en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 17 (Kc.17) : வெளிப்படையானபாவஅறிக்கை
(2003 ஆகஸ்டு 10 ஞாயிறு காலை, லோக்காட்ஜ்ரோ - ஆபிட்ஜான், ஐவரிகாஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 இச்செய்தியின் பெரிய யுத்தமானது சர்ப்பத்தை, அதாவது வஞ்சகத்தை திரைநீக்கி காண்பிப்பது மட்டும் அல்ல, ஆனால் அதனோடுகூட மாமிச மற்றும் ஆவிக்குரிய பரிசுத்தமாகுதலின் முடிசூட்டுதலையும் உள்ளடக்கியிருக்கிறது. மேலும் நாம் இப்பொழுது ஒரு முக்கியமான அப்போஸ்தல அடிப்படைக்கூரான வெளிப்படையான பாவ அறிக்கையில் இருக்கிறோம்.
2 இந்த புடமிடும் போதகம் மிகச் சிறிய பாவங்களுக்கும் பொருந்தும், அதாவது எதிர்பாரதவிதமாக அல்லது தவறுதலாக நிகழ்ந்தவைகளையும் கூட தவிர்க்க முடியாததாக உள்ளது. உதாரணத்திற்கு, எவராவது உங்களிடத்தில் கொஞ்சம் பணத்தை கேட்கையில், நீங்களும் அவரிடத்தில் எந்த கேள்வியும் கேட்காமல் அதை அவருக்கு கொடுக்கும் பொழுது, அவன் சென்று லாட்டரி சீட்டு விளையாடவோ, சிகரெட்டுகளை வாங்கவோ, ஏதாவது மதுபானத்தை வாங்கவோ செய்தால்... அல்லது நீ ஒரு அஞ்ஞான பாடலை முனுமுனுக்கவோ அல்லது தவறுதலாக பாடவோ செய்தால், நீ குற்றமுள்ளவனாக இருக்கிறாய்.
3 ஒரு கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள், மறைபரப்பு பணிகள் மற்றும் ஊழியங்கள் உள்பட வெளிப்படுத்தப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட சபைகள் என அழைக்கப்படுகிற இந்த அனைத்து சபைகளுடைய உறுப்பினர்களில் ஒருவனுடன் நீ ஜெபிக்க இணங்கினால், அதும் ஒரே ஒரு நெடிப்பொழுது பங்கேற்றாலும், அது ஒரு மந்திரவாதியுடனோ அல்லது ஒரு விக்கிரக பூசாரியுடனோ குறிகேட்கிற ஒருவனுடையதற்கொப்பான குற்றமுள்ளவனாக நீ இருக்கிறாய். நீ வேதாகமமில்லாமல் எங்காவது இருப்பாயாகில் மேலும் அங்கே ஒரு லூயிஸ் செகண்டு அல்லது ஸ்கோபீல்டு அல்லது தாம்ப்சன் அல்லது ஜேம்ஸ் மன்னன் பதிப்பு இருகிறது என்றால், நீ அதை சாத்தானின் ஒரு கண்ணியாகவே நோக்கவேண்டும்.
4 நீங்கள் தெரு வார்த்தைகளையோ அல்லது அதுபோன்ற பேச்சுக்களையோ உபயோகப்படுத்தக்கூடாது. இறந்துபோன ஒருவருக்காகவோ அல்லது ஒரு விருந்தினர் கூட்டத்திற்கோ, அல்லது ஒரு திருமணத்திற்கோ, அல்லது எதற்கும் வெறுமெனே இது போன்ற சபைகளுக்குள் நீங்கள் நுழையவோ அல்லது அவர்களுடைய ஜெபக் கூட்டங்களுக்கோ அல்லது விழித்திருப்புக் கூட்டங்களுக்கோ போகக்கூடாது. பரியாசக்காரன் அல்லது வதந்தி பரப்புகிறவன் என நீ அறிந்திருக்கும் ஒருவனுடன், பேச்சில் சிக்குண்டு சிறிதளவு பாவத்திற்குட்படுவாயானால், அச்செயல் விபச்சாரியின் விட்டிற்கு சென்ற ஒருவனுடைய பாவத்திதற்குச் சமானம். இப்பொழுது நாம் வந்தெட்டியிருக்கும் ஸ்தானத்தினிமித்தம் இவையெல்லாம் நாம் கண்டிப்பாக எதிர்கொண்டாகவேண்டிய பாவங்களாக இருக்கின்றது; என்னவாயினும் தன் மனம்போனபோக்கில் விட்டுக்கொடுத்து ஒரே ஒருதரமாகிலும் சுயப்புணற்சி, பொய்கள், வேசித்தனம், அரசியல், விபச்சாரம் என்பவைகளில் ஈடுபடுகிறவர்கள் அல்லது தசமபாகம் மற்றும் காணிக்கை செலுத்தாதவர்கள்... நமக்கு சந்தேகத்திற்கிடமில்லாத சத்துருவும், நம்முடைய தொல்லைகளுக்கு காரணக்காரனாகவும் இருக்கிறான், அவன் இஸ்ரவேல் பாளையத்தில் குஷ்டரோகியைப் போன்று இருக்கிறான்.
5 ஆனால் ஆகானை போன்று எவனாவது நம்மை வேதனைக்குள்ளாக்குவானாகில் அல்லது இந்த செய்தியை பாத்திரமற்றவிதமாக பின்பற்றுவானாகில், அவன் 1 கொரிந்தியர்-11:27 முதல் 30 ன் சாபத்திற்குள்ளாக இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீ சில பாவங்களுடன் அங்கே அமர்ந்து கொண்டிருக்கையில், உன்னை சுற்றியுள்ள மக்கள் அறிக்கையிடும் பொழுது, அது உன்னிடத்தில் எதையும் சுட்டிக் காட்டவில்லை என்றால், குறைந்த பட்சம், சாபங்களாலும் சில பிசாசுகளினாலும் நீ நிரப்பபடுவாய் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். நீ தேவனுடைய வீட்டிற்கு வந்து சாபத்தை பெற்றுக்கொண்டு திரும்பி செல்கிறாயே தவிர, ஆசிர்வாதத்தை பெறவில்லை என்பதை அறிந்து கொள்ளக்கடவாய்.
6 ஜாக்கிரதை,ஏனெனில் தேவனுடைய பிள்ளைகளுக்கு பாவம் என்பது இரண்டாம் சுபாவம் அல்ல, மேலும் தேவன் மோசேயிடம்: "இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும், அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்;” என்றார். ஒவ்வொரு முறையும் உங்களுடைய இருதயத்தில் அறிக்கையிடாத பாவத்துடன் அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பீர்களானால், அது பரலோகத்தில் இருக்கும் தேவனுக்கு முன்பாக செல்லும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
7 அதுபோல, உங்கள் முகத்தில் சிரிப்புடன் நீங்கள் பாவ அறிக்கை செய்ய முடியாது. மேலும் அறிக்கையிடும் பொழுது உங்களுடைய மேற்சட்டை கோட்டை (suit jacket) கழற்றி விட வேண்டும். வெளிப்படையான பாவ அறிக்கை என்பது ஏதோ பிரசங்கம் செய்வதாகவோ, சாட்சி கொடுப்பதாகவோ, கணக்குக்கு முடிப்பதாகவோ, அல்லது நியாயப்படுத்துவதுபோலவோ இருக்கலாகாது ஆனால் மனவருத்தத்துடன் அறிக்கை செய்தலாக அது இருக்கிறது. சபையானது அவைகளை வினவினாலொழிய விபரங்களை தவிர்த்து விடுங்கள். நீங்கள் யாரோ ஒருவருக்கு எதிராக பாவம் செய்திருப்பீர்களேயாகில், அதை அவர் இன்னுமாக பேசிக் கொண்டிருப்பாரானால், அது ஞானஸ்நானத்திற்கு முன்பு நடந்திருந்தாலும், அதை அவரிடத்தில் அறிக்கைசெய்யுங்கள் பிற்பாடு சபைக்கு முன்பாக அறிக்கையிடுங்கள். உங்களால் காணமுடிகிறதா?
8 மேலும் நீங்கள் பாவம் செய்திருந்தால், அங்கே வந்து நின்று: "ஒ சகோதரர்களே... என்னை புரிந்து கொள்ளுங்கள், மாம்சமோ பலவீனமானது என்று வேதாகமம் கூறுகிறது, நான் இப்பேர்ப்பட்ட ஒரு காரியத்தை செய்து விட்டேன்..,” என்றுக்கூற அங்கே வர வேண்டாம். உன்னுடைய சகோதரர்களிடத்தில், அப்படிக் கூறுவது உனக்கு தகுதியானது அல்ல. இதுபோன்ற விதத்தில் அது அமையவேண்டும், "சகோதரர்களே தேவனுக்கு விரோதமாகவும் உங்களுக்கு விரோதமாகவும் பாவஞ்செய்தேன், நான் பெலன் இழந்தேன், நான் உங்களை வஞ்சித்தேன், நான் சகோதரன் என்று அழைக்கப்படுவதற்கும் பாத்திரன் அல்ல! இது எனக்கு நேர்ந்தது...”
9 பின்னும், பாவத்தை அறிக்கையிட இருக்கிறவர்கள் ஒருவர் பின்பு ஒருவராக அறிக்கையிட வேண்டும், அதன் பின்பு எல்லோருக்குமாக ஒரே ஜெபத்தை ஏறெடுக்கலாம். எல்லா அறிக்கைகளுக்கும் பிற்பாடு, அறிக்கைகளின் பேரில் சபையினர் இடைபடும் பொருட்டு, வெளிப்படையான பாவ அறிக்கை பகுதியை நடத்துபவரால், நேரமானது சபையினருக்கு கொடுக்கப்படும். அப்பொழுது சபையினர், பாவத்தை அறிக்கை செய்தவரருடன் குருக்கீடு செய்யலாம். ஆனால் பாவ அறிக்கைசெய்த சகோதரன் ஒருவன் அடுத்தவர்களின் பாவ அறிக்கையில் குருக்கீடு செய்ய பாத்திரன் அல்ல.
10 ஆனால், சில காரியங்கள் பாவ அறிக்கையின்போது இடம்பெறக் கூடாது. உதாரணத்திற்கு, செய்தியுடன் முரண்படுகிற ஒவனுக்கு முன்பாக உங்களால் பேச முடியாமல் இருக்குமானால், அதற்கான தீர்வு வெளிப்படையான பாவ அறிக்கை அல்ல, ஆனால் பாவ அறிக்கைக்கு வருவதற்கு முன், அந்த மனிதனை திரும்ப அழைத்து அந்த நபரிடம் உங்களால் கூற முடியாமற் போனதெதுவோ அதை அந்த நபரிடம் கூறவேண்டும். அதே விதமாக, தசமபாகத்தை செலுத்த தவறியவன் அதை செலுத்திய பின்பே அறிக்கைக்கு வரவேண்டும்.
11 நல்லது. செவியில் இரகசியமாக பாவ அறிக்கை செய்தல் (auricular confession), அதாவது பாவங்களை ஒரு பாதிரியாரிடமோ அல்லது மேய்ப்பனிடமோ அறிக்கையிடுவது, மனிதனால் எற்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே யோவான்-20:23 ன் படியாக, அவர்களுக்கு கொடுத்த அதிகாரத்தினால் அப்போஸ்தலர்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலம் முதற்கொண்டு, வெளிப்படையான பாவ அறிக்கையை ஏற்ப்படுத்தினர்.
12 வெளிப்படையான பாவ அறிக்கையானது மூன்றாம் நூற்றாண்டின் முடிவிலே ஒழிக்கப்பட்டு அதற்கு பதிலாக செவியில் இரகசியமாக பாவ அறிக்கை செய்தல் இடம் பெற்றது, ஆனாலும் அது பாவமன்னிப்புக்கென்று அல்ல. அது புனித பெனடிக்ட் (Saint Benedict) என்பவரால் ஏற்ப்படுத்தப்பட்டது. அவனே பெனடிக்டைன் ஒழுங்கை ஸ்தாபித்தவன்; 1215 ஆம் வருடம், இலாத்தரன் பொதுச்சங்கத்தில் (Council of Lateran) ல் செவியில் இரகசியமாக பாவ அறிக்கை செய்தலானது திணிக்கப்பட்டு, கட்டாயமாக்கப்பட்டது, அதன் பின்பு, இரண்டு வருடங்கள் கழித்து, திரெந்து பொதுச்சங்கத்தின் (Council of Trent) மூலம் அது ஒரு முற்றிலுமான கோட்பாடானது; செவியில் இரகசியமாக பாவ அறிக்கை செய்தல் வெளிப்படையான பாவ அறிக்கைக்கு பதிலாக 758 ஆம் வருடத்தில், கிழக்கிலுள்ள மத ஒழுங்குகளால் மேற்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.
13 செவியில் இரகசியமாக பாவ அறிக்கை செய்து முடிந்த பிறகு, பாதிரி இப்படியாக "உனக்கு தேவையானபடி என்னால் கூடும் மட்டும் நான் உன்னை விடுவிக்கிறேன்" என கூறுகிறார். அதற்கு பதிலாக அம்மனிதன், "உன்னுடைய பாவங்களையும் என்னுடையதையும் தேவன் மன்னிப்பாராக " என்று கூற வேண்டும்.
14 மதகுருக்களோடு கூட்டுவைத்துக் கொண்டு, சில இராஜாக்களும், பேரரசர்களும் செவியில் இரகசியமாக பாவ அறிக்கை செய்தலை குற்றங்கள் புறிய சாதகமாக எடுத்துக்கொண்டனர். பதினோராம் லூயிஸ் மன்னன் செவியில் இரகசியமாக பாவ அறிக்கை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான். ஒரு முறை அவன் செய்த மிகப் பெரிய குற்றத்தை, அறிக்கையிட்ட பொழுது, அவனுடைய இருதயம் நிம்மதியடைந்து, மனசாட்சியும் இலகுவானது. மேலும் அவன் அடிக்கடி பாவ அறிக்கை செய்தான். அதுவே வெளிப்படையான பாவ அறிக்கையாக இருந்திருந்தால் அவன் அதை செய்திருக்கமாட்டான். அதே சமயத்தில் இந்த வழக்கமானது அவர்களுடைய சிங்காசனத்தை பாதுகாக்கவும் செய்தது. நார்மன்டி (Normandy) என்னுமிடத்தில், ஒரு இளம் வாலிபன், பாதிரியாரிடத்தில் சென்று தான் முதலாம் பிரான்சிஸ் மன்னனை (King Francis l) கொலை செய்ய எண்ணங்கொண்டதாக அறிக்கை செய்தான். அந்த பாதிரி அதை ராஜாவிற்கு தெரியப்படுத்தினான், அதன் பின்பு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும். அதுவே வெளிப்படையான பாவ அறிக்கையாக இருந்திருந்தால், அந்த வாலிபனை இராஜாவால் ஒன்றும் செய்திருக்க முடியாது. உங்களால் காணமுடிகிறதா?
15 பாவங்களை ஒரு மனிதனிடம் அறிக்கையிடுதல், அவன் ஒரு பாதிரியாகவோ அல்லது மேய்ப்பனாக இருந்தாலும், அது சரியானதல்ல. அது பிசானிடமிருந்து வருகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
16 சரித்திரத்தை ஆராய்ந்து பாருங்கள், அதை இஸ்ரவேலில் நடக்கும் யோம் கிப்பர் (Yom Kippur) என்னப்படுகிற மகா மன்னிப்பின் உபவாசக் கூட்டத்தில் உங்களால் காணமுடியும், அங்கே பாவ அறிக்கைகள் வெளிப்படையாக இருக்கும். அந்நாளிலே எல்லா யூதர்களும் ஒரு இடத்தில் கூடி தங்களுடைய பாவங்களை வெளிப்படையாக நாளின் கால் பங்குமட்டும் அறிக்கையிடுவார்கள். கால் மணிநேரமோ அல்லது ஒரு மணிநேரமோ அல்ல ஒரு நாளின் கால் பகுதிவரை ஒருவர் பின் ஒருவராக... நெகேமியா 9:1 முதல் 3 ஐ வாசியுங்கள், நீங்கள் அதை காண்பீர்கள். உங்களால் காணமுடிகிறதா?
17 ஒருவருடைய பாவத்தை ஒரு பாதிரியாரிடமோ அல்லது ஒரு மேய்ப்பனிடமோ கூறுவதை பாவ அறிக்கை என்று அழைக்கமுடியாது, ஆனால் அது நம்பிக்கையை ஏற்ப்படுத்துதலாகும். உன்னுடைய மனசாட்ச்சியை இலகுவாக்கும் நோக்குடன் மேய்ப்பனிடமோ அல்லது பாதிரியாரிடமோ ஒரு நம்பிக்கை எற்ப்படுத்திக் கொண்டாய் அவ்வளவே. தனிப்பட்ட பாவ அறிக்கை அல்லது செவியில் இரகசியமாக பாவ அறிக்கை செய்தல் கத்தோலிக்க பாரம்பரியமாக இருக்கிறது.
18 லிட்டிரே பிரெஞ் அகராதி (Littre French Dictionary), பாகம்-2, பக்கம் 633 கூறுகிறது, "தனிப்பட்ட பாவ அறிக்கை அல்லது செவியில் இரகசியமாக பாவ அறிக்கை செய்தல் என்பது: பாதிரியாரின் காதில் அறிக்கையிடுகிற பாவசங்கீர்த்தனம், அது பழமையான சபையில் பின்பற்றப்பட்ட வெளிப்படையான பாவ அறிக்கைக்கு எதிரானதாக இருக்கிறது.". இப்பொழுது, இருபதாம் நூற்றாண்டின் லாரவ்ஸ் அகராதி (Larousse of the twentieth century), பாகம்-2, பக்கம் 404 ல், "செவியில் பாவ அறிக்கை செய்தல் அல்லது தனிப்பட்ட பாவ அறிக்கையென்பது: ஒருவர் இரகசியமாக ஒரு பாதிரியாரிடமோ அல்லது ஒரு மேய்ப்பரிடத்தில் செய்கிற ஒரு காரியமாக இருக்கிறது, வெளிப்படையான பாவ அறிக்கையென்பது: பழங்காலத்தில் ஒருவர் சபையினருக்கு முன்பாக செய்கிற ஒரு காரியமாக இருந்தது.” என்று கூறுகிறது. அதை பார்த்தீர்களா?
19 அப்போஸ்தலர்கள் முதற்கொண்டு நான்காம் நூற்றாண்டு வரைக்கும், அது வெளிப்படையான பாவ அறிக்கையாக இருந்தது. பின்பு ரோமன் கத்தோலிக்க சபையானது அதற்கு ஒரு முடிவுகட்டினது, மேலும் செவியில் இரகசியமாக பாவ அறிக்கை செய்தலை ஏற்ப்படுத்தினது. உங்களுடைய அறிக்கை சபையினருக்கு முன்பாக வெளிப்படையாக இல்லையென்றால் தேவன் உங்களுக்குச் செவிகொடார். ஏனெனில் இது ஒரு கட்டளையாக இருக்கிறது. நம்பிக்கைகளை (confidences) ஏற்ப்படுத்துவதையும் அறிக்கையிடுவதையும் (confess) குழப்பிக்கொள்ள வேண்டாம்.
20 சுவிசேஷங்களில், யோவான் 8 ஆம் அதிகாரத்தில், கல்லெரியப்பட வேண்டிய ஒரு விபச்சாரி, ஆனால் அவளால் எப்படியோ சட்டமும் கிருபையும் சந்திக்கின்ற அந்த சந்திப்பை அடைய முடிந்தது, மேலும் அங்கே கிருபை மேற்கொண்டது. அதை பார்த்தீர்களா? எல்லா ஜனத்தாரும் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் நிமித்தம் அவளை கல்லெரிய வேண்டும் என விரும்பினார்கள். எந்த பாவமும் ஜனத்துக்கு விரோதமானது என்று மோசே அதை நியமித்தான். அவளுடைய பாவம் அவர்களுக்கு விரோதமாக இல்லை என்றால் பிறகு ஏன் அந்த பெண்ணை யூதர்கள் கல்லெரியவேண்டும் என்றனர்? அதை பார்த்தீர்களா?
21 யோசுவா 7 ல் ஜனங்கள் எல்லோரும் ஆகானை கல்லெரிந்தனர். ஆகானுடைய பாவம் அவர்கள்பேரிலும் கெட்ட அபிப்பிராயத்தை ஏற்ப்படுத்தினது, ஏனெனில் அது அவர்களுடைய பாவமாகவும் இருக்கிறது. அங்கே ஆகானின் பாவம் அவர்கள் மேல் சுமத்தப்பட்டது. இன்றும் அதே காரியமாக உள்ளது. நீங்கள் செய்தியில் விசுவாசம்கொண்டு, நீங்கள் ஞானஸ்நானமும் பெற்றிருக்கையில், நீங்கள் கிறிஸ்துவின் சரிரதத்தில் அங்கத்தினர்களாக இருக்கிறீர்கள். நாம் எல்லோருமாக கிறிஸ்துவின் சரிரத்தை அமைக்கின்றோம் மேலும் ஒரு அங்கத்தினனுடைய பாவமானது முழு சரிரத்தின் பாவமாக இருக்கிறது. ஆகையால், ஒரு அங்கத்தினன் தனது பாவங்களை மறைத்துகொண்டு இங்கே வந்து அமர்ந்திருப்பானெனில் அவன் ஆகனை போன்ற ஒரு விரோதியாக இருக்கிறான். உங்களால் காணமுடிகிறதா?
22 மோசே யூதர்களுக்கு கல்லெரியும் படிக்கு அதிகாரம் கொடுத்தான், ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு மன்னிக்கும் படி அதிகாரம் கொடுத்தார். ஆனால் சபைக்கு முன்பாக, ஒவ்வொருவருக்கும் முன்பாக, நீங்கள் அறிக்கையிடாவிட்டால் நம்மால் மன்னிக்க முடியாது. சபையினர் முன்பாக உனக்கு பயமாகவோ வெட்கமாகவோ இருந்தால், பாவம் செய்யாதே! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
23 ஞானஸ்நானத்திற்கு பிறகு, நாம் ஒரே சரிரம் என விசுவாசிக்கிறோம். ஒரு அங்கத்தினனுடைய பாவமானது, முழு சரிரத்தின் பாவமாக இருக்கிறது. மேலும் மத்தேயு-18:18: "பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” என்று கூறுகிறது. மேலும் யோவான் 20:23 ல், “எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்” என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறினபோது, அவர் அதை மனிதர்களிடத்தில் தான் பேசினார். அந்த மனிதர்கள், அது நாமே, உயிருள்ள திருச்சபை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
24 மத்தேயு 16:19 ல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த மன்னிக்கும் அதிகாரத்தை பேதுருவுக்கு கொடுத்தார். ஆனால் திருச்சபை உருவாகின உடனே, இந்த அதிகாரம் நகர்ந்து சபைக்கு சென்றது. இதனால் தான், பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்களை பூமியில் உடைய ஒருவரை குறித்து மத்தேயு 16:19 பேசுகிறது. பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்களை உடையவர்; அந்த ஒரே ஒரு நபருடைய ஜெபம், பூமியின் குடிகள் யாவரும் ஏகமாய்கூடி ஏறெடுக்கிற ஜெபத்தைக்காட்டிலும் அதிக வல்லமையுள்ளதாக தேவனுக்கு முன்பாக கேட்கப்பட்டது.
25 இக்கட்டான நேரத்தில், இஸ்ரவேலுக்காக ஏசாயா தீர்க்கதரிசி விண்ணப்பம் செய்யும்படிக்கு 2 இராஜாக்கள்-19 ல் எசேக்கியா ராஜா, பிரதான ஆசாரியனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும் அவனிடத்திற்கு அனுப்பினான். அவர்கள், "ஓ இராஜாவே, நாங்கள் உமக்கு தெரிவிப்பது என்னவெனில், இஸ்ரவேலரின் ஆசாரியர்கள் எல்லோருமாக சேர்ந்து முழு தேசத்திற்காகவும் ஒரு யோசபாத் உபவாசத்தை தீர்மானித்துள்ளனர், மேலும் எல்லா சபைகள் மற்றும் அவைகளின் சபைத்தலைவர்களின் சம்மதத்தோடு ஒரு எஸ்தர் உபவாசமும் கருத்தில் உள்ளது, ஏறக்குறைய எண்ணூறு தீர்க்கதரிசிகளும் அதன் வெற்றியை முன்னதாகவே கண்டுவிட்டனர்.” என்று கூறியிருக்கலாம்.
26 ஆனால் இராஜாவோ, “நான் ஏசாயாவை விரும்புகிறேன்” என்றான். எல்லா தேவ மனிதர்களையும் எதிர்த்து தனித்திருக்கும் தீர்க்கதரிசியான ஏசாயாவினிடத்திற்குச் செல்லுங்கள் என்றான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. எல்லோராலும் எதிர்க்கப்படுகிற அந்த ஒருவனாகிய ஏசாயாவையே நான் விரும்புகிறேன். வரலாற்றிலே நான் புரிந்துக்கொண்டது என்வெனில், எல்லோராலும் எதிர்க்கப்படுகிற அந்த ஒருவனிடத்தில் மாத்திரமே நித்திய ஜீவ வார்த்தைகள் உண்டு. ஆமென்! இஸ்ரவேலின் நல்ல இராஜாக்கள் எப்பொழுதும் இந்த விதமாகவே நடந்துக் கொண்டனர்.
27 இப்பொழுது நாம் நம்முடைய பொருளுக்கு திரும்பவும் வரலாம். வெளிப்படையான பாவ அறிக்கை என்பது சபையிலிருக்கும் அக்கிரமச் செய்கைக்காரருக்கு திகில்கனவாக இருக்கிறது. அதினால் தான் அவர்கள் அதை விரும்புகிறதில்லை. வெளிப்படையான பாவ அறிக்கை பற்றி நாம் பேசுகையில் அவர்கள் சோகமடைகிறார்கள். தேவர்கூட்டுச்சபையில் அங்கத்தினனாக இருக்கும் ஒருவன் என்னிடம், "இந்த செய்தி உன்மையான செய்தி, மேலும் உண்மையிலேயே நான் வர விரும்புகிறேன், ஆனால் வெளிப்படையான பாவ அறிக்கையை ஒழித்து விடுவீர்களேயாகில், நீங்கள் இன்னும் அதிகமான கூட்டத்தை பெற்றிருப்பீர்கள்!" என்றான்.
28 இன்னும் மற்றவர்கள், "நான் பாவங்களை வெளிப்படையாக அறிக்கையிட்டால் சபை அங்கத்தினர்கள் சிலர் வெளியே சென்று என்னுடைய அறிக்கையை கூறிவிடுவார்கள் என்கின்றனர்!" அப்படியிருக்குமானால், பாவம் செய்யாதீர்கள்! நீங்கள் காண்கிறீர்களா? நேரடியாக தேவனுக்கு முன்பாக செய்யப்படுகிற பாவ அறிக்கை என்று அழைக்கப்படுகிற அது பிசாசினால் உண்டானதாக இருக்கிறது. உங்களால் காணமுடிகிறதா? ஒவ்வொரு பாவ அறிக்கையும் சபையினருக்கு முன்பாக வெளிப்படையாக செய்யப்படவேண்டும். இன்றைக்கு இதுவே தேவனுடைய கட்டளை. இந்நாளில் இதுவே செய்தியும் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடுமாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
29 வெளிப்படையான பாவ அறிக்கையைக் குறித்து யோபு என்ன கூறுகிறான்? அதை நாம் யோபு 31:33-34 ல் வாசிக்கலாம்: "நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்திருப்பேனாகில் திரளான என் கூட்டத்துக்கு நான் பயந்ததினாலாவது, இனத்தார் ஜனத்தார் பண்ணும் இகழ்ச்சி என்னைத் திடுக்கிடப்பண்ணினதினாலாவது, நான் பேசாதிருந்து....”. நான் இப்பொழுது 40 வது வசனத்தை வாசிக்கிறேன், கவனமாக கேளுங்கள்: “அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது என்றான்!”. நீங்கள் காண்கிறீர்களா?
30 யோபு அதை கூறுகிறான், ஜனக்கூட்டத்தின் மிகுதியினாலாவது, திரளான கூட்டத்துக்கு பயந்ததினாலாவது, இனத்தார் ஜனத்தார் பண்ணும் இகழ்ச்சி திடுக்கிடப்பண்ணினதினாலாவது, அவன் தன்னுடைய இருதயத்தில் தன் பாவத்தை மறைத்து வைத்துகொண்டு, அவன் எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும், அது தோற்றுப் போகட்டும் என்கிறான்! உனக்கு பாவம் செய்ய பெலன் இருந்தது, ஆனால் வெளிப்படையாக அறிக்கைசெய்த யோபுவைப்போல அதை அறிக்கைசெய்ய நீ வெட்கப்படவோ அல்லது பயப்படவோ செய்தால், பிறகு உன் மேலும் நீ கையிட்டு செய்கிற எல்லா காரியத்திலும் சாபம் இருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
31 மேலும் வெளிப்படையான பாவ அறிக்கைக்கு பிற்பாடான கருத்து தெரிவித்தல் குறித்து பார்ப்போமானால், நாம் ஒரு வகுப்பறையில் அல்ல, மேலும் வெளிப்படையான பாவ அறிக்கைகளை பகுத்தாய்வு செய்யும் புத்திகூர்மையான பகுத்தறிவாளர்கள் நமக்கு தேவையில்லை, ஒவ்வொரு அறிக்கையின் பேரிலும் ஏதாவது கூருவதற்கென தங்களைத்தானே கட்டாயப்படுத்திக்கொண்ட சிலர் உண்டு, அவர்கள் நமக்கு தேவையில்லை. ஒவ்வொரு தலையிடுதல்களும் தாழ்மையோடு பாவியை திரும்பக் கொண்டு வரவேண்டியதற்காக இருக்கவேண்டும். ஆனால் அது ஒரு தாக்குதல்போல இருக்குமானால், அந்த தலையீடு பேய்த்தனமானதாக இருக்கிறது.
32 மேலும் மன்னிப்பளிப்பதை பொருத்தமட்டில், மத்தேயு 18:18 மற்றும் யோவான் 20:22 முதல் 23 ன் படியாக தேவன் தாமே சபைக்கு கொடுத்த அதிகாரத்தின் தைரியத்தினால் சபையானது மன்னிப்பளிக்கவோ அல்லது மன்னிப்பளிக்காமலிருக்கவோ சுதந்திரமுள்ளதாக இருக்கிறது. “நாமும் பாவிகள் தான், ஆனபடியால் மன்னிப்பதற்கு நாம் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்” என்று ஒருவனும் சொல்லாதிருப்பானாக. நியாயபிரமாணத்தின் கீழ், நம்மைப்போன்ற மனிதர்களுக்குத்தான் கல்லெரிவதற்கான அதிகாரத்தை தேவன் கொடுத்திருந்தார். மேலும் நமக்கேற்றவாறு வார்த்தையை திருப்ப நமக்கு எந்த உரிமையும் இல்லை.
33 செய்தியில் ஏழு மாதங்கள் வரை, அறிக்கையிடுகிற ஒருவர் எப்போதும் சபையாரின் ஜெபத்தைப் பெரும்படியாக முடிவடையும். ஆனால் செய்தியில் ஏழு மாதங்களுக்குப் பிறகு, ஒரு சகோதரன், நம்மைக் குறித்தும் செய்தியைக் குறித்தும் அக்கறையில்லாமல் சென்று ஒரு பாலியல் பாவம் செய்வானாகில், நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், பாவ அறிக்கைக்கு பிறகு, ஒன்றிலிருந்து முன்றுமாதங்கள் வரை, நாம் அவனுக்கு ஜெபிப்பதற்கு முன்னர், அவன் அந்த பெண்ணோடு வந்தால், அது சரி.
34 நீங்கள் இப்படியாக, "அவளுக்கு வர விருப்பமில்லை என்றால் என்ன செய்வது?" என்று கேட்ககலாம். அவள் வருவாள்! ஏன் அவள் வர மறுக்கவேண்டும்? இந்த சகோதரன் அவளை ஒரு விடுதிக்குக் கொண்டு செல்லுமளவுக்கு ஞானமுள்ளவனாக இருக்கையில், அவளை இங்கே கொண்டுவருவதற்கான ஞானத்தையும் அவன் கொண்டிருப்பான். மேலும் அவள் தன்னை நிர்வாணப்படுத்திக் கொள்ளும்படியாகவும், தீட்டுப்படுத்திக் கொள்ளும்படியாகவும் ஒரு விடுதிக்கு போக ஒப்புக்கொண்டவள், தன்னை சுத்தீகரித்துக் கொள்ளும்படியாக தேவாலயத்திற்கு வர மறுப்பாளோ? இந்த சகோதரனுக்கு ஜெபிப்பதற்கு முன்பாக, அவன் அவளை சபைக்கு அழைத்துக்கொண்டுவர கடமைப்பட்டிருக்கிறான், அப்போது அவள் வந்து, தான் கர்பமாக இல்லையென்று நமக்கு சொல்லலாம், அப்போது அங்கே வேறு எந்த பிரச்சனையும் இல்லை.
35 ஆனால் அது ஒரு சகோதரியாக இருக்கும் பட்ச்சத்தில், அந்த அஞ்ஞானியை கொண்டு வரக்கூடாது. ஆனால் விலக்கிவைக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு அவள் வரலாம், மேலும் விலக்கிவைக்கப்பட்ட காலத்திலும் அவள் தொடர்ந்து சுத்தமாக இருந்திருப்பாளேயாகில் அவளுக்காக நாம் ஜெபிக்கலாம். ஆனால், குறைந்தபட்ச்சம், அந்த சகோதரனோ அல்லது சகோதரியோ இத்தகைய செய்கைக்கான காரணத்தை கூற வேண்டும், ஏனெனில் பாலியல் பாவமானது திடீரென சம்பவிக்கிற ஒன்றல்ல. அவரை பலவீனமானவர் என்று கருதி, அவருக்கு ஒரு அவதானிப்பு நேரம் கொடுக்கப்படலாம், அந்த நேரத்தில் அவர் சபையில் இருப்பார் மற்றும் அவர் செய்யும் பாவங்களை அறிக்கையிடுவார். ஆனால் இந்த பாவத்தை பொறுத்தவரை அவருக்கு அவதானித்த நேரம் கழித்து பிறகு மீண்டும் அறிக்கை செய்வார்.
36 ஆனால் திருமணமான ஒரு ஆணோடு அல்லது ஒரு பெண்ணோடு நடந்த விபச்சாரம் குறித்த கேள்வியை பார்ப்போமானால், அந்த சகோதரனோ அல்லது சகோதரியோ சபையினருக்கு முன்பாக அறிக்கையிடுவதற்கு முன், முதலாவதாக விபசாரத்தில் இடுபட்ட நபருடைய வாழ்கைத் துணையை (spouse) சந்தித்து மன்னிப்புக் கேட்க்க வேண்டும். ஆனால் அந்த சகோதரனோ அல்லது சகோதரியோ திருமணமானவராக இருந்தால், முதலாவதாக தன்னுடைய வாழ்கைத் துணையினிடத்தில் அறிக்கையிட வேண்டும், பிறகு ஒரு சாட்சியையும், தன் வாழ்கைத் துணையையும் அழைத்துக் கொண்டு, மற்ற தம்பதியினரை சந்திக்கவேண்டும். மேலும் இந்த எல்லா படிகளையும் கடந்தபின்பு தான் அவர் சபையில் வந்து அறிக்கை செய்யவேண்டும். மேலும் இது கர்த்தருடைய கட்டளையும், இந்த தலைமுறையினருக்கு இயேசு கிறிஸ்துவின் ஒரு வெளிப்பாடுமாக இருக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
37 பாவ அறிக்கைகளுக்கு, தனது பாவத்திற்குப் பிறகு முதல் ஆராதனையில் அறிக்கை செய்த ஒருவரை வெளியே தள்ள முடியாது, அவர் தனது தண்டனையின் காலத்தை சபையில் கழிப்பார், அது ஒரு பாலியல் பாவம், திருட்டு, மோசடி அல்லது தூய்மையற்ற படங்கள் அல்லது வீடியோக்களை பரிமாறிக்கொள்வது.  அதாவது சொல்ல வேண்டுமென்றால் பாலுறவை பற்றியதாக இருக்கையில், அவர் அதை மறைத்திருந்தால் அல்லது அதன் காரணமாக ஒரு ஆராதனையை தவறவிட்டிருந்தால், அது நாட்டின் குழுவில் தகவல்களாக பதிவிடப்பட வேண்டும்.. தவறுதலாக செய்த பாவங்களுக்கு இது பொருந்தாது.  மேலும் தவறுதலாக செய்த பாவம் ஒரு அர்பணிப்பை ரத்து செய்யாது.
38 நாம் பலவான்களாக இருக்கிறபடியினால் இந்த செய்தியை பின்பற்றுகிறோம் என்றல்ல, ஆனால் தேவனுடைய ஒத்தாசையினாலும் கிருபையினாலும், யோசுவாவையும் காலேபையும் போன்று, விசுவாசத்தினாலே நம்மால் கூடும் என்று சொல்லுவோமாக! நாம் அவரை சற்று துதிப்போமாக! நாம் அவருடைய நாமத்தை துதித்து பாடுவோமாக! ஆமென்!
வெளிப்படையான பாவறிக்கை என்பது ஒவ்வொரு ஆராதனையிலும் பரிசுத்த இராப்போஜனத்திற்குப் பதிலாக, பரிசுத்த இராப்போஜனத்தைத் தடை செய்யாமல் திருச்சபையிடம் தேவன் கேட்பதாக இருக்கிறது. மேலும் நீங்கள் வெளிப்படையான பாவறிக்கையில் தகுதியற்ற முறையில் பங்கு பெற்றால், இது 1 கொரிந்தியர் 11ன் படி தேவனின் தண்டனைக்கு உங்களை வெளியரங்கமாக்குகிறது.
39 தேவன் பரிசுத்தத்தில் வாசம் பண்ணுகிறார், மேலும் தூதர்கள் இரவும் பகலுமாக, பரிசுத்தர், பரிசுத்தர், கர்த்தர் பரிசுத்தர் என முழங்குகின்றனர். நீ பரிசுத்தத்தையும், சுத்தீகரிக்கப்படுதலையும் நேசித்தால், வெளிப்படையான பாவ அறிக்கையை நீ வெறுக்கமாட்டய். நீயொரு தேவபிள்ளையாக இருப்பாயாகில், இந்த வெளிப்படையான பாவ அறிக்கை நிமித்தம், “ஓ, ஆண்டவரே! இந்த செய்திக்கு என்னுடைய சிறு பிராயத்திலேயே வந்திருப்பேனாகில், நான் ஒரு கெட்ட ஜீவியத்தை வாழ்ந்திருக்க மாட்டேன், சில பாவங்களை நான் ஒருபோதும் செய்திருக்கவே மாட்டேன்" என்று கூறுவாய். தேவபிள்ளை ஒருவனுக்கு, வெளிப்படையான பாவ அறிக்கை தேவனிடத்திலிருந்து வந்த ஒரு பரிசாக இருக்கிறது மேலும் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அதற்கு ஆமென் என்பார்கள்.
--:--
--:--