(இந்த கேள்விகள வெவ்வேரு தினங்களில் லோக்காட்ஜ்ரோ - ஆபிட்ஜான், ஐவரிகாஸ்டில் கேட்க்கப்பட்டது)
1கே.ப. எண்.1/ சகோதரன் பிலிப்பு, ஒருவர் அறிக்கை செய்ய வராமல், மேலும் அந்த பாவத்தையே இனி செய்யாமல் இருப்பாரனால் அவர் விடுவிக்கப்பட்டாரா? ஒருபோதும் பாவம் செய்யாமல் இருப்பாராகில், பிறகு அவன் மேலிருக்கும் அந்த ஒரு பாவத்திற்க்காக அவன் ஏதோ ஆயிரத்திற்கும் அதிகமான மோசமான பாவங்களை செய்தது போன்று பிசாசானவன் அவனை வஞ்சிக்கிறான். அவன் நிமித்தமாக குற்ற உணர்வும் பாவமும் அவனோடும் சபையாரோடும் சேர்க்கப்படும். அறிக்கையிடாத பாவத்தோடு ஆராதனையில் பங்கேற்க்க கூடாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சுத்தமனசாட்சியோடும், மகிழ்ச்சியான இருதயத்தோடும், ஆராதிக்க வேண்டும், மேலும் ஒரு சபையிலே நீ ஒரு ஆசிர்வாதத்திற்கான ஒரு பெருட்டாக இருக்க வேண்டுமே தவிர, இஸ்ரவேலின் பாளையத்தில் உள்ள ஆகானை போன்று இருக்கக்கூடாது.
2மேலும் வெளிப்படையான பாவ அறிக்கைக்காக, எல்லோரும் அறிக்கை செய்த பிறகு, சபையினர் மன்னிக்க முடிவு செய்தவர்களுக்காக ஒரே ஜெபம் ஏறெடுக்கப்படுவதாக. மேலும் அந்த பாவங்களானது ஞானஸ்தானத்திற்க்கு முன்னதாக இருந்து, ஆனாலும் அது இன்னுமாக உன்னுடைய சிந்தையில் வருவதாகவும் இருக்கலாம்.
3கே.ப. எண்.2/ சகோதரர் பிலிப்பு, ஆடம்பரத்தை குறித்து என்ன? ஆடம்பரம் அகற்றப்பட வேண்டும், குறிப்பாக நடுராத்திரி சத்தத்திலே. சிலர் பத்திற்க்கும் மேற்ப்பட்ட கிலோ மீட்டர் தொலைவிலிருந்து நடந்து வந்து ஆராதனையில் கலந்துக் கொண்டு சாப்பிடுவதற்க்கும் ஒன்றும் இல்லாமல் இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தையின் முன்னேற்றத்தின் நன்மைக்கென்று ஆடம்பரத்தை தடை செய்ய வேண்டும்.
4கே.ப. எண்.3/ சகோதரர் பிலிப்பு, திருமணம் எவைகளை கொண்டிருக்கிறது? திருமணத்தை நிறைவு உண்டாக்கும்படி இரண்டு அல்லது முன்று கட்டங்களாக நாம் கொண்டிருப்பதில்லை ஆனால் ஒரே ஒரு கட்டத்தில் நிறைவு செய்கிறோம். திருமணத்தின் பொழுது தகப்பனே தன்னுடைய மகளை கொடுக்க அல்லது நிராகரிக்க முடியும். பரிசம் திருமணத்திற்கான ஒரே அடையாளமாக இருக்கின்றது. ஒரு மோதிரமோ அல்லது சில தாள்களோ அல்ல ஆனால் பரிசம் . மற்றும் இந்த சீதனம் நிகழ்ச்சியே திருமணத்தை இரகசியமற்றதாக மாற்றுகிறது.
5மேலும், நான் மேயரை சந்திக்கும் வழக்கத்திற்க்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கூற விரும்புகிறேன், ஆனால் சீதனத்தை தவிர்த்து நேரடியாக மேயரை சந்திக்கும் பொழுது, மேயர் உன்னுடைய மனைவியின் தகப்பனாக இல்லாத பட்ச்சத்தில் தேவன் அந்த திருமணத்தை அடையாளம் கண்டுக்கொள்ள மாட்டார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
6நல்லது, இப்பொழுது செய்திக்கு ஒரு மனிதன் தன்னோடு கூட வாழ்கின்ற ஒரு பெண்ணோ அல்லது ஒரு பெண் சிநேகிதியையோ அழைத்து வந்தால், பரிசம் இடுவதற்க்கு முன்பாக, அவர்கள் எந்தவிதமான பாலியல் உறவையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
7மேலும் ஒரு ஸ்திரீ தன் ஜீவியத்தில் ஏற்கனவே பரிசம் பெறப்பட்டு இருந்த பொழுதில் மேலும் பெற்ற சீதனமானது திரும்ப கொடுக்கப்படாமல் இருந்து மற்றும் அவளுடைய கணவன் உயிரோடு இருக்கும் பட்ச்சத்தில், அவருடைய பெற்றோர் முதலாவதாக கணவனுடைய வரதட்சனையை திரும்ப அளிக்காத வரையில் அவள் மறுமணம் செய்து கொள்ள முடியாது. நீங்கள் அது போன்ற ஒரு பெண்னை திருமணம் செய்திருந்தால், தேவனுக்கு முன்பாக விபச்சாரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு ஸ்திரீக்கு பரிசம் கொடுத்திருக்க அவள் சென்று வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டால், அவள் இன்னுமாக உன்னுடைய மனைவியாக இருக்கிறாள், மேலும் அவன் அவளுக்காக பரிசம் கொடுத்திருந்தாலும் அவளுக்ககு பிறந்த பிள்ளைகள் உங்களுடைய பிள்ளைகளாகும்,
8இப்பொழுது, திருமணத்திலே, பரிசம் செலுத்தப்படாமல், நான் ஒன்றை கூற விரும்புகிறேன் அதாவது ஒரு திருமணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் கூடி வாழ்ந்து கொண்டு இருந்தால், அவர்கள் முதலாவதாக எல்லா விதமான பாலியல் தொடர்புகளையும் நிறுத்தாமல், ஞானஸ்நானம் பெறுவதற்க்கு உரிமை இல்லை என கூற விரும்புகிறேன். தன்னோடு வசிக்கும் அவனுடைய அதாவது பரிசம்யிடாதவனுடைய வீட்டில் இருக்கும் ஸ்திரீ ஞானஸ்தானத்தை பெற்றுக் கொள்ளலாம், ஆனால் 1 கொரிந்தியர் 5:11 ன் படியாக அவன் பேராசைக்காரனாக இருக்கிறபடியினால் அவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க முடியாது. ஒரு பெண்ணுக்கு பரிசம் இடாமல் அவளோடு ஜீவிக்கிறவன், அவன் ஒரு பேராசைக்காரன் மேலும் பேராசைக்காரன் ஒரு திருடன். மற்றும் வேதாகமம் கூறுகிறது திருடர்கள் பரலோக இராஜ்ஜியத்திற்க்குள் பிரவேசிக்க முடியாது.
9ஆபிரகாமின் நாட்களிலே, பரிசமே திருமணத்தின் முத்திரையாக இருந்தது ஆனால் இஸ்ரவேல் ஒரு தேசமான பொழுது, எல்லாவிதமான நிறுவனங்களாலும், நகரத்தின் மூப்பர்கள் - அவர்கள் இன்றைய மாநகராட்சி அலுவலகங்கள், திருமணத்தின் சாட்சிகளாக பங்கு கொள்கின்றனர். இவை ஒரு அறைக்கட்டளையின் கீழ் கொண்டு வரப்பட்டது, ஆனால் சபையானது அரசாங்கத்தினின்று விலகி, திருமணத்தை இரகசியத்திலிருந்து வெளியே கொண்டுவரதக்கதாக சபைக்கு அப்பாற்பட்ட ஒரு தனியுரிமை பெற்றிருக்கிறது. ஆனால் திருமணமே பரிசத்தின் ஒரு விழாவாக உள்ளது.
10கே.ப. எண்.4/ சகோதரர் பிலிப்பு, கனவில் செய்த பாவத்தைக் குறித்து என்ன? மேலும் ஓய்வு நாளைக் குறித்து என்ன? ஒவ்வொரு கனவும், பிசாசினிடமருந்து கூட, ஒரு குறிக்கோளுக்காக தேவனால் அனுமதிக்கப்படுகிறது. எனவே, ஆவி மனைவிகள் அல்லது ஆவி கணவர்கள் இல்லை. மேலும் உங்கள் கனவில் அதிக அளவிளான பாலியல் செயல்பாடுகள் இருந்தால், சில பாவங்கள் அறிக்கை செய்யப்படாமல் இருக்கும், மேலும் அந்த காட்சிகளை இந்த பேய் தான் காட்டுகிறது.
11ஒவ்வொரு பாவமும் நம்முடைய ஜீவியத்தில் ஆவிகளை கொண்டு வருகிறது என்பதை நாம் அறிவோம். ஆகவே அதிலிருந்து விடுவிக்கப்படும்படியாக நாம் அவைகளை அறிக்கையிட வேண்டும். மற்ற அடையாளங்கள் சில பாவங்களை சுட்டிக் காட்டுகிறது அவைகள் : சபையில் உறங்குவது, நீண்ட காலமாக வியாதியில் இருத்தல், தோல்விகள் மேலும் இவ்வகையான பாவங்கள் நாம் பாரம்பரியமான ஆராதனைகளை கொண்டிருப்பதினால் வருகிறது. மேலும் தேவன் உங்களக்கு பலமாக இருக்கும்படியான கிருபையை கொடுத்திருப்பாரானால், உபவாசம் இருந்து பலவீனர்களுக்காக ஜெபியுங்கள், மேலும் பாடல் ஆராதனை தலைவர்களுக்கும், மற்றும் பிரசங்கிகளுக்காகவும் ஜெபியுங்கள்.
12பாடல் ஆராதனையை நடத்துபவர்களைக் குறித்து பேசுவோமானால், பாடல் ஆராதனை நடத்துபவர்கள் பெயருக்கென்று நடத்தினால், அவர்களை அகற்ற வேண்டும், ஆனால் அவர்கள் மக்களை ஆவிக்குள்ளாக்கி தேவனுக்கு ஒரு ஆராதனையை கொடுக்க வேண்டும், அப்பொழுது சிலர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெருகிறார்கள், சிலர் விடுதலை பெருகிறார்கள், பண்டைய கால ஆராதனையாக இருக்கும். இசைக்கருவிகளும் இசைக்குழுவினரும், உருவாக்க முடியாத ஒன்றை செய்யக்கூடும். ஒரு நம்பிக்கை அவர்களைப் பற்றியிருக்கும் அதை அவர்கள் மறுக்க மாட்டார்கள், பாடல் ஆராதனையை நடத்துபவர் தன்னை கெடுத்துக் கொண்டு பலிபீடத்தை அணுகினால், நம்முடைய மரணத்தை தேடுகிற, நம்முடைய எதிரியாக இருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
13ஓய்வு நாளைக் குறித்து பார்க்கும் பொழுது, மத்தேயு 12:1 முதல் 8 மற்றும் யோவான் 9:16ல் ஏழாம் நாள் அட்வென்டிஸ் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை ஓய்வு நாளை கடைப்பிடிக்க வலியுருத்துகிறதை குறித்து பார்க்கலாம். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ, நான் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறேன் என்றார். அது ஒரு பழைய பிசாசு. பழைய உடன்படிக்கையின்படி சனிக்கிழமை காளைகள் மற்றும் கிடாக்களின் இரத்தத்தினால் உண்டான ஓய்வு நாளாக இருந்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டான புது உடன்படிக்கையாக இருக்கிறது. மேலும் அதை நாம் ஏபிரேயர் 8: 6 முதல் 8 மற்றும் 1கொரிந்தியர் 11:25-ல் காண்கிறோம்.
14அப்போஸ்தலர்கள் ஞாயிற்றுக்கிழமையிலே ஆராதனை நடத்தியதாக வேதாகமம் நமக்கு கூறுகிறது. 1 கொரிந்தியர் 16 : 1 முதல் 2, அப்போஸ்தலர் 20 : 7 ... பேரரசன் கான்டெஸ்டையின் தன்னுடைய மனமாற்றத்திற்கு பிறகு ஞாயிற்றுக்கிழமைக்கு விடுப்பு கொடுத்தார். கி.பி. 327 ஆம் ஆண்டு இது ஒரு அரசாணையாக பிறப்பிக்கப்பட்டது. கலாத்தியர் 4.9 முதல் 10 ல் பவுலும் இது போன்ற அடிப்படை சட்டவாதிகளை கடிந்துக் கொண்டார். கொலோசெயர் 2:16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக என்றார்.
15கே.ப. எண்.5/ 20 சகோதரர் பிலிப்பு, வரங்கள் எப்பொழுது கிரியை செய்ய வேண்டும்? ஆராதனைக்கு முன்பும், ஆராதனையின்போதும், ஆராதனைக்கு பின்பும், ஒவ்வொரு சிறிய இடைநிறுத்தத்தின் போதும், குறிப்பாக ஒரு கணம் மௌனம் கடைபிடிக்கப்படும் போதும், ஆனால் பிரசங்கத்தின் நடுவில் அல்ல, இதுவும் ஆவியின் ஒரு வெளிப்பாடாக இருக்கிறது. பிரசங்கம் செய்கின்ற வேளையிலே, முற்றிலுமான மரியாதை இருக்க வேண்டும்; ஒழுங்கற்ற விதத்தில் "ஆமென்" என்றோ, ஒருவரும் " பிரசங்கியுங்கள்" என்றோ சொல்லக் கூடாது. எந்த வித திரைபடம் அல்லது எந்த விளக்க காட்சியும் இல்லை. எந்த ஒரு மனித உணர்ச்சிக்கும், நான் இல்லை என்கின்றேன், [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
16நாம் ஜெபிக்கும் பொழுது, கவனம் சிதறாமல் இருக்கும் படியாகவும், பரிசுத்த ஆவியின் கரத்தில் ஒப்புக் கொடுக்கும்படியாகவும் உங்களுடைய கண்களை முடவும், ஆனால் பிசாசு பிடித்த யாரோ ஒருவருக்கு ஜெபிக்கும் பொழுது, உங்களுடைய கண்களை திறந்து வையுங்கள். கவணம் சிதறாமல் இருப்பதற்க்காகவும், பிசாசை துரத்தி அடிப்பதற்காகவும் சபையினர் கண்களை முடுகின்றனர். ஆனால் உதவி போதகர்கள் (Deacons) தங்கள் கண்களை திறந்து வைத்து இருப்பர்கள்.
17ஆகவே ஆராதனை வெளிப்படையான பாவ அறிக்கையோடே சபையினருக்கு முன்பாக துவங்கும், பிரசங்கம் முடிந்த பிறகு, வியாதியஸ்த்தர்களுக்காகவும், விடுதலைக்காவும் மேலும் மற்ற காரியங்களுக்காக ஜெபிக்கப்படும். மேலும், அமைதியான ஜெப வேளையிலே, ஆவிக்குறிய வரங்களை கிரியை செய்ய நீங்கள் எதிர்பார்க்க வேண்டும்.
18கே.ப. எண்.6/ சகோதரன் டைரியஸ் மூலம் இந்த கேள்வி என்னிடம் கேட்க்கப்பட்டது, நான் 2005 ல் அவர்கள் இன்னுமாக பிரன்ஹாமிஸ்டுகளாக இருந்த போது நான் அங்கு பிரசங்கிக்க சென்றிருந்தேன். அப்பொழுது அது செப்டம்பர் 4 ஆம் தேதி 2005 அன்று என்னுடைய பிரசங்கம் முடிந்த பிறகு, கேள்வி பதில் நேரத்தில் கேட்க்கப்பட்டது. அவர் என்னிடம் இந்த கேள்வியை கேட்டார். முதலாவதாக இரண்டு வில்லியம் பிரன்ஹாம் புத்தகத்திலிருந்து வாசித்து பிறகு அவர், " ஐயா, நடுராத்திரி சத்தத்தைக் குறித்து செய்தியாளன் வில்லியம் மரியன் பிரன்ஹாம் மூலமாக எங்களுக்கு தந்த வெளிச்சத்திற்காக தேவனை ஸ்தோத்தரிக்கின்றோம். வெளிச்சத்திற்க்கு வழி நடத்தும்படியாக, சகோ.பிரன்ஹாம் இருளில் இருந்து எங்களை வெளியே கொண்டு வந்தார் மேலும் நீர் எங்களை எங்கு கொண்டு செல்ல போகிறீர் என்று எங்களுக்கு தெரியவில்லை என்றார் மேலும் சகோ. பிரன்ஹாமின் செய்தியை அறியாத மக்களுக்கு மாத்திரமே இந்த நடுராத்திரி சத்தம் நன்மையாக இருக்கும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் கூறிய அனைத்தும் சகோதரர் பிரன்ஹாம் புத்தகத்தில் உள்ளது, "நன்றி" என்றார் .
19அவர் முற்றிலுமாக வியர்வையில் நனைந்து மொத்தமாக மூச்சு அடைத்து போயிருந்தார். நான் அதை நிறுத்தி" பவுல் பிரசங்கித்ததையே நான் பிரசங்கித்தேன் என்று பிரன்ஹாம் தாமே கூறினதை போல, உண்மையாகவே என்னுடைய செய்தி பிரன்ஹாமின் செய்தியோடு உள்ளடக்கி இருப்பதற்க்காகவும் அத்தோடு ஒத்துப் போகிறதினாலே நான் மகிழ்ச்சியடைகிறேன். அதற்க்கு அவர் மறு உத்தரவு கொடுத்து "அது ஒத்துப் போகவில்லை" என்றார்.
20மேலும் நான் தொடர்ந்து இப்படியாக கூறனேன் " வெளிச்சத்திற்கென்று வருவது என்பது, விடுதலைக்காக பரிசேயர்களை இயேசு அழைத்ததை போன்று இருக்கின்றது. மேலும் அதற்க்கு அவர்கள் அவரிடத்தில் : நாம் அதை வாசிக்கலாம்: "அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்." உங்களால் காண முடிகிறதா? அவர்களை பொருத்தவரை மோசே அவர்களை ஏற்கனவே எகிப்த்திலிருந்து விடுவித்து விட்டார்! அது முடிந்து விட்டது!
21மேலும் மார்டின் லூதர் ஜனங்களை இருளில் இருந்து வெளியே கொண்டு வந்த பொழுது, தேவன் அவர்களை மறுபடியுமாக இருளில் இருந்து மீட்க ஜான் வெஸ்லியை அனுப்பினாரே அப்படியெனில் அவர்களை திரும்ப இருளில் அனுப்பியது யார்? தேவன் வில்லியம் பிரன்ஹாமை அனுப்பும்படியாக அவர்களை திரும்ப இருளுக்கு கொண்டு சென்றது யார்? மேலும் ஸ்தாபனத்தில் இருப்பவர்கள் வில்லியம் பிரன்ஹாமினிடத்தில் எங்களுக்கு வெளிச்சம் தேவையில்லை ஏனெனில் புவுல் எபேசியர் 5:8ல்," முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்" மேலும் மறுபடியுமாக 1 தெசலோனிக்கேயர் 5:5 "நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே." என கூறினார்கள், ஆகையால், பிரன்ஹாமிஸ்டுகளே, நீங்கள் என்ன கூறுவீர்கள்?
22மேலும் அதன் பிறகு, வேறொரு நபர் அங்கே ஏழுந்து நின்று அவர் இப்படியாக: "உங்களுடைய பிரசங்கத்தின் பொழுது, நீர் எங்களை பிரன்ஹாமிஸ்டு என்று அழைக்கிறீர். நாங்கள் கிறிஸ்தவர்கள், நாங்கள் பிரன்ஹாமிஸ்டுகள் அல்ல என்பதை நீங்கள் திருத்திக் கொள்ள விரும்புகிறேன். பிரன்ஹாமிஸ்டு என்பவர்கள் வில்லியம் பிரன்ஹாம் நாமத்தில் ஜெபமோ அல்லது ஞானஸ்நானம் கொடுப்பவர்கள் ஆனால் நாங்கள் பிரன்ஹாமிஸ்டுகள் அல்ல, அதை திருத்திக் கொள்ளுங்கள்!" என்றார்.
23மேலும் நான் அவரிடத்தில் " சகோதரனே, இன்று லூதரன்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் மார்டின் லூதரின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் அல்ல. ஜான் கால்வினுடைய இரட்டு முன்குறித்தல் அதாவது நித்திய ஜீவனுக்கென்று முன் குறித்தல், நரகத்திற்கென்று முன் குறித்தலின் செய்தியை நிராகரித்த மாத்திரத்தில், அவர்கள் அதை விரும்பினார்களோ இல்லையோ, அவர்கள் ஏற்கனவே லூத்தரன்களாக இருக்கிறார்கள். அப்படியாக அவர்களை அழைப்பது அவர்கள் விரும்பவில்லை ஆனால் பின்னர் அவர்களுடைய பிள்ளைகள் எற்றுக் கொண்டனர். இன்று, என்னவென்று அறியாமல் உன்னுடைய பெயரை "செய்தியின் சகோதரன் " என ஏற்படுத்திக் கொண்டாய், ஆனால் என்னவென்று அறியாமல் நாளை உன்னுடைய பிள்ளைகள் என்னவென்று அறியாமல் பிரன்ஹாமிஸ்டுகள் என்று அழைக்கப்படுவார்கள்.
24நீங்கள் வில்லியம் பிரன்ஹாமின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தாலும் அல்லது ஜெபித்தாலும், அல்லது நீங்கள் ஒரு இடிமுழக்க வாதிகள் (Thunderists),(Thunderists) அல்லது பிராங்கிஸ்டோ,(frankists) நியாயப்பிரமாணத்தை பின்பற்றுகிறவரோ, (Legalists) கிருபையை பின்பற்றுபவரோ, (gracists) அல்லது ஏதோ ஒன்று, அவைகள் எல்லாம் அதினுடைய விரிவாக்கங்கள். நீங்கள் எல்லோரும் பிரன்ஹாமிஸ்டுகள்! பாப்டிஸ்டில் பத்து வகையான இனங்கள் உள்ளது. வில்லியம் பிரன்ஹாம் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கிறவர்கள் பிரன்ஹாமிஸ்டுகளில் ஒரு இனம். இடி முழக்க களத்திலேயே, சில கிளைகள் உண்டு : சிலர் இயக்கவியல் இடிமுழக்கத்தை பிரசங்கிப்பார்கள், மேலும் சிலர் ஊந்து சக்தி இடிமுழக்கத்தை பிரசங்கிப்பார்கள்.
25நாம் நடுராத்திரியிலே இருக்கும் வேளையில், உங்களுடைய விசுவாசம் வில்லியம் பிரன்ஹாம் கூறினதின் பேரில் இருந்தால், நீங்கள் அனைவரும் பிரான்ஹாமிஸ்டுகள், அதை நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ நீங்கள் பிரன்ஹாமிஸ்டுகள். யாரோ ஒருவர் ஒரு கத்தோலிக்க சபையில் இருந்த மாத்திரத்திலே, அவரை ஒரு கிறிஸ்தவன் என்று அழைப்பது எனக்கு ஒரு பாவமாகும். நாம் நடுராத்திரியில் இருக்கும் வேளையிலே மேலும் அங்கு இன்னோரு தீர்க்கதரிசி பூமியின் மேல் இருக்கும் பொழுது, மேலும் யாரோ ஒருவர் வில்லியம் பிரன்ஹாமின் செய்தியை பின்பற்றினால் அவரை கிறிஸ்தவன் என்று அழைப்பது எனக்கு பாவமாக இருக்கும்.
26ஏழு சபைக் காலங்கள் மூலமாக கிறிஸ்துவை அவருடைய நடையில் பின்பற்றுகிறவனே ஒரு கிறிஸ்தவன். மார்டீன் லூதர் பூமியின் மேல் இருந்த பொழுது , அவரை பின்பற்றாதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. ஜான் வெஸ்லி பூமியின் மேல் இருந்த பொழுது, லூதர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல, வில்லியம் பிரன்ஹாம் பூமியின் மேல் இருந்த பொழுது மெத்தோடிஸ்டுகள், லூதரன்கள் மற்ற எல்லோரும் கிறிஸ்தவர்கள் அல்ல. மேலும் இன்றைய நாளில், வில்லியம் பிரன்ஹாம் செய்தியை பின்பற்றுகிற யாரோ ஒருவரை நான் கிறிஸ்தவன் என்று அழைக்கமாட்டேன்.
27கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏழு பொன் விளக்குகள் மத்தியில் நடந்து வருகிறார் மேலும் எங்கு ஒரு தீர்க்கதரிசி மரித்தாரோ, அவர் நிறுத்த மாட்டார். எடுத்துக் கொள்ளப்படுதல் நடைப்பெறாத வரைக்கும் அவர் நடக்கிறார். அவர் நடந்து ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு பேசுவார். உலகத்தின் முடிவு மட்டும் புமியின் மேல் தீர்க்கதரிசிகளை ஏழும்பப் பண்ணுவார். மேலும் இதுவே பரிசுத்தவான்களின் விசுவாசம்.
28செப்டம்பர் 4, 2005 , அன்றைய நாளிலே மிக பெரிய அமளி உண்டானது ஆனால் தேவனுடைய கிருபை வென்றது மேலும் செப்டம்பர் 5, திங்கட்கிழமை முதல் செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் முழு சபையினரும், மேய்ப்பர், அவருடைய உதவியாளர், விசுவாசித்து மறுபடியும் ஞானஸ்நானம் எடுத்தனர். இந்த பிரசங்கியாளரும் விசுவாசித்து மற்றும் மறு ஞானஸ்நானம் பெற்றார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
29கே.ப. எண்.7/ சகோதரர் பிலிப்பு, ஏப்ரல் 24, 1993 முதல் ஜுலை 8, 2002 வரை, பாட்டிஸ்ட் சபையிலிருந்து சாயங்காலம் நேர சபை வரைக்கும் எந்த பொருப்புகளை கொண்டிருந்தீர்கள்? சகோதரனே, நான் ஒன்றையும் கொண்டிருக்கவில்லை, நான் வெறுமனே ஒரு சபை விசுவாசியாக இருந்தேன். மார்ச மாதம் 2002 வரைக்கும் நான் பிரசங்கிக்கும்படி கட்டளை பெற்ற பொழுது, நான் முதன் முறையாக சபைக்கு செல்கிறவனை போல் இருந்தேன்.
302 கொரிந்தியர் 10:1 ன் படியாக நான் அப்போஸ்தலன் பவுலை போன்று மெல்லிய உருவத்தை உடையவனாக இருந்தேன். மேலும் விஷேசமாக நான் ஏழ்மையானவனாக இருந்தேன். அப்படி இருக்கும் பட்சத்தில் நான் எப்படி அந்த செல்வந்தர்களாகிய பிரன்ஹாமிஸ்டுகளிம் எதோ ஒருவனாக இருக்க முடியும். ? மேற்படிப்பு கொண்டிராத ஒருவனாக, நான் அந்த பிரன்ஹாமிஸ்டுகளிம் எப்படி ஒருவனாக இருக்க முடியும்.? நான் ஒரு இளங்கலை பட்டத்தை கொண்டிருக்காத பட்ச்சத்தில் ஒரு சுவிஷேச அல்லது புராடெஸ்டண்ட் ஆயர் பள்ளியில் நுழைய முடியாது.
31கே.ப. எண்.8/ சகோதரர் பிலிப்பு, சிலர் வெளிப்படுத்தல் 10.7 அது வில்லியம் பிரன்ஹாமை குறித்தது அல்ல என கூறுகிறார்கள்? அது அப்படியா ? சாயங்கால வெளிச்சத்திற்க்கு பிறகு, வில்லியம் பிரன்ஹாமிற்க்குப் பிறகு அதை கூறுவதற்க்கு புமியின் மேல் தேவன் எந்த தீர்க்கதரிசியை அனுப்பி இருக்கிறார்? அது உண்மையெனில் வில்லியம் பிரன்ஹாம் ஒரு கள்ள தீர்க்கதரிசி மற்றும் அவர் நிறுவின எல்லா காரியங்களும் , ஏவால்ட் பிராங்க உள்பட தவறாக இருக்கும். வில்லியம் பிரன்ஹாம் தன்னுடைய ஊழிய காலம் முழுவதும் , இந்த வசனத்தின் மேல் ஆதாரப்பட்டிருந்தார் மேலும் வெளிப்படுத்தல் 10:7 ன் வல்லமையினாலே அவர் ஏழு முத்திரைகளை வெளிப்படுத்தினதை நாம் எல்லோரும் அறிவோம்.
32சகோதரர்களே, வில்லியம் பிரன்ஹாம் செய்தியின் மூலம் பிரகாசிப்பிக்கப்பட்ட ஒரு சிறிய மெதடிஸ்ட் இறையியல் பயின்றவரின் செயலாக்கத்தினால் நான் தடுமாறுவதில்லை. ஒரு தீர்க்கதரிசி தன்னுடைய ஊழியத்தில் திருத்தத்தைக கொண்டு இருப்பதை நான் விசுவாசிப்பதில்லை.
33யோவான்ஸநானகன் தான் எசாயா 40:3 என்று கூறின பொழுது, இயேசு கிறிஸ்து வந்த பொழுது தான் சாட்சிக் கொடுத்த , அறிமுகப்படுத்தின , யோவான்ஸ்நானனை எப்படி அவர் யோவான் ஏசாயா 40:3 இல்லை என்று கூற முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் எசாயா 61 என்று கூறும் பொழுது, எப்படி பவுல் அல்லது பேதுரு தான் அறிவிக்கிற கர்த்தராகிய கிறிஸ்து ஏசாயா 61 இல்லை என்று சொல்வதை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. எப்படி தீமோத்தேயு வந்து பவுல் எசாயா 49 : 6 இல்லை என்று கூறி, நீங்கள் அவருக்கு செவிக் கொடுக்க முடியும்? ஒரு தேவனுடைய குமாரனால் அப்படி செய்ய முடியாது.
34"பத்மு மற்றும் கேபார் நதியின் தரிசனங்கள்" என்ற பிரசங்கத்தில் வெளிப்படுத்தல் 1:16 ல் உள்ள ஏழாவது நட்ச்சத்திரமும் மற்றும் எக்காளத்தோடு உள்ள ஏழாவது தூதனும் மற்றும் கலசத்தை கொண்டிருந்த ஏழாவது தூதனும் மேலும் லவோதிகயாவின் ஏழாவது தூதனும் ஊழியங்களை மாற்றிக் கொள்ளுகிற ஒரே தூதன்.
35கே.ப. எண்.9/ சகோதரன் பிலிப்பு, திறந்த வெளி பிரசங்கத்தின் வேளையில் நாங்கள் துரத்தி அடிக்கப்படும் பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும் ? ஆம், சகோதரர்கள் உபத்திரவத்திலிருந்து பின் வாங்கவில்லை என நான் கேள்விப்பட்டேன். சகோதரர்களே நாம் இயேசு கிறிஸ்துவின் சுவிஷேசத்தையன்றி வேரு ஒரு பிரசங்கத்தை செய்யவில்லை. மத்தேயுவில் கூறியவண்ணம் ... " அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள் அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார். " யோவானில் வேறொரு பத்தியில் கூறுகிறது: "அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார் ".
36இந்த செய்தியை நாம் பிரசங்கிக்க தடை செய்தால் மகா உபத்திரவம் வரும். ஆகையால், தடைகளை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதனை அறிந்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இன்னும் நாம் வெகுதூரம் செல்ல வேண்டியதாய் இருக்கிறது. நீங்கள் இப் பக்கமாக துரத்தி அடிக்கப்பட்டால் வேரு ஒரு கரையில் கடந்து செல்லுங்கள்.
37கே.ப. எண்.10/ சகோதரர் பிலிப்பு, நான் பிரசங்கிக்க அனுமதி இல்லாமல் இருக்கையில், பூமியன் மேல் தேவனுக்கென்று ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். தேவனுடைய ஊழியக்காரன் என விசுவாசித்து ஒரு மேய்ப்பரிடம் ஒரு முக்கியமான தொகையை நன்கொடையாக செலுத்தினேன். நான் சென்று அதை திருப்பி தரும்படியாக கேட்க்கலாமா? ஆம் சகோதரி! நன்கொடையை திரும்ப கேட்க முடியாது ஆனால் இந்த நன்கொடையானது ஆத்துமாக்களை இழக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது ஆகவே நீங்கள் அதை திரும்ப பெற வேண்டும். அதை அவர் திரும்ப அளிக்க மறுத்தால், அவரை விட்டு வடுங்கள். உங்களால் காண முடிகிறதா? அது. அவ்வளவுதான். மேலும் சகோதரியே இது வருந்ததக்கதாக உள்ளது ஆனாலும் நான் உங்களுடைய உள்நோக்கத்தை பாராட்டுகிறேன். கர்த்தராகிய இயேசுவோடு இருந்த மகதலேன மரியாள், சுசன்னா மற்றும் அநேகமான சகோதரிகள் இப்படி இருந்தார்கள். மேலும் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. மற்றும் பூமியின் மேல் காலம் காலமாக இது போன்ற எண்ணமுடையவர்களையும் தேவன் ஆசிர்வதிப்பாராக . [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].