1 இயேசு கிறிஸ்துவின் அடிமையான நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, தூதன் வருகையின் முப்பதாவது வருடத்தின் நினைவாக, இந்த ஜூலை 8, 2023 அன்று பரிசுத்தவான்களுக்கு வெளிப்பாடுகளை அனுப்பியுள்ளேன்.
2 தீர்க்கதரிசித்துவம் மற்றும் கனவுகள் மற்றும் தரிசனங்கள் பற்றிய அறிவுரைகளில், நான் இப்போது கனவுகள் மற்றும் தரிசனங்களைப் பற்றி பேசப் போகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது இனம், தேசம், மதம் ஒரு பொருட்டாக இல்லாமல் கனவுகள் அல்லது தரிசனங்கள் இருக்கும்.
3 இரண்டு கனவுகள் ஒரே கனவின் இரண்டு படங்களாக இருக்கலாம். ஒரு கனவில் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் பல படங்கள் இருக்கலாம். ஒரே கனவை இருவர் இரு வேறு அம்சங்களில் பார்ப்பது போல, மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் போன்றவர்கள் கர்த்தராகிய இயேசுவின் ஒரே ஊழியத்தை வெவ்வேறு அம்சங்களின் கீழ் தொடர்புப்படுத்துவது போல் இருக்கும்.
4 ஒரு கனவு அல்லது தரிசனத்திற்கு நேரடியான விளக்கம் இருக்கலாம், அதாவது நீங்கள் பார்த்ததற்கு 1+1+1 = 3 போன்ற விளக்கம் தேவையில்லை. ஆனால் இங்கே, 1+1+1 என்பது ஒரே நபராக இருக்கும் பிதா,குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியைப் போல 1க்கு சமமாக இருக்க கூடும் என்பதைக் காட்ட நான் மேலும் செல்ல விரும்புகிறேன். மேலும் இதற்க்காக, சில கனவு சின்னங்களின் அர்த்தத்தையும் கொடுக்கப் போகிறேன். இது தான் அறியாத மொழியின் ஊழியம்.
5 கனவுகள் மற்றும் அவற்றின் இரகசியங்கள் மற்றும் விழித்தெழும் போது அவற்றை நினைவில் கொள்வதில் உள்ள அனைத்து துன்பங்களும் அவற்றைப் புரிந்துகொள்வதும் தேவனின் அருளப்பட்ட சித்தமாகும். சர்ப்பத்துடன் ஏவாள் செய்த பாவமே அதை உண்டாக்கியது. பரிபூரண சித்தம் என்பது புதிர்களும் சின்னங்களும் இல்லாமல் தேவன் மனிதனிடம் பேசுவதே ஆகும்.
6 மேலும் கனவுகள் மங்கலாவதற்கு அல்லது எழுந்திருக்கும் போது மறைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இது மூலப் பாவத்தில் இருந்து வருவது உண்மைதான் , ஆனால் இது எல்லாவற்றிற்கும் மேலாக நமது மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பு இல்லாததினால் தான். இதனுடன், ஆயிரம் ஆண்டுகள் முழுவதும் நம் வரைக்கும் உள்ள நம்முடைய பெற்றோர்களின் குறிச் சொல்லுதலையும் நீங்கள் சேர்க்க வேண்டும். இப்போது இணையம் மற்றும் தொலைபேசிகள், கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் திரைகளின் விளைவு உள்ளது. பின்னர், உங்கள் மனைவியின் நிர்வாணம், மற்றும் இணையத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் தெருக்களில் மோசமாக உடையணிந்த பெண்களின் விளைவு உள்ளது.
7 இப்போது, ஒரு கனவைப் புரிந்துகொள்ள, தேவனின் கிருபையைச் சார்ந்திருங்கள்; கனவுக்கு முந்தைய நாள் மற்றும் மறுநாள் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி சிந்தியுங்கள். முந்தைய நாள் உங்கள் மனதில் என்ன வலுவாக இருந்தது என்பதைப் பற்றி சிந்தியுங்கள். பின்னர், உங்கள் வாழ்க்கையிலும் கனவின் நேரத்திலும் முக்கிய நிகழ்வுகள் பற்றியும் சிந்தியுங்கள்.
8 கனவுகள் மற்றும் தரிசனங்களின் வியாக்கியானம் ஒரு கடினமான காரியம். எனவே எந்த ஒரு சகோதரனும் அல்லது சகோதரியும் பாசாங்கு மூலம் கனவுகளை வியாக்கியானிப்பவராக மாற வேண்டாம் . எண்ணாகமம் 12:6-ன்படி புதிர்களின் மூலம் தம் தீர்க்கதரிசிகளிடம் உவமைகளினால் பேசுவதாக தேவன் கூறினார். எனவே, நீங்கள் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாலும், உங்கள் மரணம் வரை, பல கனவுகள் மற்றும் தரிசனங்கள் உங்களுக்கு எப்போதும் புதிராகவே இருக்கும்.
9 ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பல உண்மையான தீர்க்கதரிசிகள், புதிர்களைத் தவறாகப் புரிந்துகொண்டு, தவறான தீர்க்கதரிசனங்களைக் கூறி, தவறான தீர்க்கதரிசிகளாக கண்டு கொள்ளப்பட்டனர். இருப்பினும் ஒரு ஒரு வியாக்கியானி தான் ஒரு தவறை செய்தார் அதனால் அவரை ஒரு தவறான தீர்க்கதரிசியாக அது மாற்ற முடியாது. மேலும் ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கனவுகள் மற்றும் தரிசனங்களுக்கு தவறான வியாக்கியானங்கள் கொடுக்கிறார்கள்.
10 உங்களுக்கு மர்மமானதாகத் தோன்றும் ஒரு கனவை நீங்கள் கண்டால், அதை எழுதுங்கள் அல்லது தேதி மற்றும் விவரங்களுடன் அதைப் பதிவு செய்யுங்கள் ஆக அதை வைத்துக் கொள்ள முடியும். நீங்கள் அதை பின்னர் புரிந்து கொள்ள முடியும். தீர்க்கதரிசிகள் கூட தங்கள் கனவுகளையும் தரிசனங்களையும் எழுதுகிறார்கள். வேதாகமத்தின் வசனங்களை தியானிப்பது போலவே கனவுகளையும் தியானியுங்கள். சில சமயங்களில் உங்கள் கோவில், ஜெப ஆலயம், சபை அல்லது மசூதியில் நீங்கள் கேட்கும் விஷயங்களைக் குறித்துக் கொள்வதை விட உங்கள் கனவுகள் மற்றும் தரிசனங்களை எழுதுவது சிறந்தது.
11 மேலும் நீங்கள் கெட்ட கனவுகளாகக் கருதுவது கூட தேவனிடமிருந்து வரும் எச்சரிக்கைகள் அல்லது எச்சரிக்கை வார்த்தைகளாக இருக்கலாம். மேலும் நீங்கள் துன்பப்படும் வரை அல்லது கடுமையான நோயில் சிக்கிக் கொள்ளும் வரை காது கேளாதவராக இருந்தால், உங்கள் துன்பத்தில் அவரை நோக்கிக் கூப்பிடும்போது தேவனும் செவிடாக இருப்பார் . ஒரு ஓட்டுநர் சாலையில் உள்ள போக்குவரத்து விளக்குகள் மற்றும் போக்குவரத்து அறிகுறிகளை புறக்கணிக்கக் கூடாததை போல் கனவுகள் மற்றும் தரிசனங்களை நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது, ஏனெனில் இது சரிசெய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தும்.
12 மேலும், போதகர்களாகிய நீங்களும் மற்றும் பிறரும், உங்கள் சபை உறுப்பினர்களின் கனவுகள் மீதான உங்கள் அணுகுமுறை, அதன் பின் வரும் விளைவுகளில் உங்கள் பொறுப்பை ஏற்க முடியும். கடந்த ஒரு நாள் காலை, ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு சகோதரர் என்னிடம், "சகோதரர் பிலிப்பு , என் அம்மா என்னைக் கொன்றுவிட்டதாக நான் நேற்று இரவு கனவு கண்டேன்" என்று கூறினார். நான் உடனே அவரிடம், " ஒரு சகோதரியான உன் அம்மா, உன்னை எப்படிக் கொல்ல முடியும்?" அவர் வற்புறுத்தினார், ஆனால் நான் அவர் சொல்வதைக் கேட்பதை நிறுத்திவிட்டேன். எங்கள் உரையாடலுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த சகோதரர் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். எங்களின் மற்ற உரையாடல்களைக் கேட்கச் சென்றேன். மேலும் கனவில் அம்மா மருந்து கொடுத்ததாகவும், அதைக் குடித்துவிட்டு உடனே இறந்துவிட்டதாகவும் அவர் விளக்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். அதனால், நான் அவனுடைய அம்மாவிடம் பேசினேன், அப்போதுதான் அவள் தன் தவறை உணர்ந்தாள்.
13 இது ஒரு உதாரணம் மட்டுமே. இந்தப் பிரசங்கம் ஆழமானது. மேலும் புரிந்து கொள்ளக்கூடியவர் புரிந்து கொள்ளட்டும். நான் மீண்டும் சொல்கிறேன்: கனவுகளையும் தரிசனங்களையும் புறக்கணிக்க வேண்டாம். உங்களிடம் சொல்ல எனக்கு வேறு வழியில்லை. ஒரு கனவில் ஒரு நோக்குநிலை அல்லது தீர்வு இருக்கலாம்; அதன் அடிப்படையில் தான் நீங்கள் செயல்படுவீர்கள். நீங்கள் அதை புறக்கணித்தால், உங்கள் நேர்மை இருந்த போதிலும் நீங்கள் செய்வது மோசமானதாகவோ அல்லது சாவுக்குரியதாகவோ இருக்கலாம். நமது இயற்கையான வாழ்க்கையிலோ அல்லது கடவுளை நோக்கிய நடைபயணத்திலோ எதுவாக இருந்தாலும், கனவுகளும் தரிசனங்களும் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. கனவுகள் மற்றும் தரிசனங்கள் இல்லாமல், பூமியின் மேல் தீர்க்கதரிசி இல்லை, மதம் இல்லை, புனித புத்தகம் இல்லை.
14 நீங்கள் சொல்கிறீர்கள்: "சகோதரர் பிலிப்பு, எனக்கு கனவுகள் புரியவில்லை" என்று. எல்லாம் சரி, ஆனால் தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரர்களான தீர்க்கதரிசிகளிடம் புதிர்களின் மூலம் பேசினால், அவர் உங்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? நீங்கள் சொல்லும் எதுவும் தேவன் முன் நிற்க முடியாது.
15 கனவுகள் மற்றும் தரிசனங்கள் சாலை குறியீடுகள் மற்றும் கடவுளை நோக்கி மனிதர்களின் நடைப்பயணத்தில் போக்குவரத்து அறிகுறிகளாகும். ஒரு கனவு இவ்வாறு அர்த்தம் கொள்ளும் : "கவனியுங்கள், தவறான வழி! கவனியுங்கள், சிவப்பு விளக்கு! அடையாளத்திற்கு முன் U-திருப்பம் செய்யுங்கள்! கவனியுங்கள், பாலம்! கவனியுங்கள், சாலை மூடப்பட்டுள்ளது ! கவனியுங்கள், சாலை ஒரு துளையில் முடிவடைகிறது!"
16 கனவுகளின் வியாக்கியான அகராதியை நான் உருவாக்கவில்லை, ஏனென்றால் அது சாத்தியமற்றது. கனவுகளின் வியாக்கியான அகராதிகளும் ஜாதகங்களைப் போலவே தவறானவை. ஜாதகம் தவறானது மற்றும் அது எளிய காரணத்திற்காக தவறாக வழிநடத்துகிறது, எடுத்துக்காட்டாக, இரட்டையர்கள் ஒரே நாளில் மற்றும் ஒரே இடத்தில் பிறந்திருந்தாலும் அவர்களுக்கு எப்போதும் வெவ்வேறு முடிவு நிலையை கொண்டிருக்கும்.
17 கனவுகளை எவ்வாறு வியாக்கியானம் செய்வது என்பது பற்றிய சில கருத்துக்களை நான் உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். மேலும் நான் இப்போது என்ன செய்கிறேனோ, சில தீர்க்கதரிசிகள் அதை எனக்கு முன் செய்தார்கள். பட்டயம் என்பது வார்த்தை, கச்சை என்பது சத்தியம், மார்ப்பதக்கம் என்பது நீதி, பாதரட்சை என்பது வைராக்கியம் என்று பவுல் கூறும்போது, அவை அவர் வியாக்கியானம் செய்து கொண்டிருக்கும் கனவு சின்னங்கள் ஆகும்.
18 ஒரு தலைமுறையின் உயிர் வாழும் தீர்க்கதரிசி செய்தியாளருக்கு தாம் கொடுக்கும் வார்த்தையின் மூலம் தேவன் உலகளாவிய பரிசுத்தத்தைத் தருகிறார். பின்னர், எபேசியர் 4:11 இன் ஊழியங்கள் மற்றும் 1 கொரிந்தியர் 12 இன் ஆவிக்குரிய வரங்கள் மூலம் ஒரு நாட்டிற்கு அல்லது ஒரு சபைக்கு வார்த்தையால் கூட்டுப் பரிசுத்தம் கொடுக்கப்படுகிறது. மேலும் இறுதியாக, தேவன் ஒவ்வொரு மனிதனுக்கும் கனவுகள் மற்றும் தரிசனங்கள் மூலம் தனிப்பட்ட பரிசுத்தத்தைக் கொண்டுவருகிறார் உங்கள் இரவு தீட்டுக்கு காரணமான பாவத்தை நீங்கள் கனவுகள் அல்லது முடிவில்லா துன்பத்தின் மூலமாக அதை அறிவீர்கள். ஆனால் ஒரு சபை உறுப்பினரின் வெளிப்பாடு ஒரு தீர்க்கதரிசி அதைப் பகிரங்கப்படுத்தும்போது அது தேவனின் உலகளாவிய வார்த்தையாகிறது.
19 தேவன் ஒவ்வொருவரிடமும் அவரவர் புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்ப பேசுகிறார். படிக்காதவர்கள் பெரும்பாலும் எளிமையான கனவுகளைக் கொண்டுள்ளனர். நீங்கள் பார்க்கிறீர்களா? மேலும் பூமி கடவுளை நேசித்திருந்தால், சிறுவயதிலிருந்தே தெய்வீகம் கற்பிக்கப்பட்டிருக்கும், மேலும் நம் தாய்மொழிகளைப் போலவே கனவுகள் மற்றும் தரிசனங்களின் மொழியைப் புரிந்திருக்க முடியும்.
20 ஒரு கனவில் அல்லது தரிசனத்தில் நீங்கள் பார்த்ததைப் புரிந்துகொள்வதற்கு, விளக்கத்தைப் பற்றி அமைதியாக, பிரார்த்தனை அல்லது தியானத்தில் சிந்தியுங்கள், மீதமுள்ளவற்றை தேவன் செய்வார். நேரடி அறிவு மூலம் வியாக்கியானம் வரலாம். விழித்திருக்கும் போது அல்லது மற்றொரு கனவில் அல்லது தரிசனத்தில் வியாக்கியானம் வரலாம். நீங்கள் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாலும், அதே நாளில் அல்லது பல நாட்களுக்குப் பிறகு வியாக்கியானம் வரலாம்.
21 மற்றும் அது உங்களுக்கு வேறொருவரால் வியாக்கியானம் செய்யப்பட வேண்டும் என்றால், அது கனவுகளையும் தரிசனங்களையும் வியாக்கியானம் செய்வதற்கான வரம் பெற்ற ஒருவராக இருக்க வேண்டும். உங்கள் கனவைப் புரிந்துகொள்வதற்காக ஒருவரிடம் நீங்கள் சொன்னால், தேதி மற்றும் நீங்கள் எங்கிருந்தீர்கள், எந்த நிலையில் இருந்தீர்கள் என்று அவர்களிடம் சொல்லத் தொடங்குங்கள். கனவில் இருக்கும் நபர்களைப் பற்றிய விவரங்கள் உட்பட எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்கள்.
22 மேலும், ஒரு தீர்க்கதரிசி அல்லது கனவுகள் மற்றும் தரிசனங்களை வியாக்கியானிக்கும் வரம் உள்ளவர் என்பவர் ஒரு தரிசனம் அல்லது அவர் வியாக்கியானம் செய்யப் போகும் கனவைக் காணக்கூடியவர். தானியேலின் ஆவியே கனவுகளையும் தரிசனங்களையும் வியாக்கியானம் செய்கிறது. எனவே, நீங்கள் ஒரு தீர்க்கதரிசியாக இல்லாமல், தானியேலைப் போலவே, ஒருவரின் கனவை அதன் வியாக்கியானத்தை கொடுப்பதற்கு முன்பே நீங்கள் பார்க்க கூடும்படியாக இருக்கும்.
23 மேலும் புர்கினாவைச் சேர்ந்த ஒரு சகோதரி ஒரு கனவு கண்டதை நீங்கள் நினைவில் கொள்கிறீர்கள். கனவில், தீர்க்கதரிசி ஒரு பாத்திரத்தின் உள்ளடக்கத்தை வியாக்கியானித்தார். பாத்திரத்தில் பால் இருப்பது அவளுக்குத் தெரியும், ஆனால் பாலில் உள்ள எழுத்துக்களையும் சின்னங்களையும் அவளால் பார்க்க முடியவில்லை. ஆனால் காக்குவ் 151:9 ல் உள்ள வியாக்கியானத்தை சென்று படிக்கவும் அல்லது கேட்கவும், வியாக்கியானத்தை கொடுப்பதற்கு முன்பு பாத்திரத்தின் உள்ளடக்கம் மற்றும் அவள் பார்க்காத சின்னங்களை நான் எப்படி பார்த்தேன் என்பதை நீங்கள் காண்பீர்கள்.
24 மேலும், தேவனும் சாத்தானும் வெளிப்பாடுகளில் ஒரே சின்னங்களைப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, தேவனின் வார்த்தையின் சின்னங்களான தண்ணீரும் கண்ணாடியும் கூட குறிச்சொல்லுதலுக்கான பொருள்கள். ஒரு நகல் அசலில் இருந்து வெகு தொலைவில் இல்லை. ஏப்ரல் 24, 1993 இன் தீர்க்கதரிசி அல்லது தூதன் போல் தோன்றுவதற்கு சாத்தான் கூட மாறுவேடமிட முடியும்.
25 தேவனும் சாத்தானும் அருகருகே முன்னேறுகிறார்கள். தேவனை வணங்குவதற்கும், சாத்தானை வழிபடுவதற்கும் வெள்ளை நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் தேவனின் தீர்க்கதரிசிகளைப் போல ஊழியக்காரர்களின் தலைக்கு மேல் ஒளிவட்டத்தைக் கொண்டுள்ளனர். இறையியல் அருகில் வெளிப்பாடு உள்ளது, உண்மையின் அருகில் பொய் உள்ளது. மேலும் பித்தளை பாம்பு மருத்துவத்தின் சின்னம் ஆகும்.
26 ஒரு கனவில், ஒரு சகோதரர் தனது இயற்பியல் மற்றும் வேதியியல் தேர்வில் தோல்வியடைந்தார். மேலும் அவர் அதை எல்லா வகையிலும் பொய்யுடன் இணைக்க விரும்பினார், ஏனெனில் காக்குவ் 154 இல், அறிவியல் பொய் என்று நான் கூறியிருந்தேன். இன்னும் இயற்பியல் மற்றும் வேதியியலும் தெய்வீகமாகும். அவரது கனவில் மொழி அல்லது இயற்பியல் மற்றும் வேதியியல் பரீட்ச்சை என்பது தேவனின் வார்த்தையைப் புரிந்துகொள்வதற்கான சோதனை அல்லது தேவனிடமிருந்து ஒரு வெளிப்பாடு ஆகும்.
27 ஒரு கனவில், பரீட்சை அறைக்கான நுழைவுச் சீட்டு என்பது அவருடைய காலச் செய்தியின்படி ஒருவர் கொண்டிருக்க வேண்டிய குறைந்தபட்ச கிறிஸ்தவ நற்பண்புகள் ஆகும். தேர்வுத் தாள் உங்கள் மனநிலை மற்றும் உங்கள் விருப்பம். மேலும் வாய்மொழித் தேர்வு என்பது சமாதானப்படுத்துவதற்கான கூட்டம். வெளிப்படையான பாவ அறிக்கை என்பது நீதி மன்றம் அல்லது சட்டம் அல்லது குற்றவியல் வகுப்பு.
28 கனவில் வரும் தத்துவ ஆசிரியர் உங்களிடம் பேசும் பொய்யர். தத்துவம் என்பது சாத்தானிய நியாயங்களும் காரணங்களும். மேலும் ஒரு தத்துவ வகுப்பு என்பது சாத்தானிய பிரசங்கம். ஒரு தவறான போதகர்: "ஏசாயா தீர்க்கதரிசி கூறினார்" என்று கூறும்போது, தேவன் இவ்வாறு கேட்கிறார்: "தத்துவவாதி சாக்ரடீஸ் கூறினார்"என்று. "எரேமியா தீர்க்கதரிசி கூறினார்" என்று போதகர் கூறும்போது, தேவன் இவ்வாறு கேட்கிறார்: "தத்துவவாதி பிளேட்டோ கூறினார்" என்று.
29 உண்மையில், ஒரு பிரசங்கத்தை நியாயந்தீர்க்கும்படி உங்களிடம் கேட்கப்படும் போது ஒரு பிரசங்கம் சாத்தானிய பிரசங்கமாக இருக்கும் போது, அது ஒரு கனவில் வரும் தத்துவத்தின் சோதனையாகும். மேலும் கணிதத் தேர்வில் ஏமாற்றுவது பண விஷயங்களில் மோசமான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகும். நீங்கள் ஒரு பள்ளிக்கூடத்தில் இருக்கும்போது நீங்கள் நடந்தால் அல்லது செயல்பட்டால், நீங்கள் மனித அறிவின் பாதையைப் பின்பற்ற வெளிப்பாட்டின் பாதையை விட்டுவிட்டீர்கள்.
30 ஒரு கனவில் உங்களிடம் மோசமான ரூபாய் நோட்டுகள் இருந்தால், உங்களிடம் உள்ள பணம் அல்லது பொருட்கள் உங்கள் ஆசீர்வாதத்திற்காக இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் பல உடைமைகளிலிருந்து பிரிந்து இருக்க வேண்டும், அதனால் நீங்கள் பரலோகத்தில் ஒரு பொக்கிஷத்தைப் பெறுவீர்கள். விமான நிலையத்திலோ அல்லது விமானத்திலோ இருப்பது என்பது ஆவிக்குரிய காரியத்தில் உயர் மட்டத்தில் இருப்பதாகும். பேசும் மரித்த ஆணோ அல்லது மரித்த பெண்ணோ ஒரு போதகராகவோ அல்லது தேவனிடமிருந்து பிரிக்கப்பட்ட சபையாகவோ இருக்கலாம். மேலும் ஒரு சபையும் ஒரு பிரசங்கியும் ஒருவருக்கொருவர் நடந்துகொள்வது என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான செயலாக தேவன் உங்களுக்குக் காண்பிப்பார்.
31 மேலும் அடிக்கடி, நீங்கள் பார்க்கும் விலங்குகள், அஞ்ஞானிகள் மற்றும் இறந்த மனிதர்கள் வார்த்தைக்கு புறம்பாக செயல்படும் மனிதர்கள். மேலும் ஒருவரை அடிப்பது அல்லது கடிப்பது அல்லது எச்சில் துப்புவது என்பது அவரிடம் கடுமையான வார்த்தைகளைக் கூறுவதாகும். உங்களை தற்காத்துக் கொள்ள அல்லது தாக்க உங்கள் கையில் உள்ள பொருள்கள் உங்கள் வாதங்களும் வார்த்தைகளும். உங்கள் கையில் ஒரு சமையலறை அல்லது பெண்ணின் பொருள், அவை பெண்ணின் அணுகுமுறைகள் அல்லது வார்த்தைகள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தலைகளைக் கொண்ட ஒரு விலங்கு பல மொழிகள் அல்லது கூட்டாளிகளைக் கொண்ட ஒரு நபர்.
32 ஒரு காற்று வரவிருக்கும் நிகழ்வாக இருக்கலாம். கல்லறை ஒரு சபை அல்லது ஒரு மதமாக இருக்கலாம் மற்றும் அவர்களின் ஆராதனைகள் மற்றும் கூடுகைகள் இறுதிச் சடங்குகள் ஆகும். மற்றும் கொள்ளைச் செயல்கள் அவர்களின் தலையீடுகள் மற்றும் கருத்துக்கள். சிறை என்பது ஒரு தண்டனை அல்லது நீண்ட துன்பம் ஆனால் தண்டனைக்கு வெளியே அது மரணம் அல்லது அடக்கம். ஆனால் ஆப்பிரிக்க போர்வைகள் நிறைந்த ஒரு வீட்டில் ஒரு மனிதன் தனியாக இருக்கிறான், அதுதான் மாம்ச களம் மற்றும் அது ஒரு சவப்பெட்டியில் ஒரு உடல். சுரங்கப்பாதை என்பது துன்பம் அல்லது நரகத்திற்கான பாதையாகும்.
33 நல்லது. ஒரு வலுசர்ப்பம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சபைகள், கூட்டங்கள், நாடுகள் அல்லது தேவனின் விருப்பத்திற்கு வெளியே உள்ள பிற குழுக்களின் ஒன்றியம் ஆகும். ஒரு தவறான சபையில் அல்லது தவறான போதகரிடம் சேர்வது அல்லது அசுத்த ஆவி உள்ள ஒரு போதகரைப் பெறுவது மோசமான திருமணம் அல்லது விபச்சாரமாகும்.
34 நாயின் ஆவி உங்களிடம் இருப்பதால் நாய் உங்களைத் தாக்குகிறது. ஒரு நாய் அது எப்போதும் தான் வாந்தியெடுக்கும் அல்லது கைவிடும் பாவத்திற்குத் திரும்புகிறது. உங்களைத் தாக்கும் எருது, காளை அல்லது நாய் நீங்கள் திரும்பும் பாவத்தின் தீவிரத்தைப் பொறுத்தது. புதர் அல்லது இருட்டில் இருப்பது அல்லது தொலைந்து போவது என்பது கடவுளின் சித்தத்திற்கு புறம்பாக இருப்பது. ஒரு கனவில், நீங்கள் மக்களுடன் இருளில் இருந்தால், தூரத்தில் ஒளியைக் கண்டால், தேவன் உங்கள் குழுவை அல்லது உங்கள் சபையை விட்டு வெளியேறிவிட்டார் என்று அர்த்தம், நீங்கள் சென்று அந்த ஒளியில் சேர வேண்டும், அல்லது அதை நீங்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு வர வேண்டும்.
35 ஒரு அஞ்ஞானியின் கொண்டாட்டம், ஒரு அஞ்ஞானியின் கச்சேரி அல்லது இறுதிச் சடங்கு ஆகியவை தேவனின் சித்தத்திற்குப் புறம்பாக ஒரு கூட்டமாக இருக்கலாம். கால்சட்டை அணிந்த அல்லது முடி வெட்டப்பட்ட ஒரு பெண் வார்த்தைக்கு கீழ்படியாமையை குறிக்கிறது. மேலும் குழப்பமான முடி என்பது பைத்தியக்காரத்தனம். குதிகால், அது உங்கள் குழு அல்லது உங்கள் குழந்தைகள். பழம் சாப்பிடுவது பாலியல் பாவம் மற்றும் மேஜையில் ஏறுவது அசாதாரணமான அல்லது அருவருப்பான செயலாக இருக்கலாம். மலமும் மூத்திரமும் அவற்றின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப பாவங்கள். மேலும் இடைவிடாமல் மலம் கழிப்பது அல்லது சிறுநீர் கழிப்பது மீண்டும் மீண்டும் அதே பாவமாகும்.
36 ஒரு சண்டை அல்லது பந்து அல்லது செக்கர்போர்டு விளையாட்டு என்பது ஒரு விவாதமாகவோ அல்லது மோசமான விவாதமாகவோ இருக்கலாம். மேலும் நடுவர் என்பது தலைவர், பத்திரிகையாளர் அல்லது மதிப்பீட்டாளர். மேலும் பந்தை வைத்திருப்பவர் என்பது களத்தில் இருப்பவர். அவர்களின் உரையாடல் அல்லது பந்து உங்களை நோக்கி வந்தாலும் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். அரட்டை என்பது வாயோடு வாய் கொண்ட அல்லது சில முத்தங்கள்.
37 பாலியல் உறவின் பாவத்தைப் போலவே வாய்க்கு வாய் வைப்பதும் மோசமான பாவமாகும். மேலும் நீங்கள் பெறும் உமிழ்நீர் மலத்திலோ அல்லது சிறுநீரிலோ வெளியேற்றப்படாது, ஆனால் அது உங்கள் உடலில் முடிவில்லாத வயிற்றுப்புண் அல்லது நெஞ்சுவலி போன்ற நோய்களாக மாறும். நீங்கள் எப்போதாவது காக்குவ் பிலிப்புவைப் பற்றி கேள்விப்பட்டிருந்தால், நீங்கள் அவரை நம்பாவிட்டாலும் கூட, இது இன்னும் மோசமானது.
38 ஒரு கனவில் அல்லது ஒரு தரிசனத்தில் ஒரு கால்பந்து மைதானம் என்பது இணையத்தில் ஒரு குழுவாக இருக்கலாம். மேலும் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் மைதானத்தின் இருக்கைகளில் அமர்ந்திருப்பதாகக் கருதப்படுகிறது மற்றும் ஒவ்வொரு நாடும் ஒரு நிலைப்பாடாகும் . மைதானத்தில் அமர்ந்திருக்கும் அதிகாரிகள், ஆணையாளர்கள், இராணுவ அதிகாரிகள், தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள், சுவிசேஷகர்கள், போதகர்கள் மற்றும் பாஸ்டர்கள் ஆகியோர் செய்தியை தகுதியுடன் பின்பற்றுகிறார்கள்.
39 ஒரு கனவில், நீங்கள் மத மக்கள், அரசியல்வாதிகள் அல்லது விளையாட்டு வீரர்களுடன் இருக்கிறீர்கள், ஏனென்றால் அது உங்கள் சபை அல்லது உங்கள் ஆவிக்குரிய நிலை அல்லது அவர்களைப் பற்றிய விஷயங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், படித்திருக்கிறீர்கள் அல்லது கேட்டிருக்கிறீர்கள். ஒரு ஏணி அல்லது படிக்கட்டில் ஏறுவது அல்லது இறங்குவது என்பது கடவுளை நோக்கி நடக்கையில் முன்னோக்கி அல்லது பின்னோக்கிச் செல்வதைக் குறிக்கும்.
40 கழிவு நீர் சேகரிக்கும் தொட்டிகள் என்பது சபைகளின் தூய்மையற்ற நிலையைக் குறிக்கிறது. வெள்ளம் என்பது கடவுளிடமிருந்து உங்களை விலக்கி தூரமாக அழைத்துச் செல்லும் ஒரு சூழ்நிலை. தண்ணீரில் மூழ்குவது என்பது நீங்கள் அந்த வழியில் சென்றால் பாவம் அல்லது பிரச்சனைகளால் அடித்துச் செல்லப்படுவீர்கள்.
41 வார்த்தைக்கு புறம்பாக ஒரு நபருடனான எந்தவொரு செயலும் அல்லது உரையாடலும் உங்களை ஒரு காட்டின் நடுவில் வைக்கிறது. மேலும் நீங்கள் இணையத்தில் பக்கத்திலிருந்து பக்கத்திற்கு அல்லது குழுவிலிருந்து குழுவிற்கு செல்லும்போது நீங்கள் சாலைகளிலோ அல்லது உங்களுக்குத் தெரியாத இடங்களிலோ உங்கள் கனவில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பீர்கள். மேலும் அஞ்ஞான உரையாடல் மற்றும் விஷயங்கள் ஒரு கனவில் தூய்மையற்ற பாலியல் நடைமுறைகளாக இருக்கலாம்.
42 ஒவ்வொரு வார்த்தையும் விதையாக இருப்பதால், கடவுளின் சித்தத்திற்கு புறம்பாக வெளிவரும் வார்த்தைகள் ஒரு பாலியல் செயலைப் போன்றது மற்றும் அது ஒரு அசுத்தமான அல்லது தீட்டுப்படுத்தும் கனவில் முடியும். தீட்டுப்படுத்தும் கனவு என்பது ஒரு பாவத்தின் விளைவாக இருக்கலாம், அதைத் தவிர்க்கும் திறன் உங்களிடம் இருக்கும்போது நீங்கள் மீண்டும் செய்கிறீர்கள்.
43 போலீஸ் அதிகாரிகள் என்பது தேவதூதர்கள் அல்லது செய்தியில் ஒழுங்கை வழிநடத்த அல்லது செயல்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் . ஆனால் நட்சத்திரங்கள், ஜிஹாதிகள், கொள்ளைக்காரர்கள், புகைப்பிடிப்பவர்கள், முதலாளித்துவ மக்கள் மற்றும் அந்த விலங்குகள் அல்லது வினோதமான தோற்றமுடைய ஆண்கள் அல்லது பெண்கள், அவர்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், அவர்கள் தொந்தரவு செய்பவர்கள் அல்லது வெளிப்பாடு இல்லாமல் அல்லது கடவுளின் சித்தத்திற்கு புறம்பாக செயல்படுகிறார்கள். சிகரெட் பிடிப்பது என்பது அவ்விசுவாசம், மேலும் அதே பாவத்தை தொடர்ந்து செய்வது மெய்யாகவே இது காக்குவ் 17:37-ன் பாவங்களை விட மோசமானது.
44 மெய்கிறிஸ்தவர்கள் மற்றும் அஞ்ஞானிகள் ஒன்றாக இருக்கும் அசுத்தமான மற்றும் தூய்மையற்ற வீடு என்பது உங்கள் சபையின் ஆவிக்குரிய நிலையாக இருக்கலாம். மேலும் அஞ்ஞானிகள் என்பது பாவத்தில் இருக்கும் சகோதரர்கள். மேலும் இவர்களது பாடல்களே அஞ்ஞானிகளின் பாடல்களாக ஒலிக்கின்றன.
45 ஒரு கட்டத்தில், ஒரு நாட்டின் ஆசாரியத்துவம் அந்நாட்டின் பாஸ்டர் அல்லது போதகரின் தோற்றத்தைப் பெறுகிறது. மேலும் அவரது மனைவி அல்லது இந்த சகோதரருடன் தொடர்புடைய தோற்றம் கொண்ட மற்றொரு பெண் அவர்களின் சபையின் அடையாளமாக மாறுகிறாள். காலப்போக்கில், ஆசாரியத்துவம் அவர்களின் நடத்தையை மாற்றும்போது தோற்றம் மாறி மற்றொரு சகோதரனாக மாறலாம்.
46 ஒரு கனவில், யாரோ ஒருவர் இருப்பதை நீங்கள் உணர்ந்தாலும், உங்களால் அவரை பார்க்க முடியவில்லை என்றால், அவருடைய ஆவிதான் கனவில் செயல்படுகிறது. ஒரு பல்பொருள் அங்காடி அல்லது சீன மக்கள் என்பது போலிகள் அல்லது பாவனைகள். மேலும் துடைப்பது அல்லது துவைப்பது என்பது பரிசத்தத்தை தேடுவதாகும். பரிசுத்தத்தின் காரணமாக நீங்கள் உடலுறவை நிறுத்த முடிவு செய்துள்ள உங்கள் மனைவி ஒரு கனவில் உங்கள் உயிரியல் சகோதரர், சகோதரி அல்லது தந்தையாக மாறலாம்.
47 வெளிப்பாட்டில் இல்லாத எவரும் உடனடியாக தேவனுக்கு முன்பாக அஞ்ஞானியாவார். மேலும், ஒருவருக்கு மலக்குடல் கழுவ (enema) மருந்து கொடுப்பது என்பது அவரை பாவத்திற்கு இட்டுச் செல்லும் விஷயங்களை அனுப்புவது அல்லது சொல்லுவது. மேலும் ஒரு பெண்ணுடன் இருக்கும் ஒரு குழந்தை என்பது அந்த பெண்-சபையின் ஒரு பகுதியாகும். மேலும் ஒரு குழந்தை என்பது ஆசாரியத்துவத்தின் உறுப்பினராகவோ அல்லது ஒரு பகுதியாகவோ இருக்கலாம். தடுப்பூசி போடுவது என்பது நோய் எதிர்ப்பு சக்தியாக இருக்க வேண்டும்; உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அதைப் புறக்கணிக்கும் போது ஏதோ தவறு இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
48 தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ, இரண்டு அல்லது அநேக நபர்களின் கனவு அல்லது தரிசனத்தைப் பொறுத்து ஒரு நல்ல அல்லது கெட்ட, ஆண் அல்லது பெண் அல்லது கழிப்பறை அல்லது ஒரு சபையின் தோற்றத்தைப் எடுக்கலாம். உங்கள் தாய் அல்லது உங்கள் கனவில் நீங்கள் காணும் சூனியக்காரி பெரும்பாலும் நீங்கள் கலந்துகொள்ளும் சபை அல்லது மதச் சமூகம். உங்கள் சூனிய உறவினர் உங்கள் பாஸ்டராகவோ அல்லது உங்கள் பிரசங்கியாகவோ இருக்கலாம். இது உங்கள் உயிரியல் பெற்றோர் அல்ல.
49 ஒரு கனவில், ஒரு ஆணோ அல்லது பெண்ணோ உங்கள் மீது உட்காரலாம் அல்லது உங்கள் மீது அசுத்தமான செயல்களைச் செய்யலாம், மேலும் இந்த பெண் நீங்கள் பேசும் ஒரு நபர் அல்லது அநேக நபர்களாக இருக்கலாம். பெண் ஓரின சேர்க்கை அல்லது ஆண் ஓரின சேர்க்கை என்பது கடவுளின் சித்தத்திற்கு புறம்பாக ஏதாவது ஒன்றை நிறுவிய சகோதரர்கள் அல்லது சகோதரிகளாக இருக்கலாம்.
50 நீங்கள் ஒரு மிருகத்தையோ அல்லது ஒரு நபரையோ பார்க்கவோ அல்லது அவருடன் இருக்கவோ முடியும், மேலும் அந்த மற்றொரு நபர் உங்களின் மற்றொரு அடையாளம். மேலும் ஒரு நபர் பலரை பிரதிநிதித்துவப்படுத்த முடியும். சுற்றுச்சுவர்களும் மற்றும் வேலிகளும் நம்மைச் சுற்றித் தடைகளாக இருக்கின்றன. வேலியடைப்புக்குள் தனியாக இருப்பது என்பது சிறையில் இருப்பதாகும். எந்தவொரு சரீரப் பிரகாரமான குழுவும் அல்லது இணையத்தில் உள்ள குழுவும் வேலியிடப்பட்ட வீடு. எனவே ஒரு வேலியில் ஒரு துளை வழியாக செல்வது கடவுளின் சித்தத்திற்கு வெளியே செல்வதாக இருக்கலாம்.
51 ஒருவரிடமிருந்து ஒரு ஆடை, ஒரு காலணி அல்லது ஒரு பொருளை வாங்குவது அல்லது பெறுவது என்பது அவரைப் போலவே செயல்படுவதாகும். மேலும் அது ஒரு பெண்ணாக இருந்தால், பிறகு அது அதன் அடையாளத்தை மாற்றும் ஒரு சபையாக இருக்கலாம். ஒரு பெண் உணவு பரிமாறுகிறாள் என்றால் இது அவளது கணவர் அல்லது கணவரின் சக ஊழியர்களின் பிரசங்கம். மேலும் ஒரு பெண் ஏற்கனவே திருமணமான நிலையில் வேறொரு மனிதனை திருமணம் செய்தால் அது தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சபையாகும்.
52 ஒரு கனவில் இரண்டு மனைவிகளைக் கொண்டிருப்பது என்பது இரண்டு அல்லது பல சபைகளை வழிநடத்துவதாகும். நீங்கள் ஒரு நல்ல பாஸ்டராகவோ அல்லது பிரசங்கியாகவோ இருந்தால், இந்த பெண்-சபையுடன் நீங்கள் ஒரு அன்னகனை போல இருப்பீர்கள். ஆனால் நீங்கள் கெட்டவராக இருந்தால், நீங்கள் இந்த பெண்-சபையுடன் தூய்மையற்ற செயல்களைச் செய்ய முற்படுவீர்கள். அந்த சபைக்கு உங்கள் மனைவியின் பெயரைப் போன்ற அல்லது கிறிஸ்துவின் சபைக்கு பதிலாக "கிறிஸ்டின்" போன்ற உங்கள் பெயரின் பெண்பால் பெயரைக் கூட வைத்திருக்கலாம்.
53 காலணி என்பது வார்த்தையின் ஒரு புள்ளியைப் பயன்படுத்துவதில் உள்ள வைராக்கியம். அழுக்கு உடைகள் என்பது பாவத்தின் விளைவு. குட்டையான உடை என்பது கடவுளின் அனுமதிக்கப்பட்ட சித்தமாகும். உங்கள் சுத்தமான ஆடைகளில் உள்ள கறைகள் பாவங்கள். மேலும் சுத்தமான ஆனால் மங்கிப்போன ஆடைகள் என்பது மிக அதிகமான பாவ அறிக்கைகளின் விளைவு. தூக்கக்கலக்கம் அல்லது கனத்தன்மை என்பது உங்கள் மீது ஒரு மோசமான செல்வாக்கு அல்லது ஒருவரின் பாவத்தின் விளைவாக இருக்கலாம்.
54 கழிவறைகள் அசுத்தமாக இருப்பதைக் கண்டறிந்து, அதில் சிறுநீர் கழிக்கவோ அல்லது மலம் கழிக்கவோ மறுப்பது, ஒரு செயலைச் செய்தால் அது பாவமாகிவிடும் என்பதை உணர்ந்து, அதைச் செய்யாமல் இருப்பது. பொது இடங்களில் நிர்வாணமாக இருப்பது அல்லது பொது இடத்தில் மலம் கழிப்பது அல்லது சிறுநீர் கழிப்பது என்பது பொது இடத்தில் அல்லது இணையத்தில் ஒரு குழுவில் சாத்தானின் செயல் அல்லது வார்த்தையாகும்.
55 ஒரு வகுப்பறை என்பது ஆவிக்குரிய நிலை அல்லது பரிமாணமாக இருக்கலாம். மிதிவண்டி, இரு சக்கர வண்டி, கார் அல்லது பிற வாகனம் என்பது பதவி அல்லது ஒரு ஊழியமாக இருக்கலாம். மேலும் பணத்திற்காக வாடகை வண்டி அல்லது வாகனம் ஓட்டுபவர் என்பது பணத்திற்காக தேவனுக்கு ஊழியம் செய்பவர். முகப்பு கண்ணாடி என்பது உயிர் வாழும் தீர்க்கதரிசி. பின்புறக் கண்ணாடிகள் என்பது வேதாகமம் அல்லது கடந்த கால செய்திகள் பற்றிய அறிவு. மேலும் இந்த பொருள்களில் ஒன்றில் உள்ள குறைபாடு என்பது பிரேக் செயலிழப்பாகும்.
56 காணக்கூடாமல் இருந்து உங்களை வழிநடத்துவது ஒன்று தேவனின் ஆவி அல்லது பிசாசின் ஆவியாக இருக்கும். மேலும் விபத்து ஏற்படுவது என்பது அந்த பதவியில் அல்லது ஊழியத்தில் ஈடுபடும் போது தவறு செய்வதாகும். ஒரு நிலையம் என்பது இணையத்தில் ஒரு பெரிய குழுவாக இருக்கலாம். மேலும் கார் அல்லது ஓட்டுநர் உரிமம் பறிக்கப்பட்டது என்பது பதவி நீக்கம் செய்யப்படுவதாகும்.
57 கனவில் பணம் என்பது ஒரு ஆசீர்வாதம், ஆனால் மத்தேயு 25:14 முதல் 30-இன் படி ஒரு ஆவிக்குரிய வரம், ஒரு அற்புதம், ஒரு சிறிய ஆலோசனை, ஒரு பதவி அல்லது ஊழியமும் ஆகும். மேலும் ஒரு சிறிய சபையின் பொறுப்பில் வைக்கப்பட்டவர் அந்த சிறிய சபையை விட்டு வெளியேறிச் சென்று பணத்தை தேடுவதாகும். மீன்பிடித்தல் அல்லது மீன் வாங்குதல் என்பது சுவிசேஷம் செய்வது அல்லது ஏற்கனவே விசுவாசித்த மக்களை பெற்றுக்கொள்வது.
58 ஒரு கஷ்டத்தில், கனவில் அதை வெற்றி பெறும் நபரின் நடத்தை உங்களுக்குத் தேவை. ஒருவேளை ஒரு குழந்தை அல்லது விலங்கு கூட இருக்கலாம். நீங்கள் தேவனின் சித்தத்திற்கு புறம்பாக செயல்படுவதால் நீங்கள் நிர்வாணமாக இருக்கிறீர்கள். உங்கள் கணுக்காலில் ஒரு சங்கிலி அல்லது நகை என்பது ஒரு திருமண மோதிரம் போன்ற கூட்டணியின் சின்னமாகும்.
59 உங்கள் கதவு அல்லது ஜன்னல் வெளி உலகிற்குத் திறந்திருக்கும் ஏனெனில் நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டு இருக்கிறீர்கள் அல்லது உங்களை படம் எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஜன்னல் வழியாக நுழைவது அல்லது வெளியேறுவது என்பது இணையத்தில் ஒரு குழுவிற்குள் நுழைவது அல்லது வெளியேறுவது. ஜன்னல் என்பது தொலைபேசி, கணினி அல்லது தொலைக்காட்சியின் திரையாகும். நீங்கள் நிர்வாணமாக குளிக்கிறீர்கள், மக்கள் உங்களைப் பார்க்கிறார்கள், ஏனென்றால் உங்கள் கூட்டம் அல்லது நீங்கள் செய்வது படம்பிடிக்கப்பட்டது அல்லது மக்களுக்கு முன்பாக நடக்கிறது. படமெடுக்கப்பட்ட எந்தக் கூட்டமும் கதவு இல்லாத குளியலறை.
60 ஒவ்வொரு பிரசங்கியும், பாஸ்டரும் அல்லது மதத் தலைவரும் கடவுளுக்கு ஒரு பாலம். ஆனால் அவர் உங்களை சாத்தானுக்கு வழி நடத்தினால், அது ஒரு மோசமான பாலம் அல்லது அதன் கீழ் குளவிகள் கொண்ட பாலம். அந்த குளவிகள் யாவும் அந்த pastor தவறிழைத்தாலும் அவரைப் பாதுகாப்பதற்காக இருக்கிறது.
61 சாவிகள் என்பது கதவுகள் அல்லது இரகசியங்களை மூட அல்லது திறக்கும் குறியீடுகள் அல்லது வல்லமை. மழை என்பது தேவன் அல்லது பிசாசின் சொல் அல்லது செயல். தெளிவான, தெள்ளத்தெளிவான நீர் என்பது கடவுளின் வெளிப்பாடு அல்லது தூய்மையான வார்த்தை. கலங்கிய அல்லது அழுக்கு தண்ணீர் என்பது உலகப்பற்று அல்லது சாத்தானின் வார்த்தைகள். ஒரு சபை உறுப்பினரின் வெளிப்பாடுகள் அல்லது ஆலோசனையின் மூலம் ஒரு பாஸ்டர் ஒரு சபையை வழிநடத்துகிறார் என்றால், சபையின் சக்கரத்தில் இருப்பவர் இந்த சபையின் உறுப்பினர்தான். மேலும் அது ஒரு சகோதரியாக இருக்கும் ஒரு பெண்ணாக இருக்கலாம் அல்லது நரகத்திற்கு செல்ல அதன் சொந்த பாதையை பின்பற்றும் சபையாக இருக்கலாம்.
62 பூச்சிகளின் சுழல்கள் அல்லது மழைத்துளிகள் என்பது கருத்துக்கள் அல்லது எமோடிகான்கள், விவாத மழை. ஒரு நனைந்த நபர் என்பவர் அவர் தாமே விவாதத்தின் பொருளாக இருப்பார். உங்களுக்கு எதிரான இந்த பூச்சிகள் தேனீக்கள் என்றால், நீங்கள் தான் தவறு. மேலும் இந்தத் தேனீக்களின் தேன்தான் கொடுக்கப்படும் முடிவு. மேலும் முடிவு சரியானதா இல்லையா என்பதைப் பொறுத்து இந்த தேன் நல்லதாக அல்லது கெட்டதாக இருக்கும்.
63 மேலும் சுவிசேஷங்கள் என்பது மழை. பஞ்சம் அல்லது மழையின்மை என்பது தீர்க்கதரிசி அல்லது தேவனிடமிருந்து வரும் தூய வார்த்தை இல்லாதது. மேலும், பாலைவனம் அல்லது மலை என்பது உபவாசத்தைக் குறிக்கும். புகை என்பது துன்பம் அல்லது அவதூறு பற்றி எச்சரிக்கிறது.
64 மரங்கள் என்பது மனிதர்கள் மற்றும் பனை மரங்கள் என்பது பிரசங்கிகள். காய்ந்த மரம் அல்லது வெற்று வாளி அல்லது வெறுமையான கிணறு என்பது தேவனுடைய வார்த்தையோ அல்லது தேவனுடைய ஆவியோ இல்லாத ஒரு வெறுமையான மனிதன். உங்கள் எதிரியின் பிரதேசத்தில் இருக்கும் ஒரு பழம் போன்ற ஒரு நல்ல விஷயம், நீங்கள் அதை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கனவுகளில் இடங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தது. கிணற்றில் இறங்குவது என்பது வேறொருவரின் நெருக்கத்தில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைவது. உங்கள் தலையில் கனமான பயணச் சாமான்கள் என்பது வாழ்க்கையின் அக்கறை அல்லது ஒரு பெரிய பொறுப்பு.
65 கனவில் வரும் தொலைபேசி அல்லது சிம் கார்டு என்பது தேவனோடு உள்ள ஐக்கியமாக இருக்கலாம். உங்கள் தொலைபேசியை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். நமது தொலைபேசிகள், கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் திரைகள் என்பது மீன்வளங்களைப் போன்றது மற்றும் அவற்றில் உள்ள பயன்பாடுகள் கடல் ஆக்டோபஸ்கள் போன்றது.
66 ஒரு ஆக்டோபஸ் என்பது மூன்று இதயங்கள், எட்டு கைகள் மற்றும் ஒன்பது மூளைகள் வரை கொண்டுள்ள விஷமுள்ள, எலும்பு இல்லாத உயிரினமாகும், அவை நண்டுகள் மற்றும் மட்டி மீன்களை நசுக்கும். ஒரு ஆக்டோபஸ் எந்த இடத்திற்கும் சென்று, ஒரு சுறாவைக் கொன்று சாப்பிடக்கூடும். ஆக்டோபஸ் இப்போது பூமியின் அனைத்து சபைகள் மற்றும் மதங்களுக்குள் உள்ளது என்பதும் அதன் கைகள் அவர்களின் வாய், மூக்குத்துளை மற்றும் கண்களிலிருந்தும் வெளிவருவதும் தெளிவாகிறது.
67 நாம் நமது தொலைபேசிகளைப் பயன்படுத்தும் விதத்தில் திருச்சபை ஒருபோதும் பரிபூரணத்தை அடைய முடியாது. மேலும் பலிபீடத்தின் கீழ் அல்லது ஆறாவது பரிமாணத்தில், தொலைபேசி வாக்கி-டாக்கி என்று அழைக்கப்பட்டது. ஒரு நாள் திருச்சபையானது கிட்டத்தட்ட தொலைபேசியை அகற்ற வேண்டும். திஸ்பியனாகிய எலியாவிடம் தொலைபேசி இருந்தால், அவரை அழைத்துச் சென்ற அக்னி இரதம் அவருடன் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு மீண்டும் பூமியில் விழும்.
68 நல்லது. வெள்ளை என்பது நீலம் போன்று பரலோக நிறம். வெள்ளை என்பது பரிசுத்தம், சமாதானம், ஞானம், சத்தியம், குற்றமின்மை, தூய்மை மற்றும் கன்னித்தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும் வெள்ளை பொடி என்பது குற்றமின்மை அல்லது வாழ்த்துக்களை குறிக்கிறது. பச்சை என்பது வாழ்க்கை மற்றும் நல்லிணக்கத்தின் நிறம். நீலமானது மகத்துவம் , தெய்வீக நீதி, சொர்க்கம் மற்றும் பரலோகத்தின் நிறம். கருப்பு என்பது மரணம், பொய், துக்கம் மற்றும் சாபம் ஆகியவற்றின் நிறம்.
69 வெள்ளையர்கள் அல்லது கறுப்பர்கள் மத்தியில் கருப்பு அல்லது வெள்ளை நிறம் கொண்ட ஒரு தனி நபர் இன்னும் உடலை எடுக்காத ஒரு ஆவி. உங்களுக்குத் தெரிந்த ஒரு நபரின் குரல் அல்லது தோற்றத்தை ஒரு அந்நியன் எடுக்கும்போது, அந்த நபர் அந்த அந்நியரின் பாத்திரத்தில் இருக்கிறார்.
70 மஞ்சள் என்பது பாலைவனம் மற்றும் துன்பத்தின் நிறம். சாம்பல் நிறம் என்பது வெள்ளை மற்றும் கருப்பு, நன்மை மற்றும் தீமை ஆகியவற்றின் கலவையாகும். இது கலப்பினம், பாசாங்குத்தனம் மற்றும் வஞ்சகத்தின் நிறம். இளஞ்சிவப்பு என்பது பெண்மையின் நிறம் மற்றும் மகிழ்ச்சியின் நிறம். சிவப்பு என்பது நீல நிறம் போன்று அரசபதவியின் நிறம், ஆனாலும் கூட ஆபத்து மற்றும் நியாயத்தீர்ப்பின் நிறம்.
ஊதா என்பது அரச குடும்பத்தின் உலகளாவிய நிறம். பழுப்பு நிறம் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மை.
71 தேவனின் சித்தத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சபை என்பது ஒரு மசூதி அல்லது இந்து அல்லது புத்த கோவில். ஆனால் பாவ அறிக்கைக்காக, தேவைப்பட்டால் எந்த கழிப்பறைக்கும் செல்வது போல் எந்த சபையிலும் சென்று பாவ அறிக்கை செய்யலாம்.
72 ஒரு நாடு மற்றொரு நாட்டிலிருந்து ஒரு பிரசங்கியரை அழைக்கலாம். ஒரு நாடு அதன் சபைகளில் ஒன்றிற்கு எதிரான தண்டனையை முடிவு செய்யலாம், நாட்டில் இருந்து பிரித்து சில உரிமைகளை திரும்பப் பெறும் வரை செல்லலாம். ஒரு சபை தன் நாட்டை விட்டு பிரிந்து செல்ல தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். ஆனால் இந்த இரண்டாவது வழக்கில், சபை ஞானஸ்நானம் கொடுப்பதற்கான உரிமைகளையும், நாட்டின் குழுவில் பதிவிடுவதற்கான உரிமைகளை வைத்திருக்கிறது.
73 தன் நாட்டை விட்டுப் தன்னைத் துண்டித்து செல்வதற்குத் தானாக முடிவெடுக்கும் ஒரு சபை அதன் பெயருக்கு முன்னால் வெள்ளைக் கொடியை வைக்க வேண்டும். இந்த முடிவை ஏற்கும் அதன் சபையின் உறுப்பினர்களும் தங்கள் பெயர்களுக்கு முன்னால் வெள்ளைக் கொடியை வைக்க வேண்டும். மேலும் இந்த நிலையில், இந்த முடிவை மாற்றாத வரை நாட்டின் மற்ற பிரசங்கியார்கள் அங்கு சென்று பிரசங்கம் செய்யவோ, அதன் உள்ளான பிரச்சனைகளை தீர்ப்பதில் தலையிடவோ முடியாது. ஆனால் அதன் மீண்டும்-சேர்க்கப்படும் முடிவை நாட்டின் குழுவில் உறுதிபடுத்தப்பட வேண்டும். மேலும், தனது தண்டனை நியாயமற்றது என்று கருதும் எவரும் தனது தண்டனையின் போது தனது பெயருக்கு முன்னால் நீலக் கொடியை வைக்கலாம், மேலும் ஏழு மாதங்கள் அல்லது அதற்கு மேல் தண்டனையில் உள்ளவர் சிவப்புக் கொடியை வைக்க வேண்டும்.
74 இறுதியாக, ஒரு நினைவூட்டலாக, நம் காலத்தில் கடவுளின் கட்டளையின்படி, நான் இரண்டாவது வகை உபவாசத்தை நிறுவினேன். உபவாசத்தின் உன்னதமான வடிவம் இரவு 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. மேலும் நான் நிறுவிய உபவாசத்தின் புதிய வடிவம் உள்ளது. இது குறைந்தது மூன்று நாட்களுக்கு நீடிக்கும் மற்றும் மாலை 3 மணிக்கு தொடங்கி மறுநாள் மதியம் 12 மணிக்கு முடிவடைகிறது. உதாரணமாக, மூன்று நாள் உபவாசத்திற்கு, நீங்கள் வியாழன் மாலை 3 மணிக்கு ஆரம்பித்தால், ஞாயிற்றுக்கிழமை நண்பகல், ஆராதனைக்குப் பிறகு முடிப்பீர்கள். இது சபைகளுக்கு நல்லது.
75 அனேக நாட்கள் உபவாசம் இருப்பதற்கு, மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்கு இடையில் அல்லது மதியம் 12 மணி முதல் 3 மணிக்கு இடையில், நீங்கள் சாப்பிடவோ குடிக்கவோ வேண்டாம் என்று தேர்வு செய்யலாம். நீங்கள் தண்ணீரை மட்டுமே குடிக்க தேர்வு செய்யலாம். நீங்கள் தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் பழங்களை தேர்வு செய்யலாம். இறுதியாக, நீங்கள் எல்லாவற்றையும் சாப்பிடவும் குடிக்கவும் தேர்வு செய்யலாம். தொடக்கத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறையை நீங்கள் விரும்பியபடி, காலத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.
76 உதாரணமாக, உபவாசத்தின் முதல் 3, 7 அல்லது 10 நாட்களில், நீங்கள் எதையும் சாப்பிடலாம். பின்னர் நீங்கள் விரும்பியபடி மாற்றலாம். உபவாசத்தின் காலம் உங்களைப் பொறுத்தது, ஆனால் முழு உணவுடன் 40 நாட்களுக்கு மேல் நீடிக்க கூடாது, தண்ணீர் மற்றும் பழச்சாறுகளுடன் 7 நாட்கள் மற்றும் 3 நாட்கள் உலர் உபவாசம். நோயாளிகள் உபவாசம் இருக்கக் கூடாது. ஒருவேளை ஏதோ ஒரு காரணத்தினால் உபவாசத்தை துறந்து மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அல்லது மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சாப்பிட முடியாவிட்டால், இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு 1 மணி நேரத்தில் சாப்பிட்டுவிட்டு உபவாசத்தை தொடரலாம்.
77 ஒரு சபையின் பொதுவான உபவாசத்தின் முடிவில், ஆராதனையின் முடிவில், சபையில் சுமார் 30 நிமிடங்கள் பொதுவான ஜெபத்தின் நேரம் இருக்கும். தலைவர் தியானப் பாடலுடன் சமிக்ஞையைக் கொடுப்பார் மற்றும் பிரசங்கத்தில் தங்கியிருக்கும் போது பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தும்படியாக விட்டுவிடுவார். இந்த காலகட்டத்தில், சபையார் ஜெபம் செய்வார்கள். ஒருவர், அவர் வழிநடத்தப்பட்டபடி, தனது குரலை உயர்த்தி ஜெபம் செய்வார் அல்லது தியானப் பாடலைப் பாடுவார். மேலும் ஜெபத்தின் நேரம் முடியும் வரை இவ்வாறு இருக்கும்.
78 நல்லது. நீங்கள் ஒரு சபையைத் திறக்கப் போராடியிருந்தாலும், ஆனால் அதை வழிநடத்தும் திறன் இல்லாதபோது, உங்களை கட்டாயப்படுத்த வேண்டாம். தாழ்மையாக இருந்து உங்களை விட சிறப்பாக செய்யக்கூடிய ஒருவருக்கு அந்த இடத்தை விட்டுவிடுங்கள். உங்களிடம் ஒன்றுசேர்க்கும் திறன் இருக்கலாம், ஆனால் வழிநடத்துவதற்கு உங்களிடம் திறன் இல்லாமல் இருக்கலாம்.
79 நீண்ட காலத்திற்கு முன்பு, அப்போஸ்தலன் பெட்ரோ அலிக்ஸோ எனக்கு எழுதிய கடிதத்தில் கூறினார்: "தீர்க்கதரிசியே, இந்தச் செய்தியைப் பெற்ற பிறகு, மொசாம்பிக் முழுவதும் அதை அறிவிப்பதற்கு நான் எனது முழு பலத்துடன் போராடினேன். ஆனால் இப்போது செய்தி இணையத்துடன் இணைக்கப்பட்டு ஆத்துமாக்களையும் மற்றும் சபைகளையும் பின்தொடர வேண்டிய கட்டத்தில் உள்ளது. எனக்கு இந்த திறன் இல்லை. நான் உட்கார்ந்துக்கொண்டு சகோதரர்கள் செய்வதைப் பார்க்க விரும்புகிறேன்."
80 மேலும், ஒரு ஆசாரியனுக்கு எல்லா குணங்களும் இருக்க வேண்டும் என்று கோர முடியாது இல்லையெனில் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார். அவர் செய்தியை வெளியில் அல்லது ஊடகங்களில் நன்றாகப் பாதுகாத்தால், அதுவே அவருடைய தனிச்சிறப்பு. பிரச்சனைகளைத் தீர்க்கும் விஷயத்தில் அவர் ஞானம் நிறைந்தவராக இருந்தால், அதுவே அவருடைய தனிச்சிறப்பு.
81 மேலும், நான் வில்லியம் பிரான்ஹாமை எகிப்திய ஆசாரியர் என்று அழைத்ததாலும், பிசாசின் ஊழியர்களில் எவால்ட் ஃபிராங்கைக் குறிப்பிட்டதாலும், என்னுடைய சில பிரசங்கங்கள் இன்னும் பரலோக நூலகத்தின் அலமாரிகளில் வைக்கப்படவில்லை. அந்த வார்த்தைகளை நான் செய்தியிலிருந்து நீக்கிவிட்டேன்; அந்த வார்த்தைகளை சொன்னதற்காக நான் தேவனிடமும் மனிதர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.
82 தேவன் ஒரு மனிதனைப் பயன்படுத்திய தருணத்திலிருந்து, பின்னர் அவனை அவர் நிராகரித்தாலும், அவன் மீது அவருக்கு இன்னும் உரிமை இருக்கிறது, அந்த மனிதனுக்கு எதிராக நீங்கள் பேச முடியாது என்பதை நான் அறிவேன். தேவன் தனது தீர்க்கதரிசிகளுடன் அல்லது அவர் ஒருமுறை பயன்படுத்தியவர்களுடன் செய்த உடன்படிக்கை நித்திய உடன்படிக்கையாகும். ஆயிரம் பிசாசுகள் சவுலைக் கலங்கடித்தாலும், தாவீது சவுலுக்கு எதிராக ஒருபோதும் பேசமாட்டார். 1 இராஜாக்கள் 13-இன் பழைய தீர்க்கதரிசியை தேவன் நிராகரித்தார், ஆனால் தேவன் அவருடன் பேசினார். பிலேயாம் வழிதவறிப் போனான், ஆனால் தேவன் அவனிடம் பேசினார். பிலேயாமைக் கொன்ற யூதர் நரகத்தில் இருக்கிறார்.
83 வில்லியம் பிரன்ஹாம் மூலம் தேவன் ஏன் ஸ்தாபனங்களை கண்டனம் செய்கிறார் என்பதையும் மற்றும் மீண்டும் வில்லியம் பிரன்ஹாமிடம் ஸ்தாபனங்களின் எழுப்புதலுக்காக ஜெபிக்கச் சொல்கிறார் என்பதையும் உங்களால் விளக்க முடியாது. இந்த எழுப்புதல்களைப் பார்க்கும்போது மக்கள் இந்த ஸ்தாபனங்களை விட்டு எப்படி வெளியேறுவார்கள்? தேவன் வில்லியம் பிரன்ஹாம் மூலம் கத்தோலிக்கர்களைக் கண்டிக்கிறார், மேலும் தேவன் வில்லியம் பிரன்ஹாமிடம் கத்தோலிக்கர்களுக்காக ஜெபமாலைகளை கைகளில் ஏந்தியபடி ஓதியப்படியே ஜெபிக்க கூறுகிறார். நமது எதிரிகள் நம்புவது போல் இவை முரண்பாடுகள் அல்ல.
84 இப்போது, நான், காக்குவ் பிலிப்பு, குற்றச்சாட்டுகளை நிறுவவோ பதவி நீக்கம் செய்யவோ நான் இனி வரமாட்டேன். மேலும், செய்திக்காக போராடிய மற்றும் இன்னும் நிற்கும் மற்றும் தொந்தரவு செய்யாத எவருக்கும் மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய முழுமையான பரிபூரணத்தை நான் உறுதியாக நம்புகிறேன். சாத்தான் பலவீனமான மக்களைப் பார்க்கிறான், ஆனால் நான் உங்களுக்குள் இஸ்ரவேலைப் போன்ற பலமான மக்களைப் பார்க்கிறேன்.
85 ஆகவே, இந்தச் செய்தியை விட்டுச் சென்றவர்களின் பெயர்களை நம் காலத்தின் ஜீவப்புத்தகத்திலிருந்து அழிக்கும்படி நான் கேட்டேன், ஏனெனில் பரலோகத்தில் உள்ளவர்களைப் போல பூமியில் உள்ளவர்களின் பெயர்களை தேவன் அழித்துவிடுவார் என்று எழுதப்பட்டுள்ளது. அவர்கள் என்ன கண்டுபிடித்தார்கள்? ஒன்றுமில்லை! ஏனென்றால் வேறு எங்கும் இல்லை. மேலும் அவர்கள் தேவனுக்கு முன்பாக என்ன ஆவார்கள்? ஒன்றுமில்லை!
86 செய்தியை விட்டு வெளியேறுபவர்கள் அனைவரும், அவர்கள் பாவ அறிக்கை செய்யாதவர்கள் என்று அவர்களின் சபைகள் எப்போதும் சாட்சியமளிக்கின்றன. ஆதலால் ஆடுகள் மத்தியில் இருந்து பன்றிகளை பிரிப்பவர் தேவன். எனக்கு எதிராக அவர்கள் செய்த அனைத்து அவமானங்களையும் நான் ஏற்கனவே மன்னித்துவிட்டேன். அவர்கள் மீதான வெறுப்பையும் அவமதிப்பையும் விட அவர்கள் மீதான என் அன்பு எப்போதும் அதிகமாகவே இருக்கும். மேலும் அவர்களைப் பற்றி நான் நினைவில் வைத்திருப்பது அவர்கள் நம்முடன் இருந்தபோது அவர்கள் செய்த நல்ல செயல்கள்.
87 அவர்கள் விதி உங்களுக்கு நேரிடாதபடி கடவுளுக்கு பயந்து நல்லதொறு வாழ்க்கை வாழ்ந்து வலிமையுடன் இருங்கள். மேலும் மோசே நியாயப்பிரமாணத்தின் கற்பலகைகளை உடைப்பது போலவும், அல்லது கர்த்தராகிய இயேசு தம் இரண்டாம் வருகைக்கு முன் முத்திரைகளை உடைப்பது போலவும்; இந்த இரண்டு அத்தியாயங்கள், காக்குவ் 155 மற்றும் காக்குவ் 156, வலிமை தேவைப்படும் பலவீனமானவர்களை பலப்படுத்தவும், உங்கள் மத்தியில் நான் இருப்பதை சாட்சியாக வழங்கவும் வந்துள்ளது. கர்த்தராகிய இயேசு பூமியில் நம்முடன் இருக்கிறார், ஆனால் அவர் வருவார்.
88 நான், காக்குவ் பிலிப்பு, நான் பூமியை விட்டு வெளியேறும் வரை, ஒரு தேவதூதன் கூட என்னை திசை திருப்ப முடியாது. நான் இங்கே சொல்ல முடியாத விஷயங்கள் உள்ளன. நம்முடைய மீட்பு இனி ஒரு நம்பிக்கை அல்ல, ஆனால் ஒரு உண்மை. நான் ஏற்கனவே கொண்டிருக்கும் ஒன்றை நான் எதிர்பார்க்க முடியாது.
89 மேலும் காக்குவ் 154 முதல், என்னுடைய இடத்தில் வேறொரு தீர்க்கதரிசியைக் காண நான் பொறுமையிழந்தேன். வில்லியம் பிரன்ஹாமின் செய்தியை விட நான் மேலும் தொடர்ந்து சென்றது போல் எனது செய்தியை விட மேலும் தொடர்ந்து செல்லும் ஒருவர். எனவே, தனக்கு ஒரு ஊழியம் இருப்பதாக விசுவாசிப்பவர் அவர் பயப்படாமல் பேசட்டும். 2002-இல், நான் அனைவருக்கும் எதிராக தனியாக எதிர்த்தேன். தேவனுக்குரியவர் அற்பமான தொடக்கத்தின் மூலம் தேவனை அடையாளம் கண்டுகொள்வார்.
90 காட்டு விலங்குகளுக்கு பயப்பட வேண்டாம், அவை அழிக்கக்கூடியவை, ஆனால் அவை நடவு செய்யவோ அல்லது மனிதகுலத்திற்கு வழங்கவோ எதுவும் இல்லை. மேலும் மலையின் மேலே இருந்து, எனது செய்தியின் எதிரிகளின் அனைத்து செயல்களையும் என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் நான் ஏன் எதுவும் சொல்லவில்லை? ஒரு மேய்ப்பன் ஓநாய்கள் தன் மந்தையை எதிர்க்காமல் தாக்குவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? செய்தியை விட்டுச் செல்லும் கலப்பினக் கூட்டத்தை யாரும் திரும்பக் கொண்டுவர முயற்சிக்காதபடி நான் ஏன் சகோதரர்களுக்கு அறிவுறுத்தினேன்? இந்த வேலை ஒரு மனித வேலை அல்ல.
91 இரட்சிப்புக்காக என்னை விசுவாசித்த நீங்கள் அனைவரும், பாவத்தை தவிர்க்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, பணத்திற்காக தேவனுக்கு ஊழியம் செய்யாதீர்கள். பணமும் பரிசுகளும் உங்களிடம் வரும், ஆனால் நீங்கள் அவற்றை மறுப்பதில் கவனமாக இருக்க வேண்டும் அல்லது உங்களுக்குத் தேவையில்லாதபோது அவற்றை மறுபகிர்வு செய்ய வேண்டும். எனவே பண விஷயத்தில் மிகவும் விழிப்பாக இருங்கள்.
92 உங்களிடம் பேசுகிற நான், இப்போது இரண்டு வருடங்களாக என்னிடம் பணம் இல்லை, என் விரல்கள் பணத்தைத் தொடவில்லை. மேலும் நான் பரலோகத்தின் காரணமாக பணத்தை மீண்டும் தொடமாட்டேன். எனக்கு ஏதாவது தேவைப்பட்டால், நான் அதைக் கேட்பேன். மனிதன் பணத்தால் மட்டும் வாழாமல், தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். ஆமென்!
93 யாரேனும் செய்தியை விட்டுவிட்டு என்னுடன் சண்டையிட்டாலோ அல்லது என்னை அவமதித்தாலோ, அவர் வெளியேறியதால் மோசமானவராக மாறவில்லை, ஆனால் யூதாஸைப் போல இங்கே இருந்தபோது ஏற்கனவே மோசமாக இருந்தார் . அதனால் அவரை வெறுக்க வேண்டாம்! காயீனைப் போல அவருக்கு எதுவும் நடக்கவில்லை என்றால், நரகம் ஏற்கனவே அவருக்குக் காத்திருக்கிறது. முன்னறிவிப்பு கனவுகள் ஏற்கனவே அவர்களின் செயல்களை முன்னறிவித்துள்ளன. பிறகு அவர்கள் தங்கள் இடத்திற்குச் செல்வதை நான் எப்படித் தடுப்பது? ஒரு பிசாசின் புத்திரனுக்கு செய்தியில் ஆர்வம் இருக்கும் வரை, நான் அவருக்கு உண்மையான தீர்க்கதரிசியாக இருப்பேன், ஆனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டால், அவர் வெறும் சபை உறுப்பினராக இருப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டார். அப்போது அந்தச் செய்தி பொய்யானது என்றும் நான் ஒரு பொய்யான தீர்க்கதரிசி என்றும் கூறுவார். மேலும் அவர் தனது இடத்திற்குச் செல்வார்.
94 மேலும், சகோதரர் கரீமின் முன்னறிவிப்புக் கனவில், அவர் செய்திக்கு வந்ததில் இருந்து, தீர்க்கதரிசி மலைக்குச் சென்றபோது, காக்குவ் 154-க்குப் பிறகு, கலப்பின மக்கள் புகார் செய்து செய்தியை விட்டு வெளியேறினர். அவர்கள் கோரா மற்றும் தாத்தான் போன்ற உறுதியான வாதங்களைக் கொண்டிருந்தனர், அதே நேரத்தில் தீர்க்கதரிசிக்காக காத்திருக்கும் கூட்டம் வந்து செய்தியில் நுழைந்தது. நான் எதுவும் பேசாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். பரிசேயர்கள் மகிழ்ச்சியடைந்தனர், ஆனால் அவர்கள் கிறிஸ்துவைக் கொல்வார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. வெளிப்படுத்தல் 11:10-ன் படி எலியா மற்றும் மோசேயின் மரணத்தில் பூமியில் வசிப்பவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள், அது ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை அறியவில்லை.
95 மோசேயுடன் சண்டையிடும் கோராகும் தாத்தானும் இல்லை என்றால், மோசே ஒரு கள்ள தீர்க்கதரிசியாக இருந்திருப்பார். பவுலுடன் சண்டையிடும் ஹிம்நேயுஸ் மற்றும் பிலிடேயுஸ் இல்லை என்றால், பவுல் ஒரு கள்ள தீர்க்கதரிசியாக இருப்பார். மேலும், மோசேயை விட்டு வெளியேறிய கோராவும் தாத்தானும் மோசேயை ஒரு கள்ள தீர்க்கதரிசியாக மாற்றவில்லை. பவுலை விட்டு வெளியேறிய ஹிம்நேயுஸ் பிலிடேயுஸ் பவுலை ஒரு கள்ள தீர்க்கதரிசியாக மாற்றவில்லை.
96 லூசிஃபர் தேவனை விட்டு வெளியேறியவுடன் அது பரலோகத்தில் தொடங்கியது, ஆனால் அது தேவனை ஒரு பிசாசாக மாற்றவில்லை. யூதாஸின் காட்டிக்கொடுத்தல் இயேசுவை ஒரு தவறான தீர்க்கதரிசியாக மாற்றவில்லை. ஜூனியர் ஜாக்சன், எர்ன் பாக்ஸ்டர் மற்றும் அவரது பெரிய மனிதர்கள் பலர் அவரை விட்டு விலகியதால் வில்லியம் பிரன்ஹாமை ஒரு தவறான தீர்க்கதரிசியாக ஆக்கவில்லை.
97 F.F. போஸ்வொர்த்துக்குப் பிறகு வில்லியம் பிரன்ஹாமின் ஊழியத்தில் மிகப் பெரிய மனிதர் எர்ன் பாக்ஸ்டர் ஆவார். எர்ன் பாக்ஸ்டர் 1947 முதல் வில்லியம் பிரன்ஹாமின் சுகமளிக்கும் கூட்டங்களின் மேலாளராக இருந்தார். அவர்கள் 1951- இல் தென்னாப்பிரிக்காவில் வில்லியம் பிரன்ஹாமுடன் இருந்த எர்ன் பாக்ஸ்டர் மற்றும் போஸ்வொர்த். இது என்னுடன் அப்போஸ்தலர்களான யானிக் அக்கா மற்றும் அமன் மார்ட்டின் இருப்பதை போன்றது. வில்லியம் பிரன்ஹாம் அவரை "ரெவரெண்ட் பாக்ஸ்டர், கடவுளின் அற்புதமான மனிதர்" என அழைத்தார் ஆனால் எர்ன் பாக்ஸ்டர் வில்லியம் பிரன்ஹாமை விட்டு வெளியேறினார். வில்லியம் பிரன்ஹாம் இல்லாமல் எர்ன் பாக்ஸ்டர் என்ன ஆனார்? ஒன்றுமில்லை!
98 இப்போது, இறுதியாக, என் முழங்காலில், நான் சொல்லப்போகும் விஷயத்திற்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் பெரியவன் அல்லது பரிசுத்தமானவன் என்று காட்டுவதற்காக அல்ல. இங்கே உங்களுக்காகத்தான் நான் பேச விரும்புகிறேன்.
99 முதல் குறிப்பு: நான் 1993 ஆம் ஆண்டு ஒரு தேவதூதன் மூலம் மனமாற்றத்திற்கு வந்தேன். மேலும் இந்த தூதன் தான் என்னை வழிநடத்துகிறார். 1 இரா 19 இல் தேவதூதன் எலியா தீர்க்கதரிசியைத் தொட்டு எழுப்பினார் என்று கூறும்போது, நான் அதை அனுபவித்திருக்கிறேன்.
100 இரண்டாவது குறிப்பு: எனது வாழ்நாளில் மற்றும் குறுகிய காலத்தில் பூமியின் எல்லைகளை எட்டிய ஒரு செய்தியை நான் கொண்டு வந்துள்ளேன். நம் காலத்தில் இப்படி ஒரு செய்தி இல்லை. அதேசமயம் என்னுடன் சண்டையிடுபவர்களுக்கு எந்த செய்தியும் இல்லை மற்றும் அவர்கள் தங்கள் நாடுகளின் எல்லைக்கு அப்பால் செல்லவில்லை. அவர்கள் வெற்றி பெறவில்லை. அவர்கள் இறந்த பிறகு, மனிதகுலம் அவர்களை மறந்துவிடும். அதனால், அவர்கள் அதை சரியாக எடுத்துக் கொள்ளாமல், அதனால் அவதிப்படுகின்றனர். எனவே நான் அவர்களைப் போல பொய்யாக இருக்க வேண்டும் அல்லது சாக வேண்டும், அதுவே கடவுளுக்கும் எனக்கும் எதிரான அவர்களின் போராட்டத்தின் குறிக்கோள்.
101 மூன்றாவது குறிப்பு: நான் எல்லா மதங்களையும், அவற்றின் புனித நூல்களையும் நன்கு அறிவேன். நான் இஸ்லாத்தின் குர்ஆனை படித்தேன் மீண்டும் படித்தேன். நான் இந்து மதத்தின் பகவத் கீதையை படித்தேன் மீண்டும் படித்தேன். நான் பௌத்தத்தின் தாமரை சூத்திரத்தை மீண்டும் படித்தேன். எனக்கு தெரியாத புனித நூல் எது? எதுவும் இல்லை.
102 இப்போது, எனது செய்தியின் மூலம், கருப்பு இனத்தின் தோற்றம் மற்றும் ஓரினச்சேர்க்கை உட்பட பல இரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளேன். அவர்கள் ஒருபோதும் கண்டனம் செய்யாத மற்றும் அவர்களது தேவாலயங்களிலும் மதங்களிலும் நடைமுறைப்படுத்தாத வெளிப்படையான பாவறிக்கையை நான் மீண்டுமாக-நிறுவியுள்ளேன்.
103 நான்காவது குறிப்பு: ஆவிக்குரிய மட்டத்தில், தேவ தூதன் என்னை இங்கு பேச அனுமதிக்கப்படாத நிலையில் வைத்தார். மேலும், மாமிசபிரகாரமாக, தாவீதும் சாலமோனும் நம் எதிரிகள் நம்புவது போல் பாலியல் அடிமைகளாக இருந்திருக்க மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும் என்னை நியாயப்படுத்த விரும்பவில்லை, கடைசியாக நான் பெண்ணை அனுகியது எனக்கு நினைவில் இல்லை. மேலும் இது பரிசுத்தத்தின் காரணமாகும். இருப்பினும், எனது மகன் எவால்ட் ஜூன் 18, 2023 அன்று ஒரு வயதை எட்டினான், நான் பெண்ணை அணுகி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது.
104 இப்போது இதை கவனமாகக் கேளுங்கள்: சிப்போராள் முதல் ரோசின் வரை, சபைக் காலங்களைப் போலவே ஒவ்வொன்றும் அதன் அம்சங்களைக் கொண்டுள்ளன. ஒரு சபை அல்லது ஒரு நாட்டில் ஒரு நல்ல அல்லது கெட்ட செயலைச் செய்யும்போது, என் பணிப்பெண்களில் ஒருவள் தரிசனத்தில் தோன்றுவதை நான் காண்கிறேன். மேலும் இந்த நாட்டின் அல்லது இந்த சபையின் ஆவிக்குரியநிலைய நான் அறிவேன்.
105 இந்த நான்கைந்து கலப்புக் கூட்டம் செய்தியை விட்டுச் செல்வதற்கு முன், சுமார் பத்து வருடங்கள் என் மனைவியைப் போல் எனக்குச் சேவை செய்த எங்கள் அருமை சகோதரி லூயிஸ் ஒரு தரிசனத்தில் எனக்குத் தோன்றி: "இப்போது நான் வெளியேற விரும்புகிறேன்" என்று கூறினாள். அதனால், நான் ஏப்ரல் 24, 2023 அன்று வெளியிடவிருந்த காக்குவ் 155 மற்றும் காக்குவ் 156 ஆகியவற்றின் வெளியீட்டை ஜூலை 8, 2023 க்கும் பின்னர் பிற்பட்ட தேதிக்கும் ஒத்திவைத்தேன். இரண்டு அல்லது மூன்று வயதுடைய ஒரு சிறிய முஸ்லிம் பெண்ணை எங்களுடன் விட்டுவிட்டு அவள் வெளியேறினாள். ஒவ்வொரு சபைக் காலத்திலும் அவள் இருந்தாள். பின்னர் அவள் ஒரு வளர்ச்சியை விட்டு வெளியேறினாள். மற்றும் லூயிஸ் என்பது, செய்தியை விட்டு வெளியேற வேண்டிய கலப்பு கூட்டத்தின் முழுமையும் ஆகும்.
106 மேலும், வெளிப்படுத்துதலின் மூலமாகவும், பிரதிஷ்டை என்ற பெயராலும், உபவாசம் இருக்க வேண்டிய அவசியமின்றி நான் நீண்ட நேரம் வீட்டிற்குள் என்னைப் பூட்டிக்கொண்டேன். நான் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, முற்றத்தில் இருந்த என் மகன் ஜோசப் உட்பட சில குழந்தைகள் உயரமாக வளர்ந்திருந்தனர். ஜோசப் என்னை "மாமா" என்று அழைத்தான். நான் என் கைகளில் எடுக்க விரும்பிய எனது இளைய மகன் என்னை அடையாளம் காணாததால் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
107 மேலும் மேலும் சில குறிப்புகளை என்னால் தொடர முடியும், ஆனால் அது அவசியமில்லை, ஏனென்றால் யோவான் 20:29 இன் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள் இங்கே இருக்கிறார்கள், அவர்கள் பார்க்கவும் இல்லை, கேட்கவும் இல்லை, ஆனால் முழுமையாக விசுவாசிக்கிறார்கள்.