en-en
fr-fr
es-es
pt-pt

Kacou 31 (Kc.31) : காலங்களின் முடிவு பற்றி தானியேலின் தரிசனம்
(2004 மே 2 ஞாயிரு அன்று லோகாட்ஜரோ, ஆபிட்ஜான் - ஐவரி காஸ்டில் பிரசங்கிக்கப்பட்டது)
1 நான் பிரசங்கிக்கும்போது, எந்த "ஆமென்" சத்தத்தையும் நான் கேட்கவில்லை, அதை நான் பாராட்டுகிறேன்! தேவன் வெளியரங்கமான காட்சியில் இல்லை. பிரசங்கங்களின் வேளையில், "அது தான் உண்மை! தொடர்ந்து பிரசங்கியுங்கள்! ..." என்று கூறுவதை நம்மால் கேட்ககூடிய இடங்கள், அங்கே இருக்கின்றன. அது எனக்கு பிடிக்காது!
2 இப்போது தானியேல் 12:1 முதல் 13 வரை வாசிப்போம் [ஆசிரியர் குறிப்பு: சகோதரர் பிலிப்பு தானியேல் 12-ஆம் அதிகாரத்தை வாசிக்கிறார்]. சகரியா 6-ம் அதிகாரமும் வெளிப்படுத்துதல் 6-ம் அதிகாரமும் போல தானியேல் 12-ம் அதிகாரமும் வெளிப்படுத்துதல் 12-ம் அதிகாரமும் ஒப்பிடக்கூடியதாக இருக்கிறதை நாம் கவனிக்கவேண்டும். தானியேல் 12 ன் அதே அட்டவணை தான் வெளிப்படுத்துதல் 12 ம் அதிகாரத்தினுடையதும். ஒரே நேரத்தில், அதே மூலக்கூறுகளுடன் இஸ்ரவேலுக்கும் புறஜாதிகளுக்கும் பொருந்துகிறது.
3 வெளிப்படுத்துதல் 12:5 முதல் 6 வரையான வசனங்களும் 13 மற்றும் 14 வசனங்களும் ஒரே காரியத்தையே வெளிப்படையாக கூறுகின்றன. மேலும் தானியேல் 12:4 மற்றும் 8 முதல் 10 வரையுள்ள வசனங்களும் அதே காரியத்தை வெளிப்படையாகச் சொல்கின்றன, ஆனால் அவை உண்மையில் கிழக்கும் மேற்கும் போல பிரிக்கப்பட்டுள்ளன. தானியேலின் 5 முதல் 7 வரையிலான வசனங்களும் 11 முதல் 13 வரையான வசனங்களும் காரியத்தை முழுமையாக்குகிறவையாக உள்ளன. எனவே பழைய ஏற்பாட்டில் தானியேல் 12 புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்துதல் 12 ஆக உள்ளது. தானியேல் 12 இன் 4 ம் வசனம் வெளிப்படுத்துதல் 10 இன் 4 வது வசனமாக இருக்கிறது, அதுவும் ஒன்றுதான். ஆனால் அவை தானியேல்12 இன் 8 முதல் 10 வரையான வசனங்களில் இருந்து வித்தியாசமாக உள்ளன. நான் அதைப் பார்த்ததில்லை, வேறு எங்கும் கேள்விப்பட்டதுமில்லை, அது இயேசு கிறிஸ்துவின் முழு வெளிப்பாடு.
4 வேத சாஸ்திரிகள் கூறுகிறது போல வேதாகமத்தின் மைய்யம் சங்கீதம் 118:8 அல்ல, ஆனால் அது ஏசாயாவின் புத்தகம் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமையில் கூறினது போலவே, நான் இதைக்கூறினேன். எந்தவொரு பொருளும் அதன் மத்தியில் அதினுடைய அம்சக்கூறுகளையும் பண்புகளையும் கொண்டுள்ளது. ஒரு பழத்தின் நடுவில் அதன் முக்கிய பாகம் அல்லது அதன் விதைகள் உள்ளன. மனிதனின் மைய்யம் அவனது சிறுநீரகங்கள் தான். வேதாகமத்தைப் போல், ஏசாயா புத்தகத்தில் 66 "புத்தகங்கள்" உள்ளன, மேலும் அது முழு வேதாகமத்தையும் கொண்டிருக்கிறது. லூக்கா 4-ல் ஏசாயாவின் சுருளை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எடுத்துக் கொண்டபோது, பழைய மற்றும் புதிய ஏற்பாட்டையும், எழுதப்படாததையும்கூட எடுத்துக்கொண்டார்…
5 சரி. இப்போது பிரசங்கத்திற்கு வரலாம். இது தானியேல் 12 இல் வசனம் 4 அதன் பிறகு 8 முதல் 10 வரையான வசனங்களில் மீது கவனம் செலுத்துவதாக இருக்கிறது. ஒரு சகோதரன் அதை வாசிக்கலாம். [ஆசிரியர் குறிப்பு: சகோதரர் லாரன்ட் 4 ஆம் வசனத்தை வாசிக்கிறார்]... சகோதரனே நன்றி!
6 வசனம் 4 இல் நான் நேரத்தை கடத்திக்கொண்டிருக்க மாட்டேன், ஏனென்றால் 40 ஆண்டுகளாக, முத்திரைகள் திறக்கப்பட்டதில் இருந்து அது சரித்திரமாக இருக்கிறது. தானியேல் 12:4 சாயங்கால நேரத்தில் நிகழ்கிறது, தேவன் தானியேலுக்குச் சொல்கிறார்: "புத்தகத்தை மூடி முத்திரையிடு! ...." வெளிப்படுத்துதல் 10:4-ல் யோவானிடம் அவர் "வார்த்தைகளை முத்திரையிடு!" என்றார். நீங்கள் பார்க்கிறீர்களா? தானியேலும் யோவானும் கேள்விப்பட்டு புரிந்துகொண்டார்கள், ஆனால் அனைத்தும் திரும்ப அளிக்கப்படுங்காலம் வரைக்கும் அதை முத்திரையிட வேண்டுமென்று அவர்களுக்கு கூறப்பட்டது.
7 ஆனால் 8 முதல் 10 வரையான வசனங்களில், அந்த விஷயங்கள் முத்திரையிடப்பட்டு தேவனாலேயே மறைக்கப்பட்டன. ஆமென்! 8-ம் வசனத்தை நெருக்கமாகக் பாருங்கள்: "நான் கேட்டேன், ஆனால் எனக்குப் புரியவில்லை ..." உங்களால் காணமுடிகிறதா? தானியேல் அதை கூறுகிறான், அவன் வார்த்தைகள் கேட்டான் ஆனால் அவன் புரிந்துகொள்ளவில்லை ... அது என்ன? அது அறியமுடியாத மொழியில் இருந்தது. [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!!” என்கிறார்கள்]. உனக்கு அது கிடைக்குமா? தேவன் முத்திரையிட்டு மறைத்த எதோ ஒன்றை, தானியேல் ஒரு அறியமுடியாத மொழியில் கேட்டான்.
8 எப்போது? வசனம் 4 க்குப் பிறகு, சாயங்கால நேரத்திற்குப் பிறகு, அதாவது நடுராத்திரியில் என்று சொல்ல வேண்டும். தானியேல் 12:8 முதல் 10 ன் காரியம் வசனம் 4-ல் அடங்கியிருக்கிறது, ஆனால் தேவனால் முத்திரையிடப்பட்டது. வெளிப்படுத்துதல் 10: 4 மற்றும் தானியேல் 12:4 ஆகியவை ஏழு முத்திரைகளின் வெளிப்பாடு ஆகும். வெளிப்படுத்துதல் 10-ல் உள்ள ஏழு இடிகளில் அறியமுடியாத மொழி அடங்கியிருந்தது, ஆனால் அதன் வியாக்கியானமல்ல, அது ஆட்டுக்குட்டியிடம் இருந்தது. தானியேல் 12:8 முதல் 10 வரை நடுராத்திரி சத்தத்தை குறிக்கிறது. ஒரு பலத்த செய்தி மூலம் ஆவிக்குரிய சுத்திகரிப்பும் வெளிப்படையான பாவ அறிக்கை மூலம் சரீரப்பிரகாரமான சுத்திகரிப்பும். தேவனுடைய பிள்ளை ஒருவன், பரிசுத்தமாக்கப்படுதல் பற்றி கருத்தாக இருந்து, அதைக் காணும்போது மட்டுமே மகிழ்ச்சியடைய முடியும்.
9 தானியேல் காலத்திரைக்கு மறுபக்கத்தில் இருந்து யோவானைக் கண்டபோது, தனது மூன்று நண்பர்களோடு, "அல்லேலூயா! தேவன் அதை வெளியரங்கமாக்கப் போகிறார்" என்று கூச்சலிட்டான். தேவன் அவனை நோக்கி: “தானியேலே, வேளை இன்னும் வரவில்லை” என்றார். மேலும் 20 ஆம் நூற்றாண்டில், சபினோ கானியனில், தானியேல் வில்லியம் பிரான்ஹாமை பார்த்த போது, அவன் கூச்சலிட்டான் [ஆசிரியர் குறிப்பு: 7 வது முத்திரை பக்கம்.31 பாறா.192 பார்க்கவும்.] ஆனால் தேவன் மீண்டும் அவனை அமைதியாக்கினார். ஜூனியர் ஜாக்சனின் தரிசனத்தில், வில்லியம் பிரன்ஹாமால் அந்த வெள்ளைக் கல்லை வியாக்கியானிக்க முடியவில்லை, ஆனால் அவர்கள் எல்லாருடைய கண்கள் அதன்மேல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அது அப்படி இருந்தது, ஏனென்றால் கொஞ்சம் பொறுத்து, ஏழாவது முத்திரையில் நாம் பார்த்தது போலவே, எலியாவின் ஆவியானது அதை வியாக்கியானிபார்.
10 பின்னர் நள்ளிரவில், எபிரெயருடைய முதல் மாதத்தின் 24-ம் நாளில், 1993-ல், தானியேலைப் போலவே, தேவன் இத்தக்கேல் என்னும் பெரிய ஆற்றின் பக்கமாக மணலில் ஒரு மனிதனை வைத்தார். தேவன் ஒரு தானியேலின் மகனை அங்கு வைத்தார் [ஆசிரியர் குறிப்பு: சகோதரர் பிலிப்பின் தந்தை பெயர் காக்குவ் தானியேல் ஆகும்] ... நீங்கள் காண்கிறீர்களா? தானியேல் என்பதற்கு "தேவனுக்காக நியாயந்தீர்க்கிறவர்" என்றும், பிலிப்பு என்பதற்கு "சவாரி செய்கிறவன்" என்றும் அர்த்தமாம். இறுதியாக, ஒரு கருப்பின குதிரைவீரன் சவாரி செய்கிறான், ஆசியா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு, ஒரு ஆப்பிரிக்கன் இப்போது சவாரி செய்கிறான்! கருப்பு இனத்திலிருந்தே, அதிலிருக்கும் மிகச் சிறிய இனகுழுவிலிருந்தே, அதிலிருக்கும் தாழ்ந்த குடும்பத்திலிருந்தே, "சவாரி செய்கிறவன்" எழும்புகிறான். அறியமுடியாத மொழியை வெளிப்படுத்த தேவனுக்கு முன்பாக மகத்தான நபர்.
11 மேலும் அங்கே, தானியேலை எழுப்பின தேவன் அவர் தான். எல்லா பரிசுத்தவான்களும்: எசேக்கியேல், வில்லியம் பிரன்ஹாம், அப்போஸ்தலனாகிய யோவான், சகரியா... அதை அடையாளம் கண்டுகொண்டனர்.
12 கோரேஸின் மூன்றாம் வருஷம் ஏப்ரல் 24 ம் தேதி பெரிய நதியான இத்தக்கேலின் பக்கத்தில்தான் தானியேல் 12:8 முதல்10 வரை நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!!” என்று என்கிறார்கள்]. இறுதியில் பிரன்ஹாமிஸ்டுகளின் பெருமைக்கு அப்பாற்பட்டு இன்று, தானியேல் 12:8 முதல் 10 வரை எளிமையான முறையில் நிறைவேறியுள்ளது. தானியேல் 12:4 ல் உள்ள வில்லியம் பிரன்ஹாமின் செய்தி மனிதகுலத்திற்கு அறிவை மட்டுமே கொண்டுவந்தது. ஆனால் அது பரிசுத்த ஆவி என்று அவர்கள் அழைக்கும் வஞ்சக பிசாசுகளிடமிருந்து அவர்களை விடுவிக்கவில்லை.
13 ஜனங்கள் உபதேசத்திலிருந்து உபதேசத்திற்கும், இரகசியத்திலிருந்து இரகசியத்திற்கும், கொள்கையிலிருந்து கொள்கைக்கும், சிற்றேட்டிலிருந்து சிற்றேட்டிற்கும், மேற்கோளிலிருந்து மேற்கோளுக்கும், ... நம்பிக்கையற்றவர்களாக எல்லா விதமான ஏமாற்றங்களுடனும், வெறுப்புடனும் ஓடுகின்றனர். ஏன்? ஏனென்றால், வில்லியம் பிரன்ஹாம் இறந்துவிட்டதானால், உடல் அழுகி மக்கவேண்டும்.
14 அங்கே ஈவால்டு பிராங்கின் சில போக்குகள், ஜோசப் கோல்மனின் சில போக்குகள், பில்லி பால் மற்றும் ஜோசப் பிரன்ஹாமின் சில போக்குகள், ஆப்பிரிக்காவில் சில போக்குகள், இங்கே சில போக்குகள், சில இடிபாடுகள் இன்னும் அதுபோன்றவை உள்ளன. அது என்ன? பிரன்ஹாமுடைய உடலின் அழுகிய நிலைதான். பிரன்ஹாமின் உடல் அழுகி மக்கிப்போகிறது.
15 அப்படியானால், இப்பொழுதிலிருந்து, வில்லியம் பிரன்ஹாமின் செய்தியைக் கைக்கொள்ளுகிறவர்களுள் ஒருவன் பரலோகத்திற்குப் போகிறானானால், தேவன் என்னை நரகத்திற்கு அனுப்புவாராக! ஏனென்றால் அது கூடாதகாரியம். இது அவர்களின் அறிவை அதிகரித்துள்ளது; அவ்வளவு தான். தேவர்கூட்டுச்சபைகளின், பாப்டிஸ்டுகளின், மெத்தடிஸ்டுகளின்... அறிவும் கூட அதிகரித்துள்ளது, அவர்கள் அனைவருமே வில்லியம் பிரன்ஹாமின் பிரசுரங்களை வைத்துள்ளனர்.
16 மேலும் பிரன்ஹாமிஸ்டுகள் ஒரு முக்கியமற்ற காக்குவ் பிலிப்பு மீது கவனம் செலுத்த அங்கே பல விஷயங்கள் உள்ளன. அறிவு சில ஞானவான்களை வரப்போகிற நாளையும் அதன் செய்தியையும் அடையாளம் கண்டுகொண்டுகொள்ளப் பண்ணுகிறது மேலும் இந்த அதே அறிவானது மற்றவர்களை அழிவுக்கென்று பெருமைக்காரர்களாக ஆக்குகிறது. ஆனால் அவர்கள் உங்களுக்கு முன் எப்போதும் நடுங்குவார்கள்! [ஆசிரியர் குறிப்பு: சபை "ஆமென்!” என்று கூறுகிறது]. நீங்கள் உங்களுடைய நாளையும் அதன் செய்தியையும் அடையாளம் கண்டுகொண்டு, ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.
17 இப்போது 8 முதல் 10 வரையான வசனங்களை வாசிப்போமாக ... கள்ள வேதாகமங்கள், பிரசுரங்கள், கோட்பாடுகள், கள்ளப்பரிசுத் ஆவிகளின், கள்ளச் சபைகள் ... போன்றவைகளிலிருந்து அநேகர் “சுத்தீகரிக்கப் படுவார்கள்”, "வெண்மையாக்கப்படுதல்" என்றால் களங்கமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டவர்கள், நீதிமான்களாக்கப் பட்டவர்கள் என்று பொருள்; "புடமிடப்பட்ட" என்றால் பரிபூரணமாக்கப்பட்டது என்று பொருள். ஆனால் பிரன்ஹாமின் இருக்கையில் அல்லது இறையியல் இருக்கையில் உட்கார்ந்துள்ள எவரும் உணரமாட்டார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. அவர்கள் இங்கு வருவதை தேவன்தாமே அனுமதிக்க மாட்டார், ஏனென்றால் நள்ளிரவின் இந்த செய்தி, அதன் குறிக்கோளின் காரணமாக சிதைக்கப்படக்கூடாது என்பதால் தான்.
18 சிலர்: "மத்தேயு 25:6 ன் சத்தம் இதுவே, என்று சொல்லாதீர்கள்", "நான் மட்டுமே பூமியில் ஒரே தீர்க்கதரிசி" என்று சொல்லாதீர்கள்" என்கின்றர் ... ஆனால் நான் சொல்லுவேன்! அவர்கள் வேதாகம அடிப்படையை கொண்டிருக்கவில்லை, ஆகையால் அதை கூற முடியாது. காபிரியேல் வந்தபோது, "நான் தேவனுக்கு முன்பாக நிற்கிற காபிரியேல், பயப்படாதே" என்று சொன்னான். யோவான் ஸ்நானகன்: "ஏசாயா மூலம் பேசப்பட்டவர் இவர் ..." என்கிறான், அது மத்தேயு 3:1 முதல் 3 வரை. ஆனபடியால் நான் அப்படி மீண்டும் சொல்லுவேன், உங்களுக்கு எங்களுடன் எந்த பங்கும் இல்லை பாகமும் இல்லை, அமைதியாக இருங்கள்!
19 நீங்கள் அதை நிந்தனை, நியாயந்தீர்த்தல் அல்லது அகந்தை என்று அழைத்தாலும், உங்களுக்கு பேரிட்டு அழைப்பதின் மூலம் நான் உங்களை ஆக்கினைக்குள்ளாக தீர்ப்பேன், இன்று நீங்கள் செய்வதைத்தான் உங்கள் பிதாக்கள் கர்த்தர் இயேசுவுக்கும் செய்தார்கள். நாம் அதை வாசிக்கலாம்: யோவான் 8:13 மற்றும் 14: "... நீ உன்னைக் குறித்தே சாட்சி கொடுக்கிறாய் ...", லூக்கா 11:45: "நீர் எங்களையும் நிந்திக்கிறீரே". நீங்கள் காண்கிறீர்களா? பிசாசுகள் மரிப்பதில்லை. பிசாசின் பிள்ளைகள், பேலியாளின் குமாரர்கள்! அவர்களை விட்டுவிடுங்கள்! தடுமாற்றமடைய என்னை நான் அனுமதிக்க மாட்டேன்.
20 அவர்கள் துன்மார்க்கர், அவர்கள் உணரமாட்டார்கள் என்று தானியேல் 12-ல் வேதாகமம் சொல்கிறது. இங்கு உட்கார்ந்திருக்கிற சகோதரர்களின் உதாரணத்திற்கு அடுத்ததாக, ஜனங்கள் தங்களது அனைத்து முயற்சிகளையும் முன்னேற்றத்திற்காக எடுத்துக்கொண்டிருக்கையில்; சிலர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் இங்கே இருப்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரம் பயணம் செய்கின்றனர். போர்ட் பொயோட்டின் (Port-Bouët) சகோதர சகோதரிகளைப் பாருங்கள்... அங்கு கடல்கழி இல்லையென்றால், இங்கு வருவதற்கு அநேகர் நடக்கவேண்டியிருக்கும். [ஆசிரியர் குறிப்பு: கடலினின்று மணல் திட்டுக்களால் பிரிக்கப்பட்ட ஏரிபோன்ற உப்புநீர்த் தேக்கம் தான் கடல்கழி; சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. காரியம் இப்படியிருக்க, அதை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, அவர்கள் இணைந்து செயல்படுவதை பற்றி பேசுகின்றனர். இணைந்து செயல்படுவதற்கு பதிலாக நான் மரணத்தை விரும்புகிறேன். நித்திய ஜீவனை அடையும்பொருட்டு தாழ்மையுடன் இங்கே வர அவர்கள் கடமைப்பட்டுள்ளனர்; அது "கர்த்தர் உரைக்கிரதாக இருக்கிறது!". [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்].
21 இன்று, பூமியின் மீதெங்கும், தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்புவாகிய நான், நான் என்ன பிரசங்கிக்கிறேனோ அதற்கு வெளியே எவரும் இரட்சிக்கப்பட முடியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனுக்குலத்திற்கு அனுப்பித் தந்த ஒரே தீர்க்கதரிசி நானே. நோவாவின் காலத்தில் இருந்துபோல, இயேசு கிறிஸ்துவின் அடிமையான, நான், காக்குவ் பிலிப்பு, நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன்; மேலும், நான் என்ன பிரசங்கிக்கிறேனோ அதற்கு வெளியே ஒவரும் இரட்சிக்கப்பட முடியாது. [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கின்றனர்].
22 ஓ, தானியேலின் அற்புதமான புத்தகம், இன்னும் பிற ஏவுதல்கள் மீண்டும் எனக்கு உண்டாகிறது. தானியேல் பழைய ஏற்பாட்டின் வெளிப்படுத்தின விசேஷமாக இருக்கிறது, தானியேல் புத்தகத்தில் 2, 7, 8, 10 மற்றும் 12 அதிகாரங்களைப் பாருங்கள், அது வெளிப்படுத்தின விசேஷம் புத்தகமாக இருக்கிறது, மேலும் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் புதிய ஏற்பாட்டின் 27வது புத்தகமாக இருப்பதுபோல தானியேலின் புத்தகம் ஆவிக்குரிய ரீதியில் பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமும் 27 வது புத்தகமுமாக இருக்கிறது. [ஆசிரியர் குறிப்பு: முழுச் சபையும் "ஆமென்!" என்கிறார்கள்].
23 அது துல்லியமாக 27 வது புத்தகமாகும், ஏனெனில் அதை கூறுவது தீர்க்கதரிசனத்தின் ஆவியாகும். [ஆசிரியர் குறிப்பு: சபையார் "ஆமென்" என்கிறார்கள்]. நான் எதைப் பெறுகிறேனோ அதை உடனடியாகச் சொல்ல நான் பயப்பட மாட்டேன். தானியேல் 10 ன் அதே தூதன் இங்கே இருக்கிறான் என்று நான் விசுவாசிக்கிறேன். [ஆசிரியர் குறிப்பு: சகோதரர் பிலிப்பு நிருத்துகிறார்]. அது அப்படித்தான் என்று நான் சொல்லவில்லை, ஆனால் தானியேல் புத்தகம் வரை என்னுடன் அதை மனதுக்குள் எண்ணுகிறீர்களா? [ஆசிரியர் குறிப்பு: சபை எண்ணுகிறது...] அது சரியே! ஆமென்! …
24 எந்தவொரு கணக்கும் இன்றி, எங்கிருந்தும் அதை வாசிகாமல், எடுத்துக்கொள்ளப் படுதலின் வேளையை சுட்டிக்காண்பிப்பதற்காக தானியேல் புத்தகத்தின் வெவ்வேறு அடையாளங்களைப் பற்றி நான் பேசுவேன். நன்றி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, மனிதகுலத்தின் இரட்சிப்பிற்காக கிருபையால் என்னை இரட்சித்து, என்னை அனுப்பியிருக்கிறவர் நீர்தான். உமக்கு நன்றி கர்த்தாவே!
--:--
--:--