



Kacou 181 (Kc.181) : ஹார் மெகித்தோ
1 இயேசு கிறிஸ்துவின் அடிமையாகிய தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பாகிய நான், சபையில் ஆவிக்குரிய வெளிப்பாடுகள் குறித்து 2026 ஆகஸ்ட் 4 அன்று பரிசுத்தவான்களுக்குக் கொடுத்த தேவவார்த்தைகள் இவை.
2 நல்லது. நாம் ஆவிக்குரிய வரங்களின் பரிமாணத்தில் இருக்கிறோம், மேலும் தீர்க்கதரிசனங்கள் என்பது நாம் பழகிக்கொள்ள வேண்டிய ஒரு புதிய காரியமாக இருக்கிறது. தீர்க்கதரிசனங்கள் எங்கு வேண்டுமானாலும் நம்மை ஆச்சரியப்படுத்தலாம், ஆனால் நம்முடைய வெளிப்பாடுகள் நம்மை எச்சரிக்க வேண்டும்.
3 மேலும், Kc.179-ன் படி பொறுப்புகளில் இருந்து விலகியதன் மூலம், பெருமையோடும் அவமதிப்போடும் நடந்துகொண்ட சில போதகர்களும் பிரசங்கிகளும் தாழ்மையுள்ளவர்களாக மாறியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்கள் அற்பமாக எண்ணிய சகோதரர்களும் சகோதரிகளும் அவர்களிடம் பேசுகிறார்கள், அவர்களும் இவர்களுக்குச் செவிகொடுக்கிறார்கள். அவர்கள் முன்போல அச்சத்தையும் பயபக்தியையும் இனி ஏற்படுத்துவதில்லை.
4 அவர்களுடைய அரண்மனைகள் விழுந்துவிட்டன, ஆனால் பாலங்கள் மற்றும் தூண்களின் இடிபாடுகள் நிமிர்ந்து நிற்கின்றன, அவைகள் இல்லாமல் வேறு எந்த மறுகட்டுமானமும் நடக்காதபடித் தடுக்கின்றன. மேலும் அமைதியாக இருக்க விரும்பாததால், தேவன் தாமே அவர்களைத் தீட்டுகளினாலும் அசைவற்ற தன்மையினாலும் அடிக்கிறார்.
5 மேலும், இந்த அப்போஸ்தலர்கள், போதகர்கள் மற்றும் பிரசங்கிகளின் கோபமானது, வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டாவது தீர்க்கதரிசனம் சொல்வதற்கும், அவர்களை மீண்டும் அவர்களுடைய பொறுப்புகளில் நிலைநிறுத்துவதற்கும் தங்களின் அர்ப்பணிப்பைப் பலப்படுத்த மறுக்கின்ற ஜனங்களுக்கு எதிராக இருக்கிறது. இவர்கள் சிங்கங்களாக இருக்கிறார்கள், சிங்கங்களில் பெண்களே ஆண்களுக்காக வேட்டையாடுகின்றன.
6 தேவனுக்கும் சபைக்கும் சத்துருக்களாக இருக்கிறவர்கள், சிறு பிள்ளைகளைப்போல மாற மறுக்கிற அனைவரும் தான். அவர்கள் 5 ஆண்டுகள் ஊழியஞ்செய்திருந்தால், அவைகள் பரிசுத்தவான்களுக்கு எதிரான 5 ஆண்டுகாலக் குற்றம் என்று புரிந்துகொள்ளுங்கள். அவர்கள் 10 ஆண்டுகள் ஊழியஞ்செய்திருந்தால், அவைகள் பரிசுத்தவான்களுக்கு எதிரான 10 ஆண்டுகாலக் குற்றம்.
7 மேலும் அவர்கள் பணமாகப் பெறுகின்றவை, அவர்களுடைய குற்றங்களின் கூலியாகும். அவர்களில் பலர் பாலியல் ஆவியிலிருந்தும் பணத்தின் பிசாசுகளிலிருந்தும் விடுவிக்கப்படாமல் இருந்து பிரசங்க பீடத்திற்கு ஏறிச்சென்றனர்; அதனால், ஜனங்கள் கஷ்டங்களினாலும், பாலியல் பிசாசுகளினாலும், உலகக் கவலைகளினாலும் நெருக்கப்பட்டார்கள்.
8 மேலும் ஜனங்களே, வனாந்தரத்தில் இஸ்ரவேலை வாரிக்கொண்டு சென்றது எதுவோ, அதுவே நாமும் இஸ்ரவேலைப் போல் நடந்தால் நம்மையும் வாரிக்கொண்டு செல்லும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இஸ்ரவேல் உணவுக்காக அழக்கூடும்.
9 இன்று நம்மில் பலர் உணவுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். தீர்க்கதரிசனங்கள் அவர்களைச் சரியான அர்ப்பணிப்புக்குத் தொடர்ந்து அழைக்கின்றன. தேவன் தம்முடைய அன்பில் நமக்குக் கைநீட்டி, நம்முடைய மனந்திரும்புதலுக்காகக் காத்திருக்கிறார்.
10 நமக்கு மனவிருப்பம் இருந்தால், நாம் அறியாமலேயே மேற்கொள்கிற பாவங்கள் சில உண்டு. உதாரணமாக, உங்கள் மனைவி கீழ்ப்படிதலுள்ளவளாகவும் நீங்கள் அவளை நேசிக்கிறவளாகவும் இருக்கும்போதே, அவளை "செல்லமே" என்று அழைப்பது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். உண்மை என்னவென்றால், இவ்விதமாக அழைப்பது மாம்ச இச்சைகளோடும் பாலியலோடும் தொடர்புடையது.
11 முதல் கிறிஸ்தவத் தம்பதிகள் பரிசுத்தமாக்குதலின் நிமித்தம் பாலியல் உறவை நிறுத்தியபோது, "தேனே" என்ற அழைப்பானது "சகோதரர்" என்றும் "சகோதரி" என்றும் மாற்றப்பட்டதாக தேவதூதன் எனக்கு உணர்த்தினார். உடன் பிறந்த சகோதரன் தன் உடன் பிறந்த சகோதரியுடன் உறங்குவதில்லை. மேலும், ஒரு சிறு பிள்ளையும் பாலியல் உறவு கொள்வதில்லை.
12 பாலியல் மறையும்போது, சண்டைகள் குறைந்து மெய்யான சகோதர அன்பு வெளிப்படுகிறது. பாலியல் இல்லாத இந்த அன்பில், விவாகரத்து இல்லை. இது தெய்வீக அன்பாகும்.
13 மேலும் பரதீசில், தம்முடைய முன்நோக்குத் தரிசனத்தில், வில்லியம் பிரன்ஹாம் தம்முடைய மனைவி ஹோப் பிரம்பாக் பூமியிலிருந்தது போலத் தன்னை "தேனே" என்று அழைப்பாள் என்று எதிர்பார்த்தார்; ஆனால் அவள் அவரிடத்திற்கு வந்தபோது, அவரை "சகோதரர்" என்று அழைத்தாள். மேலும் அங்கே பாலியல் இல்லை என்று அவர் வலியுறுத்தி விளக்கினார்.
14 இந்த மெய்யான அன்பே நம் இருதயங்களில் வேரூன்ற வேண்டும், அப்பொழுது நாம் யாருக்கும் தீங்கு செய்ய மாட்டோம். குறிசொல்லும் ஆவியினால் செயல்படுகிற இந்த ஜனங்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அறிக்கையிடுகிற இந்த ஜனங்கள், நாம் அற்பமாக எண்ணுகிற இந்தப் பலவீனமான ஜனங்கள், கைகளை வைப்பதன் மூலமாக நமக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பதற்கு தேவனுடைய கருவிகளாக இருக்கலாம் என்பதை நாம் அறியாமல் செயல்படுகிறோம்.
15 அதனால்தான், தன் பாவங்களை அறிக்கை செய்கிற ஒருவரையும் கடிந்துகொள்ளாதீர்கள். வெளிப்படையான பாவஅறிக்கைகளின் தலையீடுகளின்போதும் கூட, யாரையும் கடிந்துகொள்ளாதீர்கள். கடிந்துகொள்ளப்பட வேண்டியவரைக் கடிந்துகொள்வது பரிசுத்த ஆவியானவரின் வேலை.
16 உங்களால் அவர்களுக்கு விடுதலையைக் கொண்டுவர முடியாவிட்டால், அவர்களை விட்டுவிடுங்கள். பலவீனமானவனையும் பலமானவனையும், நன்றாக வாழ மறுப்பவனையும் அறிந்தவர் பரிசுத்த ஆவியானவரே.
17 பரிசுத்த ஆவியானவர் மற்றும் ஆவிக்குரிய வரங்களின் பரிமாணம் என்பது நியாயப்பிரமாணத்திலிருந்து கிருபைக்குக் கடந்துவருவதாகும். பாவத்தையும் அறிக்கையையும் குறித்து ஒழுங்குபடுத்த எதுவும் இல்லையென்றால், அறிக்கை செய்கிற எவரும் ஜெபத்தைப் பெற வேண்டும். இனி தண்டனைகளோ அல்லது கண்காணிப்பில் வைப்பதோ இல்லை.
18 தன் பாவத்தை மறைத்து வைத்திருந்து, வந்து அதை அறிக்கை செய்பவர் கூட ஜெபத்தைப் பெற வேண்டும். இந்த அத்தியாயமான Kc.181-ல் இருந்து, செய்தியில் உள்ள அனைத்து தண்டனைகளும் கண்காணிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன. சரீரத்தின் ஓர் அவயவத்தின் பாவம் முழுச் சரீரத்தின் பாவமாக இருந்தால், சரீரத்தின் ஓர் அவயவத்தின் ஆக்கினைத்தீர்ப்பு முழுச் சரீரத்தின் ஆக்கினைத்தீர்ப்பாகும்.
19 ஒரு பிரசங்கி மிகவும் வல்லமையுள்ளவராக இருக்கலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் அவருடைய பிரசங்கம் பாவியை விடுவிக்க முடியாது; அவருடைய மொழிபெயர்ப்பாளர் கூட ஒரு விபச்சாரனாகவோ அல்லது குடிகாரனாகவோ இருக்கலாம். மேலும் ஆசாரியத்துவம் தீர்க்கதரிசிகளை நிராகரிப்பதற்கோ அல்லது கொலைசெய்வதற்கோ ஜனங்களைத் தூண்டியதைத் தவிர வேறு எதையும் மக்களுக்குக் கொண்டுவரவில்லை என்பதைப் பழைய ஏற்பாடு காட்டுகிறது.
20 மேலும், நவீன கிறிஸ்தவத்தில், எபேசியர் 4-ன் பிரசங்கம் பாவியை ஒருபோதும் கலக்கமடையச் செய்ததில்லை. இருப்பினும், பாவிகளை மனந்திரும்புதலுக்கு வழிநடத்துவதாகக் கூறப்படும் பிரசங்கங்களை விட ஆவிக்குரிய வரங்களே பாவிகள் மத்தியில் அதிகப் பலன்களை உருவாக்கியுள்ளன.
21 இவை அனைத்திற்காகவும், அஹுவேஃபா என்ற பெயருள்ள ஒரு சகோதரியை நான் உதாரணமாக எடுத்துக்கொள்ளப் போகிறேன். அவள் பெனின் நாட்டில் வாழும் படிப்பறிவில்லாத ஒரு சகோதரி. அவள் 2019-ஆம் ஆண்டில் செய்திக்கு வந்தாள். அவள் செய்திக்கு வந்து இப்போது ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அவளுடைய தற்போதைய சூழ்நிலை ஏராளமான பாடங்களைக் கொண்டுள்ளது, அதனால்தான் அதைப்பற்றி நான் விரிவாகப் பேசப்போகிறேன்.
22 அவள் அனைத்து முக்கியமான கூடுகைகளிலும் காணப்படுகிறாள், அங்கே தீர்க்கதரிசனமும் சொல்லுகிறாள். நீங்கள் அவளைத் தடுத்தாலும், அவள் அங்கே இருப்பாள். இடம் மற்றும் தூரம் எதுவாக இருந்தாலும், அவள் அங்கே இருப்பாள்.
23 உதாரணமாக, ஜூன் 5, 2026 வெள்ளிக்கிழமை அன்று, அப்போஸ்தலன் ஜேக்கப் அஹூட்ஜி, பெனின் நாட்டில் உள்ள அஸோவே சபையில் ஒரு சிறப்பு ஆராதனையை நடத்தினினார். கேமரூனைச் சேர்ந்த கிறிஸ்டோஃப் எம்பேனா உட்பட பல அப்போஸ்தலர்கள் கலந்துகொண்டனர்.
24 அப்போஸ்தலன் ஜேக்கப் அஹூட்ஜி சுகமளிக்கும் சாட்சிகளைத் தொடங்குவதற்காகப் பேசிக் கொண்டிருந்த அதே வேளையில், சகோதரி அஹுவேஃபா கூட்டத்தின் நடுவே அந்நிய பாஷைகளில் பேசத் தொடங்கினார்.
25 அப்போஸ்தலன் ஜேக்கப் அஹூட்ஜி அவளை நோக்கி, “சாத்தானே, வாயை மூடு! நீ அமைதியாயிருக்கும்படி உனக்குக் கட்டளையிடுகிறேன்!” என்று சத்தமிட்டார்; ஆனால் அவளோ எந்தவொரு கலக்கமுமின்றித் தொடர்ந்து அந்நிய பாஷைகளில் பேசினாள். பின்பு அவள் எழுந்து நின்று, வியாக்கியானத்தைக் கொடுத்துவிட்டு அமர்ந்தாள்.
26 மேலும் ஜூன் 7, 2026 ஞாயிற்றுக்கிழமையன்று, ஹூகேமி என்ற இடத்தில் அப்போஸ்தலன் ஜேக்கப் அஹூட்ஜியின் சுகமளிக்கும் ஆராதனையின் போது, சகோதரி அஹுவேஃபா மீண்டும் வந்திருந்தாள். அவள் தீர்க்கதரிசனம் உரைத்ததுடன், சபையிலிருந்த பலருக்கு அறிவின் வார்த்தைகளையும் கொடுத்தாள்.
27 பின்பு, ஜூலை 12, 2026 ஞாயிற்றுக்கிழமையன்று, கோட்டோனோ சபையில் நடந்த மற்றொரு ஆராதனையின் போது, சகோதரி அஹுவேஃபா மீண்டும் வந்திருந்தாள். அப்போஸ்தலன் ஜேக்கப் அஹூட்ஜி துதிப்பாடல்களை நடத்திக் கொண்டிருந்தபோது, அவள் மிக உரத்த சத்தத்துடன் அந்நிய பாஷைகளில் பேசத் தொடங்கினாள்.
28 அவை ஜெப வார்த்தைகளோ அல்லது தேவனைத் துதிக்கும் வார்த்தைகளோ அல்ல, மாறாகத் தீர்க்கதரிசன வார்த்தைகள்; ஆனால் அப்போஸ்தலன் ஜேக்கப் அஹூட்ஜியோ அல்லது சபையாரோ துதிப்பாடல்களை நிறுத்தி அவளுக்குச் செவிகொடுக்கவில்லை.
29 அந்தப் பாடல் முடியும் வரை அவள் தொடர்ந்து அந்நிய பாஷைகளில் பேசினாள். பின்பு, அவள் தனது இருக்கையை விட்டு எழுந்து, அந்நிய பாஷைகளில் பேசியபடியே பிரசங்கபீடத்தை நோக்கி நடந்தாள். சபையார் துதிப்பாடல்களை நிறுத்த வேண்டிய கட்டாயமாயிற்று.
30 அவள் வெளிப்படையான பாவஅறிக்கையின் தலைவராக இருக்கும் ஒரு சகோதரனுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்தாள். அவள் அதிகாரத்துடன் அவனை நோக்கி: “ரோட்ரிக்! மதுபான விஷயத்தில் நீ ஏன் என்னை வஞ்சிக்கிறாய்? உன் வீட்டில் பல மதுபான பாட்டில்கள் இருக்கின்றன. நீ ஏன் என்னை வஞ்சிக்கிறாய்?” என்று கூறினாள்.
31 அவள் மீண்டும் அந்நிய பாஷைகளில் பேசி, அவரை எச்சரிப்பது போல, “என்னை வஞ்சிப்பதை நிறுத்து! என்னை வஞ்சிப்பதை நிறுத்து!” என்று கூறி வியாக்கியானம் செய்தாள். இந்த வார்த்தைகளுக்குப் பிறகு, அவள் அமைதியாகத் திரும்பிச் சென்று அமர்ந்தாள், சபையார் மீண்டும் துதிப்பாடல்களைத் தொடர்ந்தனர்.
32 துதிப்பாடல்களுக்குப் பிறகு, அப்போஸ்தலன் ராவூல் சோடோகின் பிரசங்கிப்பதற்காக வந்தார். சகோதரி அஹுவேஃபாவின் தீர்க்கதரிசனம் இருந்தபோதிலும், அதே சகோதரன் ரோட்ரிக் தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.
33 ஆனால் அவருடைய பிரசங்கத்தின் போது, ஆலிஸ் என்ற பெயருள்ள மற்றொரு சகோதரி பிரசங்கபீடத்திற்கு முன்பாக வந்து தீர்க்கதரிசனம் உரைக்கிறாள். அப்போஸ்தலன் ராவூல் சோடோகின் பிரசங்கத்தை நிறுத்துகிறார். சகோதரி ஆலிஸ், சகோதரி அஹுவேஃபா சொன்னதை உறுதிப்படுத்தி, சகோதரன் ரோட்ரிக்கிற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைக்கிறாள். சகோதரன் ரோட்ரிக் மொழிபெயர்ப்பதை நிறுத்திவிட்டு பிரசங்கபீடத்தை விட்டு வெளியேறுகிறார்.
34 நிச்சயமாக, சகோதரன் ரோட்ரிக் தன் படுக்கையறையில் வீரியமிக்க மதுபான பாட்டில்கள் இருப்பதை ஒப்புக்கொண்டார். ஆனால், இந்த வெளிப்படுதல்களைப் பகுப்பாய்வு செய்த பிறகு, சகோதரி அஹுவேஃபாவின் வெளிப்படுதல் பிசாசிடமிருந்தும், சகோதரி ஆலிஸின் வெளிப்படுதல் தேவனிடமிருந்தும் வந்தது என்று சபையார் முடிவு செய்கிறார்கள்.
35 ஒரு காரியத்தை வெளிப்படுத்தும் முதலாவது தீர்க்கதரிசனம் பிசாசிடமிருந்து வந்ததாகவும், அதே முதலாவது தீர்க்கதரிசனத்தை உறுதிப்படுத்தும் இரண்டாவது தீர்க்கதரிசனம் தேவனிடமிருந்து வந்ததாகவும் எப்படி இருக்க முடியும்?
36 பெனினைச் சேர்ந்த சகோதரர்களைப் பொறுத்தவரை, சகோதரி அஹுவேஃபா தான் பிரச்சனை. பெனினைச் சேர்ந்த அப்போஸ்தலர்கள் தங்கள் கூடுகைகளில் சகோதரி அஹுவேஃபா தீர்க்கதரிசனம் உரைக்காதபடி, அவளுடைய அர்ப்பணிப்பை நிறுத்தும்படி அவளிடம் பலமுறை கேட்டுக்கொண்டார்கள். அவள் தனக்குப் புரிந்துவிட்டதாக அவர்களிடம் கூறுகிறாள், ஆனால் அவள் தனது அர்ப்பணிப்பை நிறுத்துவதில்லை.
37 சகோதரர்களே, மனத்தாழ்மையாக இருப்போம். ஆவிகளைப் பகுத்தறியும் வரம் இல்லாத நிலையில், சுகமளிக்கும் ஆராதனைகளின் போது குறிசொல்லும் ஆவியைத் துரத்துவதற்காக ஜெபிக்கும் உரிமையை தேவன் உனக்குக் கொடுத்தால், அது அனுமதிக்கப்பட்ட சித்தம் என்பதை நீ ஒப்புக்கொள்ள வேண்டும்.
38 மேலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரும் வரை, நீங்கள் உங்கள் தேசத்தை ஆவிக்குரிய வரங்களுக்குள் வழிநடத்தி, இந்தப் பொறுப்பை ஆவிகளைப் பகுத்தறியும் வரத்திற்கு விட்டுவிட வேண்டும்.
39 ஒரு ஆராதனையின் போது சகோதரி கரோல் குறிசொல்லும் பிசாசுகளை வெளிப்படுத்தி துரத்துவதை நீ பார்க்க வேண்டும், அப்போதுதான் இது ஆவிகளைப் பகுத்தறியும் வரத்தின் பணி என்பதை நீ புரிந்துகொள்வாய். குறிசொல்லும் ஆவியிலிருந்து விடுதலை பெறுவதற்காக ஜெப வரிசைக்குச் செல்வது, அது பேராலயத்தில் இருந்தது.
40 இன்று நமக்குத் தேவையானது, ஒரு காட்சியாக நடத்தாமல் குறிசொல்லுதலை மேற்கொள்ள உண்மையான பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஜனங்களே. மேலும் இந்த வல்லமை இந்த நடுராத்திரி சத்தத்தின் செய்தியில் உள்ளது. நமக்குத் தேவையானதெல்லாம் நல்ல அர்ப்பணிப்பின் மூலமான நம்முடைய விருப்பம் மட்டுமே.
41 உண்மையில், பெனினைச் சேர்ந்த சகோதரர்கள் உண்மையான பரிசுத்த ஆவியை விரும்புவதில்லை. அதனால்தான் தேவன் அவர்களுக்கு வெள்ளாட்டுக்கடாவின் ஆவியை அனுப்புகிறார். அவர்கள் மனந்திரும்பினால் தேவன் அவர்களுக்கு ஆட்டுக்கடாவின் ஆவியை அனுப்புவார். இறுதியாக, தேவபயம் அவர்களுக்குள் வாசம்பண்ணும்போது ஆட்டுக்குட்டியானவரின் ஆவியை அனுப்புவார்.
42 தேவன் தம்முடைய பயம் வாசம்பண்ணுகிற இடத்திற்குச் செல்கிறார். 2026 ஜூலை 21 செவ்வாய்க்கிழமை அன்று யாவுண்டேவில், சகோதரி கேரோல் சகோதரன் ஜோசப் சாங்காவை முழங்கால்படியிடும்படி சொன்னபோது, அவர் முழங்கால்படியிட எவ்வாறு விரைந்தார் என்று பாருங்கள். அவள் அவன்மேல் கைகளை வைத்து, அவனிடம்: "யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்!" என்று சொன்னாள்.
43 அஹுவேஃபா போன்ற நபர்களுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்களோ, சகோதரி கரோலுக்கும், வேறு எவருக்கும், உங்களிடம் தேவதூதன் வந்தாலும்கூட நீங்கள் அதையேதான் செய்வீர்கள்.
44 2026 ஜூலை 21 அன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு வியாதியுள்ள சகோதரியை தன்னிடம் அழைத்து வருமாறு சகோதரி கரோல் கேட்டுக் கொண்டார். சபையார் அவ்வாறே செய்தனர், அவள் அந்தச் சகோதரிக்காக ஜெபித்தாள். வியாதியுள்ளவர்களுக்கான ஜெபத்தின் அனைத்து காரியங்களிலும், வியாதியுள்ள நபரின் சுகம் உடனடியாகக் கிடைக்காவிட்டாலும்கூட, சபையாரும் ஜெபித்து விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
45 மேலும் சபையார் எவ்வளவு அதிகமாக ஆயத்தமாகவும் ஆவியிலும் இருக்கிறார்களோ, அவ்வளவு அதிக வல்லமையாக தேவனுடைய வரங்கள் கிரியை செய்யும், தேவனுடைய அற்புதங்களும் அவ்வளவு பெரியதாக இருக்கும். வீடியோவில், 2026 ஜூலை 21 அன்று சகோதரி கரோல் இருந்த அந்த யாவுண்டே சபை, ஆவிக்குரியதாகவும் நன்றாக உபதேசிக்கப்பட்டதாகவும் எனக்குத் தோன்றியது.
46 சகோதரி கரோல் தனக்கு யாரையும் தெரியாத சபைகளுக்குச் செல்கிறார். மேலும் அவள் செல்லும் சபைகள், அவளுடைய அறிவின் வார்த்தைகள் எதுவும் எந்தவொரு வெளிப்படையான பாவஅறிக்கையோடும் தொடர்புடையவை அல்ல என்பதை எனக்கு உறுதிப்படுத்துகின்றன. அவளுக்கு ஒரு குழுவோ அல்லது ஒரு செய்தித் தொடர்பாளரோ இல்லை.
47 அன்றைய தினம், யாவுண்டேவில், அவள் பல அறிவின் வார்த்தைகளைக் கொடுத்து, பல்வேறு காரியங்களுக்காக ஜெபித்தாள். எடிமா என்ற பெயருள்ள ஒரு சகோதரியைத் தவிர, மற்ற அனைவரும் அந்த அறிவின் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொண்டனர். சகோதரி கரோல் கொடுத்த அறிவின் வார்த்தையை ஒருவர் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது இதுவே முதல் முறை.
48 முதலாவதாக, சகோதரி கரோல், சகோதரி எடிமாவின் பாவத்தை வெளிப்படுத்தினாள். பின்பு சகோதரி கரோல் வேறொரு நபருக்குத் தீர்க்கதரிசனம் சொல்லச் சென்றாள். பின்னர், இருதயத்தின் எண்ணங்களைப் பகுத்தறிதலின் மூலமாக, சகோதரி கரோல் மீண்டும் சகோதரி எடிமாவிடம் வந்தாள்; ஏனெனில், சகோதரி எடிமா அந்தத் தீர்க்கதரிசனத்தை நிராகரிக்கத் தன் இருதயத்தில் நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தாள்.
49 சகோதரி கரோல் அவளிடம் உரத்த சத்தமாக: "உன் அவிசுவாசம் என் தலைக்கு ஏறுகிறது! நீ தேவனுடைய கோபாக்கினையைப் பெற விரும்புகிறாயா? மனந்திரும்பு!" என்று கூறினாள்.
50 இருதயத்தின் எண்ணங்களைப் பகுத்தறிதல் என்பது, நீ ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் அதே கணத்தில், அவர் தன் இருதயத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் கேட்கும் திறமையாகும்.
51 அவிசுவாசத்தைப் பற்றிப் பேசுகையில், ஐவரி கோஸ்ட்டில் ஒரு சகோதரிக்கு ஒரு சம்பவம் நடந்தது. அந்த வெளிப்படுதலை ஆராய்ந்து பார்த்தபோது, அவள் அனைத்தையும் மறுத்தாள். ஆனால் அடுத்த ஆராதனையில், அவள் பாவங்களின் ஒரு நீண்ட பட்டியலோடு வந்து, 15 நிமிடங்களுக்கும் மேலாகப் பாவஅறிக்கை செய்து, சகோதர சகோதரிகளுடைய காதுகளைத் தீட்டுப்படுத்தினாள்.
52 பொய்யின் ஆவியினால், ஒருவர் ஒரு தீர்க்கதரிசனத்தையோ அல்லது ஒரு வெளிப்படுதலையோ பொய் என்று தள்ளிவிட்டு, ஆராதனையின் முடிவு வரை தன் நிலைப்பாட்டிலேயே உறுதியாய் இருந்து, பின்னர் உண்மையை ஒப்புக்கொள்ளத் திரும்பி வந்தால், சபை அவருக்காக ஜெபிக்க முடியாது. அவர் சபையின் ஜெபத்தைப் பெறுவதற்கு முன்பாக, ஒரு தீர்க்கதரிசனமே அவரை மன்னிக்க வேண்டும்.
53 மேலும், சகோதரி கரோல் ஒரு தரிசனத்தையோ அல்லது ஒரு சொப்பனத்தையோ வியாக்கியானம் செய்வதற்கு என்னுடைய உதவியை ஒருபோதும் நாடியதில்லை. ஒருநாள், நான் அவளோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவளுக்கு ஒரு தரிசனம் உண்டானது. அந்தத் தரிசனத்தில், தீர்க்கதரிசி அவளுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தார், மேலும் தீர்க்கதரிசிக்கு அருகில் ஒரு வெண்மேகம் இருந்தது.
54 சில நேரங்களில், அந்த மேகம் தீர்க்கதரிசிக்குள் பிரவேசித்து, தீர்க்கதரிசியை விட்டு வெளியே வந்தது. மேகத்தின் இந்தச் செயல் மீண்டும் மீண்டும் நடந்தது, பின்னர் தரிசனம் மறைந்துவிட்டது. அவள் என்னிடம் வியாக்கியானத்தைக் கேட்கவில்லை. நானும் அவளிடம் எதுவும் சொல்லவில்லை.
55 அதன் பிறகு, பல நாட்களுக்கு அவள் எனக்கு எழுதுவதில்லை. ஒரு நாள், நான் அவளிடம் ஒரு கேள்வி கேட்டபோது, அந்தத் தரிசனத்தின் காரணமாகத்தான் அவள் எனக்கு எழுதுவதை நிறுத்திவிட்டாள் என்பதை நான் புரிந்துகொண்டேன். சில சமயங்களில், ஒரு தீர்க்கதரிசி வெறும் மனிதனாக மட்டுமே இருக்கிறார் என்பதையும், சில சமயங்களில், அவர் ஒரு மனிதனுக்குள் இருக்கும் தேவனுடைய தூதனாக இருக்கிறார் என்பதையும் அவள் அறிந்திருந்தாள். மேலும் அவரிடம் பேசும்போது ஒருவர் கவனமாக இருக்க வேண்டும்.
56 அவளுக்கு அடிக்கடி, நிலையான முறையில் வியாக்கியானம் செய்ய முடியாத சிக்கலான சொப்பனங்கள் வருகின்றன; ஆனால் அவை அனைத்தையும் வரங்களின் முறையால் அவள் வியாக்கியானம் செய்கிறாள். இது தேவனுடைய பூரண சித்தத்தில் நடப்பதற்கு இன்றியமையாதது.
57 உதாரணமாக, தீர்க்கதரிசி ஆப்பிரிக்க பேரிக்காய் மரம் என்று அழைக்கப்படும் ஒரு மரத்தின் கீழ் தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருப்பதை அவள் ஒரு சொப்பனத்தில் கண்டாள். மேலும் மூன்று மதவாதிகள் அந்த மரத்தின் மீது வந்து இறங்க முயன்ற எந்தப் பறவையின் மீதும் கற்களை எறிந்து கொண்டிருந்தனர். எனவே அவள் மறைந்திருந்து, தீர்க்கதரிசியிடம் சென்று அவருக்கு முன்பாகத் தாழ்ந்து வணங்கினாள்.
58 தீர்க்கதரிசி அவளிடம் எழுந்து சென்று, மகதலேனாவிடம் கொஞ்சம் எண்ணெய் வாங்கிவரும்படி கூறினார். அவள் தீர்க்கதரிசியிடம்: "மகதலேனா எங்கே இருக்கிறார்?" என்று கேட்டாள். தீர்க்கதரிசி அவளிடம்: "மகதலேனா சமையலறையில் இருக்கிறார்" என்று பதிலளித்தார். அவள் இந்தச் சொப்பனத்தின் ஒவ்வொரு விவரத்தையும் வியாக்கியானம் செய்தாள்; நான் ஆச்சரியமடைந்தேன்.
59 அவள் வியாக்கியானம் செய்து, "சகோதரர் பிலிப்பே, உமது தோற்றத்தைக் கொண்டிருந்தவரும், ஆப்பிரிக்க பேரிக்காய் மரத்தின் கீழ் அமர்ந்து அழுதுகொண்டிருந்தவரும், நான் யாருக்கு முன்பாகத் தாழ்ந்து வணங்கினேனோ அவர் நீங்கள் அல்ல. அவரே கர்த்தர்; அவரே தூதனும் ஆட்டுக்குட்டியுமானவர். உங்களிடமிருந்து எண்ணெய் வாங்கிவரும்படி அவரே என்னிடம் கூறினார். மகதலேனா என்பது மகதலேனா மரியாள்; அது நீங்கள்தான்.
60 மேலும் அந்த மூன்று மதத் தலைவர்களும் பிரசங்க பீடத்திற்குப் பின்னால் நிற்கும் சகோதரர்கள், வெளிப்படையான பாவஅறிக்கையின் தலைவர்களும்கூட. கற்கள் என்பது அவர்களுடைய வார்த்தைகளும், ஆலோசனைகளும், பிரசங்கங்களுமே ஆகும். அவர்கள் ஆவிக்குரிய வரங்களின் எதிரிகளாயிருக்கிறார்கள்; இதனால்தான் கர்த்தர் அழுதுகொண்டிருக்கிறார்" என்று கூறினாள்.
61 2026 ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமையன்று, சகோதரி கரோல் அட்லாண்டிக் பெருங்கடலின் கரையில், மிகத் தொலைவில் உள்ள கிரிபி நகரில் இருக்கும் சோகாப்பாம் சபையில் இருந்தார். அவள் தீர்க்கதரிசனம் உரைத்து, பொறுப்புகளை ஏற்படுத்தி, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதற்காகக் கரங்களை வைத்தாள்.
62 அவள் அப்போதுதானே நியமித்த போதகரும், பிரசங்க பீடத்திலிருந்த பாடகரும் உட்படச் சில மனிதர்கள் தேவனுடைய பிரசன்னத்தின் காரணமாக அழுது கொண்டிருந்தனர். எல்லாரும் அறிவுணர்த்தும் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டனர். சகோதரி கரோலின் காரியம் இவ்விதமாகவே இருக்கிறது.
63 மேலும், ஒரு தீர்க்கதரிசி அல்லது தீர்க்கதரிசனம் சொல்பவர் தான் தீர்க்கதரிசனம் உரைத்த நபருக்காக அல்லது ஜனங்களுக்காகப் பரிந்து பேச வேண்டும். அவர் விரும்ப வேண்டியது பாவியின் மனந்திரும்புதலையே. வேதாகமத்தில் உள்ள யோனாவைப் போல, இது பல தீர்க்கதரிசிகளுக்கு ஒரு குறைபாடாக இருக்கிறது.
64 மேலும், ஆவிக்குரிய வெளிப்படுதல்களின் காணொளிகள் மூலம், ஒரு சபையில் ஆவிக்குரிய வரங்கள் இல்லை என்றால், அந்தச் சபையில் தேவன் இல்லை என்பதை நான் புரிந்துகொண்டேன். ஆவிக்குரிய வரங்கள் இல்லாத எந்தச் சபையையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். எந்தத் தோற்றத்தையும் நம்பாதீர்கள்.
65 நான் பெறுகிற தீர்க்கதரிசனங்களின் காணொளிகளை நீங்கள் பார்த்தால், ஒருவேளை நீங்கள் ஒரு சபைக்குத் தசமபாகம் செலுத்துவதை நிறுத்திவிடுவீர்கள். நான் உங்களுக்குத் தரும் தீர்வு என்னவென்றால், உங்கள் சபைகளில் ஆவிக்குரிய வரங்கள் இருக்க வேண்டும் என்பதே. இதில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாதீர்கள்.
66 கேமரூனில் உள்ள பாஃபுஸாம் சபையில் நடந்த ஒரு வெளிப்படுதலின் காணொளியை நான் பார்த்தேன். மேரிலிஸ் என்ற பெயர் கொண்ட ஒரு சகோதரி ஏழு நிமிடங்கள், கற்பனை செய்யக் கடினமான காரியங்களை வல்லமையோடு தீர்க்கதரிசனமாக உரைத்தாள்.
67 உதாரணமாக, அவள் ஒரு முன்னாள் பிரசங்கியாரிடம்: "நீ உன்னுடைய ஜீவியத்தின் மூலமாகச் சபையைச் சபித்திருக்கிறாய், அதை நீ அறிக்கையிடவில்லை. நீ பாலியல் பிசாசுகளால் நிறைந்திருக்கிறாய்! நீ சுய புணர்ச்சி செய்து, உன்னுடைய விந்தை உன்னுடைய மனைவியின் மேல் சிந்துகிறாய், அதை நீ அறிக்கையிடவில்லை. நீ பாலியல் பிசாசுகளையும் சாபங்களையும் சபையின் மீது பரப்பியிருக்கிறாய்!
68 செய்தியின் எதிரிகளாக நடக்கும் நீங்கள் அனைவரும் தண்டனைகளை அடைவீர்கள்! நானோ, காக்குவ் பிலிப்புவின் தேவன், இதை உங்களுக்குச் சொல்கிறேன்!”
69 ஆராய்ந்து பார்த்ததில், அந்தப் பிரசங்கியார் உட்பட அனைவரும் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் அனைத்தும் உண்மை என்பதை ஏற்றுக்கொண்டனர். மேலும் சகோதரி மேரிலிஸ் தான் தீர்க்கதரிசனம் உரைத்ததை நினைவில் வைத்திருக்கவில்லை. தான் செய்தவை அனைத்தையும் ஆச்சரியத்துடன் அவள் அந்த காணொளியில்தான் கண்டறிந்தாள்.
70 மற்றொரு ஆராதனையில், உதவிப் போதகர் பிரசங்க பீடத்தில் இருந்தார், போதகர் பிரசங்க பீடத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது சகோதரி மேரிலிஸ் எழுந்து, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்தபடியே அவர்களை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
71 அவள் கூறினாள்: "நீங்கள் இருவரும் ஏமாற்றுக்காரர்கள்! நீங்கள் சகோதரர்களிடமிருந்தும் சகோதரிகளிடமிருந்தும் பணம் கடனாக வாங்குகிறீர்கள், ஆனால் நீங்கள் அவர்களை ஏமாற்றுகிறீர்கள் என்றும், அதை ஒருபோதும் திரும்பச் செலுத்த மாட்டீர்கள் என்றும் உங்கள் இருதயங்களில் அறிந்திருக்கிறீர்கள். உங்கள் நிமித்தமே ஜனங்கள் குளிரடைந்தும் சிதறடிக்கப்பட்டும் இருக்கிறார்கள்! நீங்கள் செய்யும் எல்லாத் தீமைக்கும் விலை செலுத்துவீர்கள்!”
72 அந்த இருவருக்கும் பிறகு, அவள் சபையாரை நோக்கி திரும்பி: "ஜனங்களாகிய நீங்களோ, உங்களுக்குள் அன்போ நம்பிக்கையோ இல்லை. மாயக்காரர்களைத் தவிர நீங்கள் வேறொன்றுமில்லை. நீங்கள் ஒருவருக்கொருவர் உண்மையைச் சொல்ல மறுத்து, புறஜாதியாருடனும் உங்கள் மாம்சீக குடும்பங்களுடனும் உங்கள் காரியங்களை நடத்த விரும்புகிறீர்கள். இது சாதாரணமானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்கிறாள்.
73 போதகரும் அவருடைய உதவிப் போதகரும் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, அவர்கள் முழங்கால்படிந்தனர். ஜனங்களில் சிலரும் முழங்கால்படியிட்டனர். அவள் 5 நிமிடங்களுக்கும் மேலாகத் தீர்க்கதரிசனம் உரைத்தாள். ஒரு தரிசனம் அவளுடைய தீர்க்கதரிசனத்தை உறுதிப்படுத்தியது. தீர்க்கதரிசனத்தின் காணொளியைப் பார்த்த பிறகு, போதகர் ஏன் இவ்வளவு தீமை செய்தார் என்பதைக் கேட்க நான் அவருக்கு இன்பாக்ஸில் எழுதினேன்.
74 அவர் குளிர்ந்துபோன குரலில் எனக்குப் பதிலளித்தார்: "ஆம் சகோதரன் பிலிப்பு, நாங்கள் எல்லா விதத்திலும் குற்றவாளிகளாய் இருக்கிறோம். தேவனுடைய இரக்கத்தை மட்டுமே நாங்கள் கெஞ்சி மன்றாடுகிறோம்!" என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. மிகவும் ஆச்சரியமான காரியம் என்னவென்றால், சொப்பனங்களின் மூலமாகவே அவர்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தார்கள்.
75 2026 ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமையன்று, பாஃபுஸாமில் வெளிப்படையான பாவஅறிக்கையின் நேரத்தில், சகோதரி மேரிலிஸ் அபிஷேகத்தால் நிறைந்தவளாக எழுந்து, பிரசங்க பீடத்திற்கு முன்பாகப் போய் நின்று, வெளிப்படையான பாவஅறிக்கையை வழிநடத்தினாள்.
76 வெளிப்படையான பாவஅறிக்கை முழுவதும், அவள் அறிவின் வார்த்தைகளைக் கொடுத்தாள். அது சபையைச் சுத்திகரிப்பது போல் இருந்தது. அனைவரும் அந்த அறிவின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டனர். வெளிப்படையான பாவஅறிக்கையின் முடிவில், ஆராதனையைத் தொடர்வதற்கு அவள் ஒரு சகோதரனை நியமித்தாள்.
77 பிரசங்க பீடத்தில் ஒரு பொறுப்பை நிறைவேற்றுவதற்காகப் பரிசுத்த ஆவியானவரால் ஆட்கொள்ளப்படுகிறவர் அல்லது நியமிக்கப்படுகிறவர் Kc.159:104-ஐப் பிரயோகிக்காமல் சென்று அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
78 அதை ஆராய்ந்து பார்த்தபோது, அந்த வெளிப்படுதல் பரிசுத்த ஆவியானவரிடமிருந்தே வந்தது என்று சபை முடிவெடுத்தது; ஆனால் நான் சரிபார்த்தபோது, அவர்களுடைய சொப்பனங்களில் ஒன்றுகூட அதைச் சொல்லியிருக்கவில்லை. குறிசொல்லும் ஆவியின் மூலம் தேவன் இப்படிப்பட்ட செயலை அனுமதிக்கக் கூடும், ஆனால் உண்மையான பரிசுத்த ஆவியானவராலே உண்டாகும் ஆவிகளைப் பகுத்தறியும் வரத்தினாலே அதைத் தடுக்க முடியும்.
79 வெளிப்படையான பாவஅறிக்கையை வழிநடத்துவது அதிகாரமுள்ள ஒரு பொறுப்பாகும். தேவன் ஒரு மனிதன் மூலமாகவே தீர்க்கதரிசினியாகிய தெபொராவுக்கு ஆண்களை வழிநடத்துவதற்கான அதிகாரத்தைக் கொடுத்திருந்தார்.
80 தெபோராவும் பிலடெல்பியாவைச் சேர்ந்த அம்மியாவும் பெண் தீர்க்கதரிசனத்தின் இரண்டு முன்னணி ஆளுமைகளாவர். அவர்கள் ஆண்கள் மீது அதிகாரம் செலுத்தியிருக்கவில்லை. பரிசுத்த ஆவியானவர் வார்த்தையைக் கைக்கொள்கிறவராவர்.
81 நல்லது. நான் இப்போது சகோதரி மேரி ரோஸைப் பற்றிப் பேச வருகிறேன். தேவன் தம்முடைய ஊழியக்காரர்களாகிய ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே உண்மையுள்ளவரும் இரக்கமுள்ளவருமாய் இருக்கிறார். மேலும், தாம் பயன்படுத்திய ஒரு நபரை அவர் கைவிடுவதில்லை.
82 2026 ஜூலை 12 காலையில், சகோதரி மேரி ரோஸ் அறிக்கை செய்யப் போகும்போது, Kc.180-ன் படி அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்கப்படக்கூடாது என்று கேமரூனுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு தேவதூதன் என்னைக் கேட்டுக்கொண்டார். நான் ஒரு குறிப்பை எழுதினேன்; அவள் அறிக்கை செய்து, எந்தக் கேள்வியும் இன்றி ஜெபத்தைப் பெற்றுக்கொண்டாள்.
83 இருப்பினும், அவளைப் பற்றிய விஷயத்தில் தவறிழைக்க நான் விரும்பாததால், 2026 ஜூன் 27-ல் அவளுக்கு உண்டான அனுபவத்திற்குப் பிறகும், இன்னும் பரிசுத்த ஆவியானவர்தான் அவளைப் பயன்படுத்துகிறார் என்று தேவதூதன் எனக்குச் சொல்வதற்காக நான் காத்திருந்தேன். அந்த அனுபவத்திற்குப் பிறகு, அவள் தனக்கென்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு வாழச் சென்றபோது, தன் வெளிப்பாடுகள் குழப்பமடைந்து வருவதாக அவள் என்னிடம் சொல்லியிருந்தாள்.
84 மேலும் 2026 ஜூலை 3 அன்று, சகோதரி ரோசின் ஸ்டெல்லாவின் நிச்சயதார்த்தத்தில், அவளுடைய வெளிப்படுதலால் உண்டான குழப்பம் மிகவும் பெரிதாகவும் நீண்ட நேரமாகவும் இருந்ததால், நிச்சயதார்த்த ஆசீர்வாதம் பிறிதொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
85 அதற்குப் பிறகு, அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று. ஒரு சுவிசேஷக சபையின் மேடையில் ஒரு பெண் ஒரு ஆணோடு நடனமாடுவதை நான் கண்டேன். அந்த மனிதன் ஒரு பொருளைக் கையில் பிடித்துக் கொண்டு அதை வான்நோக்கி அசைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய கையிலிருந்த அப்பொருள் சில நேரங்களில் காணிக்கைக் கூடையாகவும், சில நேரங்களில் ஒரு வெற்றிக்கோப்பையாகவும் இருப்பதை நான் கண்டேன். பின்பு அந்தத் தரிசனம் மறைந்துபோயிற்று. உடனடியாக நான் அந்தத் தரிசனத்தை சகோதரி மேரி ரோஸுக்கு அனுப்பினேன், ஆனால் அவள் மௌனமாகவே இருந்தாள்.
86 மேலும் 2026 ஜூலை 20 திங்கட்கிழமையன்று, சகோதரி மேரி ரோஸ் கேமரூனின் அப்போஸ்தலர்கள், போதகர்கள் மற்றும் பிரசங்கிகளை ஒன்றுகூட்டி அவர்களிடம் பேசினாள். தீர்க்கதரிசன வரமானது ஒரு தீர்க்கதரிசியின் ஊழியமல்ல, அது அதைச் செய்யவும் முடியாது. தீர்க்கதரிசனம் உரைக்கிற நபர் "ஏவப்பட்டவர்" என்று அழைக்கப்படுகிறார். அவரை "தீர்க்கதரிசனம் உரைப்பவர்" என்று அழைப்பது நான்தான்.
87 தீர்க்கதரிசனம் உரைப்பவரின் அதிகாரம் அவரது தீர்க்கதரிசனத்தின் தருணத்தில் தான் உள்ளது. மேலும், தீர்க்கதரிசனம் உரைப்பவர் தனது தீர்க்கதரிசனத்தைக் காவல் காப்பதில்லை, அதன் நிறைவேற்றத்தைக் கவனிப்பதுமில்லை.
88 தீர்க்கதரிசனம் உரைப்பவர் ஒரு பணியை முடிக்கும்போது, அவர் ஓடிப்போய்விடுகிறார். 2 இராஜாக்கள் 9-ன் உதாரணம் மிகவும் தெளிவாக உள்ளது. மேலும் நீங்கள் ஓடிப்போகவில்லையென்றால், தேவன் உங்களை அவமானப்படுத்தக்கூடும்.
89 தீர்க்கதரிசனத்தினால் நியமிக்கப்பட்ட ஊழியனாகிய உன்னைப் பொறுத்தவரை, உன்னுடைய முழுமுதலானது தீர்க்கதரிசியோ அல்லது தீர்க்கதரிசனம் உரைப்பவரோ அல்ல, தீர்க்கதரிசனத்தின் ஆவியே ஆகும். அப்போஸ்தலர் 13:2-ல் தனது ஊழியத்தைத் தீர்க்கதரிசனமாக உரைத்த சகோதரனையோ சகோதரியையோ பவுல் ஒருபோதும் குறிப்பிடவில்லை. தீர்க்கதரிசனம் உரைப்பவர் என்பவர் உனது நியமனக் கடிதத்தை உன்னிடம் ஒப்படைத்த தபால்காரர் மட்டுமே. அவரிடம் உனக்கு எந்தக் கடமையும் இல்லை.
90 மேலும் 2026 ஜூலை 20 அன்று நடந்த அந்தக்கூட்டத்தில், சகோதரி மேரி ரோஸ் கேமரூனுக்கான சட்டங்களையும் தீர்மானங்களையும் தீர்க்கதரிசனமாக உரைத்தாள்.
91 மேலும் அவள் தனது சொந்த எண்ணங்களை வெளிப்படுத்த விரும்பும்போது, ஒரு தீர்க்கதரிசனத்தைப் போல் பாசாங்கு செய்கிறாள். அறியாமையினாலும் தேவனைப் பற்றிய தவறான பயத்தினாலும் அப்போஸ்தலர்களும், போதகர்களும், பிரசங்கிகளும் முழங்கால்படியிடுகிறார்கள்.
92 உதாரணமாக, தீர்க்கதரிசனத்தினால் நியமிக்கப்படாத அனைவரும் ஊழியக்களத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அவள் கூறுகிறாள்.
93 நாட்டில் உள்ள அனைத்து ரேடியோ மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாக அவள் அறிவித்து, அது தொடர்பான அனைத்துச் செலவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தாள். சரிதான், ஆனால் ஒருவருடன் ஒரே முகாமில் இருக்கும்போது, அவருடைய வெளிப்பாடு ஒரு காரியத்தைச் செய்யும்படி அவருக்குச் சொல்லும்போது, அதைச் செய்யவேண்டாம் என்று உனது தீர்க்கதரிசனம் அவருக்குச் சொல்ல முடியாது.
94 ஒரு முழு தேசத்திற்கும் சட்டங்களை இயற்றுவது தீர்க்கதரிசன வரத்தின் செயல்பாட்டிற்கு உட்பட்டது அல்ல. தீர்க்கதரிசன வரமானது ஒரு முகாமில் இருக்கிறது; மேலும் 2 நாளாகமம் 20:13 முதல் 18 வரை யோசபாத் ராஜாவிற்கு முன்பாக நடந்தது போல, தேசத்தின் அனைத்துத் தலைவர்களும் ஒரே இடத்தில் அவருடன் கூடியிருந்தாலொழிய, அது ஒரு முழு தேசத்திற்காகப் பேச முடியாது.
95 ஒரு தீர்க்கதரிசன வரம் ஒரு சட்டத்தை உருவாக்காமலேயே ஒரு தேசத்தில் உள்ள ஒரு தீமையை எதிர்த்துப் போராட முடியும். உதாரணமாக: தசமபாகங்கள் சபையால் உணவளிக்கப்படும் பூனைகளுக்கானவை அல்ல என்று சொல்வது சரியானது. சபையால் உணவளிக்கப்படும் பூனைகள் குறிசொல்லும் பிசாசுகளின் நுழைவாயில்களாக இருக்கின்றன.
96 ஒரு தனிநபருக்கான தேவனுடைய வெளிப்பாடு ஒரு சொப்பனம் அல்லது தரிசனத்தின் மூலம் அந்தத் தனிநபருக்கு வருகிறது. ஒரு சபைக்குரிய வெளிப்பாடு தீர்க்கதரிசனங்கள் மூலம் வருகிறது. ஒரு தேசத்திற்குரிய வெளிப்பாடு எபேசியர் 4-ன் மூலம் வருகிறது. மேலும் முழு பூமிக்குமான வெளிப்பாடு ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் மூலம் வருகிறது.
97 எனவே, ஒரு தீர்க்கதரிசனம் ஒரு நாட்டின் குழுவில் பதிவிடப்படும்போது, அது அனைத்து தீர்க்கதரிசனங்களுக்குமான உரிமையாகிவிடாது. அது பல நாடுகளை உள்ளடக்கிய குழுக்களில் பதிவிடப்பட்ட எபேசியர் 4-ன் பிரசங்கங்களைப் போன்றது. ஒரு கிருபையானது உரிமையாக மாற்றப்படக்கூடாது.
98 2026 ஜூலை 21 அன்று, சகோதரி மேரி ரோஸ் ஒரு குழுவுடன் கேமரூனில் ஒரு பயணத்தைத் தொடங்கினாள். ஜூலை 24, 2026 அன்று பிடெம்-யென்னில் நடைபெற்ற ஆராதனையின்போது, வெளிப்படையான பாவஅறிக்கையை வழிநடத்த யாராவது பாத்திரவானாக இருக்கிறார்களா என்று கேட்கப்பட்டபோது, அந்தப் பாத்திரத்தை வகிக்க ஏற்கனவே தன்னை ஆயத்தப்படுத்தியிருந்த அவள், எழுந்து சென்று பிரசங்கபீடத்தின் முன் நின்று, ஒரு சகோதரனைப் போல மிகச்சாதாரணமாக வெளிப்படையான பாவஅறிக்கையை வழிநடத்தினாள். இது பிசாசின் ஒரு செயல். காக்குவ் 159:104-ன் படி அவள் தன்னை முன்மொழியவில்லை என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்.
99 மேலும் வெளிப்படையான பாவஅறிக்கையை வழிநடத்திய பிறகு, அவள் பிரசங்கம் பண்ணும்படி தனது சீஷனாகிய டிடியர் மிங்காவை நியமித்து, அவருடைய பிரசங்கத்திற்கான தலைப்பையும் அவருக்குக் கொடுத்தாள். அதற்கு முந்தைய இரவில், இரவின் தீட்டுக்களோடு முடிந்த ஒரு சொப்பனம் அவரை எச்சரித்திருந்தபோதிலும், அவளுடைய சீஷனாகிய டிடியர் மிங்கா அவ்வாறே செய்தார்.
100 மேலும் அவளுடைய வெளிப்படுதல்களையும் அவள் செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்தபோது, இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் ஆராதனையின் போது சாத்தானிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த தரிசனங்களை அளித்தனர்.
101 முதலாவது தரிசனத்தில், பரதீசு பூமியின்மேல் இறங்கிவந்திருந்தது. இரண்டாவது தரிசனத்தில், ஒரு பெரிய வெளிச்சம் அவர்களுடைய ஆலயத்தை நிரப்பியிருந்தது. மூன்றாவது தரிசனத்தில், ஒரு தூதன் ஆலயத்தின் வரிசைகளுக்கு இடையே நடந்துகொண்டிருந்தான். நீங்கள் வார்த்தையை நிராகரிக்கும்போது, உங்களை வஞ்சிப்பதற்கான உரிமையை சாத்தான் உடனடியாகப் பெறுகிறான்.
102 மேலும், கேமரூனின் இரண்டு பொதுக் காரியதரிசிகளில் ஒருவர் 2026 ஜூலை 20 அன்று அவளிடம் திருமண விருப்பத்தை முன்மொழிந்தார், அவளும் அதை ஏற்றுக்கொண்டாள். 2026 ஜூலை 28 அன்று பொனிஸ் சபையில் அவள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, மோசமான ஒன்று நடப்பதற்கு முன்பாகவே அவர்களுடைய பயணத்தை நிறுத்தும்படி ஜூலை 29 அன்று நான் அவளிடம் கேட்டேன், ஆனால் அவளும் அவளுடைய குழுவும் மறுத்துவிட்டனர். நான் வற்புறுத்தவில்லை.
103 ஆணுக்காகவே தேவன் பெண்ணை சிருஷ்டித்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது. மேலும் தீர்க்கதரிசி செய்தியாளனுக்காகவே தேவன் சிறிய தீர்க்கதரிசிகளையும், தீர்க்கதரிசினிகளையும், எபேசியர் 4-ன் ஊழியங்களையும், ஆவிக்குரிய வரங்களையும் உருவாக்கினார்; ஏனெனில் முழு மனுக்குலத்திற்கும் அவர் தனியாக இருப்பது நல்லது அல்ல.
104 இந்த ஊழியங்களும் ஆவிக்குரிய வரங்களும் தீர்க்கதரிசி செய்தியாளரின் ஆவியினுடைய ஆவியாய் இருக்கின்றன. மேலும் தீர்க்கதரிசி செய்தியாளரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாத ஒரு சிறிய தீர்க்கதரிசி அல்லது தீர்க்கதரிசனம் உரைப்பவன் நிச்சயமாகவே சாத்தானின் கைகளில் இருக்கிறான்.
105 ஒருவன் தீர்க்கதரிசியாகவோ அல்லது உத்வேகம் பெற்றவனாகவோ இருந்தால், தன்னைக் குறித்தான தனது தீர்க்கதரிசி செய்தியாளனின் எண்ணமும்கூட தனக்கான "கர்த்தர் உரைக்கிறது இதுவே" என்பதாகும் என்று அவன் அறிந்திருக்க வேண்டும்.
106 தேவன் எனக்குக் கொடுத்தவர்களோ, ஒரு மேசியாவோ அல்லது ஒரு ஒளியின் தூதனோ அவர்களுக்குத் தோன்றினாலும்கூட எனக்கு உண்மையுள்ளவர்களாகவே நிலைத்திருப்பார்கள். யோவான் ஸ்நானகனின் சீஷர்கள் அவனுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அவனுடைய மரணத்திற்குப் பிறகு, அவனுடைய உண்மையுள்ள சீஷர்கள் அவனுடைய சரீரத்தை எடுத்துக்கொண்டு போய் அடக்கம் பண்ணினார்கள். அதற்குப் பின்பு, அவர்கள் கர்த்தராகிய இயேசுவினிடத்திற்குப் போனார்கள்.
107 2026 ஜூலை 29 அன்று, பயணத்தைத் தொடருவதற்கான இந்த தீர்மானத்தின் பின்னணியிலுள்ள வெளிப்பாடு அல்லது தீர்க்கதரிசனத்தை நான் அறிய விரும்பினேன். தேவன் ஒரு உள்ளுணர்வின் மூலமாகவே தமக்கு அதைச் சொன்னார் என்று அப்போஸ்தலன் டிடியர் மிங்கா மூலமாக அவள் எனக்குப் பதிலளித்தாள்.
108 என்னுடைய வேண்டுகோளின்படி, அப்போஸ்தலன் டிடியர் மிங்கா, அவர்களுடைய பயணத்தின்போது 2026 ஜூலை 26 முதல் 29 வரை தான் கண்ட மூன்று கனவுகளைப் பற்றி எனக்குக் கூறினார்.
109 முதல் கனவில், அவர் பூமிக்குக் கீழே உள்ள வேறொரு உலகில் இருந்தார். மேலே இருந்த ஒரு மனிதன் ஒரு ஏணியின் உதவியால் அவரை மேலே இழுத்தான், யாரோ ஒருவன் அவர் வெளியே வருவதைத் தடுத்த போதிலும், அவர் பூமிக்குத் திரும்பி வந்தார்.
110 இரண்டாவது கனவில், ஒரு பெரிய வெள்ளைக் கம்பளிப்பூச்சி அவருடைய தொடையின் வழியாக, கால்சட்டைக்குக் கீழே, அவருடைய உடலுக்குள் வலுக்கட்டாயமாக நுழைவதைக் கண்டார். அந்தக் கம்பளிப்பூச்சி பல நாட்களாகவே தன் உடலுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து கொண்டிருந்தும் தனக்குத் தெரியவில்லையே என்று அவர் ஆச்சரியப்பட்டார்.
111 Kc.180 மற்றும் யோவேல் 2:25 ஆகியவை இருந்தபோதிலும், தன் கால்சட்டைக்குக் கீழே இருந்த அந்த வெள்ளைக் கம்பளிப்பூச்சி ஆவிக்குரிய வெளிப்படுதலிலுள்ள ஒரு குறிசொல்லும் ஆவி என்பதை அப்போஸ்தலன் டிடியர் மிங்கா அறிந்திருக்கவில்லை.
112 தீமை என்னவென்றால், அந்தக் கம்பளிப்பூச்சி அவருக்குள் நுழைந்துவிட்டால், 2026 ஜூலை 24 அன்று பிடெம்-யெனில் கண்ட மூன்று தரிசனங்களைப் போலவே, அவருடைய சொப்பனங்கள் சகோதரி மேரி ரோஸின் தீர்க்கதரிசனங்களையும் வெளிப்படுதல்களையும் உறுதிப்படுத்தும் விதமாக வேறு திசையில் திரும்பிவிடும். மேலும் அந்தக் கம்பளிப்பூச்சியை அவர் உடலிலிருந்து வெளியேற்றுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருக்கும்.
113 மூன்றாவது சொப்பனத்தில், குறிசொல்லும் ஆவியைக் கொண்ட ஒரு சகோதரியை அவர் கண்டார். அந்த சகோதரி ஒரு சிறிய, அழுக்கான ஆற்றில் குதித்தாள். சகோதரர்கள் சிலர் அவளைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்தார்கள், ஆனால் அவர்கள் அந்த சகோதரியோடு சேர்ந்து மூழ்கிக்கொண்டிருந்தார்கள்.
114 சொப்பனத்தின் முடிவில், அவர்கள் அந்தச் சகோதரியோடு சேர்த்து காப்பாற்றப்பட்டிருந்தனர்; ஆனால் சகோதரர்களில் ஒருவருடைய உயிர் ஆபத்தான நிலையில் இருந்தது, ஏனெனில் அவர் அதிக தண்ணீரை விழுங்கியதால் மயக்கமடைந்திருந்தார். மேலும் அந்த ஆறு வற்றிப்போயிருந்ததை அவர் கண்டார்.
115 நான்காவது சொப்பனத்தில், சகோதரி அஹுவேஃபா விஷயத்தில் எனக்குச் செவிகொடாத அப்போஸ்தலன் ஜேக்கப் அஹூட்ஜி அவருக்குத் தோன்றி, "தொடர்ந்து செல்லுங்கள்! நிறுத்தாதீர்கள்!" என்று சொன்னார். காலையில் அவர் விழித்தெழுந்தபோது, மற்றவர்களைத் திடப்படுத்தி, எனக்குக் கீழ்ப்படியாமல் இருக்கும் பொருட்டு, யோகாடூமா நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஒரு தீர்க்கதரிசி உங்களை நிறுத்தச் சொன்னால், முன்னேறிச் செல்லச் சொல்வது ஒரு அப்போஸ்தலனா?
116 உங்கள் சொப்பனங்களே உங்களைப் பாதுகாக்க வேண்டும்; அதனால்தான் ஆவிக்குரிய வரங்களின் பரிமாணத்திற்கு முன்பாக Kc.155 மற்றும் Kc.156 வந்தன, ஆனால் நீங்கள் அதைத் தவறவிட்டுவிட்டீர்கள். வேறு காரியங்களைப் பின்பற்றுவதற்காக உங்கள் சொப்பனங்களை ஒதுக்கிவைக்கும் வரை, நீங்கள் எப்போதும் சாத்தானுக்கு அடிமைகளாகவே இருப்பீர்கள். மேலும் நீங்கள் சாத்தானை சேவிப்பீர்கள், கடைசி நியாயத்தீர்ப்பில் உங்களுக்கான தண்டனை இரக்கமற்றதாக இருக்கும்.
117 சொப்பனங்கள் மற்றும் தரிசனங்களின் பரிமாணத்தில் நீங்கள் மோசமான மாணவர்களாக இருந்திருக்கிறீர்கள். இன்று, அதன் விளைவுகளை நீங்கள் அனுபவிக்கிறீர்கள். நீங்கள் வலுப்படுத்தும் அல்லது ஆழ்நிலை வகுப்புகளில் இருக்க வேண்டிய நிலையில், உங்களுக்கு ஈடுசெய்யும் வகுப்புகளோ அல்லது தனிப்பயிற்சியோ தேவையாக இருக்கிறது.
118 மேலும் அடுத்தநாள் 2026 ஜூலை 30 மாலை வரையிலும், சகோதரி மேரி ரோஸும் அவருடைய குழுவினரும் தங்கள் பயணத்தை நிறுத்தவில்லை. பிரெஞ்சு மொழி பேசும் குழுவில் அவர்களை நிறுத்தும்படி கூறி நான் ஒரு குறிப்பை அனுப்பினேன், அவர்களும் நிறுத்தினார்கள். என்னுடைய குறிப்பைத் தொடர்ந்து, அவர் பிரெஞ்சு மொழி பேசும் குழுவில் மன்னிப்பு கேட்டார்.
119 உடனே, கேமரூன் குழுவில் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது; ஆனால் அவர் மன்னிப்பு கேட்பதோடு நிறுத்திக்கொண்டு, எதுவும் பேசவில்லை. யாரும் வற்புறுத்தவுமில்லை. புரிந்துகொள்வதற்காக விளக்கம் கேட்பது சாத்தியமானதுதான், ஆனால் வற்புறுத்தாமல் இருப்பதில் சகோதரர்களின் கட்டுப்பாடு ஞானமுள்ளதாகும்.
120 ஒரு குறிப்பிட்ட நிலை வரை கர்த்தர் பயன்படுத்தியவர்களுக்கு இது கர்த்தருடைய கட்டளை. அவர்களைக் குற்ற உணர்வு கொள்ளச் செய்யும் பொருட்டு நாம் அவர்களிடம் கேள்வி கேட்கவோ, அவர்கள் அறிக்கையிட்டால் தண்டனைகள் கொடுக்கவோ கூடாது. நாம் அவர்களுக்காக வெறுமனே ஜெபிக்கிறோம். சகோதரி மேரி ரோஸின் விஷயமும் அப்படித்தான்.
121 அப்போஸ்தலன் டிடியர் மிங்காவின் சொப்பனத்திலிருந்த சிறிய ஆற்றைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வெளிப்படுதலும் அல்லது தீர்க்கதரிசனமும் அதைக் கேட்பவர்களை அல்லது குடிப்பவர்களை குணப்படுத்தவோ அல்லது விஷமாக்கவோ கூடிய தண்ணீரைப் போன்றது. மேலும் இந்த வெளிப்படுதல்களைப் பகுப்பாய்வு செய்கிறவர்கள், தங்கள் ஆய்வகங்களில் தண்ணீரைப் பகுப்பாய்வு செய்யும் வேதியியலாளர்களைப் போல இருக்கிறார்கள்.
122 இங்கே ஐவரி கோஸ்டில், தண்ணீர் பகுப்பாய்விற்குப் பொறுப்பான தேசிய நிறுவனத்தில் வேதியியலாளராக இருக்கும் ஒரு சகோதரன் நமக்கு இருக்கிறார். ஒரு தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது இந்த நிறுவனம்தான்.
123 வேதியியலாளரான இந்தச் சகோதரர் காது கொஞ்சம் மந்தமானவர், பார்வை குறைபாடு உடையவர். அவருக்கு பேச்சுத் தடையும் உள்ளது, மேலும் தண்ணீர் பகுப்பாய்விற்காக அவர் தனது ஆய்வகத்தில் பயன்படுத்தும் உபகரணங்கள் மிகவும் பயனுள்ளவை. அந்தச் சகோதரரின் பெயர் கூவ்கா (Kouka), இது காக்குவ் (Kacou) என்பதன் தலைகீழ் வடிவமாகும். Kc.147-இல் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரி பின்பு அவருடைய மனைவியானார், அவருடைய பெயர் ஆட்ரே (Audrey). ஆட்ரே என்ற பெயரின் தலைகீழ் வடிவம் ஹைட்ரோ (Hydro) என்பதாகும், அதற்குத் தண்ணீர் என்று பொருள்.
124 சகோதரி மேரி ரோஸைப் பொறுத்தவரை, நேற்று மற்றவர்களுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தார்; இன்று, மற்றவர்கள் தனக்காக ஜெபிக்க வேண்டும் என்ற தேவையில் இருக்கிறார். நித்திய ஜீவனின் வழி அப்படித்தான் இருக்கிறது.
125 மருத்துவர்களும் கூட நோய்வாய்ப்பட்டு மருத்துவ ஆலோசனைக்குச் செல்கிறார்கள். மேலும் ஒரு மருத்துவருக்கும் ஊசிகள் போடப்படலாம்.
126 இந்த இரண்டு சகோதரிகளான கரோல் மற்றும் மேரி ரோஸ் ஆகியோர், ஆசிரியர் கற்பித்த எல்லாவற்றின் நடைமுறைப் பயன்பாட்டையும் காட்டுவதற்காக அவரால் வகுப்பிற்கு முன்பகுதிக்கு அழைக்கப்பட்ட இரண்டு மாணவிகளைப் போல இருக்கிறார்கள்.
127 சகோதரி மேரி ரோஸ் என்பவர், செய்திக்கு வருவதற்கு முன்பு ஆவிக்குரிய வரங்களை வெளிப்படுத்திய அனைவரின் மொத்தமாகவும் இருக்கிறார். மேலும் சகோதரி கரோல் என்பவர், இங்கே செய்திக்குள் முதன்முறையாக ஆவிக்குரிய வரங்களை வெளிப்படுத்தப்போகிற அனைவரின் மொத்தமாகவும் இருக்கிறார்.
128 இவ்வாறாக, அவர்கள் சாதித்தவைகளும் அவர்களின் தவறுகளும் பரிசுத்த ஆவியின் பரிமாணத்திலும் ஆவிக்குரிய வரங்களிலும் நடக்கவிருக்கும் அனைத்தையும் குறித்து நமக்கு ஒரு பாடமாக அமையக்கூடும்.
129 வரலாறு நெடுகிலும், வரங்களையும் ஊழியங்களையும் அழிக்கும் மூன்று விஷயங்கள் இருந்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம்: பாலியல, பணம், மற்றும் பெருமை. மேலும், சபையின் தற்போதைய நிலையில், நான்காவதாக உணவும் சேர்க்கப்பட வேண்டும்.
130 மேலும், ஆவிக்குரிய வரங்கள் தொடர்பாக நான் பேசுகின்ற இந்த நடத்தைகள் அனைத்தும், அப்போஸ்தலர்களின் காலத்தில் சபையிலிருந்து பரிசுத்த ஆவியானவரை வெளியே துரத்திய காரியங்களாகும். பரிசுத்த ஆவியானவர் மற்றும் ஆவிக்குரிய வரங்களின் முழுமையான வெளிப்படுதலுக்கு முன்பாக, நாம் இவற்றைத் தவிர்ப்பதற்காக இக்காரியங்களை அறிந்திருக்க வேண்டும்.
131 ஒருமுறை, சகோதரி மேரி ரோஸ் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சொப்பனத்தை என்னிடம் கூறியிருந்தார். அதுவே இப்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறது.
132 அவர் கூறினார்: "சகோதரர் பிலிப்பு, நான் தீர்க்கதரிசனம் சொல்வதையும், நீங்கள் எனக்குப் பின்னால் அமர்ந்திருப்பதையும் நான் கண்டேன். நீங்கள் உங்கள் வெள்ளை நிற அரைகை பூபூவை அணிந்திருந்தீர்கள். மேலும் நான் கொடுத்த ஒவ்வொரு தீர்க்கதரிசனத்தின்போதும், மோசேயின் நியாயப்பிரமாணத்தின் ஒரு கற்பலகை என் கையில் இறங்கி வந்தது.
133 தீர்க்கதரிசனங்களின் முடிவில், என் கையில் மொத்தம் 12 வெவ்வேறு கற்பலகைகள் இருந்தன. அவற்றின் மீது சித்திரங்களைப் போன்ற குறியீட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன; மேலும் அந்த எழுத்துக்களுக்கு வியாக்கியானம் அளிக்கக்கூடிய ஒரே நபராக நீங்கள் மட்டுமே இருந்தீர்கள்.
134 நீங்கள் என் கைகளிலிருந்து நியாயப்பிரமாணப் பலகைகளை வாங்கி, அவற்றிற்கு வியாக்கியானம் அளித்தீர்கள். இரண்டு நியாயப்பிரமாணப் பலகைகளுக்கு கேமரூன் நாட்டிற்காகவும், மற்ற பத்து பலகைகளுக்கு ஒட்டுமொத்த பூமிக்காகவும் வியாக்கியானம் அளித்தீர்கள்; அங்கே எங்கும் மிகுந்த மகிழ்ச்சி நிலவியது” என்று கூறினாள்.
135 நல்லது. நான் பெனினுடைய விவகாரத்திற்குத் திரும்பி வருகிறேன். சகோதரி அஹுவேஃபாவை மௌனமாக்குவதற்கான தங்கள் அனைத்து முயற்சிகளிலும் தோல்வியடைந்த பெனின் அப்போஸ்தலர்கள், அவள் தன் தீர்க்கதரிசனங்கள் மூலம் கூட்டங்களைச் சீர்குலைப்பதாக அறிக்கை செய்யும்படி அவளைத் தங்கள் நாட்டுக் குழுவிற்குள் கொண்டுவர இருந்தார்கள்; நான் அவ்வாறு செய்வதிலிருந்து அவர்களைத் தடுத்தேன்.
136 சகோதரி அஹுவேஃபாவை அவர்கள் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட வேண்டும் என்று நான் அப்போஸ்தலன் ஜேக்கப் அஹூட்ஜியிடம் கூறினேன். மேலும் 2026 ஜூலை 19 ஞாயிற்றுக்கிழமை காலையில், கொட்டோனுவில் உள்ள ஒரு சபையில் ஒரு சிறப்பு ஆராதனை நடைபெற்றது; சகோதரி அஹுவேஃபா மீண்டும் அங்கேயும் வந்திருந்தார்.
137 தனது வருகையை அவர்கள் விரும்பவில்லை என்பதை அவள் அறிந்திருந்தும், அவள் அங்கே இருந்தாள். அவள் படிப்பறிவில்லாதவள்; ஆனால் தன்னுடைய முழுமுதலானது ஒரு அப்போஸ்தலன் அல்ல, செய்தியே என்பதை அவள் செய்தியிலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறாள். செய்தி தீர்க்கதரிசனம் சொல்வதைத் தடைசெய்யவில்லை என்பதை அவள் அறிவாள், எனவே அவள் தீர்க்கதரிசனம் சொல்வதை யாரும் தடைசெய்யக் கூடாது.
138 மேலும் பெனினுடைய அப்போஸ்தலர்கள் காரணமாக, அவள் வெளிப்படுத்தும் எத்தகைய மறைவான பாவத்தையும், பெனின் சகோதரர்கள் அச்சமின்றி அது பொய் என்று அறிவிக்கிறார்கள். குறிசொல்லும் ஆவி கொண்ட ஒரு பிசாசு உன் பாவத்தை வெளிப்படுத்தி நீ அதை மறுத்தால், அது கடைசி நியாயத்தீர்ப்பு வரை பூமியிலும் பரலோகத்திலும் உன்னைக் குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கும் என்பதை அறிந்துகொள்.
139 சகோதரி அஹுவேஃபாவைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுமாறு நான் கொடுத்த என்னுடைய அறிவுறுத்தலையும் மீறி, பெனின் அப்போஸ்தலர்கள் தங்கள் கூடுகையின் போது அவள் தீர்க்கதரிசனம் சொல்வதைத் தடுப்பதற்காக, 2026 ஜூலை 19 ஞாயிற்றுக்கிழமை காலையில் மீண்டும் அவளைச் சந்தித்தார்கள். ஆனால், கூடுகையின் போது அவள் தீர்க்கதரிசனம் சொன்னாள்.
140 ஆமோஸ் 7:10-13 வரையிலுள்ள, ஆசாரியனாகிய அமத்சியா, தீர்க்கதரிசியாகிய ஆமோஸ் பெத்தேலில் தீர்க்கதரிசனம் சொல்வதைத் தடைசெய்கிற வேதப்பகுதியை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? எரேமியா 20:2, 1 இராஜாக்கள் 22:24 மற்றும் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்ததற்காகத் தடைசெய்யப்பட்ட அல்லது அடிக்கப்பட்ட வேதாகமத்தின் பிற வசனங்களை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?
141 மேலும் தீர்க்கதரிசனம் உரைக்கும் செயல் தீர்க்கதரிசனம் உரைப்பவரின் சித்தத்தைச் சார்ந்து இல்லாதிருக்கும்போது, ஒருவர் தீர்க்கதரிசனம் உரைப்பதை நாம் எவ்வாறு தடுக்க முடியும்?
142 நல்லது. 2026 ஜூலை 19 ஆராதனையின் போது என்ன நடந்தது? முதலாவதாக, சகோதரி அஹுவேஃபா, அபிஷேகத்தின் கீழ், முன்னாள் போதகராகிய எக்பெலே என்னும் பெயருடைய ஜெபத்தலைவரைப் பிரசங்க பீடத்திலிருந்து கீழே இறங்குமாறு கேட்கிறார். ஜெபத்தலைவர் மறுக்கிறார். அவள் வற்புறுத்துகிறாள்; அப்போஸ்தலன் ஜேக்கப் அஹூட்ஜியின் வேண்டுகோளின் பேரில் அவர் பிரசங்க பீடத்திலிருந்து கீழே இறங்குகிறார்.
143 பின்னர், அவள் சகோதர சகோதரிகளுக்கு அறிவின் வார்த்தைகளைக் கொடுத்தாள். அவள் தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தபோது இரண்டு தரிசனங்கள் உண்டாயின. முதல் தரிசனத்தில், சகோதரி அஹுவேஃபா பிரசங்க பீடத்திற்கு முன்பாக நின்றுகொண்டு, ஜெபத்தலைவருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தபோது, ஒரு சகோதரன், சகோதரி அஹுவேஃபாவின் இடத்தில் ஒரு வெள்ளாட்டுக்கடாவைக் கண்டார்.
144 இரண்டாவது தரிசனத்தில், சகோதரி அஹுவேஃபா ஜெபத்தலைவருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அவரைப் பிரசங்க பீடத்திலிருந்து கீழே இறங்குமாறு கூறிக்கொண்டிருக்கையில், ஜெபத்தலைவர் எதிர்த்து நின்றபோது, அந்த ஜெபத்தலைவர் பிரசங்க பீடத்திற்குப் பின்னால் அரைகால் சட்டையுடனும் வெற்று மார்புடனும் இருப்பதை ஒரு சகோதரி தரிசனத்தில் கண்டாள்.
145 தேவனிடமிருந்து வந்த இந்த இரண்டு தரிசனங்களும் அந்த வெளிப்படுதலை நியாயந்தீர்ப்பதற்குத் போதுமானளவு தெளிவாக இருக்கவில்லையா? ஆனால் அப்படி இருந்தபோதிலும், ஆராதனைக்குப் பிறகு, அப்போஸ்தலர்களாகிய ஜேக்கப் அஹூட்ஜி, ராவூல் சோடோகின் மற்றும் டோகோவைச் சேர்ந்த கோசி யெலோ ஆகியோர் சகோதரி அஹுவேஃபாவை மீண்டும் சந்தித்து, தங்களுடைய கூடுகைகளில் இனிமேலும் தீர்க்கதரிசனம் சொல்லாதபடி அவளுடைய அர்ப்பணிப்பை நிறுத்துமாறு அவளிடம் வற்புறுத்தினர்.
146 தேவன் ஆவியாயிருக்கிறார், சாத்தானும் ஆவியாயிருக்கிறான். ஆவிக்குரிய பிரச்சினைகள் ஆவியினாலேயே தீர்க்கப்பட வேண்டும். மாம்சத்தில் நீ வெள்ளாட்டுக்கடாவைத் துரத்த விரும்பினால், வெள்ளாட்டுக்கடாவையும், செம்மறியாட்டுக்கடாவையும், ஆட்டுக்குட்டியானவரையும் சேர்ந்தே துரத்திவிடுவாய்.
147 நீங்கள் தேவனுக்குப் பயந்திருந்தால், வெளிப்படுதல்களின்போது தேவன் உங்களுக்குத் தரிசனங்களைக் கொடுப்பார்; நீங்கள் அந்தத் தரிசனங்களைப் புரிந்துகொண்டு, எந்தச் சிக்கலுமின்றி அந்த வெளிப்படுதல்களை நியாயந்தீர்ப்பீர்கள். தரிசனங்களின் அர்த்தத்தைத் திரிப்பதில் ஆபிரகாம் மாசெலின் ஆவி சிரமப்படுகிறது.
148 மேலும், ஒரு வெளிப்படுதல் ஒருவரைப் பிரசங்க பீடத்திலிருந்து கீழே இறங்கச் செய்யக்கூடும்; ஆனால், அது ஆராதனை இயல்பாக நடப்பதைத் தடைசெய்யாமலும், வேறொரு வழியில் அவருக்குப் பதிலாக வேறொருவர் மாற்றப்பட்டும் இருந்தால், அந்த வெளிப்படுதல் பிசாசினால் உண்டானது என்று நீங்கள் சொல்ல முடியாது.
149 எபோலோவாவில் நடந்த ஓர் ஆராதனையின் போது, பிரசங்கியார் பிரசங்க பீடத்தில் இருக்கையில், சகோதரி கரோல் எழுந்து நின்றாள். அவள் பிரசங்கியாரைப் பிரசங்க பீடத்திலிருந்து கீழே இறங்கச் செய்வதற்குப் பதிலாக, உதவிக்காரனைப் பார்த்து, "இன்று நீ பிரசங்கம் பண்ணுவாய் என்று நான் உனக்கு வெளிப்படுத்தவில்லையா? என் வார்த்தைக்கு நீ ஏன் கீழ்ப்படியவில்லை?" என்று சத்தமிட்டாள்.
150 உடனே, உதவிக்காரன் முழங்கால்படியிட்டான். அந்த கணத்திலேயே, பிரசங்கியார் பிரசங்க பீடத்தை விட்டு வெளியேறினார். சகோதரி கரோல் தீர்க்கதரிசனம் சொல்லி முடித்ததும், முழங்கால்படியிட்டிருந்த உதவிக்காரன் எழுந்து நின்று, பிரசங்க பீடத்திற்குச் சென்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
151 மேலும், 2026 ஜூலை 19 அன்று, சகோதரி அஹுவேஃபாவின் வெளிப்படுதலைப் பற்றி ஆராய்ந்தபோது, ஆலிஸ் என்ற பெயர் கொண்ட ஒரு சகோதரி எழுந்து நின்று, சபையின் மீது தீர்க்கதரிசனம் சொல்லி, பிரெஞ்சு மொழியில் ஒரு பாடலைப் பாடினாள்.
152 அந்தப் பாடல்: "அங்கே பரலோகத்தில் உமக்குச் சாட்சியாயிருப்பவர் யார்?" என்பதாகும். அவள் பாடி முடித்த பிறகு, முழங்கால்படியிட்டிருந்த சகோதரி அஹுவேஃபா, அதே பாடலை அறியப்படாத மொழியிலே பாடினாள்.
153 பின்பு, சகோதரி அஹுவேஃபா அமர்ந்திருக்கையில், பாஸ்டர் எக்பெலே முழு உணர்வுடன் எழுந்து முன்னால் வந்து, சகோதரி அஹுவேஃபாவின் மீது கரங்களை வைத்தார். உடனே, சகோதரி அஹுவேஃபா அவருடைய கரத்தைத் தள்ளிவிட்டு, அதிகாரத்தோடும், ஆனாலும் அறியப்படாத மொழியிலே அவரிடம் பேசினாள். பாஸ்டர் எக்பெலே அசைவற்று நின்றுபோனார்.
154 அந்த கணத்திலேயே, எய்மே நூமாண்டோ என்ற பெயருடைய மற்றொரு சகோதரன் எழுந்து நின்று தனது வாழ்க்கையில் முதல் முறையாக தீர்க்கதரிசனம் உரைத்தார். அந்தத் தீர்க்கதரிசனம் சபையின் முதிர்ச்சியின்மையைக் குறித்ததாக இருந்தது.
155 பாஸ்டர் எக்பெலே, சகோதரி அஹுவேஃபாவுக்குச் சற்றுத் தொலைவில் நின்றுகொண்டு, சபையாரிடம் பேசத் தொடங்கினார். ஆனால், சகோதரி ஆலிஸ் அவருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி அவரை நிறுத்தினாள். அவர் மனக்குழப்பத்துடன் தன் இடத்திற்குத் திரும்பிச் சென்றார்.
156 மேலும் அந்த ஆய்வின் போது, பாஸ்டர் எக்பெலே பேசிக்கொண்டிருக்கையில், சகோதரன் எய்மே நூமாண்டோ மீண்டும் பலத்த அபிஷேகத்தின் கீழ் எழுந்து நின்று, சகோதரி ஆலிஸின் வார்த்தைகளை உறுதிப்படுத்தும் விதமாக அவருக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைத்து, மனந்திரும்பும்படி அவருக்குக் கட்டளையிட்டார். தீர்க்கதரிசனத்திற்குப் பிறகு, உதவிக்காரர வந்து பாஸ்டர் எக்பெலேவின் கையிலிருந்து ஒலிவாங்கியை வாங்கினார்.
157 ஆய்வின் முடிவில், சகோதரி ஆலிஸும் சகோதரன் எய்மே நுமாண்டோவும் தேவனுடைய ஆவியினாலே செயல்பட்டார்கள் என்றும்; சகோதரி அஹுவேஃபா பிசாசின் ஆவியினாலே செயல்பட்டாள் என்றும்; பாஸ்டர் எக்பெலே போலிபின்பற்றுதலில் செயல்பட்டார் என்றும் சபையார் முடிவுக்கு வந்தனர்.
158 மேலும், பெனினுடைய அப்போஸ்தலர்கள் அனைவரும் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டபோது, அவர்கள் மனந்திரும்பி, பெனின் சகோதரர்களிடம் பேசினார்கள். 2026 ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமையன்று, சகோதரி அஹுவேஃபா அறிவின் வார்த்தைகளை கொடுத்தபோது, அது உண்மைதான் என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். மேலும், 2026 ஆகஸ்ட் 2 அன்று அவளிடமிருந்து வெளிப்பட்ட காரியம் தேவனால் உண்டானது என்று அவர்கள் முடிவுக்கு வந்தனர்.
159 பழைய திராட்சைரசம் எப்போதும் தன் முழு வல்லமையையும் கொண்டிருப்பதில்லை, ஆனாலும் அது இதுவரையிலும் சத்தியத்தையே பேசுகிறது. குறிசொல்லும் ஆவியோ வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில்லை, அது பொய்களையும் சொல்லக்கூடும். ஆனால் நீயோ, உண்மையானதையே ஏற்றுக்கொண்டு, பொய்மையானதை நிராகரிக்க வேண்டும்.
160 மேலும், அதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2026 அன்று, சகோதரன் எய்மே நுமாண்டோ வேறொரு ஆவியினாலே தீர்க்கதரிசனம் சொல்லி, ஆராதனையைச் சீர்குலைத்தார். தேவன் உன்னை ஒருமுறை பயன்படுத்தியிருக்கும்போது, நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; ஏனெனில், அது தேவனுடைய செயலின் தொடர்ச்சிதான் என்று ஜனங்கள் நம்பும்படி, பிசாசானவன் உன்னைப் பயன்படுத்த முற்படுவான்.
161 எழுந்து நின்று தீர்க்கதரிசனம் சொல்லும்படி உங்கள் சிந்தனைக்குச் சொல்லும் எந்தக் குரலுக்கும் கீழ்ப்படியாதீர்கள். சாத்தானே அதைச் செய்கிறான். பரிசுத்த ஆவியானவர் உங்கள் மூலமாய்ப் பேச விரும்பினால், நீங்கள் அதை உணராமலேயே நேரடியாகப் பேசும்படி அவரே உங்களைப் பற்றிக்கொள்வார்.
162 "தீர்க்கதரிசனங்களைத் தடை செய்யாதீர்கள்!" என்று சொல்லும் சுவிசேஷகத் தலைவர்கள் சாத்தானின் முகவர்கள். பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் ஒரு தீர்க்கதரிசனத்தைத் தடுக்கும் வல்லமை எந்த மனிதனுக்கும் இல்லை.
163 நல்லது. அதே ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2026 அன்று, சகோதரி ஆலிஸ் குவ்டோன் சபையில் இருந்தார். அவரும் தனது அறிக்கையிடுதலுக்காக நின்று கொண்டிருந்தபோது, அறிக்கை செய்துகொண்டிருந்த இரண்டு சகோதரர்களுக்கு அறிவின் வார்த்தைகளைக் கொடுத்தார். அவர்கள் அதை ஒப்புக்கொண்டு, தங்கள் அறிக்கைகளை முழுமைப்படுத்தினார்கள். எனவே, இதுபோன்றும் சம்பவிக்கலாம்.
164 பெனினுடைய அப்போஸ்தலர்களும் தலைவர்களும் ஆவிக்குரிய வரங்களுக்குச் சத்துருக்களாய் இருக்கிறார்கள், ஆயினும் அவர்கள் சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்துகிறார்கள். மேலும் அப்போஸ்தலன் ராவூல் சொடோகின் 2026 ஏப்ரல் 19 அன்று புர்கினா பாசோவிற்குச் சென்று வெளிப்படுத்தியதும் அதுவே ஆகும்; இது Kc.178-இல் அறிவிக்கப்பட்டுள்ளது.
165 மற்ற ஆவிக்குரிய வரங்களைப் புறக்கணிக்கிற அல்லது அவற்றோடு போராடுகிற சுகமளிக்கும் வரம், ஒரு பாரம்பரிய வைத்தியனின் வல்லமையைத் தவிர வேறொன்றுமில்லை. 1 கொரிந்தியர் 12-ன் ஆவிக்குரிய வரங்கள் ஒரு பரிபூரண முழுமையை உருவாக்குகின்றன, அவை ஒன்றோடொன்று போராட முடியாது. மேலும் சுகமளிக்கும் வரம் ஒரு முழுத் தொகுப்புடன் இணைந்தே செல்கிறது.
166 இதைக் காட்டுவதற்காக சகோதரி மேரி ரோஸின் ஒரு வீடியோவையும், சகோதரி கரோலின் ஒரு வீடியோவையும் நான் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். அந்த வீடியோவில், சகோதரி கரோல் யாவுண்டேயில் உள்ள ஒரு சபையில் இருக்கிறார்.
167 நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் ஒரு உதவிக்காரனாகவோ அல்லது கேமராமேனாகவோ பணி செய்யாத வரை, ஆவிக்குரிய வெளிப்பாடுகளைப் பார்க்காதீர்கள், ஏனென்றால் நீங்கள் ஒரு பிசாசைப் பெற்றுக்கொள்ளக்கூடும். உதவிக்காரர்களும் பிரசங்க மேடையில் இருப்பவர்களும் இது கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தேவனுடைய தூதன் ஒருவன் உங்களுக்குத் தோன்றினாலும், அவன் உங்களுக்கு அனுமதி கொடுக்காத வரை நீங்கள் அவனைப் பார்ப்பது நல்லதல்ல.
168 போலிபின்பற்றுதல்களின் காரணமாகத்தான் வெளிப்படுதல்களின் காணொளிகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று தூதன் என்னைத் தடுத்தார். ஒருவரும் போலிபின்பற்றக் கூடாது. ஒவ்வொரு ஆவிக்குரிய வரமும் அதற்கே உரிய அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
169 மேலும், சகோதரி அஹுவேஃபாவைப் பற்றிப் பேசுகையில், தான் என்ன தீர்க்கதரிசனம் சொல்கிறோம் என்பதையே அறியாத ஒரு நபர், மேலும் பெரும்பாலும் பகுப்பாய்வு செய்யப்படும் நேரத்தில் தான் அவர் என்ன தீர்க்கதரிசனம் சொன்னார் என்பதே அவருக்குத் தெரிவிக்கப்படுகிறது எனில், அவர் அதை எவ்வாறு அறிக்கை செய்வார், மேலும் அது தொடர்பான கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பார்?
170 கூடுகைகளை அவள் சீர்குலைப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள். சரிதான். ஆனால், நீ சமாதானத்தோடு உன் வழியே செல்லும்போது, ஒரு பைத்தியக்காரன் ஒவ்வொரு முறையும் உன்மேல் கற்களை எறிந்தால், உன் வாழ்க்கையைக் குறித்து நீ தியானித்துப் பார்ப்பது ஞானமல்லவா?
171 ஒரு பிசாசு உங்களைத் தொந்தரவு செய்தால், செய்ய வேண்டியவை இரண்டு காரியங்கள்: ஒன்று நீங்கள் பவுலைப் போலப் பொறுமையாக இருக்க வேண்டும், அல்லது அதற்கான காரணத்தைத் தேட வேண்டும். அப்போஸ்தலர் 16-இல் தீர்க்கதரிசனம் சொன்ன ஸ்திரீயை பவுல் தாக்கவில்லை; அதுபோல நீங்களும் உங்களுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்கிற ஒருவரைத் தாக்கக் கூடாது.
172 தேவனுடைய சித்தத்திற்கு வெளியே இருந்துகொண்டே நீங்கள் அற்புதங்களைச் செய்யலாம் அல்லது உண்மையாய் செயல்படலாம். தேவன் உங்களை வெறுமனே தேவைக்காக மட்டுமே பயன்படுத்தக்கூடும். இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. Kc.176:120-இல் நான் குறிப்பிட்டிருக்கும் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த சகோதரி மாட் முஸெண்டாவின் உதாரணம் மிகவும் தெளிவாக உள்ளது.
173 மிகச் சமீபத்திய உதாரணம் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பாஸ்டர் ஆண்டனி என்குபே என்பவருடையதாகும். அவர் போட்ஸ்வானாவில் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை ஏற்பாடு செய்ய விரும்பினார். போட்ஸ்வானாவில் உள்ள சகோதரர்கள் ஜெபித்தார்கள், மேலும் எந்தவொரு சுகமளிக்கும் ஆராதனை நடைபெறுவதற்கு முன்பும் போட்ஸ்வானா அர்ப்பணிப்புக்குத் திரும்ப வேண்டும் என்பதை அவர்களின் வெளிப்பாடுகள் சுட்டிக்காட்டின.
174 இது இருந்தபோதிலும், பாஸ்டர் ஆண்டனி சுகமளிக்கும் ஆராதனையை நடத்தத் தீர்மானித்தார். சுகமளிப்பது நடைபெறாவிட்டாலும் கூட, ஒரு ஆத்துமா அழைப்பிற்குப் பதிலளித்து இரட்சிக்கப்படக்கூடும் என்று அவர் கூறினார். அவர் 2026 ஜூலை 16 வியாழக்கிழமை அன்று தன் குழுவினருடன் போட்ஸ்வானாவிற்குச் சென்றார்.
175 மேலும், சுகமளிக்கும் ஆராதனை 2026 ஜூலை 19 ஞாயிற்றுக்கிழமை அன்று போட்ஸ்வானாவிலுள்ள பிரான்சிஸ்டவுனில் நடைபெற்றது. எல்லாமே நன்றாக நடந்துகொண்டிருந்தது, மேலும் பாஸ்டர் ஆண்டனி நோயாளிகளுக்காக ஜெபித்தார்.
176 சாட்சிகளின் போது, உடனடி சுகமளிப்புகள் ஏதேனும் நடந்ததா என்று அவர் கேட்டபோது, முதல் நபர் தனது கையை உயர்த்தினார். பின்னர் இரண்டாவது நபர் தனது கையை உயர்த்தினார். சரியாக அந்த கணத்தில், பாஸ்டர் ஆண்டனி ந்கூபே பிரசங்க பீடத்தோடு சேர்ந்து கீழே விழுந்தார். உதவிக்காரர்கள் அவரைத் தூக்கி கூட்ட அரங்கத்திற்கு வெளியே கொண்டு சென்றனர்.
177 இது இருந்தபோதிலும், எட்டு உடனடி சுகமளிப்புகள் நடந்தன, 50-க்கும் மேற்பட்ட மக்கள் செய்தியை விசுவாசித்தார்கள், மேலும் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருந்தது. ஜெபத்திற்குப் பதில் கிடைப்பது தேவனுடைய சித்தத்திற்கு ஒப்பானதாக இருக்குமானால், மத்தேயு 7:21-இல் உள்ள மனிதர்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
178 இப்போது, ஆவிக்குரிய வரத்தை வெளிப்படுத்துகிற நீங்களும் கவனமாக இருங்கள். தீர்க்கதரிசனத்தைப் பொறுத்தமட்டில், தீர்க்கதரிசனத்தை உங்கள் சொந்த தூண்டுதல்களிலிருந்தும் எண்ணங்களிலிருந்தும் பிரித்து வைப்பது நல்லது. நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது, நீங்கள் சுயநினைவுக்கு வந்தால், அபிஷேகம் உங்கள் மீது வலுவாக இருந்தாலும் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
179 இப்போது, எனக்குச் செவிகொடுங்கள். நாம் அசட்டை செய்கிற இந்த ஆவிக்குரிய வரங்களே நமக்குத் தகுதியானவைகளாக இருக்கின்றன. நமது கிரியைகளுக்கும் வார்த்தைகளுக்கும் ஏற்ப தேவனே அவைகளை நமக்கு அனுப்பியிருக்கிறார்.
180 தேவனுக்குக் கீழ்ப்படியாமையின் மூலமாக ஒரு ஆவிக்குரிய வரம் தேவனிடமிருந்து சாத்தானுக்குக் கடந்துபோவது போலவே, தேவனுக்கு நாம் கீழ்ப்படிவதன் மூலமாக நம்முடைய சகோதர சகோதரிகளுடைய ஆவிக்குரிய வரங்களும் சாத்தானிடமிருந்து தேவனுக்குக் கடந்துபோக வேண்டும்.
181 ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குறிசொல்லுதலின் பொருட்களாக நீங்கள் நடத்துகிற இந்தச் சகோதர சகோதரிகள், வெளிப்படுத்துதல் 12, வெளிப்படுத்துதல் 16 மற்றும் வெளிப்படுத்துதல் 19-ன் படியான அர்மெகதோன் யுத்தத்தில் Kc.158:123 முதல் 127 வரை கூறப்பட்டுள்ளபடி நாம் விடுவிக்க வேண்டிய பாலஸ்தீனியர்களின் பிணைக்கைதிகளாக இருக்கிறார்கள். நமது நல்ல பிரதிஷ்டையே அவர்களுடைய விடுதலையின் கிரயமாயிருக்கிறது.
182 யூதர்கள், நம் இடத்தில் இருந்திருந்தால் பிணைக்கைதிகளாக இருக்கும் தங்கள் சகோதரர்களைப் பலிகொடுக்க மாட்டார்கள், மற்றொரு படையையும் உருவாக்க மாட்டார்கள். அனைத்து வழிகளிலும் அவர்களை விடுவிக்கவே அவர்கள் முயல்வார்கள். இந்தச் சகோதர சகோதரிகளை நாம் கைவிட்டால், பிசாசானவன் அவர்களில் சிலரைப் பைத்தியக்காரத்தனத்திற்கு நடத்தும் அளவுக்கு அவர்களைப் புடைப்பான், அதற்குத் தேவன் நம்மையே பொறுப்பாளியாக்குவார்.
183 உபவாசத்தினாலும் அர்ப்பணிப்பினாலும் தான் பரிசுத்த ஆவியானவர் நம்மை அடையாளங்கண்டு, நம்முடைய பிதாக்களாகிய அப்போஸ்தலர்கள் மீது இறங்கினது போல நம் மீதும் வந்திறங்குவார்.
184 இந்தச் செய்தியின் தொடக்கத்திலிருந்தே, மலைகளின் பாதை வழியாகத்தான் நாம் முடிவான ஜெயத்தைப் பெறுவோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் மலைகளின் பாதை என்பது உபவாசங்கள் மற்றும் அர்ப்பணிப்பின் பாதையே ஆகும்.
185 நம்முடைய எல்லா வெளிப்பாடுகளும் ஒரே ஒரு மலையைப் பற்றியே பேசுகின்றன. அது இஸ்ரவேலில் உள்ள மெகிதோ மலை ஆகும். தேவதூதன் என்னிடம், "இது அர்மெகதோன் யுத்தம்" என்று கூறியிருந்தார். 1 இராஜாக்கள் 20:23-ல், யூதர்களின் தேவன் மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருந்தார்கள்.
186 பள்ளத்தாக்குகளிலும் சுரங்கப்பாதைகளிலும்தான் சபையால் உணவளிக்கப்படும் எலிகளும் பூனைகளும் இருக்கின்றன. மேலும் ஆபிரகாம் மாசெலின் ஆவியும் பொய்யான அர்ப்பணிப்புகளின் ஆவியும் மெகிதோவின் சமவெளிகளில் காணப்படுகின்றன.
187 மெகிதோ மலையின் மீதே நமது விடுதலைக்கான யுத்தம் நடைபெறும். எபிரேய மொழியில், "மெகிதோ மலை" என்பது: "ஹார் மெகிதோ" என்று சொல்லப்படுகிறது, அதாவது அர்மெகதோன் என்பதாகும். உபவாசத்தில் இருப்பது என்பது ஒரு மலையில் ஏறுவதாகும். மேலும் மெகிதோ என்பது அர்ப்பணிப்பின் மலையாகும்.
188 கிழக்கிலே நடந்த மிகப்பெரிய யுத்தங்கள் மெகிதோ மலையில்தான் நடந்தன. பார்வோன் மூன்றாம் துத்மோஸ் கானானியர்களைத் தோற்கடித்து, நேபுகாத்நேச்சாரின் பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் எழுச்சிக்கு முன்பு எகிப்தின் ஆட்சியை ஐபிராத்து நதி வரை விரிவுபடுத்தியது மெகிதோவில்தான்.
189 யோசியா ராஜா பார்வோன் நெகோவினால் கொல்லப்பட்டதும் மெகிதோவில்தான். மேலும் தீர்க்கதரிசினியாகிய தெபொரா கானானியரின் சேனாபதியாகிய சிசெராவைத் தோற்கடித்ததும் மெகிதோவில்தான்.
190 கல்வாரிச் சிலுவையில் நமது மீட்பின் விலைகிரயத்தைச் செலுத்துவதற்காக தேவன் தாமே ஒரு சரீரத்தை உருவாக்கிக்கொண்டு வந்தது போலவே, நமது சபைகளை வழிநடத்த வேண்டிய ஆவிக்குரிய வரங்களின் சுத்திகரிப்புக்கான விலைகிரயத்தை, நமது நல்ல அர்ப்பணிப்பின் மூலம் நாமும் செலுத்த வேண்டும்.
191 வனாந்தரத்தில் யூதர்கள் செய்தது போல நாம் அதை மறுத்தால், தேவன் நம்மை ஒதுக்கி வைத்துவிட்டு, அதற்கான கனிகளைத் தரக்கூடிய வேறொரு தலைமுறையை எழுப்ப முடியும்.
192 நடுராத்திரி சத்தம் என்பது ஒரு சுவிசேஷகச் செய்தி அல்ல; அதனால்தான் நடுராத்திரி சத்தத்தினுடைய செய்தியின் ஆவியானது நாம் காண்கிற அந்த சுவிசேஷக ஆவிகளாகவும் வெளிப்படுதல்களாகவும் இருக்க முடியாது. நமது செயல்கள் மற்றும் வார்த்தைகளின் மூலம் செய்தியினிடத்திற்கும் தேவனிடத்திற்கும் திரும்புவது நமது கடமையாகும், அப்போது உண்மையான பரிசுத்த ஆவியானவர் நமது சபைகளிலுள்ள ஆவிக்குரிய வரங்களைக் கைப்பற்றிக்கொள்வார்.
193 இப்போது, இதைக் கவனியுங்கள்: உண்மையான பரிசுத்த ஆவியானவர் ஒரு சபையின் ஆவி அல்ல, மாறாக அந்த மணிவேளைக்குரிய வார்த்தையின் ஆவியாக இருக்கிறார். மேலும் கிறிஸ்துவின் உண்மையான சபையானது, அந்த மணிவேளைக்குரிய தீர்க்கதரிசியின் வார்த்தையோடு அடையாளம் காணப்பட்ட சபையாகும், அப்போது பரிசுத்த ஆவியானவர் வந்து அந்த வார்த்தை-சபையிலே கிரியை செய்கிறார்.
194 ஒரு சபை, தான் விசுவாசிப்பதாகக் கூறிக்கொள்ளும் செய்தியோடு அடையாளம் காணப்படுவதற்கு முன்பு, செய்தியின் ஆவியானது அந்தச் சபையின் மீது வர முடியாது. பரிசுத்த ஆவியானவர் செய்தியின் மீதும், நமக்குள்ளிருக்கும் ஆட்டுக்குட்டியின் அல்லது சிறுபிள்ளையின் சுபாவத்தின் மீதும்தான் வருவார்.
195 கிறிஸ்துவும் அவருடைய ஆவியானவரும் ஒரு சபையோடு அடையாளம் காணப்படுவதில்லை, மாறாக வார்த்தையோடே அடையாளம் காணப்படுகின்றனர்; அதனால்தான், அந்தத் தலைமுறையிலுள்ள தேவனுடைய பரிசுத்த ஆவியாகிய வார்த்தையின் ஆவியைப் பெற்றுக்கொள்வதற்கு, உண்மையான சபையானது வார்த்தையோடு ஒன்றிணைய வேண்டும்.
196 உன்னுடைய சபையின் ஆவியினால்தான் நீ ஞானஸ்நானம் பெறுவாய். ஒவ்வொரு மரமும் தன் தன் இனத்தின்படியே கனிகொடுக்கிறது. திராட்சச்செடி திராட்சைப்பழங்களைத்தான் கொடுக்கிறது, முட்புதர்கள் முட்களைத்தான் கொடுக்கின்றன.
197 ஆகவே, பிரச்சனை என்னவென்றால், "ஓ, இவர் செய்திக்கு முன்பிருந்தே அல்லது தனது சிறுவயதிலிருந்தே இந்த ஆவிக்குரிய வரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார், எனவே இது பிசாசு!" என்று சொல்வது அல்ல.
198 பிரச்சனை என்னவென்றால்: "தனது சிறுவயதிலிருந்தே அல்லது செய்திக்கு முன்பிருந்த சபைகளில் அவளைப் பயன்படுத்திக் கொண்டிருந்த பிசாசானவன், ஏன் இவ்வளவு தூரம் இங்கே நமக்குள் வந்திருக்கிறான்?" என்பதே. உதாரணமாக, சகோதரி அஹுவேஃபா செய்திக்கு முன்பு ஒருபோதும் அந்நிய பாஷை பேசியதில்லை அல்லது தீர்க்கதரிசனம் உரைத்ததில்லை. அவள் அவ்வளவு எளிதாக தீர்க்கதரிசனம் உரைக்கிற அந்த ஆவி, நமது சபைகளில் கிரியை செய்கிற ஆவியாக இல்லாவிட்டால், அது எங்கிருந்து வருகிறது?
199 இதுதான் ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு சபையும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, அப்பொழுதுதான் ஏற்கனவே மிகவும் சமீபமாக இருக்கிற ஜெயத்தைப் பெற அவர்களால் எழும்ப முடியும். ஆகவே குற்றச்சாட்டுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தீர்வுகளைத் தேடுவோம்.
200 சகோதரி கரோல் கைகளை வைத்து, "கர்த்தர் இவ்வாறாகச் சொல்லுகிறார்: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்!" என்று இந்த வார்த்தையைக் கூறுவதை நான் காணும்போது, என் பெலன் புதிதாக்கப்படுகிறது; மேலும் 2 இராஜாக்கள் 23-இல் யோசியா ராஜா செய்தது போல, நானும் தேவனுடனான என் உடன்படிக்கையைப் புதுப்பித்துக்கொள்கிறேன்.
201 சகோதர சகோதரிகளே, நாம் நம்முடைய ஆவி வரைக்கும் மனத்தாழ்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவமதிப்பு, பெருமை அல்லது ஆணவத்தின் எந்தவொரு நடத்தையும் தேவனுடைய பரதீசுக்குள் பிரவேசிக்க முடியாது.
202 இந்த சமீப நாட்களில், சகோதரி கரோலுடன் நான் கொண்டிருந்த உரையாடல்கள் ஆழமான காரியங்களை, எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் ஏன் அவளைத் தெரிந்துகொண்டார் என்பதையும் புரிந்துகொள்ள எனக்கு உதவின. அவளுடைய தீர்க்கதரிசனங்கள் தொடங்குவதற்கு முன்பாக அவள் தேவனுக்காக என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதை நான் அறிய விரும்பினேன்.
203 அவள்: “சகோதரன் பிலிப்புவே, நான் புத்திசாலியாக இல்லாததாலும், நான் அதிகளவில் பாவஅறிக்கை செய்து வந்ததாலும், சபையில் ஒருபோதும் பேசியதுமில்லை, பாடியதுமில்லை. குழுக்களிலும்கூட, நான் வாசிப்பேன், கவனிப்பேன், ஆனாலும் ஒருபோதும் பேசுவதுமில்லை, எந்த எமோஜிகளையும் போடுவதுமில்லை.
204 என்னைப் பிரயோஜனமுள்ளவளாக ஆக்கிக்கொள்ள, நான் அனைவருக்கும் பணிவிடைக்காரியாக இருந்தேன். நான் ஒரு சகோதரியைச் சந்திக்கச் செல்லும்போது, அவருடைய வீட்டிலுள்ள அனைத்து அழுக்குத் துணிகளையும் துவைப்பதற்காகவே செல்கிறேன். பிறகு, அவர் எனக்கு ஏதேனும் உணவளித்தால் சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிவிடுவேன்.” என்று பதிலளித்தாள்.
205 தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்குத் தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம், நாம் சிறு பிள்ளைகளைப் போல மாற வேண்டும் என்பதே. ஆனால், சிறு பிள்ளைகளின் சிநேகிதிகள் பெண்களாவார்கள். ஆகவே, சிறு பிள்ளைகளின் நடத்தையை அடைவதற்கு, பெண்கள் சிறு பிள்ளைகளிடம் காட்டும் அதே மனத்தாழ்மையை நாமும் நம்முடைய மனைவிகளிடம் காட்ட வேண்டும்.
206 இவ்வாறு, உன் மனைவி கீழ்ப்படிதலுள்ளவளாக இருந்து, அவள் உன்னிடம்: "சகோதரனே, தயவுசெய்து என் கைப்பையைக் கொண்டு வாருங்கள்! பாத்திரத்தில் தண்ணீர் நிரப்புங்கள். எனக்காக இன்னின்ன காரியத்தைச் செய்யுங்கள்" என்று கூறினால், நீ அதைச் செய்ய வேண்டும்.
207 மேலும், அவள் வியாதிப்பட்டிருக்கும் நாளில்கூட, நீ அவளுக்குப் பணிவிடை செய்து, ஒரு பிள்ளை அவளுக்கு என்னவெல்லாம் செய்திருக்குமோ அதை நீ செய்ய முடியும்.
208 மேலும், உன் மனைவி, பிள்ளைகளுக்காக என்னவெல்லாம் செய்கிறாளோ, அதை நீ அவளுக்குச் செய்ய வேண்டும். அவள் மருந்து சாப்பிடுவதை அவளுக்கு நினைவூட்டி, ஒரு பிள்ளை அவளுக்குக் கொண்டுவந்து கொடுக்கக்கூடிய அந்த தண்ணீர் குவளையையும்கூட நீ அவளுக்கு கொண்டுவர வேண்டும்.
209 உன்னுடைய கார் ஒவ்வொரு நாளும் உன்னை இடங்களுக்குச் சுமந்து செல்கிறது. அது பழுதடையும்போது, மழையிலும் சேற்றிலும் அதைத் தள்ளுவது உட்பட, அதற்காக உன்னால் முடிந்த அனைத்தையும் நீ செய்கிறாய். உன் மனைவிக்கும் நீ அவ்வாறே செய்ய வேண்டும். ஒரு பெண் ஒரு சிறு பிள்ளைக்குப் பணிவிடை செய்யும்போது, அந்தப் பிள்ளை அவளை ஆளுகை செய்கிறது என்று அர்த்தமல்ல. நீயும் உன் மனைவிக்காக அதைச் செய்யும்போது, அவள் உன்னை ஆளுகை செய்கிறாள் என்றோ அல்லது அவள் உனக்குச் சமமானவள் என்றோ அர்த்தமாகாது.
210 நம்மை நாமே சிறியவர்களாக்கிக் கொள்வதன் மூலமும், மற்றவர்களுக்குப் பணிவிடைக்காரர்களாக மாறுவதன் மூலமுமே, நாம் மேலோங்கி முழு பூமிக்கும் ஆசீர்வாதமாக இருப்போம். அப்போஸ்தலர்களே, பாஸ்டர்களே, பிரசங்கிகளே மற்றும் தலைவர்களே, நீங்கள் போதித்த மனத்தாழ்மையை உலகத்தின் முன்பாக மெய்ப்பிப்பதற்கான நேரம் இதுவே.
211 பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்காகவும் ஆவிக்குரிய வரங்களின் வெளிப்படுதலுக்காகவும் தவித்துக்கொண்டிருக்கும் சபைக்கு உதவ, இப்போது எழும்பி வர வேண்டிய நேரம் இது. தேவனுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் நீங்கள் தேவைப்படும் வேளை இதுவே.
212 இப்போது எழுந்து நின்று: "சகோதர சகோதரிகளே, நாங்கள் முன்மாதிரியாக இருக்க உறுதியளிக்கிறோம். எங்கள் செயல்கள், வார்த்தைகள் மற்றும் பிரசங்கங்கள் மூலமாகவே குறிசொல்லும் ஆவி சபைகளில் ஊடுருவியுள்ளது. குற்றவாளிகள் நாங்கள்தான். நாங்கள் உங்களுக்கு அதிக தீங்கு விளைவித்துவிட்டோம். நாங்கள் மனந்திரும்புகிறோம்" என்று சொல்ல வேண்டிய நேரம் இது.
213 சகோதரிகள் கரோலும் மேரி ரோஸும் செலுத்திய அர்ப்பணிப்பின் கிரயத்தை, நாமும் நம் மனைவிகளுமே நமக்காகவும் உங்களுக்காகவும் செலுத்தியிருக்க வேண்டும். நாம் நம் வீடுகளுக்குள் நம்மை அடைத்துக்கொண்டு, அர்ப்பணிப்புகளைப் பலப்படுத்திக்கொண்டு மறுரூபமடைந்தவர்களாக வெளிவருவோம்.
214 நமது கடந்த கால பிரசங்கங்கள் குறிசொல்லுதலையும் மரணத்தையும் கொண்டுவந்ததைப் போலவே, நமது எதிர்கால பிரசங்கங்களும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையும் ஆவிக்குரிய வரங்களையும் கொண்டுவரும்.
215 கழுகுகளாக மறுபடியும் பிறப்பதற்காகவே சிங்கங்களாகிய நாம் மறைந்து போவோம். வெளிப்படுத்துதல் 12-இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, குறிசொல்லும் பிசாசுகளை விட்டு பெருங்கழுகின் இரண்டு சிறகுகளால், உங்களை வெகு தூரத்திற்குச் சுமந்துசெல்வோம்.
216 இந்தப் போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது இதுதான். மேலும், நமது எதிர்கால பிரசங்கங்களின் போது பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருவாராக, ஆவிக்குரிய வரங்கள் வெளிப்படுவதாக! அப்போஸ்தலர்கள், பாஸ்டர்கள் மற்றும் பிரசங்கிகளுமாகிய நாமும் ஆவிக்குரிய வரங்களைப் பெற்று அவற்றை வெளிப்படுத்துவோம்!”
217 சகோதரன் பிலிப்பாகிய நானும், நீங்கள் அவ்வாறே செய்யும்படி உங்களை வலியுறுத்துகிறேன். இந்த உறுதிமொழிக்கு இணங்க, நல்ல அர்ப்பணிப்புக்குள் பிரவேசிக்கும்படியும் உங்களை வலியுறுத்துகிறேன். உங்களது ஒவ்வொரு முயற்சியும் தேவனுக்கு முன்பாக நிற்கிறது, அவர் ஏற்ற காலத்தில் அதற்குப் பலனளிப்பார். பதில் வரத் தாமதித்தாலும், பொறுமையோடும் விடாமுயற்சியுடனும் அனைவரும் முன்னேறிச் செல்லுங்கள்.
218 பொறுமை மற்றும் விடாமுயற்சியின் காரணமாக, பல வருடங்களாகத் தொடர்ந்து செய்யப்படும் ஒரு சிறிய முயற்சி, சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் ஒரு பெரிய முயற்சியை விட மேலானதாக இருக்க முடியும். தேவனுடைய ஆசீர்வாதமும் என்னுடைய ஆசீர்வாதமும் உங்களுடனே இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஆமென்.