



Kacou 26 (Kc.26) : மெய்யாகவேதேவன்சொன்னதுஉண்டோ?
(மே 23, 2004 ஞாயிரு காலை லோகாட்ஜரோ அபிட்ஜான் ஐவரி கோஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 நல்லது, இந்த காலை வேளையிலே, மெய்யாகவே தேவன் சொன்னது உண்டோ? என்ற தலைப்பில் நான் பேச விரும்புகிறேன். ஆதியாகமம் 3:1 முதல் 6 ஐ நன்றாக கவனியுங்கள். முதலாவதாக, ஆதியாகமம் 2:16 மற்றும் 17ல், நன்மை தீமை அறியதக்க மரத்தின் கனியை புசிக் வேண்டாம் என்று தேவன் ஆதாமுக்குக் கட்டளையிட்டார். ஏவாள் அங்கே இல்லை, ஆதாமே அவளுக்கு பிரசங்கம் செய்தான். ஆனால் சர்ப்பம் வந்த பொழுது, அவன் நேராக அவளிடத்தில் சென்றான்.
2 சர்ப்பமும் ஏவாளும் சிறிது நேரம் சம்பாஷித்து அவளோடு விபசாரம் செய்யும் படியாக பாலியல் உறவை குறித்ததான பொருளின் பேரில் பிரசங்கித்தது. சர்ப்பம் அவளோடு பாலியல் உறவை குறித்து பேசி மேலும் அவர்கள் விபசாரம் செய்தனர், மேலும் இரத்தமானது ஏவாளுக்கு முன்பாக ஒடி பூமியின் மேல் சாபத்தை கொண்டு வந்தது. ஆகவே தான் ஆபேல் கொடுத்தது இரத்தமாக இருந்தது மற்றும் காலங்களின் முடிவிலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய மிக விலையேறப் பெற்ற சொந்த இரத்தத்தை கொடுத்து, மேலும் அது எல்லா தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் பாவத்தை ஒவ்வொரு சந்ததியிலும் நீக்கினது, உங்களோடு பேசிக் கொண்டு இருக்கிற காக்குவ் பிலிப்பு ஆகிய நான், என்னுடையதையும் நீக்கினது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
3 இவ்வாறு, ஆதியிலே, பாலியல் செயலின் முலமாகவே பூமியின் மேல் சாபம் தொட்டது. மேலும் பெற்றோர்கள் முலம் திருமணத்திற்கு கொடுத்தாலொழிய ஒரு ஸ்திரீயுடன் இணைவதற்க்கு உனக்கு எந்த உரிமையும் இல்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. சாத்தான் இதை நன்கு அறிந்திருக்கிறான் ஆனால் அவனுடைய எதிர்வினையை பாருங்கள்: சாத்தான்:"என்ன? தேவன் நீ புசிக்க கூடாது என்றாறா?.
4 ஆதியாகமம் 2: 17 வசனத்தில் கூறியிருக்கிறார் "அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்" ஆனால் ஆதியாகமம் 3:4: "அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை". மற்றும் அதை தான் ஜனங்கள் இன்று புரிந்து கொள்வதில்லை. இன்று ஒரு கத்தோலிக்க, புராடெஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு தலைவர்களின் வாயிலிருந்து உண்மை வந்தாலும் அது ஒரு பொருட்டு அல்ல. பிரச்சனை என்னவெனில் அவன் இந்த சந்ததியின் தீர்க்கதரிசி அல்ல மேலும் நீங்கள் செவிக் கொடுக்க வேண்டியது அவனுக்கு அல்ல. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. மேலும் அதுவே ஏவாளின் தவறு. முடிவிலே, ஏவாள் சந்தேகித்து அதை சாப்பிட்டாள். பிறகு அவளுடைய கண்கள் திறக்கப்பட்டு மேலும் அவள் தீர்க்கதரிசியை, தேவனை போன்று அநேக சொப்பனங்கள் மற்றும் தரிசனங்களை பெற்றாள். மேலும் ஆதியிலே என்ன நிகழ்ந்ததோ, அதுதான் கடைசி நாட்களிலும் நடக்கும்.
5 தேவனுடைய புத்திரர்களும் மற்றும் பிசாசின் புத்திரர்களும் மறுபடியுமாக சாத்தானுக்கு செவி கொடுப்பார்கள். அவர்கள் சுவிசேஷ புத்தகங்களை வாசிப்பார்கள், அவர்கள் சுவிசேஷ பிரசங்கங்களுக்கு செவி கொடுப்பார்கள், கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் இருக்கும் பிசாசின் புத்திரர்கள் முலம் தங்கள் மேல் கைகளை வைக்கும்படி அனுமதிப்பார்கள். மேலும் அதினாலே, அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு பின்பு அவர்கள் அநேக சொப்பனங்களை கொண்டிருப்பார்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
6 இப்பொழுது நாம் நம்முடைய பொருளுக்கு திரும்பலாம். மனமாற்றம் அடைவதற்க்கு முன்பாக, சர்ப்பத்தின் பிள்ளைகள் முலமாக சாத்தான் இப்படியாக கூறுகிறான்:" ஒரு நிலையான சூழ்நிலையை கொண்டிருக்கும் நாள் வரை காத்திரு, உன்னால் தேவனை பின்பற்ற முடியும், "நீ இன்னும் மிக இளமையாக இருக்கிறாய்" அல்லது, மீண்டுமாக, "அவரசரப்படாதே உன்னுடைய ஜீவியத்தை முதலாவதாக ஒழுங்குபடுத்து.!" எல்லா கடமைகளுக்கு பிறகு, தன்னுடைய வீழ்ச்சியை கண்டு, அவன் இப்படியாக:"அவர் கூறுவது உண்மை என்பதற்க்கு என்ன ஆதாரம்? அங்கு தான் உண்மை இருக்கிறது என்று கூறுவதற்க்கு என்ன ஆதாரம்?" என கேட்க துவங்குவான்
7 மேலும் ஒரு நாளிலே, காக்குவ் பிலிப்புவின் புத்தகத்தை சர்ப்பம் பார்க்கும் பொழுது, அவன் சூழ்ச்சியேற்பாட்டோடும் மற்றும் ஏளனத்தோடும் "ஒ, இந்த புத்தகத்தை நான் அறிவேன். இது காக்குவ் பிலிப்பு அல்லவா?" என கேட்பான். ஆகையால், ஏவாளை வஞ்சித்த அதே சர்ப்பம் தான் இது என்று அறிந்துக் கொள்ளுங்கள். கவனம் சிதர வேண்டாம்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
8 அவன் பேலியாளின் பிள்ளைகளுக்குள்ளே நுழைந்து இப்படியாக: "என்ன சபை அது அங்கே ஒருவர் தங்களுடைய பாவங்களை வெளிப்படையாக அறிக்கையிடுகிறார்கள்? என்பான். அது மிகவும் வெட்ககரமானது. வேரு எங்கேயாவது செல்லுங்கள்!... தேவன் நியாயம் தீர்க்கக் கூடாது என கூறும் பொழுது எப்படி ஒரு சபை ஜனங்களை நியாயம்தீர்க்கிறது? எப்படி ஒரு சபையானது வேதாகமத்தை எரிக்கும்? ... இது ஒரு பிரிவு."
9 அது ஒரு தனி ஒருவரை பின்பற்றும் குழு" பலகினமானவர்கள் பக்கத்திலே அவன் கடந்து செல்கிறவனாக இருக்கிறான். இந்த சர்ப்பத்தின் கொள்ளுப்பேரன்களில் சாத்தான் தன்னை மறைத்துக் கொண்டு, என்ன? தேவன் மெய்யாகவே லுயிஸ் செகன்டு வேதாகமம் நல்லது அல்ல என்றாரா? என கேட்பான். அங்கே ஏவாள் ஒரு கணம் எதிர்த்தாள் ஆனால் இங்கே தான் சர்ப்பம் அவளை பெற போகிறான்:" ஆனால் லூயிஸ் செகண்ட் வேதாகமம் நல்லது அல்ல என்றும் மற்றும் நீ கூறுகிற படியாக அது ஏரிப்பதற்காக போதுமானது என்று நிருபிக்கப்பட்டது என்று கூறுகிறாய் மெய்யாகவே தேவன் அதை சொன்னது உண்டோ? இப்பொழுது ஏவாள் குழப்பம் அடைந்து, மேலும் சர்ப்பம் தொடர்ந்து: "அதை எரிக்காதே" அதற்க்கு விரோதமாக எளிய விதத்தில் அலோசனை கூறினான்!"
10 மேலும் ஏதேன் தோட்டத்தை போலவே, தங்களை "கிறிஸ்தவர்கள்", என்று அழைத்துக் கொள்பவர்கள் முலம் சாத்தான் மறுபடியுமாக செய்வான். இந்த செய்தியை எடுத்துக் கொண்டு சர்ப்பம் இப்படியாக: "அவர் கூறுவதில் சில உண்மைகள் இருக்கின்றது ஆனால் எல்லோரும் தங்களுடைய சபையை விட்டு அவரிடம் செல்ல வேண்டியது அவசியமா? தேவன் கிறிஸ்து முலம் மாத்திரமே கிரியை செய்தார் மேலும் அவன் தன்னிடத்தில் எல்லோரையும் வழி நடத்தக் கூடாது. நாம் ஜனங்களை கிறிஸ்துவினிடத்தில் மாத்திரமே வழி நடத்த வேண்டும்..." நீங்கள் பார்க்கிறீர்களா? அவன் கூறுகிறது உண்மை போல தோன்றும் ஆனால் அது சர்பத்தின் சீற்றம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
11 நீங்கள் உங்களுடைய கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளை விட்டு பிறகு இந்த செய்திக்கு வாருங்கள், உங்களுடைய மணி வேளையின் உயிருள்ள தீர்க்கதரிசியினிடத்தில் வாருங்கள்.[ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. ஏவாள் ஆதாமிடமே தங்கி இருக்க வேண்டும். ஏவாள் ஆதாமிடம் தரித்திருந்த வரை, அவள் பாவம் செய்யவில்லை. நித்திய ஜீவனை பெரும் படியாக நீங்கள் செய்ய கூடிய ஒரே காரியம் அது மாத்திரமே. மேலும் இதை செய்யும்படியாகவே தேவன் உங்களை அழைக்கிறார். நீங்கள் எச்சரிக்கப்பட்டு இருக்கிறீர்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
12 அவர்கள் நோவாவினிடத்தில்: "நீ ஒருவன் மாத்திரம் தான் சத்தியத்தில் இருக்கிறாய் என அர்த்தமா? ஆதாம், ஆபேல், ஏனோக்கு மற்றும் உனக்கு முன் மறித்தவர்களை குறித்து என்ன?" என கேட்டார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம் கூறினார்கள், தீர்க்கதரிசிகளிடம் , அப்போஸ்தலர்களிடத்தில், இப்பொழுது நம்மிடத்தில், ஏதோ இரண்டு உண்மைகள் இருப்பது போன்று. அவர்கள்: "நோவாவே" இந்த முழு உலகத்திலே, உன்னுடைய பேழைக்குள் ஒருவர் வராவிட்டால், தேவன் அவர்களை வெள்ளத்தில் விழுங்கச் செய்வாரா? அவர்கள் நோவாவை நகைத்து மற்றும் கேலி செய்வார்கள். மேலும் இன்றும் அதே காரியமாக இருக்கின்றது.
13 அவர்களுடைய சபைகளில் நகைத்து கேலி செய்வார்கள், அவர்களுடைய அலுவலங்களில், அவர்களுடைய வீடுகளில். அவர்கள் இப்படியாக : "அது எப்படி இந்த முழு உலகத்தின் மேல் , இரட்சிப்பு அடைவதற்க்கு அவன் ஒருவன் காக்குவ் பிலிப்பு, மாத்திரமே விசுவாசிக்க வேண்டுமா? இல்லை! தேவன் அதை சொல்ல மாட்டார்! இரட்சகர், அது இயேசு கிறிஸ்து. அவரே சிலுவையின் மேல் மரித்தவர். அவரே நம்மை மீட்டவர். ஒரு பாவியான காக்குவ் பிலிப்புவே, நீயா இப்பொழுது எங்களை இரட்சிக்க போவது? அதற்க்கு என்ன அர்த்தம்? 24 ஏப்ரல் 1993ல் அதை மெய்யாகவே தேவன் சொன்னது உண்டோ?" ஆம், ஐயா, தேவன் அதை கூறினார்.
14 "இதே விதமாகத்தான் மரியாள் எந்தவொரு மனிதனையும் அறியாமல் அதிசயமான விதத்தில் கர்ப்பம் தரித்தாள், இதே விதமாகத்தான் சிருஷ்டிப்பின்போது நிகழ்ந்தவைகளின் விபரங்களை மோசே பெற்றுக் கொண்டான், நீயும் நித்திய ஜீவ வார்த்தைகளை இந்த ஏப்ரல் 24, 1993 ல் பெற்றுக் கொண்டாய், இது தேவனால் நியமிக்கப்பட்டதாக இருக்கிறது. குறிக்கப்பட்ட நேரத்தில் நீ புரிந்து கொண்டு, முறைமையின்படி நீ கற்றரியாததை நீ போதிப்பாய், அதை விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு" [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. தேவன் அதை நோவாவிடம் கூறினார். தேவன் அதை மோசேயிடம் கூறினார். தேவன் அவர்களுடைய மணி வேளையின் எல்லா தீர்க்கதரிசகளோடும் பேசினார்.
15 மேலும் இன்று, எப்ரல் 24, 1993 அன்று தேவன் காக்குவ் பிலிப்பு முலம் கூறியுள்ளார். மேலும் நீ தேவனுடைய பிள்ளையாக இருக்கும் பட்ச்சத்தில், அது அவரே காக்குவ் பிலிப்பு வினால் மட்டுமே இரட்சிப்படைய முடியும். மேலும் உனக்கு மெய்யாகவே பரிசுத்த ஆவியிருந்தால், இந்த பரிசுத்த ஆவி உன்னை, உண்னுடைய மணி வேளையின் தீர்க்கதரிசியான, அவரிடத்திற்க்கு மாத்திரமே வழிநடத்தும். ஒரு நாளிலே இந்த பரிசுத்த ஆவி கொர்நேலேயுவை பரலோகத்தின் திறவுகோள்களையுடைய பேதுரு வினிடத்திற்கு வழி நடத்தியது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. மேலும் நீ தேவனுக்கென்று ஊழியம் செய்ய வேண்டுமானால், அது உன்னுடைய மணி வேளையின் தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பு கூறுகிறதை எதிரொலிப்பதே. மேலும் இது ஒன்றை மாத்திரமே நீ செய்ய முடியும்.
16 மேலும் சாத்தான் வார்த்தையில் மட்டும் அல்ல சிந்தையிலும் வருவான். சாத்தான் இப்படியாக : "அது நீச்சயம்தானா என்று பார்பதற்க்கு ஒரு அடி பின் எடு!" என்பான். உன்னை அனைத்து போடும் படியாக உன்னை சபையிலிருந்து மிக தூரமாக கொண்டு செல்வான். ஒரு போதும் விட்டுக் கொடுக்காதே, அது எல்லாம் உலகத்திற்காக, ஒரு நல்ல காரணத்திற்கு நீங்கலாக, ஒரு போதும் ஆராதனையை தவற விட வேண்டாம். தேவனோடு ஒன்றாக இருக்கும் படி எல்லா சந்திப்பு திட்டத்தை ரத்து செய்யுங்கள். ஒரு மரித்தவனை அடக்கம் செய்வதை காட்டிலும் தேவனை ஆராதிக்க தரித்திருங்கள். மேலும் காதுள்ளவன் கேட்க்க கடவன்!