en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 172 (Kc.172) : நட்சத்திரங்களின் அணிவகுப்பிற்கான பாடல்
1 இயேசு கிறிஸ்துவின் அடிமையாகிய தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான், மத்தேயு 25 இன் பத்து கன்னிகைகளின் அணிவகுப்பிற்கான பாடலாக, இந்த ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2025 அன்று, பரிசுத்தவான்களுக்குக் வழங்கிய வார்த்தைகள்.
2 சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2025 அன்று, பிரசங்கியார்கள் பலரும் தங்களது சுகமளிக்கும் ஊழியங்களை நடத்திக் கொண்டிருந்தபோது, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான், ஒரு தரிசனத்தைக் கண்டேன்.
3 நான் நான்கு உலகக் கோப்பை போட்டிகளின் கால அட்டவணையைக் கண்டேன். நான்காவது போட்டி ஜெர்மனிக்கு எதிராக இருந்தது, மற்றும் ஜெர்மனியின் கொடி முற்றிலும் கருப்பாக இருந்தது. மூன்றாவது போட்டி சீனாவுக்கு எதிராக இருந்தது, மற்றும் சீனாவின் கொடி முழுமையாக பச்சையாக இருந்தது. தரிசனம் அகன்றபோது, என் கண்கள் இரண்டாவது வரியின் மேல் நிலைத்திருந்தன.
4 கால அட்டவணையின் முதல் இரண்டு வரிகளை என்னால் வாசிக்க முடியாமல் இருந்தது, ஏனெனில் முதல் இரண்டு வரிகளும் மங்கலாகவும் மற்றும் சாம்பல் நிறமாகவும் இருந்தன. வார்த்தையினாலான முதலாவது போட்டி காக்.154 இலிருந்து கடந்துபோய்விட்டது என்று நான் அறிவேன். ஊழியங்கள் மற்றும் ஆவிக்குரிய வரங்களின் பிறப்போடு நாம் இரண்டாவது போட்டியில் இருக்கிறோம்.
5 நமது ஆவிக்குரிய வரங்கள் மகத்துவமுள்ளதாகவும் மற்றும் வல்லமையுள்ளதாகவும் மாறும். அப்பொழுது, ஒரு மகிமையான காலத்தைக் குறிக்கிற சீனாவின் பச்சைக் கொடியானது தேவனுடைய புத்திரரின் வெளிப்படுதலோடு வரும். இது உலகம் இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத வல்லமையான ஆவிக்குரிய வரங்களின் மூலமாக இருக்கும். இதுதான் காக்.172 இன் நோக்கமாகும்.
6 மேலும் இறுதியாக சபைக்கு எதிரான ஒரு பெரிய உபத்திரவத்தை அடையாளப்படுத்துகிற ஜெர்மனியின் கறுப்புக் கொடி இருக்கும். நாம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுவோம். வேதாகமம் சொல்லுகிறபடி, நமது சாட்சியின் வார்த்தையினிமித்தம் நாம் மரிப்போம்.
7 மூன்றாவது கட்டத்தின் இறுதியில், பூமியின் மேல் பரிசுத்த சபையின் நிலைநிறுத்தப்படுதல் இருக்கும். மேலும் எடுத்துக்கொள்ளப்படுதல் வரும், மற்றும் நமது சந்ததியாருடன் நாம் பூமியை விட்டு நீங்குவோம்.
8 அப்பொழுது, செய்தியைக் காத்துக்கொள்ளுகிற புத்தியில்லாத கன்னிகைகளுக்கு எதிராக உபத்திரவம் தொடரும். புத்தியில்லாத கன்னிகைகள் தங்களது மரணம் வரை விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுவார்கள், ஆனால் கலப்பின ஜனங்களோ கொல்லப்படாதபடிக்கு விசுவாசத்தை மறுதலிப்பார்கள். மேலும் உபத்திரவத்திற்குப் பின்பு, பரிசுத்தவான்களின் இரத்தத்தினிமித்தம் மனிதகுலத்திற்கு எதிராக மகா உபத்திரவம் வரும்.
9 என்ன நடந்தாலும், நாம் பலமாய் இருப்போம். நாம் மறுபுறத்தில் மீண்டும் சந்திப்போம், பரிசுத்த தூதர்களுடைய சிறகுகளின் மேகத்தினால் மூடப்பட்ட நகரத்தில். பிரிந்துபோகுதலும் மற்றும் அழுகையும் இல்லாத அழகான பரலோக நகரம்.
10 இப்போது, ஏன் நான் இந்த இரண்டாவது வரியைக் கவனித்துக் கொண்டிருந்தேன்? அது ஏனென்றால், அது நாம் இப்போது இருக்கிற பரிமாணமாகும். ஏன் இந்த இரண்டாவது வரி வாசிக்க இயலாததாக இருந்தது?
11 இதோ பதில். சனிக்கிழமை செப்டம்பர் 6, 2025 அன்று, பல சகோதரர்களுடைய கைகளினாலும் மற்றும் அங்கோலாவின் அப்போஸ்தலனாகிய அனிசெட்டோ மானுவேலினுடைய கைகளினாலும் பல அற்புதங்களும் மற்றும் அடையாளங்களும் நடந்தன.
12 எட்டு வருடங்களாகப் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவளும் மற்றும் ஊமையுமாய் இருந்த ஒரு ஸ்திரீ, ஜனங்களுக்கு நன்றாய் அறிமுகமானவளும், மற்றும் பல இதர வியாதிகளைக் கொண்டிருந்தவளுமாய் இருந்தவள் சுகமாக்கப்பட்டாள். பக்கவாதத்தின் நிமித்தம், அவள் பல இதர வியாதிகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டிருந்தாள்.
13 அவள் ஞாபகமறதியினாலும் மற்றும் வலிப்பு நோயினாலும் கூட அவதிப்பட்டாள். அவள் வாயில் நுரையுடன் அந்த சிறப்பு ஆராதனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தாள். அவள் எட்டு வருடங்களுக்கு முன்பு, பக்கவாதம் ஏற்பட்ட நாளில் ஊமையானாள். மற்றும் அவள் தானாகவே உட்கார இயலாதவளாய் இருந்தாள்.
14 ஆனால் அப்போஸ்தலனாகிய அனிசெட்டோ மானுவேல் அவளைத் தொட்டபோது, அவளுடைய நாவு அந்தக்கணமே கட்டவிழ்க்கப்பட்டு மேலும் அவள் பேசினாள். பேச இயலாதிருந்த எட்டு வருடங்களுக்குப் பின்பு அவள் தன் முதல் வார்த்தைகளை உச்சரித்தாள். அவளுடைய வாயிலிருந்து வந்து கொண்டிருந்த உமிழ்நீர் நுரை நின்றது. மற்றும் இப்போது, அவள் எழுந்து நின்று தானாகவே நடந்தாள்.
15 அது ஒரு பெரிய அற்புதமாய் இருந்தது. மற்றும் அவளுடனே கூட வந்திருந்த அவளுடைய மகள், கூட்டத்தினர் முன்பாகத் தன் தாயினுடைய எல்லாப் பலவீனங்களைக் குறித்தும் மற்றும் தன் தாய் எட்டு வருடங்களாகப் பேசாமல் இருந்தாள் என்ற உண்மையைக் குறித்தும் சாட்சி கொடுத்தாள். மற்றும் அங்கே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.
16 மற்றும் கூட்டத்தினரின் மகிழ்ச்சியின் ஆரவாரத்தினால், பல ஜனங்கள் அந்த சிறப்பு ஆராதனை நடந்து கொண்டிருந்த இடத்திற்கு ஓடிவந்தார்கள். சிலர் உள்ளே நுழைந்தார்கள், மற்றவர்கள் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகக் கதவண்டையிலும் மற்றும் ஜன்னல்களண்டையிலும் நின்று கொண்டிருந்தார்கள்.
17 அந்த அற்புதங்கள் பார்வையாளர்களிடம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததென்றால் அந்த ஆராதனைக்குப் பின்பு திரளான மக்கள் அப்போஸ்தலனாகிய அனிசெட்டோ மானுவேலைத் தெருவிலும் பின்தொடர்ந்தார்கள். அவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் வேதாகமத்தில் வாசித்திருந்ததை அல்லது அவர்கள் தொலைக்காட்சியில் பார்த்திருந்ததை அவர்களுடைய சொந்தக் கண்கள் கண்டன.
18 மற்றும் அந்த சிறப்பு ஆராதனைக்குப் பின்பு அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லும்போது எல்லாரும் தங்களுடைய கண்கள் கண்ட அதிசயங்களை எடுத்துரைத்தனர். மற்றும் முன்னர் நோயாளிகளாகத் தாங்கள் அறிந்திருந்த சுகமடைந்த மனிதர்களைக் கண்டவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். மற்றும் பொதுமக்கள் மற்றொரு சிறப்பு ஆராதனையை கேட்டுக்கொண்டார்கள்.
19 மேலும் அப்போது, இதன் நிமித்தம், திட்டமிடப்படாதிருந்த மற்றொரு சிறப்பு ஆராதனை அடுத்த நாளாகிய, ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 7, 2025 அன்று காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போஸ்தலனாகிய அனிசெட்டோ தன் அர்ப்பணிப்பை பலப்படுத்தினார்.
20 மற்றும் அடுத்த நாளாகிய ஞாயிற்றுக்கிழமை, காலை 6 மணி முதற்கொண்டே ஜனங்கள் ஏற்கனவே அந்தச் சிறிய ஆராதனை இடத்திற்கு வந்திருந்தார்கள். அக்கம் பக்கத்து பகுதிகளைச் சேர்ந்த ஜனங்கள், வேடிக்கை பார்க்க வந்தவர்கள் மற்றும் மிகத் தூரமான இடங்களைச் சேர்ந்த ஜனங்களும் வந்திருந்தனர். மற்றும் சனிக்கிழமை ஆராதனையோடு ஒப்பிடும்போது நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்தது.
21 அப்போஸ்தலனாகிய அனிசெட்டோ கூறினார், “அங்கே பல நோயாளிகள் இருந்தார்கள். பக்கவாத நோயாளிகள், வலிப்பு நோயாளிகள், ஊமையர்கள், செவிடர்கள் மற்றும் எல்லாவிதமான நோயாளிகளும் இருந்தார்கள். அவர்கள் அவ்வளவு திரளாய் இருந்தபடியால், நான் ஜெப வரிசையின் இறுதிக்கு வந்து சேருவதற்கு எனக்கு மிகுந்த நேரம் எடுத்தது”.
22 சுகமளிக்கும் சாட்சிகளைக் குறித்து, அப்போஸ்தலனாகிய அனிசெட்டோ கூறுகிறார், "ஞாயிற்றுக்கிழமை ஆராதனையானது முந்தைய நாள் ஆராதனையின் சாட்சிகளை விட அதிக வல்லமையுள்ள சுகமளிக்கும் சாட்சிகளைக் கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது, ஆனால் வருந்தத்தக்க வகையில், அது அப்படி இருக்கவில்லை. இந்த ஞாயிற்றுக்கிழமையன்று எங்களுக்குத் உடனடி சுகமடைதல்கள் உண்டாயின, ஆனால் இந்தச் சுகமடைதல்கள் முந்தைய நாள் ஆராதனையின் சுகமடைதல்களை விட அதிகமாயிருக்கவில்லை. மற்றும் சூழ்நிலை மிகவும் பாரமாக இருந்தது.”
23 400-க்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு கூட்டத்தினருக்கு, அங்கே 9 உடனடிச் சுகமடைதல்கள் மாத்திரமே இருந்தன. முந்தைய சிறப்பு ஆராதனையோடு ஒப்பிடும்போது இது ஒரு தோல்வியாய் இருந்தது. நான் துக்கமாயிருந்தேன். மற்றும் என் குழுவிற்குள் எலிகளும் பூனைகளும் இருந்ததை நான் கண்டுபிடித்தேன். செப்டம்பர் 7, 2025 ஞாயிற்றுக்கிழமையின் சிறப்பு ஆராதனையைத் தோல்வியடையச் செய்வதற்காக, சில சகோதரர்கள் மிகவும் பொல்லாத விதமாய் கிரியை செய்து எனக்குத் துரோகம் பண்ணியிருந்தார்கள்.
24 ஆராதனையின் முடிவில், நான் அறிந்துகொண்டது என்னவென்றால், அவர்களுடைய சகோதரனாகிய அனிசெட்டோ ஆகிய நான், பலவீனமாகவும் களைப்பாகவும் இருந்து, நிமிர்ந்து நிற்பதற்கே போராடிக் கொண்டிருந்தபோது, மற்றும் கூட்டத்தினர் கூட பசியாய் இருந்தபோது, என் குழுவின் உறுப்பினர்கள் உட்பட சில சகோதரர்களும் சகோதரிகளும் ரகசியமாகப் போய் புசித்துக் குடித்துவிட்டு, பின்பு சுகமளிக்கும் ஆராதனைக்குத் திரும்பி வந்திருந்தனர்.
25 சிறப்பு ஆராதனைக்குப் பின்பு, ஒரு சந்திப்பில் நான் அவர்களிடம் கேட்டேன், இந்த ஞாயிற்றுக்கிழமை, இந்த சிறப்பு ஆராதனையின் போது எனக்குச் செய்ததை அவர்கள் சகோதரன் பிலிப்புவுக்கும் செய்வார்களா என்று. அவர்கள் அமைதியாய் இருந்தார்கள். அவர்கள் சாத்தானுக்குச் சாதகமாகக் கிரியை செய்திருக்கிறார்கள் என்றும், செய்தியிடமும் தேவனிடமும் மிகவும் பொல்லாத விதமாய் நடந்துகொண்டார்கள் என்றும் நான் அவர்களிடம் சொன்னேன்.”
26 அப்போஸ்தலனாகிய அனிசெட்டோ மானுவேல் எனக்குத் தெரிவித்தபோது, நான் அவரிடம், அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசும்படியும், அவரைப் போல மெய்யான அர்ப்பணிப்புக்குள் இல்லாத துரோகிகள் அனைவரையும் அவருடைய குழுவிலிருந்து நீக்கிவிடும்படியும் சொன்னேன்.
27 மற்றும் நான் அப்போஸ்தலனாகிய அனிசெட்டோவிடம், அந்தச் சகோதரர்கள் நம்மிடையே உள்ள துரோகிகள் என்றும், சுகமளிக்கும் வரம் பெற்றுள்ள வேறொரு சகோதரனுடைய குழுவிற்குள் இந்தத் துரோகிகள் இல்லாதபடிக்கு அவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னேன். ஞானஸ்நானம் பெற்ற ஆணும் பெண்ணுமாகிய எவரொருவரும், தேவனுடைய சித்தத்திற்கு மேலாகத் தன் வயிற்றை வைத்தால், அவர் நம்மிடையே உள்ள ஒரு கலப்பின ஜனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
28 சிறப்பு ஆராதனைகள் மற்றும் சுகமளிக்கும் ஆராதனைகளின் பல அறிக்கைகளில், வீடியோக்களின் விளக்கங்களின் போது அல்லது 20 நிமிட பிரசங்கத்தின் போது தாங்கள் சுகமடைந்ததாகச் சில நோயாளிகள் சாட்சி கொடுத்தனர். முழு குழுவும் மற்றும் முதன்மைப் பிரசங்கியாரோ அல்லது பேசுபவரோ அவருக்கு முன்பாகச் செல்பவர்களும் பரிசுத்தமாக்கப்பட்டிருந்தால், இதுதான் நடக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
29 இது ஒரு சுகமளிக்கும் ஆராதனையிலுள்ள ஒவ்வொரு பொறுப்பிற்கும் பொருந்தும், ஒரு சிறப்பு ஆராதனையில் பாடுவதற்கு வரும் ஒரு சகோதரிக்குக் கூட இது பொருந்தும். முதன்மைப் பிரசங்கியாரோ அல்லது பேசுபவரோ அவருக்கு முன்பாகச் செல்லும் பொறுப்புகள் அவருடைய குழுவைச் சேர்ந்த சகோதர சகோதரிகளிடமிருந்து வருவது நலமாயிருக்கும். ஒரு வழிநடத்துபவர், ஒரு நிர்வாகி உட்பட அனைத்துப் பொறுப்புகளும் அவருடைய குழுவிற்குள்ளேயே இருக்க வேண்டும்.
30 நல்லது. இந்த Kc.172 அதிகாரம் முதற்கொண்டு, எந்தவொரு சகோதரனும் அல்லது சகோதரியும் தனிப்பட்ட அல்லது பொதுவான சுவிசேஷ ஊழியத்தின் போது நோயாளிகளுக்காக ஜெபிக்கலாம். இது இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், அங்கே உடனடிச் சுகமடைதல் உண்டாகவில்லை எனில், அவர் தீர்க்கதரிசியின் அதிகாரப் பொறுப்பைப் பெற்றிருக்காத பட்சத்தில், அவர் அறிக்கை செய்து ஜெபத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் செயல்படுபவர்களாய் இருப்போமாக.
31 மற்றும் ஒரு சிறப்பு ஆராதனை அல்லது ஒரு சுகமளிக்கும் ஆராதனைக்கு முந்தைய நாளில், ஒன்றுக்கு மேற்பட்ட உணவைச் சாப்பிட்ட ஒரு சகோதரன் அல்லது சகோதரி, கூட்டத்தினர் நடுவே அமைதியாக இருக்க வேண்டும். அவர் எந்தவொரு பொறுப்பையும் செய்யக் கூடாது, ஜெப வரிசையிலும் வரக் கூடாது. சுகமளிக்கும் ஆராதனைகளுக்குப் பின்பு கூட, வீடியோக்களைத் தொகுக்க வேண்டிய சகோதரன் ஒரு மெய்யான ஆயத்த நிலையில் இருக்க வேண்டும்.
32 மற்றும் ஒரு சிறப்பு ஆராதனை அல்லது ஒரு சுகமளிக்கும் ஆராதனையின் போது, மீண்டும் ஐக்கியப்படும் ஆவியோடு அல்லது சுகமளிக்கும் ஆராதனைக்கு முக்கியமில்லாத ஒரு காரியத்தைக் குறித்து உன்னுடைய கவனத்தை திசைதிருப்புகிற அல்லது உன்னிடம் பேசுகிற எவரொருவரும், அவர் சுகமளிக்கும் ஆராதனையின் தோல்விக்காகக் கிரியை செய்கிற சாத்தானுடைய ஒரு முகவராவார் என்பதை அறிந்துகொள். அந்நபரிடமிருந்து விலகிப்போ அல்லது அந்நபருக்கு உனது மௌனமே பதிலாக இருக்கட்டும், ஏனெனில் தேவனுடைய தூதனானவர் கூட்டத்தினர் நடுவே பிரசன்னமாயிருக்கிறார்.
33 ஒரு சுகமளிக்கும் ஆராதனைக்கு முன்பாக அல்லது அதன் போது, எந்தவொரு அரட்டை அடிப்பதிலிருந்தும் அல்லது குழுக்களாகக் கூடி நிற்பதிலிருந்தும் நீ விலகிப்போக வேண்டும், ஏனெனில் தேவனுடைய தூதனானவர் பிரசன்னமாயிருக்கிறார். ஒழுங்குபடுத்தும் ஊழியர்கள் இவை அனைத்தையும் கண்காணித்துப்பார்ப்பது அவசியமாய் இருக்கிறது, ஏனெனில் சுகமளிக்கும் ஆராதனைகளின் போது அவர்களே உதவிக்காரர்களாயும் இருக்கிறார்கள்.
34 எந்தவொரு ஒழுங்கீனத்தையும் எந்தவொரு சாத்தானிய வைராக்கியத்தையும் தவிருங்கள். நீங்கள் ஒரு ஸ்ட்ரெச்சரை வைத்திருக்கலாம், ஆயினும் ஒரு நோயாளி நடப்பதற்குப் போராடிக்கொண்டிருந்தால், அவரை நடக்கவிடுங்கள். அவரைத் தூக்காதிருங்கள், அவரைச் சுமக்காதிருங்கள். வந்துசேருகிற நோயாளிகளிடம் எந்தவொரு விபரத்தையும் கேட்காதிருங்கள். அவர்களை எளிமையாக வரவேற்று, அவர்களை அமர வையுங்கள். மேலும், ஒரு பொறுப்பைச் செய்வதற்காக நீங்கள் அருகில் செல்வது, குழுவின் ஓர் உறுப்பினருடைய அனுமதியோடு மட்டுமே இருக்க வேண்டும்.
35 மேலும் நோயாளிகளுக்காக ஜெபிப்பதற்கு முன்வருகிற நீயும் கூட, குறைந்தபட்சம் மூன்று நாட்களாக, உன்னுடைய மத்தியஸ்தன் மற்றும் ஒருவேளை உன்னுடைய மனைவி ஆகியோரைத் தவிர்த்து, எழுதப்பட்ட செய்தி மூலமாகத் தவிர வேறு எவரோடும் நீ வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்ளவில்லை என்பதை இது வலியுறுத்துகிறது.
36 குறைந்தபட்சம் மூன்று நாட்களாக, தண்ணீரைத் தவிர்த்து, எந்தவொரு உணவும் உன்னுடைய வாய்க்குள் செல்லவில்லை என்பதையும் இது வலியுறுத்துகிறது. ஆயினும் நீ மிகவும் பலவீனமாக இருந்தால், கம்பு, கோதுமை, அரிசி அல்லது பிற தானியங்களின் கஞ்சி போன்ற ஒரு உணவைச் சாப்பிடு, ஆனால் அதில் சர்க்கரை சேர்க்காதே.
37 ஒரு சுகமளிக்கும் வரத்தைப் பெற்றிருந்து மற்றும் அடிக்கடி பிரயாணத்தில் இருந்தும்கூட, நீ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சபைகளின் போதகராக இன்னும் இருக்கலாம், ஆயினும் உன்னுடைய உடன் ஊழியர்தான் சபையோடு எல்லாவற்றையும் செய்ய வேண்டும் மற்றும் உனக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
38 மேலும் நாம் அனைவரும் தேவனிடம் மன்னிப்புக் கேட்கிறோம், அவருக்கு விரோதமாகவும் அவருடைய வார்த்தைக்கு விரோதமாகவும் உள்ள நம்முடைய எல்லா கலகங்களுக்காகவும், Kc.159:96 இன் கட்டளைகள் இருந்தபோதிலும். வாய்க்குள்ளே இனிப்புள்ளதாக அல்லது இதமானதாக இருக்கும் எதையும் நாம் தவிர்ப்போமாக.
39 மேலும் சில சகோதரர்கள் மற்றும் சகோதரரிகளுடைய துரோகம் மற்றும் பொல்லாப்பின் காரணமாக, மற்றும் சிறப்பு ஆராதனைகளை நடத்துகிற பல சகோதரர்களுடைய அறியாமையின் காரணமாக, நான் எல்லா சிறப்பு ஆராதனைகளையும் மற்றும் சுகமளிக்கும் ஆராதனைகளையும் 2025 செப்டம்பர் 10 அன்று நிறுத்தும்படிச் செய்திருந்தேன்.
40 அப்போஸ்தலன் அனிசெட்டோ மானுவலுடன் அங்கோலாவில் என்ன நடந்து கொண்டிருந்ததோ, அதுதான் சுகமளிக்கும் வரங்களைக் கொண்டுள்ள சகோதரர்களுடன் பல நாடுகளிலும், அநேகமாக எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருந்தது.
41 மேலும் ஒரு சந்திப்பின் போது, அப்போஸ்தலன் பெட்ரோ அலெய்சோ மொசாம்பிக் பிரசங்கிகளுக்குக் கூறியிருந்தார், ஒரு சுகமளிக்கும் பிரச்சார கூட்டத்தின் போது, அதாவது ஒரு சிறப்பு ஆராதனைகள் அல்லது சுகமளிக்கும் ஊழியங்களின் காலப்பகுதியில், அவர்களில் மிகவும் பசியாக இருக்கும் ஒருவர், முழு நாளுக்கும், துணை உணவு ஏதுமின்றி வெள்ளை சாதம் அல்லது கிழங்கு போன்ற ஒரு எளிய உணவைச் சாப்பிட வேண்டும்.
42 மேலும் பிரசங்கிகள் துல்லியமாக வனாந்தரத்தில் இருந்த யூதர்களைப் போலவே அவருக்குப் பதிலளித்து, கூறியது: "நீர் கேட்டுக்கொண்டபடி நாங்கள் குழம்புகளுள்ள (sauces) உணவைச் சாப்பிட மாட்டோம், ஆனால் நாங்கள் உதாரணமாகப் பழங்கள் அல்லது பீன்ஸ் உடனான சாதத்தைச் சாப்பிடுவோம், மற்றும் அதில் நாங்கள் எண்ணெயும் உப்பும் போடுவோம். இதுவே எங்களால் செய்ய முடிந்த தியாகமாகும்".
43 2025 செப்டம்பர் 10 அன்று காலையில், நான் அவருடைய அறிக்கையின் இப்பகுதியை வாசித்துக் கொண்டிருந்த போது, இது ஒரு சொப்பனத்திலா அல்லது நிஜத்திலா என்று அவரிடம் கேட்பதற்காக நான் அவருக்கு எழுதும் அளவிற்கு மிகவும் ஆச்சரியமடைந்தேன். மற்றும் அது நிஜத்தில்தான் என்று அவர் எனக்குப் பதிலளித்தார்.
44 மேலும் அவர், அவர்களுடன் சந்திப்பைக் கொண்டிருந்த அதே 2025 செப்டம்பர் 5 இன் இரவில், தான் கொள்ளைக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக அவர் சொப்பனம் கண்டிருந்தார் என்றும், மேலும் அவர்களுக்குள் கும்பல் குற்றவாளிகள்(gangsters) இருந்தனர், அவர்களில் மொசாம்பிக்கின் பிரபலமான கும்பல் குற்றவாளி ஒருவனும் அடங்குவான் என்றும் அவர் மேலும் கூறினார்.
45 2025 ஏப்ரலில், ஜிம்பாப்வேயின் சில சுவிசேஷகர்கள் நான் அங்கே நடத்தவிருந்த சுகமளிக்கும் ஊழியங்களுக்காக உபவாசித்து ஜெபித்திருந்தனர். சுவிசேஷகர்கள், நம்முடன் இல்லாத மக்கள் நமக்காக இதைச் செய்ய முடிந்தது என்றால், அப்படியானால் தேவன் நம்மிடமிருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார். ஆனால் பல சகோதரர்களும் சகோதரிகளும் சிறப்பு ஆராதனைகளுக்கும் சுகமளிக்கும் ஊழியங்களுக்கும் எதிரிகளாக இருக்கிறார்கள்.
46 சகோதரர்களின் ஒரு சிறிய குழு தனியாகப் போராடிக் கொண்டிருக்கிறது, மேலும் மற்ற அனைவரும் அவர்களை வேடிக்கை பார்ப்பவர்களைப் போலப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாளையத்திற்குள் இருக்கும் திருடர்களும் கொள்ளைக்காரர்களும் ஆவார்கள். அவர்கள் பாளையத்திற்குள் இருக்கும் எதிரிகள் ஆவார்கள்.
47 நாம் இருவேறு அர்ப்பணிப்புடன் இருவேறு கிறிஸ்தவர்களாக இருப்பது சாதாரணமானதா? பழைய கால்சட்டையுடன் பேராலயத்திலிருந்து வந்த ஒரு குழு, மற்றும் புதிய கால்சட்டையில் இருக்கும் மற்றொரு குழு.
48 ஒரு சுகமளிக்கும் பிரச்சார கூட்டத்தின் மத்தியில், ஒரு நாளைக்கு ஒரே ஒரு உணவை மட்டும் சாப்பிடும் ஒரு குழு, மேலும் இறைச்சி அல்லது மீனுடன் முழுமையான ஒரு உணவை, பெரும்பாலும் மாலையில் ஒரு எளிய உணவு அல்லது ஒரு பழத்துடன் சாப்பிடும் மற்றொரு குழு. நொறுக்குத்தீனி சாப்பிடும் ஒரு குழு மற்றும் நொறுக்குத்தீனி சாப்பிடாத மற்றொரு குழு. மேலும் அவர்கள் இருவரும் தாங்கள் அர்ப்பணிப்பில் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.
49 தேவன் உனக்கு எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் போதிலும், மாம்சத்திற்கு அடிமையாக இருக்கிற நீ, ஒரு காரியத்தை அறிந்துகொள்: மாம்சமானது ஒன்றுமில்லை. மாம்சம் நன்றியற்றதும் பொல்லாததுமாய் இருக்கிறது, மேலும் உன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் நீ அதற்கு அளிக்கும் எல்லா உணவுகளுக்காகவும் இன்பங்களுக்காகவும் அது உனக்கு ஒருபோதும் "நன்றி!" சொல்லாது. மேலும் அதற்குப் பதிலாக, நீ அதற்காகச் செய்த எல்லாவற்றிற்கும், அது உனக்கு ஒரு வியாதியைத்தான் ஒட்டவைக்கும்.
50 மேலும் உன்னுடைய காலத்தின் தீர்க்கதரிசி தேவனுடைய சார்பாக உனக்குச் சொல்லும் காரியத்தை நீ நிராகரித்தால், அதை ஒரு அஞ்ஞான மருத்துவர் உனக்கு சொல்வார் மற்றும் நீ அவருக்குக் கீழ்ப்படிவாய். மேலும் முடிவில், உன்னுடைய கலகக்கார ஆத்துமா நரகாவின் நித்திய நரகத்தில் வேதனைப்பட்டுக்கொண்டிருக்க, தேவன் உன்னுடைய விலைமதிப்பற்ற, போற்றத்தக்க மாம்சத்தைப் புழுக்களுக்கும் பூச்சிகளுக்கும் உணவாகக் கொடுப்பார்.
51 நீ சொல்கிறாய்: "சகோதரன் பிலிப்பு, நான் வெள்ளிக்கிழமை ஒரு முழுமையான உணவைச் சாப்பிட்டேன், ஆனால் சனிக்கிழமை அற்புதங்களை நடப்பித்தேன்". ஆம், தேவன் தம்முடைய அனுமதிக்கப்பட்ட சித்தத்தில் அதைச் செய்தார். அதனால்தான் நீ சில உடனடிச் சுகமளிப்புகளைப் பெற்றாய், மேலும் நீ அவைகளைப் பெறுவதற்குக் கூட மிகுந்த சிரமப்பட்டாய்.
52 நீ சொல்கிறாய்: "சகோதரன் பிலிப்பு, நான் வியாதியுள்ளவர்களுக்காக ஜெபித்தேன். அங்கு எந்தவொரு உடனடிச் சுகமளிப்பும் இருக்கவில்லை, ஆனால் அடுத்த நாள், என்னுடைய ஜெபத்தைத் தொடர்ந்து சுகமளிப்புகளின் அநேக சாட்சிகள் இருந்தன".
53 ஒரு உடனடிச் சுகமளிப்பாக இல்லாத ஒரு சுகமளிப்பு, ஒரு சுகமளிப்பு அல்ல என்று நான் சொல்லவில்லை. ஆனால் நாம் துண்டிக்கப்பட்ட உறுப்புகளை வளரச் செய்யக்கூடிய வல்லமையுள்ள வரங்களை வெளிப்படுத்த வேண்டும். அதைப்பற்றித்தான் இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த 2025 ஆம் ஆண்டில் வில்லியம் பிரன்ஹாம் இங்கு இருந்திருந்தால், அவர் தம்முடைய குழுவுடன் அதைத்தான் செய்திருப்பார்.
54 மேலும் 2025 ஆகஸ்டில், போர்ட்டோ-நோவோவின் சகோதரர்கள் பெனினில் உள்ள ஒரு ஊரில் ஒரு சிறப்பு ஆராதனையை ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கு எந்தவொரு உடனடிச் சுகமளிப்பும் இருக்கவில்லை. ஆனால் அடுத்த நாள் கொடுக்கப்பட்டிருந்த சாட்சிகள், அந்த ஊரின் தலைவர் உட்பட, அநேக மனிதர்களைச் செய்தியை விசுவாசிக்கச் செய்தன.
55 உணவு மட்டுமே மனஆயத்திற்கான ஒரே காரணி என்று நான் சொல்லவில்லை, ஆனால் அது மனஆயத்தத்தின் ஒரு முக்கிய காரணியாகும். செய்தியின் மூலமாக, செய்தி சொல்லியிருக்கிற எல்லாவற்றின்படியும், இணையம், வீண் அரட்டைகள் மற்றும் பிற காரியங்கள் ஏனைய முக்கிய காரணிகளாகும் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்கள். எனவே, நீ அதிகமாக உணவருந்தியதாகக் கண்டால், அப்பொழுது, அடுத்த நாள் நீ ஒரு உணவை மட்டும் உட்கொள்ளலாம் அல்லது எதையும் சாப்பிடாமல் இருக்கலாம்.
56 நீங்கள் அந்தளவுக்கு பசியாய் இருக்க முடியும், மற்றும் உங்களுடைய சரீரத்திற்கு என்ன தேவை என்று பார்க்கிற தேவன், நீங்கள் அடுத்த நாள் சாப்பிட வேண்டிய ஒரு உணவை உங்களுக்கு வெளிப்படுத்த முடியும் என்பதை நீங்கள் அறிகிறீர்களா? நம்முடைய பரிசுத்தமுள்ள வாழ்க்கையின் மூலம் நாம் நம்முடைய சகோதரர்களைத் தாங்க வேண்டும். அதனால்தான், Kc.162 முதற்கொண்டு, அர்ப்பணிப்பில் இல்லாத ஒரு சகோதரன் பிரசங்க பீடத்தை அணுகக் கூடாது.
57 மேலும், உங்களுடனேகூட இருக்கிற தேவனுடைய வல்லமையைக் கண்டபின்பு, ஒரு ஜனக்கூட்டம் உங்களிடம் ஒரு சுகமளிக்கும் ஆராதனையைக் கேட்கும்போது, நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அது உங்களுடைய அர்ப்பணிப்பை இரட்டிப்பாக்குவதற்கான ஒரு அழைப்பைப் போல இருக்க வேண்டும். மேலும் ஒரு சுகமளிக்கும் கூட்டத்தின் போது, உன்னுடைய குழுவில் உள்ள ஒரு உறுப்பினர் ஒரு முழுமையான உணவையோ அல்லது ஒரு சுவையான உணவையோ சாப்பிட்டால், நீ அந்நபரை உன்னுடைய குழுவிலிருந்து நீக்கிவிட வேண்டும்.
58 மேலும் ஏதேனும் ஒரு சிறப்பு ஆராதனைக்கு அல்லது ஒரு சுகமளிக்கும் ஆராதனைக்கு வரும்பொழுதும், மற்றும் அது நடைபெறும் பொழுதும், யாரும் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கூடாது. மேலும் முடிந்தால், வியாதியுள்ளவர்களும் ஒரு நல்ல மனஆயத்தத்துடன், சாப்பிடாமல் வர வேண்டும். இதெல்லாம் ஆராதனையில் அல்லது சுகமளிக்கும் ஆராதனையில் ஒரு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
59 ஆனால் விதிவிலக்குகள் உள்ளன. கானாவிலுள்ள குமாசியின் சுகமளிக்கும் ஆராதனையில், ஒரு பெண் ஜிம்பாப்வேயில் மரணத்தருவாயில் இருந்த பெண்னைப்போல ஒரு ஆபத்தான நிலையில் இருந்தாள். அப்போஸ்தலன் யானிக் அவளுக்காக ஜெபிப்பதற்காகப் பிரசங்க பீடத்திலிருந்து வேகமாக இறங்கி வந்தார். அவள் சுயநினைவு பெற்றாள், மேலும் அவளால் உட்கார முடிந்தது. பின்பு அவள் தண்ணீர் குடிக்கக் கேட்டாள். மேலும் தண்ணீர் அவளுக்குக் கொடுக்கப்பட்டது. அது உணவாகவே இருந்திருந்தாலும் கூட, இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது.
60 தேவன் நம்மிடம் எதைக் கேட்கிறாரோ, அதை நாம் அவருக்குக் கொடுக்க வேண்டும், ஏனென்றால் அதற்காகத்தான் அவர் நம்மைப் பூமியின் மேல் அனுப்பினார். நம்முடைய மரணத்திற்குப் பின்பு நாம் ஜெயங்கொள்பவர்களாகவே அவரிடம் திரும்பிச் செல்ல வேண்டும். மேலும் இந்த வெற்றி இங்குப் பூமியின் மேல் காணப்பட வேண்டும், மற்றும் முழு உலகமும் இதற்குச் சாட்சியாய் இருக்க வேண்டும்.
61 ஆதி கிறிஸ்தவர்களைப் பற்றிய புத்தகங்களை நான் வாசித்துக் கொண்டிருந்தபோது, ஒரு காரியம் என்னை ஆழமாகப் பாதித்தது. அப்போஸ்தலர்கள் முதற்கொண்டு முதலாவது சங்கங்கள் வரை, பல்வேறு சங்கங்களுக்கு வந்தவர்கள் அவர்கள் செய்த பெரிய அற்புதங்களினால் தனித்து அடையாளம் காணப்பட்டார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கிறார்கள். மேலும் இது கி.பி 325 ஆம் ஆண்டில் நடந்த நிசேயா சங்கம் உட்பட, பல சங்கங்களின் வழியாக, கி.பி 451 ஆம் ஆண்டில் நடந்த சல்சிடான் சங்கம் வரை தொடர்ந்தது.
62 தங்களது மக்களுக்காகத் தீர்மானிப்பதற்கு ஒன்று கூடியவர்கள் அவர்கள்தான். மேலும் அவர்களுடைய ஜீவியத்திலிருந்த வல்லமை மற்றும் வெளிப்பாட்டினால்தான், அவர்கள் உயிரோடு வாழ்ந்த காலத்திலேயே பரிசுத்தவான்களாகக் கருதப்பட்டார்கள்.
63 அஞ்ஞானிகளும் அவிசுவாசிகளும் நம்முடைய அற்புதங்களின் மூலமாக தேவனுடைய இருப்பைக் காண வேண்டும். ஏற்கனவே, சில சுகமளிக்கும் ஆராதனைகளில், ஆம்புலன்ஸ்கள் வியாதியுள்ளவர்களுடன் வருவதை நாம் காண்கிறோம். அது அப்படித்தான் இருக்க வேண்டும்.
64 நீங்கள் இதை ஒரு கடினமான காரியமாகப் பார்க்கக் கூடாது. ஒரு போர்வீரன் யுத்தத்திற்குச் செல்லும் ஒரு காலமுண்டு, மற்றும் அவன் ஓய்வெடுக்கும் ஒரு காலமுண்டு. மேலும், திருமணமானவன் ஏழு மாதங்கள் வரை படைவரிசைக்குத் திரும்ப முடியும்.
65 வில்லியம் பிரான்ஹாம் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குச் சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்தக் கூடியவராக இருந்தார். மற்றும் அதற்குப் பிறகு, அவர் சிறிது காலம் தனித்திருந்தார். மேலும் அவர் தனித்திருந்து போது, அவர் தன்னுடைய சுகமளிக்கும் ஆராதனைகளின் படங்களைப் பார்ப்பார், மேலும் அவர் தான் நிறைவேற்றியிருந்த காரியத்திற்காக மிகவும் சந்தோஷமாக இருந்தார்.
66 மேலும் அதற்குப் பிறகு, அவர் சபினோ கேன்யனுக்குள் தனித்திருக்கும்படிச் செல்வார். பின்பு, அவர் மீன்பிடிப்பதற்கும் மற்றும் வேட்டையாடுவதற்கும் செல்வார், மற்றும் அவர் பேரி கிரீன் மற்றும் பிறருடன் நெருப்பிலிட்ட கறியைச் சாப்பிடுவார்.
67 மேலும் செய்தியின் ஒரு புதிய அதிகாரம் வெளிவந்த பிறகு, நான் உங்களுடன் கன்மலைப் பகுதியிலுள்ள ரிகேடிபாவிற்குள் எப்படித் தனித்திருக்கும்படி செல்கிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு தீர்க்கதரிசியும் தன் சீஷர்களுடன் ஒரு இடத்திற்குள் தனித்திருக்கும்படி செல்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன் சீஷர்களுடன் ஒலிவ மலையின் மேல் அல்லது கெத்செமனே தோட்டத்தில் தனித்திருக்கும்படி செல்வார்.
68 சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவுக்காகப் போராடுவோம். கிரீடங்களும் அலங்கார பதக்கங்களும் ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கே உரியவை. மற்றும் எல்லாவற்றையும் அறிந்திருக்கிற தேவன், நாம் செய்கிற ஒவ்வொரு பிரயாசத்திற்கும் பலனளிப்பார். மேலும் ஏற்கனவே, தங்களது ஜீவிய காலத்தில் ஒருபோதும் தரிசனம் கண்டிராத சில சகோதரர்கள், இப்போது சுகமளிக்கும் ஆராதனைகளின் பொழுது தரிசனங்களைக் காண்கிறார்கள்.
69 மேலும் தீர்க்கதரிசியின் அதிகாரம் இல்லாமல் கூட, சகோதரர்கள் நோயாளிகளுக்காகத் தங்களது ஜெபங்களின் பொழுது தரிசனங்களுடனும் மற்றும் தங்களது கைகளில் உணர்வுகளுடனும் பெரிய அற்புதங்களை நிறைவேற்றுகிறார்கள். அப்படியே துல்லியமாக வில்லியம் பிரன்ஹாம் அதை உணர்ந்தது போலவே. வில்லியம் பிரன்ஹாம் உங்களையும் என்னையும் போன்ற ஒரு சாதாரண மனிதனாக இருந்தார். மற்றும் அவர் தன் தலைமுறையில் எதை நிறைவேற்றினாரோ, அதை நாம் அனைவரும் நம்முடைய தலைமுறையில் நிறைவேற்ற முடியும்.
70 2025 செப்டம்பர் 9 செவ்வாய்க்கிழமை அன்று, கானாவிலுள்ள குமாசியில் தனது இரண்டாவது சுகமளிக்கும் ஆராதனைக்குப் பிறகு, அப்போஸ்தலன் யானிக் எனக்கு எழுதியிருந்தார், என்னவென்றால்: "சகோதரர் பிலிப்பு, நேற்று சுகமளிக்கும் ஆராதனையின் பொழுது, சூழ்நிலை உண்மையிலேயே ஆவிக்குரியதாக இருந்தது. நான் என்னைச் சுற்றிலும் ஒரு பலம் போன்றதை உணர்ந்தேன் மற்றும் நான் வேகமாகச் செயல்பட்டேன். மேலும், தன்னை வெளிப்படுத்தியிருந்த ஒரு பிசாசைக்கூட, நான் தன்னிச்சையாகவே, அதிகாரத்துடன் துரத்தினேன்.”
71 மேலும் சில விநாடிகளுக்கு, நான் ஆண்கள் பகுதியில் ஒரு தரிசனத்தைக் கண்டேன். அந்தத் தரிசனத்தில், எழுந்துகொண்டிருந்த ஒரு முடக்குவாதக்காரனை நான் கண்டேன். பின்பு அந்த முடக்குவாதக்காரன் தனக்குக் கிடைத்த சுகமளித்தலுக்கு சாட்சியாகத் தன் ஊன்றுகோலை மேலே உயர்த்தினான். மற்றும் 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு மனிதன் தன் ஊன்றுகோலை மேலே உயர்த்தியபடி எழுந்திருந்தான், அப்படியே துல்லியமாக நான் அதைத் தரிசனத்தில் கண்டது போலவே.
72 மேலும் செப்டம்பர் 9 அன்று, இன்னும் குமாசி நகரிலேயே, நான் ஒரு குருடாயிருந்த ஸ்திரீக்காக ஜெபித்துக் கொண்டிருந்த பொழுது, நான் தரிசனத்தில், ஒரு குருடாயிருந்த ஸ்திரீ பார்வையைப் பெற்றுக்கொள்வதைக் கண்டேன். நான் மிகவும் கடுமையான வியாதியுள்ளவர்களுடன் முடிக்கும் வரை தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தேன். பார்வையைப் மீண்டும் பெற்றுக்கொண்ட எந்தவொரு குருடரும் அங்கே இருக்கவில்லை.
73 மற்றும் பிரசங்கபீடத்திற்குத் திரும்பி வந்திருந்தபோது, நான் குருடர்களின் மத்தியில் விசுவாசத்தை உணர்ந்தேன் என்றும் அவர்கள் பார்வையடைப் போகிறார்கள் என்றும் கூறத் தொடங்கினேன். மற்றும் அந்த மாத்திரத்திலேயே, குருடாயிருந்த வயது முதிர்ந்த ஸ்திரீ ஒருத்தி பார்வையைப் பெற்றுக்கொள்ளத் தொடங்கினாள். அவள் சிதுங்விசாவின் வயதான ஸ்திரீயைப் போலத் தன் ஊன்றுகோல் இல்லாமல் எழுந்திருந்தாள். மேலும் அவள் பிரசங்கபீடத்தை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தாள். மற்றும் திரளான ஜனங்கள் கைகளைத் தட்டத் தொடங்கினார்கள். மேலும் தேவனுடைய பரிசுத்தம் கூட்டத்தினர் மத்தியில் உணரப்பட்டது".
74 செப்டம்பர் 4 முதல் 6 வரை அக்ராவில், அப்போஸ்தலன் யானிக் இதுபோன்ற அனுபவங்களைக் கொண்டிருந்தார். ஆயினும், அதற்கு முன்பு, தன் வாழ்நாள் முழுவதிலும், அவர் ஒருபோதும் ஒரு தரிசனத்தைக் கொண்டிருந்ததில்லை. இவை நீடிய பொறுமையின் கனிகளும் மற்றும் வெகுமதிகளும் ஆகும். இந்தச் செய்தியிலுள்ள ஒவ்வொரு பிரசங்கியும் கனிகளைக் கொடுக்க வேண்டும்.
75 மற்றும் இந்த அதிகாரத்திற்குப் பிறகு மூன்று மாதங்கள் வரை, சிறப்பு ஆராதனைகளையோ அல்லது சுகமளிக்கும் ஆராதனைகளையோ நடத்த விரும்பாத தங்களது தலைவர்களிடம் விளக்கங்களைக் கேட்பதற்கு ஒரு சபைக்கு அல்லது ஒரு நாட்டிற்கு உரிமையுண்டு. ஒரு சபை பூனைகளை வளர்ப்பதாகவோ அல்லது பூனைகளின் உரிமையாளராகவோ இருக்க முடியாது.
76 மேலும் இப்போது, எனக்குச் செவிகொடுங்கள். இனிமுதற்கொண்டு, நமது சிறப்பு ஆராதனைகள் மற்றும் சுகமளிக்கும் ஆராதனைகளின் பொழுது, வெளிப்பாட்டின் வரங்களும் கிரியை செய்ய வேண்டும். நாம் தீர்க்கதரிசனங்களையும், அந்நிய பாஷைகள் பேசுவதையும், பாஷைகளின் வியாக்கியானங்களையும், மற்றும் முக்கியமாக அறிவை உணர்த்தும் வார்த்தைகளையும் கட்டாயமாக கேட்க (hear) வேண்டும். இது தவிர்க்கமுடியாததாகும். தேவனுடைய ஊழியத்திற்காக எல்லா ஆவிக்குரிய வரங்களையும் நமக்குக் கொடுக்கும்படி நாம் அனைவரும் அவரிடம் கெஞ்ச வேண்டும்.
77 இதற்காக, சகோதரனாயினும் சகோதரியாயினும், நாம் ஒவ்வொருவரும், சுகமளிக்கும் வரத்தைக் கொண்டிருக்கிறவரைப் போன்ற அதே அர்ப்பணிப்பிலும் மற்றும் ஆயத்த நிலையிலும் இருக்க வேண்டும். வேதாகமம் சுகமளிக்கும் வரமாகிய ஒரே ஒரு ஆவிக்குரிய வரத்தைப் பற்றி மாத்திரமல்ல, ஒன்பது ஆவிக்குரிய வரங்களைப் பற்றியும் பேசுகிறது. மற்றும் இதற்காக, ஒவ்வொருவரும் தங்களது அர்ப்பணிப்பைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.
78 வீட்டிலோ அல்லது சிறப்பு ஆராதனைகள் மற்றும் சுகமளிக்கும் ஆராதனைகளின் பொழுதோ, ஜெபம் பண்ணி தேவனிடம் மன்றாடுங்கள். "ஓ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் இந்த கூட்டத்தினர் மத்தியில் நோயாளிகளைக் சுகமாக்கிக் கொண்டிருக்கையில், என்னையும் நினைவுகூர்ந்து, உமது ஊழியத்திற்காக எனக்கு ஆவிக்குரிய வரங்களைத் தந்தருள்வீராக" என்று சொல்லுங்கள்.
79 "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, எனக்குத் தீர்க்கதரிசன வரங்களையும், அந்நிய பாஷைகள் பேசும் வரங்களையும், பாஷைகளின் வியாக்கியான வரங்களையும், அறிவின் வார்த்தையின் வரங்களையும் மற்றும் இன்னும் பிறவற்றையும் தந்தருள்வீராக" என்று சொல்லுங்கள். மேலும் தேவன் அற்புதங்களையும் மற்றும் உடனடிச் சுகமளிப்புகளையும் தந்தருள்வது போலவே, நீங்கள் அவரிடம் கேட்டுக்கொள்வதை அவர் உங்களுக்குத் தந்தருள்வார்.
80 நான் வெளிப்பாட்டின் இந்தப் பகுதியை எழுத்து வடிவமாக்கிக் கொண்டிருந்த பொழுது, நான் என்னுடைய சொந்தச் சிந்தனையைச் சேர்த்திருந்தேன். இனிமேல், ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை அல்லது வேறு எந்தவொரு ஆவிக்குரிய வரத்தையும் கேட்டுக்கொள்வதற்காக ஜெப வரிசையில் வர முடியும் என்று நான் சேர்த்திருந்தேன். மேலும் உடனடியாக, தேவனுடைய தூதன் என்னைக்கடிந்து கொண்டு: "அதை அகற்றிவிடு!" என்று கூறினார்.
81 இதன் பொருள் என்னவென்றால், நம்மில் ஒவ்வொரு சகோதரனும் சகோதரியும், தீர்க்கதரிசன வரங்கள், அந்நிய பாஷைகள் பேசும் வரங்கள் மற்றும் பிற வரங்களையும் பெற்றுக் கொள்வதற்காக, மிகுந்த தியாகங்களுடன், தனியாகப் போராட வேண்டும். சுகமளிக்கும் வரங்களையும் மற்றும் அற்புதங்களின் வரங்களையும் பெற்றுக்கொள்வதற்காக நாம் போராடுவது போன்ற அதே வழியில்தான் இது இருக்க வேண்டும்.
82 வில்லியம் பிரான்ஹாமின் காலத்தில், தீர்க்கதரிசனத்தின் மிகப்பெரிய வரத்தைக் கொண்டிருந்த பெண்ணாகிய அன்னா ஷ்ரேடரைப் பாருங்கள். வில்லியம் பிரான்ஹாம் அவளைப் பற்றிக் கூறுகிறார்: "இதோ மிஸ் அன்னா ஷ்ரேடர், அவள் ஏன் அப்படிப் படுத்திருக்கிறாள் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். அவள் ஒரு தீர்க்கதரிசன வரத்தைக் கொண்டிருக்கிறாள். அதுதான் அப்படிச் செய்கிறது". இது 1960 நவம்பர் 25 அன்று பிரசங்கிக்கப்பட்ட "மாநாடு" என்ற பிரசங்கத்தில் உள்ளது.
83 மேலும் வில்லியம் பிரான்ஹாம், கோர்டன் லின்சே மற்றும் அவருடைய காலத்து அனைத்து ரெவரெண்டுகளும் அன்னா ஷ்ரேடர் ஒரு தீர்க்கதரிசினி என்று ஒப்புக்கொண்டிருந்தனர். அன்னா ஷ்ரேடரின் படங்களில் அவர் எவ்வளவு மெலிந்துபோயிருந்தார் என்பதைப் பாருங்கள், சுகமளிக்கும் பிரச்சாரக் கூட்டங்களின் பொழுது வில்லியம் பிரான்ஹாமின் முகம் எவ்வளவு மெலிந்து போயிருந்தது என்பதையும் பாருங்கள், அப்போது ஒரு ஆவிக்குரிய வரத்தின் விலையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
84 அறியாமையில் இருக்காதீர்கள். ரகசியமான அசுத்தமுள்ளதாக அவர்களுடைய வாழ்க்கை இருந்தபோதிலும், தீர்க்கதரிசனங்களில், அந்நிய பாஷைகளில் மற்றும் அறிவை உணர்த்தும் வார்த்தைகளில் சுவிசேஷகர்களைப் பயன்படுத்துகிற ஆவிகள், குறிசொல்லுகிற பிசாசுகளாக இருக்கின்றன. மெய்யான பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதற்காக நீங்கள் உங்களது பாத்திரங்களைச் சுத்திகரிக்க வேண்டும்.
85 நீங்கள்: "நானும் கூட ஒரு மகத்தான ஆவிக்குரிய வரத்தைப் பெற முடியுமா?" என்று கூறுகிறீர்கள். ஆம், உங்களால் அதைப் பெற்றுக் கொள்ள முடியும். அப்போஸ்தலன் யானிக்கை ஓர் அடையாளமாக எடுத்துக் கொள்ளுங்கள். அப்போஸ்தலன் யானிக் செய்தியில் வெறும் ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் மற்றும் விளக்கிச் சொல்கிற ஒருவராக மட்டுமே இருந்தார். அவரால் இத்தனை அற்புதங்களைச் செய்ய முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. நாம் நம்மை தேவனுக்கு ஒப்புக்கொடுக்க ஏற்றுக்கொண்டால், அவர் நம்மில் ஒவ்வொருவரையும் பயன்படுத்த முடியும் என்பதற்கு அவரே சாட்சி. நாம் அதற்குரிய விலையை மட்டும் செலுத்த வேண்டும்.
86 வில்லியம் பிரன்ஹாமைக் கவனியுங்கள்! சுகமளிக்கும் ஊழியங்களுக்கு ஆயத்தமாவதற்கான நேரம் வரும் பொழுது, அவர் எவ்விதம் மாறுவார்? "வில்லியம் பிரன்ஹாம், தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன்" என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை நான் உங்களுக்கு மேற்கோள் காட்டுவேன். நான் பக்கம் 214 இலிருந்து ஒரு பகுதியை வாசிக்கிறேன்: “கடந்த அக்டோபரில் அவர் இங்கு வந்து சென்றதிலிருந்து, வில்லியம் பிரான்ஹாம் 12 கிலோ எடையை இழந்திருக்கிறார், மேலும் அவருடைய கண்கள் மிகவும் குழி விழுந்து போயிருக்கின்றன”. நீங்கள் பார்க்கிறீர்களா?
87 ஏற்கனவே இளைத்துப் போயிருந்த வில்லியம் பிரன்ஹாம், சில நாட்களிலேயே இன்னும் 12 கிலோ எடையை இழந்து போயிருந்தார். கிறிஸ்துவின் சுவிசேஷம் பூமியின் கடையாந்தரங்கள் வரை சென்றடைவதற்காக நம்முடைய முன்னோடிகள் எந்த விலையைச் செலுத்தினார்களோ, பரலோகத்தில் அவர்களோடு கூட ஒரே மேஜையில் அமருவதற்கு நாம் பாத்திரவான்களாக இருக்கும்படிக்கு நம்முடைய காலத்திற்காக நாமும் அதே விலையை செலுத்த வேண்டும்.
88 மேலும், ஒரு சுகமளிக்கும் வரத்தையோ அல்லது வேறொரு ஆவிக்குரிய வரத்தையோ கொண்டிருக்கிற நீ, உன்னிடமிருக்கும் ஆவிக்குரிய வரத்தைக் காத்துக்கொள்ளும்படிக்குச் செயல்பட வேண்டும்.
89 இயலுமானால், ஒரு சுகமளிக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் இருக்கும் பொழுது, நீ உன்னுடைய குழுவினரோடு கூட ஒரே வீட்டில் தங்கியிருக்க வேண்டும். சோவெட்டோவிலுள்ள வீட்டைப் போல அமைதியான மற்றும் செலவு குறைந்த ஒரு சிறிய வீட்டில்.
90 பணம் மற்றும் பரிசுகளுக்கு மேலாக, உங்களுக்கு அளிக்கப்படும் எந்தவொரு கனத்தையும் நீங்கள் உறுதியாக மறுக்க வேண்டும். உங்களுக்கு ஆதரவாளர்களோ அல்லது சீஷர்களோ இருக்கவே கூடாது. மேலும், ஒரு சிறப்பு ஆராதனைக்காக, உன்னுடைய சபை உனக்கு ஒரு ஆபத்தாக இருக்குமானால், நீ யாரென்று அறியப்படாத ஒரு இடத்திற்குச் சென்று அதை நடத்த வேண்டும்.
91 உன்னுடைய வீடோ, உன்னுடைய சபையோ அல்லது உன்னுடைய தேசமோ உன்னை ஆதரித்தால் அல்லது உன்னை ஒரு ஹீரோவாகப் பார்த்தால், உன்னுடைய சுகமளிக்கும் ஊழியத்தை விட்டுவிட்டு, மீண்டும் திரும்பி உன்னுடைய சுகமளிக்கும் ஊழியத்தை நடத்துவதற்கு முன்பாக, கானா ஊர் திருமணத்தில் கர்த்தராகிய இயேசு செய்தது போலச் சென்று அதைச் சரிசெய்.
92 உங்களை மகிமைப்படுத்துகிற அல்லது உங்களைப் பாராட்டுகிற எவனும், நீங்கள் உறுதியாகக் கண்டிக்கவும் உடனடியாக நிராகரிக்கவும் வேண்டிய ஒரு ஆபத்தாக இருக்கிறான்.
93 யோவான் 2 இல், கானா ஊர் திருமணத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு அற்புதத்தை நடப்பிக்கும் தருவாயில் இருந்த பொழுது, தம்முடைய தாயாகிய மரியாளை எவ்விதம் கடுமையாகக் கண்டித்தார் என்பதை நினைவுகூர்ந்து பார். மேலும், லூக்கா 18:19 இன் படி, உனக்கு அளிக்கப்படும் மகிமையின் அனைத்துப் பட்டங்களையும் கனங்களையும் நீ நிராகரிக்க வேண்டும்.
94 ஜனங்கள் உனக்குக் கனங்களை அளிக்கக்கூடிய ஒரு இடத்திற்கு நீ செல்லவே வேண்டாம். மேலும், கனங்களும் மகிமைகளும் உன்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கினால், அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடுவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடி.
95 மேலும், லூக்கா 11:27-28 இல், ஜனக்கூட்டத்திலிருந்து ஒரு ஸ்திரீ கர்த்தராகிய இயேசுவை நோக்கிச் சத்தமிட்டு: "உம்மைச் சுமந்த கர்ப்பமும், நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகள்" என்று கூறினாள். ஆனால், கர்த்தராகிய இயேசு உடனே மறுமொழியாக: "மாறாக, தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறவர்கள் மற்றும் அதைக் காத்துக்கொள்ளுகிறவர்கள் பாக்கியவான்கள்" என்று சொன்னார்.
96 அந்த அற்புதத்தை நீ செய்யவில்லை, மாறாக கூட்டத்தினரிடத்தில் பிரசன்னமாயிருக்கிற தேவனுடைய தூதரே அதைச் செய்தார் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்; ஆகவே, உணர்ச்சிகளுக்குத் தூரமாக, நீ அமைதியாக இருக்க வேண்டும்.
97 மேலும், வெளிப்பாடு முன்னேறுகிறதாக இருக்கிறபடியால், நான் உனக்கு ஏற்கனவே சொல்லுகிறபடி, சுகமடைந்த ஒரு நோயாளியின் நன்றிகளையும் கட்டி அணைத்தலையும் நீ ஏற்றுக்கொள்ளவே கூடாது; ஏனென்றால் அந்த அற்புதத்தை செய்தது நீ அல்ல, தேவனே அதைச் செய்தார்.
98 நம்முடைய இலக்கு தேவனுடைய பரிபூரண சித்தமாகும். மனித சரீரங்களில் நாம் தூதர்களைப் போல இருக்க வேண்டும். 1993 இல் பரந்த பகல் வெளிச்சத்தில் நான் ஒரு ஊடுருவக்கூடிய மேகமாய், நான் கொண்டிருந்த அந்த அனுபவத்தை நினைவுகூருங்கள்.
99 நான் கூறுகிற யாவும் உலகெங்குமுள்ள சகோதர சகோதரிகளான கிறிஸ்தவர்களுக்கே உரியதாகும். உங்கள் தேசத்தைப் பற்றெரியவைக்கப்போகும் எழுப்புதலின் ஜுவாலை வேறெங்கிருந்தோ வரும் என்று நீங்கள் நினைக்காதிருங்கள். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு அந்தந்த தேசத்தின் குமாரர்களே எழும்ப வேண்டும். தேனினால் தயாரிக்கப்பட்ட தூய்மையான திராட்சரசம் பரிமாறப்படவிருக்கிறது; மேலும் ஒருவேளை அது ஏற்கனவே தொடங்கியிருக்கலாம். உங்கள் பாத்திரங்களைச் சுத்திகரித்து ஆயத்தப்படுத்துங்கள்.
100 நல்லது. 2025 செப்டம்பர் 9 செவ்வாய்க்கிழமையன்று, ஓரேப் என்னும் பெயருடைய ஒரு சகோதரன், 2025 செப்டம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை இரவில் தான் கண்டிருந்த ஒரு சொப்பனத்தை எனக்கு அனுப்பியிருந்தார். ஓரேப் என்பது ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்த ஒரு சகோதரனுடைய பெயருமாகும்; அவரை இங்கேயுள்ள சகோதரர்கள் கலப்பின ஜனமாய் கருதுகிறார்கள்.
101 அந்த சகோதரன் கூறுகிறார்: "சகோதரன் பிலிப்பு, நான் உங்களுக்கு அனுப்ப வேண்டியதாயிருந்த ஒரு பயங்கரமான சொப்பனத்தைக் கண்டேன். சகோதரன் பிலிப்பு, நான் என் தகப்பனுடைய பழைய வீட்டின் முற்றத்தில் நின்றுகொண்டிருப்பது போலச் சொப்பனம் கண்டேன்.”
102 நான் நிமிர்ந்து பார்த்தபோது, மேற்கே, வடக்கு நட்சத்திரத்தை மேற்கு நோக்கி கண்டேன். அது வானத்தில் மிகத் தெளிவாகத் தெரிந்தது, மேலும் அந்த நட்சத்திரத்தின் நிறம் அஸ்தமிக்கிற சூரியனின் நிறத்தைப் போலச் சிவப்பாய் இருந்தது. பின்பு, சிறிது நேரம் கடந்தது, அந்த நட்சத்திரம் மறைந்துபோனது; அந்த நட்சத்திரத்தின் வெளிச்சமே பூமியை ஒளிரச் செய்திருந்ததால் காரிருள் உண்டாயிற்று. அப்பொழுது நான்: "ஓ தேவனே, காக்குவ் பிலிப்பு இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம்?" என்றேன்.
103 கிழக்கு நோக்கி திரும்பியபோது, வானம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி விரிந்து கொண்டிருப்பதை நான் கண்டேன். பின்பு, இன்னும் அதிக வல்லமையும் வெண்மையுள்ள வடக்கு நட்சத்திரம் கிழக்கே தோன்றியது. பின்பு, அந்த வடக்கு நட்சத்திரத்திலிருந்து திரளான பிரகாசமுள்ள நட்சத்திரங்கள் வெளிப்பட்டு வந்து அதைச் சூழ்ந்துகொண்டன. இவ்வாறு, அதைச் சுற்றி நட்சத்திரங்களின் ஒரு கிரீடத்தை அது உண்டாக்கியது.
104 பின்பு, வடக்கு நட்சத்திரம் மெதுவாகவும், பின்னர் மென்மேலும் வேகமாகவும் சுழலத் தொடங்கியது. மேலும் அது சுழன்றபோது, அதைச் சூழ்ந்திருந்த நட்சத்திரங்கள், கடிகார முள் சுழலும் திசையில் ஒன்றன்பின் ஒன்றாகச் சமிக்ஞைகளை அல்லது ஒளிக்கீற்றுகளை வெளிப்படுத்தின.
105 மேலும், வடக்கு நட்சத்திரம் மிக அதிவேகமாகச் சுழன்றுகொண்டிருந்தபோது, எல்லா நட்சத்திரங்களும் பிரகாசமாய் ஒளிர்ந்தன; ஏனெனில் அதன் ஒளி அதைச் சூழ்ந்திருந்த நட்சத்திரங்களுக்குள் இருந்தது. மேலும் ஒரு தருணத்தில், அதனுடைய அதிவேகத்தின் காரணமாக வடக்கு நட்சத்திரம் நிலையாக இருப்பதுபோல் தோன்றியது. அதைச் சூழ்ந்திருந்த நட்சத்திரங்களும் வடக்கு நட்சத்திரத்தைப் போல மிகவும் பிரகாசமாயின; மேலும், அவை வடக்கு நட்சத்திரத்திற்குப் பின்னால் நேரான கோடுகளாக அமைந்தன.
106 பின்பு, "நடுராத்திரியாயிற்று, சத்தம் தொனித்தது" என்ற பாடலின் சத்தத்திற்கு, வடக்கு நட்சத்திரமும் அதற்குப் பின்னால் வரிசையாக நின்ற எல்லா நட்சத்திரங்களும் ஒரு இராணுவத்தையும் அதன் தலைவரையும் போல, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வானத்தில் அணிவகுத்துச் சென்றன. வடக்கு நட்சத்திரம் முற்றிலும் வெண்மையாய் இருந்தது, ஆனால் அதைப் பின்தொடர்ந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் உட்புறத்தில் பிரகாசமான வெண்மையாயும், ஒரு கேடயத்தைப் போல நீல நிறக் கிரீடத்தினால் சூழப்பட்டும் இருந்தன.
107 மேலும் அவைகள் மேற்கை அடைந்தபோது, அவை அனைத்தும் மறைந்துபோயின. மற்றும் வானத்திலிருந்து மின்னல்கள் விழுந்தன. மேலும் உடனடியாக, பூமியின்மேல் இருந்த எல்லா மனிதர்களும் விழுந்து, தரையில் உருண்டு, வெவ்வேறு மிருகங்களாக மாற்றப்பட்டார்கள். நானும் ஒரு நாயாக மாற்றப்பட்டேன், மேலும் நான் பேச விரும்பியபோது, குரைத்தேன்.
108 மேலும் ஒவ்வொருவனும் பேச விரும்பியபோது, அவன் எழுப்பியது ஒரு மிருகத்தின் சத்தமாகவே இருந்தது, மேலும் மிருகங்கள் அவனைப் புரிந்துகொண்டன. மேலும் ஒவ்வொரு மிருகமும் ஒரு மனிதனாக இருந்தபோது கொண்டிருந்த தன் பெயரையே இன்னும் கொண்டிருந்தது.
109 மேலும் நான், ஒரு மனிதனைப் போலப் பேச முயற்சி செய்துகொண்டிருந்தேன், ஆனால் என் வாயிலிருந்து வெளிவந்தது ஒரு நாய் குரைப்பதாகவே இருந்தது.
110 மேலும் நாய்களைப் போன்ற மிருகங்கள் என்னைக் கொல்ல எனக்கு விரோதமாக வந்தன, ஆனால் நான் குரைத்தேன், மற்றும் நான் தங்களில் ஒருவன் என்பதை அவைகள் கண்டு, மேலும் அவைகள் என்னைக் கொல்லவில்லை. மேலும் நான் விழித்துக்கொண்டேன். மற்றும் இது போன்ற எதையும் நான் ஒருபோதும் கண்டதில்லை என்பதால், நான் மிகவும் கலக்கமடைந்தேன்".
111 இது என்ன? இவை நம்முடைய நியமக் காலத்தின் வெவ்வேறு கட்டங்கள் ஆகும், சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2025 அன்று நான் கண்ட தரிசனம் அறிவித்தபடி. சாயங்கால வேளையிலிருந்து வருகிற நீங்களோ, இப்போது நடந்துகொண்டிருப்பதை வில்லியம் பிரன்ஹாம் கண்டிருந்தார் என்பதை நினைவு கூருங்கள்.
112 18 ஆகஸ்ட் 1963 அன்று பிரசங்கிக்கப்பட்ட, "ஒன்றிணைக்கும் காலமும் அடையாளமும்" என்ற சிற்றேட்டில், வில்லியம் பிரான்ஹாம் இதைச் சொல்கிறார்: "இந்த நடுராத்திரி சத்தத்திற்கு நாம் ஆயத்தமாகுவோம். நீங்கள் எதிர்பாராத நாழிகையிலே இது வருகிறது. ஒரு சத்தம் உண்டாகும்; அது அவிசுவாசிகளுடைய உலகின் மத்தியில் அல்ல, ஆனால் இதற்காகக் காத்துக்கொண்டிருக்கும் விசுவாசிகளுக்குள் ஒரு ரகசியமாக இருக்கும். நட்சத்திரங்கள் வரிசையாக வருவதை நீங்கள் காண்கிறீர்களா? காண்கிறீர்களா?".
113 வில்லியம் பிரான்ஹாம் சொல்கிறார்: "நட்சத்திரங்கள் வரிசையாக வருவதை நீங்கள் காண்கிறீர்களா?". Kc.172 இன் இந்த அதிகாரம் நட்சத்திரங்களின் பவனிக்கான பாடலாய் இருக்கிறது. முதலாவது கட்டத்தில், வடக்கு நட்சத்திரம் மட்டுமே வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மேலும் மத உலகம் அதன் வெளிச்சத்தை அணைப்பதற்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதற்கு எதிராகப் போரிட்டது.
114 நாம் இப்போது வெளியே வந்துகொண்டிருக்கிற இந்த இரண்டாவது கட்டம், Kc.155 முதல் Kc.162 வரையிலும், வடக்கு நட்சத்திரம் கிழக்கில் தனியாக மீண்டும் தோன்றுகிற கட்டம் ஆகும். பின்னர், Kc.163 முதற்கொண்டு பிரகாசமான நட்சத்திரங்களின் திரள்கள் தோன்றுகின்றன. பின்னர், வடக்கு நட்சத்திரம் தன்னைத்தானே சுற்றிச் சுழன்று, தன்னைச் சூழ்ந்திருக்கிற நட்சத்திரங்களுக்குத் தன் வல்லமையை ஒன்றன்பின் ஒன்றாகக் கொடுக்கிறது. மேலும் அதற்குப் பின், பரலோக நகரத்தை நோக்கி மணவாட்டியின் பவனி வருகிறது.
115 நம்முடைய பவனியில், நாம் தெய்வீகச் சுகமளித்தலையும் நித்திய ஜீவனையும் மனிதகுலத்திற்கு வழங்குவோம். நம்முடைய அற்புதங்களும் சுகமளித்தல்களும் நாம் வானில் வீசுகிற திருமண மலர்களாய் இருக்கின்றன, மேலும் மனிதகுலம் அந்த மலர்களைப் பிடிக்கும்போது மகிழ்ச்சியினால் ஆர்ப்பரிக்கும். இது "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதாகும்!
116 சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் தென்னாப்பிரிக்காவிற்குப் போவதற்கு முன்னதாக, டர்பனைச் சேர்ந்த சகோதரி பிலிலே எனக்கு இரண்டு சொப்பனங்களை அனுப்பியிருந்தார். முதலாவது சொப்பனத்தில், ஐவரி கோஸ்ட்டில் ஒரு மரம் வளர்ந்திருந்ததை அவள் கண்டாள். மேலும் அந்த மரம், தன் கிளைகளால், தீய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த பூமியின் குடிகளை அடித்து கொண்டிருந்தது.
117 மேலும் இரண்டாவது சொப்பனத்தில், அந்த மரம் தென்னாப்பிரிக்காவைச் சென்றடைவதை அவள் கண்டாள். பின்னர், அந்த மரம் வானங்கள் வரை வளர்ந்துயர்வதை அவள் கண்டாள். மேலும் அந்த மரம் பூமியின் மேல் மலர்களை உதிர்த்தது. நாம் இருக்கிற கட்டம் இதுவே ஆகும்.
118 இது எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக கிறிஸ்து தமது மணவாட்டியுடன் ஒன்றிணைவதற்கான காலமும் அடையாளமும் ஆகும். புறஜாதிகளின் சபை பவனிக்காக தோன்ற இருக்கிறது. இவை நம் கண்களுக்கு முன்பாக நிறைவேறிக்கொண்டிருக்கும் தீர்க்கதரிசனங்களாகும்.
119 20 ஆண்டுகளாக, ஓஹியோ நதியின் தூதன் பிரன்ஹாமிஸ்டுகளுக்காக என்னிடம் கொடுத்ததை நான் அவர்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னேன். அவர்கள் என்னை நிராகரித்தார்கள். மேலும் இப்போது, இது சுவிசேஷகர்கள், புரோட்டஸ்டாண்டுகள், கத்தோலிக்கர்கள் மற்றும் உலகத்தின் மற்றவர்களுக்கான காலம் ஆகும்.
120 ஒவ்வொரு சிறப்பு ஆராதனையின் போதும் அல்லது சுகமளிக்கும் ஆராதனையின் போதும், நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்ட எவனொருவனும் செய்தியை விசுவாசித்து இரட்சிக்கப்படும்படி, நீங்கள் கூடியிருக்கும் மக்களுக்கு சத்தியத்தைச் சொல்ல வேண்டும். தெய்வீக சுகமளித்தல் மற்றும் அற்புதங்களின் நோக்கம் நித்திய ஜீவனே.
121 தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் செய்தியைப் பிரசங்கிக்காத ஒரு சபையிலோ அல்லது மதத்திலோ உறுப்பினராக இருக்கிற எவனும், தான் சாத்தானை ஆராதிப்பவன் என்றும், தான் நரகத்திற்குப் போவான் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். அவர்கள் விசுவாசிக்கக் கடமைப்பட்டிருக்கவில்லை, ஆனால் அவர்கள் அனைவரும் இதைக் கேட்டு அதோடு கூட போகக் கடமைப்பட்டவர்கள். மேலும் இவ்விதமாய், அவர்கள் மீண்டும் சாத்தானுடைய அந்த இடங்களுக்குத் திரும்பினால், நீங்கள் அவர்களுடைய இரத்தப்பழிக்கு நீங்கலாகிச் சுத்தமாய் இருக்கிறீர்கள். மீதியானது அவர்களுக்கும் தேவனுக்கும் இடையில் இருக்கும்.
122 பெண்கள் தங்களின் சரீரத்தில் ஒரு கருத்தடை சாதனத்தோடு (contraceptive implant) மரித்தால், தனது தொலைபேசியிலோ அல்லது தனது கணினியிலோ ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் மரித்துப் போன ஒருவனைப் போல அவர்கள் நரகத்திற்குப் போவார்கள் என்பதை கட்டாயமாக அறிந்துகொள்ள வேண்டும்.
123 தன் மகள் குழந்தைகளைப் பெறத் தொடங்கியிருக்கும்போது, ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண், ஒரு பாலியல் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவள் ஆவாள். அவளுக்கு விடுதலை தேவை. உன் மகள் ஒரு குழந்தையைப் பெறும்போது, நீ உன் மகளையும் உன் பேரப்பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்ட வயது முதிர்ந்த ஒரு பாட்டி என்பதை நீ கட்டாயமாக அறிந்துகொள். ஒரு பிள்ளை தன் மாமன்(சித்தப்பா) அல்லது அத்தையை(சித்தி) விட வயதில் பெரியதாக இருப்பது இயல்பானது அல்ல. ஒரு சத்துருவே இதைச் செய்திருக்கிறான்.
124 மனிதகுலத்தின் இரட்சிப்பிற்காக, உபத்திரவங்களும் துன்புறுத்தல்களும் இருந்தபோதிலும், தேவனுடைய சார்பாக நான் மனிதகுலத்திற்குக் வழங்க வேண்டிய செய்திக்கு 2002 முதல் நான் உண்மையுள்ளவனாய் இருந்திருக்கிறேன். மேலும் அதன் உள்ளடக்கம் கடினமானதாக இருந்தபோதிலும், அதை உண்மையுடன் வழங்க வேண்டியதாய் இருந்தது. ஆனால் இன்று, அநேகர் என்னைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.
125 மேலும், சிறப்பு ஆராதனைகள் மற்றும் சுகமளிக்கும் ஆராதனைகள் மூலமாக நடந்தேறும் அனைத்து அற்புதங்கள் மற்றும் எல்லாவற்றின் முகாந்திரத்தினிமித்தம், சிலர் எனக்கு விரோதமாய்ப் பேசிய எல்லாத் தீய வார்த்தைகளுக்காகவும் என்னிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள். மேலும் நான், மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களுக்கு என் மன்னிப்பை வழங்குகிறேன்.
126 நானும் கூட, எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். கடந்த காலத்தில், உங்களோடு பேசுவதற்கோ அல்லது என்னைப் புரியவைப்பதற்கோ நான் சரியான முறையைப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால், உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் உங்களைக் காட்டிலும் நீதிமானும் அல்ல, மேலானவனும் அல்ல. நீதிமானும் நல்லவருமான ஒரே ஒருவர் தேவன் மாத்திரமே, நான் அவருடைய அடிமை.
127 இருப்பினும், ஒரு தீர்க்கதரிசி பேசும்போது, அவரை வெறுப்பதற்குப் பதிலாக, "ஓ தேவனே, உமது கிருபை!" என்று நீங்கள் கட்டாயமாகச் சொல்ல வேண்டும். மேலும், நீங்கள் எனக்கு விரோதமாகப் பேசியிருந்தால், அறியாமையினாலேயே நீங்கள் அதைச் செய்திருக்கிறீர்கள், மேலும் நீங்களும் நானும் பூமியின் மேல் இன்னும் உயிரோடு இருக்கும்போதே நீங்கள் மனந்திரும்புவதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
128 ஒரு காரியத்தை அறிந்துகொள்ளுங்கள்: பூமியிலுள்ள துன்மார்க்கரும் அகந்தையுள்ளவர்களும் அதைக் கண்டுபிடிக்காதபடிக்கு, தேவனுடைய ஈவு எப்பொழுதும் தன் காலத்து மதவாதிகளால் மிகவும் வெறுக்கப்பட்ட மனுஷனுக்குள் மறைக்கப்பட்டிருக்கிறது.
129 ஆதியிலே, வெறுக்கப்பட்ட ஒரு மனிதனாகிய ஆபேலுக்குள்ளேதான் தேவன் அவனுடைய தலைமுறையின் இரட்சிப்பை மறைத்து வைத்திருந்தார். ஆதியாகமம் 37 இல், தன் சகோதரர்களால் மிகவும் வெறுக்கப்பட்ட மனிதனாகிய யோசேப்புக்குள்ளேதான், தேவன் அவனுடைய சகோதரர்களின் உயிர்பிழைப்பையும் அவனுடைய தலைமுறையின் இரட்சிப்பையும் மறைத்து வைத்திருந்தார்.
130 ஒவ்வொரு தீர்க்கதரிசியும், தனது காலத்தில் மிகவும் வெறுக்கப்பட்ட மனிதனாக இருக்கிறான், ஆனால் அவனுக்குள்ளேதான் தேவன் இரட்சிப்பையும் நித்திய ஜீவனையும் மறைத்து வைக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மிகவும் வெறுக்கப்பட்ட மனிதனாக இருந்தார், ஆனால் அவருக்குள்ளேதான் தேவன் அவரது காலத்தில் இரட்சிப்பை மறைத்து வைத்திருந்தார். மேலும் தேவன் ஒருபோதும் தமது வழியை மாற்றமாட்டார்.
131 மேலும் நமது காலத்தில், மதவாதிகளால் மிகவும் வெறுக்கப்பட்ட மனிதன் யார்? நாம் அவனைக் கண்டடைய வேண்டும், ஏனெனில் அவனுக்குள்ளேதான் தேவன் இரட்சிப்பை மறைத்து வைத்திருக்கிறார். மேலும் அந்த மனிதன், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவே.
132 இப்பொழுது, ஜனங்கள் அவரை இவ்வளவு அதிகமாக வெறுத்து, அலட்சியம் பண்ணி, தூஷித்திருக்கும்போது, அவர்கள் எப்படி அவரிடத்திற்கு வருவார்கள்? இந்த மனந்திரும்புதல் பிசாசின் குமாரருக்குச் சாத்தியமில்லை, ஆனால் தேவனுடைய குமாரருக்குச் சாத்தியம், ஏனெனில் நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டவர்கள் யாவரும் தங்களுடைய இரட்சிப்புக்காக அவரிடத்திற்கு வர வேண்டும். ஆமென்.