en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 3 (Kc.3) : தேவனிடமிருந்து ஒரு தீர்க்கதரிசி
(ஞாயிற்றுக்கிழமை 20 அக்டோபர் 2002 லோகோட்ஜ்ரோ, அபிட்ஜான்-ஐவரிகாஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 பரலோக இராஜ்ஜியத்தின் நற்செய்தி எப்பொழுதும் ஒரு தூதன் மூலமாக பரலோகத்திலிருந்து வருகிறவேளையில்அங்கே வேறொரு சுவிசேஷமானது பாஸ்டர் பள்ளி மூலமாக பாதாளத்தில் இருந்து வருகிறது ஏனெனில் தேவன்இருதயத்தை நிரப்புகிறார் அதேநேரத்தில் பிசாசு தலையை நிரப்புகிறான். ஏப்ரல் 24, 1993 அன்று அவருடையபேச்சின் சத்தம் எவ்விதமாக என் இருதயத்திற்குள் வந்தது என்றும் பின்னர் நான் மரித்தவனாக விழுந்ததையும்நினைவுகூறுங்கள். நீங்கள் பார்க்கிறீர்களா? போதகர் பள்ளியை நிறுவினது பிசாசாக இருக்கிறது. ஏனெனில்கிராமத்திற்கு பயணமாக சென்ற் எனது மனைவியை அழைக்கும்படி ஒருவனை அனுப்புகிறேன் என்றால், இந்ததூதுவன் வேறு எந்த நபரிடமிருந்தும் எந்த அறிவுறுத்தலை பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை. நான் ஒருவன்மாத்திரமே எனது மனைவியிடம் என்ன கூறவேண்டுமென்று அவனிடம் சொல்லக் கூடியவன் மேலும் அவளும்அவனை நம்புவாள் என்பதை நான் அறிவேன். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
2 சாத்தானும் அவனது பிள்ளைகளும் பாஸ்டர் பள்ளிகளையும், வேதாகம கல்லூரிகளையும் மற்றும்இணையத்தையும் உடையவர்களாக இருக்கட்டும், நானும் எனது வீட்டாரோ மோவென்றால் தீர்க்கதரிசனவெளிப்பாட்டோடு தரித்திருப்போம். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. போதகர் பள்ளி, குருமார்கள் பள்ளி மற்றும் இறையியல் பட்டங்களை பெற்றுக்கொண்ட பிறகு, அந்த மாயக்காரர்கள், பிசாசின்குமாரர்கள் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு, அவர்கள்: "ஓ தேவனே, நான் சிறுகட்டும், என் மூலமாக நீர்பேசுவீராக" என்கின்றனர். நீங்கள் பார்க்கிறீர்களா? அது குழப்பம் தான்! உங்கள் மூலம் பேசுவதற்கு தேவன் உங்களை உங்களை சிறுகச் செய்ய முடியும் என்று உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் போதகர் பள்ளிகளில் எதைத் தேடிச் சென்றீர்கள்?
3 பாஸ்டர் பள்ளி என்பது உளவியல் கையாளுதல் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள ஜனங்கள் செல்லும் இடமே தவிர வேறொன்றுமில்லை. நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் ஜனங்களின் நடத்தையையும் பிரதிவினைகளையும் படிக்கிறார்கள். இதைத்தான் நாம் மாயவாதம் என்கிறோம். இதைத்தான் அவர்கள் ஜனங்களிடமிருந்து மறைக்கிறார்கள்.
4 நல்லது! பகல்வெளிச்சத்தினால் வெளியரங்கமாக்கப்படாத மறைபொருள் அங்கு எதுவுமில்லை என வேதாகமம்அறிவிக்கிறது. தேவன் அதை செய்தார் ஏனெனில் திரும்ப அளிக்கப்படுகிற நேரமானது வந்தது, ஆனால் யாருக்காகஅப்படிச் செய்யப்பட்டதோ அவர்கள், துரதிர்ஷ்ட விதமாக அங்கே நன்மையேது தீமையேது, தேவனுடைய ஆவியேதுபிசாசின் ஆவியேது, தேவ வார்த்தையேது இறையியல் ஏது... என வேறு பிரிக்க முடியாதவாறு ஏற்கனவே குடித்து வெறுத்திருந்தனர். மேலும் இதில் இருந்து வெளிப்படும் கனிதான் கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும்பிரன்ஹாமிஸ்டு சபைகள்.
5 மேலும் இந்த சாத்தானிய கேலிச்சித்திரங்கள் (satanic caricature) "சபைகள்" என அழைக்கப்படுவது, அதுதவறாக உள்ளது, அதன் மூலம் தேசத்திற்கு சாபமாகவும் தேவனுடைய கோபமனைத்திற்கும் ஆளாகிறது. அதனால், வாதையின் பாத்திரம் ஒரு தேசத்தின் மீது தேவனால் ஊற்றப்பட்ட உடனே, துன்மார்க்கனை அவனது வழியில்பெலப்படுத்துவதற்கு சபைகள் அதை வியாக்கியானிக்கும்படி விரைகின்றன. நியாயத்தீர்ப்பின்போது எவ்விதமானதண்டனைக்கு இந்த சபைகள் பாத்திரமானவைகள் என கண்டறியப்படுமென்பதை என்னால் கற்பனை செய்யக் கூடமுடியவில்லை! தேவன் அந்த சபைகளின் தலையாக இருப்பாரெனில், அவர்கள் புத்தமதத்தினர், மாஹிக்கரி, முஸ்லிம்கள், விக்கிரக பூஜாசாரிகள், முகமூடிகள், தெய்வங்களுக்கு படைக்கப்படும் பானங்கள், போர் நடனங்கள்... போன்றவர்களோடு ஒருமித்து ஜெபிக்க விரும்பமாட்டார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
6 குறிப்பாக ஆப்பிரிக்க சபைகள் இந்த வன்முறை மற்றும் அழுகிய தொலைக்காட்சிகளில், இந்த இளவரசி மற்றும்இளவரசர் தெருக்களில், நிர்வாண பெண்களை காண்பிக்கும் செய்தித்தாள்களில், தூய்மையற்ற தாளங்கள் மற்றும்நடனங்கள், ஆணுறைகள், குடும்ப கட்டுப்பாடு, மற்றும் பலவற்றின் பேரில் தன்னை அறிவிக்கும். நீங்கள்பார்க்கிறீர்களா? பாவம் சட்டப் பூர்வமாக்கப்பட்டுள்ள இடத்தில், திருச்சபை தானே தன்னை அறிவிக்க வேண்டும். அவர்கள் மாணவர்களுக்கும் படைவீரர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆணுறைகளை வழங்கும்போது சபை அமைதியாகவே தரித்திருந்தால், அவர்கள் ஜெபிக்கவும் கூடாது, அப்படி இருக்கவில்லையென்றால், அவர்கள் தாம்ஆப்பிரிக்காவின் மோசமான எதிரிகள், அவர்கள் அவ்வாறுதான் இருக்கின்றனர். அது ஏன்? ஏனெனில் ஆணுறைமற்றும் மாத்திரைகள் பயன்படுத்தும் ஒருவனின் பாவம் கருச்சிதைவு செய்யும் ஒருவனின் பாவத்திற்கு ஒத்திருக்கிறது.
7 ஒரு நாட்டின் மேல் தண்டனைகள் வரும்போது, பூர்வத்தில் எகிப்தின் தெய்வங்களுக்கு எதிராக இந்ததண்டனைகள் செயல்படுத்தப்பட்டதுபோல, அது சபைகளுக்கு எதிரான தண்டனைகளாக இருக்கிறது. நீங்கள்பார்க்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் அடிமையான, நான், காக்குவ் பிலிப்பு, உங்களை ஊக்கமிழக்கசெய்யவில்லை, ஆனால் நீங்கள் ஜெபிப்பது வீண். கடந்த காலங்களில் இஸ்ரவேலருக்கு எதிராக தமதுஊழியக்காரனான நேபுகாத்நேச்சாரை எழும்பப்பண்ணினது போன்று நியாயத்தீர்ப்பு செய்ய தேவன்ஊழியக்காரர்களை எழுப்பியுள்ளார். பூமியில் சம்பவிப்பவை அனைத்தையும் நியமித்தது தேவனில்லையா? [ஆசிரியர்குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
8 யோசேப்பை போலவே, கறுப்பர்கள் ஆபிரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டு, ரோம துன்புறுத்தல்களால்ஓநாய்களிடமிருந்து தப்பித்த செம்மறி ஆட்டுக்குட்டிகள் தங்களுக்கென ஒரு புது இடத்தை, அமெரிக்காவைகண்டடைந்தனர். தேவன் அவர்களை ஆசீர்வதித்தார், மேலும் அவர்களுடைய சகோதரர்களான முழு உலகத்தையும், ஐ.நா.சபையினூடாக தங்களுடைய தீர்மானங்களுக்கு முன்னால் வணங்கும்படி செய்தது, ஏனெனில், பார்வோன், எகிப்தின் போப்புக்கு அடுத்தபடியாக, அது யோசேப்பாக இருந்தது. நாம் அதை ஆதியாகமப்புத்தகம் மற்றும்வெளிப்படுத்துதல் புத்தகம் 13-ல் பார்க்கிறோம். நீங்கள் பார்க்கிறீர்களா?
9 அவ்விதமாக செம்மறியாட்டுக்குட்டிகளாக அங்கிருத்த அவர்கள், கிறிஸ்தவர்களின் கொள்ளுப் பேரன்கள், வேதாகமத்தின் மீது ஆணைமொழி எடுத்து, நொருக்குகின்ற, குண்டுபோடுகின்ற, வீட்டோ அதிகாரம் மற்றும்பொருளாதார கட்டுப்பாடினூடாக தன்னையே தினிக்கின்ற வலுசர்ப்பமாயினர். அவர்களது குடும்பத்தினர்பிழைக்கும்படி அவர்களுக்கு இலவசமாக கோதுமை அனுப்புவதற்கு பதிலாக அவர்கள் ஒருவர் மற்றவரை கொலைசெய்யும்படியாக ஆயுதங்களை அனுப்புகிறார்கள். பூமியின் குடிகளை வஞ்சிப்பதற்காக அவர்கள் சில டாமிஆஸ்போர்ன், கென்னத் ஹேகின், பென்னி ஹின், மோரிஸ் செருல்லோ, பில்லி கிரஹாம் ... போன்றவர்களைஅனுப்புகின்றனர். மேலும், "தேவன் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக" என்று கூறுவதில் பெருமை கொள்கின்றனர்.
10 நான் காண்கின்ற இந்த அமெரிக்காவை தேவன் ஆசீர்வதிப்பாராகில், அப்படியானால் சோதோம் மற்றும்கொமோராவை அழித்ததற்காக நிச்சயமாக அவர் மனந்திரும்ப வேண்டியவராக இருக்கிறார். நீங்கள்பார்க்கிறீர்களா? நான் காண்கின்ற இந்த ஐவரி கோஸ்டை தேவன் ஆசீர்வதிப்பாராகில், அப்படியானால் சோதோம்மற்றும் கொமோராவை அழித்ததற்காக நிச்சயமாக அவர் மனந்திரும்ப வேண்டியவராக இருக்கிறார். மேலும்உயிர்த்தெழுதலின் போது தேவன் சோதோம் மற்றும் கொமோராவின் ஜனங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டியவராகஇருக்கிறார். தேவன் நினிவே ஐனங்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டியவராக இருக்கிறார். உங்களால்கானமுடிகிறதா?
11 ஒரு கத்தோலிக்க, ஒரு புராட்டஸ்டன்டு, ஒரு சுவிசேஷக, ஒரு பிரன்ஹாமிஸ்டு அல்லது அந்த மறைபரப்புபணிகள் மற்றும் ஊழியங்களின் உறுப்பினர் ஒருவனை தேவன் இரட்சிப்பாரேயாகில், தேவன் நரகத்தை அகற்றவேண்டும், மேலும் அனைவரும், சாத்தானும் கூட பரதீஸுக்கு சென்றுவிடுவான். [ஆசிரியர் குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கின்றனர்]. ஒருவன் தனது காலத்தின் உயிர்வாழும் தீர்க்கதரிசியை புறக்கணித்துவிட்ட பின்னும்அவன் எப்படி பரதீஸுக்கு செல்லமுடியும்? நோவாவை புறக்கணித்துவிட்ட ஒருவன் ஜலப்பிரளயத்தில் இருந்துஎப்படி இரட்சிக்கப்பட முடியும்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியிலிருந்தபோது, அவரை புறக்கணித்துவிட்டுஎப்படி ஒருவன் இரட்சிக்கப்பட முடியும்? இந்த சபைகளால் தான் முழு பூமியும் படுகுழியில் உள்ளது.
12 மேலும் செப்டம்பர் 11 அன்று, அமெரிக்கா தாக்கப்பட்டபோது, அன்று மனமுறிவோடு நான் கூறினேன்: "அதுநிகழ்ந்தது". மேலும் நான்: “சாயங்கால நேர செய்தியாளனால் அறிவிக்கப்பட்டது அதுதான்” என்றேன். அந்ததேசத்தின் மீது இரக்கமாயிரும், அவள் என்ன செய்வாள்? இப்பொழுதிலிருந்து, பயமும் கவலையும் அந்தமனிதர்களில் தங்குமே. நன்மைக்காக பாடுபடுவதற்கு பதிலாக, பொல்லாங்கனுடைய இழப்புக்காக அவர்கள்உழைத்தனர்.
13 அல்-கொய்தாவையும் பயங்கரவாதத்தையும் கைப்பற்ற முயலுவதல்ல தீர்வு; அவர்கள் கடவுளின் மேன்மைக்கான சாட்டைகள் மட்டுமே. ஆனால் டாமி ஆஸ்பார்ன் மற்றும் மோரிஸ் செருல்லோ, பென்னி ஹின் மற்றும் மனாசேஜோர்டான் மற்றும் இந்த அனைவரும் பூமியை வஞ்சிக்க உலகமெங்கும் சென்று கொண்டிருக்கிறவரை, அங்கேஎந்த தீர்வும் இருக்காது! நீங்கள் அவர்களை பிடிக்கவோ அல்லது கொல்லவோ தேடினாலும், எவ்விடத்திலிருந்தும்சாட்டை அடிகளை தேவனால் உண்டுபண்ண முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
14 தேவனால் பெருவெள்ளம், நிலநடுக்கம், சூறாவளிகள் போன்றவைகளை எழுப்ப முடியும். மேலும் எய்ட்ஸ்வியாதியைக் காட்டிலும் இன்னும் கொடூர வியாதிகள் வருமென உங்களுக்குத் தெரியாதா? எது உங்களைகொல்லும், கொல்லாது என உங்களுக்குத் தெரியாது அல்லவா? மேலும் பாவம் மற்றும் கள்ள தீர்க்கதரிசிகளை கலாச்சாரமாக வளர்க்கும் எந்த மனிதனுக்கும் அல்லது எந்த தேசத்திற்கும் எதிராக தேவன் இவைகளைஎழும்பப்பண்ணுவார்.
15 இவைதான் நோவாவின் நாட்களில் தேவன் பூமியை அழிக்கும்படியாக செய்தது. சபைகள் டாமி ஓஸ்பான்போன்ற வஞ்சகர்களை, மனிதர்களால் அங்கீகரிக்கப்பட்ட, புகழ்பெற்ற மனிதர்களை உடையவைகளாக இருந்தன. இரட்சிப்பின் எந்த வழியும் சீர்கெட்டுப் போயிருந்தது. ஆதியாகமம் 6:11 முதல் 12 வரை பாருங்கள்: "... மேலும்பூமியானது தேவனுக்கு முன்பாக சீர்கெட்டுப்போயிருந்தது, மேலும் பூமி முழுவதும் பொல்லாங்கினால்நிறைந்திருந்தது.
16 தேவன் பூமியின் மீது நோக்கிப் பார்த்தார், அது சீர்கெட்டுப்போயிருந்தது; மாம்சமான யாவும் பூமியில்அவைகளுடைய வழியை கெடுத்திருந்தனர்”. இதை கவனியுங்கள்: "...தேவனுக்கு முன்பாகசீர்கெட்டுப்போயிருந்தது". மனிதர்களுக்கு முன்பாக அல்ல ஆனால் தேவனுக்கு முன்பாக! மனிதர்களுக்கு, அவர்கள்சத்தியத்தில் இருக்கிறார்கள்; தாங்கள் செய்வதில் அவர்கள் பொல்லாங்கெதுவும் காண்கிறதில்லை! அப்பொழுதுதான் தேவன் அங்கே, இறையியல் பயிற்சி எதுவும் இல்லாத, ஒரு சிறிய மனிதனை எழும்பப்பண்ணினார், அவனுடைய பிரசங்கம் அவர்களை கலக்கியது. ஒரு உண்மையான வனாந்திரத்தில் நோவா பிரசங்கம் செய்தான்.
17 நோவாவின் காலத்தில் தான் நாம் இருக்கிறோமென ஜனங்கள் அடையாளங் கண்டுகொள்கின்றனர். நோவாவின்காலத்தில் தான் இருக்கிறோமென அனைத்து பிரசங்கிகளும் அடையாளங் கண்டுகொள்கின்றனர். நோவாவின்காலத்தில் தான் இருக்கிறோமென சபைகள் அடையாளங் கண்டுகொள்கின்றனர்... ஆனால் நோவா எங்கே? அவர்களோடு அவர்களே கேட்டுக்கொள்ளாத எளிய கேள்வியாக இது இருக்கிறது. ஆனால் நோவா இல்லாமல்எப்படி ஒருவன் நோவாவின் காலத்தில் வாழமுடியும்?
18 ஓ, தேவகுமாரர்களே மகத்தான மேய்ப்பர்களுக்காக, அப்போஸ்தலர்களுக்காக மற்றும் தீர்க்கதரிசிகளுக்காகநோக்கிப்பாராதேயுங்கள் ஆனால் நோவாவுக்காக நோக்கிப்பாருங்கள்! உங்களைத்தான், சிறிய இடையர்களே! உங்களைத்தான், சிறிய சாஸ்திரிகளே! எருசலேமுக்கு நேராக போகாதீர்கள் ஆனால் பெத்லகேமுக்கு நேராகச்செல்லுங்கள்! பெரிய சபைகளுக்கு போகாதீர்கள், பெரிய சபைகளுக்காக நோக்கிப்பாராதேயுங்கள், ஏரோதின்சபைக்கு போகாதீர்கள், மகத்தான தேவமனிதர்கள் என அழைக்கப்படுகிறவர்களிடம் போகாதீர்கள், ஆனால் தச்சன்யோசேப்புக்கு நேராக போங்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
19 நோவா புறக்கணிக்கப்பட்டார், அது பூமியின் அனைத்து தலைமுறையினருக்கும் தேவன் கொடுத்திருக்கிறஅடையாளமாக இருந்தது. எல்லா தீர்க்கதரிசிகளும் அவர்களுடைய செய்திகளின் காரணமாக நிராகரிக்கப்படுவார்கள். ஆனால் தேவன், பரலோகத்தில், அவர்களை அங்கீகரித்திருக்கிறார். மேலும் நோவாஅங்கீகரிக்கப்பட்டால், நானும் அங்கீகரிக்கப்படுவேன். அதன்பேரில் தான் நாம் இளைப்பாறுகிறோம், நானும் எனது சீடர்களும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
20 பூமி சீர்கெட்டு போயிருக்கிறது, கர்த்தர் இயேசு கிறிஸ்து அதை கூறியுள்ளார், இறுதி காலங்களில், அவர் வரதாமதிப்பாரேயாகில் அங்கே தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எவரும் இரார்கள். மேலும் இந்த கேடு எங்கிருந்துவந்தது? அமெரிக்க ஐக்கியநாட்டிலிருந்துதான். டாமி ஆஸ்பான், பென்னி ஹின், பில்லி கிரஹாம், மோரிஸ்செருல்லோ மற்றும் அவர்கள் அனைவரையும் பாருங்கள்... அவர்கள் பூமியை கெடுத்துப்போட்டார்கள்; இயேசுகிறிஸ்துவின் பெயரை அறிக்கைசெய்யும் அந்த ஜனங்கள் ஓர் நாளில் அமேரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லவேண்டுமென்று கனவுகாண்கிறதை குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன். லாஸ் ஏஞ்ஜல்ஸ் (Los Angeles) அல்லதுஹாலிவுட்டைக் காட்டிலும் உங்களது கிராமங்கள் சிறந்ததாக இருக்கவில்லையா?
21 நீங்கள் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் கனவு காண்கிறது போலவே, நெடுங்காலமாக உங்களதுஆத்துமாக்கள் பாவம் மற்றும் நரகத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது. மேலும், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறவர்கள் அங்கு அவர்கள் காண்கிறவைகளுக்கு விலகி தூரமாகஉங்களுக்கு பதிலாக இங்கு ஆப்பிரிக்காவில் இருக்க விரும்புகின்றனர்.
22 வெளிப்படுத்தல் 13-ன் முதலாவது மிருகம், வத்திக்கான் கத்தோலிக்க சபையின் மூலம் பூமியை கெடுத்தது. உங்களது செவிகளை வத்திக்கானிடமாக சாயுங்கள் என்று நான் உங்களுக்கு சொல்கிறேன். ஓர் நாள், ஒரு துண்டுசெய்தியானது உலகத்தை அசைக்கும். அந்த நேரம் இப்பொழுது வந்திருக்கிறது, அந்த நியாயத்தீர்ப்பின் கருவிஅது அல்-கொய்தாவிலிருக்கும் ஆவியாக இருக்கிறது. முழு உலகமும் : "அதை செய்தது யார்?" என்று சொல்லும். நீங்கள் பார்க்கிறீர்களா?]
23 வெளிப்படுத்தல் 13-ன் இரண்டாவது மிருகம், அமெரிக்கா, அதுதானே வத்திக்கானின் சொரூபமாக இருந்து, புரோட்டஸ்டன்டு மற்றும் சுவிசேஷக சபைகளான கத்தோலிக்கத்தின் சொரூபத்துடன் சேர்ந்து பூமியை கெடுத்தது, முழு காரியமும் மிருகத்தின் முத்திரைக்கு கீழாக கிரியை செய்கிறது. அதே ஆவிதான் ஒருமுறை பாபேலிலும்அங்கிருந்து பாபிலோனுக்கும் பின்னர் மேதியா-பெர்சியா சாம்ராஜ்யத்திற்கும், அதற்கு பின்னர் கிரேக்க உலகசாம்ராஜ்யத்திற்கும் பின்னர் ரோம சாம்ராஜ்யத்திற்கும் பின்னர் ரோமாபுரியில் இருந்து வந்த கத்தோலிக்க சபைக்கு பரவியது. அங்கிருந்து, இந்த ஆவியானது அமெரிக்காவிற்கு மற்றும் புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக சபைகளுக்கும்அதனையடுத்து பிரன்ஹாமிஸ்டுகளிடத்திற்கும் பரவியுள்ளது. மேலும் அனேக அமெரிக்கர்களுக்கு, அமெரிக்கா தான்புதிய எருசலேம். அது ஒரு உண்மை ஆனால் அது வரலாற்று உண்மை, அந்த சமயத்தில் கிறிஸ்தவர்கள் ரோமதுன்புறுத்தலை விட்டு ஓடிப்போயிருந்தனர்.
24 இன்று, ஒரு ஆப்பிரிக்க நாட்டை புதிய எருசலேம் என்று கூறுதல் தேவனையும் அவரது சிம்மாசனத்தையும்அவமதிக்கும் செயலாகும்! மேலும் நான் ஒரு கிறிஸ்தவனாக, ஒரு மதசார்பற்ற நாடு என அழைக்கப்படுகின்றநாட்டின் வாழ்விற்காக நான் ஜெபிக்க ஒப்புக்கொள்ளவேண்டுமா?
25 ஆனால் பாவங்களினாலும் இந்த சபைகளினாலும், உலகமோவெனில் வேதனையிலிருந்து வேதனைக்குள்ளாகச்செல்லும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். மேலும் அது ஒரு மனிதன் வியாதியால் பீடிக்கப்படுவான் என்றஅச்சத்தினால் அவனது சகோதரனுடனோ அல்லது அவனது நெருங்கிய நண்பனுடனோ கரங்களை குலுக்கமுடியாமல் போகுமட்டும் அப்படி செல்லும். ஜனங்கள் ஒருவரை ஒருவர் தொடாமல் நடப்பர். பள்ளிகள் மூடப்படும்மேலும் ஜனங்கள்: " வியாதிகள் தொற்றிக்கொண்டு அழிந்துவிடுவேன் என்னும் அச்சத்தினால் நான்சுரங்கப்பாதையை அல்லது பேருந்தை பயன்படுத்த பயப்படுகிறேன்." என்று சொல்வதை நீங்கள் கேட்பீர்கள். நீங்கள் காண்கிறீர்களா? நீதிமானொருவன் துன்மார்க்கன் ஒருவனிடம்: "போ, கடற்கரையில் உன் நிர்வாணத்தைகாட்டு!" என்பான், துன்மார்க்கனோவெனில்: "நான் அப்படிச் செய்ய போகமாட்டேன்!" என்பான்.
26 நல்லது, வேதாகமம் என்ன சொல்கிறது? மத்தேயு 24:22 என்ன சொல்கிறது? அந்த நேரம் குறைக்கப்படவில்லைஎன்றால், ஒரு மாம்சமும் தப்புவதில்லை என்று வேதாகமம் கூறுகிறது, ஆனால் சபைகளின் கிரியைகள் மற்றும்பெருக்கத்தை பார்க்கும் போது, தேவன் தாமதிப்பாரானால், அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்பது போன்றஒரு எண்ணம் உள்ளது. இப்படிப்பட்ட எண்ணத்தினால் வஞ்சிக்கப்படாதேயுங்கள்!... உங்களதுவிருப்பங்களினிமித்தம் உங்கள் சபைக்கு நான் ஒரு அச்சுறுத்தல் என்னும் விதத்தில் என்னை பார்க்காதீர்கள்ஆனால் அதற்கு மாறாக ஒரு கிருபை என்றெண்ணுங்கள்.
27 நான் என்ன தவறாக கூறுகிறேன் என்று சொல்லமுடியாமல் அவர்கள் என்னை ஒரு கள்ளத்தீர்க்கதரிசி, அந்திகிறிஸ்து, சாத்தானின் தூதன், மார்க்கபேதம் உண்டாக்குகிறவன்... என்கிறார்கள் மேலும் நான் பிரசங்கிப்பதை கசப்பான பிரசங்கம் என்கின்றனர். நீ, இறையியல் மற்றும் மற்றவர்களை பசுங்கிக்கிற நீங்கள், பரதீஸுக்குபோவீர்கள்! பரலோகத்திலிருந்து சுவிசேஷத்தை பெற்றுக் கொண்டு பிரசங்கித்த நோவா, மோசே, தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் மற்றும் நானும், நரகத்திற்கு போகிறோம்! கேட்டின் குமாரர்கள் ஆத்துமாக்களை கேட்டுக்குவழிநடத்துகின்றனர்! ... என்னை ஒரு கள்ளத்தீர்க்கதரிசி மற்றும் ஒரு அந்திகிறிஸ்து என அழையுங்கள் ஆனால்நியாயத்தீர்ப்பில் தேவன் உங்களுக்காக காத்திருக்கிறார்! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
28 இருப்பினும், பிசாசின் பிள்ளைகளும் அவர்களது சபைகளும் சுட்டெரிக்கப்படுவதற்காக அனேக கட்டுகளாககட்டப்படுமென்றும் ஆனால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களோவெனில் ஒரு தனி களஞ்சியத்தில் (single granary) கூட்டிச் சேர்க்கப்படுவர் என்று மத்தேயு 13:24 முதல் 30 வரை கர்த்தர் இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். அங்கேஎகிப்தில் அனேக நம்பிக்கைகளும் (beliefs) தெய்வங்களும் (gods) இருந்தன மேலும் தேவன் நியாயத்தீர்ப்பைநடபித்தத்தின்படி, அவரது பிள்ளைகளை வெளியே கொண்டுவந்தார்.
29 முன்னர் இஸ்ரவேலில் இருந்த திரளான சபைகள் முன் தேவன் தெரிந்து கொள்ள பட்டவர்களை கூட்டிச்சேத்தார், அவர்கள் பரிசேயர்கள், யூதமத துறவிகள் (essenes), சதுசேயர்கள், யூதமார்கத்தமைந்தகிரேக்கர்கள் (hellenists), ஏரோதியர், ரோம ஆதிக்கத்தை இடைவிடாது எதிர்த்த யூதமத வெறியர் குழுவினர்(zealots), ... அவர்கள் அனைவகும் தவறான வழியில் இருந்தனர், மேலும் அவர்கள் மீது நியாயத்தீர்ப்பை நடப்பித்துதெரிந்துகொள்ளப்பட்டவர்களை கர்த்தர் வெளியே கொண்டுவந்தார். ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு(the rapture) முன்னர், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், மத்தேயு 24:31 மற்றும் 1 தெசலோனிக்கேயர் 4:16-ன்பிரகாரம், வெளிப்படுத்துதல் 14:6 முதல் 10 வரை உள்ளடங்கிய எக்காள சத்தத்தினால் கூட்டிச்சேர்க்கப்படுவர். இதுவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எப்போதும் செய்கிற செயல்.
30 மேலும் இந்த பிரசங்கமானது சிலர் விழுவதற்காகவும் அனேகர் எழுவதற்குமாக இருக்கிறது. நோவாவைகாப்பாற்றின அதே பெருவெள்ளம் தான் உலகத்தை அழித்தது. இன்று நம்மை இரட்சிக்கும் இந்த அதே செய்திதான்(Message) இந்தத் தலைமுறையை கண்டனம் செய்யும்.
31 உபதேசங்களில் அவர்களுக்கு வேற்றுமைகள் இருந்தபோதிலும், நேச கூட்டமைப்புகளுக்குள் சபைகள்ஒன்றிணைகின்றன; மேலும் அவைகள் மிருகங்கள், பல தலைகளுள்ள வலுசர்ப்பங்கள் என்று நான் சொன்னேன். ஒவ்வொரு தலையும் ஒரு சபையையும், அதிலிருக்கும் பிசாசையும், அதன் மொழியான, அந்த சபையினுடையஇறையியலையும் (theology), அடையாளப்படுத்துவதாக இருக்கிறது. அந்த சபைகளில் இருப்பவர்கள்எவர்களாயினும் ஏற்கனவே முத்திரையை பெற்றுக்கொண்டுவிட்டனர், அதாவது, அந்த மிருகத்தின் மேலுள்ளபிசாசின், ஆவிதான் (the spirit) அது. ஒரு முத்திரை என்பது ஒரு ஆவி (a spirit). மேலும், தேவன் காயீன் மீது ஒருமுத்திரையை போட்டபோது, அது ஒரு ஆவியாக இருந்தது (a spirit). வெளிப்படுத்துதலில் கூறப்பட்டுள்ளமிருகத்தின் முத்திரை என்பது, அந்த மிருகத்தின் பரிசுத்த ஆவியாக (holy spirit) இருக்கிறது. நீங்கள்பார்க்கிறீர்களா?
32 ஆனபடியால், இன்றைக்கு மிருகத்தின் முத்திரை என்பது, கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும்பிரன்ஹாமிஸ்டு சபைகளில் செயல்படுகிற பரிசுத்த ஆவி தான். நீங்கள் ஒரு சுவிசேஷக சபையில் இருக்கும்போது, நீங்கள் அந்த ஆவியினால் பிறக்கிறீர்கள்; உண்மையான பரிசுத்த ஆவியை போலவே, அதைக்கொண்டு நீங்கள்அன்னிய பாஷைகளைப் பேசி, நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கிறீர்கள்,... அது உங்கள் சரீரத்தை, உங்கள்ஆத்துமாவை, உங்கள் ஆவியை கட்டுப்படுத்துகிறது.
33 மேலும் சரியாக நீங்கள், கர்த்தர் இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக இருந்த பரிசேயரைப்போல அல்லது தனதுகரங்களில் மெழுகுவர்த்திகள், ஜெபமாலைகள், சுரூபங்கள், தூபங்கள், சிலுவைகள், பரிசுத்த ஜலம்போன்றவைகளை வைத்துக்கொண்டு, சத்தியத்தில் இருப்பதாக விசுவாசிக்கும் ஒரு கத்தோலிக்கரின் நிலையில்இருக்கிறீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. அதே முத்திரை, மிருகத்தை பிடித்திருக்கிறஅந்த அதே அவிசுவாசப் பிசாசு, அதுதான் அதனுடைய சொரூபத்தை, அதனுடைய பெண்பிள்ளைகளை, அதாவது, அந்த புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகளை பிடித்திருக்கிறது.
34 எவராவது ஒருவர்: "நானொரு கத்தோலிக்கன், பாப்டிஸ்டு, செய்தியிலுள்ள சகோதரன், லூதரன், சுவிசேஷகசபையினன்..." என கூறும்பொழுது, நீங்கள் கண்டிப்பாக: "நான் அந்திகிறிஸ்து, நான் ஒரு வேசிப்பிள்ளை, நான்ஒரு பிசாசு..." என்று அதனை புரிந்துகொள்ளவேண்டும், அப்படித்தான் பரலோகத்தில் தேவன் அதை கேட்கிறார். இந்த அர்த்தத்தில், "கரத்தின் மீதுள்ள முத்திரை" என்பது அந்த சபைகளிலிருந்து கொண்டு செயல்படுவதுதான்,. மேலும் முழு உலகமும் அதை பெற்றுக் கொண்டுவிட்டது.
35 வத்திக்கானை சந்தித்திராத அல்லது சந்திக்க எண்ணம் கொள்ளாத ஒரு இராஜாவோ அல்லது ஒரு ஜனாதிபதியோ உலகத்தில் இல்லை; சொல்லப்போனால் யாசர் அராபத் (Yasser Arafat), அரேபியர்கள் மற்றும்இஸ்லாமியர்களும் கூட. மத்தேயு 4:8 முதல் 9 வரை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மிக உயர்ந்த பூமிக்குரியஅதிகாரத்தின் சிம்மாசனத்தை மறுத்துவிட்ட பொழுது, ஒரு மனிதன், ரோமாபுரியின் போப், அதைபெற்றுக்கொண்டான். மேலும் இந்த சிறிய பட்டணமாகிய வத்திக்கான் பூமியின் குடிகள் அனைத்தின் மீதும்ஆளுகைசெய்யும் என்றும், ஓர் நாள் காணமுடியாத ஒரு கரம் அதனை தாக்கும் என்றும் வேதாகமம் அதைஅறிவிக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 17:18..
36 பரிசுத்த ஆவியைக் கொண்டிருப்பதாக ஒவ்வொரு சபையும் உரிமைகோருகிறது மேலும் அவைகள்ஒவ்வொன்றும் ஞானஸ்நானத்தின் பேரில் தனது சொந்த கருத்துக்களை உடையதாக இருக்கின்றன, இயேசுவின்தெய்வீகத் தன்மையின் பேரில் தனது சொந்த கருத்துக்களை உடையதாக இருக்கின்றன, முன்குறித்தலின் பேரில்தனது சொந்த கருத்துக்களை உடையதாக இருக்கின்றன, மூல பாவத்தின் பேரில் தனது சொந்த கருத்துக்களைஉடையதாக இருக்கின்றன, ஸ்திரியின் ஊழியம், முக்காடு, மற்றும் பல... ஒரு மெத்தடிஸ்டு பாஸ்டர்ஏ.ஜி.சபைகளிலோ, பாப்டிஸ்டு சபைகளிலோ,... பாஸ்டராக முடியாது. இந்த முரண்பாடான பரிசுத்த ஆவிதான்(holy spirit) என்ன? காரியம் இவ்விதமிருப்பினும் நீங்கள் சத்தியத்தை தேடாமல் ஆனால் பரிசுத்தமாகுதலையும்பரதீசையும் குறித்து பேசுகிறீர்கள்! ஆனால் நீங்கள் ஒரு சபையில் அதை தேடிக்கொண்டிடுக்கிறவரை இந்தசத்தியத்தை (the Truth) ஒருபோதும் காண மாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள்பார்க்கிறீர்களா?
37 தலைமுறை தலைமுறையாக, சத்தியம் எப்போதுமே பூமியில் உயிர்வாழும் ஒரு தீர்க்கதரிசி செய்தியாளரிடம் மட்டுமே இருக்கிறது. அவர் ஒருவரே இராஜ்யத்தின் திறவுகோல்களை உடையவர்; அவரது காலத்தில், வழியும்சத்தியமும் ஜீவனும் அவரே. நீங்கள் வேதாகமத்தை திறக்கும்போது ஏசாயா, எரேமியா, ஆமோஸ், எசேக்கியேல்இன்னும் ஏனையோரை நீங்கள் காண்கிறீர்கள். இவை தீர்க்கதரிசிகளின் பெயர்கள்.
38 சத்தியம், அது ஒரு உயிர்வாழும் தீர்க்கதரிசி செய்தியாளரிடம் மட்டுமே உள்ளது, மற்றபடி ஒரு சபையில் அல்ல! ஆகையால் உங்கள் கரங்களில் இருக்கும் வேதாகமத்தை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிரீர்கள்? இல்லையென்றால், உண்மையிலே இரட்சிக்கப்படுவதற்காகவா நீங்கள் சபைக்குசெல்கிறீர்கள்? தேவன் ஒரு பாப்டிஸ்டை, ஒரு பெந்தெகொஸ்தேயினரை, எழுப்புதல் சபையினரை அல்லதுஏ.ஜி.சபையினர் ஒருவரை இரட்சிப்பாரேயானால், பரிசேயர்களை, யூதாசை, காயீனை எவ்வாறு அவரால்குற்றப்படுத்த முடியும்?
39 பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் போதகத்தை குற்றப்படுத்தி ஒரு கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு தலைவனின் போதனையை எவ்வாறு தேவனால் அங்கீகரிக்க முடியும்? வேதாகமம் என அழைக்கப்படுகிற ஒரு பழைய புத்தகம், அங்கே ஒரு புத்தகத்தை தங்களுடைய விசுவாசத்தின்அடிப்படையாகக் கொண்ட மக்களைக் கண்டித்துவிட்டு, இந்த பக்கத்தில் அதுபோலவே, ஒரு புத்தகத்தைதங்களுடைய விசுவாசத்தின் அடிப்படையாகக் கொண்டிருப்பவர்களை அவரால் எப்படி அங்கீகரிக்க இயலும்?
40 மத்தேயு 16:5 முதல் 12 வரையுள்ள பிரகாரம், பரிசேயர் மற்றும் சதுசேயருடைய போதகம் புளித்தமா என்றுகர்த்தர் இயேசு கிறிஸ்து கூறுகிறார். மேலும், கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்டன்டுகள், சுவிசேஷக சபையினர்கள், பிரன்ஹாமிஸ்டுகள் மற்றும் ஊழிய இயக்கங்கள் மற்றும் ஊழியக்காரர்கள் ஆகியோரின் போதனையை தேவனுடையவார்த்தை என்று எவ்வாறு அவரால் கூறமுடியும்? அவர் நேற்றும் இன்றும் வரும் காலங்களுக்கும் மாறாதவராகஇருக்கையில், அதை எவ்வாறு அவரால் செய்யமுடியும்?
41 ஒரு பாப்டிஸ்டுக்கு, ஒரு பெந்தெகொஸ்தேயினருக்கு, ஏ.ஜி.சபையினருக்கு... தேவன் பரிசுத்த ஆவியைகொடுத்தால், அந்த புத்தமதத்தினர், மாஹிக்கரியினர், குரு மகாராஜாவினர் மற்றும் இஸ்லாமியர்களை பற்றி என்ன? உங்களால் காண முடிகிறதா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களிடம் கெஞ்சுகிறேன், பிசாசுகளுக்கு தூபம் காட்டுவதை நிறுத்துங்கள்! பொற்கன்றுக்குட்டிகளின் பலிபீடத்தை விட்டுவிலகுங்கள். ஊழியம் என்பது ஒரு பயிற்சி செமினரியில் ஒருவர் கற்றுக் கொள்ளக்கூடிய அல்லது மேம்படுத்தக்கூடிய தொழில் அல்ல.
42 உங்களது பாஸ்டர்-தொழிற்ச்சாலைகளில் பாஸ்டர்களை உற்பத்தி செய்வதை நிறுத்துங்கள். பரலோகத்தில்இருந்து தேவன் தாமே ஊழியத்தை கொடுக்கிறார் மேலும் ஒரு மனித கரத்தின் உதவியுமின்றி ஆனால் பரிசுத்தஆவியினால் பூமியில் அதன் நிறைவேற்றப்படுதலை உறுதிசெய்கிறார். உங்களைத்தான், பாஸ்டர்களே, தீர்க்கதரிசிகளே, ஆயர், அருட்திருக்களே, சபை தலைவர்களே... கர்த்தர் இயேசுவின் நாமத்தில் உங்களிடம்மன்றாடுகிறேன்! மனந்திரும்புங்கள்! நரகத்திலிருந்து தப்புங்கள், ஏனென்றால் மனிதர்களுக்குமுன்அவமானமடைதல் என்பது நரகத்தைக் காட்டிலும் மேலானது.
43 நான் உங்களுக்கு ஒரு கற்பனையைப் பிரசங்கிக்கவில்லை, ஆனால் ஏப்ரல் 24, 1993-ன் தரிசனத்தின்உரிமையாளன் என்ற அடிப்படையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களிடம்பேசிக்கொண்டிருக்கிறேன். எரேமியா 28 மற்றும் 1 இராஜாக்கள் 22-க்கு ஒப்பாக, தேவனின் நியாயத்தீர்ப்பைகாணவும் அதை அறிவிக்கவும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு சபையும், எந்த ஒரு மனிதனும், அவன்எப்பேர்ப்பட்டவனாக இருந்தாலும், உங்களை வஞ்சிக்க அனுமதிக்க வேண்டாம்!
44 எந்தவொரு சபைப் பொறுப்பும் உங்களை பின்னாக பிடித்துவைத்துக்கொள்ள வேண்டாம். உங்களுடைய சந்திப்பின் நாளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள், ஏனென்றால் கூட்டிச்சேர்க்கும் எக்காள சத்தத்தை நீங்கள் தவறவிட்டால், பின்பு வேறு எதற்காக காத்துக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? தேவன் உங்களிடம் பேசுகிறவரைமுழங்கால்களை முடக்கி சரித்திரங்கள், இல்லையெனில் நியாயத்தீர்ப்பு வேளையில் நீங்கள் எச்சரிக்கப்படவில்லைஎன்று சொல்ல மாட்டீர்கள்.
45 பிறப்பாலே தேவனுடையதான இஸ்ரவேலால் தீர்க்கதரிசன மொழியை புரிந்துகொள்ள முடியவில்லையென்றால், தத்தெடுப்பு மூலம் பிள்ளைகளானவர்களான, உங்களால் எப்படி அதை புரிந்து கொள்ள முடியும்? ஆனால் ஒன்றுமட்டும் சந்தேகத்திற்கிடமில்லாதது: தேவனுடையவர்கள் என உரிமைகோரும் இரண்டு மனிதர்கள் ஒருபோதும்வித்தியாசமான நடைமுறைகளுடன், வித்தியாசமான மொழிகளில் பேச முடியாது.
46 பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதர்கள் திரும்பி வந்தவேளையில், பவுல் போன்று ஒரு பென்யமீனனும்ஆசாரியனாக இருக்க முடியும். பரிசேயர், சதுசேயர், செலோத்தேயினனர் (Zealots), எசேனியர் (Essenes), ஏரோதியர் ... என புதிய பெயர்களையும் கேள்விப்பட்டோம். 1 இராஜாக்கள் 12:31 மற்றும் 2 நாளாகமம் 13:9-ன்படி, பண வசதிவாய்ப்புகள் உள்ள எவரும், நாம் இன்று சபைகளில் காண்கிறதுபோல, பயிற்சிக்கு கட்டணம்செலுத்தினால் ஆசாரியன் ஆகிவிடுவான்.
47 2 நாளாகமம் 13 கூறுகிறது: "நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும் லேவியரையும்தள்ளிவிட்டு, பிற தேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ? இளங் காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம்அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே...." ஆமென்! அந்த வசனம் கூறுகிறது: “பிற தேசங்களின்ஜனங்களைப்போல”, எகிப்தில் இருந்தது போல். யாராவது ஒருவர் பயிற்சிக்கு பணம் செலுத்தினால், அவர் பாஸ்டர்ஆகிவிடுவார். சரியாக பிற தேசங்களின் ஜனங்களைப்போலவே, யாராவது ஒருவர் தன்னிச்சையாக செல்லவும், தன்னை ஒரு ஆசாரியனாக்கவும் முடியும். நீங்கள் பார்க்கிறீர்களா?
48 ஆனால் தேவனுடைய வழி மாறாமல் அப்படியே இருக்கிறது. மோசே தன்னுடைய காலத்தில் ஆசாரியத்துவத்தைஏற்ப்படுத்தினதாக அது உள்ளது. மேலும் நீங்கள் தேவனுடைய ஒரு உண்மையான ஊழியக்காரனாகஇருப்பீர்களேயாகில், மோசேயிடம் வந்த எத்திரோவைப்போல நீங்கள் வருவீர்கள். யோவான் ஸ்நானகன் அவரதுஅப்போஸ்தலர்களையும் சீஷர்களையும் தேர்ந்தெடுத்ததாக அது உள்ளது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான்அவரது அப்போஸ்தலர்களையும் சீஷர்களையும் தேர்ந்தெடுத்தார். பவுல் தான் தன் அப்போஸ்தலர்களையும்சீஷர்களையும் தேர்ந்தெடுத்தார். தேவன் ஒரு தீர்க்கதரிசியை பூமியில் அனுப்பும்போது, அது எப்பொழுதும் அவ்வாறேஇருக்கும். மேலும் அதுமட்டுமே தேவன் அங்கீகரிக்கிற ஒரே காரியம்.
49 ஊழியத்தை பொறுத்தவரை, அது தெய்வீக தெரிந்தெடுத்தல் ஆகும், இது புத்திக்கூர்மை அல்லது பணம் அல்லதுஅபிஷேகம் பற்றினதான காரியம் அல்ல... "கற்றுக்கொடுக்க எனக்குத் தெரியும், ஆனபடியால் நான் இவ்விதமான அல்லது விதமான நபர் என்றல்ல", "நான் ஒரு பெரிய அபிஷேகம் பெற்றிருக்கிறேன், நான் அற்புதங்கள் செய்கிறேன்ஆனபடியால் நான் இன்ன இன்ன நபர்" ... ஒருமுனை முதல் மறுமுனை வரை, அது அனைத்தும், பிசாசாகஇருக்கிறது. இஸ்ரவேலைப் போலவே, அதே காரியம் இந்தப்பக்கத்திலும் நடந்தது.
50 ஆவிக்குரிய பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து, அதுதான் கத்தோலிக்க சபை, சபைகள்திரும்பிவந்தபொழுது, இதுபோன்ற பெயர்களை நாம் கேள்விப்பட்டோம்: அருட்திரு (reverend), சபை தலைவர்கள்(presidents), பேராயர்கள் (bishops) ... சில தூஷணமான நாமங்கள். உங்களால் காண முடிகிறதா? அவர்கள் சிலசமயக்கொள்கைகள், சில பிரமாணங்கள், சில உபதேசங்கள் மற்றும் சில பாபிலோனிய தெய்வங்களுடன்திரும்பிவந்தனர். நிம்ரோதின் பிள்ளைகள் சிலர், பேலியாளின் குமாரர்கள் "சபைகள்" என அழைக்கப்படுகிற மோசடிசாம்ராஜ்யங்களை உருவாக்கினர். அது என்ன? அந்த கத்தோலிக்க, புரோட்டஸ்டன்டு, சுவிசேஷக மற்றும்பிரன்ஹாமிஸ்டு தலைவர்கள் கிரீடம் இல்லாத இராஜாக்கள்; அவர்களுடைய சபைகள் அரசாங்கம் இல்லாதஇராஜ்ஜியங்கள், அவர்களின் கூட்டாட்சி முறை பாபிலோனிய மாதிரியின்படியான பல தலைகளுடன் கூடியவலுசர்ப்பங்களும் மிருகங்களுமாம்.
51 இது அனைத்தும் பேய்த்தனமானதும் ஒரே நோக்கத்திற்காக இயக்கப்படுகின்றவைகளுமாம். அவர்கள்இப்பொழுது அநேக பாபேல் கோபுரங்களை, சபை கூட்டாட்சி முறைகளையும் கூட்டமைப்புகளையும்எழுப்பியுள்ளனர். அவர்களது மொழிகளின் வேற்றுமையால் குழப்பங்கள் இருப்பினும், தேவனுக்கு ஒரு சவாலாக, அவர்கள் சில பாபேல் கோபுரங்களை, சபைகளின் சில சங்கங்களை எழுப்புகின்றனர். ஒவ்வொரு வலுசர்ப்பமும்மூன்று கொம்புகளை உடையதாக இருக்கிறது: அரசியல் பலம், பண பலம் மற்றும் மதசம்பந்தமான பலம். அவர்கள்மதத் தலைவர்கள் ஆவர், ஆனால் அவர்களது நாட்டிலுள்ள அரசியல் அதிகாரிகள் மீது அவர்களால் செல்வாக்குசெலுத்த முடியும்.
52 நீங்கள் தேவனின் பிள்ளை என்றால், மேலும் உங்களால்: "அந்திகிறிஸ்துவின் முன்னோடி" என்னும்வார்த்தைகளை இந்த சபை தலைவர்களின் நெற்றிகளில் இருப்பதை காணமுடியவில்லையென்றால், நீங்கள்இருளில் இருக்கிறீர்கள். என்னை நானே தீர்க்கதரிசியாக நோக்கமாட்டேன் ஆனால் ஒன்றை நான் அறிவேன்: உங்கள் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதை நான் காண்கிறேன் மேலும் ஒருவரும் அதனோடு முரண்பட முடியாது. பிசாசின் குமாரர்கள் தூரமாக விலகி இருந்துகொண்டு: "நீர் கூறுகிறவைகள்உண்மையே, தேவன் அவைகளை எங்களுக்கும் கூட வெளிப்படுத்தியுள்ளார்!" என்கின்றனர். அதை தேவன்உண்மையிலேயே உங்களுக்கு வெளிப்படுத்தியிருப்பாரானால், நீங்கள் வேறொரு சபைக்கல்ல (church) ஆனால்அவருடைய வார்த்தைக்கும் (Word) அவருடைய திருச்சபைக்கும் (Church) வருவீர்கள்...
53 இது எவ்வாறு இருக்கிறதென்றா ல், எனது கிராமத்தில், ஏ.ஜி. சபையினரான நன்கு அறியப்பட்ட மூப்பர் நான்டோ (Elder Nando) என்பவர் ஒரு தூதனால் அடிக்கப்பட்டது போல இறந்துபோனார்: அவர்களது கூட்டத்தினரின் பல்வேறு மாந்திரீக ஜெபங்களாலும் விடுவிக்க இயலாத ஒரு கடுமையான முடக்குவாதமாக அவை இருந்தது.
54 மேலும், அவர் இறப்பதற்கு முன் தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டார் என்று நான் கேள்விப்பட்டேன். அப்படியானால் அவர் ஒரு ஏ.ஜி. சபையினராக மரிக்கவில்லையா? அவரிலிருந்த ஏ.ஜி.சபையின் பரிசுத்த ஆவியை(holy spirit) குறித்தென்ன, அதைக்கொண்டல்லவா அவர் அந்நியபாஷைகளை பேசி அங்கே தீர்க்கதரிசனம்உரைத்தார்? அவர் மரித்துப்போவதற்கு முன் ஏ.ஜி சபையினுடைய சமயக்கொள்கைகள், கோட்பாடுகள், விக்கிரகங்கள் மற்றும் இறையியலால் கெட்டுப்போயிருந்தாரா? அவர் பரலோகத்திற்கு செல்வார் என்றால்அப்பொழுது கிறிஸ்தவம் தவறானதாக இருக்கிறது! [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்]. நான்உங்களிடம் சத்தியத்தை கூறுவதால் நீங்கள் என்னுடனே உடன்படாமல் இருக்கலாம் அல்லது என்னுடனேசண்டையிடலாம், ஆனால் ஓர் நாள் அந்த ரோம போர்வீரனைப் போன்று, "மெய்யாகவே இந்த மனிதன் தேவனுடையசார்பாக நம்மிடம் பேசினான்" என்று நீங்கள் கூறுவீர்கள். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
55 இவ்விதமான ஜனங்கள், இரட்சிப்படையும்படிக்கு அவர்களது காலத்தின் நற்செய்தியை (Gospel) ஏன்எற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள் என்பதற்கான காரணங்களில் ஒன்று என்னவென்றால், அவர்களால்வஞ்சிக்கப்பட்ட அனேகர் ஏற்கனவே மரித்து அங்கே இவர்களுக்காக காத்திருக்கின்றனர், மேலும்நியாயத்தீர்ப்பின்போது இவர்கள் அங்கு சென்று, தேவனுக்கு முன்பாக அந்த ஆத்துமாக்களுக்காக பதில்கூறவேண்டியவர்களாக இருக்கின்றனர். இங்கே பூமியில் அவர்கள் தங்களது வழிகளை மாற்றிக் கொள்வதை தேவனால்அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது. குயிலெர்மொ மால்டொனால்டோ (Guillermo Maldonado), ஆல்பர்டோமொட்டெசி (Alberto Mottesi), கிலவுதியோ ப்ரெய்டுசன் (Claudio Freidzon), பவுலா வைட் (Paula White) மற்றும்கிறிஸ் ஒயாக்கிலோம் (Chris Oyakhilome) பரதீசுக்கு போனால் அதேநேரத்தில் இவர்களை விசுவாசித்தவர்கள்அனேகர் ஏற்கனவே மரித்துப் போயிருக்க, தேவன் அநீதியுள்ளவராகிவிடுவார். நீங்கள் பார்க்கிறீர்களா? அவ்வளவுதான்!
56 நான் அதிகாரம் உள்ளவனாக பேசுகிறேன், ஏனென்றால் தேவனுடைய ஆலோனை சங்கத்தில் நான் நின்றேன். கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளுங்கள்! உங்களுக்கு இரசனை தேவனுடைய இரசனையாக இருக்கவேண்டியஅவசியமில்லை. நீங்கள் உண்மையிலேயே தேவனின் ஊழியக்காரனாக இருந்தால், உங்கள் பிரசங்கம் உங்கள்வாழ்நாளில், உயிர்வாழும் தீர்க்கதரிசியின் வரிசையில் இருக்கும். பயத்துடன் தேவனை ஆராதிக்கும் அனைவருக்கும்இதுவே அக்கறையாக உள்ளது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்!" என்கின்றனர்].
57 கலாத்தியர் 2:1 முதல் 2 வரையுள்ளபடி அப்போஸ்தலன் பவுல் அவன் என்ன போதித்தானோ அதை சரிபார்க்கஅப்போஸ்தலர்களிடம் வரை போக வேண்டியிருந்தது. உல்ரிச் ஸ்விங்லி அதை மார்டின் லூதருடன் செய்தார்மேலும்: "லூதரைப்பற்றி கேள்விப்படும் முன் நான் அவரைப் போன்றே எண்ணினேன்" என்றார். 1536-ல், மகத்தானசீர்திருத்தாளர் வில்லியம் பாரல் (William Farel) கால்வினிடம் ஜெனீவாவிலுள்ள சபையை (the Church of Geneva) மறுசீரமைக்க அவருக்கு உதவி செய்யும்படி கேட்டார். ஆனால் நீங்கள்? எவ்விதமான பரிசுத்த ஆவியை (holy spirit) நீங்கள் உடையவர்களாக இருக்கிறீர்கள்? உங்களை ஒன்றாக சேர்த்துக்கொள்ளுங்கள்! மனிதனுக்கு அவ்விதமானவழி சரியானதாக காணப்படும் ஆனால் அதன் முடிவு அழிவாக இருக்கிறது. கேட்கிறதற்குக் காதுள்ளவன்கேட்கக்கடவன்!
--:--
--:--