1நம்முடைய வேதாகமங்களை ஆதியாகமம் 7:1 முதல் 4... ல் எடுக்கலாம். நான் ஒரு முக்கியமான பொருளின் பேரில் பேச விரும்புகிறேன்: ஆதியாகமம் 4:17 முதல் 24ல் நாம் பார்க்கின்ற பிசாசின் புத்திரர்கள், நோவாவின் காலத்தில்ஜலப்பிரளயத்தினூடாக எப்படி கடந்து வந்தார்கள்? இந்த வெளிப்பாட்டை குறித்து ஏற்கனவே யாராவது பேசியிருந்தால், நான் படித்ததோ அல்லது அதை கேட்டதோ இல்லை ஆனால் மற்ற நேரங்களை போலவே, அது எனக்கு 31 ஆகஸ்ட் 2004 ல் வெளிப்படுத்தப்பட்டது.
2அதற்கு முன்னதாக, நோவாவின் குமாரர்களில் யாரோ ஒருவர் பிசாசினால் உண்டானவர்கள் என நான் அதை நினைத்தேன், குறிப்பாக காம், அல்லது அவர்களின் முன்று மனைவிகளில் யாரோ ஒருவர் விபச்சாரத்தினால் உண்டான பிள்ளையை சுமக்கிறார்கள் என நான் நினைத்தேன், ஏவாளின் விபச்சாரத்தினால், பிசாசின் புத்திரர்கள் உலகத்தில் நுழைந்தார்கள், அதே விதமாக நோவாவின் மருமகள்களோடு இருக்கும் என நினைத்தேன். ஆனால் தேவனுடைய கிருபையினால் நான் ஒரு போதும் இந்த காரியங்களை குறித்து பேசினது இல்லை.
3நோவாவினுடைய மூன்று மகன்களின் மனைவிகளில் ஒருத்தி பிசாசினுடைவளாக இருந்திருக்கலாம் என்பதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது கூடாதகாரியம் ஏனெனில் ஒரு பிசாசின் பிள்ளை பேழைக்குள் பிரவேசிக்க முடியாது. ஜலப்பிரளத்தின் போது காயினின் பிள்ளைகள் எல்லோரும் அழிக்கப்பட்டார்கள் என்றுகூட நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது ஆவிக்குரிய விதத்தில் நடந்தது. இவைகளில் மிக விலையேறப்பெற்ற காரியமானது, விபச்சாரத்தினால், பிசாசின் பிள்ளைகள் உலகத்திற்குள் பிரவேசித்தார்கள் என்பதே; அதாவது நோவாவின் மூன்று மருமகள்களில் ஒருத்தி விபச்சாரத்தினால் பிசாசின் குமாரன் ஒருவனிடமிருந்து கர்ப்பந்தரிந்திருக்கலாம் என்பதே. இந்த எல்லா அறிக்கைகளும் சில மதிப்பை கொண்டு இருக்கிறது ஆனால் உண்மையில் என்ன என்பதை கூற வில்லை. அவைகள் எல்லாம் தவறு.
4காயினுடைய எல்லா பிள்ளைகளும் அழிக்கப்பட்டு இருந்தால் பிறகு உலகமானது ஜலப்பிரளயத்திற்க்கு பிறகு குறைந்தது ஆரம்ப கட்டத்திலாவது பரதேசியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நாம் அதை பிறகு பார்க்கலாம், ஏற்கனவே 11 ஆம் அதிகாரத்தில் உலகமானது மிக சீக்கிரமாக சீர்கெட்டுபோயிருந்தது. தேவன் அவர்களுடைய பாஷையை தாறுமாறாக ஆக்கினார்.
5இப்பொழுது அது ஆவிகளை குறித்த அதாவது தூதர்களை குறித்த கேள்வியாக இராது, ஏனெனில் ஒரு தூதனால் ஒரு ஸ்திரீயினிடத்தில் பாலியல் உறவு வைத்துக் கொள்ள முடியாது இல்லையெனில் சர்ப்பத்தை உபயோகிக்காமல் சாத்தான் ஏவாளிடம் உறவு கொண்டு இருக்க முடியும். ஜலப்பிரளயத்திற்க்கு பிறகு ஒரு பொல்லாத ஆவி அதை செய்திருக்குமானால், தன்னுடைய முதல் ஸ்தானத்தை இழந்த சர்ப்பத்தை தவிர வேறு யாரை உபயோகப்படுத்தி இருக்க முடியும். தேவன் இந்த வெளிப்பாட்டை கொடுப்பதற்க்கு முன்னமே ஜனங்கள் சாதாரனமாக பேசி விட்டார்கள்.
6யாத்திராகமம் 19 ல், தேவன் மலையின் மேல் இறங்க போவதினால், யூதர்கள் தங்களுடைய சொந்த மனைவிகளிடத்தில் செல்லக் கூடாது. மேலும் யூதர்கள் யோசுவாவோடு யோர்தானை கடந்து போகும் போது. அவர்கள் தங்களுடைய சொந்த மனைவிகளிடத்தில் செல்ல வில்லை. தாவீதும் தன்னுடைய கூட்டத்தாரும் தப்பித்துக் கொள்ளுதலின் வேளையிலே சமுகத்தப்பங்களை புசிக்கையில் அவர்கள் தங்களுடைய சொந்த மனைவிகளிடத்தில் செல்லக் கூடாது. மேலும் ஒரு தேவனுடைய குமாரன் அதை அறிவான்.
7ஆனால் பிசாசின் புத்திரர்களை பாருங்கள். ஒரு பிசாசின் புத்திரன் சனிக்கிழமை இரவிலே தன்னுடைய மனைவியோடு சயனித்து மேலும் ஞாயிற்றுக்கிழமை காலையில் சபைக்கு சென்று துதித்து, பாடி மற்றும் பிரசங்கிப்பான் மேலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகமானது அவன் மீது வரும். அது என்ன? அது ஒரு கொடுரமான அபிஷேகம். அது பிசாசின் ஆவி மற்றும் பிசாசுகளெல்லாம் அவர்களுடைய இயேசுவாக இருக்கின்றது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எப்ரல் 24,1993 ன் தரிசனத்தின் வல்லமையினாலே நான் உங்களுக்கு கூறுகிறேன்.
8இந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள் எல்லாம் பிசாசினாலானது. இந்த இடங்களை விட்டு விடுங்கள்! நரகத்தை விட்டு ஓடுங்கள்!! நீங்கள் தேவனுடைய குமாரர்களாக இருப்பீர்களானால், உங்களுடைய இடம் அங்கு இல்லை. தேவன் நமக்கு பிறப்புறுப்புகளை கொடுத்து மேலும் பாலியல் செயல் முலமாக இனப்பெருக்கம் செய்யும்படியாக அதிகாரம் கொடுத்தார், ஆனால் அது தேவனுடைய பரிபூரண சித்தம் இல்லையென்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இந்த முன்று ஆண்டுகளாக இந்த செய்தி கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து, அது இப்படியாக, நான் தொடர்ச்சியாக முழு பன்னிரண்டு மாதங்களும் என்னுடைய சொந்த மனைவியின் அருகில் நான் சென்றதில்லை.
9நல்லது, பின்பு என்ன நடந்தது? நோவாவின் பேழையிலே யார் பிசாசையுடையவன்? நாம் அதை கொஞ்சம் கொஞ்சமாக அணுகிக் கொண்டு இருக்கிறோம்... பரலோகத்திலே இருக்கும் தூதர்கள் அவர்கள் முன்னேறி செல்வதில்லை. அது தேவனுடையதாக இருக்கும், அல்லது அது பிசாசினுடையதாக இருக்கும். ஆகவே நம்முடைய ஆவிக்கு ஒரே ஒரு புலன் உண்டு அதாவது: ஒன்று விசுவாசம் அது தேவனுடையது , அல்லது அவநம்பிக்கை அல்லது சந்தேகம் அது பிசாசினுடையது; அதே சமயம் சரீரம் ஐந்து புலன்களை கொண்டு இருக்கிறது: சுவைத்தல், தொடுதல், பார்த்தல், நூகர்தல் மற்றும் கேட்டல். மேலும் ஆத்துமாவும் ஐந்து புலன்களை கொண்டு இருக்கிறது: கற்பனை, காரணம், உணர்ச்சி, மணச்சாட்சி மற்றும் நினைவாற்றல். ஆனால் ஆவியை பொருத்தமட்டில், அது தேவனால் உண்டாகி இருந்தால் அது விசுவாசத்தை கொண்டிருக்கும் அல்லது அது பிசாசினுடையதானால் அது தேவன் என்ன செய்கிறாரோ அதை விசுவாசிக்காது .
10ஆனால் பூமியின் மேல், ஜலப்பிரளயத்திற்கு முன்பு பிசாசின் புத்திரர்கள் இருந்தனர் மேலும் அதற்க்கு பின்பும் யாராவது இருப்பார்களானால், பிறகு அந்த சங்கிலி தொடர்பானது உடைக்கப்படாமல் இருக்கிறது அது அவ்வளவுதான். நான் மாம்ச பிரகாரமான தொடர்பை குறித்து பேசுகிறேன்.
11மேலும் இந்த பொருளின் பேரில் வெளிப்பாடானது இவ்வாறு இருக்கின்றது: ஏதேன் தோட்டத்திலே, ஏவாளிடத்திலிருந்து இரண்டு வித்துக்கள் வந்தது: ஆபேலுக்கு பதிலாக சேத் மற்றும் காயின். அவர்கள் தாமே ஆதாம் மற்றும் சர்ப்பத்தின் சந்ததிகளாக இருந்தனர். ஆதாம் பரிசுத்த வித்தாக இருக்கிறான் மற்றும் சர்ப்பம் அசுத்த வித்தாக இருக்கிறான். ஏவாளும் பரிசுத்தமான வித்து. இவ்வாறு, ஆதாம் மற்றும் ஏவாளின் எல்லா பிள்ளைகளும் பரிசுத்தமான வித்துக்கள். ஆகையால் அது தேவனுடையது. ஆனால் பரிசுத்த மற்றும் அசுத்த வித்தின் எந்த கலப்பும் அது ஒரு கலப்பின வித்து...
12ஆனால் கலப்பின வித்து தன்னுடைய அறையில் ஆயிரக்கணக்கில் பரிசுத்த மற்றும் அசுத்த வித்துக்களை கொண்டு இருக்கும். ஸ்திரீயினிடத்திலிருந்து வருகிறது ஒரு பரிசுத்த விதையாக இருந்தது மற்றும் பூருஷனிடத்திலிருந்து ஒரு பரிசுத்த வித்து வருமென்றால். அது ஒரு தேவ குமாரனை கொடுக்கும்; ஆனால் ஒரு அசுத்தமும் இன்னொரு அசுத்தமும் ஒரு பிசாசின் குமாரனை கொடுக்கும், பிறகு பரிசுத்தம் மற்றும் அசுத்தமும் ஒரு அசுத்தத்தை கொடுக்கும் அது ஒரு பிசாசின் புத்திரன்.
13மேலும் கலப்பினத்திற்கு பிறகு கவனியுங்கள், ஒரு பிசாசின் குமாரன் மற்றும் ஒரு பிசாசின் குமாரத்தியும் ஒரு தேவனுடைய பிள்ளையை பெற்றுக் கொடுக்க முடியும் ஏனெனில் அவர்கள் இருவரும் சில பரிசுத்தமான வித்தை சிறிது அளவில் கொண்டு இருப்பார்கள், மேலும் ஒரு தேவனுடைய குமாரனும் மற்றும் ஒரு தேவனுடைய குமாரத்தியும் ஒரு பிசாசின் புத்திரனை இந்த உலகத்திற்க்கு கொடுக்க முடியும். மேலும். அவர்களுடைய அறைகளில் அசுத்தமான வித்துக்களே மிக அதிகமான எண்ணிக்கையில் இருந்தது
14ஏனெனில் ஏசா மற்றும் யாக்கோபை போல அவர்களிடத்தில் உள்ள இடைவிடாத போரின் நிமித்தமாக. இன்னுமாக , ஆபேல் மற்றும் காயினை போல, அசுத்தமான வித்து பரிசுத்த வித்துக்களை கொல்லும். தேவன் பூமியை அழிக்காமல் இருந்திருந்தால், அங்கே தேவ புத்திரர்கள் ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். நீங்கள் பாருங்கள் ஏற்கனவே அறநூறு கோடி மக்களில், அங்கே நோவாவின் பேழையிலே வெறும் எட்டு பேர் இருந்தனர். இதே யுத்தமானது பரலோகத்திலே மிகாவேல் தூதன் மற்றும் சாத்தானின் தூதர்கள் மத்தியில் ஏற்பட்டது மற்றும் இன்றுமாக பூமியின் மேல் நீடித்துக் கொண்டும் இருக்கின்றது. அதே யுத்தமானது ரெபேக்காலின் கருப்பையில் நடந்தது. காயின் மற்றும் ஆபேல் தொடங்கி இன்று மட்டுமாக மேலும் ஆர்மெகெதான் வரைக்கும் செல்லும்.
15தேவன் பூமியின் மேல் வார்த்தையின் பரிசுத்தமான வித்தை அனுப்பும் பொழுது, சாத்தான் அதை கலப்பினம் செய்து உரிமை கொள்ள வகை தேடுகிறான்.
16தோட்டத்திலே, ஆதாமின் மேலும் மற்றும் சர்ப்பத்தின் மேலும் தேவனுடைய ஆவியும் மற்றும் பிசாசின் ஆவியும் தனித்தனியே கிரியை செய்துக் கொண்டு இருந்தது. இவ்வாறு ஆதாம், ஏவாள், ஆபேல் மற்றும் சேத் மேலும் ஆதாம் மற்றும் ஏவாளின் பெண் பிள்ளைகள் காயினிடத்திலும் அவனுடைய சந்ததியிலும் இணையாதவர்கள் முற்றிலும் பரிசுத்தமானவர்கள் மற்றும் காப்பாற்றப்பட்டவர்கள். இந்த சந்ததிக்கு பிறகு, மனிதனுக்கு நிச்சயமற்ற தன்மை துவங்கினது ஏனெனில் காயின் மற்றும் அவனுடைய பிள்ளைகள் அதிகமான எண்ணிக்கையில் பலதாரமணம் (Polygamy),வேசித்தனம், விபச்சாரம் மூலமாகவும் பெருகினர் மேலும் அவர்களின் ஐஸ்வரியங்கள் மற்றும் அவர்களே இந்த உலகத்தை வழி நடத்தி மற்றும் சட்டங்களை ஏற்றனர். இவ்வாறு 1600 வருடங்கள் கழித்து, ஆதியாகமம் 6:11 மற்றும் 12 ன் படி பூமியானது தாறுமாறானது.
17ஆனால் தேவனுடைய கிருபையானது அதை செய்தது. அந்நேரத்திலே, அங்கு ஒரு அடையாளம் இருந்தது. ஒரு களங்கமில்லாத வித்துஇன்னொரு களங்கமில்லாத வித்தை சந்தித்து அது நோவாவை கொடுத்தது. பிறகு அதே விதமாக எங்கேயோ அவ்விதமான ஒரு ஸ்திரியை கொடுத்தது, தேவன் அவர்கள் சந்திக்கும் படியாக செய்து மூன்று குமாரர்களை கொண்டு இருந்தார்கள், அவர்களில் கலப்பினமும் இருந்தது களங்கமில்லாததும் இருந்தது. காம் ஒரு தேவனின் குமாரன், நான் கர்த்தருடைய நாமத்தினாலே இதை கூறுகிறேன். மேலும் அவர்களுடைய மூன்று மனைவிகளும் தேவனுடைய குமாரத்திகள்.
18சேம் ஒரு தேவனுடைய குமாரன். யாப்பேத் ஒரு தேவனுடைய குமாரன். பேழைக்குள்ளே எல்லோரும் தேவனுடைய குமாரர்கள் மற்றும் குமாரத்திகளாக இருக்கிறார்கள். [ஆசிரியர்குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்]. இப்படியாக நோவாவின் பேழையிலே, பிசாசின் குமாரர்களோ அல்லது குமாரத்திகளோ இருக்கவில்லை. நோவாவின் மருமகள்கள் தேவனையுடையவர்களாக இருந்ததினாலே அவர்கள் நோவாவை விசுவாசித்து மேலும் பேழைக்குள் நுழைந்தனர் ஆனால் ஆதியாகமம் 19:14 ன் பிரகாரமாக லோத்தின் மருமகன்கள் லோத்தை விசுவாசிக்கவில்லை. மேலும் இன்னுமாக அந்த எல்லா எட்டு பேரிலும், கலப்பின வித்து மற்றும் களங்கமில்லாத வித்து இருந்தது ஆனால் கலப்பின வித்தே ஆதிக்கம் செலுத்துகிறதாக இருந்தது. உதாரணத்திற்கு, யாப்பேத் மற்றும் தன்னுடைய மனைவி கொண்டு இருந்த பன்னிரண்டு பிள்ளைகளில் இரண்டு பிள்ளைகள் தேவனுடையதாகவும் மற்ற எல்லாம் பிசாசினுடையதாக இருக்கும்.
19இவ்வாறு, தன்னுடைய மூன்று குமாரர்களுக்கும் அதிகமாக பெற்றுக் கொள்ளும்படியாக தேவன் அனுமதித்து இருந்தால், அவன் பிசாசின் குமாரர்கள் மற்றும் குமாரத்திகளை கொண்டிருப்பான் ஏனெனில் 1600 வருடங்களில் தன்னுடைய சந்ததியின் வரிசையில் பத்திற்க்கும் மேற்பட்ட கலப்பினங்கள் இருந்தது. அதற்கான ஆதாரமானது, அங்கே சில நிம்ரோத் மற்றும் யூதாஸ் காரியோத் பூமியின் மேல் இருந்தனர். மேலும் ஜலப்பிரளயமானது வராமல் இருந்திருந்தால், பூமியின் மேல் இனி ஒரு போதும் தேவனுடைய பிள்ளைகள் இருந்திருக்க மாட்டார்கள். மேலும் அது மத்தேயு 13: 24 முதல் 30ற்கும் அது பொருந்தும். ஒரு காபி தோட்டத்தில்.காபியை மட்டும் நடுங்கள் ஆனால் ஒரு நாள் அல்லது வேறு ஒரு நாளிலே சில முள்ளும், குருக்கும் மற்றும் கொடிகளும் வெளிப்பட தோன்றி காபி மரங்களின் மேல் எழும்பி அந்த நிலமானது மறுபடியுமாக நீங்கள் வெட்டின அதே காடாக மாறும்.
20இந்த காலை வேலையிலே நான் பிரசங்கிக்கிறதை, நோவா கண்டான் ஆனால் அவன் அதை புரிந்துக் கொள்ளவில்லை. ஆனால் அப்போஸ்தலர் 3:21 பிரகாரமாக, எல்லா காரியங்களும் திரும்ப அளிக்கப்படும் வேளையிலே அறியப்பட வேண்டும்.
21நல்லது, இப்பொழுது அதை பின்தொடருங்கள். அங்கே மீதம் இருந்த இனங்களில் தன்னுடைய வெள்ளை சேவலும் தன்னுடைய வெள்ளை கோழியும் பூமியின் மேல் பெருக தொடங்கின பொழுது, ... ஜலப்பிரளயத்திற்க்கு பிறகு முதன் முறையாக கோழி குஞ்சுகள் தங்களுடைய முட்டைகளிலிருந்து வந்த பொழுது, நோவா அங்கே வெள்ளை கோழி குஞ்சுகள், புள்ளியிட்ட கோழி குஞ்சுகள், கருப்பு கோழி குஞ்சுகள் வந்ததை கண்டான்... நோவாவினுடைய பெண் ஆடும் அப்படியே செய்தது. ஜலப்பிரளயத்தில் இறந்து போன நோவாவினுடைய அண்ணனை போன்று இந்த உலகத்திலே ஒரு பிள்ளையை காம் கொண்டு வந்தான்.
22ஜலப்பிரளயம் சில ஜனங்களை மட்டும் அழித்தது ஆனால் வித்துக்களை அல்ல என நோவா கண்டார். ஒரு நாளிலே,எல்லா அல்பினோக்களும், பிள்ளைகள் மற்றும் பெரியோர்கள் மரித்தால், பூமியின் மேல் இனி ஒருபோதும் அல்பினோக்கள் இருப்பதில்லையா? இருப்பார்கள்! நான் திக்குவாய் உடையவன் என்பதை நீங்கள் காண்கிறீற்கள் ஆனால் என்னுடைய தகப்பனும், தாயும் திக்குவதில்லை. என் தகப்பனும் தாயும் இளமையாக இருக்கும் பொழுது பூமியின் மேல் திக்குவாய் உள்ள எல்லோரையும் அழிக்க வேண்டுமென தேவன் விரும்பி இருந்தால், அவர்கள் உயிரோடு இருந்திருந்து பூமியின் மேல் திக்குவாய் உள்ளவர்கள் ஒருவனும் இருந்திருக்க மாட்டான். ஆனால் இந்த அழிவிற்க்கு பிறகு இங்கே காக்குவ் பிலிப்பு திக்குகிறார். அது தான் ஜலப்பிரளயத்தின் வேளையில் நடந்தது.
23எளிய விதானத்தில், ஜலப்பிரளயத்திற்க்கு பிறகு பிசாசின் புத்திரர்கள் பூமியின் மேல் இருப்பார்களானால் அவர்கள் பேழைக்குள் இருப்பது மாத்திரமே ஒரே வழி. ஆனால் அவர்கள் அங்கு எங்கே ஒளிந்து இருந்தார்கள்? அவர்கள் நோவாவின் அரைகள் மற்றும் அவர்களுடைய குமாரர்களின் அரையிலும் இருந்தனர். [ஆசிரியர்குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
24சகோதரர்களே, ரோம துன்புருத்தல்களின் பொழுது அமெரிக்க ஐக்கிய தேசத்திற்க்கு சென்று குடியமைத்துக் கொண்டவர்கள் உண்மையான தேவனுடைய குமாரர்கள் இல்லையா, அவர்கள் கிறிஸ்தவர்கள் இல்லையா? ஹாலிவுட் தெருக்களில் மாம்சத்தில் உள்ள அந்த பிசாசுகள் எங்கிருந்து வந்தது? அமெரிக்கர்களே, உங்களை தான், ஜலப்பிரளயத்திற்க்கு பிறகு பின்லாடன் ஜீவிக்க முடியும் என எப்படி கற்பனை செய்ய முடியும்? அது ஒரு இரகசியம்.
25நல்லது. காயீனும் களங்கமில்லாத மற்றும் கலப்பின வித்துக்களை கொண்டு இருந்தான் ஏனெனில் அவனும் களங்கமில்லாத ஏவாளின் குமாரன் ஆகையால் மர்மமான முறையில் தேவனுடைய குமாரனை ஈன்றெடுக்க முடியும். மேலும் ஆதாம் மற்றும் ஏவாளின் குமாரத்தி, காயினுக்கு மனைவியாக இருப்பவள், காயினின் மனைவியாக இருப்பதற்க்காக மனந்திரும்ப வேண்டும் மேலும் இரட்சிப்படையும் படியாக தன்னை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய பிள்ளைகளெல்லாம் கலப்பினமாக இருக்கிறார்கள் ஆனால் அவர்களுடைய திருப்பத்தில் சில தேவ குமாரர்களை உண்டாக்குவார்கள்.
26இப்பொழுது, யாக்கோபின் வழக்கை நாம் இப்போது பார்க்கலாம். அது தீர்க்கதரிசனமானது. யாக்கோபுக்கு பன்னிரண்டு மகன்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பிசாசினுடையவன். ஆதியாகமம் 49:17 பிரகாரமாக, தாண் பாம்பைச் சின்னமாக கொண்டிருந்தான். ஏனெனில் இயேசு கிறிஸ்து ஒரு பன்னிரண்டு மகன்களைக் கொண்டிருப்பார்; அவற்றில் ஒரே ஒருவன் யூதாஸ் இஸ்காரியோத்து அவன் பிசானால் உண்டானவன். இதற்காக நான்கு மனைவிகள் யாக்கோபுக்கு தேவையாக இருந்தது. மேலும் தேவன் அந்த வித்துக்களைஇயக்கினார். மேலும் யூதாஸ் இஸ்காரியோத்தைப் போலவே வெளிப்படுத்தின விசேஷம் 7 ம் வசனத்தின்படி பன்னிரண்டு கோத்திரங்களிலிருந்து தாணின் பெயர் அகற்றப்பட்டது.
27ஆகையால், ஜலப்பிரளயத்திற்குப்பின், பூமியில் தன்னுடைய அரைகளிலே கலப்பின வித்து இல்லாமல் இருக்கிற ஒரே மனிதன் அது கர்த்தராகிய இயேசுவே. எனவே, இப்போது இதை கவனியுங்கள்: யோசேப்பு கர்த்தராகிய இயேசுவுக்கு சரிப் பிரகாரமான தந்தை அல்ல என நாம் அறிந்து இருக்கின்றோம். மேலும் கர்த்தராகிய இயேசு - கிறிஸ்து உருவான அந்த சரீரத்தின் முட்டையானது மரியாளிடத்தின்று வரவில்லை, ஏனெனில் மரியாள் மிருகங்களுடனான கலப்பின விதைகளை உடையவளாக இருக்கிறாள் மேலும் மரியாள் தன்னுடைய அரையில் கலப்பின வித்துக்களே இல்லாத விதமாக ஒரு பிள்ளையை பெறுவது என்பது அது முற்றிலும் சாத்தியமற்றது.
28பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் இந்த நிலையை நம்மிடம் இருந்து அழிப்பதில்லை ஆனால் நம்மை அது இயேசு உயிர்த்தெழுதலில் பெற்ற பரத்திற்குரிய சரீரத்திற்க்கு வழி நடத்தி செல்கிறது. மற்றும் அவர் மகதலேனா மரியாளை தொட அனுமதிக்கவில்லை. யோவான் 20:17 எலியா மற்றும் மோசே ஏற்கனவே அணிந்திருந்தனர் மேலும் நாம் அதை மறுரூப மலையில் பார்க்கின்றோம். ஆனால் நாம் அதற்க்காக பேதுரு, பவுல், ஜான் வெஸ்லி, வில்லியம் பிரான்ஹாம்...அவர்களோடு சேர்ந்து காத்திருக்கின்றோம். அங்கே நாம் தூதர்களை போன்று இருப்போம், எந்த ஒரு கலப்பின வித்தும் நமக்குள் இராது.
29மேலும் இந்த பரத்திற்க்குரிய சரீரத்தில், கலியாணம் வரைக்கும், நாம் சாதம் மற்றும் மற்றவைகளை உண்ண முடியாது ஆனால் கலியாணத்திற்க்கு பிறகு நாம் பூமிக்கு ஆதியாகமம் 18 ன் பிரகாரமாக ஆயிரம் வருட அரசாட்சிக்கு நாம் வருவோம். ஒரு கடித உரையை போன்று இந்த சரீரத்திற்க்குள் இருப்போம். நம்மால் மறுபடியும் உண்ண முடியும் மற்றும் அதே சமயம் தேவர்களை போன்று மறையவும் மற்றும் தோன்ற முடியும்.
30ஆகையால், எனக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்பாட்டின்படி, அந்த வழியாக பிசாசின் பிள்ளைகள் ஜலப்பிரளயத்திலே பிரவேசித்தார்கள். எனவே, ஜலப்பிரளயத்திற்கு 300 வருடங்கள்கழித்து, நோவா, சில ஆண்கள் தங்களுடைய இருதலைத்தசையில் உள்ள வரைப்படங்கள், சில பலதாரமணம் செய்து கொள்ளுகிற (Polygamy) ஆண்கள் சில பெண்கள் தங்களுடைய கால் சட்டைகளில், சில இறையியல்பள்ளிகள், சிலபெண்களை தங்களுடைய மாதவிடாய்யை பொருட்ப்படுத்தாமல் தேவாலயங்களில் பிரசங்கிப்பதை கண்டான், நோவாவுக்குப் புரியாமல் இப்படியாக, "தேவன் இது போன்றவர்களை அழிக்கவில்லையா? இது போன்றவற்றை சிலவற்றை எங்கிருந்து வருகிறது? “நிச்சயமாக, என் மருமகள்கள்சாத்தானாக இருக்கக்கூடும், பெண்களை தங்களுடைய மாதவிடாயில் பிரசங்கிக்கிறதை பார்க்கமுடிகிறது" என்றான். தேவன் அவனிடம், "நோவா! நோவா! அப்படி இல்லை! ஆனால் இவை அனைத்தும் காலம் முடிவடையும் வரை மறைத்து வைக்கப்பட்டுள்ளன ". நோவா தேவனை ஆசீர்வதித்தான்.
31மேலும் இந்த காலத்தின் முடிவில், நோவாவின் நாட்களில் பூமி தாறுமாறாக போனது போல, தேவன் நினைவுகூர்ந்து, நோவாவின் ஊழியத்துடன் ஒருவரை அனுப்பிவைத்து, வாக்குத்தத்தம் பண்ணின வெளிப்பாடானது தொடுக்கப்பட்டது ஆகவே அவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.
32மரித்தவர்கள் எத்தனை பேர்களை நீங்கள் உயிரோடு எழுப்பினீர்கள் என்பது ஒரு பொருட்டு அல்ல, நீங்கள் உங்களை டாமிஆஸ்போர்ன், பில்லிகிரஹாம், ஏவால்ட்பிராங்க் அல்லது மற்றயாரோ ஒருவர் என்று அழைத்துக் கொண்டாலும், நீங்கள் நித்திய ஜீவனைப்பெற நோவாவின் பேழைக்குள் நுழைய கடமைப்பட்டு இருக்கிறீர்கள். மேலும் தலைமுறை தலைமுறையாக,தேவன் எப்போதும் ஒரு நோவாவை பூமியில் அனுப்பினார், தன்னுடைய தலைமுறையில் ஒரே ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் மட்டுமே. மேலும் நித்திய ஜீவனை அடைவதற்கு அவருடைய செய்தியே நீங்கள் பிரவேசிக்கிற பேழை. மேலும் இன்றைக்கு, உங்களுடைய நேரத்தின் செய்தியை நீங்கள் கேட்கிறீர்கள். மேலும் அவர் பிரசங்கிக்கின்ற அந்த செய்தி அது இன்றும் அதே விதமாக மனதை புண்படுத்துகிற விதமாகவும், அவமதிக்கிறதாகவும் மற்றும் காட்டுமிராண்டித்தனமாக எல்லோரையும் துரத்தினது; அவர் எங்கேயோ சென்று தேடின செய்தி அல்ல ஆனால் அது தூதன் அவனுக்கு கொடுத்த செய்தி.
33நோவா பூமியின் மேல் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது, நோவாவின் செய்திக்கு வெளியே உங்களால் இரட்ச்சிக்கப்பட முடியாது. மோசே பூமியின் மேல் இருக்கும் பொழுது, மோசேயை தவிற உங்களால் இரட்ச்சிக்கப்பட முடியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியின் மேல் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது , இயேசு கிறிஸ்துவின் செய்தியை தவிற உங்களால் இரட்ச்சிக்கப்பட முடியாது. மார்டின் லூதர், ஜான் வெஸ்லி, உள்ரிச், ஜவிங்கிலி, ஜான் கால்வின், வில்லியம் சீமோர் மற்றும் வில்லியம் பிரன்ஹாம் பூமியின் மேல் பிரசங்கித்துக் கொண்டு இருக்கையில், அவர்களுடைய செய்திகளுக்கு வெளியே இரடச்சிப்பு இல்லை.
34மேலும் இன்று, நீங்கள் காக்குவ் பிலிப்புவின் செய்திக்கு வெளியே இரட்சிக்கப்பட முடியாது. ஏன்? கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராக இருக்கிறார். அவர் கடந்த தலைமுறையினருக்கு என்ன செய்தாரோ, அதையே எப்போதும் அவர் செய்வார். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு உங்களுடைய மணி வேளையின் தீர்க்கதரிசியை விசுவாசிக்க வேண்டும். இது உங்களுடையமணி வேளையின் சோதனை. நீங்கள் உங்கள் மணி வேளையின் சபைகளையும் வஞ்சனையாளர்களையும் மேற்கொள்ள வேண்டும், மேலும் நித்திய ஜீவனை பெறுவதற்க்கு மனிதகுலம் எதிற்கிற ஒரே ஒரு வினோதமான தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ள வேண்டும். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.