(2003 ஜனவரி 19 ஞாயிரறு அன்று லோகாட்ஜரோ, ஆபிட்ஜான் - ஐவரி காஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1டாமி ஆஸ்போர்ன், பில்லி கிரஹாம் மற்றும் அநேகருக்கு பின்னர், ஏவால்ட் ஃபிராங்க் இந்த தலைமுறையில் மனித குலத்தினால் அறியப்பட்ட முரண்பாட்டின் சத்தங்களின் மிகப்பெரிய ஒன்றாகும். பரலோகத்திலிருந்து ஒரு தூதன் வந்தாலும் அதைச் செய்யும்படி அவனிடம் கேட்டாலும், ஏற்கனவே செய்து முடித்த ஒன்றின் மேல் தன்னுடைய கைகளை வைக்க எப்படி ஒரு சிறிய போதகன் பயப்படவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
2யாராவது இப்படி நடந்து கொண்டால், அது ஈவால்ட் ஃபிராங்காக இருக்கக்கூடாது... வில்லியம் பிரான்ஹாமுடன் இருந்த, அமெரிக்காவில் வசித்து வந்த போஸ்வொர்த், எர்ன் பாக்ஸ்டர், வுட், ஆர்கன் பிரைட், ஷோமன், பிரெல்லர், சோத்மேன், பெர்ரி கிரீன் அல்லது பில்லி பால் ஆகியோரை தேவன் பார்க்கவில்லையா? வில்லியம் பிரான்ஹாம் அங்கே இருந்திருந்தால், வில்லியம் பிரான்ஹாமின் செய்தியுடன் சேர்ந்து ஈவால்ட் ஃபிராங்க் தனது சுற்றறிக்கை கடிதங்கள், பிரசுரங்கள் மற்றும் புத்தகங்களை வெளியிட முடியுமா?
3வில்லியம் பிரன்ஹாமின் சில பிரசங்கங்களுக்கு பிறகு, ஓர்மன் நெவில் அல்லது வேறு யாராவது சிலர் அடிக்கடி இது போன்று சில பக்திவிருத்திக்கேற்ற வார்த்தைகளோடு கூட்டத்தை நிறைவு செய்ய வருவதுண்டு, ஆனால் அவைகளை ஒரு போதும் ஒலிநாடாவிலோ அல்லது துண்டு பிரசுரங்களிலோ பதிவு செய்ய அனுமதிக்கவில்லை அது சகோதரர் நெவிலாக இருந்தாலும் அல்லது ஒரு தீர்க்கதரிசனமாக இருந்தாலும் அனுமதியில்லை. இவை அனைத்தும் அவர்கள் மூலமாகவும் தேவன் பேசுகிறார் என்கின்ற ஏவால்ட் ஃபிராங்க் மற்றும் அலெக்சிஸ் ப்ரைலியருக்கு ஒரு பாடமாக இல்லை. மேலும் இந்த எல்லா முரண்பாட்டின் சத்தங்களும் அவர்கள் மத்தியில் பிளவு எற்ப்படுத்த வழி நடத்தியது.
4இந்த முரண்பாட்டின் சத்தங்கள் என்ன கூறுகின்றது? லூயிஸ் செகன்ட் மொழிப்பெயர்ப்பை போல, ஏவால்ட் ஃபிராங்க் வெளிப்படுத்துதல் 1: 20 ல் ஏழு பொண் விளக்குத்தண்டுகளை குறித்ததான கேள்வி என்று அறிவிக்கிறார். அதே வேளையில் வில்லியம் பிரன்ஹாம் ஏழு தங்க விளக்குகள் என்று கூறினார். ஏழு விளக்குகள் ஆனால் ஒரே ஒரு விளக்குத்தண்டு, ஒரே ஒரு திருச்சபை. மேலும், அவர்களுடனான ஒரு பேச்சுவார்த்தையில், அவர்களில் ஒருவர் என்னிடம், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் அசல் கிரேக்க மொழியில் அது ஏழு பொண் குத்துவிளக்குத்தண்டுகளைக் குறித்த கேள்வியாக இருக்கிறது என்றார். நீங்கள பார்க்கிறீர்களா?
5ஞானஸ்நானம் பெறுவதற்க்காக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, "பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே" என்று கூறினார் மேலும் அது தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், பரிசுத்த ஆவியானவரால் அது "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்" இருக்க வேண்டும் என்று பேதுரு கூறினார், நாம் அதை விசுவாசிக்கின்றோம் ஏனென்றால் வெளிப்பாடானது இந்த நூற்றாண்டின் பிள்ளைகளையும் இராஜியத்தின் பிள்ளைகளையும் வித்தியாசப்படுத்திக் காண்பிக்கின்றது.
6"நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக;" என்று தேவதூதர்களிடம் பேசியதாக ஏவால்ட் ஃபிராங்க் திருத்துகிறார், வில்லியம் பிரன்ஹாமிற்கு முரண்படுகிறார். இன்னுமாக, ஒரு மனிதனுக்கும் தேவ தூதனுக்கும் பொதுவானது என்றும் ஒன்றுமில்லை. வெளிப்படுத்துதல் 5 ல், ஒரு தேவதூதன் பாவமற்றவனாக இருந்தாலும், அவன் மீட்பின் புத்தகத்தை எடுக்க முடியாது, ஏனெனில் அவன் இனத்தான் மீட்பர் அல்ல.
7ஒரு தூதன் மனிதனைவிட வேறுப்பட்டவன். ஒரு மனிதனுக்கு சிறகுகள் இருக்கின்றதா? ஒரு தூதன் ஆணா அல்லது பெண்ணா? ஆதியாகமம் 1: 26 முதல் 27, நீங்கள் வாசிக்கும்போது, கொலோசெயர் 1:15 என்ன சொல்கிறது? அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம் யார்? தேவன் தன்னிடத்திலே, பூமியின் மேல் ஒரு நாளிலே தான் வெளிப்படுத்த போகிற குனாதிசயங்களை குறித்து பேசினார்.
8தேவன் தாம் ஆவியாக இருப்பதை போன்றே அவர் மனிதனை ஆவியாக சிருஷ்டித்தார். அவர் பூமியில் ஒரு சரீரத்தில் வெளிப்படப்போகிறபடியினால், மனுஷனை ஒரு சரீரத்தோடு சிருஷ்டித்தார். அவர் ஏவாளை ஆதாமின் விலா எலும்பிலிருந்து வெளியே எடுத்தார் ஏனெனில் சிலுவையில், சபையானது தனது விலா எலும்பிலிருந்து வெளியே கொண்டு வரப்படும். உங்களால் காணமுடிகிறதா? தேவதூதர்கள் மனித சாயலில் இருந்தால், ஆக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சில பிசாசுகளை மீட்கும்! ஆனால் அது சாத்தியமில்லை.
9அது இடிமுழக்கங்களானாலும், தானியேலின் எழுபது வாரமானாலும், ஏவால்ட் ஃபிராங்க் சத்தியத்தின் வழிகளை முறைக்கேடாக்கும் ஒரு தந்திரமுள்ள வஞ்சகனின் சாயலையே வெளிப்படுத்தியுள்ளான். இந்த செய்தியை புரிந்து கொள்ளும் எவரும் அதை காண்பார்கள், இயற்க்கையான ஜெர்மனி யூதர்களுக்கு என்ன செய்ததோ, அதை தான் முழு உலகத்திலிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு தனது மகன் ஏவால்ட் ஃபிராங்க மூலம் எந்த ஒரு கையும் நிறுத்த முடியாதவாறு அவள் செய்வாள். நீங்கள பார்க்கிறீர்களா?
10வெளிப்படுத்தல் 10:7 குறித்து வில்லியம் பிரன்ஹாமை ஏவால்ட் ஃபிராங்க் எவ்வாறு சவால் விடலாம், அத்தகைய மனிதனுக்கு நீங்கள் செவி சாய்கிறீர்கள்? தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிக்கு மட்டுமே வருமென்று நாம் அறிந்திருக்கும்போது என்ன கட்டளையின்படி அவன் அதை செய்கிறான்? வெளிப்படுத்தின விசேஷம் 10:7 வில்லியம் பிரன்ஹாமாக இல்லாத பட்சத்தில் பிறகு அவர் ஒரு கள்ள தீர்க்கதரிசியாக இருக்கிறார்! ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன் வெளிப்படுத்தல் 10:7 அது ஏழாவது பரலோக தூதன், மற்றும் ஏழாவது பரலோக தூதன் எலியாவின் ஆவியாக இருக்கிறது மற்றும் அது எப்போதும் எடுத்துக் கொள்ளப்படுதல் வரை எலியாவின் ஆவியாகவே இருக்கும் ஏனெனில் எலியாவின் ஆவியே ஏனோக்கின் ஆவி, எடுத்துக் கொள்ளப்படுதலின் ஆவி.
11உங்களுக்கு புரியவில்லை என்றால், நான் இன்னொரு உதாரணத்தைக் கொடுக்கின்றேன்: ஏசாயா 61-ஆம் அதிகாரத்தின் வல்லமையின் படி அவர் பூமியின் மேல் வந்தார் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறினார், அதன் பிறகு, பேதுருவைப் போன்ற ஒரு அப்போஸ்தலர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கிறார், அவரது அற்புதங்கள் உண்மையானவை, மற்றும் அத்தகைய விஷயங்கள் உண்மை, அவர் செய்தவை அனைத்தும் உண்மைதான், அவர் கூறின எல்லாம் உண்மைதான் ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏசாயா 61 இல்லை என ஒருவேளை கூறினால். அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு கள்ள தீர்க்கதரிசி என்று கூறுவதாகும். மேலும் இதை தான் ஏவால்ட் பிராங்க் செய்திருக்கிறான். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
12பிறகு ஒரு நாளில் யாராவது வந்து இப்படியாக, நான் கூறின யாவும் மற்றும் நான் செய்த யாவும் அது உண்மை தான் ஆனால் நான் மத்தேயு 25:6 இல்லை என கூறினால், அதாவது நான் ஒரு பொய் தீர்க்கதரிசி என்று கூறுவதாகும். ஏனென்றால் பிறகு நான் எந்த அஸ்திவாரத்தில் இவை எல்லாவற்றையும் நான் செய்தேன்? இப்படியாக தான் ஏவால்ட் பிராங்க் தனது ஊழியத்தின் மூலம் காண்பிக்க முயன்றார். மேலும் நீங்கள் அதை புரிந்து கொள்ளவில்லை. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள். யோவான் ஸ்நானகன் ஏசாயா 40:3 ன் வல்லமையின் கீழ் பூமியில் வந்ததாக கூறும் போது, யாராவது ஒருவர் வந்து யோவான் ஸ்நானகன் ஒரு உண்மையான தீர்க்கதரிசி தான், ஆனால் என்னவென்றால் அவர் ஏசாயா 40 அல்ல என்று கூறினால். அது யோவான் ஸ்நானகன் ஒரு கள்ள தீர்க்கதரிசி என்று கூறுவதாகும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
13ஒரு சகோதரர் எனக்கு ஒரு புத்தகம் அல்லது சுற்றறிக்கை கடிதத்தை காண்பித்தார். அதிலே ஏவால்ட் ஃபிராங்க் இவ்விதமாக: இப்பொழுது தேவன் அவருடைய வார்த்தையை இறையியலாளர்களையும் மற்றும் போதகர்கள் மூலமாக வெளிப்படுத்துகிறார் என்று கூறியிருக்கிறான். மற்றும் அவன் சாயங்கால வேலை இப்போது கடந்து விட்டது என்று பிரன்ஹாமிஸ்டுகளிடம் கூறுகிறான். ஆனால் சாயங்கால வேலை கடந்துவிட்டது என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டால், அவர்களிடத்தில் சாயங்கால செய்தி ஒரு அழுகின மன்னா என்றும் மேலும் அவர்கள் மத்தேயு 25:6 ன் செய்தியை தான் பின்பற்ற வேண்டுமென கூறுங்கள். வில்லியம் பிரன்ஹாமின் அஸ்திவாரமாக வேதாகமம் இருப்பதை போன்று, சாயங்கால செய்தி இப்போது வெளிப்படுத்துதல் 12:1-ன் படியாக நமக்கு ஒரு அஸ்திவாரமாக இருக்கின்றது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்] .
14நல்லது! ஏப்ரல் 24, 1993 ன் தரிசனத்திலே, சாயங்கால வேலை சபைகள் கலப்பின ஸ்திரீயாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டன! அங்கே வித்துக்கள் ஒரு கலவையாக இருந்தது. ஒரு புறத்தில், இடி முழக்க வாதிகள் மறுபுறத்தில் இனை இடி முழக்கவாதிகள் எல்லா இடங்களிலும் சிலர் குழுக்கலாக சுவிட்சர்லாந்தையும் சிலர் ஜெர்மனியையும் நோக்கி பார்க்கின்றனர், மற்றவர்கள் அமெரிக்காவையும் ஜெபர்சன்வில்லையும் நோக்கி பார்க்கின்றனர்.
15வில்லியம் பிரன்ஹாமின் எதிர்பார்த்த தரிசனத்தில், கோட்டை மீறின அந்த மூன்று இளம் பெண்களின் தேசத்தை நினைவு இருக்கிறதா: சுவிட்சர்லாந்தை சேர்ந்த அலெக்சிஸ் பாரிலியர், ஜெர்மனியை சேர்ந்த ஏவால்ட் ஃபிராங்க், மூன்றாவது பெண்மணி அமெரிக்காவிலிருந்து பில்லி பால் மற்றும் ஜோசப் பிரன்ஹாம் ஆகியோருடன் வந்தார். இந்த மூன்று நாடுகளிலிருந்தும் இந்த விவாதம் வில்லியம் பிரன்ஹாமின் செய்திக்கு விதைக்கப்பட்டது. வில்லியம் பிரன்ஹாமின் செய்தியை இந்த முன்று நாடுகள் சிலுவையில் அறைந்தனர்.
16எல்லாவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், செய்தியில் எல்லாவற்றையும் அது குறிக்கின்றது. மேலும் அதை பிரன்ஹாமிஸ்டுகள் புரிந்துக்கொள்வதில்லை. ஏன்? வெளிப்படுத்துதல் 3:14 அவர்கள் குருடர்களாகவும், அதை அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்கிறது. ஆனால் தீர்க்கதரிசனமாக, நடுராத்திரி சத்தத்திற்க்காக காத்திருக்கும்போது, ஏழாம் ஜாமத்தின் கன்னிகைகள் நித்திரையடைவார்கள், நடுராத்திரி சத்தம் என்பது, சாயங்கால நேரத்தின் செய்திக்கு பிறகு தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் நடுராத்திரி செய்திக்காக காத்திருக்கிறார்கள் [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]. நான் இந்த காரியங்களை பற்றி பல்வேறு பிரசங்கங்களில் விரிவாகப் பேசியிருக்கிறேன்.
17இன்று நான் மீண்டுமாக கூறுகிறேன், கிரெபெல்ட் அல்லது ஜெபர்சன்வில் போன்ற வில்லியம் பிரன்ஹாமின் செய்தியின் சபையில், "அல்லேலூயா! இங்கே மணவாட்டியின் எழுப்புதல் துவங்கினது" என்று கூறினால், அது ஒரு வஞ்ஜனையாக இருக்கும், ஏனென்றால் கன்னிகைகளில் ஒருத்தி எழுந்து மற்றவர்களை எழுப்புவாள் என்று கூறவில்லை, ஆனால் மத்தேயு 25:6 ன் படியாக ஒரு பிரசங்கமானது அதை செய்யும். மேலும் ஒவ்வொரு சத்தம் அல்லது எக்காளம் ஒரு யாத்திரையை கொண்டு வந்தது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
18நன்று! அந்த சர்ப்பமானது புதர்களின் உள்ளே நகரும் அந்த கொடூரமான விஷமுள்ள உயிரினம் அது இந்த கத்தோலிக்க, புரொட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளில் உள்ள அங்கத்தினர்களுக்கு எலும்பிற்க்கு எலும்பும், மாம்சத்திற்கு மாம்சமாக ஒரு முற்றிலுமான உறவினராக இருக்கின்றது. ஒரு பாம்பு கொல்லப்படுகிற ஒவ்வொரு முறையும் ஒரு பக்தியான சிந்தனை அவர்களுக்கு இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் எல்லோரும் அதை புறக்கணிப்பதை நான் காண்கிறேன். ஆதியாகமம் 3: 14-ல் சாபம் தங்கள் மூதாதையரைத் தாக்குவதற்க்கு முன்பு, அவர்களுடைய மனித வடிவம் காயின் என்ற நபருக்குள் ஏற்கனவே தப்பிவிட்டிருந்தது. இது தூய்மையான சத்தியம் மேலும் நான் இந்த பாம்புகளின் இரத்தத்தின் மீதான டி.என்.ஏ சோதனையை இந்தச் செய்தியை எதிர்த்துப் போராடும் அனைவரின் இரத்தத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அது எந்த தொடர்பும் வெளிப்படுத்தாது என்று நிருபிக்கும்படியாக பூமியின் விஞ்ஞானிகளுக்கு நான் சவால் விடுகிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்]
19ஜோசப் மற்றும் பில்லி பால் பிரன்ஹாம் அல்லது ஏவால்ட் ஃபிராங்க் ஆகியோரிடம் நான் ஒருபோதும் பின்பற்றவோ அல்லது செவிக்கொடுக்க முடியாது காரணம் என்னவெனில், நான் தீர்க்கதரிசன விசுவாசத்தை உண்மையில் புரிந்துகொண்டேன். ஒரு அப்போஸ்தலனையோ ஒரு சபை தீர்க்கதரிசியையோ சுவிசேஷகரயோ அல்லது போதகரையோ நான் ஒருபோதும் பின்பற்ற முடியாது, ஏனென்றால் வேதாகமம் இதைச் செய்ய எனக்குச் கூறவில்லை. தேவன் மனிதகுலத்திற்கு எப்பெழுதும் ஒரு தீர்க்கதரிசி- செய்தியாளன் மூலமாக மட்டுமே பேசி இருக்கிறார்.
20அப்போஸ்தலர்களும், சபை தீர்க்கதரிசிகளும், சுவிசேஷகர்களும், போதகர்களும், இந்த தீர்க்கதரிசி கூறியது என்னவோ அதை, மேலும் இந்த பூமியின் மேல் உள்ள அனைவருக்கும் பரப்ப வேண்டும். அதுவே அவர்களின் பணி. அவர்கள் புதிய உடன்படிக்கையின் ஆசாரியர்கள், அது ஆசாரியர்களின் பங்காகும். நீங்கள் ஆயர்களோ அல்லது பேராயர்களோ,...! என்னவாக இருந்தாலும்! நீங்கள் எதைச் செய்தாலும், உங்களுடைய மணி வேலைியின் உயிருள்ள தீர்க்கதரிசியின் எதிரொலியாக மட்டுமே இருக்க வேண்டும். இதற்க்கு புறம்பே, நீங்கள் பிசாசின் ஊழியர்களாக இருக்கிறீர்கள்.. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
21மோசேயின் கடந்து சென்ற நாளிலே. யோசுவா அவருக்கு அருகே இருந்தார். உபாகமம் 34:9 ன் படியாக மோசே தம் கையை அவன் மீது வைத்திருந்தார். எனெனில் யோசுவா ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனாக இருப்தினால் இஸ்ரவேலர்கள் அவரை பின்பற்றினார்கள். எலியா கடந்து சென்ற நாளிலே, எலிசா அவருடன் இருந்தார். 2 இராஜாக்கள் 2 ன் படியாக, எலியா அவன் மீது சால்வையை எறிந்தான். ஆனால் எலிசா ஒரு தீர்க்கதரிசி செய்தியாளனாக இருப்தினால் அவனுடைய நாளின் பரிசுத்தவான்கள் அவரைப் பின்பற்றினார்கள். தேவனின் பிள்ளை ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளனை மட்டுமே பின்பற்றும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்] .
22வில்லியம் பிரன்ஹாம் ஒருவர் தனது மகன் அல்லது அவரது சீடர்களில் ஒருவர் மீது கை வைத்தால், அது வேதாகமத்தோடு முரண்பாடாக இருக்கும், ஏனெனில் மத்தேயு 25 ல் இவ்வாறு கூறுகிறது, அதாவது அவருடைய எல்லா குழுவினரும் நித்திரை மயக்கத்திற்க்குள்ளாக செல்வார்கள், மற்றும் ஒரு சத்தமானது எங்கிருந்தா ஒரு சத்தம் அவர்களை எழுப்பும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
23பழைய பிஷப் போலிகார்ப் போல, தைரியத்தினால் அல்ல ஆனால் நான் உள்ளத்தில் உறுதி கொண்டிருப்பதினால், ஏவால்ட் ஃபிராங்கையும், பிரன்ஹாமின் எல்லா பிள்ளைகளையும், அவரை பின்பற்றுகிற யாவரையும், அனைத்து பிரன்ஹாமிஸ்டுகளையும் இந்த செய்திக்கு அழைக்கிறேன். அது சாத்தியமென்றால், ஜோசப் மற்றும் பில்லி பால் பிரன்ஹாம் அவர்கள் இருவரும் தாங்கள் ஒப்னி மற்றும் பினெகாசு இல்லை என அவர்கள் காண்பிக்கட்டும், அவர்கள் ஏலியின் இரண்டு மகன்கள்... இல்லையெனில், குறைந்தபட்சம், என்னை கேட்ட பிறகு, நான் உங்களை மனத்தாழ்மைக்கு அழைக்க விரும்புகிறேன், அதனால் வில்லியம் பிரன்ஹாம் பேசிய அதே தேவன் இங்கே நள்ளிரவில் இருக்கிறார், அவர் தாமே உங்களுக்கு தன்னை வெளிப்படுத்துவராக.
24தீர்க்கதரிசி செய்தியாளர்களை தவிர, வேறு எந்தச் சத்தமும் முரண்பாட்டின் சத்தமாகும். அதனால் தான் நீங்கள் வெவ்வேறு பாதைகளை எடுக்கிறீர்கள். ஆனால் தேவன் உங்களை கூட்டிச்சேர்க்க வேண்டுமானால் அது ஒரு உயிருள்ள தீர்க்கதரிசி செய்தியாளன் மூலமாக மட்டுமே. மேலும் பூமியின் மேல் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளன் இருக்கிறார் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கிறார்கள்].
25கத்தோலிக்கத் தலைவர்கள் முரண்பாட்டின் சத்தங்களாக இருக்கிறார்கள், புராட்டஸ்டன்ட் தலைவர்கள் முரண்பாட்டின் சத்தங்களாக இருக்கிறார்கள், சுவிசேஷ தலைவர்கள் முரண்பாட்டின் சத்தங்களாக இருக்கிறார்கள், சபை தீர்க்கதரிசிகள், மேம்பர்கள், சுவிசேஷகர்கள், ஆயர்கள், பேராயர்கள் அதாவது இந்த முழு உலகத்திலும், நீங்கள் பார்க்கும் யாவரும் முரண்பாட்டின் சத்தங்களாக இருக்கிறார்கள்.
26மத்தேயு 13: 24 முதல் 30, மத்தேயு 24:31, ன் படியாக தேவ எக்காளமானது தெரிந்துகொள்ளப்பட்டவர்களை நான்கு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். மேலும் இன்று பூமியின் மேல் சத்தமிட்டு கொன்டிருக்கிறது. மேலும் அதை உங்களுடைய சொந்தக் காதுகளால் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். இதற்க்கு புறம்பாக, அவர்கள் முரண்பாட்டின் சத்தங்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன், கேட்ககடவன்!