(2005 ஆகஸ்ட் 21, ஞாயிரு காலை லோகாட்ஜரோ அபிட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1நல்லது. இந்த காலை வேலையிலே நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் மற்றும் ஜீவ விருட்சத்தின் மீது உள்ளவெளிப்பாடு என்ன என்பதை மிக துல்லியமாக குறிப்பிட விரும்புகிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா? மோசே என்னகண்டான் என்பதை நான் விவரிக்க விரும்புகிறேன்... மற்றும் ஆதாமிடம் பேசும் பொழுது, அவர் என்ன கூறினார் என்பதையும் குறித்து பேச விரும்புகிறேன்...
2முதலாவதாக ஆதியாகமம் 3:22 முதல் 24 நாம் வாசிக்கலாம் "பின்பு யெகோவா ஏலோஹிம் : இதோ, மனுஷன்நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டிஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும்... அவன்எடுக்கப்பட்ட மண்னைப் பன்படுத்த யெகோவா ஏலோஹிம் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக்கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்".
3நாம் ஜெபிக்கலாம்... கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, இந்த தருணத்தை ஆசீர்வதியும்! இங்கே பியானோ (piano) இல்லை, இங்கே தரை விரிப்பு இல்லை, இங்கே பாடகர் குழுவினர் இல்லை, அல்லது மின் விசிரி அல்லதுகுளிர்சாதனப்பெட்டி இல்லை, இந்த இடமும் நம்மை கொண்டிருப்பதற்க்கு மிக சிறிதாக இருக்கின்றது, ஆனால்இங்கே இந்த மணி வேளைக்கென்று வாக்குதத்தம் பண்ணின வார்த்தை இருக்கின்றது. மற்றும் இந்த காலைவேளையிலே இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் அதை புரிந்துக் கொள்ளும்படியாக செய்வீராக. அதைசெய்யும்படியான வல்லமை உம்மிடத்தில் உள்ளது! ஆமென்!
4நல்லது. அந்நாளிலே தேவன் ஆதாமிடம் பேசும் போது, அது ஆதியாகமம் 2:16 ல் உள்ளது, நன்மை தீமைஅறியத்தக்க விருட்சத்திலிருந்து அவனை புசிக்க கூடாது என்றார். அங்கே ஏவாள் இல்லை மற்றும் நாம் ஆயிர வருடஅரசாட்சியில் இருப்பதை போன்று ஆதாம் இருந்தான். எல்லா காரியங்களும் அழகாகவும் மற்றும் இசைவோடும்இருந்தது. மேலும் ஆதாம் தேவனாக இருந்தான் மற்றும் ஆதாம் ஆவிக்குரிய மற்றும் சரீர பரிமாணத்தில் ஒரேநேரத்தில் ஜீவித்துக் கொண்டு இருந்தான்.
5ஆதாம் தன்னுடைய ஆவிக்குரிய கண்களில் இந்த இரண்டு மரங்களும் என்னவென்றும் அதினுடையவியாக்கியானத்தையும் கொண்டு இருந்தான், ஆனால் வீழ்ச்சிக்கு பிறகு, கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிறசுடரொளி பட்டயத்தையும் அவன் அணுகாதபடி தடுத்தார். நீங்கள் பார்க்கிறீர்களா? பாவமானது தேவனை அவனைஅறியாததை போன்று ஆதாமின் மீது நடவடிக்கை எடுக்கும்படியாக பாவம் செய்தது. மேலும் பரிதாபமானகாரியமானது இரண்டு ஆயிரம் வருடம் கழித்து, அதே கேருபீன்கள் தீர்க்கதரிசி மோசேயை அந்த ஜீவ விருட்சத்தைஅணுகவோ அல்லது பார்க்கவோ அனுமதிக்கவில்லை. மோசே வெகு தூரத்தில் நின்றிருந்தான்... நல்லது. நியாயப்பிரமாணத்தின் தீர்க்கதரிசி மோசே தன் மேலாக காளைகள் மற்றும் வெள்ளாட்டுக்கிடாக்களின் இரத்தத்தோடுமுன்னே வந்து கொண்டிருந்தான்.
6ஒ, பரிதாபமான மோசே! அவன் முன்னே வந்து அது என்ன என்று பார்க்க விரும்பினான், ஆனால் கேருபீன்கள்மிகுந்த சத்தத்தோடு அவனிடத்தில்: "மோசேயே நிறுத்து! நிறுத்து!!! என்றது. மேலும் மோசே சற்று தூரத்தில் நின்றுஅழுதான். என்ன வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தோடு கேருபீன்களை கண்ட பொழுது மோசேஅழுதானா? ஆம் சகோதரர்களே, வெறுமனே விசுவாசியுங்கள்! ஏன்? ஏனெனில் மனுக்குலமானது நரகத்திற்குசபிக்கப்பட்டு இருக்கின்றது.
7ஆனால் மோசேக்கு பிறகு இரண்டு ஆயிரம் வருடம் கழித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் பலியானதுகொடுக்கப்பட்டது... மேலும் பத்முவின் தீவிலே, ஆதாமின் பெரிய, பெரிய கொள்ளு பேரனான யோவான், அனுகினான் அப்பொழுது கேருபீன் அவனை கண்ட பொழுது, அவன், "நான் யோவான் - ஆதாமின் கொள்ளு பேரன், மேலும் நான் தீர்க்கதரிசியாகிய மோசேயின் சந்ததி. நான் காளைகள் மற்றும் வெள்ளாட்டுகிடாக்களின் இரத்தத்தோடுவரவில்லை ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தோடு வந்திருக்கின்றேன்... " என்றான். [ஆசிரியர்குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நீங்கள் பார்க்கிறீர்களா?
8யோவான் இஸ்லாமியர்களை போன்று காளைகள் மற்றும் வெள்ளாட்டுக்கிடாக்களின் இரத்தத்தோடு வரவில்லைஆனால் அவன் மேம்பட்ட இரத்தத்தோடு, தேவனுடைய இரத்தத்தோடு, தேவ ஆட்டுக்குட்டியின் இரத்தத்தோடுவந்தான். அந்த கேருபீன்களில் ஒன்று அவனிடம், "வந்து பார்!" என்று இடி முழக்கச் சத்தம் போன்று பேசினது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. மேலும் யோவான் கூறினதாவது: "பின்பு, பளிங்கைப்போல்தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்துபுறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான். நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்தவிருட்சத்தின் இலைகள் தேசங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்."வெளிப்படுத்தல் 22:1 முதல் 2. நீங்கள் பார்க்கிறீர்களா?
9பன்னிரண்டு கனிகளை கொடுத்த இந்த விருட்சமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அதாவது, பன்னிரண்டுஅப்போஸ்தலர்கள். நாம் அதை ஆதியில், நடுவில் மற்றும் வேதாகமத்தின் முடிவில் காண்கின்றோம். மேலும்வேதாகமத்தின் நடுவில், யூதாஸ் ஸ்காரியோத்து நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்திற்க்கு ஒப்பாக இயேசுகிறிஸ்துவுக்கு அருகில் இருக்கிறான்.
10இப்பொழுது இதை கவனியுங்கள் யோவான் அந்த விருட்சத்திற்ககு மிக அருகில் நின்றான், சிங்காசனத்திற்கு மிகஅருகில் இருந்தான், நதிக்கு மிக அருகில் இருந்ததினால் ஆதியாகமம் 2:10 முதல் 14 ல் மோசே கூறுகிற விதமாகஇனி அவனால் நான்கு கிளைகளை பார்க்கமுடியவில்லை, அதாவது நான்கு சுவிசேஷங்கள். அவன் சுவிசேஷசத்தின்நான்கு கிளைகளுக்கு அப்பால் சென்றான். அவைகள் நான்கு சுவிசேஷங்கள் அல்ல ஆனால் ஒரே சுவிசேஷத்தின்நான்கு அம்சங்கள். மோசே வெகு தூரத்தில் நின்று கொண்டு இருந்ததினால் பலிபீடம் மற்றும் தேவாலயத்திற்க்குபுறம்பே, கேருபீனுக்கு அப்பால், அவனால் நான்கு கிளைகளை மட்டுமே காண முடிந்தது.
11அந்த நான்கு கிளைகளை, ஆதாமினால் அவைகளை அணுக முடிந்தது. மோசேயினால் அவைகளை அணுகமுடிந்தது. பாப்டிஸ்டுகள் மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் அதை அணுக முடிந்தது, கத்தோலிக்கர்களும் அதை அணுகமுடிந்தது. அது என்ன? அதுவே உட்பிரகாரம் அப்படி இருக்க ஏதேன் பரிபூரணமாக இருக்கின்றது, அது தேவனுடையபிரசன்னம் என நான் கூறலாம். ஏதேனே மகா பரிசுத்த ஸ்தலம்.
12ஆரோன் பூமியின் மேல் காளைகள் மற்றும் வெள்ளாட்டு கிடாக்களை வைத்து செய்து கொண்டு இருந்ததுபூமியின் ஒப்புமைக்காக மட்டுமே ஒழிய அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமே. ஆரோன் மகா பரிசுத்தஸ்தலத்திற்குள்ளாக பிரவேசிக்கும் பொழுது, அவை வரும் நாட்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்இரத்தமானது சிந்தப்படும் என்பதை நான் கூறுகிறேன். நீங்கள் அதை புரிந்து கொண்டீர்களா? இங்கு இருக்கும்அதே ஆவி நான்கு ஊழியங்களை பற்றிக்கொண்டு இவை எல்லாவற்றையும் விவரிக்கும் என நான் விசுவாசம்கொண்டிருக்கின்றேன். ஆமென் !
13இப்பொழுது, இந்த நான்கு கிளைகளை குறித்து எண்ணிப்பார்க்கலாம்; ஆதியாகமம் 2:10 முதல் 14 ல் உள்ளஇந்த நதிகள் எந்த சுவிசேஷத்திற்க்கு பொருந்துகிறது என்று பார்க்கலாம்? அதை நாம் வாசிக்கலாம்"தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரியஆறுகளாயிற்று".
14இப்போது கவனம் செலுத்த வேண்டும்! முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம்முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும். அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலேபிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு." அது தான் மத்தேயுவின் புத்தகம்; அது தான் சிங்கம். ஆமென்! இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். இங்கே மாற்குசுவிசேஷத்தை குறித்து இருக்கின்றது. ஆமென்!"
15மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; அசீரியா, அதுவே பாபேல், பிறகு பாபிலோன் என்று ஆனது. அது ஆட்சி மற்றும் மனிதனின் அம்சம். அது லூக்காவின் புத்தகம். ஆமென்! நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்" இங்கே அது தான் யோவானின் சுவிசேஷம் மற்றும் வெளிப்படுத்தல். மேலும்அவர் "நான்காம் அறு, அது ஐபிராத்து", அவர் ஒன்றும் கூறவில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா? ஆமென்!
16நல்லது. இப்பொழுது நாம் வெளிப்படுத்தல் 22:1 க்கு திரும்பி வருவோம், "ஜீவ விருட்சமானது இதுவென்றால், நான் மற்ற பக்கத்தை நோக்கி பார்க்கட்டும், நன்மையும் தீமையும் அறியத்தக்கதான ஒன்று வெகு தூரத்தில்இருக்காது" என்று யோவான் தன்னுடைய இருதயத்திற்குள் நினைத்து கொண்டான், ஆம் இந்த விருட்சமானதுஅங்கே இருந்திருக்க வேண்டும், ஆனால் பாவம் நிகழ்ந்த பொழுது, தேவன் அதை வெட்டி விட்டார்.
17சர்ப்பத்தை தேவன் வெட்டின அதே விதமாக, அதினுடைய அடையாளமாக இருக்கின்ற ஏதேன் தோட்டத்தில்வெட்டப்பட்டது. பாவம் நிகழ்ந்த பொழுது, ஏதேனில் தேவன் வெட்டி விட்டார், இயற்கையான தோற்றம் போல்இருந்த அந்த விருட்சம், அது வெளிப்படுத்தல் 22 ல் உள்ள விருட்சத்திற்கு நெருங்கி இருந்தது. தேவன் பலியைசெலுத்துவதற்க்கு முன்பாகவே, அந்த விருட்சமானது வெட்டப்பட்டது.
18அதே விதமாக , கொல்கதாவிலே இயேசுவின் பலியானது செலுத்தப்படுவதற்க்கு முன்னதாகவே, தேவன் யுதாஸ்காரியோத்தை வெட்டி விட்டார்... நீங்கள் பார்க்கிறீர்களா? உயிர்தெழுதலுக்கு பிறகு இயேசு கிறிஸ்துவோடுஜீவிக்கும் படியாக தேவன் யூதாஸ் காரியோத்தை விட்டு வைக்கவில்லை. பரலோகத்திலே அவர்களுடைய ஆவிக்குறியமற்றும் அடையாள ஒப்பீடுகளை வெட்டிப் போட்டார் மேலும் இப்பொழுது பூமியின் மேல் உள்ள சரீரப்பிரகாரமானவியாக்கியானத்தை வெட்டிக் கொண்டு இருக்கின்றார்.
19இவ்வாறு, தோட்டத்திலே, ஆதாம் வியாக்கியானத்தை கொண்டிருக்க வேண்டும், அங்கே இருந்த நன்மை தீமைஅறிய தக்கதான விருட்சமானது வெளிப்படுத்தல் 22:1 முதல் 2 ல் உள்ள விருட்சம் போன்று அல்ல. ஆனால் அதுசர்ப்பம் என்ற வெளிப்பாட்டை கொண்டிருந்தான். அதை சொல்ல வேண்டுமானால், சில மத தலைவர்கள், அதுஇறையியலின் விருட்சம். நீங்கள் அதை புரிந்துக் கொண்டீர்களா? ஒவ்வொரு இஸ்லாமிய, கத்தோலிக்க, புராடஸ்டண்ட், சுவிசேஷக அல்லது பிரன்ஹாமிஸ்டு தலைவனே நன்மை தீமை அறிய தக்க விருட்சம். மிக நன்று!! அவ்வளவு தான்.
20ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே வெளிப்படுத்தல் 22:1 முதல் 2 ன் பன்னிரண்டு கனிகளோடு உள்ளவிருட்சம் மேலும் தேசங்களை சுகமாக்கும் அற்புத வல்லமை அவருடைய இலைகளே. நீங்கள் பார்க்கிறீர்களா?
21இப்பொழுது நான் சொல்லப் போவதற்க்கு உங்களுடைய கவனத்தை செலுத்துங்கள், நன்மை தீமைஅறியத்தக்கதாக விருட்சத்திற்கான ஆவிக்குறிய வெளிப்பாடு இதுதான் இதை உங்களுடைய மனதில் ஏந்திக்கொள்ளவும். ஆவிக்குறிய விதத்தில், அந்த இரண்டு மரங்களும் தேவன் மற்றும் சாத்தான். தேவனுடைய ஆவி மற்றும்சாத்தானுடைய ஆவி.
22வெளிப்படுத்தல் 22:1 முதல் 2 ல் ஆவிக்குரிய விதத்தில் மட்டுமே நாம் காண்கின்றோம், அவைகளின் சரீரப்பிரகாரமான வியாக்கியானமானது, ஒரு புறம் ஸ்திரியானவள் சிருஷ்டிப்பதற்க்கு முன்னதாக ஆதாம் தாமே தன்னுடையதெய்வீக நிலையில் இருந்தது. மற்றும் இன்னொரு புறத்தில் வீழ்ச்சிக்கு முன்பாக இருந்த சர்ப்பம். தேவனால் தடைசெய்யப்பட்ட கனியானது பாலியல் உறவாக இருக்கும் பட்சத்தில், எல்லா பிசாசின் குமாரனிலும், நன்மை தீமைஅறியத்தக்க விருட்சத்தை காணலாம். சகோதரிகளே, இந்த விருட்சத்திலிருந்து உங்களை தூரமாக்கிக்கொள்ளுங்கள், அதே விதமாக, சகோதரர்களே, இந்த விருட்சத்திற்க்கு நீங்கள் விலகி இருங்கள்!
23"சகோதரர் பிலிப்பு, ஸ்திரீயானவளுமா?" என நீங்கள் கேட்க்கிறீர்கள் ஆம், சகோதரனே, ஆதியாகமம் 2:16 ல்தேவன் ஆதாமோடு பேசின பொழுது, அவர் ஸ்திரீயை குறித்து பேசினார். ஒரு புறத்தில், அந்த நன்மை தீமை அறியதக்க விருட்சம் அது ஏவாள். கிழே வயிறு வெளியே தெரியும்படி, கால்கள் தெரியும்படி, பாவாடை அவர்களுடையபிட்டத்தை வரையும் படியாக இருக்கும், அது ஒரு சகோதரியாக இருந்தாலும் அப்படிப்பட்ட ஸ்திரிகளை கண்டால், அவளைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்! அது நன்மை தீமை அறியத்தக்க விருட்சம். அதை புசிக்க வேண்டாம்!
24பொய்யான முடிகளோடு, முழுகால் சட்டை (Trousers) அணிந்து மார்பகங்களை வெளியே விட்டு இருக்கும்பெண்களை கண்டால், அதுவே நன்மை தீமை அறியதக்க விருட்சம். மரியாளை போன்ற ஜீவியத்தினால் தேவன்நிழலிட்டு மேலும் அதை சீதனத்தோடு கூடிய ஆசிர்வாதத்தினால் அங்கிகரிக்காத வரையில் நீ அதை புசிக்கவேண்டாம். நீங்கள் திருமணத்திற்க்கு முன்பு பாலியல் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. அதாவது சீதனம் என்றுசொல்லலாம். நீங்கள் பார்க்கிறீர்களா?
25இப்பொழுது வெளிப்படுத்தல் 12:1 நாம் எடுத்துக் கொள்ளலாம், "அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலேகாணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல்பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன" அதுவே வெளிப்படுத்தல் 22 ல் உள்ள விருட்சத்தின் உருவம்மற்றும் அது ஒரு ஸ்திரீ. மேலும் சகோதரிகளே உங்களுக்கு, நீங்கள் அவர்களை ஒரு தூதர்களை போன்றுகாண்பீர்களானால் அதாவது ஒரு பாதி உலகையே உங்களுக்கு வாங்கி தரும் விதமாக இப்படி கூறுவார்கள், "நான்உன்னுடன் உன்மையான உறவை வைத்துக் கொள்ள விரும்புகிறேன்... ", ஜாக்கிரதை! அது நன்மை தீமை அறியதக்கவிருட்சம். நீங்கள் பார்க்கிறீர்களா?
26கவனியுங்கள் ஆதியிலே ஏவாள், ஈஷா என்று அழைக்கப்பட்டாள், அதாவது ஸ்திரீ என்று அழைக்கலாம். ஆனால்தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்திக் கொண்ட பிறகு, அவளுடைய பெயர் ஏவாள் என்று ஆனது. அதாவதுஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள், ஆதாமின் புத்திரர்கள் மற்றும் சர்ப்பத்தின் புத்திரர்களுக்கு தாயானவள். இதேபோல், ஒரு சபை தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது, இயேசு கிறிஸ்துவின் சபைஎன்பதற்க்கு பதிலாக வேறு ஒரு பெயரை காண்பீர்கள்.
27கிறிஸ்துவத்தின் ஒரு குறிப்பிட்ட சகாப்தத்தில், இயேசு கிறிஸ்துவின் சபையானது தன்னை விபசாரத்தில்ஈடுபடுத்திய பொழுது, அவளுடைய பெயர் கத்தோலிக்கம் என்று மாற்றப்பட்டது. பின்பு, அவள் மறுபடியும் எழுந்தபொழுது நீண்ட ஓட்டத்தில் விபசாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அவளுடைய பெயர் மெதடிஸ்ட் என்றுமாற்றப்பட்டது. மறுபடியும் வேரு ஒரு துதனை கொண்டு எழுந்த பிறகு மேலும் இந்த தூதனுக்கு பிறகு விபசாரம்செய்து, அவளுடைய பெயர் பாப்டிஸ்டு என்று மாற்றப்பட்டது. நீங்கள் பார்க்கிறீர்களா? அட்வென்டிஸ்டு, மேலும் அதுபோன்றது..
28மேலும் வேதாகமத்தின் மத்தியில், ஜீவ விருட்சமானது வார்த்தையாக வெளிப்பட்டது, மேலும் நன்மை தீமைஅறியத்தக்க விருட்சமானது இறையியலாக வெளிப்பட்டது என்று அறிந்து கொள்ளுங்கள். மேலும் அவைகத்தோலிக்க புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு பூஜாரிகள் மற்றும் மேய்ப்பர்கள், வெளிப்படுத்தப்பட்ட மற்றும் திரும்ப அளிக்கப்பட்ட சபைகள் உள்பட எல்லாம் அவளுடைய காதலனாகஇருக்கின்றது. மேலும் நடுராத்திரி சத்தம் கூறுகிறதாவது, நீங்கள் பிரயாணம் பன்னிக்கொண்டு இருந்தாலும், நீங்கள்அவர்களுடைய போதனையின் பாத்திரத்தை சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கூடாது. அவர்கள் வெறும் நன்மைமற்றும் தீமையை பிரசங்கிப்பார்கள், அதாவது சொல்வோமானால் ஒழுக்கத்தை போதிக்கின்றார்கள் மேலும்வேதாகமம் கூறுகிறது அவர்கள் தரித்திரனும், குருடனும், நிர்பாக்கியமுள்ளவனும் மற்றும் நிர்வாணியுமாகஇருக்கிறார்கள்.
29முடிவாக, இந்த இரண்டு விருட்சத்தின் ஆவிக்குறிய மற்றும் சரீரத்திற்குரிய நோக்கத்தை நீங்கள் கருதாதவரையில் உங்களால் இதை புரிந்து கொள்ள முடியாது என நான் கூற விரும்புகிறேன். உதாரணத்திற்க்கு யோவான்12:28 முதல் 29 ல் இப்படியாக கூறப்பட்டு இருக்கிறது"... மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்."
30நல்லது. நீங்கள் எதை கருதுவீர்கள்? ஒரு இடி முழக்கமா அல்லது ஒரு சத்தமா? நீங்கள் பார்க்கிறீர்களா? அதுதான்! மேலும் சாயங்கால மணி வேளையில், ஒரு நாளிலே சில சகோதரர்களோடு வில்லியம் பிரன்ஹாம் வேட்டையாடிகொண்டு இருக்கும் பொழுது, அங்கே மூன்று இடிமுழக்கம் உண்டானது, ஆனால் அதற்க்கு பதிலாக மிகுந்தசத்தமாக வில்லியம் பிரன்ஹாம் முன்று வார்த்தைகள் உச்சரிப்பதை கேட்டார்: "மேற்கு கடற்கரை நியாயத் தீர்ப்பு" மேலும் இரண்டு நாட்கள் கழித்து ஒரு வல்லமையுள்ள பூமி அதிர்ச்சி அலாஸ்காவை தாக்கியது.
31இப்படியாக, வெளிப்படுத்தல் 22 ல் உள்ள விருட்சததை ஆதியாகமம் 2:10 ல் உள்ள நதியாகவும் மற்றும் நான்குஆறுகளாகவும் ஆவிக்குறிய விதத்தில் பார்க்க வேண்டும். நீங்கள் கேட்கலாம், "சகோதரர் பிலிப்பு, ஆதியாகமம் 2:10 ஆவிக்குறிய நீதியை குறித்து பேசுகின்றதா? ஆம், சகோதரனே, அது மோசேயின் தரிசனத்தில் உள்ளது மேலும்அதை நீங்கள் உற்று நோக்கினால் உங்களுக்கு நதியானது நீரோடைகளை அளிக்காது.
32ஆதியாகமம் 2.10 இயற்கையான விதத்தில் சாத்தியம் இல்லை. ஒரு நதியானது நீரோடைகளாக ஒடாது, ஆனால்நீரோடைகள் நதிகளாக ஒடும். ஆகவே அது ஆவிக்குறிய விதத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மற்றும் நான்குசுவிசேஷங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிங்காசனத்தை சுற்றி உள்ள நான்கு உயிருள்ள ஜீவன்களுக்கும்மற்றும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்கும் வல்லமையும் அதிகாரமும் கொடுக்கின்றார். ஆமென்!