1 இயேசு கிறிஸ்துவின் அடிமையான நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு , இந்த ஜனவரி 21, 2024 அன்று பரிசுத்தவான்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வதற்காக மேலறைக்குச் செல்லும்படி அவர்களை அழைப்பதற்காக வழங்கிய வெளிப்பாடு.
2 இந்த பிரசங்கம் பரிசுத்தவான்களுக்கு மேலறைக்கு செல்ல ஒரு உத்தரவு ஆகும். மேலறை உங்கள் வீடாகவோ அல்லது பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலுக்காக காத்திருக்கும் நல்ல மனநிலையில் இருக்கும் எந்த இடமாகவோ இருக்கலாம். நான் பேசப்போவது மேலறையைப் பற்றியது, ஆனால் அதற்கு முன், நான் பல விஷயங்களைப் பற்றி பேசப் போகிறேன். முதல் விஷயம் ஆராதனையின் நடத்தையைக் குறித்தது.
3 நாம் அடைந்திருக்கும் கட்டத்தில், நமது முதிர்ச்சியைக் காட்ட வேண்டும். பிரசங்க பீடத்தில் இருப்பவர் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். ஒரு சகோதரருக்கு ஒரு பொறுப்பு இருந்தால், அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை தேவன் அவருக்கு வெளிப்படுத்துவார், மற்றவர்களுக்கு அல்ல. பிரசங்க பீடத்தில் இருக்கும் ஒருவர், தான் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதலை சபையிடம் கேட்க முடியாது. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் பிரசங்க பீடத்தில் என்ன செய்கிறீர்கள்?
4 கடந்த ஜனவரி 7-ஆம் தேதி, அதாவது 2024-ஆம் ஆண்டின் முதல் ஞாயிற்றுக்கிழமை, ஒரு சபையில் , துதிப் பாடல்களுக்குப் பிறகு, சகோதரர்களின் தனிப்பட்ட பாடல்களுக்கு சபை செல்ல வேண்டுமா அல்லது 30 நிமிட ஜெபம் செய்ய வேண்டுமா என்று யாராவது கனவு கண்டீர்களா என்று ஜெபத்தலைவர் கேட்டார். யாரும் கனவு காணவில்லை. அப்போது ஒழுங்கின்மை ஏற்பட்டது. சிலர் தனிப்பட்ட பாடல்களை முன்மொழிந்தனர், மற்றவர்கள் 30 நிமிட ஜெபத்தை முன்மொழிந்தனர். ஆனால் ஒரு தீர்க்கதரிசனம் வந்தது, மொத்த சபையும் அமைதியடைந்து, தீர்க்கதரிசனம் சொன்னபடியே 30 நிமிட ஜெபத்தை செய்தார்கள். இதுவும் பல நாடுகளில் நடந்தது.
5 மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து எனக்கு வந்த அறிக்கைகளின் அனைத்து வெளிப்பாடுகளும், ஜனவரி 7, 2024 ஞாயிற்றுக்கிழமையன்று, துதிப்பாடல்களுக்குப் பிறகு செய்தியில் எல்லா இடங்களிலும் 30 நிமிடங்கள் ஜெபம் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. முழுச் செய்தியும் வேண்டுதலில் இருந்தபோதும், நம்மால் இயன்றவரை 30 நிமிட ஜெபத்தைத் தொடருங்கள் என்று கூறும் காக்குவ் 160:13-உடன், ஒரு வெளிப்பாட்டால் சபையை மீண்டும் பண்டிகைச் சூழலுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
6 இருப்பினும், சில நாடுகளில், வெளிப்பாட்டின் எதிரிகள் முயன்று எதிர்க்கவும் தனிப் பாடல்களை பாடவும் செய்தனர். காக்குவ் 160:49-இன் படி, ஒரு சபை சம்பந்தப்பட்ட எந்த சூழ்நிலையிலும், யாராவது தனது தவறான நிலைப்பாட்டை திணிக்க முயன்றால், அவர் அறிக்கை செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும், மூன்று மாதங்களுக்குள் அவர் அதைத் திரும்பத் திரும்பச் சொன்னால், பன்னிரெண்டு மாதங்களுக்கு அவர் மீண்டும் சபையில் பேச மாட்டார் என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
7 இவ்வாறு, பிரசங்க பீடத்தில் உள்ள ஒரு சகோதரர், சபையில் யாராவது கனவு கண்டார்களா என்று கேட்டால், அது சரியல்ல. ஆராதனையின் போது யாருக்காவது ஒரு தரிசனம் இருந்ததா, என்று அவர் கேட்க வேண்டும் மாறாக கனவு இல்லையா என்று கேட்கக் கூடாது . ஒரு கனவு என்பது ஒரு கூட்டு வெளிப்பாடு அல்ல, ஆனால் ஒரு தீர்க்கதரிசனம் அதைப் பகிரங்கப்படுத்தாவிட்டால் அது தனிப்பட்ட ஒன்று. தேவன் ஒரு சபைக்கு என்ன சொல்ல விரும்புகிறாரோ, அதை அவர் ஒரு தரிசனம் அல்லது தீர்க்கதரிசனம் மூலம் சொல்வார். ஒரு சபை ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது, சபை கனவுகளை நாடக்கூடாது.
8 ஆராதனையில் அல்லது ஆராதனைக்கு வெளியே, ஒரு கனவின்படி ஏதாவது சொல்ல வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்றால், நீங்கள் ஒரு கனவு கண்டதை தெரிவிக்காமல் பேசுவதற்கு உங்களுக்கு அங்கே ஒரு தளம் உண்டு . நீங்கள் கனவு கண்டது அவசியம் என்றால், நீங்கள் யாரிடம் பேசுகிறீர்களோ, அவர் உங்கள் வார்த்தையின் அடிப்படையைக் கேட்பார். பின்னர், அவர் ஒப்புக்கொண்டால் நீங்கள் கனவை அவரிடம் கூறுவீர்கள்.
9 மேலும், ஒரு சூழ்நிலையை எதிர்கொண்ட, சபையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், ஒரு தலைவர் பிரசங்க பீடத்திற்குச் செல்வார், மேலும் சபை அந்த விஷயத்திற்காக ஜெபித்து, ஒரு தீர்க்கதரிசனத்தை எதிர்பார்க்க அமைதியைக் கடைப்பிடிப்பார்கள். ஒரு சபையில் தீர்க்கதரிசனம் இல்லை என்றால், ஒரு ஆவிக்குரிய சபையாக இருக்க சபையானது ஜெபம் செய்யும் ஏனெனில் அங்கே ஒரு தீர்க்கதரிசனம் இருக்க வேண்டும்.
10 நல்லது. இப்போது நான் முக்கியமான ஒன்றைச் சொல்லப் போகிறேன். ஒரு எழுப்புதலை நோக்கிய நடைப்பயணம் என்பது நமது சொந்த வெளிப்பாடுகளால் ஆழமான பரிசுத்தப்படுத்துதலுக்கான நேரமாகும். அது தேவனுக்கும் நம் ஒவ்வொருவருக்கும் இடையே உள்ளது. அது உண்மையிலேயே நம் அக்கறையாக இருந்தால், நம்மை அறியாமலேயே நாம் செய்யும் பாவங்களை தேவன் நமக்கு வெளிப்படுத்துவார்.
11 நான் பேச விரும்பும் மற்றொரு விஷயம், ஒரு சபை செய்திக்கு வரும்போது நமது அணுகுமுறையைப் பற்றியது . அதன் பாஸ்டர் முதற்கொண்டு நாம் அதை மதிக்க வேண்டும். கடந்த காலத்தில் நாம் செய்த அனைத்து மோசமான நடத்தைகளையும் தேவன் மன்னிப்பாராக. சபைகள் செய்தியை விசுவாசித்தன, மேலும் நாம் அவற்றின் தலைவர்களை சந்திக்கவில்லை. நாம் அவர்களின் வீடுகளுக்குச் செல்லவில்லை. இனி அது மீண்டும் அப்படி நடக்கக்கூடாது.
12 ஒரு சபை செய்திக்கு வரும்போது, நீங்கள் ஆட்டுக்குட்டிகளாக செல்வீர்கள், குடியேற்றக்காரர்களாக அல்ல. அது சிறிய சபையாக இருந்தாலும் சரி, பெரிய சபையாக இருந்தாலும் சரி, அதன் உறுப்பினர்களை பரலோகத்தை நோக்கிப் போராடும் நம்முடைய சக போராளிகளாக நாம் பார்க்க வேண்டும். முதல் ஆராதனைக்கு முன், நீங்கள் அதன் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்த வேண்டும் மற்றும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும். ஆனால் செய்திக்கு வரும் ஒரு சபை அதன் போதகர், பிரசங்கிகள் மற்றும் பிறரை விரும்பினால் வைத்திருக்கிறது. தங்களுக்காக தீர்மானிப்பது அது அவர்களை பொறுத்தது. அவர்களால் பிரசங்கிக்க முடியும் என்று உணர்ந்தவுடன் பிரசங்கிக்க ஆரம்பிக்கலாம். அவர்களுக்காக யாரும் முடிவு செய்யக்கூடாது.
13 அவர்களில் முதலில் விசுவாசித்தவர்கள் தங்கள் போதகருக்கு முன்பே ஞானஸ்நானம் பெறலாம். மேலும் பின்வரும் ஆராதனைகள் செய்தியின் மாதிரியின்படி செய்தியின் ஜெப தலைவருடன் இருக்கும். மேலும் செய்தியைப் படிப்பதன் மூலமும் கேட்பதன் மூலமும் சபையார் அனைவரும் செய்தியை கற்று தேறுகிறார்கள் என்று உறுதிசெய்வீர்கள்.
14 மேலும் தங்கள் சபைகளில் எழுப்புதலை விரும்பும் அனைவரும் ஏற்கனவே தங்கள் சபை உறுப்பினர்களுக்கு செய்தியைக் கொடுக்கத் தொடங்க வேண்டும். சபை உறுப்பினர்கள் தங்கள் தொலைபேசியில் செய்தியை வைத்திருக்க வேண்டும். செய்தியைப் பெற்ற பிறகு, சபைத் தலைவர்கள் தங்கள் சபைகளின் விவகாரங்களை தொடர்ந்து நிர்வகிப்பார்கள், ஆனால் செய்தியின்படி.
15 நாம் தவறு செய்யக் கூடாது. தேவன் பெருமையுள்ளவர்களை எதிர்க்கிறார், ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கு அவருடைய கிருபையை அளிக்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது. தேவன் தாமே பூமிக்கு வந்து ஆட்டுத் தொழுவத்தில் பிறந்தார். மேலும், பெருமை என்பது ஒரு பிசாசு, ஒருவர் பணக்காரராக இருந்து தாழ்மையாக இருப்பது போல் ஒருவர் ஏழையாக இருந்து பெருமையாகவும் இருக்கலாம்.
16 நம்மைப் பொறுத்தவரை, நாம் சிறு குழந்தைகளைப் போல இருப்போம். பிறருக்கு பணியாட்களாக இருக்க முற்படுவோம். அஞ்ஞானம் என்ற எல்லாவற்றிலிருந்தும் நம்மை வெறுமையாக்குவோம். ஆடைகள் சேகரிப்பு, காலணிகள், சர்வாதிகார நடத்தை, அதை நாம் விட்டுவிடுவோம்! நாம் அனைவரும் ஆட்டுக்குட்டிகளைப் போல இருப்போம், ஏனென்றால் நமக்குள் இருக்கும் ஏப்ரல் 24, 1993-ன் ஆட்டுக்குட்டியின் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்குவார். பெருமை என்பது பரிசுத்த ஆவியின் எதிரி.
17 நல்லது. நமது வாழ்வில் அங்கே சில விஷயங்கள் இருக்கும் அவைகளை நமது கனவுகள் மட்டுமே நம்மை அறியச் செய்யும். நீங்கள் விலையுயர்ந்த ஆடைகள் அல்லது பொருட்களை ஆடம்பர அல்லது நாகரீக உணர்ச்சியில் வாங்கினால், அது கெட்டது என்று உங்களிடம் வந்து சொல்ல அது பிரசங்க பீடத்திலிருந்து வரும் ஒரு பிரசங்கம் அல்ல. மேலும் நீங்கள் செய்தியை வெளிப்பட்டின்படி அல்லது செய்தியின் ஆவியின்படி பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, பசிக்காக அல்லாமல் மகிழ்ச்சிக்காக பிஸ்கட் சாப்பிடுவது சிற்றுண்டியாகும்.
18 சில சகோதர சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறார்கள், ஏனென்றால் ஒரு கனவு அவர்கள் அறியாத தவறை அவர்களுக்குக் காட்டியதால். வெளிப்பாட்டின் பரிமாணத்தில் இது ஒரு முக்கியமான படியாகும். இப்போது, நம்மிடையே நல்ல எண்ணம் இல்லாதவர்களைத் தவிர, ஒவ்வொரு இரவும் நாம் கனவுகளைக் கண்டாலும், நம் கனவுகள் அனைத்தும் தேவனிடமிருந்து வருகின்றன. நமது வியாக்கியானங்கள் தான் பெரும்பாலும் தவறானவை. நம் கனவுகளை புரிந்து கொள்ள கிருபை புரிய ஜெபிப்போம்.
19 மேலும், நாம் காணும் கனவுகள் பெரும்பாலும் நமது தனிப்பட்ட வாழ்க்கை என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும் கனவுகளைப் பகிர்ந்துகொள்வது தேவனுக்கு முன்பாக நிர்வாணம் அல்லது தூய்மையற்ற நடைமுறைகளின் வீடியோ அழைப்புகளாக இருக்கலாம்.
20 ஒரு சகோதரி என்னிடம், “சகோதரர் பிலிப்பு , நான் காணும் கனவுகளை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்கிறேன் என்று கூறினாள். ஒரு கனவில், என் உயரமான குதிகால் காலணிகளின் காரணமாக என்னால் மலை ஏற முடியவில்லை. நான் ஜெபம் செய்து அதன் வியாக்கியானம் பெற்றுக் கொண்டேன். உயரமான குதிகால் அது பெருமையாக இருந்தது". ஆம், சகோதரி, அது சரிதான். ஒரு கனவில், ஒரு பெண்ணின் உயரமான குதிகால் அல்லது மிகவும் தளர்வான ஒரு ஆணின் ஆடை பெருமை ஆகும். நம்முடைய வெளிப்பாடுகளைப் புரிந்துகொள்ள தேவனுடைய கிருபை இன்னும் அதிகமாக நம்முடன் இருக்கட்டும்.
21 மேலும் இந்த வெளிப்பாடுகள் மூலம் ஜீவியத்தின் மாற்றம் நமக்கு ஆரோக்கியத்தையும் விடுதலையையும் கொண்டு வரும். ஏனென்றால், வெளியரங்கமாக்கப்பட்ட பாவம் உங்கள் உயிரை விட்டுப் பிரிந்தால், எந்தப் பேய், எந்த நோய், அல்லது அந்த பாவத்துடன் தொடர்புடைய எந்த சாபமும் உங்கள் உடலில் இருக்க எந்த காரணமும் இல்லை. அவைகளும் உங்கள் வாழ்க்கையை விட்டு வெளியேற வேண்டும்.
22 மேலும் பல சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் தங்கள் சொந்த வெளிப்பாடுகளின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை ஒழுங்கமைக்கிறார்கள். சில சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் தங்கள் சொந்த வெளிப்பாடுகளின் அடிப்படையில் சீருடை அணிய மறுக்கின்றனர், தம்பதிகளின் சீருடைகள் மற்றும் சிறப்பு பண்டிகை உடைகள் மேலும் மற்றவைகளும். அவர்கள் இனி இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குச் செல்ல மாட்டார்கள், மேலும் லாசருவின் இறுதிச் சடங்கை அவர்கள் தங்களுக்காகக் கோருகிறார்கள்.
23 உங்கள் செயல்கள் மற்றும் தேர்வுகளில், நீங்கள் நாகரீகத்தையும் அருவருப்பானதாகக் கருதப்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் காண வேண்டும். ஒரு விஷயத்தின் தேவை அல்லது தேவையானது உங்கள் விருப்பத்தின் அளவுகோலாக இருக்க வேண்டும். மேலும் உங்கள் கூட்டங்களில், நீங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்ற ஆசையையும், உங்களின் ஆடை, உணவு மற்றும் பிறவற்றிலும் பண்டிகை தோற்றத்தை தவிர்க்கவும்.
24 நல்லது. பரிசுத்த ஆவியின் பரிமாணத்தில் ஸ்திரீகளின் பங்கு என்ற மற்றொரு விஷயத்தை நான் இப்போது பேசப் போகிறேன். முதலில், ஒரு ஸ்திரீ பிரசங்க பீடத்திற்கு செல்லவோ அல்லது ஆசாரியத்துவத்தில் இருக்கவோ முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் சபையில் ஸ்திரீகளின் ஊழியத்திற்கு எதிரானவன், ஆனால் வெளிப்பாட்டின் மூலமே நான் அதற்கு எதிரானவன். நான் சட்டவாதியோ அல்லது வெறியனோ அல்ல.
25 இப்போது நான் சொல்வதைக் கவனியுங்கள். இங்கே அது பரிசுத்த ஆவியின் பரிமாணத்தைப் பற்றியது. இது ஆசாரியத்துவத்தைப் பற்றியது அல்ல. மதகுருத்துவம் மற்றும் பட்டங்கள் மற்றும் கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகள், அது ஆசாரியத்துவத்தில் உள்ளது, ஆனால் நான் இங்கு பேசுவது பரிசுத்த ஆவியின் அதிகாரம் மற்றும் செயல்.
26 மேலும் பரிசுத்த ஆவியின் பரிமாணத்தில், ஆசாரியர்களும் ஸ்திரீகளைப் போலவே அந்நியர்களாக இருக்கிறார்கள். அபிஷேகத்தின் கீழ் ஒரு நபரின் அதிகாரம் பரிசுத்த ஆவியின் அதிகாரம் என்பதைக் கவனியுங்கள். மேலும் ஒரு ஸ்திரீ தன் மாதவிடாய் காலத்தில் உண்மையான பரிசுத்த ஆவியின் எந்த வரத்தையும் வெளிப்படுத்துவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
27 இப்போது, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழ் ஒரு ஸ்திரீ எவ்வளவு தூரம் செல்ல முடியும்? அது தேவனைச் சார்ந்தது. ஒரு சிறு குழந்தையிலோ, ஒரு ஸ்தீரியிலோ, ஒரு வெள்ளை மனிதனிடமோ அல்லது ஒரு கறுப்பின ஆப்பிரிக்கனிடமோ பரிசுத்த ஆவியானவர் செயல்படுவதற்கு எந்த மனிதனும் ஒரு வரம்பை நிர்ணயிக்க முடியாது.
28 அசுசா எழுப்புதலில், பரிசுத்த ஆவியானவர் ஜூலியா ஹட்சின்ஸ் மற்றும் லூசி ஃபாரோ போன்ற ஸ்திரீகளையும் ஊழியங்களுக்கு நியமித்தார். மேலும் முன்பு இனவெறி கொண்ட வெள்ளையர்களின் கூட்டம் பரிசுத்த ஆவியைப் பெற முழங்கால்படியிட விரைந்த கறுப்பின அடிமையான லூசி ஃபாரோவின் முன் நீங்கள் நின்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
29 மேலும் நமது எழுப்புதலில் , பெருங்கூட்டத்தை செய்திக்கு கொண்டு வரக்கூடிய ஆவிக்குரிய வரங்களைக் கொண்ட நமது சகோதரிகளை எங்கு வைக்கப் போகிறோம்? வெளிப்படுதல்களின் காணொளிகள் மூலம், சகோதரி டயினா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து பல சகோதரிகளை நான் பார்த்திருக்கிறேன். மேலும் வரவிருக்கும் பரிசுத்த ஆவியானவரால், எல்லா நாடுகளிலும் இப்படிப்பட்ட சகோதரிகள் இருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.
30 நமது கலந்துரையாடல்கள், இணையத்தில் நம்முடைய பதிவுகள் மற்றும் காணொளிகள் மற்றும் பல நிதி ஆதாரங்களுடன் சுவிசேஷ பிரச்சாரங்கள், மேலும் நமது மனித முயற்சிகளால் உருவாக்க முடியவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒரு சகோதரி அல்லது ஒரு குழந்தையை கைப்பற்றி உடனடியாக உருவாக்க முடியும். அதன் பின்னர், உண்மையுள்ள ஆசாரியார்களிடமிருந்து, நாம் உண்மையுள்ள ஊழியர்களுக்குச் செல்வோம், சகோதரிகள் அதில் கணக்கிடப்பட வேண்டும்.
31 நம்முடைய திறமைக்கு ஏற்ப, நம்மால் முடிந்தவரை, நாம் சுவிசேஷம் செய்தோம். நாம் கலந்துரையாடல்கள், விவாதங்கள், துண்டு பிரசுரங்களின் விநியோகம் மற்றும் ஊடகங்களில் உட்பட அனைத்தையும் செய்தோம். நாம் நமது எல்லையை அடைந்துவிட்டோம். இப்போது பரிசுத்த ஆவியானவர் காட்சிக்குள் நுழைய வேண்டும். இது ஒரு யாத்திரையை அல்லது ஒரு சுவிசேஷத்தை கொண்டுவரும் ஒரு எழுப்புதல்.
32 மேலும் பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வழி மற்றும் வழிமுறைகளையும் வைத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் ஒரு சிறிய ஞானஸ்நானம் பெறாத குழந்தையை கைப்பற்றி தனது வல்லமையை அல்லது ஆவிக்குரிய வரங்களில் ஏதேனும் ஒன்றை வெளிப்படுத்த முடியும். மேலும் பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ் ஒரு குழந்தை வெளிப்படுத்தக்கூடிய அனைத்தையும், ஒரு சகோதரியும் பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ் வெளிப்படுத்த முடியும் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
33 ஞானஸ்நானம் பெறாத ஒரு குழந்தை சபையில் பொறுப்பேற்கவோ அல்லது வெளிப்படையான பாவ அறிக்கையில் பேசவோ முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்பொழுதிலிருந்து, பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ், ஒரு வெளிப்படையான பாவ அறிக்கையின் போது, ஒரு சிறிய ஞானஸ்நானம் பெறாத குழந்தை எழுந்து நின்று தலையிட முடியும். மேலும் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டால், ஒரு குழந்தை அவ்வாறு செய்ய முடியும் என்றால், பிறகு பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்ட ஒரு சகோதரியும் அவ்வாறு செய்ய முடியும் என்பதையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
34 நான் மீண்டும் சொல்கிறேன், இது இங்கு ஆசாரியத்துவத்தைப் பற்றியது அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியைப் பற்றியது. ஒரு சகோதரி அல்லது ஒரு சிறிய குழந்தை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழ் எழுந்து நின்று தீர்க்கதரிசனம் உரைக்க முடியும் என்றால், ஜெபத்தலைவர் அவளுக்கு தளத்தை கொடுக்காமல் இருந்தாலும், ஒரு ஆராதனையின் போது, பரிசுத்த ஆவியின் உந்துதலால் ஒரு சகோதரி எழுந்து நின்று வெளிப்படையான பாவ அறிக்கையை வழிநடத்த முடியும் என்பதையும் மற்றும் அவளை தடுக்கும் செயலாற்றல் யாருக்கும் இல்லை என்பதையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
35 பரிசுத்த ஆவியின் பரிமாணத்தில், சகோதரிகள் வெளிப்படையான பாவ அறிக்கையை வழிநடத்தவோ அல்லது சபையில் பேசவோ தொடர்ச்சியான உரிமையைப் பெறுகிறார்கள் என்று நான் கூறவில்லை. இல்லை. பரிசுத்த ஆவியானவர் ஒரு துல்லியமான தருணத்தில் அதை நிறைவேற்றுவதற்காக அந்த நபரைக் கைப்பற்ற முடியும் என்பதைப் பற்றி நான் பேசுகிறேன்.
36 ஆனால் பரிசுத்த ஆவியானவர் மேலும் சென்றால், "ஆமென்" என்று கூறுவோம். உதாரணமாக, ஒரு தீர்க்கதரிசனத்தின் மூலம், பரிசுத்த ஆவியானவர் சபையிலுள்ள ஒரு சகோதரிக்கு உதவிக்காரர் அல்லது உதவிக்காரி (deaconess) பதவியை வழங்க முடியும். அபிஷேகத்தின் கீழ் விழுந்த ஒரு திருமணமான பெண், அவளுடைய மேலாடையையோ அல்லது அவிழ்க்கப்பட்ட ஆடையையோ கட்டச் செல்வது அது ஒரு சகோதரரான உதவிக்காரர் (deacon) அல்ல.
37 நாம் பரிசுத்த ஆவியானவரை விரும்பினால், அவர் கிரியைச் செய்வதற்கான முழு உரிமையும் சுதந்திரமும் கொடுக்கப்பட்ட இடத்தில் பரிசுத்த ஆவியானவர் கிரியைச் செய்கிறார் என்பதை அறிந்துக்கொள்வோம். ஒரு எழுப்புதலில், ஒரே ஒரு தலைவர் மட்டுமே இருக்கிறார், அந்த தலைவர் பரிசுத்த ஆவியானவர்.
38 மேலும், வரவிருக்கும் எழுப்புதலில், ஆசாரியத்துவத்துடன் பழைய முறைமையில் செய்தது போல், மக்களை ஊழியங்களுக்கு அனுப்புவது தீர்க்கதரிசி அல்ல. இதனாலேயே கர்த்தராகிய இயேசு எழுப்புதலுக்கு முன் யாரும் தம்மிடம் திரும்பாதபடி காட்சியை விட்டு வெளியேறினார். பரிசுத்த ஆவியானவரே எல்லாவற்றையும் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு வழிநடத்த வேண்டும். மேலும் கனவுகள், தரிசனங்கள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் நாம் கேட்க வேண்டிய தேவனின் குரல்கள்.
39 தீர்க்கதரிசி உங்களுக்கு ஒரு ஊழியப்பணி வழங்குவதையோ அல்லது உங்களிடம் பேசுவதையோ நீங்கள் கனவிலோ அல்லது தரிசனத்திலோ கண்டாலும், இது தீர்க்கதரிசி என்ற நபரை குறிக்க வேண்டிய அவசியமில்லை. தீர்க்கதரிசியின் தோற்றத்தில் உங்களிடம் பேசியது பரிசுத்த ஆவியானவராக இருக்கலாம். நீங்கள் தீர்க்கதரிசி என்ற நபரை குறிப்பிடக்கூடாது, ஆனால் "பரிசுத்த ஆவியானவர் என்னை ஒரு ஊழியப்பணிக்கு அனுப்பினார்" என்று நீங்கள் கூறுவீர்கள்.
40 மேலும் ஒரு ஊழியத்தை சரிபார்ப்பது அல்லது அது அப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறுவது தீர்க்கதரிசிக்கு உரியதானது அல்ல. இது ஒரு சகோதரனைக் கனவில் பார்ப்பது போன்றது மற்றும் அவரது நிறம், அல்லது அவரது நடத்தை அல்லது அவர் செய்யும் வேலை ஆகியவற்றின் காரணமாக சகோதரர் ஒரு வகையாக இருக்கிறார். ஒரு கலப்பு-இனச் சகோதரர் என்பது அனைத்து சகோதரர்கள் அல்லது செய்தியின் ஆசாரியர்களின் வகையாக இருக்கலாம் மற்றும் ஒரு சிப்பாயாக இருக்கும் ஒரு சகோதரர் என்பது முழு சுவிசேஷகர்களாகவும் இருக்கலாம்.
41 நல்லது. சட்டை என்பது உரைக்கப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தையாகும். பௌபோ ஆடை என்பது உரைக்கப்பட்ட வார்த்தையின் முழுமையாகும். ஒரு விரிப்பு அல்லது ஒரு போர்வைத் துணியுடன் வெளியே இருப்பது மனித ஞானமாகும். நிர்வாணமாக இருப்பது என்பது வார்த்தைகள் இல்லாமல், வெளிப்பாடு இல்லாமல் நடப்பது. அரைக்கால் சட்டையில் இருப்பது என்பது வெளிப்பாடு இல்லாமல் நடப்பது. சிவப்பு அரைக்கால் சட்டையில் இருப்பது என்பது வெளிப்பாட்டிற்கு எதிராக செயல்படுவது. கால்சட்டை என்பது கனவுகள் மற்றும் தரிசனங்கள் மூலம் வெளிப்பாடு ஆகும். மேலும் உரைக்கப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தை வெளிப்பாட்டிற்கு மேலே இருப்பது போல் சட்டை கால்சட்டைக்கு மேலே அணியப்படுகிறது. ஆனால் நாம் பரிசுத்த ஆவியின் பரிமாணத்திற்குள் நுழையும்போது, உரைக்கப்படும் அல்லது எழுதப்பட்ட வார்த்தையின் சரீர பயன்பாடு ஒரு பாவமாக இருக்கலாம். பொதுவாக, ஒரு அஞ்ஞானிக்கு இரவு தீட்டு ஏற்படாது, ஏனெனில் பாவம் அவனது இயல்பு. கனவு இல்லாமல் இரவு தீட்டு ஏற்படுவது என்பது நீங்கள் பாவத்தைத் தவிர்க்க வேண்டியிருந்தது, அல்லது அந்த பாவத்துடன் தொடர்புடைய கனவுகளையும் இரவு தீட்டுகளையும் நீங்கள் ஏற்கனவே கண்டிருக்கிறீர்கள், மேலும் அந்த பாவத்திற்கும் இரவு தீட்டுக்கும் மற்றொரு கனவு தேவையற்றது.
42 உரைக்கப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தை ஒரு தீர்க்கதரிசி செய்தியாளரிடமிருந்து வரும் வார்த்தையாகும். வெளிப்பாட்டிலிருந்து தான் உரைக்கப்படும் வார்த்தை பிறக்கிறது, ஆனால் உரைக்கப்படும் வார்த்தை எந்த வெளிப்பாட்டிற்கும் மேலானது, இது போலவே ஆண் தன்னை உலகிற்கு கொண்டுவந்த பெண்ணை விட மேலானவன்.
43 ஆகவே, உங்களுக்கு எந்த வெளிப்பாடும் இல்லாமல், அபிஷேகத்தின் கீழ் உள்ள யாரோ ஒருவர் உங்களுக்கு முன்பாக விசித்திரமான ஒன்றைச் செய்தால், அமைதியாக இருங்கள். சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் தங்கள் குழுவில் பரிசுத்த ஆவியின் சோதனைக்கு தங்களை அனுமதித்தால், அந்த குழு சபிக்கப்பட்ட குழுவாக மாறும் மற்றும் நீக்கப்பட வேண்டும். மேலும் ஒரு சகோதரன் அல்லது சகோதரி பரிசுத்த ஆவியை இழிவுபடுத்தினால் அல்லது எதிர்த்து நின்றால், பரிசுத்த ஆவியானவர் நம்மீது சாபத்தைக் கொண்டுவர அவரை அனுமதிக்காதிருப்பாராக.
44 பரிசுத்த ஆவியின் பிரசன்னத்திற்கு கவனம் செலுத்துங்கள். அப்போஸ்தலிக்க எழுப்புதலில் மட்டும் அல்ல, அனனியா, சப்பீராளைப் போன்று பரிசுத்த ஆவியை எதிர்த்து நின்றவர்கள் பொது இடத்திலும் இறந்து விழுந்தனர். வரலாற்றின் படி, பரிசுத்த ஆவியை எதிர்த்து நின்றவர்கள் சில எழுப்புதல்களின் போது பொதுயிடங்களிலும் இறந்தனர்.
45 நல்லது. இப்போது, ஸ்திரீகளின் பங்கிற்குப் பிறகு, நான் பேச விரும்பும் ஒரு முக்கியமான விஷயம் சுவிசேஷத்தை நடத்துவது. பரிசுத்த ஆவியின் பரிமாணத்தில், நீங்கள் பெற்றுக்கொண்ட வெளிப்பாட்டின் படி நீங்கள் தனியாகவோ அல்லது ஜோடியாகவோ சுவிசேஷம் செய்யலாம்.
46 மேலும், கடந்த காலத்தில், சுவிசேஷ பிரச்சாரங்கள் அல்லது பிற பிரச்சாரங்களில், ஒரு தலைமைவகிப்பவர் அல்லது ஒரு தலைவர் அன்றைய பிரசங்கியாளருக்கு முன்பாக பார்வையாளர்களை தயார்படுத்துவார்; ஆனால் பரிசுத்த ஆவியின் பரிமாணத்தில், அது அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. அன்றைய பிரசங்கியாளர் அதைக் கேட்கும் வரையில், பார்வையாளர்களை அறிவுறுத்தவோ அல்லது தயார்படுத்தவோ அல்லது அன்றைய பிரசங்கியாளரை அறிவிக்கவோ அல்லது அறிமுகப்படுத்தவோ எந்த தலைமைவகிப்பவரும் அல்லது தலைவரும் இருக்கக்கூடாது.
47 மேலும் அத்தகைய கூட்டத்தில், பார்வையாளர்களில் ஒரு சகோதரரோ அல்லது சகோதரியோ அன்றைய பிரசங்கியாளருக்கு முன்னும் அல்லது பின்னும் செய்தியைப் பற்றி பேசக்கூடாது. அது அறிவிப்புகள் மற்றும் ஆராதனைப் பாடல்கள் மற்றும் ஜெபங்கள் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட நேரத்தில், அன்றைய பிரசங்கியாளர் முன் வந்து பேசுவார்.
48 இப்போது, உங்களிடம் ஆவிக்குரிய வரம் இருக்கும்போது, மற்ற ஆவிக்குரிய வரங்களைப் பெற ஜெபியுங்கள். அந்நிய பாஷைகளை வியாக்கியானிக்கும் வரம் இல்லாமல் அந்நிய பாஷையில் பேசும் மகத்தான வரம் அல்லது குணப்படுத்துதல் வரம் இல்லாமல் அறிவை உணர்த்தும் வார்த்தைகளின் மகத்தான வரம் என்பது அம்புகள் இல்லாத வில் போன்றது. மேலும் ஒவ்வொரு வரமும் காலப்போக்கில் அதிகமாகவும் மற்றும் அதிகமாக மாறுவதையும் உறுதிசெய்யவும்.
49 மேலும் உங்களிடம் உள்ள ஒரு ஆவிக்குரிய வரத்திற்காக, உங்களை ஒருபோதும் யாரோ ஒருவர் வழிநடத்த அனுமதிக்காதீர்கள் அல்லது யாரோ ஒருவருடைய வேண்டுகோளின்படி, வெளிப்பாடு இல்லாமல் செயல்படாதீர்கள். அவருக்காக ஜெபிக்கும்படி யாரோ ஒருவர் உங்களிடம் கேட்கலாம், ஆனால் நீங்கள் தனது எஜமானரின் பொக்கிஷத்தை வைத்திருக்கும் ஒரு அடிமையைப் போல இருக்க வேண்டும். உங்கள் எஜமானர்தான் உங்களிடம் சொல்ல வேண்டும்: "இதை இவரிடம் கொடுங்கள், அதை அவரிடம் கொடுங்கள்".
50 நல்லது. உபவாசம் இருப்பவர் அல்லது அர்ப்பணிப்பில் இருப்பவர் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு அல்லது பரிசுத்த ஆவியின் வரங்களை வெளிப்படுத்துவதற்கு மிகவும் விருப்பமுள்ளவர். ஆனால் உபவாசம் இல்லாதவர் தீர்க்கதரிசனம் உரைப்பது போல், உபவாசம் அல்லது அர்ப்பணிப்பில் இல்லாதவர் கூட பரிசுத்த ஆவியையும் ஆவிக்குரிய வரங்களையும் பெற முடியும். பாவத்தை அறிக்கை செய்பவர் கூட தீர்க்கதரிசனம் உரைக்கலாம் அல்லது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெறலாம். இது அனைத்தும் அவரது மனநிலையைப் பொறுத்தது.
51 அர்ப்பணிப்பு என்பது உபவாசத்திற்கும் மேலானது மற்றும் ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் கூட நீடிக்கும். உடலுறவைத் தவிற, எப்போதாவது அர்ப்பணிப்புக்கு தடைசெய்யப்பட்ட ஒன்றைச் சாப்பிடுவது அல்லது செய்வது அர்ப்பணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்காது. ஆனால் நீங்கள் ஒரு நாளில் இரண்டு முறை முழு உணவு சாப்பிடக்கூடாது.
52 தியானமும் கூட உபவாசம் மற்றும் அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாகும். மேலும் தியானத்திற்கு மௌனம் தேவை. எனவே, நீங்கள் பாடல்கள் மற்றும் பிரசங்கங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து சத்தத்தில் இருக்க முடியாது.
53 மேலும், நீங்கள் அர்ப்பணிப்பில் இருக்கும் போது உங்களால் செய்ய முடியாததை, உதாரணமாக திரைப்படம் பார்ப்பது போன்றவை, நீங்கள் அர்ப்பணிப்பில் இல்லாத போதும் செய்யாமல் இருப்பது நல்லது. அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு செல்லாத காரணத்தால், சனிக்கிழமை இரவு பயணத்தில் தனது மனைவியை அணுகும் கலப்பினக் கூட்டத்தில் ஒருவரைப் போல பொல்லாதவர்களாக இருக்காதீர்கள்.
54 நீங்கள் அர்ப்பணிப்பில் இல்லாவிட்டாலும் அர்ப்பணிப்பின் ஆவியில் இருக்க வேண்டும். 2 சாமுவேல் 11-இல், உரியா வெளியே படுத்திருந்தார். தாவீது இராஜா அவனைத் தன் வீட்டிற்குச் செல்லும்படி வற்புறுத்தினார். ஆனால் உரியா தாவீது இராஜாவிடம், "யெகோவாவின் உடன்படிக்கை பெட்டியும் என் போர்வீரர்களும் கூடாரங்களின் கீழ் வயல்களில் முகாமிட்டிருக்கும்போது நான் என் வீட்டிற்குச் சென்று என் மனைவியுடன் தூங்க முடியாது" என்று பதிலளித்தான். நாம் இருக்க வேண்டியது இந்த ஆவியில் தான். நம்முடைய மரணத்திற்குப் பிறகு தேவனுடன் நித்திய ஜீவனைப் பெற பூமியில் நம்முடைய வாழ்க்கையை தியாகம் செய்வோம்.
55 அர்ப்பணிப்பில் இருக்கும்போது, சில சமயங்களில், நீங்கள் சிறிது நேரம் தண்ணீர் அல்லது பழங்களை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். அது இன்னுமாக அர்ப்பணிப்புதான். இது ஒரு உபவாசம் அல்ல. எவராகிலும் ஒருவர் அர்ப்பணிப்பிற்க்கு திரும்புவது என்பது 40 நாட்கள் உபவாசத்திற்குப் பிறகு செய்யப்பட வேண்டும். பல நாட்கள் உபவாசத்தின் போது, உபவாசத்தின் வடிவத்தை மாற்ற முடியாது. ஒரு நாள் கூட தானாக முன்வந்து இடைநிறுத்தப்பட்டு மறுநாள் மீண்டும் தொடங்கும் உபவாசம் தடைசெய்யப்பட்டது என்று கருதப்படுகிறது. இருப்பினும், உடல்நலக் காரணங்களுக்காக ஒரு நாள் இடைநிறுத்தமானது, மூன்று முறை வரையானாலும் கூட, 40 நாள் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில்லை.
56 அர்ப்பணிப்பில் இருக்கும் போது, "ஓ, நான் இந்த சகோதரர்களுடன் பேசவோ, சாப்பிடவோ விரும்பவில்லை, ஏனென்றால் அவர்கள் அஞ்ஞானிகள் என்று நான் ஒரு கனவில் கண்டேன்" என்று நீங்கள் சொல்லக்கூடாது. இல்லை, அவர்களின் அஞ்ஞான நடத்தைகளைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள் அல்லது அவர்களுடன் அரட்டை அடிக்க வேண்டாம் என்று வெளிப்பாடு உங்களுக்குச் சொல்லி இருக்கலாம்.
57 எழுப்புதலில், ஒரு வெளிப்பாடு, ஒரு அற்புதம் அல்லது ஒரு சூழ்நிலை உங்களுக்கு முன் நிகழும்போது, நீங்கள் அஞ்ஞானிகளைப் போல உணர்ச்சியால் இழுத்துச் செல்லப்படக்கூடாது. மேலும் அதிசயங்கள் அல்லது மகத்தான அற்புதங்கள் காரணமாக, தேவனின் பிரசன்னம் ஒரு கண்காட்சி இடத்தின் தோற்றத்தையோ அல்லது சூழ்நிலையையோ எடுத்துக்கொள்ளக்கூடாது.
58 மேலும், எழுப்புதலில், அஞ்ஞானிகள் உங்கள் ஆராதனை இடங்களை ஆக்கிரமிக்கலாம். அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களுக்கு இருக்கைகளை கொடுத்து அவர்களின் அஞ்ஞான நடத்தைகளைப் பொறுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் எதை அணிந்திருந்தாலும் அவர்களிடம் பொறுமையாக இருங்கள்.
59 எழுப்புதலில், யாரும் வெறித்தனத்திலும் மற்றும் மிகைப்படுத்துதலிலும் விழக்கூடாது. "ஓ தேவனே, நான் சமைக்க வேண்டிய குழம்பை எனக்கு வெளிப்படுத்தும்! நான் தைக்க வேண்டிய ஆடையின் வகையை எனக்கு வெளிப்படுத்தும்! இதையும் அதையும் எனக்கு வெளிப்படுத்தும்! ஓ தேவனே, என் வங்கிக் கணக்கில் பணத்தை அனுப்பும்! என் தொலைபேசியை சரிச்செய்யவும்!" அவருடைய இறையாண்மையில், தேவன் அவர் விரும்பியதைச் செய்ய முடியும், ஆனால் நீங்கள் அப்படி ஜெபிக்காதீர்கள்.
60 மேலும், காக்குவ் 160:118-இன் படி, பரிசுத்த ஆவியானவர் ஒரு சகோதரர் அல்லது சகோதரியை மத அல்லது அஞ்ஞான கூட்டத்திற்கு அனுப்பினால், பரிசுத்த ஆவியானவர் ஏற்கனவே எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார் செய்துள்ளார் என்று அர்த்தம். மேலும் சகோதரர் அல்லது சகோதரி அங்கு என்ன செய்வார்கள் என்பது பற்றிய அறிக்கை செய்தியின் எதிர்கால அத்தியாயங்களுக்காக தீர்க்கதரிசிக்கு அனுப்பப்பட வேண்டும். செய்தியின் எதிர்கால அத்தியாயங்கள் எழுப்புதலின் சாட்சியங்களாக இருக்கும்.
61 தேவன் யோனா தீர்க்கதரிசியை நினிவேக்கு அனுப்பியபோது, யோனாவின் பேச்சைக் கேட்க நினிவே மக்களின் இருதயங்களை தேவன் ஏற்கனவே தயார் செய்திருந்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யோவான் 4-ல் சமாரிய ஸ்திரீயிடம் சென்றபோது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு செவிசாய்க்க சமாரிய ஸ்திரீயின் இருதயத்தை தேவன் ஏற்கனவே தயார் செய்திருந்தார்.
62 உங்களை ஒரு சபைக்கு அனுப்பியது பரிசுத்த ஆவியானவர் என்று நீங்கள் கூறினால், பரிசுத்த ஆவியானவர் ஏற்கனவே களத்தை ஆயத்தம் செய்ய உங்களுக்கு முன் சென்றுள்ளார் என்று அர்த்தம். மேலும் அந்த சபையில் பிரசங்க பீடத்தில் யாரோ ஒருவர் பேசிக்கொண்டிருந்தாலும், நீங்கள் பேசுவதற்கு எழுந்து நின்றதும், அவர்கள் பயத்தால் பிடிக்கப்பட்டு, அவர்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். மேலும் உங்களை எதிர்க்க நினைப்பவர்கள் எல்லோர் முன்னிலையிலும் தாக்கப்படுவார்கள்.
63 ஆனால் ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ பாவனை செய்திருந்தால், அவர் பரிசுத்த ஆவியின் பெயரால் பொய்யாகச் செயல்பட்ட இடத்தில் மன்னிப்பு கேட்பதற்காக ஒரு சாட்சியுடன் செல்வார். அவர் அதைத் திரும்பத் திரும்பச் செய்தால், அவரைப் புறக்கணிக்க முடியும், அதாவது, அவரது நிந்தனையின் சாபம் செய்தியின் மீது தங்காதபடி செய்தியிலிருந்து வெளியேற்றப்படலாம். ஒவ்வொரு பாவனைக்குப் பின்னாலும் ஒரு பிசாசு இருக்கிறது.
64 மேலும், தேவ பயம் குறைந்து, பாவனைகள் ஏராளமாக இருக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம்; எனவே, சபைகளில் உள்ள பல தீர்க்கதரிசனங்கள், யாருக்கும் சந்தேகம் வராத வகையில், அந்நியபாஷைகளில் பேசப்பட்டு அதற்க்கான வியாக்கியானம் கொடுக்கப்படும். மேலும், ஒரு கூட்டத்தில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறும் ஐம்பது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளில், கிட்டத்தட்ட அனைவரும் அந்நிய பாஷைகளில் பேசுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
65 எனவே மிகைப்படுத்தல் மற்றும் அவமானகரமான எதிலும் விழ வேண்டாம். தேவன் புகழைத் தேடவில்லை. மேலும் நமக்கு விசித்திரமாகத் தோன்றும் எல்லாவற்றிலும் ஒரு அற்புதத்தைக் காண வேண்டாம். வேதாகமம் நமக்கு நேர்மையைக் கற்பிக்கிறது.
66 நாம் செய்யும் அனைத்திற்கும் தேவனிடம் கணக்குக் கொடுப்போம். ஒரு நேர்மையான தேவனுடைய குமாரனால் செய்ய முடியாத காரியங்கள் உள்ளன மற்றும் தெளிவான மனசாட்சி உள்ளது. நான் ஒரு முடக்குவாதமுள்ளவனை நடக்கச் செய்ததாகக் கூற முடியாது, அந்த நபர் இன்னும் கால்களை வளைத்து மற்றும் தளர்ச்சியுடன் நடக்கிறார். நான் ஒரு பார்வையற்றவரின் கண்களைத் திறந்தால், அவர் கையால் பிடிக்கப்படாமல் வீட்டிற்குச் செல்ல வேண்டும். இதுவே என் விசுவாசம். இதைத்தான் நான் நம்புகிறேன்.
67 அப்போஸ்தலர் 3-ல், சப்பாணியாய் இருந்தவன் நடந்தபோது, அந்த நேரத்தில் அவனுடைய கால்கள் பலமடைந்து, அவன் துள்ளிக் குதித்து தேவனை துதித்துக் கொண்டிருந்தான் என்று வேதாகமம் சொல்கிறது. அப்போஸ்தலர் 14:8 முதல் 11 வரையில் பவுல் சப்பாணியாய் இருந்தவனிடம், "நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில்" என்று சொன்னார். உடனே சப்பாணியாய் இருந்தவன் நடந்தான். இதைத்தான் உண்மையான தேவன் செய்கிறார். பவுல் செய்ததைக் கண்ட திரளான மக்கள் தங்கள் சத்தங்களை உயர்த்தி, “தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள்” என்றனர் என்று வேதாகமம் சொல்கிறது.
68 நம் நடுவில் வல்லமையுடன் இப்படிச் செயல்பட தேவன் காத்திருப்பது நமது கீழ்ப்படிதலுக்காகத்தான். 2023-இல், தேவன் நம்முடைய நடத்தையில் மகிழ்ச்சியடையவில்லை. 2023-ல் நம்முடைய மிக நீண்ட உபவாசங்கள் அனைத்தும் 21, 28 அல்லது 40 நாட்களுக்கு பதிலாக மூன்று நாட்கள் ஆகும். மேலும், வெளிப்பாட்டின் மூலம் நவம்பர் 22, 2023 அன்று , முழுச் செய்திக்கும் நவம்பர் 27, 2023 முதல் 21 நாள் உபவாசத்தை நான் ஆணையிட்டேன். மேலும் 21 நாட்களின் முடிவில், விருப்பமுள்ள எவரும் 40 நாட்கள் வரை உபவாசத்தைத் தொடரலாம் என்று மீண்டும் வெளிப்பாட்டின் மூலம் கூறினேன்.
69 மேலும் 21 நாட்களுக்குப் பிறகு, பல்வேறு நாடுகளில் உள்ள பல சகோதர சகோதரிகள் கர்த்தருடைய வார்த்தையின்படி 40 நாட்களை அடைய தங்கள் உபவாசத்தை தொடர்ந்தனர் மற்றும் பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலுக்காக காத்திருக்கிறார்கள்.
70 ஆனால், பலர் 21 நாட்களுக்குப் பிறகு முன்னேற மறுத்துவிட்டனர். இத்தனை வருடங்களாக அவர்களின் ஆசாரியத்துவ பணியின் பலன் அது. தேவனை பிரியப்படுத்துவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் காரணமாக சிலரும், அவர்களது பாஸ்டர்களும் மற்றும் பிரசங்கிகளும் உபவாசத்தை நிறுத்தினர்.
71 எனவே இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை கடந்து 2024-இல் உபவாசம் இல்லாத அனைவரும், அர்ப்பணிப்பு இல்லாத அனைவரும், விண்ணப்பங்களுடன் தேவனிடம் திரும்பி வந்து, அர்ப்பணிப்பு மற்றும் கீழ்ப்படிதலுடன் இருக்கட்டும். அதனால் பல சபைகளில் நடந்ததைப் போலவே செம்மறியாட்டுக்கடா மற்றும் வெள்ளாடாடுக்கடாவின் ஆவியின் ஊற்றப்படுதலை தேவன் நமக்கு அனுப்பமாட்டார்.
72 இருப்பினும், சில நாடுகளுக்காக நான் மகிழ்ச்சியாக இருந்தேன்; கொண்டாட்டங்கள் இருந்தபோதிலும் செங்கடலைக் கடக்கும் இஸ்ரவேலைப் போல ஒரு நாட்டின் அனைத்து சகோதர சகோதரிகளும் ஒன்றுச்சேர்ந்து 40 நாட்கள் உபவாசம் இருந்தார்கள். ஜனவரி 1, 2024 அன்று, ஐவரி கோஸ்டில், எங்களில் ஆயிரக்கணக்கானோரில், உபவாசம் இருக்காத ஒருவரைக் கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
73 வயதானவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் 40 நாட்கள் எட்டும் வரை உபவாசம் இருந்தனர். மேலும் லக்சம்பேர்க்கைச் சேர்ந்த சகோதரி கார்லா 5 முதல் 6 மாதங்கள் கர்ப்பமாக இருந்தபோதிலும் 40 நாட்களை எட்டினார். 90 வயதான அப்போஸ்தலர் மார்செல் ரேஸ் 40 நாட்களை எட்டினார். ஞானஸ்நானம் பெறாத ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் 40 நாட்கள் உபவாசத்தை தானாக முன்வந்து முடித்தனர்.
74 உபவாசத்தின் காரணமாக, சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரும் உடல் எடையை குறைத்துவிட்டனர். எல்லா இளம் பெண்களின் முகங்களும் மிகவும் மெல்லியதாகிவிட்டன. உங்களுக்காக என் ஆசீர்வாதத்தைத் தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. தேவனை பிரியப்படுத்தும் இந்த விருப்பம் உங்களை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. இந்தச் செயலை தேவன் நினைவுகூரட்டும். மேலும் தேவதூதன், "இனிமேல், ஞானஸ்நானம் கொடுக்க அவருக்கு உரிமை இல்லாவிட்டாலும் கூட, அர்ப்பணிப்பில் இருக்கும் ஒரு பிரசங்கிதான் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்" என்று கூறினார். அவருடைய முதல் ஞானஸ்நானத்தில், ஏற்கனவே ஞானஸ்நானம் கொடுக்கும் ஒரு பிரசங்கி, அவரை தகுதியானவர் என்று கண்டால் தண்ணீர் வரையிலான கூட்டங்களின் போது அவருக்கு பக்கத்தில் இருக்க வேண்டும்.
75 நம்முடைய உயிரையும், நமக்கு விலையுயர்ந்ததையும் தேவனுக்குக் கொடுப்போம். தேவனுக்குக் கீழ்ப்படிவதும், தேவனைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற வைராக்கியமும் நாம் கண்டிக்கும் மதவாதிகளின் செயல்களை விட அதிகமாக இருக்கட்டும். 40 நாட்கள் உபவாசத்தை, கத்தோலிக்கர்கள், முஸ்லிம்கள் மற்றும் சுவிசேஷகர்கள் கூட ஒவ்வொரு ஆண்டும் அவற்றைச் செய்கிறார்கள். அதனால்தான், 40 நாட்கள் உபவாசத்தை நாம் நம் சொந்த விருப்பப்படி அடைந்து, பரிசுத்த ஆவிக்காக காத்திருக்க வேண்டும்.
76 ஆனால் பல நாடுகள் தங்கள் ஆசாரியத்துவம் பல ஆண்டுகளாக அவர்களுக்கு கற்பித்தவற்றின் படி கலகத்தனமாக இருந்தன. தேவனுக்கு முன், அவர்களின் ஆசாரியத்துவத்தின் பிரசங்கம்: "நீங்கள் இறக்கும் வரை கிளர்ச்சியாளர்களாகவும் பருமனான குழந்தைகளாகவும் இருங்கள். தேவன் கை பிடித்தால் நடக்கவும்! ஆனால் அவர் உங்கள் கையை விட்டுவிட்டால், அவர் உங்களை விட்டுச் சென்ற இடத்தில் இருங்கள். "மாதத்தில் குறைந்தது 3 நாட்களாவது உபவாசம் இருக்க வேண்டும் என்று அவர் உங்களுக்குச் சொன்னால், 3 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எந்த முயற்சியும் செய்யாதே! கிறிஸ்துமஸ் பரிசுகளாக தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியையும் பரலோகத்தையும் கொடுப்பார்.”
77 தேவனுக்கு முன்பாக, உங்கள் நாடுகளில் நீங்கள் பல ஆண்டுகளாக இதைத்தான் பிரசங்கித்து வருகிறீர்கள். இதுவே உங்கள் அக்கிரமத்தின் விளைவு. நாம் கண்டிக்கும் சுவிசேஷகர்கள் கூட இவ்வளவு பொல்லாதவர்களாக இருந்திருக்க மாட்டார்கள். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் மூலம் நம்மை தேவனின் பிரசன்னத்திற்கு கொண்டு வரும் நடத்தை இதுதானா? இந்த நடத்தைக்காக நான் தேவனிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
78 பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்துடன் கனவுகளிலிருந்து ஆவிக்குரிய வரங்களுக்குக் கடக்க தேவன் நம்மை அவருடைய பிரசன்னத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, இன்றைய நிலையில் நாம் அனைவரும் தேவனிடம் திரும்பி வருவோம். தேவனிடமிருந்து வெகு தொலைவில் வெளியில் இருப்பவர்களுக்கானது கனவுகள். ஆவிக்குரிய வரங்கள் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்துடன், அது தேவனின் பிரசன்னம் மற்றும் தேவன் நமக்கு நேரடியாக தீர்க்கதரிசனங்கள் மூலம், அடையாளங்கள் இல்லாமல் பேசுகிறார்.
79 மேலும் பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலுடன், நமது கனவுகளின் நோக்கம் மாறும். பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், நாம் அனைவரும் கனவுகளை நிலையான முறைகளின் வியாக்கியானங்களால் பாதிக்கப்படுகிறோம், இது தேவன் சொல்லாததை அடிக்கடி சொல்ல வைக்கிறது. கனவுகளின் ஆசிரியர் அதனுடைய சொந்த வியாக்கியானி ஆவார், அதே போல் அந்நியபாஷைகளில் பேசும் பரிசுத்த ஆவியானவரே அவைகளை வியாக்கியானிக்கவும் செய்கிறார். மேலும் பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், நமது கனவுகள் எப்பொழுதும் அஞ்ஞானிகளின் கனவுகள் போல 24-ன்கு மணிநேரம் இருக்கும், அதற்கு முந்தைய நாள் என்ன நடந்தது அல்லது அதற்கு அடுத்த நாள் என்ன நடக்கும் என்ற நோக்கம் இருக்கும்.
80 தேவனுக்குப் பயந்து, கேட்கப்படாமல் தேவனுக்குப் பிரியமானதைச் செய்ய முற்படுங்கள். ரோமர் 12-ல் பவுல் கூறுவது போல், தேவனுக்குப் பிரியமான உயிருள்ள பலிகளாக இருங்கள். உங்களுக்குள் எந்த சூழ்ச்சியும் இருக்கக்கூடாது . உதாரணமாக, "நான் சம்பளத்திற்காக தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டியதில்லை என்பதால், நான் இனி ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் பணியாளர்களிடம் இருந்து பணம் எடுக்க மாட்டேன், ஆனால் நான் ஒவ்வொரு வாரமும் அல்லது மாதத்தின் நடுப்பகுதியிலும் பணம் எடுக்கப் போகிறேன்" என்று சொல்லாதீர்கள் . பணம் மற்றும் வீட்டுச் செலவுகள் அனைத்தையும் உங்கள் மனைவியிடமோ அல்லது வேறு ஒருவரிடமோ விட்டுவிடுங்கள்.
81 நல்லது . சமீபத்தில், பல நாடுகளில், சில ஆவிக்குரிய சகோதரர்கள், குறிப்பாக பிரசங்கிகள், ஆராதனைக்கு செல்வதை நிறுத்த வேண்டும் என்று சொல்லுகின்ற கனவு கண்டார்கள். மேலும் ஆராதனைக்குச் செல்லாமல், மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்த சிலர் பைத்தியம் பிடித்தனர். அவர்களின் கனவுகள் தேவனிடமிருந்து வந்தவை. ஆனால் பாவம் என்னவென்றால், அவர்கள் தவறான வழியிலும் ஆர்வத்துடனும் பிரார்த்தனை ஜெபம் , இதனால் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுக்கடாவின் ஆவி அவர்களின் வாழ்க்கையில் வந்தது.
82 முழுச் செய்திக்கும் "எங்களுக்கு " என்று பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் சுயநல மற்றும் சுவிசேஷ ஜெபங்களைச் செய்தார்கள்: "தேவனே , எனக்கு பரிசுத்த ஆவியைக் கொடுங்கள்! எனக்கு பரிசுத்த ஆவியானவர் வேண்டும்!" மேலறையில் சீடர்கள் ஒருமனதாக ஜெபம் செய்தது அப்படியல்ல.
83 இது: "எனது அனுதின ஆகாரத்தை எனக்குக் கொடுங்கள்" என்று அல்ல: ஆனால் அது இப்படியாக இருக்கும், "எங்கள் அனுதின ஆகாரத்தை எங்களுக்குக் கொடுங்கள்"என்று . பரிசுத்த ஆவியின் ஊற்றுதல் ஏற்கனவே நடந்திருந்தால், மக்கள் ஏற்கனவே அவரைப் பெற்றிருந்தால், இந்த சகோதரர்களின் ஜெபிக்கும் முறை சரியாக இருக்கும். அந்த சுவிசேஷ நடத்தைகளை விட்டுவிடுங்கள்! பரிசுத்த ஆவியானவர், நாம் இருக்கும் எல்லா இடங்களிலும், நம் ஒவ்வொருவர் மீதும் சென்று, தன்னைப் பிரிப்பதற்கு முன், ஒரே இடத்தில் திரளான மக்களுக்காக இறங்கி வரும் ஒரு நிறைவாகும். உண்மையான பரிசுத்த ஆவியானவர் எப்போதும் ஒரே இடத்தில் இறங்கி பூமி முழுவதும் பரவுகிறார்.
84 ஆகையால், பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு எவரும் ஊக்கமாக ஜெபிக்க வேண்டாம். இப்போது பரிசுத்த ஆவியை உடையவர் அந்த பரிசுத்த ஆவியை நிராகரித்து, அவருடைய விடுதலைக்காக ஜெபிக்கட்டும். இதுவரை நமது சபைகளில் நடந்த அனைத்து வெளிப்பாடுகளுக்கும் பின்னால் செம்மறி ஆட்டுக்கடாவின் ஆவி இருக்கிறது. அவர் இப்போது நமக்குக் கொடுக்கும் வெளிப்பாடுகள் மூலம் நாம் தேவனிடம் மிகுந்த கவனத்துடன் இருப்போம்.
85 எழுப்புதல்கள் எப்போதும் ஒரே இடத்தில் தொடங்குவதால், பல சந்தர்ப்பங்களில், கடாட்ஜியில் ஜெபக் கூட்டங்களைத் தொடங்க வேண்டும் என்று நான் என் இருதயத்தில் நினைத்தேன், ஆனால் நான் எதையும் தொடங்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு வெளிப்பாடு வந்து அதை செய்யாதே என்று சொல்லும்.
86 எழுப்புதல் தொடங்கும் போது, பரிசுத்த ஆவியானவர் இங்கு இருக்கும் சகோதரர்களை பரிசுத்த ஆவியைப் பரப்புவதற்கு மற்ற நாடுகளுக்கு அனுப்புவார். அதே நேரத்தில், வெளிப்பாடுகள் மூலம், மற்ற நாடுகளில் இருக்கும் சகோதரர்கள் இங்கு வருவார்கள். கவலை என்னவென்றால், சாத்தானின் தலைமையிலான சில சீடர்கள், கடந்த காலத்தைப் போலவே தீர்க்கதரிசியிடம் திரும்ப விரும்புகிறார்கள்.
87 நாம் காத்திருக்கும் எழுப்புதலானது நமக்கு மிகவும் முக்கியமானது. கிறிஸ்தவம் ஏன் உலகம் முழுவதும் பரவியது? ஏனென்றால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முதலில் தேவனிடமிருந்து ஒரு செய்தி இருந்தது, பின்னர் ஒரு எழுப்புதலானது மேலறையில் இருந்து பூமியின் கடைசி வரை சென்றது. பரிசுத்த ஆவியானவர் மேலறைக்கு இறங்காமல் இருந்திருந்தால், கிறிஸ்தவம் இன்று அறியப்படாமல் இருந்திருக்கும்.
88 மெதடிஸ்ட் எழுப்புதல் தான் ஜான் வெஸ்லியின் செய்தியை உலகம் முழுவதும் அறியச் செய்தது. வில்லியம் சீமோர் ஒரு செய்தியைக் கொண்டு வந்தார். ஆனால் அசுசா தெரு எழுப்புதல் இல்லாமல் இருந்திருந்தால், இன்று பெந்தேகோஸ்தலிசம் அறியப்படாமல் இருந்திருக்கும். நோவாவிலிருந்து, மோசே மூலம் நமக்கு வரை, தேவன் தம்முடைய செய்தியாளர்களுக்குக் கொடுக்கும் செய்தியின் விரிவாக்கத்திற்கு எப்போதும் ஒரு எழுப்புதலைத் தருகிறார்.
89 இன்று, நடுராத்திரி சத்தத்தின் முழுச் செய்தியும் கொடுக்கப்பட்டதா? ஆமாம். நடுராத்திரி சத்தம் பூமியின் மக்கள் அனைவரையும் சென்றடையச் செய்ததா? இல்லை. நடுராத்திரி சத்தம் வார்த்தையில் நிறைய பிரகாசித்தது ஆனால் இன்னும் அதிகாரத்தில் இல்லை. மேலும் இதை, எங்களிடம் வந்து சொல்ல எதிரி தேவையில்லை.
90 செய்தியின் உண்மையாலும், நமது பலவீனமான மனித முயற்சிகளாலும், அனேக மக்கள் வெவ்வேறு நாடுகளில் நம்பிக்கை வைத்துள்ளனர் ஆனால் அது ஒரு உண்மையான எழுப்புதலை உருவாக்கி, நடுராத்திரி சத்தத்தின் செய்தியை உலகம் முழுவதும் அறியச் செய்வது அது தேவனின் வல்லமை ஆகும். இந்த விசுவாசப் போராட்டத்திற்கே கர்த்தர் எலியாவின் அங்கியை நமக்கு அணிவிக்க வேண்டும். ஓ ஆண்டவரே, அந்த அழகான நாட்களை மீண்டும் கொண்டு வாரும், எல்லா இடங்களிலும் பரிசுத்த ஆவியானவர் விழுந்த அந்த மகிழ்ச்சியான நாட்கள், மற்றும் தேவனின் அன்பு இருதயங்களில் இருந்தது. அந்த மகிழ்ச்சியான நாட்களை மீண்டும் கொண்டு வாரும்!
91 இப்போது நான் சொல்வதற்கு செவிசாயுங்கள். முக்கியமான ஒன்றைச் சொல்லப் போகிறேன். மெய் கிறிஸ்தவம் என்பது ஒரு மதம் அல்ல, அது ஒரு ஜீவியமாகும் என்று பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கற்பித்துள்ளார். பரிசுத்த ஆவியின் ஊடாக, பாலைவனத்தில் உள்ள இஸ்ரவேலைப் போல, சில சமயங்களில், போக்கை மாற்றிக் கொள்ள முடியும் என்பதை இது குறிக்கிறது. இதனால்,வெளிப்பாட்டின் படி, ஜனவரி 21, 2024, இந்த ஞாயிற்றுக்கிழமை முதல், செய்தியில் எல்லா இடங்களிலும் ஆராதனைகள் இருக்காது. எனவே, ஜெபத் தலைவர்கள், பாடல் தலைவர்கள் மற்றும் காரியத்தரிசிகள் யாரும் இல்லை.
92 இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 21, 2024 முதல், ஆராதனைகள் நிறுத்தப்பட வேண்டும். உங்கள் வீட்டில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும் வரை, உங்கள் ஆராதனை இடங்களிலோ அல்லது வீட்டிலோ, இனி எந்த ஆராதனைகளும் இருக்கக்கூடாது. தேவனின் கிருபையால், இது ஒரு விலக்கின் காலமோ அல்லது தெய்வீக தண்டனையோ அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்திறங்குவதற்காக அதிக ஆவிக்குரிய மனநிலையை தேவன் நம்மிடம் கேட்கிறார். இது தீர்க்கதரிசியின் முட்டாள்தனம் அல்ல, ஆனால் ஏப்ரல் 24, 1993-இன் தூதன் மற்றும் ஆட்டுக்குட்டியின் அறிவுறுத்தலாகும்.
93 பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுதலானது ஒன்று, இரண்டு, மூன்று மாதங்களில் அல்லது அதற்கும் மேலாகுமா? ஏப்ரல் 24, 2024-க்கு முன்பா அல்லது அதற்குப் பின்பா? அது ஈஸ்டர் 2024-க்கு முன்போ அல்லது பின்போ? பரிசுத்த ஆவியானவருக்குத்தான் தெரியும். பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும் வரை ஆராதனைகள் தடங்கலாவதற்கு, அதற்கு பல உதாரணங்கள் மற்றும் விளக்கங்கள் உள்ளன. "பரிசம் இடப்படும் வரை அனைத்து பாலியல் உறவுகளையும் நிறுத்துங்கள்" என்று பாவத்தில் வாழும் ஒரு தம்பதியினரிடம் சொல்வது போல, தேவன் ஆசாரியத்துவத்திற்கும் சபைக்கும் சொல்வது போல் இது உள்ளது.
94 இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் ஆராதனை தலங்களை மூடிவிட்டு, மேலறையில் பரிசுத்த ஆவியானவருக்காக காத்திருங்கள். பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட பிறகு மீண்டும் ஆராதனைக்கு வருவோம். நான் இன்னும் நீலநிற குறிப்பேட்டை பயன்படுத்தாததால் நாம் திரும்பி வருவோம் என்று நினைக்கிறேன். தற்போதைய நிலவரப்படி, செய்தியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அல்லது 12 மாதங்களுக்கும் மேலாக வெளியில் இருப்பவர்கள் செய்திக்கு திரும்புவது உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசனத்துடன் சாத்தியமாகும்.
95 நாம் மீண்டும் ஆராதனைக்கு வர விரும்பி, மீண்டும் பிரசங்கித்து, பாடல்களைப் பதிவுசெய்து கேட்க வேண்டுமானால், உபவாசத்திலும் அர்ப்பணிப்பிலும் முழு இருதயத்தோடும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கு நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். ஒரே மனிதனைப் போலவே நம் முழு இருதயத்தோடும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கான நமது தாகத்தைப் பொறுத்து இது தாமதமின்றி நிகழலாம். செய்தி மற்றும் உங்கள் வெளிப்பாடுகளைத் தவிர, நீங்கள் அனைவரும் தீர்க்கதரிசி மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இருந்தால், அது உங்கள் மொழி குழுக்களில் உங்களுக்கு வழங்கப்படும்.
96 பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவது என்பது நமக்கும் கூட கொடுக்கப்பட்ட ஒரு வாக்குத்தத்தமாகும். நமக்கு முன், திருச்சபையானது பல எழுப்புதல்களையும் பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலின் அனுபவத்தையும் கொண்டிருந்தது. இந்த வாக்குறுதியானது நமக்காகவும் இருப்பதால்தான் நாம் அதைக் கேட்கிறோம். பரிசுத்த ஆவியின்றி தேவனை பிரியப்படுத்துவது சாத்தியமில்லை. அதனால்தான் தேவன் எனக்குக் கொடுத்த அனைவருக்காகவும் நான் பரிசுத்த ஆவியைக் கேட்கிறேன்.
97 பரிசுத்த ஆவியின் வருகையானது ஒரு கடமையாகும். பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், பிரசங்கிக்கவும், வெளிப்படையான பாவ அறிக்கை மற்றும் துதிப்பாடல்களை முறையாக வழிநடத்துவதற்கும் யாரும் தகுதியற்றவர்கள். அதைச் செய்ய உந்தப்படாமல் அவ்வாறு செய்ய முயற்சிப்பது, உங்கள் பேச்சைக் கேட்பவர்கள் அனைவருக்கும் நீங்கள் செய்யக்கூடிய தூய்மையற்ற செயல்களாகும்.
98 பரிசுத்த ஆவியின்றி, நமது மனுஷீக முயற்சிகளானது நமது சபைகளிலும் நம் ஜீவியத்திலுமுள்ள பாவத்தை ஜெயிக்க முடியாது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 14, 2024, ஒரு சிறிய சபையில், ஒரு சகோதரி அறிவை உணர்த்தும் வார்த்தைகளின் வரத்தை வெளிப்படுத்தினாள். அவள் சொல்கிறாள், இங்கே இருக்கும் நீ , இப்படிப்பட்டதை செய்தாய். அங்கே இருக்கும் நீங்கள், அப்படிப்பட்டதைச் செய்தீர்கள். அவர்களோ, " இது உண்மைதான்" என்கிறார்கள்.
99 கையும் களவுமாக பிடிபட்டால் மட்டுமே தன் பாவங்களை ஒப்புக்கொள்ளும் ஒரு சகோதரனிடம், "நீயும் கூட ஒரு குடிகாரன்!" சகோதரர் தயங்கி, "உண்மைதான்" என்று கூறுகிறார். மேலும் அவள் தொடர்ந்து, "மேலும், நீ பாவம் செய்ய விரும்பும் பெண் இன்னார்-மற்றும்-இப்படிப்பட்டவர் என்று அழைக்கப்படுகிறாள். அவளுக்கு எச்.ஐ.வி உள்ளது" என்று கூறுகிறாள். மேலும் அவள் அறிவை உணர்த்தும் வார்த்தைகளைத் தொடர்ந்து பேசி மற்றும் முடிக்கும் போது பிரசங்க பீடத்தில் இருந்த ஜெபத் தலைவர் மற்றும் பாலியல் பாவத்தை மறைத்துக்கொண்டிருந்த அவளது கணவர் உட்பட சபையில் உள்ள ஒவ்வொரு நபரையும் தொடுகிறார். இப்போது, நாம் ஆலயத்திலிருந்து பரிசுத்த ஆவியையும் ஆவிக்குரிய வரங்களையும் அகற்றிவிட்டால், நமக்கு என்ன பரிசுத்தம் இருக்கும்?
100 மேலும், மறுக்க முயற்சிக்கும் நபர்களுக்கான விவரங்கள் எப்போதும் வரும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஆனால் பரிசுத்த ஆவியின் கட்டத்தில், அனனியா மற்றும் சப்பீராவை போன்றவர்கள் வீழ்வார்கள். பரிசுத்த ஆவியின் கட்டத்தில், ஒவ்வொரு செயலுக்கும், தூதனும் ஆட்டுக்குட்டியும் அங்கிருப்பார்கள். கிருபையை வழங்கும்படி ஆட்டுக்குட்டியானவர் இருக்கும் போது தாக்குவதற்கு அங்கே தூதன் இருப்பார். இது இரண்டுக்கும் இடையில் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்பது உங்களை சார்ந்தது.
101 ஆனால் இப்போது அது செம்மறியாட்டுக்கடா, அதனால் யாரும் மரித்திருக்க முடியாது. இப்போது நாம் பள்ளத்தாக்கில் அல்லது மலையின் அடிவாரத்தில் இருக்கிறோம், நமது துதிப் பாடல்கள் அஞ்ஞானிகளின் கச்சேரிகள் மற்றும் நமது பிரசங்கங்கள் அரசியல் சொற்பொழிவுகள் அல்லது தூய்மையற்ற செயல்களாகும். நமது சபைகள் எப்போதும் இருளில்தான் இருக்கின்றன. அதனால்தான் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமானது நம்மை மீண்டும் ஆராதனைகளுக்கு கொண்டு வர வேண்டும்.
102 இந்த நேரத்தில், வெளிப்படையான பாவ அறிக்கை எதுவும் இருக்காது. இந்த செய்தியின் பல வருடங்களுக்கு பிற்பாடு, நாம் பாவ அறிக்கை எதுவும் இல்லாமல் பரிசுத்தமாக பல மாதங்களை செலவிட வேண்டும். நாம் அனைவரும் உபவாசம் மற்றும் அர்ப்பணிப்பில் இருக்கும்போது என்ன பாவம் செய்யக்கூடும்? நாம் தேவனை நேசித்தால், ஆராதனைகளுக்கான இந்த தடையானது நம் விசுவாசம் மற்றும் பரலோகத்தை நோக்கிய நமது நடைபயணத்தில் எதையும் மாற்றியமைக்காது.
103 உங்கள் தசமபாகங்களையும் காணிக்கைகளையும் நீங்கள் செலுத்த வேண்டுமா என்று எனக்குத் தெரியாது. உங்கள் வெளிப்பாடுகளின்படி செயல்படுங்கள்.
104 இந்த பிரசங்கம் நமக்குச் சொல்ல வருவது: "பள்ளத்தாக்குகளை விட்டு வெளியேறி, மலை உச்சியின் மீதுள்ள மேலறைக்குச் சென்று பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும் வரை காத்திருங்கள்!" என்பதாகும். மேலறைக்குச் செல்வது என்பது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறும் நோக்கத்துடன் அர்ப்பணிப்பிலும் ஜெபத்திலும் எஞ்சியிருப்பதைக் குறிக்கிறது. உங்கள் கண்களை பரலோகத்தில் வைத்திருங்கள். நீங்கள் எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக காத்திருப்பது போல் ஆயத்தமாக இருங்கள்.
105 மலையின் அடிவாரத்திலோ அல்லது மலைக்கு உள்ளேயோ தங்கிவிடாமல், மலையின் உச்சி மீதுள்ள, மேலறைக்குச் செல்லுங்கள். பரிசுத்த ஆவியின் வாக்குறுதியை உறுதியாக நம்புங்கள். பரிசுத்த ஆவியும் ஆவிக்குரிய வரங்களும் ஒரு வகையான சகோதர சகோதரிகளுக்கானது என்றும் அவை உங்களுக்குரியதில்லை என்றும் நினைக்க வேண்டாம்.
106 புதிய நபர்கள் மற்றும் உலகளாவிய தகவல்களைச் சேர்ப்பதைத் தவிர உங்கள் அனைத்து குழுக்களும் அமைதியாக இருக்க வேண்டும். யாவரும் அர்ப்பணிப்பில் உள்ளனர்; எனவே யாரும் குழுவில் எழுத மாட்டார்கள். இங்கே என்ன நடக்கிறது, இச்செய்தியைப் படிக்கும் அஞ்ஞானிகள் மற்றும் மதவாதிகள் அதை உணர்ந்து அதில் கவனம் செலுத்துகிறார்கள்.
107 ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இன்னும் நடந்துகொண்டு, பேதுரு, யாக்கோபு, யோவானிடம் இப்படியாக: "மேலறையில் நீங்கள் இருந்து கொண்டு , பரிசுத்தவான்களைப் போல நாடகமாடுகிறீர்கள், மக்களை வாழ்த்துவதுமில்லை, மக்களுடன் பேசுவதுமில்லை என்று தெரிகிறது. இதுதானே உண்மை?" என்று சொல்லி பரிகாசிக்கும் சீஷர்களே நம்முடைய எதிரிகள்.
108 இந்த சாத்தானிய நடத்தையை விட்டுவிடுமாறு உங்களை அழைக்கிறேன். தங்காராக்களை போல இருக்க வேண்டாம். அந்த தங்காரா என்பவருடன் நான் 2016-இல் சிறையில் இருந்தேன், அவன் எதையும் நம்பாத, கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலையும் கூட நம்பாத ஒரு ரஸ்டா இசைக்கலைஞனின் சீஷன்.
109 நமக்காக அனுப்பும்படி நாம் தேவனிடம் வேண்டிக்கொள்ளும் பரிசுத்த ஆவியானவர் தேவனிடத்திலிருந்து ஒரு வாக்குத்தத்தமாகும். ஆனால் அதற்கும் கூடுதலாக, நாம் அவரிடத்தில் வேண்டிக்கொள்வோம். நமக்காக வரக்கூடிய குணப்படுத்துதல்கள் மற்றும் விடுதலைகளுக்கும் மேலாக, செய்தியானது பூமியின் கடையாந்தரங்களை அடைந்து நூறாயிரக்கணக்கான ஆத்துமாக்கள் இரட்சிப்படைய வேண்டும் என்று நாம் ஜெபம் செய்வோம். அது நடந்தேறுவதற்கு, நாம் அனைவரும் ஒருமனதாக இருக்க வேண்டும்.
110 வரலாற்றில், தீர்க்கதரிசி செய்தியாளன் இல்லாமல் சில கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலுக்காக மேலறையில் ஜெபித்தனர். பரிசுத்த ஆவியானவர், உண்மையில், வெள்ளாடு மற்றும் ஆட்டுக்கடாவின் ஆவியாக அவர்கள் மீது இறங்கியதால், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது, விவாதம் எழுந்தது. இரண்டு குழுக்கள் உருவாகின. பிரதியட்சங்களை சந்தேகிக்கும் முதல் குழு மற்றும் அவற்றை நம்பும் அமைதியான இரண்டாவது குழு.
111 பின்னர் ஒரு பிரிவு ஏற்படுகிறது, மேலும் அவர்களின் எழுப்புதலானது மரித்துப்போக தொடங்குகிறது. அது மிகவும் தாமதமாகும்போது, அவிசுவாசிகளின் குழு சந்தேகத்திற்காக மன்னிப்பு கேட்கிறது. பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களில் சிலர் தங்கள் ஆவிக்குரிய வரங்களை மாதக்கணக்கில் கொண்டிருக்கிறார்கள், ஆனால் முடிவில் குறிசொல்லுதலில் விழுகின்றனர் அல்லது மரித்து விடுகிறார்கள்.
112 நாம் இதுபோல செயல்பட கூடாது. தேவன் நமக்காக ஏப்ரல் 24, 1993-ன் ஆட்டுக்குட்டியானவரின் ஆவியைத் தவிர வேறு ஒரு ஆவியை அனுப்ப முடியாது. யோவான்ஸ்நானகனுடைய ஞானஸ்நானத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் இறங்கிய புறாவும், மேலறையில் 120 சீஷர்கள் மீது வந்திறங்கியதும் அதே புறாதான். இருப்பினும், அந்த 120 பேரும் இனிப்பான மதுவை அருந்தியிருந்ததாக யூதர்கள் அதை கண்டனர்.
113 பரிசுத்த ஆவியானவர் நாம் செய்ய விரும்புவதையே அவரும் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அவர் பரிசுத்த ஆவியாகவே இருக்கிறார். வேதாகமத்தில், கொரிந்து சபையில் ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட ஒழுங்கின்மை பற்றி பவுல் பேசுகிறார், ஆனால் கொரிந்து சபையில் செயல்பட்ட ஆவியானது பரிசுத்த ஆவியானவர் அல்ல என்று பவுல் ஒருபோதும் கூறவில்லை.
114 ஒரு ஆவிக்குரிய பிரதியட்சத்தின் தன்மையில் தன்னை அறிவிக்கக்கூடிய ஒரு காரியமானது ஒரு கனவு, ஒரு தரிசனம் அல்லது ஆவிகளை பகுத்தறியும் வரத்தின் மூலமாக ஒரு வெளிப்பாடு ஆகும். சீனாய் மலையானது புகையால் நடுநடுங்கியது, அது உண்மையான தேவனாகும். ஏப்ரல் 24, 1993 அன்று, அது ஆட்டுக்குட்டியின் இனிமையான குரலாகும், ஆனால் நான் விழுந்துவிட்டேன். தீர்க்கதரிசியானவர் உயிருடன் இருக்கும் போதே ஆட்டுக்குட்டியானவரின் செய்தியை நாம் விசுவாசித்தோம்; அது தேவன் நமக்குக் கொடுக்கக்கூடிய வேறொரு ஆவி அல்ல.
115 ஆகையால், பரிசுத்த ஆவியானவர் நம்மீது வந்திறங்கும்போது, உடனடியாக, ஏசாயா தீர்க்கதரிசியைப் போல, நம்முடைய ஜெபமானது: "கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டும்?" என்று இருக்க வேண்டும். இதைத்தான் நாம் செய்ய வேண்டும், ஏனென்றால் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டவுடன் ஊழியப்பணிகளும் தாமதமின்றி தொடங்கப்படும். தேவன் எப்போதும் தனது ஆவியை ஒரு நோக்கத்திற்காகவே அனுப்புகிறார்; நாம் காண்பதற்காகவோ அல்லது நாம் விரும்புவதைச் செய்வதற்காகவோ அல்ல.
116 வரவிருக்கும் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானமானது, அப்போஸ்தலர்களின் காலத்திலும் மற்றும் பூமியில் வந்திறங்கிய ஒவ்வொரு முறையும் செய்தது போலவே, நம்மைச் சுத்திகரித்து, செய்தியை எடுத்துச் சென்று தாமதமின்றி எல்லா இடங்களுக்கும் அனுப்புவதாகும். மேலும் அர்ப்பணிப்பானது நம்மை பரிசுத்த ஆவியின் சூழலில் வைத்திருக்கும்.
117 நாம் யாரும் பார்வையாளர்களாக நடந்துக்கொள்ளக் கூடாது. எழுப்புதலில் செயல்படக்கூடியவர்கள், அது நாம் ஒவ்வொருவரும் தான். நாம் நமது நடைபயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். ஆயிரக்கணக்கான பேர்களில் 120 சீஷர்கள் மட்டுமே மேலறையில் இருந்தனர். மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வரவில்லை என்றால், மேலறை வரைக்கும் நம்பிக்கையோடிருந்த உத்தமமான 120 பேரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருப்பார்கள், கிறிஸ்தவம் அங்கேயே நின்றிருக்கும். ஆனால் தேவன் 1906-இல் அசுசா தெருவில் செய்தது போல் தம் வாக்குறுதியைக் காத்துக் கொண்டார்.
118 இப்போது, 1 இராஜாக்கள் 18-இல் எலியா தீர்க்கதரிசியைப் போல, நான் தேவனுடைய பலிபீடத்தை மீட்டெடுத்தேன். நாம் அர்ப்பணிப்புடன் காத்திருக்கவும் மற்றும் பலிபீடத்திற்கு அருகில் அமைதியாகவும் இருக்க வேண்டும். மேலும் பலிபீடத்தை எரியச் செய்வதற்கான அக்கினியானது தேவனிடத்திலிருந்து வரும். ஏப்ரல் 24, 1993-ன் ஆட்டுக்குட்டியானது தேவன் என்றால், பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருவார். வேறு எதையும் செய்ய முயற்சிக்காதீர்கள். ஏப்ரல் 24, 1993 அன்று, தூதனும் ஆட்டுக்குட்டியும் இறங்கி வருவதற்கு நான் எதுவும் செய்யவில்லை. எனவே, பரிசுத்த ஆவியானவர் வந்திறங்குவதற்கு நாம் இன்று வேறெதுவும் செய்ய வேண்டியதில்லை.
119 ஆதியாகமம் 15-ல், தேவன் கட்டளையிட்டபடியே ஆபிரகாம் பலி செலுத்தினான். ஆபிரகாம் பலிக்கு அருகில் நின்று காலையிலிருந்து மாலை வரை காத்திருந்தான், ஆனால் தேவனின் அக்கினி இறங்கவில்லை. பலியை உண்ணுவதற்கு பறவைகள் இறங்கின, ஆபிரகாம் அவற்றை விரட்டினான். மாலை நேரத்தில், ஆபிரகாம் தூங்கினான். சூரியன் மறைந்ததும் இருள் சூழ்ந்தது. இதற்குப் பிறகுதான் யெகோவாவின் அக்கினி இறங்கி, பலியைப் பட்சித்தது.
120 பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருவதற்கு எவ்வளவு நேரமானாலும், பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவதற்காக அர்ப்பணிப்பில் தரித்திருந்து காத்திருப்போம். இனிமேல், நீங்கள் எப்போதும் இருந்ததை விட தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள். ஆரோக்கியம், வலிமை, ஜீவன் மற்றும் உங்களிடம் உள்ள அனைத்தும் தேவனால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, இதற்கு ஈடாக தேவனுக்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கணக்கீடுகளை நீங்கள் செய்யக்கூடாது.
121 வேதாகமத்தில், தாவீது ராஜா தேவனுக்கு காணிக்கையாக பலி செலுத்த விரும்பினார். இதோ, ஒரு மனிதன் தாவீது ராஜாவுக்குப் பலியிடுவதற்கு சில மரங்களையும் எருதுகளையும் இலவசமாக அனுப்பினான். ஆனால் தாவீது ராஜா மறுத்து, அவரிடம், "இல்லை, மரத்தையும் எருதுகளையும் எனக்கு விற்றுவிடு! விலை செலுத்தாமல் சில மரங்களையும் எருதுகளையும் என்னால் தேவனுக்கு கொடுக்க முடியாது" என்றார். ஆமென்! தேவனை நேசிக்கும் மனிதனின் இருதயம் இதுதான்.
122 நாமும் தேவனை நேசித்தால், அவர் கேட்காமலேயே எல்லாவற்றிலும் நம் அன்பை அவருக்குக் காட்ட நம்மை அர்ப்பணிப்போம். தாவீது ராஜாவைப் போல, நாமும் "இல்லை, கல்வாரி மரத்தில் எனக்காக மரித்தவருக்காக என்னால் ஒரு உபவாசத்தையோ அல்லது ஒரு அர்ப்பணிப்பையோ கிரயமாக செலுத்தாமல் இருக்க முடியாது" என்று சொல்வோம். அவர் முதலாவதாக நம்மை நேசித்ததால், தேவனிடம் நாம் கொண்டிருக்க வேண்டிய இருதயம் இதுதான். அவர் நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார், கல்வாரி மரத்தில் நமக்கான இரட்சிப்பை விலைகொடுத்து வாங்கினார்.