1 இயேசு கிறிஸ்துவின் அடிமையான நான், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு, டிசம்பர் 1, 2025 அன்று பரிசுத்தவான்களுக்கு, வழங்கிய வார்த்தைகளும் அறிவுறுத்தல்களும், இதுவே திருச்சபையின் தற்போதைய காலக் கட்டத்தில் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்கான நுழைவு வாயிலாகும்.
2 சகோதர சகோதரிகளே, முதலில், பரிசுத்த ஆவியானவர் நமது உத்வேகம் மற்றும் வெளிப்பாட்டின் ஒரே ஆதாரம் என்பதை அறிந்து கொள்ளுங்கள், மேலும் செயற்கை நுண்ணறிவை நமது ஆவிக்குரிய வாழ்க்கையுடன் இணைக்கக்கூடாது.
3 பள்ளியில் அல்லது வாழ்க்கையின் சில பகுதிகளில், தேவனுடைய பிள்ளை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம். ஆனால் வெளிப்பாடு தொடர்பான விஷயங்களைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவுக்கு எந்த ஓர் இடமும் கிடையாது .
4 செயற்கை நுண்ணறிவு என்பது இணையம் என்ற அந்த மாபெரும் பெண்ணின் மற்றொரு கவர்ச்சிகரமான மகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்; அந்தப் பெண்ணைத்தான் வில்லியம் பிரன்ஹாம் அமெரிக்காவிலிருந்து எழுந்து, பூமியில் வசிப்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வருவதாக தரிசனம் கண்டார். ஆனால் உண்மையில், செயற்கை நுண்ணறிவு என்பது புதிய ஒப்பனையுடன் இருக்கும் அதே கூகிள் அழகி அல்லது நல்ல பெண்மணி ஆவாள் .
5 நல்லது. மெக்சிகோவின் சில சகோதரர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, சீஷர் எஸ்பர்சா என்ற அப்போஸ்தலர் தவறாக நடந்து கொள்கிறார் என்று கூறினார்கள். மேலும் தேவையில் இருக்கும் அல்லது பிரதிஷ்டை செய்யப்பட்ட, அதாவது எப்போதும் சுவிசேஷப் பணியில் சுறுசுறுப்பாக இருக்கும் ஒரு சகோதரருக்குப் பணம் கொடுப்பதற்கு முன்பு, அவர்களின் காரியதரிசி தங்கள் போதகரிடம் ஆலோசனை கேட்பார் என்றும் அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.
6 ஓர் அப்போஸ்தலர் தவறாக செயல்பட்டால், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது அல்லது அவரை பதவி நீக்கம் செய்வது எனது கடமை. ஆனால் ஒரு போதகர், ஒரு காரியதரிசி அல்லது மற்றவர்களின் செயல்களில் தலையிடுவது எனது கடமை அல்ல.
7 உங்கள் நாடுகளில் மக்கள் தவறாக செயல்படவோ அல்லது தங்கள் விருப்பப்படி நடக்கவோ நீங்கள் அனுமதித்தால், நீங்கள் அந்த மக்களைப் போலவே கெட்டவர்கள் ஆவீர்கள். மேலும், நியாயத்தீர்ப்பின் போது, அதற்காக நீங்கள் தேவனிடம் கணக்குக் கொடுப்பீர்கள்.
8 தற்போதைய கட்டத்தின்படி, பரிசுத்தப்படுத்தப்பட்ட அல்லது உறுதிப்படுத்தப்பட்ட சகோதர சகோதரிகள் தங்கள் ஓய்வு நேரங்களில் தங்களுடைய நாடுகளையும் மற்ற நாடுகளினுடைய நிலைத்தன்மையையும் கவனிக்க வேண்டும். மேலும் இப்போது, அவர்களின் வெளிப்பாடுகளின்படி, பெனினைச் சேர்ந்த அப்போஸ்தலர்கள் ரவுல் சோடோகின் மற்றும் ஜேக்கப் அஹவுட்ஜி மற்றும் காபோனைச் சேர்ந்த சகோதரி யதி ஜான்டா ஆகியோர் டோகோவை உயர்த்த உதவுவதற்காக டோகோவில் உள்ளனர். அவர்கள் முழு டோகோ மக்களுடனும் ஒரு பெரிய சந்திப்புக் கூட்டத்தை நடத்தினர்.
9 அவர்கள் நோயாளிகளுக்காக ஜெபிப்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் மனநிலையையும் அர்ப்பணிப்பையும், உடைக்க சாத்தானின் சோதனைகள் மற்றும் தூண்டுதல்கள் போன்ற பல விஷயங்களை எதிர்கொண்டு அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஒரு வெளிப்பாடு அவர்களைப் பேசச் சொல்லாத வரை, அவர்கள் அமைதியாக இருக்க முடியும்.
10 நல்லது. இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். 2024 ஆம் ஆண்டு அர்ப்பணிப்பு ஆரம்பித்ததிலிருந்து மார்ச் 2025 இல் நடந்த சுகமளிக்கும் ஆராதனைகள் வரை, பரிசுத்தமாக்குதல் பற்றிய வெளிப்பாடுகள் அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தின, அதோடு கூட உணவானது ஒரு மையக் கூறாக இருக்கிறது.
11 இதைத்தான் நம்மில் பெரும்பாலோர் அனுபவிக்கிறோம். ஆனால் நான் உறுதிப்படுத்தப்பட்ட சகோதரர்கள் நியமனம் அல்லது பிரதிஷ்டையைத் தொடங்கிய காலத்திலிருந்து, பரிசுத்தமாக்குதல் பற்றிய எனது வெளிப்பாடுகள் வேறொரு நிலையில் உள்ள விஷயங்களைப் பற்றியவை . நான் அவர்களின் வாழ்க்கையின் மாற்றத்தைக் காண்கிறேன்.
12 உபாகமம் 34:9-ல், மோசே யோசுவாவின் மேல் தன் கைகளை வைத்தபடியால், அவன் ஞானத்தின் ஆவியினால் நிரப்பப்பட்டான் என்று எழுதப்பட்டுள்ளது; மேலும் இஸ்ரவேல் புத்திரர் யோசுவாவுக்குச் செவிகொடுத்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
13 பரிசுத்தமாக்குதலின் இந்த அளவைப் பற்றி அதற்கு உங்களை தயார்படுத்துவதற்காக மூன்று விஷயங்களை நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். முதல் விஷயம் என் காரைப் பற்றியது. ஒரு வெளிப்பாட்டின் படி, எனது கார் பழுதடைந்தால் நான் அதை ஒரு போதும் சரிசெய்யக்கூடாது. நான் அதை நிரந்தரமாகத் தள்ளி வைக்க ஓர் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். மேலும் அது இரண்டு மாதங்கள் நீடித்தது.
14 அக்டோபர் 12, 2025 அன்று மாலை, ஒரு சகோதரர் அந்த காரை பழுது பார்க்க சென்றிருந்தார். திரும்பி வரும் வழியில், அவருக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. விபத்து மிகவும் பயங்கரமாக இருந்ததால், முன்பக்க டயர் மற்றும் பின்பக்க டயர் அவற்றின் விளிம்புகளுடன் கிழிந்தன. காற்றுப் பையானது பழுதடைந்தது , மேலும் கார் ஒரு பெரிய கான்கிரீட் சுவரில் பலமாக மோதி, தார்சாலையில் மூன்று முறை உருண்டு அதன் செயல்பாடு நின்றது, சக்கரங்கள் காற்றில் பறந்தன.
15 சகோதரர் கடுமையான காயமின்றி உயிருடன் வெளியே வருவதைப் பார்த்த சாட்சிகள் ஆச்சரியப்பட்டனர். மறுநாள், காவல் துறையினர் காரை எடுத்து சென்றனர். அதை போலீசாரிடம் விட்டுவிடுவோம் என்று முடிவு செய்தேன். அதுதான் எனது பழைய வெள்ளை ஜீப்பின் நிலை.
16 இரண்டாவது விஷயம் என்னவென்றால், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சகோதரி எனக்கு செய்தியின் தேவைக்காக $1,750 அமெரிக்கா டாலர் பணம் கொடுத்தார். நான் அதை ஒரு பரிசு என்று நினைத்தேன், ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 2025 இல், தேவனின் தூதர் $1,750 கொடுத்தபோது எடுத்த அந்த புகைப்படத்தை மீண்டும் எனக்கு நினைவூட்டினார், அது சகோதரி எனக்குக் கொடுத்த கடன் என்று எனக்குத் தெரிந்தது.
17 அந்தக் காட்சியையும் சூழ்நிலையையும் அது நடந்தது போல் நினைவில் வைத்தேன். சகோதரி எனக்குக் கொடுத்த தொகையை விட இரண்டு மடங்கு திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தேவதூதர் என்னிடம் கூறினார்.
18 எனவே நான் அந்த சகோதரியிடம் சென்றேன், அது ஒரு கடன் என்று அவள் உறுதிப்படுத்தினாள், ஆனால் அதை ஒரு பரிசாகக் கருதினாள். அவள் திருப்பி வாங்க விரும்பவில்லை, ஆனால் அவளும் நானும் தேவனின் வார்த்தையை நிறைவேற்றும் வகையில் அதை ஏற்றுக் கொள்ளும்படி நான் அவளிடம் தாழ்மையாக கேட்டுக்கொண்டேன். அவள் இறுதியாக ஒப்புக்கொண்டாள். தேவதூதரின் வார்த்தையின்படி, நான் சகோதரிக்கு $3,500 டாலர் கொடுத்தேன்.
19 மூன்றாவது விஷயம் என்னவென்றால், ஜூன் 2025 இல், எனது வீட்டிற்கு பல வருட வரி நிலுவைக்காக $1,130 டாலர் செலுத்த வேண்டும் என்று வரி அதிகாரிகளிடமிருந்து ஒரு ஆவணம் எனக்குக் கிடைத்தது.
20 நான் பணம் செலுத்த விரும்பவில்லை, ஏனென்றால் நான் ஏற்கனவே செலுத்திய சில ஆண்டுகளுக்கான கட்டணங்களும் அதில் சேர்க்கப்பட்டிருந்தன, மேலும் நான் பணம் செலுத்தியதற்கான ரசீதுகளை வழங்கவில்லை என்றால் அந்த ஆண்டுகளுக்கும் மீண்டும் பணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனாலும், நான் அந்த ரசீதுகளை தொலைத்து விட்டேன். இதன் காரணமாக, நான் $1,130 டாலர் வரிகளை செலுத்த விரும்பவில்லை.
21 மேலும் நவம்பர் 8, 2025 அன்று இரவு, ஐவரி கோஸ்ட்டின் பொது கருவூலத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருக்கும் சகோதரி விவியன் ஒரு கனவில் என்னிடம் வந்து, "தீர்க்கதரிசி, நீங்கள் என்னைப் பார்க்க விரும்பினீர்கள், நான் இதோ இருக்கிறேன்!" என்று கூறினார், நான் உடனடியாக விழித்தேன். எனக்குக் கனவு புரியவில்லை.
22 நவம்பர் 10 அன்று, மற்றொரு கனவில், தேவனின் தூதர் எனக்குத் தோன்றினார். நான் வரிகளை செலுத்திவிட்டேனா என்று அவர் என்னிடம் கேட்டார். நான் அவர்களுக்கு வரி செலுத்த பணம் கொடுக்கவில்லை என்று பதிலளித்தேன். பின்னர் நான் ஏன் அவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்பதை அவருக்கு விளக்கிக் கொண்டிருந்தேன்.
23 மேலும் நான் பேசிக் கொண்டிருக்கும்போது, தேவதூதர் எங்கள் அருகில் தரையில் அமர்ந்திருந்த சுமார் ஐந்து மாதக் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்த அவர், எதுவும் சொல்லாமல் மறைந்தார்.
24 நான், "பாதிரியார்கள், போதகர்கள் மற்றும் தேவாலயங்கள் வரி செலுத்துவதில்லை, ஆனால் அவர்கள் அனைவரையும் இயக்கிக் கொண்டிருக்கும் வேதாகமத்தை எழுதிய தீர்க்கதரிசி செய்தியாளர்கள் வரி செலுத்த வேண்டியது சாதாரணமானதா ?" என்று சொல்லி கொண்டிருந்தேன். ஆனால் தேவதூதர், தேவன் அவர் தாமே, பூமியில் ஒரு மனிதராக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் இருந்தபோது வரி செலுத்தியதாகவும், நான் அவரைப் போலவோ அல்லது அந்தக் குழந்தையைப் போலவோ செயல்பட வேண்டும் என்றும் என்னிடம் கூறியது போல் தோன்றியது.
25 மறுநாள், நான் சகோதரி விவியனைத் தொடர்பு கொண்டு, மொத்தத் தொகையைக் குறைக்கக் கோரும் வகையில் நிலைமையை விளக்கினேன். அவர் விரைவாக வந்தார், ஆனால் பேச்சுவார்த்தை அல்லது குறைப்பு இல்லாமல் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.
26 நான் அவளுடைய திட்டத்தை ஏற்றுக்கொண்டேன், ஏனென்றால், தேவதூதர் பார்த்துக் கொண்டிருந்த ஐந்து மாதக் குழந்தையைப் போல நான் செயல்பட வேண்டுமென்றால் அதுதான் செய்ய வேண்டியிருந்தது. அதே நாளில், சகோதரியின் உதவியுடன், முழு வரி தொகையான $1,130 டாலர் பணம் செலுத்தினேன்.
27 மற்ற பலவற்றுடன் இவைகள் மூன்று உதாரணங்கள் மட்டுமே . பரிபூரண சித்தத்திற்காகவும், ஆவிக்குரிய வரங்களின் உயர்ந்த பரிசுத்தம் மற்றும் செயல்திறனுக்காகவும் இந்த அளவிலான பரிசுத்தமாக்குதலுக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்கிறேன்.
28 இப்போது, சுகமளிக்கும் ஆராதனைகளைப் பொறுத்தவரை, சுகப்படுத்தும் வரத்தைப் பெற்ற நீங்கள், உங்கள் சொந்த அதிகாரத்தின் பேரில் ஓர் இடத்தில் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை ஏற்பாடு செய்து, தேவனை அங்கு அழைப்பது உங்கள் வேலையல்ல. அப்படியானால், உங்கள் சுகமளிக்கும் ஆராதனை எண்ணாகமம் 23-ல் நாம் காணும் பிலேயாமின் பலிபீடமாகும்.
29 நோயுற்றவர்களின் விசுவாசத்தினாலும், செய்தியினாலும், தேவதூதர் அங்கே இருப்பார், மேலும் உங்கள் ஜெபத்தின் மூலம் உடனடி சுகப்படுத்துதல்கள் இருக்கும், ஆனால் கடைசி நியாயத்தீர்ப்பில், நீங்களும் உங்கள் குழுவினரும் அந்த சுகமளிக்கும் ஆராதனையை ஏற்பாடு செய்ய இடம் மற்றும் தேதியை எந்த வெளிப்பாடுகள் மற்றும் எந்த அதிகாரத்தால் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை விளக்குவீர்கள்.
30 இதோ, உங்களுக்கு எச்சரிக்கையாக இந்த அத்தியாயம் காக்குவ் 176க்குப் பிறகு, நீங்கள் இன்னும் உங்கள் சொந்த அதிகாரத்தில் சுகமளிக்கும் ஆராதனையை ஏற்பாடு செய்தால், அதற்கு நீங்கள் கிரயத்தைச் செலுத்துவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும் உங்களைத் தண்டிக்க அல்லது உங்களை அவமானப்படுத்தும் சூழ்நிலைகளில் வைக்க தேவன் சாத்தானை அனுப்ப முடியும்.
31 சகோதர சகோதரிகளுக்கு முன்பாக ஓர் ஆலயத்திலோ அல்லது புறஜாதியினருக்கு முன்பாக ஒரு மண்டபத்திலோ , நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் வெள்ளாடு அல்லது ஆட்டுக்கடா உங்களைக் கண்டுபிடிக்கும். உங்கள் கலகத்தின் கூலி பூமியின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் தெரியும்.
32 நாம் அனைவரும் தேவனின் பரிபூரண சித்தத்தைத் தேடுவோம். ஆராதனையிலோ அல்லது ஒரு சுகமளிக்கும் ஆராதனையிலோ அல்லது வேறு எந்த சூழ்நிலையிலோ, தேவன் உங்களை அனுப்பினால், அவர் உங்களுடன் இருப்பார். எந்தப் பிசாசோ எந்த நோயோ உங்கள் ஜெபத்தை எதிர்க்க முடியாது, மேலும் நீங்கள் பிரசங்க மேடையிலோ அல்லது ஒரு சுகமளிக்கும் ஆராதனையிலோ நிலைகுலைந்து விழுந்து விடமாட்டீர்கள்.
33 அஞ்ஞானிகள் மூலமாகவோ அல்லது சகோதர சகோதரிகள் மூலமாகவோ கூட, காரணத்தையும் மூலத்தையும் நீங்கள் அறியாத ஆவிக்குரிய பிரத்தியட்சங்கள் , உங்களை ஒரு காட்சிக்கு இழுத்து, உங்களை அவமானப்படுத்த உங்களுக்கு எதிராக வரும்.
34 அக்டோபர் 4, 2025 அன்று, காபோனில், ஒரு சுகமளிக்கும் ஆராதனையின் போது, ஒரு சகோதரி எழுந்து நின்றாள். மேலும் அவள் கண்களை மூடிக்கொண்டு, தீர்க்கதரிசனம் கூறி, ஆராதனை கூடத்தில் சுற்றிய போது சில மக்கள் மீது கைகளை வைத்தாள். அவள் பொய்யாகத் தோன்றும் விஷயங்களைச் சொன்னாள்.
35 உதாரணமாக, ஒரு காலியான இடத்தில் அவள் கையைக் காட்டி, "நீ, கால்சட்டை அணிந்த கொழுத்த பெண்ணே, நீ இதையும், அதையும் செய்தாய்...நரை முடி கொண்ட ஆணின் அருகில் அமர்ந்திருக்கும் கொழுத்த பெண்ணே, நீயும் இதையும், அதையும் செய்தாய்..." என்று கூறினாள். ஆனால் நரை முடி கொண்ட ஓர் ஆண் கூட அங்கு கிடையாது .
36 நமது காலத்தின் செய்தியில் இருப்பதால், நாம் உலகத்தின் வெளிச்சமாக இருக்கிறோம். எனவே, நாம் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தின் போது ஒரு ஆவிக்குரிய வரம் செயல்பட்டால், கூட்டத்தை முடிப்பதற்கு முன்பு, முடிந்தவரை பிரத்தியட்சத்தின் நம்பகத்தன்மையை நாம் சரிபார்க்க வேண்டும்.
37 மேலும் ஒருவர் தனது பின்பக்கமாக அல்லது பக்கவாட்டில் விழுவதற்குப் பதிலாக, ஆராதனையின் போது அல்லது சுகமளிக்கும் ஆராதனையின் போது தரையில் முகம் குப்புற விழுந்தால், அவர் பிசாசுக்கு முன்பாக முகம் குப்புற விழுந்துள்ளார் என்பதாகும். பூமியில் மிகவும் துன்மார்க்கராக இருந்த மக்களைப் போல, அவர் முகம் குப்புறப் புதைக்கப்பட்டதைப் போன்றது.
38 உங்களிடம் ஆவிக்குரிய வரம் இருந்தால், சுகமளிக்கும் ஆராதனைக்காக உங்களை ஓர் இடத்திற்கு அனுப்புவது தேவன்தான், ஏனென்றால் அந்த இடத்தில் ஆத்துமாக்களின் அறுவடை பழுத்திருக்கிறது மற்றும் அறுவடைக்குத் தயாராக உள்ளது என்பதை அவர் அறிவார். ஒரு சுகமளிக்கும் ஆராதனையில் தேவனுடைய நோக்கம் ஆத்துமாக்களின் இரட்சிப்பு. மேலும் அறுவடை ஓர் இடத்தில் நிறைவடைந்த பிறகே, மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டும்.
39 அறுவடையின் எஜமானரின் கட்டளையின்றி, இன்னும் பழுக்காத ஓர் இடத்திற்கு அல்லது ஒரு தோட்டத்திற்குச் சென்று அதை அறுவடை செய்ய விரும்புவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. உங்களுக்கு சுகப்படுத்தும் வரம் இருந்தால், நீங்கள் தயாராக இருந்து தேவனுக்காக காத்திருக்க வேண்டும்.
40 யோனாவை நினிவேக்குச் செல்லும்படி தேவன் தான் சொல்ல வேண்டும். மோசேயிடம் சென்று ஆரோனின் பிள்ளைகளை அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டியது தேவன் தான். எலியாவிடமோ அல்லது எலிசாவிடமோ, "போய் இன்ன இன்ன நபரை இன்ன இன்ன காரியங்களுக்காக அபிஷேகம் செய்" என்று சொல்ல வேண்டியது தேவன் தான். பவுலுக்கு மாசிடோனியாவிலிருந்து அழைப்புகள் வந்தாலும், மாசிடோனியாவுக்குச் செல்லும்படி தேவன் தான் சொல்ல வேண்டியிருந்தது.
41 நோயுற்றவர்களுக்காக ஜெபித்த சகோதர சகோதரிகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட அறிகுறிகளை உணர்ந்திருந்தால், சிலர் தங்கள் கைகளில் நோய்களை உணர்ந்திருந்தால் , மற்றவர்கள் தரிசனத்தின் பிரகாசங்கள் மூலம் நோய்களை அறிந்திருந்தால், நாம் அனைவரும் நமது வெளிப்பாட்டின் மூலம் தேவனுடைய பரிபூரண சித்தத்தின் கட்டத்தில் அந்த நிலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
42 பரிபூரண சித்தத்தில், தனது சீடர்களைத் தேர்ந்தெடுப்பது எஜமானர்தான் ,எலியா எலிசாவைத் தேர்ந்தெடுத்தார் . கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் தனது சீடர்களைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அனுமதிக்கும் சித்தத்தில், சீடர் தன்னுடைய எஜமானரைத் தேர்ந்தெடுப்பது, என்பது இது ஒரு தேவாலயம் வெளிப்பாட்டிற்கு வெளியே அதன் போதகரைத் தேர்ந்தெடுப்பது போன்றதாகும்.
43 மேலும் உங்கள் அனுமதிக்கும் சித்தத்தில் தோல்வி ஏற்படும்போது, நீங்கள் பூனைகள் மற்றும் எலிகளைக் குறை கூறுகிறீர்கள். ஆனால் தென்னாப்பிரிக்காவில், நான் என் அர்ப்பணிப்பை வலுப்படுத்திக் கொண்டிருந்தபோது, அப்போஸ்தலர்கள் பெட்ரோ அலெக்ஸோ, யானிக் ஆகா மற்றும் பாஸ்கல் விச்சி ஆகியோர் இரண்டு அல்லது மூன்று முறை மேஜையில் தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சி உட்பட அனைத்தையும் சாப்பிட்டனர்.
44 மேலும் வேறொருவர் தனது சுகமளிக்கும் ஆராதனையிலிருந்து பூனைகளையும் எலிகளையும் அனுப்பிவிட்டதாலும், அவரது சுகமளிக்கும் ஆராதனை நன்றாக வேலை செய்ததாலும், நீங்களும் அதையே போலித்தனமாகச் செய்கிறீர்கள். அனுமதிக்கப்பட்ட சித்தத்தில் அதிகப்படியான போலித்தனம் உள்ளது. இருப்பினும், யாரை அவர் சுகப்படுத்த வேண்டும் என்பதை நியாயந்தீர்ப்பதும் தேர்ந்தெடுப்பதும் தேவனுக்கே உரியது.
45 தேவன் இறையாண்மை கொண்டவர்; அவர் விசுவாசிகளை சுகப்படுத்தாமல், அஞ்ஞானிகளை சுகப்படுத்த முடியும் என்பது போல, பலதரப்பட்ட கலப்பினக் கூட்டமக்களில் ஒருவரையும், மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவரையும், தேவாலயத்தின் மனிதனையும் அவர் தனது சித்தத்தின்படியே சுகப்படுத்த முடியும்.
46 அனுமதிக்கப்பட்ட சித்தத்தில், நாங்கள் சுகமளிக்கும் ஆராதனைகளை ஏற்பாடு செய்தோம், மேலும் தேவன் வந்து ஜனங்களை சுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கனவுகள் மற்றும் பிரத்தியட்சங்களின் விளக்கங்கள் நம் விருப்பத்துடன் ஒத்துப்போகும் வகையில் திரிக்கப்பட்டன . மேலும் உபவாசங்கள் மற்றும் ஜெபத்தின் மூலம் தேவன் வந்து நம் விருப்பத்தை அல்லது நம் சுகமளிக்கும் ஆராதனையை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
47 தேவனின் அனுமதிக்கப்பட்ட சித்தத்தில் ,வெளிப்பாட்டின்படி நடக்காத சிலர் தனது சொந்த அதிகாரத்தால் பல நாட்கள் சுகமளிக்கும் ஆராதனைகளை திட்டமிட முடியும்.தேவனுக்காகக் காத்திருப்பவரும், தேவன் பதிலளிக்க தாமதமாக இருந்ததாலும், மனம் கலக்கமடைந்து பொறுமையை இழக்க நேரிடும், மேலும் தனது சொந்த அதிகாரத்தால் சுகமளிக்கும் ஆராதனையின் நாட்களை திட்டமிடத் தொடங்கலாம்.
48 இந்த அத்தியாயம் காக்குவ்.176, சுகமளிக்கும் ஆராதனைகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் அவற்றை ஒழுங்கமைக்க வேண்டும் என்று கூறுகிறது. இதை மறந்துவிடாதீர்கள். இது உங்களை பயமுறுத்துவதற்காக அல்ல, மாறாக ஒழுங்கை ஏற்படுத்துவதற்காக வருகிறது.
49 நீங்கள் உங்கள் சொந்த அதிகாரத்தின்படி செயல்படக்கூடாது. நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், உங்கள் வெளிப்பாடுகள் மூலம் தேவனுக்காக காத்திருக்க வேண்டும். நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றுக்காகவோ அல்லது ஒரு சுகமளிக்கும் ஆராதனையை நடத்துவதற்காகவோ தேவனிடம் இருந்து ஒரு அடையாளத்தைப் பெற்று, அதைப் புறக்கணிக்கலாம். மேலும் நீங்கள் வேலையில் இருக்க வேண்டிய நேரத்தில் உட்கார்ந்து கொண்டும் காத்து கொண்டும் இருப்பீர்கள்.
50 இந்த அத்தியாயம் காக்குவ்176, தேவனால் அனுமதிக்கப்பட்ட சித்தத்திற்கும் , தேவனின் பரிபூரண சித்தத்திற்கும் இடையிலான வேறுபாட்டை குறிக்க வேண்டும். இது தேவனை நாம் முழுமையாகச் சார்ந்திருப்பதன் ஆரம்பமும் ஒரு மகிமையான சகாப்தத்தின் தொடக்கமும் ஆகும்.
51 நவம்பர் 19, 2025 அன்று இரவு, நான் எடுக்க வேண்டிய ஒரு முடிவைப் பற்றிய தேவனின் சித்தத்தை அறிய ஜெபித்தேன். நான் தூங்கியவுடன், எனக்கு ஒரு கனவு வந்தது. நான் விழித்தபோது, கனவின் ஒரு பகுதியை மறந்துவிட்டேன். முந்தைய நாள் நான் நிறைய சாப்பிட்டதால், கனவின் ஒரு பகுதி மங்கலாக இருந்தது, மேலும் நான் விழித்தபோது கூட அதை மறந்துவிட்டேன் என்று தேவனிடம் சொல்லி ஜெபித்தேன்.
52 மேலும் நான் மீண்டும் தூங்கியபோது, நான் அதே போன்ற ஒரு கனவை அல்ல, ஆனால் அதே கனவை, ஒரு படம் மீண்டும் காட்டப்படுவது போலக் கண்டேன் . மங்கலாக இருந்த பகுதியை நான் தெளிவாகக் கண்டேன், இதோ, எந்த விளக்கமும் தேவையில்லாமல், நான் தேடிக்கொண்டிருந்த நேரடியான பதில் அதுதான்.
53 தேவன் நமக்கு மிக அருகில் இருக்கிறார். தேவனின் பரிபூரண சித்தம் நமது அக்கறையாக இருந்தால், அதைத்தான் நாம் அனுபவிக்க வேண்டும். நாம் பயப்பட வேண்டாம். ஏப்ரல் 24, 1993-ன் தேவதூதர், நம்மை அழிக்கத் தேடும் ஓர் அறியப்படாத எதிரி அல்ல. அவர் நம்மிடம் கேட்பது, நமது அர்ப்பணிப்பைக் குறைக்காமல், நன்மை செய்வதற்கான விருப்பத்தை மட்டுமே, அப்போது நாம் அவருடைய மகிமையைக் காண்போம்.
54 அப்போஸ்தலர் பவுல் 1 கொரிந்தியர் 9:27-ல் தனது சரீரத்தைக் கடினமாக நடத்துவது பற்றிப் பேசும்போது, அவர் உபவாசத்தையும் தீவிரமான அர்ப்பணிப்பையும் குறிப்பிடுகிறார். அர்ப்பணிப்பை கைவிட்டு நிறுத்தும் எவரும் மோசேக்கு அருகிலுள்ள சுவர் அல்லது கோபுரத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு, பிரதான தேவாலயத்தின் இருளில், முகாமுக்குள் கொண்டு செல்லப்படுவார்கள்.
55 நாம் எவ்வளவு பெரிய ஆவிக்குரிய வரம் மற்றும் வல்லமையுடன் முதலீடு செய்யப்பட்டிருந்தாலும், அவருடைய பரிபூரண சித்தத்தை நிறைவேற்றுவதற்காக நாம் முழுமையாக தேவனைச் சார்ந்து, நம் அர்ப்பணிப்பைக் குறைக்காமல் அவருக்காகக் காத்திருக்க வேண்டும். நமது மனித பலவீனத்தையும் வரம்புகளையும் நாம் ஒப்புக்கொண்டு, தேவன் நமக்குள் வைத்த வரத்தைப் பயன்படுத்த அவரை அனுமதிக்க வேண்டும்.
56 காவல்துறையையும் இராணுவத்தையும் பாருங்கள். அதிகாரம், பதவி மற்றும் ஆயுதங்களைத் தவிர, அவர்களுக்கு எப்போதும் செயல்பட ஒரு கடிதம் அல்லது பணி உத்தரவு தேவை. அது இல்லாமல், அவர்கள் முகாமில் காத்திருக்கிறார்கள். அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
57 தேவதூதர்கள் இரவும் பகலும் தேவனுக்கு முன்பாக நிற்கிறார்கள், செயல்படுவதற்கு முன்பு தேவனின் கட்டளைகளுக்காகக் காத்திருக்கிறார்கள். காபிரியேல் மரியாளிடம், "நான் தேவனுக்கு முன்பாக நிற்கும் காபிரியேல்" என்று கூறியிருந்தார். தேவனின் தூதர் ஒரு பணியில் இல்லாவிட்டால் நீங்கள் அவரை எங்கும் பார்க்க முடியாது.
58 பரிபூரண சித்தத்தில், நாம் அதைத்தான் செய்ய வேண்டும், பின்னர் எல்லா பேய்களும் பைத்தியக்காரர்களும் கூட நமக்குக் கீழ்ப்படிவார்கள். தேவனின் ஊழிய வரிசைப்படி ஒரு சுகமளிக்கும் ஆராதனையை ஏற்பாடு செய்வதற்கு முன்பு நீங்கள் ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் காத்திருக்க வேண்டியிருந்தால், உங்கள் மனநிலையையும் அர்ப்பணிப்பையும் குறைக்காமல் காத்திருங்கள்.
59 மேலும் நீங்கள் தேவனுடைய கட்டளையைப் பெற்றால், செயல்படத் தொடங்குங்கள். அங்குதான் தேவன் தம்முடைய மகிமைக்காகவும் நமது ஆசீர்வாதத்திற்காகவும் தம்முடைய பரிபூரண சித்தத்தை நிறைவேற்றுவார். பின்னர், நமது சுகமளிக்கும் ஆராதனைகளில் தேவனுடைய சர்வ வல்லமையைக் காண்போம்.
60 மேலும், பிரமாண்ட காட்சிகளைத் தவிர்க்கவும், தேவன் அந்தக் பிரமிக்கத்தக்க காட்சிகளை உங்களிடமிருந்து அகற்றுவார். எந்தப் பிசாசாலும் உங்களைக் காட்சிப்படுத்த முடியாது.
61 மேலும் நோயுற்றவர்களுக்காக ஜெபிக்கும் போது , நோயுற்றவர்களுக்கான உங்கள் ஜெபம் சுருக்கமாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும்; தீவிரமான நோயாளியான ஒரு நபருக்கு பத்து வினாடிகளுக்கு குறைவாகவும், ஜெப வரிசையில் உள்ள நபருக்கு ஐந்து வினாடிகளுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். உங்கள் ஜெபத்தின் பிரதிபலிப்பானது, நீண்ட நேரம் ஜெபம் பண்ணுவதாகவும், மெருகுபடுத்தும் அளவுக்கும் தொடர்புடையது அல்ல.
62 ஒரு கிறிஸ்தவராக, உங்கள் அடையாளத்தைக் காத்துக்கொள்ளுங்கள், உங்கள் நடத்தையிலும், பேசும் விதத்திலும், செயல்படும் விதத்திலும் இயல்பாக இருங்கள், இதனால் உங்கள் ஜெபம் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிசாசுக்கு எதிராக பயனுள்ள கிரியை செய்யும் . ஒரு வெள்ளைக்காரரைப் போல பேசும்படி தன்னை கட்டாயப்படுத்தும் ஒரு கருப்பு ஆப்பிரிக்கரைப் போல நடந்து கொள்ளாதீர்கள்.
63 நோயுற்றவர்களுக்காக நீங்கள் ஜெபிக்கும்போது எந்த போலியான பாவனையையும் பின்பற்றாதீர்கள். நோயால் பாதிக்கப்ட்டவரின் சரீரத்தின் பாகத்தில் உங்கள் கையை வைத்து ஜெபியுங்கள். அவர் எந்த வலியிலிருந்து பாதிக்கப்படுகிறார் என்பது உங்களுக்குத் தெரிந்தால் அதை தெரியப்படுத்துங்கள்.
64 உதாரணமாக, "குருடரைக் சுகப்படுத்தியவரும் , குருடரின் கண்களைத் திறந்தவருமான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, இந்த மனிதனுடைய கண்களை பார்வையடையச் செய்யும். ஆமென்" என்று சொல்லுங்கள். விசுவாசத்துடன் ஜெபியுங்கள், உங்கள் இருதயத்தில் எந்த சந்தேகமும் இல்லாமல் முன்னேறுங்கள்.
65 மேலும், ஊழியப் பணியின் ஆணைக்கு கூடுதலாக, அவசரமாக செயல்படாமல் இருக்க நேரத்தையும் சூழ்நிலைகளையும் கவனித்து கொள்ளுங்கள்.
66 மார்ச் 2025-இல் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு , ஜுன் 2022-இல் நான் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்வேன் என்று ஒரு தரிசனத்தில் கண்டேன். பின்னர், ஜுலை2024-இல் , செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதற்கான அடையாளத்தைப் பெற்றேன். மேலும் மார்ச் 2025-இல்,நான் அங்கு சென்றேன். நான் அவசரப்படவில்லை.
67 நான் என்னுடைய சொந்த வெளிப்பாடுகளைப் பின்பற்றி, தேவனின் வரிசைக்கோட்டில் புள்ளி புள்ளியாகச் செயல்பட்டேன். அதன் விளைவுகள் இன்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ளன. அதுவே இந்த எழுப்புதலுக்கான வாசலைத் திறந்தது.
68 இப்போது இதைக் கேளுங்கள்: திருச்சபை வரலாற்றில் தீர்க்கதரிசினி லூசி ஃபாரோ ஒரு முன்மாதிரி ஆவார் . வெளிப்பாடு இல்லாமல் லூசி ஃபாரோ எதையும் செய்ய மாட்டார். தேவனுடனான தனது பணியில் அவருக்கு மிகுந்த நேர்மை இருந்தது, மேலும் தேவன் அவரை ஆசீர்வதித்திருந்தார்.
69 தேவன் தம்முடைய சித்தத்தைச் செய்பவர்களை ஆசீர்வதித்து உயர்த்துகிறார். தீர்க்கதரிசினி லூசி ஃபாரோ தேவனின் பரிபூரண சித்தத்தை செய்யும் ஒரு முன்மாதிரியாக இருந்தார். தேவன் அவருக்குக் கொடுத்த மகத்தான ஆவிக்குரிய வரம் இருந்தபோதிலும், அவர் தன் வாழ்க்கையின் இறுதி வரை ஒரு முன்மாதிரியாகவே இருந்தார்.
70 1906 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், வில்லியம் சீமோரும் மற்றும் அவருடைய சபையும் ஒன்று சேர்ந்து கொஞ்சம் பணத்தைச் சேகரித்து தீர்க்கதரிசினி லூசிஃபாரோ அவர்களுடைய சபைக்கு வந்து அவர்களை எழுப்புதலுக்கு முன்னின்று வழிநடத்தி செல்லும்படி அழைத்தனர். லூசி ஃபாரோ தேவனிடமிருந்து உறுதிப்படுத்தலைப் பெற்றார் மற்றும் ஏப்ரல் 6, 1906 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் அவர்களிடம் வந்தார். அவர் எட்வர்ட் லீயின் வீட்டில் தங்க வைக்கப்பட்டார்.
71 லூசி ஃபாரோ வந்த நாளில், வில்லியம் சீமோரும் அவரது சபையும் லூசி ஃபாரோவின் தலைமையில் 10 நாட்கள் உபவாசத்துடன் ஒவ்வொரு மாலையும் கூட்டங்களை ஏற்படுத்தினர். ஏப்ரல் 9 ஆம் தேதி, எட்வர்ட் லீ, லூசி ஃபாரோவிடம் தான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்காக தன் மீது அவரது கைகளை வைக்கச் சொன்னார். தேவனின் கட்டளைப்படி மட்டுமே தான் அவ்வாறு செய்ய முடியும் என்று எட்வர்ட் லீ க்கு அவர் பதிலளித்தார். ஆனால் அதற்குப் பிறகு, அவருக்கு ஒரு அடையாளம் கிடைத்தது.
72 பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்காக எட்வர்ட் லீயை முழ்ங்காலிடச் சொன்னார். லூசி ஃபாரோ அவர் மீது கை வைத்தவுடன், எட்வர்ட் லீ விழுந்து அந்நியபாஷைகளில் பேசத் தொடங்கினார்.
73 மற்றும் ஏப்ரல் 9, 1906 முதல், அசுசா தெரு வரை, வில்லியம் சீமோர் உட்பட அனேக மக்கள், வெள்ளையர்களும் கறுப்பர்களும் லூசி ஃபாரோ கைகளை வைத்ததன் மூலம் பரிசுத்த ஆவியைப் பெற்றனர். பரிசுத்த ஆவியைப் பெறுவதற்காக மக்கள் மீது கைகளை வைத்த ஒரே நபர் லூசி ஃபாரோவாகும் .
74 மேலும் எட்வர்ட் லீயின் வீடு கூட்டங்கள் நடத்த மிகவும் சிறியதாகிவிட்டதால், வில்லியம் சீமோர் கூட்டங்களை ரிச்சர்ட் ஆஸ்பெரியின் வீட்டிற்கு மாற்றினார். பின்னர் அவர் கூட்டங்களை அசுசா தெருவுக்கு மாற்றினார். அசுசா தெருவில் முதல் கூட்டம் 1906-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி சனிக்கிழமை, ஈஸ்டருக்கு முந்தைய நாள் நடந்தது.
75 சார்லஸ் ஃபாக்ஸ் பர்ஹாமை தெரிந்தவர் லூசி ஃபாரோ, மேலும் வில்லியம் சீமோர் டோபீகாவின் எழுப்புதலின் வெளிச்சப் பந்தத்தை எடுத்துக்கொள்ள முடியும் என்பதால் வில்லியம் சீமோரை சார்லஸ் ஃபாக்ஸ் பர்ஹாமிடம் அழைத்துச் சென்றார்.
76 ஆனால் லூசி ஃபாரோ ஒரு பெண் என்பதால், அசுசா தெரு எழுப்புதலுக்கான அடித்தளங்களை அமைத்த பிறகு, அவர் மேடையின் முன்பக்கத்தை விட்டு வெளியேறி வில்லியம் சீமோருக்கு வழிவகுத்தார், அவர் எப்போதும் அவளைப் பார்த்தது போல் வெளிப்பாட்டின் மூலம் மட்டுமே செயல்படுமாறு முறையாக உத்தரவிட்டார்.
77 மேலும், ஒரு தீர்க்கதரிசினியாக இருந்த லூசிஃபாரோ வார்த்தையின் மீதான மரியாதையின் காரணமாக வில்லியம் சீமோருடன் சேர்ந்து ஒரு சீஷரின் இடத்தைப் பிடித்தாள். மேலும் அசுசா தெரு எழுப்புதல் பெரியதாகி வளர்ந்து பூமியின் எல்லைகளை அடைந்தது. இன்று பூமியெங்கும் நாம் காணும் பெரிய பெந்தேகோஸ்தே மற்றும் சுவிசேஷ இயக்கங்கள் அசுசா தெரு எழுப்புதலின் காட்டு சந்ததியினரே.
78 எட்வர்ட் லீ பரிசுத்த ஆவியைக் கேட்டவுடனேயே லூசி ஃபாரோ ஜெபம் செய்திருந்தால், அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பார். ஆனால் அது தேவனின் அனுமதிக்கப்பட்ட சித்தத்திலும், மேலும் லூசி ஃபாரோவுக்கு அது ஒரு பாவமாகவும் இருந்திருக்கும். தேவனிடமிருந்து ஒரு அடையாளம் இல்லாமல், யாரோ ஒருவர் உங்களிடம் ஜெபத்தைக் கேட்டாலும் கூட, அவருக்காக ஜெபிக்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம்.
79 வேறொருவர் மூலம் தேவன் உங்களிடம் பேசுவது சாத்தியம், ஆனால் உங்கள் மனநிலை மற்றும் அர்ப்பணிப்பு இல்லாமையால் வேறொருவர் உங்கள் கோலைப் பிடிக்கும் அளவுக்கு நீங்கள் குருடராகிவிடக்கூடாது. வழிகாட்டியாக இருக்கும் நீங்கள், மற்றவர்களின் வெளிப்பாட்டின்படி எப்படி நடக்க முடியும்?
80 நல்லது. அப்போஸ்தலன் மானுவல் உபிஸ்ஸின் சுகமளிக்கும் ஆராதனையின் வீடியோவைப் பார்க்க நான் விரும்பினேன், நம்பத்தகாத ஏராளமான சுகப்படுத்துதல்களை நீக்கிய பிறகும் அங்கு 97 பேர் உடனடியாக சுகமடைந்தனர். வீடியோவில் என்னை முதலில் கவர்ந்த விஷயம் நோயாளிகளின் வருகை.
81 எல்லா வகையான நோயாளிகளும் தங்கள் கைகளில் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் செய்தியின் சிறு புத்தகங்களுடன் வந்தார்கள். நோயாளிகளின் வருகையின் வீடியோவை நான் உங்களுக்கு தருகிறேன்.
82 சீஷர்களும், ஊர் ஊராகச் சென்று, நோயுற்றவர்களை அழைத்தவர்களும், அந்த சிறு புத்தகங்களை விநியோகித்து, "நீங்கள் அனைவரும், எங்கள் பேச்சைக் கேளுங்கள்! தேவன் வேதாகமத்தில் உள்ளதைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை அனுப்பியுள்ளார். அவருடைய பெயர் காக்குவ் பிலிப்பு என்று கூறினார்கள்.
83 உங்கள் நோய்கள் மற்றும் துன்பங்கள் என்னவாக இருந்தாலும் சரி, நம் காலத்தில் மனிதகுலம் நித்திய ஜீவனைப் பெறக்கூடிய ஒரே மனிதர் காக்குவ் பிலிப்பு என்று நீங்கள் நம்பினால், காக்குவ் பிலிப்புவினால் தவிர வேறு யார் மூலமாகவும் நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது என்று நம்பினால், வாருங்கள்! நீங்கள் சுகமடைவீர்கள்!" மேலும் அவர்கள் ஏற்கனவே பெற்ற சாட்சியங்களுடன், அவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்தனர். எல்லா வகையான நோய்வாய்ப்பட்ட மக்களும் வந்தனர்.
84 மேலும் அவை சுகமளிக்கும் ஆராதனைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனற்ற இடங்களாக இருந்தன. வாகனங்கள் நோயாளிகளை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இறக்கிவிட்டன, உறவினர்கள் அல்லது நல்லெண்ணமுள்ள மக்கள் அவர்களைச் சுமந்து கொண்டு வந்து சுகமளிக்கும் ஆராதனை நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்தார்கள்.
85 நடைபாதை வழியாக வந்த நோயாளிகள் ஏராளமாக இருந்தனர்! அது வேதாகமத்தில் உள்ள நிகழ்வுகள் அல்லது கடந்த கால எழுப்புதல்களைப் போல இருந்தது. நோயாளிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர். சில குருடர்கள், காது கேளாதோர், முடவர்கள், முடக்குவாதக்காரர்கள், ஊமையர்கள், உட்கார முடியாத நோயாளிகள், கை கால்கள் நான்கிலும் ஊனமுற்ற நோயாளிகள் வந்தார்கள்.
86 ஆனால் சுகமளிக்கும் ஆராதனை தொடங்கியவுடன், சாட்சியங்கள் தொடங்கியது. நம்பிக்கை இழந்தவர்கள், மருத்துவமனைக்குச் செல்ல பணம் இல்லாதவர்கள் மற்றும் முன்னேற்றம் அல்லது பணம் இல்லாததால் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டவர்கள் மற்றும் மரணத்திற்காகக் காத்திருந்தவர்கள் அனைவரும் உடனடியாக சுகமடைந்தனர். அவர்கள் எழுந்து நின்று, தாங்கள் நோய்வாய்ப்படாதது போல் தங்கள் சாட்சியங்களை அளித்தனர்.
87 மேலும் அற்புதங்களைக் கண்டவர்கள் தங்கள் நோய்வாய்ப்பட்ட உறவினர்களை தொலைபேசியில் அழைத்தார்கள், அவர்கள் வந்தார்கள். தொலைபேசியின் மறுமுனையில் இருக்கும் ஒரு உறவினர், "நான் முன்பு சபைகளுக்கு சென்றிருக்கிறேன், ஆனால் நான் சுகமடையவில்லை" என்று கூறலாம். மேலும் அற்புதங்களை நேரில் கண்ட நபர், "வாருங்கள்!!! காக்குவ் பிலிப்பு என்ற ஒரு மனிதர் இங்கே அனைவரையும் இலவசமாக சுகப்படுத்துகிறார். நீங்கள் மருத்துவமனையில் இருந்தாலும், புறப்பட்டு இங்கே வாருங்கள்!" என்று சத்தமிடுவார்.
88 சில சாட்சிகள் இவ்வாறாக , "காக்குவ் பிலிப்பு ஒரு கள்ள தீர்க்கதரிசி என்று பாஸ்டர்கள் எங்களிடம் சொல்லவில்லையா? அப்படியானால், காக்குவ் பிலிப்புவின் சீஷர் ஒருவர் நம்முடைய கண்கள் பார்க்கும் இந்த அற்புதங்களை எப்படிச் செய்ய முடியும்? மேலும், எங்களிடம் எந்த காணிக்கையும் கேட்கப்படுவதில்லையே !" என்று கூறிக்கொண்டிருந்தனர்.
89 ஒவ்வொரு சுகமளிக்கும் ஆராதனைக்குப் பிறகும், மக்கள் அதிக எண்ணிக்கையில் மனமாற்றம் செய்யப்பட்டனர். ஒரு சுகமளிக்கும் பிரச்சாரத்திற்குப் பிறகு, அதிக எண்ணிக்கையிலான மனமாற்றங்கள் இருக்க வேண்டும். அதைத்தான் தேவன் உற்று நோக்குகிறார்.
90 ஒரு சுகமளிக்கும் ஆராதனையின் நோக்கம் ஆத்துமாக்களின் இரட்சிப்பாகும். அதனால்தான், ஒரு சுகமளிக்கும் ஆராதனைக்குப் பிறகு, தேவன் மனமாற்றங்களின் எண்ணிக்கையைக் கேட்கிறார், அதே நேரத்தில் பிசாசு உடனடி சுகப்படுத்துதல்களின் எண்ணிக்கையைக் கேட்கிறான்.
91 அதேபோல், ஒரு குறிப்பிட்ட தோட்டத்தை அறுவடை செய்வது நீங்கள்தான் என்று தேவன் உங்களுக்குச் சொல்ல முடியும். ஆனால் இன்னும் உருவாகாத பழங்களைப் அறுவடை செய்ய ஒரு பைத்தியக்காரனைப் போல நீங்கள் தோட்டத்திற்குள் சென்றால், உங்கள் இருப்பிடம் நரகத்தில் தான் இருக்கும்.
92 ஒரு சுகமளிக்கும் ஆராதனை தேவனால் தீர்மானிக்கப்பட்டாலும் சரி அல்லது உங்களால் தீர்மானிக்கப்பட்டாலும் சரி, இந்தச் செய்தியின் காரணமாக தூதன் அங்கே இருப்பார். அவர் உங்களுக்கு சாதகமாகச் செயல்படுவார், அல்லது அவர் உங்களுடன் சண்டையிட அங்கே இருப்பார்.
93 தேவனால் ஏற்படுத்தப்படாத ஒரு சுகமளிக்கும் ஆராதனை போன்ற பரிசுத்தமான தருணத்தில் அவரை ஈடுபடுத்துவதும், அற்புதங்களைச் செய்யும்படி அவரை வற்புறுத்துவதும் ஒரு மிகவும் கொடிய செயலாகும்.
94 தேவன் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை நியமித்தால், அது ஒரு உன்னதமான நோக்கத்திற்காக இருக்கும். அவர் தம்மால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களை அவர்களின் இரட்சிப்புக்காக அழைத்திருக்கலாம், மேலும் அங்கே பரலோகத்தை அடையும் வரை உறுதியாக நிலைத்திருக்கும் மனமாற்றமடைந்தவர்கள் இருப்பார்கள்.
95 நான் பிரான்சில் இருந்தபோது, பாரிஸில் அப்போஸ்தலன் பாஸ்கல் விச்சியின் சுகமளிக்கும் ஆராதனையின் போது இந்த செய்தியை விசுவாசித்தவர்கள் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். அது இப்படித்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு சுகமளிக்கும் ஆராதனையும் வரலாற்றில் அதன் தடயங்களை விட்டுச் செல்ல வேண்டும்.
96 மேலும் மொசாம்பிக்கில், நவம்பர் 2025-இல் அப்போஸ்தலன் சால்வடார் மச்சுசாவின் சுகமளிக்கும் ஆராதனைகளின் போது, பல நூற்றுக்கணக்கானோர் மனமாற்றம் அடைந்தனர். மேலும் அற்புதங்களைக் கண்டதால், பல முஸ்லிம்கள் விசுவாசம் கொண்டனர், மேலும் பல சகோதர சகோதரிகள் தங்கள் விசுவாசம் பலப்பட்டதற்கு சாட்சி பகிர்ந்தனர்.
97 மேலும் இன்ஹாம்பேன் மாகாணத்தில் மட்டும், நான்கு சுவிசேஷ சபைகள் விசுவாசித்து, வெளிப்படையான பாவ அறிக்கையுடன் ஆராதனைகளைத் தொடங்கின. இது அப்போஸ்தலன் சால்வடார் மச்சுசாவின் சுகமளிக்கும் ஆராதனைகளில் இருந்த சுவிசேஷ பாஸ்டர்களின் செயலாகும். தேவன் அந்த சுவிசேஷ பாஸ்டர்களை ஆசீர்வதிப்பாராக.
98 சில பாஸ்டர்கள் பூமியின் பணக்கார பாஸ்டர்களிடம் செல்கிறார்கள், மற்ற பாஸ்டர்கள் என்னிடம் வருகிறார்கள். தலைமுறை தலைமுறையாக, யுகத்திற்கு யுகமாக, வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும், மனிதர்கள் கடந்து செல்கிறார்கள், ஆனால் ஆவிகள் அப்படியே நிலைத்திருக்கின்றன . உலகத்தின் முடிவு வரை, அது எப்போதும் இப்படியேதான் இருக்கும்.
99 ஆபேலின் காலத்தில், ஒரு பக்கம் இரட்சிப்புடன் ஆபேலும், மறுபுறம் மனித மகத்துவத்துடனும் மற்றும் உலகத்தின் தயவுடனும் காயீன் இருந்தான். இரட்சிப்பை விரும்பியவர் ஆபேலிடம் சென்றனர் , அதேசமயம் பணத்தின் சீடர்கள் காயீனிடம் சென்றனர். இரண்டு ஆவிக்குரிய தந்தைகள் இருந்தனர்: ஒரு பக்கம், இரட்சிப்புடன் ஆபேல், மறுபுறம், மனித மகத்துவத்துடன் காயீன்.
100 தீர்க்கதரிசி மோசேயின் காலத்தில், மோசேயும் இரட்சிப்பும் ஒருபுறமும், மேலும் கோராவும், தாத்தானும் மற்றும் தங்கக் கன்றும் மறுபுறம் இருந்தனர். யார் இரட்சிப்பை விரும்பினார்களோ அவர்கள் மோசேயிடம் சென்றார்கள் , அதே சமயம் பணத்தின் பின்னால் சென்றவர்கள் கோராகுடனும் தாத்தானுடனும் சென்றார்கள் .
101 தீர்க்கதரிசி எலியாவின் காலத்தில், எலியாவுக்கு இரட்சிப்பும் மற்றும் வல்லமையும் இருந்தது, அதேசமயம் பாகாலின் தீர்க்கதரிசிகள் மனித மகத்துவத்தைக் கொண்டிருந்தனர், மேலும் ஆகாப் மற்றும் யேசபேல் உட்பட பூமியின் அனைத்து செல்வந்தர்களும் பாகாலின் தீர்க்கதரிசிகளின் பக்கம் இருந்தனர்.
102 இரட்சிப்பையும் வல்லமையையும் விரும்பியவர்கள் எலியாவிடம் சென்றார்கள், அதேசமயம் பணத்தின் சீடர்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளிடம் சென்றார்கள். பாகாலின் தீர்க்கதரிசிகள் தான் அவர்களுடைய ஆவிக்குரிய பிதாக்கள்.
103 நம்முடைய காலத்தில், இரட்சிப்பையும் வல்லமையையும் விரும்புவோர் காக்குவ் பிலிப்புவிடம் வருகிறார்கள், அதே சமயம் பணத்தையும் மனித மகத்துவத்தையும் விரும்புவோர் பணம் உள்ள ஆவிக்குரிய பிதாக்களிடம் செல்கிறார்கள்.
104 "நான் மட்டுமே இரட்சிப்புக்கு சாத்தியமான ஒரே மனிதன்" என்று காக்குவ் பிலிப்பு கூறுகிறார். என் மூலமாகத் தவிர வேறு யாரும் இரட்சிக்கப்பட முடியாது. நான் பூமியில் உயிருடன் இருக்கும் வரை, யாராவது இரட்சிப்பை விரும்பினால், அவர், காக்குவ் பிலிப்புவாகிய, என்னிடம் தான் வர வேண்டும்."
105 ஆகையால், நம்முடைய காலத்தில் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்கான உண்மையான ஆவிக்குரிய வரம் அல்லது ஊழியத்தை யாரோ ஒருவர் பெற்றிருந்தால், அவருடைய இடம் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் செய்தியில் மட்டுமே உள்ளது.
106 ஆவிக்குரிய வரங்கள் மனந்திரும்புதலுக்கு உட்பட்டவை அல்ல, அவற்றை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்தாலும், அவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள்.
107 தேவனின் சித்தத்திற்கு வெளியே ஒரு ஊழியம் அல்லது ஆவிக்குரிய வரத்தைப் பயன்படுத்துவது என்பது , அது அற்புதங்களையும் மற்றும் அதிசயங்களையும் செய்திருந்தாலும், சுவிசேஷகர்களுடன் நாம் பார்ப்பது போல, அதன் முடிவு நரகம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது கர்ப்பத்தை ஏற்படுத்தும் விபச்சாரங்கள் அல்லது பாலியல் பலாத்காரங்களைப் போன்றது.
108 சுவிசேஷகர்கள் தேவனின் சித்தத்தின்படியோ அல்லது அனுமதிக்கப்பட்ட சித்தத்தின்படியோ செயல்படுவதில்லை, மாறாக தேவனின் எதிரிகளாகவே செயல்படுகிறார்கள். தேவனின் பரிபூரண சித்தம் அல்லது அனுமதிக்கப்பட்ட சித்தம் என்பது, அந்தத் தலைமுறையின் தீர்க்கதரிசியின் செய்தியின்படி அந்த வரம் செயல்பட்டு, நித்திய ஜீவனுக்காக மனமாற்றங்களை உருவாக்குவதாகும்.
109 நல்லது. தேவனின் அனுமதிக்கப்பட்ட சித்தத்தின்படி, சுகமளிக்கும் ஆராதனைகளின் நோக்கம் உடனடி சுகப்படுத்துதல்களின் எண்ணிக்கையாகும். அதுதான் பேராலயத்தில் உள்ள மக்களின் முதன்மையான அக்கறையாக இருந்தது, ஆனால் உண்மையில் மனமாற்றங்கள் மற்றும் ஞானஸ்நானங்களின் எண்ணிக்கையின் மீதுதான் அக்கறை இருந்திருக்க வேண்டும்.
110 கடைசி நியாயத்தீர்ப்பில், உங்களில் மிகப் பெரியவர், அதிக எண்ணிக்கையிலான உடனடி சுகப்படுத்துதல்களைச் செய்தவராக இருக்க மாட்டார், ஆனால் தேவனின் பரிபூரண சித்தத்தின்படி, அவருடைய வெளிப்பாடுகளின்படி செயல்பட்டவராக இருப்பார்.
111 நாம் அனைவரும் தேவனின் பரிபூரண சித்தத்தின்படி செயல்பட வேண்டும். பரலோகத்திலுள்ள தேவதூதர்களும் பூமியிலுள்ள தீர்க்கதரிசிகளும் தேவனின் பரிபூரண சித்தத்தின் அடையாளங்கள். தீர்க்கதரிசிகள் மலைகளில் வசிக்கிறார்கள், அதாவது, அர்ப்பணிப்பில் இருந்து, தேவனின் கட்டளைக்காகக் காத்திருக்கிறார்கள்.
112 இப்போது இதைக் கவனமாகக் கேளுங்கள்: தீர்க்கதரிசியின் பிரசங்கங்களைக் கேட்பது நல்லது. இது எந்த அசுத்தத்தையும் தவிர்ப்பதற்கான ஒரு வழியாகும், ஆனால் அது தேவனால் அனுமதிக்கப்பட்ட சித்தமுமாகும். எல்லா நேரங்களிலும் பிரசங்கங்களைக் கேட்கும் ஒரு சபைக் கூட்டம் இருக்கக்கூடாது. ஆனால் ஆவிக்குரிய வரங்களின் பிரத்தியட்சம் போதகர்களின் பிரசங்கங்களுக்கு முரணானது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
113 மேலும், உண்மையான அர்ப்பணிப்பில் இல்லாத ஒரு சகோதரர், மக்களின் பரிசுத்தப்படுத்தும் முயற்சியை ரத்து செய்து, அசுத்தங்களை ஏற்படுத்துவதற்காக பிரசங்க பீடத்தை அணுகக்கூடாது. தேவதூதர் நம் நடுவில் இருக்கிறார். பிரசங்க பீடத்திலோ அல்லது சுகமளிக்கும் ஆராதனையிலோ சரிந்து விழுவது என்பது மகா பரிசுத்த ஸ்தலத்தில் அடிபட்டு மரணமடைவதற்குச் சமமாகும்.
114 அதனால்தான், செய்தியின்படி, தேவதூதரின் செயலால் பிரசங்க பீடத்தில் சரிந்து விழும் எவரும் அனைத்து பதவிகளையும் இழக்கிறார்கள். அவர் ஒரு பாஸ்டராக இருக்கும் பட்சத்தில் , அவர் ஒரு சாதாரண சபையின் உறுப்பினராகிவிடுவதால், அவருக்குப் பதிலாக ஒரு புதிய பாஸ்டர் நியமிக்கப்படுவார். மேலும், இந்த செயல் மூன்று நாட்களுக்கு மேல் நாட்டிலிருந்து மறைக்கப்பட்டிருந்தால், அவர் வெளியிலிருந்து ஒரு தண்டனையைப் பெற வேண்டும்.
115 நல்லது. அசைவற்றுப் போகும் நிலைகளைப் பொறுத்தவரை, இந்தச் செய்திக்கு வருவதற்கு முன்பு, நீங்கள் வேதனைகள் மற்றும் பயங்கரக் கனவுகளின் பகுதியில் சாத்தானுடன் இருந்ததால், சாத்தானின் விருப்பப்படி நீங்கள் அசைவற்றுப் போகும் நிலைக்கு ஆளாக நேரிடும் . இந்தச் செய்தியை விட்டுவிட்டு சாத்தானிடம் திரும்புபவருக்கும் இது பொருந்தும்.
116 ஆனால், நீங்கள் இந்த செய்தியை விசுவாசித்த பிறகு, அது நின்றுவிடுகிறது; ஏனெனில் இப்போது தேவனுக்குள் பிறந்திருக்கிறீர்கள், நீங்கள் கிருபையின் கீழ் இருக்கிறீர்கள் . பின்னர், நீங்கள் மோசமாக வாழ்ந்தால், அசுத்தம் அல்லது அசைவற்றுப் போவது ஒரு தெய்வீக தண்டனையாக வரும், இதனால் நீங்கள் செய்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்புடன் முன்னேற முடியும்.
117 அசைவற்றுப் போவது என்பது ஒரு சிவப்பு அட்டை போன்றது, ஏனென்றால் நீங்கள் தேவனின் அனைத்து எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகளுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறீர்கள். அசைவற்றுப் போனவர் தேவனின் எச்சரிக்கைகளுக்கு முன்னால் ஒரு துன்மார்க்க நபரைப் போலவோ அல்லது செவிடரைப் போலவோ இருக்கிறார்.
118 அசைவற்றுப் போனவர் பிரசங்க பீடத்தை நெருங்கக்கூடாது. ஆராதனையின் ஒரு பகுதியை ஏற்று நடத்துவதற்கு முன்போ அல்லது நீங்கள் செய்ய வேண்டிய ஒரு காரியத்திற்கு முன்போ உங்களுக்கு அசுத்தம் ஏற்பட்டாலோ அல்லது உடல் அசைவற்ற நிலை ஏற்பட்டாலோ, அந்தப் பகுதியை ஏற்கவோ அல்லது அந்தக் காரியத்தைச் செய்யவோ வேண்டாம்.
119 மாதவிடாயில் இருக்கும் ஒரு சகோதரி நோயாளிகளுக்காக ஜெபிக்க முடியாதது போல, இரவு அசுத்தம் ஏற்பட்ட அடுத்த நாளில் ஒரு சகோதரர் நோயாளிகளுக்காக ஜெபிக்கவோ அல்லது பொறுப்பை செயல்படுத்தவோ முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நோயுற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது யார் விழுந்தாலும் அவர் நிறுத்த வேண்டும். தேவனின் அடையாளங்களுக்கு கவனம் செலுத்துங்கள்.
120 நவம்பர் 15, 2025 சனிக்கிழமை அன்று, ஜிம்பாப்வேயில், ஒரு சகோதரியின் சுகமளிக்கும் ஆராதனையின் போது, விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது. அந்த சகோதரி ஒரு நோயாளிக்காக ஜெபிக்க விரும்பும் ஒவ்வொரு முறையும், அவர் கீழே விழுந்தார். அவர் உடனடியாக ஜெபிப்பதை நிறுத்த வேண்டியிருந்தது, ஆனால் அவர் கீழே விழுந்து கொண்டிருந்த போதிலும் தொடர்ந்து ஜெபம் செய்தார்.
121 சுகமளிக்கும் ஆராதனைக்குப் பிறகு, பெண்களுக்கு உண்டான மாதவிடாய் தனக்கு இருப்பதை அவர் கண்டுபிடித்தார். எனவே, அவரைத் தடுத்தது தேவன்தான்.
122 இப்போது, இதைக் கவனியுங்கள்: காக்குவ் 1 முதல் காக்குவ் 154-ன்கு வரை, இது கிறிஸ்தவர்களின் பிரதான தேவாலயத்தின் நிலையாகும். காக்குவ் 155 முதல் காக்குவ் 162 வரை, இது கனவுகள் மற்றும் தரிசனங்களின் நிலை. மேலும் காக்குவ் 163 முதல், இது தெய்வீக சுகமளிக்கும் மற்றும் ஆவிக்குரிய வரங்களின் நிலை. இந்த மூன்று நிலைகளும் ஒன்றுக்கொன்று துணைபுரியக்கூடியவை.
123 மேலும் தெய்வீக சுகமளிக்கும் மற்றும் ஆவிக்குரிய வரங்களின் நிலை என்பது அதிகபட்ச அசையாமைகள் நிகழும் நிலையாகும், ஏனென்றால் நீங்கள் கடினமாகக் காணும் கனவுகள் மற்றும் தரிசனங்களின் நிலை தான் அதற்கு அடித்தளமாக இருக்கிறது.
124 நீங்கள் கூறுகிறீர்கள் "இந்த செய்தியின்படி தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் கூட்டத்தில் இருப்பவர்களின் உடல் அசைவற்ற நிலைக்கு செல்லாது எனும்போது , ஏன் எனக்கு அசைவற்ற நிலை ஏற்படுகிறது ?".அதற்கான விளக்கம் இதோ: மூன்று குழுக்கள் அல்லது மூன்று நிலைகள் உள்ளன.
125 காக்குவ் 1 முதல் காக்குவ் 154 வரை, நாம் அனைவரும் தீர்க்கதரிசியுடன் பிரதான தேவாலயத்தின் பரிமாணத்தில் இருந்தோம். காக்குவ் 155 முதல் காக்குவ் 162 வரை, சிலர் தீர்க்கதரிசியுடன் முன்னேறி கனவுகள் மற்றும் தரிசனங்களின் பரிமாணத்திற்குள் சென்றனர், ஆனால் கலப்பினக் கூட்டம் பிரதான தேவாலயத்திலேயே தங்கிவிட்டனர் .
126 மேலும் காக்குவ் 163 முதல், பிரதான தேவாலயத்திலோ அல்லது கனவுகள் மற்றும் தரிசனங்களின் பரிமாணத்திலோ இருந்த சிலர் முன்னேற்றம் அடைந்து , தீர்க்கதரிசியுடன் தெய்வீக சுகமளிக்கும் மற்றும் ஆவிக்குரிய வரங்களின் பரிமாணத்திற்குள் வந்துள்ளனர்.
127 சிலர் பிரதான தேவாலயத்திலேயே தங்கிவிட்டனர், மற்றவர்கள் கனவுகள் மற்றும் தரிசனங்களின் பரிமாணத்தில் தங்கிவிட்டனர். மேலும் பிரதான தேவாலயத்தில் இருந்த மற்றவர்கள் கனவுகள் மற்றும் தரிசனங்களின் பரிமாணத்திற்குச் சென்றனர். மேலும் கனவுகள் மற்றும் தரிசனங்களின் பரிமாணத்தில் இருந்த மற்றவர்கள் பிரதான தேவாலயத்திற்கு திரும்ப அழைத்துச் செல்லப்பட்டனர். இது பள்ளி வகுப்புகளைப் போன்றது.
128 எனவே ஒரு சபையில், மழலையர் பள்ளி மாணவர்கள், தொடக்கப்பள்ளி மாணவர்கள், மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். எனவே இந்த மூன்று குழுக்களும் ஒரே சபையில் உள்ளன, மேலும் பிரதான தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு நேர்மையற்ற நபர் ஒரு பதவியைக் கொண்டிருக்கலாம் அல்லது சபையின் பாஸ்டராக கூட இருக்கலாம், அவர் மோசமானவராக இருந்தாலும் கூட அசைவற்ற நிலையை அடையமாட்டார்.
129 மேலும் ஞாயிற்றுக்கிழமை, பிரதான தேவாலய மக்கள், காக்குவ் 1 முதல் காக்குவ் 154 வரையிலான நாட்களில் இருந்ததைப் போலவே ஆராதனை எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இரண்டாம் பரிமாணத்தை சேர்ந்த மக்கள், ஒரு ஆசாரியர் அல்லது ஒரு திருச்சபையின் உயர் தலைவர் வந்து தங்களை அசுத்தங்களுக்கும் அசையாமைகளுக்கும் ஆளாக்க ஒரு பிரசங்கம் கொடுப்பதை விட தீர்க்கதரிசியிடமிருந்து ஒரு பிரசங்கத்தைக் கேட்க விரும்புவார்கள்.
130 மேலும் மூன்றாம் பரிமாணத்தைச் சேர்ந்த மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டிருப்பதால் அவர்கள் ஒரு ஊக்கமளிக்கும் பிரசங்கத்தையோ அல்லது ஒரு பிரசங்கத்தைக் கேட்பதையோ அதைத் தொடர்ந்து ஒரு ஊக்கமளிக்கும் விளக்கத்தையோ விரும்புவார்கள். மேலும் நீங்கள் ஒரு சபையில் ஒரு பதவியைக் கொண்டிருக்கலாம், மேலும் நீங்கள் மூன்றாம் பரிமாணத்தைச் சேர்ந்தவராக இருக்கும்போது, திருச்சபையில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பவராக தேவன் உங்களைப் பார்க்க முடியும்.
131 ஆகையால், நீங்கள் மூன்றாவது பரிமாணத்தில் இருப்பதால், அடுத்த நாள் நீங்கள் பிலேயாமின் பலிபீடத்திற்கோ அல்லது திருச்சபைக்கோ செல்ல விரும்புவதால், உங்களுக்கு ஒரு அசுத்தம் அல்லது அசைவற்ற நிலையைப் பெறலாம். மேலும் தேவன் உங்களுக்குக் கொடுக்கும் போராட்டம் வீட்டில் தங்குவது அல்ல, ஆனால் சபையின் நிலையை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு உதவுவதாகும்.
132 இவ்வாறு, துன்மார்க்கனும் மற்றும் நீதிமானும் அசையாமல் இருக்க முடியும், ஆனால் துன்மார்க்கன் அசையாமல் இருப்பது ஒரு தண்டனையாகும், மேலும் அது நீதிமான்கள் அசையாமல் இருப்பதை விட வலுவானது மற்றும் நீண்ட தீவிரம் கொண்டது.
133 ஏணியின் அடிப்பகுதியின் முதல் கட்டத்தில், பிரதான தேவாலயத்தின் மக்கள் உள்ளனர். அவர்கள் காக்குவ் 1 முதல் காக்குவ் 154 வரையிலான பரிமாணத்தில் உள்ளனர். அவர்கள் தங்கள் வெளிப்பாடுகளை பதிவுசெய்து, சில சமயங்களில் நன்றாகவும், சில சமயங்களில் மோசமாகவும் அவற்றைப் புரிந்துக்கொள்கிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் பாவம் செய்பவர்களிடமிருந்தும், கலப்பினக் கூட்டத்தினரிடமிருந்தும் வேறுபட்டவர்கள்.
134 கலப்பினக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர், எந்த முயற்சியும் எடுக்காமல், தான் செய்த மோசமான பாவத்தை வெளிப்படையாக அறிக்கைச் செய்யாத ஒரு அஞ்ஞானி ஆவான், அதே நேரத்தில் மீண்டும் மீண்டும் பாவம் செய்பவர் அறிக்கைச் செய்கிறார், ஆனால் அதே பாவங்களை மீண்டும் செய்கிறார்.
135 ஐந்து வருடங்களாகச் செய்தியில் இருந்து, ஏற்கனவே பல்கலைக்கழகக் கல்வி நிலைப் பெற்ற ஒருவரிடம் தேவன் நிறைய கேட்கலாம். அவர் பல்கலைக்கழகக் கல்வியைப் பெற்று, இன்னும் தனது பல்கலைக்கழகக் கணிதப் படிப்புகளில் போராடிக் கொண்டிருக்கலாம். மேலும் அவருக்கு அசுத்தங்கள் மற்றும் அசையாமைகள் இருக்கலாம்.
136 ஆனால், 10 வருடங்களாக ஆரம்பப் பள்ளியில் படித்து வரும் பிரதான தேவாலயத்தின் ஒரு மனிதர், தனது அசையெழுத்து முறை மற்றும் எண்ணும் குச்சிகளிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாததால் அசையாமல் இருக்க முடியாது. எனவே, ஆசிரியரால் அவரை அடிக்க முடியாது. அவர் ஒரு பிரச்சனையை ஏற்படுத்துபவர், ஆனால் வகுப்பில் அதிகமாகப் பேசும் மாணவர்களின் பெயர்களை ஆசிரியரிடம் சொல்லிக் கொடுப்பவரும அவர் தான் .
137 இப்போது,முடிவாக , இதைக் கேளுங்கள்! இது ஒவ்வொரு சகோதர சகோதரிக்கும் தேவனிடமிருந்து வரும் அழைப்பாகும். ஆவிக்குரிய வரங்களின் முழுமையான பிரத்தியட்சமும் மற்றும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமும் கிடைக்கும் வரை, நாம் எழுந்து நின்று சுகமளிக்கும் ஆராதனைகளில் ஈடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
138 ஐரோப்பா, ஆசியா, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா மற்றும் பூமியின் எல்லா இடங்களிலும் உள்ள நீங்கள் அனைவரும், ஆப்பிரிக்காவில் உள்ள சகோதரர்களைப் போல எழுந்து நின்று சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்துங்கள்.
139 ஆப்பிரிக்காவில் உள்ள உங்கள் சகோதரர்கள் பெற்றுக்கொண்டு, அதன் மூலம் இந்த அற்புதங்களிலும் அதிசயங்களிலும் முன்னேறிக்கொண்டிருக்கும் அதே தீர்க்கதரிசி, அதே தூதர் மற்றும் அதே செய்தியைத் தான் நீங்களும் பெற்றிருக்கிறீர்கள்.
140 நீங்கள் சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்துங்கள், அற்புதங்கள் மற்றும் அதியங்கள் மூலம் தேவனால் உறுதிப்படுத்தப்படுங்கள், உங்கள் நியமனம் அல்லது பிரதிஷ்டைக்காக என்னிடம் வாருங்கள்.
141 உங்களுடைய வெளிப்பாடுகளின்படி பூமியின் எல்லா இடங்களிலும் செல்ல இந்த பரிபூரண சித்தத்தில் என்னுடைய ஆசீர்வாதமும் தேவனுடைய ஆசீர்வாதமும் உங்களுடன் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும் அவர் எனக்கு என்னிடம் அனுப்புபவர்களின் பிரதிஷ்டை நியமனத்திற்காக நான் தேவனுக்கு முன்பாக நிற்கிறேன்.
142 தேவன் ஒழுங்கின் தேவனாக இருக்கிறார். எஜமான் வேலையில் இருக்கும்போது, சீடர்கள் நிறுத்த வேண்டும். சீடர்கள் வேலையில் இருக்கும்போது, எஜமான் நிறுத்த வேண்டும். தேவனில் எந்த குழப்பமும் இல்லை. சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் ஒரே நேரத்தில் பிரகாசிக்கத் தொடங்க முடியாது.
143 என்னை அல்ல, உங்களுடன் இருக்கும் தேவனுடைய தூதராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே நோக்குங்கள். இந்த யுத்தத்திற்கு நம்மை அழைத்தவரும், மனிதகுலத்தின் பாவங்களினிமித்தம் சிலுவையில் மரித்தவரும், தேசங்களின் சுகப்படுத்துதலுக்காகவும் மீட்புக்காகவும் தமது இரத்தத்தைச் சிந்தியவருமான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நமது பெலன். ஆமென்!