1வெளிப்படுத்தின விசேஷம் 14:6 முதல் 10 வரை இன்று காலை நான் எனது பாடத்தை எடுக்கிறேன். நான் வாசிக்கிறேன்: "பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன், அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய (everlasting) நற்செய்தியை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள், அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது: வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான். வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளையும் குடிக்க பண்ணினாள்! என்றான் அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்ப்பிக்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்." ... என்றான்.
2நல்லது! முழு பூமியும் ஒரு எழுப்புதலுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறது. அவ்விதமான ஒரு வேண்டுதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்பொழுது, தேவனும் அதற்கு பதில் அளிப்பார். ஆனால் திரும்ப அளிக்கப்படுகிற வார்த்தையினால் மாத்திரமே எழுப்புதலானது வருகிறது. யூதர்கள் ஒரு எழுப்புதலை எதிர்நோக்கியிருந்தனர், ஆனால் அவர்களது ரசனைக்கு ஏற்ப எதிர்பார்த்தனர்.
3இப்பொழுது திரும்பவும் 6 வது வசனத்திற்கு வருவோம், 6 வது வசனத்தின் தூதன் எங்கிருந்து வருகிறான்? இந்த தூதன் வார்த்தையின் பண்டகசாலையிலிருந்து வருகிறான், அது சங்கீதம் 119:89 ன் படியாக பரலோகமாக இருக்கிறது, மற்றபடி வேதாகமத்திலிருந்து அல்ல. தேவனுடைய வார்த்தையானது பரலோகத்திலிருந்து ஒரு தூதன் மூலமாக வருகிற வேளையில் பிசாசினுடைய வார்த்தையானது பாதாளத்திலிருந்து குருமார்கள் பள்ளியினூடாக வருகிறது. திருச்சபைக்கு மாதிரியாக பரலோகத்தில் உள்ள, ஆலயத்திலிருந்து இந்த தூதன் வருகிறான், மற்றபடி அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்திலிருந்து, வத்திக்கானில் இருந்து அல்லது அமெரிக்காவிலிருந்து அல்ல. தேவன் அதை மோசே, ஏசாயா, எசேக்கியேல் மற்றும் எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் வெளிப்படுத்தினார்.
4பவுலும் அப்போஸ்தலரும் பரலோகத்தில் உள்ள இந்த மாதிரியை கண்டு பூமியில் அதன் அஸ்திபாரத்தை போட்டனர். 1 கொரிந்தியர் 3:10 லிருந்து 11 மற்றும் எபேசியர் 2:20 அதை தெளிவாக காண்பிக்கிறது. ஆகையால், இப்பொழுது பூமியின் மீதெங்கும் நாம் காண்கிறதான இந்த எல்லா சபைகளுடைய, மறைபரப்பு பணிகள் மற்றும் ஊழியங்களுடைய அஸ்திபாரம் எங்கேயுள்ளது? இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் பாதாளத்திலிருந்து எழும்பி அழிவுக்குச் செல்லும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மரணமும் மரித்தோரின் வாசஸ்தலமும் அவைகளுடன் சேர்ந்து கொள்ளும். அவர்கள் இந்த மற்றும் அந்த காரியங்களின் பேரில் ஆதரவுகளுக்காகவும் அஸ்திபாரங்களுக்காகவும் வேதாகமத்தில் இங்கேயும் அங்கேயும் தேடுகின்றனர் ஆனால் அவர்கள் பாதாளத்திலிருந்து எழும்பி அழிவுக்குச் செல்வர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
5இன்றைக்கு, மற்ற சபைகளைப் போலவே, பிரன்ஹாமிஸ்டுகளும் வில்லியம் பிரன்ஹாமின் சூழலில்தரித்திருப்பதற்காக அனைத்து பிரயாசங்களையும் எடுத்துவருகின்றனர், அது பேய்த்தனமானதாக இருக்கிறது! அவைகள் அந்த அதே லூதரன் பிசாசுகளாக இருக்கின்றது. அவர்களுடைய சபைகள் ஒன்றில், மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலாக, மேய்ப்பர் உட்பட, முஸ்லீம்களைப் போன்று தங்கள் பெயர்களை மாற்றினவர்களாக உள்ளனர். சிலர் சொல்கின்றனர்: "நாங்கள் ஏழு இடிமுழக்கங்களில் விசுவாசிக்கிறோம்..." சிலர் சொல்கின்றனர், "சகோதரன் பிரன்ஹாம் சொல்கிறார்" என நீங்கள் கூறுவீர்களேயாகில் நீங்கள் சத்தியத்தில் இருக்கிறீர்கள்..." என்கின்றனர், மற்றும் சிலர் "நாங்கள் மூன்றாம் இழுப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்..." என்கின்றனர், பின்னும் சிலர் மறுபடியுமாக "செய்தி என்ன கூறுகிறதோ அதையே நாங்கள் கூறுகிறோம் ..." என்கின்றனர். நீங்கள் பார்க்கிறீர்களா? ஒருவன் தேவனை கைவிடும் பொழுது, அவ்விதமாகத்தான் அவன் ஆகின்றான்.
6நல்லது, அனைத்து தீர்க்கதரிசி செய்தியாளர்களும் தங்களது செய்தியை பரலோகத்தில் இருந்து பெற்றுக்கொண்டனர் என்பதை நாம் அறிவோம், நாம் இந்த 6 மற்றும் 7 வசனங்களின் செய்தியை இப்பொழுது பார்க்கலாம். இது ஆப்பிரீக்கனுக்கு சொல்லப்படுகிற முதலாவது செய்தியாக இருக்கிறது, உதாரணத்திற்கு ஆகாய மண்டலத்தை: அதாவது நட்சத்திரங்களையும் சூரியனையும் சந்திரனையும் சிருஷ்டித்தவரும், ஜாதகம், மாய மந்திர முறைமைகள், மதங்கள் என்பவைகள் அனைத்திலும் செயல்படுகிற விழுந்து போன தூதர்களையும் சிருஷ்டித்தவருமான மெய்யான தேவனை தொழுதுகொள்ள வேண்டுமென்று இந்த வசனங்கள் சொல்கிறது. தேவன் ஒருபோதும் ஒரு மதத்தில் இருந்ததில்லை. மெய் கிறிஸ்தவம் ஒரு மதமல்ல, ஆனால் ஜீவனாக இருக்கிறது.
7இந்த தூதன் ஹெய்த்தியன்களையும் (Haitians) அல்லது பெனிநீசுகளையும் (Beninese) வூடு மந்திரவாதம் (voodoo), விக்கிரகாராதனை, பாரம்பரியங்கள் மற்றும் அனைத்து வழிபாட்டு முறைகளையும் விட்டு... வெளியேறும்படி அழைக்கிறார். நமது ஜீவனத்துக்காக தேவன் நிலத்தை படைத்தார், நாம் அதை ஆராதனைக்குரிய புனித சோலைகளாகவோ அல்லது தோப்புகளாகவோ, சிலைகளாகவோ முகமூடிகளாகவோ ஆராதிப்பதற்காக மாற்றிப்போடக்கூடாது. இதுதான் முதல் தூதனின் செய்தி. மேலும் இந்த முதல் தூதன், அது அப்போஸ்தலன் பவுல். கடல் மற்றும் நீரூற்றுகள் ஆராதிக்கப்படுவதற்காக உருவாக்கப்படவில்லை, ஆனால் நாம் தேவனை தான் ஆராதிக்கவேண்டும்; அவர்தான் சிருஷ்டிகரான தேவன். நீங்கள் பார்க்கிறீர்களா?
8பின்னர், வசனம் 8 இல், இரண்டாவது தூதன் வெளியே வந்தான், ஒரு குருமடம் அல்லது ஆயர் பள்ளியிலிருந்து அல்ல, ஆனால் பரலோகத்திலிருந்து வந்தான். ஏதாவது இறையியலை அறிவிக்கவா? இல்லை! நாற்பது ஆண்டு பழமையான அல்லது நூறு ஆண்டு பழமையான பிரசங்கத்தை அறிவிப்பதற்காகவா? இல்லை! சென்று போதகர் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் வார்த்தையை வெளிப்படுத்தவா? இல்லை! ... போய், நாற்பது வருடங்களுக்கு முன்பு யாரோ ஒருவர் கூறினதின் பேரிலான தனது கண்ணோட்டத்தை அளிக்கவா? இல்லை!
9ஆனால் மற்றொரு வரம்பில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படியான வேளை வந்தது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. பாபிலோனின், கத்தோலிக்க சபையின் நியாயத்தீர்ப்பை அறிவிக்கும்படி வருகிறான்; ஏனென்றால் அவள் யுத்தம் பண்ணி, பரிசுத்தவான்களை கொலை செய்து மேலும் எல்லா வழியிலும் இரட்சிப்பை கெடுத்துப்போட்டாள். இவை வெளிப்படுத்துதல் 17ல் தெளிவாக்கப்பட்டுள்ளது. அது 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் சீர்திருத்துதலோடு நிகழ்ந்தது. அது புரோட்டஸ்டன்டிசத்திற்கு (Protestantism) வழிவகுத்தது.
10சீர்திருத்தத்திற்குப் பிறகு, மார்ட்டின் லூதர், உல்ரிச் ஸ்விங்லி, ஃபாரல், ஜான் கால்வின், ஜான் வெஸ்லி இன்னும் மற்றவர்களும் மரித்த பின்னர், சபைகளானது திருச்சபையை (Church) மூச்சுத் திணறப்பண்ணின. அதனால் தேவன் மூன்றாவது ஒரு தூதனை அனுப்பினார், பூமியின் குடிகள் அனைவருக்கும் ஒரு தீர்க்கதரிசன செய்தியுடன் மூன்றாவது செய்தியாளன். சத்தியத்தை கொணரவோ அல்லது திரும்ப அளிக்கவோ தேவன் ஒரு போதும் ஒரு சபையையோ (a church) அல்லது ஒரு கூட்ட மனிதரையோ ஒருபோதும் எழும்பப்பண்ணப் போவதில்லை ஆனால் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் ( a prophet-messenger). மேலும் தீர்க்கதரிசி, தேவனுடைய வாயாக, தேவனுடைய சார்புரிமைப் பேச்சாளனாக, தேவனிடமிருந்து வந்த செய்தியை சுமப்பவனாக, தேவனிடமிருந்து வந்த ஒரு தூதனாக இருக்கிறபடியால் இந்த தீர்க்கதரிசியை புறக்கணிப்பது தேவனை புறக்கணிப்பதாக இருக்கிறது. மற்றபடி அறிவின் வார்த்தைகளை கொடுக்கும் ஒருவனோ அல்லது வஞ்சக அதிசயங்கள் மற்றும் வெளிப்பாடுகளுடன் வந்து, அந்த வெளிப்பாடுகள் எப்போதும் உண்மையாய் இருப்பினும், ஜெப வேளைகளில் ஜனங்களை தரையிலேவிழ கீழே தள்ளும் ஒருவனோ அல்ல. [ஆசிரியர் குறிப்பு: சபையார் “ஆமென்” என்கின்றனர்].
11தீர்க்கதரிசி என்பதற்கான எபிரேய வார்த்தை "நபி" (nabi) ஆகும்; மேலும் அந்த வார்த்தையின் பொருள்: "செய்தித் தொடர்பாளர்” மற்றபடி அற்புதங்களை சுமப்பவனென்றோ அல்லது அபிஷேகத்தை சுமப்பவனென்றோ அல்ல ஆனால் செய்தித் தொடர்பாளர்” (spokesman). நீங்கள் பார்க்கிறீர்களா? தீர்க்கதரிசி செய்தியாளன் அவனது தலைமுறைக்கு தேவனுடைய வார்த்தையின் தன்மையாகவும் (the attribute) வெளிப்படுதலாகவும் (the manifestation) இருக்கிறான்.
12எபேசியர் 4:11 ன் ஒரு ஊழியம் செயல்படாவிட்டாலும், தேவனுடைய திட்டம் நிறைவேறும்.ஆனால் தேவன் தீர்க்கதரிசி செய்தியாளன் இல்லாமலோ அல்லது தீர்க்கதரிசிக்கு மாற்று இல்லாமலோ அதை செய்யமாட்டார். அவன் யோனாவைப் போன்று மறுக்கட்டும், தேவன் அவனை உபயோகிப்பார்... மேலும் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன், அது ஏதோ ஒரு பெரிய சபையை உடையவனாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் அது மோசே, ஏசாயா மற்றும் எரேமியா... போன்று ஒரு புத்தகத்தை உடையவனாக இருக்க வேண்டும்.
13மேலும் இந்த ஞாயிற்றுக்கிழமை, பூமியிலுள்ள அனைத்து மொழிகளிலும் உலகம் முழுவதிலும் லட்சோபலட்ச பிரசங்கங்கள் கொடுக்கப்படும், மேலும் பூமியின் அனைத்து மொழிகளிலுமுள்ள இந்த லட்சக்கணக்கான பிரசங்கங்களில் இருந்து, ஒன்றேயொன்று மட்டும் பாதுகாக்கப்பட்டு, தக்கவைக்கப்பட்டு, என்றென்றைக்கும் உலகத்தில் மேன்மையாக உயர்த்தப்படும். தலைமுறை தலைமுறையாக இந்த பிரசங்கம் மறைக்கப்பட மாட்டாது, இந்த பிரசங்கம் அந்த தலைமுறையின் தீர்க்கதரிசி செய்தியாளன் ஒருவனுடையதே. அது ஒன்று மாத்திரமே தேவன் அங்கீகரிக்க முடியும்.
14எரேமியாவின் நாட்களில், அங்கே அநேக புத்தகங்கள் இருந்தன, அங்கே அநேக “தேவனுடைய வார்த்தைகள்” இருந்தன, அங்கே அநேக தீர்க்கதரிசிகள் இருந்தனர், ஆனால் ஒரே ஒரு தீர்க்கதரிசியின் வார்த்தைகள் மட்டும் நூற்றாண்டுகளாக நமது காலம் வரைக்கும் எதிர்த்து நின்றது, அவை எரேமியாவின் வார்த்தைகளாக இருந்தது. உலகத்தோற்ற முதற்கொண்டு, தலைமுறை தலைமுறையாக அது அந்தவிதமாகவே உள்ளது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
15மேலும், ஒரு தீர்க்கதரிசி-செய்தியாளன் அனுப்பப்பட்டிருக்கிறான் என்றால், அங்கு பூமியின்மேல் எங்கும் சத்தியம் இருக்கவில்லை என்பதே அதற்கு காரணம். அவனுடைய செய்தி மட்டுமே அவனது மணி வேளையின் ஒரேயொரு சத்தியம். அவனே சத்தியத்தின் பண்டகசாலை. அவனது காலத்தில் தேவனுடைய வார்த்தையின் சட்டத்தை இயற்றுபவனாகஅவன் இருக்கிறான். நீங்கள் பார்க்கிறீர்களா?
16நோவா பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, நோவாவின் செய்தியினாலேயல்லாமல் ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது. எரேமியா பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது எரேமியாவின் செய்தியினாலேயல்லாமல், ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது. எலியா பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, எலியாவின் செய்தியினாலேயன்றி ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது. கர்த்தராகிய இயேசு எருசலேமின் தெருக்களில் பிரசங்கிக்கையில், கர்த்தராகிய இயேசுவின் செய்தியினாலேயன்றி ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது. அவர் "என் மூலமாய் அன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வர முடியாது" என்றார். நீங்கள் பார்க்கிறீர்களா?
17மார்ட்டின் லூதர் ஜெர்மனியில் பிரசங்கிக்கையில், மார்ட்டின் லூதரின் செய்தியினாலேயல்லாமல் ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது. ஜான் வெஸ்லி பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, ஜான் வெஸ்லியின் செய்தி இல்லாமல் பூமியெங்கும் ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது. வில்லியம் பிரன்ஹாம் அமெரிக்காவில் பிரசங்கித்தபோது, வில்லியம் பிரன்ஹாமின் செய்தியினாலேயன்றி பூமியெங்கும் ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது. இன்று, தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவின் செய்தியினாலேயன்றி நீங்கள் இரட்சிப்படைய முடியாது. அவர்களுடைய காலத்தில் நீங்கள் ஒரு தேவனின் பிள்ளையாக இருந்திருந்தால், நீங்கள் அவர்களை விசுவாசித்திருப்பீர்கள், இன்றும் அது அவ்வாறு தான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
18மேலும் தீர்க்கதரிசி செய்தியாளன் காட்சியில் பிரவேசிப்பதற்கு முன்னமே, குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய ஒரு நேரத்தில், தேவன் அவ்வாறான ஒரு காரியத்தை நிகழச் செய்கிறார் என சில வேதாகம தீர்க்கதரிசனங்கள் அவர்களை அறிவித்திருந்தது,. நீங்கள் பார்க்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து லூக்கா 4:14 முதல் 21 இல் ஏசாயா 61:1 முதல் 2 அது தம்மை குறிக்கிறது என்று காண்பித்தார். மத்தேயு 3:1 முதல் 3 ல் யோவான் ஸ்நானகன் ஏசாயா 40:3ல் அது அவனை குறிக்கிறது என்று காண்பித்தான். அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:47ல் அப்போஸ்தலன் பவுல் ஏசாயா 49:6 அது தன்னை குறிக்கிறது என்று காண்பித்தான்... அது உண்மையான தீர்க்கதரிசிகளுக்கும் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை காண்பிக்கிறதாகவும் இருக்கிறது.
19மேலும், ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசியினால் மட்டுமே தேவன் தமது ஜனங்களை வழி நடத்துகிறார் என்பதை ஒவ்வொரு யூதனும் அறிந்திருக்கிறான். ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசியினாலேயல்லாமல் நாம் தேவனுடைய சித்தத்திற்குள்ளாக இருக்கமுடியாது. யூதர்களைத் தவிர, இந்த பாடத்தை புறிந்து கொள்கிறவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கின்றனர். இஸ்லாமியர்கள் பிரன்ஹாமிஸ்டுகளை போல ஒரு தீர்க்கதரிசியை பின்பற்றுகிறார்கள். ஆனால், ஏற்கனவே மரித்துப்போன தீர்க்கதரிசிகள். அது சாத்தானிய கொள்கையாக (Satanism)இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
20ஆயினும், மனிதனுடைய துரதிஷ்டம் என்னவென்றால், ஏதேனின் வீழ்ச்சி தன்னை மிருகங்களுக்கும் கீழாக அவனை நிறுத்தியது என்பதைபுறக்கணிக்கிறான். மேலும் 2 நாளாகமம் 20:20 ன் படி அவன் உயிர்வாழும் தீர்க்கதரிசியை நம்பவேண்டியவனாக இருக்கிறான், அது கூறுகிறது "... அவர்கள் வனாந்தரத்திற்குப் போகப் புறப்படுகையில், யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே கேளுங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அவ்பொழுது நிலைப்படுவீர்கள், அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள் அப்பொழுது சித்திபெறுவீர்கள்..." நீங்கள் பார்க்கிறீர்களா?
21ஒரு பாஸ்ட்ரோ (pastor) அல்லது நான்கு வகை ஊழியங்களை ஒன்று சேர்த்தாலோ சபையை பரிபூரணப்படுத்த முடியாது என்பதை அறிந்துகொள்ளுங்கள். எடுத்துக் கொல்லப்படுதல் நிகழ்கிற வேளையிலே அங்கே பூமியின்மேல் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் இருப்பான்... நீங்கள் பார்க்கிறீர்களா? ஓசியா 12:13: "யேகோவா ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார், ஒரு தீர்க்கதரிசியினால் இஸ்ரவேல் காக்கப்பட்டான்" என்று கூறுகிறது. தீர்க்கதரிசி மோசேயினால் யேகோவா இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார், மேலும் தீர்க்கதரிசி யோசுவாவினால் இஸ்ரவேல் பாதுகாக்கப்பட்டான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
22நல்லது, மூன்றாம் தூதன் என்ன சொல்கிறான்? மூன்றாம் தூதன் கத்தோலிக்க சபையை மாத்திரமல்ல ஆனால் பிற எல்லாச் சபைகளையும், மறைபரப்பு நிறுவனங்களையும், ஊழியங்களையும் கூட கண்டிக்கிறான். தேவனுடைய ஊழியக்காரர்களல்லாதிருந்தும் தங்களை அவ்விதம் காண்பிக்கிறவர்களை கண்டிக்கிறான். பின்னர் இரண்டாம் கட்டத்தில், அவன் மிருகத்தின் முத்திரையைப் பற்றி பேசுகிறான். ஆனபடியால் மிருகத்தின் முத்திரை என்னவென்று அறிந்தவனாக இருக்கிறான், அதனாலே அவன் அதை பற்றி பேசுகிறான்.
23இப்பொழுது, நாம் தேவனுடைய வார்த்தைக்கு திரும்புவோம். ஏதாவது ஒன்றை மோசமானது என்று தேவன் சொல்லும் போது, அதிலிருந்து நல்ல விஷயங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டாம். முதலாவதாக, உயிரியல் (biology) என்றால் என்ன அர்த்தம்? [ஆசிரியர் குறிப்பு: ஒரு சகோதரன் "உயிர்களைப் பற்றி படிப்பது" என்று பதிலளிக்கிறார்]. மிக அருமை! உயிரியல் என்றால் உயிர்களைப் பற்றி படிப்பதாகும். புவியியல் (geology) என்றால் என்ன அர்த்தம்? [ஆசிரியர் குறிப்பு: ஒரு சகோதரன் "பூமியைப் பற்றி படிப்பது" என்று பதிலளிக்கிறார்]. மிக அருமை! புவியியல் (geology) என்றால் பூமியைப் பற்றி படிப்பதாகும். அந்த கிரேக்க வார்த்தை "தியோ" ("Theo") என்பதற்கு இறை என்றும் "லாஜி" ("logy") என்பதற்கு பயிலுதல் என்றும் பொருள்படும் என்பது நமக்கு தெரியும். ஆனபடியால் இறையியலின் (theology) பொருள் இறைவனைக் குறித்து படித்தலாகும்.
24வரையறையின்படி, இறையியல் என்பது புத்திக்கூர்மையினால் கிடைக்கப்பெற்ற அறிவின் முழுமையாக இருக்கிறது. மேலும் வார்த்தை என்பது முழுவதும் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களின் முழுமையாக இருக்கின்றது. ஆகையால், இறையியல் என்பது ஒரு முன்முயற்சியாகும் மேலும் ஒரு பேய்த்தன பாசாங்காக இருக்கிறது ஏனென்றால் தேவன் தாமே தம்மை யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவனுக்கு தமது வார்த்தையை வெளிப்படுத்துவதும் அல்லது அவர் தம்மையே வெளிப்படுத்துவதுமாக அது இருக்கிறது என நாம் அறிந்திருக்கிறோம்.
25அதனால் தான் நாம் அந்த கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளுக்கும், மறைபரப்பு பணிகள் மற்றும் ஊழியங்கள் உட்பட வெளிப்படுத்தப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட சபைகள் என அழைக்கப்படுகிற சபைகளுக்கும் செல்ல முடியாது. மேலும் அந்த லூயிஸ் செகன்டு, தோம்ஸன், ஸ்கோஃபீல்டு மற்றும் அதுபோன்ற பிற வேதாகம பதிப்புகளை நாம் உபயோகிக்கக் கூடாது ஏனென்றால் அவைகள் இறையியல் வேலைப்பாடுகளாக உள்ளது.
26ஒரு விக்கிரக பூசாரி வேதாகமத்தை மொழிபெயர்த்தால், அது சிறந்தவிதமாக செய்யப் பட்டிருந்தாலும், நான் விலகியிருப்பேன், ஏனென்றால் மாந்திரீகத்தில் நான் விசுவாசம் கொள்கிறதில்லை மேலும் அதற்கு பின்னாக நிற்கிற ஆவி, அது பிசாசாக இருக்கிறது. அப்போஸ்தலர்களுடைய சீஷரான, ஆரிகன் கூறினது என்னவென்று, வரலாற்றாளரான டானியல்-ரூப்ஸால் குறிப்பிடப்பட்டுள்ளது இதோ: "......இறையியல் என்பது ஒரு அறிவியலாக இருக்கிறது அதுதானே விசுவாசத்தின் பொருள்கள் மீது நிலைப்படுத்தப் பட்டதாக இருக்கிறது ஆனால் அது தனது முடிவுகளை அறிவுக்கூர்மையின் ஒழுங்கில் இருந்தே இழுத்துக் கொள்கிறது மேலும் அது கண்டிப்பாக வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களான, தேவனுடைய வார்த்தையினால் வேறுபடுத்தி காட்டப்படவேண்டியதாக உள்ளது." [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறனர்].
27இந்த மூன்றாம் தூதன், பாபிலோனின் கண்டனத்திற்காக மட்டுமல்ல ஆனால் அதன் சொரூபத்தின் கண்டனத்திற்காகவும், அதாவது அனைத்து சுவிசேஷக, புரோட்டஸ்டன்டு மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளையும் கூட கண்டிக்கவும் மேலும் அதன் முத்திரையை, அதாவது அந்த பாதிரியார்கள் மற்றும் மேய்ப்பர்களினூடாக பூமியில் கிரியை செய்கின்ற பரிசுத்த ஆவியை (the holy spirit) திரைநீக்கி காண்பிக்கவும், வெளியே வருகிறான்.
28கிறிஸ் ஒயாக்கிலோம், டேவிட் ஒளவொர், இம்மானுவேல் மாகான்டிவா, உபர்ட் ஏஞ்சல், டி.பி.ஜோசுவா மற்றும் டேவிட் ஒயேடிபோ போன்றோர்களினூடாக கிரியை செய்கின்ற பிசாசுகளை திரைநீக்கி காண்பிக்கவும் இந்த மூன்றாம் தூதன் வருகிறான்.
30பென்னி ஹின், மானாசே ஜோர்டன், ஜெஸ்சி ஜாக்ஸன், ஜான் ஹாகி, பாட் ராபட்சன், யோவாக்கிம் கான்க்ளேவ்ஸ், டொனால்டு பர்ணல், அலெஜான்ட்ரோ புல்லோன் மற்றும் குயிலெர்மொ மால்டொனால்டோ போன்றோர்களினூடாக கிரியை செய்துவருகின்ற பிசாசுகளை திரைநீக்கி காண்பிப்பதற்காகத்தான் இந்த மூன்றாம் தூதன் வருகிறான். யோவேல் 2:28 மற்றும் 1கொரிந்தியர் 2:4 முதல் 5ன் கீழ்வரும் சூனியக்காரர்கள் மற்றும் மாயவித்தைக்காரர்கள்.
31எந்தவொரு சபையோ, எந்தவொரு மனிதனோ, அவன் எப்பேர்பட்டவனாக இருந்தாலும், உங்களை வஞ்சிக்க அனுமதியாதேயுங்கள்! எவ்வித இறையிலும் (theology) உங்களை வஞ்சிக்க அனுமதியாதேயுங்கள்... ஆகையால் தேவனுடைய வார்த்தையென்பது இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமூக, நன்நெறி, அறிவியல்ப் பிரகாரமான, சுவிசேஷக பிரசங்கமாக இல்லாமல், ஒரு தலைமுறைக்கு, தேவனால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஒரு தீர்க்கதரிசன வெளிப்பாடாக இருக்கிறது, மேலும், அது அந்த தலைமுறையின், ஒரேயொரு மனிதனான, உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளன் தான். மேலும் எபேசியர் 4:11ன் நான்கு ஊழியங்கள் அதனுடைய எதிரொலியாக ஒருபோதும் அதற்கு முரண்படாமல் இருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறனர்].
32அந்த கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளிலும், வெளிப்படுத்தப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்படவை என அழைக்கப்படுகிற சபைகளான மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, நாற்சதுர, ஆங்கிலிக்கன், நசரேய, அனாபாப்டிஸ்டு, மார்மோன், பெந்தெகொஸ்தே சபைகள்,... உட்பட, மேலும் உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளன் மூலமாக தேவன் நடப்பித்துக் கொண்டிருக்கிறவைகளுக்கு புறம்பாக, எல்லா இடங்களிலும் வளர்ந்துவருகிற அநேக சபைகளிலும், ஜனங்கள் வஞ்சக பிசாசுகளை "பரிசுத்த ஆவி" என அழைப்பதைப்பற்றினதான, தேவனுடைய அனைத்து ஆலோசனையும் நான் உங்களுக்கு அறிவித்துள்ளேன் என, இயேசு கிறிஸ்துவின் அடிமையான, நான், காக்குவ் பிலிப்பு எண்ணுகிறேன்.
33உபதேச வேற்றுமைகள் இருந்தபோதிலும், சாத்தான், அவன்தான் அவர்களது தேவன், அவர்களை சபைகளின் சங்கங்களில், சம்மேளனங்களில், ... ஏனைய ஐக்கியங்களில் கொண்டு வந்து ஒன்றாகச் சேர்க்க செயல்பாட்டில் இருக்கிறான் ஆனால் எடுத்துக் கொள்ளப்படுதலும் பரலோகமும் அவர்கள் அக்கறை கொள்வதில்லை என்று அறியுங்கள். மேலும் அவர்களின் எண்ணிக்கையில், அனைத்து பிரன்ஹாமிஸ்டுகளையும் நாம் இப்பொழுது சேர்த்து எண்ணவேண்டும்.
34மேலும், அந்த ஞானிகளைப்போன்று, நட்சத்திரத்தை மீண்டும் காணும்படியாக, நீங்கள் எருசலேமிலிருந்து, இந்த குழப்பத்திலிருந்து, வெளியேற வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறனர்].
35மேலும் பாப்டிஸ்டுகளோடு உள்ளது போன்று ஒவ்வொரு சபையும் அனேக கிளைகளை உடையதாக இருக்கிறது, அவைகளாவன: சுயாதீன பாப்டிஸ்டு சபை, அடிப்படை பாப்டிஸ்டு சபை, அப்போஸ்தல பாப்டிஸ்டு சபை, மிஷனரி பாப்டிஸ்டு சபை, தெற்கத்திய பாப்டிஸ்டு சபை, முழு சுவிசேஷக பாப்டிஸ்டு சபை, கிரியைகள் மற்றும் ஊழியங்களின் பாப்டிஸ்டு சபை, ஜீவன் மற்றும் விசுவாசம் பாப்டிஸ்டு சபை, குத்துவிளக்கு பாப்டிஸ்டு, சுவிஷேக பாப்டிஸ்டு சபை, பாப்டிஸ்டு சுவிஷேக சபை, பெந்தேகொஸ்தெ பாப்டிஸ்டு சபை, தீர்க்கதரிசன பாப்டிஸ்டு சபை, எம்மாவூர் பாப்டிஸ்டு சபை, முழு அக்கினி பாப்டிஸ்டு சபை, சர்வதேச பாப்டிஸ்டு சபை, கிறிஸ்துவின் பாப்டிஸ்டு சபை, முற்போக்கு பாப்டிஸ்டு சபை, மறுசீரமைக்கப்பட்ட பாப்டிஸ்டு சபை, வேதாகம பாப்டிஸ்டு சபைகளை உடையவர்களாக உள்ளோம் ... 70க்கும் மேற்பட்ட கிளைகள், அவைகள் ஒவ்வொன்றுக்கும் அதனுடைய சொந்த உபதேசம், அதனுடைய தலைவர், அதனுடைய பரிசுத்த ஆவி (holy spirit), அதனுடைய மேய்ப்பர் பள்ளி இன்னும் அதுபோன்றவைகளை உடையவைகளாக உள்ளன. இதுபோன்ற அனைத்து குழப்பங்களும் அழிவுக்குச் செல்லும் என வேதாகமம் கூறுகிறது.
36ஒரு தேவர்கள் கூட்டுச்சபையினனை (assembly of gods) அல்லது பாப்டிஸ்டை தேவன் இரட்சிப்பாரானால், பரிசேயர்கள், பிலேயாம், யூதாஸ் மற்றும் காயீனைப்பற்றி என்ன? சாத்தானும் அவனது பிள்ளைகளும்: "நீங்கள் ஒரு பாப்டிஸ்டாகவோ, தேவர்கூட்டுச் சபையினனாகவோ, ஒரு மறுமலர்ச்சி எழுப்புதல் சபையின் (revival church) உறுப்பினராகவோ அல்லது வேறெதனுடையதாகவோ இருந்தாலென்ன, நீங்கள் நல்லதொரு வாழ்கை வாழ்கிறீர்களானால், அதுவே மிக முக்கியமான காரியம்..." என கூறுகின்றனர். இயேசுவின் மந்தையில் அங்கே சுத்தமான நாய்களும், சுத்தமான வெள்ளாடுகளும், சுத்தமான பன்றிகளும் உண்டென, நாம் நம்பும்படி செய்ய, அவர்கள் விரும்புகின்றனர்... ஆனால் அவைகள் செம்மறியாடுகளாக இருத்தல் வேண்டும். மேலும், அவர்கள்: "பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அல்லது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீ ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும், அதல்லாம் ஒன்று தான்" என்று கூறுவர், இருப்பினும், அவ்விதம் கூறுகிறவன் "சபிக்கப்பட்டவன்" என்று கலாத்தியர் 1:8 கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
37ஏப்ரல் 1993ல், எனது மனமாற்றத்திற்கு முன், நான் இரண்டு தரிசனங்களைப் பெற்றபோது, முதலாவது தரிசனம் ஊழியத்திற்கான அழைப்பை குறிக்கிறது மேலும் இரண்டாவது தரிசனம் பணிநியமனம், எதை நான் ஆகாயத்தில் எழுதப்பட்டிருந்ததாக கண்டேனோ அதை தான் நான் இன்று பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன், நான் பாலைவனத்தில் நின்று கொண்டிருந்தேன், மேலும் அது ஒரு ஆவிக்குரிய வனாந்திரம் என எனக்கு அறிவிக்கப்பட்டது ஏனென்றால் ஜனங்கள் என்னை நம்பமாட்டார்கள். மேலும் நான் முதல்முறையாக ஒரு சபைக்கு சென்றது இந்த இரண்டு தரிசனங்களுக்கு பிற்பாடுதான். அது ஒரு பாப்டிஸ்டு சபையாக இருந்தது என்பதைக்கூட நான் அறிந்திருக்கவில்லை...
38அந்தநாள் பிற்பகல் சுமார் 3 மணியளவில், எதை ஆகாயத்தில் நான் பார்த்தேனோ அதை மட்டுமே நான் பிரசங்கிக்கிறேன் ஜனங்கள் என்னை விசுவாசிக்கவில்லை மற்றும் அவர்கள் என்னிடம் சண்டையிடுகின்றனர். பாலைவன தேள்களும் பாம்புகளும் என்னோடு சண்டையிடுகின்றன ஆனால் தேவன் அவர்களுக்கும் அவர்களின் விஷத்திற்கும் மேலாக எனக்கு வல்லமையை கொடுத்தார். அவர்கள் என்னை பிசாசு, அந்திகிறிஸ்து, சச்சரவாளி (troublemaker), சாத்தானின் தூதன் என்றழைத்தனர், மேலும் நான் எதை பிரசங்கிக்கிறேனோ அதனை கசப்பான (nivaquine) பிரசங்கம்... என்றனர். பழைய ஏற்பாடின் தீர்கதரிசிகளோடும், இயேசு கிறிஸ்துவோடும், அப்போஸ்தலரோடும் அது அவ்விதமாகவே இருந்தது... மேலும், வேதவார்த்தைகள் குழப்பப்படாதபடிக்கு, தேவன் மனிதர்களை பூமியின் மீது அனுப்பிக் கொண்டிருக்கும் வரை, அது அவ்விதமான ஒழுங்குக்குள்ளாகவே இருக்கும். அங்கே தேவனில் குழுப்பமோ அல்லது முரண்பாடோ எதுவுமில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
39ஆசாரியர்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள் இயேசுவுக்கு எதிராக ஒன்று கூடினர். லூக்கா 23:12 இதை கூறுகிறது: "அதற்கு முன்னர் ஒருவருக்கு ஒருவர் சத்துருக்களாக இருந்த பிலாத்தும் ஏரோதும் அன்றைய தினமே பகைமை நீங்கி ஒருவரோடு ஒருவர் நண்பர்களாயினர்”. சகோதரர்களே, கர்த்தருடைய நாமத்தில் நான் உங்களுக்கு கூறுகிறேன், வெவ்வேறு உபதேசங்களை உடைய ஜனங்கள் உங்களுக்கு எதிராக ஒன்றுகூடும்பொழுது, களிகூருங்கள்! ஓ!, நவீன பரிசேயர்களே, உங்களுடைய விருப்பங்களுக்கும், சபை தத்துவங்களுக்கும் நானொரு அச்சுறுத்தலாக இருக்கிறேன் என்பது உண்மைதான் ஆனால் தேவனுக்கு பயந்திருங்கள்!
40அங்கே சபைகள், கள்ளத்தீர்க்கதரிசிகளும் எல்லாவித அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதர்களையும் கொண்டிருந்தது, அனைத்து விதமான அற்புதங்களுடன் பூமியங்கும் சென்று கொண்டிருந்ததான, லோத்து மற்றும் நோவாவின் தருணங்களில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் மற்றும் சபை ஐக்கியங்கள் மற்றும் சம்மேளனங்கள் ... போன்றவைகளில் இருக்கிறது போல, அங்கே கேட்டின் பிள்ளைகள் சிலர், சபைகளுக்கும் ஸ்தாபனங்களுக்கும் மேலாக ஸ்தாபிக்கப் பட்டுள்ளனர். இரட்சிப்பின் எவ்விதமான வழியும் சீர்கெட்டுப் போயிருந்தது. ஆனால் நோவாவில், ஒரே மெய்யான தேவனான யேகோவாவையும், அவர் அனுப்புவதற்கு நலமென்று கண்ட, அவரது உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளனான, நோவாவையும், அடையாளம் கண்டுகொள்வதில் தான் நித்திய ஜீவன் அடங்கியிருந்தது என நாம் காண்கிறோம். நோவா அவர்களுக்கு எச்சரிப்பாக இருந்தான், அவர்களோ எச்சரிப்பை: "நியாயத்தீர்ப்பு" என்றனர்.
41கடந்த காலத்தில் கத்தோலிக்க சபை செய்தது எதுவோ, அதையே புரோட்டஸ்டன்டு மற்றும் சுவிசேஷக சபையினரான, இந்த புதிய பேய்த்தன பரியாச ஓவியமும் (satanic caricature) செய்துவருகின்றது. இந்த கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளில், இன்னும் பிறவற்றில் கிரியை செய்துவருகிற அந்த ஆவிகளை, பரிசுத்த ஆவி என ஜனங்களால் எப்படி நம்பமுடிகிறது? உங்களது கரங்களில் வேதாகமத்தை வைத்துக் கொண்டு அந்த குறி சொல்லுகிறவர்கள் மற்றும் விக்கிரக பூசாரிகளின் சட்டைகளிலுள்ளவைகள் அற்புதங்கள் அல்ல ஆனால் வஞ்சக கிரியைகள் என்பதை எப்படி உங்களால் காணாமல் இருக்க முடிகிறது?
42மேலும் இன்று நாம் கொண்டுள்ள இந்த திரள்கூட்டமான தீர்க்கதரிசிகள் அற்புதங்களை செய்கின்றனர், ஒவ்வொருவரும் அதனை கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு முன்பாக சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது அதேவேளையில் அந்த அதே ஜனங்கள் என்னை சபிக்கின்றனர். இருப்பினும், அவர்களது பிரசங்கங்கள் வசனங்களை மனப்பாடம் செய்து கூறல் அல்லது ஓஸ்பானின் புத்தகத்தில் இருந்து அல்லது கிறிஸ்தவ புத்தக கடைகள் என அழைக்கப்படுபவைகளிலிருந்து அல்லது போதக பயிற்சிகூடங்களிலிருந்து வந்த கருத்தரங்குகள், வேதாகமப்பள்ளிகள் அல்லது தாங்கள் ஒருபோதும் அறிந்திராத எவரோ ஒருவர் இணையதளத்தில் வெளியிட்டவைகளிலிருந்து அவர்கள் என்ன கற்றறிந்தனரோ அதுவேயன்றி வேறொன்றுமல்ல! நீங்கள் பார்க்கிறீர்களா?
43சாத்தான் வேதாகமத்தின் அனைத்து தீர்க்கதரிசிகள் போன்றும் செய்து வைத்திருக்கிறான் மேலும் அதனோடு சில ஒட்டுப்போடுதலையும்கூட செய்திருக்கிறான்: ஆபிரகாம்-எலியா, பவுல்-எலியா, யோவான்-எலியா, எலியா-எலிசா, எசேக்கியேல்-எலியா, தானியேல்-எலியா, சாமுவேல்-எலியா, எலியா-அகபு, மோசஸ்-எலியா, இன்னும் அதுபோல ... உண்மையில், அவர்கள் எலிமாக்கள்; விசுவாசிகள் மற்றும் சபை பார்வோன்களின் இருதயத்தை கடினப்படுத்துவதற்கேயன்றி எகிப்திலிருந்து யூதர்களை விடுவிப்பது யன்னேக்கள் மற்றும் யம்பிரேக்களின் அற்புதங்களின் நோக்கமாக இருக்கவில்லை. எந்த தேசத்திலாயினும், தீர்க்கதரிசிகளின் அந்த பெயர்களை நீங்கள் காண்பீர்கள்.
44சகோதரர்களே, சகோதரிகளே, எந்த இடமாயினும், பூமி ஐந்தாவது பரிமாணத்தில் உள்ளது. அவர்கள் தங்கள் சபைகளின் கண்களில் இருக்கும் உத்திரத்தையல்ல ஆனால் அரசியலில் உள்ள துரும்பை பார்க்கின்றனர். ஒன்றுமற்ற, பெருமையுள்ள ஜனங்கள் இறையியல் போதையோடு எல்லாவித பாரம்பரியங்கள், உணர்ச்சிவசப்படுதல், மாயவித்தைகள் மற்றும் வஞ்சனைகளுக்கும் அடிமைப்பட்டிருக்கின்றனர்... ஆனால் அனைத்து சபைகளாலும் அவர்கள் பாராட்டப்படுகின்றனர்.
45மேலும் உபதேசங்களில் வேறுபாடுகள் இருப்பினும், வார்த்தைக்கு தூரமாக அனைத்து விதங்களிலும் அந்த சபைகள் கூட்டணிகளுக்குள்ளாக ஒன்று சேர்வதை நாம் காண்கிறோம். தேவர்கள் கூட்டுச் சபையின் மேய்ப்பன் ஒருவன் ஒரு பெந்தகொஸ்தெ, பாப்டிஸ்டு அல்லது அட்வென்டிஸ்ட் சபையின் மேய்ப்பனாக ஒருபோதும் ஆகமுடியாது, மேலும் அந்த ஒருவர் மற்றவரிடம் சென்று திருவிருந்தில் பங்குகொள்ள முடியாது என்பதை அறிந்திருந்தும்; ஆனால் எதன் அடிப்படையில் எதற்காக அவர்கள் இணைகின்றனர்? அவர்களது தேவர்கள் மற்றும் அவர்களது பரிசுத்த ஆவிகளின் முன்முயற்சியினால் பாதாளம் மற்றும் அழிவின் அடிப்படையில் தான் அவர்கள் இணைகின்றனர்.
46ஓ! உங்களது ஜெபமும் உபவாசமும் வீண்... தேவன் உங்கள் அனைவரையும் அழித்துப் போடுவார்! நான் உங்களை ஊக்கமிழக்கச் செய்யவில்லை ஆனால் நீங்கள் அனைவரும் நரகத்திற்கு செல்வீர்கள். நோவாவின் நாட்களில் இருந்தது போலவே, நீங்கள் பூமியை கெடுத்துப் போட்டீர்கள், அதற்குறிய சம்பளத்தை தேவன் உங்களுக்கு கொடுப்பாராக.
47நான் நியாயம் தீர்க்க நியமிக்கப்பட்டிருக்கிறேன். தேவனுடைய வார்த்தைக்கு பதிலாக இறையியலை ஏற்றுக்கொள்கிற, சத்தியத்திற்கு பதிலாக வஞ்சகத்தை ஏற்றுக்கொள்கிற, இயேசு கிறிஸ்துவுக்கு பதிலாக பரபாசை தெரிந்துகொள்கிற, ஜீவனுக்கு பதிலாக மரணத்தை தேர்ந்துகொள்கிற, ... இந்த அவிசுவாசமுள்ள தலைமுறையின் மேல், இந்த நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் வானத்தில் எழுதப்பட்டிருப்பதை நான் கண்டேன். நாம் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கான (Rapture) கடைசி தருணங்களில் வாழ்கிறோம், மத்தேயு 13:24 முதல் 30ன் பிரகாரமாக சாத்தானின் எக்காளங்கள் அவனது பிள்ளைகளையும் அவனது சபைகளையும் ஒன்று சேர்க்க முழங்குகிற அதே வேளையில் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை தேவனுடைய கட்டளையின் அந்த சத்தம் (the Cry) கூட்டிச் சேர்க்கிறது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
48சகோதரர்களே, உபதேசங்களில் வேற்றுமையுள்ள ஜனங்கள் எவ்விதம் ஒன்று சேரமுடியும்? சகோதரர்களே, நீங்கள் எப்பொழுதாவது வெள்ளாடுகள், காளைகள், நாய்கள், பன்றிகள் மற்றும் கோழிகளுடைய ஒரு மந்தையை கண்டது உண்டா?... அதுதானே இந்த சபை சங்கங்கள், பேரவைகள் மற்றும் சம்மேளனங்களாக இருக்கின்றது. மேலும் அதனுடைய மேய்ப்பன் யாராக இருக்கமுடியும்? நிச்சயமாக சாத்தானே! ஒரே கூட்டமைப்பில் இருக்கின்ற போதிலும் ஒவ்வொரு மிருகமும் அதனதன் சொந்த வழியில் கத்துகிறது.
49காளைமாடுகள் ம்ம்ம்மா என்கிறது! நாய்கள் குரைக்கின்றன! பன்றிகள் உறுமுகின்றன! வெள்ளாடுகள், கோழிகள், அதுபோன்று பல... நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு தலையானது பாப்டிஸ்டு மொழி பேசுகின்றது, இன்னொரு தலை பெந்தெகொஸ்தே மொழி பேசுகின்றது, வேறொரு தலை மெத்தடிஸ்டு மொழி பேசுகின்றது, மேலும் அதுபோன்று இருக்கின்றது... நீங்கள் பார்க்கிறீர்களா? ஒன்று ஒருவித உபதேசத்தை உடையதாக இருக்கிறது, இன்னொன்று ஒருவித உபதேசத்தை உடையதாக இருக்கிறது,... நீங்கள் பார்க்கிறீர்களா?
50மத்தேயு 13:24 முதல் 30 என்ன கூறுகிறது? நான் அதை வாசிக்கிறேன்: "...அறுப்புமட்டும் அவைகளை ஒன்றாக வளரவிடுங்கள், அறுப்பு வேளையில் நான் அறுப்பு அறுக்கிறவர்களை நோக்கி, முதலாவது களைகளை சேர்த்து, சுட்டெரிப்பதற்காக அவைகளை கட்டுகளாக கட்டுங்கள், ஆனால் கோதுமையையோ எனது களஞ்சியத்தில் ஒன்றாகச் கூட்டிச்சேருங்கள் என்பேன்" என்றார். ஒரு கட்டு (bundle) என்பது வித்தியாசமான இனங்களை ஒரு கற்றையாக (Sheaf) கட்டிவைப்பது தான். பாப்டிஸ்டு ஒரு கற்றை ஆனால் பாப்டிஸ்டுகளும் மெதோடிஸ்டுகளும் இன்னும் மற்றவைகள் ஒன்றாக சேர்த்து வைக்கப்படும்பொழுது, அது ஒரு கட்டாக இருக்கின்றது. சபைகளின் எவ்வித சங்கமோ அல்லது சம்மேளனங்களோ ஒரு கட்டாக இருக்கிறது. மேலும் அங்கே அனேக கட்டுக்கள் இருக்குமென்றும் அவையனைத்தும் சுட்டெரிக்கப்பட வேண்டும் எனவும் வேதாகமம் கூறுகிறது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறனர்].
51மத்தேயு 13:24 முதல் 30 பிரகாரம், சுட்டெரிக்கப்படுவதற்காக அவர்கள் ஒன்றாக கட்டப்படுவர் என தேவன் கூறியுள்ளார். இங்கே களஞ்சியம் ஒருமையில் இருக்கிறதையும் ஆனால் கற்றைகள் அல்லது கட்டுக்கள் பண்மையில் இருக்கிறதையும் நீங்கள் கவனியுங்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? சுயாதீன பாப்டிஸ்டு சபை, ஒரு கற்றை. அடிப்படைகொள்கை பாப்டிஸ்டு சபை, ஒரு கற்றை. அப்போஸ்தல பாப்டிஸ்டு சபை, ஒரு கற்றை. மிஷனரி பாப்டிஸ்டு சபை, ஒரு கற்றை. தெற்கத்திய பாப்டிஸ்டு சபை, ஒரு கற்றை. முழு சுவிசேஷக பாப்டிஸ்டு சபை, ஒரு கற்றை. கிரியைகள் மற்றும் ஊழியங்களின் பாப்டிஸ்டு சபை, ஒரு கற்றை...
52ஆனால் கென்யா நாட்டு சபைகளின் உலக பேரவை, ஒரு கட்டு. மார்டினிக்குவேயின் சுவிசேஷக சபைகளின் தேசிய பேரவை, ஒரு கட்டு. ஸ்பெயின் நாட்டு சபைகளின் கூட்டமைப்பு, ஒரு கட்டு. ஜெர்மனி நாட்டின் சுவிசேஷக சபைகளின் அமைப்பு, ஒரு கட்டு. கவர்ந்திழுக்கக் கூடிய (charismatic) சபைகளின் சங்கம், ஒரு கட்டு. பிரான்சு நாட்டின் தேவ ஊழியர்களின் தோழமை, ஒரு கட்டு. நீங்கள் பார்க்கிறீர்களா?
53மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் மீது தேவன் பரிசுத்த ஆவியை அனுப்பினார், அவர்கள் நான்கு சுவிசேஷத்தை எழுதினர், ஒவ்வொன்றும் அதனதன் பாகத்தில் உள்ளன ஆனால் அவை ஒன்றுக்கொன்று முரண்படுவதில்லை. யோவான் கூறாத எதையாவது மாற்கு கூறலாம் ஆனால் அவை ஒருபோதும் ஒன்று மற்றொன்றுடன் முரண்படுவதில்லை. சாத்தானால் அவனது சபைகளிலும் மற்றும் அவனது சபைகளில் கிரியை செய்துவரும் பரிசுத்த ஆவிகளிடத்திலும் அவ்விதம் செய்ய முடியாது.
54மோசே முதல் பவுல் வரை 1600 ஆண்டுகள் கடந்தன, வேதாகமத்தின் 66 புத்தகங்களை எழுத தேவன் 40க்கும் மேற்பட்டவர்களை எழும்பப்பண்ணினார், அந்த இசைவினை உங்களால் காண முடிகிறதா? தேவன் அவரோடு தாமே முரண்படுவதில்லை. இந்த எல்லா சபைகளும், அவைகளின் தலைவர்களும், பயபக்திக்குரியவர்களும், மேய்ப்பர்களும் மற்றும் தீர்க்கதரிசிகளும்... மேலும் அவர்களது தேவர்களும், அவர்களது பரிசுத்த ஆவிகளும் மற்றும் அவர்களுடைய இயேசுவும் நரகத்திற்குச் செல்வர். ஏப்ரல் 1993 ல் அது வானத்தில் எழுதப் பட்டிருந்ததை நான் கண்டேன் மேலும் அதை அறிவிக்கும்படி எனக்கு கூறப்பட்டது. பிரெஞ்சில் இவ்வாறு வானத்தில் எழுதப்பட்டிருந்தது: நியாயத்தீர்ப்பை அறிவி! நியாயத்தீர்ப்பை அறிவி! ஜீவிய மாற்றத்தை அறிவி! ஜீவிய மாற்றத்தை அறிவி! நீங்கள் பார்க்கிறீர்களா?
55இந்த செய்தி தேவ குமாரர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது, ஆனபடியால் அவர்கள் மனந்திரும்புவர், ஆனால் பிசாசின் குமாரர் இதனை ஒரு நியாயத் தீர்ப்பாக காண்பர், அது சரியே, ஏனென்றால் அது அவர்களை ஆக்கினை தீர்க்க வருகிறது. ஆனபடியால் இவ்விதமான சபைகளில் தொடர்ந்து நிலைத்திருக்கும்படி எவனொருவன் அவனது தோழனை ஊக்குவிக்கிறானோ அவன் துன்மார்க்கன் ஒருவன் நிர்மூலமாவது போல் ஆவான். அவனது நாளின் தீர்க்கதரிசன வெளிப்பாட்டை பிரசங்கியாமல் இறையியலை பிரசங்கிப்பவனெவனோ அவன் தங்கத்திற்கு பதிலாக கழிவு உலோகத்தை விற்கிறவனொருவன் நிர்மூலமாவது போல் ஆவான். [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!" என்கிறனர்].
56பரலோகத்தின் தேவன் மனிதகுலத்துக்குக் கூறும் இந்த உவமையைக் கேளுங்கள்: தனது எஜமானனின் செல்வத்தை திருடிய ஒரு கொள்ளையன், தூரதேசத்திற்கு சென்றான். அவன் தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு தன்னை ஒரு நல்ல மனிதனாக அமைத்துக்கொண்டான். அவன் திருமணம் செய்து, ஒரு ஆடம்பரமான வீட்டில் வாழ்ந்து, அநேக உறவுகளை உண்டாக்கி, உதவிகளும் செய்தான்.
57பின்னர் குறிப்பினால், அவனது எஜமான் கொள்ளையனுடைய முகமறியாத முதலாவது உளவாளியை அனுப்பினான். ஆனால் வேவுபார்த்தலில் உண்மயிலேயே கைதேர்ந்தவன். அவன் சென்று அவனை கண்டான் இருப்பினும் அவன் தான் அந்த கொள்ளையன் என அவனால் அறிந்துகொள்ள இயலவில்லை. அவன் அனேக நாட்களை அவனுடனே கழித்த பிற்பாடு ஒரு பரிசுடன் திரும்பிவந்தான். அதன் பிறகு அந்த எஜமான் அவனது முகத்தை மற்றும் அவனது சொந்த நாட்டில் அவனுக்கிருந்த பெயரை அறிந்த இரண்டாவது உளவாளியை அனுப்பினான். ஒற்றன் அவனை கண்டுபிடித்தான் ஆனால் அந்த கொள்ளைக்காரன் அவனுக்கு இலஞ்சம் கொடுத்து, மேலும் உளவுபார்த்தலுக்குரிய கூலியை பார்க்கிலும் அதிகமாக அவனுக்குக் கொடுத்து இவனையும் அவனது இருளின் செயல்களில் (acts of darkness) ஈடுபடுத்தினான்.
58உளவாளி திரும்பிவரவில்லை, அந்த எஜமான் கொள்ளையனின் முகத்தையும் அவனது உண்மையான பெயரையும் அறிந்த வேறொரு உளவாளியை அனுப்பினான். இந்த உளவாளி கொள்ளையனையும் அவனது செல்வத்தையும் மேலும் அவன் சம்பாத்தித்து வைத்திருந்த அனைத்தையும் கண்டபொழுது, சத்தமிட்டு, தேசத்தை எச்சரித்தான் ஆனால் கொள்ளையனுடைய தோற்றம் மற்றும் புதிய அடையாளத்தின் காரணத்தால் ஒருவரும் அவனை நம்பவில்லை. மேலும் அந்த குடிகள் உளவாளியை கைபற்றி சிறையிலடைப்பதைப் பற்றி பேசிக்கொண்டனர். கேட்கிறதற்கு காதுகள் உடையவனெவனோ அவன் கேட்கக்கடவன்!