



Kacou 22 (Kc.22) : யோர்தானின் அனுபவம்
(2004 மே 14 வெள்ளி மாலை, லோக்காட்ஜ்ரோ - ஆபிட்ஜான், ஐவரிகாஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 வெளிப்படுத்தல் 12:7 முதல் 9 மற்றும் ஏசாயா 14 ஆம் அதிகாரத்தில் வேதாகமம் கூறுகிறதாவது வானத்தில் யுத்தம் உண்டானது ஏனெனில் சாத்தான் தேவனை போன்று ஆராதிக்கப்பட விரும்பினான். அப்பொழுது பிசாசு: "நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன்... உன்னதமானவருக்கு ஒப்பாவேன்..." என்றான். பின்பு தேவனுடைய தூதர்கள் சாத்தான் மற்றும் அவனுடைய தூதர்களை எதிர்த்து போராடி புமியின்மேல் தள்ளப்பட்டனர்.
2 நூறு கோடிக்கும் அதிகமான தூதர்கள் பூமியின்மேல் தள்ளப்பட்டு அதன் பின்பு அவைகள் சென்று புண்ணிய நதிகள், நட்ச்சத்திரங்கள், காடுகள், தோப்புகள், விருந்துகள் மற்றும் எல்லா தேசங்களில் உள்ள மறைபொருள் ஒழுங்குகளுக்கு பின்பாக ஒளிந்து கொண்டன. "பிசாசுகள்" அல்லது "விழுந்து போன தூதர்கள் " என்று அழைக்கப்படுவதற்க்கு பதிலாக ஆப்ரீக்காவிலே சிறந்த மேதைகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மேலும் இந்த மேதைகள் வல்லமையான மாந்திரிக பூஜாரிகளை எழுப்பினது. அவைகள் ஆராதிக்கப்பட்டன மற்றும் அவர்களுடைய முதலாவது வாஞ்சையை அடைந்தனர் . அவைகளில் மிகவும் வல்லமையானது நிஜமான தேவர்கள், விஷேசமாக எகிப்த்தில் உள்ள இன்கா, பாபிலோன், இந்தியா மற்றும் பிற தேசங்களில் உள்ளன.
3 வெளிப்படுத்தல் 14:6 முதல் 8 ன் படி, இந்த சுவிஷேசமானது மனுக்குலத்தை இந்த பிசாசுகளிடமிலிருந்துதிரும்புவதற்கு கட்டளையிடுகின்றது. முதன் முறையாக, மாந்திரிக பூஜாரிகள், சாஸ்திரிகள், ஜோதிடர்கள், சாத்தானின் தீர்க்கதரிசி என்று நாம் அறிந்து கொள்கின்றோம். ராஜாக்களுக்கு அடுத்ததாக, மாந்திரிக பூஜாரிகளும், இஸ்லாமிய துறவிகளும் கருப்பு வெள்ளாடுகள், வெள்ளை கோழிகள், மதுபான பாட்டில்களுடன் சொளகரியமாக வாழ்ந்தவர்கள்.
4 இன்று அந்த தீர்க்கதரிசிகள், எவ்வளவு ஐஸ்வரியவான்கள் என்று பாருங்கள்! அவர்கள் விதிவிலக்கு ஏதுமில்லாமல் மாறுவேடமிட்ட பூஜாரிகள். 2 இராஜாக்கள் 17:29 முதல் 31 உள்ள பலிப்பீடங்கள் மற்றும் உயர் ஸ்தலங்கள், 1 இராஜாக்கள் 11:5 முதல் 7 ல் உள்ள அதே பலி பீடங்கள் இன்று சபைகளாகவும், ஊழியங்களாகவும் மற்றும் ஊழிய பணிகளாகவும் மாறிப் போனது.
5 மேலும் அரசாங்கமானதுஇந்த விதமான சபைகள், ஊழிய நிறுவணங்கள் மற்றும் ஊழியங்களை அங்கிகரிக்கும் பொழுது, மாந்திரீகம் சட்டபூர்வமாக்கப்படுகின்றது.
6 நல்லது, இப்பொழுது நாம் 2 இராஜாக்கள் 5 அதிகாரம் வாசிக்கலாம் [ஆசிரியர் குறிப்பு: சகோதரர் பிலிப்பு 2 இராஜாக்கள் 5 ஆம் அதிகாரத்தை முழுவதுமாக வாசிக்கின்றார்]... நல்லது. ஒரு பெண் மூலமாக, சீரியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் தன்னுடைய குஷ்டரோகத்தின் சுகத்தை பெரும் படியாக அவனுடைய மணி வேளையின் ஒரே உண்மையான தீர்க்கதரிசியான இஸ்ரவேலில் உள்ள தீர்க்கதரிசி எலிசாவிடம் சென்றார்.
7 ஊடகங்கள் அதை ஒளிப்பரப்பு செய்யும் படியாக அதிகாரபூர்வ வரவேற்பை இராணுவ மரியாதைகளுடன் பெறுவதற்க்கு முதலாவதாக மந்திரி நாகமான் இஸ்ரவேலின் ராஜாவை சந்திக்க சென்றான். அதை அவர்கள் உத்தியோகபூர்வமாக்கினார்கள். பிறகு 9 ஆம் வசனத்தை பாருங்கள், தீர்க்கதரிசி எலிசாவின் சிறிய வீட்டிற்க்கு பீரங்கி வண்டிகள், குதிரைகள், சமுதாயத்தில் உயர்மட்ட குழுவினர், ஆயுதம் ஏந்திய பீரங்கிகளின் படைப்பிரிவு, கவச வீரர்களோடு சென்றார். வருகிறவர் யாரோ ஒரு சாதரணமானவர் இல்லை என கூறும்படியாக இவைகள் எல்லாம் வந்தது. மோட்டார் சைக்கிளில் மெய் காவலரின் அணிவகுப்பு, சைரன்கள் ஆகியவை... ஊர்வலத்தை காணும்படியாக ஜனக்கூட்டத்தினர் சாலை ஒரங்களில் பார்க்க வந்து இருந்தனர்.
8 மேலும் இவைகளோடு, அவன் கொடுக்க வேண்டிய பேச்சு குறித்து சொல்வதற்கில்லை, மற்ற சபைகளில்மெச்சிக் கொள்வதற்க்காக ஆறாயிரம் பொற்காசுகள் மற்றும் பத்து லட்சம் டாலர்களை எப்பொழுதும் கொடுப்பான். சில தூரத்தில், ஒருவரால் சைரன் சத்தத்தை கேட்க்க முடியும், பிறகு மோட்டார் சைகளில் வரும் மெய்காப்பாளர்கள் தோன்றினார்கள், மந்திரி நாகமான் மற்றும் அவனுடைய முழு படையும் வெகு தூரத்தில் இல்லை...
9 அவர்கள் வந்து வெளியே நின்று கொண்டு தீர்க்கதரிசி எலிசாவிடமிருந்து மரியாதைக்காக காத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் தவறான தீர்க்கதரிசியை கொண்டு இருந்தார்கள். உங்களால் காண முடிகிறதா? எலிசா வாழும் இடத்திற்க்கு நாகமான் வந்த பொழுது, அவன் தன்னுடைய இருதயத்தில் தனக்கு தானே பேசிக் கொண்டான: "ஆணால், என்னுடைய வருகையின் நிமித்தமாக அலங்காரங்கள் எங்கே? என்னுடைய வருகையின் நிமிதித்தமாக பிள்ளைகள் பள்ளிக்கு செல்லக் கூடாது அல்லவா, அல்லது அவருடைய வீடு இங்கே இல்லையா?. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்] உண்மையில் அவருடைய வீடு அங்கே தான்! நீங்கள் பார்க்கிறீர்களா?
10 ஆனால் எலியாவோ இந்த உலகத்தின் மகிமைகளாலும், ஐஸ்வர்யத்தினாலும் குருடாகிப்போன ஒரு ஏழையான (பரிதாபமான) சீரியனை வெளியே கண்டார் மேலும் அவன் மனந்திரும்பாத பட்சத்தில் பாதாளத்தின் வேதனைகள் அவனுக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதை கண்டார். அவனுடைய ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தில் உள்ள குஷ்டரோகமும் மேலும் யோர்தானின் அனுபவமே அதற்கான தீர்வு என எலிசா கண்டான். அந்த போர் வீரனின் சீருடையின் அல்லது மேலுரையின் (Jacket) பின்பாக ஊழலின் துர்நாற்றத்தை எலிசா நுகர்ந்தான். அது அவ்வளவுதான்!
11 இந்த தனிமையான தீர்க்கதரிசியின் மரியாதையை நாகமான் விரும்பினான். ஆனால் எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, "நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்." அதற்க்கு நாகமான் கடுங்கோபம் கொண்டான்!
12 இந்த சின்ன சீரிய நாட்டின் மகத்தான ஊழியக்காரன், இந்த மகத்தான தேவனின் சிறிய தீர்கதரிசியின் முன் ஒன்றுமில்லை என அதன் பிறகு நாகமான் புரிந்து கொள்ளத் துவங்கினான். "அவர் என்னை யோர்தான் போன்ற ஒரு சேற்று ஆற்றில் எப்படி ஸ்நானம்பண்ணச் சொல்லலாம்! சீரியாவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ? இன்னுமாக நாகமான், அவர் எனக்கு ஞானஸ்நானம் கொடுக்க திட்டமிட்டு இருந்தாரோ?.... மேலும் தீர்க்கதரிசியாகிய தான் வராமல் மற்றும் ஒரு சிறியவனையா அனுப்புவது? அதற்க்கு நாகமானின் ஊழியக்காரர்கள், "ஆண்டவரே எற்றுக் கொள்ளும்!.. என்றார்கள்" ஆனால் நாகமான் ஞானஸ்நானத்திற்க்கு அவர்கள் சீருடைகளை எற்பாடு செய்யவில்லை என்றான்! மேலும் அவனுடைய ஊழியக்காரர்கள் மீண்டுமாக: "ஆண்டவரே, எற்றுக் கொள்ளும்! என்றார்கள்..." நீங்கள் பார்க்கிறீர்களா?
13 அவனுக்கு சுகம் தேவை ஆனால் சுகத்தை மகத்தான விதத்தில் விரும்பினான். நாகமான் முழங்காலில் மண்டி இடவும் ஆயத்தமாக இல்லை ஏனெனில் தன்னுடைய உடை முமுங்கால் பகுதியில் அழுக்கு ஆகி விடும் என்பதினால். அவன் இப்படியாக: நான் இதை செய்ய வேண்டுமென திட்டமிடப்பட்டதா? நான் இதை செய்ய வேண்டுமென திட்டமிடப்பட்டதா? அதற்க்கு அவருடைய ஊழியக்காரர்கள் அவனை நோக்கி: "தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம்பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும்போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்?... எஜமானனே, ஏற்றுக்கொள்ளும்! 11 ஆம் வசனத்தை பாருங்கள்: அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன்" நீங்கள் பார்க்கிறீர்களா?
14 வரும் வேளையிலே, நாகமான் தன்னுடைய வரவேற்ப்பு மற்றும் தன்னுடைய சுகத்தை திட்டமிட்டு இருந்தான். ஆனால்... சீரியாவிலே இருக்கும் பொழுது, இவ்விதமாக ஒரு சாதாரன மனிதனை போன்று நாகமான் நடத்தப்படுவான் என்று அவன் அறிந்திருந்தால், அவன் வந்திருக்க மாட்டான். ஒ! பரிதாபமான நாகமான்! ஆனால் முடிவாக, அவன் யோர்தானில் ஏழு முறை கழுவினான் மேலும் அந்த குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கி அவன் சுத்தமானான். ஆமென்! தனக்கு நடுராத்திரி சத்தத்தை பிரசங்கித்த எலிசாவிடம் அவன் திரும்பி வந்தான் அதற்க்கு பிறகு அவன்: இனி ஒரு போதும் மற்ற தேவர்களுக்கு பலி செலுத்த போவதில்லை என்று எலிசாவிடம் கூறினான். அவனுடைய சபையிலும் அவன் மாறி விட்டான், அவன் இனி ஒருபோதும் வரவேற்ப்பு பேச்சை கேட்டபதில்லை, வரவேற்பு நாற்காலியும் தேவையில்லை ஏனெனில் அவன் யோர்தானின் அனுபவத்தை உடையவனாக இருந்தான். ஒ யோர்தானின் அனுபவம்.
15 9 ஆம் வசனத்தில் நாகமான் பிரசங்க பீடத்திலிருந்து தன்னுடைய செய்தியை கொடுக்க இருந்தான் அதிலே அவன் ஆறு ஆயிரம் பொற்காசுகள் மற்றும் பத்து லட்சம் வெள்ளி டாலர்கள், எலிசாவின் கிராமத்திற்க்கு தார் சாலை அமைக்க எண்ணம் கொண்டிருந்தது மற்றும் அங்கேமின்சாரம் அனுப்புவதாகவும், குடிநீர் மற்றும் மகப்பேரு மருத்துவமனை ஆகிய எல்லாவற்றையும் அறிவிப்பதற்க்கு இருந்தான். உண்மையை பொருட்படுத்தாமல்அவனால் இஸ்ரவேலுக்கும் சீரியாவுக்கும் இடையிலே நல் உறவை அவனால் காண்பிக்க முடிந்தது. நீங்கள் பார்க்கிறீர்களா?
16 அவன் இப்படியாக கூறுவான்: "... தாழ்மையுள்ள நாகமானாகிய நான், சீரியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்றேன், முன்று முறை கொளரவ பதக்கம் பெற்று இருக்கின்றேன், வீரப் பெருந்தகை வரிசையில் தகுதி பதக்கம் அந்தந்த தேசத்திற்தாக பெற்று இருக்கின்றேன்!..." நீங்கள் பார்க்கிறீர்களா? அவன் ஒரே ஒரு காரியத்தில் மற்றும் குறைவுபட்டு இருந்தான்: யோர்தானின் அனுபவம். அவன் தனக்கு புகழ் மற்றும் பெருமையை விரும்பினான், ஆனால் இரட்சிப்பைஅல்ல. மேலும் இன்றும் அதே காரியமாக இருக்கின்றது. நம்முடைய ஓரினச்சேர்க்கை மந்திரிகள் மற்றும் ஜனாதிபதிகள், ஜனங்கள் மதுபானத்தினால் நாற்றமெடுத்துக் கொண்டு இருக்கின்றனர் ஆனால் யோர்தானின் அனுபவமும் மற்றும் தேவன் அனுப்பின தீர்க்கதரிசியை விரும்புகிறது இல்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா?
17 அந்த மந்திரியின் உன்மையான குஷ்டரோகம், அதுஅவனுடைய எல்லைகள், அவனுடைய செல்வம், அவனுடைய பீரங்கிகள் மற்றும் அவனுடைய ஆடம்பரமான வீடு அது பூமியின் மேல் அழிந்து போகும். அவைகள் இந்த சிறிய தீர்க்கதரிசி முன்பாக தன்னை ஏதோ ஒருவனாக இருப்பதாக விசுவாசிக்க செய்கிறது. நீங்கள் பார்க்கிறீர்களா? நாகமான் 11 ஆம் வசனத்தில் கூறினதாவது, தீர்க்கதரிசி தாமே தன்னிடம் வந்து, மூன்று நாட்கள் முழு உபவாசம் இருக்கலாமா அல்லது ஒரு மகா பலியை செலுத்தலாமா என கேட்பார் என அவன் நினைத்தான். அதினால் தான் அவன் பத்து லட்சம் டாலர்களை ஆயத்தப் படுத்தினான், தீர்க்கதரிசிகள் பணத்தை நேசிப்பார்கள் என்று அவனுக்கு தெரியும்.
18 மேலும் அது வரையில், அவன் பாகாலின் தீர்க்கதரிசிகளை மட்டுமே அவன் அறிந்திருந்தான். ஆப்னாவும் பர்பாரினா சபைகளின் தீர்க்கதரிசிகள் பணத்தை நேசித்தார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் யோர்தானின் அனுபவதிற்க்கு பின்பு, அவன்: இனி ஒரு போதும் எதையும் ஆதரிக்கவும் மாட்டேன் எதையும் தாங்கவும் மாட்டேன், அது ஒரு வேளை என்னுடைய மந்திரி பதவியையோ, MP, மேயர் எதையும் கோருகிறதாக இருந்தாலும். நான் இனி ஒருபோதும் சென்று முதலாவது கல்லை ஒழிங்கீனமாக நடமாட்டேன..."
19 மனிதனுக்கு சுத்தமான கடற்கரையோடு, பர்பாரின் சபைகளை விரும்புகிறான் ஆனால் உனக்கு தேவையானது உன்னுடைய மணி வேளையின் உயிருள்ள தீர்க்கதரிசியோடு யோர்தானின் அனுபவம்.
20 மேலும் யோர்தானின் அனுபவத்திற்க்கு பிறகு, மந்திரி நாகமான் தன்னை எலிசாவின் ஊழியக்காரனாக ஆக்கிக் கொண்டான், ஐந்து முறை தன்னை எலிசாவின் ஊழியக்காரன் என்று மீண்டுமாக கூறினான். முதன் முறையாக இரண்டு விதமான ஆராதனைகள், இரண்டு விதமான சபைகள் மற்றும் தீர்க்கதரிசிகள் இருப்பதை உணர்ந்துக் கொண்டான். 10 ஆம் வசனத்திலே, எலிசாவின் செய்திக்கு முன்பாக தான் சிறுமையானவன் என்று அவன் புரிந்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்பொழுது அவன் புரிந்துக் கொண்டான். ராஜாக்கள், மந்திரிகள், மேயர்கள், மேய்ப்பர்கள், ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள், ஆயர்கள் மற்றும் பூமியின் குடியரசு தலைவர்கள். எல்லோருக்கும் யோர்தானின் அனுபவம் தேவை என்று நாகமான் கண்டான். நீங்கள் பார்க்கிறீர்களா?
21 இந்த அதிகாரமும் திமிர்பிடித்த மனிதனுக்கு பின்பாக, இந்த மாயையான மகிமை மற்றும் ஐஸ்வரியங்களுக்கு பின்பாக, ஒரு தேவனுடைய பிள்ளை ஒளிந்து இருந்தான், ஒரு தாழ்மையுள்ள மனிதனை சமுதாயமானது அழித்தது. பர்பாரின் சபைகளையும் கேயாசி ஆயர்களை மட்டுமே அறிந்த சமுதாயம்...
22 திரு. மந்திரி, திரு M.P., மேயர், திரு இயக்குனர், இன்னுமாக மற்றவர்களே, ஒரு மத சம்பந்தமான காரியத்தில் துவக்கி வைக்கவோ அல்லது ஒரு மத காரியங்களுக்கு ஆதரவு கொடுக்கும்படியாக உங்களுக்கு சபையிலே கெளரவமான ஸ்தானம் கொடுக்கப்படும், ஆனால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்பொழுது, நாகமானின் குஷ்டரோகம் உங்கள் மேல் இருக்கும் மேலும் உங்களுக்கு யோர்தானின் அனுபவம் தேவை.
23 தேர்தல்களில் பெரும்பான்மை காண்பதற்க்காக நீ சபைக்கு செல்வாயானால், தேர்தலில் மனிதனின் தயவை சம்பாதிப்பதற்க்காக நீ சபைக்கு நன்கொடைகளை செலுத்தினால், பின்பு நாகமானின் குஷ்டரோகமானது உன் மேல் இருக்கும் மேலும் அவைகளே பர்பாரின் சபைகள் மற்றும் சங்கை கேயாசியே அதினுடைய மேய்ப்பன்.
24 ஒரு சபையிலே,விஷேசித்த இருக்கையை அந்த மேய்ப்பர் கொண்டிருந்தால், அது யோர்தான் அல்ல. இயேசுவால் தன்னுடைய சீஷர்களிடமிருந்து வேறுபடுத்த முடிந்ததா? யூதாஸ் கூற வில்லையா? "நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான்". ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவன் அல்ல?. இப்பொழுது பிசாசின் புத்திரர்கள் இயேசுவின் கழுதையின் மேல் அமர்ந்து இருக்கின்றனர்.
25 தீர்க்கதரிசிகளும், சபைகளின் தலைவர்களாகிய நீங்கள் இறங்கி யோர்தானுக்கு வாருங்கள்! ஆப்னாவும் பர்பாரின் சொளகரியமான கடற்கரைகளை விட்டு வாருங்கள்.
26 எந்த ஒரு சபையிலே,மேய்ப்பரோ அல்லது பெண் தீர்க்கதரிசியோ அல்லது தீர்க்கதரிசியோ மேடையிலே சபைக்கு முன்பாக உட்காருகிறாரோ, அதுவே பர்பார் மற்றும் சங்கை கேயாசி தான் அதினுடைய மேய்ப்பன்.சில திமிர் பிடித்த பெண்கள், சில பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலத்தில் பீடத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். சில பிசாசின் குமாரத்திகள்.
27 மேலும் அந்த விதமாகத்தான் ஆகாப் இல்லாத வேளையில் அரச அரியணையில் உட்கார்ந்து கொண்டுயேசேபல் தன்னுடைய குமாரத்திகளை அந்த விதமாக செய்யும்படி கூறுவாள். யேசபேலின் கொள்ளுப் பேத்தி மட்டும் தான் அங்கே ஆண்களுக்கு முன்னால் தன் இதயத்தில் கலங்காமல் உட்கார முடியும். வேசிகளின் குமாரத்திகள், தன்னுடைய தாயைப் போல் திமிர் பிடித்தவர்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு பர்பாரின் சபை அதை செய்யக் கூடும் மற்றும் சங்கைகேயாசியே அதினுடைய மேயப்பர்.
28 குளிர் சாதன பெட்டி, கம்பளம் உடைய சபை, அவை தொலைகாட்சியை அனுமதிக்கும் அந்த சபை,திரையரங்கம், கால்பந்து, கடற்கறைகள்... அதுவே பர்பாரின் சபை மற்றும் கேயாசியே அதினுடைய மேய்ப்பன், அந்த சபையில் பெண்கள் பொய்யான தலைமுடியோடு, கால்சட்டைகள், நகச் சாயங்களோடு... உட்கார்ந்திருப்பார்கள், அங்கே பெண்கள் பிரசங்க பீடத்தில் பிரசங்கம் அல்லது பாடலுக்காக இருப்பார்கள். அதுவே பர்பாரின் சபை மற்றும் கேயாசியே அதினுடைய மேய்ப்பன்.
29 எந்த சபையில் மேய்ப்பனுக்கு பெரிய கார் இருந்து மேலும் அந்த சபையின் அங்கத்தினர்கள் ஏழ்மையாக இருக்கிறார்களோ, அதுவே பர்பார் மற்றும் 26 ஆம் வசனத்தில் எலிசா அதற்க்கு எதிராக பிரசங்கம் செய்திருக்கிறார். அவர்களிடத்தில் சொகுசு வண்டிகள், பிரயானத்திற்க்கென்று டாக்சிகள், நிறுவனங்களின் பங்குகள், அறக்கட்டளைகள், மற்றும் அது போன்றவைகள்... அதுவே பர்பாரின் சபை மற்றும் கேயாசியே அதினுடைய மேய்ப்பன், [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
30 அவைகளை எலிசா 26 ஆம் வசனத்தில் கண்டனம் செய்திருக்கின்றார், அவர்கள் கேயாசியின் பிள்ளைகள் மற்றும் எலிசா அவர்களுக்கு நடுராத்திரி சத்தத்தை பிரசங்கம் செய்திருக்கிறார். அவர்களுக்கு யோர்தானின் அனுபவமே தேவையாக இருக்கின்றது. பாதுகாப்பு அமைச்சர் நாகமானுக்கு, அவனுடைய தொலைபேசி பிரசங்கத்தின் இடையிலே ஒலிப்பதை அனுமதிக்கும் சபையை விரும்பினான், அங்கே பிரசங்கமானது ஆடம்பரத்திற்கும் ஓய்வுக்கு எதிராகவும் இருக்க கூடாது. அங்கே சுற்றுலாவை கண்டனம் செய்யக் கூடாது, அங்கே ஒரினச்சேர்க்கை கண்டனம் செய்யக் கூடாது, தன்னுடைய சுவைக்கு எற்ற படி ஒரு சபையை அங்கே அவன் சுத்தமான நீச்சல் குளத்தில் அல்லது ஒரு ஞானஸ்நானத் தொட்டியில் ஞானஸ்நானம் பெற விரும்பினான்.
31 உண்மையில்,தன்னுடைய கைகளில் வேதாகமத்தை வைத்துக் கொண்டு மேலுறை அணிந்த மாயக்கர பூஜாரிகளில் ஒருவனை நாகமான் தேடிக்கொண்டு இருந்தான் ஆனால் அவன் இயேசு கிறிஸ்துவின் அதிகார பூர்வமான தீர்க்கதரிசியை கடந்து வந்தான்.
32 இந்த மாயவித்தை பூஜாரிகளின் விழிப்பு ஜெபங்களுக்கு நீங்கள் செல்லும் பொழுது, நீ ஒரு கத்தோலிக்க அல்லது புராட்டஸ்டன்டு அல்லது சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு சபையோ அவை ஒரு பொருட்டு அல்ல உங்களுடைய பிரச்சனையை விவரியுங்கள்! ஆனால் எலிசா முதலாவதாக யோர்தானின் அனுபவத்தை அவசியமாக கோரினான். ஆம்! யேர்தானின் அனுபவம். அந்த ஊழியக்காரனுக்கு அவர் நடுராத்தரி சத்தத்தை பிரசங்கித்தார்!
33 கனவான்களே மற்றும் சீமாட்டிகளே, பாரளுமன்ற உறுப்பினர்களே, மேயர்களே, நிர்வாகஸ்தர்களே, தலைமையதிகாரிகளே... குஷ்டரோகத்திலிருந்து நீ சுகமாக விரும்புகிறாயா? புற்றுநோய், சீழ் பிடித்த புண்,(ulcer), எய்ட்ஸ்? முதலாவதாக யோர்தானில் இறங்குங்கள்! யோர்தானின் அனுபவத்தை தேடுங்கள்! ஒருவன் தன்னை தேவனுடைய மனிதன் என கூறி, யோர்தானின் அனுபவத்தை குறித்து ஜெபம் செய்ய ஏமாற்றுவானாகில், அவன் ஒரு மாந்திரிக பூஜாரியாக இருக்கிறான. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
34 சில அதிகாரிகள் அவர்களுடைய வீடுகளிலிருந்து இரகசியமாக, இந்த "தீர்க்கதரிசிகளிடமிருந்து" ஜெபங்களை வேண்டிக்கொள்கிறார்கள், அநேக வேளைகளில் தங்களுடைய படுக்கை அறையில் சந்தித்துக் கொள்கின்றனர்.கறுப்பு கோழிகள் அல்லது வெள்ளை குட்டிகளுக்கு பதிலாக, அவர்கள் உபவாசம் இருக்க சொல்லுவார்கள், தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்படுபவர்கள் எவ்வாறு தங்களைத் தாங்களே கொழுக்க வைக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். கிராமத்தில் இருக்கும் மாயவித்தக்கார பூஜாரிகளை போன்றே ஆடம்பரமான வீடுகள் மற்றும் கார்கள், செம்மறி ஆட்டு தோள்களுக்கு பதிலாக அமெரிக்க மேல் ஜாக்கெட்டுகள் (மேல் ஆடை) கச்சிதமாக இருக்கின்றது.
35 தீர்க்கதரிசிகளும் தேவனுடைய செய்தி தொடர்பாளரும், பொன்னும் வெள்ளியும் கர்த்தருடையதுஎன்று அவர்கள் போதிக்க வில்லயா? மேலும் இந்த தீர்க்கதரிசிகள் எலியாவிற்க்கும், யோவான் ஸ்நானனுக்கும் மாதிரியாக தங்களை மிருகங்களின் தோள்களினால் உடுத்திக் கொள்கிறார்கள்! நீங்கள் பார்க்கிறீர்களா? நீங்கள் வேறு ஒரு சுவிஷேசத்தை பிரசங்கியுங்கள் மேலும் எலிசாவின் புத்திரர்கள் அதை மறுப்பார்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
36 மேலும் நான் பிறந்ததிலிருந்து என்னை கண்ட இந்த ஆசிர்வாதமும் ஆசுவாசப்படுத்தும் இந்த காடுகளை நான் விட்டு விட்டு ஐரோப்பாவிற்குவிடுமுறைக்கு செல்வேனா? மற்றும்ஒருபோதும் நாம் மானியங்களை எற்றுக் கொள்ள மாட்டோம், நாம் ஒருபோதும் மானியங்களையும் மனிதனின் ஆதரவை கேட்க்க மாட்டோம். நாம் ஒருபோதும் எந்த சபையுடனும் நட்பு மற்றும் கூட்டுறவு வைத்துக் கொள்ள மாட்டோம். முதலாவதாக யோர்தானின் அனுபவத்தை பெற்றிடு!
37 ஒரு தலைவரோ அல்லது ஒரு ஊழியக்காரனோ ஒரு போதும் உன்னுடன் ஒரே மேஜையில் பந்தி இருக்க நம்மை அழைக்கமாட்டான். ஒருவரும் நம்மை கத்தோலிக்க, பாப்டிஸ்டு, நாற் சதுர சபைகள் அசம்பளிஸ் ஆப் காட், பெந்தேகோஸ்தேக்கள் இடம் ஒரே மேஜையில் நம்மை அழைக்க மாட்டார்கள்...அவர்கள் யோர்தானை அனுபவத்தை முதலாவதாக தேடட்டும்!...
38 ஒரு தகப்பன் அல்லது தாயிக்கு உடல் நலக்குறைவாகஇருந்தாலும், அவர்கள் முதலாவதாக யோர்தானில் இறங்கும்படியாக அவர்களுக்கு உதவி செய்வேன். அவர்கள் இன்னுமாக, பிரன்ஹாமிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தேகோஸ்தே, சி.எம்.ஏ, எழுப்புதல், அட்வென்டின்டிஸ்டு. கத்தோலிக்க, நசரேய தேவர்கள் ஆகியவர்களிம் ஜெபிக்கும் பொழுது... நான் அவர்களுக்கு ஜெபிப்பது ஆக்கிரம்மாக இருக்கும், அவர்கள் தங்களை இந்த ஜாக்கட்டுகளை அணிந்திருக்கும் மாயவித்தைக்கார பூஜாரிகள் தங்களிடம் கைகளை வைத்து ஜெபம் செய்யும்படியாக அவர்களுடைய வீழிப்பு ஜெபங்களுக்கு ஒடுகிறார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? பர்பார் சபைகள் மற்றும் அந்த மேய்பர்களோடு உள்ள எந்த விதமான உறவுகளையும் அவர்கள் நிறுத்த வேண்டும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
39 நாகமான் சுகமடைந்த பொழுது, எலிசாவின் தேவன் ஒருவரை தவிர வேறு தேவன் யாரும் இல்லை என்று அவன் உணர்ந்து கொண்டான். மேலும் அவன் சென்று இனி ஒருபோதும் இன்னோரு தேவனிடம் வணங்க மாட்டான். எப்படியாக நான் ஒரு கத்தோலிக்க, ஒரு புராடெஸ்டென்ட், ஒரு சுவிஷேச அல்லது ஒரு பிரன்ஹாமிஸ்டு, அந்த ஒரின சேர்க்கைகாரர்களுக்கு ஜெபிக்க முடியும்? அவர்கள் சென்று வேறு தேவனை வணங்கும் பொழுது நான் எப்படி அவர்களுக்காக ஜெபிக்க முடியும்? அந்த காரியத்திலிருந்து தேவன் என்னை காப்பாராக! " சபை, அது சபை, அவை அதே [தேவன்]?" என்று கூறுகிறவனிடம் நான் எப்படி ஜெபிக்க முடியும்? தேவன் அவர்களுடைய மனதை புரிந்து கொள்ளும் படி திறக்காத வரையில், என்னுடைய தகப்பனுக்கும் என் தாயக்கும் நான் செய்ய மாட்டேன்! மேலும் நான் பலவீனமானால், தேவன் நமக்கு ஆதரவு அளிப்பாராக!
40 உபாகமம் 13:1ல் வேதாகமம் கூறவில்லையா? அதாவது உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும் எழும்பி அற்புதங்களை செய்து அல்லது உண்மையான வெளிப்பாட்டை கொடுத்தாலும் மற்றும் அவன் "நாம் பாப்டிஸ்டிக்கு செல்லலாம், நாற்ச்சதுர சபைக்கு செல்லலாம், நாம் சுவிஷேச , பெந்தேகோஸ்திற்க்கு செல்லலாம், அசம்பளிஸ்ஆப் காட் சபைக்கு செல்லலாம்... நாம் இன்ன இன்ன சபைகளுக்கு, பணிகளுக்கு, ஊழியங்களுக்கு செல்லலாம் என்றால் " அங்கு செல்ல வேண்டாம். 2 இராஜாக்கள் 17:29 முதல் 31 ன் படி இந்த சபைகள் எல்லாம் உயர்ந்த ஸ்தலங்களாக இல்லையா? மற்றும் தேவர்களான தாகோன் அத்ரமேலக்கு, பாகால், ரிம்மோன், பாகால்சேபூ, கேமோஷ், மோளோகு, ... அவைகள் எல்லாம் இன்று இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படவில்லையா?
41 மேலும் அவைகளை திறை நீக்கும் படியாக தேவன் இந்த செய்தியை அனுப்பவில்லையா? மத்தேயு 24:24 ல் நரகத்திலிருந்து கள்ள தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள் என்று கூறவில்லையா? செய்தி ஏதும்இல்லாமல் மேலும் அவன் வேதாகமத்திலிருந்து திரும்ப ஒப்பித்தால்? எப்படி ஒருவனால் தீர்க்கதரிசி போல் பாவனை செய்ய முடியும், அதாவது சொல்ல வேண்டுமானால், தேவனுடைய செய்தியை கொண்டு வருபவராக இருப்பார்? தன்னுடைய எந்த செய்திக்காக அற்புதங்களை நடப்பிக்க துவங்குவார்?
42 மனுக்குலம் அறியாத ஒரு புதிய செய்தியை கொண்டு வருவதற்க்கு மாறாக எப்படி ஒரு தீர்க்கதரிசியால் ஒரு சபையை சார்ந்து, ஒரு பணியை அல்லது வேதாகமத்தின் ஒரு ஊழியத்தை சார்ந்து இருக்க முடியம்? அவர்கள் மேல் ஆடை (Jacket) அணிந்திருந்து கைகளில் வேதாகமத்தை கொண்டிருந்தாலும் அவர்கள் குறிசொல்லுகிறவர்களும், விக்கிர பூஜாரிகளாக இருக்கிறார்கள். அங்கே இரண்டு எலியாக்கள் அல்லது இரண்டு யோர்தான்கள் இல்லையா. அவர்கள் எல்லோரும் விக்கிரக பூஜாரிகளும் மேலும் அவர்கள் உங்களிடத்தில் கேட்கின்ற உபவாசங்கள் கருப்பு குட்டிகள் அல்லது வெள்ளை கோழிகளின் சாயலில் இருக்கின்றது.
43 மத்தேயு 25:6 மற்றும் வெளிப்படுத்தல் 12:14 முதல் 17 ல் வேதாகமம் கூறுகிறது, தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களே, உண்மையான நாகமான்கள். அதாவது நற்செய்தியானது கடந்து வந்து வஞ்சனைக்கு தூரமாக கொண்டு செல்லும். கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளுக்கு, இஸ்லாம் மற்றும் யூத மதம் உட்பட, எல்லாவற்றிற்க்கும் தூரமானார்கள். கள்ள தீர்க்கதரிசிகளுக்கு விலகி இருப்பார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா?
44 மேலும் நோவாவின் நாட்களில் நடந்தது போல, இன்று நீங்கள் கேட்கின்ற இந்த செய்திக்கு புறம்பே, வேறு எங்கேயும் இரட்சிப்பு இல்லை. நியாயத்தீர்பின் நாளிலே, உங்களுக்கு யாரும் எச்சரிக்கவில்லை என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள்! மேலும் காதுள்ளவன் கேட்க்ககடவன்!