



Kacou 30 (Kc.30) : அறியாத மொழி
(2003 செப்டம்பர் 7 ஞாயிரறு அன்று , லோகோட்ஜ்ரோ,அபிட்ஜானில் -ஐவரி கோஸ்ட் பிரசங்கிக்கப்பட்டது)
1 இன்று காலையிலே 1993 ன் மூன்று பெரிய தரிசனங்களை நான் வாசிக்கப் போகிறேன். முதலாவதாக, முதல் தரிசனம்: தானியேல் 10:4 முதல்11 வசனங்களின் படியாக, ஒரு தரிசனத்தினால் 1993 ஏப்ரல் 24 ம் தேதி நான் மனமாற்றமடைந்தேன். அந்த தரிசனத்தில், நான் கடற்கரை மணலின் மேலும் பிறகு ஓர் உயரமான கூர்நுனி கோபுரத்தின் மேலும் (Pyramid) பிறகு மறுபடியும் வேறொரு இடத்தில் கடற்கரை மணலின் மேலும் நான் நின்று கொண்டிருக்கிறதாக என்னை நானே பார்த்தேன். மேலும், பழைய இராணுவ வண்டி (An Old Military Truck) சமுத்திரத்தின் ஆழத்திலிருந்து வெளியே வந்து எனக்குப் பின்னாக செல்லுவதை நான் கண்டேன். நான் திரும்பி பார்த்தேன், உயிரோடிருக்கும் ஜனங்கள் அதில் இருந்தனர். அவர்கள் ஸ்திரீகளாகவும், அவர்களில் ஒருத்தி கலப்பு இனமாகவும் இருந்தாள்.
2 பின்னர், இரண்டு புறாக்கள் என்னை நோக்கி வந்து, மறுபடியும் திரும்பித் தண்ணீர்களுக்கு மேலாக சென்றது. ஒரு கிரகணம் ஏற்பட்டது மேலும் மேக (ACloud) தோற்றமளித்த ஒரு மனிதர், ஒரு பட்டயத்தை பிடித்துக்கொண்டு செம்மறியாட்டுக்குட்டியுடனே வானத்திலிருந்து இறங்கி வந்தான், பூமி மறுபடியும் பிரகாசமாயிற்று. அவர்கள் தண்ணீர்களின் மீது நின்றனர். செம்மறியாட்டுக்குட்டி ஒரு அறியாத மொழியில் (An Unknown Tongue) என்னுடன் பேச ஆரம்பித்தது. அவருடைய பேச்சின் சத்தம் எனக்குள்ளாக வந்தது, நான் மரித்தவனாக விழுந்தேன். எனது சரீரம் கடற்கரை மணலின் மேல் கிடக்கும் வேளையிலே தண்ணீர்களுக்கு மேலாக போய் நிற்கும் படியாக என் ஆத்துமா வெளியேறிற்று. அது என்னுடனே பேசி முடித்த பொழுதோ, என் ஆத்துமா எனக்குள் திரும்பி வந்தது நான் மறுபடியும் உயிருள்ளவனானேன் ஆனால் மேற்கொண்டு அவர்களை நான் காணவில்லை.
3 பிறகு ஜனக் கூட்டம் என் வலது பக்கத்திலிருந்து என்னிடமாக வந்தனர், “தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், "இல்லை" என்றனர். நான், "தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் அவர்கள் செய்தவைகள் அனைத்தையும் உங்களால் எப்படி பார்க்காமலிருக்க முடிந்தது?" என்று அவர்களை கேட்டேன். அதற்கு அவர்கள், "நாங்கள் தூதனையும் செம்மறியாட்டுக்குட்டியையும் பாரக்கவில்லை, செம்மறியாட்டுக்குட்டி மொழிந்த வார்த்தைகளையும் நாங்கள் கேட்கவில்லை, ஆனால் அவை யாவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம், ஏனென்றால் தேவன் தந்தது எதுவோ அதை பிசாசு பறித்துக்கொண்டான், அவை இப்பொழுது உம்மிடத்தில் மீட்டளிக்கப்பட்டுள்ளது (Restituted)" என பதிலளித்தனர். நான் மேல் நோக்கிப் பார்த்தபோது, வானத்திற்கும் பூமிக்கும் நடுவே ஒரு ஏணியைக் கண்டேன்; தண்ணீர்களுக்கு மேலாக தூதர்கள் ஏறவும் இறங்கவுமாக இருந்தனர். அந்த தரிசனம் முடிந்தது, நான் அறிந்து கொண்டது பரிசுத்த ஆவியைத்தான் என உணர்ந்தேன், நான் அழுதேன், அந்த இடத்திலேயே நான் தேவனை விசுவாசித்தேன்.
4 நாள் பிற்பகல் சுமார் 3 மணியளவில் நான் என் குடும்பத்தாரோடு உட்கார்ந்திருந்தபோது, மறுபடியும் தரிசனத்தில் முழுவதும் பாலைவனமான ஒரு தேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். நான் கிழக்கு நோக்கிப்பார்த்தேன், பரலோகத்திலிருந்து வார்த்தைகள் மேகங்கள் மீது சுமந்து வரப்பட்ட வண்ணமாக இறங்கி வந்து கொண்டிருந்தது. நான் மேலே எழுந்து முதன் முதலாக ஒரு சபைக்கு (Church) சென்றது இந்த இரண்டு தரிசனங்களுக்கு பிற்பாடுதான்.
5 மூன்றாவது தரிசனத்தில், நாங்கள் ஓர் இளங்கலைபட்ட அளவிலான தேர்வு நடக்கும் அறையில் உட்கார்ந்து இருந்தோம், தேர்வு நடத்துபவர் பரிட்சைத் தாள்களை வினியோகம் செய்துகொண்டிருந்தார். நான், "ஆனால் நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன்? நான் ஒரு சிறந்த பள்ளிப் படிப்பைக்கூட உடையவனாக இல்லையே, எதை நான் எழுதப்போகிறேன்?" என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். சற்று பின்னர், என்னிடம், “இதே விதமாகத்தான் மரியாள் எந்தவொரு மனிதனையும் அறியாமல் அதிசயமான விதத்தில் கர்ப்பம் தரித்தாள், இதே விதமாகத்தான் சிருஷ்டிப்பின் போது நிகழ்ந்தவைகளின் விபரங்களை மோசே பெற்றுக் கொண்டான், நீயும் நித்திய ஜீவ வார்த்தைகளை இந்த ஏப்ரல் 24, 1993 ல் பெற்றுக் கொண்டாய், இது தேவனால் நியமிக்கப்பட்டதாக இருக்கிறது. குறிக்கப்பட்ட நேரத்தில் நீ புரிந்து கொண்டு, முறைமையின்படி நீ கற்றரியாததை நீ போதிப்பாய், அதை விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு" ஆமென்!
6 இப்பொழுது நான் ஆதியாகமம் 11 வாசிக்க போகிறேன். பாபேல் கோபுரத்திலே, அந்த மனிதர்கள் இவ்விதமாக :"கடவுளின் கிருபையாலும், நம்முடைய அறிஞர்கள் மற்றும் பொறியியலாளர்களின் உதவியுடன்,வானத்தை தொடக்கூடிய ஒரு கோபுரத்தை நாம் கட்டுவோம், அத்தகைய காரியங்களை நாம் செய்வோம்... நாம் ஏற்கனவே தேவ மனிதர்களின் ஆதரவை பெற்று இருக்கிறோம், எல்லா மத ஸ்தாபனங்களும் ஒன்றினைந்து இருக்கின்றன. மிக முக்கியமான இறையியலாளர்களின் ஆசீர்வாதத்துடன் மேயர் வருகைத் தந்து அந்த கோபுரத்திற்க்கு அடிகல் நடுவார்! தேவ தூதர்கள் இந்த கோபுரத்தின் கட்டுமானத்தில் பங்கு பெறுவார்கள் என்று சில தீர்க்கதரிசிகள் வெளிப்பாடு கொண்டிருக்கிறார்கள்... ". நீங்கள் பார்க்கிறீர்களா ? அந்த நேரத்தில் தேவன் அவர்களுடைய மொழியை குழப்பிவிட்டார் என்று வேதாகமம் கூறுகிறது.
7 என்ன நடந்தது? கோபுரத்தின் சாந்து பூசப்பட்ட சுவற்றின் மீது கையால் ஒரு வேத வசனம் எழுதப்பட்டது. ஒவ்வொருவரும் அவனவனுக்கு அறியாத ஒரு மொழியை கேட்டனர். நீங்கள் பார்க்கிறீர்களா ?
8 வேதாகமத்தின் நடுவிலே, அதே இடத்திலே, நிம்ரோத்தின் பெரிய பேரனான பெல்ஷாத்சார் என்பவன், ஒரு விருந்தை நடத்தினான். அங்கு அனைத்து சக்திவாய்ந்த பாபிலோனியரபீக்களும் முன் வரிசையில் அமர்ந்து இருந்தனர். அவனுடைய தந்தை நேபுகாத்நேச்சார் செய்திருந்த தங்கச்சிலைக்கு ஒப்பான ஒரு பெரிய காரியத்தை அவன் திட்டமிட்டிருந்தான். பாபிலோனுக்கென்று பெல்ஷாத்சார் கொண்டிருந்த திட்டம் அதன் ஆரம்பத்தில் இருந்ததை விட மிக பெரிதாக இருந்தது. நீங்கள் பார்க்கிறீர்களா ?
9 மேலும் பாபேலின் இருப்பிடம் பாபிலோனைப் போலவே இருந்தது. மேலும் பெல்ஷாத்சாரின் தகப்பன் நேபுகாத்நேச்சாரின் அரண்மனை இருந்த இடத்திலே கோபுரம் இருந்தது; இப்போது, அவர்கள் ராஜ்யப்பிரதிநிதி அனைவருடனும் சந்தித்த பொழுது, அப்போஸ்தல போப்பாண்டவரின் தலமையில் நடந்தது. அப்பொழுது பெல்ஷாத்சார் பரிசுத்த பொருட்களை கொண்டு வந்து தேவ நிந்தனையாக்கினான், ஒரு கை சாந்து பூசப்பட்ட சுவற்றின் மீது எழுதினது. நீங்கள் பார்க்கிறீர்களா ? அந்த நேரத்தில், அறியாத மொழி குறுக்கிட்டது.
10 மேலும் காலத்தின் முடிவிலே, நிம்ரோத்தின் கொள்ளுப்பேரன் அதாவது பாபிலோனிய கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்கள், சுவிசேஷகர்கள், மற்றும் பிரன்ஹாமிஸ்டுகள் களிகூர்ந்து, எல்லாவற்றையும் தேவ நிந்தனைக்குள்ளாக்கினார்கள். மேலும் பாபிலோனிய அமெரிக்கா இவ்விதமாக : "நாங்கள் இப்போது நிலவு மற்றும் பிறகிரகங்களை பிராணவாயுமயமாக்கப் போகிறோம்... நாங்கள் சந்திரனை மனைகளாகப் பிரித்து அங்கு வீடுகளைகட்டிப் போகப்போகிறோம்... "என்று கூறினார்கள் அதற்கு பிரன்ஹாமிஸ்டுகள்: " இப்போது நாங்கள் மேகத் தூண் (pillar of cloud) எடுத்துக் கொண்டு அதின் உள்ளே ஹோஃப்மேனினால் வரையப்பட்ட உருவப்படத்தை வைக்கப் போகிறோம், நாங்கள் இதை அல்லது அதைச் செய்யப் போகிறோம் ... ". நீங்கள் பார்க்கிறீர்களா ? அவர்களுடைய தகப்பனாகிய பெல்ஷாத்சாரைப் போல பரிசுத்தமான காரியங்களை தேவ நிந்தனைக்குள்ளாக ஆக்கினார்கள். பரிசுத்தகாரியங்களுக்காக அவர்கள் ஒரு அக்கரையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அந்த துல்லியமான நேரத்தில், ஒரு கை சாந்து பூசப்பட்ட வானத்தில் எழுதியது மற்றும் ஒரு வார்த்தையானது அறியாத மொழியில் வழங்கப்பட்டது. [ஆசிரியர்குறிப்பு:சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
11 ...நல்லது! இப்பொழுது 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதியில் உள்ள இந்த மகிமையான தரிசனத்திற்கு திரும்பிவர விரும்புகிறேன். இது உண்மையில் ஒரு பரவசம், ஒரு உயர் வடிவ வெளிப்பாடு. தரிசனத்திலே நான் மட்டுமல்ல ஆனால் என் சரீரமும் பங்கேற்றது மேலும் நான் தரிசனம் முடிவடைவதற்கு முன் அழுதுக் கொண்டிருந்தேன்.. ஒவ்வொரு அதிகாரப்பூர்வமான ஊழியமும் அதை நிராகரிக்கிறவர்களுக்கான கண்டனம் மற்றும் தற்போது இது ஒரு காரியமாக இருக்கிறது. [ஆசிரியர்குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
12 மேலும் பிரன்ஹாமிஸ்டுகள் கத்தோலிக்கர்களை போன்று மோசமாக இருப்பதை நிரூபித்து முடித்து விட்டனர் மற்றும் அவர்களுக்கு ஆவியோ அல்லது வார்த்தையோ ஒன்றும் கிடையாது. அவர்கள் வேறு விதமாக காட்டினால் ஒழிய, ஜோசப்கோல்மேன், ஏவால்ட்ஃபிராங்க், அலெக்சிஸ்பாரிலியர் மற்றும் எல்லாருமே, உலகத்திற்க்கு அஸ்திபாரம் அமைப்பதற்க்கு முன்பு எவருடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியின் ஜீவபுத்தகத்தில் எழுதப்படாமல் இருந்ததோ அவர்களை வஞ்சிக்கும் படியாக சாத்தானால் எழுப்பப்பட்டவர்கள். [ஆசிரியர்குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்]. இதை அணுகவந்த அனைவரும் நடுராத்திரி சத்தத்தை, வேதாகமம் மற்றும் சாயங்கால வேலையின் செய்தி தெளிவாக உறுதிப்படுத்துகின்றது என்பதை தெளிவாகக் கண்டனர். அநேக பிரசுரங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன. 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ம் தேதியின் தரிசனத்தில் கலப்பின ஸ்திரீயே இன்னுமாக வில்லியம் பிரன்ஹாமின் செய்தியில் நம்பிக்கை வைத்து இளைப்பாறும் அனைவரையும் பற்றி குறிப்பிடுகிறது என்று நான் உங்களிடம் கூறியிருக்கின்றேன்.
13 1993, ஏப்ரல் 24 ன் தரிசனமானது, வெளிப்படுத்துதல் 8:1 ன் ஏழாவது முத்திரையில் அடங்கியுள்ளது. மேலும் சேவல் கூவும் வேளையில் உள்ள எடுத்துக் கொள்ளப்படுதலே அதினுடைய முடிவு. நடுராத்திரி சத்தமே முன்றாம் இழுப்பை கொண்டுவரும், அதாவது இது மூன்றாவது ஈர்ப்பு என்று சொல்ல வேண்டும். இழுப்பு என்றால் ஈர்ப்பு என்று பொருள். ஒரு அழைப்பு இருந்தது, அது ஒரு சத்தம், கன்னிகைகள் விழித்து எழுந்து வந்தார்கள். ஒரு ஈர்ப்பை பயிற்ச்சிவிக்க ஒரு செய்தி இருக்க வேண்டும்.
14 ஏழாவது முத்திரை என்ற புத்தகத்தில் நீங்கள் கவனிப்பீர்களானால், சபீனோகனியன் பகுதியில், ஏழாம் தூதனின் கையில் ஒரு பட்டயம் இறங்கியது, அவர் தாமே ஏப்ரல் 24, 1993 தரிசனத்தில் இருந்தார், உடன்படிக்கையின் தூதன் இந்த பட்டயத்தை பிடித்துக் கொண்டு , தண்ணீரின் மேல் நின்று கொண்டிருந்தார். நிலத்தின் மேல் இல்லை ஆனால் எப்பொழுதும் தண்ணீர்களின் மீது நின்று இருந்தார். ஆமென்! அங்கு தேவ ஆட்டுக்குட்டி இருந்தது, இருப்பினும் ஆட்டுக்குட்டியானது, அது தான் பலி. நீங்கள் அதை புரிந்துக் கொண்டீர்களா? மிகவும் நல்லது!
15 இப்போது அந்த அறியாத முடியாத மொழியில் என்னிடத்தில் கொடுக்கப்பட்ட செய்தி என்ன? ஏழாம் முத்திரையில் பக்கம் 31:"... வில்லியம் பிரன்ஹாம் என்ன சொன்னார் என்பதைப் பார்ப்போம்: "... சபினோகனியனில் அவர் என்னிடம், "இது தான் மூன்றாம் இழுப்பு." என்றார் அதனுடன் மூன்று மகத்தான காரியங்கள் சம்பந்தப்பட்டுள்ளன; அவைகளில் ஒன்று இன்று எனக்கு.. அல்லது நேற்று வெளிப்பட்டது, மற்றென்று இன்றைக்கு வெளிப்படுத்தப்பட்டது, முன்றாவது என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை ஏனெனில் அது அறியாத மொழியில் எழுதப்பட்டு இருந்தது ஆனால் நான் நின்ற வண்ணம் அங்கேயே நேராக அதையே பார்த்துக் கொண்டிருந்த போது, இது தான் வருகிறதான முன்றாம் இழுப்பை நான் கண்டேன். "
16 நன்றாக கவனியுங்கள் : ஒரு அறியாத மொழி மேலும் வில்லியம் பிரன்ஹாம் அவரது இறப்பு வரை இதை ஒருபோதும் வியாக்கியானம் செய்யவில்லை. மூன்றாவது இழுப்பானது இந்த அறியாத மொழியின் பின்னால் இருக்கின்றது. ஒரு தீர்க்கதரிசியை பின் பற்றி, வார்த்தையை அறிந்தவர்கள் என கூறும் ஜனங்கள், ஒரு எளிமையான மற்றும் தெளிவான காரியங்களை எப்படி தவற விட்டார்கள் ? நடுராத்திரி சத்தமானது சாயங்கால செய்திக்கு மற்றொரு நோக்கம் மட்டுமே என்றாலும், அது எலியாவின் ஒரே காலம் மற்றும் ஆவியாக இருக்கின்றது. [ஆசிரியர்குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
17 தேவன் வில்லியம் பிரன்ஹாமிடம் அவருக்கு அறியாத மொழியில் ஒரு செய்தியை கொடுத்தார். மேலும் அவரால் அதை விவரிக்க முடியவில்லை. 1 இராஜாக்கள்19 பார்க்கவும். தேவன் எலியாவிடம் : எலிசா தீர்க்கதரிசியை அபிஷேகம் செய்யும்படி சொன்னார். சிரியா மீது ஆசகேலை ராஜாவாகவும் மற்றும் இஸ்ரவேலின் மேல் யெகூவை ராஜாவாகவும் அபிஷேகம் செய்யச் சொன்னார். எலியா ஆசகேலுக்கும் யெகூவுக்கும் அபிஷேகம் செய்தாரா? மாம்சபிரகாரத்தில் அவர் அதை செய்யவில்லை. ஆனால் ஆவிக்குரியவிதானத்தில் அவர் தேவனுடைய வார்த்தையின்படி செய்தார். தேவன் ஆவியாக இருக்கிறார், அவர் எலியாவின் ஆவியிடம் பேசினார். ஆனால் எந்த சரிரத்தைக் கொண்டு இந்த எலியாவின் ஆவி எலிசா, அசேகல் மற்றும் யெகூவை அபிஷேகம் செய்ய வேண்டும்? அதை தேவன் மட்டுமே அறிந்திருக்கிறார். ஆனால் தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு, தேவ ஆவியானவர் எலியாவின் ஆவியிடம் பேசினார், பூமியின் மேல் நடந்த திஸ்பியனாகிய எலியா என்ற நபரிடம் அல்ல. [ஆசிரியர்குறிப்பு:சபையார்"ஆமென்!" என்கிறார்கள்]. மாம்ச பிரகாரத்தில் திஸ்பியனாகிய எலியா எலிசாவை மட்டுமே அபிஷேகம் செய்தார். இதை தான் பிரன்ஹாமிஸ்டுகள் புரிந்து கொள்வதில்லை! எலியாவின் ஆவியை பின்பற்றுவதற்குப் பதிலாக, அவர்கள் எலியாவின் ஆவி தங்கியிருந்த வில்லியம் பிரன்ஹாமை பின்பற்ற தேர்ந்தெடுத்து அவர்கள் சாயங்கால வேளையில் லூதரன்கள் மற்றும் மெத்தடிஸ்டுகளை போல தங்கிவிட்டனர்.
18 நான் பிரசங்கிக்கிறதை சந்தேகப்படாதிருங்கள்; நான் ஞானமுள்ளவனாகவும், புத்திமானாகவும் சில சத்தியங்களை இட்டுகட்ட தேறினவனாக இருந்திருந்தால் நான் பள்ளியில் புத்திசாலித்தனமாக இருந்திருப்பேன். சில தேவனுடைய பிள்ளைகளுக்கு, அது ஏற்கனவே ஒரு அதிசயம். அதனால் தான், நான் அவர்களை குறித்து பயப்படவே வேண்டாம் என்று கூறுகிறேன், அலெக்சிஸ்பாரில்லியர் அல்லது ஏவால்ட்ஃபிராங்க் ஆகியோர் கத்தோலிக்க பாதிரியைவிட ஆவிக்குரியவர்கள் அல்ல! ஒரு எழுப்புதலானது பிரன்ஹாம் கூடாரத்தில் அல்லது கிரிஃபில்டில் நடைப்பெற்றால் அதைக் குறித்து கவனம் சிதற வேண்டாம் என நான் கூறியிருக்கிறேன். அது வல்லூர்கள் மற்றும் தோட்டிபறவைகளின் பண்டிகையாக இருக்கிறது, அது குறிச்சொல்லும் ஆவி ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் நடுராத்திரியில் இருக்கிறார். [ஆசிரியர்குறிப்பு:சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
19 ஒரு கன்னிகை எழுந்து மற்றவர்களை எழுப்புவாள் என்று வேதாகமம் கூறவில்லை, ஆனால் அது ஒரு சத்தமாக, ஒரு பிரசங்கமாக இருக்கும்! நீங்கள் விரும்பினாலும் சரி, இல்லையென்றாலும் அது வேதாகமம் அதை முன்னறிவித்திருப்பதால் அது அவ்விதமாகவே இருக்கும். மேலும் இதன் அடிப்படையில் தான் நம்முடைய விசுவாசம் இளைப்பாரிக் கொண்டிருக்கிறது! ஆமென்! இன்று, இந்த கழுகுகள், ஜீவிக்கின்ற பரிசுத்தவான்களே நடுராத்திரியின் கட்டத்தில் இருக்கிறார்கள், நித்திரையில் இருக்கும் பரிசுத்தவான்களே நடுராத்திரியின் கட்டத்தில் இருக்கிறார்கள், பவுல் நடுராத்திரியின் கட்டத்தில் இருக்கிறார், மார்ட்டின் லூதர் நடுராத்திரியின் கட்டத்தில் இருக்கிறார், வில்லியம் பிரன்ஹாம் நடுராத்திரியின் கட்டத்தில் இருக்கிறார், ஜான்வெஸ்லி நடுராத்திரியின் கட்டத்தில் இருக்கிறார்... அனைத்து பரிசுத்தவான்களும் நடுராத்திரியின் கட்டத்தில் இருக்கிறார்கள், இப்போது அந்த அறியாத மொழி சபினோகனியன் பகுதியில் என்ன கூறினதென்று அறியுங்கள். ஆனால் பிரன்ஹாமிஸ்டுகள், லூத்தரன்கள், மெத்தடிஸ்டுகள் அதை அறியாமல் இருக்கிறார்கள்! ஆமென்!
20 நீங்கள் கவனித்து பார்பீர்களானால், இது குறுகியதாக இருந்தாலும், இந்த நடுராத்திரி செய்தியானது சயங்கால நேரத்தைவிட அதிக மானதாக்குதலின் வல்லமையை கொண்டுள்ளது. அது வந்த பொழுது வரவேற்ப்பறையில், அந்த வல்லமை எனக்குள்ளாக சென்று, நான் மரித்தவனை போல் ஆனேன், என் உடல் சமுத்திரத்தின் மணலில் இருக்கையில் என் ஆத்துமா தண்ணீரில் நிற்க சென்றது. இந்த சிருஷ்டிக்கும் வார்த்தை அது மகிமையுள்ள தேவனுடைய குமாரர்களை பிரத்தியட்சப்படுத்தும்.
21 அதே புத்தகத்தில்31-ம் பக்கத்தில், வில்லியம் பிரன்ஹாம் இவ்விதமாக, "நான் பார்த்த போது ஒரு மூலையிலே இங்கு ஒரு பெட்டியைப்போல ஒரு இடம் இருந்தது. பிறகு, நீங்கள் புகைப்படத்திலே காணும் அந்த ஒளியானது எனக்கு மேலே காணப்பட்ட ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தது". அது என்ன? கூடாரஊழியம்.நீங்கள் பார்க்கிறீர்களா ? 1993 ஆம் ஆண்டின் தரிசனத்தில், நான் இந்த சிறிய இடத்தைப்கண்டேன், வில்லியம் பிரன்ஹாம் அதைப்பற்றிப் கச்சிதமாக கூறுகையில், நீங்கள் கவனித்தீர்களானால், வில்லியம் பிரன்ஹாம் மற்றும் இந்த இடத்திற்கு இடையில், ஒரு தேவாலயம் போன்ற ஒரு இடம் இருக்கிறது, மேலும் அந்த விதமாக தான் நடுராத்திரி சத்தத்திற்க்கு முன் பிரன்ஹாமிஸ்டுகள் மாறுவார்கள்.
22 மேலும் இதை நான் பரத்திலிருந்து பெற்றுக் கொண்டேன். இந்த தவறிழைக்க முடியாத இந்த வெளிப்பாடானது நான் இந்த நடுராத்திரி சத்தத்தை பிரசங்கிக்க தொடங்கினவுடன் பரலோகத்தில் வாடிகனில் உள்ள வல்லமையானது ஜெபர்சன்வில்லிற்க்கு செல்லும் மற்றும் தேவனுக்கு முன்பாக, பிரன்ஹாம் கூடாரம் ரோம்நகரில் புனிதபீட்டர் தேவாலயம் போல இருக்கும். [ஆசிரியர்குறிப்பு:சபையார்"ஆமென்!" என்கிறார்கள்]. இது "கர்த்தர் உரைக்கிறதாவது!". நியாயத்தீர்ப்பு நாளில் அதற்கு பதில் சொல்லுவேன் என்று அறிந்ததினால் நான் உங்களிடம் பொய் கூற முடியாது. இது "கர்த்தர் உரைக்கிறதாவது!" எந்த காரணத்திற்காக நான் ஏன் பொய் சொல்லப்போகிறேன்?...
23 இந்த இடம் 9 சதுரமீட்டர் அளவைக்கொண்டது மேலும் இருபதுக்கும் அதிகமான ஜனக் கூட்டத்தை கொண்டிருக்கக்கூடாது. இந்த பக்கத்தில் தான் ஒளியானது சாயங்கால வேளையில் மீண்டுமாக வேறு ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறது.. இது லோகாட்ஜரோவின் இந்த சிறிய அறை. ஏப்ரல் 24, 1993 தரிசனத்தில், சமுத்திரம் எனக்கு முன்பாக இருந்த போது, எனக்கு பின்பாக தான் இந்த சிறிய நீலவண்ணம் கொண்ட இடம் சாலையின் ஒரத்தில் இருந்தது. உள்ளே நான் சத்தங்களை கேட்டேன் ஆனால் நான் யாரையும் பார்க்கவில்லை மற்றும் நான் முன்கதவையும் பார்க்கவில்லை. நீங்கள் பார்க்கிற விதமாக சிறிது உள்ளே தள்ளப்பட்டு இருக்கும். 1997 ல் முதல் தடவையாக நான் பார்த்தபோது, அது ஒரு உணவகமாக இருந்தது, பின்னர் ஒரு கிறிஸ்துவ புத்தக அங்காடியாக இருந்தது மற்றும் 1998 இல் எந்த ஒரு முன்பணம் அல்லது பாதுகாப்பு தொகை செலுத்தாமல் நான் அற்புத விதமாக அதை பெற்றுக் கொண்டேன். ஆமென்!
24 சபீனோ கனியானின் முக்கிய கூறுகள் எல்லாம் ஏப்ரல்24, 1993 தரிசனத்தில் பிரதிபலிக்கின்றன, அது எலியாவின் ஒரே ஆவியும் அதேகாலம் என்று ஒரு சிறு பிள்ளையும்கூட புரிந்துகொள்ள முடியும். [ஆசிரியர்குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
25 சாயங்கால வேலை கடந்துவிட்டது, இனி ஒரு போதும் ஜீவனைதர முடியாத ஒன்றை குறித்து பிரன்ஹாமிஸ்டுகள் சென்று பிரசங்கிக்க போகிறதை நாம் பார்க்க தொடங்குகிறோம் மேலும் அவர்கள் அநேகரை மனமாற்றமடைய செய்து கொண்டிருக்கிறார்கள். பிசாசு அவர்களுக்கு எதிராக ஒன்றும் கொண்டிருக்கவில்லை. முதிர்ச்சியாகுதல் முதிர்ச்சி இல்லை என்று அவர்கள் நன்கு அறிவார்கள். மேலும் இந்த திரும்ப அளிக்கப்படுதலானது மிட்டளிக்கப்படுதல் அல்ல அதாவது முடிவு அல்ல.[ஆசிரியர்குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
26 பிரன்ஹாமிஸ்டுகள், முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள், பாப்டிஸ்டுகள், மெத்தடிஸ்டுகள்… ஊழியங்கள் மற்றும் பணிதளங்கள் உள்ளவர்கள் மாந்திரீக ஒழுங்குகளை பின் பற்றுபவர்கள் கொண்டிருக்கும் அதே தகப்பனை கொண்டிருக்கிறார்கள். மற்றும் அதே நோக்கத்தை நிறைவேற்ற உள்ளனர். ஒருவரையொருவர் தாக்கும் போது, அது தேவனுடைய பிள்ளைகளை திசைதிருப்பசாத்தானின் ஒரு தந்திரம். அவர்கள் ஒன்று மற்றும் அதே நாணயத்தின் இருபக்கங்களைப் போல இருக்கிறார்கள். ஜூலை 2002 முதல் நான் நடுராத்திரிசத்தத்தை பிரசங்கிக்க ஆரம்பித்த போது, சாத்தானின் அந்த சூழ்ச்சியை எதிர்த்து சத்தமிட நான் தவறவில்லை.
27 ஒரு நாளிலே இந்த தவளைகள், அதினுடைய பிதாக்கள் வில்லியம் பிரன்ஹாமை எதிர்த்தவர்கள் என்னிடத்தில் வந்து: "சகோதரன் பிலிப்பு,"எடுத்துக் கொள்ளப்படுதல்" என்ற இந்த புத்தகத்தை பாருங்கள், சகோதரர் பிரன்ஹாம் நடுராத்திரி சத்தம் அவரது செய்தி என கூறுகிறார்! என்றான்" அதற்கு நான் சத்தமாக, ஆமென்! என்பேன் இது ஒரு தீர்க்கதரிசி பேசியது. ஏசாயா சொன்னபோது, "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்"; அதை அவர் நிகழ்காலத்தில் கூறினார், ஆனால் அது நிறைவேற எட்நூறு ஆண்டுகள் எடுத்தது. மேலும் அது விக்கிரகாராதனை அல்லது மோசமான விசுவாசமாக இல்லாதிருந்தால், சாயங்கால வேலையானது நடுராத்திரியில் இல்லை என்று இந்ததவளைகள் தெரிந்து கொள்ளும்.
28 ஏழாம் முத்திரையில் இன்னுமாக, ஒரு சகோதரன் என்னிடத்தில் ஒரு மகிமை வாய்ந்த ஒரு நபரை குறித்து பேசினதை எனக்கு காண்பித்தார். நீங்கள் பார்க்கிறீர்களா ? அது ஒரு நபர் மகிமை வாய்ந்தவராக இருப்பதில்லை, ஆனால் தேவன் அவருக்குக்கொடுக்கும் செய்தி மற்றும் ஊழியமே மகிமை வாய்ந்ததாக இருக்கின்றது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மிகவும் மகிமை வாய்ந்தவர், ஆனால் அவருடைய தோற்றம் மனிதனின் கவனத்தை ஈர்ப்பதற்க்கு ஒன்றும் இல்லாமல் இருந்தது. வேதனை நிறைந்த வராகவும் எல்லோராலும் அசட்டை பண்ணப்பட்டவராகவும் இருந்தார் என வேதாகமம் கூறுகிறது.
29 நல்லது! இப்போது கடினமான காரியங்களை நான் சொல்ல விரும்புகிறேன், அதினாலே எரிச்சளடைய வேண்டாம்… மத்தேயு25: 6-ல் முதல் பிரசங்கம் முதற் கொண்டு அதை ஒரு ஓரமாக வைத்துவிட்டேன், இப்பொழுது இது ஒரு வருடத்திற்க்கும் மேல் ஆகி விட்டது, இப்போது அதைப்பற்றிப் பேசுவதற்கான நேரம் வந்தது என நான் விசுவாசிக்கிறேன்…
30 நல்லது! ஒரு சகோதரர் என்னிடம் ஏதோ ஒன்றைக்காண்பித்தார்: ஆவியானது வில்லியம் பிரன்ஹாமிடம் "உன் பேனாவை எடுத்து எழுது" என்றது. மேலும் இது உரைக்கப்பட்ட வார்த்தையே மூல வித்து என்ற புத்தகத்தில்100 வது பக்கத்தில் இங்கே கடைசி பத்தியில் உள்ளது:கடைசி நாட்களில் தீர்க்கதரிசனங்கள் மீண்டும் நிகழுவதாக நான்நம்புகிறேன். முதலாவது முன்னோடி பாலைவனத்திலிருந்து வெளியே வந்து, " இதோ தேவ ஆட்டுக்குட்டி"என்று அழைத்தது போலவே, இரண்டாவது முன்னோடி ஒரு வேளை அதே காரியத்தை ஜனங்களுக்கு முன்பாக,வார்த்தையில் பிறந்த மணவாட்டியிடம் சுட்டிக்காட்டுவார். கிறிஸ்துவின் மணவாளன் இயேசு வானத்திலே தோன்றும் போது சுட்டிக்காட்டப்பட்டு "இதோ தேவ ஆட்டுக்குட்டி" என்று அவருடைய வாயிலிருந்து வரும். இந்த நெருங்கிய நிகழ்ச்சிக்காக தயாராக இருக்க தேவன் நமக்கு உதவி செய்யட்டும். "மேலும் இந்த நிகழ்விலே, இந்த கூட்டி சேர்க்கிறதின் சத்தமானது பிரதான தூதனின் சத்தம் போன்று இருந்தது, மேலும் நீங்கள் ஏப்ரல்24, 1993 தரிசனத்திலே பார்த்தபோது, தேவ ஆட்டுக்குட்டியானவர் தனது மணவாட்டியை அழைக்கும் படியாக வருகிறார். நீங்கள் பார்க்கிறீர்களா ? இதை சாயங்கால செய்தியின் தொடர்பாக ஆவியானவர் கூறவில்லை, ஆனால் நாம் தரிசனத்திலே கண்ட விதமாக நடுராத்திரி சத்தம் தொடர்பாக கூறப்பட்டது. இந்த ஏழாம் தூதன் அதாவது எலியாவின் ஆவியும், ஆட்டுக்குட்டியானவரும் அவருடைய மணவாட்டியை எடுத்துக் கொண்டு போக வருகிறதைக் கண்டோம். நான் ஏற்கனவே ஒரு பிரசங்கத்தில் இதைப்பற்றி பேசியிருக்கிறேன். அது என்னை மகிழ்விக்கிறது. [ஆசிரியர்குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
31 ஏப்ரல் 24, 1993 தரிசனத்தின் ஒவ்வொரு தனிமத்திற்கும் ஆவிக்குரிய அர்த்தம் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? நான் ஏன் தூதனோடும் ஆட்டுக்குட்டியோடும் கொண்டு போகப்பட்டேன்? என் உடல் சமுத்திரத்தின் மணலில் இருக்கும் பொழுது அதிலே திரும்புவதற்க்கு முன்பு ஒரு கனம் நான் ஏன் அவர்களோடு ஒன்றினைந்திருந்தேன்? அது ஏன்?அது அறியாதமொழியின் விளக்கம் பெறுவதற்க்காக இருந்தது. இது தீர்க்கதரிசன வெளிப்பாட்டின் உச்சத்தின் எல்லை(Paroxysm) ஒருசின்னமாக உள்ளது.
32 ஆதியிலே தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார் என்று கூறப்பட்டு இருக்கிறது, மேலும் காலத்தின் முடிவிலே ஒரு மனிதன் ஜலத்தின் மேல் ஆட்டுக்குட்டியையும் ஆவியையும் இனைப்பான். அந்த தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களே அதை புரிந்துக் கொள்வார்கள். [ஆசிரியர்குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்]. ஆதியிலே , மோசே அதை அனுபவித்து, ஆதியாகமத்தை வெளிப்படுத்தினார். நீங்கள் பார்க்கிறீர்களா ? மோசே தேவத்துவத்திற்குள் நுழைந்தார். மோசே நித்தியத்திற்குள் நுழைந்து,ஆதியாகமத்தோடு வெளியே வந்தார். மேலும் ஏப்ரல்24, 1993 அன்று ஜனங்கள் சந்தித்ததை போன்று அவரை சந்திக்கவந்தார்கள். நீங்கள் பார்க்கிறீர்களா ?
33 காலங்களின் முடிவிலே,ஒரு நாள்,வில்லியம் பிரன்ஹாம் அரிசோனாவில் சகோதரர்கள் ஃப்ரெட்சோத்மன் மற்றும் ஜீன்நார்மனோடு வேட்டையாடுகையில், ஒரு தரிசனத்திலே அவரது ஆத்துமா ஒரு பிரமீடுவடிவத்தில் தேவதூதர்கள் கூட்டத்தில் பிடிக்கப்பட்டது, அங்கு தானேஅவர் ஏழு முத்திரைகள் வெளிப்பாட்டை பெற்றார். அது ஏழாவது முத்திரையின் புத்தகத்தில் பதிவாகியுள்ளது அதை பிரன்ஹாமிஸ்டுகள் வாசிப்பதில்லை.நீங்கள் பார்க்கிறீர்களா ? மேலும் அதே அனுபவம் அறியாத மொழியின் வெளிப்பாட்டிற்காக ஏப்ரல்24, 1993 இந்த தரிசனத்தில் வந்துள்ளது. ஆனால் இந்த முறை, ஏழுதேவ தூதர்களின் கூடுகைக்கு கூடுதலாக நாம் ஆட்டுக்குட்டியின் பிரசன்னத்தை எண்ணுவது அவசியம். இது2 கொரிந்தியர்12: 1 ல் அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுவதிலிருந்து வேறுபட்டது.. [ஆசிரியர்குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்]. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஓ, அது மகிமையானது. நான் அந்த அழகான பழையபாடலை பாட விரும்புகிறேன்: "நான் ஒரு மகத்தான செய்தி பற்றி கேள்விப்பட்டேன்". ஆமென்!
34 இப்போது இதை கவனியுங்கள்! இந்த அறியாத மொழியின் வியாக்கியானத்தின் ஊழியமும் மற்றும் மத்தேயு 25: 6 ன் ஊழியமும் இந்த மகிமை வாய்ந்த மனிதரை ஏன் வெளிப்படுத்துகிறது? நீங்கள் பார்க்கிறீர்களா ? ஆபிரகாம் இஸ்மவேலுக்கு தற்காலிக பொருட்களை கொடுத்தார், அதே போன்று இந்த ஆயிரக்கணக்கான தீர்க்கதரிசிகளுக்கும், போதகர்களுக்கும், சுவிசேஷகர்களுக்கும், அப்போஸ்தலர்களுக்கும் மற்றும் முழு உலகின் போதகர்களுக்கும், சில அற்புதங்கள், சில சுகமளித்தல், சிலவகையான விடுதலைகளை அளிக்க மட்டுமே வழங்கப்பட்டது, இதை அவர்களின் சுவரொட்டிகளிலிருந்து தெளிவாக காண்கின்றோம் : மகத்தான சுகப்படுத்துதல் பிரச்சாரம்! மகத்தான நன்றி தெரிவிக்கும் முழு இரவு ஜெபம்! மகத்தான திரும்ப அளிக்கப்படுவதற்கான முழு இரவு ஜெபம்! மகத்தான செழிப்பிற்கான முழு இரவு ஜெபம்! மகத்தான ஜெயத்திற்கான முழு இரவு ஜெபம்! மகத்தான ஆசீர்வாதத்திற்கான முழு இரவு ஜெபம்,... ஆனால் இந்த மகிமையான நபரிடம், அந்த தூதனாலே கூறப்பட்டதாவது : "அதை விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு".ஆமென்! மேலும் இந்த ஒரு மனுஷனை மாத்திரமே தனக்கு உண்டான ராஜ்யத்தின் திறவுகோள்களையும் நித்திய ஜீவனுடைய வார்த்தைகளையும் நம்முடைய காலத்திற்கென்று தேவன் ஒப்படைத்திருக்கிறார், அதே விதமாகவே வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு தீர்க்கதரிசியும் அவரவர் காலத்தில் உள்ள காரியமாக இருந்தது, இவர் அந்த நபராக இருக்க மாட்டாரா? ஆசிரியர்குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
35 இந்த அற்புதங்களையும் ஆசீர்வாதங்களையும் மற்றவர்களையும் பின் தொடருகிற அனைவரும் ஒரே நாளிலே மரித்துப்போவார்கள், ஆனால் ஒரே ஒரு காரியம் மாத்திரம்காலா காலத்திற்க்கும் இருக்கும் அது : நித்திய ஜீவனுடைய வார்த்தைகள்! மேலும் முழு உலகமும் அறிந்துக் கொள்ளட்டும் அதாவது இந்த பருவத்திலே, நம்முடைய இரட்சிப்புக்காக பெதஸ்தாவின் குலத்தைகலக்கின தூதனை மத்தேயு 25: 6-ல் காண்கிறோம்.
36 மத்தேயு 25: 6 இந்த ஊழியம். மனவாளனை மணவாட்டிக்கு அளிக்கின்றது. ஏனெனில் மனவாளனும் மனவாட்டியும் ஒருவரையொருவர் அறியாதிருக்கிறார்கள், ஆனால் அவர், அவர்களை அறிந்திருக்கிறார். ஆமென்! நீங்கள் பார்க்கிறீர்களா ? ஈசாக்கு மற்றும் ரெபேக்காள் ஒருவருக்கொருவர் அறியாமல் இருந்தனர் ஆனால் எலியேசர், அவர்களை அறிந்திருந்தார்! அவர் தானே, "மணவாட்டியை நோக்கி, இதோ உன்மணவாளன்! மற்றும், மணவாளனை நோக்கி, இதோ உன் மணவாட்டி என்பார்!. [ஆசிரியர்குறிப்பு:சபையார்"ஆமென்!" என்கிறார்கள்]. இப்போது நாம் அதை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிவருகிறோம்.
37 கடைசி நாட்களில் தோன்றுகிற அவர் சகல ஊழியர்களை காட்டிலும் மூத்தவரும், மிகப்பெரியவருமானவராக இருப்பாரா ? எனக்கு தெரியாது! கிறிஸ்துவிற்கு நம்மைக் நிச்சயம் செய்த பவுலைவிட அவர் மகத்தானவராக இருப்பாரா? எனக்கு தெரியாது! இந்த எதிர்காலமணவாட்டியை இம்மட்டுமாக பராமரித்த ஏழு தூதர்களை காட்டிலும் அவர் மேலானவரா? எனக்குதெரியாது! அவர் ஆபிரகாமின் மிகப் பெரிய மற்றும் முதிர்ந்த ஊழியரான எலியேசரா ? எனக்கு தெரியாது! ஒரு மணி நேரத்திற்கு அவர் மேயரின் இடத்தை எடுத்துக்கொள்கிறார்,மேயர் தேசத்தின் சின்னத்தை அவருடைய அறையில் அணிந்துவருவது உங்களுக்கு நன்றாக தெரியும். அதே வேளையில் குடியரசுக் கட்சியின் தலைவர் மேயரின் முன் தனது மணவாட்டியை எடுத்துக்கொள்ள வரும்பொழுது ஒரு சாதாரண குடிமகனாக ஒரு மணி நேரத்திற்கு இருப்பார்.தேசத்தின் சின்னத்தை குடியரசுத்தலைவர் அல்ல, ஆனால் மேயரே அணிந்திருப்பார்! [ஆசிரியர்குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
38 ஆதியிலே யோவான்ஸ்நானகன் அரோணின் கச்சையை தன்னுடைய அரையில் அனிந்திருந்தார். அது மிக உயர்ந்த ஆசாரியத்து வத்தின் அடையாளம்,தேவன் அடிக்கப்படும் படியான ஆட்டுக்குட்டியின் ஸ்தானத்தை எடுத்துக்கொண்டார்! காலத்தின் முடிவிலே,அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி மற்றும் முழுபரலோகமும் இறங்கினது... அங்கு ஏப்ரல்24, 1993 இல், இருபத்து நான்கு மூப்பர்கள் அங்கு இருந்தனர், அங்கு நான்கு கேருபீன்கள் இருந்தன, தானியேல் அங்கே இருந்தார், எசேக்கியேல், யோவான்,மோசே,தாவீது,ஆபிரகாம்,ஆதாம்,நோவா...எல்லோரும் அங்கே இருந்தார்கள். யார்அங்கு இல்லை? எனக்கு தெரியாது! அங்கே எந்த தூதன் இல்லாமல் இருந்தார்?அங்கே எந்த கேரூபின் இல்லாமல் இருந்தது ? அங்கே எந்த பிரதான தூதன்இல்லாமல் இருந்தார்? எனக்கு தெரியாது! முழு பரலோகமும் கிழே இறங்கினவுடன் பரலோகத்தில் ஏறக்குறைய அரை மணிநேரம் அமைதலாக இருந்ததையும், வெளிப்பாட்டின் 5 ஆம் அதிகாரம் பூமியின் மேல் முத்திரையிடப்பட்டதையும்,மேயர்,திருமணத்தின் நுழைவுக்கான ரிப்பன்களை வெட்டுவதற்கு மேயர் பூமியில் இருந்தார். [ஆசிரியர்குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
39 பரலோகத்தில், மிக மகத்தானபாத்திரம், தேவன் தாமே' புத்தகத்தை எடுத்து ஏற்கனவே மத்தேயு 25: 6 ன் ஊழியத்தின் வல்லமையில் உள்ள அந்த மகத்தானவரிடம் கொடுத்தார்! [ஆசிரியர்குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்]... வெளிப்படுத்தல் 5 ல், பரலோகத்தில் சத்தமானது ஒலிக்கும்போது, "புத்தகத்தை திறக்க மற்றும் அதன் முத்திரைகள் உடைக்க தகுதியுடையவர் யார்? நீங்கள் பார்க்கிறீர்களா ? இது பூமியின் மீது ஏசாயா 6 மீண்டுமாக நிறைவேறுகிறதாக இருக்கின்றது. அவர், ஏசாயாவோ, அல்லது அவர் வாழ்ந்த நாட்களில் உள்ள ஜனக் கூட்டத்தினர் எவரும் அதற்கு பாத்திரன் அல்ல. மேலும், "வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது." என்று வேதாகமம் கூறுகிறது. நீங்கள் பார்க்கிறீர்களா ?காபிரியேல் மற்றும் தேவதூதர்கள், அவர்கள் பரலோகத்தில் தகுதி பெற்றிருந்தாலும் கூட, அந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு, முத்திரைகளை உடைக்க முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் இனத்தான் மீட்பைபெற்றவர்கள் அல்ல.
40 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று, அந்த சத்தமானது பூமியின் மேல், ஆட்டுக்குட்டியின் வலப்பக்கத்தின் இந்த இரகசியத்தை எடுத்து, அறியாத மொழியை வெளிப்படுத்திய பொழுது,நிச்சயமாக தானியேலினால் அது கூடும் ஆனால் அவர் பூமியின் மேல் இல்லை. ஆனால் பூமியில் வாழ்ந்தகொண்டிருந்த, போப் ஆண்டவன்,தகுதியானவர்கள் அல்ல,அவர்களின் கார்டினல்கள் தகுதியானவர்கள் அல்ல. ஆயிரக்கணக்கான தீர்க்கதரிசிகள் தகுதியானவர்கள் அல்ல. பில்லிகிரஹாம், ஏவால்ட்ஃபிராங்க், டாமிஆஸ்போர்ன், பில்லிபால் மற்றும் ஜோசப்பிரன்ஹாம் ஆகியோர்தகுதியானவர்கள் அல்ல. அறியாத மொழியை வெளிப்படுத்தக்கூடிய நபர் ஒன்றை உற்பத்தி செய்ய மேய்ப்பர்களின் பள்ளிகள் தகுதியானது அல்ல. கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட், சுவிசேஷக மற்றும் பிரன்ஹாமிஸ்டு சபைகள், திரும்ப அளிக்கப்பட்ட அல்லது மீட்டளிக்கப்பட்ட சபைகளால் என அழைக்கப்படும் அனைத்து சபைகள் உட்பட, செயல்படும் பரிசுத்த ஆவிகள் தகுதியானவை அல்ல. தேவாலயங்களின் தலைவர்கள் தகுதியற்றவர்கள்... இயேசுவின் பெயரை அவர்கள் வாயில் வைத்திருந்தவர்கள் யாரும் தகுதியானவர்கள் அல்ல. ஆகையால் யார் அதை வெளிப்படுத்த முடியும்? மேலும் யோவான் இன்னுமாக மறுபடியும் அழுகிறான் ஏனெனில் அந்த ஒருவராலும் முடியாது என்றால், பிறகுயாரால் முடியும்? நான் ஏப்ரல்24, 1993 தரிசனத்தில் அழுதேன்! ஆனால் இருபத்தி நான்கு மூப்பர்களில் ஒருவர் அவரை நோக்கி, "அழாதே! யூதாகோத்திரத்தின் சிங்கம் அறியாத மொழியின் இரகசியத்தை வெளிப்படுத்த ஒரு வரை எடுக்க அவர் ஜெயங்கொண்டு இருக்கிறார். [ஆசிரியர்குறிப்பு: சபையார்"ஆமென்!" என்கிறார்கள்].
41 மேலும் இந்த வெளிப்பாட்டிலே மனிதகுலத்தின் மீட்பு உள்ளது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!