(2003 மார்ச் 09 ஞாயிரு காலை, லோக்காட்ஜ்ரோ - ஆபிட்ஜான், ஐவரிகாஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1நாம் இந்த பூமியிலே செய்யும் எல்லா காரியமும் இங்கேயே அழிந்து விடும், அவைகள் தேவனுக்கு முன்பாக நினைவுகூறுதலுக்கு வராது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இரட்சிப்பின் வரிசையில் நாம் செய்கிற கிரியைகள் மாத்திரமே நிலைத்திருந்து நித்தியம் வரை எட்டுகிறதாக இருக்கும், எனெனில் வெளிப்படுத்துதல் 19:7 முதல் 28 ன் படியாக அதுவே நமக்கு கலியாண வஸ்திரமாக இருக்கிறது. அதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
2நல்லது. நடுராத்திரியின் நற்செய்தியாம் இந்த சுவிசேஷம்; அதை பறப்புவதென்பது ஒரு தேவை மட்டுமல்ல ஆனால் கடமையாகவும் இருக்கிறது. சேமிப்பில் உள்ள எண்ணெய், எல்லாவற்றினுடையவும் நினைப்பூட்டுதலாக அது இருக்கிறது. கொர்னேலியு தான் தினமும் செய்த தானதர்மங்களுக்காகவும், தேவன் மேல் கொண்டிருந்த பயபக்திக்காகவும் ஒரு வெகுமதியாக ஆவியை பெற்றுக் கொண்டான். நீ உண்மையாக தேவனால் உண்டானவனானால், அந்த சமாரிய ஸ்திரியைபோல நீ சத்தியத்துடன் தொடர்பில் வருகையில் உனக்குள் எதோ ஒன்று நடந்தாக வேண்டும், ஏனெனில் அங்கே ஜீவன் உண்டு, ஒரு வீரியம் அங்கே உருவாகியிருக்கும்.
3ஆயினும், பாலைவனத்தில் மிகப்பெரிய பாவமென்பது, தண்ணீரை கண்டரிந்தும் அதை ஜனங்களுக்கு மறைப்பதுதான். இந்த செய்தியை பரப்புங்கள் அப்பொழுது யாருக்கென்று அது முன் குறிக்கப்பட்டிருக்கிறதோ அவர்களால் அதை பெற்றுக்கொள்ள இயலும். சில நண்டுகளை மீன்களாக்கவோ அல்லது சில காட்டுக் கழுதைகளை ஆட்டுக்குட்டிகளாக்கவோ நாம் தேடிக் கொண்டிருக்கவில்லை ஆனால் எந்த விதிவிலக்குமின்றி அவர்களை எச்சரிக்கவேண்டிய கடமை நமக்கு உண்டு. அவர்கள் அதை "நியாயந்தீர்த்தல்" என அழைத்தாலும், அதை செய்யுங்கள்! தடுமாற்றமடைய வேண்டாம்!
4முற்காலத்தில், ஆதி கிறிஸ்தவர்கள் விக்கிரக பூசாரிகளை குற்றவாளிகளாக தீர்த்தனர். அங்கு தேவனுடைய பிள்ளைகளாக இருந்தவர்கள் மனந்திரும்பி, அவர்களது மாயமந்திர பொருட்களை சுட்டெரித்து, சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர், ஆனால் அந்தகாரத்தின் பிள்ளைகளான, சர்ப்பத்தின் சந்ததிகளோவெனில்: "...தேவன், யாரையும் குற்றவாளியாக தீர்க்காதே என்கிறார்" என்றனர், பின்பு, 16ம் நூற்றாண்டின் துவக்கத்தில், புரோட்டஸ்டன்டுகள் கத்தோலிக்க சபையை ஆக்கினைக்குள்ளானதாக தீர்த்தனர். செம்மறியாடுகளோவெனில் யோவான் 10 பிரகாரம் தங்கள் எஜமானின் சத்தத்தை அடையாளம் கண்டுகொண்டு நித்திய ஜீவனை உடையவைகளாக இருப்பதற்கு வெளியே புறப்பட்டு வந்தனர், ஆனால் பிசாசின் குமாரர்கள், அதே பழைய பிசாசுகள்: "...தேவன், யாரையும் குற்றவாளியாக தீர்க்காதே என்கிறார்" என்றனர். இன்றைக்கு, புரோட்டஸ்டன்டுகளும் சுவிசேஷக சபையினர்களும் தான் இந்த கேடயத்தை பயன்படுத்துகின்றவர்களாக உள்ளனர். உங்களால் காணமுடிகிறதா? பிசாசுகள் மரிப்பதில்லை.
5அவர்கள் என்ன கூறுகின்றனர் என்பது ஒரு பொருட்டல்ல, தடுமாற்றம் அடையவேண்டாம்! சில மண்டையோடுகளைப் போன்று அவர்கள் வேதாகமங்களை சுமக்கின்றனர், அதைப் பற்றி அவர்கள் ஒன்றும் அறியார்கள். கேட்க அவர்களுக்கு மனமிருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், அதை அவர்களுக்கு பிரசங்கியுங்கள்! அவர்கள் நரகத்திற்கு செல்வர் ஆனாலும் இதை அறியும்படி செய்யுங்கள். மத்தேயு 7:1 ல், அது: "குற்றவாளியாக தீர்க்காதே" என்கிறது; ஆனாலும் யோவான் 7:24 குறித்து என்ன?
6நீங்கள் கோபக்காரர்கள் என அவர்கள் எண்ணினால், "விரியன் பாம்புக்குட்டிகளே! புல்லில் இருக்கும் சர்ப்பங்களே! வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே!" இதைப்பற்றி என்ன? சத்தியத்தை எதிர்த்து நிற்பவர்களுக்கு பெயர் சூட்டினவர்களில் பூமியிலே முதல் பிரசங்கி நானா? நியாயந்தீர்க்கிறதற்கு உரிமை இல்லாதது அவர்களுக்குத்தான் ஆனால் நமக்கு, 1 கொரிந்தியர் 2:15 ன் படி அவர்களை நியாயந்தீர்க்கிறதற்கு தேவன் நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார். அவர்களை மட்டுமல்ல ஆனால் விழுந்துபோன தூதர்களான அவர்களது பரிசுத்த ஆவிகளையும் (holy spirits) நியாயந்தீர்க்கிறதற்கு தேவன் நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார். நோவா முதற்கொண்டு, தீர்க்கதரிசிகள், இயேசு கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலர்களில் ஒருவராவது குற்றப்படுத்தாமல் பிரசங்கித்திருப்பார்களேயானால், நான் ஒன்றுமறியாதவன்! தேவனே நீயாயந்தீர்க்கிறதற்கு அதிகாரமுடையவர் மேலும் நீயாயந்தீர்க்கிறதற்கு வல்லமையையும் எழுத்துப்பூர்வ அதிகாரத்தையும் எனக்கு மட்டுமல்ல இச்செய்தியை விசுவாசிக்கிற உங்களுக்கும் தேவன் கொடுத்திருக்கிறார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
72 திமோத்தேயு 2:17, அதை வாசித்துப் பாருங்கள்? இப்பொழுது மோசடி மற்றும் பொய் பாசாங்கு செய்கின்ற நாட்களில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் மனிதனின் ஞானம் பணத்தாள்களை சோதிக்க ஒரு சிறு கருவியை அளித்திருக்கிறது. உண்மையான பணத்தாளிலிருந்து போலியான ஒன்றை அடையாளம் கண்டுகொள்ள சில வழிமுறைகள் உள்ளன. உதாரணத்திற்கு, நோக்கிப்பார்த்து அல்லது தொட்டு அறிதல், அதுதான் ஆவிக்குரிய வரம் என அழைக்கப்படுகிறது. ஆனால் ஆவிகள், வரங்கள் மற்றும் உபதேசங்கள் போன்றவைகளை அடையாளம் கண்டுகொள்ள தேவன் ஒரு வழியை அளித்திருக்கிறார், அது வேதாகமமல்ல ஆனால் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
8ஜனங்கள் இன்னும் அதிகதிகமாக வில்லியம் பிரன்ஹாமின் செய்திப்புத்தகங்களுடன் இருக்கிறதை நாம் காண்கிறோம். ஏனெனில் அதினால் இனி ஒருபோதும் நித்திய ஜீவனை கொடுக்க முடியாது. அது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கான சத்தியமாக இருந்தது. அவர்கள் இன்னும் அதிக அதிகமான ஜனங்களை சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏன்? கழுகுகள் இங்கே நடுராத்திரி சத்தத்தில் இருக்கிறவேளையிலே வல்லூருக்களும், தோட்டிப்பறவைகளும் காகங்களும் அங்கே ஒன்றுகூடி சத்தமிட்டுக்கொண்டும் குதித்துக்கொண்டும் இருக்கின்றன. அவை தவளைகளின் ஆவிகளாக உள்ளது என வெளிப்படுத்துதல் 16:13 முதல் 14 ல் வேதாகமம் அதை கூறுகிறது.
9தவளையின் கண் அதன் தலையின் மேல் இருக்கும், அவைகளால் கடந்த காலத்தில் தேவன் என்ன செய்தார் என்றும், எதிர்காலத்தில் தேவன் என்ன செய்யப்போகிறார் என்றும் அறிந்திருக்க முடியும், ஆனால் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையோ அறியாது. "மேசியா வருவார் என்று மோசே கூறியிருக்கிறார்! மோசே கூறியிருக்கிறார்! " இருப்பினும் மேசியா அங்கேயே இருந்தார். "ஜான் வெஸ்லி இதை கூறியிருக்கிறார், மார்டின் லூதர் அதை கூறியிருக்கிறார், சகோதரன் பிரன்ஹாம் இதை கூறியிருக்கிறார்..." அதை காண்கிறீர்களா? அது பரிதாபம்!
10இந்த சத்தியத்தை காண தேவன் உங்களை அனுமதித்து இருக்கிறார், ஆகையால் நீங்கள் இதனுடைய எதிரொலியாக இருக்கமுடியும். ரோமர் 10:14, "அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?” என்கிறது. இந்த நூற்றாண்டின் கவலைகளை குறித்து எச்சரிக்கையாயிருங்கள் அதுவே இரட்சிப்பிற்கு பகைமையாக இருக்கிறது. ஒவ்வொரு காலத்தின் முடிவிலும், ஆவியானவர் சொல்லுகிறதாவது: "ஜெயங்கொள்ளுகிறவனுக்கு, நான் இதை தருகிறேன்! ...” நாம் மாம்சத்தின் பாவங்களையும், பொய்யான உபதேசங்களையும் மேற்கொண்டிருக்கிறோம் என்றால், இந்த நூற்றாண்டின் கவலைகளின் பேரிலும் நமது பார்வையை நாம் இழந்துவிடக் கூடாது. மத்தேயு 13:22 மற்றும் மத்தேயு 25:24 முதல் 30 ஐ வாசிக்கலாம். நீங்கள் பார்த்தீர்களா?
11இந்த நித்திய ஜீவ வார்த்தையை நீங்கள் பெற்றுக் கொண்டது உண்மையேயானால், ஓர் நாளிலே தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பு, பிசாசின் புத்திரர்கள் வந்து, "பூமியிலே இது போன்ற சத்தியம் ஒன்று இருந்தது எனக்கு தெரியாது, தெரிந்திருந்தால் நான் அதை ஏற்றுக் கொண்டிருப்பேன்” என்று சொல்லக்கூடாதபடிக்கு, அதை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? தேவன் நம்மிடத்திலிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறார். உங்களுடைய இருதயத்தில் அதை உணருங்கள். ஒரு போதும் எந்த ஈர்ப்பிலும் விழுந்து போகாதீர்கள்!
12எவரேனும் ஒருவர் பரிசுத்த ஆவியை கொண்டிருக்கிறேன் என உரிமைகோரி ஆனால் நான் பிரசங்கிக்கிற இந்த செய்தியை நிராகரிப்பானெனில், ஒருவேளை அவன் அந்நியபாஷைகளை பேசினாலும், மரித்தோரை உயிரோடு எழுப்பினாலும், அவன் கொண்டிருப்பது குறிச்சொல்லும் ஆவிதான் என ஒரு எச்சரிப்பாக அவனிடம் கூறுங்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்]. அவர்களிடத்தில் அதை சொல்லாமல் அங்கிருந்து புறப்படவேண்டாம். நான் மறுபடியும் கூறுகிறேன்: அவர்களிடத்தில் அதை சொல்லாமல் அங்கிருந்து புறப்பட வேண்டாம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
13பிரன்ஹாமிஸ்டுகளும் மற்றவர்களும், "எங்களிடத்தில் வார்த்தை இருக்கிறது" என்று சொல்வதை நான் காண்கையில், வல்லூருக்களின் திருவிழாக் கொண்டாட்டம் தான் என் நினைவுக்கு வருகிறது. இனிமேலும் கழுகுகள் உண்ணாதது எதுவோ அதையே, வேட்டை பறவைகளும், தோட்டிப் பறவைகளும், வல்லூருக்களும் வைத்துக்கொண்டு: "நாங்கள் வார்த்தையை கொண்டிருக்கிறோம், நாங்கள் வேத வசனங்களில் கவனமாக இருக்கிறோம்" என்கின்றன. பிலேயாமுடன் மோவாபியர்கள் கச்சிதமாக இதையே செய்தனர். ஆகையால் தான் நான் உங்களை அங்கு செல்ல வேண்டாம் என்றேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
14மிக நன்று. இப்பொழுது திரும்பவும் நாம் நம்முடைய பொருளுக்கு வருவோம், நான் தூர் நகர பரிசுத்த மார்ட்டினை (Saint Martin of Tours) உதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். அவர் பெர்கமு சபையின் தூதன். அவருடைய இருபதாவது வயதில், தன்னுடை ஞானஸ்நானத்திற்கு பிறகு, ஒரு வாலிப சிப்பாயான, அவருடைய வேண்டுதலுக்கு இணங்கி அவருக்கு விடுப்பு கொடுக்கப்பட்டது, மேலும் அவர் தன்னுடைய பணிக்கு மறுபடியும் திரும்பவேயில்லை ஏனெனில் அவர் ஒரு சாதாரன மனிதனை சந்தித்தார், சபையை அல்ல. அவர் தான் பிரசங்கி ஹிலாரி டி பூட்டேர்ஸ் (Hilare de Poitiers). ஒருவராலும் தேவனை ஒருபோதும் ஒரு சபையில் காண முடியாது ஆனால் ஒரு மனிதனிடத்தில் காணமுடியும். மேலும், தீர்க்கதரிசிகள் மனிதர்களே! ஏசாயா, ஏரேமியா, ஆமோஸ், ஆபகூக், இவை அனைத்தையும் நீங்கள் கேட்கும் பொழுது, அவைகள் எல்லாம் சபை பெயர்கள் அல்ல ஆனால் அவைகள் எல்லாம் தீர்க்கதரிசிகளின் பெயர்களாக உள்ளது.
15ஆகவே தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்திற்கு வருகிறது ஏனெனில் தேவன் தன்னுடைய தீர்க்கதரிசிகளோடு இருக்கிறார். மேலும் தேவனை சந்திக்க, அந்த தூர் நகர பரிசுத்த மார்ட்டின், ஹிலாரியை சந்திக்க வேண்டியதாக இருந்தது. ஹிலாரி மரித்த பொழுது, தூர் பட்டணம் மார்டினை தங்களுடைய கண்காணியாக (bishop) ஆக்கும் படி வேண்டிக்கொண்டது, அதற்கு ரோமாபுரி அளித்த பதிலை பாருங்கள்: "தோற்றத்தில் மிகவும் அற்பமான, மிகவும் மோசமாக உடை அணிகிற, மிகவும் மோசமாக பேசுகிற,... ஒரு மனிதனை நாங்கள் ஒரு கண்காணியாக ஆக்கமுடியாது." முடிவாகசொல்லப் போனால், இவ்விதமாக மெலிந்த ஒரு நபர், மிக உயர்ந்த பதவிக்கு தகுதியற்றவர் என்றது.
16ஆனால் உண்மையில், ரோமாபுரி எப்போதும் இதுபோன்ற மனிதர்கள் அவர்களுக்கு பெரும் ஏதிரிகளாக மாறினதை கண்டதில்லை. என்னவாயினும் தூர் நகர பரிசுத்த மார்ட்டீனுக்குள் எதினாலும் அனைக்க முடியாத அக்கினி ஒன்று எரிந்து கொண்டு இருந்தது. அவர் மனந்தளர்ந்து போகவில்லை, நடந்தோ அல்லது கழுதையின் மீதோ, கிராமங்களிலிருந்து கிரமங்களுக்கும் நகர்புரங்களிளிருந்து நகர்புரங்களுக்கும் சென்றார். பத்திற்கும் மேற்பட்ட சபைகள் பிறந்தன, அதிசயங்கள் அவரை பின்தொடர்ந்தது.
17சபையானது அப்போஸ்தலர்களுக்கு இணையான ஒரு ஸ்தானத்தில் அவரை இணங் கண்டுகொண்டது. சில பேராயர்கள் அவரை அழைத்தனர் ஆனால் 397 ஆம் வருடம் மரிக்கும் வரை அவர்களை அவர் சந்திக்கவில்லை. நான்காயிரத்திற்கும் மேற்ப்பட்ட திருச்சபை பங்குகள் (parish Churches) அவருடைய பராமரிப்பின் கீழ் இருந்தன, 485 பெருநகரங்கள் மற்றும் கிராமங்கள் அவருடைய பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அப்படிபட்ட ஒரு பிரதிஷ்டைபண்ணப்படுதலை நாம் அடைய வேண்டும். ஆமென்!
18வேதசாஸ்த்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரு மனிதனை காட்டிலும் முழுவதும் பரிசுத்த ஆவியினால் நிரம்பிய ஒரு மனிதனை நாம் விரும்புகிறோம். இன்னுமாக நான் சிறிய அளவிலான இறையியல் பட்டத்துக்கு எதிராகவும், நான் உங்களை எச்சரித்து இருக்கிறேன், அதைப்பற்றித் தான் மத்தேயு 16:5 முதல் 12 வரையில் வேதாகமம் பேசுகிறது. அதுவே பரிசேயர் மற்றும் சதுசேயர்களின் புளித்தமாவாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்]. இந்த நூற்றாண்டின் கவலைகளினிமித்தம் மெதுவான எழுப்புதலை நாம் காண்கிறோம். ஆனால் இந்த எழுப்புதலானது பூமியின் கடையந்திரங்கள் வரை செல்லும். இந்த பூமியானது முட்டாள்களாலும் தன்னுடைய செல்வத்தை ஒரு கார் வாங்குவதற்கோ அல்லது பூமியில் அழிந்துபோகிற ஒரு விட்டை கட்டுவதிலோ செலவிட முன்னுரிமை கொடுக்கிற மனிதனாலும் நிறைந்திருக்கிறது.
19ஹிலாரி பிரசங்கம் செய்யும் பொழுது, மக்கள் எல்லோரும் அவர் மதபேதம் உண்டாக்குகிறவர் என நினைத்தார்கள். தன்னுடைய ஜீவனை பாதுகாத்துக்கொள்ள சில காலம் அவர் நாட்டைவிட்டு போக வேண்டியதாகவும் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு மனிதன் தான் தூர் நகர மார்ட்டினின் குருவாக இருந்தார். நீங்கள் காண்கிறீர்களா? கிறிஸ்தவர்கள் தேவனுடைய ஊழியத்திற்கு முன்பாக திருமணம், பிள்ளைகள், மற்றும் தங்களுடைய பணியை வைத்துக் கொள்கிறார்கள். தேவனுடைய இரஜ்ஜியத்தை குறித்து யோசிப்பதற்கு முன்பாக தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் பூமியிலே எப்படி இருக்கும் என்று அறிய விரும்புகிறர்கள். பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதற்கு, அப்போஸ்தலர்களை போன்றும், கடந்த கால பரிசுத்தவான்களை போன்றும் சில தியாகங்கள் செய்யும்படிக்கு அவர்கள் மேல் சுமத்தப்படுமானால், பிறகு அவர்களுக்கு அது தேவையில்லை. பரலோகம் ஒரு கிறிஸ்துமஸ் வெகுமதி போன்று கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். மனித முறைமையின் படியான ஒரு கிறிஸ்துவத்தை அவர்கள் விரும்புகிறார்கள். தேவனுடைய வார்த்தைக்கென்று நீ என்ன செய்தாயோ அதை தவிற எல்லாமும் மாயையும் மனித முட்டாள்தனமுமாக இருக்கிறது. மேலும் ஒரு தலைமுறையில் தீர்க்கதரிசி செய்தியாளன் என்ன வெளிப்படுத்துகிறானோ அதை தவிர மீதமுள்ள அனைத்தும் வெறும் மாயையும் மனித முட்டாள்தனமுமாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
20ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, அல்லது எவ்வித ஊழியமும் இல்லாத ஒருவனாக இருந்தாலும்கூட, மற்றவர்களிடம் இல்லாத இந்த சத்தியத்தை அவன் பெற்றுக்கொண்ட மாத்திரத்திலேயே, எந்த வேளையிலும், எந்தவித சூழ்நிலையிலும், ஒரு சிறிய சந்தர்பம் கிடைத்தாலும், அவன் இந்த சத்தியத்தை அறியப்பண்ணுவான், ஏனெனில் நித்திய ஜீவ வார்த்தைகள் அவனுக்குள்ளாக கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும். நீ நடக்கும் பொழுதும், உன்னுடைய இருதயத்தில் நீ பிரசங்கம் செய்து கொண்டிருப்பதை போல் உணருவாய், இயேசு சரமாரிய ஸ்திரியினிடத்தில் கூறினைத போல, உனக்குள்ளாக இருக்கும் சத்தியமானது ஒரு கர்ப்பவதியான பெண்ணுக்குள் இருக்கும் ஜீவன் போல, இரட்சிப்பின் வற்றாத உற்றாக உன்னை மாற்றும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
21பூமிக்கு தேவன் அனுப்பிய ஒவ்வொரு செய்தியும், அது ஒரு ஈடுயிணையில்லா சத்தியமாக இருந்தது. அவை பூமியின் கடையாத்திரம் மட்டும் சென்றாக வேண்டும். லூதர் நீதிமானாக்கப்படுதலை கொண்டிருந்தார், ஜான் கால்வின் முன் குறித்தலைகொண்டிருந்தார், ஜான் வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதலை கொண்டிருந்தார், வில்லியம் பிரன்ஹாம் காயங்கால வெளிச்சமான திரும்ப அளிக்கப்படுதலை கொண்டிருந்தார்.
22இதை நீங்கள் கவனிப்பீர்களானால், யூதர்கள் ஒரு தீர்க்கதரிசியை கொன்ற பின்பு அந்த தீர்க்கதரிசியின் நேரமும் கடந்துவிடுகையில், அவனை அடையாளம் கண்டுகொள்வார்கள், அவனுக்காக ஒரு நினைவுச் சின்னத்தையும் கட்டுவார்கள். அதே விதமாக, லூதர் வந்த பொழுது அவருக்கு எதிராக எழும்பினார்கள் ஆனால் அவருடை நேரம் கடந்து போன பிறகு முழு உலகமும் அவரை இனங்கண்டு கொண்டது. ஜான் கால்வின், ஜான் வெஸ்ஸி மற்றும் இப்பொழுது வில்லியம் பிரன்ஹாமினுடைய காரியத்திலும் அப்படியே நடக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
23சத்தியத்தை பெற்றுக் கொண்டு அதை தன் வசமாக சிறைப்படுத்திக் கொள்வது மத்தேயு 25 ல் உள்ள இந்த கன்னிகைகளின் முட்டாள்தனமாகும். இராஜ்ஜியத்தின் நற்செய்தியை வெளியிலே சென்று பரவச் செய்யாமல் இருக்கும் பொழுது எப்படி தேவனால் ஒருவரை தன்னுடைய ஆவியினால் நிரப்ப முடியும்? அப்போஸ்தல நடபடிகள் 4 ஆம் அதிகாரத்தில் அப்போஸ்தலர் மற்றும் சீஷர்கள் இருளில் இருக்கிற ஜனங்களுக்கு வெளிச்சத்தை கொண்டுச் செல்லும்படியாக அதிகபடியான ஆவியை கேட்டனர் அந்தப்படியே அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
24மகத்தான சத்தியத்தை சிறைப்படுத்தி வைத்துக்கொண்டு ஜனங்களை மரிக்க விடுவதென்பது முட்டாள்தனம். ஆகையால் தான் இந்த கன்னிகைகள் எடுத்துக் கொள்ளப்படுதலை தவற விட்டு உபத்திவத்திற்குள்ளாக செல்கிறார்கள். அதைப்பற்றியே மத்தேயு 25:14 முதல் 30 ல் பேசப்பட்டுள்ளது; தாலந்துகளின் உவமை, இந்த பத்து கன்னிகைகளில் ஒன்றின் தொடர்சியாக இருக்கிறது. அது புரோட்டஸ்டன்டுகளை குறித்தோ சுவிசேஷக சபைகளை குறித்தோ, மறைபரப்பு நிறுவனங்கள் மற்றும் ஊழியங்களை குறித்தோ அல்லது பிரன்ஹாமிஸ்டுகளை குறித்தோ சொல்லப்படவில்லை ஆனால் பத்து கன்னிகைகளை பற்றியும் மேலும் அவர்களுக்கு கிடைத்த தேவனுடைய சத்தியத்தை வைத்துக்கொண்டு, பிறகு என்ன செய்வார்கள் என்பதை பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
25அனாலும் சத்தியத்தை சிறைபடுத்தி வைத்துக்கொண்டிருப்பதின் மூலம் துன்மார்க்கமாக நடந்ததினால் அவர்கள் உபத்திரவத்தின் முலமாகவே இரட்சிக்கப்படுவார்கள். ஏசேக்கியல் 33:1 முதல் 9 வரையிலான வசனங்கள் பிரகாரம், "துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்தில் இராதபடி" எச்சரிப்பதற்காக இந்த சத்தியத்தை பரப்பவேண்டியது நம்முடைய கடமையாக இருக்கிறது. இந்த எல்லா சபைகளும் நேராக பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கையில், அதை அவர்களிடம் அறிவி என்று நாங்கள் உன்னிடம் கூறும்வரை நீ காத்துக் கொண்டிருப்பாயா? வேதாகமம்: “அந்த துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்: ஆனாலும் அவன் இரத்தப்பழியை காவற்காரனின் கையிலே கேட்பேன்.” என்று கூறுகிறது. ஆனால் நீ அவனை எச்சரித்தும் அவன் தனது கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு சபைகளிலேயே தரித்திருப்பான் என்றால், "அவன் தன் வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.” அதை பார்த்தீர்களா?
26நம்முடைய வீடும், நமது சுற்றுப்புறமும், அந்த மாவட்டங்களும் நாட்டுப்புறங்களும் கிராமங்களும் பட்டணங்களும் தேசங்களும் யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறது? நம்மில் ஒவ்வொருவரும் ஓர் நாளில் தேவனுக்கு முன்பாக கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம், அப்போஸ்தலர்களை பிதாக்களாக கொண்டிருப்போமானால், அப்போஸ்தலர்களுடைய கிரியைகளை பிறப்பிப்போமாக. தாலந்துகளின் உவமையானது நாம் ஒவ்வொருவரும் பெற்ற சத்தியத்திற்கு நாம் என்ன செய்தோம் என்பதை சார்ந்து இருக்கிறது. அதை பார்த்தீர்களா? நீ வேலை செய்யும் பொழுது வரங்கள் கூடவே வரும்.
27பயணிகளின் வாகனம் ஒன்றை பார்த்து வெளியே இருக்கும் நபர் ஒருவர்: “இந்த வாகனத்தில் பயணம் செய்பவர்களே, இந்த வாகனத்திற்கு காப்பீடு இல்லை, அதினுடைய சக்கரங்கள் தேய்ந்துபோனதும், அதினுடைய பிரேக் சேதமடைந்ததுமாக இருக்கிறது. மேலும் அந்த ஓட்டுனருக்கு ஓட்டுனர் உரிமமும் இல்லை“ என சத்தமிடுகிறதை கற்பனைசெய்து பாருங்கள். அது தான் நம்முடைய பணி. அந்த வாகனம் ஒரு சென்டிமீட்டர் நகரும் முன் விவேகமுள்ளவன் வெளியில் இருந்தவருடைய சத்தத்தை கேட்டு தீவிரமாக சோதனை செய்வான், ஆனால் சாத்தானின் பிள்ளைகள் உடனடியாக எதிர்வாதம் பண்ணி: "நீ என்ன காவல் அதிகாரியா? அதைசொல்ல உனக்கு அதிகாரமில்லை ஏனெனில் நீ ஒரு காவல் அதிகாரியல்ல!" என்பார்கள். உங்களால் காணமுடிகிறதா?
28ஆத்துமாக்களுக்கு ஒரே மதிப்பு கிடையாது... பிசாசின் பிள்ளைகளுடைய ஆத்துமாக்களுக்கு விலையேதுமில்லை. அவர்கள் ஒரு கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு சபையில் மரிக்க முடியும். அவர்கள் அரசியலுக்காக, கால்பந்திற்காக, மற்ற பிரயோஜனம் அற்ற காரியங்களுக்காக மரிக்கலாம், அவர்கள் கேட்டின் குமாரர்கள். அவர்கள் பாதாளத்திற்கு சென்றாக வேண்டும், இருப்பினும் அவர்கள் இந்த செய்தியை கேள்விப்பட வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
29மத்தேயு 13:22 ஐ நாம் பார்த்தோமானால், இந்த சுபாவத்தின் காரணத்தை நாம் எளிதாக புரிந்துகொள்ளலாம். ஆவியானவர் வெளிப்படையாக வலியுருத்துகிறார், ஆகையால் அதை காதுள்ளவன் கேட்கக்கடவன். தரிசனத்திலே, அங்கே ஒரு கிரகணம் உண்டானது, பின்பு வெளிச்சம் வந்தது, அதை பாருங்கள்! ...
30ஒரு செய்தியானது வரும் பொழுது அதினுடைய வெளிச்சமானது முழு உலகத்தையும் பிரகாசிப்பிக்க வேண்டும், அதை தான் புத்தியுள்ள கன்னிகைகள் புரிந்து கொண்டனர், ஆகவேதான் அவர்களுக்கு ஒரு பெரிய பங்கு எண்ணெய் அளிக்கப்பட்டது. அதனுடைய மதிப்பை அறியாத அல்லது அதைக் கொண்டு ஒன்றும் செய்யாத ஒருவரிடத்தில் இவ்வளவு அதிக அளவிலான எண்ணையை ஒருவர் கொடுப்பாரோ? எதற்காக? பழைய ஏற்பாடு ஆனாலும் புதிய ஏற்பாடு ஆனாலும், தேவன் ஆவியையோ அல்லது எண்ணையையோ கொடுப்பது, அதைக் கொண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே.
31புத்தியுள்ள கன்னிகைகளோ அல்லது புத்தியில்லாத கன்னிகைகளோ, துவக்கத்திலிருந்தே அதற்கான வேறு பிரிதல் நடக்கிறது. அதை பார்த்தீர்களா? புத்தியில்லாத கன்னிகைகள் வெளியிலே மாத்திரம் அல்ல ஆனால் வண்டி வண்டியாக தங்கள் தலையிலே கவலைகளின் பாரங்களோடு அவர்கள் இங்கேயும் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு தேவனுடைய பிள்ளை வேலை செய்யும்போதும், அவனுடைய எண்ணமெல்லாம் இம்மட்டுமாக தன்னுடைய வங்கி கணக்கில் எவ்வளவு சேர்க்க முடிந்தது என்பதல்ல மாறாக வார்த்தையின் விரிவாக்கத்திற்காக அவன் பங்களித்ததின் முலம் தேவனுக்கு என்ன செய்தான் என்பதே அவனது எண்ணமாக இருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
32பரிசுத்த மார்டின் அந்த விடுப்பிற்காக கேட்ட பொழுது மறுபடியுமாக தன்னுடைய தேசத்திற்கு சேவை செய்ய தனது பதவிக்கு அவர் திரும்பவில்லை. கிராமங்களில் அவர் பிரசங்கிக்க தொடங்கியவுடன், எந்த ஒரு வியாதியோ, வாதையோ, அவருடைய ஜெபத்திற்கு முன்பாக நிற்க முடியவில்லை, மரித்தவர்கள் உயிரோடு எழும்பினார்கள்... அதை பார்த்தீர்களா? கர்த்தர் இயேசு அதை அருளினதால், அதற்காக அவர் எந்த அன்பளிப்பையும் பெற்றுக்கொள்ளவில்லை.
33நம்முலமாக தேவன் ஒருவருடைய வாழ்க்கையில் அற்புதத்தை செய்தார் என்பதற்காக நாம் எந்த ஒரு அன்பளிப்பையும் வாங்கிக்கொள்ளக் கூடாது. ஜனங்கள் வார்த்தைக்கு தூரமாக மரித்துக் கொண்டிருக்கையில் நம்மிடம் பணமிருந்தால், நிலங்களை வாங்குவதற்கோ, எல்லா தரைகளிலும் சுவர்களிலும் கம்பளங்கள் விரிக்கப்பட்ட குளிர் சாதன வசதி கொண்ட அழகான ஆலயங்களை கட்டுவதற்கோ, நாம் அதை செலவழிக்க கூடாது. நம்முடைய முயற்சிகள் அனைத்தும், முதலாவது வார்த்தையை பரப்பும் நோக்கில் அமையவேண்டும். அதுவே மேகங்களிலிருந்து இறங்கி வந்த வார்த்தையின் மிகச்சரியான இரண்டாவது பாகம்.
34முதல் பாகமானது ஏற்கனவே முடிந்து விட்டது மேலும் இப்பொழுது நாம் கடைசி பாகத்தை முடித்துக் கொண்டிருக்கிறோம். முதல் பாகத்தின் வார்த்தையானது நியாயதீர்ப்பின் வார்த்தைகள் மேலும் இரண்டாவதாக திருச்சபைக்கு, அவள் தன்னுடைய ஜீவியத்தை மாற்றிக் கொள்ளும்படியாக கூறப்பட்டது. நான் இப்பொழுது நின்றுக் கொண்டிருப்பதைப் போன்று நின்றுக் கொண்டிருந்தேன், கிழக்கு திசையில் பிரெஞ்சு மொழியிலான சில வார்த்தைகள் மேகத்திலிருந்து கிழே இறங்கி வருவதை நான் கண்டேன். அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காக கொடுக்கப்பட்டது, அவர்களும் அதை விசுவாசிப்பார்கள். அவர்கள்: "நாங்கள் தேவதூதனையும் காணவில்லை ஆட்டுக்குட்டியையும் காணவில்லை ஆனால் முற்றிலுமாக விசுவாசிக்கின்றோம்..." என்றனர். அதை பார்தீர்களா?
35எடுத்துக்கொள்ளப்படுதலானது மாய்மால காகங்கள், தவளைகள் மற்றும் வல்லூருக்களுக்கு அல்ல; அல்லது சுவிசேஷத்தைகுறித்து வெட்கம் அடைபவர்களுக்கும் அல்ல. சகோதரிகளே, நீங்களும் கூட சாட்சி பகருங்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
36இப்பொழுது நாம் எசேக்கியல் 33 க்கு வருவோமாக, நம்முடைய அப்போஸ்தல பிதாக்கள் எக்காளம் முழக்கினதை போல, இந்த அதே விதத்தில் செய்வதற்கென்றே, நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஒரு கிறிஸ்தவனாக இருத்தல் என்பது, இரட்சிப்படைவதற்கான சத்தியத்தை கேட்க உரிமையுள்ளவர்களும் அதேநேரத்தில் அழிந்துகொண்டிருக்கிறதுமான அந்த ஆத்துமாக்களின் மதிப்பை உணர்ந்தவர்களாக இருப்பதுதான். கிறிஸ்தவனாக இருப்பதென்பது அத்துமாக்களுக்காக பாரமும் இரக்கமும் கொள்வதுதான். ஆகையால், கேட்கிறதற்குக் காதுள்ளவன் எவனோ அவன் கேட்கக்கடவன்!