(2004 பெப்ரவரி்1 ஞாயிரு காலை லோகாட்ஜரோ அபிட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது).
1நாம் அநித்தியமானவர்கள் அல்ல ஆனால் நித்தியமானவர்கள். ஒரு தூதன் இருப்பதற்க்கு முன்பாகவே அல்லது வானத்திலே ஒரு நட்சத்திரம் இருப்பதற்க்கு முன்பாகவே அல்லது பூமியின் மேல் ஒரு கல்லின் அணு இருப்பதற்க்கு முன்பாகவே, நீங்களும் நானும் எபேசியர் 1:4 ன் பிரகாரமாக மீட்க்கப்பட்டு அங்கு இருந்தோம், ஆதாம் சிருஷிடிக்கப்பட்ட அதே நாளில் நம்முடைய சரீரங்கள் சிருஷ்டிக்கப்பட்டது. ஆதாம் சேத்தைப் பெற்றான், சேத் ஏனோசைப் பெற்றான், ஏனோஸ் கேனானைப் பெற்றான், கேனான் மகலாலெயேலைப் பெற்றான்... மேலும் இவை என் தகப்பனை பெற்ற என்னுடைய தாத்தா வரைக்கும் தொடர்ந்தது. நீங்களும் நானும் ஆதாமின் அறையிலிருந்தோம், அங்கே பிசாசின் புத்திரர்கள் ஏதேன் தோட்டத்தில் மனிதனை போன்று நடந்து மற்றும் பேசின சர்ப்பத்தின் அறையில் இருந்தார்கள். தேவன் தண்ணீர், எண்ணை, வெளிமம், இரும்பை எடுத்து... தேவன் பதினெட்டு மூலப் பொருட்களை எடுத்து நம்முடைய சரீரத்தை சிருஷ்டித்தார்.
2ஆனால் நடுராத்திரி சத்தத்தை ஏற்றுக் கொள்ளுகிற நம்முடைய ஆவியானது உலக தோற்றத்திற்கு முன்பாகவே அங்கு இருந்தது. தேவன் நம்முடைய சரிரங்களை சிருஷிடிக்கும் பொழுது நம்முடைய ஆவி ஏற்கனவே அங்கு இருந்தது. மேலும் இதினாலே ஒருவன் அவனுடைய மணி வேளையின் சுவிஷேசத்தை அப்போஸ்தலர் 13:48 மற்றும் ரோமர் 8:29 முதல் 30 ன் படியாக ஏற்றுக்கொள்கிறான் அல்லது வெளிப்படுத்தல் 13:8 ன் பிரகாரமாக ஒருவன் வஞ்சனையை ஏற்றுக்கொள்கிறான்.
3நோவா தன்னுடைய மணி வேளையின் மத அமைப்புகளின் மேல் ஆக்கினை மற்றும் நியாயத் தீர்ப்பு குறித்து பிரசங்கம் செய்த பொழுது மேலும் பிசாசின் புத்திரர்கள் அவர்களுடைய பற்களை கடித்துக் கொண்டு "நோவாவே, உன்னுடைய செய்தியை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், நாங்கள் எங்களுடைய சபைகள், பணிகள் மற்றும் ஊழியங்களிலேயே தரித்து இருப்போம். நீ எரிக்கிறதான லூயிஸ் செகண்டு, தாம்சன் மற்றும் ஸ்கோபில்ட வேதாகமங்களையே நாங்கள் உபயோகிப்போம். மற்றும் நீ உபயோகிக்கின்ற டார்பி வேதாகமத்தில் பிழைகளை நாங்கள் கண்டுபிடித்திருக்கின்றோம்... எடுத்துக் கொள்ளப்பட்ட எங்களுடைய தகப்பனாகிய ஏனோக்கின் மீத நாங்கள் இளைப்பாறுகிறோம்... "நீங்கள் பார்க்கிறீர்களா?" சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் மீது இயேசு கிறிஸ்துவின் மீது இளைப்பாருகிறோம், எங்களுக்கு, மோசே, டாமி அஸ்பன், பில்லி கிரஹாம், வில்லியம் பிரன்ஹாம் உண்டு ...". அவர்கள் ஏனோக்கை குறித்து பேசிக் கொண்டு இருக்கும் வேளையிலே ஏனோக்கு பூமியின் மேலாக இல்லை. மேலும் இன்று அவர்கள் வில்லியம் பிரன்ஹாமை குறித்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் வில்லியம் பிரன்ஹாம் ஜெபர்சன் வில்லில் உள்ள கல்லறையில் இருக்கிறார்.
4ஆனால் இன்று உங்களுடைய மணி வேளைக்கென்று வாக்குதத்தம் பண்னப்பட்ட தீர்க்கதரிசியாகிய காக்குவ் பிலிப்புவை விசுவாசித்திருந்திருப்பீர்களானால், அது ஏனெனில் உலகத் தோற்றத்திற்க்கு முன்பாகவே இந்த வித்தை தேவனுடைய சிந்தையில் பிரத்தியட்சப்படுத்தி இருக்கிறீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார்" ஆமென்!" என்கிறார்கள்].
5மோசே யூதர்களோடு செங்கடலை கடந்த பொழுது, நாம் அங்கே சந்தோஷமாக ஆராவாரமிட்டுக் கொண்டிருந்தோம், ஆனால் நமக்கு சரீரம் இன்னுமாக இல்லை. எரேமியா, எசேக்கியல், ஆமோஸ்... தங்களுடைய நேரத்திலுள்ள மத அமைப்புகளுக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைக்கும் பொழுது நீங்களும் நானும் அங்கே" ஆமென்! ஆமென்! ஆமென்!" என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சத்தமாக" சர்ப்பங்களே, விரியன் பாம்புகுட்டிகளே, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே, மதிகேடரே!... நீங்களும் நானும் சந்தோஷமாக: "அல்லேலூயா! ஒசன்னா! என்று ஆர்பரித்துக் கொண்டிருந்தோம்.
6மார்டின் லூதர் கத்தோலிக்க சபையை கண்டனம் செய்த பொழுது, ஜான் கால்வின் லூதரன்களை கண்டனம் செய்த பொழுது, அங்கே ஐக்கிய தேசத்திலே வில்லியம் பிரன்ஹாம் தன்னுடைய மணி வேளையில் உள்ள எல்லா மத அமைப்புகளையும் கண்டனம் செய்த பொழுது அவர் அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்களும் நானும்" ஆமென்"! என்று கூறினோம். ஆனால் இம்மட்டுமாக வில்லியம் பிரன்ஹாம் வரைக்கும் உள்ள தீர்க்கதரிசிகளை கொண்டு நாம் இரட்சிக்கப்பட முடியாது ஏனெனில் நாம் அதே தலைமுறையை சேர்ந்தவர்கள் அல்ல. நாம் அவர்களோடு பூமியின் மேல் இல்லை, அவர்கள் பூமியின் மேல் ஜீவித்து கொண்டு இருக்கும் பொழுது நாம் அவர்களை விசுவாசிக்கவில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார்" ஆமென்!" என்கிறார்கள்]
7உலகத்திற்க்கு அஸ்திபாரம் இடுவதற்க்கு முன்பாகவே, தேவனுடைய சிந்தையில் ஒவ்வொரு தூதனும் தன்னுடைய குழுவோடு இருந்தனர். மோசே செங்கடலை கடந்த பொழுது, எலியா தன்னுடைய ஏழாயிரம் ஆத்துமாக்களோடு கடந்த பொழுது, ஏசாயா தன்னுடையவர்களோடு கடந்தான். எரேமியாவும் தன்னுடையவர்களோடு கடந்தான். ஆமோசும் தன்னுடையவர்களோடு கடந்தான். ஆபகூக்கும் தன்னுடையவர்களோடு கடந்தான்.
8கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மற்றும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் மேலும் அவர் பூமியில் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுது அவரை விசுவாசித்த எல்லோரும் தன்னுடையவர்களோடு கடந்தார்கள். வில்லியம் பிரன்ஹாம் பூமியில் ஜீவித்துக் கொண்டருக்கும் பொழுது அவரை விசுவாசித்த எல்லோரும் தன்னுடையவர்களோடு கடந்தார்கள். மேலும் காக்குவ் பிலிப்புவும் இன்று அவரை விசுவாசிக்கிற எல்லோரோடும் கடந்து சென்றார். [ஆசிரியர் குறிப்பு: சபையார்" ஆமென்!" என்கிறார்கள்]
9மேலும் 24 ஏப்ரல் 1993 ஆட்டுக்குட்டியும் தூதனும் இறங்குவதற்க்கு முன்பாக நீங்களும் நானும் ஒன்றாக இருந்தோம். அதை நாம் வாசிக்கலாம்: "தானியேலாகிய நான் மாத்திரம் அந்த தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷரோ அந்த தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி, ஓடி ஒளிந்துக்கொண்டார்கள்." அவை யாத்திராகமம் 19 ஆம் அதிகாரத்திலும் நடந்தது. "தேவன் உம்மோடு பேசட்டும் பின்பு நீர் எங்களுக்கு அறிவியும்" நீங்கள் பார்க்கிறீர்களா?
1024 ஏப்ரல் 1993 ன் தரிசனத்தில், நான் அவர்களை யார் என்றோ அல்லது அவர்கள் எங்கே இருந்து வந்தார்கள் என்றோ கேட்கவில்லை ஏனெனில் அவர்கள் என்னோடு கூட இருந்தார்கள் ஆனால் அந்த தரிசனத்தின் மகத்துவம் அவர்களை ஓடி ஒளியும் படியாக செய்தது. தரிசனத்திலே நான் ஆவியிலே இருந்த பொழுது, நான், இவ்வாறு அவர்களும் இருந்தார்கள் என நினைத்தேன். 24 ஏப்ரல் 1993 ல் என்ன நடந்தது என்று தானியேல் 10:7 கூறுகிறது. மேலும் தேவன் தாமே உலக தோற்றத்திற்க்கு முன்பாகவே நம்மிடத்தில் மகிழ்ச்சி கொண்டிருந்தார். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
11மேலும், காக்குவ் பிலிப்பு ஆகிய நான், உலக தோற்றத்திற்க்கு முன்பாகவே உங்களிடத்தில் மகிழ்ச்சி கொண்டிருந்தேன். மேலும் எப்படியாக அப்போஸ்தலர்கள் பன்னிரண்டு சிங்காசனங்களில் அமர்ந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் வேளையில் பூமியின் மேல் இருந்தவர்களை நியாயம் தீர்ப்பார்களோ, அதே வன்னமாக இன்று பூமியின் மேல் ஜீவிப்பவர்களை நீங்களும் நானும் நியாயம் தீர்ப்போம். நீங்கள் பார்க்கிறீர்களா?
12யூதாஸ்காரியோத்து பிறப்பதற்க்கு முன்பாகவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை காட்டி கொடுக்கவும் நரகத்திற்க்கு செல்லவும் முன் குறிக்கப்பட்டிருந்தான். "உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாக இருக்கிறான்" என்று கர்த்தர் கூறினார். மேலும் அப் 13:47 கூறுகிறது: நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று. இது தேவனுடைய இராஜாதிபத்தியத்திற்க்கு உள்ளானது.
13யாக்கோபும் ஏசாவும் பிறப்பதற்க்கு முன்பாக, அவர்கள் ரெபேக்காளின் கற்பத்தில் சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள். ஏன்? ஏனெனில் தேவன் அவர்களை இஸ்ரவேலாகவும் அரேபியர்களாகவும் பூமியின் மேல் ஏற்கனவே முன் குறித்திருந்தார். தேவன் இஸ்மவேலினிடத்தில், அரேபியர்கள் மற்றும் இல்லாமியர்களின் தகப்பன் என்றார், அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும். அவனுடைய சந்ததி குண்டு வீசுகிறவர்களாகவும் இருக்கும், சில இருதயம் இல்லாத மிருக இனங்கள்.
14மேலும் அதே வன்னமாக, மத்தேயு 13:24 முதல் 30 ன் பிரகாரமாக பிசாசின் புத்திரர்கள் கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளில் கூடி பாதாளத்திற்க்கு செல்வார்கள் என்று தேவன் அறிவார். உங்களை பொருத்தமட்டில், உலகத்திற்க்கு அஸ்திபாரம் இடுவதற்க்கு முன்பாகவே நீங்கள் என்னை விசுவாசிக்கும் படியாக முன் குறித்திருக்கின்றார். [ஆசிரியர் குறிப்பு: சபையார்" ஆமென்!" என்கிறார்கள்].
15மேலும் முதலாவதாக ஏப்ரல் 24, 1993 ன் தரிசனமானது உலக தோற்றத்திற்க்கு முன்பாகவே பரலோகத்தில் தேவனுடைய சிந்தையில் நடைபெற்றது. பிறகு, பூமியிலே நம்முடைய நேரத்தின் படியாக ஏப்ரல் 24, 1993 ல் நடைப்பெற்றது. என்னை காணாமலும் கேட்பதற்க்கு முன்னமே , என்னில் விசுவாசம் கொண்டீர்கள், மேலும் இப்பொழுது அவை நிறைவேறி இருக்கின்றது. ஆனால் மற்றவர்களோ என்னை வெறுக்கவும் துன்புறுத்தவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
16மேலும் இன்று, நடுராத்திரி சத்தம் ஒலிக்கின்ற வேளையிலே, எல்லா பரிசுத்தவான்களும், தூங்கிக் கொண்டு இருப்பவர்கள் உள்பட ஒவ்வொரு வார்த்தைக்கும் "ஆமென்" என கூறுங்கள். வேதாகமம் வெளிப்படுத்தல் 17 மற்றும் வெளிப்படுத்தல் 13 ல் கூறுகிறதாவது உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளில், வெளிப்படுத்தப்பட்ட மற்றும் திரும்ப அளிக்கப்பட்ட சபைகள் உள்பட அதிலே தரித்து இருப்பார்கள். அவர்கள் அந்த விதமான பணிகள் மற்றும் ஊழியங்களில் இருப்பார்கள் ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தேவனுடைய வார்த்தையை ஞானத்தினாலும் மற்றும் வேதத்தின் அறிவினாலும் அல்லது புத்திக் கூர்மையினாலும் இல்லாமல் முன்குறித்தலினால் ஏற்றுக்கொள்வார்கள்.
17அப்போஸ்தலர் 13:48 கூறுகிறது"... நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ, அவர்கள் விசுவாசித்தார்கள்". விழிப்புடனோ அல்லது கவனத்துடனோ இருந்தவர்கள் அல்ல ஆனால் முன்குறிக்கப்பட்டவர்கள். என்னை நிராகரிக்கும் படியாக இது போன்ற சபை அங்கத்தினர்களை தேவன் வழி நடத்துகிறார் என்று அல்ல ஆனால் அவர்கள் என்னை நிராகரிப்பார்கள் என்று தேவன் அறிவார்.
18உலகதோற்றத்திற்கு முன்பாக தேவனுடைய சிந்தையில் நடு ராத்திரி சத்தம் தொனிக்கையில் , நாம் ஏற்றுக் கொண்டோம் மேலும் நம்முடைய பெயர்கள் தேவனுக்கு முன்பாக அவருடைய சிந்தையில் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தோடு எழுதப்பட்டது. மேலும் ஏப்ரல் 24, 1993 ல், மத்தேயு 25:6 ன் படியாக பூமியின் மேல் தொனிக்க துவங்கின வேளையில், நம்முடைய பெயர்கள் வெளிப்படுத்தல் 2:17 ன் பிரகாரமாக உச்சரிக்கப்பட்டது.
19ஒரு தீர்க்கதரிசியின் செய்தியானது அவரது தலைமுறையில் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களுடைய பெயர்களின் பதிவேடாக இருக்கிறது. தீர்க்கதரிசியின் மரணமோ, கடைசியாக தெரிந்துக்கொள்ளப்பட்டவரின் அழைப்பிற்குப் பிறகு வருகிறது. 1,44,000-மாவது தெரிந்துக்கொள்ளப்பட்டவரின் அழைப்புக்கு முன் எலியாவும் மோசேயும் மரணமடைய மாட்டார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார்" ஆமென்!" என்கிறார்கள்]. மேலும் பூமியின் மேல் நடுராத்திரியின் சத்தத்தை கேட்டதினால், கலியாண விருந்தின் தற்போதைய அழைப்பிற்க்கு பதில் அளித்திருக்கின்றோம். அங்கே தான் முன்குறித்தல். அதை ஜான் கால்வின் பிரசங்கம் செய்திருக்கிறார் மேலும் அதை அவர் இரட்டை முன்குறித்தல் என்று அழைத்தார். அதாவது நித்திய ஜீவனுக்கென்ற முன் குறித்தல் மற்றும் நரகத்திற்க்கென்ற முன்குறித்தல்.
20ஒரு பிசாசின் புத்திரன் அதை கேட்க்கும் பொழுது அவன் இப்படியாக: தேவன் ஏற்கனவே சிலரை தெரிந்துக் கொண்டு மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாக தீர்ப்பாரானால், ஏன் சபைக்கு செல்ல வேண்டும்? சகோதரர்களே, இடறல் அடைய வேண்டாம், தேவன் சர்வவியாபியாயும் மற்றும் இராஜாதிபத்தியம் உள்ளவர். இது பொது சேவைக்கு செல்லும் போட்டித் தேர்வுகள் போன்று இருக்கின்றது, அங்கே அரசாங்கத்திற்கு பத்து நபர்கள் தேவை படுவார்கள் மேலும் நீங்கள் இருநூறு பேர் கொண்ட பட்டியலில் இருப்பீர்கள். சகோதரரே நூற்று தொன்நுறு பேர்கள் நீக்கப்படுவதினால் நீங்கள் அங்கே பங்கேற்க்க மாட்டீர்களா? விசுவாசத்தோடு சென்று உட்காருங்கள்!
21ஒரு ஒளியின் தூதன் என்னிடம் வந்து நான் இரட்சிக்கப்பட முடியாது என கூறுவானாகில். தேவன் என்னுடைய பெயரை இஸ்ரவேலர் புத்திரர்களின் பட்டியலில் உள்ள ரூத் மற்றும் ராகாபை போன்று தேவன் என்னுடைய பெயரை வைப்பார் என்று நான் அவனிடம் கூறுவேன். அவர்கள் தேசங்களின் குமாரத்திகள் ஆனால் இன்று அவர்கள் யூதர்கள். அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்க்கு பெரிய கொள்ளு பாட்டிகள். மனிதனால் கூடாதது, தேவனால் கூடும். மேலும் அது எதினால் எனில் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் உங்களுடைய பெயர் எழுதப்பட்டு இருக்கிறதினால் உங்களுடைய மணி வேளையின் உயிருள்ள தீர்க்கதரிசியின் செய்தியை விசுவாசித்தீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நீங்கள் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்ய வேண்டும், ஆகையால் யூதாஸ் காரியோத்தை போன்று உங்களுடைய பெயர் நீக்கப்படாமல் இருக்கும்.
22இந்த செய்தியில் சில சகோதரர்கள் என்னிடத்தில் இப்படி கூறினார்கள்: "சகோதரர் பிலிப்பு, நான் பலதாரமணம் (Polygamy) செய்து கொள்வதை விசுவாசித்தேன், நான் தலையில் அனியும் பர்தாவை முக்காடு என விசுவாசித்தேன், நான் தசமபாகமும் ஒழிக்கப்பட்டது என விசுவாசித்தேன்... ஆனால் இந்த செய்தியை விசுவாசித்த பொழுது நான் அவைகள் ஒன்றையும் அறிய வேண்டும் என்று முயற்ச்சித்தது இல்லை. நான் அந்த காரியங்களை குறித்து ஒரு போதும் கேள்வி எழுப்பினதும் இல்லை... அந்த பழைய நம்பிக்கைகள் யாவையும் புதைத்து விட்டு இந்த மணி வேளையின் செய்தி கூறுகிறவைகளுக்கு என்னை உறுதிப்படுத்திக் கொண்டேன்..." ஆமென்! சகோதரர்களே, தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக! இவ்வாறு எல்லா சபைகளிலிருக்கும் ஜனங்கள் இந்த செய்தியில் தங்களை கண்டுக்கொண்டார்கள் ஏனெனில் உலகத் தோற்றத்திற்க்கு முன்பாகவே, தேவன் அதை தீர்மானித்தார்.
23நன்று, நாம் ஆதியாகமத்திற்க்கு திரும்புவோம்... நோவா மரித்தபொழுது, மரித்தோரிடத்தில் வாசம் பன்னுகிறவரிடத்தில் சென்று பிரசங்கித்தான், காயினின் புத்திரர்கள் அதை மறுத்தார்கள், ஆனால் சேத்தினுடையவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். தன் காலத்திலுள்ள மத சம்பந்தமான மனிதர்களால் ஏரேமியா கொள்ளப்பட்ட பிறகு, அவர் சென்று நோவாவை விசுவாசிக்காதவர்களுக்கு பிரசங்கம் செய்தார், அவர்கள் வேதனைகளில் இருந்தாலும், அவர்கள் ஏரேமியாவை நிராகரித்தார்கள், ஒருவராலும் மனந்திரும்ப முடியவில்லை.
24அசாரியர்களாலும் ஜனங்களாலும் ஏசாயா துண்டுகளாக வெட்டப்பட்ட பொழுது, மத்தேயு 23:35 ன் பிரகாரமாக ஒவ்வொரு தீர்க்கதரிசியும் மரித்த பொழுது மரித்தோர் வசிக்கின்ற இடத்திற்க்கு சென்று தன் சுவிஷேசத்தை கொண்டு சென்றார்கள். உயிரோடு இருக்கும் பொழுது தங்களுடைய மணி வேளையின் செய்தியை நிராகரித்த எல்லோரும், அங்கேயும் நிராகரித்தார்கள். அவர்கள் உயிரோடு இருக்கும் பொழுது தீர்க்கதரிசிகளை கல்லெரிந்து துன்புறுத்தினவர்கள், இப்பொழுது வேதனைகளின் மத்தியிலும் கல்லெரிந்து துன்புறுத்த வகைத் தேடினார்கள் ஆனால் உயிரோடு இருக்கும் பொழுது செய்தியை விசுவாசித்தவர்கள் களிகூர்ந்தார்கள்.
25யோபு இயேசு கிறிஸ்துவை கண்ட பொழுது, "என் மீட்பரை என் கண்கள் காணும் என்று நான் கூறவில்லையா?" என்று யோபு கூச்சலிட்டான், யோபு சந்தோஷத்தில் குதித்தான். யோபு களிக்கூர்ந்தான். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் அதே வேளையில் நோவாவின் காலத்தில் உள்ள பிசாசின் புத்திரர்கள், கர்தராகிய இயேசு கிறிஸ்துவிற்க்கு விரோதமாக பற்களை கடித்தார்கள். இன்று, மத்தேயு 25:6 ன் சத்தமானது பூமியின் மேல் ஒலிக்கையில், அது நோவாவின் நாட்களில் நடந்தது போலவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாட்களில் நடந்தது போலவே மேலும் ஒவ்வொரு தீர்க்கதரிசிக்கும் நடந்தது போலவே இருக்கின்றது.
26மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து "நோவாவின் நாட்களில் நடந்தது போலவே நடக்கும்" என்றார், நிச்சயமாகவே நோவாவின் முன்னிலையிலே நடக்கும். பிசாசனவன் சபைகளை பெருக்கிக் கொண்டே இருக்கிறான், அற்புதங்களை நடப்பித்து பிசாசின் புத்திரர்களை திசைத் திருப்பி இங்கு தேவன் என்ன செய்துக்கொண்டிருக்கின்றார் என்பதை விட்டு தூரமாக வழிநடத்தி செல்கின்றான். மேலும் விசுவாசித்தவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள்.
27அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறினார். ஆனால் அந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள், அவர்களுடைய ஊழியங்கள், பணிகள் மற்றும் அவர்களுடைய மனமாற்றங்கள், ஆனால் நான் உங்களுக்கு கூறுகிறேன் இவைகள் எல்லாம் சாத்தானின் வஞ்சனையாக இருக்கின்றது. அவர்கள் எல்லோரும் பாதாளத்திற்க்கு செல்வார்கள். இரட்ச்சிப்பானது ஒரு சபையிலோ, ஒரு அப்போஸ்தலனுடனோ, சுவிஷேசகனுடனோ, சபை தீர்க்கதரிசியோடோ, போதகரோஅல்லது மற்றவர்களோடு இல்லை, ஆனால் அந்த தலைமுறையில் உயிர் வாழும் தீர்க்கதரிசியோடே மாத்திரம் உள்ளது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
28கவனியுங்கள், நோவாவின் மனிவேளையின் பிரகாரமாக, வெறும் சிலரே இரட்ச்சிக்கப்படுவார்கள். மேலும் மத்தேயு 25:31 முதல் 41 வசனம் மகத்தான உண்மையை கொண்டு வந்த சீஷர்களுக்கு சிலர் செய்த நற்காரியங்களை குறிக்கிறது மேலும் மத உலகத்தினரால் வெருக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, நியாய சபைக்கு முன்பு இழுத்து கொண்டு செல்லப்பட்டவர்களை குறிக்கின்றது. அது மத்தேயு 10:41 மற்றும் 42 ல் இன்னும் தெளிவாக இருக்கின்றது. இதற்க்கு வெளியே அது ஒரு தவறான வியாக்கியானம். அதை மறுபடியுமாக அங்கே நீங்கள் காண்கிறீர்கள். நாம் எல்லோரையும் கண்டனம் செய்வது என்பது சுலபமான காரியம் இல்லை. எல்லோரையும் கண்டனம் செய்பவர்களுக்கு எப்படி ஒருவரால் ஒரு கலசம் தண்ணீர் கொடுக்க முடியும்?
29ஆகையால், நீங்கள் சென்று சில பாப்டிஸ்டு சிறைக் கைதிகளுக்கு டன் கணக்கில் அரிசியை வழங்கினால் அது மத்தேயு 25:34 முதல் 40 குறிக்கின்றது என நீங்கள் நினைக்கிறீர்களா?, அது ஒரு தவறான வியாக்கியானம். இது மாறாக அந்த மணி வேளையின் மத சம்பந்தமான ஜனங்களால் துன்புறுத்தப்பட்ட தீர்க்கதரிசி மற்றும் சீஷர்களுக்கு நன்மை செய்த ஜனங்களை குறிக்கின்றது. உலக தோற்றத்திற்க்கு முன்பாகவே, அதை செய்யும் படியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். காதுள்ளவன் கேட்க்கக்கடவன்.