1 இயேசு கிறிஸ்துவின் அடிமையான தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான், நவம்பர் 14, 2025 அன்று பரிசுத்தவான்களுக்கு வழங்கிய வார்த்தைகளும் அறிவுறுத்தல்களும்.
2 நவம்பர் 4, 2025 அன்று, நான் முதல் முறையாக ஐரோப்பாவில் துல்லியமாக பிரான்சுக்கு வந்தடைந்தேன். ஐரோப்பாவிலிருந்து, நான் லத்தீன் அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது, ஆனால் நவம்பர் 12 அன்று ஐவரி கோஸ்ட்டுக்குத் திரும்பினேன். பிரான்சின் சகோதர சகோதரிகளுடன் எனக்கு சில நிமிடங்கள் மட்டுமே ஐக்கியம் இருந்தது. டிசம்பரில் அங்கு திரும்ப வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன், ஆனால் குளிர்காலம் எனக்கு ஒரு தடையாக இருக்கிறது.
3 மேலும், சுகமளிக்கும் ஆராதனைகளுக்கு லத்தீன் அமெரிக்காவிற்கு நான் செல்லும் வழியில், ஒரு உள் குரல் என்னிடம், "நீ ஒரு தீர்க்கதரிசி. உனது ஊழியத்தின் போது நீ இரண்டு சுகமளிக்கும் ஆராதனைகளை மட்டுமே பெற்றிருந்தாலும், அதுவே உன்னுடைய பங்கு. இப்போது உனது சீடர்களின் முறை ஆகும் . தேவன் இப்போது உனக்கு அணிவித்திருக்கும் வல்லமை, பிரதிஷ்டைக்காக இல்லையா? நோயாளிகளுக்காக ஜெபிக்க நீ ஏன் லத்தீன் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும்?" என்று கேட்டது.
4 நமது கால நட்சத்திரங்களின் அணிவகுப்பில் , குறிப்புப் புள்ளியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் வடக்கு நட்சத்திரம், அதன் நிலையை விட்டு வெளியேறி, அதன் பின்னால் நடக்கும் நட்சத்திரங்களின் வரிசையில் சேர விரும்புவது எப்படி? மேலும் படைப்பிரிவுகளை முன்னோக்கி யார் வழிநடத்துவார்கள்?
5 உடனே, பிரதிஷ்டையின் அற்புதங்கள் என் மனதில் கடந்து சென்றன. உதாரணமாக, நவம்பர் 1 ஆம் தேதி, அவரது பிரதிஷ்டைக்குப் பிறகு, சகோதரி பிண்டிலே ஷுமா ஜிம்பாப்வேயில் ஒரு சகோதரியின் சுகமளிக்கும் ஆராதனையில் இருந்தார். மேலும் உடனடி சுகப்படுத்துதல் இல்லாததால், சகோதரி பிண்டிலே அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அந்த சகோதரிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார். பின்னர், சகோதரி பிண்டிலே தயாராக இல்லாதபோது உடனடி சுகப்படுத்துதல்கள் இருந்தன.
6 நான் காலத்திற்கு முன்பே செயல்பட்டேன் என்று நம்புகிறேன். மேலும் நான் மிகவும் அவசரமாக செயல்பட்டேன், ஒரு கட்டத்தில் சகோதரி ரோசின் இல்லாமல் நான் பிரான்சுக்குச் சென்றேன். நான் மனந்திரும்பி, தேவன் உறுதிப்படுத்தும் நமது பலமுள்ள சகோதர சகோதரிகளுடன் பணியைத் தொடர்வதற்கு நான் தொடங்கிய இடத்திற்குத் திரும்பினேன்.
7 இந்தக் கட்டளையின் மூலம், கவலையாகவும் உடனடி சுகமடைதலைப் பெறுவதில் சிரமமாகவும் இருந்த சகோதரர்கள் பலமாகவும் நம்பிக்கையுடனும் மாறிவிட்டனர். மேலும் இந்தக் கட்டளை அவர்களை மிக உயர்ந்த மட்டத்தில் வைக்கிறது என்பதை முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
8 நல்லது. இப்போது, நான் அவர்கள் அனைவரையும் அழைக்கிறேன் .சுகமளிக்கும் ஆராதனைகளுக்காக உபவாசம் மற்றும் ஜெபங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து சகோதர சகோதரிகளையும் நான் இங்கு அழைக்கிறேன் . இது ஒரு நீண்ட பயணம், மேலும் செய்தியின் அத்தியாயங்கள் மைல்கற்கள் மற்றும் வழிகாட்டிகள். எனவே, நீங்கள் செய்தியை விட வேகமாக செல்லக்கூடாது.
9 ஆகையால், தேவன் தான் கொடுத்த எந்த ஆவிக்குரிய வரங்களையும் திரும்பப் பெறுவதில்லை. ஆவிக்குரிய வரங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கும். சாப்பிடும்போது கூட, யாராவது நோய்வாய்ப்பட்டால், நீங்கள் அவ்வாறு செய்ய தூண்டப்பட்டதாக உணர்ந்தால் அவர்களுக்காக ஜெபிக்கலாம். தேவனுக்காக நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நிதானமாக இருங்கள்.
10 நீங்கள் ஒரு தீர்க்கதரிசி அல்லது தீர்க்கதரிசினியாக இல்லையென்றால், உங்கள் வெளிப்பாட்டை யார் மீதும் திணிக்காமல், உங்கள் காலத்தின் செய்தியின் வரம்புகளுக்குள், உங்கள் வெளிப்பாட்டின் படி நீங்கள் செயல்பட வேண்டும். இதை சாப்பிடுங்கள், அதை சாப்பிட வேண்டாம் என்று உங்களுக்குச் சொல்வது உங்கள் வெளிப்பாடுதான். நீங்கள் எதையும் பாவனை செய்யக்கூடாது. பாவனை செய்பவர்கள் கலப்பினகாரர்கள்தான்.
11 மேலும், மரணம் என்பது தேவனின் நியாயத்தீர்ப்பு. அது நித்திய ஓய்வு மற்றும் பரலோகத்திற்காகவோ, அல்லது நித்திய தண்டனை மற்றும் நரகத்திற்காகவோ ஏற்படும். எனவே தேவனின் நியாயத்தீர்ப்பு முடிவை மாற்றி, மரித்த ஒருவரை மீண்டும் உயிரோடு பூமிக்குக் கொண்டுவருவது என்பது , ஒரு தீர்க்கமான வெளிப்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
12 மேலும், நீங்கள் ஒரு சபையில் அல்லது ஒரு சுகமளிக்கும் ஆராதனையின் நடுப்பகுதியில் கீழே விழும்போது, அது சாதாரணமானது அல்ல. சுகமளிக்கும் ஆராதனையின் போது உங்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட வலிமை இருக்க வேண்டும். சுகமளிக்கும் ஆராதனையின் இறுதியில் தான் இந்த வலிமை உங்களை விட்டு வெளியேற வேண்டும்.
13 தென்னாப்பிரிக்காவின் மிடில்பர்க்கில் உள்ள மேடையில் இருந்து தீர்க்கதரிசி எப்படி விழாமல் குதித்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
14 எனவே நீங்கள் பிரசங்க மேடையில் அல்லது ஒரு சிறிய கூட்டத்தினருக்காக ஜெபிக்கும் போது விழுந்தால், உண்மையான காரணம் என்னவென்றால், நீங்கள் உங்கள் வெளிப்பாடுகளின்படி செயல்படவில்லை என்பதாகும். தேவன் உங்களிடம் எதிர்பார்த்ததை தாண்டி நீங்கள் சென்றிருக்கலாம். நீங்கள் உங்கள் வெளிப்பாடுகளின்படி செயல்பட வேண்டும், வேறு யாரோ செய்தபடி அல்ல.
15 உங்களை நீங்களே சோர்வடையச் செய்யாதபடி வெளிப்பாட்டின் வேகத்தில் உங்கள் குழுவுடன் முன்னேறுங்கள். வெளிப்பாடு இல்லாமல் சுகமளிக்கும் ஆராதனைகளை ஏற்பாடு செய்யாதீர்கள். சுகப்படுத்துதல் வரம் என்பது ஓர் ஊழியம். அது உங்கள் வாழ்நாள் முழுவதும் வேண்டும், எனவே அவசரப்பட்டு செயல்படாதீர்கள்.
16 மேலும், உங்கள் குழுவுடன், சாட்சியங்களின் ஒவ்வொரு வீடியோவையும் விலைமதிப்பற்றதாக எண்ணி வைத்திருங்கள். ஒரு நாள், இந்த வீடியோக்கள் நமது காலத்தின் எழுப்புதலில் , மத்தேயு 25 இன் பத்து கன்னிகைகளின் எழுப்புதல் வாயிலாக தேவன் உங்கள் மூலம் என்ன சாதித்துள்ளார் என்பதற்கான சாட்சியாக அமையும்.
17 உண்மையான அற்புதங்களைக் கொண்டிருக்கும் வீடியோக்களை மட்டுமே வெளியிடுங்கள், நேர்மையற்ற அஞ்ஞானியின் வாயை அடைக்கும் அளவுக்கு அற்புதங்களின் வீடியோக்களாக இருக்கட்டும், அது மாதத்திற்கு ஒரு வீடியோவாக இருந்தாலும் கூட சரி. இந்த விஷயத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் வெளிப்பாடுகள் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
18 மேலும், அறிக்கைகளில், தேவனுக்கு முன்பாக நாம் மிகுந்த நேர்மையுடன் செயல்பட வேண்டும், அவருக்கு ஒரு நாள் நாம் கணக்குக் கொடுப்போம், பின்னர் அவருடைய கிருபை நம்முடன் இருக்கும்.
19 மேலும், பல சகோதரர்கள், குறிப்பாக முன்னாள் அப்போஸ்தலர்கள், நோயுற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது கீழே விழுந்தனர். மேலும் சகோதரர்கள் அவர்களை தூக்கி விடும் போது , அவர்கள் விழவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களின் பிரதிபலிப்பு யாரையாவது குற்றம் சாட்டுவது அல்லது அவர்களின் வீழ்ச்சியை நியாயப்படுத்துவதாக இருக்கிறது
20 உதாரணமாக, அக்டோபர் 26, 2025 அன்று, உகாண்டாவின் போதகர் ராபர்ட் அடுபாங்கோ கீழே விழுந்தபோது, அவர் ஜெபித்த சகோதரரைக் குற்றம் சாட்டினார். ஜெப வரிசையில் வருவதற்கு முன்பு சகோதரர் முழு உணவை சாப்பிட்டதால் தான் என்று அவர் கூறினார்.
21 ஆனாலும், அவர் பிரசங்க பீடத்திற்கு திரும்பி வந்து தொடர விரும்பியபோது, மீண்டும் விழுந்தார். மேலும், போதகர் அடுபாங்கோ இரண்டு முறை விழுந்த வீடியோவை அவர்கள் நீக்கிவிட்டனர். வீடியோக்களை நீக்குவது என்பது நேர்மையற்ற செயலாகும். இதேபோல், பலர் சரிந்து கீழே விழுந்தாலும், அதை தங்கள் அறிக்கைகளில் குறிப்பிடவில்லை.
22 நவம்பர் 1, 2025 சனிக்கிழமை, போதகர் பிரெக்கோ டேரியஸ் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை ஏற்பாடு செய்திருந்தார். அவர் போலியாக பாவனை செய்வதன் அடிப்படையில் சென்றிருந்தார். மேலும் தீர்க்கதரிசியைப் போல வெள்ளை கால்சட்டை மற்றும் வெள்ளை பூபூ அங்கி அணிய நான் தான் அவரைத் தடுத்தேன். அவர் ஏற்கனவே அவற்றை தைத்திருந்தார்.
23 நவம்பர் 1, 2025 அன்று, அவர் நோயாளிகளுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது, வீடியோவை குறித்து கருத்துத் தெரிவித்துக் கொண்டிருந்த, பிரசங்க பீடத்தில் இருந்த அவரது சபையின் மூப்பர் தலைச்சுற்றி, பாதிக்கப்பட்டு பார்வையற்றவரானார்.
24 அவர் பிரசங்க பீடத்தை விட்டு வெளியேறி, உதவிக்காக போதகர் டேரியஸை நோக்கிச் செல்கிறார். ஆனால் அவர் பார்வை இல்லாமலும், சுய நினைவு இழந்தும் , போதகர் டூர் ஓசீனியின் மீது மோதி இறுதியில் கீழே விழுகிறார். உடனடியாக, போதகர் டேரியஸும் கீழே விழுகிறார். மேலும் சுகமளிக்கும் ஆராதனை எந்த உடனடி சுகப்படுத்துதல்களும் இல்லாமல் முடிந்தது. இருப்பினும், இந்த விஷயங்கள் அவர்களின் அறிக்கைகளில் தெரிவிக்கப்படவில்லை. இது நல்லதல்ல.
25 சுகமளிக்கும் ஆராதனையின் குழுக்களே, நேர்மையற்ற நபரைச் சுற்றி கூட்டாளிகளாக இருக்காதீர்கள். நீங்கள் தேவனுக்கு பயந்து, உங்கள் மரணத்திற்குப் பிறகு நீங்கள் தேவனுக்கு கணக்குக் கொடுக்க வேண்டிய வகையில் அவருடைய சித்தத்தைச் செய்ய வேண்டும்.
26 குருடர்கள், பக்கவாத நோயாளிகள், முடவர்கள் மற்றும் கடுமையான நோய்வாய்ப்பட்டவர்கள் ஒரு சுகமளிக்கும் ஆராதனையில் இருக்கும்போது, அவர்களில் யாருமே உடனடி சுகபடுத்துதல்களின் கீழாக சாட்சிகளாக வரவில்லை என்றால், அங்கு தோல்வி ஏற்பட்டுள்ளது என்று ஒப்புக் கொள்ளப்படுகிறது.
27 ஒரு வெளிப்பாட்டால் கட்டளையிடப்படாத சுகமளிக்கும் ஆராதனையானது , முதிர்ச்சியடைந்த ஒரு பயிரை அறுவடை செய்வது போல இருக்கலாம், ஆனால் அது இன்னும் முதிர்ச்சியை அடையவில்லை. பின்னர், ஆத்துமாக்களின் மனமாற்றங்கள் மிகக் குறைவாகவே இருக்கும். மேலும் உங்கள் வலுவூட்டப்பட்ட அர்ப்பணிப்பில் இருந்தபோதிலும் நீங்கள் தேவனின் எதிரியாகச் செயல்படுவதால் தேவதூதர் உங்களைத் தாக்க முடியும்.
28 வெளிப்பாடுகள் மூலம் தேவனால் கட்டளையிடப்படாத அனைத்து சுகமளிக்கும் ஆராதனைகளும் ,அசுத்தத்தின் பாவங்கள் மற்றும் பெண்கள்-சபைகளுடன் விபச்சாரம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் . மேலும் இந்த விபச்சாரச் செயல்களில் பங்கேற்று ஒழுங்கமைப்பவர்கள், இரவு அசுத்த தீட்டுப்படுத்தல்களுக்கும் அசையாமைகளுக்கும் ஆளாகிறார்கள்.
29 நீங்கள் உங்கள் வெளிப்பாடுகளை விட்டுச் செல்லும்போது, காமவெறி மற்றும் விபச்சார தோற்றத்தைக் காட்டுகிறீர்கள். மேலும், "உங்கள் இருப்பிடத்தில் நான் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை ஏற்பாடு செய்ய முடியுமா ?" என்று கேட்டு, இளம் பெண்கள் - ஆலயத்தை நீங்கள் கவர்ந்திழுக்கிறீர்கள். இதன் பொருள், "உங்கள் தாயான , உங்கள் சபையுடன் நான் என்னைத் தீட்டுப்படுத்தலாமா?" என்பதாகும்.
30 உங்களிடம் சுகப்படுத்தும் வரம் இருந்தாலும், அது ஒரு வெளிப்பாட்டின் அடிப்படையில் இல்லாமல் நீங்கள் சுகமளிக்கும் ஆராதனைகளை ஏற்பாடு செய்தாலும், அது உங்கள் தந்தையின் செல்வத்தைப் பயன்படுத்தி உங்கள் சுற்றுப்புறத்திலோ அல்லது கிராமத்திலோ உள்ள பெண்கள் மற்றும் இளம் பெண்களை தீட்டுப்படுத்துவது அல்லது உங்கள் தந்தையின் படுக்கையை தீட்டுப்படுத்துவது போன்றது ஆகும் .
31 மேலும் அந்தத் தரிசனத்தில், அவர்களில் ஒருவர் ஒரு பெண்ணுடன் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொண்டிருந்தபோது, இன்னும் பல பெண்கள் கதவுக்கு வெளியே காத்திருந்ததைக் காண முடிந்தது. அந்த இளம் பெண்களின் தலையில் பலதரப்பட்ட நிறங்களில் போலி முடி இருந்தது. அது பெரிய அளவில் விபச்சாரமாக இருந்தது .
32 மேலும் இதோ, வானத்திலிருந்து ஒரு வெள்ளை மேகம் போன்ற புகை இறங்கி வந்து அவர்களுடன் சண்டையிட அவர்களைச் சூழ்ந்து கொண்டததை கண்டேன் . பிறகு நான் தரிசனத்திலிருந்து வெளியே வந்தேன்.
33 ஒரு சுகமளிக்கும் ஆராதனையை ஏற்பாடு செய்யாமல் இருப்பது மோசமானது, ஆனால் வெளிப்பாடு இல்லாமல் ஒருவரின் சொந்த அதிகாரத்தால் அவை ஏற்பாடு செய்வது என்பது அது மிகவும் மோசமானது. ஒவ்வொரு செயலும் கூட வெளிப்பாட்டின் மூலம் இருக்க வேண்டும். தங்கள் சொந்த அதிகாரத்தில் காரியங்களை ஏற்பாடு செய்வது யாருக்கும் சொந்தமானது அல்ல. பரிசுத்த ஆவியானவர் இவற்றை வலியுறுத்தியுள்ளார்.
34 மேலும் கடைசி தரிசனத்தில், ஒரு பெண் கொல்கொதா மலையில், கிறிஸ்துவின் சிலுவையின் அடிவாரத்தில் நின்று, அதற்கு எதிராகக் கத்துவதைக் கண்டேன். நான் அவளை மிகத் தெளிவாகக் கண்டேன், தரிசனத்தில் அவளைக் கவனித்தேன், ஆனால் அவள் யார் என்று தெரியவில்லை.
35 இன்று மதியம், நவம்பர் 14 அன்று, கேமரூனைச் சேர்ந்த அப்போஸ்தலர் கிறிஸ்டோஃப் ம்பேனா ஓர் ஆவிக்குரிய பிரத்தியட்சத்தின் வீடியோவை எனக்கு அனுப்பினார். நான் தரிசனத்தில் கண்ட பெண் சரியாக அவள்தான்.
36 மேலும், தங்கள் சொந்த அதிகாரத்தில் சுகமளிக்கும் ஆராதனைகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக அவள் தரிசனத்தில் சொன்னது, பிரசங்க பீடத்தில் தனது போதகருக்கு எதிராக வீடியோவில் அவள் சொன்னதுதான். அந்த பிரத்தியட்சத்தின் வீடியோவை நான் உங்களுக்குக் கொடுப்பேன்; பவுலைப் போலவே, "மக்கெதோனியாவுக்குப் போ" என்று உங்களுக்குச் சொல்ல வேண்டியது தேவனே !
37 இப்போது நாம் செய்திக்கு வழிநடத்தி செல்லும்படி, நம்மை துன்புறுத்திய மற்றும் இன்று நம்மை சோர்வடையச் செய்யும் கலப்பின மக்களுக்கு எதிராக விழிப்புடன் இருங்கள். அவர்களால் செய்ய முடியாதது எதுவோ, அதைத்தான் அவர்கள் மக்களிடம் செய்யச் சொல்லுகிறார்கள் . வெளிப்பாட்டின்படி நடக்காதவர்கள் அவர்களுக்குச் செவிசாய்க்கிறார்கள்.
38 வனாந்தரத்தில் யூதர்களின் காலத்தில் இருந்தது போல, மக்களைத் தொந்தரவு செய்பவர்கள் அவர்கள் தான். வார்த்தையைத் பயன்படுத்தி, உதாரணமாக, உங்கள் சுகமளிக்கும் ஆராதனையின் போது வெள்ளை சாதம் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கும்போது, நம் வாழ்நாள் முழுவதும் வெள்ளை சாதம் மட்டுமே சாப்பிட வேண்டும் என்று வார்த்தையை சுழற்றி சொல்வதில் அவர்களுக்கு ஒரு தந்திரம் உண்டு .
39 அவர்கள் ஹிட்லரின் கீழ் யூதர்களை சூறையாடி கொன்ற நாஜி ஜெர்மானியர்கள். அவர்களால் தான் , நாம் இனி ஒரு போதும் பிரதான தேவாலயங்களில் இல்லை, ஆனால் ஜெர்மனியில் இருக்கிறோம்.
40 நல்லது . ஆப்பிரிக்காவிற்குப் பிறகு, எழுப்புதலை தொட்ட முதல் கண்டம் அது ஐரோப்பா தான் . அது ஐரோப்பாவின் அப்போஸ்தலன் பாஸ்கல் விச்சி மூலம் நடந்தது.
41 அப்போஸ்தலன் பாஸ்கல் விச்சி 2025 அக்டோபர் 4 முதல் 5 வரை,பாரிஸில் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை நடத்தினார் . அவர் என்னிடம், "சகோதரர் பிலிப்புவே , பல தீவிர நோய்வாய்ப்பட்ட ஜனங்கள் வந்தனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதவர்கள், மேலும் மருட்சி அல்லது பகல் கனவில் மூழ்கி இருக்கும் தன்மை கொண்ட ஆட்டிசம் உள்ளவர்கள் , பிறப்பிலே குறைபாடுகள் உள்ளவர்கள் போன்றவர்கள் இருந்தனர் என்று கூறினார் .
42 நான் அவர்களுக்காக ஜெபிக்கத் தொடங்கியபோது, அது மிகவும் கடினமாக இருந்தது. நான் மிகவும் வியர்த்து என் கோட்டை கழற்றி என் சட்டையின் கைகளை சுருட்ட வேண்டியிருந்தது. சகோதர சகோதரிகளிடையே கூட குளிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் என்னால் உணர முடிந்தது.
43 அங்கே நிலவிய சூழ்நிலை மிகவும் பாரமாக இருந்தது; அது ஒரு சோதனை. பயங்கரமான அமைதி நிலவியது, மற்றும் எதுவும் நிறைவேறவில்லை. ஆனால் பார்வையாளர்களின் வெளிப்படையான ஊக்கமின்மை இருந்தபோதிலும், நான் நம்பிக்கையுடன் இருந்தேன், தேவனுடைய உண்மையுள்ள தன்மையில் நம்பிக்கை வைத்திருந்தேன். அவ்வப்போது, விசுவாசத்தைக் காத்துக்கொள்ள கூட்டத்தினரை உற்சாக படுத்தினேன்.
44 ஜெப வரிசை முடியும் போது, இன்னுமாக உடனடி சுகமாகுதல் எதுவும் இல்லை. சில சகோதர சகோதரிகளின் முகங்களில் தோல்வியுற்ற பார்வைகள் இருந்தன. அவர்களின் முகங்களில் ஒரு பெரிய ஏமாற்றத்தை என்னால் உணர முடிந்தது. அது மிகவும் கடினமாக இருந்தது.
45 நான் கூட்டத்தினரிடம் இங்கே, நாங்கள் அற்புதங்களை கட்டாயப்படுத்துவதில்லை, மற்றும் எதையும் போலியாகச் செய்வதில்லை என்று சொன்னேன். இன்று எந்த அற்புதங்களும் நடக்கவில்லை என்றால், அது அப்படியே ஆகட்டும். ஆனால் அந்த நொடியில், ஒரு பக்கவாதக்காரன் எழுந்து நடந்தான்.
46 இந்த ஒரே அற்புதத்துடன் தான் சுகமளிக்கும் ஆராதனை முடிவுக்கு வந்தது. ஆனால், சுகமளிக்கும் ஆராதனையில் இருந்த ஒரு சுவிசேஷ போதகரிடம் பேசிக்கொண்டிருந்த அப்போஸ்தலன் ஹாரிக்காக நான் மண்டபத்தில் காத்திருந்தபோது, "உடனடி சுகமாகுதல்கள் தொடர்கின்றன " என்று சபைக் குழுவில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன்.
47 நான் மண்டபத்தில் விரைந்தேன், ஊன்றுகோல் இல்லாமல் நடந்து செல்லும் ஒரு வெள்ளைப் பெண்ணைச் சுற்றி மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் சூழ்நிலையைக் கண்டேன் . அவள் ஆச்சரியப்படுகிறாள். அவளை அப்படிப் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
48 நடக்க முடியாத இன்னொரு பெண் நடக்கிறாள். அவள் சாட்சி சொல்கிறாள், முன்பு செய்ய முடியாத அசைவுகளைச் இப்போது செய்கிறாள். அவள் சுகமானதைக் கண்டு அவளே வியப்படைகிறாள்.
49 இது ஓர் அற்புதமான சூழல். கூட்டத்தினர் தங்கள் கண்களுக்கு முன்பாக காணும் காட்சியைக் கண்டு எதுவும் பேச முடியாமல் வியந்து போகிறார்கள். இந்த ஆராதனையில், உண்மையில் எதுவும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை, இவை அனைத்தும் கேளிக்கையாக இருக்கவும் வாய்ப்பில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
50 மேலும் இந்த செய்தியை பற்றி மேலும் அறிய விரும்பிய மற்றொரு சுவிசேஷ போதகரைப் பார்க்க நாங்கள் புறப்படும்போது, மற்றொரு பக்கவாத நோயாளி நடக்கத் தொடங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்! முழு கூட்டதினரும் மகிழ்ச்சியடைகிறார்கள். இது ஒரு மகிழ்ச்சியான தருணம்.
51 பாரிஸின் சுகமளிக்கும் ஆராதனையை ரத்து செய்ய நான் விரும்பினேன், ஆனால் தேவனின் பிள்ளைகள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக, ஒரே ஒருவராக இருந்தாலும் கூட, நான் தொடர்ந்தேன். சுகமளிக்கும் ஆராதனையின் முடிவில், 11 பேர் பலிபீட அழைப்புக்கு பதிலளித்தனர். மொத்தம் 6 உடனடி சுகமாகுதல்கள் நிறைவேறின , அதில் மற்றொரு வெள்ளைப் பெண் தனது பார்வை குறைபாடுடைய கண்ணிலிருந்து பார்வையை பெறத் தொடங்கினாள்.
52 ஐரோப்பாவின் தேசத்தில் நம் காலத்தில் முதல் சுகமளிக்கும் ஆராதனை இப்படித்தான் நடந்தது. இதற்கிடையில், ஆப்பிரிக்காவில் சுகமளிக்கும் ஆராதனைகள் தொடர்கின்றன. சோர்வு அவர்களை சுகமளிக்கும் ஆராதனைகளை நிறுத்த கட்டாயப்படுத்தும் வரை சகோதரர்கள் தங்களது ஆவி, ஆத்மா ,சரீரத்தை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள் .
53 ஒவ்வொரு நாட்டிலும் பல நற்செய்தி ஊழியர்களைப் பெறும் பணியில் நாங்கள் இருக்கிறோம். ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் காலத்தைப் போலவே, ஒரு நாட்டில் குறைந்தது 4 ஊழியர்கள் இருந்தால், அவர்கள் உடன்பாட்டின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும். அவர்களின் நாடு அவர்கள் தீர்மானித்ததைச் செயல்படுத்த வேண்டும்.
54 அர்ப்பணிப்பை பொறுத்தவரை, பல சகோதரர்கள் எண்ணெய் இல்லாமல் வெள்ளை சாதத்தை சாப்பிடுவது கடினம் என்று என்னிடம் கூறியிருந்தனர். வெள்ளை சாதத்திற்கு அவர்களின் வாயில் சுவை இல்லை, அவர்கள் ஒருபோதும் திருப்தி அடையவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக, அவர்களின் சரீரம் அதற்குப் பழகத் தொடங்கியது, அவர்களுக்கு இனி பசி இல்லை.
55 அவர்களின் மெலிவு படிப்படியாக மறைந்து, அவர்களின் வலிமை திரும்பியது. அவர்கள் சாத்தியமற்றதாகக் கண்டது இப்போது சாத்தியமாகத் தோன்றியது. ஆமென்.
56 தெய்வீக சுகப்படுத்துதலின் இந்த நிலையிலும், ஆவிக்குரிய வரங்களின் பிரத்தியட்சங்களிலும், நிதி உதவியுடன் இல்லாமல், வார்த்தைக்கும் நமது வெளிப்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் முன்னேறி செல்வோம்.
57 உதாரணமாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீடர்களிடம், "போய், பிணியாளிகளை சுகமாக்குங்கள். பையையோ, பணத்தையோ எடுக்காதீர்கள். மேலும் போகிற வழியில், யாரையும் வாழ்த்தாதீர்கள். யாராவது உங்களை வாழ்த்தினால், நீங்கள் பதில் சொல்லாதீர்கள்" என்று கூறினார்.
58 இதேபோல், 2 இராஜாக்கள் 4:29 இல், தீர்க்கதரிசி எலிசா தனது வேலைக்காரன் கேயாசியிடம் வழியில் யாரையும் வாழ்த்த வேண்டாம் என்று கூறினார். யாராவது அவரை வாழ்த்தினாலும, அவர் பதிலுக்கு வாழ்த்தவில்லை .
59 காலங்கள் தோறும், தலைமுறை தலைமுறையாக, பரிசுத்த ஆவி ஒன்று தான்; அவர் மாறுவதில்லை. மேலும், உங்களிடம் உள்ள சிறியவற்றில் நீங்கள் திருப்தி அடைய வேண்டும், ஆனால் நீங்கள் நன்றாக உடை அணிய வேண்டும். ஒரு சுகமளிக்கும் ஆராதனையின் போது, ஒரு அஞ்ஞானி முக்கிய பிரசங்கியிடம் , "நான் உங்களுக்கு சில ஆடைகளைத் தருகிறேன்" என்று கூறினார், ஏனெனில், பிரசங்கி பணிவாக தோன்ற வேண்டும் என்பதற்காக அவர் பழைய, சுருக்கமான ஆடையை உடுத்தி இருந்தார் , அதே நேரத்தில் அவர் பேண்ட், கோட் வைத்திருந்தார்.
60 மேலும், சுகமளிக்கும் ஆராதனையின் போது, குழந்தைகள் காணாமல் போன சம்பவங்கள் நடந்துள்ளன, ஆனால் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது நடப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும்.
61 மேலும், அக்டோபர் 26, 2025 அன்று, அங்கோலாவில், ஒரு சுகமளிக்கும் ஆராதனையின் போது ஒரு விஷேசித்த காட்சி நிகழ்ந்தது. பொதுவான ஜெப வரிசையின் போது, முக்கிய பேச்சாளர் மடலேனா மானுவல் என்ற இளம் சகோதரி, சுவிசேஷகர்களைப் போலவே பலத்துடனும் அதிகாரத்துடனும் ஜெபித்தார். அது கூட்டத்தினரிடையே ஆவிக்குரிய பிரத்தியட்சங்களின் எழுப்புதலை தூண்டியது. அந்நியபாஷைகளில் பேசுதல் தீர்க்கதரிசனங்கள் முதலியன.
62 மேலும் சிறிது நேரம், அவள் இந்த மக்களுக்காக ஜெபிப்பதில் மும்முரமாக இருந்தாள், ஏனென்றால் சிலருடைய செயலில் குழப்பமும், மற்றவர்கள் விழுந்து கொண்டிருந்தனர். இது நம் அனைவருக்கும் ஒரு பாடம். நீங்கள் சுவிசேஷகர்களின் முறையில் ஜெபிக்கக்கூடாது. சுகமளிக்கும் ஆராதனையின் முடிவில், மூன்று உடனடி சுகப்படுத்துதல்கள் இருந்தன, அதை நான் உறுதிப்படுத்தவில்லை.
63 நல்லது. பிரதிஷ்டைகளை பொறுத்தவரை, உடனடி சுகபடுத்துதல்கள் மூலம் தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, அக்டோபர் 10, 2025 அன்று நான் அப்போஸ்தலர்களான ஹ்யூகோ சே, மானுவல் உபிஸ், ரவுல் சோடோகின் மற்றும் ஜேக்கப் அஹவுட்ஜி ஆகியோரைப் பிரதிஷ்டை செய்தேன். தேவனால் உறுதிப்படுத்தப்பட்டதும், தீர்க்கதரிசியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் தான் அப்போஸ்தலர் என்ற பட்டத்தையும் இந்த செய்தியின் ஊழியரின் உரிமைகளையும் தருகிறது.
64 மேலும், சுகமளிக்கும் வரம் பெற்ற பல சகோதரர்கள் தங்கள் குழுக்களுக்குள் ஒழுங்கைப் பராமரிக்க முடியாது. நீங்களே உருவாக்கிய ஒரு சிறிய குழுவில் ஒழுங்கை கொண்டு வர முடியாவிட்டால், ஒரு நாட்டிற்கு உங்களால் ஒழுங்கை கொண்டு வர முடியாது என்பது தெளிவாகிறது.
65 மேலும், அப்போஸ்தலர் அனிசெட்டோ மானுவல் இருந்த போதிலும் நமது சகோதரர் ஹ்யூகோ ஸீ செப்டம்பர் 19, 2025 அன்று பிரதிஷ்டை செய்யப்படவில்லை. பிரதிஷ்டை பெற திரும்பி வருவதற்கு முன்பு , ஐவரி கோஸ்ட்டிலிருந்து திரும்பிச் சென்று மேலும் அநேக சுகமளிக்கும் ஆராதனைகளை ஏற்பாடு செய்யுமாறு நான் அவரிடம் சொன்னேன்.
66 ஆனால் அங்கோலாவுக்குத் திரும்பியதும், ஒரு காலத்தில் பெருமையால் அவதிப்பட்டு, அவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கு உதவி செய்ய முடியாத சில முன்னாள் அப்போஸ்தலர்களைப் போலல்லாமல், அப்போஸ்தலர் ஹ்யூகோ ஸீ அப்போஸ்தலர் அனிசெட்டோ மானுவலின் ஊழியராகச் சென்றார்.
67 மேலும் அப்போஸ்தலர் அனிசெட்டோவுக்கு இரண்டு சுகமளிக்கும் ஆராதனைகளை ஏற்பாடு செய்த பிறகு, அவர் தனது பிரதிஷ்டையைப் பெற ஐவரி கோஸ்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற வெளிப்பாட்டைப் பெற்றேன். அவர் திரும்பி வந்து அக்டோபர் 10, 2025 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
68 கானாவைச் சேர்ந்த அப்போஸ்தலர் நார்டே பெஞ்சமின் அக்டோபர் 23, 2025 அன்று பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்படவில்லை. ஆனால் திட்டமிடப்பட்ட நான்கு பேரை நான் பிரதிஷ்டை செய்யவிருந்தபோது, எனக்கு ஒரு தரிசனம் கிடைத்தது, அதனால் நான் அப்போஸ்தலன் நார்டே பெஞ்சமினையும் பிரதிஷ்டை செய்தேன்.
69 வியாழன், அக்டோபர் 23, 2025 அன்று காலை, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அப்போஸ்தலர்களான லூகாஸ் நிடிமேன், பெனினைச் சேர்ந்த அட்ரியன் க்படேக்பே மற்றும் ஜோசப் டேப், மற்றும் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த சகோதரி பிண்டில் ஷுமா ஆகியோருடன் அவர் பிரதிஷ்டை பெற்றார். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அப்போஸ்தலர் லூகாஸ் நிடிமேன் மற்றும் சகோதரி பிண்டி ஆகியோர் உடனிருந்தனர், ஆனால் அவர்கள் அப்போது பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
70 மேலும் அவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, ஒரு நாள் மிகவும் நோய்வாய்ப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஜெபிப்பதாக ஒரு கனவில் தனக்குச் சொல்லப்பட்டதாக அப்போஸ்தலர் நார்டே பெஞ்சமின் என்னிடம் கூறினார். அந்தப் பெண்ணின் பெயரும், அவளுடன் வருபவர்களின் பெயர்களும் அவருக்கு கொடுக்கப்பட்டது. இது நடந்தது, மேலும் அவர் அந்தப் பெண்ணுக்காக ஜெபித்தார், ஆனால் அந்தப் பெண் இறந்துவிட்டார்.
71 மேலும் நான் அவர் சொல்வதைக் கேட்டபோது, அவர் தேவனுக்கு கீழ்ப்படியவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். முதலாவதாக, காலம் கடந்துவிட்டது, மற்றும் அவர் கனவை மறந்துவிட்டார் . ஒரு நாள், மிகவும் நோய்வாய்ப்பட்ட ஒரு பெண்ணுக்காக ஜெபிக்க அவர் அழைக்கப்பட்டார். அந்தப் பெண்ணின் பெயராலும், அந்தப் பெண்ணுடன் வந்தவரின் பெயராலும், அவர் அந்தக் கனவை நினைவு கூர்ந்தார் .அது அந்தக் கனவின் நிறைவேறுதல் என்பதை அவர் அறிந்து கொண்டார் .
72 அந்த நேரத்தில்தான் அவர் அந்தப் பெண்ணுக்காக ஜெபிக்க வேண்டும். ஆனால் அந்தப் பெண் இறப்பதைக் கண்டு, அவர் பயந்து உடனடியாக ஜெபிக்கவில்லை. ஆனால் வேறொரு நாளில், கனவில் இருந்ததைப் போல சூழ்நிலை மாறும்போது, அவர் அந்தப் பெண்ணுக்காக ஜெபம் செய்தார், ஆனால் அந்தப் பெண் இறந்துவிட்டாள். அவர் தேவனின் கட்டளைக்கு எதிராகக் கலகம் செய்தார். இது நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த பாடம்.
73 மேலும், அப்போஸ்தலன் ஜோசப் தாபே, அக்டோபர் 10, 2025 அன்று நான் பிரதிஷ்டை செய்த போதகர் ஜேக்கப் அஹவுட்ஜியின் ஊழியராகவும் செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார். இருப்பினும், டிசம்பர் 2022 முதல், அவர் ஒரு அப்போஸ்தலராக இருந்து வருகிறார், ஆனால் 2025 இல், அவர் போதகர் ஜேக்கப் அஹவுட்ஜியின் ஊழியரானார். இப்போது, அவரது தாழ்மையான நடத்தைக்காக தேவன் அவரை உயர்த்தினார்
74 நான் முன்னாள் அப்போஸ்தலர்களின் ஒரு பட்டியலைத் தயாரித்திருந்தேன், ஆனால் அதை நீக்கிவிட்டேன். அவர்களில் பெரும்பாலானோர் வெளிப்பாட்டின்படி நடப்பதில்லை, மாறாக தங்கள் சொந்த புத்திசாலித்தனத்தின்படியே நடக்கிறார்கள், மேலும் நடவடிக்கை எடுக்க தீர்க்கதரிசிக்காகவோ அல்லது பிரச்சனைகளுக்காகவோ காத்திருக்கிறார்கள்.
75 வெளிப்பாடு இல்லாமல், தீர்க்கதரிசன விசுவாசம் என்பது தீர்க்கதரிசியின் இருக்கையில் அமர்வதற்குச் சமம். எனவே, இனி முன்னாள் அப்போஸ்தலர்கள் என்று யாரும் இல்லை. வெளிப்பாட்டின்படி செயல்படுவதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, அர்ப்பணிக்கப்படுவதன் வழியாக அவர்கள் அப்போஸ்தலப் பணிக்குத் திரும்புவார்கள். வெளிப்பாட்டின் மூலம், முழு திருச்சபையும் ஆயிரம் ஆண்டு அரசாட்சி மற்றும் பரலோகப் பாதையில் உள்ளது, அங்கு தீர்க்கதரிசிகளும் ஆசாரியத்துவமும் இருக்காது. ஆரம்பத்தில் இருந்தது போல, தேவனே ஒவ்வொரு மனிதனுக்கும் எஜமானராக இருப்பார்.
76 உங்கள் வெளிப்பாடுகளின்படி, உங்களை வழிநடத்த, வெளிப்பாட்டின்படி நடக்கும் பயணப் பிரசங்கிகளைத் தேர்ந்தெடுங்கள்; தங்கள் முழு நாட்டையும் வெளிப்பாட்டின்படி நடக்க வழிநடத்தக்கூடிய திறமையுள்ளவர்களைத் தேர்ந்தெடுங்கள்.
77 தடைகளை ரத்து செய்வதற்கும் மாற்றுவதற்கும், உங்கள் நாட்டில் யாரும் இல்லையென்றால், தொலைவில் உள்ள உறுதிப்படுத்தப்பட்ட அல்லது அர்ப்பணிக்கப்பட்ட சகோதர சகோதரிகளை அணுகவும். மற்ற எல்லாவற்றிற்கும், உங்கள் பயணப் பிரசங்கிகளை அணுகவும்.
78 அவர்களின் சம்மதத்துடன்தான் ஒரு நாட்டின் குழுவில் வெளிப்படையான பாவ அறிக்கை கொடுக்க முடியும். மேலும் ஒரு நாட்டின் குழுவில் பதிவிடப்படும் எதையும் தீர்வுக்கு கொண்டுவர முடியும். ஓர் ஊழியரின் உரிமைகளைப் பெற்றவர் , எனவே அவர் உறுதிப்படுத்தப்பட்டு ஆணையிடப்பட்டவர், இந்த அனைத்து உரிமைகளையும் இன்னும் அதிகமாகவும் கொண்டுள்ளார். ஆனால் , அவருக்கு சிரமம் ஏற்பட்டால் பேசுவதை குறைத்து, அமைதியாக இருக்கிறார். ஆமென்.
79 மேலும், தங்கள் நாட்டிற்குத் திரும்பிச் சென்ற பிறகு, செப்டம்பர் 19, 2025 அன்று ஐவரி கோஸ்டில் இருந்தவர்களில் பலர், என்னால் பிரதிஷ்டை செய்யப்படாதவர்கள், பல அற்புதங்களைச் செய்ததால், உடனடியாக அவர்களைத் திரும்பி வரச் சொன்னேன்.
80 அவர்களில் மொசாம்பிக்கிலிருந்து வந்த அப்போஸ்தலன் மானுவல் உபிஸ்ஸும் ஒருவர். பிரதிஷ்டைக்குப் பிறகு மொசாம்பிக்கிற்குத் திரும்பியபோது, அப்போஸ்தலன் மானுவல் உபிஸ்ஸின் சுகமளிக்கும் வரம் மிகப் பெரியதாக மாறியது.
81 அக்டோபர் 18, 2025 சனிக்கிழமை மாலை, அவர் அரங்கத்தை விட்டு வெளியேறும்போது, "சகோதரர் பிலிப்புவே, இந்த மகிமையான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்ற தகவலை அனுப்பினார்.
82 இன்று, நான் என் முழங்காலிட்டு மகிழ்ச்சியால் உருண்டேன். இன்று, தீர்க்கதரிசி பிரதிஷ்டை செய்த பிறகு முதலாவது சுகமளிக்கும் ஆராதனையின் போது, ஏற்கனவே 50 க்கும் மேற்பட்ட உடனடி சுகமளித்தல்கள் நடந்துள்ளன, இதில் குருடர்கள், பார்வையற்றோர் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பல கடுமையான நோய்களின் சாட்சிகள் இருக்கிறது. சாட்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் சாட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
83 தேவதூதர்கள் நமக்காகப் போராடுவதையும், விடுதலையை அறிவிப்பதையும், அரங்கத்தில் அறுவை சிகிச்சைகள் செய்வதையும் காண முடிந்தது."
84 எனவே, அக்டோபர் 18, 2025 சனிக்கிழமை, பெய்ராவில், அப்போஸ்தலன் மானுவல் உபிஸ் அரங்கத்தை விட்டு வெளியேறும்போது, 50 க்கும் மேற்பட்ட உடனடி சுகபடுத்துதல்கள் இருந்தன, ஆனால் சுகமளிக்கும் ஆராதனையின் முடிவில், ஏராளமானவற்றை நீக்கிய பிறகும் 97 உடனடி சுகபடுத்துதல்கள் சரியானதாக கண்டோம் .
85 அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 19, 2025 அன்று, சோஃபாலா மாகாணத்தில், உடனடி சுகபடுத்துதல்கள் எண்ணிக்கை 80 இல் முடிவடைந்தது. அப்போஸ்தலர் மானுவல் உபிஸின் சுகமளிக்கும் ஆராதனையின் போது, சுகமாகுபவர்களின் விகிதம் நிச்சயமாக 100 சதவீதம் ஆகும்.
86 சுகமளிக்கும் ஆராதனையில் ஜனக்கூட்டத்தினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர், பெரும்பாலும், அப்போஸ்தலன் மானுவல் உபிஸ் வருவதற்கு முன்பே, உடனடி சுகமளித்தல்களும் பல சாட்சியங்களும் ஏற்கனவே நடந்தது. மேலும், ஒருமுறை , அர்ப்பணிப்பில் இருப்பவர்கள் யார் என்றும் , சுகமளிக்கும் ஆராதனைக்கு வரும் முன்பு சாப்பிடாதவர்கள் யார் என்றும் கூட்டத்தினரிடம் கேட்கும் போது , அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தினார்கள்.
87 மேலும் சனிக்கிழமை, அக்டோபர் 25, 2025 அன்று, அப்போஸ்தலன் மானுவல் பிரசங்க மேடைக்குச் செல்வதற்கு முன்பு, 17 உடனடி சுகபடுத்துதல்கள் இருந்தன, சாட்சியங்கள் தொடங்கின. அது கிருபை மற்றும் இரக்கத்தின் தேவன்.
88 அங்கே தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அப்போஸ்தலன் லூகாஸ் நிடிமேன் கூட நவம்பர் 2, 2025 அன்று எனக்கு இப்படியாக எழுதினார், "சகோதரர் பிலிப்பு , இன்று தென்னாப்பிரிக்காவில், எனது பிரதிஷ்டைக்குப் பிறகு என்னுடைய முதலாவது சுகமளிக்கும் ஆராதனையில் , நான் ஒருபோதும் நினைத்திராத அற்புதங்களைக் கண்டேன் என்று சொன்னார். எனது ஜெபத்தின் போது, மக்கள் தங்கள் சக்கர நாற்காலிகளில் இருந்து எழுந்தார்கள்.
89 ஒரு மனிதனின் கண்களுக்கு இடையில் ஒரு பெரிய கட்டி இருந்தது, அது அவரைப் பார்ப்பதைத் தடுத்தது. ஆனால் அதிசயமாக, அந்தக் கட்டி எங்கள் கண்களுக்கு முன்பாக சுருங்கத் தொடங்கியது, அவருடைய கண் பார்க்கத் தொடங்கியது.
90 38 ஆண்டுகளாக கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு மனிதர் மயக்கமடைந்து கிடந்தார், ஆனால் நான் அவருக்காக ஜெபித்த பிறகு, அவருடைய சரீரம் சுகமாக தொடங்கியது. உடனடியாக, அவர் பேசினார், தானாகவே நடந்தார்.
91 10 வருடங்களாக முற்றிலும் பார்வையற்றவராக இருந்த ஒரு பெண் மீண்டும் பார்வை பெற்று, தான் காணக்கூடிய விஷயங்களை சுட்டிக்காட்டத் தொடங்கினார். மற்றொரு பார்வையற்ற பெண் இப்போது நான் பார்க்க முடிகிறது என்று சத்தமாகச் சொன்னார் .
92 நான் தேவனுக்கு நன்றி சொன்னேன். ஏனென்றால், என் பிரதிஷ்டைக்கு முன்பு, நாங்கள் சுகமளிக்கும் ஆராதனை நடத்தியபோது, எங்கள் அற்புதங்களும் சுகமளித்தல்களும் ஏன் சிறிய காரியங்களுக்கு மட்டுமே உள்ளது என்று நான் எப்போதுமே ஆச்சரியப்பட்டது உண்டு. சில நேரங்களில் நாங்கள் காரியங்களை கட்டாயப்படுத்துவது போல் இருந்தது. ஆனால் இப்போது அந்தத் தடுமாற்றம் உடைக்கப்பட்டிருக்கிறது.
93 ஓ, பல வருடங்களாக நாங்கள் மிகவும் போராடி மனமாற்றம் செய்த தேவனுடைய பிள்ளைகளின் இரட்சிப்புக்காக நான் நாடு முழுவதும் பயணம் செய்ய விரும்புகிறேன்." ஆமென்! அவர் கிருபை மற்றும் இரக்கத்தின் தேவன்.
94 சகோதர சகோதரிகளே, சுகமளிக்கும் வரம், மென்பொருளைப் போன்றது. மேலும் தீர்க்கதரிசியின் பிரதிஷ்டை, மென்பொருளின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதற்கான திறவுகோலாக வருகிறது. நீங்கள் நேர்மையாக இருந்தால், அது சரியாக வேலை செய்ய வேண்டும், மேலும் உங்கள் சுகமளிக்கும் வரம் வல்லமை வாய்ந்ததாக மாற வேண்டும். எடுத்துக்காட்டுகள் ஏராளம் உள்ளன .
95 மேலும் இப்போது, உறுதிப்படுத்தப்பட்ட பிற சகோதர சகோதரிகள் பிரதிஷ்டைக்கு வர வேண்டும். அவர்கள்: சகோதரி கிறிஸ்டின் பி ஜோ, சகோதரர்கள் செராஃபின் தியா, ஐவரி கோஸ்டின் கோவாஸி லூசியன் மற்றும் கிரா டொனால்ட். கேமரூனைச் சேர்ந்த கிறிஸ்டோஃப் ம்பேனா. காங்கோ-கின்ஷாசாவின் ஜோயல் முங்கு மற்றும் உபோதா டியுடோன், காபோனின் சகோதரி யாதி ஜான்டா மற்றும் பலர்.
96 அவர்கள் ஒவ்வொருவரும் பல சுகமளிக்கும் ஆராதனையை நடத்தியுள்ளனர். செயல்பாட்டில் உள்ள அப்போஸ்தலர்களும் உறுதிப்படுத்தப்பட்ட சகோதர சகோதரிகளும் அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்களின் கூட்டங்களில் பங்கேற்கலாம். ஆனால், சரியான முறையில் முடிவு எடுப்பது அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள்தான். உறுதிப்படுத்தப்பட்ட சகோதர சகோதரிகள், அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் அப்போஸ்தலர்கள் போன்று அனைத்து தண்டனைகளையும் ரத்து செய்யலாம்.
97 ஆப்பிரிக்காவை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் கிருபையானது உலகம் முழுவதையும் சந்திக்க வேண்டும் என்பதே எனது ஜெபம். தேசங்களின் சுகமளித்தல் மற்றும் இரட்சிப்புக்காக உலகம் முழுவதும் சுகமளிக்கும் வல்லமை வாய்ந்த வரங்களை தேவன் எழும்பச் செய்வாராக. சகோதரி டயினா உட்பட, ஆவிக்குரிய வரம் பெற்ற எவரும் அதைச் செயல்படுத்தலாம். எந்தவொரு வரத்திற்கும் அல்லது ஊழியத்திற்கும் உறுதிப்படுத்தலும் அதிகாரமும் பொருந்தும்.
98 மேலும் பெனின் போன்ற நாடுகள் சுகமளிக்கும் ஆராதனைகளை ஏற்பாடு செய்து வரும் அதே வேளையில், டோகோ அலட்சியமாகவே உள்ளது. டோகோவின் அண்டை நாடான பெனினில், சுகமளிக்கும் வரத்துடன் பத்துக்கும் மேற்பட்ட தீவிரமாக உள்ள பிரசங்கிகள் உள்ளனர், ஆனால் டோகோவிற்கும் அதன் அப்போஸ்தலர் கோசி யெலோவிற்கும் இது எந்த அர்த்தத்தையும் உண்டு பண்ணவில்லை .
99 சமீபத்தில், அப்போஸ்தலர் ரவுல் சோடோகின் எனக்கு எழுதினார். அவர் டோகோவிற்குச் சென்று சுகமளிக்கும் ஆராதனைகளை ஏற்பாடு செய்ய விரும்பினார். நான் அவரிடம் போக வேண்டாம் என்று சொன்னேன். இந்த மாதிரியான நாடுகளைச் சேர்ந்த மக்கள் உங்களிடம் வந்து கற்றுக்கொண்டு பின்னர் தங்கள் சொந்த நாடுகளில் சுகமளிக்கும் ஆராதனைகளை தொடங்குவது அவர்களின் பொறுப்பாகும் என்று அவரிடம் கூறினேன் .
100 நீங்கள் செல்ல வேண்டியது சுகமளிக்கும் ஆராதனையை ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் ஒரு நாட்டிற்குத்தான். அர்ப்பணிப்பை மறுக்கும் சகோதர சகோதரிகளின் நாடுகளுக்கும் இது பொருந்தும்.
101 மேலும், சகோதரி ரோசின் பெனினில் இருந்தபோது, 2025 அக்டோபர் 18 சனிக்கிழமை, டோகோ அதன் நான்காவது சுகமளிக்கும் ஆராதனையை நடத்தியது. முதல் மூன்று சுகமளிக்கும் ஆராதனையில் உடனடி சுகபடுத்துதல்கள் எதுவும் நடந்ததாக பதிவு செய்யப்படவில்லை .
102 இந்த முறை, சுகமளிக்கும் ஆராதனை டோகோவின் மிகப்பெரிய சபையான சங்குவேராவில் நடந்தது. மேலும் சங்குவேரா சபையின் போதகரான அப்போஸ்தலர் கோசி யெலூ தான் நோயுற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டியிருந்தது.
103 முதலாவதாக, இந்த சுகமளிக்கும் ஆராதனையை ஒழுங்கமைப்பதற்காக, டோகோ முழுவதும் அவர்கள் அர்பணிப்பில் இருக்கும் ஒருவரைக் கண்டுபிடிக்கவும், அவர் வந்து ஒரு பங்கை வகிக்கவும் தேடிக்கொண்டிருந்தனர். டோகோவில், ஒருவரை அர்பணிப்பில் இருக்கச் சொல்வது அல்லது வெள்ளை சாதத்தை சாப்பிடச் சொல்வது என்பது சாத்தியமற்றதைச் செய்யச் சொல்வது போன்றது.
104 மேலும் இந்த அக்டோபர் 18, 2025 அன்று, பல நோயாளிகள் வந்திருந்தனர் : பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதவர்கள், வாய் பேசாதவர்கள், குருடர்கள் மற்றும் அனைத்து வகையான நோய்வாய்ப்பட்ட மக்கள் இருந்தனர் . அப்போஸ்தலர் கோசியின் செய்தித் தொடர்பாளர் பிரசங்கி ஸ்டானிஸ்லாஸ், 20 நிமிட பிரசங்கம் செய்து, வீடியோக்களுக்கு விளக்கவுரை வழங்கினார். எல்லாம் நன்றாக நடந்தது. அவருக்குப் பிறகு, அப்போஸ்தலர் கோசி பிரசங்க பீடத்திற்கு சென்றார்.
105 ஆனால் அப்போஸ்தலர் கோசி பொதுவான ஜெபத்தை எழுப்பிக் கொண்டிருந்தபோது, ஆசீர்வாதம் அல்லது சுகபடுத்துதல்களுக்கு பதிலாக, தேவனின் கோபமே கூட்டத்தினர் மீது வந்தது.
106 அப்போஸ்தலர் கோசி ஜெபத்தை முடித்துவிட்டு கண்களைத் திறந்தபோது, அவர் ஜெபத்தைத் தொடங்கியபோது அவருக்கு அருகில் நின்றிருந்த பிரசங்கி ஸ்டானிஸ்லாஸ், ஒரு நாற்காலியில் சுயநினைவிழந்து , அவருடைய கண்கள் பின்னோக்கிச் சுழன்றன. அவர் இறக்கும் தருவாயில் இருந்தார்.
107 பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உதவியாக இருக்கும் ஒரு சகோதரர், பிரசங்கி ஸ்டானிஸ்லாஸை எழுப்ப முயற்சிக்கிறார். ஆனால் அது முடியவில்லை வீணாகிப் போகிறது. அப்போஸ்தலர் கோசியை ஜெபத்திற்காக நோயாளிகளிடம் அழைத்துச் செல்ல வேண்டியவர் தான் இந்த ஸ்டானிஸ்லாஸ் . அப்போஸ்தலர் கோசி பலமுறை அவரது பெயரை உச்சரித்தார், ஆனால் எந்த பதிலும் இல்லை.
108 அப்போஸ்தலர் கோசி தாமே பின்னர் ஊமையாகி வலிமையை இழக்கத் தொடங்கினார். அவரால் அதற்கு மேல் பார்வையாளர்களைப் பார்க்க முடியவில்லை, பின்னர் அவர் தன்னுடைய சுயநினைவை இழந்தார். அவர் சரிந்து கீழே விழும் நிலையில் இருக்கும் போது , பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த நான்கு உதவியாளர்கள் அவரைப் பிடித்து நிற்க வைக்க முயற்சி எடுத்தனர் முயற்சி வீணானது, கூட்டத்தினர்களை கண்களை மூடச் சொன்னார்கள்.
109 அப்போஸ்தலர் கோசியை உயிர்ப்பிக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் பலனளிக்கவில்லை. மேலும் சுயநினைவை இழந்த நிலையில், ஒரு சவப்பெட்டியைப் போல தோள்களில் சுமந்து, அப்போஸ்தலர் கோசி மண்டபத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டு அரங்கத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டார்.
110 வீடியோவில், பாதுகாப்புப் பணியாளர்கள் கூட்டாளிகளின் கும்பலைப் போல நடந்து கொண்டனர். குறிப்பாக அங்கிருந்த அஞ்ஞானிகளின் முன்னிலையில் அது ஒரு வெட்கக்கேடானது . அப்போஸ்தலர் கோசி விழுந்து பின்னர் ஒரு சிப்பாயைப் போல எழுந்திருந்தால் அது மிகவும் உன்னதமாக இருந்திருக்கும்.
111 ஆனால் அவர் வெளியே கொண்டு செல்லப்பட்டபோது, அவரது பிரசங்கி உடனடியாக சுயநினைவு பெற்றார். ஒரு பெரிய பயம் கூட்டத்தினரை ஆட்கொண்டது. முந்தைய இரவு, ஒரு பெரிய மண்டபத்தில் நடைபெறும் ஒரு இறுதிச் சடங்கில் அவர் இருப்பதாக கனவு கண்டதாகவும், சுமந்து செல்லப்பட்ட சவப்பெட்டி கிட்டத்தட்ட ஒரு பெண்ணின் காலில் விழுந்ததாகவும் அவரது பிரசங்கி கனவை நினைவு கூர்ந்தார்.
112 அப்போஸ்தலர் கோசி யெலூ ஏற்பாடு செய்த முதல் சுகபடுத்தும் ஆராதனை இப்படியாக முடிந்தது. என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளாமல் கூட்டம் கலைந்து சென்றது.
113 ஆனால் அப்போஸ்தலர் கோசி சுயநினைவு திரும்பியபோது, அவர் ஓர் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். மேலும் ஒரு வெளிப்பாட்டின் அடிப்படையில், இந்த அக்டோபர் 18, 2025 அன்று அவர்களுக்கு ஏற்பட்ட அனைத்து துரதிர்ஷ்டங்களுக்கும் ஜோனாஸ் என்ற இளம் பிரசங்கி தான் காரணம் என்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அவர் அறிவித்தார்.
114 இருப்பினும், டோகோவில் எந்த செல்வாக்கும் இல்லாத இந்த இளம் பிரசங்கி மரியாதைக்குரியவர் மற்றும் அர்ப்பணிப்பில் நன்றாக வாழ்கிறார். மேலும் இந்த அக்டோபர் 18 அன்று சங்குவேராவில் நடந்த சுகமளிக்கும் ஆராதனையின் போது, இந்த பிரசங்கி ஜோனாஸ் நல்ல மனநிலையில் இருந்தார், மேலும் பிரசங்க பீடத்தில் பணியாற்ற இருந்தார். ஆனால் அப்போஸ்தலர் கோசி அவரை ஒரு பாதுகாப்புப் பிரிவின் உறுப்பினராக அனுப்பினார்.
115 ஆனால் காணொளியில், அப்போஸ்தலர் கோசி கீழே விழுந்த போது , அவர் விழாமல் இருக்க பின்னால் இருந்து அவரை தாங்கியவர் இந்த சகோதரர் ஜோனாஸ் தான். மேலும், மற்ற உதவியாளர்களிடம் கூட்டத்தினர் கண்களை மூடிக்கொண்டு தலையை குனிந்து கொள்ளச் சொன்னதும் இந்த சகோதரர் ஜோனாஸ் தான்.
116 தேவனுக்கு எதிராகக் கலகம் செய்து, டோகோ முன்னேறுவதைத் தடுக்கும் ஜோனாஸ் என்பவர் , அது அப்போஸ்தலர் கோசியாகிய அவர் தான் என்பதை அப்போஸ்தலர் கோசி யெலூ புரிந்து கொள்ளவில்லை. டோகோவில், எல்லாவற்றையும் செய்பவர் அவர்தான். மேலும் அவர் மட்டுமே ஞானஸ்நானம் வழங்குபவர்.
117 ஆனால் தன்னைத்தானே கேள்வி கேட்பதற்குப் பதிலாக, தன்னிடமிருந்து வெகு தொலைவில் ஒரு சிறிய கூட்டத்தில் இருக்கும் இந்த ஏழை சிறிய பிரசங்கியாகிய ஜோனாஸைக் குற்றம் சாட்டினார். ஆனால் இந்த அக்டோபர் 18, 2025 அன்று, உண்மையான ஜோனாஸ், உதவியாளர்களில் ஐந்து வீரம் மிக்க மனிதர்களால் தூக்கி தர்ஷிஷ் படகிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவை அனைத்தையும் மீறி, கோசி இதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.
118 பிரசங்க பீடத்தில் இருந்த ஒருவர் விழுந்தால், அவரை அழைத்துச் சென்று வெளியே கொண்டு செல்லுங்கள். அது தான் சரியாகும் . ஆனால் பிரசங்க பீடத்தில் யாராவது கீழே விழும் நிலையில் இருக்கும்போது, 2 சாமுவேல் 6-ல் உள்ள ஊசாவைப் போல, அவர் விழுந்துவிடாதபடி அவரைத் தடுத்து நிறுத்துபவர் மட்டுமே அவரது செயலுக்குப் பொறுப்பேற்கட்டும்.
119 அக்டோபர் 18, 2025 அன்று சனிக்கிழமை டோகோவில் நடந்தது தேவனின் கோபத்தின் வெளிப்பாடாகும். மேலும் இந்த நிலையில்தான், செய்தியில் தற்போது நடப்பதைப் பற்றி கவலைப்படாத அனைத்து நாடுகளும், சபைகளும், மக்களும் இருக்கிறார்கள். தேவன் எல்லாவற்றையும் பார்க்கிறார், அனைவரின் செயல்களுக்கும் வெகுமதி அளிப்பார். இது வெறும் காலத்தின் ஓர் அடையாளம் ஆகும் .
120 மேலும் நானும் கூட இந்த நிலைமையைப் புரிந்துகொள்ள விரும்பியபோது, அப்போஸ்தலர் கோசி, சுகமளிக்கும் ஆராதனைக்கு சற்று முன்பு, யாரோ ஒருவர் ஒரு சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுவதை தடுப்பதாக ஒரு கனவில் கண்டதாகக் கூறினார். எனவே, அவர், "சுகமளிக்கும் ஆராதனையைத் தடுக்கும் இந்த நபர் யார்?" என்று கூச்சலிட்டார், மேலும் குரல்கள், 'அது ஜோனாஸ்! அது ஜோனாஸ்!' என்று பதிலளித்தன, அவர் விழித்தார்.
121 மேலும் நான் அவர் சொன்னதைக் கவனித்த போது, நான் சோகமானேன் . வெளிப்பாடுகளைத் எப்படியெல்லாம் திரித்து தீங்கு விளைவிக்க மக்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நான் கற்பனை செய்து பார்த்தேன் . அவர்கள் ஒரு முழு சபையையோ அல்லது முழு நாட்டையோ ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய கொடூரமான ஓநாய்கள். தீர்க்கதரிசி பூமியில் இல்லாதபோது மந்தையை சூறையாடுபவர்கள் இவர்கள்.
122 அதனால்தான் நான் சொன்னேன், ஒரு பொறுப்பில் இருக்கும் ஒரு சகோதரர் தூக்கத்தில் அசையாமல் இருந்தால், அவர் தனது சபையில் பாவ அறிக்கை செய்வதற்கு முன், தனது நாட்டின் குழுவில் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும் அவர் ஒரு அப்போஸ்தலராகவோ அல்லது முன்னாள் அப்போஸ்தலராகவோ இருந்தால், அவர் தனது மொழியின் குழுவில் அவ்வாறு செய்ய வேண்டும்.
123 இரவு அசுத்தம் என்பது மீண்டும் மீண்டும் பாவம் செய்வதன் விளைவாகும். ஆனால், தனது ஆவியில், ஒருவர் இனி செய்தியில் இல்லாதபோது அல்லது செய்திக்கு விரோதமாக எதிரியாக செயல்படும்போது அவருக்கு அசையாமை ஏற்படும்.
124 ஒருவர் அழிவின் பாதையை தேர்ந்தெடுக்கும் போது, அவர் ஒருபோதும் தன்னைத்தானே கேள்வி கேட்க மாட்டார். வெளிப்பாடுகளில் அவர்களுக்கு எப்போதும் மற்றவர்கள் பிசாசாக தோன்றுவார்கள், அதே சமயம் பரிசுத்த தூதர்கள் அது எப்போதும் அவர்களாகவே இருக்கிறார்கள் , அது வார்த்தையின் வரிசையில் இல்லாவிட்டாலும் கூட. இருப்பினும், உங்கள் கவலை இரட்சிப்பைப் குறித்ததாக இருக்கும் வேளையில், யாராவது உங்களுக்கு ஒரு கெட்ட கனவை விளக்கினால், உங்கள் முதல் பிரதிபலிப்பு எப்போதும் கனவு உங்களைப் பற்றியதல்லவா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.
125 சகோதரர் யூனிம் உபார் எலி, தனது பாஸ்போட்டைச் ஆயத்தமாக்க கின்ஷாசாவில் நமது விலைமதிப்பற்ற அப்போஸ்தலர் மோசிலியுடன் தங்கியிருந்தபோது, அப்போஸ்தலர் மோசிலி ஒரு கனவில் தனது வீட்டைச் சுற்றி பலத்த ஆயுதம் ஏந்திய வீரர்களின் தோற்றத்தில் தேவதூதர்கள் இருப்பதைக் கண்டார். அது ஒரு பயங்கரமான போர் சூழ்நிலையாக இருந்தது. எல்லா இடங்களிலும் இடிபாடுகள் இருந்தன. அப்போஸ்தலர் மோசிலி, வீரர்களை பயத்துடன் பார்த்தார்.
126 அப்போது ஒரு வீரர் அவரை அணுகி, "பயப்படாதே. தேவனுடைய சேனையின் ஒரு தலைவரை பாதுகாக்க நாங்கள் இங்கே இருக்கிறோம்" என்றார். அப்போஸ்தலர் மோசிலி, அந்த போர்வீரனிடம் மோசிலி என்ற தன் வீட்டிலும் ஒரு சேனைத்தலைவர் இருப்பதாக கூறினார். பின்னர் அவர் விழித்தெழுந்தார்.
127 மேலும் தேவதூதர்களால் பாதுகாக்கப்பட்ட இந்த தலைவர் யார் என்று நான் அப்போஸ்தலர் மோசிலியிடம் கேட்டபோது, எனக்கு நான் ஆச்சரியப்படும்படியாக , தேவனின் இந்த படைத்தலைவர் அது அவரே தான் , என்று அவர் நம்புவதாக பதிலளித்தார். இருப்பினும், கனவு தேவனிடம் வந்த செய்தி, கின்ஷாசாவின் சகோதர சகோதரிகளுக்கு சகோதரர் யூனிம் உபார் எலியை மதிக்கக் கற்றுக்கொடுக்க அறிவுறுத்தியது.
128 தனது காலத்தின் செய்தியில் சுகமளிக்கும் வரத்துடன் நடக்கும் எந்தவொரு ஆணோ பெண்ணோ தேவனுடைய சேனையின் தலைவராக உள்ளனர். மேலும் அவர் தேவனுடைய சேனையின் வீரர்களை விட்டு வெளியேறாத வரை, தேவனின் தூதர்கள் அவரைப் பாதுகாக்க அவரைச் சுற்றி முகாமிட்டுள்ளனர். மேலும் அவரை நோக்கிய நமது செயல்களில் இதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
129 இந்தச் செய்தியில் தேவனிடமிருந்து உறுதிப்படுத்துதல் அல்லது தீர்க்கதரிசியின் கட்டளையைப் பெற்றதாக யாருடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவர்களை நீங்கள் மதிக்க வேண்டும். மேலும் அவர்கள் தவறாகச் செயல்பட்டால், அவர்களை பயத்துடனும் மரியாதையுடனும் திரும்ப அழைத்து வாருங்கள். மேலும் இப்போதிலிருந்து , அவர்கள் செய்தியிலிருந்து வெளியேற்றப்படவோ அல்லது அதற்கு வெளியே எந்த தண்டனையையும் பெறவோ முடியாது.
130 நீங்கள் சொல்லுகிறீர்கள், "ஓ, எழுத்தறிவற்ற இந்த மற்றும் அந்த சகோதரர், நோயாளிகளுக்காக ஜெபிக்கிறவர், அவரா தேவனுடைய சேனேயின் தலைவர்?" நீங்கள் இதை உங்களுக்குள் சொல்லும்போது, , ஒரு காலத்தில் கிறித்தவ பிரதான தேவாலயங்களில் இருந்தவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள், மேலும் நாஜி ஜெர்மானியர்களாக மாறியவர்களும் நீங்களாகவே இருக்கிறீர்கள்.
131 அர்ப்பணிப்புகளை மறுக்கும் அல்லது தவறான முறையில் அர்ப்பணிப்பில் இருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளும் நாஜி ஜெர்மானியர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பெருமையால் அவதிப்படுபவர்கள் அல்லது சுகபடுத்தும் வரம் உள்ளவர்களும் ,எந்த பயமும் இல்லாத அனைவரும் கொள்ளையர்கள் மற்றும் நாஜி ஜெர்மானியர்கள்.
132 மனத்தாழ்மை நமக்குள் வாழ வேண்டும். அக்டோபர் 11, 2025 அன்று, ஜிம்பாப்வேயில், சகோதரி மஸ்விடாவின் முதல் சுகமளிக்கும் ஆராதனையின் போது, அப்போஸ்தலர் எலிஃபாஸ் நுண்டு ஏற்பாட்டாளராக இருந்தார் , அப்போஸ்தலர் பெட்ஸிசாய் 20 நிமிட பிரசங்கத்தை வழங்கினார். இந்த மனத்தாழ்மை நமது பெரும்பாலான பழைய அப்போஸ்தலர்கள் மற்றும் போதகர்களிடையே இல்லை.
133 கிழக்கு காங்கோ-கின்ஷாசாவில் உள்ள மஹாகி-போர்ட் சபை, சுகபடுத்தும் வரம் பெற்ற ஒருவருடன் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை ஏற்பாடு செய்ய விரும்பியது, ஆனால் அவர்களின் போதகர் உவின்ஜி உகெலோ தான் நோயுற்றவர்களுக்காக ஜெபிக்க விரும்பினார். அவர்களின் வெளிப்பாடுகளின் அடிப்படையில், அவர்கள் பிரசங்கி ஜோயல் முங்குவை அழைத்து வந்தனர், அவருக்கு ஏற்கனவே பல உடனடி சுகமளிக்கும் ஆராதனையின் அனுபவம் இருந்தது.
134 சுகமளிக்கும் ஆராதனை சனிக்கிழமை, அக்டோபர் 27, 2025 அன்று நடந்தது. பிரசங்கி ஜோயல் முங்கு நோயுற்றவர்களுக்காக ஜெபிக்க வந்தார். அந்த நாள் ஓர் எழுப்புதல் நாள் , 27 உடனடி சுகபடுத்துதல்கள் பதிவு செய்யபட்டன , ஆனால் போதகர் உவின்ஜி ஆராதனை செய்யவோ அல்லது ஆராதனையில் கலந்து கொள்ளவோ வரவில்லை.
135 மேலும், பிரசங்கி ஜோயல் முங்குவை அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமை தொடர அனுமதிப்பதற்கு பதிலாக, போதகர் உவின்ஜி நோயுற்றவர்களுக்காக ஜெபிக்க தன்னைத்தானே கட்டாயப்படுத்தினார். மேலும் பிரசங்கி ஜோயல் முங்கு திரும்பவும் ஞாயிற்றுக்கிழமை வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்.
136 மேலும், பாஸ்டர் உவின்ஜி, தான் செய்ய விரும்புவது சரியல்ல என்றும், முதலில் ஆராதனை செய்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் சுகமளிக்கும் வரம் பெற்ற ஒரு சகோதரரின் குழுவில் இருக்க வேண்டும் என்னும் அடிப்படையில் சகோதரர்கள் சொல்வதைக் கேட்டபோது, அவர் தனது அறையிலிருந்து வெளியே வந்து அவர்களைக் கடிந்துகொண்டார்.
137 மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை, முந்தைய நாளின் அற்புதங்கள் காரணமாக பலர் வந்திருந்தனர். ஆனால், நோயாளிகளுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது, போதகர் உவின்ஜி தரையில் முகம் குப்புற விழுந்தார். அது மிகவும் பயங்கரமாக விழுந்ததால் தரையிலிருந்து தூசி மேலே எழும்பியது. அவர் சுயநினைவை இழந்து சபையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார், மேலும் அவர் இல்லாததால் ஆராதனை நிறுத்தப்பட்டு முடிந்தது.
138 நான் அவரது வீடியோவையும் அப்போஸ்தலர் கோசியின் வீடியோவையும் பதிவிடுகிறேன். தேவனுடைய விரோதிகளாகச் செயல்படுபவர்கள் அல்லது தவறான அறிக்கைகளை வழங்குபவர்கள் அனைவருக்கும் நான் இதைச் செய்வேன்.
139 பழைய போதகர்கள் மற்றும் அப்போஸ்தலர்களாகிய நீங்கள் அனைவரும் மனத்தாழ்மையுடன் இருங்கள். நீங்களும் மற்றவர்களுக்கு உதவியாக இருங்கள். நாற்காலிகளை எடுத்துக்கொண்டு பெஞ்சுகளை சுத்தம் செய்யுங்கள். நீங்கள் இரட்சிக்கப்பட விரும்பினால் சிறு பிள்ளைகளாக இருக்க வேண்டும்.
140 முடிவாக , சுகமளிக்கும் ஆராதனையின் போது நடந்த விஷயங்களையும், நம்மிடையே தேவதூதரின் பிரசன்னத்திற்கு சாட்சியமளிக்கும் விஷயங்களையும் நான் குறிப்பிடப் போகிறேன். அக்டோபர் 18, 2025 அன்று, ஜிம்பாப்வேயில், பிரசங்கி மும்பாண்டே முதல் நோயாளிக்காக ஜெபிக்கவிருந்தபோது திடீரென்று பலவீனமானார். அவர் நிற்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
141 மக்கள் கூட்டத்தினர் அவருக்காக ஜெபிக்கும்போது அவர்கள் அவரை சுமார் பத்து நிமிடங்கள் உட்கார வைத்தனர். அப்போஸ்தலர் எலிஃபாஸ் நுண்டு அவருக்கு அருகில் நின்றார். எதுவும் சாப்பிடாமலும் குடிக்காமலும், பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவர் பலம் பெற்றார். அவர் எழுந்து நின்று அனைத்து நோயாளிகளுக்காகவும் ஜெபித்தார், உடனடி சுகபடுத்துதல்கள் இருந்தன. ஐவரி கோஸ்டில் உள்ள போதகர் மௌவ் ஜூல்ஸுக்கும் இதேதான் நடந்தது. ஆனால் முதல் அல்லது இரண்டாவது நோயாளிக்காக ஜெபிக்க முயற்சிக்கும்போது நீங்கள் விழுந்தால், நீங்கள் எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் அல்லது உங்களுக்கு பதிலாக இன்னொருவர் இருக்க வேண்டும்.
142 அவருடைய வார்த்தையின் ஒவ்வொரு அம்சத்தையும் கண்காணிக்கும் தேவனின் வழிகாட்டுதலின் கீழ் நாம் இருக்கிறோம். ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 2, 2025 அன்று, அயர்லாந்தில், சகோதரி சிஃபிசோ சிபாண்டா முந்தைய நாளுக்கு பிறகு மறுநாள் மற்றொரு சுகமளிக்கும் ஆராதனையை நடத்தவிருந்தார். வீடியோக்களின் ஒளிபரப்பு மற்றும் 20 நிமிட பிரசங்கத்திற்குப் பிறகு, அவள் நோயாளிகளுக்காக ஜெபிக்கத் தொடங்கவிருந்தபோது, அவளுக்கு ஒரு விசித்திரமான உணர்வு ஏற்பட்டது.
143 அவள் உடனடியாக கழிப்பறைக்குச் சென்றாள், இதோ, பெண்களுக்கு உள்ளது அவளுக்கு நேர்ந்தது. பின்னர் அவள் தனது போதகரும் செய்தித் தொடர்பாளருமான சகோதரர் வுண்ட்லா மாண்ட்சனிடம் தனது இடத்தில் இருந்து நோயாளிகளுக்காக ஜெபிக்கும்படி கேட்டாள். இது செய்யப்பட்டது, உடனடி சுகபடுத்துதல்கள் இருந்தன.
144 ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை, ஒவ்வொரு கணத்திலும், தேவன் நம்முடன் இருப்பதைக் காட்டியுள்ளார். மேலும் இதன் மூலம் நாங்கள் நன்றியுள்ளவர்களாகவும் பலப்படுத்தப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். மீதமுள்ளவர்களுக்கு, இந்த சுகமளிக்கும் ஆராதனைகளின் பரிமாணத்தில் பணிபுரியும் நம்முடைய சகோதர சகோதரிகள் அனைவரையும் தேவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இது ஒரு புதிய அனுபவம்.
145 அவர் கிருபையும் இரக்கமும் உள்ள தேவன். அவருடைய கிருபையையே நாம் நம்பியிருக்கிறோம், அவருடைய கிருபையையே நான் உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் . அவருக்கு மட்டுமே மகிமையும் கனமும் என்றென்றும் உண்டாவதாக. ஆமென்!