக்கு அனுப்பிய வெளிப்பாடு.
2 ஜூலை 8, 2002 முதல் செப்டம்பர் 28, 2014 வரை, எனதுபணியின் முதல் காலம் அல்லது கட்டத்தை நான்நிறைவேற்றிவிட்டேன். இந்த முதல் நிலையை, நான்தன்னந் தனியாக தொடங்கினேன். செப்டம்பர் 2014 முதல்மே 2016 வரை, அது புகலிடமாகவும் மற்றும்அமைதியானதாக இருந்தது..
3 மே 13, 2016 முதல் டிசம்பர் 18, 2022 வரை, எனதுபணியின் இரண்டாவது காலம் அல்லது நிலையை நான்நிறைவேற்றிவிட்டேன். இந்த இரண்டாவது காலம்அல்லது நிலையை நான் தனியாகத் தொடங்கினேன். டிசம்பர் 2022 முதல் கடவுளால் தீர்மானிக்கப்படும் தேதிவரை, அது மீண்டும் புகலிடத்தில் இருக்கும். நீங்கள்என்னை எவ்வளவாக என் இன்மையை (Missing) உணருகிறீர்களோ, நானும் உங்களை அதே அளவுஉங்கள் இன்மையை உணர்கிறேன். நீங்கள் என்னைஎவ்வளவு நேசிக்கிறீர்களோ அதே அளவு நானும்உங்களை நேசிக்கிறேன்.
4 இந்த நிர்ணயிக்கப்பட்ட தேதியிலிருந்து, இதுமூன்றாவது நிலையாக இருக்கும். எனது ஊழியத்தின்மூன்றாவது கட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமல்உள்ளது. அதற்கு முன், தேவதூதன் வருகையின்முப்பதாவது ஆண்டை தீர்க்கதரிசித்துவம் பற்றியபிரசங்கத்துடன் குறிப்பிடுவது எனது புகலிடத்திலிருந்துஎனக்கு நன்றாகத் தோன்றியது. அதனால்தான் நான் ஒருபிரசங்கத்தை "தீர்க்கதரிசித்துவம், கனவுகள் மற்றும்தரிசனங்கள் பற்றிய வழிமுறைகள்" என வழங்கவிரும்புகிறேன்.
5 பரிசுத்தவான்களுக்கான கனவுகள் மற்றும் தரிசனங்கள்பற்றிய இந்த அத்தியாயத்தை யெகோவா தேவன்எனக்குக் கொடுத்திருக்கிறார். வேதாகமத்தைப் போலவே, இந்த பிரசங்கமும் பல மக்களுக்கு சேவை செய்யும். நியமிக்கப்பட்ட நேரத்தில், அது திருச்சபையை ஒருபுதிய பரிமாணத்தில் வைக்கும். நீங்கள் அதற்குத் தயாராகஇருக்க வேண்டும் என்பதற்காகவே நான் அதைப் பற்றிஉங்களுக்குச் சொல்கிறேன்.
6 இந்த அத்தியாயத்தின் மூலம், அடையாளங்கள் இல்லாதபாலைவனத்தில் நாம் நடப்போம். ஆனால் நாம்இறுதிவரை செல்வோம், ஏனென்றால் தேவனுடையதூதன் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார். தேவன்இஸ்ரவேலரிடம் கூறினார்: "இதோ, உன்னை வழியில்காக்கவும், நான் உனக்காக ஆயத்தம் செய்த இடத்திற்குஉன்னைக் கொண்டு வரவும் ஒரு தூதனை உனக்குமுன்பாக அனுப்புகிறேன்". தானியேல், எசேக்கியேல், வெளிப்படுத்துதல் மற்றும் வேதாகமத்தின் பலபுத்தகங்கள் சின்னங்கள் மற்றும் புதிர்களின் கதைகள். வேதாகமம் சின்னங்கள் மற்றும் புதிர்களில் முடிவதுபோலவே, மெய் திருச்சபையும் சின்னங்கள் மற்றும்புதிர்களின் சூழலில் முடிவடையும்.
7 நான் இந்த பிரசங்கத்தை காக்குவ் 146 போன்ற ஒருஅத்தியாயத்தில் கொடுக்க விரும்பினேன், ஆனால்இரண்டு வெவ்வேறு அம்சங்களைக் கொண்டிருப்பதால், இதை இரண்டு பகுதிகளாக வழங்குவது நல்லது என்றுநினைத்தேன். மூல விசுவாசத்திற்கு திரும்புவதற்கானதீர்க்கதரிசித்துவம் பேரில் வழிமுறைகளைப் பற்றி நான்இங்கே பேசப் போகிறேன், பின்னர் நான் இரண்டாவதுஅத்தியாயத்தில் கனவுகள் மற்றும் தரிசனங்களைப் பற்றிபேசுவேன். இது மோசேயின் நியாயப்பிரமாணத்தின்இரண்டு அட்டவணைகள் அல்லது வேதாகமத்தின்இரண்டு ஏற்பாடுகளைப் போல இருக்கும். அவை "வில்மற்றும் அதன் அம்பு" போல ஒன்றை ஒன்று சார்ந்துஇருக்கும். கனவுகளும் தரிசனங்களும்தீர்க்கதரிசித்துவத்தின் அம்புகள்.
8 தேவனில் விசுவாசம் இல்லாதவர்கள் உட்பட பூமியில்உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் கனவுகள் அல்லதுதரிசனங்களை கொண்டுள்ளனர். அவை கடவுளுக்கும்மனித குலத்துக்கும் இடையிலான தொடர்பு சாதனங்கள். கனவுகளும் தரிசனங்களும் மனித குலத்திற்க்கானகடவுளின் காணொளிகள். மேலும் அவை புதிர்கள், உவமைகள் போன்ற ஒரு பாஷை. ஆப்பிரிக்காவிற்கானநேரத்தில்தான் தேவன் கனவுகள் மற்றும் தரிசனங்களைப்பற்றி பேசுகிறார், ஏனென்றால் ஆப்பிரிக்காஉவமைகளின் நிலம். மேலும் எத்தியோப்பிய மந்திரியைப்போலவே, கடவுள் பிலிப்புவை உங்களுக்கு முழுமையானவெளிப்பாட்டிற்காக அனுப்பும் வரை இந்த இரண்டுவார்த்தைகளைப் படித்து தியானியுங்கள்.
9 சர்வ வல்லமையுள்ள தேவனைப் போலவே, எகிப்திய, கிரேக்க, பாபிலோனிய, அரேபிய, இந்து, சுமேரிய மற்றும்ஆப்பிரிக்க கடவுள்கள் கூட அனைவரும் தங்கள்மக்களிடம் பேசியது கனவுகள் மற்றும் தரிசனங்கள்மூலமாக இருந்தது. இது கடவுளுக்கும் மனிதர்களுக்கும்இடையே உள்ள புனித மொழி. இன்று நம்மைச் சுற்றிலும்நாம் காணும் கோவில்கள், சபைகள், தேவாலயங்கள், மசூதிகள் அனைத்திலும் இந்த கோடிக்கணக்கானகடவுள்கள் இருக்கிறார்கள்.
10 பூமியில் உள்ள ஒவ்வொரு கோயிலும், தேவாலயமும், ஜெப ஆலயமும் அல்லது மசூதியும் பாகால், ரிம்மோன், தாகோன் அல்லது பிற கடவுள்களுக்கான பலிபீடமாகஇருக்க வேண்டும், நீங்கள் அவர்களுக்கு என்ன பெயர்வைத்தாலும்; அது பிரம்மா, விஷ்ணு, சிவன், புத்தர், அதோனாய், இயேசு கிறிஸ்து, அல்லாஹா அல்லதுமற்றவைகளாக இருக்கலாம். மேலும் அந்த தெய்வங்கள்தான் அந்தக் கோயில்கள், தேவாலயங்கள், சபைகள்மற்றும் மசூதிகளின் உறுப்பினர்களுக்கு கனவுகளைக்கொடுக்கிறது.
11 விஞ்ஞானம், மாயவித்தை, பணம், அறிவுத்துறை, அரசியல், இசை, விளையாட்டு, நம்பிக்கைகள் மற்றும்மதங்கள், குறி சொல்லுதல் மற்றும் வாழ்க்கையின்அனைத்து பகுதிகளிலும் கோடிக்கணக்கான கணக்கானபிசாசுகள் செயல்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள். எனவே, அந்த பகுதிகள் தொடர்பாகநீங்கள் கடவுளையோ அல்லது சாத்தானையோகலந்தாலோசித்தால், சாத்தான் தான் உங்களுக்குபதிலளிப்பான்.
12 உதாரணமாக, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுபவர் யார் என்பதை, வெளிப்படுத்தல் மூலம்முன்கூட்டியே தெரிந்துகொள்ள நீங்கள் முயன்றால், நீங்கள் யாராக இருந்தாலும், எந்தக் கடவுளையோஅல்லது நபரையோ கண்டு பிடிக்க நினைத்தாலும்உங்களுக்குப் பதில் சொல்லுவது அரசியலின் பிசாசுதான். கடவுள் ஒரு தீர்க்கதரிசிக்கு ஒரு நாள், இன்னஇன்ன நபர் ஜனாதிபதியாக இருப்பார் என்பதைவெளிப்படுத்த முடியும், ஆனால் அதைப் பற்றி கடவுளிடம்கேட்பது இந்த தீர்க்கதரிசியை சார்ந்தது அல்ல. கடவுள்அதை வெளிப்படுத்தும் போது, இந்த தீர்க்கதரிசி அதைச்சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.
13 என்னில் விசுவாசம் கொண்டுள்ள நீங்கள் அனைவரும்அரசியல் கணிப்புகளில் இருந்து விலகி இருங்கள். ஆனால் யாராவது அவ்வாறு செய்ய விரும்பினால், அவருக்குத் தெரியப்படுத்துங்கள், ஒரு நாட்டின்தேர்தல்களின் போது, மக்கள் இன்னும் வேட்பாளர்களைஅறியாத போது, ஒரு உண்மையான தீர்க்கதரிசிவெற்றியாளரின் பெயரை அறிவிக்கிறார். ஆனால்வேட்பாளர்களின் பெயர்கள் தெரிந்தவுடன், ஒருதீர்க்கதரிசிக்கு வேறு எதுவும் சொல்வதற்க்கு இல்லை. அவர் அமைதியாக இருக்க வேண்டும். இதுகணிப்பாளர்கள் மற்றும் லாட்டரி சீட்டு விளையாடுபவர்கள்பேச வேண்டிய நேரம்.
14 எனவே கடவுளுக்கு முன்பாக உங்களுடைய இருதயம்சரியாக இல்லை என்று நீங்கள் அறிந்தும் நீங்கள்கடவுளிடம் ஆலோசனை செய்தால், பிசாசுகள் தான்உங்களுக்கு பதில் கூறும். ஒரு தீர்க்கதரிசியாக, ஒருதுண்மார்க்கன் உங்கள் மூலம் கடவுளிடம் ஆலோசனைகேட்க வந்தால், முடிந்தால், ஜெபிக்கும் முன் அந்ததுன்மார்க்கனிடம் அவனுடைய செயல்களைப் பற்றிமுதலில் பேசுங்கள்.
15 எப்பொழுது நீங்களோ அல்லது உங்கள் சபைகளோ அல்லது மதங்களோ உங்கள் காலத்தில் உயிர்வாழும்தீர்க்கதரிசியை நிராகரித்தீர்களோ, அப்பொழுதே நீங்கள்கடவுளை நிராகரித்தீர்கள் என்று அர்த்தம். இந்தவிஷயத்தில், உங்கள் வெளிப்பாடுகள் எப்பொழுதும்நிறைவேறினாலும், அவற்றை நம்ப வேண்டாம். அதனால்தான், தன்னை நிராகரித்த இஸ்ரவேலரிடம்எரேமியா தீர்க்கதரிசி சொன்னார்: "நீங்கள் காணவிரும்பும் சொப்பனங்களுக்கு நீங்கள் செவி சாய்க்கவேண்டாம்".
16 எனவே, இஸ்லாம், கிறிஸ்தவம், யூத மதம், இந்து மதம், பெளத்த மதம், சமண மதம், கன்பூசிய மதம், தெள மதம், ஷின்டோ மதம், பஹாய் அல்லது சீக்கிய மதத்தைச்சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், அவருடையகாலத்தின் உயிர் வாழும் தீர்க்கதரிசியைப் பின்பற்றாமல், கடவுளிடம் ஆலோசணை செய்தால் அங்கு அவருக்குப்பதில் சொல்லுவது பிசாசு தான். ஏனெனில் இந்தமதங்கள் அனைத்தும் சாத்தானுக்கு சொந்தமானது. உங்கள் காலத்தின் உயிருள்ள தீர்க்கதரிசியை நம்பும்நீங்கள், கடவுள் கண்டுபிடிக்காத பாதையில் நீங்கள்சென்றால், பிசாசு உங்களுக்கு வெளிப்பாடுகளைத் தரஅனுமதிக்க முடியும்.
17 இறுதியாக, தேவனுடைய சித்தத்தில் இருக்கும்பொழுது, பிசாசும் உங்களுக்கு வெளிப்பாடுகளை வழங்கதேவனால் அனுமதிக்க முடியும். இது உங்கள்சோதனைகளின் ஒரு பகுதியாகும். சோதனையோஅல்லது பரீட்சையோ இல்லையெனில், பள்ளித்தேர்வேஇல்லாத பள்ளிப் பையனைப் போல நீங்கள் இருப்பீர்கள். பள்ளித் தேர்வு இல்லாமல் அடுத்த வகுப்பிற்கு எப்படிதேர்ச்சி பெறுவீர்கள்? யோபுவைப் போலவே, நீங்கள்கடவுளுடைய சித்தத்தில் இருந்தாலும், கடவுளுக்குப்பயந்தாலும், சாத்தானால் உங்களைச் சோதிக்க முடியும். நீங்கள் அதை அறிந்திருக்க வேண்டும்.
18 இவ்வாறு, கனவுகள் மற்றும் தரிசனங்கள்கடவுளிடமிருந்தோ அல்லது பிசாசிடமிருந்தோவருகின்றன, மேலும் கடவுளிடமிருந்தோ அல்லதுபிசாசிடமிருந்தோ என்ன வருகிறது என்பதை அறியதீர்க்கதரிசியானவர் மிகப்பெரிய வழி ஆகும். இதனால்தான் தீர்க்கதரிசிகள் இன்றியமையாதவர்கள். அவர்கள் பூமியில் தேவனுடைய சத்தியம் மற்றும்சித்தத்திற்கு உத்தரவாதம் அளிப்பவர்கள். நீங்கள்எவ்வளவு பெரிய பாஸ்டர்களாக இருந்தாலும் சரி, சபையாக இருந்தாலும் சரி, நீங்கள் தேவ பயம்கொண்டிருந்தால், நீங்கள் ஒரு தீர்க்கதரிசியைகட்டாயமாக தேடுவீர்கள், ஏனென்றால் தீர்க்கதரிசிபரிசத்தவான்களின் முற்றிலுமானவர்.
19 திருச்சபையின் அணிவகுப்பு நான்கு ஜீவன்களின்அம்சங்களின்படி வெவ்வேறு காலகட்டங்களில் உள்ளது: சிங்கம், கன்று, மனிதன் மற்றும் இப்போதுவெளிப்பாட்டின் பரிமாணமான கழுகு. கர்த்தராகியஇயேசு தனது தேவாலயத்தை ஒரு நித்திய ஆரம்ப பள்ளிவகுப்பாக, ஒருபோதும் பாஸ்டர் என்று அழைக்கப்படும்ஒரு பள்ளி ஆசிரியருடன் நிறுவவில்லை.
20 உண்மையான திருச்சபையில், சுண்ணாம்பு மற்றும்கொழுப்பு சத்து கொண்டு வருவதற்கு மொழிகளையும்அறிவியலையும் கற்பிக்க வரும் தீர்க்கதரிசியின் ஊழியம்இருக்க வேண்டும். பிறகு அப்போஸ்தலர் என்ற மற்றொருஆசிரியர் வெளிமம் (Magnesium) மற்றும் சாம்பல்(Potassium) சத்துடன் வருவார். அப்போது பாஸ்டர் தனதுஊழியத்தின் படி சோடியம் அல்லது மற்றவற்றைக்கொண்டு வர கணிதம் கற்பிக்க வருவார். சோடியம்என்பது ஒரு உப்பு; இது முழு ஆசீர்வாதங்கள் மற்றும்கிறிஸ்தவ நற்பண்புகள். மேலும் குறிச் சொல்லுதல் ஒருகெட்ட கொழுப்பு. பின்னர் ஏரியத்துடன் (Phosphorus) போதகர், பின்னர் சுவிசேஷகர், மற்றும் பல.
21 அப்போஸ்தல சகாப்தத்தில், தேவன் முதலில் அப்போஸ்தலர்களை நிறுவினார், அதாவது தேவன் அப்போஸ்தலர்களின் ஆவிகளின் தேவன் என்று பவுல் கூறினார். ஆனால் பத்மு தீவில், காலத்தின் முடிவில், தேவன் தீர்க்கதரிசிகளின் ஆவிகளின் தேவன் என்று யோவான் கூறினார், அதாவது தேவன் முதலில் தீர்க்கதரிசிகளை நிறுவினார். கனவுகள் மற்றும் தரிசனங்களின் பரிமாணத்தில் அப்போஸ்தலர்களின் தேவனிலிருந்து தீர்க்கதரிசிகளின் தேவனுக்கு நகர வேண்டிய நேரம் இது.
22 ஒரு தீர்க்கதரிசி சொல்லும் எல்லாவற்றின் ஆன்மீகஅம்சத்தையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், அவர்அதை சரீர மட்டத்தில் சொன்னாலும் கூட. ஒரு மாலை, ஒரு சகோதரி என்னிடம், "சகோதரர் பிலிப்பு, ஒருகனவில், நீங்கள் இப்படியாக கத்துவதைக் கண்டேன்: 'காக்குவ் தானியேல், இங்கே வா!' உங்கள் மகன் காக்குவ்உங்கள் முன் நின்றார். நீங்கள் அவரிடம், "காக்குவ், நான்உனக்கு அம்பு எய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்தேன், ஆனால் இப்போது நீயே அம்பு எய்ய வேண்டும்!" நான்சகோதரியிடம் சொன்னேன்: சகோதரி, இது சகோதரர்யானிக். உங்கள் கனவு நான் அவருக்கு வழங்கியஅறிவுரைகளின் சுருக்கமாகும். ஆனால் மற்றொருசகோதரர் வேறு எந்த நாட்டிலிருந்தும் எழுந்துஅவருக்குப் பதிலாக காக்குவ் பிலிப்பு தானியேல் ஆகமுடியும்.
23 தேவன் ஆபகூக் தீர்க்கதரிசியிடம் அவருடைய அம்பின்ஒளியால் பூமி நடக்கும் என்று கூறினார். தீர்க்கதரிசிசெய்தியாளனுடைய அதே தேவன், சிறியதீர்க்கதரிசிகளுக்குப் பொய்யிலிருந்து உண்மையைப்புரிந்துகொள்வதற்கும் அல்லது விளக்குவதற்கும் அதேதிறனைக் கொடுப்பார். ஒரு தீர்க்கதரிசியாக, யாராவதுஉங்களுக்கு பிசாசின் கனவைச் சொன்னாலோ அல்லதுதவறான விளக்கம் கொடுத்தாலோ, உடனடியாகவோஅல்லது பிற்காலத்திலோ அதை அறியும் திறனைக் கடவுள்உங்களுக்கு வழங்குவார்.
24 பூமியில் நமக்கு எதுவும் நிகழும் முன், கடவுளிடமிருந்துஒரு வெளிப்பாடு அல்லது எச்சரிக்கை எப்போதும்இருக்கும். எடுத்துக்காட்டாக, வில்லியம் பிரான்ஹாமின்செய்திக்கும் நடுராத்திரி செய்திக்கும் இடையிலானமிகப்பெரிய நிகழ்வு வில்லியம் பிரான்ஹாமின் செய்தி மீதுஇருள் மூழ்கியது. இருப்பினும், வில்லியம் பிரான்ஹாமின்செய்திக்கு மேல் இருள் வரக்கூடாது என்பதற்காகஏவால்ட் ஃபிராங்கிற்கு தேவன் ஒரு எச்சரிக்கைகொடுத்தார்.
25 1962 இல், கடவுள் ஏவால்ட் ஃபிராங்கிடம் கூறினார்: "என் வேலைக்காரனே, எந்த உள்ளூர் சபைகளையும் திறக்க வேண்டாம்! பாடல் புத்தகத்தை உருவாக்கவேண்டாம்". தேவன் தனது தீர்க்கதரிசிகளான நேச குமரர்கள் மூலமாக கூட பேசுவார் என்று ஏவால்ட்ஃபிராங்க் அறிந்திருக்க வேண்டும். எனவே சீசர் ஏவால்ட்ஃபிராங்க் சொல்ல வேண்டும்: "ஓ, அந்த சத்தம் என்னிடம்உணவைச் சேமிக்கச் சொன்னது, அது சரீர பிரகாரமானஉணவு அல்ல. நான் பாடகனோ, பாடலாசிரியரோஇல்லாத போது, இதே குரல் என்னைப் பாடல் புத்தகம்எதுவும் உருவாக்க வேண்டாம் என்று எப்படிச் சொல்லமுடியும்! இது இன்னொரு புதிர் இல்லையா? பாடல்புத்தகத்தின் அர்த்தம் என்ன என்பதை நான்புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்."
26 பின்னர் தேவன் எவால்ட் ஃபிராங்கிடம் அந்த பாடல்புத்தகம் அவருடைய சுற்றறிக்கை கடிதங்கள் என்றுசொல்லியிருப்பார். ஒரு செய்தியை கொண்டிருக்கும்எவருக்கும் அவரது சொந்த உள்ளூர் சபை உள்ளது, அதுஅவர் இறந்த பிறகு அவருக்கு சொந்தமானது. அங்கே, தேவன் எவால்ட் ஃபிராங்கிடம் கூறினார்: "உன்சுற்றறிக்கை கடிதங்களை நிறுத்து! உள் சொந்தசெய்தியை உருவாக்க வேண்டாம், அதினால் வில்லியம்பிரான்ஹாமின் செய்தியும் மற்றும் அவருடையகூட்டத்தாரும் உன்னுடைய மரணத்திற்குப் பிறகுஉன்னுடையதாக இருக்கும், மேலும் நீ பரதீசில்அவருடைய கூட்டத்தாறோடு இருப்பாய்".
27 நல்லது. தேவதூதன் இங்கே இருக்கிறார். இந்ததேவதூதனை நான் பலமுறை பார்த்திருக்கிறேன் ஆனால்அவன் முகத்தை பார்த்ததில்லை. யாத்திராகமம் 33:20-ல், இந்த தேவதூதன் மோசேயை அவருடைய முகத்தைப்பார்க்க அனுமதிக்கவில்லை, ஏனென்றால் யூதர்களுக்குமோசே அவரை விவரிக்கும் போது அவர்கள் தேவனின்உருவங்களை உருவாக்கத் தொடங்குவார்கள்.
28 தேவன் மோசேயிடம் கூறினார்: "என் முகத்தைஉன்னால் பார்க்க முடியாது; நீ கன்மலையின் மேல்நிற்பாய், நான் கடந்து செல்லும் வரை, நான் என் கையால்உன்னை மூடுவேன். பிறகு நான் என் கையை எடுப்பேன், நீஎன் முகத்தைப் பார்க்க மாட்டாய், ஆனால் நீ என்னைப்பின்னால் பார்ப்பாய்." ஆனால், பின்னர் மோசேதேவதூதனின் முகத்தை விவரிப்பதைத் தவிர்க்கும்அளவுக்கு முதிர்ச்சி அடைந்தவனாக இருந்தான், மோசேதேவதூதனின் முகத்தைப் பார்த்து அவனுடன் நேருக்குநேர் பேசினான்.
29 வில்லியம் பிரான்ஹாம் கூறினார்: "அவர் எனக்கு ஒருமனிதனாகத் தோன்றியபோது, மனிதர்களின் முகத்தில்நீங்கள் காணாத தோற்றத்தை அவர் கொண்டிருந்தார். நான் அவருடைய முகத்தைப் ஒரு போதும்பார்த்ததில்லை. அவருடைய முகம் மென்மையாகஇருந்தது." நீங்கள் பார்க்கிறீர்களா? அவரது வாய், மூக்குமற்றும் கண்களை உங்களால் விவரிக்க முடியாது. நீங்கள்அவருடைய முகத்தைப் பார்க்கிறீர்கள், ஆனால்விவரங்களைப் பார்க்க முடியாது. 1993-லிருந்து நான்அவரை அப்படித்தான் பார்க்கிறேன். அது யெகோவாவின்தூதன்.
30 ஒருமுறை, சகோதரி ரோசின் தனது தொலைபேசியில்ஒரு பிரச்சனையைக் காட்ட வந்தபோது, இந்ததேவதூதன் என்னிடமிருந்து விலகிச் செல்வதை நான் ஒருதரிசனத்தில் கண்டேன். மேலும் அவர் 30 முதல் 40 மீட்டர்தொலைவில் சென்று நின்றார். சுமார் 40 மீட்டர்தொலைவில் அவர் என்னை எதிர்கொண்டபோதும் கூடநான் அவருடைய முகத்தைப் பார்க்கவில்லை.
31 மத்தேயு 25:6-ன் செய்தியாளன், அவர் தான், ஏப்ரல் 24, 1993-ன் தேவதூதன், காக்குவ் பிலிப்புவாகிய நான் அல்ல. அதே ஏழாவது தேவதூதன், லவோதிக்கேயாவின்செய்தியாளன், ஏழாவது முத்திரையில் வில்லியம்பிரான்ஹாமுக்கு "நான் உன்னை அங்கே சந்திப்பேன்" என்று கூறியதன் படி கூடாரத்தின் கீழ் ஊழியத்தைநிறைவேற்றுகிறார்.
32 அவர் வெளிப்படுத்துதல் 1:16-ல் கர்த்தராகியஇயேசுவின் வலது கரத்தில் உள்ள ஏழாவது நட்சத்திரம்மற்றும் ஏப்ரல் 24, 1993 அன்று தேவனின்பிரசனத்திலிருந்து அனுப்பப்பட்டவர். எனக்கு முன்புவில்லியம் சீமோர் மற்றும் வில்லியம் பிரான்ஹாமுடன் இருந்ததைப் போலவே அவர் என்னைத் தோழனாகஇருக்கும் படியாக எடுத்துக் கொண்டார். என்னுடையபங்கு முடிந்ததும், இதே லவோதிக்கேயா சபையின்காலத்தில் உள்ள வேறொருவரைத் தன்னுடையதோழனாக எடுத்துக் கொள்வார்.
33 பரலோக தேவதூதன் மற்றும் தீர்க்கதரிசிசெய்தியாளன், இது ஒரு ஐரோப்பியர் ஒரு கறுப்பினஆப்ரிக்கரை தனது தோழனாக அல்லதுஆப்பிரிக்கர்களுக்கு மத்தியஸ்தராக பயன்படுத்துவதைப்போன்றது. அவர் என்னிடம் சொல்வதை நான்கட்டளைகளாக எடுத்துக்கொள்கிறேன். நான் நன்றாகநடந்து கொண்டால், நான் அவருடைய தோழன்; ஆனால்நான் மோசமாக நடந்து கொண்டால், நான் தண்டிக்கப்படவேண்டிய பிடிவாதமான நாய்.
34 ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனின் ஒவ்வொரு ஊழியமும் தேவ தூதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான செயலாகும். மேலும் இந்த தேவதூதன் தான் என்னசெய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சொல்கிறார். இந்த அர்த்தத்தில்தான் எனது புகைப்படங்களை ஒரு வீட்டில், அல்லது டி-சர்ட்களில், அல்லது வேறு எதிலும் அல்லது அட்டைப்படமாகவோ அல்லது சுயவிவரப் படமாகவோ வைப்பதை நான் தடை செய்துள்ளேன். அவை அருவருப்பானவை. மேலும், எனது வேண்டுகோளைத் தவிர, இனி என்னுடைய புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ எடுக்க வேண்டாம்.
35 ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனாக இருக்க, நீங்கள்பிறப்பதற்கு முன்பே அதற்கு விதிக்கப்பட்டிருக்கவேண்டும். குறிப்பிட்ட நேரத்தில், ஒரு தேவதூதன்தலைமுறைக்கான இரட்சிப்பின் திட்டத்துடன் தேவனின்பிரசன்னத்தில் இருந்து வந்து, தனது பணியைநிறைவேற்ற உங்களைப் பயன்படுத்துகிறார். எந்தவிளக்கமும் இல்லாமல், என்ன செய்ய வேண்டும் என்றுதேவதூதன் சொல்கிறார். மேலும், அவர் உங்களைஎதற்காக அல்லது எங்கு அழைத்துச் செல்கிறார் என்பதுஎன்ன என்று தெரியாமல் நீங்கள் அதைச் செய்ய வேண்டும்அல்லது அவரைப் பின்தொடர வேண்டும். இது சகோதரிவிக்டோரின் நிடாங்கு, அவள் செய்திக்கு வருவதற்கு முன்பார்த்த முன்னறிவிப்புச் சொப்பனம் போன்றது. தேவதூதன் அல்லது தீர்க்கதரிசி முன்னோக்கி நகர்கிறார், அவரைப் பின்தொடர்வது உங்களைப் பொறுத்தது.
36 தேவதூதனுடன் நடக்கும் இந்த நடையில், பலர்உண்மை இல்லாமல் இருக்கிறார்கள் அல்லதுவிட்டுவிடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர்காரணம் உண்டு, தீர்க்கதரிசி அல்லது செய்தி அல்லதுசகோதரர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால்தேவனுக்கு முன், அவர்களின் காரணம் ஒன்றுதான், அது: "பரலோகத்திற்கு செல்லும் வழி எனக்கு மிகவும் கடினம், நான் இனி அங்கு செல்ல விரும்பவில்லை".
37 ஒரு தரிசனத்தில் நான் முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தேன், திரளான கூட்டத்தினர் என்னைப்பின்தொடர்ந்தார்கள். பிறகு எங்களுக்கு இடையிலானஇடைவெளி அதிகமாகிக் கொண்டே வந்தது. இறுதியில், நான் இரண்டு இளம் பெண்களை மட்டுமே பார்த்தேன். நான் அவர்களிடம் கேட்டேன்: "எங்கே திரளான கூட்டம்?" அவர்களில் ஒருவர் பதிலளித்தார்: "தேவாலய மட்டத்தில் திரளான கூட்டம் தரித்து இருந்தனர்". மேலும் நான் சொன்னேன், "ஓ தேவனே,உம்முடைய இரக்கம்!"
38 இப்போது, நான் மலைக்குச் செல்லும்பொழுது, என்அப்போஸ்தலர்கள் அனைவரையும் பதவி நீக்கம்செய்தேன். மற்றும் பலர் புரிந்து கொள்ளவில்லை. எசேக்கியேல் 1:2-ல் ஜீவராசிகள் நகர்ந்த போதுசக்கரங்களும் சென்றன; ஜீவராசிகள் நின்றபோது, சக்கரங்களும் நின்றுவிட்டன; அந்த ஜீவராசிகள்பூமியிலிருந்து மேலே உயர்த்தப்பட்டபோது, சக்கரங்களும் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டன, ஏனென்றால் அந்த ஜீவராசிகளின் ஆவி அதன்சக்கரங்களில் இருந்தது. நான் மலைக்குச் செல்வதற்குமுன் என் அப்போஸ்தலர்களை பதவி நீக்கம்செய்யவில்லை என்றால், அது தேவனுக்கும் எசேக்கியேல்1:19 முதல் 21-க்கும் முரணாக இருக்கும். நான் பூமியில்இருந்து உயர்த்தப்பட்டபோது என் சக்கரங்கள் தரையில்தொடர்ந்து சுழல முடியாது.
39 நான் அந்தத் ரதத்தில் தனியாகவும் சரீரம் இல்லாமலும்இருந்தேன். மேலும் ரதம் தரையிலும், தண்ணீரின் மீதும், தடைகள் மீதும், சாலையில் நீண்டிருக்கும் சேற்றைத்தொடாமல் மெதுவாகச் சென்றது. சிறு சிறு பாதைகளைபின்பற்றாமல் ரதம் சென்றது.
40 . ஒருமுறை, தேவன் என் கண்களைத் திறந்தார், நான்ரதத்தின் வலது பக்கத்தின் முன் சக்கரத்தைக் கண்டேன்.மேலும் சக்கரம் அதன் வடிவத்தையும் தோற்றத்தையும்மாற்றிக்கொண்டு மின்விசிறியின் உந்துவிசை போல மிகவேகமாகத் திரும்பியது. மேலும் அந்தச் சக்கரம் ஒருகானல் நீர் வட்டம் போல் இருந்தது. இருந்த போதிலும்ரதம் ஒரு மனிதன் நடந்து செல்லும் வேகத்தில் மெதுவாகமுன்னேறிக்கொண்டிருந்தது. அப்போஸ்தலரான ஜோயல்கஷாலாவின் ஆவி அந்த வேகமாகத் திரும்பும் சக்கரத்தில்இருப்பதைக் கண்டேன்.
41 நல்லது. ஒவ்வொரு தேசமும் இஸ்ரவேல்கோத்திரத்தைப் போன்றது. மேலும் காக்குவ் 154-க்குப்பிறகு, மற்றவர்களைச் சேர்க்காமல் மோசே விட்டுச்சென்ற சக்கரங்கள் அல்லது அப்போஸ்தலர்களைமட்டுமே தேர்ந்தெடுத்த கோத்திரங்கள் அல்லதுதேசங்கள் மோசேயின் வலதுபுறத்தில் நிற்கும்ஞானமுள்ள கோத்திரங்கள். மோசே விட்டுச் சென்றசக்கரங்களைத் தேர்ந்தெடுத்து மற்ற சக்கரங்களைச்சேர்த்த கோத்திரங்கள் மோசேயின் இடதுபுறத்தில்நிற்கும் தேசங்கள்.
42 தீர்க்கதரிசி செய்தியாளன் பவுலைத் தவிர, நீங்கள்செய்தி இல்லாமல் இருக்கும் சிறிய தீர்க்கதரிசியானஅகபசிற்கு செவிக் கொடுக்க வேண்டும். தீர்க்கதரிசிசெய்தியாளனின் பெரிய ஏணிக்கு கூடுதலாக, சிறியதீர்க்கதரிசியின் சிறிய ஏணியையும் நீங்கள் எடுக்கவேண்டும். அந்த தீர்க்கதரிசி எவ்வளவு சிறியவராகஇருந்தாலும், ஒரு தீர்க்கதரிசியின் வார்த்தைகளை விடமக்களின் வாக்குகளையும் உணர்ச்சிகளையும் நீங்கள்ஒருபோதும் விரும்பக் கூடாது.
43 மக்களின் விருப்பத்தோடு இருப்பதைவிட சிறியதீர்க்கதரிசியிடம் தவறாக இருப்பது நல்லது. எமோடிகான்கள் மற்றும் வாக்குகள் சரீரவிஷயங்களுக்கானவை, அதேசமயம் தீர்க்கதரிசிகள் சரீரமற்றும் ஆவிக்குரிய விஷயங்களுக்காக இருக்கிறார்கள். எமோடிகான்கள் மற்றும் வாக்குகள் ஒரு தீர்க்கதரிசிக்குஒரு மாற்றாக இருக்காது.
44 மேலும் பரலோகத்திற்குச் செல்ல, உங்களுக்குபாஸ்டரின் தூபக்கலசமோ அல்லது மக்களின்உணர்ச்சிக் காட்சிகளோ (emoticons) தேவையில்லை,ஆனால் தீர்க்கதரிசி செய்தியாளனின் பெரிய ஏணியைஅடைய சிறிய தீர்க்கதரிசியின் சிறிய ஏணி தேவையாகஇருக்கிறது. மேலும் ஒரு சகோதரர் கொடுக்கும்வெளிப்பாடுகளின்படி, இந்த சகோதரர் ஒரு தீர்க்கதரிசிஎன்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மேலும் சிலமக்களும் சபைகளும் இந்த சகோதரர் மூலம் தேவனிடம்ஆலோசனை பெற முடியும்.
45 ஒரு தீர்க்கதரிசி அல்லது பெண் தீர்க்கதரிசிபேசும்போது, அவர் ஒரு வெளிப்பாட்டின் அடிப்படையில்பேசுகிறாரா என்பதை அறிய நீங்கள் அவரிடம் விளக்கம்கேட்க வேண்டாம். ஆனால் மக்களில் ஒரு மனிதன்பேசும்போது, இந்த வெளிப்பாடு ஒரு தீர்க்கதரிசியால்சான்றளிக்கப்படுவதற்காக அவன் தன் வார்த்தையைஅடிப்படையாகக் கொண்ட வெளிப்பாட்டைக் கொடுக்கவேண்டும்.
46 தீர்க்கதரிசிகள் மற்றும் பெண் தீர்க்கதரிசிகள்பிரதிஷ்டை செய்யப்பட்ட நபர்கள். ஒரு குறிப்பிட்டதருணத்தில், ஒரு தீர்க்கதரிசி ஒரு சபையில்உறுப்பினராக இருக்கக்கூடாது அல்லது அவருடையவெளிப்பாடுகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகநிறைய ஆராதனைகளுக்குச் செல்லக்கூடாது. தீர்க்கதரிசி ஆலயத்தின் மனிதர் அல்ல. ஆனால் அவர்ஒரு சபைக்குச் சென்றால், அவர் விரும்பினால் பேசவோஅல்லது பிரசங்க பீடத்தில் பேசவோ அவருக்கு உரிமைஉண்டு, ஏனென்றால் சிறிய தீர்க்கதரிசியின் ஊழியமும்ஆசாரியத்துவத்தின் ஒரு பகுதியாகும். இது சபைக்குஉள்ளேயும் வெளியேயும் ஒரு ஊழியம்.
47 தேவன் தாமே அவருடைய தீர்க்கதரிசிகளைஎழுப்புகிறார். அதனால்தான், "தேவ மனுஷன்" என்று ஒருதீர்க்கதரிசி அழைக்கப்படுகிறார். எசேக்கியேல் 33:7 கூறுகிறது, "மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேல்குடும்பத்திற்கு காவலாளியாக வைத்தேன்". மேலும்ஏசாயா 62:6 கூறுகிறது, "எருசலேமின் உன்மதில்களின்மேல் காவலர்களை வைத்திருக்கிறேன்; அவர்கள் இரவும் பகலும் அமைதியாக இருக்கமாட்டார்கள்". மக்களை எச்சரிப்பதும் அவர்களுக்காகப்பரிந்து பேசுவதும் தீர்க்கதரிசிகளின் பணியாகும்.
48 இப்போது, இந்த சிறிய தீர்க்கதரிசிகள் எங்கிருந்துவருவார்கள்? அப்போஸ்தலர் 11 வசனம் 27 முதல் 28 வரைகூறுகிறது, "இன்றைய நாட்களில் தீர்க்கதரிசிகள்எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்குப் போனார்கள். அவர்களில் ஒருவன் அகபஸ் என்ற பெயரால் எழுந்து, பூமியில் குடியிருக்கிற எல்லார்மேலும் மகா பஞ்சம்வரப்போகிறது என்று ஆவியானவரால் உணர்த்தினான். இது கிளாடியஸின் ஆட்சியின் கீழ் வந்தது." இந்ததீர்க்கதரிசிகள் வானத்திலிருந்து இறங்கி வந்ததேவதூதர்கள் அல்ல. இந்த தீர்க்கதரிசிகளில் சிலர்கர்த்தராகிய இயேசுவின் சீஷர்கள் மற்றும்அப்போஸ்தலர்களுடன் மேல் அறையில் இருந்தனர்.
49 மேலும் சிறிய தீர்க்கதரிசிகள் மெய்திருச்சபையின் சுவரில் தூண்கள் மற்றும் குறிப்புகள். மெய்திருச்சபையின் வெளிப்பாடுகள் மற்றும் முடிவுகளை அவர்கள் நியாயந்தீர்ப்பவர்கள்.
50 தேவன் தனது படைப்புக்கு பல்வேறு திறன்களைக்கொடுத்தார். உதாரணமாக: ஒரு மனிதனால் 400 மீட்டர்தொலைவில் உள்ள முயலை அடையாளம் காண முடியும், அதே சமயம் கழுகு 1600 மீட்டர் தொலைவில் உள்ள அதேமுயலை அடையாளம் காண முடியும். மேலும் தங்க கழுகுபோன்ற பெரிய கழுகுகள் அதே முயலை 3000 மீட்டர், அதாவது 3 கிலோமீட்டர் வரை அடையாளம் காணமுடியும். எனவே ஒரு பாஸ்டர் அல்லது சபை உறுப்பினர்ஒரு சிறிய தீர்க்கதரிசியை விட அதிகமாக பார்க்கமுடியாது. ஒரு சிறிய தீர்க்கதரிசி ஒரு தீர்க்கதரிசிசெய்தியாளனை விட அதிகமாக பார்க்க முடியாது.
51 மேலும் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளர் உறுதிப்படுத்தல்இல்லாமல் வேறு ஒருவரின் யோசனை அல்லதுவெளிப்பாட்டின்படி நடக்க முடியாது. ஒரு சிறியதீர்க்கதரிசி ஒரு போதகர், சபை உறுப்பினர் அல்லதுமற்றொரு சிறிய தீர்க்கதரிசியின் யோசனை அல்லதுவெளிப்பாட்டின்படி நடக்க முடியாது. கோபுரம் அல்லதுமதில் சுவரின் மேல் இருக்கும் காவலாளி பாளையத்தில் இருந்து வரும் வெளிப்பாடுகளால் திசை திருப்பப்படக்கூடாது.
52 உதாரணமாக, பவுல், தீர்க்கதரிசி செய்தியாளர், ரோமாபுரி செல்ல வெளிப்பாட்டின் மூலம் முடிவுசெய்திருந்தார். எனவே அப்போஸ்தலர் 21:8 முதல் 13 வரை உள்ள அகபஸின் தீர்க்கதரிசனம் அவரது முடிவைமாற்ற முடியவில்லை, ஏனெனில் அகபஸ் ஒரு சிறியதீர்க்கதரிசி. ஆனால், பவுல் வெளிப்பாடு இல்லாமல், சொந்தமாகச் சென்றால், ரோமாபுரிக்குக்குச்செல்வதற்கான பவுலின் முடிவை அகபஸின்தீர்க்கதரிசனம் ரத்து செய்திருக்கும்.
53 ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு விசேஷ பிரசங்கிலத்தீன் அமெரிக்க சகோதரர்களுக்கு அறிவுரைகூறியிருந்தார். மேலும் கொலம்பியாவில் அப்போஸ்தலர்ஜோஸ் ஹெர்னாண்டஸுடன் இருப்பதை வெனிசுலாவின்போதகர் டேனியல் மார்டினெஸ் சொப்பணத்தில்கண்டார். இதோ, சிறப்புச் பிரசங்கியாளர் அவர்கள்கனவில், அவர்கள் அனைவரும் சென்று ஆற்றில் ஒருபெரிய தவளையைக் கொன்று, பணியைத்தொடங்குவதற்கு முன் தவளையின் குடல்களைசமைக்காமல் சாப்பிட வேண்டும் என்று சொன்னார். இப்போது, வெளிப்பாட்டிற்கு வெளியே, சிறப்புப்போதகரின் விலைமதிப்பற்ற அறிவுரைகள்அருவருப்பானவை என்பதை லத்தீன் அமெரிக்காவின்சகோதரர்களுக்கு ஒரு வேதாகமம் காட்ட முடியுமா?
54 தற்போதைய காலத்தில் வெளிப்பாடு தான் தேவனின்புத்திரர்களின் முற்றிலுமானது, அதே சமயம் வேதாகமம் , பகவத் கீதை, தாமரை சூத்திரம் மற்றும் குரான் ஆகியவைபிசாசின் புத்திரர்களின் முற்றிலுமானதாகும். மேலும்இன்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசியான என் மூலமாகஉங்களுக்குக் கொடுக்கும் கட்டளை என்னவென்றால் , வெளிப்பாடு இல்லாமல் எதையும் செய்யக்கூடாதுஎன்பதுதான். "நான் அதைப் பற்றி யோசிப்பேன்" என்றுநீங்கள் கூறும்போது, இதன் அர்த்தம்: "நான் தேவனின்விருப்பத்தைத் தேடுவேன்" என்பதாகும். தேவன் தன்னில்நம்பிக்கை வைப்பவர்களைக் கைவிடுவதில்லைஎன்பதாகும் .
55 ஒரு சபை உறுப்பினர் தனது சொந்தவெளிப்பாடுகளைப் புறக்கணித்து, ஒரு போதகர் அல்லதுமற்றொரு சபை உறுப்பினர், அவர்கள் இருவரும் ஒரேபாளையத்தில் இருக்கும் வேளியில் அவர்களின்வெளிப்பாட்டின் படி நடக்க கூடாது. ஒரு பாளையத்தைஇரட்சிக்க அல்லது முன்னேறச் செய்யும்வெளிப்பாடானது, கோபுரத்தின் மீது அல்லது மதில்சுவரின் மேல் உள்ள ஒரு தீர்க்கதரிசியின் மூலம் தான்வரும், பாளையத்தின் ஒரு மனிதன் மூலமாக அல்ல.
56 அப்போஸ்தலர்கள், சுவிசேஷகர்கள், போதகர்கள், பாஸ்டர்கள், பிரசங்கிகள் மற்றும் மூப்பர்கள் அனைவரும்வாசல் காவலர்கள். சிறிய தீர்க்கதரிசிகள் கூரையிலோஅல்லது சுவரிலோ மீது உள்ள ஜாமக்காரர்கள். தீர்க்கதரிசி செய்தியாளர் கோபுரத்தின் மீது உள்ளஜாமக்காரன். ஆபகூக் 2:1 இல் "நான் என் காவலிலேதரித்து கோபுரத்தின் மேல் நிலைத்துக் கொண்டிருந்துஅவர் எனக்கு என்ன சொல்வார் என்று கவனித்துப்பார்ப்பேன்..." என்று தீர்க்கதரிசி ஆபகூக் கூறினார். எனவே, பாளையத்தின் ஒரு மனிதன் சுவரில் அல்லதுகோபுரத்தில் மேல் இருக்கும் ஜாமக்காரரை வரவிருக்கும்ஆபத்து பற்றி எச்சரிக்க முடியாது.
57 மேலும், மலை என்பது ஒரு கோபுரம் அல்லதுமதில்சுவர் வகை சார்ந்தது. கர்த்தராகிய இயேசு ஒலிவமலையில் அமர்ந்திருப்பது, அது கோபுரத்தின் மேலேஉள்ள ஜாமக்காரர் ஆகும். மேலும் மத்தேயு 24:3ல், கோபுரத்தில் இருக்கும் ஜாமக்காரரிடம் ஜனங்கள்பேசுகிறார்கள். மேலும் மத்தேயு 24:4 லிருந்து, மனிதகுலத்தின் மாபெரும் ஜமக்காரர் ஷோஃபரைஒலிக்கிறார். ஆமென்!
58 பண்டைய காலங்களில், தீர்க்கதரிசிகள் அல்லதுஜாமக்காரர்கள் ஒரு ஆட்டுக்கடாவின் கொம்பினால்செய்யப்பட்ட ஷோஃபரை ஒலித்தனர்.ஷோஃபரின்ஒவ்வொரு ஒலியும் மக்களுக்கு அனுப்பப்பட்டசமிக்ஞையாக இருந்தது. மேலும் ஷோஃபரின்சத்தத்தின்படி, மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைஅறிந்திருந்தனர். வேதாகமம் ஒரு எக்காளத்தைப் பற்றிபேசும்போது, அது ஷோபார் என்று அழைக்கப்படும்ஆட்டுக்கடாவின் கொம்பைக் குறிக்கிறது. தொழுகைக்கான அழைப்புகள் கூட ஷோஃபரின்சத்தத்தால் செய்யப்பட்டன, மணியின் ஓசையாலோஅல்லது முயஸின் சத்தத்திலோ அல்ல. இந்த பொருள்கள்வேறுபட்டவை.
59 1 சாமுவேல் 10:1 இல், சாமுவேல் சவுலை எண்ணெய்க்குப்பியால் அபிஷேகம் செய்கிறார், 1 சாமுவேல் 16:13 இல், அதே சாமுவேல் தாவீதை எண்ணெய்க் கொம்பினால்அபிஷேகம் செய்கிறார். அவைகள் ஒரே காரியம் அல்ல.
60 ஒரு பாஸ்டர் ஒரு வாசல் காவலாளி ஆவார் மற்றும்ஏசாயா 21:11 இல் உள்ளதைப் போல தீர்க்கதரிசியிடம்அவர் தொடர்ந்து இவ்வாறு கூக்குரலிட வேண்டும்: "ஜாமக்காரரே, இரவில் நிலை என்ன?" ஒரு போதகர், அவரது பெருமையைப் பொருட்படுத்தாமல், அவர்மக்களுடன் பாளையத்தில் இருக்கிறார். ஒரு ஜமக்காரர்ஒரு போதகராகவோ அல்லது பிரசங்கியாகவோமாறினால், பிறகு அவர் பாளையத்தில் உள்ள ஒருமனிதனுக்கு சமம் ஆவார். மேலும் பாளையத்தில் உள்ளஒரு தீர்க்கதரிசி அல்லது பாஸ்டர் தன்னைப் போன்றஅதே பதவியில் உள்ள ஒரு தீர்க்கதரிசியுடன் ஒருவெளிப்பாட்டைப் பற்றி வாதிடுகிறார் எனில், இது தன்னுடைய தாயின் முதுகில் இருக்கும் ஒரு குழந்தைஅவனது தாயாருடன் ஒரு ஆற்றைக் கடக்கும் போதுஅவன் மீனின் மீது மிதித்ததாகக் கூறும் கதையாகும்.
61 இவ்வாறு, பாளையத்தில் ஒரு போதகர் அல்லது ஒருமனிதனின் வெளிப்பாடானது ஒரு சிறிய தீர்க்கதரிசியின்வெளிப்பாட்டின் பரிமாணத்தை கூட அடைய முடியாது. மேலும் ஒரு சிறிய தீர்க்கதரிசியின் வெளிப்பாடு ஒருதீர்க்கதரிசி செய்தியாளரின் வெளிப்பாட்டின்பரிமாணத்தை அடைய முடியாது.
62 உதாரணமாக, ஒரு தரிசனத்தில், ஒரு மர்மமான பெண், ஏதேனில் தனியாகவும் நிர்வாணமாகவும் நிற்பதைக்கண்டேன். அவள் பெயரை லில்லி என்று நான்கேள்விப்பட்டேன்:. மேலும் அவள் ஆதாமின் முதல்மனைவி. பூமியில் வாழ்ந்த முதல் பெண் அவள். அவள்கறுப்பாகவும், சற்றே ஆரோக்கியமாகவும் இருந்தாள்ஆனால் அவளுடைய தோல் நம்முடையதைப்போலமிருதுவாக இல்லை. இது தீர்க்கதரிசி செய்தியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட வெளிப்பாட்டின்பரிமாணமாகும்.
63 ஒரு தீர்க்கதரிசி செய்தியாளர் தனது தலைமுறையில் தனியாக பணி செய்கிறார், அதேசமயம் அப்போஸ்தலர் 13:1 மற்றும் எலியாவின் காலத்திலும் நாம் பார்ப்பதுபோல, சிறிய தீர்க்கதரிசிகள் ஒரு நாட்டில் பலர் உள்ளனர் அவர்கள். மேலும் தீர்க்கதரிசி செய்தியாளர்கள், சிறு தீர்க்கதரிசிகளுக்குத்தான் இராஜாக்களிடம் சென்று அவர்களை அபிஷேகம் செய்யும் ஆணையை வழங்கினர். மேலும் எதிர்காலத்தில், ஒரு தீர்க்கதரிசினி அல்லது ஒரு சிறிய தீர்க்கதரிசி தாமே பதவி இறக்கம் செய்வார், தடைகளை ரத்து செய்வார், ஒரு ஜெபத் தலைவரின் ஸ்தானத்தில் பிரசங்கம் தொடர்பான அலுவலகத்தை அர்ப்பணிப்பதற்காக கைகளை வைத்து ஜெபம் செய்வார் ஏனென்றால், நிறுவப்பட்ட அல்லது சபை மூலமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு ஆசாரியன் அல்லது பாஸ்டர் என்பவன் ஒரு ஸ்திரீயினால் நிச்சயிக்கப்பட்ட ஒரு மனிதனாக இருக்கிறான். அவன் சபையின் ஊழியக்காரன், ஆனால் கிறிஸ்துவின் ஊழியக்காரன் அல்ல.
64 நீங்கள் ஊழியத்துடன் பிறந்தீர்கள், நீங்கள்ஊழியத்துடன் இறக்கிறீர்கள். மேலும் பதவி இறக்கம்மற்றும் தடைகள் ஊழியத்தின் பதவியை பறிக்காது. ஆனால் பிரதிஷ்டை இல்லாதது ஒரு தீர்க்கதரிசியின்பார்வையை குறைக்கிறது. தரிசனம் இல்லாமல் பலமாதங்கள் கழித்தேன் என்று நான் சொன்னபோது, அது பிரதிஷ்டை இல்லாததால் என் பார்வையே குறைந்துபோனது என்பதே ஆகும் . மேலும், பண ஆசை, லௌகீகம்மற்றும் பாலுணர்வு ஆகியவை தீர்க்கதரிசியின் பார்வையைகுறைத்து விடுகின்றன. யாத்திராகமம் 23:8ல் பணமும்பரிசுகளும் திறந்த கண்களை குருடாக்குகிறது என்றுஎழுதப்பட்டுள்ளது. மேலும் யாருடைய கண்கள்திறந்திருக்கிறதோ அவர்களே தீர்க்கதரிசிகள்.
65 எல்லா தீர்க்கதரிசினிகளும் பழைய ஏற்பாட்டில்நாதான் போன்ற பல தீர்க்கதரிசிகளும் சிறியதீர்க்கதரிசிகள் ஆவர். சிறிய தீர்க்கதரிசியின் ஊழியம்உலகளாவியது. மற்றும் சிறிய தீர்க்கதரிசிகள் தங்கள்ஊழிய நடபடிகளின் புத்தகங்களை கொண்டிருக்கமுடியும்.
66 அப்போஸ்தலர் 13:1 இன் படி அந்தியோக்கியாசபையில் இருப்பதைப் போல, உங்கள் இரட்சிப்பைப்பற்றி அக்கறை கொண்ட சிறிய தீர்க்கதரிசிகளை தேவன் எழுப்பும்படி ஜெபியுங்கள். தீர்க்கதரிசன விசுவாசம் அதைசுமத்துகிறது. சிறிய தீர்க்கதரிசிகள் மனிதர்களைதேவனிடம் முழுமையாக வழிநடத்த முடியும், ஏனென்றால்அவர்கள் தீர்க்கதரிசன விசுவாசத்தின் தூண்கள் மற்றும்உத்திரங்கள் .தேவன் தீர்க்கதரிசிகளின் ஆவிகளின்தேவன் . மேலும் ஆமோஸ் 3:7 சிறியதீர்க்கதரிசிகளுக்கும் பொருந்தும்.
67 எலியா எடுத்துக்கொள்ளப்பட்ட நாளில், கில்கால், பெத்தேல், எரிகோ மற்றும் இஸ்ரவேல் முழுவதிலும்இருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் அனைவரும், அன்று எலியா எடுத்துக்கொள்ளப்படப் போகிறார்என்பதை அறிந்திருந்தார்கள். நகரத்திலிருந்துநகரத்திற்கு, தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசாவிடம்சென்று அவரிடம், "யெகோவா இன்று உன் எஜமானாகியஎலியாவை உன் தலையில் இருந்து அகற்றுவார் என்றுஉனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்குஎலிசா, "எனக்கும் தெரியும், அமைதியாக இருங்கள்!" என்றான்.
68 எலியா எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, எலிசா எங்குசென்றாலும், பழைய ஏற்பாட்டில் "தீர்க்கதரிசிகளின்புத்திரர்கள்" என்று அழைக்கப்படும் சிறியதீர்க்கதரிசிகளுக்கு எலியாவின் ஆவி எலிசா மீதுதங்கியிருப்பதாக வெளிப்படுத்தப்பட்டது. அவர்கள்அவரைச் சந்திக்க வெளியே சென்று, எலிசாவை தங்கள்புதிய தீர்க்கதரிசி செய்தியாளராக அங்கீகரித்ததன்அடையாளமாக அவருக்கு முன்பாக வணங்கினார்கள்.
69 நான் மலையில் இருந்த வேளையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் மலையில் என்னுடன் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய துல்லியமான கணக்குகளை என்னிடம் கொடுக்கிறார்கள். நான் மோசேயைப் போல இரண்டு கற்களைப் பெற்றுள்ளேன் என்பதையும், இந்த இரண்டு கற்கள் அல்லது பிரசங்கங்கள் தீர்க்கதரிசனம் மற்றும் கனவுகள் மற்றும் தரிசனங்களைப் பற்றி பேசுகின்றன என்பதையும் அவர்கள் அறிவார்கள். அவை கதீட்ரலுக்கு எதிரான நித்திய வாக்குறுதியின் எதிர்பார்ப்பிற்கான இரண்டு அடித்தளங்களாகும்.
70 நான் இந்த இரண்டு அத்தியாயங்களையும்மொழிபெயர்ப்பிற்காக ஒன்றாக அனுப்பவிருந்தேன், அப்போது கேமரூனின் சகோதரர் ஒருவர் எனக்கு கடிதம்எழுதி, "சகோதரர் பிலிப்பு, நீங்கள் ஒரு மலையின்உச்சியில் நிற்பதை நான் பார்த்தேன் என்று சொன்னார். மேலும் ஒரு மனிதர் பரலோகத்திலிருந்து உங்களிடம்பேசிக் கொண்டிருந்தார். மேலும் அந்த மனிதர்பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கும் வீடியோக்களைப்பற்றி புகார் கூறினார், அவை பழைய பரிசுத்தவான்கள்பெற்றதைப் போல அவற்றின் உண்மையான மதிப்பில்பெறப்படவில்லை. சூரியன் சிவப்பாக இருந்தது. உங்கள்வலது கால் ஒரு கல்லின் மீதும், உங்கள் இடது கால்மற்றொரு கல்லின் மீதும் இருந்தது. "நீங்கள்பார்க்கிறீர்களா? நாம் வெளிப்பாடுகளின் பாதையைத்தேர்ந்தெடுத்ததால், தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் இங்கேஇருக்கிறார்கள்.
71 சிறிய தீர்க்கதரிசிகள் எப்போதும் பூமியில் அதிகஎண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள். எலியாதீர்க்கதரிசியின் நாட்களில், யேசபேல் காரணமாக 100 சிறிய தீர்க்கதரிசிகளை ஒபதியா மறைத்துவைத்திருந்தார். இஸ்ரவேலர் யெகோவாவிடம்விசாரித்தது போல, தேவனுக்குப் பயந்து இரட்சிப்பைப்பற்றி கவலைப்படுகிற ஒரு சபை எப்போதும்யெகோவாவிடம் விசாரிக்கும்.
72 ஒரு முக்கியமான தீர்மானத்திற்கு, நீங்கள் சொல்லவிரும்புவது வெளிப்பாட்டின் அடிப்படையில்இல்லாதபோது, கட்டுப்பாட்டைக் கடைப்பிடியுங்கள், ஏனெனில், ஒரு வாகன ஓட்டியைப் போல, ஒரு தவறினால், எல்லாவற்றையும் அழிக்க முடியும். ஒரு முடிவுவெளிப்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும். யாராவது ஒரு முக்கியமான யோசனை அல்லதுதீர்மானத்தை முன்வைக்கும்போது, அவரிடம் இவ்வாறுசொல்லுங்கள் , "உங்கள் யோசனையின்முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, உங்களைஊக்கப்படுத்திய வெளிப்பாட்டை எங்களுக்கு வழங்கமுடியுமா என்று ? அவர் உங்கள் கேள்வியை சரியாகஎடுத்துக் கொள்ளவில்லை என்றால், அவருடையயோசனை பிசாசிடமிருந்து வந்ததாகும்.
73 2000 ஆம் ஆண்டில், சிப்போராவுடன் திருமணத்திற்குசற்று முன்பு, அவளும் நானும் தண்ணீரில் மிதக்கும் ஒரு படகில் திருமணம் செய்து கொள்ளப் போவதைக்கண்டேன். மேலும் நான் படகிற்கு வந்தடைந்தபோது, அவள் ஏற்கனவே தனது திருமண மோதிரத்தை எடுக்கவந்ததாகவும், அவள் ஏற்கனவே அங்கிருந்துகிளம்பிவிட்டதாகவும் என்னிடம் கூறப்பட்டது. அதனால்என் மோதிரம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது, நான்எழுந்தேன். மேலும் சிப்போராவுடனான படகில் இருந்ததிருமணம் தண்ணீரில் கவிழும் வரை மட்டுமேஅலைக்கழிக்கப்பட்டது.
74 மேலும் வெளிப்பாட்டின் தற்போதைய நிலையில், நீங்கள் என்னைப் போன்று அந்தத் தவறைச்செய்யக்கூடாது. ஒரு திட்டப்பணிக்கு, ஒருதொழிற்சங்கத்திற்கு, ஒரு திருமணத்திற்கு, ஒருஒப்பந்தத்திற்கு, மருத்துவம் சக்தியற்றதாக ஒருநோய்நிலைக்கு அல்லது வேறு எந்த முக்கியமானவிஷயத்திற்கும், நீங்கள் வெளிப்படுத்தல்களை நாடவேண்டும்.
75 நாம் ஜெபிக்கும்போது, எரேமியா 42:1 முதல் 7 இல்உள்ளதைப் போல, தேவனின் பதில் உடனடியாக அல்லதுபல நாட்கள் அல்லது வாரங்களில் வரலாம். நான் இங்குபேசுவது தேவனை நேசிப்பவர்களிடமும், தீர்க்கதரிசிகள்மூலம் தேவனையும் இரட்சிப்பையும் தேடுபவர்களிடமேதவிர, சபைகளையும் மதங்களையும் புனித நூல்களையும்நேசிப்பவர்களிடம் அல்ல, மேலும் அவர்கள் தேவனுக்குவிரோதிகளாக இருக்கிறார்கள்.
76 வெளிப்பாட்டின் மூலமாக நீங்கள் யார், என்னசெய்கிறீர்கள், எங்கு செல்கிறீர்கள் என்பதை நீங்கள்அறிவீர்கள். வெளிப்பாடுகள் இல்லாமல் நல்லஉள்நோக்கம் நல்லதாக இருந்தும் உங்களால் தேவனுக்குஎதிராகச் செல்ல முடியும் மேலும் அதற்க்கானதண்டனையைப் பெறுவீர்கள். செய்யும் ஒவ்வொருசெயலுக்கும், நல்ல உள்நோக்கத்திற்கு கூடுதலாக, தேவனுடைய சித்தத்தை அறிய முயலுங்கள்.
77 மேலும் ஒரு பாஸ்டர் வெளிப்பாடுகளை வெறுக்கவோஅல்லது நிராகரிக்கவோ அல்லது அவரது சபையைவெளிப்பாடுகளிலிருந்து திருப்ப கூடாது. ஒருசபையானது பாளையத்தில் இருந்த இஸ்ரவேலைப்போன்றது, பாளயத்தின் நடுவில் இருக்கும் போதகரே, வரவிருக்கும் ஆபத்தைப் பற்றி எச்சரிக்க உங்கள் கண்கள்எப்போதும் மதில்சுவரின் மேல் இருக்கும் ஜமக்காரனின்பக்கம் திரும்ப வேண்டும்.
78 என்னைப் பொறுத்தவரை, கனவுகள் மற்றும்தரிசனங்களைப் புறக்கணித்து, தேவனை பின்தொடர்வதுஅல்லது ஒரு கூட்டத்தை நடத்துவது என்பது பிரேக்இல்லாமல், சாலை அடையாளங்கள் மற்றும்போக்குவரத்து விளக்குகளைப் புறக்கணித்து கார்ஒட்டுவதை போன்றது. கனவுகளும் தரிசனங்களும்பரலோகத்திற்க்கு செல்லும் பாதையின் குறியீடுகளும்மற்றும் சாலையின் அடையாளங்களாக இருக்கின்றன. அதனால்தான், ஒரு சொப்பனத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் உடனடியாக அதைஅலட்சியப்படுத்தக்கூடாது.
79 வெளிப்பாட்டின் விஷயங்களில், தேவன் இன்றுஉங்களிடம் பேசுவது போல பிசாசு நாளை உங்களிடம்பேச முடியும், அது போலவே இன்று பிசாசு உங்களிடம்பேசுவதுபோல நாளை தேவன் உங்களிடம் பேசலாம், தேவனோ அல்லது அவருடைய தீர்க்கதரிசியோஉங்களிடம் கூறியதை ஆராய முயற்ச்சித்தாலே அல்லதுநிராகரித்தாலோ, உடனடியாக உங்களை வழிதவறச்செய்வதற்காக உங்கள் இதயத்தின்படி உங்களுடன்பேசுவதற்கான உரிமையை பிசாசு பெறுகிறான். உங்கள்மாற்றம் அல்லது மனந்திரும்புதலே பிசாசைஉங்களிடமிருந்து விலக்கி வைக்கும்.
80 பொய்யான தீர்க்கதரிசிக்கும் தீர்க்கதரிசினிகளுக்கும்அஞ்சாதீர்கள்! தேவனின் தூதன் நம்மோடு இருக்கிறார்; பொய்யான வெளிப்பாடுகளால் யாராவது உங்களைத்தொந்தரவு செய்தால், தேவன் அவரைத் தாக்குவார்உங்கள் கண்கள் அதைப் பார்க்கும்.
81 இரட்சிப்பின் விஷயங்களில், நீங்கள்வெளிப்பாடுகளைப் புறக்கணிக்கிறீர்கள் அல்லதுநிராகரிக்கிறீர்கள், அப்படி இருக்க நீங்கள் நரகத்திற்குச்செல்கிறீர்கள், அல்லது அவற்றைக் கருத்தில் கொண்டுஅவற்றைப் பின்பற்றுகிறீர்கள், மேலும் அவைகள் தேவனிடமிருந்து வந்தால் நீங்கள் பரலோகத்திற்குச்செல்கிறீர்கள். இதனால்தான், வேதாகமத்தைப் அல்லதுதனது சொந்த எண்ணங்களைப் பின்பற்றுவதன் மூலம்அனைவரையும் பாவம் செய்ய வைக்கும் ஒரு தலைவரைக்காட்டிலும் வெளிப்பாடுகளை மதிக்கும் தலைவர்களைநீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
82 தேவனை நேசிக்கும் அல்லது தேவனுக்கு அஞ்சும் ஒருமதத் தலைவர் எப்போதும் வெளிப்பாடுகளைத் தேடுவார், தேவனின் கிருபையும் ஆசீர்வாதமும் அவர் மீது எப்போதும்இருக்கும். ஆனால் வெளிப்பாடுகளை விரும்பாத ஒருவர்ஒரு அஞ்ஞானியை போல இருக்கிறார், அவருடைய நல்லசெயல்களும் வார்த்தைகளும் கூட உங்களை நரகத்திற்குஅழைத்துச் செல்லும்.
83 என் வாழ்க்கையில், நான் எப்போதும்வெளிப்பாடுகளில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். என்வாழ்க்கையில் சாம்பல் நிற பகுதிகள் நான்வெளிப்பாடுகளை கைவிட்ட நேரங்கள் ஆகும். தேவனின்விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அல்லதுபரலோகத்திற்குச் செல்வதற்காகவெளிப்படுத்துதல்களைத் தவிர்ப்பது சாத்தியமில்லைஎன்பதை நான் அறிவேன். வெளிப்படுத்துதல் நமதுவிருப்பத்தை விட முன்னுரிமை பெறுகிறது. மேலும்அப்போஸ்தலர் 16:9 இல், மாசிடோனியாவின் தரிசனம்பவுலின் திட்டத்தை மாற்றியது.
84 மேலும் காக்குவ் 154 க்குப் பிறகு, வெளிப்பாட்டின்அடிப்படையில் நான் மலைக்கு ஓய்வுக்காக சென்றேன். மேலும் இந்த மலையின் மேலே இருந்து, நான் செய்தியில்நடப்பதையும், செய்திக்கு எதிரான எதிரிகளின்செயல்களையும் பார்த்தேன், ஆனால் நான் எதுவும்சொல்லவில்லை என்பது மீண்டும் வெளிப்பாட்டின்அடிப்படையில் இருந்தது.
85 தாவீது ராஜா தேவனின் இதயத்திற்குப் ஏற்ற மனிதராகஇருந்தான் என்றால், அதற்குக் காரணம் தாவீது ராஜாவெளிப்படுத்தல் மூலம் செயல்பட்டார் என்பது தான. தாவீது ராஜா தீர்க்கதரிசிகளான நாத்தான் மற்றும் காத்மற்றும் பிற தீர்க்கதரிசிகளை தன்னுடன்கொண்டிருந்தார், அவர் அவர்களுக்கு செவிசாய்த்தார். இருப்பினும், தாவீது ஒரு தீர்க்கதரிசி. தாவீது ,இது ஒருசிறிய தீர்க்கதரிசி போதகராக மாறியது போன்றது. மேலும்சாலமோன் ராஜாவும் தீர்க்கதரிசிகளான நாதன், இத்தோ, அகிஜா மற்றும் பிற தீர்க்கதரிசிகளையும் தன்னுடன்வைத்திருந்தார், மேலும் அவர் அவர்களுக்குச்செவிசாய்த்தார். இருப்பினும், சாலமோன் ஒருதீர்க்கதரிசி. ஆசா மன்னன் ஓதேத் மற்றும் பிறதீர்க்கதரிசிகளை தன்னுடன் கொண்டிருந்தான், அவன்அவர்களுக்கு செவிசாய்த்தான்.
86 யோசபாத் ராஜா தன்னுடன் யெகூ தீர்க்கதரிசியையும்மற்ற தீர்க்கதரிசிகளையும் வைத்திருந்தார், அவர்அவர்களுக்கு செவிசாய்த்தார். எசேக்கியா மற்றும் ஓசியாராஜாக்கள் ஏசாயா மற்றும் பிற தீர்க்கதரிசிகளைகொண்டிருந்தார்கள் , அவர்கள் அவர்களுக்குசெவிசாய்த்தனர். யோசியா ராஜா தன்னுடன் ஹுல்டாதீர்க்கதரிசினி, எரேமியா தீர்க்கதரிசி மற்றும் பிறதீர்க்கதரிசிகளை கொண்டிருந்தார், அவர் அவர்களுக்குசெவிசாய்த்தார். செருபாபேல் தீர்க்கதரிசிகளான ஆகாய்மற்றும் சகரியாவை தன்னுடன் கொண்டிருந்தார், அவர்அவர்களுக்கு செவிசாய்த்தார். எஸ்ராவும் நெகேமியாவும்தீர்க்கதரிசிகளுடன் இருந்தார்கள், அவர்கள்அவர்களுக்குச் செவிசாய்த்தார்கள்.
87 இஸ்ரவேல், தேசங்களை வென்ற இஸ்ரவேல், அதுதீர்க்கதரிசிகளின் அடிச்சுவடுகளில் நடந்த இஸ்ரவேல்ஆகும் . எனவே தீர்க்கதரிசி இல்லாத சபை என்பதுநடக்கிற குருடனைப் போன்றது. தீர்க்கதரிசி ஜனங்களின்கண். அவர் கிறிஸ்துவின் சரீரத்தின் கண். மேலும் அதுஒரு தீர்க்கதரிசினியாக இருக்கலாம், அவளுக்கு செவிகொடுக்க நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். மேலும்அதுதான் மீட்டளிப்பில் வில்லியம் சீமோர் மற்றும்பெந்தேகோஸ்தலிசத்தின் அம்சம். அங்குதான், வெளிப்பாடுகளின் அதிகார எல்லையில், பெண் ஊழியம்இப்போது வந்துள்ளது.
88 வேதாகமத்தில், தீர்க்கதரிசினி தெபோராள்கானானியர்களுக்கு எதிராக இரண்டு கோத்திரங்களுடன்மட்டுமே போருக்குச் செல்லும்படி இஸ்ரேலை கேட்டுக்கொண்டாள். இஸ்ரவேல் படையின் தலைவரான பாராக்பயந்துபோய், தங்களுடன் போருக்குச் வரும்படிதீர்க்கதரிசினி தெபோராவிடம் கெஞ்சினார். பெண்என்பதால் மறுத்து விட்டாள். பராக், "நீங்கள் என்னுடன்வந்தால் , நான் செல்வேன்" என்று வலியுறுத்தினார். மேலும் தீர்க்கதரிசினி தெபோராள் ஒப்புக்கொண்டுஇஸ்ரேலுடன் போருக்குச் சென்றாள். இஸ்ரவேல்ஜெயத்தை வென்றது மற்றும் கானானியர்களின்தலைவரான கொடூரமான சிசெராவைக் கொன்றது, மேலும் தெபோராள் தேவனுக்கு ஒரு பாடலைப்பாடினாள்.
89 பொய்யான தீர்க்கதரிசிகள் இருந்தபோதிலும், இஸ்ரவேலின் அனைத்து நல்ல ராஜாக்களும் எப்போதும்மெய்யான தீர்க்கதரிசிகளுடன் இருந்தனர், அவர்களுக்குஅவர்கள் செவிசாய்த்தனர், ஏனென்றால் தீர்க்கதரிசிகள்தேவனுக்கும் மனிதர்களுக்கும் இடையில்மத்தியஸ்தர்கள். போலி ரூபாய் நோட்டுகள் இருப்பதால்நீங்கள் பணத்தை நிராகரிக்கவில்லை என்றால், பொய்யான தீர்க்கதரிசிகள் இருப்பதால் நீங்கள்தீர்க்கதரிசிகளை நிராகரிக்கக்கூடாது. இது உங்கள் மீதுதிணிக்கப்படுகிறது.
90 மேலும் ஒவ்வொரு சபையும் அதன் உறுப்பினர்களின்வெளிப்பாடுகளுக்கு ஒரு பதிவேட்டை வைத்திருக்கவேண்டும் மற்றும் அவை நிறைவேற்றப்படுவதைக்கண்காணிக்க வேண்டும். தேவனை நோக்கிய நமதுநடைப்பயணத்தில், ஒவ்வொருவரும் விஷயங்களைப்பார்ப்பதற்கு அவரவர் வழியைக் கொண்டுள்ளனர், ஆனால்நம் இரட்சிப்புக்காக நாம் தேவனின் பரிபூரண சித்தத்தில்இருப்போம் என்பது ஒரு தீர்க்கதரிசியின் மூலம்கட்டாயமாக உள்ளது என்பதை அறிந்து கொள்வோம். மேலும் கர்த்தராகிய இயேசுவின் உயிர் வாழும் திருச்சபைபுனித நூல்களின்படி நடக்கும் ஒரு சபையோ அல்லதுமதமோ அல்லது விஷயங்களைப் பார்க்கும் அதன் சொந்தவழியின்படி அல்ல , ஆனால் தீர்க்கதரிசிகளின்அடிச்சுவடுகளில் நடப்பது தான் திருச்சபை. மேலும்இஸ்ரவேல் அது தீர்க்கதரிசிகளின் பள்ளத்தாக்கு.
91 2 நாளாகமம் 20:20 ல் யோசபாத் ராஜா கூக்குரலிட்டதுபோல, "அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம் தேவனில்நம்பிக்கை வைக்க நாம் விருப்பமாக இருப்பதைப்பொறுத்தே நமது மீட்பு அமையும்". "யூதாவே,எருசலேமின் குடிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்! உன் தேவனாகிய கர்த்தரை விசுவாசியுங்கள், அப்பொழுதுநிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளைநம்புங்கள், நீங்கள் செழிப்பீர்கள்." நீங்கள் ஒருஉயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளருடன் தரித்திருக்கவேண்டும், இந்த தீர்க்கதரிசிக்குப் பிறகு, நீங்கள்மற்றொரு தீர்க்கதரிசியைத் தேட வேண்டும், இது ஓசியா12:13 இல் எழுதப்பட்டுள்ளது, "யெகோவா ஒருதீர்க்கதரிசி மூலம் இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியேகொண்டு வந்தார்; ஒரு தீர்க்கதரிசி மூலம் அவர்பாதுகாக்கப்பட்டார்".
92 யோசபாத் ராஜா தான் தீர்க்கதரிசிகளை நம்புவதுபோல் தீர்க்கதரிசிகளிடம் நம்பிக்கை வைக்கசொன்னார். மேலும் 2 நாளாகமம் 20:3ல், தீர்க்கதரிசிகள்மூலம் அவர் தேவனைத் தேடினார். ஒரு தீர்க்கதரிசியின்அறிவுறுத்தலின் பேரில் அவர் உபவாசத்தை அறிவித்தார். எரேமியா 42 இல், இஸ்ரவேல் மற்றும் அதன் பாதிரியார்கள்மற்றும் இமாம்கள் மற்றும் துறவிகள் தேவனைக்கலந்தாலோசிக்கச் எரேமியா தீர்க்கதரிசியிடம் சென்றது. 2 ராஜாக்கள் 19 இல், எசேக்கியா ராஜா உபவாசபோதகர்கள், இமாம்கள் மற்றும் துறவிகளை தேவனைக்கலந்தாலோசிக்க அனுப்பினார். மேலும் பிரச்சனையில், ஒரு ஆன்மீக மக்கள் தங்கள் உண்ணாவிரத பாஸ்டர்கள், இமாம்கள் மற்றும் துறவிகளை தேவனிடம் ஆலோசனைகேட்க ஒரு தீர்க்கதரிசியிடம் அனுப்புவார்கள்.
93 நீங்கள் தீர்க்கதரிசியின் செய்தியுடன் மட்டுமே தரித்துஇருக்க வேண்டும் மற்றும் முன்னேறுவதற்கு முன்தேவனுக்காக காத்திருக்கும் சிறிய தீர்க்கதரிசிகளுடன்முன்னோக்கி செல்ல வேண்டும். அதற்கு அப்பாலே, இதுஒரு கிரகணம் ஆகும் . காக்குவ் 142:39 இல்அப்போஸ்தலன் ராபர்ட் ஹஸ்கோவின் சொப்பனத்தில்காட்டப்பட்டுள்ளபடி, தீர்க்கதரிசியின் செய்தியே நித்தியஒளி மற்றும் அதுவே பரலோகத்தின் வாசலை அடையும்பெரிய ஏணியாகும்.
94 கிரகணம் அல்லது இருள் என்பது வெளிப்பாட்டின்இன்மையாகும்; தோட்டத்தில் சுற்றித் திரியும்ஆசாரியர்களின் செயல்கள் அல்லது ஏவப்படுதல்களுடன்கலந்த தீர்க்கதரிசியின் வார்த்தைகள் அவை. மேலும்இந்த ஆசாரியர்களின் பிரசங்கம் உங்களை தூக்கத்தில்அசையாமல் இருப்பதற்கும் இரவில் தீட்டுகளுக்கானகாரணமாக இருக்கும்.
95 ஒரு உயிர் வாழும் தீர்க்கதரிசிக்கு வெளியே, அதுஅந்தகாரம் ஆனால் ஒரு தீர்க்கதரிசி இருந்த போதிலும், நீங்கள் தீர்க்கதரிசியின் ஒரு நபரைப் பின்பற்றிஅவருடைய செய்தியாகிய ஒளியை பின்பற்றாததனால்நீங்கள் இருளிலும் இருக்க முடியும். ஒரு தீர்க்கதரிசியுடன்எப்போதும் இரண்டு குழுக்கள் உள்ளன: தீர்க்கதரிசியின்செய்தியுடன் முன்னோக்கி நகரும் ஒரு ஒளிரூட்டப்பட்டகுழு உள்ளது மற்றும் மற்றொரு குழு அந்தகாரத்தில், அதுதீர்க்கதரிசியின் இருக்கையில் அமர்ந்திருக்கிறது. தீர்க்கதரிசி அல்லது சூரியன் பூமிக்கு வரும்போது, அதுஎப்போதும் பூமியின் ஒரு பக்கத்தை ஒளிரச் செய்கிறது, பூமியின் மறுபக்கம் இருளில் இருக்கும். அது ஒருதெய்வீக சட்டம்.
96 இப்போது, தீர்க்கதரிசி யார்? தீர்க்கதரிசி ஒருநசரேயன், தேவனுக்கு பிரதிஷ்டைப்படுத்தப்பட்டவர். அவர்காண்பவர் , தனி கழுகு . ஒரு உண்மையானதீர்க்கதரிசியும் அவரை நம்புபவர்களும் எப்போதும்உலகத்தாலும் மத மக்களாலும் எந்த ஒரு காரணமுமின்றிவெறுக்கப்படுகிறார்கள்.
97 ஒரு தீர்க்கதரிசி செய்தியாளர் தான் தனதுதலைமுறையில் பரலோக ராஜ்யத்தின் திறவு கோலைவைத்திருக்கும் ஒரே மனிதர் . அவர் பூமியில்பரலோகங்களின் வாசல் ஆவார். பரிசுத்தத் தன்மையின்கேரூப்பின் கட்டளையால் ஒவ்வொரு நபரின் அளவிற்கும்ஏற்ப பரலோகத்தின் வஸ்திரங்களை அவர்தான் தருகிறார். இந்த கேருப் ஒரு தேவ தூதன் , உயரமான மற்றும்படிகத்தைப் போல ஒளிரும், மற்றும் ஒரு பெரிய சக்தியைவெளியிடுகிறது . நான் நினைத்தபடி கல்யாண வஸ்திரம்நீல வெள்ளை நிறமாக இல்லை, ஆனால் அனைத்தும்வெள்ளை நிறம் மட்டுமே.
98 தீர்க்கதரிசியின் ஊழியம் கடினமான ஒன்றாகும். மரணம் தனக்கு ஆதாயம் என்று பவுல் கூறுகிறார். மேலும்எரேமியா தீர்க்கதரிசி அவர் தான் பிறந்த நாளை சபிக்கும்அளவிற்கு அழுகிறார். யோனாவைப் போல தேவதூதர்தன்னை எங்கு அனுப்புவார், என்ன செய்யச் சொல்வார்அல்லது என்ன சொல்லுவார் என்று தெரியாததால்தீர்க்கதரிசி எப்போதும் கவலைப்படுகிறார். மேலும்தீர்க்கதரிசி ஒரு மலைவாசி ஆவார் . ஆனால் மலை, அதுஉபவாசங்கள் மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக ஒருநிரந்தர ஆன்மீக மனநிலை ஆகும்.
99 ஒரு தீர்க்கதரிசி தனக்குத் தேவையில்லாமல்பரிசுகளை ஏற்பதில்லை. ஒரு தீர்க்கதரிசி தனது சபைஉறுப்பினர்களை உளவாளிகளாகவோ அல்லது படைவீரராகவோ மாற்றக்கூடாது. கர்த்தராகிய இயேசு அதைச்செய்யவில்லை, அவருடைய சபை ஒருபோதும் செய்யாது.
100 மக்கள் மத்தியில் அல்லது இணையத்தில் தனிப்பட்டகுழுக்களில் உளவாளிகளாக இருக்காதீர்கள். நீங்கள்உங்களை மறைத்துக் கொண்டு மக்களை அவர்களின்படுக்கையறைகளில் பார்க்க வேண்டாம். அஞ்ஞானிகளும்இராணுவமும் சரி, ஆனால் ஒரு தீர்க்கதரிசியும்அவருடைய சீடர்களும் உளவு பார்க்க முடியாது. 2 இராஜாக்கள் 6 இல், எலிசா சிரியாவிற்கு உளவாளிகளைஅனுப்பவில்லை. மேலும் ஒரு தீர்க்கதரிசி ஒருபோதும்ஒரு தகவலை துணுக்கை ஒரு வெளிப்பாடாகமாற்றக்கூடாது.
101 மேலும், ஒரு தீர்க்கதரிசி பெரும்பாலும் அமைதிமற்றும் கட்டுப்பாடு நிறைந்தவர். உதாரணமாக, மெக்சிகோவைச் சேர்ந்த அப்போஸ்தலரான லூயிஸ்கொரோனாடோ கான்கனில் உள்ள ஒரு சபையைசந்திக்க வருகை தந்திருந்தார். மேலும் ஒரு சகோதரிபேசிக் கொண்டிருக்கும் போது, அவர் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர் சகோதரியைப் பற்றி ஒருதரிசனத்தைக் கண்டார். ஆனால் வீட்டிற்கு வரும் வரைஎதுவும் சொல்லவில்லை. பின்னர் அவர் தனது மனைவிமூலம் சகோதரியை அழைத்தார், இதோ, தரிசனம்வெளிப்படுத்திய அனைத்தும் சரியாக இருப்பதைக்கண்டார்.
102 ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை சிகென்சியின்சபையில், ஆராதனைப் பாடல்களுக்குப் பிறகு, பாஸ்டர்புருனோ தனது பிரசங்கத்தின் விஷயத்தை பலகையில்எழுதிக் கொண்டிருந்தபோது, சகோதரி ரோசின் ஒரு தரிசனத்தில் பிரசங்கத்திற்கும் சபைக்கும் இடையில் ஒருநபர் நகர்வதைக் கண்டார். பூமியிலுள்ள அனைத்துநாடுகளின் கொடிகளாலும் ஆன ஒரு விசித்திரமானஆடையை அந்த மனிதன் அணிந்திருந்தான். சகோதரிரோசின், சபையாரும் அந்த மனிதனைப் பார்க்க முடியுமாஎன்று திரும்பிப் பார்த்தபோது, முழு சபையும் வெள்ளைசீருடையில் அணிந்திருப்பதைக் கண்டார். ஆராதனையின் முடிவில் அவள் அந்த தரிசனத்தை எனக்கு அனுப்பினாள், ஆனால் அதைப் பற்றி யாரிடமும்சொல்லவில்லை.
103 ஒரு தீர்க்கதரிசி உண்மையில் தேவைப்படும்போதுபேசுகிறார். இது ஒரு சபை உறுப்பினரிலிருந்துவேறுபட்டது. சில வெளிப்பாடுகள் கூட, தீர்க்கதரிசிஅவற்றை தனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார். இதுஆமோஸ் 3:7ன் படி, தேவனுக்கும் அவருக்கும் இடையேஉள்ள ரகசியம். இது ஒரு ஆணும் அவரது மனைவியும்போன்றது. இப்போது, ஒரு தீர்க்கதரிசி ஒரு தொலைபேசிபெட்டி அல்ல, அங்கு நீங்கள் உங்கள் சொந்தஅர்ப்பணத்தை கைவிட்டு, எல்லா நேரங்களிலும் தேவனைஅழைக்க அல்லது செய்திகளைப் பெற வர வேண்டும்.
104 ஒரு தீர்க்கதரிசி தவறு செய்தாலும் அல்லதுதேவனால் நிராகரிக்கப்பட்டாலும் அவருக்கு எதிராகப்பேசாமல் இருங்கள். தேவன் எப்போதும் அவர்பயன்படுத்திய ஒரு தீர்க்கதரிசியின் மீது தம்அபிஷேகத்தை வைத்திருக்கிறார். ஒரு நிராகரிக்கப்பட்டதீர்க்கதரிசி, பரிசத்தை கொடுத்து வெளியேற்றப்பட்டபெண்ணைப் போன்றவர். சவுல் மற்றும் பிலேயாம் மேலும்2 இராஜாக்கள் 13 இல் உள்ள பழைய தீர்க்கதரிசிஆகியோர் அதற்கு உதாரணங்கள்.
105 ஒரு மனித தீர்க்கதரிசி மரித்தால, அவர் தீர்க்கதரிசிசெய்தியாளராக இருந்தாலும் அல்லது சிறியதீர்க்கதரிசியாக இருந்தாலும், அவருக்கு துக்கம்அனுசரிக்கப்படுவதில்லை, அவருக்கு எந்த ஒரு இறுதிச்சடங்கும் செய்யப்படுவதில்லை. அவரைப் போன்றதீர்க்கதரிசிகள் வந்து அவரது சவப்பெட்டியை அல்லதுஅவரது சரீரத்தை மூன்று முறை சுற்றி வந்து அவர்அடக்கம் செய்யப்படுகிறார். அவர்கள் வடக்குநட்சத்திரத்தை சுற்றி வருவது போல் அவரை சுற்றி ஈர்ப்புவந்து பின்னர் அவர்களது போராட்டத்தை தொடரசெல்கிறார்கள். இது தான் காக்குவ் 124:60 இன்இரகசியம். மேலும் நீங்கள் ஒரு தீர்க்கதரிசியின்கல்லறைக்கு புனிதப் பயணமாக வர வேண்டாம் . தீர்க்கதரிசிகள் மற்றும் தீர்க்கதரிசிகளின் ஊழியம்இப்படித்தான் இருக்கும் .