



Kacou 25 (Kc.25) : மத்தேயு 25:6ல்ஏன்பத்துகன்னிகைகள்
(2006 நவம்பர் 23, வியாழன் மாலை லோகாட்ஜரோ அபிட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 பூமியின் மேல் ஒரு உண்மையான தீர்க்கதரிசி இருக்கும் பொழுது, அதுவே கல்யாண மேஜை மற்றும் பரலோகங்களின் இராஜ்யம் பூமிக்கு திரும்ப வருகின்றது. உன்னுடைய தலைமுறையின் தீர்க்கதரிசியோடு பூமியிலே நடைபெறுகிற ஒரு பந்தியில் பங்குகொள்ளாமல் பரலோகத்திலே நடக்கும் கல்யாண விருந்தில் பங்கு கொள்ள முடியாது. பூமியின் மீது தீர்க்கதரிசி செய்தியாளன் கொண்டிருக்கும் திறவுகோல்களில் பிரவேசிக்காத வரை நீங்கள் பரலோகத்தின் வாசல்களில் பிரவேசித்து கல்யாண பந்தியில் உட்கார முடியாது.
2 சகோதரனே, இஸ்லாமின் புத்திரர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் புத்திரர்களும் பூமியின் மேல் கட்டித் தழுவும் நாளானது வந்து கொண்டு இருக்கிறது என்பதை நான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். ஏசாவும் யாக்கோபை போல , ஈசாக்கின் குமாரர்களும், இஸ்மவேலின் குமாரர்களும் ஒன்றாக மிகிழ்வார்கள். அதற்காகத் தான் மனித குலமானது காத்துக் கொண்டு இருக்கின்றது மேலும் அது தான் நடக்கும்... பொய்மைக்காக மறிக்க பயப்படாத அந்த விமான முறை தற்கொலை படையினரை (Kamikazes) நீங்கள் பார்க்கும் பொழுது, நீங்கள் அறிந்துக் கொள்ளுங்கள், தேவன் அவர்களுடைய குமாரர்களை என்ன கூறினாரே அது நடக்க வேண்டும், அவர்கள் குர்-ஆன் களை எரிப்பார்கள், அவை நடக்கும்.
3 இஸ்லாமானது தன்னுடைய சொந்த மையத்திலிருந்து தன்னுடை சொந்த குமாரர்களால் கிறிஸ்தவர்களுடைய தேவன் என்ற பெயரில் உலுக்க துவங்கும். அவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவம், மற்றும் யூத மதங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வார்கள். சபையானது காத்துக் கொண்டிருக்கிற அந்த கடைசி துன்புறுத்தலானது அந்த நேரத்திலே நடக்கும். மேலும் அது அவ்வாரே இருக்கும். அந்த மணி வேளைக்காகவே, தேவன் "புனித குர்-ஆன் " என்ற புத்தகத்திற்க்கு அவ்வளவு புகழை இம்மட்டுமாக விட்டு வைத்தார்.
4 கிறிஸ்துவம் ஒரு சூரியனின் பயணப்பாதையை போன்று முன்னேறி செல்கின்றது மேலும் அது ஒரு போதும் பின் வாங்குவதில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா? ஆசியா பிறகு ஐரோப்பா பிறகு அமெரிக்கா, இனத்திற்க்கு பின் இனம், கண்டத்திற்க்கு பிறகு கண்டம்... ஆனால் இதை மனதில் கொள்ளுங்கள் அதாவது ஒரு தேசத்திலே இராஜ்ஜியத்திற்குறிய பிள்ளைகளை அறுவடை செய்த பிறகு, அது முடிந்து விட்டது. எஞ்சியுள்ளது, அவர்கள் மறுபடியுமாக கோதுமையை வளர்த்தால் பூமியின் மேல் தேவனுடைய அடுத்த செயல்பாட்டின் பொழுது பயத்துடன் அறுவடை செய்யப்படும். நீங்கள் பார்க்கிறீர்களா?
5 வில்லியம் பிரன்ஹாம் ஊழியத்தின் வேளையில், அமெரிக்கா அணலாக இருந்தது ஆனால் ஐரோப்பா சம்பிரதாயத்திற்காக கிட்டத்தட்ட அலட்சியமாக இருந்தது மேலும் எதையும் செய்ய முடியவில்லை. ஜான் வெஸ்லி , மார்டின் லூதர், வயிட் பில்டு, ஜான் கால்வின் மற்றும் அது போன்றவர்களின் மறுபடியுமாக வளருகின்ற கோதுமையை மட்டுமே தேவன் நினைவு கூறுவார்.
6 சகோதரரே, மறுபடியுமாக ஒரு போதும் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் ஐரோப்பாவிலே எழும்ப மாட்டார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு வயலிலே கோதுமை அல்லது அரிசியை பயிரிடும் பொழுது, அங்கே அறுவடைக்கு பிறகு மறுபடியுமாக பயிர்கள் விளையும். அது தான் தேவன் ஐரோப்பாவை சந்திக்கும் பொழுது ஆசியாவிலே நடைப்பெற்றது. அதுதான் தேவன் அமெரிக்காவை சந்திக்கும் பொழுது ஐரோப்பாவிலே நடைப்பெற்றது. இன்று அது தான் அமெரிக்காவிற்க்கும் ஐரோப்பாவிற்கும் நடந்து கொண்டிருக்கின்றது. இன்று ஐரோப்பா அல்லது அமெரிக்கா அல்லது ஆசியாவிலே தேவன் ஆசிர்வதிக்க கூடிய ஊழியமானது இந்த செய்தியை கொண்டு சென்று ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவிலே மறுபடியுமாக வளருகிற கோதுமையை அறுவடை செய்கிறதாக இருக்கும். ஆமென்! இப்பொழுது நீங்கள் பாருங்கள் ஆப்ரிக்கா கிறிஸ்துவத்தின் மிக சூடான கண்டமாக ஆகிக் கொண்டு இருக்கிறது...
7 தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக! நல்லது, இந்த மாலையிலே, மத்தேயு 25ல் ஏன் பத்து கன்னிகைகள்? என்ற பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா? கர்த்தருக்கு ஏன் பத்து கன்னிகைகள்? அதை குறித்து தான் நான் இப்பொழுது பேச விரும்புகிறேன். ஏன் பத்து கன்னிகைகள்? சாலமோன் மற்றும் தாவீது அனேக மனைவிகளை கொண்டதை போல எல்லா தேசங்களி்லிருந்தும் கிறிஸ்துவின் மணவாட்டி வருகிறதை போல் ஒரு மாதிரியாக இருக்கின்றதா? இல்லை! அது அப்படியாக அல்ல.
8 எஸ்தர் 2:9 ல் நாம் பார்க்கிறதை போன்று மணவாட்டிக்கு உடன் செல்லும் கன்னிகைகளா? வெளிப்பாடு வருவதற்க்கு முன்பு அப்படியாக தான் நான் நினைத்தேன். அவர்கள் எல்லா தேசங்களிலிருந்து வருவது உண்மை தான் என்று நான் நினைத்தேன். ஒரு நல்ல இறையியல் வல்லுநர் அதை போதிப்பான் ஏனெனில் தன்னுடைய நற்பெயர் மற்றும் புகழின் நிமித்தமாக , ஜனங்கள் நம்புவார்கள். காரணக்காரியத்துடன் தோன்றும் எல்லாவற்றையும் அவர்கள் போதிப்பார்கள் மற்றும் உலகம் அவர்களுக்கு செவி கொடுக்கும் எனெனில் காரணத்துடன் இருப்பதினால்.
9 ஆனால் தேவன் அனுப்புகிற மனுஷன், தேவனுடைய வார்த்தைகளை கூறுவான். நீங்கள் பார்க்கிறீர்களா? நான் பள்ளியில் இருக்கும் பொழுது, பேராசியர் கொடுத்த எல்லா பயிற்ச்சிகளிலும், வீட்டுப் பாடத்திலும் என்னுடைய எல்லா முயற்சிகளைக் கொண்டு செய்த பிறகு மேலும் நல்ல மதிப்பெண்களை நான் எதிர்பார்த்தேன். ஆனால் திருத்துதல் வந்த பிறகு, "காக்குவ் பிலிப்பு... நீ இருபதக்கு ஆறு எடுத்திருக்கிறாய்!" என்று அழைக்கும் சத்தம் எனக்கு கேட்டது. அது என்னை தேவனுடைய காரியங்களுக்கு ஞானமாகவும் மற்றும் உணர்வுள்ளவனாகவும் இருக்கும் படி செய்தது. மனித காரியங்களில் நான் ஜெயங்கொள்ள முடியாது எனில், ஆகையால் தேவனுடைய காரியங்களிலும் நான் என்னுடைய புத்தி கூர்மையினால் ஜெயங் கொள்ள முடியாது.
10 நல்லது, மத்தேயு 25:1... ன் பத்திக்கு நாம் திரும்பி வரலாம். ஏன் அநேக கன்னிகைகள்? நான்கு நாட்கள் முன்பு வரை நான் அறியாமல் இருந்தேன். மேலும் அதை குறித்து வேறு யாராவது எங்கேயாவது பேசியிருந்தால், நான் அதை அறிந்தது இல்லை. மேலும் வழக்கமாக, யாராவது என்ன நினைத்து கொள்வார்கள் என்று அறிவதற்க்கு முன்பாக நான் பொதுவாக போதிப்பேன்.
11 நல்லது. நாம் இப்பொழுது மத்தேயு 25, 1 ஆம் வசனம் மட்டும் வாசிக்கலாம்: "அப்பொழுது பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப்புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்."
12 நான் குறிப்பிட விரும்புகிறதாவது, மணவாட்டியானவள் அப்போஸ்தலர்கள் நேரம் தொடங்கினது முதல் இம்மட்டுமாக, நம்முடைய ஆண்டவருக்கு அவள் ஒரு போதும் இரண்டு அல்லது மூன்று கன்னிகைகள் அல்ல, ஆனால் ஒன்றே ஒன்று. 2 கொரிந்தியர் 11.2 ல் அவர் நம்மை கற்புள்ள கன்னிகைகளாக கிறிஸ்துவிற்க்கு நியமித்திருக்கிறார் ஆனால் ஒரே ஒரு கன்னிகை , கிறிஸ்துவிற்க்கு ஒரே ஒரு மணவாட்டி. ஆனால் இங்கே யோசுவாவின் நாட்களிலே, ஆவிக்குரிய இஸ்ரவேல் தனித்து தோன்றுகிறது, ஒவ்வொருவரும் தன்னுடைய பங்கில், ஒவ்வொருவரும் ஒரு பங்கில் என்று நான் கூறுவேன். யோசேப்பு முதற்கொண்டு மோசே வரைக்கும், இஸ்ரவேல் ஒரு போதும் பிரிக்கப்பட்டதில்லை ஆனால் அது யோசுவாவின் காலத்தில் நிகழ்ந்தது, இஸ்ரவேல் பிரிக்கப்பட்டது. நடுராத்திரி வரையில் சபையானது ஒரே ஒரு கன்னிகையாக இருந்தது. அதினுடைய முதிர்ச்சியில் தீர்க்கதரிசி பத்து கன்னிகைகளாக பார்க்கிறார். மேலும் அவர் கூறுகிறார்: "பரலோகராஜ்யம்... பத்து கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கிறது போல..." எதிர் காலத்தில் உள்ளது. அதாவது சொல்ல வேண்டுமானால்: ஒரு நாள் வரும் அப்பொழுது மணவாட்டி சபையானது பத்து கன்னிகைகளை போன்று தோன்றும். அது முதிர்ச்சியின் நேரத்தில் மட்டுமே கூடும். ஆமென்! அது தான்.
13 நல்லது. மோசேக்கு பின்பு அங்கே யோசுவா இருந்தார் மேலும் இரண்டாவதாக நமக்கு மிக நெருங்கிய உதாரணமாக அது எலியா மற்றும் எலிசா வை குறித்ததாக இருக்கின்றது. நீங்கள் பார்க்கிறீர்களா? மோசே மற்றும் யோசுவா, எலியா மற்றும் எலிசா, பிறகு இறுதியாக பிரன்ஹாம் மற்றும் காக்குவ் பிலிப்பு. மூன்று, அது பரிபூரணம். மோசே, எலியா மற்றும் பிரன்ஹாம். யோசுவா, எலிசா மற்றும் காக்குவ் பிலிப்பு . அது பரிபூர்ணமாக இருக்கின்றது மற்றும் எல்லா காரியமும் சரியாக உள்ளது. வேதாகமத்தின்னூடாக பாருங்கள் அப்பொழுது ஒரு குழப்பமும் இல்லை என்று நீங்கள் காண்பீர்கள். அவருக்குள் ஒழிங்கீனம் இல்லை. மேலும் அவரை ஒரு குழந்தையை போல் எதிர்பார்கிறவனுக்கு ஒரு குழப்பமும் இருக்காது.
14 வேதாகமம் மற்றும் தீர்க்கதரிசிகள் தேவனுடைய தவறிழைக்காத தன்மையை காண்பிக்கின்றது. எனெனில் பூமியிலே மனிதர்கள் ஒரு உயிருள்ள மனிதனை கடந்து செல்கின்றனர், மேலும் அவர் நேற்றும் இன்றும் மற்றும் வரப்போகின்ற காலங்களில், அவர் பழைய உடன்படிக்கையில் என்ன செய்தாரோ, அவரால் இன்றும் அதை செய்ய முடியும். மேலும் ஒருவரும் முதலாவதாத தேவனிடத்திலிருந்து வெளிப்பாட்டை பெற காத்திருக்காமல் தவறிழைக்காத தன்மையை உடையவர்களாக இருக்க முடியாது ஏனெனில் தேவன் ஒருவரே தவறிழைக்காத தன்மையையுடையவர்.
15 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தேவன் தாமே மாம்சத்தில் வெளிப்பட்ட பொழுது,"பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்;". மேலும் பரிபூரணம் மற்றும் தேவனுடைய பரிபூரணச் சித்தம் மற்றும் தவறிழைக்காத தன்மை இவைகள் எல்லாம் இதனுடைய கனிகளாக இருக்கின்றது: "பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்..."
16 இந்த ஒரே காரியத்தை மாத்திரமே தேவனால் அங்கிகரிக்க முடியும். மேலும் அந்த எல்லா காரியங்களும் பொருமையில்லாமல் செய்ய முடியாது. தேவன் பொருமையில்லாமல் ஒன்றும் செய்வதில்லை. இயேசு கிறிஸ்து தாமே பன்னிரண்டு வயதில் தன்னுடைய ஊழியத்தை துவங்கி இருக்க முடியும் ஆனால் அவர் முப்பது வயது வரை காத்திருந்தார். மேலும் பன்னிரண்டு வயதிலிருந்து முப்பது வயது வரை பதினெட்டு வருடங்கள் கடந்தன. மேலும் 1993 லிருந்து 2002 வரை அது ஒன்பது வருடங்கள் . நீங்கள் பார்க்கிறீர்களா? ஆகையால் நீ ஒரு அழைப்பை பெற்ற பிறகு நீ செய்கிற எல்லா காரியமும் விருத்தியடையாமல் இருந்தால், மேலும் நீ ஒரு அழுத்தத்தை உணர்வாய், ஒரு பாரம்பரிய பூஜாரி அதை உனக்கு விவரிக்க தகுந்த நபர் அதாவது ஒரு மேதை உன் மேல் கையை வைக்கும் பொழுது . நீங்கள் பார்க்கிறீர்களா?
17 நல்லது. இப்பொழுது 2 இராஜாக்கள் 2 ஆம் வசனத்தை நாம் எடுக்கலாம், எலியா மற்றும் எலிசாவை குறித்து பேசுகிறது... எலியா ஒரு ஆசிர்வாதமான ஊழியத்தை பயிற்ச்சித்து, அந்த ஊழியத்திற்கு பிறகு அவன் தூதர் கூட்டத்தில் எடுத்துக் கொள்ள பட்டான். மேலும் இந்த ஊழியமானது அவ்வகையான ஊழியத்தின் இறுதியாக இருக்கின்றது, இந்த வேளையிலே ஆவிக்குறிய இஸ்ரவேல் சபையானது பரிபூரணமாக ஆவியிலும் சரீரத்திலும் இணைக்கப்பட்டிருக்கிறது. 1 இராஜாக்கள் 18 ல் இந்த மனுஷனால் பரலோகத்திலிருந்து அக்கினியை அழைத்து கீழே இறங்க செய்ய முடியும் என்று அவர்கள் கண்ட பொழுது... அதாவது பத்திற்க்கும் மேற்பட்டவர்களை சுட்டெரிக்கும் படியாக பரலோகத்திலிருந்து அக்கினியை அழைக்க முடியும், அதாவது அவனால் மழையை வரப்பண்ண முடியும், சிருஷ்டிக்க, உயிர்பிக்க... அங்கே களையையும், கோதுமையையும் இணைக்கப்பட்டு தப்பித்துக்கொள்ள சில காரணங்கள் இருந்தன விசேஷமாக மணவாட்டி சபையாகிய ஒரே ஒரு கன்னிகையில் இருந்தன.
18 ஆனால் அதற்க்கும் மேலாக, அவ்விதமாகவே நடந்துக் கொள்ளும் படியாகவே ஆவி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதை தான் அக்காலத்தின் ஆவி அவர்கள் செய்யும்படியாக கொடுத்தது. மணவாளனை சந்திக்க அங்கே ஐந்து அல்லது பத்துக் கன்னிகைகள் செல்லவில்லை ஆனால் ஒரே ஒரு கன்னிகை. ஆமென்! நான் கூறுவதை உங்களால் பார்க்க அல்லது புரிந்துக் கொள்ள முடியவில்லை என்றால் எலியா, மோசே மற்றும் வில்லியம் பிரன்ஹாம் கொண்ட ஊழியத்தின் நெருக்கத்தின் வகையை சற்று உற்று நோக்குங்கள்.
19 வில்லியம் பிரன்ஹாம் பிரசங்கித்த பொழுது, ஜெபர்சன்வில்லாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அல்ல இந்த மாவட்டத்தில் ஒரு சபை என்று ஒன்றும் இல்லை வெகு துரத்தில் இருந்தவர்களும் அவர் பிரசங்கிக்கும் பொழுது தொலைபேசி மூலமாக இணைக்கப்பட்டு இருந்தனர். தேவனுடைய கண்களுக்கு முன்பாக அதுவே ஒரு பிரன்ஹாமிஸ்டின் உண்மையான போக்காக இருந்தது. அதாவது சொல்ல வேண்டுமானால், இவால்ட் பிராங்கின் பக்கமாக இருக்கிறவர்கள் இன்னுமாக இந்த ஆவியை கொண்டு இருக்கின்றனர்; அது இங்கே மாத்திரம் அல்ல உலகத்தில் எல்லா இடங்களிலும் அப்படியே இருக்கின்றது.
20 ஆனால் எலிசா காட்சியில் நுழைந்தவுடன், தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் அவருக்கு முன்பாக பணிந்துக் கொள்ளும்படியாக வந்தனர். வேதாகமம் இப்படியாக கூறுகிறது. "எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி, இதையும் அதையும் என கூறினார்கள்..." .
21 ஆத்தும இரட்ச்சிப்பிற்க்கு மேலாக, செழிப்பு மற்றும் போட்டிக்கு அக்கரை செலுத்தும் எல்லா ஆவியும் கேயாசியின் ஒன்று மேலும் அவன் எலியாவின் காலத்திலே மிக வெளிப்படையாக அதை செய்தான். மேலும் நான் இதை உங்களுக்கு கூறுகிறேன் எலியாவின் காலத்திலே, எல்லா தீர்க்கதரிசிகளின் புத்திரரும் எலியாவை விசுவாசித்தனர் மற்றும் பூமியின் மேல் எலியாவின் எதிரொலியாக இருந்தனர். வேதாகமம் அவர்களை தீர்க்கதரிசியின் புத்திரர்கள என்று அழைக்கிறது.
22 ஆனால் எந்த தீர்க்கதரிசியின் புத்திரர். அவர்களுடைய காலத்தின் திர்க்கதரிசியான எலியா தீர்க்கதரிசி. அவர்கள் தீர்க்கதரிசி எலியாவின் புத்திரர்கள். அவர்கள் எலியா யார் என்றும், பிறகு எலிசா யார் என்றும் என்ற வெளிப்பாட்டை கொண்டு இருந்தனர். மற்றும் வேதாகமம் கூறுகிறது அவர்கள் எலிசாவின் முன்பு பணிந்து கொள்ளும்படியாக வந்தனர். ஏன்? ஏனெனில் அவர்கள் அதே ஆவியை கொண்டு இருந்தனர். ஒரு சுவிசேஷக தீர்க்கதரிசி அது போன்று செய்திருக்க மாட்டான், இங்கு அப்படி அவர்களால் செய்ய முடியாது ஏனெனில் நாம் ஒரே பரிசுத்த ஆவியை கொண்டிருக்கவில்லை.
23 இப்பொழுது நாம் நம்முடைய பொருளுக்கு வரலாம். இப்பொழுது தீர்க்கதரிசியின் புத்திரர் எலியாவின் அதே ஆவியில் இருந்தனர். அவர்கள் தீர்க்கதரிசி எலியாவின் புத்திரர்கள். அவர்கள் தீர்க்கதரிசி எலியாவினால் அவர்கள் புத்திரர்கள். ஆமென்! நாம் அதை வாசிக்கலாம்: "தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்." ஆமென்!
24 யோசுவாவிற்க்கு, அங்கே பன்னிரண்டு கன்னிகைகள் இருந்தனர், மேலும் பன்னிரண்டு, அது இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கு சார்ந்து உள்ளது. இங்கு ஐந்து என்பது அவள் கிருபையினாலே இரட்சிக்கப்பட்டாள் என்பதற்க்கு அடையாளமாக கூறி இருக்கின்றது. ஆதியிலே மோசேயின் எல்லா அவ்விசுவாச குழுமங்களும் வனாந்தரத்திலே விழுந்து போனது. மேலும் இந்த யூத மார்கத்திலிருந்து அநேகம் தோன்றினது... ஐந்து என்பது கிருபையின் ஐந்து எழுத்துக்களை குறிக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு: "Josué" என்பது "Joshua" என்பதன் பிரெஞ்சு பெயர்]. மேலும் வஸ்தியை போன்று, பிரன்ஹாமிஸ்டுகள் விழுந்தனர். மற்றும் கிருபையை கொண்டு எஸ்தர் ஐந்து எழுத்து ஆகாயினால் (Hegai) தெரிந்துக் கொள்ளப்பட்டாள்.
25 இப்படியாக, பத்து சபைகள் அல்ல ஆனால் இரண்டு பாளையத்தில் உள்ள கன்னிகைகள். உன்னதப்பாட்டு 6 : 13 ல் காண்பிக்கின்ற படி ஒரு பாளையத்தில் ஐந்து கன்னிகைகள். மேலும் அவை எசேக்கியேல் 1:16 ல் தெளிவாக காண்பிக்கின்றது. "சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாப்போல் இருந்தது." நீங்கள் பார்க்கிறீர்களா?
26 இதை கவனியுங்கள்: "... அவர்களுடைய தோற்றம் மற்றும் அவர்களுடைய கிரியை சக்கரத்துக்குள் சக்கரம் போன்றது. அங்கே ஐந்து சபைகள் உள்ளது மற்றும் அவர்களுடைய தோற்றம் மற்றும் அவர்களுடைய கிரியை கன்னிகைக்குள் கன்னிகை போன்று இருக்கிறது. ஆகையால் இது அநேக சபைகள் வெவ்வேரு காரியங்களை விசுவாசிக்கின்றதை குறித்ததான கேள்வி அல்ல, ஆனால் பூமியின் மேல் ஒரே மணவாட்டி சபையை குறித்தது. மேலும் இந்த மணவாட்டி சபையிலே, அது எல்லா பரிசுத்தவான்களும் அவர்களுடைய மணி வேளையின் தீர்க்கதரிசியியை சுற்றி கூடுகிறதாக இருக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. இதுவே வார்த்தையின் மணவாட்டி!
27 ஆகவே அவள் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வருகிற வார்த்தையை விசுவாசிக்கின்றாள் ஆனால் இறையியலோ அல்லது மனித காரண காரியங்களோ அல். ஆகையால் வேசியாக இருக்கிற கத்தோலிக்கர்களை குறித்த கேள்வி, ஆகையால் வேசியாக இருக்கிற புரொடெஸ்டென்ட் குறித்த கேள்வி, ஆகையால் வேசியாக இருக்கிற சுவிசேஷ சபையை குறித்த கேள்வி,ஆகையால் வேசியாக இருக்கிற பிரன்ஹாமிஸ்டுகளை குறித்த கேள்வி, ஆனால் உன்மையுள்ள சபை தீர்க்கதரிசி செய்தியாளனின் அடிச்சுவடுகளில் அவர்கள் மத்தியில் நடக்கின்றது.
28 தேவன் ஆவியாக இருக்கிறார், உயிருள்ள தீர்க்கதரிசி ஆத்துமாவாகவும் கருவறையாகவும் இருக்கிறான். உயிருள்ள சபையே சரீரமாக இருக்கிறது. பூமியின் மேல் தீர்க்கதரிசி செய்தியாளனுக்கு வெளியே இரட்சிப்பு இல்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. எல்லா சபைகளும் வித்தியாசம் இன்றி ஓரினச்சேர்கை சபைகளோடு, மற்றும் அவர்கள் அரசியல்வாதிகளோடு சேர்ந்து உட்காருவார்கள், இந்த பூமியின் தலைவர்களோடு பூமியின் மேல் நட்பு கொள்ளும். ஆனால் ஒரு சபை உண்டு அது எப்பொழுதும் தனித்து இருக்கும். அது இயேசு கிறிஸ்துவை போன்ற ஒன்று மேலும் பூமியின் மேல் இந்த சபையில் சார்ந்து இராமல் பரலோகத்தில் உங்களால் இரட்சிப்பு அடையமுடியாது.
29 இவ்வாறு, பத்து கன்னிகைகள் என்பவர்கள் பூமியிலுள்ள பத்து வெவ்வேறு சபைகளின் மணவாட்டிகள் அல்ல, ஆனால் இரண்டு அம்சங்களைக் கொண்ட ஒரே ஒரு சபை. ஐந்து புத்தியில்லாத கன்னிகைகள் தங்கள் காலத்தில் தேவனை அங்கீகரித்த பரிசுத்தவான்கள் அவர்களுடைய இதயங்கள் சரீர அல்லது மாம்சீக பொருள்களின் ஐந்து புலன்களின் பக்கம் திரும்புகின்றன, அதேவேளையில் ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் மணவாட்டி-திருச்சபையின் அதே பரிசுத்தவானகள் அவர்களின் இதயங்கள் ஆவிக்குறிய விஷயங்களை நோக்கித் திரும்புகின்றன.
30 இப்போது நான் பத்தாம் எண்ணுக்கு வருகிறேன். முதலாவதாக, எண் 5 இரட்சிப்புக்கான கிருபை மற்றும் எண் 10 இரட்சிப்புக்கான இரட்டை கிருபையாகும். எடுத்துக்கொள்ளப்படுதல் மூலம் இரட்சிப்புக்காக ஐந்து ஞானமுள்ள கன்னிகளின் கிருபை, உபத்திரவத்தின் மூலம் இரட்சிப்புக்காக ஐந்து புத்தியில்லாத கன்னிகளின் கிருபை. மேலும் காதுள்ளவன் கேட்க கடவன்!