(2003 நவம்பர் 16 ஞாயிறு, லோக்காட்ஜ்ரோ - ஆபிட்ஜான், ஐவரிகாஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1இந்த காலையிலே நான் "ஆவிகளின் இடமாற்றம்" என்ற பொருளின் பெயரிலே பேச விரும்புகிறேன். துவக்கத்திலே, ஆயர் குருக்களின் மன்றம் மற்றும் உலக கிறிஸ்துவ சங்கங்கள் மூலமாக அந்த ஆவிகளின் இடமாற்றம் துவங்கினது, பிறகு சபை அரசாங்கத்திற்கு கீழ்படிய துவங்கின பிறகு சிலைகள் மற்றும் உள் கட்டுப்பாடுகள் மூலமாகவும், பிறகு சங்கங்கள், ஒருகினைந்த குழுக்கள் மற்றும் சபைகளின் மன்றங்கள் மூலமாகவும் மற்றும் இப்பொழுது கன்வென்ஷன் கூட்டங்கள் மூலமாகவும், மேலும் வார்த்தை மேல் வார்த்தையை விசுவாசிக்காத ஒருவருக்கு பிரசங்க பீடத்தை கொடுப்பதினாலும் அல்லது நீங்கள் பெற்ற அதே ஆவியை பெறாமல் இருந்தாலுமே; அவன் சரியாக பிரசங்கித்தாலும் சரி.
2ஆடைகளை மாற்றிக் கொள்ளுதல் அல்லது இரவல் மூலமாகவும் ஆவிகளின் பறிமாற்றங்கள் நடைபெரும். 2 நாளாகமம் 19:1 முதல் 3, 2 நாளாகமம் 18 மற்றும் 2 நாளாகமம் 20:35 ல் நாம் பார்க்கிற வண்ணம் ஒருவரோடு கூட்டு வைத்துக் கொள்வதின் மூலமும் இடமாறும். ஒரு அவிசுவாசி அல்லது ஒரு விக்கிர ஆராதனைக்காரனை நாம் நண்பர்களாக வைத்துக்கொள்ளக் கூடாது என தேவன் விரும்புகிறார் என்பதை யோசாபாத் புரிந்துக் கொள்ள வேண்டும்.
3ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் முழுமையான பிரன்ஹாமிஸ்டுகள் அதாவது வில்லியம் பிரன்ஹாமின் செய்தியை அதினுடைய தூய்மையில் பின்பற்றுகிறவர்கள் நடத்துகிற கண் விழிப்பு கூட்டங்கள், கன்வென்ஷன் அல்லது கூட்டங்களில் கலந்து கொள்ள உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதினுடைய விளைவு, ஆவிகளின் இடமாற்றமே.
4நீ ஒத்துக் கொண்ட கடைசி கருத்து உன்னை மற்றவர்களிடத்திலிருந்து வேறுபடுத்தி காட்டும் பொழுது, அவரோடு நீ பாடவோ அல்லது ஜெபம் செய்யக் கூடாது ஏனெனில் ஒரு கத்தோலிக்கத்திற்க்கு பின்பாக இருப்பதைப்போல அங்கே அவ்வளவான பிசாசுகள் ஒரு பிரன்ஹாமிஸ்டு, பாப்டிஸ்டு அல்லது நாற்ச்சதுர சபையினருக்குப் பின்பாகவும் இருக்கிறது. அதை உணர்ந்து கொண்டீர்களா? ரோஸிகுருஸியானிசம், ஃப்ரீமேசனரி அல்லது வூடூவை பின்பற்றுகிற ஒருனுக்கு பின்பாக இருப்பதைப்போல அவ்வளவு அதிகமான பிசாசுகள் ஒரு கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் ஒரு பிரன்ஹாமிஸ்டுவுக்கு பின்பாகவும் இருக்கின்றது.
5பொய்மைக்கு பின்பாக மட்டுமே நூற்றுக்கணக்கான பிசாசுகள் நின்றுக் கொண்டு இருக்கும். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!"என்கிறார்கள்]. அவர்களுடைய கனவுகளை ஒரு போதும் நீங்கள் உச்சரிக்க வேண்டாம்... ஒரு சிறிய ஜெபத்திற்க்கும் ஒரு போதும் செல்ல வேண்டாம். ஆச்சரிய விதமாக ஏதாவது நடக்கும் என்றால் உங்களுடைய கண்களை மூட வேண்டாம், அல்லது வெறுமனே வெளியே சென்று விடுங்கள். பிசாசுகளோடு ஐக்கியம் கொள்ள வேண்டாம் என வேதாகமம் கூறுகின்றது.
6எந்த ஒரு முகஸ்துதியான வார்த்தைக்கும் மயங்க வேண்டாம் ஏனெனில் நீங்கள் அதே கிறிஸ்து-இயேசுவிற்க்குள்ளாக ஒரு "சகோதரர்" அல்லது "சகோதரி" அல்ல. ஒரு பாப்டிஸ்டு அல்லது அட்வென்டிஸ்டு அல்லது பிரன்ஹாமிஸ்டை "கிறிஸ்துவிற்குள் சகோதரர்", என அழைக்க உங்களுக்கு உரிமை இல்லை, மேலும் அவர்களையும் அவ்விதமாக அழைக்க அனுமதிக்க வேண்டாம். அவர்கள் நம்முடைய அயலான்கள் மேலும் வேதாகமம் கூறுகிறது போல "உன்னை நேசிக்கிறதை போல உன் அயலானை நேசி" நாம் அவர்களை நேசிக்கின்றோம். நாம் அவர்களின் ஜெபங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஏறெடுக்கும் ஒரு மந்திரத்தை போல காண்கிறோம். மற்றும் அவர்களுடைய சபைகளை எகிப்த்தின் தேவர்களுடைய பலிபீடங்களை போன்று காண்கின்றோம். மேலும் நம்முடைய வாழ்வில் அவர்களுடைய எந்த ஆவியின் இடமாற்றத்தையும் தவிற்ப்பதற்க நாம் அவர்களிடத்தில் மிக கண்டிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.
7அந்த சபைகளிலிருந்து யாராவது நம்மிடத்தில் வந்தால், அவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலோ அல்லது பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று இருந்தாலோ, அவர் முழுக்கு ஞானஸ்நானம் அல்லது திருமுழுக்கு ஞானஸ்நானம் பெற்றிருந்தாலோ அவர் மறுபடியுமாக எளிமையாகவும் முழுமையாகவும் மறுபடியும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்.
8பூமியின் மேல் இரண்டு விதமான போக்குகள் இருக்கின்றது என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நாம் மற்றும் அவர்கள். "என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்." லூக்கா 11:23. அவர்கள் செய்கின்ற எல்லா காரியங்களும், ஆத்துமாக்களை பாதாளத்திற்க்கு சிறைப்படுத்தி கொண்டு செல்லும் பில்லி சூனியமாக இருக்கின்றது. நாம் அவர்களுடைய வேதாகமங்கள், ஆய்வுகட்டுரைகள் மற்றவைகளை எரிக்கிறதை போல எரிகிற அக்கினி கடலிலே தேவன் அவர்களை சுட்டெறிப்பார்.
9இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேலைச் சுற்றியுள்ள அரேபியர்களின் தேவனிலிருந்து மாறுபட்டவர் மேலும் நம்மை சுற்றியுள்ள சபைகளில் இருக்கும் தேவர்களை விட நம்முடைய தேவன் மாறுபட்டவர். மேலும் இந்த கத்தோலிக்க, பாப்டிஸ்டு, மெதடிஸ்டு, நீங்கள் காண்கின்ற அவர்கள் எல்லோரும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள், அவர்கள் நம்மை சுற்றியுள்ள ஈராக்கியர்கள், யோர்தானியர்கள், லெபனானியர்கள், சீரியர்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் அரேபியர்கள்.
10இஸ்ரவேல் தீர்கதரிசிகளின் பள்ளத்தாக்கு மேலும் ஒரு தேவனுடைய குமாரன் ஒரு உயிருள்ள தீர்க்கதரிசியை பின்பற்றுகிறான் ஏனெனில் தீர்க்கதரிசி பூமியின் மேல் தேவனுடைய வாயாக இருக்கின்றான். ஏனெனில் வேதபுத்தகம் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களின் புத்தகமாக இருக்கிறது. மேலும் ஒரு தேவனுடைய குமாரனால் உயிருள்ள தீர்க்கதரிக்கு வெளியே ஜீவிக்க முடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார்" ஆமென்!"என்கிறார்கள்].
11இந்த காரியங்கள் எல்லாவற்றையும் நடைமுறையில் செயல்படுத்துங்கள் மேலும் நான் உங்களுக்கு கூறுகிறேன் கடந்த காலத்தில் நீங்கள் அவர்களிடத்தில் பெற்றிருந்த அந்த ஆவிகள் திரும்பவும் அவர்களிடத்திற்க்கே அனுப்பப்படும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அவை அப்படியே ஆகும்!" ஆவிகளின் இடமாற்றம் என்ற பொருளில் தேர்ச்சியடைந்தவர்களாக இருங்கள். அந்த தவறான வேதாகமங்களை எரித்து விடுங்கள் பிறகு அவனுக்கு உங்களிடத்தில் எந்த பங்கும் இல்லை என சாத்தான் அறிந்துக் கொள்வான். அந்த மனிதர்களும் நீங்கள் அதே பரிமானத்தில இல்லை என்று அறிந்துக் கொள்ளட்டும்.
12சாயங்கால செய்தியிலிருந்து வந்தவர்களுக்காக, கால்களை கழுவும் வேளையிலே அங்கே சில பிரன்ஹாமிஸ்டுகள் ஒருவர் மீது ஒருவர் கைகளை வைத்தார்கள். நடுராத்திரியிலே, இது இனி ஒரு போதும் சாத்தியம் இல்லை எனெனில் ஆவிகளின் இடமாற்றத்தினால். இந்த காரியங்கள் சபைகளுக்கும், கைகளை கோர்த்து ஜெபம் செய்யும் கூடுகைகள் அல்லது ஒருவர் மீது ஒருவர் கைகளை வைத்து ஜெபம் செய்பவர்களுக்கும் பொருந்தும்.
13இயேசு கிறிஸ்துவின் உருவமைப்பு என அழைக்கப்படுபவைகளை ஒருபோதும் உங்களுடைய வீட்டில் வைத்திருக்க வேண்டாம். ஹாஃப்மென்னினுடைய உருவமைப்பும் கூட இருக்க வேண்டாம். அப்போஸ்தலர்களும் சீசர்களும் அதை எதிர்த்தனர். புதிய ஏற்பாட்டின் 62 புத்தகங்களிலிருந்து 27 தெரிந்தெடுத்த யூசேபியசும் அதை எதிர்த்தார். இயேசுவின் சித்தரிப்பை எதிர்த்தார். 692 ஆம் வருஷத்திலே கான்ஸ்டென்டி நோபல் ஆலோசனை சபையில் இயேசுவின் சித்தரிப்பு அங்கிகரிக்கப்பட்டது.
14கர்த்தராகிய இயேசு-கிறிஸ்து தேவனாக இருப்பாரெனில் பிறகு அவரால் அநேக வடிவங்களில் தோன்ற முடியும், மேலும் கர்த்தராகிய இயேசுவை உருவகப்படுத்துவது அருவருப்பானது. எம்மாவூர் சென்று கொண்டிருந்த இரண்டு சீஷர்கள் அவரை இனங்கண்டு கொள்ளவில்லை. யோவான் 20:11 முதல் 16 ல் மகதலேனா மரியாளும் அவரை இனங்கண்டு கொள்ளவில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அநேக முறை, வெவ்வேறு வடிவத்தில் தோன்றினார் என வேதாகமம் கூறுகிறது. ஆகவே அவருக்கு நீங்கள் எப்படி உருவம் கொடுக்க முடியும். கர்த்தாகிய இயேசு கிறிஸ்துவை உருவகப்படுத்த முயற்சி செய்து. உங்களுடைய வீட்டில் யூதாசை உருவகப்படுத்தி வைக்கும்படியாக தேவன் செய்து விடுவார்.
15அசுத்தமானவைகளிலிருந்து உங்களை பிரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? நாம் இன்னுமாக மூன்று வருடங்கள் கூட ஒன்றாக கழிக்கவில்லை ஆனால் நான் மூன்று மாதங்கள் என் பயணத்தை கழித்து விட்டு வரும் வேளையில் நீங்கள் என்னை அடையாளங்கண்டு கொள்ள மாட்டீர்களா? பின்பு எப்படியாக மூன்று நாட்கள் கழிந்த பிறகு, பகலிலே அகன்ற வெளிச்சத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது சீமோன் பேதுரு, தோமா, யோவான், யாக்கோபு மற்றும் வேறு சீஷர்களால் இயேசுவை அடையாளம் கொள்ள முடியவில்லை? எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கின்றது.! நீங்கள் பார்க்கிறீர்களா?
16மேலும் மாற்கு 16 கூறுகிறது... நாம் அதை வாசிக்கலாம்: "அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்" ஏன்? ஏனெனில் அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்! மேலும் பிசாசின் புத்திரராகிய நீங்கள், முடிவாக அவருக்கு உருவகப்படுத்தி விட்டீர்கள். இயேசுவின் புகைப்படம் என்று அழைக்கிப்படுகிற இந்த புகைப்படம் கர்த்தராகிய இயேசுவை விட யூதாஸ் காரியோத்திற்கு நெருங்கினதாக இருக்கின்றது என்ற நிச்சயத்தை உடையவனாக நான் இருக்கின்றேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார்" ஆமென்!"என்கிறார்கள்].
17நான் இத்தோடு முடிக்கிறேன்: "தேவன் என்னிடம் கூறினார்" என்று சொல்வதை தவிர்த்திடுங்கள் ஏனெனில் அது தேவனாக இல்லாமல் இருந்தால் சாத்தானை உன்னுடைய தேவனாக அழைத்திருக்கின்றீர்கள். இப்படியாக, உனக்கு செவிக் கொடுக்கின்ற எல்லோரும் அந்த ஆவியை பெற்றுக் கொள்வார்கள். சரியான மற்றும் தெளிவான வெளிப்பாட்டை நீங்கள் காண்பீர்கள், இருப்பினும் அது பிசாசினால் உண்டானது.
18யாராவது ஒருவன் தன்னை கிறிஸ்தவன் என்றும் தனக்கு பரிசுத்த ஆவி இருக்கிறது என உரிமை கோரி, அவன் நடுராத்திரி சத்தத்தை நிராகரித்தால், எசேக்கியல் 33:1 முதல் 9 ன் பிரகாரமாக அவன் குறி சொல்லுகிற ஆவியை கொண்டிருக்கிறான் என்று அவனிடத்தில் கூற பயப்பட வேண்டாம் மேலும் நியாயத்தீர்ப்பின் நாளிலே அவனுடைய இரத்தப் பழிக்கு நீங்கலாக சுத்தமாக இருங்கள்.
19உன்னுடைய பெற்றோர்கள் மற்றும் நன்பர்களுக்கு செய்தியை பிரசங்கிப்பது அதிக சாதகமான ஒன்று என நீங்கள் அறிவீர்கள் ஆகையால் நீங்கள் அவர்களுடைய வீட்டிற்க்கு செல்லும் வேளையில் உங்களோடு சேர்ந்து அவர்கள் ஜெபம் செய்ய விரும்ப மாட்டர்கள்... அவர்களுக்கு முந்தி அறிவித்து விடுங்கள். அவர்களுடைய இரத்தப் பழிக்கு நீங்கலாக சுத்தமாக இருங்கள். ஆமென்!